ஒவ்வாத இந்து மதம் எனும் பதிவு!

287 views
Skip to first unread message

சொ. வினைதீர்த்தான்

unread,
Dec 25, 2018, 9:42:24 AM12/25/18
to mintamil, vallamai, தமிழ் மன்றம்
கீழே எனக்குப் புலனத்தில் வந்த ஒரு பதிவினை நண்பர்கள் பார்வைக்குப் பகிர்ந்துள்ளேன்.

என் சர்டிபிகேட்டில் இந்து என்று இருக்கிறது. யாரோ பள்ளி எழுத்தர் எழுதியது. ஆனால் ஒரு போதும் நான் இந்து என்று உணர்ந்ததில்லை.

தமிழன் என்று உணர்ந்திருக்கிறேன். சைவன் என்றும் நினைப்புண்டு. இந்தியன் என்றும் பெருமை உண்டு.

இந்து என்பது திணிக்கப்பட்டதாக ஏனோ ஒரு எண்ணம். 

பதிவில் கூறப்பட்டுள்ளதில் 10ல் உள்ள திருமுறை, திவ்விய பிரபந்தம் என்ற இரண்டு சொற்களைத் தவிர வேறொன்றும் எனக்குச் சொந்தமானதில்லை. திருக்குறள், திருமூலர் என்ற நம் பாட்டன்கள் இந்தப் பதிவு எழுதியவரால் ஏற்றுக்கொள்ளப்பட கூட இல்லை. 10 கோடி தமிழனை ஒதுக்கி இந்த இந்து உணர்வாளர்கள் எதனைச் சாதிக்கப்போகிறார்கள் என்ற எண்ணமும் எழுகிறது.

ஒருபோதும் இந்து என்று கூறிக்கொள்ளும் ஆர்.எஸ்.எஸ், மோடி, அமித் ஷா இங்கு ஒட்டப்போவதில்லை. சில சுயநலவாதிகள் காவடி தூக்கினாலும் அவர்களும் வெளித்தள்ளப் பட்டுச் செல்லா காசு ஆவது உறுதி.

ஏதோ என் மனதில் எழுந்ததை எழுதியிருக்கிறேன். பொறுத்துக்கொள்ளுங்கள் நண்பர்களே. தங்கள் கருத்தினை என்னுடைத தெளிவுக்குப் பதிவுசெய்த வேண்டுகிறேன்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
புலத்தில் வந்த பதிவு:

*நான் இந்துவாக இருக்க விரும்பும் காரணம் :?* ?👇👍

1. கடவுள் இல்லை என்று சொன்னாலும் குற்றவாளி என்று சொல்லாத மதம்.
2. இன்றைய தினத்தில் இத்தனை மணிக்கோ அல்லது தினமுமோ கோயிலுக்கு சென்றே ஆகவேண்டும் என்று வரையறுக்காத மதம்.
3. காசிக்கோ, ராமேஸ்வரதுக்கோ சென்றே ஆக வேண்டும் என்று கட்டளை இடாத மதம்.

4. இந்து மதத்தின் புத்தகத்தின் படி
வாழ்கையை நடத்த வேண்டும் என்று கூறாத மதம்.
5. மத குறியீடுகளை அணிந்தாக வேண்டும் என்று வரையறை செய்யாத மதம்.
6. ஒட்டு மொத்த இந்து சமுகத்தை
கட்டுபடுத்தும் மதத்தலைவர் என்று யாரும் இல்லை.
7. தவறு செய்தவன் சாமியாராக இருந்தாலும் முகத்தில் காரி உமிழும் தெளிவு உண்டு இந்துகளுக்கு.

8. இயற்கையாய் தோன்றியவற்றில் இழி பிறவி என்று ஏதுமில்லை.
👉மரமும் கடவுள்,
👉கல்லும் கடவுள்,
👉நீரும் கடவுள்(கங்கை),
👉காற்றும் கடவுள் (வாயு),
👉குரங்கும் கடவுள் அனுமன்,
👉நாயும் கடவுள் (பைரவர்),
👉பன்றியும் கடவுள் (வராகம்).
9. நீயும் கடவுள், 
நானும் கடவுள்...
பார்க்கும் ஒவ்வொன்றிலும் பரமாத்மா.
10. எண்ணிலடங்கா வேதங்களை கொடுக்கும் மதம். பன்னிருதிருமுறைகள்,
நான்காயிர திவ்யபிரபந்தம்.

பெண் ஆசையை ஒழிக்க
👉இராமாயணம்,
மண் ஆசையை ஒழிக்க
👉மகாபாரதம்,
கடமையின் முக்கியத்துவத்தை உணர்த்த
👉பாகவதம்,
அரசியலுக்கு
👉அர்த்தசாஸ்த்திரம்,
தாம்பத்தியத்திற்கு
👉காம சாஸ்திரம்,
மருத்துவத்திற்கு
👉சித்தா, ஆயுர்வேதம்,
கல்விக்கு
👉வேதக் கணிதம்,
உடல் நன்மைக்கு
👉யோகா சாஸ்த்திரம்,
கட்டுமானத்திற்கு
👉வாஸ்து சாஸ்திரம்,
விண்ணியலுக்கு
👉கோள்கணிதம்.

11.யாரையும் கட்டாயபடுத்தியோ அல்லது போர்தொடுத்தோ பரப்பப்படாத மதம்.
12. எதையும் கொன்று உண்ணலாம் என்ற உணவு முறையிலிருந்து
"கொல்லாமை " "புலால் மறுத்தல்",
ஜீவகாருண்ய ஒழுக்கம் மற்றும் சைவம் என்ற வரையறையை கொடுத்த மதம்.
13. இந்துக்களின் புனிதநூல்  என்று ஒரு நூலை குறிப்பிடுவது மிகவும் கடினம் ஏனெனில் பெரியோர்கள் அளித்த அனைத்து நூல்களும் புனிதமாகவே கருதப்படுகிறது.
13. முக்தி எனப்படும் மரணமில்லா பெருவாழ்விற்க்கு வழிகாட்டும் மதம்.

14. சகிப்புதன்மையையும், சமாதானத்தையும் போதிக்கும் மதம்.
15. கோயில் என்ற ஒன்றை கட்டி அதில் வாழ்க்கையின் தத்துவத்தையும், உலக இயக்கத்தின் இரகசியத்தையும் உலகிற்கு அளித்த புனிதமதம். 
இன்னுமும் சொல்லிகொண்டே போகலாம்......

இந்துவாக வாழ்வதில் பெருமைகொள்வோம 🙏
இன்னமும் தொடரும்..
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

MUNISAMY MK NATHAN

unread,
Dec 26, 2018, 12:29:05 AM12/26/18
to மின்தமிழ்
வணக்கம் திரு. சொ. வி.

இக்கருத்து புலனங்களில் பல மாதங்களாகவே பரவி வருகின்றது. அடியேன் பங்கு கொள்ளும் சமயப் புலனங்களில் இக்கருத்தைக் கண்டால் உடனே மறுமொழியிட்டு அக்கருத்தை மறுபதிவு செய்ய வேண்டாமென கேட்டுக் கொள்வேன் காரணம் அதை எழுதியவர் உண்மையை அறியாது எழுதிய கருத்தாகும் என்பதை அவர்தம் கருத்தே வெளிப்படுத்துகின்றது. அதைப் படிப்போரும் தவறான முடிவுகளைப் புரிந்து கொள்ள வழியேற்படும். 

இக்கருத்தைப் பதிவிட்டவருக்கு இந்து மதங்களைப் பற்றி எதுவும் தெரியாது என்பது வெள்ளிடைமலை.

இன்றைய இந்து மதங்களில் சமணம் புத்தம் சீக்கியம் தாங்கள் இந்து மதத்தைச் சார்ந்தவர் அல்லர் என்று பிரகடணப்படுத்தி கொண்டு பிரிந்து வெகு காலமாகி விட்டது. இச்சமயங்கள் இறை நம்பிக்கையற்றன.

வேதமும் சரி அதனை ஏற்றுக் கொண்ட சைவ சமயமும் சரி இறைவன் உண்டு என்னும் கோட்பாடு உடயன. அது போலவே வைணவமும்.

இறைவன் உண்டு என்று ஏற்றுக் கொண்டால் மட்டும் அது இந்து மதமாகி விடாது. அதனையொட்டிய வினைக் கோட்பாடும், மறுபிறவிக் கொள்கையையும் ஏற்றுக் கொண்ட தத்துவ நெறிகளை மட்டுமே தென்னாடுடைய சைவ சமயம் ஓர் ஆன்மிக வாழ்க்கைக்குறிய நெறியாக ஏற்றுக் கொள்கின்றது.

தென் இந்திய தமிழரில், வைணவம் நீங்கலாக, பெரும்பாண்மையோர் பின்பற்றுவது சைவ சமயமே. தான் பின்பற்றி வாழ்வது சைவ சமயம் என்று கூட தெளிவில்லாத ஒருவர் எழுதிய கருத்துதான் அவ்வாறு புலனத்தில் பரவப்பட்டு வருகின்றது.

எல்லா மதங்களும் ஒழக்கத்தை முன் நிறுத்தி வழுவில்லாமல் வாழ வேண்டுகின்றன. இதற்கு இந்து மதங்கள் விதி விலக்கல்ல. ஆகையால் வேத நெறி, சைவ மற்றும் வைணவ நெறிகளும் ஒழுகத்தையே முதன்மையாக வைத்து போற்றுவனவாகும்..

1. கடவுள் இல்லை என்று சொன்னாலும் குற்றவாளி என்று சொல்லாத மதம்.

உயிர் சிற்றறிவு உடையது. அறிவிக்க அறியும் தன்மையுடையது. ஆகையால் ஒருவன் கடவுள் இல்லை என்று சொன்னால் அவனை ஒதுக்கி விடாது அவனுக்கும் இறைவனின் ஆற்றலை மெய்ப்பித்துக் காட்டி இறைத்தன்மையை ஏற்றுக் கொள்ள வைக்கும் ஒழுக்க நெறியுடைய வழிகாட்டிகள் மேற்கூறிய வேத நெறி, சைவ, வைணவச் சமயங்களில் நிறைய உண்டு. அதனால் அயலார் மதங்களைப் போன்று அந்தந்த மத நெறிகளை ஏற்காதோர் அந்த மதத்திற்கு புறம்பானவர் என்று கூறும் வழக்கம் சைவத்தில் இல்லை மாறாக அகச்சமயம் புறச்சமயம் என்னும் பாகுபாடே உண்டு. இதுவே இந்து மதங்கள் இன்றைய நிலையிலும் மக்களின் வாழ்வுக்குத் தொடர்புடைய மதமென்றும் தொடர்ந்து வெற்றி நடை போடுவதற்குக் காரணமாகும்.

2. இன்றைய தினத்தில் இத்தனை மணிக்கோ அல்லது தினமுமோ கோயிலுக்கு சென்றே ஆகவேண்டும் என்று வரையறுக்காத மதம்.

மேற்கூறிய இந்து மதங்களில் வழிபாட்டுக்குரிய வரையறை முறைகள் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. அதில் கோயிலுக்குச் செல்வதும் ஒரு கடமையாகும். புற வழிபாடு செய்வதற்கு அது ஒரு தூய்மையான இடத்தை அளிக்கின்றது. அவ்வாறு செய்ய இயலாதோர் இல்ல வழிபாடு மேற்கொண்டாலே போதுமானதாகும். இல்ல வழிபாடான ஆத்மார்த்த வழிபாடு தன் மனதுக்கும் இறைவனுக்குமுள்ள அந்தரங்க வழிபாடாகும். கோயில் வழிபாடான பரார்த்த வழிபாடு பொது நலம் வேண்டி செய்யப்படும் வழிபாடாகும். ஆகையால் வழிபாட்டுச் சுதந்திரம் சைவ வைணவ சமயங்களில் உண்டு. வேத நெறியில் திருமேனி வழிபாடு கிடையாது. ஆகையால் அவர்களுக்கு கோயில் என்று ஒரு சின்னம் தேவைப்படுவதில்லை. . அக வழிபாடு செய்யவல்ல இந்துக்கள் யோக நெறியிலும் ஞான நெறியிலும் நின்று வழிபாடு செய்ய இடமளிக்கின்றன இந்து மதங்கள். ஆகையால் அயலார் மதங்கள் போன்று தத்தம் வழிபாட்டுத் தலங்களுக்கு கட்டாயம் ஒரு குறிப்பிட்ட நாளில் நேரத்தில் சென்று வழிபட வேண்டுமெனும் நிருவாக கட்டுப்பாட்டு முறையைக் கொண்டிருக்கவில்லை. அவ்வாறு செய்யாது போனால் அது குற்றமென்று கூறி தண்டனை விதிப்பதும் இந்து மதங்களில் இல்லை.

3. காசிக்கோ, ராமேஸ்வரதுக்கோ சென்றே ஆக வேண்டும் என்று கட்டளை இடாத மதம்.

எங்குமிருக்கும் இறைவன் என் உள்ளத்திலும் இருக்கின்றான் என்னும் தெளிவை ஏற்படுத்தியது இந்து மதங்களாகும். ஆகையால் அவனைத் தேடி அங்குமிங்கும் அலைய வேண்டாம் மாறாக உன் உள்ளத்தில் மறைந்து இருப்பதை அறிவாயாக என்று கூறுவதே இந்து மதங்களின் அறிவுரையாகும். அவ்வாறு உணர வழி காட்டுவதற்கு ஒரு செயல் முறை உண்டு. அதில் புண்ணிய தல யாத்திரையும் அடங்கும். இயன்றோர் அதனை வருடாவருடம் மேற்கொள்ளலாம். இயலாதோர் செய்யாதிருப்பதால் இறையருள் நமக்குக் கிட்டாது என்பதாகாது.

அவன் வணங்குபவனுக்கும் வணங்காதவனுக்கும் அருள் புரியும் பெருங்கருணையாளன். அவன் வேண்டும் வேண்டாமை இலாதவன். ஆகையால் அவன் எதையும் எதிர்பார்த்து உயிர்குலங்களுக்காக ஐந்தொழிலாற்றுபவன் அல்ல. இந்த உண்மையைப் புரிந்து கொண்டு செயல்படுவது சைவ நெறியாகும்.

