2015-12-26
"வினை மாய்த்தருள் ஈசன்" - (பொது)
--------------------------------------------
(மூவடிமேல் ஓரடி வைப்பு - "லிங்காஷ்டகம்" என்ற துதியின் சந்தத்தில்)
("தானன தானன தானன தானா" என்ற சந்தம். முதற்சீர் தனதன என்றும் வரலாம்.
வடமொழியில் இச்சந்தத்தை - தோதகம் - दोधकम् - என்ற பெயரால் சுட்டுகின்றனர்.)
( Lingashtakam - ब्रह्ममुरारिसुरार्चितलिङ्गम् - ப்ரஹ்ம முராரி சுரார்சித லிங்கம்)
1)
பொற்பதம் ஏத்துசு ரர்க்கருள் ஈசன்
வெற்பினை வில்லென ஏந்திய ஈசன்
நற்புனல் அஞ்சடை வைத்தருள் ஈசன்
.. வாழ்த்திடு வோம்வினை மாய்த்தருள் ஈசன்.
வி. சுப்பிரமணியன்
2)
தக்கனை முண்டம ரிந்தருள் ஈசன்
அக்கணி ஆரமெ னப்புனை ஈசன்
சக்கரம் அச்சுத னுக்கருள் ஈசன்
.. வாழ்த்திடு வோம்வினை மாய்த்தருள் ஈசன்.
வி. சுப்பிரமணியன்
மதிசூடி துதிபாடி - 15
Starting a new thread with higher sequence number.
(The message count in the earlier thread has reached several hundred).2015-12-26
"வினை மாய்த்தருள் ஈசன்" - (பொது)
--------------------------------------------
(மூவடிமேல் ஓரடி வைப்பு - "லிங்காஷ்டகம்" என்ற துதியின் சந்தத்தில்)
("தானன தானன தானன தானா" என்ற சந்தம். முதற்சீர் தனதன என்றும் வரலாம்.
வடமொழியில் இச்சந்தத்தை - தோதகம் - दोधकम् - என்ற பெயரால் சுட்டுகின்றனர்.)
( Lingashtakam - ब्रह्ममुरारिसुरार्चितलिङ्गम् - ப்ரஹ்ம முராரி சுரார்சித லிங்கம்)
1)
3)
பொங்கெரி மேனியில் நீறணி ஈசன்
ஐங்கணை வேள்பட நோக்கிய ஈசன்
மங்கல மேவிர திக்கருள் ஈசன்
.. வாழ்த்திடு வோம்வினை மாய்த்தருள் ஈசன்.
வி. சுப்பிரமணியன்
2)
அடுத்த இரு பாடகள்:
4)
போர்புரி வேழமு ரித்தருள் ஈசன்
நீர்புரி செஞ்சடை ஏற்றருள் ஈசன்
பேர்பல சொல்லடி யார்க்கருள் ஈசன்
.. வாழ்த்திடு வோம்வினை மாய்த்தருள் ஈசன்.
5)
வலியச லந்தர னைத்தடி ஈசன்
எலியையும் மாவலி ஆக்கிய ஈசன்
நலிவிலன் ஓர்விடை ஏறிய ஈசன்
.. வாழ்த்திடு வோம்வினை மாய்த்தருள் ஈசன்.
வி. சுப்பிரமணியன்
3)
6)
அந்தக னைச்செறு வேலுடை ஈசன்
மந்திர மாமறை ஓதிய ஈசன்
சந்திர னைத்தரி தாழ்சடை ஈசன்
.. வாழ்த்திடு வோம்வினை மாய்த்தருள் ஈசன்.
வி. சுப்பிரமணியன்
4)
5)
7)
நான்முக னோர்தலை கொய்தருள் ஈசன்
மான்மறி மாமழு ஏந்திய ஈசன்
தேன்மலி மாமலர் ஆர்சடை ஈசன்
.. வாழ்த்திடு வோம்வினை மாய்த்தருள் ஈசன்.
வி. சுப்பிரமணியன்
6)
8)
பத்துமு கன்தனை ஊன்றிய ஈசன்
மத்திடு மாகடல் நஞ்சணி ஈசன்
சத்தியை வாமமி ருத்திய ஈசன்
.. வாழ்த்திடு வோம்வினை மாய்த்தருள் ஈசன்.
9)
ஏனமும் அன்னமும் நேடிய ஈசன்
கானக மாநட மாடிடும் ஈசன்
போனக மாவிடம் உண்டருள் ஈசன்
.. வாழ்த்திடு வோம்வினை மாய்த்தருள் ஈசன்.
வி. சுப்பிரமணியன்
7)
10)
புன்னெறி யார்க்கிலன் ஆகிய ஈசன்
தன்னடி யார்க்கொரு நற்றுணை ஈசன்
வன்னம னைக்கழ லாலுதை ஈசன்
.. வாழ்த்திடு வோம்வினை மாய்த்தருள் ஈசன்.
