2020-05-11
வழுவூர்
-----------------
(எழுசீர்ச் சந்த விருத்தம் - தனதான தான தனதான தான தனதான தான தனனா)
(சம்பந்தர் தேவாரம் - 2.88.1 - "துளிமண்டி யுண்டு")
* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;
1)
வானோர்க்கி ரங்கி மலைவில்லை ஏந்தி மதில்மூன்றெ ரித்த ஒருவன்
தேனார்க்கும் வாச மலரோடு பாம்பு திரையாரும் ஆறு புனைவான்
தானோக்கும் அன்பர் வினைதீரு மாறு தயைசெய்யு(ம்) நல்ல தலைவன்
மானோக்கி அஞ்ச மதமாவு ரித்து வழுவூரில் நின்ற பரனே.
(தேன் - வண்டு); (ஆர்த்தல் - ஒலித்தல்); (ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்);
2)
மதனாகம் வேவ நுதலால்வி ழித்த மணிகண்டன் ஆறு முகமார்
சுதனாரை நல்கி இமையோர்கள் உற்ற துயர்தீர்த்த நல்ல துணைவன்
கதநாகம் ஆறு தரிசென்னி மீது கடிநாறு கொன்றை புனைவான்
மதவார ணத்தை உரிசெய்து போர்த்து வழுவூரில் நின்ற பரனே.
(சுதன் - மகன்);
(கதம் - கோபம்); (கடி - வாசனை);
(வாரணம் - யானை);
V. Subramanian
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCMvLQrf1F_fS2oLCxkMFqTZRpoLezYbPzFWyrnmiO4Bxw%40mail.gmail.com.
3)
நலியாத வண்ணம் அடியார்க்கு நாளு(ம்) நல(ம்)நல்கு கின்ற பெருமான்
பொலியார மாக அரவம்பு னைந்த புரிநூலன் இண்டை மதியம்
ஒலியார்த ரங்கம் உடையாறு சூடி ஒளிநீறு பூசும் ஒருவன்
வலியார்க ளிற்றை உரிசெய்து போர்த்து வழுவூரில் நின்ற பரனே.
(ஆரம் - மாலை);
(இண்டை - முடிமாலை); (தரங்கம் - அலை);
4)
பாதங்கள் ஏத்தி வழிபாடு செய்து பலதேவர் வேண்ட அவர்தம்
ஏதங்கள் தீர வடிவேலை ஏந்தும் இளையோனை நல்கும் இறைவன்
வாதங்கள் செய்த அமண்மாய வைகை நதியேடு நீந்த வருவான்
மாதங்கம் ஒன்றை உரிசெய்து போர்த்து வழுவூரில் நின்ற பரனே.
(ஏதம் - துன்பம்);
(மாதங்கம் - யானை);
5)
கல்லானை முன்பு பலர்முன்க ரும்பு களியோடு தின்ன வருவான்
கொல்லானை முன்னர் உழவார அன்பர் தமைநீங்கி ஓட அருள்வான்
நல்லானை ஏத்து விசயற்கு நாடு படையீந்த நாதன் உமைகோன்
வல்லானை தன்னை உரிசெய்து போர்த்து வழுவூரில் நின்ற பரனே.
(படை - ஆயுதம்);
6)
இனவீயெ டுத்து மணமாலை கட்டி இருதாளில் இட்டு மகிழ்வார்
இன(ம்)மாநி லத்தில் இடரார்பி றப்பில் இளையாத வண்ணம் அருள்வான்
முனமோர்பொ ருப்பை வளைவித்து மூன்று புரம்வேவ நக்க முதல்வன்
வனவார ணத்தை உரிசெய்து போர்த்து வழுவூரில் நின்ற பரனே.
