வஞ்சி மரம் (Salix tetrasperma)

131 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jul 15, 2021, 11:40:31 PM7/15/21
to vallamai, housto...@googlegroups.com

வஞ்சிக் கொடி:
(1) "பூங்கொடிப் பெயர்ப் படூஉம் திருந்திய நன்னகர்” மணிமேகலை 28: 101, 102.

(2) வஞ்சிமா நகர் புக்க காதை:  (மணிமேகலை - தமிழில் உள்ள ஒரே பௌத்த நூல்!)

கனக விசயர் முதற்பல வேந்தர்
அனைவரை வென்றவ ரம்பொன் முடிமிசைச்
சிமைய மோங்கிய விமைய மால்வரைத்
தெய்வக் கல்லுந் தன்றிரு முடிமிசைச்
செய்பொன் வாகையுஞ் சேர்த்திய சேரன்

விற்றிறல் வெய்யோன் றன்புகழ் விளங்கப்
பொற்கொடிப் பெயர்ப்படூஉம் பொன்னகர்ப் பொலிந்
திருந்துநல் லேது முதிர்ந்துள தாதலிற் [தனள்
பொருந்துநால் வாய்மையும் புலப்படுத் தற்கென்.

இருக்கையினையுடைய (76) பூவா வஞ்சியில் (78) என்று தொடர்ந்துகொள்க. ''செங்கோல் வேந்தன் (77) சேரன் (90) விற்றிறல் வெய்யோன் (91) றன்புகழ் விளங்க'' என மேலுந் தொடர்பு காண்க. பூத்த வஞ்சி-வஞ்சி மலர் ; போர்மேற் செல்வோர் அதன் அறிகுறியாக அந்நேரத்தில் அணிந்துகொள்ளும் மலர். பூவாவஞ்சி - வஞ்சி என்னும் செங்குட்டுவனது தலைநகர் ; அது மலரன்றாதலின் பூவா வஞ்சி எனப்பட்டது. 1 ''''பூவா வஞ்சியிற் பூத்த வஞ்சி, வாய்வாள் நெடுந்தகை மணிமுடிக் கணிந்து'''' எனச் சிலப்பதிகாரத்தின்கண் வருந் தொடர்களாலும் ஈதுணர்ந்து கொள்ளப்படும்.

 92-4. பொற்கொடிப் பெயர்ப் படூஉம் பொன்னகர்ப் பொலிந்தனள் திருந்து நல்லேது முதிர்ந்துளதாதலின் பொருந்து நால் வாய்மையும் புலப்படுத்தற்கென்-அழகிய கொடி என்னும் பெயரானமைந்த வஞ்சி என்னும் எழில் மிகுந்த நகரத்தில் திருந்திய நல்வினையாகிய காரணம் தனக்கு முற்றியுள்ளமையான் பொருந்திய நால்வகை உண்மைகளையும் அறிவறுத்தும் பொருட்டுப் புகுந்து பொலிந்தனள், என்க.

கொடி, வஞ்சிக்கொடி; 2 ''''பூங்கொடிப் பெயர்ப்படூஉந் திருந்திய நன்னகர்'''' என்பர் மேலும். நல் ஏது - நல்வினையாகிய காரணம் ; அது பயன் கருதாத வகையிலும், கருதி யாண்டும் மனத்தாலும் தீமை கருதாத வகையிலும் நிருவாணத்தை நோக்கிப் பக்குவப்பட்டிருந்தமை யின் ''திருந்து நல் ஏது'' என்றார். வாய்மை நான்கும் 3 மேல் விளக்கப்பட்டன. இவை உயிர்கட்கு இயல்பாகப் பொருந்தி யிருத்தலின், ''பொருந்து நால் வாய்மை'' எனப்பட்டது. ''நல் ஏது முதிர்ந்துள தாதலின் நால்வாய்மையும் புலப்படுத்தற்கு (92-4) விற்றிறல் வெய்யோன் றன் புகழ் விளங்கப் (91) பொன்னகர்ப் பொலிந்தனள்'' என்பது.

அணியிழை எழுந்து புகுந்து நின்று ஏத்தி, ''அருளல் வேண்டும்'' என்று அழுதுநிற்ப, பத்தினிக் கடவுள் உரைப்பாள்; அங்ஙனம் உரைப் பவளாகிய தாய், ''இன்னது இவ் வியல்பு'' என எடுத்துரைத்தலும், மணிமேகலை  மந்திரம் ஓதி மாதவன் வடிவாய்ப் பொன்னகர்ப் பொலிந்தனள் என்று, வினைமுடிக்க.