வி. சுப்பிரமணியன்
8)
9)
இப்பதிகத்தின் நிறைவுப் பாடல்:
11)
வெண்பொடி மார்பிலி லங்கிடும் ஈசன்
தண்புன லைச்சடை வைத்தருள் ஈசன்
பெண்புடை யில்திகழ் அன்புடை ஈசன்
.. வாழ்த்திடு வோம்வினை மாய்த்தருள் ஈசன்.
வி. சுப்பிரமணியன்
குறிப்பு: இப்பதிகத்தில் சிவபெருமானின் அட்டவீரட்டச் செயல்களும் சுட்டப்பெறுகின்றன -
திரிபுரம் எரித்தது (திருவதிகை), ஜலந்தரனை வதம் செய்தது (திருவிற்குடி), தக்கன் யாகம் அழித்து (திருப்பறியலூர்), மன்மதனை எரித்தது (திருக்குறுக்கை), எமனை அழித்தது (திருக்கடவூர்), யானையை வதம் செய்தது (திருவழுவூர்), அந்தகனை அழித்தது (திருக்கோவலூர்), பிரமன் தலை கொய்தது (திருக்கண்டியூர்).
10)
2015-12-29
கொள்ளிக்காடு (இத்தலம் திருவாரூர் - திருத்துறைப்பூண்டி இடையே உள்ளது)
(பஞ்சின் மெல்லடியம்மை சமேத அக்னீஸ்வரர் கோயில்)
---------------------------------
(எழுசீர்ச் சந்த விருத்தம் - "தான தானன தான தானன தான தானன தானனா" என்ற சந்தம்;
முதற்சீர் "தனன" என்றும் சில பாடல்களில் வரலாம்);
(சம்பந்தர் தேவாரம் - 3.39.1 - "மானினேர்விழி மாதராய்வழு திக்குமாபெருந் தேவிகேள்");
(சுந்தரர் தேவாரம் - 7.36.1 - "காரு லாவிய நஞ்சை யுண்டிருள் கண்டர் வெண்டலை யோடுகொண்");
1)
செஞ்சொ லார்தமிழ் மாலை யாலுன செம்பொ னார்கழல் ஏத்தினேன்
அஞ்சி னோடொரு நான்கு கோள்களும் ஆசி லாநலம் நல்குமே
பஞ்சின் மெல்லடி மாது பங்கமர் பண்ப னேஎரி போல்திகழ்
குஞ்சி மேல்நதி கூவி ளம்புனை கொள்ளிக் காடுறை கூத்தனே.
வி. சுப்பிரமணியன்
கொள்ளிக் காடுறை கூத்தனே.
தான தானன தானனா
6.5) சீரின் ஈற்றில் வரும் மெய்யெழுத்தைச் சில இடங்களில் அலகிடுவதில்லை. (ஒரோவழி சீரின் இடையே உள்ள மெய்யெழுத்து அலகு பெறாமையையும் காணலாம். சில தலப்பெயர்கள் பதிகத்தில் வருமிடத்தில் இப்படிச் சீரினிடையே உள்ள ஒற்றுகள் அலகு பெறாது வரக்காணலாம்).
அடுத்த இரு பாடல்கள்:
2)
நீல மாமணி கண்ட னேஉனை நித்த லுந்தொழு தேத்தினேன்
சூல னேமலை போன்ற வல்வினை தூள தாகிட நல்கிடாய்
ஏல வார்குழ லாளை ஓர்புடை ஏற்ற ஏறமர் ஏந்தலே
கோல வெண்பிறை சூடி னாய்அணி கொள்ளிக் காடுறை கூத்தனே.
3)
வம்பு நாண்மலர் தூவி நின்னடி வாழ்த்தி னேன்இடர் மாய்த்திடாய்
அம்பை ஏவிய மன்ம தன்றனை ஆகம் அற்றவன் ஆக்கினாய்
செம்பொ னேர்சடை மீது வெண்மதி சீற ராவொடு சேர்த்தினாய்
கொம்ப னாளொரு கூற னேஅணி கொள்ளிக் காடுறை கூத்தனே.
வி. சுப்பிரமணியன்
2015-12-29
கொள்ளிக்காடு (இத்தலம் திருவாரூர் - திருத்துறைப்பூண்டி இடையே உள்ளது)
(பஞ்சின் மெல்லடியம்மை சமேத அக்னீஸ்வரர் கோயில்)
---------------------------------
(எழுசீர்ச் சந்த விருத்தம் - "தான தானன தான தானன தான தானன தானனா" என்ற சந்தம்;
முதற்சீர் "தனன" என்றும் சில பாடல்களில் வரலாம்);
(சம்பந்தர் தேவாரம் - 3.39.1 - "மானினேர்விழி மாதராய்வழு திக்குமாபெருந் தேவிகேள்");
(சுந்தரர் தேவாரம் - 7.36.1 - "காரு லாவிய நஞ்சை யுண்டிருள் கண்டர் வெண்டலை யோடுகொண்");
1)
அடுத்த இரு பாடல்கள்:
கொம்பனாள் = கொம்பு அன்னாள் = மெலிந்தவள்?
