Re: குருவடி ஆயிரம்

477 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Mar 5, 2022, 7:18:15 PM3/5/22
to santhavasantham
கவிஞர் நாகோஜி குருவடி ஆயிரம் என்னும் புது இழையைத் தொடங்குகிறார். அவர் முயற்சி வெற்றிபெற நமது வாழ்த்துகள்

இலந்தை

On Sat, Mar 5, 2022 at 11:38 AM Nagoji <nag...@gmail.com> wrote:
குருவடி ஆயிரம்

குருவின் கழற்சிறப்பைப் பாடும் பாக்கள். பாதுகா சகஸ்ரம் என்னும் அருமையான வடமொழி நூலைத், தமிழில் திருவடி ஆயிரம் என்று மதுரகவி சீனிவாச அய்யங்கார் அவர்கள் இயற்றினார். அவற்றில் 500 சொச்சம் பாடல்களே கிடைத்துள்ளன. அவற்றைப் படிக்கும் போது எழுந்த உந்துதலால், இந்த முயற்சியில் குரு என்னைப் பணித்துள்ளார். 4-மார்ச்-2022 அன்று பேரூர் சன்னிதானம் தவத்திரு மருதாசல அடிகளாரைத் தரிசித்து அவர் பாதுகையை வணங்கிய போது, இந்த முயற்சிக்கு மேலும் அதிகமான சக்தி பெற்றதை உணர்ந்தேன்.

குருவடியின் திருவருளால் இம்முயற்சி வெற்றி பெற வேண்டுகிறேன்.

பருவரையை ஏந்தியவன் பாதத்தி னும்பெரியாய்
கருமுகிலை நிகர்வண்ணன் கழலைவிடச் சிறப்புடையாய்
பெருவரையன் மகளுடைய பெரும்பதத்தின் மேம்பட்டோய்
ஒருநிலையைத் தந்திடுவாய் குருவடியார் பாதுகையே...(1) -- 5-Mar-2022

இந்த இழையைத் தாங்கள் தொடங்கி வைத்து ஆசீர்வதிக்கவும்.

- சங்கர தாஸ்

sankara dass nagoji

unread,
Mar 5, 2022, 10:46:36 PM3/5/22
to சந்தவசந்தம்
குருவடி ஆயிரம்

குருவின் கழற்சிறப்பைப் பாடும் பாக்கள். பாதுகா சகஸ்ரம் என்னும் அருமையான வடமொழி நூலைத், தமிழில் திருவடி ஆயிரம் என்று மதுரகவி சீனிவாச அய்யங்கார் அவர்கள் இயற்றினார். அவற்றில் 500 சொச்சம் பாடல்களே கிடைத்துள்ளன. அவற்றைப் படிக்கும் போது எழுந்த உந்துதலால், இந்த முயற்சியில் குரு என்னைப் பணித்துள்ளார். 4-மார்ச்-2022 அன்று பேரூர் சன்னிதானம் தவத்திரு மருதாசல அடிகளாரைத் தரிசித்து அவர் பாதுகையை வணங்கிய போது, இந்த முயற்சிக்கு மேலும் அதிகமான சக்தி பெற்றதை உணர்ந்தேன்.

குருவடியின் திருவருளால் இம்முயற்சி வெற்றி பெற வேண்டுகிறேன்.

பருவரையை ஏந்தியவன் பாதத்தி னும்பெரியாய்
கருமுகிலை நிகர்வண்ணன் கழலைவிடச் சிறப்புடையாய்
பெருவரையன் மகளுடைய பெரும்பதத்தின் மேம்பட்டோய்
ஒருநிலையைத் தந்திடுவாய் குருவடியார் பாதுகையே...(1) -- 5-Mar-2022

(In  the digest, the song did not appear. hence sending it again)

- sankara dass

Siva Siva

unread,
Mar 6, 2022, 8:24:02 AM3/6/22
to santhavasantham
Very good effort!
வாழ்க!

/கழலைவிடச் / 
"பாதத்தினும்" என்று முதலடியிற் சொன்னதுபோல், 
கழலினும் / கழலதனின் - என்று இருந்தால் இன்னும் சிறக்குமோ?

வி. சுப்பிரமணியன்

Ramamoorthy Ramachandran

unread,
Mar 6, 2022, 8:30:39 AM3/6/22
to Santhavasantham
ஐநூறு    பாட்டும்     ஆயிரமாய்      ஆகவே 
செய்கின்ற    சங்கரதாஸ்  சீர்ப்பாக்கள்-  வையம்
எங்கும்  புகழ்பெற்றே  எழுங்கைக்  குருவாழ்த்தால் 
தங்குக   வாழ்க   தழைத்து!

புலவர் இராமமூர்த்தி     

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCOA0HgmnJ%2Bmuenj7gX7rYKT2V37ZH0C66NdL7yy8ddGcA%40mail.gmail.com.

Nagoji

unread,
Mar 6, 2022, 10:36:32 AM3/6/22
to santhav...@googlegroups.com
உகம்உகமா ஒளிகாட்டி உயிர்காக்கும் ஒருசோதி;
சகமதிலே அனைத்துக்கும் தனிப்பொதுவா மிளிர்ஆதி;
புகமுடியாப் பொற்கோளம்; புவிசுற்றும் நடுப்புள்ளி;
பகலவனுக் கொளிதரும்எம் பரமகுரு பாதுகையே...(2) -- 6-Mar-2022

- sankara dass

M. Viswanathan

unread,
Mar 6, 2022, 11:55:06 AM3/6/22
to Santhavasantham

குருவடி போற்றும் புதுயிழை நம்முள்
திருவினைக் கூட்டும் திடம்.

 அன்பன்,
மீ.விசுவநாதன்

Govindaraju Arunachalam

unread,
Mar 6, 2022, 4:29:18 PM3/6/22
to சந்தவசந்தம்
குருபுகழ் பாடும் குறிக்கோள் சிறக்க
குருவருள் கிட்டும் குவிந்து.

    -இனியன்.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.


--
rgds,
 
Dr. A. GOVINDARAJU,
Retired Principal - National Awardee,

Nagoji

unread,
Mar 7, 2022, 4:49:51 AM3/7/22
to santhav...@googlegroups.com
பிணியகற்றும் மூலிகைகள் பெருகிவள ரச்செய்தே
அணிவிளக்கா இருட்காட்டில் அருந்துணையா வழிகாட்டும்
மணிவணனின் முகமன்ன மதிக்கொளியை ஈந்திடுவோய்
பணிவேனுக் கருள்புரிவாய் பரமகுரு பாதுகையே...(3) -- 7-Mar-2022

- sankara dass

VETTAI ANANTHANARAYANAN

unread,
Mar 7, 2022, 10:59:10 AM3/7/22
to சந்தவசந்தம்
அன்புள்ள நாகோஜி,

உங்களுக்குள்ள குருபக்தியை யாவரும் அறிவர். இப்போது எடுத்துக் கொண்டிருக்கும் இந்த பணியை அந்த பக்தியே வழிகாட்டி எடுத்துச் செல்லும். 
நமக்கு மலைப்பைத் தரும் வகையில், பல்லாயிரக் கணக்கில் பல்வேறு நூல்களை இயற்றியுள்ள மகான் மதுரகவி சீனிவாச அய்யங்காரின் இராமாயண வெண்பாவை (2 பாகங்கள்) பல ஆண்டுகளுக்கு முன் திரு. வாஞ்சிநாதன் எனக்கு அன்பளிப்பாகத் தந்தார். அதிலிருந்து சில பக்கங்களின் ஒளிப்பதிவை இணைத்துள்ளேன்.  தற்போது கிட்டியுள்ள பாதுகா சகஸ்ரம் 499 பாடல்கள் கொண்டதெனத் தெரிகிறது.

