சாபம், கர்மா, ஊழ், வினை, விதி:-

2,053 views
Skip to first unread message

Peruvai Parthasarathi

unread,
Apr 8, 2016, 12:14:48 PM4/8/16
to தமிழ் வாசல்
தமிழ் வாசலில் உலாவரும் அனைத்து எழுத்தாளருக்கும் எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டு, தமிழ் வாசலில் நுழைந்து, இன்றைக்கு என் மனதில் எழும் சிந்தனை மற்றும் கேள்விகளை முதல் எழுத்தாகவும், அறிமுகமாகவும் அமைத்துக் கொண்டு, பின் வரும் தலைப்பில் தொடங்குகிறேன்.

சாபம், கர்மா, ஊழ், வினை, விதி:-
====================================

<>தனது வாழ்நாளில் யாருக்கும் தீங்கு விளைத்ததில்லை, அதைப்பற்றி மனதளவில் நினைத்தது கூட கிடையாது, அவருக்கு இப்படி ஒரு துன்பச் சம்பவம் நிகழ்ந்து விட்டதே?..

<>இருபத்திநாலு மணிநேரமும் இறை சிந்தனையோடு, பரோபகார எண்ணத்தோடு "நல்லன்பர்" என்ற அடைமொழியோடு வாழும் இவருக்கு இப்படி ஒரு சோதனையா?..

<>ஒரு பாவமும் அறியாத அப்பாவிக்கு, வாழ்நாள் முழுவதும் இப்படி ஒரு கொடூர தண்டனையா?.

இப்படி, தனது வாழ்க்கையில் அல்லது மற்றவருடைய வாழ்க்கையில் துன்பம் நிகழும்போது, அனைவருடைய மனதிலும் இது போன்ற பொதுவான எண்ணற்ற கேள்விகள் எழுவது சகஜம் எனினும், துன்பம் நேர்கையில், அதற்கான சரியான காரணம் அல்லது சரியான பதில் எங்கும் கிடைக்காமல் முடிவில், சாபம், கர்மா, ஊழ், வினை, தலைவிதி என்கிற வார்த்தைகளே, தருணத்திற்கு ஏற்றவாறு பதிலாக அமைந்து விடுகிறது.
சமூகத்தில் உண்மையிலேயே “நல்லவர்” என்று பெயரெடுத்த ஒருவருக்கு, சட்டென்று ஒரு விபத்து, மரணம் அல்லது அசம்பாவிதம் நிகழும்போது, இது எதனால் நிகழ்ந்தது என்று சரியான பதிலைத் தரமுடியாத பட்ச்சத்தில், இப்படிப்பட்ட பதில் அதாவது கர்மவினை, வினைப்பயன், விதி, போன்ற பதிலை சட்டென்று நாம் சொல்லிவிடுகிறோம். உண்மையிலேயே இந்த பதில் சரிதானா? அல்லது சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு ஒப்புக்கொள்கிறோமா? என்பது இன்று வரை சரியாக அறிந்து கொள்ளமுடியவில்லை.

ஒரு துன்ப நிகழ்ச்சிக்கு எந்த ஒரு காரணத்தையும் முன் வைக்கமுடியாமல், எதுவுமே தெரியாத, புரியாத அறியாத தருணத்தில்தான் நாம் இத்தகைய பதிலைச் சொல்லுகிறோம்.
துன்பம் நேர்கையில் மட்டுமே “விதி முடிந்துவிட்டது” என்று சொல்கின்ற நாம், மாறாக ஒரு நன்மை நிகழும்போது “விதி அவனை அறிவாளியாக்கிவிட்டது என்றோ, “விதி அவனுக்கு மிக உயர்ந்த பதவியை வழங்கிவிட்டது” என்றோ சொல்வதில்லை. அதேபோல்,

சமூகத்தில் மிக உயர்ந்த இடத்திற்குச் சென்றவரையும், உழைப்பால் உயர்ந்தவர்களையும், கல்வியில் மேம்பட்டு விளங்குகின்ற அறிவாளிகளையும் புகழும்போது, இம்மாதிரி வார்த்தைகள் நம்மிடமிருந்து வருவதில்லை.

ஆக துன்பம் நேரும்போது, அதுவும் அதற்கான சரியான காரணத்தை அறிய முடியாத தருணத்தில்தான் இத்தகைய வார்த்தைகள் வெளிப்படுகிறது.

வாழ்வில் நாம் சந்திக்கின்ற நன்மைக்கும், தீமைக்கும் நாமே காரணம் என்பதை, “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்று குழந்தைப் பருவத்திலிருந்தே படித்து அறிந்து அனுபவித்தும் வருகிறோம். இருந்தாலும், துன்பியல் சம்பவத்தின் போது மேலே சொன்ன பதில்களை ஏற்றுக்கொள்ளவும், கிரகித்துக் கொள்ளவும் சற்று சிரமமாகத்தான் இருக்கிறது.

எது எப்படியோ, மிகக் கொடிய துயர சம்பவம் ஒன்று நிகழும்போது, நம்மை நாமே ஆறுதல் சொல்லிக்கொள்ள மட்டுமே சாபம், கர்மா, வினை, ஊழ், விதி போன்ற வார்த்தைகள் பயன்படுகிறதே தவிர, அதன் வலியை அனுபவிப்பருக்கு அது பெரிய அளவில் எவ்வித மாற்றத்தையும் தருவதில்லை.

சில சமயம், துன்பமடைந்தவரை தேற்றுகின்ற வகையிலேதான் இவ்வித வார்த்தைகள் பயன்படுகிறதா?..என்ற கேள்வியும் எழுகிறது.
திருக்குறள், நாலடியார், மணிமேகலை, சீவக சிந்தாமணி, விவேகசிந்தாமணி, ராமாயணம், மகாபாரதம் போன்ற அனைத்திலுமே இத்தலைப்பைப் பற்றிய கருத்துகள் அலசப்பட்டிருக்கிறது, ஆனால் புரிந்து கொள்ளுவது கடினமாக உள்ளது. குறிப்பாக இன்ப துன்பங்களைப் பற்றி அறிய முற்படும்போது தலைப்பில் உள்ள வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன.

திருக்குறளில் ஊழியல் என்கிற அதிகாரமே ஒதுக்கப்பட்டுள்ளது, அதில் ஒரு குறளில்..“நல்லவை எல்லாந் தீயவாம், தீயவும் நல்லவாம் செல்வம் செயற்கு”

செல்வத்தை ஈட்டுவதற்காக முயற்சிக்கையில் சம்பாதிப்பதற்கான அனைத்து வகையும் சரியாக இருந்தாலும், தீயவிதி என்பது குறுக்கிட்டால் பெருநஷ்டம் ஏற்படும் என்கிற பொருளிலும், அதுவே நல்விதி என்றால் லாபம் உண்டாகும் என்கிற பொருள்பட அமைந்திருக்கிறது.

மேலும் விதி என்பதை அறியமுடியாத வரையில் அதிலேயும் கூட விதியைப் பொருத்துதான் அனைத்தும் அமைகிறது என்பது ஒருசிலரது வாதம்.

இன்னொரு வினாவும், அனைவரிடத்திலேயும் அவ்வப்போது எழுவது உண்டு, அதாவது கலியுகத்தில் அயோக்கியர்கள் சகல செளகர்யங்களுடனும், யோக்கியர்களுக்கு பெரும்பாலும் சோதனையே நிகழ்கிறது என்றும் வாதிப்பவர்களும் உண்டு.

ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும், அலசிப்பார்க்கையில், அவரவர் செய்த பாவ, புண்ணியங்களின் அடைப்படையிலேதான், இன்ப, துன்ப நிகழ்கள் வரையறை செய்யப்பட்டுள்ளன என்பதையே அனைத்து இலக்கியம், இதிகாசம், காப்பியம் போன்றவை வலியுறுத்துகின்றன.
மிகவும் உத்தமரான நண்பரொருவருக்கு நேர்ந்த ஒரு துன்பியல் சம்பவமே இதை எழுதுவதற்குகாரணமாக அமைந்தது என்று கூறிக்கொண்டு, இதைப்பற்றிய விரிவான விளக்கத்தை இதிகாசம், இலக்கியம் போன்றவற்றிலிருந்து தாமறிந்த கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன். மீளாத்துயரில் ஆழ்ந்திருக்கும் நண்பருக்கு, தாங்கள் அளிக்கும் பதில் கூட ஆறுதல் அளிக்கலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

தலைவாசலில் நுழையுமுன்பே “அனைவரும் மகிழ்ச்சியுடன் உரையாட இது ஒரு களம். அன்பும் மகிழ்ச்சியுமே இந்த வாசலில் நிலைத்து நிற்க நாம் உறுதி கொள்வோம்” என்ற வாசகத்தை நினைவில் கொண்டு இந்தப் பதிவில், அடுத்தடுத்து நான்கு இடங்களில் வரும் கேள்விக்குறிகளே (?) என் மனதில் எழுந்த வினாவாக எடுத்துக் கொண்டு, எவ்வித காரணமும் இன்றி, ஒன்றுமே புரியாமல் துன்பத்தில் உழலும் மாந்தர்களுக்கு தங்களின் பதில் “ஆறுதலாக” அமைய விழைகிறேன்.

அன்புடன்
பெருவை பார்த்தசாரதி
9884284108

Mohanarangan V Srirangam

unread,
Apr 8, 2016, 12:18:12 PM4/8/16
to தமிழ் வாசல்
வாருங்கள் ஐயா. அருமையான எழுத்தை முன்னிறுத்தி நல்வரவாக வந்துள்ளீர்கள். நாங்கள் எல்லாம் கற்க ஒரு நல்வாய்ப்பு.

***

Peruvai Parthasarathi

unread,
Apr 8, 2016, 12:27:31 PM4/8/16
to தமிழ் வாசல்
நன்றி, திரு ஶ்ரீரங்கம் மோகனரங்கன் அவர்களே, தங்களது மேலான கருத்துக்களைத் தெரிவிக்குமாறு வேண்டுகிறேன்.

அன்புடன்

Tthamizth Tthenee

unread,
Apr 8, 2016, 12:57:27 PM4/8/16
to thamizhvaasal

வருக  திரு பெருவை பார்த்தசாரதி அவர்களே


வரும் போது  இனிமையான செய்தியை  எடுத்துக் கொண்டு  வருபவரை விட

அடுத்தவர்  துன்பத்தைப் பற்றி   அலச  உங்களைப் போல்  வேறு யாருக்கும்   தைரியமும்  கருணையும்  வராது என்பதே   நிதர்சனம்.   நாம்  எதைப் பற்றியும் அலசலாம்   அலசலின் முடிவு நமக்கு    ஒரு  அனுபவத்தை  நிச்சயமாக அளிக்கும் 


எவருக்குத் துன்பம் நேர்ந்தாலும்   நம்மால் முடிந்த அளவு  ஆறுதல் சொல்லலாமே தவிர  அவரது துன்பத்தை போக்க வல்லவர்கள்  அல்ல  நாம்​

இந்த  ப்ரபஞ்சத்தில்  ஒரு வாலறுந்த  நரிக்கு     இன்னொரு  நரி ஆறுதல் சொல்வதாகவே  எடுத்துக் கொள்ள வேண்டும்

ஆறுதல்  சொல்கின்ற  நரிக்கு  வாலறுந்த  நிலை ஏற்பட்டாலும் அல்லது ஏற்படாவிடினும்  அனுதாபம் என்னும்   வாலை நாமெல்லோருமே  ஒட்டவைத்துக் கொன்டு  அதனலா ஆறுதல் சொல்லிக்கொண்டு  இருக்கிறோம் அவ்வளவே

அடுத்த  வீட்டுக் காரன் பாம்பைப் பிடித்தால் அல்லித்தண்டு போல  நமக்கு  குளிர்ந்திருக்கும்   என்பார்கள்

நாமே  பாம்பைப் பிடிக்கும் போதுதான்  அந்தத் துயரத்தின் தன்மை  நமக்குப் புரியும்

அப்போதும்  அடுத்தவர்  துயரத்தின்  அளவை  துல்லியமாக  நம்மால் அறிய முடியாது

ஆகவே   விதி  போன ஜென்மக் கர்ம வினை  என்றெல்லாம்  நாமே சொல்லித் தேற்றிக் கொள்கிறோம் அவ்வளவே.    அதுவும்  நம் முன்னோர்கள்  நமக்கு  ஏற்படுத்திய  வழி. நமக்காய் அது கூடத் தெரியாது

இன்னமும்   எந்த  ஒரு செயலுக்கும் உண்மையான  காரிய காரணங்களைக் கண்டவரும்  இல்லை  விண்டவரும் இல்லை. 

நாம்  இறையைச் சார்ந்து  இருக்கிறோம்  மறையைச் சார்ந்து  இருக்கிறோம்
மேலும் பல  திரைகளைச் சார்ந்து இருக்கிறோம்.  நம் திரைகள்  விலகும் நேரத்தில்   நாம் இருப்போமா  என்பதே அறியாத  அற்ப மானிடர்கள் நாம்.   ஆகவே   பூரண  சரணாகதி அடைந்து  எல்லாம் அவன் செயல் என்றே  வாழ்வோம்

இவையெல்லாம்  உணர்ந்தாலும்  உங்கள் நண்பருக்கு  நம்மால் முடிந்த  ஆறுதலை அளிப்போம்  அதுதானே   நம் வழக்கம்.

எல்லா மனிதர்களுமே  ரத்தத்தில்  திமிர் இருக்கும் வரையில்  தன்னையே நம்புகிறார்கள்  ரத்தம் சுண்டிய பிறகு ஜோதிடம்  அதற்கும் மேலாக   இறைவன்  ,பரிகாரம், போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள்

நமக்கு என்ன நேரினும்  அவை எல்லாமே  மறை பொருளுக்கு  நேருவதாகவே  எடுத்துக் கொள்வோம்

அவனில் ஒரு துளிதானே  நாமெல்லோரும்

நம் வருத்தம்  அவன் வருத்தம்  ஆயினும் அவனிலிருந்து  பிரிந்து வந்த  ஒரு  சிறு துளியாகிய  நமக்கு  என்ன விதியோ  அதை அனுபவித்தே  ஆகவேண்டும்.

இந்த  விதி  நமக்கு மட்டுமல்ல   மறைபொருளுக்கும்  பொருந்தும்

ஆகவே  அவன் விதியை நம்மால் மாற்ற  இயலாது  நம் விதியையும்  அவன் மாற்றுவதில்லை

நடப்பவை   எல்லாம் நன்மைக்கே  என்று எடுத்துக் கொள்வோம் என்னும் அறிவுறை கூட  சொல்வதற்கு எளிதானது  ஆனால் நடைமுறையில்  நம்மால்  அப்படி எடுத்துக் கொள்ள  முடியவில்லை  என்பதே   சத்தியமான உண்மை

தெளியத் தெளிய  குழம்புகிறது  குழப்பக் குழம்பத் தெளிகிறது  இப்படிக் குழம்பிப் பின் தெளிவது போல் தோன்றி மீண்டும்   குழம்பி  இப்படியே போய்விடும் நம் காலம். ஆக மொத்தம்  இந்த  மானுடர் வாழ்வில்  தெளிந்தவர் மறுபடியும் குழம்பும் கணத்துக்குள்  இறைவன் திருவடியில் இணைந்து விட்டால்  நலம்

இல்லையென்றால்   அதுவும்  அவரவர்  விதி என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்

வெகு சீக்கிரம்  தெளிந்தவர்களை  வெகு சீக்கிரம்  எடுத்தாட்கொள்கிறான் இறைவன் இளம் வயதிலேயே

முக்தி நாதனிடமும்  போய் நின்று கொண்டு இறைவா  என்னை பத்திரமாக  என் வீட்டில் கொண்டு சேர்த்துவிடு என்று வேண்டிக் கொள்ளும்  அற்ப  மானிடர் நாம்

அங்கே போயாவது    இறைவா  எனக்கு முக்தி கொடு என்று வேண்டுகிறோமா

எல்லாம் மாயா  எல்லாம் மாயா எல்லாம் மாயா

அன்புடன்
தமிழ்த்தேனீ







அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





2016-04-08 21:57 GMT+05:30 Peruvai Parthasarathi <rkpsa...@gmail.com>:
நன்றி, திரு ஶ்ரீரங்கம் மோகனரங்கன் அவர்களே, தங்களது மேலான கருத்துக்களைத் தெரிவிக்குமாறு வேண்டுகிறேன்.

அன்புடன்

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.

Iyappan Krishnan

unread,
Apr 8, 2016, 12:58:45 PM4/8/16
to தமிழ் வாசல்
இதுக்கெல்லாம் டீக்கடை பெஞ்ச் பெரியவர் தான் சரியான பதில் சொல்லுவார்ன்.. ஆனா என்னமோ கொஞ்ச நாளா அவர் ப்ளஸ் பக்கம் பிசியா இருக்காரே விட்டு.. இங்க வரமாட்டேங்கிறார்... 

shylaja

unread,
Apr 9, 2016, 12:28:56 AM4/9/16
to தமிழ் வாசல்
நல்வரவு திரு பெருவை பார்த்தசாரதிக்கு..

2016-04-08 22:28 GMT+05:30 Iyappan Krishnan <jee...@gmail.com>:
இதுக்கெல்லாம் டீக்கடை பெஞ்ச் பெரியவர் தான் சரியான பதில் சொல்லுவார்ன்.. ஆனா என்னமோ கொஞ்ச நாளா அவர் ப்ளஸ் பக்கம் பிசியா இருக்காரே விட்டு.. இங்க வரமாட்டேங்கிறார்... 

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

அன்புடன்
ஷைலஜா

கட‌ல் தா‌ண்டு‌ம் பறவை‌க்கெ‌ல்லா‌ம்
இளை‌ப்பாற மர‌ங்க‌ள் இ‌ல்லை.
கல‌ங்காமலே க‌ண்ட‌ம் தா‌ண்டுமே,,,
(சத்தம்போடாதே  ..படப்பாடல்)

Geetha Sambasivam

unread,
Apr 9, 2016, 4:33:10 AM4/9/16
to தமிழ் வாசல்
திரு பெருவை பார்த்தசாரதி அவர்களே,

நல்வரவு! முதலில் உங்கள் அருமை நண்பருக்கு விரைவில் அவருக்கு ஏற்பட்ட துன்பியல் சம்பவத்தின் தாக்கம் குறைந்து மன ஆறுதல் பெற என் பிரார்த்தனைகள். கடந்து போன ஜன்மத்தின் நல்வினையும் தீவினையும் தான் இப்போதைய பிறவியில் தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்பார்கள். அவ்வளவு ஏன்? கடந்த ஜன்மத்தில் நம்மோடு தொடர்பில் இருந்தவர்களோடு தான் இப்பிறவியிலும் தொடர்பு ஏற்படும் என்பார்கள். அதோடு காரண, காரியமே இல்லாமல் நமக்கு ஒருவரைப் பிடித்துப் போகும். மற்றொருவரைப் பிடிக்காது! இதற்கெல்லாம் முற்பிறவியின் தொடர்ச்சியே காரணம் என்பார்கள். 

இது குறித்துப் பலரும் பலவாறு சொல்லி வருகிறார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இதைக் குறித்து வாத, விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த ரகசியம் மட்டும் நமக்குப் புரிந்து விட்டதெனில்!  நம்மை விட பாக்கியசாலிகள் யார் இருப்பார்கள்?  பகவான் ரமணருக்கு  ஏற்பட்ட துன்பத்தைக் குறித்துப் படித்திருப்பீர்கள்; புரிந்து கொண்டிருப்பீர்கள்! பகவானுக்கே அப்படி என்றால் நாமெல்லாம் கொசு மாத்திரமல்லவோ! ஆனால் நாத்திகவாதிகள் இதைக் கேலி செய்வதும் உண்டு! :( பகவானைப் போல மன உறுதியுடன் அவர்கள் தாங்கிக் கொள்வார்களா? சந்தேகமே! 

உங்கள் கேள்விக்கு நான் சொல்லி இருப்பது சரியான பதிலும் அல்ல; தீர்வும் அல்ல! பல விஷயங்கள் காரண, காரியமின்றி நடக்கின்றன என நாம் நினைத்தாலும் அவற்றுக்குக் காரணம் இருந்து தான் தீரும். நமக்குத் தான் புரியவில்லை. உங்கள் நண்பரின் மன ஆறுதலுக்காக மீண்டும் பிரார்த்திக்கிறேன். 

ஆனால் ஐயா, ஒருவருக்குத் தீங்கிழைத்தால் தீங்கிழைத்தவர் இந்தப் பிறவியிலேயே அதற்கான தண்டனைகளைப் பெறுவதைக் கண் முன்னர் பார்த்து வருகிறேன். அதோடு அதன் தாக்கமும் அதிகமாக இருக்கிறது!  ஆகவே தீதும், நன்றும் பிறர் தர வாரா என்பது உண்மையே!

Peruvai Parthasarathi

unread,
Apr 9, 2016, 8:25:06 AM4/9/16
to தமிழ் வாசல்
தங்களுடைய "ஆறுதல்" வார்த்தைகளுக்கு நன்றி சொல்லிக்கொண்டு, இதைப்பற்றிய விவாதத்தை மேலும் தொடர நினைக்கிறேன், பல விஷயங்கள் காரணமின்றி நடக்கின்றன, நமக்குத்தான் அது புரியவில்லை என்பது மிகவும் பொருத்தம்.

பதிலுக்கு நன்றி

Peruvai Parthasarathi

unread,
Apr 9, 2016, 8:34:45 AM4/9/16
to தமிழ் வாசல்
தங்களின் விரிவான பதில், முதலில், மீளாத்துயரில் ஆழ்ந்திருக்கும் எனது நண்பருக்கு முதலில் "ஆறுதல்" அளிக்கட்டும். அடுத்து எழுதுகின்ற மனநிலையில் நான் இப்போது இல்லை, ஆனால் "ஆறுதல்" என்கிற வார்த்தைக்கு ஈடான மருந்து, கொடுந்துயரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் பொருந்தும். இதைப் பற்றி இன்னும் விரிவாக அலச விழைகிறேன்.

"துன்பத்துக்கு ஆறுதல் சொல்லமுடியுமே தவிர, துன்பத்தைப் போக்க வல்லவர்கள் நாம்" என்று சொல்லியிருப்பதை கடந்த 16 நாட்களாக அனுபவத்தில் உணர்ந்து வருகிறேன்.