(வீ - பூ);
(இனம் - இன்னம் - இன்னும் - மறுபடியும்; மேலும்);
(பொருப்பு - மலை);
V. Subramanian
2)
7)
நெய்யார்ந்த தீப(ம்) மணமார்ந்த தூப(ம்) நிறையன்பு கொண்டு மலரும்
கையேந்தி வாழ்த்தும் ஒருமாணி கண்டு கருமேதி யானை முனிவான்
பையார்ந்த பாம்பை அணிமார்பன் எந்தை பனிவெற்பு மங்கை வெருவ
மையார்ந்த மேனி மதமாவு ரித்து வழுவூரில் நின்ற பரனே.
(மேதி - எருமை); (முனிதல் - கோபித்தல்);
(பை - பாம்பின் படம்);
(மை - கருநிறம்); (மதமா - யானை);
8)
கரையற்ற கோபம் எழவானில் ஓங்கு கயிலாயம் வீச வருகோன்
நிரையுற்ற பத்து முடிவாய ரற்ற விரலொன்றை ஊன்று நிமலன்
உரையற்ற மோன நிலையுற்று நால்வர் உடனான ஆல நிழலன்
வரையொத்த மேனி மதமாவு ரித்து வழுவூரில் நின்ற பரனே.
(நிரை - வரிசை);
(வரை - மலை);
V. Subramanian
6)
249. (13). திருஇலும்பையங்கோட்டூர்இலும்பையங் கோட்டூர் இறைவனைப் போற்றஅலம்பில்லை யாமே அறிஅலம்பு - வறுமை
--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/JRTJ1E9mqVI/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/1e2a2874-49a4-48a6-b0a2-eba43c056ed1n%40googlegroups.com.
Final 3 songs of this padhigam:
9)
அலைமேற்கி டந்த திருமாலு(ம்) நாறும் அலர்மேலி னானும் அறியா
உலவாத சோதி உருவோடு யர்ந்த ஒருவன்சி வந்த சடையன்
இலைமூன்று காட்டும் அயில்வேலு(ம்) மானும் எரியுந்த ரித்த இறைவன்
மலைபோலெ திர்ந்த மதமாவு ரித்து வழுவூரில் நின்ற பரனே.
(அயில் - கூர்மை);
10)
பொய்க்கென்று(ம்) நாணம் இலராகி நீறு புனையார்க்கு நன்மை புரியான்
கைக்கின்ற நஞ்சை அமுதாக உண்டு கறையார்ந்த கண்டம் உடையான்
கைக்கொண்ட போது கழலிட்ட அன்பர் கலிதீர நல்கு வரதன்
மைக்கண்ணி அஞ்ச மதமாவு ரித்து வழுவூரில் நின்ற பரனே.
(கைத்தல் - கசத்தல்);
(போது - பூ); (கலி - துன்பம்; தரித்திரம்);
11)
படமஞ்சு கொண்ட அரைநாண ணிந்து பலியட்டு மென்று திரிவான்
கடனஞ்சை உண்டு மணிபோலி லங்கு கறையேற்ற கண்டம் உடையான்
நடனங்கள் ஆட இடுகானை நல்ல இடமென்று நாடும் இறைவன்
மடமங்கை அஞ்ச மதமாவு ரித்து வழுவூரில் நின்ற பரனே.
(பலி - பிச்சை); (அட்டுதல் - இடுதல்);
V. Subramanian
8)
2020-06-16
நாரையூர்
-----------------
(வஞ்சித்துறை - தான தானனா - சந்தம்)
(திருவிருக்குக்குறள் அமைப்பு)
(சம்பந்தர் தேவாரம் - 1.92.1 - "வாசி தீரவே")
1)
வேதம் ஓதிய .. நாதன் நாரையூர்ப்
போதன் தாள்தொழ .. ஏதம் இல்லையே.
2)
உம்பர் ஏத்திடும் .. நம்பன் நாரையூர்
இன்பன் அன்பர்தம் .. துன்ப(ம்) நீங்குமே.
3)
கானில் ஆடிடும் .. ஞானன் நாரையூர்
மானன் னாம(ம்)நம் .. ஊன(ம்) நீக்குமே.
