Fwd: சுன்னத் கல்யாணம்

265 views
Skip to first unread message

செல்வன்

unread,
Apr 8, 2014, 1:28:54 AM4/8/14
to vallamai, தமிழ் சிறகுகள், தமிழமுதம், tamil...@googlegroups.com

சுன்னத் கல்யாணம்

 பெரும்பாலானோருக்கு என்னவென்று புரிந்திருக்கும்புரியாதோருக்கு, சுன்னத்கல்யாணம் இஸ் நத்திங் பட் சர்கம்சிஷன் AKA கு** கல்யாணம்.

இதற்கு ஏன் கல்யாணம் என்று பெயர் வந்தது எனப்புரியவில்லைஇப்போதெல்லாம்சு.க பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலேயே முடிந்துவிடுகிறது. 90கள் வரைகிராமங்களிலும் டவுன்களிலும் அது ஒரு விழா போல நடக்கும்இப்போது 89%குழந்தைகளுக்கு பிறந்த சில நாட்களிலேயே நடத்தி விடுகின்றனர்முன்பு பெரியவன்ஆன பின்னும் சிலருக்கு நடப்பதுண்டுஎனக்கு மிகத்தெரிந்த ஒரு பையனுக்குஅஞ்சாப்பு ஆனுவல் லீவ்ல நடந்துச்சு (யார்னு கேக்கப்படாது).
<<<<<<கொசுவத்தி ஸ்டார்ட்ஸ்>>>>>>
அது ஒரு இனிய ஞாயிறுநாங்கள் இருந்தது ஊத்துக்கோட்டை என்னும் சிற்றூரில்.வீட்டின் மாடியில் ஷாமியானா போடப்பட்டுஅக்கம்பக்கத்தினர்உறவினர்சுற்றம் சூழவந்து வீடே கலகலவென்றிருந்ததுஒரு பக்கம் “தம்” பிரியாணிதயாராகிக்கொண்டிருந்ததுதிடீரென்று கிடைத்த லைம்லைட்டில் தலைகால் புரியாது இரு இளந்தளிர்கள் சுத்தி சுத்தி வந்தனஒன்று நான்மற்றொன்று என் அண்ணன் (பெரியப்பா மகன்).

மதிய விருந்து தடபுடலாக நடக்கஎங்களுக்கு ஆட்டுக்கால் உறிஞ்சி & எக்ஸ்ட்ரா சிக்கன்65 தரப்பட்டதுஅடுத்த ஆடு நாம் தான் என அறியாத அவ்விரு ஆடுகளும் இலையில்வைக்கப்பட்ட ஆட்டை, அள்ளி அள்ளிப்பருகவேண்டிய அமிர்தமடா இதுவெனஉண்டன

பின் , போட்டோகிராபரொருவர் வீட்டுக்கு வந்தார். 90களின் Kidஸல்லவா,போட்டோகிராபரைப்பார்த்ததும் இன்னோவாவை கண்ட நாஞ்சிலாராய் உள்ளம் பூரித்து,எங்களுக்கு செய்யப்பட்ட அலங்காரம் (புது பேண்ட்சொக்காய்தொப்பிமூஞ்சி முழுக்கபான்ஸ் பவுடர்)  கண்டு கண்கள் பனித்துஇதயம் இனித்துமுத்தாய்ப்பாய் அவர்கள்சூட்டிய ரோஜா மாலையை அணிந்ததும் ஆனந்தத்துக்கம் தொண்டையை அடைத்தது.
“ச்சளக்...கிஷ்க்யூவ்ன்...ச்சளக்...கிஷ்க்யூவ்ன்... ” - அணி அணியாய் எங்களோடு சேர்ந்துஎல்லாரும் போட்டோ எடுத்துக்கொண்டாயிற்று.

மாலை சுமார் 6 இருக்கும்எங்களுடையது இரு வீடுகள் அருகருகே சேர்ந்த ஒற்றை வீடு.வீடு #1ல் இரு ஆடுகள் & ஃபுல் தாய்மார்கள்வீடு #2ல் வெள்ளைத்தொப்பி போட்ட விதவித பாய்மார்கள். அனைவரும் யாரையோ எதிர்பார்த்துக்காத்திருந்தனர். 

சிறிது நேரத்தில் தட் டுத்தடுமாறி ஒரு வயதான (அழுக்கேறிப்போய் ப்ரவுனாக மாறியவெள்ளைதொப்பியும் ரீகல் சொட்டு  நீலத்தால் வெளுக்கப்பட்ட சட்டை கைலியும்உடுத்தியிருந்ததாத்தா வந்தார்பரஸ்பரம் அஸ்ஸலாமு அலைக்குமும் அலைக்கும்சலாமும் பகிர்ந்த பின்னர் ஊதுபத்திகள் மணம் பரப்பஅரபியில் துஆ (ப்ரார்த்தனை)நடைபெற்றதுமுடிந்ததும் கற்கண்டுபேரீச்சை &  ஆசை சாக்லேட் அன்போடுபகிரப்பட்டதுஇதுவரை சிறப்பாக போய்க்கொண்டிருந்த “அப்துல் இன் ஒண்டர்லான்ட்”தினத்தில் கேவி ஆனந்த் பட டுஸ்ட்டாக ‘அது’ நடந்தது.
 வயதில் மூத்தவர் என்ற திருக்காரணத்தினால் என் அண்ணனும், பாச்சா எனஎல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் முதல் ஆட்டை வீடு நம்பர் 1ல் இருந்து வீ.2க்கு அழைத்துச்சென்றனர்சுமார் 3 நிமிடம் 60 நொடிக்கு மயான அமைதி.

"ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅல்லாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ"
கேட்டுச்சே ஒரு சத்தம்எங்கண்ணன்கிட்டருந்து அந்த வீட்டில். 

 சடாரென்று எல்லாம் விளங்கியதுஎங்களை இதுவரை  போஷித்துபரிபாலித்து போற்றிவளர்த்தது பலி கொடுக்கத்தான்கழுத்தில் கத்தி வைத்து கரகரகர... நாம அம்பேல்... நாமமவுத்தாகப்போறோம்நம்மல குர்பானி குடுக்கப்போறாங்க.. சூரியனில்லாததால் இருட்டிவிட்டது என்பதையும் தாண்டி எனக்கு மட்டும் ப்ரத்யேகமாக உலகம் இருண்டது.

10 நிமிடம் இருக்கும்சிவப்புத்துணி போர்த்தப்பட்டு (என்னது எங்கேயா? ‘அங்க’தான்...) கண்ணீர் பீய்ச்சியபடி கிடந்த எங்கண்ணனைக் கையில் ஏந்தி வந்தார்கள்.

கொலை செய்யப்படுவதை விட கொலை செய்யப்படுவதைக்காண்பதும்அடுத்துதானும் அதுபோலக்கொல்லப்படப்போகிறோம் என அறிவதும் மிகப்பெரும் சித்ரவதை.அது எனக்கு நேர்ந்ததுஅடுத்த வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லைஆனால்நிச்சயம் ஆபத்து உண்டென்று உள்ளங்கை ஸ்மார்ட் போன் போல தெரிந்தது.

அண்ணனை பாயில் கிடத்திஅடுத்து என்னை அழைத்தனர்நானாவது போறதாவது, “என்ன உட்டுடுங்கடா டாய்” என எங்கப்பாரைப்பார்த்து கத்தவும், என்ன பாய் பேசிட்டுஇருக்கீங்க என ஒரு தடி தாடி பாய் என்னைஅலேக்காக தூக்கிச்செல்லவும் சரியாய்இருந்தது.

அந்த அறை.

முதலில் மல்லாக்க படுக்கப்போட்டு சட்டையையும்பேண்ட்டையும் கழட்டினர்பின்"சக்கரையில்” ஒரு திரவத்தை ஊற்றி உள்ளே ஊசிபோட்டனர்.  அப்போதேஆரம்பித்துவிட்டேன் என் ஆலாபனையைகை காலை உதற முடியாமல் பலபாய்மார்கள் அழுத்திக்கொண்டனர் (மத்தியானம் சாப்ட்ட ஓசி பிரியாணிக்குவிசுவாசமாம்... தக்காளி).
ஊதுபத்தி வாசம்இனிப்பு வகைகள்ரோஜா மாலைகள் சூழ்ந்திருக்கநடுவே ட்ரெஸ்இல்லாமல் அம்மன்குண்ஸாக நான்சுத்திலும் தாடிவாலாஸ். இதை விடரொமாண்டிக்காக எதும் இருக்க முடியுமா?  ஹூம்ம்ம்...
 
ஒரு கிழவனார் "தீன் தீன் மொஹ்மாத்...தீன் தீன் மொஹ்மாத் சொல்லுஎன்றார்எனக்குபகலிலேயே பாத்திமா கேக்காதுராத்திரியில் ராக்கம்மாவா கேட்கும்சரியாய் புரியாமல்"தீன் தீன் மாமாஎனக்கதறினேன். “அரே... மாமா இல்ல... மொஹமத்” என்றார்வந்தகடுப்பில் "ப்போடாஎன நான் எதிர்வினையாற்றஎமோஷனை வெளிக்காட்டாது,ஆத்திரத்தில் அந்தக்கிழவர்  காலை இன்னும் இறுக்கஒரு சைனா கத்தரியால் (அல்லது சேவிங் கத்தி), பிறந்ததிலிருந்து என்னுடன் வாழ்ந்த ‘அது’பிப்ரவரி 14க்கு ரோஜாமொட்டு செடியிலிருந்து களையப்படுவதுபோல் கத்தரிக்கப்பட்டது.
அந்த வலியை சொன்னால் புரியாது.
பிறகு இன்னும் சில பல அடித்தல் திருத்தல்கள்லத்தி சார்ஜ்துப்பாக்கி சூடுகள் என"சம்பவஇடத்தை அடித்து நொறுக்கிய பின்இடுப்பில் சிவப்பு துணி (யெஸ்.. ஸேம்ப்லட்... ஸேம் செஹப்புத்துணி… பாரபட்சம் பாக்காம அடிச்சுப்புட்டானுவபோர்த்தப்பட்டுஅரை மயக்க நிலையில் மைனர் operated குஞ்சு கிடத்தப்பட்டார்
  