நேரம் எடுத்துக்கொண்டு,விரிவான பதிலை தந்தமைக்கு மிக்க நன்றி

Tthamizth Tthenee

unread,
Apr 9, 2016, 8:36:08 AM4/9/16
to thamizhvaasal

2016-04-09 18:04 GMT+05:30 Peruvai Parthasarathi <rkpsa...@gmail.com>:
துன்பத்துக்கு ஆறுதல் சொல்லமுடியுமே தவிர, துன்பத்தைப் போக்க வல்லவர்கள் நாம்


துன்பத்துக்கு ஆறுதல் சொல்லமுடியுமே தவிர, துன்பத்தைப் போக்க வல்லவர்கள்
​  அல்ல  ​
நாம்

Iyappan Krishnan

unread,
Apr 9, 2016, 10:15:09 AM4/9/16
to தமிழ் வாசல்
​ நாம் துன்பம் என்று கருதுவது எல்லாம் துன்பம் ஆகிவிடுகிறதா ? 

பீஷ்மருக்கு  பிறந்த குழந்தைகளை கங்கை​ ஏன் கொன்றாள் ? அது அவர்களுக்கு விடுதலையா துன்பமா ? பீஷ்மருக்கு தான் விரும்பும் போது தான் மரணம் என்ற வரம்... உண்மையில் அது வரமா சாபமா ?  எத்தனையோ பிரச்சினைகள்,,  குலத்தின்  தலைமகள்  மானமிழக்கச் செய்தபோது அவர் அடைந்த துன்பம் மரணத்தினும் எளியதா ? 


இறைவனின் நாமத்தைப் பயின்றால் எல்லா பாபமும் பட்டுவிடும் என்கிறார்கள்.. சரி... அதே சமயத்தில் நீ என்ன தான் செய்தாலும் முற்பிறவிக் கர்மா  தன் வேலையைச் செய்யும் என்கிறார்கள். ஆக  இறைவனின் நாமத்தைச் சொன்னால் எல்லா பாவமும் போய்விடும்...  நினைக்க முக்தி திருவண்ணாமலை என்கிறார்களே அதெல்லாம் என்னாவது ?

காசியில் இறந்தால்  முக்தி.. சரி... ஆனால் காசியில் இறப்பவர்கள் எல்லாருமா முக்தி அடைந்திருக்கிறார்கள்? எங்கேயோ ஒரு கண்ணி எல்லாவற்றையும் இணையவிடாம செய்கிறது அல்லவா ?

அந்த இடத்தில் மறைந்திருக்கும் ஒன்றைத்தான் விதி என்கிறார்கள்.  ஆனமட்டும் எல்லா வகையிலும் பார்த்துவிட்டேன்.. பதிலே கிடைக்கவில்லை.. ஏன் எனக்கு இந்த  துன்பம் என்று எண்ணி ஒருத்தர் மருகிக் கொண்டே இருந்தால் வாழ்வு என்னாவது...   ஆம்... இந்த துன்பம் எனக்கு வந்தது.. காரணம் விதி... என்று தன் அடுத்த வேலையைத் தொடர்பவர்களுக்கு  இந்த துன்பங்கள் பெரும் வலியைக் கொண்டு வந்துவிட முடியாது இல்லையா ?


லேண்ட்மார்க் என்றொரு நிறுவனம் ஒன்றுண்டு...  அவர்கள் சொல்லித் தரும் விஷயம் இது தான். நம் இந்திய பெற்றோர்கள் காலம் காலமாகச் சொல்லி வந்தவை தான்...


“ ஒரு பிரச்சினை வந்துவிட்டது. சரி... தாங்க முடியவில்லை.. சரி.. ஆனால் அய்யோ தாங்க முடியவில்லையே என்று அழுது கொண்டே இருந்தால் அந்த பிரச்சினை சரியாகிவிடும் என்றால், இந்த உலகம் எப்போதோ கண்ணீரால் மூழ்கடிக்கப் பட்டிருக்கும்.  எந்த ஒரு பிரச்சினைக்கும்  மூல காரணம் வெளியில் எங்கோ இல்லை. அதே போல அதன்  தீர்வும் வெளியில் இல்லை.   தீதும் நன்றும்... பிறர் தர வருவதில்லை.  ”

When you say " I will never ever gonna do this mistake again ", meaning, your keeping your past in the future all the time. That is always gonna keep haunting you.  இது தவறுக்கானது மட்டுமல்ல துன்பங்களுக்கானதும் தான். இந்த வேதனையை இனி எப்போது  நான் எதிர் கொள்ளக் கூடாது எனும் போதில்..  கடந்த காலத்தைக் கொண்டுபோய் எதிர் காலத்தில் வைத்து விட்டு அதை எண்ணியே அச்சம் அதிகரிக்கிறது.

சொல்லப் போனால், வலியை விட, வலியின் மீதான கற்பனையே நம்மைச் சாய்க்கிறது. பேய்களை விட.. பேய்களின் மீதான கற்பனையே நம்மை பயமுறுத்துகிறது...  பிரச்சினைகளை விட.. பிரச்சினையின் மீதான கற்பனைகளே நம் முன் சென்று நின்று நம்மை வரவேற்கக் காத்திருக்கின்றது. 


சரி துன்பங்களில் இருந்து எப்போது தான் விடுதலை ? உண்டு.. துன்பங்களில் இருந்து கண்டிப்பாக விடுதலை உண்டு. எப்போது இன்பங்களில் இருந்து விடுதலைக் கிட்டுகிறதோ... அந்த மறு நொடியே துன்பங்களில் இருந்தும் விடுதலைக் கிட்டிவிடும்.. 

ஏதோ உளறிக் கொண்டிருக்கிறேன் என்பது eனக்கு நன்றாகவே புரிகிறது...  இதெல்லாம் சொல்வது எளிது தான்.  புரிகிறது.  ஆயினும்.. சொல்லித்தான் ஆக வேண்டி இருக்கிறது. ஏனென்றால் நாளை நீங்கள்  யாருக்கேனும் இதைச் சொல்ல வேண்டி இருக்கும். வழி வழியாகக் கடத்தப் பட்டு வரும் செய்தி அல்லவா இவை ?

அன்புடன்
ஐயப்பன்

Iyappan Krishnan

unread,
Apr 9, 2016, 10:15:58 AM4/9/16
to தமிழ் வாசல்
​பீஷ்மருக்கு முன் பிறந்த என்று வாசிக்கவும். பீஷ்மருடன் என்று எழுதிவிட்டு சரிசெய்யும் போது சற்று பிழையாகிவிட்டது. மன்னிக்கவும். ​

2016-04-09 19:45 GMT+05:30 Iyappan Krishnan <jee...@gmail.com>:
பீஷ்மருக்கு  பிறந்த குழந்தைகளை கங்கை​ ஏன் கொன்றாள் ?




Iyappan Krishnan

*>*<*
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்.
நிலைபெறுத்தலும். நீக்கலும். நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.

Tthamizth Tthenee

unread,
Apr 9, 2016, 10:43:02 AM4/9/16
to thamizhvaasal
சொல்லப் போனால், வலியை விட, வலியின் மீதான கற்பனையே நம்மைச் சாய்க்கிறது. பேய்களை விட.. பேய்களின் மீதான கற்பனையே நம்மை பயமுறுத்துகிறது...  பிரச்சினைகளை விட.. பிரச்சினையின் மீதான கற்பனைகளே நம் முன் சென்று நின்று நம்மை வரவேற்கக் காத்திருக்கின்றது. 


உண்மையைச் சொன்னால்   உடலிலே  ஏதாவது வெட்டுக் காயம் ஏற்பட்டால்  அந்தக் காயம் படும் போது  இருக்கும்  வலியின் அளவு    அதன் பிறகு  இருப்பதில்லை

ஆனால்  அந்தக் காயம்   ஏதாவதொரு காரணத்தால் ஆறாமல் போனால்   அல்லது

சீழ் பிடித்து   இன்னமும் அதிகமான காயமானால்   அதன் விளைவாக வரும் வேதனை தாக்குப் பிடிக்க முடியாது

அதே  போல்  சர்க்கரை நோயினால்   சிலருக்கு  காலிலே படும் காயம் ஆறாமல்  காலையே  எடுக்கும் அளவுக்கு போகும் போது    எதையுமே  கற்பனை என்று  விட்டு விடமுடிவதில்லை

ஆகவே வலியின் மீதான  கற்பனை என்பது    சரியானதாக இல்லை என்பது என் கருத்து

இதிலே  சில வித்யாசங்கள் உண்டு   

  வலியின் அளவு எவ்வளவு அதிகமாயிருந்தாலும்  மன திடத்தினால் அவ்வலியைப் பொறுஹ்த்டுக் கொள்வார்  உண்டு  , ஆனால் பார்க்கும் மற்றவர்களுக்கு  அவரின்  வலியின் அளவு தெரியாது

சிலர்  சிறு காயம் பட்டாலே   பொறுக்க முடியாமல் அழுது அரற்றி  ஆர்ப்பாட்டம் செய்வார்கள்  அவர்களின் வலி  குறைவாக இருந்தாலும்  அது மற்றவர்களுக்குத் தெரியாது

ஆகவே வலி என்பது வலியைப் பொறுத்ததல்ல   தாங்குபவர்  மன வலிமையைப் பொறுத்தது

ஆக  நாம்  படும் அவதிகள்  அவற்றின் விளைவுகள் எல்லாமே  நம் மன திடத்தின் வீரியத்தைப் பொறுத்து மாறுகிறது

விதியை மதியால் மாற்றலாம்  என்பது சொல்வதற்கு எளிதானது  ஆனால் விதி என்ன என்பதையே  அறியாத  பேதைகள்  நாம்  பிறகெப்படி  விதியை  மதியால் மாற்ற  முடியும்?

அதே போல்  இறைவனை நம்பினால்  அவனைத் தொழுதால் நம் பாவங்கள் குறையும்  என்பது உண்மையே

தெரிந்தே செய்யும் பாவங்களுக்கும்  தெரியாமல் செய்யும் பாவங்களுக்கும் உண்டான பலனை நாம் அனுபவித்தே தீர வேண்டும்  ஆயினும்     இறைவனைத் தொழுது  நம் பாவங்களை உணரும் போது  அந்தப் பாவங்களின் வீரியம் சற்றே  குறைகிறது.  அதுவும்     சரி  இறைவனிடம் ஒப்படைத்துவிட்டோம்  என்னும்  மன உணர்வின்  காரணமாக சற்றே  நிம்மதி ஏற்படுகிறது அவ்வளவே

தலைவலி வந்தால்   மாத்திரை  சாப்பிடுவது போலத்தான்  இதுவும்  அப்போது தலைவலி  சற்றே முறைந்தாற்ப் போல இருக்கும்  ஆனால் உண்மை அதுவல்ல  தலியில் வலிக்கும் நரம்புகளை  மரத்துப் போக வைக்கிறது  மாத்திரை அவ்வளவே  அதனால் நாம் வலியை  உணராமல் இருக்கிறோம். சற்று நேரம் சென்றவுடன் தலைவலியே  போய்விடுகிறது  
ஆனால் தலைவலி போய்விட்டது  என்று நாம் நம்புகிறோம்.

உண்மை அதுவல்ல

தலைவலிக்கு  உண்மையான காரணத்தை அறிந்து   அதற்கு வைத்தியம்  செய்து கொண்டால் அதன் பிறகு தலைவலி  வராமல் இருக்கும்.  இதை நான்  அனுபவ பூர்வமாக உணர்ந்தேன்

அடிக்கடி தலைவலி வருவதும்  மாத்திரை போடுவதும்  என் வழக்கம்

ஆனால்  ஒரு முறை இதய  வலி வந்த போது  அறுவை சிகிச்சை செய்து கொண்டேன்  
அதன் பிறகு  தலைவலியே  வருவதில்லை

ஏனென்றால்    என் தலைவலிக்கு மூலகாரணம்  தலைக்குப் போகும்  ரத்த நாளத்தில்  முறையாக ரத்தம் அனுப்பப் படாததே.  இருதய  அறுவை சிகிச்சை  செய்து கொண்டதால் எல்லா உறுப்புகளுக்கும்  முறையே  சரியாக  ரத்தம் பாய்வதால்  தலைவலியும்  நின்றுவிட்டது

ஆகவே  மூலகாரணமான  பாவத்தை  தொலைக்க  இறைவனை வேண்டுவதும் கங்கையில் குளிப்பதும்  சிறு மாத்திரைகள் போலவேதான்

அதற்காக  நான் இறைவனை வழிபடுவதையும்   கங்கையில்  குளிப்பதையும்  குறைத்து  மதிப்பிடவில்லை

செய்யக் கூடாத பாவங்களைச்   செய்துவிட்டு கங்கையில் குளித்தாலும்  இறைவனைத் தொழுதாலும்  செய்த  பாவங்களின்  பலன்களை  அனுபவித்தே  ஆகவேண்டும்

அப்படி அனுபவிக்கும் போது  அதன் வாதனை  நமக்கு  பெரும் துன்பத்தை ஏற்படுத்தினாலும்   அந்தத் துன்பத்தை  தாங்கும் மனதிடத்தை  கங்கையில் குளிப்பதும்  இறைவனைத் தொழுவது அளிக்கின்றன

அதனால்  தாங்கிக் கொள்கிறோம்

நம்மால் தாங்கிக் கொள்ள  முடிந்தாலே    அதுவே பெரிய  வரம்   அல்லவா  

நிறைய  நானும் உளருகிறேன்     சற்றே  என் உளறலை நிறுத்திக் கொள்கிறேன்

பொருத்தருங்கள்

அன்புடன்
தமிழ்த்தேனீ



அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





2016-04-09 19:45 GMT+05:30 Iyappan Krishnan <jee...@gmail.com>:
​பீஷ்மருக்கு முன் பிறந்த என்று வாசிக்கவும். பீஷ்மருடன் என்று எழுதிவிட்டு சரிசெய்யும் போது சற்று பிழையாகிவிட்டது. மன்னிக்கவும். ​

2016-04-09 19:45 GMT+05:30 Iyappan Krishnan <jee...@gmail.com>:
பீஷ்மருக்கு  பிறந்த குழந்தைகளை கங்கை​ ஏன் கொன்றாள் ?




Iyappan Krishnan

*>*<*
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்.
நிலைபெறுத்தலும். நீக்கலும். நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.

--

Iyappan Krishnan

unread,
Apr 9, 2016, 10:48:41 AM4/9/16
to தமிழ் வாசல்

தேனி சார்... 

2016-04-09 20:12 GMT+05:30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
ஆகவே வலியின் மீதான  கற்பனை என்பது    சரியானதாக இல்லை என்பது என் கருத்து


​வலியின் மீதான கற்பனை என்று நான் சொல்வதை சரியாக சொல்லவில்லையோ என்று தோன்றுகிறது. 

எளிதான உதாரணம் என்றால்... பாம்பு கடித்து இறப்பவர்களில் பெரும்பாலோர் இறப்பது விஷத்தினால் இல்லை. பயத்தினால்.    

காலை எடுக்கும் அளவுக்கு ஒருவரின் பிரச்சினை போகிறது  முறையான மருத்துவம் இன்மை.. எனக்கு ஒன்றுமில்லை சரியாகிவிடும் என்ற தவறான கற்பனை வேண்டுமானால் காரணமாக இருக்கலாம். 

அன்புடன்

Tthamizth Tthenee

unread,
Apr 9, 2016, 11:26:36 AM4/9/16
to thamizhvaasal

2016-04-09 20:18 GMT+05:30 Iyappan Krishnan <jee...@gmail.com>:
​எ​
ளிதான உதாரணம் என்றால்... பாம்பு கடித்து இறப்பவர்களில் பெரும்பாலோர் இறப்பது விஷத்தினால் இல்லை. பயத்தினால்.    


​சரி  ஒப்புக் கொள்கிறேன்

Peruvai Parthasarathi

unread,
Apr 10, 2016, 12:52:03 AM4/10/16
to தமிழ் வாசல்
நண்பருக்கு ஏற்பட்ட துன்பியல் சம்பவம் என்றுதான் குறிப்பிட்டிருந்தேன். அதற்கு “ஆறுதல்” சொல்லும் விதமாக, அனேகர் தங்களது பதிலை இங்கே பதிவு செய்திருப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. அந்தத் துன்பியல் சம்பவத்தை யார் கேட்டாலும் அவருடைய இதயம் கண்டிப்பாக ஒரு சில நிமிடம் இயங்காதுபோலொரு கொடிய "புத்திரசோகத்தைத்தான்" அப்படிக் குறிப்பிட்டிருந்தேன்.

திரு தமிழ்த்தேனி அவர்கள் கருத்துக் கூறுகையில், “வெகு சீக்கிரம் தெளிந்தவர்களை வெகு சீக்கிரம் எடுத்தாட்கொள்கிறான் இறைவன் இளம் வயதிலேயே” என்று சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை. இன்றைக்கு இணையதளத்தில் இதற்கான பதிலை சட்டென்று அறியமுடியும்.

அதாவது, வயதில் குறைந்த அறிவாளிகள், ஆராய்ச்சியாளர்கள், சிந்தனையாளர்கள் பலரின் இறப்பைப் பற்றி அறிய முற்பட்டால் அவர்கள் இன்னும் சில ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருந்தால், இந்த உலகத்துக்கு நன்மை ஏற்பட்டிருக்குமே என்று தோன்றும். ஏன், நம் நாட்டில் பிறந்த ஸ்வாமி விவேகானந்தர், மஹாகவி, கணக்கியல் மேதை இராமானுஜன் போன்றவர்களின் ஆயுள் மிக மிகக் குறைவுதானே! இவர்களைப் போல் பலரை நாம் நினைகூறமுடியும்.

அடுத்து, திரு ஐயப்பன் அவர்களின் கருத்தில், “இந்த துன்பம் எனக்கு வந்தது.. காரணம் விதி... என்று தன் அடுத்த வேலையைத் தொடர்பவர்களுக்கு இந்த துன்பங்கள் பெரும் வலியைக் கொண்டு வந்துவிட முடியாது இல்லையா ?”. . . .யதார்த்தமான அதேசமயத்தில் உண்மையான வார்த்தைகள். பீஷ்மருக்கு முன் பிறந்த குழந்தைகளை கங்கை ஏன் கொன்றால் என்பதற்கு அடுத்த பதிவில் பதில் கூற விரும்புகிறேன்.

திரு தமிழ்த்தேனி, திரு ஐயப்பன், திருமதி ஷைலஜா, திரு திருவரங்கம் மோகனரங்கன் (இவரிடம் நிறைய எதிர்பார்த்தேன், ஆனால் கருத்துக் கூறவில்லை) அனைவரின் பதிலுக்கும் நன்றி சொல்லிக்கொண்டு, இந்த உரையாடலில் “ஆறுதல்” என்ற வார்த்தைகள் அதிக இடங்களில் பயன்பட்டிருப்பதால், அதைப்பற்றிய என் எண்ணங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

இந்நாளில், நண்பர்களாகட்டும், உறவினர்கள் ஆகட்டும், ஒருவருக்கு ஒருவர் சுகதுக்கங்களில் பங்கெடுத்துக்கொண்டு அவ்வப்போது அறிவுரையோ? ஆறுதலோ சொல்லிக்கொள்கிறோம்? இடர்ப்படும் காலங்களில் “ஆறுதல்” வார்த்தைக்கு ஈடாக வேறு எந்த ஒரு வார்த்தைக்கும் இடமில்லை.

கடும் துயரத்துக்கும், வேதனைக்கும் ஆளாகியிருக்கும் இருக்கும் ஒருவரது மனம் நொந்து போயிருக்கும் சந்தர்ப்பங்களில், “ஆறுதல்” சொன்னால், பாதிக்கப்பட்டவருடைய பலவீனமான இதயம் பலப்படும். ஆறுதல் சொல்லக்கூடிய மனப்பக்குவத்தைப் பெற்றவனை, உதவும் எண்ணமுள்ளவனை ‘இளகிய நெஞ்சம் படைத்தவன்’ என்று சொல்வதில்லையா. இந்த இழையில் கூட "துன்பம்" என்று குறிப்பிட்டபோதே அது என்னவென்று தெரியாதபோதே, பலரும் இந்த உரையாடலில் “ஆறுதல்” சொல்லவில்லையா! என்ன?...ஆக. . .

பள்ளிகள், திரையரங்குகள், ஆலய விழாக்கள் இப்படி மனிதர்கள் அதிகமாகக் கூடும் இடத்தில் தொடர்ந்து ஏற்படும் தீவிபத்துகள் மற்றும் ரயில் விபத்துக்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரக்ககுணம் உள்ளவர்கள் அன்றாடம் ஆறுதல் சொல்லிக்கொண்டேயிருக்கிறார்கள். சென்னையில் கடந்த வருடம் பெய்த அடைமழையில் சில நிமிட நேரத்திற்குள், பல ஆயிரம் மனிதர்களின் உயிரை அள்ளிக்கொண்டுசென்றபோது, ஒவ்வொரு மூலையிலிருந்தும், “ஆறுதல்” என்கிற அலைகள் அல்லவா, துயரத்தை அனுபவிப்பவருக்கு மறுபடி உயிர்கொடுத்தது. “ஆறுதல்” வார்த்தைகள் ஒன்றே பலத்தைக்கொடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் பலத்தை இழந்தபோது, அவர்களையும் தூக்கி நிறுத்தி மறுவாழ்வு கொடுத்ததை இவ்வுலகமே கண்ணுற்றது உண்மை.

திடீரென்று நிகழும் ஒரு அசம்பாவிதம், பால்ய வயதில் சட்டென்று முடிந்துவிடும் மரணம், எதிர்பாராத பேரதிர்ச்சி போன்ற சம்பவங்கள், நம்முடைய மூளையில் ஒருவித அமிலத்தைச் சுரக்கச் செய்து, மூளையைச் செயலிழக்கச் செய்கிறது என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. இம்மாதிரி சந்தர்ப்பங்களில், தாங்கமுடியாத துயரத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் சிந்திக்கக் கூட முடியாத நிலை நேரிடுமாம். இதைத் தவிர்ப்பதற்கு ‘ஆறுதல்’என்ற வார்த்தையே அருமருந்தாகச் செயல்படும்.