வாழ்த்துக்களுடன்,

அனந்த்   

On Sat, Mar 5, 2022 at 10:46 PM sankara dass nagoji <nag...@gmail.com> wrote:
.
மதுரகவி ஸ்ரீனிவாசஐயங்கார் நூல்கள் பட்டியல்-3.pdf
மதுரகவி ஸ்ரீனிவாசஐயங்கார் நூல்கள் பட்டியல்-1.pdf
மதுரகவி ஸ்ரீனிவாசஐயங்கார் நூல்கள் பட்டியல்-2.pdf

VETTAI ANANTHANARAYANAN

unread,
Mar 7, 2022, 11:02:13 AM3/7/22
to சந்தவசந்தம்
One more scanned pic attached.
ananth
மதுரகவி ஸ்ரீனிவாசஐயங்கார்-1.pdf

Nagoji

unread,
Mar 7, 2022, 11:41:40 AM3/7/22
to santhav...@googlegroups.com
உங்கள் ஆசிகளுக்கு நன்றி.
பால பெரியவாள் ஜயந்தி அன்று அனுமந்தம்பட்டியில் இருந்து, ராமாயண வெண்பா, நாரதீயம், திருவடி ஆயிரம், தத்தை விடு தூது ஆகி புத்தகங்கள் வந்தன!
மிகப்பெரிய ஆசி!

- சங்கர தாஸ்

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/AQgcF9v0o4k/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAF%2Bqia0LBuRthEF%2BTWxadfRAhO28uVuYH-HQdLURkKstFqCNVQ%40mail.gmail.com.

Siva Siva

unread,
Mar 7, 2022, 12:45:13 PM3/7/22
to santhavasantham
https://www.sadagopan.org/pdfuploads/Paduka%20Sahasram.pdf

You may already be aware of this as well.

Subbaier Ramasami

unread,
Mar 7, 2022, 9:59:35 PM3/7/22
to santhavasantham
பாதுகா சஹஸ்ரத்தில்

911 முதல் 950 வரை  அருமையான சித்திர கவிகள்.    நாகோஜியும் அப்படிப் படைக்கிறாரா எனப் பார்க்கவேண்டும்.

பல நமக்குத் தெரியாத புதிய வகைகள். சில எளிதானவை .  அர்த்த மாலை மாற்று, பூர்ண மாலை மாற்று கடினமானவை

எளிதான ஒன்று: 

க்ரிய வாஞ்சன ப்ரஹேலிகா பந்தம்.  - மறைந்திருக்கும் வினைச்சொல்
எ;கா:   குருநாதா அழகு நிறை பாடல் தீட்ட     - இதில் கருத்து முற்றுப் பெறவில்லை.
ஆனால்  குரு, நா தா  அழகு நிறை பாடல் தீட்ட   என்று பிரித்தால் கருத்து முற்றுப் பெறுகிறது. இதுதான் க்ரிய வாஞ்சன ப்ரேஹலிக பந்தம்

கவிஞர் ரமணிக்கு நல்ல தீனி கிடைக்கும்.

இலந்தை

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCNFbyO5dgnKmC3H3h9atxygOozNOwj2PRYUCgc3Hkzu6Q%40mail.gmail.com.

rathnam

unread,
Mar 8, 2022, 7:16:45 AM3/8/22
to santhav...@googlegroups.com

Nagoji

unread,
Mar 8, 2022, 11:20:52 AM3/8/22
to santhav...@googlegroups.com
மண்ணுயிரை நோக்கிநிதம் வானின்று கண்சிமிட்டும்
எண்ணகிலா மீன்களுக்(கு) என்றுமொளி தந்திடுவோய்
மண்ணிலிருந் தெழுமவியால் மன்னுயிர்க்கு மழையளிக்கும்
விண்ணவரும் பணிந்தேத்தும் மெய்க்குருவின் பாதுகையே...(4) -- 8-Mar-2022

அவி - அவிசு 

- sankara dass

Nagoji

unread,
Mar 9, 2022, 10:37:34 AM3/9/22
to santhav...@googlegroups.com
அவசரத்தால் ஆளப்பட்(டு) அற்பவினை தனைவிரும்பித்
தவறுமிகச் செய்வேனைத் தடுத்தாண்டு கொள்வாயோ
தவமுனிவர் முகம்போலத் தானாவே வில்வீசும்
நவமணியின் மிக்கொளிரும்  நற்குருவின் பாதுகையே...(5) -- 9-Mar-2022

வில் - ஒளி

Nagoji

unread,
Mar 10, 2022, 12:02:45 PM3/10/22
to santhav...@googlegroups.com
பிண்டத்தில்  கட்டுண்டு பெருமாயை தனிலொடுங்கிக்
கண்டங்கள் பலகண்ட கடையேனைக் காவாயோ 
அண்டத்தில் மிதக்கின்ற அனைத்தினும் ஒளிமிக்க  
தண்டத்தை ஏந்திவரும்  சற்குருவின் பாதுகையே...(6) -- 10-Mar-2022

- sankara dass

rathnam

unread,
Mar 10, 2022, 10:20:42 PM3/10/22
to santhav...@googlegroups.com
....அண்டத்தில் மிதக்கின்ற அனைத்தினும் ஒளிமிக்க  
தண்டத்தை ஏந்திவரும் ...

'பேரொளி வீசும் தண்டம்' என்றால் என்ன.... ஐயா?  'தண்டம்'  எதைக் குறிக்கிறது?

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Nagoji

unread,
Mar 10, 2022, 10:41:35 PM3/10/22
to santhav...@googlegroups.com
இதில், ஒளிமிக்க என்பதைப் பாதுகைக்க்கு இயைக்க வேண்டும்.
தண்டத்தை ஏந்திவரும் சற்குரு - தண்டம் - கோல். சன்னியாசிகள் ஏந்திவரும் நாணல் தண்டு.

- சங்கர தாஸ்

You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/AQgcF9v0o4k/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAHhWE8vw8G6td6oDKLEVj70P%3DbxRsVGrzF3KOkriVZpSmnubzg%40mail.gmail.com.

rathnam

unread,
Mar 10, 2022, 10:47:22 PM3/10/22
to santhav...@googlegroups.com
...இதில், ஒளிமிக்க என்பதைப் பாதுகைக்க்கு இயைக்க வேண்டும்....

ஓ.🙏🏻

...சன்னியாசிகள் ஏந்திவரும் நாணல் தண்டு....

அந்த நாணல்தண்டு எதை 'symbolize' செய்கிறது என்று அறிய விரும்பினேன்... ஐயா.

Nagoji

unread,
Mar 11, 2022, 6:10:12 AM3/11/22
to santhav...@googlegroups.com
அனலொடுகால் புனல்பூமி ஆகாயம் அனைத்தினிலும்
கனவினிலும் நனவினிலும் கசப்பினிலும் இனிப்பினிலும்
தினத்தினிலும் இறுதியிலும் சீர்க்குருவின் உருக்காணும்
மனவொளியைக் காட்டிடுவாய் மாகுருவின் பாதுகையே...(7) -- 11-Mar-2022

- sankara dass

Nagoji

unread,
Mar 11, 2022, 6:16:04 AM3/11/22
to santhav...@googlegroups.com
தண்டம் கமண்டலம் காஷாயம் - இவை சன்னியாசியின் புறச்சின்னங்கள். தத்துவ ரீதியாக எனக்குத் தெரியவில்லை.
சந்த வசந்தப் பெரியோர்கள் உதவுக.

