கண்ணகி கோட்டம் - 20-ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு

0 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jul 18, 2021, 6:32:41 AM7/18/21
to housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com
சேரமன்னர் தம் நாட்டிலே செய்த இரண்டு கண்ணகி கோட்டங்கள்
-------------------------------------------------------------

பழைய தமிழ் இலக்கியங்களைப் படித்துப் பார்த்தால், இரண்டு கண்ணகி கோட்டங்களைச் சேர மன்னர்கள் கட்டினர் என்று தெரிகிறது:

(1) கண்ணகி தெய்வம் ஆகிய அயிரைமலை என்றழைக்கும் பழனி மலைத்தொடரில் கம்பங்கூடலூரில் உள்ள மங்கலாதேவி கோட்டம். இப்போது தமிழக, கேரள எல்லையில், கேரளாவிலே இருக்கிறது. சித்திரா பௌர்ணமி (பூரணை) நாளில் வானுலகு கண்ணகி அங்கிருந்து ஏகியதால் “ஸ்ரீ பூரணிகிரி ஆளுடைய நாச்சியார்” என்கிறது பிற்காலப் பாண்டியர் கல்வெட்டு. பூரணி என்ற பெயரை ராஜராஜசோழன் காலத்தைய தேய்ந்துபோன வட்டெழுத்துக் கல்வெட்டிலும் காண்கிறோம். சேரநாடு சங்க காலத்தில் குடமலைநாடு, குணமலை நாடு என இரு பகுதிகள். கொங்குநாடு குணமலை நாடு. அப்பகுதியைச் சேர்ந்தது என்கிறார் மு. ராகவையங்கார். பழனிமலைப் பகுதி பழைய கொங்குநாடு. வஞ்சி மூதூர் ஆகிய கரூரின் புறத்தே இப் பழனி மலையின் வேள் ஆவிக்கோ மாளிகை கட்டியிருக்கிறான் எனச் சிலம்பு கூறுகிறது. இப்போது, தில்லியில் ‘தமிழ்நாடு ஹவுஸ்’ இருக்கிறமாதிரி. அருணகிரிநாதரும் ‘சேரர் கொங்கு வைகாவூர் நாடதில்’ என்றார். கம்பம் கூடலூரில் உள்ள கண்ணகி தனியாக நிற்கிறாள். மங்கலாதேவி. பூரணை நாளில் தெய்வம் ஆனாள். எனவே, பூரணி. கர்நாடகாவில் ‘சந்திரா’ என்றே கண்ணகி கதை இருக்கிறது. மங்களூர் கண்ணகியின் பெயரால் அமைந்தது என்பார் உவேசா.

கண்ணகியின் இக் கோயிலைப் பற்றி முதன்முதலில் எழுதியவர் (Annals of Oriental Research, Volume 1, University of Madras) பாரதியார் போற்றிய மு. ராகவையங்கார் தான். இச் செய்தியைக் கண்ணகி கோட்டம் பற்றி வரும் எந்தக் கட்டுரை, நூல்களிலும் காணோம். 1904-லே ஆங்கில அரசுக்கு இக்கோயில் தெரியவந்தது. 1920களில் ஒரு கல்வெட்டை வெளியிட்டனர். இப்போது பிரபலமாக உள்ள பெயர் சி. கோவிந்தராசனார் தான். ஆனால், அவருக்குச் சொன்னவர் கண்ணகி கோட்டத்தருகே, ஏல விவசாயிகள் சங்கப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக இருந்த புலவர் சோமசுந்தரனார் ஆவார். அவர் ராகவையங்கார் நூல்களைப் படித்திருக்கலாம். புலவர் சோமசுந்தரத்தின் மாணவர்கள் தேனியில் இருந்து சென்று, சி. கோவிந்தராசனாரை அழைத்துவந்தனர். பின்னர் புலவெ செ. இராசுவும் வந்தார். அப்போது (1976) புலவர் செ. இராசு எழுதிய கட்டுரையை எனக்கு அனுப்பிவைத்தார், கொற்றவையின் வடிவமாக, மதுரையை எரித்து, 14 நாள் நடந்து சென்ற மலை இது. கொற்றவை வாகனம் வேங்கை. எனவே தான், குறிப்புப்பொருளை வைத்து, வேங்கை மர நீழலில் நின்றாள் எனப் பலமுறை பாடினார் இளங்கோ அடிகள். http://nganesan.blogspot.com/2021/05/tiger-durga-indus-cilappatikaram.html

கண்ணகி கோயில் பிரபலமான வரலாற்றை துளசி ராமசாமி நூலில் எழுதியுள்ளார். சி. கோவிந்தராசனார் எப்படி கண்ணகிகோயிலுக்கு வந்தார் என தேனி மக்கள் விளக்கிய செய்திகள் இருக்கின்றன. கல்வெட்டியலர் கே. ஜி. கிருஷ்ணன் ’ஹிந்து’ பத்திரிகையில் கட்டுரை எழுதியுள்ளார். அதைப் பிடிக்கணும்.