செய்யாத தவறுக்குக் கூட சில சமயங்களில் நாமே குற்றவாளி ஆளாகிவிடுவோம். பல சமயங்களில் விளையாட்டு வினையாகக்கூடும் என்பதை அனுபவத்தில் உணர்ந்திருக்கிறோம். பிறகு அதைச் சரிசெய்ய “சமாதானம்”, “ஆறுதல்” போன்றவைகளே உதவும் என்பதற்கு புராணங்களில் எண்ணற்ற உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

பல தத்துவங்களை உள்ளடக்கிய ‘ப்ருகு சம்வாதம்’ பற்றி அறிந்தவர்களுக்கு இது தெரியும். ஓரு சமயம் பிரம்மா, சாபத்தால், ஆறாத புண்பட்ட அக்னிதேவனின் மனதுக்கு பலவாறு ஆறுதல் அளித்து உலகத்தைக் காத்தார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

ராமாயணத்தில், சீதாதேவி, அசோக வனத்தில் மீளாத்துயரத்தில் ஆழ்ந்திருந்தபோது, அவளுக்கு திரிசடை ஆறுதல் சொல்வது நீண்ட தொடராக உள்ளது. இதேபோல், பரதன் தீக்குளிக்கச் சென்றபோது கோசலை ஆறுதல் வார்த்தை கூறி அவனைக் காக்கிறாள்.
இதுபோல் இன்னும் பல காப்பியங்களில் “ஆறுதல்” என்கிற வார்த்தை “தணிவு” என்கிற சொல்லில் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. இது சம்பந்தமாக யாரேனும் இதர் காப்பியங்கள், இலக்கியங்களிலிருந்து மேன்மேலும் உதாரணம் சொன்னால், இந்த இழை மெருகூட்டும்.

மஹாபாரத யுத்தத்தில் காயம் அடைந்த போர் வீரர்களுக்கும்,விதவைகளுக்கும் ஆறுதல் சொல்லும் விதமாக எத்துணையோ இடங்களில் விரிவான காட்ச்சிகள் இடம்பெறுகின்றன. குறிப்பாக, அருச்சுனன் கேட்கும் பல துயரமான கேள்விகளுக்கு, பகவான் கிருஷ்ணன் “ஆறுதல்” சொல்லும்விதமாகத்தான் பதிலளித்திருக்கிறார்.

சாதாரண மானுடர்களுக்கு நிகழும் மிகக் கொடுமையான சங்கடங்களுக்கு, மருந்தென்றொன்று இல்லையெனினும், “ஆறுதல்” வார்த்தைகள் ஒன்றே அவருக்கு மருந்தாகும் என்பதே நான் சொல்லவந்த உண்மை.

இம்மாதிரி சங்கடமான சந்தர்பங்களில், துன்பத்தைப் பற்றிக் கேட்டாலோ அல்லது துன்பம் வருகின்ற சூழ்நிலையிலே. . . .
ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல,
நான் அவதாரமில்லையம்மா தத்துவம் சொல்ல,
பரிகாரம் தேடீ நான் எவ்விடம் செல்ல,
ஒரு நாளும் நான் இதுபோல் அழுதவனல்ல..

என்கிற கவியரசரின் அனுபவத்தில் பிறந்த பாடல்வரிகள்தான் அடிக்கடி என் நினைவுக்கு வரும்.

அன்புடன்

Tthamizth Tthenee

unread,
Apr 10, 2016, 1:12:06 AM4/10/16
to thamizhvaasal
நண்பர்  பெருவை பார்த்த்சாரதி அவர்களே

ஆறுதல் என்பது அருமருந்து  தான்   அப்படி ஆறுதல் சொல்ல  யாருமில்லாமல் மன அழுத்தத்துக்கு  ஆளாகி தற்கொலை வரை போனவர்கள் உண்டு

மிகச்சரியான  நேரத்தில் அளிக்கப்பட்ட  ஆறுதல்  நடுக்கடலில்  மூழ்கிக் கொண்டிருக்கும் ஒருவருக்கு  சிறு மரக்கட்டை போலந்தான்   மன உறுதியோடு  பக்தியோடு  இறைவன்  காப்பான் என்னும் நம்பிக்கையோடு  அந்தச் சிறு கட்டையை உபயோகப்படுத்தி  மீண்டு வர  யத்தனிப்போம்

அதுதான்  சாலச் சிறந்த வழி     அதற்கும் மேலே  விதி இருக்கவே இருக்கிறது

அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





Geetha Sambasivam

unread,
Apr 10, 2016, 2:41:37 AM4/10/16
to தமிழ் வாசல்
தக்ஷனின் மனைவி வசுவுக்குப் பிறந்த அஷ்டவசுக்களில்  கங்கையின் வயிற்றில் பிறந்த முதல் ஏழு வசுக்களும் ஒரு வருடமே பூலோக வாழ்க்கையை வசிஷ்டரிடம் பெற்று வந்திருந்தனர். ஏனெனில் வசிஷ்டரின் பசுவான காமதேனுவை நிகர்த்த "நந்தினி"ப் பசுவை எட்டாவது வசுவான பிரபாசனே தன் மனைவிக்காகத் திருடிச் சென்றிருந்தான். அதற்குத் துணை போனதால் மற்ற ஏழுபேருக்கும் பிறந்து உடன் மீண்டும் அவர்கள் இருப்பிடம் சேரும் வரம். ஆனால் ரிஷியின் பசுவைத் திருடியதால் பிரபாசனுக்கு மட்டும் நீண்ட நாட்கள் பூமியில் வாழ வேண்டும்; ஆனால் தர்மவானாகவும், நீதியும், நியாயமும் தெரிந்தவனாகவும் பெண்ணாசை கொள்ளாதவனாகவும், ராஜ்யபாரம் ஏற்காமலேயே ராஜ்யத்தை நிர்வகிப்பவனாகவும், தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று இருப்பவனாகவும், நினைத்த நேரத்தில் மரணம் அவனைச் சம்பவிக்கும் என்றும் வசிஷ்டர் பிரபாசனுக்குப் பல்வேறு வரங்களைக் கொடுத்து பூமியில் நீண்ட காலம் பீஷ்மராக வாழ வைத்தார். 

திருடியதற்காகத் தண்டனை பெற்ற பீஷ்மர் பூவுலகில் நீண்ட காலம் வாழ்ந்து பல்வேறு சுக, துக்கங்களை அனுபவித்தே தீரவேண்டும் என்பதே அவர் விதியாக வசிஷ்டரால் நிர்ணயிக்கப்பட்டது சாபமாக! 

 

Peruvai Parthasarathi

unread,
Apr 10, 2016, 9:33:37 AM4/10/16
to தமிழ் வாசல்
நன்றி திருமதி கீதா சாம்பசிவம் அவர்களே, தங்கள் வீடுமர் பற்றி எழுதிய கருத்து மிகவும் சரியே. பீஷ்மருக்கு ஏற்பட்ட சாபம்தான், அவரை பூவுலகில் கடுந்துன்பங்களுக்கு ஆளாக்கியது.

புராண இதிகாசங்களில் “சாபம்” என்று வரும்போது வெவ்வேறு வகையில் சாபம் கொடுக்கப்படுகிறது. உதாரணமாக, அடுத்த பிறவியில், பேய்,பிசாசு,விலங்கினம்,புழு,பூச்சி இப்படி, அப்படி என்று பலவிதமாகப் பிறப்பாய் என்பது தவிர “பூவுலகில் மானுடப் பிறவி எடுத்து துன்பங்களை அனுபவிப்பாய்” என்பதே பல இடங்களில் சாபம் கொடுக்கப்படுவதாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

பிறவியிலேயே சிறந்ததாகக் கருதப்படும் “அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது” என்பது சற்று ஆறுதல் அளித்தாலும், மானுடப் பிறவியிலேயே அதிக துன்பங்கள் நிறைந்திருக்கிறது என்பதால்தான் அப்படி ஒரு “சாபம்” அளிக்கப்படுவதாகவே தோன்றுகிறது.
அதனால்தான் வீடுமர் வெகு காலம் துன்பம் அனுபவிக்குமாறு நேர்ந்தது.

இன்றைய காலகட்டத்தில், ஆயுள் பலம் இல்லாதவர்களுக்கு, அனேகர் கூறும் பதில், வெகு சீக்கிரமே இறைவனடி சேர்ந்தால், அவருக்கு மறுபிறவி கிடையாது என்பதும் ஒரு சிலர் வாதம். இதைப் பற்றியும் புராணங்களில் பல இடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த நூற்றாண்டில், மஹாப்பெரியவர் அவர்கள், ஒரு சிறு குழந்தைக்குச் செய்த “பாதபூஜை” பற்றிய சம்பவமும், அதற்கு பெரியவா சொன்ன விளக்கமும் அனைவரும் அறிந்திருப்போம், இதையே, மேலே கூறியவற்றுக்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

திவாஜி

unread,
Apr 11, 2016, 1:18:49 AM4/11/16
to thamizhvaasal

2016-04-10 19:03 GMT+05:30 Peruvai Parthasarathi <rkpsa...@gmail.com>:
இந்த நூற்றாண்டில், மஹாப்பெரியவர் அவர்கள், ஒரு சிறு குழந்தைக்குச் செய்த “பாதபூஜை” பற்றிய சம்பவமும், அதற்கு பெரியவா சொன்ன விளக்கமும் அனைவரும் அறிந்திருப்போம்

​ஐயா இதை கேள்விப்பட்டதில்லையே! தயை செய்து பதிய வேண்டுகிறேன்.​


Geetha Sambasivam

unread,
Apr 11, 2016, 2:54:06 AM4/11/16
to தமிழ் வாசல்
//இந்த நூற்றாண்டில், மஹாப்பெரியவர் அவர்கள், ஒரு சிறு குழந்தைக்குச் செய்த “பாதபூஜை” பற்றிய சம்பவமும், அதற்கு பெரியவா சொன்ன விளக்கமும் அனைவரும் அறிந்திருப்போம், //

மேலதிகத் தகவல்கள் தேவை ஐயா! 

2016-04-10 19:03 GMT+05:30 Peruvai Parthasarathi <rkpsa...@gmail.com>:
 
இந்த நூற்றாண்டில், மஹாப்பெரியவர் அவர்கள், ஒரு சிறு குழந்தைக்குச் செய்த “பாதபூஜை” பற்றிய சம்பவமும், அதற்கு பெரியவா சொன்ன விளக்கமும் அனைவரும் அறிந்திருப்போம், இதையே, மேலே கூறியவற்றுக்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

Peruvai Parthasarathi

unread,
Apr 11, 2016, 8:45:22 AM4/11/16
to தமிழ் வாசல்
திரு திவாஜிக்கும், திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கும் நன்றி,
இந்தத் தகவல் அனேகமாக அனைவருக்கும் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன், அப்படி முன்பே அறிந்திருப்பவர்கள், மீண்டும் ஒரு முறை நினைவு படுத்திக்கொள்ள உதவும்


பெரியவாளப் பார்க்க கூட்டம் திரளாகத் திரண்டிருக்கு, அதில் ஒரு குழந்தையுடன் ஒரு பெண்மணியும் வந்திருந்தார்.
திடீரென்று, குழந்தை பெரியவாளின் மடியில் அமர்ந்து விளையாட, அதை பொறுமையுடன் ரசித்த பெரியவா, சற்று அதிக நேரம் அக்குழந்தையுடன் விளையாட, கூட இருந்தவர்கள் அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். கூடவே, என்ன இது இந்தக் குழந்தைக்குறியவர்கள் கண்டிக்காமல் பேசாமல் இருக்கிறார்களே, என்ற சங்கடமும் உண்டாகியது, ஆனால் பெரியவா தொடர்ந்து சில நிமிடங்கள் குழந்தையுடன் அன்னியோன்னியமாக விளையாடினார்.

அடுத்த நாள் அதிகாலை, 6 மணிக்கு, ஒரு பட்டுப்பாவாடை வாங்கிக்கொண்டு உடனே அக்குழந்தையைக் கூட்டிக் கொண்டு வருமாறு உடனடியாக செய்தி ஒன்று அக்குழந்தைக்குறியவரிடம் தெரிவிக்கப்பட்டது.

என்னடா?.. இது 6 மணிக்கு பட்டுப்பாவாடைக்கு எங்கே போவது, பெரியவா இட்ட கட்டளையாயிற்றே!..பெரியவா சொன்னா ஏதோ விஷயமிருக்கும், எதையும் தட்டமுடியாதே?.. உடனடியாக எங்கிருந்தோ பட்டுப்பாவாடையுடன் பெரியவாளைப் பார்க்கச் சென்றனர்.

அப்போதே பெரியவா எல்லோரிடமும் இக்குழந்தைக்கு அனைவரும் பாதபூஜை செய்யவேண்டும், உடனடி ஏற்பாடுகள் செய்யுங்கள் என்று கட்டளையிட, அடுத்த சில நிமிடங்களில் அனைத்து ஏற்பாடுகளும் கண்சிமிட்டும் நேரத்தில் நடந்தது.

அக்குழந்தையுடன் விளையாடியது பெரியவாளுக்குப் பிடித்துப் போயிற்று போலவும் அதனால்தான் இந்த பாதபூஜை என்று நினைத்துக் கொண்டு, பெரியவாளே செய்யும் பாதபூஜை இக்குழந்தைக்குக் கிட்டிய பாக்கியம் என்று வியந்து மிகவும் பெருமைப் பட்டுக் கொண்டிருந்தனர்.

ஒருவாரம் சென்றது குழந்தையை அழைத்துவந்த பெண்மணி வருந்தம் தோய்ந்த பாரமான மனதுடன் பெரியவாளைப் பார்க்க வந்தார். பெண்மணி வந்த செய்தி உடனடியாகப் பெரியவாளுக்குச் சென்று அப்பெண்மணிக்கு அனுமதியும் கிட்டியது.

பெரியவாளின் முன் மண்டியிட்டு அப்பெண்மணி கதறிய கோலத்துடன், குழந்தை இறந்து விட்டதாக தகவல் சொல்ல..அதற்கு
பெரியவா சொன்ன விளக்கம் பின்வருமாறு. . .


இக்குழந்தை அம்பாளின் அனுக்கிரகம் பெற்றது, அதன் ஆயுள் இவ்வளவுதான், பூர்வஜென்மத்தில் பெற்ற பாபத்திற்கு இப்பிறவியில் விமோசனம் பெறுவதற்காக இப்பூவுலகில், பிறந்து ஆறாண்டுகாலம் மட்டுமே வாழவேண்டும், மானுடப்பிறவியில் அதிக காலம் வாழ்ந்து, உழன்று துன்பத்தை அனுபவிக்கக் கூடாது, அதனாலேதான் சிறுவயதிலேயே, குழந்தையாக இருக்கும்போதே இக்குழந்தைக்கு குறைந்த ஆயுளிலேயே பரமபதகதி கிடைத்தது, இச்சம்பவத்தை அக்குழந்தைக்குக் கிட்டிய பாக்கியம் என்றே நாம் எடுத்துக் கொள்ளவேண்டும். . .

என்று பெரியவா விளக்கம் சொல்ல கேட்டுக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் ஆறுதல் அடைந்தனராம்.

இதில் ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும், பெரியவாளுக்குத் இச்சம்பவம் பற்றி முன்பே அறிந்துதான், அந்த அபூர்வக்குழந்தைக்கு வேண்டிய மரியாதையை அளித்தது மிகவும் ஆச்சர்யமான ஒன்று.

கலியுகத்தில் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த மஹான், மஹா பெரியவர், பெரியவா, பரமாச்சாரியர், என்று எல்லோராலும் போற்றப்பட்ட காஞ்சி மாமுனிவரைப் பற்றி அனைவரும் அறிவர். இவரது அருளுரைகள் படிப்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும், எண்ணற்ற அருளுரைகளைப் பற்றி நான் நிறையப் படித்திருக்கிறேன்.

இப்படித்தான் மஹாபெரியவா அவர்கள், தன் பக்தர்களுக்கு, பல சந்தர்ப்பங்களில் அருள் பாலித்திருக்கிறார்.

இந்தத் தகவல், செவிவழிக் கேட்ட தகவல்தான், ஜோடனை அல்ல, இதற்குமுன் எங்காவது வெளியிடப்பட்டிருக்கிறதா என்று தெரியாது, அனேக உபன்யாசங்களில் இந்த சம்பவம் பற்றி சொல்லியிருப்பதாக தகவல் உண்டு.

இந்த இழைக்கும் கூட இத்தகவல் ஓரளவுக்கு சம்பந்தம் உள்ளது.

Geetha Sambasivam

unread,
Apr 11, 2016, 8:58:41 AM4/11/16
to தமிழ் வாசல்
ஓ, இது குறித்துப் படிச்சிருக்கேன். கேட்டிருக்கேன். வேறே ஏதோனு நினைச்சேன். சமீபத்தில் முகநூலில் கூடப்பகிரப்பட்டிருந்தது.

Tthamizth Tthenee

unread,
Apr 11, 2016, 9:02:17 AM4/11/16
to thamizhvaasal
நான் கண்ணால் கண்டு மகிழ்ந்து  சிலிர்த்துப் போன  சம்பவம் ஒன்று மனதில் நிழலாடுகிறது

காஞ்சி மடத்தில் நாங்கள்  பெரியவாளை தரிசனம் செய்யச் சென்ற போது  இரவு  8-45  அப்போதுதான்  எங்களால்  மடத்தை  அடைய  முடிந்தது

பெரியவாளின்  ப்ரதான  சீடர்  இப்போ  பெரியவாளைப் பாக்க  முடியாதே  என்றார்

சரி  நமக்கு இப்போது  கொடுப்பினை  இல்லை  என்று நினைத்துக் கொண்டு  திரும்ப யத்தனித்தோம்


மேலும் பல  ஆன்மீக   பக்தர்களும்  கையில்   பெரிய  தட்டில்  பலவகையான  பழங்கள் புஷ்பங்கள்  எல்லா வைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர்  அவர்களும் பெரியவாளைப் பாக்கணுமே  எங்க  பேத்திக்கு  இன்னிக்கு  ஆண்டு நிறைவு  நாங்க  வரதுக்கு  நேரமாயிடுத்து  என்று கெஞ்சிக் கொண்டிருந்தனர்

பெரியவாளின் சீடர்  கொஞ்சம் இருங்கோ  நான் பெரியவாளையே  கேக்கறேன்  அவர் அனுமதிச்சா  வாங்கோ
என்று உள்ளே போய்விட்டு  வெளியே  வந்து  எல்லாரும் அமைதியா  சத்தம்  போடாம  அப்பிடியே   தரிசனம்  பண்ணுங்கோ  பெரியவா   உக்காந்துண்டு இருக்கா  வெளக்கெல்லாம்  போடமாட்டோம்

யாரும்   கற்பூர  ஹாரத்தியெல்லாம்  பண்ணாதீங்கோ  என்று அனுமதித்தார்

உள்ளே நுழைந்தோம்   லேசான  வெளிச்சத்தில்  பெரியவர்  அமர்ந்திருந்தார்

அங்கே   போனதும்   அவர்கள் அந்தக் குழந்தையை  கீழே விட்டு விட்டு  பெரியவரை  நமஸ்கரிக்க வைத்து உட்கார வைத்தனர்

யாரோ ஒருவர்  திடீரென்று  கற்பூரம்  தட்டிலே வைத்து  கொளுத்திவிட்டார்

குழந்தை  தவழ்ந்து  கற்பூரத் தட்டின்  பக்கம் சென்று அந்த  ஜ்வாலையை  கையில் பிடிக்க முயன்றது

எல்லோரும் பதறிப் போய் அந்தக் குழந்தையை  பிடிக்க ஓடினர் 

பெரியவா  யாரும் ஒண்ணும் பண்ண  வேண்டாம்
அப்பிடியே இருங்கோ  என்று சொல்லிவிட்டு     இங்கே  வா என்றார்   குழந்தையைப் பார்த்து

குழந்தை   திரும்பி அவரைப் பார்த்துவிட்டு  அவரை நோக்கி  தவழ ஆரம்பித்தது

அவர் அருகே  சென்று  உட்கார்ந்து  அவரையே பார்த்தது

இப்போது குழந்தையின் கண்களும்  பெரியவாளின் கண்களும் நேருக்கு  நேர் கொண்டது

நயன  பாஷையில்  என்ன  பேசினாரோ  எங்களுக்கெல்லாம்  தெரியவில்லை  நாங்கள்  அந்தக் கற்பூர  ஜோதியில்  அவரை தரிசித்து  மகிழ்ந்துகொண்டிருந்தோம்

அந்தக் குழந்தைகின்னும் நெருக்கமாக அவர்  அருகே  போய்  உட்கார்ந்து  அவரையே  பார்த்துக் கொண்டு  அமைதியாய்   இருந்தது

இப்படியே   நாங்கள் எல்லோரும்   பெரியவாளைத்  தரிசனம்  செய்தோம் பெரியவர் கையைத் தூக்கி  ஆசீர்வாதம் செய்தார்

 சேவித்துவிட்டு  எல்லோரும்   வெளியே வந்தோம்

அன்று கிடைக்காதோ  என்று எண்ணிய  தரிசனம்  பெரியவாளோடு  ஒரு  குழந்தையும்  சேர்ந்து  கிடைத்த தரிசனம்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அதன் பிறகு  அனைவரும்  

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





திவாஜி

unread,
Apr 11, 2016, 9:42:04 AM4/11/16
to thamizhvaasal

2016-04-11 18:15 GMT+05:30 Peruvai Parthasarathi <rkpsa...@gmail.com>:
இந்தத் தகவல், செவிவழிக் கேட்ட தகவல்தான்,

​ஓ! இதை வேறு விதமாக எழுதியிருந்ததை படித்து இருக்கிறேன். 

குழந்தை அம்மாவிடம் ஏதோ சொல்லி கேட்டாள். அம்மா அவளை அடக்கினாள். குழந்தை திருப்பித்திருப்பி கேட்டுக்கொண்டு இருந்தது. பெரியவா கவனித்துவிட்டு என்ன விஷயம் என்று கேட்டார். தயங்கிக்கொண்டே பெரியவா மடியில் உக்காந்து கொண்டிருக்கும் குழந்தை அணிந்து இருப்பத்தைப்போல பச்ச பாவாடை வேண்டும் என்று கேட்கிறாள் என்றார்கள். பெரியவா கிங்கரர் ஒருவரை கூப்பிட்டு குறிப்பி ஒரு கடை கலர் சொல்லி பாவாடைத்துணி வாங்கி வரச்செய்து கொடுத்தார். கொஞ்ச நாள் கழித்து அந்த குழந்தை இறந்துவிட்டது.​ குழந்தை தேவியையே தரிசனம் செய்ததாக சொல்லி தேற்றினார்கள்.