- சங்கர தாஸ்

Nagoji

unread,
Mar 12, 2022, 7:17:18 AM3/12/22
to santhav...@googlegroups.com
காயினில் பழத்தினில் கசப்பையும் இனிப்பையும்
வேயினில் இசையையும் வெளித்தெரியா மல்வைத்தோய்
வாயினைக் காயத்தை மனத்தினைத் துளக்கிடுவாய்
தீயினின் தூவொளியார் தேசிகரின் பாதுகையே....(8) -- 12-Mar-2022

வேய் - மூங்கில்
வாய் - வாக்கு குறிப்பு. காயம் - செயல் குறிப்பு.

- sankara dass

Nagoji

unread,
Mar 14, 2022, 3:18:14 AM3/14/22
to santhav...@googlegroups.com
இருவரையும் நேடவைத்(து) எரிசுடராய் நிற்பவனின்
குருவடிவைத் தாங்கிவரும் குணங்கொண்ட வாகனமே
திருவருளைத் தேடியலை வேனுக்கோர் திசைகாட்டாய்
குருவருளின் சீர்மிக்க குருவடியார் பாதுகையே....(9) -- 14-Mar-2022

குருவின் அருளை விடப் பாதுகை சிறப்பு மிக்கது.

- sankara dass

Nagoji

unread,
Mar 15, 2022, 5:25:40 AM3/15/22
to santhav...@googlegroups.com
தன்னிகரில் லாதபெரும் தனித்துவத்தைக் கொண்டிட்டோய்
கன்னலினும் இனிதாய கனவானைத் தாங்கிடுவோய்
மன்னுயிரைக் காத்திடவே மாநிலமேல் உலாவருவாய்
மின்னலினும் ஒளிமிக்க மென்குருவின் பாதுகையே...(10) -- 15-Mar-2022

கன்னல் - கரும்பு

- sankara dass

Nagoji

unread,
Mar 16, 2022, 12:06:31 PM3/16/22
to santhav...@googlegroups.com
விண்ணோர் வணங்கும் சிறப்புடையோய்
....வேதம் தழைக்க வழிகாட்டீ!
கண்ணீர் பெருக்கிக் கலுழ்வேனைக்
....காக்கும் கடமை நினதன்றோ
பெண்ணார் மேனிப் பெருமானின்
....பெருமை காட்டும் திருத்தலமாம்
அண்ணா மலையார் தீபத்தின்
....ஆர்க்கும் குருவின் பாதுகையே...(11) -- 16-Mar-2022

ஆர்த்தல் - மின்னுதல்

- sankara dass

Nagoji

unread,
Mar 17, 2022, 4:01:57 AM3/17/22
to santhav...@googlegroups.com
அகர முதல எனத்தொடங்கும்
....அற்பு தத்தின் உட்கருவே
பகர அரிய சிறப்புடைய
....பரம குருவின் அடிசுவைப்போய்
தகர வெளியின் ரகசியத்தைத்
....தமியே னுக்கும் உணர்த்தாயோ
மகர ஒளியின் மிக்கொளிரும்
....மாசில் குருவின் பாதுகையே....(12) -- 17-Mar-2022

அற்புதம் - இங்கு திருக்குறள் குறிப்பு
மகர ஒளி - மகர ஜோதி
தகரவெளி - தஹராலயம்

- sankara dass

Nagoji

unread,
Mar 18, 2022, 3:45:13 AM3/18/22
to santhav...@googlegroups.com
விரதம் நோற்கேன் என்றாலும்
....வீணாத் திரிந்தே அலைந்தாலும்
சிரமும் கரமும் உடல்தாளும்
....தினமும் உன்னை வணங்கிடவே
வரமொன் றருள வல்லாயோ
....வானம் எங்கும் நிறைந்தாடும்
அரனை விஞ்சும் அழலொளியார்
....அன்புக் குருவின் பாதுகையே....(13) -- 18-Mar-2022

- sankara dass

Siva Siva

unread,
Mar 18, 2022, 10:13:37 AM3/18/22
to santhavasantham
ஏல்-தல் (ஏற்றல்) - ஏற்பேன் - ஏலேன்
நோல்-தல் (நோற்றல்) - நோற்பேன் - நோலேன்
என்று வருமோ?

(குறள் - 270:
இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர். )

Ashok Subramaniam

unread,
Mar 18, 2022, 10:44:19 AM3/18/22
to santhavasantham


குருவருளால் நடக்கும் இத்திருப்பணியை ஒட்டி, எத்தனை புதிய செய்திகள் கிடைக்கின்றன மதுர கவியாரின் இராமாயண வெண்பாவைப் பற்றி அனந்த் அவர்களும், தேசிகர் செய்த பாதுகா ஸஹஸ்ரத்தின்  சுட்டியை சிவசிவாவும் பகிர்ந்ததும், அதில் காணும் சித்திரக்கவி விசித்திரங்களை இலந்தையார் சுட்டும் அற்புதமும்கூட குருவருளில் விளையும் திருவெனத்தான் கொள்ளவேண்டும்.. நாகோஜி உங்களுடைய பணி மகத்தானது! குருவருளே கூட்டிவைக்கும்!


அன்புடன்

அஶோக்




Nagoji

unread,
Mar 18, 2022, 11:21:42 PM3/18/22
to santhav...@googlegroups.com
சரியே. நோலேன் என்று மாற்றி விட்டேன்.
பேச்சு வழக்கின் தாக்கம்!

- சங்கர தாஸ்

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/AQgcF9v0o4k/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.

Nagoji

unread,
Mar 19, 2022, 3:14:14 AM3/19/22
to santhav...@googlegroups.com
நாலும் ஆறும் பணிந்தேத்தும்
....ஞான குருவின் நடைத்துணையே
காலம் தனையும் பணிக்கவல்லோய்
....கடையேற் கருள மாட்டாயோ
ஆலம் உண்ட அரனாரின்
....அங்கை காட்டும் வென்றிதரு
சூலம் தனிலும் வலிமிக்க
....தொல்சீர்க் குருவின் பாதுகையே...(14) -- 19-Mar-2022

வென்றி - வெற்றி

- sankara dass

Siva Siva

unread,
Mar 19, 2022, 11:15:30 AM3/19/22
to santhavasantham
/வென்றிதரு/
வென்றிமலி? வென்றிமிகு?

Nagoji

unread,
Mar 20, 2022, 2:04:08 AM3/20/22
to santhav...@googlegroups.com
Yes. வென்றிமலி எனத் திருத்தி விட்டேன்.

- சங்கர தாஸ்

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/AQgcF9v0o4k/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.