சிறிது நேரத்திற்குப்பின் கண்விழிக்கையில் எங்களைச் சுற்றி அக்கம்பக்கத்திலுள்ளஅத்தனை பெண்களும் (ஹிந்து & கிர்ஸ்டின்ஸ்கூடி விட்டனர்அவர்கள் இது போன்றசம்பவத்தை செவி வழிச்செய்தியாக மட்டுமே அறிந்துள்ள படியால்நேரலைக்காட்சிக்காக கூடினர் (6லிருந்து 60 வரை). வரும் ஒவ்வொருவருக்கும்முதலில் "சப்ஜெக்ட்குறித்து 5 நிமிடம் தியரி வகுப்பு நடைபெறும்பின் “நாடகமேடையின்” சிவப்புத்திரை விலக்கப்பட்டு நான் & என் அண்ணன் பங்கேற்கும் "இருகோடுகள்எனும் பிரசித்தி பெற்ற நாடகம் காட்டப்படும்.
"ஸ்ஸ்ஸ்....ஷ்ஹ்ஷ்ஹ்ஸ்ஷ்....அய்யூஊஊ... உஹ்ப்ஹ்ப்ஃப்ஃப்…என ஒவ்வொரு பொண்ணும்  ஒவ்வொரு ஃபீலிங்ஸைக்கொட்டசிவப்புத்திரை மூடப்பட்டுவரிசையில்அடுத்து வருபவருக்கு ஷோ ஆரம்பிக்கும்.

லேடீஸ் பாத்தாங்களேகூச்சமா இல்லையா என ஆங்காங்கே சிலர் நினைப்பதுகேட்கிறதுநானெல்லாம் கவரி மான் பரம்பரைவந்த ஆத்திரத்துக்கு சிக்கென கண்ணைஇறுக மூடிக்கொண்டேன் (வேறு வழி?)

எங்கண்ணன் கொஞ்சம் ரொம்பவே வெள்ளைநான் லைட்டா காக்காவுக்கு காம்படிசன்.சில கிழடுகள் எங்கண்ணனுடையதை சாதாரணமாகவும்என்னுடையதை கண்கள்சுறுக்கிவெயில் நேரத்தில் நெற்றியில் கையை வைத்துப்பார்ப்பதுபோல் பார்த்து உண்மையிலேயே வெந்த புண்ணில் விழி பாய்ச்சிச் சென்றதுகள்.

எல்லோரும் வந்து பார்த்தும் அத்தை மகள்களை மட்டும் காணவேயில்லை. அவர்களைப்பார்த்தால் காயம் சீக்கிரம் ஆறாதாம். பாட்டி சொன்னார். “ஏன்? அவங்களப்பாத்தா தையல் பிரிஞ்சுடுமா” எனக்கேட்கும் பகுத்தறிவு அப்போது இல்லாததால் அப்பாவி கோயிஞ்சாமியாக நம்பினோம். 
எங்களுக்கும் எங்கள் அம்மாக்களுக்கும் அன்றிரவு தூக்கமில்லைநாங்கள் புரண்டுபடுத்து விடாமலும்கொசுபூச்சி கடித்துவிடாமலும் இருக்க அருகிலேயே இருந்துவிசிறிக்கொண்டிருந்தனர்.
அடுத்த நாள்இடைத்தேர்தல் தொகுதி மக்களுக்கு கிடைப்பதுபோல பலமானமரியாதை ரிட்டன்ஸ்.  என்ன வேணும் என அப்பா (நேற்று “என்ன உட்டுடுங்கடா டாய்”னு திட்டினேனேதட் சேம் தகப்பன்சாமிகேட்கடெக்கு வேணும் என கோரஸ் பாடினோம்.அடுத்த ஒரு மணி நேரத்தில் டெக்கு (வீடியோ ) வந்ததுவீட்ல விசேஷங்கசத்யம் சிவம்சுந்தரம்துர்கா போன்ற காவியங்களைப்பார்த்ததாய் நியாபகம்மூன்று வேளையும் கோழிக்கறிபச்சை முட்டைபால்மேரி பிஸ்கட்பழம் என தடபுடல் கவனிப்புகள்.அவ்வப்போது சிவப்புத்துணி லுல்லாவில் ரத்தத்தோடு ஒட்டிக்கொண்டு பிரிக்கமுடியாது  லந்து பண்ணும். And ச்சுச்சா & கக்கா போகும்போது தவிர பிரச்சினைஏதுமில்லை.

இப்போது விருந்தினர் விசிட்டுகள் சகஜமாகஎல்லாம் இயல்பு நிலைக்குத்திரும்பியது.
ஒரு வாரத்தில் அடுத்த டுஸ்ட்டாகஒரு டாக்டர் வந்து சுடுநீர் எனப்பொய்சொல்லப்பட்டகொதிநீரை “ஜிம்பலக்கடி பம்பா”வில் ஊற்றிடெட்டால் போட்டு துவைத்துவீடு முழுகி,கோலம் போட்டு புள்ளி வைத்து அவர் பங்குக்கு சம்பவம் நடத்திவிட்டுச்சென்றார்பட்ட(கா*)லிலே படும் என்பது இதுதானோ என நொந்துகொண்டே மேலும் ஒரு வாரம் ஒடியது.

மீண்டும் டாக்டர் வந்து பார்த்து சரியாகிடுச்சு என்றார்அவர் சர்ட்டிபிகேட்கொடுத்துச்சென்ற அரை மணி நேரத்தில் டெக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

சாப்பாடு கவனிப்பு மட்டும் தொடர்ந்ததுமெல்ல மெல்ல மற்ற உடைகள்உடுத்தத்துவங்கிபின்னொரு காலத்தில் நண்பர்களால்  முக்காலா முக்காபுலாபாட்டுப்பாடி கலாய்க்கப்பட்டுபாய் வீட்டுப்பெண்ணைக்காதலித்த நண்பனைகல்யாணம்லாம் ப்ரச்சனயில்ல மச்சிஆனா மொதல்ல ஒன்னோட ஜிங்குனமணிலமணிய” கட் பண்ணிடுவாங்கஓகேவா” என சிரித்துப்பேச வைத்துஇன்னும் பலவெளிச்சொல்ல முடியாத “றோபல்” அனுபவங்கள் தந்துஇதோஇந்தப்பதிவு வரைகொண்டு நிறுத்தியிருக்கிறதுஎங்கள் சுன்னத் கல்யாணம்.