Peruvai Parthasarathi

unread,
Apr 11, 2016, 11:22:58 AM4/11/16
to தமிழ் வாசல்
இந்தத் தகவல், செவிவழிக் கேட்ட தகவல்தான், என்று எப்போதோ கேட்ட ஒன்றை நினைவுக்கு வரவழைத்து எழுதியிருந்தேன்.

போகட்டும். . . .

எப்போதுமே ஒருவர் சொன்னதை மற்றவரிடம் கொண்டு செல்லும்போது, காட்சிகள் மாறலாம், கருத்துக்கள் மாறக்கூடாது, அதுபோலவே தங்கள் கண்டதும், கேட்டதும், படித்ததும் ஒரு மித்த கருத்தாகத்தான் உள்ளது என்பது மகிழ்வைத் தருகிறது.

திருமதி கீதா சாம்பசிவம், ஜீவ்ஸ் சார், தேனீ அய்யா இவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சியடைகிறேன்.

Peruvai Parthasarathi

unread,
Apr 11, 2016, 11:24:37 AM4/11/16
to தமிழ் வாசல்
மன்னிக்கவும், திவாஜி சார் என்று குறிப்பிடுவதற்கு பதிலாக ஜீவ்ஸ் என்று எழுதியிருக்கிறேன்.

Peruvai Parthasarathi

unread,
Apr 16, 2016, 12:44:54 AM4/16/16
to தமிழ் வாசல்

இந்த இழையை ஒரு நண்பர் படித்துவிட்டு, தலைப்பில் உள்ள விதி பற்றி யாரும் கருத்துக்கூறவில்லையே என்றார். தொடர்ந்து அவருக்கு பதில் கூறும் விதமாக பின்வருவரும் சிந்தனைகளைப் பதிவு செய்கிறேன்.

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் என்கிற பாடலில். . . .
எங்கே வாழ்க்கை தொடங்கும்
அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லம் மாறிவரும் பயணம்


முடிந்துவிடும்

மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம்
தெளிந்துவிடும். .. .

நம் வாழ்க்கைக்கு மட்டுமல்ல, நாம் எழுதுவதற்குக்கூட நன்றாகவே பொருந்துகிறது, “நெஞ்சில் ஓர் ஆலயம்” படத்துக்க்காக நெஞ்சிருக்கும் வரை நினைவிலே வருகின்ற கவியரசரின் பாடல் வரிகள்.

எழுதும்போது கூட நாம் எங்கே தொடங்கினோம்?, எதைப்பற்றி எழுத நினைத்தோம்?.. அதை எப்படி முடிப்போம்?.. என்பது கூட சில சமயம் தெரியாமல் போய்விடுகிறது. எழுதும் விதி எங்கோ கொண்டுவிடுகிறது.

“எழுதுவது” கூட ஒரு விதத்தில் விதிதான் என்றான் ஒரு சாதாரண எழுத்தாளன், “பின்னாளில் என்னை பெரிய எழுத்தாளனாக உலகுக்கு அறிமுகப்படுத்தியதும் விதியே” என்றார் ஸ்டீபன் எட்வர்ட் கிங் என்ற அமெரிக்க எழுத்தாளர். ஒரு சமயம் தாம் எழுதியதுவெற்றிபெறவில்லை, எங்கும் ஏற்றுக் கொள்ளப் படவில்லை என்பதற்காக விரக்தி அடைந்து, எழுதுவதை விட்டொழிகின்ற சமயம், மனைவியின் தூண்டுதலால் புத்துயிர்பெற்று, மீண்டும் எழுதத்தொடங்கி, 1976 ல் “கேரீ” என்கிற, அவர் எழுதிய நாவல் உலகப்புகழ் பெற்று அவருக்கு பெருமைதேடித்தந்ததாம்.

பொதுவாக மகிழ்ச்சியையே எந்நாளும் விரும்பும் நாம் அனைவருமே ஒரு துன்பம் என்று வரும்போது அதை மனதார ஏற்றுக்கொள்வதில்வதில்லையே ஏன்?. . .

இந்த இழையைத் தொடங்கிய போதே, யாருக்கு நேர்ந்தாலும், முகம் தெரிந்தவரோ அல்லது தெரியாதவரோ துன்பம் என்று வரும்போது, நமது இரக்கத்தையெல்லாம் இதிலே கொட்டி விடவேண்டும் என்றுதான் ஆரம்பித்தேன். படித்துப் பகிர்பவரின் நோக்கமும் இதுவாகவே இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.

விதியையும், சாபத்தையும் சாடுபவர்களுக்கு, நொந்து கொள்பவர்களுக்கு, இந்த இழை கண்டிப்பாக ஆறுதலைத் தரவேண்டும் என்கிற உயரிய சிந்தனை கொண்டதாகவே அமையவேண்டும்.

சிந்தனையால் மட்டுமே உலகம் வாழ்கிறது என்பது போல, சிந்தனை இல்லையேல் எழுதமுடியுமா? தொடர்ந்து வரும் சிந்தனைகளை இந்த இழையிலேயே பதிவு செய்ய விழைகிறேன்.

===============================================

நான் கல்வியில் முழுமை அடைந்து விட்டேன், எனக்கு விடைகொடுங்கள் என்றான் குருவிடம்.
உனது செருப்பை வாசலில் இடப்பக்கம் விட்டாயா அல்லது வலப்பக்கமாகவா என்றார் குரு.
அவசரத்தில் நினைவில்லை என்றான் மாணவன்.
நீ இன்னும் கல்வியில் முழுமை அடையவில்லை என்றார் குரு. . . .

=========================================================

சிலர் அரைகுறையாகப் படித்துவிட்டு, அலைபேசியில் ஏதேதோ சொல்கின்றனர். எதையுமே முழுமையாகப் படிக்கவேண்டும் என்பதற்கோர் உதாரணம் மேலே.

இதயமே வெடித்துவிடும் போலொரு துன்பத்தில் உழலும் ஒருவன், பழுதடைந்த இதயத்தையே மாற்றிக்கொண்டு வாழும் மனிதனைப்பார்த்து ஆறுதல் அடைகிறான்.

“உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு” பாடலைக்கேட்டு அமைதி அடைகிறான் மற்றொருவன்.

இன்று பலர் தொலைக்காட்சித் தொடர்களில் நிம்மதி தேடி ரிமோட்டை அழுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

கடற்கரை மணல், ஆலய விழா, திரையரங்கம் போன்றவை ஒரு சிலருக்கு தற்காலிக மகிழ்ச்சி அளிக்கிறது.

தன்னைப்போல் அல்லது தன்னைவிட மற்றவர்கள் அதிகம் துன்பப்படுவதை உணரும்போதுதான், மனம் தளருகிறது என்பது அனைவருக்கும் பொதுவிதியாக இருக்கிறது.

உளவியல் ரீதியாக, மகிழ்சியான தருணத்தைவிட, துன்பமான தருணத்தில்தான், மனம் அதிக வேகத்துடன் சிந்தனை செய்கிறதாம். அப்போது சிந்தனையை வேறு பக்கமாக திருப்பிவிட முயலவேண்டும் என்பதே மனநல மருத்துவர்களின் ஆலோசனை.

சிந்தனை பெரிதல்ல, அது பயன்பாட்டிற்கு உதவுமாறு இருக்கவேண்டும். சாதாரண மனிதரைவிட அதிகமாகச் சிந்திப்பப்பவரைத்தான் அறிவாளி என்கிறது உலகம்.

ஒரு சிந்தனையுமில்லாமல், ஒருவருக்கும் உதவிசெய்யாமல், பல வருடங்கள் உருண்டோடுவதைவிட, அறிவுப் பூர்வமாக சிந்தித்து, புத்திசாலியாக வாழ்வதே மேல் என்றுதான் புராணங்களிலிலே கூட சொல்லப்பட்டிருக்கிறது.

மனம் சங்சலப்படும்போது, ஆலயத்துக்கு சென்று வரலாம் என்கிறது மனம். அங்கே பலவித புராணங்களில் வரும் அறிவுப்பூர்வமான கதைகள் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அதைச் சற்று நேரம் படித்தால் மனம் சாந்தியடைகிறது. இராமனும், பாண்டவர்களும் சந்தித்த இன்னல்களைவிடவா நாம் படும் துன்பம் பெரிது என்று தன்னைத் தானே தேற்றிக்கொள்கிறது “மனம்”

தமிழ்நாட்டில் எந்த ஆலயத்துக்குச் சென்றாலும், மார்க்கண்டேய மகிரிஷி பற்றிய வரலாறு இல்லாமல் இருக்காது. அவரிடமிருந்த நாம் ஒரு தகவல் பெறுவம்.
ம்ருகண்ட மகரிஷி, தனக்கொரு புதல்வன் வேண்டும் என்று இறைவனிடம் கேட்கும்போது . .
நீண்ட ஆயுள் உள்ள குழந்தை வேண்டுமா?. . அல்லது
16 ஆண்டுகளே வாழக்கூடிய புத்திசாலிக் குழந்தை வேண்டுமா என்று கேட்டபோது, அவர் இரண்டாவதைக் கேட்டார்.
அதன் பலனாக, மார்க்கண்டேய மகரிஷியைப் பெற்றார், தன் புத்திசாலித்தனத்தால், தன் ஆயுளை நீட்டிக்கொண்டார் என்கிறது மார்கண்டேய புராணம்.

வல்லமையில் நான் எழுதிக்கொண்டிருந்த போது, அதன் பிரதான முகப்பில் இருக்கும் “வாசகம்” என் நினைவுக்கு வருகிறது. ‘சிந்தனை, செயல், முன்னேற்றம்” என்பதுதான். சிந்தனை இருந்தால்தானே, மேன்மேலும் யோசிக்க முடியும், அதன்பிறகுதான அச்சிந்தனைக்கு ஏற்ப செயல்பட முடியும், கடைசியில்தான் முன்னேற்றம்.

அதனால்தான், மிகச்சுருக்கமாக “இரக்கமுள்ள இதயம், சிந்திக்கின்ற மூளை, வேலைசெய்கின்ற ஆற்றலுள்ள கைகள்” இவை மூன்றும் மனிதனுக்கு இருந்தால் போதுமானது என்றார் ஸ்வாமி விவேகானந்தர்.

Peruvai Parthasarathi

unread,
Apr 23, 2016, 2:49:57 AM4/23/16
to தமிழ் வாசல்
"தாயிற்ச்சிறந்த கோவிலுமில்லை"

"தந்தை சொல்மிக்க மந்திரமில்லை"
====================================
இந்தக் இழையில், தாய்மையின் நிலையும், தாய்க்கு ஈடானவள் யாருமில்லை என்பதை வலியுறுத்தி, மகிழ்ச்சியான தருணத்தில் தாயின் நிலை நீடித்துக் கொண்டே இருக்கும்போது, சட்டென்றும் தான் ஈன்ற மக்களை ஒரு தாய் இழக்கும் போது, பெற்றவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை நினைத்து எழுத ஆரம்பித்தேன்.

நம் மனதில் நல்ல எண்ணங்கள் தோன்ற வேண்டும் என்றால், மற்ற எல்லாவற்றையும் விட, நாம் “வளர்ந்த சூழ்நிலை” அம்மனோபாவத்திற்கு முன்னிலை வகிக்கும். இம்மாதிரி நற்சிந்தனைகள் வரவேண்டுமானால், நமக்கு நல்ல நண்பர்களும், உறவினர்களும், நம்மை ஊக்கு விக்க வேண்டும். ஆண்டவன் அருள் இருந்தால் மட்டுமே இது கைகூடும் என்பது என்பது என் கருத்து. இதை ஒருவரிடம் கட்டளை இட்டு இதைப் பெற்று விடமுடியாது, அது தானாக அமைய வேண்டும், எனக்குத் தெரிந்த வரை, வாழ்க்கையில் ஒரு சிலருக்கே இந்த பாக்கியம் கிட்டுகிறது.

நாம் வளர்ந்த காலத்தில், குழந்தை வளர்ப்பு முறை எப்படி இருந்தது?...,வருமையான நிலையிலும் நமது பெற்றோர்கள் அத்துணை பிள்ளைகளையும் எப்படிக் காப்பாற்றினார்கள் போன்ற அனுபவ நிகழ்ச்சிகளையும் குடும்ப அலுவல்களுக்கிடையில், இரவு பகல் என்றில்லாமல் அலுவலகப் பணிக்கிடையில், கிடைக்கும் சிறிது ஓய்வான நேரதைக் கூட குழந்தைகளுக்குச் செலவிடுவதில், தாய் தந்தையருக்கு இணை கிடையாது என்பதை அனுபவத்தில் அனைவரும் அறிவோம்.

இதில் ஜனனம் எடுக்கப் போகும் புதிய வரவைப் பற்றிய நினைவுகளுக்கே பெற்றோர்களுக்கு முன்னுரிமை அளிக்கப் பட்டாலும், பின்னாளில் மகவின் முடிவு என்று வரும்போது, சாதாரண மனிதர்களுக்கு அதை தாங்கிக்கொள்வது அல்லது இயல்பாக ஏற்றுக்கொள்வது என்பது மிகவும் கடினம்.

மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் ஏதோ ஒரு கொள்கை, குறிக்கோள், சாதனை புரியவேண்டும் என்ற எண்ணங்கள் தோன்றுவது இயற்கை. மற்றவர்களில் இருந்து சற்று வித்தியாசப் பட்டுத் தனித்தன்மையோடு விளங்குவது எப்படி, எல்லோரும் தன்னைப் புகழவேண்டும் என நினைப்பது போன்ற எண்ணங்களெல்லாம் இளம் பருவத்தில் உதிக்கும். ஆனால் பிறவி எடுக்கும் முன்னே இது போல் எண்ணங்கள் மனதில் தோன்றுவது ஒரு கருவுற்ற தாய்க்கு மட்டும்தான். ஆக தாய் என்பவள் தனது குழந்தைகளை முன் வைத்தே தனது வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருப்பார்.

தனக்குப் பிறக்கும் போகும் குழந்தை எப்படி இருக்க வேண்டும் என்ற கனவு தாயின் மனதைச் சுற்றிக் கொண்டிருக்கும். எண்ணம் எதுவாக இருந்தாலும், அந்தக் கனவுகளையெல்லாம் பல இன்னல்களுக்கு இடையே நனவாகும் போது, தாய்மைக்குக் கிடைக்கும் மகிழ்ச்சியால், கதிரவானைக் கண்ட பனித்துளிபோல் துன்பங்களேல்லாம் மறைந்து விடும். “போதும் என்ற மனம்” வந்து, நமது லட்சியங்களை நாம் எட்டும் போது மகிழ்ச்சி நிலைக்கும், இல்லையென்றால் வருத்தம் தரும்.

ஒரு தாய் தன் மகவைப் பெற்றெடுக்கும் போது, அவள் அடையும் மகிழ்ச்சியை இதுவரை எந்தக் கவிஞனும், எழுத்தளனும் அந்த மகிழ்ச்சியை வேறு ஒன்றோடு ஒப்பிட்டுப் பார்த்ததில்லை. மாறாக தாய்மை இன்பத்தை மட்டுமே வேறு நிகழ்சியோடு ஒப்பிட்டு இருக்கிறார்கள். தாயின் அன்பிற்கு மேற்கோள் காட்டும் போது தாயன்பு பற்றிதான் சொல்லுவார்களே தவிர தந்தைக்கு இரண்டாவது இடம்தான் கிடைக்கும். ஏனென்றால், தாய் தன் வயிற்றிலே கருவைச் சுமந்து, பத்து மாதங்கள் அனுபவிக்கும் துன்பங்கள், பின்னாளில் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக மாறிவிடுகிறது.

கண்ணனின் தாய் யசோதையின் வரலாறு இதற்கு உதாரணம்.

குழந்தையாக இருக்கும் போது, குழந்தை மேல் உள்ள பாசத்தால் அவர்கள் நினைத்ததை எல்லாம் வாங்கிக்கொடுக்கிறோம். வளரும் போது அவர்களை நாம் கண்டிப்புடன் நடத்துகிறோம், அவர்கள் நல்லவர்களாக வரவேண்டும் என்ற எண்ணத்தில். தாய்மைக் காலத்தில் பிறக்கப் போகும் குழந்தையைப் பற்றிய எண்ணங்கள் மேலோங்கி இருக்கும் போது, பிறந்த பிறகு தன் குழந்தைக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை பிறக்குமுன்பே தாய் பட்டியலிட்டு விடுவாள்.

பாசத்தோடும், நேசத்தோடும் வளர்த்த குழந்தைகள் பெரியவர்களாகி, குடும்பத்தைக் கவனிக்கின்ற நிலை வரும்போது,
நன்றாகப் படித்து பணம் ஈட்டும்போது,
வறுமையில் வாடும் குடும்பத்தின் பொருளாதாரத்தின் அடிப்படையில் முன்னேறும் போது,

சந்ததிகள் மூலம், மேற்சொன்ன நல்ல குடும்ப சூழ்நிலை உருவாகும் போது கிடைக்கின்ற இந்த மகிழ்ச்சியை அனுபவிப்பதற்கு, பகவானின் அனுக்கிரகம் கட்டாயம் வேண்டும்.

உறவினர்களோ, நண்பர்களோ எப்படி நம்மோடு உறவாடுகிறார்கள். நல்லஎண்ணத்த்துடனா? அல்லது வேறு கண்ணோட்டத்துடனா? அறிந்து கொள்ள முடியுமா? என்றால். .
கண்டிப்பாக முடியும், ஒரு துன்பமான தருணத்தில் கடைசி வரை யார் இருக்கிறார்களோ அவர்கள்தான் உண்மையான.. .
உறவினர்கள்
நண்பர்கள்
சுற்றத்தார்
என்பதை எத்துணை முறை படித்திருக்கிறோம், அனுபவத்திலும் அறிந்து கொண்டிருக்கிறோம்.

மஹான்கள் எழுதிய புத்தகங்களை நிறையப் படித்திருக்கிறேன். உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும், இந்தியாவில் பிறந்த ‘ஓஷோவை’ ஞானி என்றுதான் சொல்கிரார்கள். படித்து அறிந்து கொள்ள முடியாத ஒரு சாரார் இக்கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும், அவர் எழுதிய அனைத்துப் புத்தகங்களூம் உலக அளவில் இன்று பிரபலம் அடைந்திருக்கிறது. வாழ்க்கைக்குப் பயனுள்ள விஷயங்களை நிறைய எழுதிக் குமித்து இருக்கிறார். வேண்டாத கருத்துக்களைத் தவிர்த்து, வேண்டிய தகவல்களை மட்டும் எடுத்துக் கொள்வோம். குழந்தை வளர்ப்பு, தாய் தந்தையரின் நிலை என்கிற கருத்துக்களையெல்லாம் அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட ஓஷோவின் தி நியூ சைல்ட் (The New Child by Osho) என்ற புத்தகம் அனைவராலும், முக்கியமாக பெற்ரோர்கள் அனைவராலும் வரவேற்கப்படது.

சுவாமி அம்ரித்யாத்ரி என்ற இவரது சீடர் இப்புத்தகத்துக்கு தெளிவுரை எழுதும் போது ஒரு இடத்தில், புதிதாக ஜனனம் எடுக்கும் ஒரு குழந்தையை நாம் நம்முடைய உலகத்து அழைத்துச் செல்லக் கூடாது, அவர்களுடைய உலகத்துக்கு, அவர்களுடைய பிஞ்சு விரல்களைப் பிடித்து அழைத்துச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பார். ஆனால் இங்கு என்ன நடக்கிறது பாருங்கள்!......என்று எழுதியிருந்ததை (கீழே) உடன்பாடு இருக்கிறதோ இல்லையோ ஆனால் ரசித்துப் படித்தேன்.

ஆண் என்றால் என்ன?... என்று தெரியாமலேயே
ஆணாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்,

பெண் என்றால் என்ன?...என்று தெரியாமலேயே
பெண்ணாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

திருமணம் என்றால் என்ன?...என்று தெரியாமலேயே
திருமணம் செய்து கொள்கிரோம்

குழந்தை என்றால் என்ன?....என்று தெரியாமலேயே
குழந்தை பெற்ருக் கொள்கிறோம். இப்படி

வாழ்க்கை என்றால் என்ன?...என்று தெரியாமலேயே
வா(வீ)ழ்ந்து கொண்டிருக்கிறோம்.


‘தாயிற் சிறந்த கோயிலுமில்லை’, ‘அம்மாவை வணங்காக உயிரில்லையே’, என்ற திரையிசைப் பாடல்களெல்லாம், அவ்வப்போது தாயின் சிறப்பை எடுத்துக் காட்டி, தாய்பாசத்தை நினைவுக்குக் கொண்டு வருகிறது.

ஒரு தாயின் சுத்தமாக அன்பிற்கு கவியரசர் சொல்லும் உவமையை “தன்னைக் கொன்ற பிள்ளையிடமே அந்தத் தாயின் இதயம் பேசுவதாக” எழுதியிருந்ததை அறியாதவர் இருக்க முடியாது.

இந்த இழையின் நோக்கத்தை முன்பே நான் குறிப்பிட்டிருந்தேன், 24 நான்கு வருடங்கள், ஒரு தாய் தன் பிள்ளையை எப்படி வளர்த்திருப்பார், இதற்கு உதாராணம் தேவையில்லை. மகவை ஆளாக்கி மருத்துவருக்குப் படிக்க வைத்து, அறுவை சிகிச்சையில் முதுநிலை பட்டம் படிப்பதற்காக அயல்நாட்டுக்கு அனுப்பி, படிப்பு முடியும் தருவாயில், விதி அவனோடு விளையாடியது. 24-03-16 அன்று ஆற்றில் குளிக்கச்சென்று தவறிவிட்ட நிலையில், தேடும் பணி அன்றே தொடங்கி, முயற்சி எடுத்த அனைத்து காரியங்களும், ஒரு மாத காலம் வரை நீடித்து, இன்றுதான் முடிவடைந்தது. ஒரு மாத காலம் மீளாத்துயரில் ஆழ்ந்திருந்த பெற்றோர்களின், குறிப்பாக தாயின் மனநிலையை என்னவென்று சொல்வது?. .

இழையின் தலைப்புவரிகளைச் சொல்லித்தான் ஆறுதல் சொல்லமுடியும்.

Geetha Sambasivam

unread,
Apr 23, 2016, 4:24:56 AM4/23/16
to தமிழ் வாசல்
மனம் பூரா வேதனையில் ஆழ்ந்திருக்கிறது ஐயா! 