அடுத்த இரு பாடல்கள்:
4)
பொடிய ணிந்தடி போற்றி னேன்வினை போக்கி இன்பம ளித்திடாய்
கொடிய கூற்றுதை கால னேஉமை கூற னேஒரு கையினில்
வடியி லங்கிய சூல னேமழு வாள னேவலம் ஆர்தரு
கொடியின் மேல்விடை காட்டி னாய்அணி கொள்ளிக் காடுறை கூத்தனே.
5)
விமல னேஅடி வாழ்த்தி னேன்வினை வீட்டி இன்பம ளித்திடாய்
கமல மென்றொரு கண்ணை இட்டரி கைதொ ழப்படை நல்கினாய்
உமைய வட்கொரு கூறு கந்தளி உம்ப னேஉல குய்ந்திடக்
குமைவி டந்தரி கண்ட னேஅணி கொள்ளிக் காடுறை கூத்தனே.
வி. சுப்பிரமணியன்
அடுத்த இரு பாடல்கள்:
2)
3)
அடுத்த இரு பாடல்கள்:
4)
பொடிய ணிந்தடி போற்றி னேன்வினை போக்கி இன்பம ளித்திடாய்
5)
அடுத்த இரு பாடல்கள்:
6)
பொங்கும் அன்பொடு போற்றி னேன்வினை போக்கி இன்பம ளித்திடாய்
வெங்க ணேறமர் வேந்த னேபுரம் வேவ மேருவி லேந்தினாய்
அங்கி வாழ்த்திய அண்ண லேநதி ஆர்ந்த வேணிய தன்மிசைக்
கொங்கி லங்கிய கொன்றை யாய்அணி கொள்ளிக் காடுறை கூத்தனே.
அங்கி - அக்னி;
(அக்கினிதேவன் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டதைத் தலவரலாற்றிற் காண்க);
7)
வல்ல வாறுனை வாழ்த்தி னேன்எனை வாட்டு வல்வினை மாய்த்திடாய்
நல்ல நீறணி மார்பில் ஓர்விட நாக மும்புனை நாதனே
வெல்லு மாபடை பார்த்த னுக்கருள் வேட னேகரி காடனே
கொல்லை ஏறமர் கொற்ற வாஅணி கொள்ளிக் காடுறை கூத்தனே.
வி. சுப்பிரமணியன்
4)
5)
அடுத்த இரு பாடல்கள்:
8)
பாவி னாலடி வாழ்த்தி னேன்வினை பாற வேஅருள் நல்கிடாய்
மாவி லங்கலை ஆட்டி னானவன் வாய்கள் பத்தழ ஊன்றினாய்
தேவி பங்கமர் செல்வ னேஒரு சேவ தேறிய சேவகா
கூவி ளந்திகழ் குஞ்சி யாய்அணி கொள்ளிக் காடுறை கூத்தனே.
9)
மாண டிப்புகழ் பாடி னேன்நலம் மல்க வேஅருள் நல்கிடாய்
ஆண வத்தொடு நேடு மாலயன் அஞ்சி ஏத்திட மாவொளித்
தூண தாகிய மூர்த்தி யேதிரி சூல னேபரி சுத்தனே
கோண லார்மதி சூடி னாய்அணி கொள்ளிக் காடுறை கூத்தனே.
வி. சுப்பிரமணியன்
6)
7)
இவ்விரு பாடல்களோடு இப்பதிகம் நிறைவுறுகின்றது:
10)
நன்று தானறி யாத தெண்ணர்சொல் நம்பி டேல்நலம் வேண்டினீர்
நின்று மாமலர் தூவி வாழ்த்திடும் நேய ருக்கிடர் நீக்குவான்
மன்றில் மாநடம் ஆடு மன்னவன் வன்னி கூவிள மாசுணம்
கொன்றை சூடிய சென்னி யான்அணி கொள்ளிக் காடுறை கூத்தனே.
11)
பரவி உன்னடி போற்றி னேன்வினை பாற்றி டாய்உமை பங்கனே
சிரம துண்கலம் ஆக ஊர்ப்பலி தேர்ந்து ழன்றிடு செல்வனே
அரவை மார்பினில் ஆர மாஅணி ஐய னேவட வாலமர்
குரவ னேமறை நாவ னேஅணி கொள்ளிக் காடுறை கூத்தனே.
வி. சுப்பிரமணியன்
8)
9)
2016-01-02
கொள்ளிக்காடு
(பஞ்சின் மெல்லடியம்மை சமேத அக்னீஸ்வரர் கோயில்)
---------------------------------
(கலிவிருத்தம் - "விளம் விளம் மா விளம்" என்ற வாய்பாடு);
(திருநாவுக்கரசர் தேவாரம் - 4.11.1 - "சொற்றுணை வேதியன் சோதி வானவன்");
(சம்பந்தர் தேவாரம் - 3.22.1 - "துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும்");
1)
இளவிடை அதன்மிசை ஏறி உண்பலி
கொளவரு செல்வனைக் கொன்றைத் தாரனைக்
குளமணி வயல்திகழ் கொள்ளிக் காடுறை
வளர்மதி சூடியை வாழ்த்தி வாழ்மினே.