கானில் ஆடிடும் ஞானன் -
நாரையூர் மான் நன்னாமம் நம் ஊனம் நீக்குமே -
V. Subramanian
4)
நீறு பூசிபூ .. நாறு நாரையூர்
ஆறு சூடிபேர் .. கூறும் இன்பமே.
5)
எல்லை அற்றவன் .. நல்லன் நாரையூர்ச்
செல்வன் நாமமே .. சொல்ல இன்பமே.
6)
செக்கர் மேனியன் .. நக்கன் நாரையூர்
முக்கண் மூர்த்திபேர் .. துக்க(ம்) நீக்குமே.
7)
மதியன் வேணியில் .. நதியன் நாரையூர்ப்
பதிநன் னாமமே .. துதிமின் நன்மையே.
V. Subramanian
3)
Final 4 songs of this padhigam:
8)
வரையி டந்தவன் .. சிரமொர் பத்தடர்
அரவன் நாரையூர் .. பரவி உய்ம்மினே.
(வரை - மலை); (இடத்தல் - பெயர்த்தல்); (அடர்த்தல் - நசுக்குதல்);
9)
வேதன் மால்தொழு .. பாதன் ஏறமர்
நாதன் நாரையூர் .. ஓதி உய்ம்மினே
10)
பொய்யர் சொல்விடும் .. செய்யன் நாரையூர்
ஐயன் நாமமே .. உய்வு நல்குமே.
11)
மணிமி டற்றினன் .. அணிகொள் நாரையூர்
பணியும் அன்பர்தம் .. பிணிகள் நீங்குமே
V. Subramanian
7)
--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/JRTJ1E9mqVI/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCN2ZeAKRhBJqtfFrgw44OCBhTPFNey2E6XSigPZsvS3Xg%40mail.gmail.com.
aahaa! miga arumai!-sdn
On Thu, May 14, 2026 at 7:25 PM Siva Siva <naya...@gmail.com> wrote:
Final 4 songs of this padhigam:
...
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CALz5qbxuSbaoM2Gwt2ZFQAc9x4PDRB5Nihiu8jy9eXFt%2BZDk0A%40mail.gmail.com.
2020-06-17
வழுவூர்
-----------------
(சந்த வஞ்சிவிருத்தம் - தனனா தனனா தனதானா - சந்தம். முதற்சீர் தானா என்றும் வரலாம்)
(சம்பந்தர் தேவாரம் - 1.37.1 - "அரவச் சடைமேல் மதிமத்தம்")
1)
இலைமூன் றுடைவேல் தனையேந்தி
மலைபோல் மதமா உரிமூடி
அலையார் சடையான் இடமென்பர்
மலரார் பொழில்சூழ் வழுவூரே.
(மதமா - மதமுடைய யானை); (உரி - தோல்);
2)
மதவேள் உடலைப் பொடிசெய்தான்
மதியோ டரவைச் சடைவைத்தான்
முதலாய்க் கடையாம் பெருமானூர்
மதுவீப் பொழில்சூழ் வழுவூரே.
(வீ - பூ);
V. Subramanian
3)
அணையார் புரமூன் றெரிசெய்தாய்
துணைநீ எனவே தொழுவார்க்குப்
புணையாய் வருவான் இடமென்பர்
மணமார் பொழில்சூழ் வழுவூரே.
(அணையார் - பகைவர்);
(புணை - தெப்பம்);
4)
குளமாய் இருகண் கசியன்பர்
உளமே தளியா மகிழண்ணல்
இளமா விடையான் இடமென்பர்
வளமார் வயல்சூழ் வழுவூரே.
V. Subramanian
2)
...
5)
அருமா விடமுண் டமுதீந்த
பெருமான் சடைமேற் பிறைசூடி
அருவாய் உருவாம் அரனூராம்
வருவார் மகிழும் வழுவூரே.