கீதா சாம்பசிவம்.

Tthamizth Tthenee

unread,
Apr 23, 2016, 4:37:14 AM4/23/16
to thamizhvaasal
உண்மைதான்  பெற்றோர்களின் இந்த துயரத்துக்கு  மாற்றே இல்லை

அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





--

DEV RAJ

unread,
Apr 23, 2016, 6:06:45 AM4/23/16
to தமிழ் வாசல்

திரு.பெருவை பார்த்தசாரதி அவர்கள் ஒரு மனவருத்தமளிக்கும் நிகழ்வை முன்வைத்தாலும்
நமக்குப் படிப்பினை பெறுவதற்கான நல்ல வாய்ப்பையும் தந்திருப்பதாகத் தோன்றுகிறது.

வேதாந்த ரீதியாக விளக்கங்கள் அளிக்கலாம். பெற்றோர் மனம் படும்பாட்டை
விவரிக்க இயலாது. காலம்தான் மருந்திட வல்லது.

என் நெருங்கிய உறவில் நடந்த சம்பவம். வயதான பெற்றோர். இரு மகன்கள்.
இளையவனுக்கு மூளையில் ட்யூமர். மதுரையில் அறுவைச் சிகிச்சைக்கு ஏற்பாடு.
பெரியவன் கோவாவில் சுரங்கத்தில் அதிகாரி. அன்று மாலை பொறுப்பை ஒப்படைத்து
விட்டு உடனே மதுரை கிளம்ப இருக்கிறான். மாலை ட்ரக் விபத்தில் அடிபடுகிறான்.
அடுத்த நாள் மதுரையில் இளையவனின் அறுவைச் சிகிச்சை முடியும் வேளையில் பெரியவன்
கோவாவில் உயிர் இழக்கிறான். இளையவன் உயிர் பிழைக்கிறான். பெற்றோரின் நிலையை
என்ன சொல்ல ?

’யதா து:கம் அயத்நத:’ என்றார் பிரகலாதாழ்வான்; என்ன படித்து என்ன ?
விவேகம் விண்ணுயரத்தில் எட்டாக்கனியாகவே நிற்கிறது


தேவ்

திவாஜி

unread,
Apr 23, 2016, 7:22:15 AM4/23/16
to thamizhvaasal

2016-04-23 15:36 GMT+05:30 DEV RAJ <rde...@gmail.com>:
’யதா து:கம் அயத்நத:’ என்றார் பிரகலாதாழ்வான்; என்ன படித்து என்ன ?
விவேகம் விண்ணுயரத்தில் எட்டாக்கனியாகவே நிற்கிறது

​உண்மை தேவ்ஜி.
ஆனால் பிலாஸபி சிந்தித்து உணர்ந்து கடைபிடிக்கத்தானே? புத்தகங்களோ வலைப்பூவோ எழுதுவதற்கு இல்லையே?​ இந்த சமயங்களிலாவது தத்வ விசாரம் செய்ய வேண்டும். 


Peruvai Parthasarathi

unread,
Apr 23, 2016, 11:59:19 PM4/23/16
to தமிழ் வாசல்
தமிழ்வாசலின் கருத்தாடலில் கலந்துகொண்டு, தங்கள் மேலான கருத்துக்களை தமிழ்வாசலின் அன்பர்களோடு பகிர்ந்து கொண்ட திரு தமிழ்த்தேனி, திரு தேவராஜன், திரு திவாஜிசார் மற்றும் திருமதி கீதா சாம்பசிவம் அனைவருக்கும் நன்றி.

Peruvai Parthasarathi

unread,
May 3, 2016, 1:41:50 AM5/3/16
to தமிழ் வாசல்
பூரண ஆயுளுக்கு, அனுபவ ரீதியான வழிமுறைகள்:-
மனிதனாகப் பிறந்த அனைவருமே, நீண்ட காலம் வாழவேண்டும் என்று நினைப்பது இயற்கை. அதற்காக உடலைப் பேணிக்காப்பதிலும், உள்ளத்தைப் பராமரித்து, அன்றாடப் பழக்க வழக்கங்களிலும், சுற்றுப்புற சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஒழுக்கத்தைக் கடைபிடித்து, அனுசரித்தால், ஓரளவுக்கு ஆயுளை நீட்டிக்கலாம் என்பது அனைவரும் அறிந்ததே.

தற்கால அதிமுன்னேற்றமடைந்த மருத்துவ உலகில், ஆயுளை நீட்டிக்க பல மருந்துப் பொருட்கள் பரிந்துரைக்கப்பட்டாலும், பின்வரும் சிந்தனைகளும் உதவலாம் என்கிற நோக்கத்தில் எழுதுகிறேன்.
நண்பரின் தகப்பனாருக்கு, 80 வயது பூர்த்தியாகி, சதாபிஷேகம் நடைபெற்றது. விழாவின்போது, தம்பதிகள் சமேதரராக, மிகவும் (பெ)பொருமையாக, 1000 பிறை கண்ட பெரியவரை நமஸ்க்கரித்து, அனைவரும் ஆசிர்வாதம் பெற்றுச் சென்றார்கள்.

விழா முடிவில் அவரைச் சுற்றி இருந்த அவரது நண்பர்களில் ஒருவர் கேட்ட வித்தியாசமான கேள்வி?...

“இப்போழுது தங்களுக்கு 80 வயது பூர்த்தியாகிவிட்டது, இனிவரும் காலங்களுக்கு என்ன சேர்த்து வைத்திருக்கிறீர்கள்’ என்று கேட்டதற்கு, அவர் அளித்த பதில்::

இகலோக சுகத்திற்காக எல்லாவற்றையும் சேர்த்து வைத்துவிட்டதாகவும், இப்போது பரலோக சுகத்திற்க்காக புண்ணியம் தேடிக்கொண்டிருப்பதாகவும், எண்பது வரை வாழ்ந்து விட்டேன், இனி வரும் காலங்களில், இதுவரை செய்ததைவிட மேலும் சிறப்பாகத் தர்மம் செய்வதை கருத்தில் கொண்டுள்ளதாகவும்” பதிலளித்தது என்னை வியப்பில் ஆழ்த்தியதோடு மட்டுமல்லாமல், அவர் அன்றைக்குச் செய்த ஒரு நல்ல காரியம் ஒன்றையும் இங்கே கூற விரும்புகிறேன்.

தர்மமிகு அந்த வயதான மனிதர், தன் வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு சுபகாரியத்தோடும் ஏதாவதொரு தானம் செய்வதை வழக்கமாகக் கடைபிடிக்கிறார். அன்றய தினம் விழாவிற்கு வந்திருந்தவர்களோடு, ஐம்பது எளியவர்களுக்கு, சமபந்தியில் உணவளித்தார்.

தானம் செய்தலில் “அன்னதானம்” செய்வது வயதைக்கூட்டும் என்பதும், சொர்க்க வாழ்க்கை கிட்டும் என்பதும் பொது நியதியாகும். தானம் பலவற்றின் மேற்கோள்களை, மாபாரதத்தில் இருந்து நிறைய அறிந்து கொள்ளமுடியும்.

60, 70, 80 வயது முடிந்தவர்கள், மார்க்கண்டேயர் சிரஞ்சீவி வரம் பெற்ற திருக்கடையூருக்குப் சென்று, ஆயுள் விருத்தி ஹோமம் முடித்து, அன்னதானம் செய்வதை இன்றும் பலர் கடைபிடிப்பிடிப்பதைப் பற்றி சற்று சிந்திக்க வேண்டும்.

பிற்கால வாழ்க்கைக்குக் பயன்படும் வகையில், நாம் சேர்த்து வைக்கின்ற வைப்புநிதி (Fixed Deposit) செயல்படுவதைப் போல, பரலோக வாழ்க்கைக்கு கொஞ்சம் கொஞ்சமாக பலவித புண்ணியகாரியங்களைச் செய்து கொண்டே இருந்தால், ஆயுள் நீட்டிக்கும். நீண்ட ஆயுளின் மூலம் வைப்புநிதி வட்டியோடு பெருகுவதுபோல, புண்ணியம் செய்யச் செய்ய, புண்யபலம் நமக்கு நிரந்தரமான (permanent) பரலோக சுகத்தைக் கொடுக்கும் என்பது வேத வாக்கியம்.

இவ்வாறு செயல்படுவதற்கு, வயது முக்கியமல்ல, தேர்ந்த ஞானம்தான் அவசியம் என்பதும், ஞானம் என்பது நம் அனுபவத்திலே பெறப்படுவதும் ஆகும். பாவத்தைச் செய்யாமல் இருந்தாலே, புண்ணியம் என்பது தானாகவே சிறுசேமிப்பாகி விடுமாம். இப்புண்ணிய சிறுசேமிப்பு ஒரு கால கட்டத்தில் வளர்ந்து, பெரிய புண்ணிய மலையாகிவிடும். புண்ணியத்தை சம்பாதிப்பதில் பெரும்பங்கு வகிப்பது, தானமும், தருமமும். தான தருமம் என்றால், ஏதோ பெரிய அளவில் சொத்துக்களை விற்று தானம் மற்றும் தருமம் செய்வது என்று அர்த்தமல்ல என்கிறது நீதிநூல்கள்.

ஒன்றுமே இல்லாதவர்களுக்கு, அன்றாடம் நாம் சிறிய அளவில் செய்கின்ற சரீர உதவியும், பொருளுதவியும் இதிலே அடக்கம். தேவைக்கு மேல் இருக்கின்ற அழியக்கூடிய செல்வத்தை பதுக்கிவைக்காமல், தருமத்திற்குப் பயன்படும் வகையில் வழிவகை செய்து கொள்ள வேண்டுமாம். இவையெல்லாம் ஆன்றோர் சொல்லும் அறிவுரை.

தான தருமம் செய்வதற்கென்று நியதிகள், கட்டுப்பாடுகள் என்று எவ்வித நன்னூல்களிலும் இடம்பெறவில்லை. வாழ்க்கை நிலையாமை மற்றும் காலதாமதம் போன்றவை மனமாற்றத்திற்குக் காரணமாகிவிடும் என்பதால், தானம் செய்யவேண்டும் என்ற எண்ணம் ஏற்படும் போதே அதை நிறைவேற்றி விடவேண்டும் என்கிறது நீதி நூல்கள்.
பொருள் வசதி படைத்தவர்கள், பணத்தை வாரி இறைத்து தானம் செய்யும் போது, பணமில்லாத ஏழைகள் எதைக் கொடுத்து புண்ணியம் சம்பாதிக்க முடியும் என்று ஸ்ரீகிருஷ்ணனிடம், தருமர் கேட்க, அதற்கு
“தானம் பெற்றவர்களுக்கு, எது உடனடி திருப்தியை உண்டாக்குகிறதோ, அதுவே தானத்தில் சிறந்தது” என்றும், அன்ன தானமும், தீர்த்த தானமும் இவ்விதத்தில் சிறந்தவை என்றும் பதிலளிக்கிறார் பகவான்.
சென்னை, கே.கே. நகரில், 4 வது செக்டரில், தன்னுடைய வீட்டின் மிக உயர்ந்த காம்பவுண்ட் சுவரில், ஒரு குடி தண்ணீர்க் குழாயினை இணைத்து, விளம்பரமில்லாமல், 24 மணிநேரமும், பல வருடங்களாக சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் தானம் செய்கிறார் ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர்.

இன்னொருவர், திருவல்லிக்கேணியில், சீர்விசமாஜ் என்கிற பெரிய மண்டபத்தின் மொட்டை மாடியில், அனுதினமும் ஆயிரம் ரூபாய் பெறுமானமுள்ள, ஒரு மூட்டை அளவுக்கு, நவதான்யங்களை பறவைகளின் நலனுக்காக விசிறி எறிகிறார் ஒருவர், கேட்டால் பறவைகளுக்கு உணவளித்தல், ஆயுளை நீட்டிக்கும் என்பதை அந்த சமுதாயம் மதிக்கிறது.

யாரிடமும் யாசகம் (donation) கேட்காமல், யதாசக்தி மூலம் இயன்ற வரையில், பிறருக்கு உதவி செய்யவேண்டும் என்பதே அனேக இதிகாசங்களில் “மெய்யான தானம்” என்று சொல்லப்பட்டிருக்கிறது.
கர்ணன் அளவுக்குக் கொடை கொடுக்க முடியாவிட்டாலும், கடுகளவாவது கொடுக்கலாம்?. . .

வீட்டிலே யாருக்காவது பிறந்த நாள் வரும்போது, கேக் வாங்குதற்கு பதிலாக தாமறிந்த ஏழைக்கு அன்னதானம் செய்வது, நீண்ட நாட்கள் உபயோகத்தில் இல்லாத ஒரு புதுப்பொருளை, பண்டமாற்று (exchange) செய்யாமல், தேவைப்படும் எளியவருக்கு தானம் செய்வது. பழைய துணிமணிகளைப் போட்டு பாத்திரம் வாங்குவதற்கு பதிலாக, சாலையோரத்தில் வசிப்பவர்களுக்குக் உடுக்கக் கொடுப்பது போன்ற சிறு சிறு உதவிகளும் கூட தானத்தில் இடம் பெறும்.

பொதுவாக, மனிதன் நன்னிலையில் இருக்கும்போது, தான தருமத்தையெல்லாம் பற்றி அவ்வளவாகச் சிந்திப்பது கிடையாது, ஏதோ ஒரு காரணத்திற்காக செல்வத்தை அளவில்லாது குவித்து வைத்திருக்கும்போது, அந்த குறிக்கோள் ஏதோ ஒரு விதத்தில் நிறைவேறாதபோதுதான், தான் சேர்த்து வைத்திருக்கும் செல்வத்தையெல்லாம், பிறருக்கு உதவவேண்டும் என்பதில் அக்கறை எடுத்துக் கொள்கிறான்.

இன்று, உலகில் இயங்கும் அனைத்து அறக்கட்டளையின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், இது நிதர்சனமான உண்மை என்பது புலப்படும்.

அடுத்த பதிவில் இன்னும் சிந்திப்போம்.. . .

திவாஜி

unread,
May 3, 2016, 2:06:56 AM5/3/16
to thamizhvaasal

2016-05-03 11:11 GMT+05:30 Peruvai Parthasarathi <rkpsa...@gmail.com>:
“தானம் பெற்றவர்களுக்கு, எது உடனடி திருப்தியை உண்டாக்குகிறதோ, அதுவே தானத்தில் சிறந்தது”

Peruvai Parthasarathi

unread,
May 3, 2016, 2:19:55 AM5/3/16
to thamiz...@googlegroups.com
திவாஜி சார், "ஆஹா" ஒன்றே அனைத்தையும் புரிய வைக்கும்.

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/thamizhvaasal/qVg_X_pzrb8/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to thamizhvaasa...@googlegroups.com.

Geetha Sambasivam

unread,
May 3, 2016, 2:35:24 AM5/3/16
to தமிழ் வாசல்
//தானம் பெற்றவர்களுக்கு, எது உடனடி திருப்தியை உண்டாக்குகிறதோ, அதுவே தானத்தில் சிறந்தது.//

தானம் பெற்றவர்கள் உடனடியாகத் திருப்தி அடைந்து விடுவதும் அதிசயம் தான்! :)

2016-05-03 11:11 GMT+05:30 Peruvai Parthasarathi <rkpsa...@gmail.com>:
 

Tthamizth Tthenee

unread,
May 3, 2016, 2:36:30 AM5/3/16
to thamizhvaasal
ஸ்ரீகிருஷ்ணனிடம், தருமர் கேட்க, அதற்கு
“தானம் பெற்றவர்களுக்கு, எது உடனடி திருப்தியை உண்டாக்குகிறதோ, அதுவே தானத்தில் சிறந்தது” என்றும், அன்ன தானமும், தீர்த்த தானமும் இவ்விதத்தில் சிறந்தவை என்றும் பதிலளிக்கிறார் பகவான்.

இந்த  பகவான் ஶ்ரீ கிருஷ்ணன் கூறிய  ஒவ்வொன்றுமே  மறைபொருளே 

மறைபொருளே  கூறிய    மறை பொருளே  

அதை முழுவதுமாக  விளங்கிக் கொள்ள  தருமர் போன்றவர்களாலேயே  முடியவில்லை எனும் போது   நாமெல்லாம் எம்மாத்திரம்

 தானம் பெற்றவர்களுக்கு  எது  உடனடித் திருப்தியை அளிக்கிறதோ  அதுதான் சிறந்த  தானம்

என்று சொல்லிவிட்டு  நிறுத்திவிடவில்லையே  பகவான் ஶ்ரீ கிருஷ்ணன்
அதைத் தொடர்ந்து  


அன்ன தானமும், தீர்த்த தானமும் இவ்விதத்தில் சிறந்தவை என்றும் பதிலளிக்கிறார் பகவான்.


இங்கே  ஏதோ சுக்க்ஷுமம்  இருப்பது போல் மனதுக்கு தோன்றுகிறது மதிப்பிற்குரிய  திரு பெருவை பார்த்த சாரதி அவர்களே மதிப்பிற்குரிய  திரு  திவாஜி அவர்களே

ஏன் இப்படி  முதலில் கூறியதோடு நிறுத்தாமல்        அன்னதானமும்  தீர்த்த தானமும் சிறந்தவை  என்று வேறு சொல்கிறார் பகவான் ஶ்ரீ கிருஷ்ணன்  என்பதை ஆராயலாம் என்று தோன்றுகிறது

உரிய நேரத்தில்  உரிய  விஷயத்தை  எழுதுவதில் திறமைசாலி  திரு பெருவை பார்த்த சாரதி  அவர்கள்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.

திவாஜி

unread,
May 3, 2016, 2:47:26 AM5/3/16
to thamizhvaasal

2016-05-03 12:06 GMT+05:30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
ஏன் இப்படி  முதலில் கூறியதோடு நிறுத்தாமல்        அன்னதானமும்  தீர்த்த தானமும் சிறந்தவை  என்று வேறு சொல்கிறார் பகவான் ஶ்ரீ கிருஷ்ணன்  என்பதை ஆராயலாம் என்று தோன்றுகிறது

​பெரிய ஆராய்ச்சி ஒன்றும் தேவையில்லை. வயிறு நிறைந்த பின் ஒரு கவளம் கூட சாப்பிட முடியாது. அதே போல ஒரு வாய் நீரைக்கூட குடிக்க முடியாது. பூரண திருப்திதான்!
வேற பார்வை இருந்தா சொல்லுங்க!


Peruvai Parthasarathi

unread,
May 3, 2016, 2:48:34 AM5/3/16
to தமிழ் வாசல்
மதிப்பிற்குறிய தேனீசார், திவாஜிசார், திருமதி கீதாம்மா அவர்களே. . .

அன்னதானமும், தீர்த்ததானமும் யார் வேண்டுமானாலும் செய்யமுடியும், ஏழை பணக்காரர் என்கிற பேதமில்லாமல், ஒரு பிட்சை எடுப்பவர்கூட, அருகே இருக்கும் ஜந்துக்களுக்கு உணவளிப்பதை நாம் பார்க்கிறோம்.

ஆக இவ்வித தானம் கடினம் என்பதல்லாமல், எளிது என்பதைத்தான் கருத்தில்கொள்ளவேண்டும்.

Iyappan Krishnan

unread,
May 3, 2016, 3:20:53 AM5/3/16
to தமிழ் வாசல்
​என் கருத்து... தவறா சொன்னா மன்னிச்சுக்கோங்க. 

அதாவது ஒரு கதை உண்டு. தருமருக்கு ஏன் கர்ணனை அப்படி வள்ளல்னு சொல்றாங்க நம்மளை ஏன் சொல்றதில்லை.. நாமளும் தருமம் பண்றோமேன்னு

கிருஷ்ணர் அதை தெளிவு படுத்த விரும்பினார்.

ரெண்டு பெரிய தங்க மலைகளை உருவாக்கினார்.  தருமர் கிட்ட சொன்னார்.. இந்த மலைகளில் இருக்கும் தங்கம் அத்தனையும் சாயந்தரத்துக்குள்ளார தானமா குடுத்து முடிச்சுடனும்னு..  தருமரும் பல ஆட்களை வச்சு வெட்டி எடுத்து எல்லாருக்கும் குடுக்கறார்... சாயந்திரம் வந்தும் மலை ல  கொஞ்சூண்டு தான் குறைஞ்சிருக்கு..  சூரியன் மறைய இன்னும் ரெண்டு நாழிகை தான் இருக்கு.  தருமர் தோல்விய ஒத்துக்கிட்டார்.. அப்புறம் கர்ணனை வரச்சொல்லி கிருஷ்ணர் அதே கண்டிஷன சொன்னார்.  

கர்ணன் தெருவில போன ரெண்டு ஏழைகளை அழைச்சு ஆளுக்கு ஒரு மலை எடுத்துக்கோங்கப்பான்னு சொல்லிட்டுப் போயிட்டே இருந்துட்டான். 

சரி இதுவரைக்கும் தான் நமக்கு கதை தெரியும். ஆனா அப்பா ஆசையானது  எப்படிப் பட்டதுங்கறதுக்காக இன்னும் இதோட அடுத்தப் பகுதிய சொல்லுவார்.

தானம் வாங்கின ரெண்டு பேருமே நினைச்சுக்கிட்டாங்களாம். “ படுபாவி.. அவன் இந்த நேரத்துல வராம இருந்திருந்தா... கர்ணன் ரெண்டுமலையுமே எனக்கே குடுத்திருப்பானே... இவன் நல்லாருப்பானா நாசமாப் போக “ அப்படின்னு.

ஆக எவ்வளவு கிடைத்தாலும் மனசு திருப்தி அடையறதில்லை. 

ஆனா பாருங்க... துர்வாசரை துரியோதனன் அழைச்சு சோறு போட்டு மனசு குளிர வச்சு நீங்க போயி வனத்தில் இருக்கும் தருமர் அண்ட் கோ கிட்ட இதே மாதிரி சாப்பிட்டு அவங்களை வாழ்த்தனும்னு. 

துர்வாசரும் போறார்...  எப்போ ? திரௌபதி  அக்‌ஷயச் சட்டியக் கழுவி கவுத்த பின்னாடி. அக்‌ஷயப் பாத்திரம் அதுக்கப்புறம் எங்கருந்து சோறு போடும் ?  அந்த நேரத்துலயும் கிருஷ்ணன் வந்து ஒரு பருக்கைச் சோறு தின்னு எல்லார் வயிரையும் நிரப்பிடறார்.