சொ. வினைதீர்த்தான்

unread,
Apr 8, 2014, 2:33:57 AM4/8/14
to vallamai, தமிழ் சிறகுகள், தமிழமுதம், tamil...@googlegroups.com
மிகவும் இரசித்தேன் திரு செல்வன். சொந்தக் கதை சோகக் கதையை இவ்வளவு இரசனையோடு எழுதிய நண்பருக்குப் பாராட்டுகள்.
றோபல் என்ற சொல் குறிப்பது என்ன?
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

2014-04-08 10:58 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:

சுன்னத் கல்யாணம்

இதற்கு ஏன் கல்யாணம் என்று பெயர் வந்தது எனப்புரியவில்லை
?:) 

கிடைத்த லைம்லைட்டில் தலைகால் புரியாது இரு இளந்தளிர்கள் சுத்தி சுத்தி வந்தனஒன்று நான்மற்றொன்று என் அண்ணன் (பெரியப்பா மகன்).

 அடுத்த ஆடு நாம் தான் என அறியாத அவ்விரு ஆடுகளும் இலையில்வைக்கப்பட்ட ஆட்டை, அள்ளி அள்ளிப்பருகவேண்டிய அமிர்தமடா இதுவெனஉண்டன

மாலை சுமார் 6 இருக்கும்எங்களுடையது இரு வீடுகள் அருகருகே சேர்ந்த ஒற்றை வீடு.வீடு #1ல் இரு ஆடுகள் & ஃபுல் தாய்மார்கள்வீடு #2ல் வெள்ளைத்தொப்பி போட்ட விதவித பாய்மார்கள். அனைவரும் யாரையோ எதிர்பார்த்துக்காத்திருந்தனர். 

நாம அம்பேல்... நாமமவுத்தாகப்போறோம்நம்மல குர்பானி குடுக்கப்போறாங்க.. சூரியனில்லாததால் இருட்டிவிட்டது என்பதையும் தாண்டி எனக்கு மட்டும் ப்ரத்யேகமாக உலகம் இருண்டது.

கொலை செய்யப்படுவதை விட கொலை செய்யப்படுவதைக்காண்பதும்அடுத்துதானும் அதுபோலக்கொல்லப்படப்போகிறோம் என அறிவதும் மிகப்பெரும் சித்ரவதை.

அந்த வலியை சொன்னால் புரியாது.
போர்த்தப்பட்டுஅரை மயக்க நிலையில் மைனர் operated குஞ்சு கிடத்தப்பட்டார்
  
"ஸ்ஸ்ஸ்....ஷ்ஹ்ஷ்ஹ்ஸ்ஷ்....அய்யூஊஊ... உஹ்ப்ஹ்ப்ஃப்ஃப்…என ஒவ்வொரு பொண்ணும்  ஒவ்வொரு ஃபீலிங்ஸைக்கொட்டசிவப்புத்திரை மூடப்பட்டுவரிசையில்அடுத்து வருபவருக்கு ஷோ ஆரம்பிக்கும்.
.சில கிழடுகள் எங்கண்ணனுடையதை சாதாரணமாகவும்என்னுடையதை கண்கள்சுறுக்கிவெயில் நேரத்தில் நெற்றியில் கையை வைத்துப்பார்ப்பதுபோல் பார்த்து உண்மையிலேயே வெந்த புண்ணில் விழி பாய்ச்சிச் சென்றதுகள்.

எல்லோரும் வந்து பார்த்தும் அத்தை மகள்களை மட்டும் காணவேயில்லை. அவர்களைப்பார்த்தால் காயம் சீக்கிரம் ஆறாதாம். பாட்டி சொன்னார். “ஏன்? அவங்களப்பாத்தா தையல் பிரிஞ்சுடுமா” எனக்கேட்கும் பகுத்தறிவு அப்போது இல்லாததால் அப்பாவி கோயிஞ்சாமியாக நம்பினோம். 

Natrajan Kalpattu Narasimhan

unread,
Apr 8, 2014, 2:58:18 AM4/8/14
to வல்லமை
வெளிலெ சொல்லிக்க வெட்கப் படுகிற சமாசாரத்தெ நகைச் சுவையோட ரொம்ப அழகாச் சொல்லி இருக்கார் இதை எழுதியவர்.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு

எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி

வேறொன் றறியேன் பராபரமே

பழமைபேசி

unread,
Apr 8, 2014, 7:46:09 AM4/8/14
to vall...@googlegroups.com, தமிழ் சிறகுகள், தமிழமுதம், tamil...@googlegroups.com
ROFL Rolling on the floor laughing.... உளுந்து பொறண்டு கெக்கலிக்கிறாராமுங்க... இஃகிஃகி

வேந்தன் அரசு

unread,
Apr 8, 2014, 7:59:20 AM4/8/14
to vallamai, தமிழ் சிறகுகள், தமிழமுதம், tamil...@googlegroups.com
கடவுள் எதையும் ஒழுங்கா செய்வது இல்லை

தோலுடன் படைத்துவிட்டு பின்னார் ஐ அம் சாரி. அதை நீக்கிவிடு  என கேப்ரியல்கிட்டே சொல்லி அனுப்பியுள்ளார்,

ஆண்டவன் படைத்ததை மனிதன் மறுக்காது இருப்பானாகுக

வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

தேமொழி

unread,
Apr 8, 2014, 1:33:45 PM4/8/14
to vall...@googlegroups.com

On Tuesday, April 8, 2014 4:59:20 AM UTC-7, வேந்தன் அரசு wrote:
கடவுள் எதையும் ஒழுங்கா செய்வது இல்லை

தோலுடன் படைத்துவிட்டு பின்னார் ஐ அம் சாரி. அதை நீக்கிவிடு  என கேப்ரியல்கிட்டே சொல்லி அனுப்பியுள்ளார்,

ஆண்டவன் படைத்ததை மனிதன் மறுக்காது இருப்பானாகுக

????  அப்போ கன்ஜெனிட்டல்  ஹார்ட் ப்ராப்ளத்துடன் பிறந்த குழந்தைக்கு சிகிச்சை கூடாதா?

..... தெமொழி

தேமொழி

unread,
Apr 8, 2014, 1:35:09 PM4/8/14
to vall...@googlegroups.com
ஹா... என் பெயரையும் பிழையுடன் தட்டச்சும் நிலை வந்துவிட்டது

Anna Kannan

unread,
Apr 8, 2014, 1:48:06 PM4/8/14
to Vallamai

சரி, இந்தக் கல்யாணம் எதற்காக? பயன்கள் என்னென்ன? என்றெல்லாம் அவர் விவரிக்கக் காணோமே!

Iyappan Krishnan

unread,
Apr 8, 2014, 3:02:39 PM4/8/14
to vall...@googlegroups.com
எல்லாக் குழந்தைகளும் ஹார்ட் பிராப்ளத்துடன் பிறப்பதில்லையே. 
 
தேமொழி

unread,
Apr 8, 2014, 3:28:07 PM4/8/14
to vall...@googlegroups.com

:)))
சரி விடுங்க .  நான் சொல்ல வந்த பொருள் வேறு. கடவுள் கொடுப்பதை மறுக்கக்கூடாது என்று வேந்தர் சொன்னதற்கு கொடுத்த உதாரணம் அது.

அந்த வகையில் யோசிக்க ஆரம்பித்தால், கடவுள்  கொடுத்த கால் இருக்கே என்று சொல்லி  காரில் கூட போகக்கூடாது.
ஏன் .... சவரம் செய்யக்கூடாது, தலை முடிவெட்டக்கூடாது, நகம் கூட வெட்டக்கூடாது. 
தேவையில்லை என்று நினைத்திருந்தால் கடவுளே எல்லாவற்றையும் வெட்டி அனுப்பியிருப்பார் என்று வாதம் செய்யலாம்.

..... தேமொழி

வேந்தன் அரசு

unread,
Apr 8, 2014, 8:56:16 PM4/8/14
to vallamai

8 ஏப்ரல், 2014 3:28 பிற்பகல் அன்று, தேமொழி <them...@yahoo.com> எழுதியது:

:)))
சரி விடுங்க .  நான் சொல்ல வந்த பொருள் வேறு. கடவுள் கொடுப்பதை மறுக்கக்கூடாது என்று வேந்தர் சொன்னதற்கு கொடுத்த உதாரணம் அது.

அந்த வகையில் யோசிக்க ஆரம்பித்தால், கடவுள்  கொடுத்த கால் இருக்கே என்று சொல்லி  காரில் கூட போகக்கூடாது.
ஏன் .... சவரம் செய்யக்கூடாது, தலை முடிவெட்டக்கூடாது, நகம் கூட வெட்டக்கூடாது. 
தேவையில்லை என்று நினைத்திருந்தால் கடவுளே எல்லாவற்றையும் வெட்டி அனுப்பியிருப்பார் என்று வாதம் செய்யலாம்.

நீங்க சொல்லுறதும் சரிதான். முடிகூட வெட்டிக்ககூடாது.

..... தேமொழி

On Tuesday, April 8, 2014 12:02:39 PM UTC-7, Iyappan Krishnan wrote:

On Tuesday, April 8, 2014 11:03:45 PM UTC+5:30, தேமொழி wrote:

On Tuesday, April 8, 2014 4:59:20 AM UTC-7, வேந்தன் அரசு wrote:
கடவுள் எதையும் ஒழுங்கா செய்வது இல்லை

தோலுடன் படைத்துவிட்டு பின்னார் ஐ அம் சாரி. அதை நீக்கிவிடு  என கேப்ரியல்கிட்டே சொல்லி அனுப்பியுள்ளார்,

ஆண்டவன் படைத்ததை மனிதன் மறுக்காது இருப்பானாகுக

????  அப்போ கன்ஜெனிட்டல்  ஹார்ட் ப்ராப்ளத்துடன் பிறந்த குழந்தைக்கு சிகிச்சை கூடாதா?

..... தெமொழி

வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

எல்லாக் குழந்தைகளும் ஹார்ட் பிராப்ளத்துடன் பிறப்பதில்லையே. 
 
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--

Iyappan Krishnan

unread,
Apr 9, 2014, 12:56:18 PM4/9/14
to vall...@googlegroups.com
ஹிஹி.. முடி வெட்டுனா வளராது, நகம் வெட்டினா வளராதுன்னு சொல்லிப் பாருங்க. ஒருத்தரும் தொட்டுக் கூட பாக்க மாட்டாங்க. 

வேந்தன் அரசு

unread,
Apr 9, 2014, 10:04:55 PM4/9/14
to vallamai

8 ஏப்ரல், 2014 1:33 பிற்பகல் அன்று, தேமொழி <them...@yahoo.com> எழுதியது:

On Tuesday, April 8, 2014 4:59:20 AM UTC-7, வேந்தன் அரசு wrote:
கடவுள் எதையும் ஒழுங்கா செய்வது இல்லை

தோலுடன் படைத்துவிட்டு பின்னார் ஐ அம் சாரி. அதை நீக்கிவிடு  என கேப்ரியல்கிட்டே சொல்லி அனுப்பியுள்ளார்,

ஆண்டவன் படைத்ததை மனிதன் மறுக்காது இருப்பானாகுக

????  அப்போ கன்ஜெனிட்டல்  ஹார்ட் ப்ராப்ளத்துடன் பிறந்த குழந்தைக்கு சிகிச்சை கூடாதா?

.

கடவுள் எதையும் ஒழுங்கா செய்வது இல்லை என்பதற்கு இன்னொரு சான்று
 கன் ஜெனிட்டல் பிரச்சனை வாழ்வா சாவா?
ஜெனிட்டல் பிரச்சனை அவ்வாறு இல்லை. உலகில் 2/3 பங்கு மக்கள் இருக்கிற ஜெனிட்டலுடன்தானே வாழ்கிறார்கள்.
அதனால் வேறு உவமை சொல்லுங்க.
ஆயின், எனக்கு மதலையாக ஐயப்பனும் இருக்கார்

தேமொழி

unread,
Apr 9, 2014, 11:10:25 PM4/9/14
to vall...@googlegroups.com

அப்போ ...Cleft Lip and Cleft Palate?
இது வாழ்வா சாவா பிரச்சனை கிடையாதே.

Cleft lip and cleft palate are birth defects that occur when a baby’s lip or mouth do not form properly. Together, these birth defects commonly are called “orofacial clefts”. These birth defects happen early during pregnancy. A baby can have a cleft lip, a cleft palate, or both.

Children with a cleft lip with or without a cleft palate or a cleft palate alone often have problems with feeding and talking. They also might have ear infections, hearing loss, and problems with their teeth. 

The Centers for Disease Control and Prevention (CDC) recently estimated that each year 2,651 babies in the United States are born with a cleft palate and 4,437 babies are born with a cleft lip with or without a cleft palate. Cleft lip is more common than cleft palate. Isolated orofacial clefts, or clefts that occur with no other birth defects, are one of the most common birth defects in the United States. About 70% of all orofacial clefts are isolated clefts. (ref: http://www.cdc.gov/ncbddd/birthdefects/cleftlip.html)

கடவுள் கொடுத்தது என்று மனதார ஏற்ற்றுக் கொண்டு அப்படியே விட வேண்டுமா?

இல்லை, அறுவை சிகிச்சை செய்யலாமா வேந்தே?

இதையும் விட, what about face-lift liposuction & tummy tuck, plastic surgery etc etc etc  procedures?

..... தேமொழி 

வேந்தன் அரசு

unread,
Apr 10, 2014, 7:03:07 AM4/10/14
to vallamai

9 ஏப்ரல், 2014 11:10 பிற்பகல் அன்று, தேமொழி <them...@yahoo.com> எழுதியது:

அப்போ ...Cleft Lip and Cleft Palate?
இது வாழ்வா சாவா பிரச்சனை கிடையாதே.

Cleft lip and cleft palate are birth defects that occur when a baby’s lip or mouth do not form properly. Together, these birth defects commonly are called “orofacial clefts”. These birth defects happen early during pregnancy. A baby can have a cleft lip, a cleft palate, or both.

Children with a cleft lip with or without a cleft palate or a cleft palate alone often have problems with feeding and talking. They also might have ear infections, hearing loss, and problems with their teeth. 

The Centers for Disease Control and Prevention (CDC) recently estimated that each year 2,651 babies in the United States are born with a cleft palate and 4,437 babies are born with a cleft lip with or without a cleft palate. Cleft lip is more common than cleft palate. Isolated orofacial clefts, or clefts that occur with no other birth defects, are one of the most common birth defects in the United States. About 70% of all orofacial clefts are isolated clefts. (ref: http://www.cdc.gov/ncbddd/birthdefects/cleftlip.html)

கடவுள் கொடுத்தது என்று மனதார ஏற்ற்றுக் கொண்டு அப்படியே விட வேண்டுமா?

இல்லை, அறுவை சிகிச்சை செய்யலாமா வேந்தே?

பிளவு உதடு ஒரு குறைபாடு. எனவே நீக்கலாம்.

சிலிகான் பதியம் தேவை இல்லையே. அதுபோல் இதுவும்
 
இயற்கை தேர்வு என ஒன்று பல்உயிர்த்தளிர்ப்பில் இருக்கு. அதை மீறுவதால் இன்று நோய்கள் அதிகம். நெடிய ஆயுள் உண்டுதான். ஆனால் நோய் இல்லாதவராக இல்லை. இவர்கள் உண்டு கழிக்கும் மருந்துகளால் ஆண் மீன்கள் முட்டை ஈனும் நிலையை உருவாக்கி விட்டோம்.

ஒரு காலத்தில் கருவுக்கு தாழ் தேடினோம்
இன்று கருவுக்கு திறவுகோல் தேடுகிறோம்.
 
இன்ன பல.

Iyappan Krishnan

unread,
Apr 10, 2014, 7:25:31 AM4/10/14
to vall...@googlegroups.com

காரணம் என்ன என்று வேறு ஒரு குழுமத்தில் நண்பர் பகிர்ந்த விளக்கம். 

//தொழுகைக்கு முன் ஒழு (சுத்தம்) செய்யும்போது, சிறுநீர் கழித்து சுத்தம் சரியாக செய்திருக்க வேண்டும்.
மலம், ஜலம் அடக்கிக்கொண்டும், ஒழு செய்தல் கூடாது/ தொழவும் கூடாது.

ஆணுருப்பின் முன் தொழி நீக்கப்படாமலிருப்பின், சிறுநீரின் ஒரு துளி அந்த தொழியில் நிற்கும் என்று கேள்விபட்டதுண்டு.​//​

​இன்றும் தென்னாஃப்ரிக்கா போன்ற நாடுகளிலும், பரவலாக பல இஸ்லாமிய/பழங்குடி  மக்களிடம் புழங்கும் female circumcision  கூட இதே வகையில் தேவையானது என்று எடுத்துக் கொள்ள இயலுமா ? :) பாதிக்கப் பட்டப் பெண்களின் கண்ணீர் வாக்குமூலங்கள் அதிகம் இணையத்தில் காணக் கிடைக்கும். 

Iyappan Krishnan

*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை எந்நாளும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/vallamai/bhxdhjjOtFY/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to vallamai+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Apr 10, 2014, 12:29:00 PM4/10/14
to vall...@googlegroups.com

அலங்காரம் என்ற பெயரில் அலங்கோலங்களும் நடப்பதுண்டு:

pierced tongue: https://www.google.com/search?q=pierced+tongue&client=firefox-a&hs=Dhy&rls=org.mozilla:en-US:official&channel=sb&source=lnms&tbm=isch&sa=X&ei=FsRGU6_HBoaHygG7iYDACQ&ved=0CAgQ_AUoAQ&biw=1920&bih=920

lip piercing: https://www.google.com/search?q=pierced+tongue&client=firefox-a&hs=Dhy&rls=org.mozilla:en-US:official&channel=sb&source=lnms&tbm=isch&sa=X&ei=FsRGU6_HBoaHygG7iYDACQ&ved=0CAgQ_AUoAQ&biw=1920&bih=920#channel=sb&q=lip+piercing&rls=org.mozilla:en-US:official&tbm=isch

nose piercing: https://www.google.com/search?q=pierced+tongue&client=firefox-a&hs=Dhy&rls=org.mozilla:en-US:official&channel=sb&source=lnms&tbm=isch&sa=X&ei=FsRGU6_HBoaHygG7iYDACQ&ved=0CAgQ_AUoAQ&biw=1920&bih=920#channel=sb&q=nose+piercing&rls=org.mozilla:en-US:official&tbm=isch

ear piercing: https://www.google.com/search?q=pierced+tongue&client=firefox-a&hs=Dhy&rls=org.mozilla:en-US:official&channel=sb&source=lnms&tbm=isch&sa=X&ei=FsRGU6_HBoaHygG7iYDACQ&ved=0CAgQ_AUoAQ&biw=1920&bih=920#channel=sb&q=ear+piercing&rls=org.mozilla:en-US:official&tbm=isch

pierced belly buttons:  https://www.google.com/search?client=firefox-a&hs=dMJ&rls=org.mozilla:en-US:official&channel=sb&tbm=isch&q=pierced+belly+buttons&revid=731262054&biw=1920&bih=920&dpr=1

pierced back dimples: https://www.google.com/search?client=firefox-a&hs=dMJ&rls=org.mozilla:en-US:official&channel=sb&tbm=isch&q=pierced+belly+buttons&revid=731262054&biw=1920&bih=920&dpr=1#channel=sb&q=pierced%20back%20dimples&revid=284943441&rls=org.mozilla%3Aen-US%3Aofficial&tbm=isch&imgdii=_

tattooing: https://www.google.com/search?q=pierced+tongue&client=firefox-a&hs=Dhy&rls=org.mozilla:en-US:official&channel=sb&source=lnms&tbm=isch&sa=X&ei=FsRGU6_HBoaHygG7iYDACQ&ved=0CAgQ_AUoAQ&biw=1920&bih=920#channel=sb&q=tattooing&rls=org.mozilla:en-US:official&tbm=isch

..... தேமொழி

வேந்தன் அரசு

unread,
Apr 10, 2014, 9:18:01 PM4/10/14
to vallamai

10 ஏப்ரல், 2014 7:25 முற்பகல் அன்று, Iyappan Krishnan <jee...@gmail.com> எழுதியது:

காரணம் என்ன என்று வேறு ஒரு குழுமத்தில் நண்பர் பகிர்ந்த விளக்கம். 

//தொழுகைக்கு முன் ஒழு (சுத்தம்) செய்யும்போது, சிறுநீர் கழித்து சுத்தம் சரியாக செய்திருக்க வேண்டும்.