வி. சுப்பிரமணியன்
2)
இராவினில் ஆடியை எய்த்து வந்தடி
பராவிய சுரர்உயப் பரிந்த கண்டனைக்
குராவணி சடையனைக் கொள்ளிக் காடுறை
அராவணி ஐயனை அடைந்து வாழ்மினே.
வி. சுப்பிரமணியன்
2016-01-02
கொள்ளிக்காடு
(பஞ்சின் மெல்லடியம்மை சமேத அக்னீஸ்வரர் கோயில்)
---------------------------------
(கலிவிருத்தம் - "விளம் விளம் மா விளம்" என்ற வாய்பாடு);
(திருநாவுக்கரசர் தேவாரம் - 4.11.1 - "சொற்றுணை வேதியன் சோதி வானவன்");
(சம்பந்தர் தேவாரம் - 3.22.1 - "துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும்");
1)
3)
பஞ்சினும் மெல்லடிப் பாவை பங்கனைச்
செஞ்சுடர் வண்ணனைத் தேவ தேவனைக்
குஞ்சியிற் பிறையனைக் கொள்ளிக் காடுறை
மஞ்சனை நாள்தொறும் வாழ்த்தி வாழ்மினே.
வி. சுப்பிரமணியன்
2)
அடுத்த இரு பாடல்கள்:
4)
முடிமிசை ஆற்றனை முக்கண் மூர்த்தியைப்
பொடியணி மார்பினில் புற்ற ராவனைக்
கொடிமிசை ஏற்றனைக் கொள்ளிக் காடுறை
அடிகளை அடிதொழ அல்லல் இல்லையே.
5)
மான்றிகழ் கையனை மாக டல்விடம்
தோன்றிடு கண்டனைச் சுடலை நீறணி
கோன்றனை வயலணி கொள்ளிக் காடுறை
தோன்றலைத் துதித்திடத் துயரம் தீருமே.
வி. சுப்பிரமணியன்
3)
6)
முனிவருக் கருமறை முன்வி ரித்தருள்
புனிதனைக் கோள்களும் போற்றும் பாதனைக்
குனிமதி சூடியைக் கொள்ளிக் காடுறை
இனியனை ஏத்திட என்றும் இன்பமே.
வி. சுப்பிரமணியன்
4)
5)
2020-12-03
சந்தக்கலவை அந்தாதி - (பொது)
--------------------------
(மண்டலித்து வரும் அந்தாதி - 11 பாடல்கள் - "காக்கும்" என்று முதற்பாடல் தொடங்கிக் "காக்குமே" என்று கடைசிப்பாடல் முடிகின்றது);
(சந்தக் கலிவிருத்தம் - பல்வகைச் சந்தங்கள்)
1) --- (சந்த வஞ்சித்துறை - தான தானனா) ---
(சம்பந்தர் தேவாரம் - 1.92.1 - "வாசி தீரவே காசு நல்குவீர்")
காக்கும் அண்ணலே
ஆர்க்கும் வல்வினை
நீக்கும் நாமமென்
நாக்கில் மன்னவே.
2) --- (சந்த வஞ்சிவிருத்தம் - தானா தனனா தனதானா) ---
(சம்பந்தர் தேவாரம் - 1.37.2 - "எண்ணொன் றிநினைந் தவர்தம்பால்")
மன்னே விடமார் மணிகண்டா
பொன்னே மணியே புரிநூலாய்
முன்னோர் கணையால் அரணெய்தாய்
அன்னே அடியேற் கருளாயே.
3) --- (சந்தக் கலிவிருத்தம் - தனதன தனதன தனன தானனா) ---
(சம்பந்தர் தேவாரம் - 3.18.1 - "துளமதி யுடைமறி தோன்று கையினர்")
அருளென அடியவர் அடியை வாழ்த்துவர்
தெருளருள் இறையவ தெரிவை பங்கின
இருளது மிடறிடை இலகும் ஏந்தலே
இருவினை அறுவரம் இனிது நல்கிடே.
4) --- (சந்தக் கட்டளைக் கலித்துறை - தானன தானன தானன தானன தானதனா) ---
(சம்பந்தர் தேவாரம் - 1.116 & 1.117 - இவை கட்டளைக் கலித்துறையில் அமைந்த பதிகங்கள்)
நல்குர வற்றிட நன்மைகள் உற்றிட நம்பியவர்
செல்கதி பெற்றிட எண்ணுரு வில்தரு செம்பெருமான்
பல்கணம் ஆர்த்திட நள்ளிருள் ஆடுப ரம்பரனே
வெல்கொடி மேலொரு வெள்விடை காட்டிய வித்தகனே.