சரி... இனி பீமன் போயி அழைக்கும் போது ஒருத்தருக்கும் பசி இல்லை. சாப்ட முடியல. இந்த நேரத்துல  எத்தனை பட்சணம், பாயசம் வச்சு என்ன? சாப்ட முடியுமா ?

இங்கே கொடுக்கும்  எளிமையில் அல்ல... ஏற்கும் தன்மை தான் தானம்..   எவன் ஒருவன் ஏற்கும் தானத்தை மனம் உவந்து மகிழ்வுடன் ஏற்கிறானோ அந்த தானமே சிறந்த தானம். 
திவாஜி அண்ணா சொன்னா மாதிரி... எது கொடுத்தாலும் இன்னும் வேண்டும் என்று தான் மனம் நினைக்கும். ஆனால் உணவும் நீரும் அப்படி அல்ல. ஆகவே தான் தானத்தில் சிறந்தது அன்னதானம் என்றார்கள் போல.. ஆனால் தானத்தில் சிறந்தது அதுவல்ல...

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்!



2016-05-03 12:18 GMT+05:30 Peruvai Parthasarathi <rkpsa...@gmail.com>:
ஆக இவ்வித தானம் கடினம் என்பதல்லாமல், எளிது என்பதைத்தான் கருத்தில்கொள்ளவேண்டும்.




Iyappan Krishnan

*>*<*
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்.
நிலைபெறுத்தலும். நீக்கலும். நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.

Tthamizth Tthenee

unread,
May 3, 2016, 3:37:03 AM5/3/16
to thamizhvaasal
அருமையான கருத்து  திரு ஐய்யப்பன் அவர்களே
அதைத்தான் வலியுறுத்தி  நானும் எழுதுகிறேன்


ஸ்ரீகிருஷ்ணனிடம், தருமர் கேட்க, அதற்கு

தானம் பெற்றவர்களுக்கு, எது உடனடி திருப்தியை உண்டாக்குகிறதோ, அதுவே தானத்தில் சிறந்ததுஎன்றும், அன்ன தானமும், தீர்த்த தானமும் இவ்விதத்தில் சிறந்தவை என்றும் பதிலளிக்கிறார் பகவான்.

 

 

தானம் பெற்றவர்களுக்கு  உடனடி திருப்தியை  எது உண்டாக்குகிறதோ  

 

என்பதிலேயே  என் பதிலும்  அடங்கி உள்ளதாக  நினைக்கிறேன

 

இந்த  உலகிலே  தானம் பெற்றவர்கள்  எப்போதாவது திருப்தி அடைதிருக்கிறார்களா  என்று எண்ணிப் பார்த்தால்  இல்லை என்றே  பதில் வருகிறது

போதும் என்கிற  மனம் யாருக்குமே  இல்லை என்பதே  விடை

 

ஆகவே  எவ்வளவு கொடுத்தாலும் என்ன கொடுத்தாலும் இன்னம் கொஞ்சம் தந்திருக்கலாமோ  என்று எண்ணும் மனதுக் காரர்கள்தானே பெரும்பானமை

 

அப்படி இருக்க  தானம் பெற்றவர்கள்  உடனடித் திருப்தியைப் பெற   வேண்டுமானால்  அவர்களின் உடனடித் தேவை எதுவோ அதைப் பூர்த்தி செயுதாலன்றி அவர்களைத் திருப்திப் படுத்த முடியாது  என்றே தோன்றுகிறது

 

உதாரணமாக  ஒருவருக்கு  உடனடியாக  ஐம்பது ரூபாய் வேண்டும் என்றால் அதை அளிக்காமல்  அன்னமும் தீர்த்தமும் அளித்தால்  அவருக்கு திருப்தி கிடைப்பதில்லை

 

அதுமட்டுமல்ல  அந்த  ஐம்பது ரூபாயை தானமாகக் கொடுக்க நமக்கு சக்தி இல்லை  என்பதை இன்முகத்துடன் கூறினாலும்  கடுமையாக்க் கூறினாலும்  விளக்கமாகக் கூறினாலும் கேட்பவர் மனதில்  பதிவது அந்த  ஐம்பது ரூபாய் கிடைக்கப் போவதில்லை என்பதே

 

அப்போது அவர் திருப்தியுறமாட்டார் என்பதே  உண்மை

 

 

யாரிடமும் யாசகம் (donation) கேட்காமல், யதாசக்தி மூலம் இயன்ற வரையில், பிறருக்கு உதவி செய்யவேண்டும் என்பதே அனேக இதிகாசங்களில் மெய்யான தானம்என்று சொல்லப்பட்டிருக்கிறது.J


கர்ணன் அளவுக்குக் கொடை கொடுக்க முடியாவிட்டாலும், கடுகளவாவது கொடுக்கலாம்

?. . .

 

யதா சக்தி மூலம் அளிக்க முடிவதை அளித்தால் பெறுபவர் திருப்தி அடைவதில்லை  .  அவர்களுக்கு  வேண்டிய அளவு கொடுத்தாலும் இன்னும் கொஞ்சம் கொடுத்திருக்கலாமே என்று எண்ணுவதுதான்  மனைத மனம்

 

அதையும் தவிர கர்ணன் அன்னதானமே  செய்ததில்ல


பசி என்பதையே அறியாத  கர்ணன் ஒருமுறை ஏதோ உடல் நலமில்லாதது போல் உணர்கிறான்


அப்போது அங்கே வந்த  நாரதர்  உனக்கு இப்போது பசிக்கிறது  அதை நீ உணரவில்லை  உன் பசி அடங்க  உன் கட்டைவிரலை வாயில் போட்டு  சூப்பு  என்றாராம்


அவ்விதமே கர்ணன் செய்ய  அவன் பசி அடங்கியதாம்


அப்போது கர்ணன் எப்படி கட்டைவிரலை சூப்பினால் பசி அடங்குகிறது  என்று கேட்டதற்கு  நாரதர்  கர்ணா  நீ  அன்னதானமே  செய்ததில்லை  அதனால்தான் இப்போதும் பசியால் வாடினாய்


ஆனால்  யாரோ ஒருவர் உன்னிடம் அன்னதானம் வழங்கும்  இடத்துக்கு  வழி கேட்க  நீ உன்கட்டை விரலினால் அந்த  இடத்தை சுட்டினாயாம்  அதனால் வந்த புண்ணியம் உன் கட்டை விரலில் இருக்கிறது  அதனால்தான் நீ கட்டைவிரலைச் சூப்பியதும் உன் பசி தீர்ந்தது  என்றாராம்


அதனால் இப்போதும் குழந்தைகள் பசித்தால் கட்டை விரலைச் சூப்புகிறதோ எனும் சந்தேகம் எனக்கு


அன்புடன்

தமிழ்த்தேனீ


அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





--

திவாஜி

unread,
May 3, 2016, 3:47:26 AM5/3/16
to thamizhvaasal

2016-05-03 13:06 GMT+05:30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
அதனால் இப்போதும் குழந்தைகள் பசித்தால் கட்டை விரலைச் சூப்புகிறதோ எனும் சந்தேகம் எனக்கு

​அனாதையாக கிடந்து பசின்னு அழுத குழந்தைக்கு மாந்ததாமி ந்னு இந்திரன் அதோட  கட்டை விரலை அதோட வாயில் எடுத்து வெச்சானாம். பசி அடங்கித்தாம். அந்த பிள்ளைதான் மாந்தாதா!​


Iyappan Krishnan

unread,
May 3, 2016, 4:13:27 AM5/3/16
to தமிழ் வாசல்
​தேனீ சார்.. இந்த திரு ஐயப்பன்னு சொன்னா நான் திரு திருன்னு முழிக்கிறேன்... :))) ரொம்ப ஃபார்மலா இருக்க்கு....  ​

2016-05-03 13:06 GMT+05:30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
அருமையான கருத்து  திரு ஐய்யப்பன் அவர்களே
அதைத்தான் வலியுறுத்தி  நானும் எழுதுகிறேன்

Tthamizth Tthenee

unread,
May 3, 2016, 4:25:02 AM5/3/16
to thamizhvaasal
சரி   திரு ஜிவ்ஸ்  அவர்களே


அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





--

Iyappan Krishnan

unread,
May 3, 2016, 4:27:15 AM5/3/16
to தமிழ் வாசல்
​மறுபடியும் திரு திருன்னு திருப்பி உடறீங்களே :)) 

2016-05-03 13:54 GMT+05:30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
சரி   திரு ஜிவ்ஸ்  அவர்களே



Tthamizth Tthenee

unread,
May 3, 2016, 4:33:18 AM5/3/16
to thamizhvaasal
ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹஆ    ஜிவ்ஸ்    


அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





--

Innamburan S.Soundararajan

unread,
May 3, 2016, 7:39:31 AM5/3/16
to thamizhvaasal
எனக்கு இது எல்லாம் தெரியாது. என் தாத்தா ஒரு அனாதை உடலுக்கு கொள்ளியிட்டார். 
நானும் என் மனைவியும் மணி விழாவுக்குக் கோவில் வாசலில் சக்கரைப்பொங்கல் வினியோகித்ததுடன் சரி.
என் 80 வயது விழாவில் தனியன். பிறந்த ஊர்/ பூர்வீக ஊர் இரண்டுக்கும், மக்களுடன் சென்று பூஜைக்குப் பின் வினியோகம் செய்ததுடன் சரி.

Peruvai Parthasarathi

unread,
May 3, 2016, 9:10:43 AM5/3/16
to தமிழ் வாசல்
அய்யா, பெரியய்யா "இன்னம்பூரான்" அவர்களே,

நமஸ்காரம்

தகவல் தெரிந்திருந்தால்,
குடும்ப சகிதமாக
"சகஸ்ரதாரியை" நமஸ்கரித்து,
"ஆயுஷ்மான் பவ" என்கிற ஆயுளை நீட்டிக்கும்
ஆசிர்வாதத்தைப் பெற்றிருப்போம்.

சொன்னவுடன் நமஸ்கரித்து ஆசி பெற்று விட்டேன்,
தங்களின் கனகாபிஷேகத்துக்கு
கண்டிப்பாக ஆசி பெற வருகிறேன்.

நன்றி

Innamburan S.Soundararajan

unread,
May 4, 2016, 12:35:54 AM5/4/16
to thamizhvaasal
மகிழ்ச்சி, பெருவை. அமோகமான ஆசிகள். சென்னை வாசியாக இருந்தால், ஒரு நாள் வாருங்கள், விருந்து அளிக்க்கிறேன். அல்லது நான் நடத்தும் இலக்கிய வட்ட அமர்வுக்கு வாருஙுக்கள், குடும்ப சகிதமாக.
அன்புடன்,
இன்னம்பூரான்









இன்னம்பூரான்

Peruvai Parthasarathi

unread,
May 4, 2016, 12:47:48 AM5/4/16
to தமிழ் வாசல்
ஏதோ சொல்ல நினைக்க, எங்கோ போகிறோம் என்றாலும், எல்லாம் நன்மைக்கே என்கிற நிலையில், கருத்தாடலில் நிறைய தெரிந்து கொள்ளும் வாய்ப்புக்கு . . . நன்றி அனைவருக்கும்.

=============

இங்கே கொடுக்கும் எளிமையில் அல்ல... ஏற்கும் தன்மை தான் தானம்.. எவன் ஒருவன் ஏற்கும் தானத்தை மனம் உவந்து மகிழ்வுடன் ஏற்கிறானோ அந்த தானமே சிறந்த தானம்.

திவாஜி அண்ணா சொன்னா மாதிரி... எது கொடுத்தாலும் இன்னும் வேண்டும் என்று தான் மனம் நினைக்கும். ஆனால் உணவும் நீரும் அப்படி அல்ல. ஆகவே தான் தானத்தில் சிறந்தது அன்னதானம் என்றார்கள் போல.. ஆனால் தானத்தில் சிறந்தது அதுவல்ல...ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்!. . .

என்கிற கருத்தை வைத்துள்ளார் திரு ஐயப்பன் அவர்கள்.


அதே மாஹாகவிதான் “ஒருவன் ஊருடன் கூடி வாழ விரும்பினால், வரிய ஊர்மக்களுக்கு அன்னமிடுவதுதான் உத்தம தர்மம்” என்றார்.

மேலும் “ஜனங்களுடைய வயிற்றுக்கு உணவு கொடுக்க முடியாவிட்டால், அந்த தேசத்தில் பெரிய வித்வான்கள் இருந்து என்ன பயன்?. . .நாகரீகம் உயர்ந்து, போஜனம் குறைவாக இருந்தால், அந்த நாகரீகம் அவசியமில்லை” என்றும் சாடினார்.

அதுமட்டுமா “தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்று மிரட்டும் தொனியிலும் சொன்னார்.

மேலும், ஜீவ்ஸ் சார் சொன்னதுபோல், ஒருவன் திருப்தி ஏற்பட்டுவிட்டால் எதையுமே கேட்கத்தோன்றாது.

ஒரு பருக்கை சோற்றையும், ஒரு கிள்ளுக்கீரையையும் வாயிலே போட்டுக்கொண்டு, 16,000 சீடர்களோடு துர்வாச முனியின் பசியையும் அடக்கி திருப்திப் படுத்தின திருமாலே, அகில உலகமும் திருமாலின் வயிற்றில் அடக்கமாயிற்றே.

====================

அடுத்து

அன்னதானமும் தீர்த்த தானமும் சிறந்தவை என்று வேறு சொல்கிறார் பகவான் கிருஷ்ணன் என்பதை ஆராயலாம் என்று தோன்றுகிறது.. . .என்கிற தமிழ்த்தேனீ சார் அவர்களின் கருத்தைச் சிந்திக்கும்போது.. . .

தானத்தில் எது சிறந்தது?. . . என்பதை விட, எது எளிது?. . என்கிற வாதத்தை எடுத்துக் கொண்டால், மிகப் பழமையான வேத, உபநிஷத, தத்துவ சாத்திரங்கள், புராண இதிகாசங்கள் இவை எல்லாவற்றிலுமே, அன்னமும், நீரும் முன்னிலை வகிக்கிறது.

மஹாபாரத்தில், பஹாசுர வதம் பற்றி அறியும் போது, கஷ்டகாலத்தில் தமக்கு அன்னமிட்ட அந்தணர்களை, அசுரனிடமிருந்து காப்பாற்றும் பொருட்டு, குந்தி தேவி அவர்கள், பீமனிடம் அசுரனை வதம் செய்ய கட்டளை இடுகிறாள். அந்த வதமே, பகுத்துண்ட அன்ன தானத்தை முன்வைத்து நிகழ்ந்ததுதான் என்பதை அறிகிறோம்.

தான தருமம் செய்வதற்கென்று நியதிகள், கட்டுப்பாடுகள் என்று எவ்வித நன்னூல்களிலும் இடம்பெறவில்லை. வாழ்க்கை நிலையாமை மற்றும் காலதாமதம் போன்றவை மனமாற்றத்திற்குக் காரணமாகிவிடும் என்பதால், தானம் செய்யவேண்டும் என்ற எண்ணம் ஏற்படும் போதே அதை நிறைவேற்றி விடவேண்டும் என்கிறது நீதி நூல்கள்.. . .என்கிற கருத்தையும், முன்பே குறிப்பிட்டிருந்தேன்.

இதற்கும் ஒரு உதாரணத்தை மாபாரத்திலிருந்து குறிப்பிட விரும்புகிறேன்.


ஒரு முறை தருமர் அரண்மனையில் வீற்றிருக்கும்போது, ஒரு ஏழை தம்பதிகள் குடும்ப சகிதமாக தருமம் கேட்டு மன்னரிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

தர்மர் அவர்களைப் பார்த்து ‘இன்று சென்றுவிட்டு, நாளை வரும்படி’ கட்டளை இடுகிறார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த பீமன் அரண்மனையில் இருக்கும் முரசில் பெருஒலி எழுப்பி . . .

“எங்கள் மன்னன் தருமர் காலத்தை வென்று விட்டார். . . . . .” என்று நீண்ட பெருங்கூச்சலிட்டு முழக்கமிடுகிறான்.

தருமர் பீமனை நோக்கி ‘உனக்கு உன்மத்தம் தலைக்கேறிவிட்டது’ என்று நினைக்கிறேன். ஏன் இப்படி உளருகிறாய் என்ற கேள்வியை அவன் முன் எழுப்புகிறார்.

அதற்கு பீமன். . .

‘நீங்கள்தானெ, தருமம் கேட்டு வந்தவர்களை, நாளை வா? என்று கூறி அனுப்பினீர்கள். ஆக நீங்கள் நாளை வரை உயிரோடிருக்க முடியும் என்றும், உங்கள் ஆயுளை நீங்களே நிர்ணயம் செய்து விட்டீர்களே,

அதனால்தான் நான் ‘ தருமர் காலத்தை வென்று விட்டார்’ என்று அறிவித்தேன் என்றான்.

தருமர் உண்மை நிலை அறிந்து, அந்த நொடிப்பொழுதே தரும காரியத்தைத் தாமதமில்லாமல் நிறைவேற்றினாராம். தருமம், நீதி வழுவாமை போன்றவற்றிற்கு, தருமரைத்தான் எல்லா நூல்களும் மேற்கோள் காண்பிக்கின்றன.

ஆனால், அந்த தருமரே கர்வத்துக்குக் கட்டுப்பட்டவர் என்றால். . .

இப்படி கர்வம் தலைக்கேறுகின்ற போதெல்லாம், மாயக்கிருட்டினன்தான் அவர்கள் கர்வத்தை அடக்க பல லீலைகளைச் செய்து காண்பித்திருக்கிறார். திரு ஜீவ்ஸ் குறிப்பிட்ட “தங்கமலை தானமும்”, நினைத்த மாத்திரத்தில் கர்ணனின் தாமதமில்லா, உடனடிதானம் மேலோங்கி நிற்கிறது.

“தேனீசார்” சொன்னதுபோல், தருமர் போன்றவர்களாலேயே முடியாதபோது, நாமெல்லாம் எம்மாத்திரம். வாஸ்த்தவம்தான்.

Tthamizth Tthenee

unread,
May 4, 2016, 1:14:51 AM5/4/16
to thamizhvaasal
திரு  பெருவை பார்த்தசாரதி அவர்களே   நீங்கள்  சொல்ல வந்த கருத்தை தாராளமாக தொடர்ந்து எழுதுங்கள் நீங்கள் எழுதியதைப் படித்தவுடன்  என் மனதில் தோன்றியதை அப்படியே  சொல்லவேண்டும் என்று தோன்றியது  அதனால் சொன்னேன் 

 நடு நடுவே  வந்து இடை மறித்தால் நாம்  சொல்லவருவது   திசைமாறித்தான் போகும்  ஆகவே  நீங்கள்  எழுதுவதை  எழுதி முடித்தபின் விவாதங்களை வைத்துக் கொள்ளலாம்  

அதுவே ஆரோக்கியமாக இருக்கும்  என்று தோன்றுகிறது     நன்றாக வருகிறது தொடர்

தொடருங்கள்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852




Iyappan Krishnan

unread,
May 4, 2016, 1:37:33 AM5/4/16
to தமிழ் வாசல்
​விவாதங்களுக்கு வேண்டுமானால் தனி இழையில் தொடரலாமே ?​


Iyappan Krishnan

*>*<*
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்.
நிலைபெறுத்தலும். நீக்கலும். நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.

Tthamizth Tthenee

unread,
May 4, 2016, 2:55:56 AM5/4/16
to thamizhvaasal
விவாதங்கள் ஏற்படும்போது  அவரவர் கருத்தை அவரவர் கூறுகிறார்கள்  
அது நமக்கு ஏற்புடையதாக இருந்தால் ஏற்கலாம்  மறுப்புடையதாக இருந்தால் மறுக்கலாம்

ஆனால்   விவாதமே கூடாது     நான் சொல்வதை அப்படியே ஏற்க வேண்டும் என்னும் மன நிலை இருப்போரால்  ஆரோக்கியமான   விவாதங்களில்   பங்கெடுக்க முடியாது

விவாதங்கள் தேவைதான்  விதண்டாவாதம் தேவையில்லை ஆகவே இந்த் இழையில் ஆரோக்கியமான  விவாதங்கள்  தொடரவேண்டும்

அதே போல்  கருத்தை  சொல்லவந்தவர்  மனதிடத்துடன் தான் சொல்ல வந்த கருத்தை தளராமல்  கடைசீவரை  சொல்ல வேண்டும்    என்பதே  என் கருத்து

அப்படி  எளிமையான மனதுடன் விவாதம் செய்யலாம் என்றால் செய்யலாம்  .இல்லையென்றால்      அருமை  என்னும் சொல்லோடு நிறுத்திக் கொள்ளலாம்
ஆனால் ஆரோக்கியமான விவாதங்கள் வளரும் போதுதான்  என் போன்றோரால்  பல விற்பன்னர்களின் கருத்துக்களிலிருந்து  பல முத்துக்களை  கற்க  முடிகிறது  என்பது உண்மை

Iyappan Krishnan

unread,
May 4, 2016, 3:01:15 AM5/4/16
to தமிழ் வாசல்
​புரியல... இங்க விவாதம் வேண்டாம்னு சொல்லலை.. இந்த இழை அப்படியே தொடர, இது சார்ந்த விவாதத்தை தனி இழையா தொடரலாம்ன்னு சொன்னேன்.. வேறொன்னும் இல்லை. இங்கையே தொடரனும்னாலும் ஓகே தான்.. ​

திவாஜி

unread,
May 4, 2016, 3:02:23 AM5/4/16
to thamizhvaasal

2016-05-04 12:25 GMT+05:30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
 அருமை  என்னும் சொல்லோடு நிறுத்திக் கொள்ளலாம்
ஆனால் ஆரோக்கியமான விவாதங்கள் வளரும் போதுதான்  என் போன்றோரால்  பல விற்பன்னர்களின் கருத்துக்களிலிருந்து  பல முத்துக்களை  கற்க  முடிகிறது  என்பது உண்மை

​விவாதம்ன்னு கூட வேணாமே! வித்தியாசமான பார்வைகள் பதியப்படுவது நல்லதே. ஒத்தர் சொல்லறது மட்டுமே சரியா இருக்கணும்ன்னு ஒண்ணுமே கிடையாதே!​


Tthamizth Tthenee

unread,
May 4, 2016, 4:27:34 AM5/4/16
to thamizhvaasal
​நிச்சயமாக   தனி இழையாகவும் தொடங்கலாம்   
அல்லது 

வித்தியாசமான பார்வைகள் பதியப்படுவது நல்லதே. ஒத்தர் சொல்லறது மட்டுமே சரியா இருக்கணும்ன்னு ஒண்ணுமே கிடையாதே!​

என்று     திரு திவாஜி அவர்கள் கூறியதைப் போல்

அல்லது இங்கேயும் கருத்துக்களை பதியலாம்


ஆமாம்    எனக்கு  சரியாக எழுத வரவில்லையா  அல்லது   நான் எழுதுவது      உங்களுக்கு  வேறு பொருள் தருகிறதா  என்று எனக்கு ஒரு சந்தேகம்


  நீங்க  விவாதம் வேண்டாம்னு சொன்னீங்கன்னு  நான் சொல்லவே இல்லையே

நான் பொதுவாக  விவாதங்கள் எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் எனும் கருத்தை சொன்னேன்  அவ்வளவே

அதுவும்   சில குழுமங்களில்  வேண்டுமென்றே  நியாயமான விவாதமாக இருந்தாலும்  அதை  திசை திருப்பி  அந்த   இழையை  மூடுவார்கள்  ( அனுபவம் பேசுகிறது)   அந்த பயத்தால்  எழுதினேன்

இந்த  தமிழ் வாசலாவது    மகிழ்ச்சியான ஆரோக்கியமான  மனதுக்கு இதமான விவாதக் களமாக அமையவேண்டும்  என்னும் எதிர்பார்ப்பிலே  கூறிய   கருத்து அது

அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





2016-05-04 12:31 GMT+05:30 Iyappan Krishnan <jee...@gmail.com>:
​புரியல... இங்க விவாதம் வேண்டாம்னு சொல்லலை.. இந்த இழை அப்படியே தொடர, இது சார்ந்த விவாதத்தை தனி இழையா தொடரலாம்ன்னு சொன்னேன்.. வேறொன்னும் இல்லை. இங்கையே தொடரனும்னாலும் ஓகே தான்.. ​

--

Peruvai Parthasarathi

unread,
May 10, 2016, 10:25:16 PM5/10/16
to தமிழ் வாசல்
தொடர்ச்சி. . உணவே மருந்து என்கிறது சித்த வைத்தியம்.