---------
11-15. ஒளிறு வேல் கோதை ஓம்பிக் காக்கும் வஞ்சி அன்ன - ஒளிவீசும் வேலையுடைய சேரன் பாதுகாத்து ஆளும் வஞ்சிபோன்ற, என் வளநகர் விளங்க-எனது வளம் பொருந்திய மனை சிறப்புற்று விளங்க, துனியின்று - வெறுப்பின்றி, திரு நுதல் பொலிந்த என் பேதை வருமுலை முற்றத்து - அழகிய நெற்றியாற் பொலிவுற்ற என்

ஒளிறுவேல் கோதை ஓம்பிக் காக்கும்
வஞ்சி யன்னவென் வளநகர் விளங்க
இனிதினிற் புணர்க்குவென் மன்னோ
http://www.tamilvu.org/slet/l1270/l1270exp.jsp?x=577&y=578&bk=263&z=l1270635.htm

கோதைபாடி - கோதவாடி, கண்ணர்பாடி - கன்னிவாடி, வள்ளுவபாடி நாடு :: பாடி வீடுகளான் அமைந்த பெயர்கள்.
----------------

எனவே, சேரர் தலைநகர் வஞ்சி - இன்றைய கரூர் - பூங்கொடியால் பெயர் பெற்றது என அறியலாம்.
கொங்கு வேளாளரில் பலருக்கும் குலதெய்வம் வஞ்சிக்கொடி அம்மன். பெண்கள் பெயரும்
இன்றளவும் உண்டு.

“வட்கார் மேற்செல்வது வஞ்சி” - வஞ்சித் திணை https://ta.wikipedia.org/wiki/வஞ்சித்_திணை

வஞ்சிக்கொடியைப் பொற்கொடி என்றார் சீத்தலைச் சாத்தனார். காரணம், அதன் பூக்கள் பொன்னிறமாகச் சார்ந்த மரத்தையே மூடுவதால் ஆகும். அமிர்தவல்லி என்றும் இதனால் வழங்கும். https://twitter.com/rameshpandeyifs/status/1334018046894120960
சூடு உற்ற சுடர்ப்பூ என்று இந்த பொற்பூக்கள் ஆகிய வஞ்சிப்பூவினை மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது. “சுடர்ப் பூங் கொன்றை” - பொன்னிற மலர் தான்.
பொன்னிறமான பூக்கள், செக்கச் சிவப்பான காய்களாய் மாறும். https://krishijagran.com/health-lifestyle/the-fresh-leaves-of-the-wonder-plant/
https://www.youtube.com/watch?v=OXwrf1BwAos
https://www.flickr.com/photos/78556809@N06/7207273500
https://ayurvedicmagazine.com/giloy-health-benefits/
https://en.wikipedia.org/wiki/Tinospora_cordifolia  வஞ்சிக்கொடி = நாகினி. (தவறாகப் பிரம்புக்கொடியைக் கூறுகிறது மதறாஸ் லெக்ஸிகான்).

https://shaivam.org/thala-marangalin-sirappukal/temple-trees-vanji-creeper
வஞ்சிக் கொடி தான் வஞ்சிமாநகர் (கருவூர்) ஸ்தல ஸ்தாவரம் ஆகும்.

'கொஞ்சநாள் பொறு தலைவா, வஞ்சிக்கொடி இங்கு வருவா’ - சினிமாவில்
https://www.youtube.com/watch?v=NHS7XgUAuJ8
பெண்ணின் இடையை வஞ்சிக்கொடிக்கு ஒப்பிடுவர் (தேவாரம், திருக்கோவையார், ...)

----------------

ஆனால், வஞ்சி மரம் வேறு. இதுவும் கரூரில் நிறைய வளர்ந்ததாகப் புறப்பாட்டு கூறுகிறது.
மருதம், காஞ்சி, வஞ்சி - மருதத் திணையின் மும்மரங்கள்.

கு. சீனிவாசன், சங்க இலக்கியத் தாவரங்கள், தமிழ்ப் பல்கலை, 1986, பக். 652
வஞ்சி மரம் = Salix tetrasperma = Indian willow.
"மரஞ்செடிகொடிகளின் தமிழ்ப் பெயர்களையும், தாவரப் பெயர்களையும் தொகுத்துப் பட்டியலிட்ட லஷிங்டன் (1915) என்பார் (பக். 140) வஞ்சி என்பது சாலிக்ஸ் டெட்ராஸ்பர்மா என்ற சிறு மரம் எனக் குறிப்பிட்டுள்ளார். இங்ஙனமே சென்னை மாநிலத் தாவரங்களைப் பற்றிப் பெருநூல் எழுதிய காம்பிள் (1928) என்பாரும் வஞ்சி என்பத் இதே தாவரம் எனக் குறிப்பிடுவத்டன், இதன் மலையாளப் பெயரும் வஞ்சி எனக் கூறுவாராயினர்.”