4. இந்து மதத்தின் புத்தகத்தின் படி வாழ்கையை நடத்த வேண்டும் என்று கூறாத மதம்

உயிரின் அனுபவமென்பது கற்ற கல்வியல்ல மாறாக தன் ஐம்புலன்களால் பெறும் அறிவே அனுபவமென்பதாகும். இத்தகைய அனுபவத்தையே அறிவு என்று ஏற்றுக் கொள்கின்றது சைவ சித்தாந்தம். ஆகையால் கண்ணால் பார்ப்பதும் காதால் கேட்பதும், வாயால் பேசுவதும் சுவைப்பதும், மூக்கால் நுகர்வதும் பரிசத்தால் உணர்வதும் அனுபவ அறிவாகும். இதற்கு புத்தகப் புழுவாக வேண்டியிருக்க அவசியமில்லை. கேள்வி ஞானமே போதும். ஆன்ம போதமென்பது இறைவனின் தன்மையை அறிய உதவும். ஆனால் அவன் திருவடியை அடைய உதவாது. எவ்வளவுதான் ஆன்மிக கருத்துக்களைக் கற்றாலும் அது அபரஞானத்தை மட்டுமே அளிக்க இயலும். பரஞானம் என்னும் முற்றறிவு இறைவனை உணர்வதாலேயே அவன் திருவருளைக் கொண்டே பெற முடியும். இதற்கு நூலறிவு உதவாது மாறாக இறை அனுபூதி நிலையே உதவும்.

5. மத குறியீடுகளை அணிந்தாக வேண்டும் என்று வரையறை செய்யாத மதம்.

மத குறியீடு என்பது ஓர் அடையாமேயொழிய அது ஆன்மிகத்திற்குப் பெரும்பாலும் உதவாது. தான் இறை நம்பிக்கையுடையவன் இன்ன மத நெறியைப் பின்பற்றுபவன் என்பதைப் பிற அடியார்களுக்குப் புலப்படுத்த வேண்டி உதவலாம். ஆனால் அதுவே ஆன்மிக வாழ்க்கைக்கு உத்தரவாதமாகாது. ஆகையால், மத குறியீடுகளை அணிவதானது அவரவர் பக்குவ நிலையைப் பொருத்துள்ளது. சித்தர்கள் மதச் சின்னங்களை அணிவதை ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை. ஞான நிலையில் உயந்தோருக்கு மதச் சின்னங்கள் ஒரு பொருட்டல்ல காரணம் அவர்கள் ஆன்ம போதத்தைக் கடந்தவர் ஆவார். ஆங்கே அவர்களுக்கு வேற்றுமை கிடையாது.

7. தவறு செய்தவன் சாமியாராக இருந்தாலும் முகத்தில் காரி உமிழும் தெளிவு உண்டு இந்துகளுக்கு.
8. இயற்கையாய் தோன்றியவற்றில் இழி பிறவி என்று ஏதுமில்லை.

ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படுமென்று திருவள்ளுவர் கூறினார் அல்லவா. ஆகையால் ஒழுக்கமுடையோரே பிறருக்கு வழிகாட்ட வல்லவர் என்பதால் அத்தகையோர் மட்டுமே இறைவனுக்கு முன் நின்று கிரியைகளை மேற்கொள்ள தகுதியுடையோராவார். இவ்வொழுக்கம் இல்லாதவர் இழி குலத்தாரே. இதற்கு சாதியமோ வருணாசிரமமோ ஒர் அளவுகோல் அல்ல.

9. நீயும் கடவுள் நானும் கடவுள்.

இக்கோட்பாடு வேதாந்த நெறிக்குடையதாகும். தென்னாட்டவர் இக்கோட்பாட்டை மேலும் விளக்கி இறைவனும் உயிரும் இரு வேறு பொருள்கள் ஆகையால் சீவன் சிவனாகமாட்டான் என்று தெளிவுற கூறியது சைவ சித்தாந்தமாகும். இதை வேதாந்திகள் ஏற்கமாட்டார். ஆகையால் வேத நெறியாளருக்கும் தென்னாட்டுடைய சைவ சித்தாந்தத்தைப் பின்பற்றுவோருக்கும் இக்கோட்பாட்டில் கருத்து வேறுபாடு தொன்றுதொட்டு உண்டு. அதனால் சித்தாந்த சைவ நெறியாளர் வேதாந்த்தை ஒருவகையில் இறை மறுப்பு கொள்கையுடைய தத்துவமென்றும் கூறுவார் காரணம் அவர்தம் நெறி உயிருக்கும் பதிக்குமுள்ள வேறுபாட்டை அறிந்து தத்துவ விளக்கங்களை அளிக்க இயலாத நெறி என்று அதனை விலக்கி வைப்பர். இதை தமிழரில் 'கற்றோர்' என்பார் பெரும்பாலும் அறிந்து பேசுவதில்லை காரணம் அவர் சமயக் கல்வி பெற்றவரில்லையென்பதேயாம்.

10. எண்ணிலடங்கா வேதங்களை கொடுக்கும் மதம்.

வேதம் ஆகமமென்று இரண்டையும் அவரவர் அறிவுத் தெளிவிற்கு ஏற்றவாறு சிவபெருமானே உலகுக்கு அருளினான் என்பது சிவாகமத்தின் கூற்றாகும். இதனை வேத நெறியாளர் ஏற்பதில்லை. வேதம் சுயம்பு என்பது அவர்தம் கூற்று. இவற்றிலிருந்து வேறு பல வேதங்களைக் கொண்டு பல்வேறு மதங்கள் உருவாகின என்பதே சிவாகமத்தின் கூற்றாகும்.

11.யாரையும் கட்டாயபடுத்தியோ அல்லது போர்தொடுத்தோ பரப்பப்படாத மதம்.

சமயத்தில் அரசியல் கலந்து ஒடுக்குமுறைகள் அடக்குமுறைகள் என்று காலந்தோறும் எல்லா மதங்களிலும் நடந்து வருகின்றது. இது மதங்களின் தவறல்ல மாறாக ஒவ்வொரு மதத்தையும் பின்பற்ற்றுவோரின் தவறாகும். இதற்குப் பல பின்னணிகள் இருக்கும். இந்து மதங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

12. எதையும் கொன்று உண்ணலாம் என்ற உணவு முறையிலிருந்து "கொல்லாமை " "புலால் மறுத்தல்",
ஜீவகாருண்ய ஒழுக்கம் மற்றும் சைவம் என்ற வரையறையை கொடுத்த மதம்.

உயிர் கொலை பாவச் செயல் என்பது மனித நாகரிகம் வளர்ந்த காலத்தில் ஏற்பட்ட ஒழுக்கமாகும். இதை மதங்களின் கொள்கைகளாக எடுத்துக் கொண்டது அவர்தம் நாகரிகச் சிந்தனை வளர்ச்சியைக் காட்டும்.

13. இந்துக்களின் புனிதநூல்  என்று ஒரு நூலை குறிப்பிடுவது மிகவும் கடினம் ஏனெனில் பெரியோர்கள் அளித்த அனைத்து நூல்களும் புனிதமாகவே கருதப்படுகிறது.

இந்து மதம் என்பது ஒரு மதமல்ல மாறாக அது ஒரு வாழ்க்கை நெறி என்பதே இன்றைய ஆய்வாளர் கருத்தாகும். வாழ்க்கை நெறி இந்தியாவின் வெவ்வேறு வட்டார பண்பாட்டை ஒட்டி அமைவதாகும். ஆகையால் வாழ்க்கை நெறிகளை அந்தந்த வட்டார மக்களிடையே பரவ நூல்கள் பலவாயின. நமக்கு திருக்குறள் வாழ்க்கை நெறியைக் காட்டும் நூலாகும். மற்றவருக்கு அவரவர் மொழியில் எழுந்த அற நூல்கள் வழிகாட்டியாகும். இதில் புனிதநூல் அவர்தம் மத நெறிகளைக் கூறிவதென்றால் இந்து மதங்கள் பல என்பதால் புனித நூல்களும் பலவாயின.

அவரவர் மத நெறிகளை அறிந்தோர் அதன் வழி நிற்கின்றனர். இந்து மதங்களைப் பின்பற்றுவோர் மற்ற நெறிகளுக்கும் மதிப்பளித்து நடந்து கொள்கின்றனர். எதையும் அறியாத 'இந்து' எம்மதமும் சம்மதம் என்று வாழ்கின்றார். அது அவரவர் வினைப்பயன். 

13. முக்தி எனப்படும் மரணமில்லா பெருவாழ்விற்கு வழிகாட்டும் மதம்.

இந்து மதங்களில் முத்தி என்பது வெவ்வேறு மத தத்துவங்கள் வெவ்வேறு வகையாகக் கூறுகின்றன. பல்வேறு நதிகளின் மூலம் ஒரு மலையின் உச்சி என்பதையறிந்து அந்த மலையின் உச்சியை நாடுவதே இந்து மதங்களின் குறிக்கோளாகும். அதற்கு வழிகளைப் பல்வேறாக வகுத்துக் கொண்டன. 

14. சகிப்புதன்மையையும், சமாதானத்தையும் போதிக்கும் மதம்.

இத்தகைய தன்மை இந்து மதத்தினரிடையே இதுகாறும் இருந்ததால்தான் அயலார் மதங்கள் இந்தியாவில் காலூன்ற முடிந்தது. இன்றோ ஒண்ட வந்த பிடாரி வீட்டுப் பிடாரியை ஓட்ட முயலுவதால் இனியும் சகிப்புதன்மையையும் சமாதானத்தையும் இந்து மதத்தினரிடையே எதிர்பார்ப்பது தவறாகும்.

15. கோயில் என்ற ஒன்றை கட்டி அதில் வாழ்க்கையின் தத்துவத்தையும், உலக இயக்கத்தின் இரகசியத்தையும் உலகிற்கு அளித்த புனிதமதம். 
இன்னுமும் சொல்லிகொண்டே போகலாம்......


கோயில் அமைப்பு வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்துவது என்பது உண்மைதான். ஆனால் அந்த வாழ்க்கைத் தத்துவத்தையே வணிகமாக்கி விட்ட கொடுமை நடப்பதும் இந்து கோயில்களில்தான் என்பது இன்றையை வெட்கக்கேடான விசயம்.  

இன்னனும் சொல்லிக் கொண்டே போனால் இந்து மதம் நாற்றமெடுக்க ஆரம்பித்து விடும்.

தெலுங்கில் ஒரு பழமொழி சொல்லுவார்கள்.

'பேரு பெத்த பேரு தாகம் நீலு லேது' என்பார்.

அதைப்போல இந்து மதத்தைப் பற்றி பெருமையாக நாள்பட சொல்லிக் கொண்டிருக்கலாம். ஆனால் அதன் செயல்முறையை அறியாது அலைக்கழிக்கப்படும் இந்துக்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கின்றது. சிவசிவ

அன்புடன் மு. கமலநாதன்

nkantan r

unread,
Dec 26, 2018, 12:53:56 AM12/26/18
to மின்தமிழ்
இந்து மதம் என்ற கோட்பாடே கட்டறுக்கப்படாதது.

பசு மாமிசம் சாப்பிட்டால் அடிக்காத கூட்டம் உள்ள மதமா இது?

rnk

Bala

unread,
Dec 26, 2018, 3:25:21 AM12/26/18
to மின்தமிழ்
+1

ஆமோதிக்கிறேன்.

MUNISAMY MK NATHAN

unread,
Dec 26, 2018, 5:32:23 AM12/26/18
to மின்தமிழ்
இந்து மதத்திற்கு வரையறை தேவையில்லை. இவ்வாறு இருந்தால்தான் வேத நெறி தொடர்ந்து நிலைத்திருக்க முடியும். இந்து மதம் என்பது வேத நெறி என்றால் அதை 99.00% இந்தியர்கள் பின்பற்றுவதில்லை. 

ஆகையால் இந்து மதம் என்பது புரியாத புதிராக இருந்தால் மட்டுமே வேத நெறி தொடர்ந்து தழைக்க முடியும். அதை தென்னகத்தே நுளைத்தால்தான் வடக்கே உள்ளவர் அரசியல் நடத்த முடியும். 

MUNISAMY MK NATHAN

unread,
Dec 26, 2018, 5:39:01 AM12/26/18
to மின்தமிழ்
பசு மாமிசம் சமைத்து சாப்பிடுவதைப் பேச மின் தமிழில் இடமிருக்கும் பொழுது எவரும் அடிக்கவில்லையே.

இவ்வாறு இந்தியா முழுவதும் தினமும் சாப்பிட்டுக் கொண்டுதான் உள்ளனர். 

பெரும்பாண்மையோர் பண்பாட்டுக்கு மதிப்புக் கொடுத்து வாழ கற்றுக் கொண்டால் மனித நேயம் தொடர்ந்து நிலைக்கும்.

மலேசியாவில் மலாய்க்காரர் மாட்டிறைச்சியையும் சீனர் பன்றி இறைச்சியையும் உண்ணும் பழக்கமுடையோர். இந்துக்கள் பெரும்பாலும் இவற்றைத் தவிர்ப்பது உண்டு.

இருந்தும் இங்கு அனைவரும் ஒன்று கூடி உணவருந்த இடமுள்ளதே. இவையணைத்தும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையால் ஏற்படுவது.




On Wednesday, December 26, 2018 at 1:53:56 PM UTC+8, nkantan r wrote:

சேதுராமன்

unread,
Dec 26, 2018, 11:47:14 PM12/26/18
to மின்தமிழ்
இந்துமதம்என்னும்வழக்குஎப்போது எழுந்த து?இசுலாம்-திருக்குர்ஆன்\கிறித்துவம்-திருவிவிலியம\சைவம்-பன்னிருதிருமுறை\வைணவம்-நாலாயிரத்துவ்வியப்பிரபந்தம்\ புத்தம்-தம் ம்பதம்  போல்  இந்து-      நிரப்புக.

சொ. வினைதீர்த்தான்

unread,
Dec 27, 2018, 2:41:38 AM12/27/18
to mintamil, vallamai, தமிழ் மன்றம்
கருத்துக் கூறியுள்ள நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

திரு பாலா ஆமோதித்துள்ளார்.

திரு கமலநாதன் பலப்பல விளக்கஙகள் அளித்துள்ளார். இறுதியில் அவர் சைவன் என்று உணர்வதே மேலோங்கித் தெரிகிறது.

திரு nk kantan மாட்டு மாமிசம் சாப்பிட்டதான வதந்தியின் பேரில் சிலரைக் கொன்ற தீவிரவாதக் கும்பல் இந்து மதத்தின் பேராலேயே தானே நடத்தியது. எங்கே இருக்கிறது சமயப்பொறை என்று கேட்டிருக்கிறார்.

பிற நண்பர்கள் தங்கள் கருத்தினைப் பதிவுசெய்ய வேண்டுகிறேன்.

நன்றி
சொ.வினைதீர்த்தான்

kanmani tamil

unread,
Dec 27, 2018, 3:29:38 AM12/27/18
to mintamil
என் பள்ளியிறுதி  வகுப்பு முடித்துப்  பெற்ற சான்றிதழில் நான் இந்து என்று தான் பதிந்துள்ளது.
இவ்வாறு பதிந்தது என் தாயாக இருக்கலாம்.
வேறு யாரும் இதில் தலையிட்டதில்லை.

நான் பிறந்த ஊரின் சுப்பிரமணியர் கோயில் தூணில் சாய்ந்து அமர்ந்து கொண்டு; அக்கோயில் இருந்த தேசபந்து மைதானத்தில் நடந்த அத்தனை திராவிடக்கட்சிக் கூட்டங்களில் ஆற்றிய பேச்சுக்களையும் கேட்டு முடித்து வீடு திரும்பியதை அடிக்கடி என்னிடம் புளகாங்கிதத்துடன் சொல்லி மகிழ்வார் என் தாயார்.
அது மட்டுமில்லை.
25 வயதில் என்னைத் திருமணம் செய்து கொடுக்கும் வரை என்னை எத்தனை முறை கோயிலுக்குக் கூட்டிச் சென்றுள்ளார் என்று சிந்தித்துப் பார்த்தால் .....திட்டவட்டமாக இல்லவே இல்லை.
ஆனாலும் என்னை இந்து என்று தான் அவர் ஆவணப்படுத்தி உள்ளார்.
இதற்காக நான் வருத்தப்படவில்லை.
எனக்கு இது வசதியாகத் தான் இருக்கிறது.
என்னால் எல்லா மதத்தவரையும் நேசிக்க முடிகிறது.
வெறி பிடித்தவர்களின் அறியாமையைக் கண்டு "ஆண்டவா, புத்தி கொடு" என்று வேண்டிக்கொள்ளவும் முடிகிறது.
 நான் கோவிலுக்குப் போய் வருகிறேன் என்று சொல்லி ஊர்சுற்றி வரவும் முடிகிறது.
எந்த சாமிக்கும் நான் தேங்காய், பழம், பூ என்று எந்த லஞ்சமும் கொடுப்பதில்லை.
சாமி முன்னால்  போய் நின்றால்; இரண்டு கைகளைக்கூப்பி மனித சக்தியை விஞ்சி இருக்கும் இறைப்பொருளுக்கு என் தாழ்மையான வணக்கத்தைக் 'கும்பிடுதல்' என்ற பெயரில் சொல்கிறேன். என் குழந்தைகளை வளர்க்கும் போது வீட்டில் பெரியவர்கள் இருந்தனர். எல்லாச் சம்பிரதாயங்களையும் அவர்களே பார்த்துக் கொள்வர்.  
சத்தியமாக நான் சைவமும் இல்லை; வைணவமும் இல்லை. 
 நான் நாகூர் தர்காவுக்கு குடும்பத்தோடு சென்று வந்துள்ளேன். அங்கே  ஓதுவதை வாழ்க்கை ஆதாரமாகக் கொண்டவர்; எங்கள் குடும்பத்தை அமர வைத்து அரபியில் எதோ ஓதி ஓலைத்தட்டில் எதோ கொடுத்து வீட்டில் வைக்கச் சொன்னார். அதை என் கணவர் அன்றாடம் கும்பிடும் பிள்ளையார் படத்துக்கு முன் பல ஆண்டுகள் வைத்து இருந்தோம்.
வேளாங்கண்ணி கோயிலுக்கும் சென்று வந்துள்ளோம். அங்கே  மாதாக்கோயில் சார்ந்த கலைக்கூடத்தைக் கண்டு வியந்து மாதாவுக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு கடலலை கால்களைத்  தழுவ புரோட்டாக்கடையில் அமர்ந்து சாப்பிட்டதை மறக்க முடியாது. 
பணியிலிருந்து ஒய்வு பெற்றபின்னர் திருவண்ணாமலைக்குச் சென்று கிரிவலம் வந்தேன். அந்த ஊரில் அது ஒரு வழிபாட்டு சம்பிரதாயம் என்பதால்........தோழிகளோடு சேர்ந்து இன்பமான பொழுதுபோக்கு என்பதே முதன்மையான உண்மை.
நான் இந்து என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன்.
கண்மணி 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Malarvizhi Mangay

unread,
Dec 27, 2018, 5:28:12 AM12/27/18
to mint...@googlegroups.com
Me too kanmani mam.

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
Message has been deleted

Bala

unread,
Dec 27, 2018, 6:02:02 AM12/27/18
to மின்தமிழ்
Let me make myself clear before I get misunderstood.  

I'm all in for syncretic Hinduism, as long at is remains so, true to the meaning of syncretism. 

But what is seen of late, is endless propaganda to subsume Hinduism into all sorts of Vedic Brahminism artifacts, and attempts to subsume unrelated Sangam Tamil history too into Vedic Brahminism. 

To me, nothing can be as despicable as associating a culture unrelated to parasitic Varna hierarchy, with Varnashrama advocating scriptures, Gods and so on.


For instance, take this case of Rajiv Malhotra, widely passed off as, researcher, intellectual etc. 
He with a team, calls for 'Swadeshi Indology' conferences, and this is what they puts in agenda:

 

• Sangham age: Religion: Vedic [Literary and archeological dimensions]
• Buddhist and Jain co-existence with Vedic religion: Sangham data and archeological data
 

• Harappan – Vedic continuum and Vedic- Sangham continuum 

 

Now, is there any empirical evidence that Sangam is Vedic? or that Harappan is Vedic? 

What sort of propaganda is it, and to what end? Why masquerade as 'Tamil reseaarch' when evangelizing Vedic Brahminism?

தேமொழி

unread,
Dec 27, 2018, 6:16:18 AM12/27/18
to மின்தமிழ்


On Wednesday, December 26, 2018 at 11:41:38 PM UTC-8, karuannam wrote:
கருத்துக் கூறியுள்ள நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

திரு பாலா ஆமோதித்துள்ளார்.

திரு கமலநாதன் பலப்பல விளக்கஙகள் அளித்துள்ளார். இறுதியில் அவர் சைவன் என்று உணர்வதே மேலோங்கித் தெரிகிறது.

திரு nk kantan மாட்டு மாமிசம் சாப்பிட்டதான வதந்தியின் பேரில் சிலரைக் கொன்ற தீவிரவாதக் கும்பல் இந்து மதத்தின் பேராலேயே தானே நடத்தியது. எங்கே இருக்கிறது சமயப்பொறை என்று கேட்டிருக்கிறார்.

பிற நண்பர்கள் தங்கள் கருத்தினைப் பதிவுசெய்ய வேண்டுகிறேன்.


யானைக்கும் இந்து மதத்திற்கும் இருவகையில் தொடர்புள்ளது...

சிற்பங்களில் சிலவற்றிலும், ஓவியங்கள் சிலவற்றிலும் ஒன்பது பெண்கள் இணைந்து ஒரு யானை உருவம் காணப்பெறும்.  இராஜஸ்தான் ஜெய்ப்பூர் அரண்மனையில் உள்ளதாகக் காட்டப்பெறும் ஒரு மரச்சிற்பமும், திருக்குரங்குடி கோயிலின்  ஒன்பது பெண்களை   ஒருங்கிணைத்து  உருவாக்கப்பட்டிருக்கும் யானைச்  சிற்பமும்  எடுத்துக்காட்டுகள் (மேலும் பல சிற்பங்களும், படங்களும்  இணையத்  தேடலில் கிடைக்கப் பெறுகின்றன). 




https://2.bp.blogspot.com/-GBxzb9SuzZY/Vs96p7u3uUI/AAAAAAAAHO0/0A56_XhfZxI/s1600/042-Mirissa-Temple-ElephantWomen.jpg



https://media.gettyimages.com/photos/statue-of-elephant-made-up-of-naked-women-from-an-old-maharajas-picture-id148878530?s=170667a




ஆங்கிலேயர் காலத்தில் இஸ்லாம் கிறித்துவ சமயங்கள் அல்லாத பிற இந்திய மண்ணின் சமயங்கள் இந்து சமயம் என வகைப்படுத்தப் பட்ட பொழுது இவ்வாறு அதிகாரப்பூர்வமாக வேத அல்லது  வைதீக மதத்தின் பற்பல உட்பிரிவுகள் இந்துமதம் எனப் பெயர் பெற்றது என்பது வரலாறு.

ஆங்கிலேயர் காலத்தில் இவ்வாறு பெயர் பெறும் முன்னரும் இந்திய மண்ணின் பற்பல வட்டார வழிபாடுகள், தெய்வங்கள் யாவும் ஒருங்கிணைக்கப்பட்டதும் வரலாறு.  கி.பி 8 ஆம் நூற்றாண்டில் இதன் துவக்கம் எனவும், ஆதி சங்கரர்   சிவன், திருமால், சக்தி, சூரியன், கணபதி, முருகன் ஆகிய ஆறு கடவுளர்களை வணக்கும் ஆறு உட்பிரிவினரை ஸ்மார்த்தம் என்பதன் கீழ்  தொகுத்ததாகவும் வரலாறு கூறும்.  

இச்சமயங்கள் யாவும் பிறப்பு இறப்பு, கடவுளின் தோற்றம், சமயத் தத்துவங்கள் என்று தனிப்பட்ட கருத்துகளைக் கொண்டவை.  இருப்பினும்  வேதம் கூறும் கடவுள்களுடன் ஒன்றாக இணைக்கப்பட்ட புராணக் கதைகளுடன் யாவும் ஒருங்கே  வளர்ந்தன.  இவற்றில் கொள்கை மாறுபாடு கொண்டவர்கள் சிலரும்  சமணம் பௌத்தம் சீக்கியம் என ஒவ்வொரு காலகட்டத்தில்  பிரிந்து போனதும் வரலாறு. இந்துமதக் குடையின் கீழ் இருக்கும்  சைவம், வைணவம் என்றாலும் அவர்களுக்குள்ளும்  கொள்கை அடிப்படையில் பிரிந்து போனவர்கள் உண்டு. இரண்டாம் குலோத்துங்கன் தில்லை கோவிந்தராஜரைக்  கடலில் போட்டதும் வரலாறு. இன்றுவரை லிங்காயத்துகள் தாங்கள் தனி மதம் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள்.  ஆனால் வழிபடுவது வேத மதக் கடவுள் என்றால் அவர்கள் இந்து மதத்தினர் என்றுதான் கூறவேண்டும் என்றும் சர்ச்சையில் இருப்பதுதான்  இந்து சமய உலகம்.

இதில்  புறச்சமயங்களுக்கு போட்டியாக மக்களை ஒருங்கிணைக்கும் திட்டங்களும் அவ்வப்பொழுது அரங்கேறின. தங்களை எண்ணிக்கையில் பலப்படுத்திக் கொள்ள வட்டார நாட்டார் வழிபாடு, மூதாதையர் வழிபாடு முறைகளும் உள்வாங்கப்பட்டு எல்லாவற்றையும் ஒரே கடவுள், அவர்களின் அவதாரங்கள்,  கடவுளரின் உறவினர்கள் என்ற பற்பலக் கதைகளுடன் ஒருங்கிணைப்பு நடந்து வந்துள்ளதும் உண்மை.

இதில் உச்சக் கட்டமாக இஸ்லாமியரையும் பௌத்தரையும் உள்ளிழுக்கும் முறையும் நிகழ்ந்தது. அதற்கு இஸ்லாமியரை எதிர்த்த விஜயநகரப்  பேரரசின் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட மீனாட்சி திருக்கல்யாணம், கள்ளழகராகிய திருமால் தங்கை திருமணம் காண வருதல், வழியில் இஸ்லாமிய பெண் வீட்டில் தங்குதல் போன்ற கதைகளும் உண்டு.  அதே போல திருவரங்கத்தில் இஸ்லாமிய தொடர்பு காட்டப்பெறும், பூரி ஜகந்நாதர் கோயிலும் அங்குள்ள வட்டார மக்களின் வழிபாடு முறையை உள்வாங்கிய நிலை ஆகியன  இந்த இணைப்பு முயற்சிக்கு மேலும் சில சான்றுகள். புத்தரும் பத்து அவதாரங்களில் ஒன்றாகிப்போனார். இவர்கள் கடவுளருக்குள்ளும் யார்தான்  பெரியவர் என்ற போட்டி. 

வடநாட்டில் இருப்போருக்கும் தென்னாட்டில் இருப்போருக்கும் சடங்குகளில் வழிபாட்டு முறைகளில் எனப் பல வேறுபாடுகள் உண்டு.  
இருப்பினும்  அனைத்து உதிரி வழிபாட்டு பின்னணியினரும் ஒன்பது பெண்கள் யானை போல ஒன்றிணைந்து உள்ளார்கள்.  


அதற்குத் தீவிர இந்துமத சமயத்தலைமையும் முழுமூச்சுடன் செயல்படுகிறது.  இந்தியா எனில் இந்துமதம் என்ற கொள்கையை ஆணித்தரமாக நம்பும், நம்ப வைக்கும் நடவடிக்கை இது.

யார் துவங்கினார் என அறிய இயலாத வரலாற்றுத் தொடக்கத்தில் இந்துமதத்தின் தோற்றப்பெருமை பேசப்படுகிறது. என்றும் நிலைத்திருக்கும் வாழ்க்கைத் தத்துவம் என்ற முறையில் சனாதன தர்மம் என்று பெருமிதம் பேசப்படுகிறது. 

இருப்பினும் வேதமதத்தின் உண்மையான உறுதியான கட்டமைப்பு வர்ணாசிரம தர்மம் என மக்களுக்குள் பிரிவினை பேசும் அடிப்படை மட்டுமே.  அது இல்லாது அவர்களால் இந்தியாவில் மட்டுமல்ல அயல்நாட்டிலும் வாழ முடியவில்லை என்பதுதான் நடப்புலக நிலை.  இதில் மக்களுக்குள் பேதம் கற்பிக்கப்பட்டு, மனித உரிமைகள் மீறப்பட்டு, பெண்ணுரிமை பறிக்கப்பட்டு, பல சமயங்களில் ஒடுக்கப்பட்டவர் உயிரும் வாழ்வும் பறிக்கப்படுவது வர்ணாசிரம தர்மம்  என்ற கோட்பாடு கொடுத்த பரிசுகள். அது பரிணாம வளர்ச்சி பெற்று தொழில் அடிப்படையைப் பிறப்பு அடிப்படையில் உறுதி செய்த வாழ்க்கைமுறையின் தத்துவ  வெளிப்பாடு.  

இந்தப்  பிரிவுகளை அறியாதோர் இருக்க வாய்ப்பில்லை என்பதால் அதில் விரிவாக  விளக்கத்  தேவையுமில்லை. அதன் அடிப்படை, படிநிலையில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என மக்களைப் பிரித்து வைத்திருந்த நிலை.  இந்த அடுக்குமுறையில் யாரும் யாருக்கும் சமமல்ல.  ஆனால் ஒவ்வொருவருக்கும் தான் யாருக்கோ உயர்ந்தவர் என்றும், தனக்குக் கீழாக  யாரோ இருக்கிறார்கள் என்ற  எண்ணம் தரும் மகிழ்ச்சிக்கும்  குறைவில்லை.  அதில்தான் வர்ணாசிரம தர்மத்தின் வெற்றியே அடங்கியுள்ளது.  பிறப்பின் அடிப்படையில் கட்டுப்படுத்தப்பட்ட தொழில் மற்றும் வாழ்க்கைமுறை இன்றைய நாகரிக உலகில் அடிபட்டுப் போனாலும், சட்ட முறையில் மறுக்கப்பட்டாலும் புரையோடிப் போன இனபேதம் ஆணவக்கொலைகள், சாதிக்கொலைகள் வரை பக்கவிளைவுகள் வெளிப்பாட்டுக் கொண்டே இருக்கிறது...இருக்கும்.

கடவுள் மறுப்பு வேத மறுப்பு  சொல்வோரையும் தன்னுள் இந்துமதம் ஏற்றுக் கொள்கிறது என்போர் கவனிக்க வேண்டியது ஒன்றுண்டு.  அவ்வாறு பேசியவர்கள் இன்றுவரை மாற்றுக்கருத்து பேசியதால் கொல்லப்பட்டவர்களை மறப்பவர்கள் இவர்கள். 2010 இல் இருந்து மறுத்துப் பேசியவர்  30 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது இவர்களுக்கு நினைவு வருவதில்லை*.  உண்மை நிலையும்  நடப்புலகமும் வேறு வேறு. கௌரி லங்கேஷ் யார்? தபோல்கர், பன்சாரே, கல்புர்கி உயிரிழந்த காரணம் என்ன ?

அனைவரிடமும் பேதம் காட்டவில்லை என்போர்கள் இந்திய  குற்றவியல் தரவுகள் காட்டும் ஒடுக்கப்பட்டோர் மீது நிகழ்த்தப்பட்ட குற்றங்களின் எண்ணிக்கை குறித்து அலச விரும்பாதவர்கள்.  இன்றுவரை சபரிமலை என்று பெண்களின் வழிபாட்டுரிமை போராட்டமாக இருப்பதை வசதியாக மறந்து போனவர்கள்.  இவர்களுக்கு எங்கே ஒரு காலத்தில் கோவிலுக்குள் நுழைய ஒடுக்கப்பட்டவர் மறுக்கப்பட்டதும், தாய்மொழியில் வழிபாடு  செய்யும் உரிமை மறுக்கப்படுவதும், சதி என்று கைம்பெண்ணை கணவனுடன் எரித்ததும், அவர்கள் கணவன் இறப்பிற்குப்  பிறகு வெள்ளை கருப்பு ஆடைகளுடன் சீருடையில் வலம் வந்ததும் நினைவிருக்கும். இன்று  விருந்தாவன் கைம்பெண் என்ற மனித உரிமை மீறலின் விளைவுதான் என்பதும் கூட   நினைவு வராதே. மாய உலக மயக்கம்.  வண்ணக்கண்ணாடி வழியே வாழ்க்கையைப் பார்க்கும் மனப்பான்மை அல்லது மனப்பக்குவமின்மை. 

கடந்த காலத்தில்  ஒரு சிலருக்கு கல்வி மறுக்கப்பட்டது, சொத்து மறுக்கப்பட்டது, உணவில் உடையில் கட்டுப்படுத்தப்பட்டதும்  நினைவு வராது. இன்றுவரை மாட்டுக் கொலை என்று மாட்டிறைச்சி சாப்பிடுபவரை  மனிதக் கொலை செய்வது குறித்தும்  கண்ணை  மூடிக் கொள்பவர் பலர்.  ஒடுக்கப்பட்ட மக்கள்  உயர்கல்வி தொடரமுடியாது தற்கொலை நிகழ்வுகள்  எதன் பக்க விளைவு என்பது தெரியுமா? அனைவரையும் அரவணைத்துச் செல்லும் மதக்கோட்பாட்டின் பக்க விளைவா அது?

பிரிந்து போகிறேன் என்று போராட்டம் செய்பவர் ஒரு புறம் இருக்க, பிரிந்து போனவர் ஒருபுறமிருக்க, உள்ளிருப்பவரும் நான் எப்படி இந்தக் கும்பலில் சேர்க்கப்படுகிறேன் என்று குழம்பித் தவிக்கும்  நிலையில் தங்களை  இந்துமதத்தில் அடையாளம் காணமுடியாமல் இருக்கும்  நிலையைக் கண்டால் இந்துமதம் என்பது மீண்டும் யானையைத்தான் நினைவு படுத்துகிறது.

மதம் என்ற வழியில் செல்வதால் மதம் பிடித்து ஓடி மசூதியை உடைப்பதால் அல்ல அது. 

யானையைக் கண்ட குருடர் கதையை நினைவு படுத்துகிறது ஒவ்வொருவரும் தங்களின்  கோணத்தில் இந்துமதம் என்பது என்னவென்றும், கொள்கைகள் என்னவென்றும்,  வாழ்க்கைமுறை என்னவென்றும் கூறிக்கொண்டிருக்கும் நிலையில் உள்ள சமயம் இந்துமதம்.  குருடர்கள் யானையைத்  தடவித் தடவிப்  பார்த்து அவரவர் கோணத்தில் விளக்கம் சொல்லும் நிலைதான்  இந்துமத யானையின்  நிலை.


அதற்குச் சான்று அவர்களுக்கு என்று தலைமை, சமய நூல், சமயக்கட்டுப்பாட்டு தலைமை இல்லாத நிலை. இருக்கவும் முடியாது. ஏனெனில் அது உருவாக்கப்பட்ட நிலை அவ்வாறு.  கிவ் அண்ட் டேக் பாலிசியில் அமைக்கப்பட்ட அரசியல் கூட்டணி போன்றது.  பல வழிபாட்டுமுறைகளையும் ஒருங்கிணைத்த நிலையில் யாரையும் யாரும் கட்டாயப்படுத்த முடியாத ஒரு நிலை. அவ்வாறு கட்டாயப்படுத்தினால் அவரவரும் பிய்த்துக் கொண்டு தனிக்குடித்தனம் போய்விடுவார்கள் என்பதுதான் உண்மைநிலை.  ஐயமிருந்தால் லிங்காயத்துகளை நினைவு கூரவும். 

 
 _________________________________________________________________________________

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 27, 2018, 6:19:47 AM12/27/18
to mintamil, vallamai, தமிழ் மன்றம்
On Tue, 25 Dec 2018 at 20:12, சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com> wrote:
கீழே எனக்குப் புலனத்தில் வந்த ஒரு பதிவினை நண்பர்கள் பார்வைக்குப் பகிர்ந்துள்ளேன்.

என் சர்டிபிகேட்டில் இந்து என்று இருக்கிறது. யாரோ பள்ளி எழுத்தர் எழுதியது.
எனது தந்தையார்  சொல்லி எனது சான்றிதழில் எழுதியுள்ளனர்.
 
ஆனால் ஒரு போதும் நான் இந்து என்று உணர்ந்ததில்லை.

உலகில் உள்ள எல்லோரும் இந்து என்றே நான் எப்போதும் உணர்ந்து வருகிறேன்
 
தமிழன் என்று உணர்ந்திருக்கிறேன். சைவன் என்றும் நினைப்புண்டு. இந்தியன் என்றும் பெருமை உண்டு.
சிவகங்கை மாவட்டத்துக்காரன், அழகப்பா பல்கலைக்கழக்கழகப் பணியாளன்,  கோட்டையூர்க்காரன், குருநாதன் கோயில்தெருக்காரன், என்ற பெருமைகளும் உண்டு.


இந்து என்பது திணிக்கப்பட்டதாக ஏனோ ஒரு எண்ணம். 

பிறர் தங்களை இசுலாமானவர் என்றும், கிருத்தவர் என்றும், பகூத்அறிவாளிகள் என்றும் சொல்லிக் கொள்வதால்
அவர்கள் என்னை இந்துவாகக் கற்பிக்கின்றனர்.
இசுலாமும் கிருத்துவமும் இந்துக்கள் மீது திணிக்கப்பட்டதுதானே.

ஏதோ என் மனதில் எழுந்ததை எழுதியிருக்கிறேன். பொறுத்துக்கொள்ளுங்கள் நண்பர்களே. 

அன்பன்
கி.காளைராசன் 

kanmani tamil

unread,
Dec 27, 2018, 6:57:28 AM12/27/18
to mintamil
• Sangham age: Religion: Vedic [Literary and archeological dimensions]
• Buddhist and Jain co-existence with Vedic religion: Sangham data and archeological data ///

இரண்டு தலைப்புகளும் மிகச்சிறந்தவை என்று நான் கருதுகிறேன்.
சங்க இலக்கியத்தை ஆழமாகப் படித்தவரால் மட்டுமே இத்தலைப்புகளை வடிவமைக்க இயலும்.
கண்மணி  

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Velmurugan Subramanian

unread,
Dec 27, 2018, 5:02:26 PM12/27/18
to tamil...@googlegroups.com, mintamil, vallamai
ஐயா,

இந்துமதம்பற்றிய எனதுபார்வை....

நான் என்னை இந்து என்றே  [மொழியடையாளத்திற்குப்பின்] அடையாளப்படுத்துவேன். எனக்கு "இந்தமதம்" பிடிப்பதற்கு காரணம் நான் "எப்படி விரும்புகிறேனோ" அப்படியே இதனுடைய கடவுள்களை  (modelling)உருவகித்துக்கொள்ளலாம் என்பதேயாகும். அதாவது என்னால் கட்டுக்கத்தைகளை உருவாக்க இந்துமதத்தில் இடமுண்டு. ....:-)


அடிப்படையில் 

1) இந்துமதத்தை நான் ஓர் இயங்கமைப்பு(system என்னும் பொருளில்)  என்று பார்ப்பேன். அதை இவ்வுலகத்தின் பிரதிபலிப்பாக காணமுடியும். 

2) இப்பேரண்டம் எதோ சில  இயற்பியலின் விதிகளாலும் ஏதோவொரு மாயையினாலும் இயக்கப்படுகிறது என்று நம்புகிறேன். 

3) இயற்பியல்விதிகளை  சிவன் மற்றும் பார்வதியின் திருமணவுறவினால் ஏற்பட்ட நெறிகளுக்கு  சமப்படுத்துவேன்.  அந்த மாயையை திருமாலுக்குச்சமப்படுத்துவேன்.

4.) சிவன் ஆணின் வடிவம். பார்வதி பெண்ணின் வடிவம். திருமாலுக்கு தனியாக பால் இல்லை; திணை இல்லை; அல்லது அனைத்துப்பாலுக்கும் திணைக்கும் திருமால் பொருந்துவான்  எனலாம். சிவனும் பார்வதியும் இணைந்த  மாதொருபாகனுக்கும் இவை இல்லை அல்லது அனைத்தும் உண்டு  எனலாம். 

5) எங்கும் எப்போதும்  நிறைந்திருப்பது  சிவம். இவன்  ஒரு மாறிலி(Constant) ஆவான். அசைவற்றது. இது இல்லாத இடமில்லை. அதைத்தொடுவது/உணர்வது  ஆற்றலாகிய  பார்வதிக்குமட்டுமே சாத்தியம்.  பார்வதி  ஒரு மாறி(Variable) ஆவாள்.  

6) இவர்களின் சேர்க்கையே அனைத்துப்பருப்பொருட்களுக்கும் அடிப்படை. நாம் வெளி என்று கூறுவதும் இவர்களின் சேர்க்கையினால் தோன்றியதே.  சிவனுடனான சேர்க்கைக்குமுன்னர்    அந்த மாறி(பார்வதி)  எப்படியெல்லாம் மாறமுடியும் என்னும் நெறிகள் (இயற்பியல்விதிகள்)   நிர்ணயிக்கப்பட்டு அந்த ஒப்புதலின்படியே சேர்க்கை(திருமணம்) நடைபெறுகிறது.  

7) அந்த சேர்க்கையில் நாம் அறிவியலின்வழியில்  அறியும்  வெளி பிறக்கிறது, இப்பேரண்டம் அதனுள்  க(உ)ருவாகிறது. 

8) அறிவியலின்விதிகளால் பார்வதி அணுக்களாகவும் அவை சேர்மங்களாகவும்  மாறிமாறி காலப்போக்கில்   நட்சத்திரம், கல், மண் என அனைத்தும் உருவாகி நிலைபெறமுடிந்தது. இருப்பினும், உயிர் என்னும்  தனக்கென+எந்த+இடத்தையும் வெளியில்  கொண்டிராத உயிர் நிலைபெறமுடியவில்லை.  

9) உயிரை நிலைபெறச்செய்ய மாயையின் கலவை தேவைப்படுகிறது. உயிர் நிலைபெற்றதும் அது குடியேறியிருக்கும்  பருப்பொருள் புதியபுதிய பண்புகளைப்பெறுகின்றது. இன்னுஞ்சொல்லப்போனால்,  ஐதரசனுக்கும் ஆக்சிசனுக்கும் இல்லாத பண்புகளை நீர் பெறுவதன்கீழும் மாயையின் வேலைப்பாடு  இருக்கிறது. திடீர்மாற்றம்(mutation) என்று அறிவியல் சொல்வதும் மாயையின் வேலைதான். 

10) பரப்பிரம்மம் -> [ இயற்பியல் -> வேதியியல்-> உயிரியல்-> சமூகவியல்-> மானுடவியல் -> ..]   என்னும் அனைத்துநிலைகளிலும் மாயைக்கு ஒரு பங்கு இருக்கிறது. மாயையின் இருப்பு இல்லாமல்  இப்பேரண்டத்தில் அடுத்தநிலை என்று ஏதும் இல்லை. (கதிரவனுக்கும் முந்தையது மாயை; கதிரவனுக்கும் பாடம்புகட்டியிருக்கிறது)  ஆனாலும், மாயைக்கு இப்பேரண்டத்தில் இடம்(வெளி)  உண்டு என்று நம்மால் சொல்ல இயலாது. 

11) மானுடவியலில் தோன்றி இன்று நம்மிடம்  நிலைபெறும்  "அறம்" என்னும் ஒரு பண்பு மாயையினால் தோற்றுவிக்கப்பட்டதே. இயற்பியலின்விதிகளை நாம் தேடிக்கண்டுபிடிப்பதுபோன்று இந்த அறவிதிகளையும் நாம் தேடிக்கண்டுகொண்டிருக்கிறோம். மானுடவியலில் தோன்றிய அறிவியலே திருக்குறளைப்போன்ற அறநூல். நியூட்டன் எழுதிய Mathematical Principles of Natural Philosophy நூல் இன்னொரு நிலைக்கான அறநூல். அவ்வளவே!   

12)  நல்லதுகெட்டது , விருப்புவெறுப்பு , சரிதவறு என ஏதும் இல்லாநிலையிலிருந்து அவை இருக்கும் ஒரு நிலைக்கு இவ்வண்டத்தை தொடர்ந்துகடத்திச்செல்வது மாயையாகும். 

13) மாயையின் இடம் இல்லாத  அனைத்தும் நல்லவர்கெட்டவர் என்ற வேறுபாடின்றி அனைவருக்கும் கிட்டும். இன்று அறிவியற்கண்டுபிடிப்பு என்று நாம் சொல்வதை இந்துமதம் வரம் என்கிறது. அறிவியலாராய்ச்சி என்பதை தவம் என்கிறது. பார்வதியும் , சிவனும் வரமொன்றை  ஆராய்ச்சிசெய்பவருக்கு நல்க, அவர்  நல்லவரா கெட்டவரா என்று பார்ப்பதில்லை. தேவையான நிபந்தனையை நிறைவுசெய்தால் போதும். ஆனால்,  திருமாலிடமிருந்து ஒரு கெட்டவர்  வரமொன்றை பெறமுடியாது. அப்படி கதையொன்றை அமைக்கமுடியாது.  

14) நாம் Science = அறிவியல் என்று சமப்படுத்திப்பார்ப்பது நல்லதுகெட்டதற்கு அப்பாற்பட்டது, எந்த சார்புமற்றது. ஆனால், அறிவுடைமை என்னும் அறக்கருத்தியல் நல்லதுகெட்டதை விலக்காது; இடச்சார்பு உண்டு. இந்த இடத்தில் எனக்கான அறிவுடைமை இன்னொருவருக்கு அல்லது இன்னொரு இடத்தில் எனக்கே  பொருந்தாது. இன்றைய நவீனவறிவியல் அறிவுடைமை என்பதன் உட்கணமேயாகும். ஆக, இதைக்கொண்டு அந்த மாயையை அறிதல் சாத்தியமில்லை. அறிவியலை உள்ளடக்கிய  அறிவுடைமையே  அனைத்தையும் அறிய சிறந்தவழி. 

15) பிறப்பிறப்பற்றவை (ப்+இற , இற ஆகிய சொற்களுக்கு வேர்ச்சொல்லாய்வில் தொடர்புண்டா என்று அறிய ஆவல்)     என்றால் சிவன், பார்வதி, திருமால் ஆகிய மூன்றுமே. இவைகளின் வெளிப்பாடே இப்பேரண்டம் அல்லது பிரம்மம். பிரம்மன் என்னும் கடவுளுக்கு என்னுடைய பார்வையில் இடமில்லை. சிவன், பார்வதி, திருமால் ஆகியோரே முக்கடவுள்கள். மும்மூர்த்தி என்று ஏதும் இல்லை. :-). செல்வம்/இலட்சுமி, கல்வி/சரசுவதி எல்லாம் வெவ்வேறு நிலைகளில் தோன்றியவை.    காட்டாக, கற்களுக்கு கல்வியும் செல்வமும் உண்டா என்று தெரியாது. இவையெல்லாம் மானுடவியலின் கூறுகள். 

17) நாம் இறக்கும்போது நம்மிடமிருக்கும் அறம், கருமப்பயன்,  உயிருட்பட்ட மாயைகள்    திருமாலை அடையும். உடல் பரப்பிரம்மத்தை (சிவன்+பார்வதி)   அடையும். 

இப்படி நாம் அறிவியலின்மூலம் புதியவற்றை அறிய அறிய அதற்கேற்றார்போல் புதிய கதைகளையும் கருத்தியல்களையும் இந்துமதத்தில்  (ஒருவித  modelling)உருவாக்கமுடியும். அதன்மூலம் வருங்காலத்தை கணிக்கமுடியும் (குறைந்தபட்சம் கொள்கையளவில்). மேலும்,  உள்ளத்திற்குத்தேவையான ஆறுதலையும்பெறமுடியும். ஆறுதல் என்பதும் மாயைதான்! அதை அறிவியலால் தர இயலாது. 

எனவே, இந்துமதத்தை  கட்டுக்கதைகளின் தொகுப்பு  என்பதோடு நிறுத்திக்கொள்ளமுடியாது. அறிவியலின்(Science) பார்வையில் கட்டுக்கதைதான். ஆனால்,  அந்த அறிவியல் அடிப்படையில்  முழுமையற்றது.  

இதுபோன்ற கதைகளுக்கு மானுடவியல் என்னும் நிலையில் இடம் இருந்துகொண்டே இருக்கும்; இந்துமதம் நிலைபெறும்! - எனது அறிவுடைமைசொல்வது.  

நன்றி
வேல்


புத., 26 டிச., 2018, பிற்பகல் 11:41 அன்று, சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.

செல்வன்

unread,
Dec 27, 2018, 6:56:10 PM12/27/18
to mintamil, vallamai
தொல்காப்பியம் கூறும் அதே தெய்வங்களை தான் இன்னமும் வணங்கிவருகிறேன்.

கோவலன் - கண்ணகி திருமணம் செய்துகொண்டதுபோல "மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீவலம் செய்து" தான் திருமணம் செய்துகொண்டேன்.

முன்னோர்க்கு நீர்க்கடன் குறள் கூறும் வழிமுறைப்படி செய்துவருகிறேன்

சிந்துசமவெளி தமிழர்கள் வழிபட்ட அதே சிவனையும், கொற்றவையையும் போற்றி வருகிறேன்.

மொழிபேதமின்றி, சமயபேதமின்றி இராமாயணம், மகாபாரதம், பைபிள், பெரியார் நூல்கள் உள்ளிட்ட நூல்களின் நீதிபோதனைகளை படிக்கிறேன். தகுந்தவற்றை கைகொள்கிறேன். தகாதவற்றை கைவிடுகிறேன்.

மாட்டுக்கறியும் உண்பேன், சிவன்/திருமால் கோயிலுக்கு போய் சாமியும் கும்பிடுவேன்.

இதற்கு இந்து மதம் எனும் பெயரை இந்திய அரசியல் சட்டம் சூட்டி உள்ளது. ஆனால் ஆதிசிவனை போல இது அனாதியான ஒரு சமயம். ஏதோ ஒரு பெயர் வேண்டும் எனும் அளவில் இந்திய அரசியல் சட்டம் சூட்டிய இந்த பெயரை ஏற்றுக்கொள்கிறேன். 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.


--

செல்வன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 27, 2018, 7:42:16 PM12/27/18
to mintamil, tamilmanram, vallamai
அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.
பாராட்டுகள் ஐயா.

அன்பன்
கி.காளைராசன் 

nkantan r

unread,
Dec 27, 2018, 10:54:40 PM12/27/18
to மின்தமிழ்
To my limited knowledge, the voluminous Indian constitution or amendments or explanatory notes from Law Ministry DONOT define what is Hinduism. Oddly, it defines who are Hindus. ( any body professing to practice Jainism, buddism, Sikhism or Hinduism are Hindus).

Ironically, the government in an RTI query said it has no information on who is defined as a Hindu or what is Hinduism

https://www.thehindu.com/news/national/govt-does-not-have-info-on-definition-of-hindu/article7750000.ece
------
NATIONAL
Govt does not have info on definition of ‘Hindu’
PTI
INDORE 11 OCTOBER 2015 18:24 IST
UPDATED: 11 OCTOBER 2015 18:24 IST


Union Home Ministry does not know the definition of the word ‘Hindu’. In reply to an RTI query by Neemuch resident Chandrashekhar Gaur, the Ministry said it does not know the definition of the word Hindu.

“To my query under RTI about the meaning and definition of the word Hindu in the light of the Indian Constitution and the law, the Home Ministry in its reply on July 31 said the Central Public Information Officer (CPIO) doesn’t have information regarding it,” said Mr. Gaur, a resident of Neemuch district in Madhya Pradesh.

Mr. Gaur had also sought to know on what grounds a community was considered Hindu, and why Hindus were considered to be a majority community.

The government’s reply was baffling, he said.

“If the government doesn’t know the meaning and definition of the word Hindu, on what basis did it enact the Hindu Marriage Act?” he questioned.
----

The constitution, without defining the term Hindu, ironically uses it in some contexts. The related civil laws obtain out off such ambiguity: the Hindu succession act, the Hindu marriage act etc.

In a particular judgement SC of India said scheduled tribes are not Hindus and are out of ambit of these laws.

Idiotically or without foresight, constitution clubs Scheduled Castes as hindus. If i remember, SC wnt to the extent of interpreting that low social stature of scheduled Castes is because the person belongs to the caste hierarchical Hindu sect. If a SCheduled caste person becomes a Jew, Muslim or christian he ceases to be a Scheduled Caste person as there is no social discrimination in these religions. If he/she reconverts to Hinduism he/she regains his Scheduled Caste status.
----

In effect it means that a person to be a hindu must be practicing caste discrimination....Huh.
rnk

செல்வன்

unread,
Dec 27, 2018, 10:58:40 PM12/27/18
to mintamil
I fail to understand why the definition of Hindu is so important now.



--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.


--

செல்வன்

nkantan r

unread,
Dec 27, 2018, 11:08:59 PM12/27/18
to மின்தமிழ்
இந்த எண்ணம்
'இதற்கு இந்து மதம் எனும் பெயரை இந்திய அரசியல் சட்டம் சூட்டி உள்ளது. '
என்று பதிவதற்கு முன் வந்திருக்க வேண்டும்.

rnk

செல்வன்

unread,
Dec 28, 2018, 12:19:20 AM12/28/18
to mintamil
அரசியல் சட்டம் பெயரை தான் சூட்டி உள்ளது என சொன்னேன். டெபனிசன் எதுவும் கொடுக்கவில்லை. எப்படி கொடுக்கமுடியும்? 

எந்த மதத்துக்கும் டெபனிசன் கிடையாது. அரசியல் சட்டம் அப்படி டெபனிசன் கொடுக்க முன்வந்தால் அது மிக பிழையான விசயம்.

முஸ்லிம் என்றால் யார்? கிறிஸ்துவன் என்றால் யார்? இந்து என்றால் யார்? சீக்கியன் என்றால் யார்?

எந்த சட்டமும் இதை எல்லாம் வரையறுக்கமுடியாது. வரையறுப்பதும் தவறு.

அதனால் தான் இதை எல்லாம் அவரவர் விருப்பத்துக்கு விட்டுவிடவேண்டும். கெஜட்டில், பள்ளீ சான்றிதழில் ஒருவர் "நான் இந்து என்றால் இந்து. முஸ்லிம்னா முஸ்லிம்"  அவ்ளோதான். அதுக்கு மேல் அதை வரையறை செய்வது தவறு.


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


--

செல்வன்

nkantan r

unread,
Dec 28, 2018, 12:25:48 AM12/28/18
to மின்தமிழ்
இதற்கு இந்து மதம் எனும் பெயரை இந்திய அரசியல் சட்டம் சூட்டி உள்ளது

I take that you meant Indian constitution by your use of term 'இந்திய அரசியல் சட்டம்'

Constitution has not christened any as 'இந்து மதம்'. That statement is a fallacy if not ignorant.

rnk

செல்வன்

unread,
Dec 28, 2018, 12:48:40 AM12/28/18
to mintamil
பொதுவாக சொல்வதை டெக்னிக்கலாக பார்த்தால் என்ன செய்ய?

நான் சொல்வது இம்மாதிரி நம்பிக்கை உள்ளோர் இந்துக்களாக வகைபடுத்தபடுகிறார்கள் எனும் பொருளில்.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


--

செல்வன்

Banukumar Rajendran

unread,
Dec 28, 2018, 4:46:09 AM12/28/18
to mintamil
On Tue, Dec 25, 2018 at 8:12 PM சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com> wrote:
கீழே எனக்குப் புலனத்தில் வந்த ஒரு பதிவினை நண்பர்கள் பார்வைக்குப் பகிர்ந்துள்ளேன்.

என் சர்டிபிகேட்டில் இந்து என்று இருக்கிறது. யாரோ பள்ளி எழுத்தர் எழுதியது. ஆனால் ஒரு போதும் நான் இந்து என்று உணர்ந்ததில்லை.

தமிழன் என்று உணர்ந்திருக்கிறேன். சைவன் என்றும் நினைப்புண்டு. இந்தியன் என்றும் பெருமை உண்டு.

இந்து என்பது திணிக்கப்பட்டதாக ஏனோ ஒரு எண்ணம். 

ஐயா, என் கருத்தை எழுதலாமா என்று தெரியவில்லை. என்னுடைய சகோதர மதம் என்ற பார்வையிலும், , நம் வினைத்தீர்த்தான் ஐயா அவர்களின் பதிவு என்பதால் துணிந்து என் கருத்தை எழுதுகிறேன்.

”இந்து என்பது திணிக்கப்பட்டதாக ஏனோ ஒரு எண்ணம்” 

என்று எழுதியிருக்கிறீர்கள். இவ்வெண்ணம் இந்த நான்கு ஆண்டுகளில் ஏற்பட்டதா அல்லது அதற்கு முன்னமே
இவ்வாறான சிந்தனை இருந்ததா என்று தெரிவிக்கவும்.

இந்த நான்கு ஆண்டுகளில்தான் இச்சிந்தனை என்றால் இவ்வாறான சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுக்கத்தேவையில்லை
என்றே கருதுகிறேன். இந்த அரசியல் கோமாளிகளின் செயல்களை வைத்து “இந்து” சமயத்தை எடைப்போடக்கூடாது.

இந்து மதத்தின் பலமே அது பல்நோக்குப்பார்வைக்கொண்ட பல்சமயக்கருத்துகளுக்கும் இடம் கொடுத்து சகோதர மனோ-
பாவத்துடம் அரவைணைத்துக்கொண்டு இயங்குவதுதான். இப்படிப்பட்டத்தன்மைக்கொண்ட சமயத்தில் தீவிரவாத சிந்தனைக்கு
இடம் இருக்க முடியாது. அப்படியிருந்தால் அவர்கள் தங்கள் சார்ந்த மதத்தைப்புரிந்துக்கொண்டவர்களில்லை என்பது நிதர்சணம் அல்லது இந்த அரசியல் கோமாளிகளின் பேச்சில் விழுந்த மீன்கள் என்றே கருதவேண்டும். 

அரசியல் பார்வையை முற்றாக அகற்றிவிட்டு, நடுநிலைமையாக சிந்தித்துப்பார்த்து, பொறவும், “இந்து என்பது திணிக்கப்பட்டதாக ஏனோ ஒரு எண்ணம்” என்று தோன்றுகிறதா என்றும் பார்க்கலாம்?

இரா.பா




 

தேனீ

unread,
Dec 28, 2018, 12:00:39 PM12/28/18
to மின்தமிழ்

“இந்து மதம் யானைதான்”

 

இந்து மதம் யானையைப் போல் விரிந்து ஞானத்துடன் வலிமை மிகுந்து இருப்பதால்  அதனை யானையுடன் ஒப்பிடுவது தவறில்லை. இம்மதத்தை அறியாத குருடர் யானையின் ஒவ்வொரு பகுதியைப் பிடித்துப் பார்த்து வெவ்வேறு கருத்து சொல்வதானது கருத்துக் குருடாகும். அதனால் இந்து மதத்திற்கு எவ்வித பங்கமும் ஏற்பட்டு விடப்போவதில்லை.

 

அதைத்தான் இவ்விழையில் சில பதிவுகளின் மூலம் அறிய முடிந்தது. தான் ஒரு இந்து என்று கூறிக் கொள்ளும்போது தன் மதம் கூறுவதென்னவென்று அறியாது வாழ்வது கற்றோருக்கு இழுக்கல்லவா? இத்தகைய இழுக்கையையும் பொருட்படுத்தாது தன் அகத்தை வெளியே காட்டுவது அவரவர் முகத்தில் கரியைப் பூசிக் கொள்வதற்கு ஒப்பாகும்.

 

விவிலியத்தைப் கற்றவன் கிறித்துவனாகின்றான். திருக்குர்ரானைக் கற்றவன் முசுலிமாகின்றான். எந்த சமயக் கல்வியையும் பெறாதோர் இந்துவாவதுதான் இந்துவின் சிறப்பு என்றால் அதையும் ஏற்றுக் கொள்ளும் இந்து மதம்! இப்படி பல்வேறு சிறப்புக்களுக்குரிய இந்து மதம் மின் தமிழில் பந்தாடப்பட்டு வருவதால் இந்து மதத்தை அறிந்தோர் பலர் ஒதுங்கிக் கொள்கிறார். நமக்கேன் வம்பு என்று ஒதுங்குவதால் இந்து மதத்தைப் பற்றி அறியாதோர் சொல்வதே வேத வாக்காக மாறி அதுவே உண்மை என்னும் நிலையும் இங்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே மேலும் எழுத விழைந்தேன்..

 

ஒன்பது பெண்கள் அடங்கிய ஒரு யானை வடிவத்திற்கு ஒன்பது குருடர்களின் கருத்தை வடித்துக் கூறியோர் அத்தகைய கருத்து தவறு என்பதை அறியாது இந்து மதத்தை குறை கூறுவது விந்தை. அந்த ஒன்பது பெண்களுக்கும் யானைக்கும் என்ன சம்பந்தமென்று கூறுவேன்.

 

இன்றைய மகாராஸ்டிரம் மற்றும் ஒடிசா நிலப்பரப்பில் வாழ்ந்த மக்களிடையே கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு முதல் விநாயகரைப் பரம்பொருளாக ஏற்று வழிபடும் முறை காணபத்திய நெறியாக தோன்றியது. இதற்கு வித்திட்டவர் ஆதி சங்கரராவார். அதற்கான காரணத்தைப் பின்னர் விளக்குவேன். இப்படி புதியதொரு மதம் தோன்றிய பொழுது அவர்தம் தெய்வத்தை உயர்த்திக் காட்ட புராணம் தேவைப்பட்டது. இம்மதத்தினரே விநாயகர் ஆதியும் அந்தமுமில்லாதவர் என்றும் படைத்தல், காத்தல், ஒடுக்குதல் முதலிய முத்தொழிலும் செய்பவர் என்றும் கூறி ஸ்ரீ கணேசர் புராணத்தை கி.பி. பத்தாம் நூற்றாண்டு வாக்கில் இயற்றினார். இப்புராணத்திற்குப் பின்பு முத்கலர் என்னும் புராணம் ஒன்றை கி.பி. 14ஆம் நூற்றாண்டுக்கும் 15ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றினர்  இப்புராணத்தில் விநாயகருக்கு 32 உருவ பேதங்கள் கூறப்பட்டன. அதில் ஒன்று சக்தி விநாயகர் என்பதாகும். சக்திக்கு ஒன்பது வடிவங்களை ஏற்கனவே சாக்தர் கூறியததைத்தான் ஒன்பது பெண்களின் வடிவங்களைக் கொண்டு விநாயகரை உருவகிக்கும் ஒரு யானை. அனைத்து சக்திகளும் விநாயகரில் அடக்கமென்பது இதன் பொருளாகும்..         

 

தென்னாடுடைய சிவாகமங்கள் உணர்த்திய சித்தாந்த நெறியின் வழி கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு முதலே சிறந்தோங்கிய சைவ சமயம் வடக்கே தோன்றிய வேத நெறிக்கு சவாலாக அமைந்தது. தென்னாட்டில் திருமேனி வழிபாடு கொண்டு கோயில்களை அமைத்து இறை வழிபாட்டை மேற்கொள்ளும் முறை வேதத்தில் இல்லை. அப்படியானால் தென்னாடுடைய மக்களை வேத நெறியின் வழி கவர இயலாது. இந்த இடையூரை தம் அறிவாற்றலால் நீக்கியவர் வேதாந்தியான ஆதி சங்கரராவார்.

 

வடக்கே பாமரரும் பெண்களும் வேதத்தைக் கற்க இயலாது போனதால் அவர்களுக்கு வைதிக நெறிகளைக் கற்பிக்க வடமொழி புராணக் கதைகள் தேவைப்பட்டன. அப்புராணக்கதைகளைக் கொண்டு  கணபதி குமரன் சத்தி சிவன் வழிபாடுகள் வடமொழி புராணங்களில் கீழ் ஒன்றாகி சைவ சமயம் உருப்பெற்றது. அதுகூட ஆரியருக்குச் சவாலாக அமையவில்லை. ஆனால் அப்புராணக்கதைகள் தென்னாட்டில் பரவி அவை சித்தாந்தமென்னும் தத்துவ நெறியின் கீழ் ஒன்று திரட்டப்பட்ட பொழுதே ஆரியர் சைவத்தின் வளர்ச்சியைக் கண்டு அஞ்சும் நிலை ஏற்பட்டது. இதனைத் தவிர்த்தால் மட்டுமே வேத நெறி தென்னகத்தேயும் செழிக்க முடியும். அப்படியானால் சித்தாந்தத்தின் வழி ஒன்றுபட்ட இத்தெய்வங்களைப் பிரித்து அவற்றை வேதாந்தத்தின் வழி சரிநிகர்படுத்திக் கூற முடியுமானால் வேத நெறி தென்னாட்டிலும் தழைக்கும் என்பதை உணர்ந்தனர்.  இதனை ஆதி சங்கரர் செம்மையாகச் செய்தார்.

 

உருவ நிலை உடைய அனைத்து தெய்வங்களுமே சகுன பிரம்மம் என்று அவர்தம் சமசுகிரத தோத்திர பாமலைகளில் பாடினார். கணபதியும், முருகனும், சத்தியும் சித்தாந்தம் கூறும் தடத்த நிலையில் உரு கொண்ட மகேசுவரனும் சகுன பிரம்மம் என்று வகைப்படுத்தினார். ஆகையால் உருவமுடைய அனைத்து தெய்வங்களுமே வேதாந்த்தம் கூறும் மூலப் பிரகிரிதியின் 24 ஆன்ம தத்துவங்களைக் கொண்டு கூறப்படும் முக்குணங்களுக்கு ஆட்பட்டோர் எனவாயின. இப்படி வேதாந்தத்தின் அடிப்படையில் சரிநிகர்ப்படுத்தி பிரித்த தெய்வங்களே காணபத்தியம், கௌமாரம், சாக்தம் சைவம், வைணவம், சௌரம் எனப்பட்டது. ஆகையால் ஒன்றாயிருந்த சைவத்தைப் பிரித்து ஒவ்வொரு தெய்வமும் அந்தந்த மதங்களுக்கு பரம்பொருள் என வைத்தார் அப்பெருமகனார்.

  

சிவனுக்கு புராணங்களின் வழியும் சித்தாந்தத்தின் வழியும் சொரூப நிலை கூறப்பட்டதால் சிவன் நிர்க்குணன் என்னும் நிலையும் உடையவன் என்பதை தனது ஸ்ரீ தட்சனாமூர்த்தி தோத்திரத்தின் வழி உணர்த்தினார். ஆகையால் சிவன் பரம்பொருள் என்னும் நிலைக்குப்  பங்கம் வாராது பார்த்துக் கொண்டார். அதே வேளையில் ஒவ்வொரு தெய்வத்தையும் தத்தம் இஷ்ட தெய்வமாக வணங்கிய வெவ்வேறு பிரிவினரிடையே தத்தம் தெய்வமே உயரந்ததென்னும் புதிய சிந்தனைகள் பெருக ஆதி சங்கரர் வித்திட்டார். வேதாந்தத்தின் வழி திருமேனி வழிபாடுடைய நெறிகளை சகுன நிர்க்குண பாகுபாடானது தென் இந்தியாவில் பல்வேறு புதிய சமயங்கள் உருவெடுக்கக் காரணமாயின. அவர் எல்லா சமயங்களையும் ஸ்மார்த்தம் என்னும் நெறியின் கீழ் ஒருங்கிணைத்தார் என்பது அவர்தம் வழி தோன்றிய தற்கால மடங்களின் புத்துருவாக்கமாகும். அதில் உண்மையில்லை..

 

இவ்வாறுதான் வேத நெறியும் வைதிகப் பண்பாடும் தென்னகத் தமிழரிடையே வேர் ஊன்ற ஆரம்பித்தது. கோயில்களிலும் வேத கிரியைகளும் வைதிகப் பண்பாடுகளும் உட்புகுந்தன. அதனூடே ஸ்மார்த்தரும் உட்புகுந்தனர்.  

 

இது ஆரியருக்கே உரிய தனி சாமர்த்தியம். அவர் செல்லும் இடமெல்லம் மற்றவரை தமக்குள் ஈர்த்து அவர்தம் உடமைகளை தமதாக்கிக் கொள்ளும் திறன் பெற்றிருந்தனர். தமிழரின் மரபு வழிபாடுகளிலும் சமசுகிரதமும் வைதிக கிரியைகளும் கலந்தன. அதற்கு வேதாகமம் என்னும் சமரச சிந்தனை வைதிகச் சைவரால் முன் வைக்கப்பட்டது.

 

தென்னாட்டில் ஏற்பட்ட இவ்வகையான புத்துருவாக்கங்கள் வரலாற்றின் பின்னணியில் வேதாந்த சித்தாந்த தத்துவ நெறிகளைக் கொண்டு ஆய்வோருக்கே புலப்படும். வெறும் இந்து மதம் என்று அரட்டிக் கொண்டிருந்தால் புலப்படாது.   

 

மு. கமலநாதன்

தேனீ

unread,
Dec 28, 2018, 12:06:06 PM12/28/18
to மின்தமிழ்
ஒரு மதத்திற்கு ஒரு நெறியென்று இருக்கும் பொழுது அவற்றைத் தாரளமாக வரையறுத்துக் கூற முடியும். ஆனால் இந்து மதம் என்பது ஒரு மத நெறியைப் பிரதிபலிக்காததால் அதனை வரையறை செய்ய இயலவில்லை என்பதே உண்மை.

மு. கமலநாதன்

செல்வன்

unread,
Dec 28, 2018, 12:15:13 PM12/28/18
to mintamil


On Fri, Dec 28, 2018 at 11:06 AM தேனீ <ipohs...@gmail.com> wrote:
ஒரு மதத்திற்கு ஒரு நெறியென்று இருக்கும் பொழுது அவற்றைத் தாரளமாக வரையறுத்துக் கூற முடியும். ஆனால் இந்து மதம் என்பது ஒரு மத நெறியைப் பிரதிபலிக்காததால் அதனை வரையறை செய்ய இயலவில்லை என்பதே உண்மை.

மு. கமலநாதன்




தவறு.

ஒரு மதத்துக்கான நெறி என்பது அடிப்படைவாதிகளால் வகுக்கபடுவது.

அந்த அடிப்படைவாதிகள் கையில் ஆட்சி அதிகாரம் செல்கையில் அவர்கள் அந்த நெறிகளை கட்டாயமாக்குகிறார்கள்.

அந்த நெறிகளே பின் மக்களை துன்பத்துக்கு ஆளாக்குகின்றன.

படிக்காதவர் எண்ணிக்கை பல நூறு ஆன்டுகளாக பல நூறு கோடி. இந்த சூழலில் பைபிளை படித்தவன் தான் கிறிஸ்துவன், குரானை படித்தவன் முஸ்லிம் என எப்படி கூறமுடியும்?

மதகுருமார்கள் கட்ட்ளைப்படி நடப்பவனைதான் கிறிஸ்துவன், முஸ்லிம் என அவர்கள் சொல்லி வருகிறார்கள். இந்து சமயத்திலும் ஜாதி கட்டுமானம் அத்தகைய இடத்தை வகித்து வந்தது. சாதியை விட்டு தள்ளிவைத்தல் என்பது மரணத்துக்கு ஒப்பான தண்டனையாக இருந்தது.

மதகுருமார்களின் இத்தகைய பிடி ரிபார்மேஷன் எனும் இயக்கத்துக்கு பின் ஐரோப்பாவில் தளர்ந்துவிட்டது. மார்ட்டின் லூதர் போன்றோர் எதிர்புரர்ட்சி செய்து மக்களை மதகுருமார்களின் பிடியில் இருந்து விடுவித்தார்கள்.

இந்து சமயத்தில் புத்தர், ராமானுஜர் போன்றோர் அத்தகைய ஆன்மிக புரட்சியை நிகழ்த்தினார்கள். பெரியார் வெளியிருந்து அதை செய்தார்.

அதனால் ஒரு மதத்துக்கு இதுதான் நெறி என கூற முனைவது தவறு. அது அடிப்படைவாதத்தில் தான் போய் முடியும்.

தேனீ

unread,
Dec 29, 2018, 2:09:04 AM12/29/18
to மின்தமிழ்

சைவத்தை மதமென்று அந்த சமய நெறியில் நின்று வாழ்வோர் கூறார் மாறாக 'சமயம்' என்றே கூறுவார். சமயம் என்பது பக்குவப்படுத்தப்பட்டது என்பதாகும். உணவை உண்பதற்கு முன் பக்குவப்படுத்துவது போல் மனிதர் நாகரிக வளர்ச்சி பெறும் பொழுது தத்தம் வாழ்கையை அற வழியில் ஒழுங்கு படுத்தி வாழ கற்றுக் கொண்டனர். அதற்கு வழி வகுத்தே சமய நெறிகளாகும்.

எம்மதமும் சம்மதமென்று வாழுவோர் எப்படியும் வாழலாமென்னும் கொள்கையுடையோர். அதற்கு இடமளிப்பது இந்து மதம் என்னும் கூட்டுக் குடும்பம்.

ஒரு சமயம் கூறும் அற ஒழுக்கத்துடன் வாழ்ந்து உய்ய வேண்டி பக்குவம் பெற்றோர் தமக்குறிய சமய அற வாழ்க்கையின் வழி நின்று ஆன்ம இலாபம் பெறும் வழியை நாடுவார். இது உயிருக்கு ஆணவம் கன்மம் மாயையின் மறைப்பாற்றலால் ஏற்பட்ட அறியாமை நிலையிலிருந்து அறிவுத் தெளிவிற்கு உய்ய ஏற்படுத்தப்பட்ட நெறியாகும். அத்தகைய சமய நெறியறிந்து அதன் வழி நின்று உய்வது ஒவ்வாததா?

'அடிப்படைவாதிகள்' என்று புதியதோர் சொற்றொடரை ஏற்படுத்தி அவர்கள் நெறிகளைக் கட்டாயமாக்குகின்றார்கள் என்பது நிருவாக கட்டமைப்பில் செயல்படும் அயலார் மதங்களுக்குத் தகும். இந்து மதத்திற்கு எவ்வொரு நிருவாகக் கட்டமைப்பும் இல்லாததால்தான் இங்கே கருத்துச் சுதந்திரமும் வாழ்க்கை நெறி சுதந்திரமும்  வழங்கப்படுகின்றது. அந்த சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தியோரையும் பயன்படுத்துவோரையும் சுட்டிக் காட்டி குறை கூறுவதானது ஊர் மக்கள் ஒன்று கூடி தமக்கு வேண்டிய ஒரு தலைமைத்துவத்தை பெரும்பாண்மை என்னும் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து விட்டப் பிறகு சனநாயகத்தை குறை கூறுவதற்கு ஒப்பாகும்.

அந்த சனநாயகத்தில் தானும் ஒரு அங்கம் என்பதை மறந்து தத்தம் கையாலாகாத்தனத்தைக் காட்டவே சனநாயகத்தைக் குறை கூறுவார் ஓட்டுப் போட்டவர்.   அதுபோல தமக்கென்று ஒரு வாழ்க்கை நெறியை அறிவார்ந்த சமய நெறிகளின் வழி அமைத்துக் கொண்டு அதைப் பின்பற்றி வாழ இயலாதோரே அறிவாந்த சமயங்களைக் குறை கூறுவார். நம்பிக்கைச் சார்ந்த சமய வாழ்க்கை நெறிகளை அறிவார்ந்த சமய நெறிகளுடன் ஒப்பிட்டு சீர்தூக்கிப் பார்த்து வாழ்வதே அறிவுடையோர் என்று கூறிக் கொள்வோருக்கு அழகாகும்.

இந்து மதமென்றால் அது வைதிக வர்ணாசிரமத்தைக் கூறுவதென்பது கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே உடைந்து விட்டதென்பதை சிவ மகா புராணத்தின் வித்தியா சம்ஹிதை உணர்த்துகின்றது. அதன் எச்சத்தைதான் கடந்த நூற்றாண்டில் தமிழகத்தில் துடைத்தொழித்தோம். மழை விட்டும் தூவானம்  விடவில்லை என்பதற்கு தமிழரிடையே தொழிற்பேதத்தால் ஏற்பட்ட சாதிய மரபை இந்து மதத்துடன் இணைத்துப் பேசுவது கடந்த நூற்றாண்டில் திராவிட கருத்தியல் கொண்டோர் திட்டமிட்டு உருவாக்கம் செய்த கற்பனையாகும்.

சாதியம் என்பது மக்களின் சமூக வாழ்க்கையில் தொழிற்பேதங்களைக் கொண்டு சமணர் வகுத்துக் கொடுத்த சமூக நியதி என்பதை தரவுடன் மின் தமிழில் எடுத்துக் கூறியும் அதை தமது வசதிக்காக மறந்து விட்டு மீண்டும் மீண்டும் வைதிக பண்பாட்டோடு இணைத்துப் பேசுவது அறியாமை என்று கூறலாம் அல்லது அறிந்தே தமிழர்களை மடைமாற்றம் செய்யும் கைங்காரியமென்றும் சொல்லலாம்.

சமூக புரட்சிக்கு புத்தர் இராமனுஜரை அடையாளம் காட்ட இயல்வோர் நாயன்மார்களை அடையாளம் காட்டத் தவறுவதும் அவர்தம் இந்து மதத்தின் தெளிவை கேள்விக் குறியாக்குகின்றது. சைவத்தில் எக்குலத்தாராயினும் இறைவன் முன் அனைவரும் சமமே என்று கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டிலேயே வரலாற்று முன்னுதாரணத்தை வைத்தது திருத்தொண்டர் புராணமாகும். இதை திராவிட கருத்தியல் கொண்டோர் அவர்தம் கருத்துக்கு வசதியாக திரித்துக் கூறுவதில் வல்லவர். தென்னாடுடைய சைவத்தில் தெளிவு பெற்றோரிடையே இத்தகைய திராவிட கருத்தியல் முன் நிற்க இயலாது.
 
ஆகையால் இந்து மதம் என்னும் கூட்டுக் குடும்பத்திற்கு ஒரு வாழ்க்கை நெறி இல்லை மாறாக பல வாழ்க்கை நெறிகள் உண்டு. அதில் ஒரு பிரிவை ஏற்றுக் கொண்டு நிற்போருக்கு அந்த வாழ்க்கை நெறி வழிகாட்டும். அவரவருக்கு ஏற்ற வாழ்க்கை நெறியைப் பின்பற்றுவதற்கு இந்து மதத்தில் சுதந்திரமுண்டு.

அதுபோல்தான் ஐய்யப்பன் சாமிக்கு ஒவ்வாத பெண்மையும். அவர்கள் அதற்கு ஒரு புராணக்கதையை ஏற்படுத்திக் கொண்டு அதுவே வரலாறு என்பதாக நம்பிக்கையுடன் வாழும் பொழுது இந்து மதத்தில் அது ஒரு பிரிவு என்றுதான் காண வேண்டுமேயொழிய அதுவே இந்து மதத்தின் மொத்த உருவம் என்பதாக உருவகிக்கக் கூடாது.

எங்கும் வியாபகமாக விளங்கி நிற்கும் இறைவன் அனைவரின் உள்ளத்திலும் உள்ளான் தூணிலும் உள்ளான் துரும்பிலும் உள்ளான் என்று சொல்லும் பொழுது அந்த இறைவனை சபரி மலையில்தான் சென்று காண முடியுமா அல்லது அடைய முடியுமா? அப்படி ஐய்யப்பன் சபரி மலையில் மட்டும் குடிகொண்டவர் என்றால் ஆங்கே இறைத்தன்மை எங்ஙனம் வாழும்? அப்படி இறைத்தன்மை இல்லாத இடத்திற்கு வழிபட போகிறோமென்று வெறுமனே அடம் பிடிக்கும் பெண்ணியவாதிகளின் அறிவுத் தெளிவை என்னவென்பது?

வெறுமனே ஒரு கூட்டம் பெண்ணியமென்று பேசுவதும் அதை மற்ற சாரர் அவரவர் அரசியல் வாழ்வாதாரத்திற்குப் பயன்படுத்திக் கொண்டு அரசியலில் குடித்தனம் நடத்துவதற்கு இந்து மதமா பொறுப்பு? மின் தமிழில் இருக்கும் கற்றோருக்கு இதுவும் புலப்படவில்லையென்றால் இது கற்றோருக்குரிய இடமா?

ஆகையால் இந்திய துணைக் கண்டத்தில் வாழும் வெவ்வேறு பண்பாடுகளையுடைய மக்களிடையே இருக்கும் நம்பிக்கைகளும் மரபுகளும் அவரவருக்கு உரியது மட்டுமே. அதில் பிறர் தலையிடாமல் இருந்தால் ஏது வம்பு? எம்முடைய வீட்டிற்குள் வந்த விருந்தாளி எம் வீட்டில் சட்டம் இயற்றுவதை எவரும் விரும்பமாட்டார். அதைப்போல்தான் சபரிமலை காட்சியும்.

இந்தியா சுதந்திரம் பெற்றப் பிறகு அதற்கென்று ஒரு தெளிவான அரசியல் சாசனம் உண்டு. அதன் அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டங்கள். உண்டு. அதைப் பின்பற்ற வேண்டிய கடமை ஒவ்வொரு இந்திய குடிமகனுக்குமுண்டு. இல்லையேல் தன்னை இந்திய குடிமகன் என்று சொல்லிக் கொள்வதானது எவ்வகையில் ஏற்புடையதாகும்?

இதை எடுத்துப் பேசாத ஒரு சில அரசியல் கட்சிகள் தத்தமக்கு ஆதாயம் தேடுகின்றார் என்பது இந்திய மக்களுக்குத் தெரியாதது அல்ல?

ஆகையால் இந்து மதத்தைப் பற்றி பேசும் பொழுது அதற்கு பல்வகை முகம் உண்டு என்பதையும் அதில் எவ்வொரு முகத்தையும்  ஒருவர் ஏற்றுக் கொண்டு  வாழலாம் என்பதன் அடிப்படையில் இந்தியாவின் ஒற்றுமை இது நாள் வரை காக்கப்பட்டு வந்துள்ளது என்பதே இந்து மதத்திற்குரிய சிறப்பாகும்.

அயலார் மதங்கள் ஏதாவது ஒன்றன் நிருவாகக் கட்டமைப்பின் கீழ் இந்தியா இருந்திருந்தால் அது இன்று ஒரு நாடாக இருப்பது போய் சோவியத் யூனியன் பிரிந்தது போல் பல நாடுகளாகப் பிரிந்திருக்கும் என்பது திண்ணம்.,  

ஆகையால் இந்து மதங்களைக் குறை கூறி வாழ்வதை விட்டு விட்டு தனக்கெது உகந்த சமய நெறியோ அதன் அடிப்படையில் வாழக் கற்றுக் கொண்டால் ஏது வலி? 

இதைப் புரிந்து கொண்டு இனியும் மின் தமிழில் இந்து மதங்களைப் புறங் கூற வேண்டாமென்று இரு கரம் கூப்பி வேண்டுகிறோம். 

மு. கமலநாதன்.

nkantan r

unread,
Dec 29, 2018, 2:29:31 AM12/29/18
to மின்தமிழ்
மதத்தின் நிருவாக கட்டமைப்பு? அதுதான் ஸோவியத் யுனியன் உடையக் காரணம்.

இந்தியா இன்னும் பிரியாமல் இருப்பதற்கும் இந்து மதங்கள் ( பன்மை..!!?) காரணம்

புதுமையான எண்ணம்

rnk

Satish Kumar Dogra

unread,
Dec 31, 2018, 1:06:45 AM12/31/18
to mint...@googlegroups.com
செல்வன், நீர் ஒரு ஞானி.

கடவுள் எப்படி இருக்க வேண்டும், மதம் என்பது எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை முன் கூட்டியே முடிவு செய்து அந்த வரையறைகளுக்கு சரி வராத கடவுளையும் மதத்தையும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனப்பான்மை இருபத்தியோராம் நூற்றாண்டுக்கு உகந்ததல்ல.

கடவுள் ஒரு புரியாத புதிர். ஆன்மிகம் என்பது அந்த புதிரைப் புரிந்துகொள்ள மனிதன் மேற்கொள்ளும் தேடல் முயற்சி. சமயங்கள் என்பது அந்தத் தேடல் முயற்சியின் பல்வேறு வடிவங்கள். அந்தப் பல்வேறு வடிவங்களின் தொகுப்பு இந்து மதம்.
============================================
Read my websites:
English: csprep.in
Tamil: dogratamil.com

My contact number:
+91 98400 93148



செல்வன்

unread,
Dec 31, 2018, 10:01:23 AM12/31/18
to mintamil
வணக்கம் டோக்ரா ஐயா,

கேள்விகள் இல்லாத ஆத்திகமும், மனித வாழ்வின் வெற்றிடங்களை இட்டு நிரப்ப அறிவியலின் போதாமையை உணராத நாத்திகமும் ஆபத்தானவை.

அதனால் தான் பண்டைய பாரதத்தில் ஆத்திக-நாத்திக வழி ஆன்மிக மரபுகள் எழுந்தன.

ஆனால் தற்போது நடைபெறும் விவாதங்கள் ஆத்திகர்- நாத்திகர் என்ற பழங்கால விவாத மரபை ஒட்டி வருபவை அல்ல.

இடது- வலது எனும் மேற்கத்திய பாணி அரசியலை ஒட்டி எழுபவை.

இவை இரண்டும் மேற்கத்திய ஓரிறைக்கொள்கையின் நிலையை வழிவந்தவை என்பதால் "my way or high way " எனும் மனபோக்குடன் எதிராளியை பகையாளியாக கருதி "என் வழிக்கு மாறு அல்லது உன்னை அழித்துவிடுவேன்" எனும் தீவிர மனபோக்கு கொண்டவை.

இவை பேசும் பெண்ணீயம், சாதிமறுப்பு எல்லாமே இடது-வலது சட்டகத்துக்குள் அடங்கும்வரைதான்.

இடதுசாரி சட்டகத்துக்குள் வரமறுக்கும் "ready to wait" என சொல்லி போராடும் அய்யப்ப பக்தைகளை இவர்கள் பெண்ணீய வளையத்துக்குள் சேர்க்கமாட்டார்கள். அவர்களை எட்டப்பனை பார்ப்பது போல தான் பார்ப்பார்கள்.

சமணம், பவுத்தம் ஆகியவை எல்லாம் இந்துமத எதிர்ப்பின் பண்டையகால குறியிடூகளாக பார்க்கும் வரை, அவர்களை பார்ப்பன வைதீக சமயத்தின் விக்டிம்களாக பார்க்கும்வரை தான் அவர்களுக்கு இவர்கள் அளிக்கும் ஆதரவு நீடிக்கும்.

சமணர்களாவது, பவுத்தர்களாவது தம் ஆன்மிகத்தை, அது இந்து சமயத்துடன் தொடர்புள்ளது என பேச ஆரம்பித்தால் அதன்பின் அவர்களுக்கு இருக்கு கச்சேரி :-)

மனிதர்களை கொள்கை சார்ந்து அளவிடுவதாலும், கொள்கைகளை மேற்கத்திய ஓரிரிறைக்கொள்கையின் சமய வடிவங்களில் பார்ப்பதாலும், கருத்தியல் ரீதியான டைவர்சிட்டி இவற்றில் இல்லாமல் போகிறது.



--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


--

செல்வன்

Thenee MK

unread,
Dec 31, 2018, 10:22:14 AM12/31/18
to mintamil
படித்ததில் பிடித்தது

28-12-1928 திகதி தூத்துகுடி சைவ சித்தாந்த சபையின் 45-ம் ஆண்டு விழாவில் இரண்டு நாட்களாக தொடர்ந்து சைவ சமய சொற்பொழிவாற்றிய திரு. வி.க. (திரு. வி. கலியானசுந்தர னாரின்) சொற்பொழிவுகள் ‘சைவத் திறவு’ எனும் ஒரு சிறிய நூலாக வெளியிடப்பட்டது. திரு. வி.க. வின் சொற்பொழிவும், தமிழ் மொழி ஆளுமைத் திறனும் அவர் வாழ்ந்த காலத்தில் ஆன்மீகத்திற்கு ஆற்றிய பங்கும் தமிழ் நாட்டுத் தமிழர் அறிவர்.