Nagoji

unread,
Mar 20, 2022, 2:04:30 AM3/20/22
to santhav...@googlegroups.com
நித்தி யம்நற் பூசைசெயேன்
....நியமம் எனக்கு வேப்பங்காய்
கத்திப் பொழுதைக் கழிப்பதிலே
....கணமும் வீண டித்தில்லேன்
பத்தி செய்ய அறியேனைப்
....பரம குருப்பாற் படுத்தாயோ
சத்தி வேலின் வலிமிக்க
....சாந்த குருவின் பாதுகையே....(15) -- 20-Mar-2022

Nagoji

unread,
Mar 21, 2022, 12:04:41 PM3/21/22
to santhav...@googlegroups.com
செக்கு மாடு தனைநிகர்த்த
....சிறியேன் மேற்கண் வையாயோ
சுக்கி ரன்றன் கண்கீறிச்
....சூதர் நூற்று வரைமாய்த்தே
அக்க ரங்கள் எட்டினிலார்
....அரியின் அங்கை யிற்கறங்கும்
சக்க ரத்தின் வலிமிக்க
....சாது குருவின் பாதுகையே....(16)  -- 21-Mar-2022

கறங்குதல் - சுழலுதல்

- sankara dass

Nagoji

unread,
Mar 22, 2022, 11:52:00 AM3/22/22
to santhav...@googlegroups.com
நிதான மின்றித் திரிந்தலைந்து
....நிசமாம் உன்னை மறந்தவெனக்(கு)
உதார குணத்தை அளிப்பதுடன்
....உடையா மனமும் அருள்வாயோ
சுதாமர் தந்த அவல்தின்ற
....சுந்த ரத்தோள் பெருமாள்கைக்
கதாயு தத்தின் வலிமிக்க
....கச்சிக் குருவின் பாதுகையே....(17) -- 22-Mar-2022

- sankara dass

rathnam

unread,
Mar 23, 2022, 3:55:11 AM3/23/22
to santhav...@googlegroups.com
...செக்கு மாடு தனைநிகர்த்த
....சிறியேன் மேற்கண் வையாயோ...

🙏🏻

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAE_cqFQHn9Z2_aWoFOOh88bS1U6us0S%2B_Tn2JU%2B5KFbV_-Gozw%40mail.gmail.com.

Nagoji

unread,
Mar 23, 2022, 9:36:46 AM3/23/22
to santhav...@googlegroups.com
நிச்ச லும்நின் பேர்சொல்லி
....நினைக்க மறந்தேன் என்றாலும்
அச்சம் அகற்றி அணைக்குமுன்றன்
....அன்பைப் பாடல் எளிதாமோ
அச்சு முரிந்த வண்டியைப்போல்
....அலசும் அடியேற் கருள்வாயே
வச்சி ரத்தின் வலிமிக்க
....வண்தாட் குருவின் பாதுகையே....(18) -- 23-mar-2022

அலசுதல் - இங்கும் அங்கும் நிலையின்றி ஆடுதல்
நிச்சல் - தினம்தோறும்
வச்சிரம் - இந்திரனுடைய வச்சிராயுதம்

- sankara dass

Siva Siva

unread,
Mar 23, 2022, 9:50:10 AM3/23/22
to santhavasantham
அச்சு இற்ற வண்டி எங்கும் நகராதே.
அலசுதல் - இங்கே வருந்துதல் என்ற பொருளோ?

Nagoji

unread,
Mar 23, 2022, 11:24:34 AM3/23/22
to santhav...@googlegroups.com
தேர்தான் நகராது. மாட்டு வண்டி, அதிலும் ரேக்லா வண்டி என்று ஒரு வகை. முரிந்த அச்சுடன், மாடு 30-40 அடிக்கு இழுத்துச் சென்று விடும். அனுபவமே உண்டு!!!

- சங்கர தாஸ்

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/AQgcF9v0o4k/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCPwraox6BMNEjWQiLseOV6uUnXt8cyg4Gs4kLzNWmwSGQ%40mail.gmail.com.

Siva Siva

unread,
Mar 23, 2022, 11:31:43 AM3/23/22
to santhavasantham
Thanks. Then fine!

Nagoji

unread,
Mar 24, 2022, 11:25:26 AM3/24/22
to santhav...@googlegroups.com
தொழுது பணிந்து தூமலர்கள்
....தூவி ஏத்தும் அடியாரை
விழுதைப் போலத் தாங்கிநிற்கும்
....மேன்மை மிக்க குணமுடையாய்
அழுகை இல்லா நிலைதருவாய்
....அனலை அன்ன மேனியனின்
மழுவைப் பழிக்கும் வலிமிக்க
....வள்ளல் குருவின் பாதுகையே....(19) -- 24-Mar-2022

- sankara dass

Siva Siva

unread,
Mar 24, 2022, 11:41:07 AM3/24/22
to santhavasantham
/மழுவைப் பழிக்கும் வலிமிக்க/ = ?
வழுவின் மிக்க வலியுடைய ?

Siva Siva

unread,
Mar 24, 2022, 11:41:40 AM3/24/22
to santhavasantham
Corrected the typo.
மழுவின் மிக்க வலியுடைய ?

On Thu, Mar 24, 2022 at 11:40 AM Siva Siva <naya...@gmail.com> wrote:
/மழுவைப் பழிக்கும் வலிமிக்க/ = ?
மழுவின் மிக்க வலியுடைய ?

Nagoji

unread,
Mar 25, 2022, 8:05:59 AM3/25/22
to santhav...@googlegroups.com
யாழைப் பழித்த மென்மொழியாள் போல அமைத்தது. மழுவைப் பழித்த வலிமிக்க என்பதில் வேறு நுண்ணிய விஷயம் உள்ளதா?

- சங்கர தாஸ்

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/AQgcF9v0o4k/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Mar 25, 2022, 9:31:49 AM3/25/22
to santhavasantham
1)
வென்ற, பழித்த, etc. are used as comparisons in thevaram, 
காம்பினை வென்ற மென்றோளி
யாழைப்பழித் தன்னமொழி  மங்கை
etc.

As the word பழித்த has a different meaning in today's common usage, I was wondering if there was an easier to understand word for your verse.

2)
போல, வென்ற, பழித்த என்று சொன்னபின், மிகுந்த, மிக்க என்று வரலாமா என்று அறியேன்.

இரதியைப் போல அழகுடையவள்.

இரதியைப் போல அழகு மிக்கவள்?
இரதியினும் அழகு மிக்கவள்?

V. Subramanian

rathnam

unread,
Mar 25, 2022, 10:35:28 AM3/25/22
to santhav...@googlegroups.com
சிவசிவா ஐயா

மழுவைப் பழிக்கும் வலி...
...மிக்க வள்ளல்...

என்று பிரித்தால்?

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCOisYMFRUpfBMGz1EJDnjCY3yemBJxEF_puwu5K0VEYYA%40mail.gmail.com.

Nagoji

unread,
Mar 25, 2022, 1:11:48 PM3/25/22
to santhav...@googlegroups.com
புரிந்தது.

மழுவின் மிக்க வலியுடைய
....வள்ளல் குருவின் பாதுகையே....(19) -- 24-Mar-2022

- சங்கர தாஸ்

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/AQgcF9v0o4k/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.