6)
பண்டங் கழலைத் தொழுதேத்தும்
வெண்டிங் களைவே ணியில்வைத்தான்
கண்டங் கரியான் இடமென்பர்
வண்டின் னிசைசெய் வழுவூரே.
(பண்டு - முன்பு); (அம் - அழகு); (வேணி - சடை);
7)
பறிமா மலரால் பணிவார்தம்
செறிதீ வினைதீர்த் தருள்தேவன்
பொறியார் அரவம் திகழ்மார்பன்
மறியார் கரனூர் வழுவூரே.
(பொறி - புள்ளி);
8)
செழுமா மலைபேர்த் தவன்வாடி
அழுமா றுநெரித் திசைகேட்டான்
தொழுவார்க் கருளும் தொழிலேந்தல்
மழுவாட் பரனூர் வழுவூரே.
V. Subramanian
4)
/ கடைக்காப்பு - இறுதிக்காலத்தில் பாதுகாப்பு /As that word already has a different commonly understood meaning, maybe worth considering a tweak.கடைக்காப்பு kaṭai-k-kāppu , n. < id. Last verse which is an invocation song the poem known as patikam; பதிகத்தின் இறுதி முத்திரைப்பாட்டு.
/ வழுக்காரே வாய்மையிலி ருந்து /Did you intend to say "வழுவாரே" ?
/ திருவச்சிறுப்பாக்கம் /No ப் in that name.
V. SubramanianOn Sun, May 17, 2026 at 1:19 AM Saranya Gurumurthy <saranya.g...@gmail.com> wrote:...263. (27). திருவிடைச்சுரம்இடைச்சுரத்(து) எந்தைதன் இன்னருளே என்றும்கடைக்காப்பாய் வந்திடும் காண்கடைக்காப்பு - இறுதிக்காலத்தில் பாதுகாப்புகழுக்குன்றப் பெம்மான் கழலைப் பணிவார்வழுக்காரே வாய்மையிலி ருந்து265. (29). திருவச்சிறுப்பாக்கம்அச்சிறுப் பாக்கத்(து) அதிபன் அடியிணையைஉச்சியில் வைத்தல் உயர்வு
Regards,
Saranya
Final 3 songs of this padhigam:
9)
நறைமா மலரான் அரிகாணா
இறையான் எழிலார் உமைபங்கன்
கறையார் மிடறன் கயிலாயன்
மறைநா வினனூர் வழுவூரே.
(இறையான் - இறைவன்);
10)
மதியீ னர்கள்சொல் புறனெல்லாம்
மதியா தடைமின் மகிழ்வெய்த
கொதியா வருகூற் றுதைசெய்தான்
மதிசூ டியிடம் வழுவூரே.
(கொதியா வரு - கொதித்து வந்த);
11)
பணிகின் றவர்தம் பய(ம்)நீக்கிப்
பிணிவல் வினைதீர்த் தருள்பெம்மான்
துணிவெண் பிறையன் சுடுநீற்றன்
மணிகண் டனிடம் வழுவூரே.
V. Subramanian
8)
2020-06-18
காழி (சீகாழி)
-----------------
(சந்த வஞ்சிவிருத்தம் - தானன தானன தானதனா)
(தானன என்பது தனதன என்றும், தானதனா என்பது தனதனனா/தானதானா என்றும் வரலாம்)
(சம்பந்தர் தேவாரம் - 1.112.1 - "இன்குரல் இசைகெழும் யாழ்முரலத்")
1)
அவ(ம்)மலி வேள்வியை அன்றுசெய்து
தவறிழை தக்கனைத் தலையரிந்தான்
கவுணியர்க் கமுதருள் காழிநகர்ச்
சிவனடி இணைதனைச் சிந்திநெஞ்சே.
2)
வனமலர் வாளிவன் மதனழிய
அனலுமிழ் கண்ணனை அதிசயனைக்
கனலெரி ஏந்தியைக் காழிநகர்ப்
புனலணி சடையனைப் போற்றுநெஞ்சே.
(வனம் - அழகு); (வாளி - அம்பு); (மதன் - காமன்);
3)
பொடியணி மேனியன் போர்விடையன்
கொடியிடை கூறமர் கொள்கையினான்
கடிமல ரான்தொழு காழிநகர்
அடிகளை அடிதொழ அறுமிடரே.
V. Subramanian
4)
இமையவர் அமுதுண இருள்மிடறன்
அமலையை ஒருபுறம் அமர்பெருமான்
கமலனுக் கருளிய காழிநகர்
விமலனைத் தொழுதெழ வினையறுமே.
5)
விண்ணவர் தலைவனை வெண்மதியம்
தண்ணதி தாங்கிய சடையிறையைக்
கண்ணமர் நுதலனைக் காழிநகர்
அண்ணலை அடிதொழ அறுமிடரே.
6)
வாரணம் உரிசெய்த மைந்தனருள்
காரணம் கொண்டுருக் காட்டிடுவான்
காரிகை பங்கனைக் காழிநகர்ச்
சீரனை ஏத்திடத் திருவருமே.
7)
மறையணி நாவனை வாளரவம்
பிறையணி சடையுடைப் பிஞ்ஞகனைக்
கறையணி கண்டனைக் காழிநகர்
இறைவனை ஏத்திட இடர்கெடுமே.
V. Subramanian
3)
267. (31). திருஅரசிலி
Nice set./ பஞ்சக் கிருத்தியம்செய் /No க் - as both are Sanskrit words, they combine as per Sanskrit rules.V. Subramanian
On Sat, May 23, 2026 at 10:38 PM Saranya Gurumurthy <saranya.g...@gmail.com> wrote:
275. (5). திருநொடித்தான்மலை (திருக்கயிலாயம்)
படைத்தல் முதலாய பஞ்ச கிருத்தியம்செய்
Final 4 songs of this padhigam:
8)
தடவரை ஏந்திய தசமுகனைப்
படவிரல் ஊன்றிய படர்சடையன்
கடல்விடம் உண்ணியைக் காழிநகர்க்
கடவுளைக் கைதொழ இடர்கெடுமே.
9)
வேதனும் விண்டுவு(ம்) நண்ணரிய
பாதனை ஒண்மழுப் படையினனைக்
காதணி தோடனைக் காழிநகர்
நாதனை வாழ்த்திட நலிவறுமே.
(விண்டு - விஷ்ணு);
10)
பொய்யர்கள் மொழியவை பொருளலவே
மெய்யனை வெண்பொடி மேனியனைக்
கையினில் தீயனைக் காழிநகர்
ஐயனை அடிதொழ அறுமிடரே.
11)
பவனவன் அடியவர் பரவுவணம்
அவனியில் வருபவன் அன்புருவன்
கவினுறு பொழிலணி காழிநகர்ச்
சிவனடி தொழுதெழத் திருவருமே.
V. Subramanian
2020-06-19
மயிலாடுதுறை
-----------------
(சந்தக் கலிவிருத்தம் - தனனா தனனா தனனா தனனா)
(இச்சந்தத்தை வடமொழியில் "தோடகம்" என்பர்)
(சம்பந்தர் தேவாரம் - 2.18.1 - "சடையா யெனுமால்")
1)
முதிரா மதிசேர் முடியிற் புனலார்
நதியாய் நரைவெள் விடையூர் தியினாய்
மதில்சூழ்ந் தழகார் மயிலா டுதுறைப்
பதியே பழவல் வினைதீர்த் தருளே.
2)
அணியா அரவம் புனைவாய் அடியைப்
பணிவா னவருக் கருளும் பரமா
மணிகோ புரமார் மயிலா டுதுறைத்
துணிமா மதியாய் துயர்தீர்த் தருளே.
3)
வளைமே ருவிலால் மதிலெய் தவனே
தளரா முலையாள் தழுவும் தலைவா
வளமார் பொழில்சூழ் மயிலா டுதுறை
இளமால் விடையாய் இடர்தீர்த் தருளே.
V. Subramanian
4)
அழலார் சடையாய் அதளா டையினாய்
குழையார் செவியாய் கொடிமேல் விடையாய்
மழைசேர் பொழில்சூழ் மயிலா டுதுறைக்
குழகா தொழுதேன் குறைதீர்த் தருளே.
5)
பெண்டங் கியமே னியுடைப் பெருமான்
அண்டம் பலவாக் கியொடுக் கிடுவாய்
வண்டின் னிசைசெய் மயிலா டுதுறைக்
கண்டங் கரியாய் கலிதீர்த் தருளே.
(பெண்டங்கிய - பெண் தங்கிய);
6)
திரியும் புரமூன் றெரிசெய் தவனே
எரிவன் கருநஞ் சமுதுண் டவனே
வரிவண் டறையும் மயிலா டுதுறைப்
புரிசெஞ் சடையாய் புகல்தந் தருளே.
7)
நறையார் மலர்தூ வியமா ணிநலம்
உறவே நமன்மார் பிலுதைத் தவனே
மறைநா வினனே மயிலா டுதுறை
இறைவா அடியேன் இடர்தீர்த் தருளே.
V. Subramanian
3)
Final 4 songs of this padhigam:
8)
மலைபேர் தசமா முகனார்த் தழவே
மலரார் கழலோர் விரலூன் றியருள்
மலையான் மருகா மயிலா டுதுறைத்
தலைவா துணைவா தமியேற் கருளே.
(ஆர்த்தல் - ஒலித்தல்);
(ஆர்தல் - ஒத்தல்);
9)
செழுமா மலரான் திருமாற் கரிதாய்
எழுசோ தியனே இடுமூண் மகிழ்வாய்
மழுவாட் படையாய் மயிலா டுதுறைத்
தொழுவார்க் கினியாய் துயர்தீர்த் தருளே.
10)
இதமற் றதைநன் றெனவந் துரைசெய்
அதமர்க் கருளா தவனே அரனே
மதமா உரியாய் மயிலா டுதுறை
முதல்வா முனைவல் வினைதீர்த் தருளே.
(முனை - முன்னை);
11)
நஞ்சார் மிடறா நசியா முதலே
பஞ்சேர் அடியாள் பிரியாப் பரமா
மஞ்சார் பொழில்சூழ் மயிலா டுதுறை
மஞ்சா பழவல் வினைமாய்த் தருளே.
(ஏர்தல் - ஒத்தல்);
(மஞ்சன் - மைந்தன் - வீரன்);
V. Subramanian
7)
On May 29, 2026, at 08:43, Siva Siva <naya...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCPDeB90pFxwBFgWNPmbUEemiMDh5ewUeDzr9ud%2BG%3Dfusw%40mail.gmail.com.
தோடகம் அருமை, திரு. சிவசிவா.அன்பன்ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)On May 29, 2026, at 08:43, Siva Siva <naya...@gmail.com> wrote:
Final 4 songs of this padhigam:
..
2020-06-20
பாவநாசம்
(பாபநாசம் - தாமிரபரணிக்கரையில் உள்ள தலம்)
-----------------
(சந்தக் கலிவிருத்தம் - தான தானன தான தானன - சந்தம்)
(சம்பந்தர் தேவாரம் - 2.25.1 - "உகலி யாழ்கட லோங்கு பாருளீர்")
1)
அரண(ம்) மூன்றையும் அன்றெ ரித்தவன்
கிரண வெண்மதிக் கீற்றன் மேயது
மரணம் தீரமு தன்ன தாமிர
பரணி தாள்தொழு பாவ நாசமே.
2)
ஆய்ம லர்க்கணை ஐந்து தொட்டவேள்
காய்நு தற்கணன் கங்கை வேணியன்
மாய்வி லாதவன் மன்னும் ஊரது
பாய்பு னற்கரைப் பாவ நாசமே.
(ஆய்தல் - தெரிந்தெடுத்தல்);
V. Subramanian
3)
வம்பு லா(ம்)மலர் வன்னி சூடினான்
உம்பர் வாழ்ந்திட ஓத நஞ்சுணி
கொம்ப னாளொரு கூறன் ஊரது
பைம்பு னற்கரைப் பாவ நாசமே.
(வம்பு - வாசனை); (உலாம் - உலாவும் - திகழும்);
(ஓதம் - கடல்); (உணி - உண்ணி - உண்டவன்);
4)
காடு வாழ்கணம் காண நள்ளிருள்
ஆடு கொள்கையன் அண்டர் நாயகன்
தோடு சேர்செவித் தூயன் ஊரது
பாடு நீரயல் பாவ நாசமே.
5)
மாயு(ம்) நாளென வந்த காலனே
சாயு மாறொரு தாளை வீசினான்
தாயும் ஆயவன் தங்கும் ஊரது
பாயு(ம்) நீரயல் பாவ நாசமே.
V. Subramanian
2)
6)
கறையி லங்கிய கண்டன் நீறணி
அறவன் அங்கணன் ஆல நீழலில்
மறைவி ரித்தவன் மன்னும் ஊரது
பறவை ஆர்பொழிற் பாவ நாசமே.
7)
மத்த(ம்) மாசுணம் வைத்த செஞ்சடைச்
சுத்த மாநதி சூடும் வித்தகன்
சத்தி பங்கமர் தந்தை ஊரது
பத்தர் சென்றடை பாவ நாசமே.
V. Subramanian
5)
Final 4 songs of this padhigam.
8)
மடமை யால்மலை பேர்த்த வன்றனை
அடர ஊன்றிய அண்ணல் நீரழற்
சடையில் வைத்தவன் தங்கும் ஊரது
படர்பொ ழிற்பதி பாவ நாசமே.
9)
நெடிய மாலயன் நேட நின்றவன்
பொடிய ணிந்தடி போற்றி னார்வினை
மடிய நல்கிடும் வள்ளல் ஊரது
படியெ லாந்தொழு பாவ நாசமே.
10)
மழுங்கு புத்தியர் மாய(ம்) நீங்குமின்
தொழுங்க ரந்திகழ் தொண்டர் வேண்டிய
வழங்கு வார்சடை வள்ளல் ஊரது
பழங்க ளார்பொழிற் பாவ நாசமே.
11)
உரக மாலையன் உண்ப லிக்கெனப்
பிரம னார்தலை ஏந்து பெற்றியன்
கரவி லாதளி கையன் ஊரது
பரவிப் பார்தொழு பாவ நாசமே.
V. Subramanian
7)
2020-06-20
பறியலூர் (பரசலூர்);
-----------------
(சந்தக் கலிவிருத்தம் - தானனா தானனா தானனா தானனா)
(சம்பந்தர் தேவாரம் - 3.35.7 - "கானலைக் கும்மவன் கண்ணிடந் தப்பநீள்")
1)
கண்ணில்நீர் வார்தரக் கைதொழும் பத்தரை
விண்ணிலேற் றும்பரன் வெண்மதிக் கண்ணியான்
வண்ணமார் பூக்களில் மாந்திவண் டூதிடும்
பண்ணறாச் சோலைசூழ் பறியல்வீ ரட்டனே.
2)
காட்டிலா டுங்கழல் கைதொழின் வல்வினை
வீட்டிவான் நல்குவான் வெண்குழைக் காதினன்
நாட்டமோர் மூன்றினான் நாடிவண் டார்த்திடும்
பாட்டறாச் சோலைசூழ் பறியல்வீ ரட்டனே.
V. Subramanian
On Jun 6, 2026, at 08:00, Siva Siva <naya...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCM9GKvP_8-2g3Eqsx3C6WybWc21K-mZvpPXKC7-%3D%3D62cA%40mail.gmail.com.