சித்த வைத்திய நூல்கள் எல்லாமே, உணவே மருந்து என்ற வரிகளை முதலாகக் கொண்டுதான் ஆரம்பிக்கிறது. வைத்திய முறைகளையும், மருந்துகளையும் கையாள்கிற போதும், பிணிக்கு மருந்து எடுத்துக் கொள்ளும்போதும், “உணவுக் கட்டுப்பாடு” அவசியம் என்ற விதியையும் நிர்ணயிக்கிறது. நோயில்லாமல் நெடுங்காலம் வாழுகின்ற ஆயுளை நிர்வகிப்பதில் பெரும்பங்கு வகிப்பது உணவு என்பதை சித்தர்கள் வலியுறுத்திச் சொன்னார்கள்.

அனைத்து உயிர்களும் உணவிலேயே அடங்குகிறது என்கிறது தைத்ரிய உபநிடதம். ஆக உண்ணும் உணவுக்கு நமது ஆயுளோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிறது. ஆனால், இன்றைக்கு பாரம்பரிய நல்லுணவு முறைகளை தொலைத்து விட்டு, அயல்நாட்டு உணவுகளை அப்படியே ஏற்றுக்கொள்ள இயலாமல், சிலசமயம் வயிற்றுப் பிணியில் தத்தளித்துக் கொண்டிருக்கிறோம்.

எந்த ஒரு சுபநிகழ்ச்சிக்கு, சென்றாலும், எல்லோரும் எதிர்பார்ப்பது விருந்தோம்பல் பற்றிதான். நிகழ்ச்சிநிரலைவிட, முடிவில் நடைபெறும் பந்திக்கே பொதுவாக முன்னுரிமை உண்டு.

ஒரு அழப்பிதழைப் படிக்கும் போது கூட, நமது கண்கள், முகூர்த்த நேரத்தைப் பார்ப்பதை விட்டுவிட்டு, சாப்பாடு நேரத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கும். எந்த வேளை சாப்பாட்டுக்குச் செல்லலாம் என்று யோசனை சொல்லும். நண்பர் ஒருவர் கல்யாண சாப்பாடு சாப்பிடுவதில் அலாதி பிரியம், விழாவில் நுழைந்தவுடனேயே, பந்தியில் எத்துணை அயிட்டம் என்று கேட்டு அறிந்துகொள்வார்.

ஆக ஒரு நிகழ்ச்சியின் வெற்றிக்கும், பங்கத்திற்கும் கூட முக்கிய காரணமாக அமைய வழிசெய்வது பந்திச்சாப்பாடு. சரியான நேரத்தில் உணவு பரிமாறப்படாமல், காலம் கடந்து நிறைவேற்றினாலும், பசியோடு இருப்பவர்களின் கோபத்துக்கு ஆளாகிவிடுவோம். விருந்தோம்பல் இல்லாத வீட்டிற்கும், அன்னதானம் செய்யாத ஆலயத்திற்கும், சாப்பாடு சரியாகப் போடாத கல்யாணத்திற்கும் அவ்வளவாக மதிப்பிறாது என்பதை தமிழ்மக்கள் நாமறிவோம்.

ஒரு பெரிய விருந்துக்கு (Gettogether) நண்பர்களுடன் சென்றோம், படாடோபமான ஏற்பாடு மிகப்பெரிய அளவில் அறுசுவையோடு கூடிய சமபந்தி போஜனம். ஒருவர் சாப்பிடும் போதே, இடையில் புகுந்து, இலைபிடித்து பந்திக்கு முந்து என்கிற நிலையில், ஒரே தள்ளு முள்ளு.

இலையில் இடம்பெற்ற 16 வகை உணவுவகைகளை பட்டியலிட்டு அதை இலைக்கு முன்னால் வைத்திருந்தார்கள். ஒரு வழியாக, பந்தியின் நடுவில் ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே, அருகில் நின்று இடம்பிடித்து, உட்கார்ந்துவிட்டென்.

எதை முதலில் சாப்பிடுவது என்கிற போராட்டத்துக்கு நடுவே, “என்ன ஸ்வாமி எப்படி அயிட்டமெல்லாம்” திடுமென்று ரிமோட்டை அழுத்தியமாதிரி செம்மறி ஆட்டுக் கொம்பு மீசையுடன், பரிச்சயமான சமையல்காரர் என்று சொல்வதை விட சமையலுக்குச் சொந்தக்காரர் என் முன்னே காட்சி கொடுத்தார். அசடு வழிய “பேஷ் பேஷ், ரொம்பப் பிரமாதம்” நரசுஸ் காபி விளம்பர ஸ்டைலில் நான் பதில் சொல்ல. “டேய் அப்பு, ஸ்வாமி நம்ம ஸ்வாமி நன்னா கவனி” கலைஞர் குரலில் கரகரவென கனைத்துவிட்டுப் போனார். “என்ன வேணுமானாலும் கூச்சப்படாம கேளுங்கோ” இது அப்பு.

ஏற்கனவே இரண்டு முறை ஆட்டுக்கொம்பு மீசை போட்டத சாப்டு, அடிவயித்தக் கலக்கின ஞாபகம் வர, அப்புவைப் பார்த்து “ரசம் அப்புறம் கொஞ்ச சாதம் மட்டும் இருந்தா, சிரமம் பாராம கொண்டுவாயேன், வயிறு சரியில்ல” என்று சொல்ல, எலைல போட்டதெல்லாம் அப்படியே இருக்கிறதப் பாத்த, அவனுக்கு கோபம் வரதுக்கு பதிலா, ஒரு நமிட்டுச் சிரிப்பு. “நல்ல வேளையா இவர் சாப்பிடாம தப்பிச்சார்” அப்பு மனசுல இருக்கிறத நன்னா புரிஞ்சுக்க முடிஞ்சுது.

பந்தி ஒரு வழியா மகிழ்ச்சியா முடிந்து, எல்லோரும் கிளம்பிவிட்டோம். ஆனால், அம்மகிழ்ச்சி ஒரு சில மணி நேரங்களே நீடித்தது. வீடு திரும்பிய அனைவரின் அலைபேசிகளும் சங்கமமாகி, ‘குமட்டல்’‘வாந்தி’‘வயிற்றுப் பொருமல் ‘வயிற்றுப் போக்கு’பற்றிய உரையாடல் நீடித்தது.

நான்கு மணி நேரம் முன்பே, பெரிய அளவில் உணவு தயாரித்து, அது கெட்டுப்போகாமல் இருக்க, சில ரசாயனங்களை (citric acid, aginamotto) அதிக அளவில் உணவில் கலந்து விருந்தளிக்க, அதை பரிசோதிக்காமல் உண்டதால், வயிற்று உபாதையில் கொண்டு போய் விட்டது.

மகிழ்ச்சியாக ஒரு விருந்துக்குச் சென்று, பிறகு சோகமாக மூன்று நாட்கள் வயிற்றைக் காயப்போட்டு, உடல் நலத்தைப் பேணிக்காக்க, இனி அவ்வளவாக “விருந்தில் சாப்பிடுவதில்லை” என்கிற சபதத்தை எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.

“வெயிலின்” அருமை நிழலிலே தெரியும், என்பதுபோல்,
“விரதத்தின்” மகிமை விருந்துகளின் மூலம் வெளிப்படுமோ?

விருந்து சாப்பிட்ட பிறகு, உண்ணா நோன்பு கொள்ளாமல், இயற்கையாகவே உபவாசம் இருந்தால் உடலுக்கும், மனதுக்கும் இதமளிக்கும் என்கிறது இந்து சமயம்.

ஓய்வில்லாமல் உழைக்கும் வயிற்றுக்கு ஒரு நாள் விடுமுறை என்பதுதான் “விரதம்”. ஒரு நாள் விரதமிருந்தால், பத்து நாட்கள் நம் உடம்பில் சேர்ந்துள்ள கழிவுப் பொருட்கள் வெளியாவதோடு, அன்று மட்டும் ஜீரண சுரப்பிகளுக்கு கட்டாய ஓய்வு உண்டு.

மனதுடன் நெருங்கிய உறவு கொண்டது உணவு என்று சொல்கிறது சாந்தோக்கிய உபநிடதம். உணவிலுள்ள சத்துக்கள் உடம்பை அடைந்து, அதன் மென்மையான சாரம் மனதை அடைகின்றன. மேலும், முக்குணங்களுக்கும் (சத்வ, ராஜஸ, தாமஸ) மூலமாகச் செயல்படுவதும் உணவே என்பதும், உணவைப் பொருத்தே, நம் மனதில் எழும் எண்ணங்கள் நல்லவை, தீயவை என்ற வடிவம் பெறுகின்றன என்றும் விளக்கப் பட்டிருக்கின்றன.

சுவேதகேது என்பவன், தன்னுடைய தகப்பனாரையே, மாதா, பிதா, குருவாக ஏற்று, கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினான். உத்தாலகர் என்ற தனது தகப்பனாரிடம், சுவேதகேது உணவைப் பற்றிய சந்தேகங்களை எழுப்பித் தெளிவு பெறுகிறான். உணவைப் பொருத்தே மானுடப் பிறவியின் பண்புகள் அமையும் என்று அறிவுறுத்துகிறார் உத்தாலகர்.

சாத்வீகம், ராஜசம், தாமஸம் போன்ற முக்குணங்களுக்கும், மூலமாக அமைவது உணவே என்றும், எவ்வகையான உணவு, எம்மாதிரியான குணத்துக்குச் சொந்தம் என்றும் விவரிக்கிறார்.

பால், பார்லி, கோதுமை அரிசி, பழங்கள் கீரைகள், தேன், வெல்லம் போன்ற உணவுப் பொருட்கள், சாத்வீக குணத்தை பெறுவதற்கு வழி வகுக்கின்றன.

மது, மசாலாப் பொருட்கள், புகையிலை போன்ற போதை தரக்கூடிய வஸ்த்துக்கள் தாமஸ குணத்திற்குச் சொந்தமானவை.

இந்த இரண்டைத்தவிர மற்ற உணவுப் பொருட்கள் எல்லாம் மனிதன் ராஜஸ குணத்தை அடைவதற்கு பெரும் பங்காற்றும். தியானத்திற்கும், யோகத்திற்கும் ஏற்றவை சாத்விகமான உணவே என்கிறார் உத்தாலகர்.

உடலை வைத்தே உயிர், உடலைக் காக்க நல்லுணவு, உணவைப் பொருத்தே மனது, மனதைப் பொருத்தே சிந்தனை, சிந்தனையைப் பொருதே செயல், செயலைப் பொருத்தே வாழ்வு. ஆக, ஒவ்வொரு உயிரின் ஆயுளுக்கும், உணவோடு தொடர்பு உண்டு.

மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த மூலசித்தர், உடல் பற்றியும், உயிர் பற்றியும், உடலின் அங்கங்களைப் பற்றியும், உடலையும் உயிரையும் பேணிக்காப்பது பற்றியும், இறை சிந்தனையோடு சேர்த்து நெடுங்காலம் வாழ நிறைய பாடல்களில் சொல்லியிருக்கிறார்.

உடம்பொடு உயிரிடை நட்பறி யாதவர்
மடம்புகு நாய் போய் மயங்குகின்றாரே.

உடம்பைப் பற்றி அக்கரை கொள்வோர், உயிரைப் பற்றி அறிவதில்லை. இம்மை மறுமை பற்றிக் கவலைப்படுவோர், உடம்போடு சேர்ந்த உயிரைப் பற்றியும் அறிந்து கொள்ளவேண்டும். இதை அறிந்து கொள்ளாமல் இவை இரண்டும் வேறென்றும் நினைப்பவரும் உண்டு.

இந்த இரண்டுக்கும் உள்ள நெருக்கத்தை அறியாமல், உணவுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்போரைப் பற்றி நாயோடு ஒப்பிடுகிறார் பாருங்கள். மடப்பள்ளியில் புகுந்த நாய் வித விதமான உணவுக்கு மதிமயங்கி, அல்லும் பகலும் அங்கேயே உழன்று கொண்டிருக்கும் வேறெங்கும் செல்லாது இருப்பதுபோல், உணவுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களை ஒப்பிடுகிறார்.

ஆக, கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்றில்லாமல், சாப்பிடும் முறையை நன்றாக அறிந்து, உடம்பை வளர்க்கும் உபாயத்தையும் பின்னே தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் பின் வருமாறு சொல்கிறார் மூலநாயனார்.

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே.

Tthamizth Tthenee

unread,
May 10, 2016, 10:38:41 PM5/10/16
to thamizhvaasal
​உண்மைதான்  ​  வாயைக் கட்டினால்தான்  வயிற்றைக் கட்ட முடியும்

வயிற்றைக் கட்டுதல்  என்பது  அஜீரணக் கோளாறுகளைத் த்விர்த்தல் என்பதாகும்

நாம் உண்ணும் அனைத்தும்  வயிற்றிலே சென்றுதானே  சீரணம் ஆகி  உடலின் எல்லா உறுப்புகளுகும்  சக்தியை அளிக்கிறது 

ஆகவே    உணவுதானே  சக்தி   அந்த உணவை   நம் உடலின் கொள்ளளுவுகேற்ப  பயன்படுத்தி   சக்தி பெறுவதே  புத்திசாலித்தனம்

மஹா சக்திகள்   இருக்கிறது  உதாராணமாய்  காற்று  மின்சாரம் இன்னும் பல  ஆகிய இவற்றை  நம் சக்திக்கேற்ப   உபயோகித்து     பயனடைவது போல்  

உணவையும்    நம் உடலின் தேவைக்கேற்ப  அளவோடு  உண்டு   உடலையும் உயிரையும் காப்பாறிக் கொள்ளவேண்டும்
விரலுக்கேற்ற  வீக்கம்தனே   தேவை

அருமையாக எழுதியிருக்கிறீர்கள்  பெருவை அவர்களே


அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





Peruvai Parthasarathi

unread,
May 11, 2016, 1:12:02 AM5/11/16
to தமிழ் வாசல்
நன்றி திரு தமிழ்த்தேனீ அவர்களே, மிக அருமையாக. . .

> ​உண்மைதான்  ​  வாயைக் கட்டினால்தான்  வயிற்றைக் கட்ட முடியும்

> உணவையும்    நம் உடலின் தேவைக்கேற்ப  அளவோடு  உண்டு   உடலையும் உயிரையும் காப்பாறிக் கொள்ளவேண்டும்

ஆனால், பொதுவாகவே, நம்முடைய வயிற்றுக்கு எது ஜீரணமாகும், எது ஆகாது என்பது நன்றாகவே தெரிந்திருந்தும், விருந்துக்குச் செல்லும்போது மட்டும், இந்த வார்த்தைகளை அவ்வளவாக நாம் பொருட்படுத்துவதில்லை.

இலையில் அழகுற அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் விதவிதமான உணவைப் பார்த்தபிறகு, நமது மனம் எதற்கும் கட்டுப்படுவதில்லை. சிறிதளவு நாக்கில பட்டால் என்னவாகப் போகிறது! என்று நினைத்து, ஒவ்வொன்றாக இலையில் படைத்த அனைத்து உணவுகளையும் "ஒரு கை" பார்த்து விடுகிறோம் என்பதே உண்மை.

Tthamizth Tthenee

unread,
May 11, 2016, 1:15:44 AM5/11/16
to thamizhvaasal
​அழகு கவர்ச்சி எல்லாம் எப்போதுமே  ஆபத்துதானே​☺

அன்புடன்
தமிழ்த்தேனீ


அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852




Peruvai Parthasarathi

unread,
May 17, 2016, 11:08:37 PM5/17/16
to தமிழ் வாசல்
சென்ற வார தொடர்ச்சி:-


ஆயுள் பற்றி யோசித்ததில், இந்த நூற்றாண்டில் 100 வயது வாழ்ந்த, வாழுகின்ற மனிதர்கள் என்ன சொன்னார்கள், சொல்கிறார்கள் என்பதை ஆராய வேண்டும் என்று ஒரு நப்பாசை.


இன்றய காலகட்டத்தில், நூறு வயதுக்கு மேல் வாழ்ந்தவர்கள், தங்களின் நீண்ட ஆயுளுக்கு என்ன காரணம் (secrets for long life) என்று சொல்வதைப் படித்துப் பார்த்தால், ஆச்சர்யமாகவும், கொஞ்சம் வேடிக்கையாகவும்தான் இருக்கிறது.


பூரண ஆயுள் என்பது 120 வருடமாகுமாம். இந்த நூற்றாண்டில், இதுவரை 120 வயது வாழ்ந்தவரைப் பற்றிய ஆதாரப்பூர்வமான தகவல் இல்லை, என்று நினைக்கிறேன்.


கடந்த வருடம் இதேமாதம், மிசா ஒஹாவா என்கிற வயதான பெண்மணி தனது 117 வயதில் ஜப்பானில் இறந்து போனார். இன்னும் மூன்று வருடங்கள் வாழ்ந்திருந்தால், அவருக்கு பூரண ஆயுள் கிட்டியிருக்கும்.


1898ல் பிறந்து, சென்ற வருடம் தனது கடைசி பிறந்தநாளை படாடோபமாகக் கொண்டாடும்போது, வழக்கமாக அவரிடம் பத்திரிகையாளர் பலர் கேள்விகளைக் கேட்க, அதில் ஒருவர்
“உங்கள் நீண்ட கால வாழ்க்கையின் ரகசியமாக எதைக் குறிப்பிடுவீர்கள் என்று கேட்க,

அதற்கு பின்வருமாறு அவர் பதிலளித்தார்.

முதலில் சத்து மிகுந்த ஜப்பானிய உணவான சுஷி என்கிற மிதமான உணவு, பின் எட்டு மணிநேர உறக்கம் இப்படி நிறைய விஷயங்களோடு, எல்லாவற்றுக்கும் மேலாக, தனது நீண்ட கால வாழ்க்கையின் ரகசியம் என்று ஒன்றைக் குறிப்பாகச் சொன்னதைப் படித்தபோது, அது நினைவுக்கு வருகிறது.


“என்னுடைய வாழ்க்கையில் நான் யாரையும் கடிந்து கொண்டதில்லை, சபித்ததில்லை”(CURSE) என்று சொன்னதாக அந்நாளையப் பத்திரிகைகளில் வெளிவந்த செய்தி என்னை மிகவும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியதோடு, ஆழ்ந்த சிந்தனைக்கும் வித்திட்டது. ஆக, நீண்ட ஆயுள் வேண்டுமென்றால், நாம் யாரையும் சபிக்கக்கூடாது என்பதைச் சொன்ன, 117 வயது வரை வாழ்ந்த அந்த மூதாட்டி இதை ஏன் குறிப்பாகச் சொல்லவேண்டும் என்கிற கேள்வி என் மனதில் இன்று வரை சிந்தனைக்குறிய விஷயமாகவும், மேலும் பல கேள்விகளை எனக்குள் நானே கேட்டுக்கொள்கிறேன்.


உண்மையிலேயே நாம் யாரையும் சபிக்காமல் இருந்து விட்டால், நீண்ட காலம் வாழமுடியுமா?. .


அப்படி, அது நிஜமானால், அதைக் கடைபிடிப்பது மிகவும் வெகு சுலபமாயிற்றே!. . .யோசிக்க வேண்டிய விஷயம்.


ஒரு பூக்காரி முழம் போடும் போடும்போதோ அல்லது ஆட்டோ ஓட்டுனர் மீட்டர் போடும்போதோ, நாம் ஏமாறும் போது, இந்த அல்ப விஷயத்துக்கூட அவர்களை வசைபாடுவதோடு, சபித்து விடுகிறோமே, அப்படி இருக்கும்போது, வாழ்நாள் முழுவதும் நாம் சபிக்காமல் இருக்க முடியுமா?. .

நீண்ட ஆயுளோடு வாழ்ந்த இன்னொருவர் சொல்லுவதைப் பார்ப்போம்.


115 வயது வரை வாழ்ந்த அலெக்ஸான்டர் என்கிற அமெரிக்கர், ஒரு நாள் கூடக் குடிக்கவில்லையாம், சூர்ய நமஸ்காரம்தான் நீண்ட ஆயுளுக்கு வழி என்றார்.

இது தெரிஞ்சுதான், நம்ம பிரதமர் நாட்டு மக்களுக்கு சூர்ய நமஸ்காரத்த வலியுறுத்தியிருப்பாரோ!...