Nagoji

unread,
Mar 25, 2022, 1:17:53 PM3/25/22
to santhav...@googlegroups.com
எல்லை இல்லா ஆனந்த
....ஏகாந் தத்தில் திளைக்கின்ற
வெல்லற் கரிய மனத்தாரின்
....மென்றாள் அணியா விளங்கிடுவோய்
கல்லை நிகர்த்த மனத்தேனைக்
....கனியச் செய்தல் நின்கடனே
வில்லின் மிக்க வலியுடைய
....வேத குருவின் பாதுகையே....(20) -- 25-Mar-2022

- sankara dass

Nagoji

unread,
Mar 26, 2022, 2:32:51 PM3/26/22
to santhav...@googlegroups.com
மருந்தாகி நலமாகி மனமாகிச் செயலாகி வாக்குமாகி
விருந்தாகி உணவாகி  வியனாகி வியாபிக்கும் மேன்மைமிக்கோய்
இரந்தாலும் சிவனாரைப் பிரியாது நின்றிலங்கும் இறையவனாம்
பரந்தாமன் ஏந்திவரும் தண்டினில் வலிமிக்க பாதுகையே....(21) -- 27-Mar-2022

பாதுகையே எல்லாமாகி நிற்கும் தன்மை.
வியன் - ஆகாயம்

- sankara dass

Nagoji

unread,
Mar 28, 2022, 11:37:28 AM3/28/22
to santhav...@googlegroups.com
அத்திமுகன் அழகுமிகு ஆறுமுகன் அவர்க்கப்பன் ஐந்துமுகன்
வித்தையருள் குதிரைமுகன் இவர்க்கெல்லாம் முன்னியருள் விசித்திரமே
புத்தியிலா என்றனுக்குப் பொறுமையுடன் புத்திகாட்டி அருள்வாயோ
பத்தர்கள் ஓதுகிற மந்திரத்தின் சத்திமிக்க பாதுகையே....(23) -- 28-Mar-2022

- sankara dass

Nagoji

unread,
Mar 29, 2022, 9:31:04 AM3/29/22
to santhav...@googlegroups.com
இதுவ்ரை பாதுகையின் ப்ரகாசம், வலிமை கண்டோம்.
இனி, பாதுகையின் ஒலிச்சிறப்பு.

பிழைகளனைத் தும்பொறுத்துப் பேர்கொடுத்து நாள்கொடுத்துக் காத்திடுவோய்
மழைவருமுன் வருமீரக் காற்றெனவே வந்தருளும் மரவணியே
குழையுமெனக் கென்றுநற் குணங்களெலாம் மனமுவந்து கொடுத்திடுவாய்
பழைமைமிகு நால்வேதப் பண்ணொலியின் சீர்மிக்க பாதுகையே...(24) -- 29-Mar-2022

நாள் - ஆயுள்
மரவணி  - மரத்தால் ஆன அணி.

- sankara dass

rathnam

unread,
Mar 29, 2022, 12:07:56 PM3/29/22
to santhav...@googlegroups.com
🙏🏻🙏🏻

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Nagoji

unread,
Mar 30, 2022, 11:59:24 AM3/30/22
to santhav...@googlegroups.com
செடிமுதலாம் வினையரிந்து சிறப்பளித்துத் துலையினைப்போல் சீர்தூக்கி
மடிகளைந்து எந்நாளும் மண்விண்ணைப் புரக்கின்ற மரவடியே
இடியொலிக்கும் என்மனத்தை இயங்காமல் நிறுத்துவையோ  இயாவர்க்கும்
படியளக்கும் கண்ணன்செய் குழலிசையின் சீர்மிக்க பாதுகையே....(25) -- 30-Mar-2022

துலை - தராசு
இடி - இங்கு மனத்தில் ஒலிக்கும் பேரோசை

- sankara dass

Siva Siva

unread,
Mar 30, 2022, 12:07:25 PM3/30/22
to santhavasantham
மடிகளைந்து = ?

Nagoji

unread,
Mar 31, 2022, 3:08:39 AM3/31/22
to santhav...@googlegroups.com
மடி - இங்கு சோம்பல்.

- சங்கர தாஸ்

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/AQgcF9v0o4k/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCMT%3D-tJXCJ7KHEkJR1kv%3D-_iLtKFXf_5Ys-5Q4x3JJW6A%40mail.gmail.com.

Nagoji

unread,
Mar 31, 2022, 6:32:37 AM3/31/22
to santhav...@googlegroups.com
இலைபுனல்பூ கொண்டுநினை இயன்றவரை பூசிப்பார்க்(கு) எளிவருவோய்
தலைமலியும் மாலையணி சங்கரனைத் தாங்குகின்ற தாளணியே
அலைமலிந்த என்மனத்தில் அமைதியினை என்றென்றும் அமைத்தருள்வாய்
கலைமகளின் கரவீணை இசைதன்னைக் கண்டுநகை பாதுகையே....(26) -- 31-Mar-2022

நகைத்தல் - இங்கு இசையை விடச் சிறந்து விளங்குதல் குறிப்பு.
சங்கரன் - இங்கு சிவ சொரூபமான சங்கர குரு

- sankara dass

Siva Siva

unread,
Mar 31, 2022, 9:02:05 AM3/31/22
to santhavasantham
Thanks.

Nagoji

unread,
Apr 1, 2022, 11:58:00 AM4/1/22
to santhav...@googlegroups.com
முத்துமணி ஆடகப்பொன் முழுமதிபோல் ஒளிவீசும் முதற்பொருளே
உத்தமமா ஒருவினையும் புரியாமல் உளத்தையுன்பால் குவிக்காமல்
இத்தரையில் பித்தனைப்போல் இருக்குமெனக் குன்னருளை என்றளிப்பாய்
மத்தளத்தின் தாளவிசை தனைவிஞ்சும் மாகுருவின் பாதுகையே....(27) -- 1-Apr-2022

- sankara dass

Nagoji

unread,
Apr 2, 2022, 11:38:02 AM4/2/22
to santhav...@googlegroups.com
விரதமொரு கோடியிருந் தாலுமெளி வாராத மெய்யறிவே
சரதமுனைத் தேடியலை தத்துவர்க்குத் தாகம்தீர் தண்புனலே
தரமணுவும் இல்லாது தருக்குமெனக் கருளினுன் தரம்கெடுமோ
பரமனுறை கயிலையிலே ஒலிபறையின் சீர்மிக்க பாதுகையே....(28) -- 2-Apr-2022

சரதம் - மெய்

- sankara dass

Nagoji

unread,
Apr 4, 2022, 8:23:26 AM4/4/22
to santhav...@googlegroups.com
தரைமீது  சற்குருவைத் தாங்கிவரும் தன்னிகரில் பல்லக்கே
வரையேதும் இல்லாமல் மனம்போன போக்கினிலே வாய்நிறைக்க
இரைதேடி எப்போதும் அலைவேனை இறைதேட வையாயோ
பரைபாடும் சங்கீதம் தனைவிஞ்சும் பரமகுரு பாதுகையே....(29) -- 4-Apr-2022

பரை - அம்பாள்

- sankara dass

Nagoji

unread,
Apr 5, 2022, 11:41:59 AM4/5/22
to santhav...@googlegroups.com
காயினிலே புளிப்பாகிக் கனியினிலே இனிக்கின்ற கருப்பொருளே
தாயனைய மனமுடைய சற்குருவைத் தாங்கிவரும் தாளணியே
ஓய்வறியா தலைந்தலைந்(து) உதவாத பொருள்தேடும் எனையாள்வாய்
பாயலையார் கடலொலியை மங்கச்செய் பழையகுரு பாதுகையே...(30) -- 5-Apr-2022

- sankara dass

Nagoji

unread,
Apr 6, 2022, 7:45:35 AM4/6/22
to santhav...@googlegroups.com
தேசிக உருவின ராகியிவண்
....தேவினின் அடியருக் குப்பரிந்து
காசினி காத்திட வந்தவரின்
....காலடி தாங்கிடும் உனக்கிணையார்?
தூசுப டிந்தம னத்தேனைத்
....தூக்கிநி றுத்தியத் துவைதமெனும்
மாசறு நிலையினைத் தருவாயோ
....வளியொலி தனைப்பழி பாதுகையே...(31) -- 6-Apr-2022