3)
உம்பரார் வேண்டவே உன்னிடா தைம்மலர்
அம்பினால் தாக்குவேள் அன்றுநீ றாக்கினான்
செம்பிரான் வாளரா திங்கள்சேர் சென்னியன்
பைம்பொழில் சூழ்ந்திடும் பறியல்வீ ரட்டனே.
(உன்னுதல் - எண்ணுதல்); (வேள் - காமன்);
(வாள் - கொடிய);
4)
சங்கரா சம்புவே தாணுவே தாதையே
அங்கணா என்பவர்க் காரருள் செய்பவன்
பொங்கராத் தாரினன் பொற்சடைப் புண்ணியன்
பைங்கணே றேறினான் பறியல்வீ ரட்டனே.
V. Subramanian
5)
வேலனைப் பெற்றவன் வேத(ம்)நான் கோதிய
ஆலனக் காரமாம் ஐயன்முக் கண்ணினன்
காலனைக் காலினால் காய்ந்தவன் கைதொழும்
பாலனைக் காத்தவன் பறியல்வீ ரட்டனே.
வேதம் நான்கு ஓதிய ஆலன் -
அக்கு ஆரம் ஆம் ஐயன் -
6)
பேரிடர் தீர்ந்திடப் பேணினார்க் காப்பவன்
போரிடும் வெங்கரித் தோலினைப் போர்த்தவன்
ஊரிடும் பிச்சையே ஊணெனக் கொண்டவன்
பாரிடஞ் சூழ்பரன் பறியல்வீ ரட்டனே.
பேரிடர் தீர்ந்திடப் பேணினார்க் காப்பவன் -
(பாரிடம் - பூதம்);
7)
சேவதே றுஞ்சிவன் தெண்புனல் கொக்கதன்
தூவலார் சென்னியன் தோற்றமும் கேடிலான்
காவலார் முப்புரம் வேவவே நக்கவன்
பாவையோர் பங்கினன் பறியல்வீ ரட்டனே.
(சே - எருது);
(தூவல் - இறகு);
V. Subramanian
4)
8)
தக்கதொன் றோர்கிலான் தான்வரைக் கீழ்மிகத்
துக்கமுற் றார்த்தழத் தூவிரல் வைத்தவன்
திக்கெலாம் ஆடையாம் சீர்த்தியன் மேனியில்
பக்கமோர் பாவையான் பறியல்வீ ரட்டனே.
(ஓர்தல் - சிந்தித்தல்); (ஆர்த்தல் - ஒலித்தல்);
9)
கந்தமார் போதனும் கண்ணனும் காண்கிலா
அந்தமில் சோதியான் ஐந்தொழில் செய்பவன்
செந்தமிழ்ப் பாடலைச் செப்பினார்க் கன்பினன்
பந்தமில் பாங்கினான் பறியல்வீ ரட்டனே.
(போது - பூ);
(பாங்கு - இயல்பு);
வி. சுப்பிரமணியன்
Final 2 songs of this padhigam:
10)
ஆய்தலைச் செய்கிலா அந்தகர் நீறிடாப்
பேய்மனப் பிட்டர்சொல் பேணிடேல் காமனைக்
காய்பவன் தாள்தொழும் பத்தரைக் காப்பவன்
பாய்புலித் தோலினான் பறியல்வீ ரட்டனே.
(பிட்டர் - பிரஷ்டர்);
(பவன் - என்றும் உள்ளவன்);
11)
பூத்திரள் கொண்டுதாள் போற்றிடாத் தக்கனார்
தீத்தொழில் செற்றவன் செவ்வணன் மூவரின்
மூத்தவன் முக்கணன் முன்னமோர் அத்திரம்
பார்த்தனுக் கீந்தவன் பறியல்வீ ரட்டனே.
(தீத்தொழில் - 1. தீய செயல்; 2. அக்கினி காரியம் - ஹோமம்; வேள்வி);
(செறுதல் - அழித்தல்);
வி. சுப்பிரமணியன்
9)