பி. எல். சாமி, சங்க நூல்களில் மரங்கள், 1992. பக். 162
”பகன்றை பலாசம் பல்பூப் பிண்டி
வஞ்சி பித்திகம் சிந்துவாரம்” - குறிஞ்சிப்பாட்டு 88-89

துணையோர் செல்வமும் யாமும் வருந்துதும்
வஞ்சி ஓங்கிய யாணர் ஊர  - ஐங். 50

பல்வேல் மத்தி கழாஅர் முன்துறை,
நெடுவெண் மருதொடு வஞ்சி சாஅய்
விடியல் வந்த பெருநீர்க் காவிரி - அகம் 286

ஆற்றல் உடையன் அரும்பொறி நல்லூரன்
மேற்றுச் சிறுதாய காய்வஞ்சி - போற்றுருவிக்
கட்டக முத்திற் புதல்வனை மார்பின்மேற்
பட்டஞ் சிதைப்ப வரும். ஐந். 45

காஞ்சியும், வஞ்சியும் நன்கு வளைந்துகொடுக்கும் மரங்கள். எனவே தான், குளிர் நாடுகளின் Willow மரத்தை ஒத்தது என Indian Willow Tree என வஞ்சிமரம் பெயர்பெற்றது.
வஞ்சி மரத்தின் சிறுகாய்கள். வஞ்சி, காஞ்சி, மருது ஆற்றோரம், நீர்நிலை அருகே வளர் மரங்கள். மருத மரத்தோடு, வஞ்சி மரத்தையும் சாய்த்து காவிரி வெள்ளம் வந்ததாக அகநானூறு. அப்போது ஸ்டான்லி அணை போன்றவை இல்லை.

நாளிகே ரஞ்செ ருந்தி நறுமலர் நரந்த மெங்கும்
கோளிசா லந்த மாலங் குளிர்மலர்க் குரவ  மெங்குந்
தாளிரும் போந்து சந்து தண்மலர் நாக மெங்கு
நீளிலை வஞ்சி காஞ்சி நிறைமலர்க் கோங்க மெங்கும்.
http://www.tamilvu.org/slet/l41C1/l41C1per.jsp?sno=78
நீள் இலை வஞ்சி - நீண்ட இலைகளையுடைய வஞ்சிமரம்;
  பெரியபுராணம். எல்லாமே மரங்கள்.

வெண்மையாகப் பூப்பது. எனவே, சுவேதம் எனப் பெயர் உண்டு.
https://books.google.com/books?id=JgxaAAAAcAAJ&

பிணர் மருப்பு யானைச் செருமிகு நோன்தாள்
செல்வக் கடுங்கோ வாழி யாதன்
ஒன்னாத் தெவ்வர் உயர்குடை பணிந்து, இவன்
விடுவர் மாதோ நெடிதோ நில்லாப்
புல்லிளை வஞ்சிப் புறமதில் அலைக்கும்
கல்லென் பொருநை மணலினும், ஆங்கண்
பல்லூர் சுற்றிய கழனி
எல்லாம் விளையும் நெல்லினும் பலவே.  - புறப்பாட்டு.

செல்வக் கடுங்கோவின் தமிழ் ப்ராமிக் கல்வெட்டுகள் கரூரில் கிடைக்கின்றன. பொருநை - ஆம்பிரவதி ஆறு (இப்போது அமராவதி).