5) --- (சந்த அறுசீர் விருத்தம் - தானன தான தான தானன தான தான) ---
(திருநாவுக்கரசர் தேவாரத்தில் திருநேரிசைப் பதிகங்கள் - "விளம் மா தேமா" அமைப்பு)
வித்தக நீல கண்ட .. வெண்பொடி ஆரு மேனி
நித்திய நெற்றி மீது .. நேத்திர நம்பி னார்க்கு
முத்தியை நல்கு கின்ற .. மூத்தவ வாம பாகம்
சத்தியை வைத்து கந்த .. சங்கர போற்றி போற்றி.
6) --- (சந்த எழுசீர் விருத்தம் - தான தானன தான தானன தான தானன தானனா) ---
(சம்பந்தர் தேவாரம் - 3.39.1 - "மானி னேர்விழி மாத ராய்வழு திக்கு மாபெருந் தேவிகேள்")
(சுந்தரர் தேவாரம் - 7.33.1 - "பாறு தாங்கிய காட ரோபடு தலைய ரோமலைப் பாவையோர்")
போற்றி செய்தடி வாழ்த்தி னாருயிர் பொன்று நாளென வந்தடை
கூற்று வன்றனை மாளு மாறடி கொண்டு தைத்தருள் கூத்தனே
ஆற்று நீரிள நாகம் ஒண்பிறை ஆரும் அஞ்சடை அண்ணலே
தோற்றம் ஈறிவை அற்ற முக்கண தொண்ட னேற்கருள் ஐயனே.
பதம் பிரித்து:
போற்றிசெய்து அடி வாழ்த்தினார் உயிர் பொன்றும் நாள் என வந்து அடை
கூற்றுவன்தனை மாளுமாறு அடி கொண்டு உதைத்தருள் கூத்தனே;
ஆற்று-நீர் இள-நாகம் ஒண்-பிறை ஆரும் அம் சடை அண்ணலே
தோற்றம் ஈறு இவை அற்ற முக்கண தொண்டனேற்கு அருள் ஐயனே.
7) --- (சந்த அறுசீர் விருத்தம் - தான தான தானனா தான தான தானனா) ---
(திருஞானசம்பந்தர் தேவாரம் - 3.52.1 - "வீடலால வாயிலாய் விழுமியார்க ணின்கழல்)
ஐய னேஅ ராவினை .. ஆர்க்கும் நாண தாக்கினாய்
செய்ய னேஇ டப்புறம் .. தேவி பாகம் ஆயினாய்
மெய்ய னேவி ருத்தனே .. வேத னேமி டற்றினில்
மைய னேவெ னத்தினம் .. வாழ்த்தில் ஆரும் இன்பமே.
8) --- (சந்தக் கலித்துறை - தான தானன தானன தானன தானா) ---
இன்பன் எம்மிறை வெற்பையி டந்தவ ரக்கற்
றுன்பம் உற்றிட ஊன்றிவ ரந்தரு தோன்றல்
முன்பு முப்புரம் நக்கெரி முக்கணன் நெஞ்சே
தென்ப ராய்த்துறை மேவிய செல்வனை நண்ணே.
பதம் பிரித்து:
இன்பன் எம் இறை வெற்பை இடந்த அரக்கன்
துன்பம் உற்றிட ஊன்றி வரம் தரு தோன்றல்;
முன்பு முப்புரம் நக்கு எரி முக்கணன்; நெஞ்சே,
தென் பராய்த்துறை மேவிய செல்வனை நண்ணே.
9) --- (சந்தக் கலிவிருத்தம் - தானா தனனா தனனா தனனா) ---
(சம்பந்தர் தேவாரம் - 2.18.2 - "சிந்தா யெனுமால் சிவனே யெனுமால்")
நண்ணற் கரியான் அரிநான் முகனார்க்
கெண்ணித் தொழுவார்க் கெளியான் மதியக்
கண்ணிச் சடையான் கரியீ ருரியான்
கண்ணெற் றியினான் கழல்சேர் மனமே.
10) --- (சந்த வஞ்சிவிருத்தம் - தனாதன தனாதன தானதனா) ---
(இப்பாடலைச் "சம்பந்தர் தேவாரம் - 1.111.1 - அருத்தனை யறவனை யமுதனைநீர்" போலப் பாட இயலும் என்று கருதுகின்றேன்)
மனத்தினில் இருட்டினர் வார்த்தைவிடும்
அனைத்திலும் இருப்பவன் அம்பலவன்
தனத்தொடு சுகந்தரு சங்கரனை
நினைத்திடும் மகிழ்ச்சியும் நிச்சயமே.
11) --- (சந்த வஞ்சித்துறை - தனதனா தானனா) ---
சயமெலாம் தந்திடும்
கயமுலாம் வேணியன்
இயலுமா றேத்துதல்
செயநமைக் காக்குமே.
பிற்குறிப்புகள்:
1. சந்தக்கலவை - சந்தங்களின் கலவை - "பல சந்தங்கள் திகழும் பதிகம்" என்ற பொருளில்; (சந்தம் - செய்யுளின் வண்ணம்);
2. பாடல்களில் சீர்களின் எண்ணிக்கை முறையே 2, 3, 4, 5, 6, 7, 6, 5, 4, 3, 2 என்றவாறு அமைந்த பதிகம்;
3. இருஞ்சீர் அடிகளைப் போற்றும் பதிகம் இருசீர் அடிகளில் தொடங்கி இருசீர் அடிகளில் நிறைவுறுகின்றது. (இரும் சீர் அடிகள் - பெரும் புகழை உடைய சுவாமி); (திருவாசகம் - திருவெம்பாவை - 8.7.7 - "உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்");
வி. சுப்பிரமணியன்
7)
நீர்மலி சடையனை நெற்றிக் கண்ணனைக்
கார்மலி கண்டனைக் கால காலனைக்
கூர்மழு வாளனைக் கொள்ளிக் காடுறை
ஓர்விடைப் பாகனை உன்னி உய்ம்மினே.
வி. சுப்பிரமணியன்
6)
8)
வரையசை அரக்கனை வாட ஊன்றிய
அரையனை அறஞ்சொல ஆலின் கீழமர்
குரவனை வயலணி கொள்ளிக் காடுறை
அரவனை அடைந்தவர்க் கல்லல் இல்லையே.
வி. சுப்பிரமணியன்
7)
--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/8jD1kRHaDVk/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCNJpL8ROOtQ1r97f%2B5YvWYYvGYw9TXBqAuAoapYc0HqRA%40mail.gmail.com.
9)
கழல்முடி நேடிய கண்ணன் நான்முகன்
தொழவுயர் சோதியைத் தோற்றம் இல்லியைக்
குழகனைச் செய்யணி கொள்ளிக் காடுறை
மழவிடைப் பாகனை வாழ்த்தி வாழ்மினே.
வி. சுப்பிரமணியன்
8)
இவ்விரு பாடல்களாடு இப்பதிகம் நிறைவுறுகின்றது.
10)
நித்தலும் பொய்யுரை நீசர் சொல்விடும்
அத்தியின் உரியனை அந்த கன்றனைக்
குத்திய சூலனைக் கொள்ளிக் காடுறை
மத்தனை வாழ்த்துமின் மல்கும் இன்பமே.
11)
மன்றினில் ஆடியை மதியஞ் சூடியை
அன்றினர் முப்புரம் அழலில் மூழ்கிடக்
குன்றவில் ஏந்தியைக் கொள்ளிக் காடுறை
கொன்றையந் தாரனைக் கும்பிட் டுய்ம்மினே.
வி. சுப்பிரமணியன்
9)
--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/8jD1kRHaDVk/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCNiACTZLOsF%2Byb5%3Dcn-MCwRH8h4Dy4s-Cur%2BA%2B%2BBHeCOA%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAE_cqFTipV8-MwjZuJ_1uDg6vkL64AhxhnatVAcOkFH3QMz3NQ%40mail.gmail.com.
அடுத்த பதிகத்தின் முதல் இரு பாடல்கள்:
2016-01-11
கள்ளில் (இக்காலத்தில் "திருக்கண்டலம்");
----------------
(வஞ்சித்துறை - "தானா தானனா" என்ற சந்தம்;
தானா என்பது தனனா என்றும் வரும்)
(சம்பந்தர்
தேவாரம் - 1.92.1 - "வாசி
தீரவே காசு நல்குவீர்")
(சம்பந்தர் தேவாரம் - 1.95.2 - "கருதார் புரமெய்வர் எருதே யினிதூர்வர்")
1)
புவியோர் போற்றிடத்
தவியா வாழ்வருள்
சிவனார் மேயது
கவினார் கள்ளிலே.
2)
இருதாள் ஏத்துவார்க்
கருள்வார் அண்ணலார்
எருதூர் ஈசனார்
கருதூர் கள்ளிலே.
வி. சுப்பிரமணியன்
/ மதியழகன் /மதியழகன் = சோமசுந்தரன் ?
/ ஒருமாக் கனலென /க் ?
/ உழுமால் எழுவயன் /
உழுமால் உயரயன் காண்பறியா என்பது அருமையாக உள்ளது. நன்றி.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCMUyuFM3mmyVDak6uLSw2Mv7JDNNf0%3DmuCVR6WibZEhuQ%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/8jD1kRHaDVk/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CALz5qbwDQPo%3DiQudhNXCy1jfmOOVSS4L2cyJQ7t1js0AprvcRg%40mail.gmail.com.
அடுத்த இரு பாடல்கள்:
3)
கூரார் சூலனார்
காரார் கண்டனார்
நீரார் வேணியார்
ஊராம் கள்ளிலே.