இவண் - இங்கு; தே - தெய்வம்
காசினி - உலகம்
வளி - காற்று

- sankara dass

Nagoji

unread,
Apr 7, 2022, 12:35:55 PM4/7/22
to santhav...@googlegroups.com
நாதசு ரத்தெழு நல்லிசையும்
....நாட்டியச் சதங்கையின் சதியொலியும்
ஊதுகு ழல்பொழி இன்னொலியும்
....உள்ளம்நெ கிழ்ந்துபண் பாடுபவர்
கீதமும் கேட்பவர் கைதட்டும்
....கிடுகிடுக் கச்செயும் மத்தொலியும்
வேதமும் பறைகளும் விண்துளைக்கும்
...விழவொலி தனைப்பழி பாதுகையே...(32) -- 7-Apr-2022

சதி - ஜதி
விழவொலி - விழாக்களில் இருக்கும் மங்கல ஒலி

- sankara dass

VETTAI ANANTHANARAYANAN

unread,
Apr 7, 2022, 5:52:52 PM4/7/22
to சந்தவசந்தம்
அழகு!

அனந்த்
தனைப்பழி - தமைப்பழி?

Siva Siva

unread,
Apr 7, 2022, 6:15:40 PM4/7/22
to santhavasantham
Nice.
Reminds me of a thiruppallANdu song.
9.29.11
குழல் ஒலி யாழ்ஒலி கூத்தொலி ஏத்தொலி எங்கும் குழாம்பெருகி
விழவொலி விண்ணள வுஞ்சென்று விம்மி மிகுதிரு வாரூரின்
மழவிடை யாற்கு வழிவழி ஆளாய் மணஞ்செய் குடிப்பிறந்த
பழவடி யாரொடுங் கூடிஎம் மானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 
---

Regarding
/தனைப்பழி - தமைப்பழி?/
The sound of the festival that consists of various component sounds.
So, the sound of the festival is singular I think.

V. Subramanian

Nagoji

unread,
Apr 8, 2022, 11:57:26 AM4/8/22
to santhav...@googlegroups.com
சாதுச னங்களைக் காத்திடுவோய்
....சங்கர னின்கழல் சுவைத்திடுவோய்
ஓதும றைப்பொருள் ஆகிநிற்போய்
....உண்மைபொய் இரண்டையும் கடந்துநிற்போய்
தீதுமி கப்புரி கின்றவெனைச்
....சீக்கிரம் ஆட்கொள மனமிலையோ
மாதவத் தந்தைதாய் மனமகிழும்
....மழலையை விஞ்சிடும் பாதுகையே....(33) -- 8-Apr-2022

- sankara dass

Nagoji

unread,
Apr 10, 2022, 3:30:54 AM4/10/22
to santhav...@googlegroups.com
அம்பினில் ஆற்றலை அமைத்திடுவோய்
....ஆசையில் துன்பினை மறைத்திடுவோய்
கம்பையில் அறம்புரி தாயனையோய்
....கயிலையில் பனியிடைத் தவம்புரியும்
சம்புவை இயக்கிடும் சத்தியமே
....தவித்திடும் என்னையென் றாட்கொள்வாய்
அம்பிகை அமர்ந்தருள் வாகனமாம்
....அரிதனை விஞ்சிடும் பாதுகையே....(34) -- 10-apr-2022

கம்பை - காஞ்சி

- sankara dass

Nagoji

unread,
Apr 11, 2022, 2:00:19 PM4/11/22
to santhav...@googlegroups.com
தானமும் தவமுமிந் நானிலத்தே
....தழைத்திடச் செய்கிற தண்மழையே
மானமும் வீரமும் தமிழ்நாட்டில்
....வானள வோங்கிட வரம்தருவாய்
ஈனமி குந்தவென் மனத்திற்கோர்
....ஏற்றம ளிப்பதும் என்றாமோ
வானவர் ஏத்திடும் முருகனமர்
....மயிலினை விஞ்சிடும் பாதுகையே....(35) -- 11--Apr-2022

- sankara dass

Nagoji

unread,
Apr 13, 2022, 11:25:19 AM4/13/22
to santhav...@googlegroups.com
ஆரும றிந்திலர் என்பதனால்
....அக்கிர மங்களை ஒளித்தேசெய்
காரிரு ளார்மனத் தென்றனையும்
....கடைக்கணித் தருள்புரி மரவணியே
ஓரழ லாயவன் ஒண்மழுவன்
....உடையெனப் புலியதள் அணிந்திடுவான்
மேருவில் ஏந்திய பரமனமர்
....விடையினை விஞ்சிடும் பாதுகையே....(36) -- 13-Apr-2022

- sankara dass

Nagoji

unread,
Apr 14, 2022, 12:30:36 PM4/14/22
to santhav...@googlegroups.com
அலியுடன் ஆண்பெணென் றொருமூன்றை
....அனைத்துயிர் களிலும்வைத் தியக்கிடுவோய்
வலியுடன் உழைத்திடும் என்றன்னை
....வந்தணைக் கின்றதுன் கடனன்றோ
பலிபெற அண்டமெல் லாம்திரியும்
....பரமனின் அமிசத்தைத் தாங்கிடுவோய்
பொலிவுடன் வலம்வரு சாத்தனமர்
....புலியினை விஞ்சிடும் பாதுகையே....(37) -- 14-Apr-2022

சாத்தன் - சாஸ்தா ஐயப்பன்

- sankara dass

Nagoji

unread,
Apr 15, 2022, 2:20:08 PM4/15/22
to santhav...@googlegroups.com
ஞாயிறு மறையினும் தான்மறையா
....நல்லொளி வீசிமண் உயிர்க்கெல்லாம்
தாயினும் தயவுடை மரவணியே
....தமியனென் றனக்கொரு வழிகாட்டாய்
வேயுறு தோளியைப் பிரியாத
....வேதியன் தாளினைப் பரிசிப்போய்
ஆயிரம் கண்ணுடைக் கோனமரும்
....ஆனையை விஞ்சிடும் பாதுகையே....(38) -- 15-Apr-2022

பரிசித்தல் - ஸ்பரிசித்தல்

-- sankara dass

Nagoji

unread,
Apr 16, 2022, 11:42:07 AM4/16/22
to santhav...@googlegroups.com
எதற்குளும் பரவிநில் தத்துவமாம்
....எதிகளில் முதல்வரைத் தாங்கிடுவோய்
பிதற்றிடும் என்சொலை ஏற்றெனக்குப்
....பெருமையைத் தருவதை மறவேனே
நுதற்கனல் விழியுடைப் பரமசிவ
....சுதன்மணம் நடந்திட  உதவிசெய்த
முதற்பெரும் தெய்வமாம் ஆனையமர்
....மூசிகத் தைவிஞ்சு பாதுகையே...(39) -- 16-apr-2022