(2) சேரர் தலைநகர் வஞ்சி மூதூரில் (இன்றைய கரூர்) சேரன் செங்குட்டுவன் ஒரு கண்ணகி கோயில் கட்டியிருக்கிறான். இங்கே, கண்ணகியும், கோவலனும் தம்பதியராகச் சிற்பங்கள் கருவறையில் இருந்துள்ளன. விதவையான நிலையில் வைக்கச் சேரமன்னர்கள் விரும்பவில்லை போலும். மணிமேகலை மணிபல்லவத் தீவில் இருந்து விமானத்தில் பறந்துவந்து, இந்தக் கண்ணகி-கோவலனை வழிபட்டதை மணிமேகலைக் காப்பியம் விரிவாகப் பாடியுள்ளது. வஞ்சியம்மன் தலதேவதை. வஞ்சிக்கொடி (வஞ்சுலவல்லி) அவள் - துர்க்கை. வஞ்சுலேசுவரர் என ஆநிலையப்பருக்கு ஒரு பெயர். கண்ணகியின் இரு கோட்டங்கள் பற்றியும், கண்ணகி கோட்டம் 20-ம் நூற்றாண்டில் பிரபலமான வரலாற்றையும் பற்றிக் கட்டுரை தர ஆவல். புலவர் சோமசுந்தரனாரின் பழைய கட்டுரையும், போட்டோவும் தேடவேண்டும். அவரது மாணவர் தமிழாதன் (பி. 1939, கணபதிராஜன்) போன்றோரிடம் இருக்கலாம்.

வஞ்சி மூதூரின் பெயர் வஞ்சிக் கொடியால் அமைந்தது என முதலில் விளக்கியவர் சீத்தலைச் சாத்தனார் ஆவார். கடிகைமுத்துப் புலவர் ஒரு வெண்பாவில் சேர, சோழ, பாண்டிய நாட்டுப் பதிகளைப் பாடுகிறார். அதில் வஞ்சி என்னும் கொடிபோன்ற இடை என்று குறிக்க, சீத்தலைச் சாத்தனார் போலவே, வஞ்சிக்கொடியால் பெற்ற பெயர் எனப் பாடியுள்ளார். அவரை ஆதரித்த எட்டயபுரம் ஜமீந்தார் வெங்கடேசு ரெட்டமேந்திரனைப் புகழ்ந்தது இச் செய்யுள்.

  கொங்கைகும்ப கோணமா, கூந்தலுமோ கூடலா,
  தங்கும்விழி அம்பா சமுத்திரமா – பைங்கனக
  மேருவெங்க டேசுரட்ட மேந்த்ரா! இவள்சசி,புல்
  தாருடைய ஊரிடைய தாம்

கோணம் - வட்டம்; கூடல் = கூடு + அல், மிகுந்த இரவு;
அம்பாசமுத்திரம் - அம்புக் கடல். சசி - இந்திரன் மனைவி.
புல் = பனை. புல்தார் = பனம்பூ மாலை.
இங்கே, பனம்பூ மாலை அணியும் சேரன் [1]
சேரன் ஊர் வஞ்சி. வஞ்சிக் கொடி போன்ற இடை.

~NG
[1] புல்தார் சேரனுக்கு ஆகிவருவது  முதலாகுபெயர்.’கோடு’ என்று எருமைப்பெடைக் கொம்பை வைத்து, கொல்லி (கொற்றவை) வழிபாட்டை முதலாகுபெயராய்க் குறிப்பிடும் சங்க இலக்கியத்திலும் இந்த முதலாகுபெயர் உத்தியைக் காணலாகும். தமிழ் மக்கள் எருமைப் பெடையின் கொம்பை அலங்கரித்து, மணவறையில் வைத்துப் பூசித்து, கலியாணச் சீர்கள் செய்துள்ளனர் என்பது 4000 ஆண்டுக்கால தொல்லியலால் தெரிவதை அழகாய்வுகள் காட்டுகின்றன. http://nganesan.blogspot.com/2020/08/civasvami-in-edakkal-cave-brahmi.html . அனைவருக்கும் தெரிந்த ஒன்றாதலால் கலித்தொகை விளக்கமாகப் பாடவில்லை. எனவே, அதனை விளக்கினார் நச்சினார்க்கினியர்.  கோடு என்றால் கொம்பு. கோடு > கவடி> கவரி என்றெல்லாம் மாறிவருகிறது. இது எருமைக்கான சிறப்புப்பெயர்:வேதத்தில் கௌரி (< கோடு) என்றால் எருமை. சங்க இலக்கியத்திலும், தொல்காப்பியத்திலும் கவரி உண்டு. எனவே தான், எருமைக் கோடு வைத்துக் கலியாணச் சீர் நடப்பதில் முதலாகுபெயர் பயன்படுத்தி உள்ளனர் கலித்தொகையில்.

ஸ்ரீ கொல்லி(கொற்றி) மயிடனுடன் போரிடல்:
http://nganesan.blogspot.com/2021/01/veerammalin-kaalai-by-kuparaa-1936.html
Paṭṭa-Mahiṣī: Proto-Koṟṟavai goddess in Indus civilization (Banawali and Mohenjadaro)
http://nganesan.blogspot.com/2021/01/banawali-mohenjadaro-proto-durga.html
Indus seal, M-312 ஜல்லிக்கட்டு அல்ல, கொற்றவை போத்துராஜா போர் (Proto-Koṟṟavai war with Mahisha)
http://nganesan.blogspot.com/2021/01/m312-seal-is-not-jallikkattu.html


--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/vallamai/Bem0quzJb7A/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/0174437f-e42d-474e-aa05-63c51b886f9an%40googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages