மஹாபாரதம் - மொழிபெயர்ப்பு தமிழில் - இலவச மின்னூல்

547 views
Skip to first unread message

Iyappan Krishnan

unread,
Sep 15, 2013, 2:06:13 PM9/15/13
to பண்புடன், vall...@googlegroups.com, mintamil, தமிழ் வாசல்
மஹாபாரதத்தின் மூல நூலுக்கு நெருக்கமான ஆங்கில மொழிபெயர்ப்பாக கருதப்படும் கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை ஆங்கிலத்தில் பெயர்க்கப்பட்ட “The Mahabharata” புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு. மிக நேர்த்தியான முறையில் மொழிபெயர்க்கப் பட்டு ஆதிபர்வம் முழுவதும் முடிக்கப் பட்டிருக்கிறது.

http://www.mediafire.com/download/84z48001y28x22w/Mahabaratham_Adiparva.pdf

மேலுள்ள சுட்டியில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் முன்னுரை : http://www.jeyamohan.in/?p=38450

மொழி பெயர்ப்பு செய்யும் நண்பர் திரு அருட்செல்வன் பேரரசன் அவர்களின் வலைத்தளம்- http://mahabharatham.arasan.info/ . மொழிபெயர்ப்பு இங்கே தொடர்ந்து வலையேற்றம் செய்யப் படுகின்றது.

Iyappan Krishnan

*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை எந்நாளும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**

DEV RAJ

unread,
Sep 15, 2013, 10:00:25 PM9/15/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, mintamil, தமிழ் வாசல்
நல்ல முயற்சிதான்.
ஆதி பர்வத்தின் உப பர்வங்களின் தலைப்பில்
பிழைகள். சற்றே கவனம் செலுத்தியிருக்கலாம்.
சப்தம் மாறினால் விபரீதமான பொருளைத் 
தரும் பண்புகொண்ட மொழி அது


தேவ்

Hari Krishnan

unread,
Sep 16, 2013, 2:17:23 AM9/16/13
to vallamai, mintamil, தமிழ் வாசல்

2013/9/16 DEV RAJ <rde...@gmail.com>

கிஸாரி மோஹன் கங்கூலியின் மொழிபெயர்ப்பிலேயே சிறு சிறு பிழைகள் உண்டு (துரியோதனனுக்கு யானை வால் கொடி என்பதைப் போல்).

ஆனாலும், இவ்வளவு பெரிய முயற்சிக்காகப் பாராட்டியே ஆக வேண்டும்.  கிஸாரி மோஹன் கங்கூலிக்குப் பதின்மூன்றாண்டுகள் ஆயினவாம்.


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

bhuvaneshwar.d

unread,
Sep 16, 2013, 3:03:18 AM9/16/13
to vall...@googlegroups.com, பண்புடன், mintamil, தமிழ் வாசல்
சம்ஸ்க்ருதம் ----> ஆங்கிலம் -----> தமிழ்
இந்த வழி சரியாகப் படவில்லை.
குறைந்தபக்ஷம் ஒரு இந்திய மொழி இடையில் இருந்து இவர் அதில் இருந்து மொழிபெயர்த்திருந்தால் தேவலாம். ஏனென்றால் கலாச்சாரம் ஒன்றே.
சில உவமைகளை தமிழிலும் இந்தியிலும் வடமொழியிலும் சொன்னால் ரசிக்கலாம். அதை ஆங்கிலத்தில் சொன்னால் அபத்தம். உதாரணம் - மலைமார்பன். Mountain Chested என்று சொன்னால் எப்படி இருக்கும்?
கிசாரி மோகன் கங்குலி எழுதியதில் பல பிழைகள் உண்டு. அதை கவனிக்க வேண்டுமென்றால் மூல நூல் படிக்கச் வேண்டும். மூல நூல் படிக்க முடிந்தவருக்கு கிசாரி அவர்களின் நூல் தேவை இல்லை.
வடமொழி அறிந்த ஒருவர் மூலத்தில் இருந்து மொழிபெயர்த்தல் நன்று. இல்லாவிடில் கிசாரி அவர்கள் சொல்வதே சரி என்றாகிவிடும்.
இந்த புத்தகத்தின் மூல நூல் ஆசிரியர் வியாசர் அல்ல. கிசாரி மோகன் கங்குலி.
யானைக்கு ஹஸ்தி என்றும் நாகம் என்றும் இரு பெயர்கள். ஒருபொருட்பன்மொழி. ஹஸ்தினாபுரத்தை நாகபுரம் என்றும் சொல்வார் வியாசர். இதை எல்லாம் தெரிந்து, பகுக்க வேண்டும். அவர் நாகலோகத்தைச் சொல்கிறாரா இல்லை ஹஸ்தினாபுரத்தை சொல்கிறாரா எனபது ஆழப் படித்தவருக்கும் வடமொழி படித்தவருக்குமே தெரியும். கிசாரி விளக்கம் சொல்லாமல் நாகபுரம் என்பார். என்ன என தெரியாமல் விழிக்க வேண்டும்.
மொழி பெயர்ப்பை படிப்பது தவறல்ல. ஆனால் ஒரு மொழிபெயர்ப்பை வைத்துக் கொண்டு அதையே மூல நூலாகக் கருதி மீண்டும் ஒரு மொழியில் மொழிபெயர்ப்பது அபாயமான வேலை. வடமொழி தெரியாதவர் தான் கிசாரி மோகன் கங்குலி எழுதியதைப் படித்து மொழிபெயர்க்க வேண்டும். தெரிந்தவர் அதை செய்ய மாட்டார்.
ஆக, ஆசை  நல்லது. ஆயினும் முறை தவறு. நிஜமாகவே விருப்பம் இருப்பின், வடமொழி பயின்று பாண்டித்தியம் பெற்று பின் மொழிபெயர்க்கட்டும்.
இல்லாவிடில் தமிழில் வியாச பாரதம் என்று சொல்லாமல் தமிழில் கிசாரி மோகன் கங்குலியின் மொழி பெயப்பு என்று சொல்ல வேண்டும். அதுவே honesty.

புவனேஷ்வர்

Bhuvan Vellore

unread,
Sep 16, 2013, 3:18:04 AM9/16/13
to vallamai
தமிழில் மகாபாரதம் என்றால் அது ராஜாஜி அவர்களின் சுருங்கிய நூல் மட்டுமே வாஸ்தவத்தில் சிறந்தது.
இந்நூலில் பல பிழைகள் (பெயர்கள் உட்பட) உள்ளன. சம்ஸ்கிருத உச்சரிப்புகளை தமிழில் கொண்டுவர விதிகள் உள்ளன. அவற்றைப் பின்பற்ற வேண்டும். ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு கொண்டுவருவதால் வரும் கஷ்டங்கள் இவை. இன்னும் பல inaccuracies உள்ளன. சரி செய்யாவிடில் ஆசிரியர் எதிர்பார்த்த அளவு வரவேற்பு கற்றோரிடையே கிடைக்காது. ஏற்கெனவே இது போல ஒரு பெண்மணி attempt செய்துள்ளார்.

பணிவன்புடன்,
புவனேஷ்வர்


Best Regards,
Bhuvaneshwar Dharmalingam


2013/9/16 bhuvaneshwar.d <bhuvane...@gmail.com>

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/vallamai/Zk2LOyp2DkA/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Nagarajan Vadivel

unread,
Sep 16, 2013, 9:17:02 AM9/16/13
to vallamai
அந்தணராகப் பிறக்காமல் சுதந்திரப் போராட்ட வீரராக இருந்து சிறைச் சாலையில் ஒரு பொதுவுடமைவாதியாகவும் சமஸ்கிருத அறிஞராகவும் வளர்ந்து சமாகிருத நூல்களையும் மார்க்ஸ்சின் டாஸ் கேபிடலையும் தமிழில் மொழிபெயர்த்தவர்


2013/9/16 Bhuvan Vellore <bhuvane...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