இவன்னில் எதைச் சொல்வேன், எதனைச் சொல்லாமல் விடுவேன். கனவில் தோன்றுவது போல நனவில் கொடுத்தான். அவன் பூழி நாட்டு மக்களின் பெருமகள். நெல்வக்கடுங்கோ வாழியாதன் என்னும் பெயர் கொண்டவன். இவனது பகைவர் இவனைக் குடையுடன் பணிவர். வாழ்த்திக்கொண்டே பணிவர். புல்லிய சிறு இலைகளைக் கொண்டது வஞ்சிமரம். வஞ்சிமரங்கள் கோட்டை மதிலை உரசிக்கொண்டு இருப்பதால் இவன் ஊர் வஞ்சி. இந்த மரத்தை உரசிக்கொண்டு ஓடுவது பொருநை ஆறு. இந்தப் பொருநை ஆற்று மணலின் எண்ணிக்கையைக் காட்டிலும் பலநாள் வாழ்க என வாழ்த்தினர். பல ஊர்களில் விளையும் நெல்லின் எண்ணிக்கையைக் காட்டிலும் பலநாள் வாழ்க எனச் சிலர் வாழ்த்தினர். இப்படி வாழ்த்த இவன் வாழவேண்டும் என்று புலவர் வாழ்த்துகிறார் http://ilakkiyam.tamilarkoodam.in/purananooru_padal_387.html

NG
On Thu, Jul 15, 2021 at 6:16 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
SK > தேறல் அருந்தும் தந்தைக்கு ஒரு மகள் அயிலை மீனை வஞ்சி விறகில் சுட்டுக் கொடுத்ததாக இலக்கியத்தரவு ஒன்று உண்டு. மீனைச் சுட அடுப்பு பயன்படுத்தப்படவில்லை என்பது வெளிப்படை.
> ஏனென்றால் வஞ்சி ஒரு கொடி. அதிலிருந்து சுள்ளி மட்டுமே கிடைக்க இயலும். நாலு சுள்ளியை மூட்டினால் பச்சை மீன் வெந்து விடும்.


அகநானூறு

216. மருதம்

[தலைமகட்குப் பாங்காயினார் கேட்பத் தனக்குப் பாங்காயினார்க்குப் பரத்தை சொல்லியது.]


நாண்கொள்நுண் கோலின் மீன்கொள் பாண்மகள்
2தான்புன லடைகரைப் படுத்த வராஅல்
நாரரி நறவுண் டிருந்த தந்தைக்கு
வஞ்சி விறகிற் சுட்டுவா யுறுக்குந்
5. தண்டுறை ஊரன் பெண்டிர் எம்மைப்
பெட்டாங்கு மொழிப என்ப அவ்வலர்ப்

(சொ - ள்.) 1-6. நாண் கொள் நுண்கோலின் மீன்கொள் பாண் மகள் - கயிற்றினைக்கொண்ட நுண்ணிய தூண்டிற் கோலால் மீனைப் பிடிக்கும் பாணரது மகள், புனல் அடைகரைபடுத்த வராஅல்-புனலை அடுத்த கரையில் அகப்படுத்திய வரால்மீன், நார் அரி நறவு உண்டு இருந்த தந்தைக்கு - பன்னாடையால் அரிக்கப்பெற்ற தன்னையுண்டு களித்திருந்த தன் தந்தைக்கு, வஞ்சி விறகில் சுட்டு-வஞ்சிமரத்தின் விறகினாற் சுட்டு, வாய் உறுக்கும் - வாயில் உண்பிக்கும், தண் துறை ஊரன் பெண்டிர் - குளிர்ந்த துறையினையுடைய ஊரனது பெண்டிர்கள், எம்மைப் பெட்டாங்கு மொழிப என்ப- எம்மைத் தம் மனம் விரும்பியபடி யெல்லாம் இகழ்ந்துரைப்பர் என்பார்கள்; http://www.tamilvu.org/slet/l1270/l1270exp.jsp?x=477&y=478&bk=216&z=l1270636.htm

ஐயூர் முடவன் பாடல். ஐயூர் பற்றிப் பேசியதாக நினைவு.

இந்த வஞ்சி விறகு என்பது Indian willow tree வஞ்சி மரத்தின் விறகு எனலாம்.


 2017 மடலில் வஞ்சி என்னென்ன தாவரத்திற்குப் பெயர்:
வஞ்சி - தாவரங்கள்
--------------

(1) வஞ்சி மரம் : Salix tetrasperma. (Gamble (1928), Lushington (1915) )
Also, known as Indian Willow tree.
பூக்கள் முதிரும்போது வாகை மலர்கள் போல வெண்மையும்
துய் பஞ்சு ஆகவும் இருக்கும். இதனை வீரர்கள் சூடினர். வஞ்சித்துறை.
வஞ்சி மாநகரை ‘வாடாவஞ்சி’ என்கிறார் இளங்கோ அடிகள்.