114 வயது வரை, சான் டீகோவில் வாழ்ந்த அடெலினா என்கிற பெண்மணி, வாழ்நாளில் பியூட்டி பார்லருக்குச் சென்றதில்லையாம், தகுதியற்ற, முக்கியத்துவம் அற்ற செயலில் கவனம் செலுத்தாததே தன் ஆயுள் விருத்திக்கு உதவியது என்கிறார்.

இப்ப இருக்கிற சூழ்நிலையில், இதெல்லாம் நமக்கு சாத்தியமா?. வீட்டிலே சொன்னா, கண்டிப்பா உதை விழும்.


108 வயது வரை நியூயார்க்கில் வாழ்ந்த துரானோர்ட் என்பவர்
“அனுதினமும் அசு மணிக்கு எழுந்து அசு தண்டால் எடுத்தாராம்”
முதல்ல அஞ்சு மணிக்கு எழுந்திருப்பதே சிரமம், அப்புறம்தானே தண்டால் சமாச்சாரம்.


இன்னொருவர், ஜெஸி காலன் என்பவர் “ஓட்ஸ் மீல் சாப்பிட்டுவிட்டு, சும்மா இருக்கிற நேரத்துல மனிதர்களை விட்டு சற்று விலகி 109 வயது வரை, ஸ்காட்லண்டில் வாழ்ந்தாராம்”.

ரொம்ப விரக்தியா இருக்கிற நேரத்துல, நாம கூட இந்த வார்த்தய அடிக்கடி உபயோகப்படுத்தியிருப்போம், குறிப்பா பொண்டாட்டியோட சண்ட போடும்போதுன்னு சொல்லலாம். பெரும்பாலும் மனிதர்களை விட்டு விலகி தனிமையிலே இருக்கும்போதுதான், கவிஞர்களுக்கு பாட்டு வரும். நம்ம மஹாகவி “தனிமை கண்டதுண்டு, அதிலே சாரமிருகுதம்மா” ன்னு பாடினது நினைவுக்கு வருது.


107 வயது வரை வாழ்ந்த பால்டிமோரைச் சேர்ந்த ஜெட்கே என்பவர் தினமும் காபி குடித்ததால் நீண்ட காலம் வாழ்ந்து வருகிறேன்னு சொல்லியிருக்கிறார்.

வாரத்துக்கு ஒரு கிலோ காபி பொடி வாங்குற நமக்குப் பிடிச்சமாதிரி சொல்லியிருக்கிறார் இல்ல!. . இவரோட அனுக்கிரகத்துல, நிச்சயமா நமக்கு நீண்ட ஆயுள் உண்டுன்னு இன்னும் நிறைய காபி குடிப்போம்.


“தினமும் நூல் நூற்பதுதான் தனது ஆயுளை 110 வரை வளர்த்தது” என்கிறார், ஆஸ்திரிலியாவைச் சேர்ந்த ஆல்பிரட் டேட் என்பவர்.

நாதுராம்கோட்சே, நமது தேசப்பிதா அண்ணல சுடாமல் இருந்திருந்தா, அவரும் நூறைத் தாண்டி, இன்னைக்கும் ஊடகங்களுக்குப் பேட்டி தந்து கொண்டிருப்பாரோ?


ஒரு பத்திரிகை நிருபருக்கு ரொம்ப நாளா ஒரு குறிக்கோள், அதாவது உலகத்தில் 100 வயதைத் தாண்டி வாழும் அனைவரையும் நேர்காணல் எடுத்து அதைப் பத்திரிகைகளில் வெளியிடவேண்டும் என்ற ஆசை.
அவரும் அதற்கான முயற்ச்சிகளை எடுத்து பலரது உரையாடல்களை வெளியிட்டு வந்தார்.


ஒரு சமயம், பிரத்தியேகமாக 100 வயதுக்கு மேல் வாழுகின்ற நபர்களை ஒன்றிணைத்து ஒரு கூட்டமொன்று நடக்கவிருந்தது. இந்தப் பத்திரிகையாளருக்கு மிக்க மகிழ்ச்சி, ஒரே இடத்தில் அனைவரையும் சந்தித்து விடலாமேன்னுதான்.


ஒவ்வொருவராகச் சந்தித்து, பல கேள்விகள் கேட்டு அனைத்தையும் பதிவு செய்து கொண்டு வருகையில் ஒரு வயதான மனிதரைக் கண்டார். அவரிடம் வழக்கம்போல்

உங்கள் ஆயுளின் ரகசியம் என்னவென்றார்?. . .


அதற்கு அவர், ரகசியமெல்லாம் ஒன்றுமில்லேப்பா, சிகரெட், மது, மாது, சூது, கஞ்சா, அபின், ஓபிஎம், இப்படி ஒண்ணு கூட விட்டுவைக்கவில்லை, அனைத்தையும் ரசித்து விட்டேன், அதான் என்னோட வாழ்க்கை ரகசியம்னு சொன்னாராம்.


கேட்டவருக்கு ஒரே ஆச்சர்யம், இவர் உண்மையைத்தான் சொல்லுகிறாரா, முதலில் குழப்பத்துடன், பிறகு அவரிடமே கேட்டு விடலாம் என்று நினைத்து. .

உங்கள் வயது எவ்வளவு?. . .என்று கேட்க,

அவர் அதச்சொன்னா, நீங்க ஆச்சர்யப் படுவீங்க,
உண்மையிலேயே, எனக்கு 40 வயது முடிந்து 41 ஆரம்பிக்குது என்றாராம்.

இதைக் கேட்ட, நிருபர் நொந்து போயிட்டாராம்.


அவர் எட்டு எட்டா வாழ்க்கையப் புரிஞ்சுகிட்டு வாழாம இருந்திருப்பார் போலிருக்கிறது. அதனால்தான், ஐந்தெட்டு முடிவதற்கு முன்பாகவே, நூற்றெட்டு போலத் தோற்றம்.

படிப்படியா, எட்டு எட்டா வாழ்க்கயத் தெரிஞ்சுகிட்டு வாழனும்னு, பழந்தமிழ்ப் பாடல் ஒண்ணு இருக்குன்னு, அவருகிட்ட சொல்லத் தோணுது.

ஓரெட்டில் வளர்க்காத வளர்ப்பும்,
ஈரெட்டில் கல்லாத கல்வியும்,
மூவெட்டில் முடியாத திருமணமும்,
நாலெட்டில் பெறாத பிள்ளையும்,
ஐயெட்டில் தேடாத செல்வமும்,
ஆறெட்டில் பார்க்காத திருத்தலங்களும்,
ஏழெட்டில் பெறாத புகழும்,
எட்டெட்டில் முடிக்காத வாழ்க்கையும். . .பாழ். . .


ஆக அளவான முன்னேற்றத்துடன், படிப்படியாக வாழ்க்கையில் எதைச் சாதிக்க அல்லது செய்ய நினைத்தாலும், அதற்கு எது கைகொடுக்கிறதோ? இல்லையோ. . .

“ஆயுள்”

என்பது நம்மோடு கைகோர்க்க வேண்டும் என்பதே இப்பதிவின் சாரம்.

அன்புடன்

Tthamizth Tthenee

unread,
May 17, 2016, 11:22:00 PM5/17/16
to thamizhvaasal
அருமையான  சிந்தனை

நல்ல  படிப்பினைகள்  நிறைந்த  கருத்துக்கள்

ஒருவருடைய   102  ஆவது  பிறந்த நாளன்று   ஒரு நிருபர்  அவரிடம்   உங்களுடைய  103 ஆவது வயது  பிறந்த நாளன்றும்  நானே வந்து  பேட்டி ந்டுக்க வேண்டும்  என்றார்

அதற்கு  அந்த  பெரியவர்    நீ இருந்தால் வா      என்றாராம்

இப்படிப்பட்ட  தன்னம்பிக்கை  ஆயுளை  வளர்க்கிறது  என்பது  என்னுடைய  தாழ்மையான  கருத்து

பிறக்கிறோம்    வாழ்கிறோம்  போகிறோம்

ஆனால் வருவதற்கும் போவதற்கும்  இடையில் இருக்கும்   வாழ்வை  எப்படி அமைத்துக் கொள்கிறோம்  என்பதே  நம்முடைய  ஆயுள் நீட்டிப்புக்கு காரணம்  என்பது   அடியேன் கருத்து

அன்புடன்
தமிழ்த்தேனீ




அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





Tthamizth Tthenee

unread,
May 17, 2016, 11:30:52 PM5/17/16
to thamizhvaasal

2016-05-18 8:51 GMT+05:30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
அருமையான  சிந்தனை

நல்ல  படிப்பினைகள்  நிறைந்த  கருத்துக்கள்

ஒருவருடைய   102  ஆவது  பிறந்த நாளன்று   ஒரு நிருபர்  அவரிடம்   உங்களுடைய  103 ஆவது வயது  பிறந்த நாளன்றும்  நானே வந்து  பேட்டி ந்டுக்க வேண்டும்  என்றார்

அதற்கு  அந்த  பெரியவர்    நீ இருந்தால் வா      என்றாராம்

இப்படிப்பட்ட  தன்னம்பிக்கை  ஆயுளை  வளர்க்கிறது  என்பது  என்னுடைய  தாழ்மையான  கருத்து

பிறக்கிறோம்    வாழ்கிறோம்  போகிறோம்

ஆனால் வருவதற்கும் போவதற்கும்  இடையில் இருக்கும்   வாழ்வை  எப்படி அமைத்துக் கொள்கிறோம்  என்பதே  நம்முடைய  ஆயுள் நீட்டிப்புக்கு காரணம்  என்பது   அடியேன் கருத்து



அன்புடன்
தமிழ்த்தேனீ

Peruvai Parthasarathi

unread,
May 18, 2016, 12:33:02 AM5/18/16
to thamiz...@googlegroups.com


பிறக்கிறோம்    வாழ்கிறோம்  போகிறோம்...

உண்மையான வார்த்தைகள்.. அய்யா

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/thamizhvaasal/qVg_X_pzrb8/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to thamizhvaasa...@googlegroups.com.

Iyappan Krishnan

unread,
May 18, 2016, 2:47:08 AM5/18/16
to தமிழ் வாசல்
​சென்றவனைக் கேட்டால் வந்துவிடு என்பான்
வந்தவனைக் கேட்டால் சென்றுவிடு என்பான்
....

ஒவ்வொருத்தருக்கும் “உதாரண வாழ்க்கை” வாழ ஆசை உண்டு தான்.  ஆனால் நாம் எப்படி வாழ்கிறோம் என்பது நம் ஒருத்தரால் மட்டுமே நிச்சயிக்கப் படுவதில்லை. 

உதாரணத்திற்கு ஒரு கதை சொல்லலாம்... ஏற்கனவே எல்லாத்துக்கும் எதிர்கதைப் போட்டு அறுக்கிறேன்னு திவாஜி டென்ஷன்ல ( சும்மா லுல்லுவாயிக்கு )  இருக்காரு...  அதான் ரோசனையா இருக்கு ​

Tthamizth Tthenee

unread,
May 18, 2016, 2:56:38 AM5/18/16
to thamizhvaasal
அடுத்தவங்களை  டென்ஷன் செய்யறதுன்னா  நமக்குதான் அல்வா சாப்பிட்டா  மாதிரி இருக்குமே  அதுனாலே தைரியமா  எழுதுங்க

திவாஜி  இது மாதிரி  ஆயிரம் அல்வாவைக் கண்டவர்  கலங்கமாட்டார்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.

Iyappan Krishnan

unread,
May 18, 2016, 12:00:32 PM5/18/16
to தமிழ் வாசல்
​ஆயிரம் அல்வா கண்ட அற்புத திவாஜி அண்ணாவைப் பாராட்டி இந்தக் கதையை இங்கே வைக்கிறேன்...


ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தான்.  இராஜான்னு இருந்தா மந்திரி, ராணி, சமையல்காரன்னு இருக்கிறது சகஜம் தானே.... ​


​அந்த ராஜா ஊரெல்லாம் நல்லாப் பாத்துப்பார்... அதனாலயே எல்லார்க்கும் அவர் மேல கொள்ளப் பிரியம்.  ராஜா  நல்ல போஜனப் பிரியர்.. அதுக்கேத்தா மாதிரியே இந்த சமயக்காரனும் அவருக்குப் புடிச்சா மாதிரி வக்கனையா செஞ்சு போடுவானாட்டு.  அதனால அந்த சமையக்காரன்னா ராசாவுக்கு அம்புட்டுப் பிரியம். ​

ஒரு நாள் சாப்புட்டு முடிச்சப்புறம் சமையல்காரர் மேல கோவமோ கோவம் வருது ராசாவுக்கு.  இத்தனைக்கும் சமையல்ல ஒரு பிரச்சினையும் இல்லை. கொன்னுடம்னு கூட துடிக்கிறார்.  ஆனா ராசா நல்ல ராசாவாச்சே... என்னன்னு தெரிஞ்சுக்க மந்திரிய கூப்டறார். மந்திரியும் சரி கண்டுபுடிச்சு சொல்றேன்.. ஆனா எதுவா இருந்தாலும் மன்னிக்கத் தயாரா இருக்கனும்னு ராசா கிட்ட சத்தியம் வாங்கிக்கறார்.


மெதுவா சமையல் காரன் கிட்ட பேச்சுக் குடுத்து விஷயத்தை புரிஞ்சுக்கிடறார்.

அதாவது என்னன்னா... அவரோட மச்சான் புதுசா சந்தனக் கட்டை காண்ட்ராக்டு எடுத்திருக்கார். அது பத்தி வீட்டுல காலைல அரண்மனை வரதுக்கு முன்னாடி பொண்டாட்டி கிட்ட பேசும்போது தெரிஞ்சுக்கிட்டார்.

அதே நெனப்புல சமையல் செய்யும் போது நினைச்சுக்கிட்டாராம்.  “ச்ச.. மச்சானுக்கு லாபம் வரனும்னா யாராச்சும் பெரிய மனுஷங்க செத்தாத்தான் நிறைய சந்தனக் கட்டையா வாங்கி அதுல எரிப்பாங்க. நம்ம நாட்டுல அப்படி சந்தனக் கட்டைல எரிக்கக் கூடிய ஒரே ஆள் நம்ம ராசா தானே... அவர் செத்துட்டா மச்சானுக்கு எவ்ளோ லாபம் வரும் ”

அப்படின்னு.

அந்த எண்ணங்கள்  செய்யும் செயல் வழியாக உள் புகுந்து ராசாவோட மனசுல வெறுப்பை ஏற்படுத்துச்சுன்னு மந்திரி கண்டுபுடிச்சுட்டார். அப்புறம் ராசா  கிட்ட சொல்லி மன்னிப்பு வாங்கி குடுத்துட்டார். 


அவ்ளந்தான் கதை.. போங்க போயி தூங்குங்க... 


2016-05-18 12:26 GMT+05:30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
அடுத்தவங்களை  டென்ஷன் செய்யறதுன்னா  நமக்குதான் அல்வா சாப்பிட்டா  மாதிரி இருக்குமே  அதுனாலே தைரியமா  எழுதுங்க

திவாஜி  இது மாதிரி  ஆயிரம் அல்வாவைக் கண்டவர்  கலங்கமாட்டார்



Tthamizth Tthenee

unread,
May 18, 2016, 12:12:12 PM5/18/16
to thamizhvaasal
​அடடா      இந்தக் கதையை​ நான் ஏற்கெனவே  எழுதிட்டேனே

வேற  வடிவிலே

மனம்  என்பது ஒரு அருமையான கருவி .ஒரு ராஜா, வழக்கமாக உலா வரும் பாதையில் ஒரு சந்தனக்கட்டை வியாபாரி, அவருக்கு

வணக்கம் சொல்வார், ராஜாவுக்கும்   அவரைப் பார்க்கும் போது சந்தோஷமாக   இருக்கும் ,ஒருநாள் அந்த சந்தனக்கட்டை

வியாபாரி வணக்கம் சொல்லும்போதுராஜாவுக்கு,அவரை வெட்டிப் போடவேண்டும்   போல்இருந்தது.

 

அதற்கு காரணம் தெரியாமல்,அவர், மந்திரியைக் கூப்பிட்டு ஒரு நாளும்  இதுபோல் தோன்றியது இல்லையே  இன்று ஏன் இப்படி தோன்றுகிறதுஎன்று கேட்டார்   .மந்திரி ஒருநாளைக்கு அந்த வழியே  செல்லாமல் வேறு வழியில் ராஜாவை  அழைத்துக் கொண்டு சென்றுவிட்டு, மறுநாள் பழைய வழியிலேயே, அழைத்துக்கொண்டு  போனார்,

 

 அன்று மீண்டும் ராஜாவுக்கு வியாபாரியை பார்த்து சந்தோஷமாக இருந்தது, அதற்கு என்ன காரணம் என்று மந்திரியைக் கேட்டார்,

 அரசே..... அந்த சந்தனகட்டை வியாபாரியின்  சந்தனக் கட்டைகள் விற்காமல் இருந்தன,   அன்று அவன் மனதில் இந்த ராஜா இறந்து  போனால் அவரை எரிப்பதற்கு  சந்தனக்கட்டைகள்

விற்று விடுமே ,என் எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது.

அதை  அறிந்து கொண்ட நான் நேற்று அவர் சந்தனக்கட்டைகளை  விற்பதற்கு வேறு ஏற்பாடு  செய்தேன்,

அதனால், இன்று ராஜா நீடூழி வாழ வேண்டும்  என்று நினைக்கிறார் , அதனால் உங்களுக்கும்  சந்தோஷமாக இருக்கிறது, என்றார் . 


அன்புடன்

தமிழ்த்தேனீ


அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





--

Peruvai Parthasarathi

unread,
May 24, 2016, 9:37:15 AM5/24/16
to தமிழ் வாசல்
திரு திவாஜி, ஜீவ்ஸ், திருமதி கீதா சாம்பசிவம் மற்றும் தமிழ்த்தேனீ போன்ற எழுத்தாளர்கள் தொடர்ந்து கருத்தாடலில் கலந்து கொண்டு, தத்தமது கருத்துக்களையும், சிந்தனையையும் தமிழ்வாசலில் இடம்பெறும் அனைத்து பதிவுகளுக்கும் நேரம் பாராமல் தெரிவித்து வருவதற்கு முதலில் நன்றியும் பாராட்டும் என் சார்பில் உண்டு.


புதிதாக, ஒரு பதிவைப் படிக்கும்போது அதன் ரசனை தொடர்ந்து மாறாமல் இருப்பதற்கு இது போன்ற கருத்துப் பதிவுகள் கண்டிப்பாக துணை நிற்கும்.


இப்படிப்பட்ட கருத்துப் பரிமாற்றம் என்பது, படிப்பாளர்களை தொடர்ந்து படிப்பதற்கு ஏதுவாக, அந்த இழையோடு இதமாக அழைத்துச் செல்லவும் உதவும்.


அவ்வப்போது பதில் எழுத முடியாவிட்டாலும், வாரம் ஒரு முறைதான் நேரம் கிடைப்பதால், தாமதமானாலும் நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

விஷயத்துக்கு வருவோம். . . .


இந்தப் இழையின், கடைசி இரண்டு பதிவுகளைப் படிக்கும் போது அதில் இடம்பெற்ற “சந்தனக் கட்டை”, “ராஜா” போன்றவற்றைப் படிக்கும்போது, சந்தனக்கட்டை பற்றிய ஒரு சமீபத்திய தகவல்.


திருப்பதியில் சந்தனம் அரைப்பதற்கு தினமும் சுமார் நூற்றுக்கும் அதிகமான தொழிலாளர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப் பட்டு, எழுமலையானுக்கு சேவை செய்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.


அனுமானமாக ஒரு நாளைக்கு எவ்வளவு சந்தனம் பெருமாளுக்குத் தேவைப் படும் என்பதை, இத்துணை ஊழியர்களின் பணியை வைத்தே, நாம் ஊகிக்க முடியும். அப்படி பெருமாளுக்கு தினமும் சந்தனம் தேவைப்படும் பட்ச்சத்தில், அடிக்கடி சந்தனப் பற்றாக்குறை ஏற்படுவதை தேவஸ்தானம் சந்தித்து வந்தது.

இப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வாக, சமீப காலத்தில் மைசூர் காட்டில் விளைந்த சந்தன மரங்களை, சமூக விரோதிகள் கடத்தவிருந்தபோது, அதைக் கைப்பற்றி நீண்ட காலமாக பாதுகாத்து வந்த கர்நாடக அரசாங்கத்திடமிருந்து அனைத்து சந்தன மரக்கட்டைகளையும் திருப்பதி தேவஸ்தானம் ஏலமுறையில் பணம் செலுத்தி வருகின்ற 2045 ஆம் வருடம் வரை தேவையான அளவு சந்தனக் கட்டைகளைச் சேமித்து வைத்திருக்கிறார்கள் என்ற செய்தியைப் படிக்கும்போது,


கைப்பற்றிய சந்தனமரக்கட்டைகளைப் பாதுகாக்க முடியாமல் தவித்த கர்நாடக அரசாங்கத்திற்கும், தேவஸ்தான ஊழியர்களின் சங்கடத்தையும் ஒரே நேரத்தில் போக்கியிருக்கிறார் ஏழுமலையான். அதனால், பெருமாளின் இதர சாதனைகளோடு இதுவும் ஒன்றாகப் பார்க்க முடிகிறது.

அனைவருக்கும் நன்றி.

Tthamizth Tthenee

unread,
May 24, 2016, 9:59:30 AM5/24/16
to thamizhvaasal
சந்தன  மரமே  வாசம்  
அந்த சந்தன மரத்தின் 
வாசத்திலே   வாசம் செய்யும் 
வாசன்     ஶ்ரீனிவாசன்  
சந்தான  ஶ்ரீனிவாசன்
சந்தன  ஶ்ரீனிவாசன்

பங்கீடு என்பது இதுதான்  முறையான  பங்கீடு  செய்தால்  அனைத்து தரப்பினருக்கும்  மகிழ்ச்சி ஏற்படும்

   

அவன்  அருள்தான்  எல்லாப் பங்கீடுகளுமே

அன்புடன்
தமிழ்த்தேனீ



அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852




Geetha Sambasivam

unread,
May 25, 2016, 5:50:02 AM5/25/16
to தமிழ் வாசல்
சந்தனவாசம் இங்கே வரை அடிக்கிறது! 

2016-05-24 19:07 GMT+05:30 Peruvai Parthasarathi <rkpsa...@gmail.com>:


Reply all
Reply to author
Forward
0 new messages