ADS Kumar

unread,
Jun 19, 2014, 9:40:13 AM6/19/14
to vall...@googlegroups.com, panb...@googlegroups.com, minT...@googlegroups.com, thamiz...@googlegroups.com

தமிழில் முழு மஹாபாரதம், இது சாதாரண முயற்சி அல்ல, குரு வேத வியாசர் அருள் இருப்பதால்தான் குரு செ.அருட்செல்வப் பேரரசன் அவர்களால் இப்பெரும் நற்பணி துவங்க முடிந்தது, இதுவரை  நேரடியாக சமஸ்கிருதத்திலிருந்து ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரத்திற்க்கும்  மேற்பட்ட  ஸ்லோகங்கள் கொண்ட முழு மஹாபாரதம் (பதினெட்டு பர்வங்களும்)  நான் அறிந்தவரை இரு வேறு ஆசிரியர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு புத்தகமாக வெளிவந்துள்ளது, அவை  மஹாபாரத கும்பகோணப்பதிப்பு, குரு. ம. வீ. இராமானுஜாசாரியார் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு, தொகுக்கப்பட்டது, மற்றொன்று 18ஆம் நூற்றாண்டின் நல்லபிள்ளை பாரதம். இவை இரண்டும் புத்தகமாகவே கிடைக்கின்றன, தற்போது மூன்றாவதாக குரு செ.அருட்செல்வப் பேரரசனின் இப்பெரும் நன்முயற்சியால் உல தமிழ் மக்கள் யாவரும் படித்து பயன் பெறும் வகையில் முதன் முறையாக இலவசமாக தமிழில் முழுமஹாபாரதத்தை அவா் இணையதளத்தில் முதல் மூன்று பர்வங்களை வெளியிட்டிருக்கிறார். ஆராய்ந்து படித்து பயன் பெறுவோம் Link : http://mahabharatham.arasan.info/

வில்லிபுத்துராரை நான் இங்கு குறிப்பிடாததற்கு காரணம் அவர் 10 பர்வங்களுடன் மொழிபெயர்ப்பை நிறுத்தியதுதான். மேலும் பலர் மஹாபாரதத்தை வெறும் கதை போல் எழுதி வெளியிட்டிருக்கிறார்கள் என்னை பொறுத்தவரை இவைகள் சத்தான பழத்தின் சாறு நீக்கபட்ட சக்கைகள் ஆகும். குரு வேத வியாசர் எழுதிய மஹாபாரதத்தில் ஒரு எழுத்தை கூட விட்டுவிட்டு மொழிபெயர்க்கும் உரிமை மனிதர்களாகிய நமக்கு இல்லை, குரு வேத வியாசர் மஹாபாரதத்தை நான்கு வேதத்தின் குறுகிய வடிவமே என்கிறார், அதை சுருக்கி கூறும் அதிகாரம் நமக்கு இல்லை, தமிழில் முழு மஹாபாரதம் புத்தகமாக தராவிட்டாலும் தார்பரிய விளக்கத்தோடு முழு மஹாபாரத சொற்பொழிவு நடத்தும் மகான்களும் உண்டு, குறிப்பாக குரு ப்ரம்ஹஸ்ரீ v. கோபால்ஜீ அவர்கள், குரு வேலுக்குடி கிருக்ஷ்னன் அவர்கள், இச்சான்றோர்களால் முழு மஹாபாரதமும் சமஸ்கிருதத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு புத்தகமாக கிடைத்தால் என்றும் நம் தமிழ் சமுதாயத்தில் தர்மம் தழைத்தோங்கும். தற்பொழுது கிடைக்கும் மஹாபாரத புத்தகங்களி்ல் என் சிற்றறிவுக்கு எட்டியவரை குரு சோ.ராமசாமி அவர்கள் எழுதிய மஹாபாரதமே சிறந்ததாக தெரிகிறது, சுருக்கமான விளக்கவுரை என்றாலும் கருத்துக்களில் மாற்றமில்லாமல் உள்ளது உள்ளபடி சிறப்பாக தந்திருக்கிறார்

Reply all
Reply to author
Forward
0 new messages