(2)  ஆத்து வஞ்சி, நீர்வஞ்சி Ochreinauclea Missionis

#GSCC Fieldwork Fund. JNTBGRI collecting seed of Ochreinauclea missionis. Endemic to the Western Ghats and Vulnerable on the IUCN Red List

(3) வஞ்சி - புதர் (பிரம்பு) = வானீரம்
புதலும், மங்கையும், ஓர்பதியும், மாற்றார் குடையும் வஞ்சி ஆகும் - பிங்கலந்தை.

(4) வஞ்சிக் கொடி, வஞ்சுளம். 
வஞ்சி அம்மன் - மதுரைக்கு மதுராபதி அம்மன், புகாருக்கு சம்பாபதி (சம்பா - சண்பை) போல,
வஞ்சி மாநகருக்கு வஞ்சியம்மன். இன்றும் உள்ள கோயில். முந்தைய தலைமுறை
வரை, கோவை, ஈரோட்டில் பல பெண்களுக்கும் வஞ்சிக்கொடி என்ற பெயர் உண்டு.
‘கொஞ்சநாள் பொறு தலைவா, வஞ்சிக்கொடி இங்கு வருவா’

வஞ்சி Tinospora Cardifolia, Miers.; Menispermaceae. 

வஞ்சிக் கொடி தான் வஞ்சிமாநகர் (கருவூர்) ஸ்தல ஸ்தாவரம் ஆகும்:
தலமர சிறப்புகள்

தேவர் திங்களும் பாம்புஞ் சென்னியில் 
மேவர் மும்மதி லெய்த வில்லியர் 
காவ லர்கரு வூரு ளானிலை 
மூவ ராகிய மொய்ம்ப ரல்லரே. - திருஞானசம்பந்தர்.

திருக்கருவூர் ஆனிலை எனும் தலத்தில் தலவிருட்சமாக விளங்குவது வஞ்சியாகும். இது சீந்தில் கொடி, ஆகாசவல்லி, அமிர்தவல்லி, சோமவல்லி, சாகாமூலி என்ற பல பெயர்களாலும் குறிப்பிடப்படுகின்றது. இஃது இதய வடிவ பசிய இலைகளையும் தக்கையான சாறுள்ள தண்டுகளையும், காகிதம் போன்ற மெல்லிய புறத்தோலையும் உடைய ஏறு கொடி இனமாகும். கொடியின் தரைத் தொடர்பு துண்டிக்கப்பட்டால் கொடியிலிருந்து மெல்லிய விழுதுகள் வளர்ந்து தரையில் ஊன்றி கொடி தழைக்கும் தன்மை கொண்டது. இதன் இலை, கொடி, வேர் முதலியன மருத்துவக் குணங்கொண்டு விளங்குகின்றது.. உடல் தேற்றி உரமாக்குதல், முறைநோய் நீக்குதல், பசி மிகுத்தல் முதலிய மருத்துவக் குணமுடையது.

வஞ்சிக்கொடி:
கொழுநனைத் தழுவும் கொடி போல,

வஞ்சிக்கொடி என்பது அமிர்தவல்லி எனப்படும் Tinospora_cordifolia தான்,
பிரப்பங்கொடி (Calamus_rotang, ரத்தன்) என்னும் முள்புதர் அல்ல என்று காட்டுவது
வஞ்சி மாநகர் ஆன்நிலை அப்பர் கோவிலின் தலத் தாவரம் ஆகும்.

வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா:
வஞ்சி என்னும் பாவினம் வஞ்சிக்கொடிபோல வளைந்து வளைந்து செல்லுமோ?

MTL:
"நாகினி nākiṉi, n. < nāginī. 1. Betel; வெற்றிலை. (மலை.) 2. Common rattan of South India. See வஞ்சிக்கொடி. (மலை.)"
நாகம் போல வளைந்து, வளைந்து செல்வது வெற்றிலையும், அமிர்தவல்லி (வஞ்சிக்கொடி = Tinospora_cordifolia) ஆகும்.
Madras Tamil Lexicon giving nAgini as Common rattan of South India is wrong.
வெற்றிலையும், அமிர்தவல்லிக் கொடியிலையும் ஒப்புமை காண்க.

நா. கணேசன்

வஞ்சி கொடி மட்டுமல்ல. வஞ்சி மரமும் உள்ளது. கோட்டை அருகே வஞ்சி மரங்கள் நின்றதாக, சிலம்பிலும் பார்த்த நினைவு. அது எப்படி என்றாலும்,
வஞ்சி மர விறகைத்தான் அயிலை மீனைச் சுடப் பயன்படுத்தியுள்ளாள் என்பது தெளிவு,

நா. கணேசன்


Reply all
Reply to author
Forward
0 new messages