ஆனால்  யூதர்கள் தொழுகை செய்வது இல்லை

 யூதர்களின் வழக்கத்தை காப்ரியல் சொல்லியதாக நமக்கு சொல்லப்படுகிறது

--

Natrajan Kalpattu Narasimhan

unread,
Apr 10, 2014, 10:06:41 PM4/10/14
to வல்லமை
கற்பினைக் காத்தல் என்ற பெயரில் பெண் குழந்தைகளுக்கு ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் இன்றும் நடக்கிறது சுன்னத் போன்ற ஒரு அவலம்.  அதுவும் மருத்துவ மனைகளில் அல்ல.  விட்டிலேயே.  உபயோகிப்பது சுத்தம் செய்யப் பட்ட கத்திகளால் அல்ல,  தீட்டப் பட்ட கருங்க சில்லுகளால்!

மேலும் படிக்க  இங்கே செல்லவும்: <http://en.wikipedia.org/wiki/Female_genital_mutilation>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

சொ. வினைதீர்த்தான்

unread,
Apr 11, 2014, 1:40:16 AM4/11/14
to vallamai
2014-04-11 7:36 GMT+05:30 Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com>:
கற்பினைக் காத்தல் என்ற பெயரில் பெண் குழந்தைகளுக்கு ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் இன்றும் நடக்கிறது சுன்னத் போன்ற ஒரு அவலம்.  அதுவும் மருத்துவ மனைகளில் அல்ல.  விட்டிலேயே.  உபயோகிப்பது சுத்தம் செய்யப் பட்ட கத்திகளால் அல்ல,  தீட்டப் பட்ட கருங்க சில்லுகளால்!

மேலும் படிக்க  இங்கே செல்லவும்: <http://en.wikipedia.org/wiki/Female_genital_mutilation>

உலகம் பூராவும் இடம் பெயர்தலாலும் வேறு காரணங்களாலும் இந்தக் கொடிய பழக்கம் பரவியிருக்கிறது என்று அறிய முடிகிறது.
As a result of immigration, the practice spread to Australia, Europe, North America and Scandinavia.[157] Families who have immigrated from practising countries send their daughters there to undergo FGM, ostensibly to visit a relative, and in the UK there are reports that parents fly in "house doctors" to perform the procedure on multiple girls during the same ceremony in one of the family's homes.[158] As of 2013 anti-FGM legislation had been passed by 33 countries outside Africa and the Middle East.[7] Sweden banned the practice in 1982, the first Western country to do so.[159] Several former colonial powers, including Belgium, Britain, France and the Netherlands, followed suit, either with new laws or by making it clear that FGM was covered by existing legislation.[160] The practice is outlawed in Australia and New Zealand, across the European Union, in the United States, and under section 268 of the Criminal Code of Canada.[161]
இந்தியாவில் சில மரபுகளில் இது எப்போதாவது இருந்துள்ளதா? இப்ப்தும் இருப்பதாகத் தெரிய வந்துள்ளதா?
அன்புடன்
சொ.வினைதீர்த்தான். 
 
தேமொழி

unread,
Apr 11, 2014, 2:01:12 AM4/11/14
to vall...@googlegroups.com

On Thursday, April 10, 2014 10:40:16 PM UTC-7, சொ.வினைதீர்த்தான் wrote:
2014-04-11 7:36 GMT+05:30 Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com>:

மேலும் படிக்க  இங்கே செல்லவும்: <http://en.wikipedia.org/wiki/Female_genital_mutilation>

இந்தியாவில் சில மரபுகளில் இது எப்போதாவது இருந்துள்ளதா? இப்ப்தும் இருப்பதாகத் தெரிய வந்துள்ளதா?

இந்திய Bohra Muslim இன மக்களில் இவ்வழக்கம் இருப்பதாகத் தெரிகிறது, ஐயா.

Female circumcision anger aired in India

A Pinch of Skin – a documentary on female genital mutilation in India

Bohra women go online to fight circumcision trauma

PAKISTAN-INDIA: Women Expose Secret Genital Cutting Rite

Female Genital Mutilation (FGM) is also practised among Bohra Muslim populations in parts of India and Pakistan, and amongst Muslim populations in Malaysia and Indonesia.

It has been documented in India, among the Bedouin in Israel, the United Arab Emirates, and by anecdote in Colombia, Oman, Peru and Sri Lanka.

It has been documented in India, among the Bedouin in Israel, the United Arab Emirates, and by anecdote in Colombia, Oman, Peru and Sri Lanka.
Ghadially R (1992). Update on female genital mutilation in 
India. Women’s Global Network for Reproductive Rights 
Newsletter, January−March.

..... தேமொழி 

வேந்தன் அரசு

unread,
Apr 11, 2014, 7:40:33 AM4/11/14
to vallamai
சின்ன குழந்தைகளுக்கு மொட்டை வழிப்பதும் காது குத்துவதுமே எனக்கு கொடுமையான செயலாக தோணுது.

வளர்ந்த பின் தேவையானால் காதிலோ தொப்பூழிலோ துளைத்துக்கொள்ளட்டும் என விடணும்.

சொ. வினைதீர்த்தான்

unread,
Apr 11, 2014, 1:46:50 PM4/11/14
to vall...@googlegroups.com
திருமிகு தேமொழி கொடுத்துள்ள சுட்டியில் குரானில் பெண்களுக்கு FGM
சொல்லப் படவில்லை. இருந்தாலும் இசுலாமிய ஜியா பிரிவில் சில மரபுகளில்
உள்ளது எனப் படித்தேன்.
கொடுமை.

--
அன்புடன்
Reply all
Reply to author
Forward
0 new messages