4)
படநா கத்தினை
வடமாப் பூண்டவர்
இடமோர் மங்கையார்
இடமாம் கள்ளிலே.
வி. சுப்பிரமணியன்
2016-01-11
கள்ளில் (இக்காலத்தில் "திருக்கண்டலம்");
----------------
(வஞ்சித்துறை - "தானா தானனா" என்ற சந்தம்;
தானா என்பது தனனா என்றும் வரும்)
(சம்பந்தர் தேவாரம் - 1.92.1 - "வாசி தீரவே காசு நல்குவீர்")(சம்பந்தர் தேவாரம் - 1.95.2 - "கருதார் புரமெய்வர் எருதே யினிதூர்வர்")
1)
2)
கலை 2 | kalai n. <kalā. 1. Portion; அமிசம். தத்துவக் கலையினில் (ஞானா. 1, 26). 2. Moon's phase corresponding to a titi; |
--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/8jD1kRHaDVk/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCPo5z71rs%2B39zZ1Khv_UsBf_i3zP8mny8kjyTp8%3Dmp0_A%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/8jD1kRHaDVk/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCNUeeCGA5Z1tGqehuL5k4ANJ%2Bai4K5rvTSo%2B_NVeSNZ4w%40mail.gmail.com.
5)
பிறையார் சென்னியாய்
இறைவா என்பவர்
குறைதீர் அங்கணன்
உறைவாம் கள்ளிலே.
வி. சுப்பிரமணியன்
3)
4)
6)
நரரோ டும்பரும்
பரவும் தாளினன்
அரவம் சூடிய
அரனூர் கள்ளிலே.
வி.
சுப்பிரமணியன்
அடுத்த இரு பாடல்கள்:
7)
சுரும்பார் கொன்றையாய்
கரும்பே காவெனத்
தரும்பே ரன்பினன்
விரும்பூர் கள்ளிலே.
8)
முடிகள் பத்தினன்
படிய ஊன்றினார்
துடியார் கையினர்
குடியாம் கள்ளிலே.
வி. சுப்பிரமணியன்
6)
முடிகள் பத்தினன்
படிய ஊன்றினார்
பொருளென்ன?
கோபால்.
8)
முடிகள் பத்தினன்
படிய ஊன்றினார்
துடியார் கையினர்
குடியாம் கள்ளிலே.
முடிகள் பத்தினன் படிய ஊன்றினார் - பத்துத்தலைகளை உடைய இராவணன் படியும்படி மலைமேல் ஒரு விரலை ஊன்றியவர்;
குறிப்பு: "முடிகள் பத்தினன்" என்ற பிரயோகத்தை ஒட்டிய ஒரு பழம் பிரயோகம்: (தேடியதில் கண்டது).
கல்லாடம் - செய்யுள் 95 - "பெருநிலத் தேவர்கண் மறைநீ ருகுப்ப....." - அடி-25 - "வுழறேர் பத்தினன் மகவென நாறி" =
"உழல் தேர் பத்தினன் மகவு என நாறி" = ஓடுகின்ற தேர் பத்தையுடையோன் என்னும் பொருள்படும் பெயரையுடைய தயரதனுக்கு மகனாகத் தோன்றி;
(http://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=70&pno=664 )
முடிகள் பத்தினன் படிய ஊன்றினார் - பத்துத்தலைகளை உடைய இராவணன் படியும்படி மலைமேல் ஒரு விரலை ஊன்றியவர்;
8)
முடிகள் பத்தினன்
படிய ஊன்றினார்
ஐதுடியார் கையினர்
9)
அயன்மால் நேடிட
உயர்ந்தான் கந்தனைப்
பயந்தான் சார்வென
நயந்தான் கள்ளிலே.
வி. சுப்பிரமணியன்
7)
8)
இவ்விரு பாடல்களோடு இப்பதிகம் நிறைவுறுகின்றது.
10)
நீற்றைப் பூசிடார்
கூற்றைத் தள்ளுவீர்
ஏற்றன் கள்ளிலைப்
போற்றி வாழ்மினே.
11)
வெள்ளம் சேர்சடை
வள்ளல் மேவிய
கள்ளில் கைதொழ
விள்ளும் பாவமே.
வி. சுப்பிரமணியன்
9)
2016-01-17
சிக்கல்
----------------
(சந்தக் கலிவிருத்தம் - "தானதன தானதன தானதன தானா" என்ற சந்தம்);
(சம்பந்தர் தேவாரம் - 2.33.1 - "ஏடுமலி கொன்றையர விந்துவிள வன்னி")
1)
கானிலலை ஆனையுரி போர்த்தவிறை கையில்
மானிலகு சூலமழு வாளுடைய மைந்தன்
தேனிலவு சோலையணி சிக்கலுறை செல்வன்
வானிலவு சூடிகழல் வாழ்த்தவரும் இன்பே.