- sankara dass

Nagoji

unread,
Apr 17, 2022, 9:13:16 AM4/17/22
to santhav...@googlegroups.com
கிட்டிடும் அனைத்துமுன் அருளின்றிக்
....கிட்டகி லாவென அறியாமல்
துட்டரில் முன்னமர் என்னையுமுன்
....தொண்டரிற் கூட்டிய ணைத்திடுவாய்
சிட்டருக்(கு) ஆல்நிழல்  கீழமர்ந்து
....சீருணர்த் தரனடி தாங்கிடுவோய்
கட்டம ளித்தருள் சனியமரும்
.....காக்கையை விஞ்சிடும் பாதுகையே...(40) -- 17-apr-2022

கட்டம் - கஷ்டம்

- sankara dass

Nagoji

unread,
Apr 18, 2022, 11:52:32 AM4/18/22
to santhav...@googlegroups.com
கலி விருத்தம் - விளம் மா விளம் மா

அருடனைப் பொழியும்  அந்தமில் அழகே
குருடனென் கண்ணின் குருட்டினைக் களையாய்
மருடனை நீக்கும் மாலமர்ந் துலவும்
கருடனை விஞ்சும் குருபத அணியே...(41) -- 18-apr-2022

அருடனை - அருள் தனை
மருடனை - மருள் தனை

- sankara dass

Nagoji

unread,
Apr 19, 2022, 11:30:22 AM4/19/22
to santhav...@googlegroups.com
பொறிகளை இயக்கும் பூம்பதம் தாங்கும்
மறைகளின் கருவே வாதனை களைவாய்
அறிவினைத் தருவாள் அமருமன் னத்தின்
நிறைமிகு  குருவின் நேர்பத அணியே....(42) -- 19-Apr-2022

வாதனை - துன்பம்

- sankara dass

Nagoji

unread,
Apr 20, 2022, 10:08:23 AM4/20/22
to santhav...@googlegroups.com
தகரம தனிலார் தத்துவப் பொருளே
குகனென வந்த குருபதம் சுவைப்போய்
சகமதில் சலம்சேர் வருணனின் யானம்
மகரம திற்சீர் மரபத அணியே...(43) -- 20-apr-2022

தகரம் - தஹராலயம்
குகன் - முருகன் - பெரிய பெரியவாளின் இயற்பெயர் சுவாமிநாதன்
யானம் - வாகனம்

- sankara dass

Nagoji

unread,
Apr 21, 2022, 11:33:30 AM4/21/22
to santhav...@googlegroups.com
தாளினைத் தாங்கும் தவம்புரி வோயே
கோளிவ னத்தில் கோலந டத்தால்
காளியை வென்ற  காலபை ரவரின்
ஞாளியிற் சிறந்த நற்பத அணியே...(44) -- 21-apr-2022

கோளி - ஆல்
ஞாளி - நாய்

Nagoji

unread,
Apr 23, 2022, 11:44:10 AM4/23/22
to santhav...@googlegroups.com
ஒதியனை யேற்கோர் உறுதுணை யாய
முதியவர் கழலைத் தாங்கிடும் முதலே
கதமிகு கல்கி கலியற ஊரும்
குதிரையிற் சிறந்த குருபத அணியே....(45) -- 23-Apr-2022

ஒதி - ஒதியமரம்
கதம் - கோபம் 
ஊர்தல் - மேலமர்ந்து வருதல்

- sankara dass

Siva Siva

unread,
Apr 23, 2022, 11:48:52 AM4/23/22
to santhavasantham
/ கல்கி   /
வழக்கில் "கல்கி" என்று சொல்லினும், இலக்கியத்தில் "கற்கி" என்று வருமோ? 
("கல்பகம் - கற்பகம்", "அல்பம் - அற்பம்", இவைபோல). 

Nagoji

unread,
Apr 24, 2022, 1:21:32 PM4/24/22
to santhav...@googlegroups.com
இனி, பாதுகையின் புனிதம் பாடப் படுகிறது.

மங்கிடும் மதியால் வன்முறை செய்யும்
எங்களை மாற்றி இயக்கிடு வாயே
சங்கையைத் தீர்க்கும் தற்பர குருவின்
கங்கையிற் சிறந்த அங்கழல் அணியே....(46) -- 24-apr-2022

- sankara dass

Nagoji

unread,
Apr 25, 2022, 11:55:35 AM4/25/22
to santhav...@googlegroups.com
குமுதமி குந்த குழம்பிய மனத்தின்
சமரம றுத்துத் தாங்கிடு வாயோ
அமுதினைக் காத்த அரிகுளித் தாடும்
யமுனையிற் சிறந்த எதிகழல் அணியே....(47) -- 25-apr-2022

குமுதம் - இரைச்சல்
சமரம் - போர் - இங்கு மனப்போர்

- sankara dass

Nagoji

unread,
Apr 26, 2022, 11:37:43 AM4/26/22
to santhav...@googlegroups.com
புரத்தினை எரித்தோன் பொற்பத நட்பே
பரத்துவம் காட்டிப் பரிந்தணைத் திடுவாய்
வரத்தினை அளிக்கும் வண்கழல் தாங்கும்
சரச்சுவ  தியிற்சீர் தண்கழல் அணியே...(48) -- 26-apr-2022

சரச்சுவதி - சரஸ்வதி

- sankara dass

Nagoji

unread,
Apr 27, 2022, 12:28:31 PM4/27/22
to santhav...@googlegroups.com
சுந்தர குருவின் தாளிணை சுவைப்போய்
ஏந்திர வாழ்க்கை வாழ்ந்திடும் என்னைத்
தந்திரம் செய்தாட் கொண்டருள் தாராய்
சிந்துவை விஞ்சும் சீர்க்கழல் அணியே...(49) -- 27-apr-2022

- sankara dass

Nagoji

unread,
Apr 28, 2022, 1:13:17 PM4/28/22
to santhav...@googlegroups.com
ஆமள வும்போற் றிடுமடி யாரைச்
சாமியின் மேலாக் காத்திடும் தகவோய்
தாமத மிக்க தமியனேற் கருளாய்
கோமியை விஞ்சும் குருகழல் அணியே...(50) -- 28-apr-2022

தமியன் - கதி இல்லாதவன்
கோமி - கோதாவரி

- sankara dass

Nagoji

unread,
Apr 30, 2022, 12:09:52 PM4/30/22
to santhav...@googlegroups.com
அறுசீர் விருத்தம் - விளம் மா தேமா

முருகனின் பேரைக் கொண்ட
....மூத்தநற் குருவைத் தாங்கி
அருமறைக் காதி யாய
....அருள்பொழி அன்பின் ஊற்றே
அருகதை இல்லா என்னை
....அனுதினம் பாடச் செய்தோய்
நருமதை நதியை விஞ்சும்
....நற்குரு பாது கையே...(51) -- 30-apr-2022

பெரிய பெரியவாளின் இயற்பெயர் சாமிநாதன்.

- sankara dass 

Nagoji

unread,
May 1, 2022, 2:29:34 PM5/1/22
to santhav...@googlegroups.com
தீவிரி கின்ற கண்ணார்
....சிவகுரு தாளின் காப்பே
பாவிரி கின்ற நூல்கள்
....பரவிடும் பழைய சீரே
பூவிரி சோலை கள்சூழ்
....பொன்னரங் கத்தைச் சூழும்
காவிரித் தாயை விஞ்சும்
....கவின்குரு பாது கையே....(52) -- 1-may-2022

கங்கே ச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி | நர்மதே ஸிந்து காவேரி...