வி. சுப்பிரமணியன்
2)
அங்கியினை ஏந்திநடம் ஆடுமரன் நாகம்
அங்கமணி ஆரழகன் அஞ்சடையில் நீரன்
தெங்குமலி சோலையணி சிக்கலுறை செல்வன்
மங்கையொரு பங்கனடி வாழ்த்தவரும் இன்பே.
வி. சுப்பிரமணியன்
2016-01-17
சிக்கல்
----------------
(சந்தக் கலிவிருத்தம் - "தானதன தானதன தானதன தானா" என்ற சந்தம்);
(சம்பந்தர் தேவாரம் - 2.33.1 - "ஏடுமலி கொன்றையர விந்துவிள வன்னி")
1)
3)
வென்றிவிடை ஊர்தியுடை வேந்தனடி யாரைக்
கொன்றுவிட எண்ணிவரு கூற்றையுதை கோமான்
தென்றலினில் வாசமலி சிக்கலுறை செல்வன்
கொன்றையணி கூத்தனடி கூறவரும் இன்பே.
வி. சுப்பிரமணியன்
2)
4)
வந்தடியில் வீழ்மதியை வாழமுடி வைத்தான்
கந்தமலர் அம்புதொடு காமனையெ ரித்தான்
செந்தமிழின் ஆரமொலி சிக்கலுறை செல்வன்
நந்தியவன் நாமமணி நாவர்மகிழ் வாரே.
வி. சுப்பிரமணியன்
3)
5)
துன்றியிமை யோர்தொழுது தூமலர்கள் தூவ
அன்றினவர் மூவரணம் அட்டபரன் அன்பர்
தென்றமிழி னால்பரவு சிக்கலுறை செல்வன்
என்றுமுள ஈசனடி ஏத்தவரும் இன்பே.
வி. சுப்பிரமணியன்
4)
6)
மங்கலமெ லாமருளும் மன்னனரு நஞ்சை
நுங்கிமணி ஆக்கியவன் நூல்திகழு மார்பன்
திங்களணி சென்னியிறை சிக்கலுறை செல்வன்
எங்களரன் அங்கழலை ஏத்தவரும் இன்பே.
வி. சுப்பிரமணியன்
5)
7)
கூறரிவை ஆகியவன் நீறணிகு ணத்தன்
ஆறரவம் ஆர்சடையன் ஆரமென மார்பில்
சீறரவம் ஆருமிறை சிக்கலுறை செல்வன்
ஏறமரும் எந்தையடி ஏத்தவரும் இன்பே.
வி. சுப்பிரமணியன்
6)
8)
தண்மதியி லாதுமலை தன்னையசை மூடன்
புண்மிகவும் ஆகவிரல் ஊன்றியபு ராணன்
திண்மதில்கள் அட்டவிறை சிக்கலுறை செல்வன்
வெண்மதியன் நற்கழலை வேண்டவரும் இன்பே.
வி. சுப்பிரமணியன்
7)
9)
போதனரி காண்பரிய பொங்கழல தானான்
ஓதமுமிழ் நஞ்சுதனை உண்டமணி கண்டன்
சீதமலி சோலையணி சிக்கலுறை செல்வன்
போதமுரை ஆலனடி போற்றவரும் இன்பே.
வி. சுப்பிரமணியன்
8)
10)
வீணருரை வெற்றுமொழி விட்டொழிமின் வில்லின்
நாணரவ மாகநகர் மூன்றவிய எய்தான்
சேணணவு சோலையணி சிக்கலுறை செல்வன்
பூணரவன் நம்பனடி போற்றவரும் இன்பே.
வி. சுப்பிரமணியன்
9)
இப்பதிகத்தின் நிறைவுப் பாடல்:
11)
பூவரவம் ஆறுபிறை பொற்சடையில் ஏற்றான்
மூவரணம் ஆரழலில் மூழ்கநகை செய்து
தேவரிடர் தீர்த்தவிறை சிக்கலுறை செல்வன்
சேவடியை வாழ்த்துமவர் செல்வமுடை யோரே.
வி. சுப்பிரமணியன்
10)
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCNG0UbQMBAxuGjzBC%2B5hxuac%2B5KrqVsnY74FxktjaDTyg%40mail.gmail.com.
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/8jD1kRHaDVk/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CACu9XFXmMeWtDww%2BOrgfCNP%2B-akPQz7%3D_-GL_xxdaY5KHUwFZA%40mail.gmail.com.
2016-01-19
வேட்களம்
----------------
(வஞ்சிவிருத்தம் - "தானன தானன தானதனா" என்ற சந்தம்;
தானன என்பது தனதன என்றும், தானதனா என்பது தனதனனா / தானதான என்றும் வரலாம்);
(சம்பந்தர் தேவாரம் - 1.114.1 - "குருந்தவன் குருகவன் கூர்மையவன்")
1)
இசைமலி தாளிணை ஏத்துமதி
அசைவறச் சடைமிசை அணியரனூர்
விசைமலி கணைதொடு வேட்டுவனாய்
விசயனுக் கருளிய வேட்களமே.
வி. சுப்பிரமணியன்