- sankara dass

Nagoji

unread,
May 2, 2022, 1:05:47 PM5/2/22
to santhav...@googlegroups.com
சிரமதிற் புனலைச் சூடும்
....சிவனென வந்த தூய
குருவடி தன்னைத் தாங்கும்
....கோதிலா வரத்தைப் பெற்றோய்
மரமென நிற்கின் றேற்கோர்
....வழியினைச் சொல்லு வாயோ
பிரமபுத் திராவை விஞ்சும்
....பெருங்குரு பாது கையே....(53) -- 2-may-2022

- sankara dass

Nagoji

unread,
May 3, 2022, 2:09:20 PM5/3/22
to santhav...@googlegroups.com
ஆநிரை காக்கும் கண்ணன்
....அருமர பினிலே வந்தோர்
கானிறை தினம்சு வைப்போய்
....கடுகெனைப் பார்த்தி டாயோ
தானமும் தவமும் மிக்க
....தண்கரை கொண்ட ஆறாம்
மாநதி சீரை விஞ்சும்
....வண்குரு பாது கையே....(54) -- 3-may-2022

மாநதி - மஹா நதி
கண்ணன் மரபு - குருபரம்பரை ஸ்ரீமன் நாராயணனிடம் இருந்தே தொடங்குகிறது.
கானிறை - கால் நிறை

- sankara dass

Nagoji

unread,
May 5, 2022, 11:26:34 AM5/5/22
to santhav...@googlegroups.com
சபரியைப் போல மங்காச்
...சற்பத்தி செய்ய கில்லேன்
அபசுர மாய என்னை
....ஆட்கொள வந்தி டாயோ
சுபமதைப் பொழியும் தெய்வக் 
...கபிலையை அன்ன மெய்யே
தபதியின் சீரை விஞ்சும்
....சற்குரு பாது கையே....(55) -- 5-may-2022

- sankara dass

Nagoji

unread,
May 6, 2022, 12:12:54 PM5/6/22
to santhav...@googlegroups.com
காரணம் அனைத்தி னுக்கும்
....காரணம் ஆய சீரே
வாரண மதத்தைச் சொல்லால்
....மாற்றிய குருதாள் தாங்கீ!
தாரணை அறியா என்னைத்
....தள்ளிடா தணைத்துக் காவாய்
பூரணை தன்னை விஞ்சும்
....பொற்குரு பாது கையே....(56)

பூரணை - பூர்ணா - காலடி கேரளத்தில் ஓடும் பெரியாறு
வாரண மதத்தைச் சொல்லால்....மாற்றிய குருதாள் தாங்கீ!  - ஒருமுறை வைதீஸ்வரன் கோவிலில் யானை தறி கெட்டு ஓடியது.
பெரியவாள் குளக்கரையில் ஜபத்தில் இருந்தார். யானை பெரியவாளிடம் செல்லப் போகிறதே என்று எண்ணி
எனது நண்பரின் உறவினர் யானைமுன் வந்து விட்டார். பெரியவாள் கருனையுடன், யானையை "சந்த்ரமொளீ"
என்று சொல்லவும், யானை கட்டுப் பட்டு அமைதியானது.

Saranya Gurumurthy

unread,
May 6, 2022, 10:19:47 PM5/6/22
to சந்தவசந்தம்
Nice to see the experience.

Saranya

Nagoji

unread,
May 7, 2022, 1:31:19 PM5/7/22
to santhav...@googlegroups.com
மைகிளர் கண்டத் தோனாம்
....மாபெரும் தேவா நின்று
பொய்களை விரட்ட வல்ல
....பொற்குரு தாள்சு வைப்போய்
செய்கையும் மனமும் வாக்கும்
....சீருற அருளு வாயோ
வைகையின் சீரை விஞ்சும்
....மாகுரு பாது கையே.....(57) -- 7-may-2022

மைகிளர் - விடம் ஒளிர்கின்ற

- sankara dass

Nagoji

unread,
May 8, 2022, 11:47:35 AM5/8/22
to santhav...@googlegroups.com
பெருமையே பேசும் இந்தப்
....பிள்ளையை உதறித் தள்ளிக்
கருணையே காட்டி டாத
....கருமிநீ அல்லை கண்டேன்
அருவமும் உருவும் ஆய
....அற்புத அணியே வற்றாப்
பொருநையிற் புனிதம் மிக்க
....பொற்குரு பாது கையே....(58) -- 8-may-2022

பொருநை - தாமிரபரணி

- sankara dass

Nagoji

unread,
May 9, 2022, 12:24:04 PM5/9/22
to santhav...@googlegroups.com
வெருட்டிடும் மாயை யாலே
....வீணனாய்ப் பொழுது போக்கும்
இருட்டினில் கரிய நெஞ்சன்
....என்னையாட் கொள்ள வாராய்
குருட்டினை நீக்க வல்ல
....குருபதம் தாங்கு வோயே
கிருட்டிணை நதியை விஞ்சும்
...கிழகுரு பாது கையே...(59) -- 9-may-2022

- sankara dass

Nagoji

unread,
May 10, 2022, 1:27:43 PM5/10/22
to santhav...@googlegroups.com
திங்களைச் சூடு வானின்
....திருவுரு வாக வந்த
புங்கவர் பொற்கா லுக்குப்
....புத்துணர்ச் சியினை ஈவோய்
அங்குசம் இல்லா தாடும்
....அடியனேற் கருள வாராய்
துங்கபத் திரையை விஞ்சும்
....தொல்குரு பாது கையே....(60)  -- 10-may-2022

- sankara dass

Nagoji

unread,
May 12, 2022, 11:40:38 AM5/12/22
to santhav...@googlegroups.com
மதியினைச் சூடும் பரமனின் உருவாம்
....மாமுனி தாளிணைக் குறவே
சதிமிகப் புரியும் என்னையும் தாங்கித்
....தரமளித் திடவரு வாயோ
பதிகளில் எல்லாம் சிறப்புடைத் தாய
....பண்ணுருட் டியெனநாம் கூறும்
அதிகையிற் கெடில ஆற்றினிற் புனித
....அம்குரு பாதுகாய் நீயே...(61) -- 12-may-2022

அம் - அழகிய

- sankara dass

Nagoji

unread,
May 13, 2022, 11:18:28 AM5/13/22
to santhav...@googlegroups.com
நிசிதனில் ஆடும் பரமனின் உருவாம்
....நின்மல குருபதம் தாங்கீ
அசிபதம் தத்து வம்மெனும் தொடரோ(டு)
....அமைவதை எனக்குணர்த் தாயோ
சசிஇர வியர்கள் சாட்சியா நிற்கச்
....சனாதனம் நிலைபெறச் செய்வோய்
பசியரி பாலாற் றின்புனி தமிக்க
....பரகுரு பாதுகாய் நீயே...(62) --- 13-may-2022

தத் த்வம் அசி - தத்வமசி.

- sankara dass

Nagoji

unread,
May 14, 2022, 1:32:52 PM5/14/22
to santhav...@googlegroups.com
அரவணி வோனின் அமிசமா வந்த
....அப்பழுக் கற்றதோர் பெரியோன்
இரவொடு பகலெப் பொழுதினும் தவம்செய்
....எதியவர் தாள்சுவை வரத்தோய்
பரவிடும் அடியார் பவமறச் செய்வோய்
....பாடிடும் என்னையும் காவாய்
சரயுவிற் புனிதம் மிக்கநம் காஞ்சி
....சற்குரு பாதுகாய் நீயே....(63) -- 14-may-2022

பரவுதல் - போற்றிப் பாடுதல்

- sankara dass
It is loading more messages.
0 new messages