தென்முகக் கடவுள் தட்சணாமூர்த்தியாக வீற்றிருந்து சனகாதி முனிவர் நால்வருக்கு சித்தாந்தம் என்னும் நெறியைப் புகட்டி தென்னாட்டில் சைவம் சிறந்தோங்க காரணமாயிருந்ததால் மணிவாசகப் பெருமான் ‘தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ என்று வாழ்த்தினார்.

சொரூபத்தில் ஒரு நாமம் ஓர் உருவமில்லாத இறைவன் ஒருவனே. உலகோர் உய்யும் பொருட்டு அவன் எவ்வகை உருவமும் தாங்கி வர வல்லவன். அதன் காரணமாகவே அவனை பல வடிவங்களில் காண்கிறோம். பல பெயர்களைக் கொண்டு அறிகிறோம். சித்தாந்தம் பகர்வது பதி ஒன்றே; உயிர் பல. இவ்வுண்மையைப் புரிந்து கொண்டால் மட்டுமே இறைவனுக்கும் உயிர்குலத்திற்குமுள்ள வேறுபாட்டையும் தொடர்பையும்  நாம் உணரமுடியும். அவ்வாறு உணர்ந்தோர் மட்டுமே சித்தாந்தம் உணர்த்திய நெறியில் நின்று இறைவன் திருவடியைச் சார முடியும்.     

திரு. வி.க. அவர்கள் தன்னுடைய நூலுக்கு வழங்கிய அணிந்துரையில் இவ்வாறு கூற ஆரம்பிக்கின்றார்:

“உலகம் ஒரு முழுமுதலையுடைத்து என்னும் உண்மையில் இஞ்ஞான்று ஐங்கொள்ளும் அறிஞர் சிலரென்றே கூறலாம். செம்மை ஆராய்ச்சியான் நல்லறிவு முகிழ்க்கப் பெறாதார் கூற்றுக்களை உலகம் (உயர்ந்தோர்) ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் கடையாயார் கூற்றுக்களான் இடையாயார் கேடுறாதவாறு காக்க வேண்டுவது தலையாயார் கடன்.

கடவுளுண்மையில் உறுதியுடையார் பலர். அவ்வுண்மை யுணர்ந்தார் சிலர். அவ்வுண்மை யுணரும் வழி கோலினார் மிகச் சிலர். அம் மிகச் சிலர் கோலிய வழியாது என்பதை விளக்குவது இந்நூல். இக்காரணம் பற்றியே இந்நூற்குச் ‘சைவத் திறவு’ என்னும் பெயர் சூட்டப் பட்டது” என விளக்குகின்றார். இதில் ‘ஒரே கடவுள்’ என்ற கட்டுரையின் தொகுப்பை இங்கே மின் தமிழார் பார்வைக்குப் பதிவிடுகிறோம்.

ஒரே கடவுள்

பொருள்

இனித் “தென்னா டுடைய சிவனே போற்றி – எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி” என்னும் பொருண்மீது கருத்துச் செலுத்துவோம். இப் பெருமொழியின் பொருள் வெள்ளிடைமலை. தென்னாடுடைய சிவனே எந்நாட்டவர்க்கும் இறைவன் அல்லது எந்நாட்டவர்க்கும் இறைவன் தென்னாடுடைய சிவன் என்பது அத் திருவாசகத்தின் கருத்து.

எந்நாட்டுக்கும் இறைவன் ஒருவனே. அவ்வொருவனுக்குப் பல நாட்டு மொழிகளில் பல  பெயர்கள் வழங்குகின்றன. அப்பன்மைப் பெயர்கள் பெரிதும் அவ்வந்நாட்டின் இயற்கை நிலையையொட்டிப் பிறந்திருத்தல் வேண்டும். பெயர் பல கொண்டு கடவுளர் பலர் என்னும் முடிவுக்கு வருதல் அறியாமை.

“ஒரு நாமம் ஓருருவம் ஒன்று மில்லாற்கு ஆயிரந் திருநாமம் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ” என்றார். திருவாசகனார். “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்னுந் திருமூலர் மொழியும் ஈண்டு உன்னற்பாலது.

சிவம்

தென்னாட்டவராகிய நாம் இறைவனைச் சிவம் என்னுஞ் செம்மொழியால் வழுத்துகிறோம். சிவம் என்னுஞ் சொல் வடமொழியிலும் வழங்கப் படுகிறது; தென்மொழியிலும் வழங்கப்படுகிறது.

தென்மொழி வல்லார் சிவம் என்பதற்குச் செம்மையென்று பொருள் கூறுகிறார். செம்மை யென்னுஞ் சொல் பல பொருளுடையது. ஈண்டு எடுத்துக் கொண்ட பொருளுக்கேற்பச் செம்மையென்பதற்குச் செந்நிறம் என்னும் ஒரு பொருளை மட்டுங் கொள்கிறேன்.

தென்னாட்டார் பரம்பொருளைச் செந்நிறமாகக் கண்டு, அதனைச் சேயென்றுஞ் சிவமென்றும் போற்றலாயினர். இதற்கு காரணமென்ன?

இறையும் இயற்கையும்:

இறைவன் ஒரு நாமம் ஓருருவம் ஒன்றுமில்லாதவன். அவன் அறிவாய் யாண்டும் நீக்கமற நிற்பவன். “இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் என்று எழுதியுங் காட்டொணாதே” என்றார் அப்பர் சுவாமிகள் இத்தகைய அறிவுப் பொருளின் உண்மையை எங்ஙனம் உணர்வது? அதன் வடிவான இயற்கையைக் கொண்டே அதன் உண்மையையுணர்தல் வேண்டும் ...

இயற்கையில் வெம்மை .............

தீவண்ணம் .................

சேய் – சிவம் ..............

சமரசம்

நந்தமிழ் பெரியோர்கள் சமரசத்தையே அறிவுறுத்திச் சென்றார்கள். ......... சில உரைகளால் மட்டும் அச்சமரசத்தை விளக்கிச் செல்ல விரும்புகிறேன்.

அப்பர்

இங்கே அப்பர் சுவாமிகள் வரலாறு நினைவிற்கு வருகிறது. அப்பர் சைவ சமயத்தில் பிறந்தாரென்றும், பின்னம் சமண சமயம் புகுந்தாரென்றும், மீண்டும் சைவ சமயம் சார்ந்தாரென்றும் அவர் வரலாறு சொல்கிறது.

இப்போக்கு வரவெல்லாம் ஒரே கடவுள் நெறியில் நிகழ்தற்கு இடனுண்டோ? அன்பர்களே! உன்னுங்கள். பின்னை அப்பர் வரலாறு பொய்மையா? அவ்வரலாற்றில் உண்மை காண முயல்வதே அறிவுடைமை.

இருநிலை:

இறையருள் பெறாது சமய நுட்பங்களைக் கலையளவில் ஆராயுங்கால் மக்கட்குப் பல கடவுளுணர்வு சமயவுணர்வு தோன்றுதல் இயல்பு. ஆண்டவன் அருள்நிலை கூடப் பெற்றவர்க்குப் பன்மை உணர்வு அறுந்து ஒருமை உணர்வு அரும்பும்.”
.........
இதனையடுத்து அப்பரின் சைவம், சமணம் இருநிலைப்பாடுகளையும் கடந்து சிவநெறியை ஏற்று வாழ்ந்ததையும், சைவத்தின் சமரசத்தையும் குறித்து கீழ்காணும் பாடலைக் கொண்டு திரு வி.க. விளக்குகின்றார்,

“வாது செய்து மயங்கு மனத்தராய்*
ஏது சொல்லுவீ ராகிலு மேழைநாள்
யாதோர் தேவ ரெனப்படு வார்க்கெலாம்
*மாதே வனலாம் தேவர்மற் றில்லையே.”

“இத்திரு திருப்பாடலால் அப்பர் சுவாமிகள் சமரச உணர்வு தெற்றென விளங்குதல் காண்க.

தமிழ்ப் பெரியோர்கள் ஒரே கடவுள் என்னும் உண்மையில் உறைந்து நின்றவர்கள் என்பதற்குச் சான்றுகள் பல உண்டு. அவைகளை ஈண்டு விரித்துக் கூற வேண்டுவதில்லை.

மொழிகளின் பன்மைகொண்டு கடவுளுக்கும் பன்மை கூறல் அறியாமை. “அறுவகைச் சமயத் தறுவகையோர்க்கும் வீடுபேறாய் நின்ற விண்ணோர் பகுதி” என்றும், “வணங்கு நின்னை மண்ணும் விண்ணும்” என்றும் மணிவாசகனார் அருளிய மெய்யுரைகளின் உள்ளக் கிடக்கையை உணர்க.

இறைவன் ஒருவனே. அவன் இத்தென்னாட்டில் சிவன் என்னும் பெயரால் போற்றப் படுகிறான். அவ்விறைவனாஞ் சிவனை மெய்யறிவால் உணர்த்த தமிழ்ப் பெரியோர்கள், அவனை எவ்வெவ்வாறு வழுத்தினார்கள் என்பதைச் சிறிது ஆராய்வோம்.

“சிவனுரு அருவுமல்லன் சித்தினோ டசித்து மல்லன்” என்றார் அருணந்தி சிவனார். “யார் அறிவார் எங்கள் அண்ணல் பெருமையை. யார் அறிவார் அந்த அகலமும் நீளமும், பேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்றதன். வேர் அறியாமல் விளம்புகின்றேனே” என்றார் திருமூலனார்.

மாணிக்கவாசகனார் திருமொழியில் சிலவற்றைப் பார்ப்போம். “பாதாளம் ஏழினுங்கீழ் சொற் கழிவு பாதமலர்:, “உள்ளப்படாத திருவுருவை”, “கீதமினிய குயிலே கேட்டியே லெங்கள் பெருமான், பாதமிரண்டும் வினவிற் பாதாள மேழினுக்கப்பாற், சோதி மணிமுடி சொல்லிற் சொல்லிறந்து நின்ற தொன்மை, ஆதிகுண  மொன்றுமில்லா னந்தமிலான் வரகூவாய். “எண்ணுதற்கெட்டா எழிலார் கழல்”, “மாற்ற மனங்கழிய நின்ற மறையோனே”, போக்கும் வரவுமிலாப் புண்ணியனே”. இத் திருமொழிகளை நோக்குக.”

திரு வி.க. “ஒரே கடவுள்’ எனும் தனது சொற்பொழிவை மேற்கண்டவாறு விளக்கி முடிகின்றார். இப்படி தூத்துகுடியில் சொற்பொழிவாற்றியது சரியாக 90 வருடங்களுக்கு முன்பு. அன்று தென்னிந்தியர்களிடம் இருந்த தெளிவு இன்று மங்கியது ஏன்?

அன்று பரம்பொருள் வழிபாடு கொஞ்சவமாவது மிஞ்சியிருந்தது. இன்று பலதெய்வ வழிபாடு பரம்பொருள் வழிபாட்டை மிஞ்சி விட்டது. அதனால் பரம்பொருள் பல என்றும் அல்லது பரம்பொருளுக்கு நிகராக மேலும் பல பரம்பொருள் உண்டு என்றும் இன்று புதிய கருத்துப் பரவப் படுகின்றது. சிவசிவ

மு. கமலநாதன்
 

You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/mpizDT67-oE/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

Innamburan S.Soundararajan

unread,
Dec 31, 2018, 10:56:00 AM12/31/18
to mintamil
திரு வி.க. “ஒரே கடவுள்’ எனும் தனது சொற்பொழிவை மேற்கண்டவாறு விளக்கி முடிகின்றார். இப்படி தூத்துகுடியில் சொற்பொழிவாற்றியது சரியாக 90 வருடங்களுக்கு முன்பு. அன்று தென்னிந்தியர்களிடம் இருந்த தெளிவு இன்று மங்கியது ஏன்?
~ 1. செல்வனின் விளக்கம் ஏற்புடையதே.
~ 2. அசரீரி போல் ஒலிக்கிறது, உமது இழை, நண்பர்.ம்.கமலநாதன். இவ்வருடம் என்னுடைய மானசீக ஆசான் தமிழ்த் தென்றல் அவர்களை பற்றி எழுதத் திடங்கினேன். உமது மடல் எனக்கு ஊக்கமளிக்கிறது.
அன்புடன்,
இன்னம்பூரான்

Thenee MK

unread,
Dec 31, 2018, 11:10:52 AM12/31/18
to mintamil
சிவசிவ 

Jalasayanan

unread,
Dec 31, 2018, 2:50:48 PM12/31/18
to mint...@googlegroups.com

சிறப்பு

--

Satish Kumar Dogra

unread,
Jan 3, 2019, 9:41:56 AM1/3/19
to mint...@googlegroups.com
செல்வன் அவர்களே,
நீங்கள் எழுதிய ஒவ்வொரு வார்த்தைக்கும் என் சிந்தனைமுறைக்கு முழு ஒற்றுமை இருக்கிறது.
என் கருத்துக்களை எனக்கு புதுமையான கருத்துக்களாகத் தோன்றுவதுபால் அழகாகவும், தெளிவாகவும் சொல்லும் உங்கள் பேச்சாற்றலைப் பாராட்டுகிறேன்.
============================================
Read my websites:
English: csprep.in
Tamil: dogratamil.com

My contact number:
+91 98400 93148

Rathinam Chandramohan

unread,
Jan 3, 2019, 11:06:49 AM1/3/19
to mint...@googlegroups.com
Hinduism is not a religion. Its a way of life enrolling and encompassing every one in diversity,scientifically and is eclectic. If the caste inequality and untouchabily are removed  it will have more share.

On Thu, 3 Jan 2019, 20:29 Satish Kumar Dogra <dogra...@gmail.com wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (dogra...@gmail.com) Add cleanup rule | More info
செல்வன் அவர்களே,
நீங்கள் எழுதிய ஒவ்வொரு வார்த்தைக்கும் என் சிந்தனைமுறைக்கு முழு ஒற்றுமை இருக்கிறது.
என் கருத்துக்களை எனக்கு புதுமையான கருத்துக்களாகத் தோன்றுவதுபால் அழகாகவும், தெளிவாகவும் சொல்லும் உங்கள் பேச்சாற்றலைப் பாராட்டுகிறேன்.
============================================
Read my websites:
English: csprep.in
Tamil: dogratamil.com

My contact number:
+91 98400 93148

On Mon, Dec 31, 2018 at 8:31 PM செல்வன் <hol...@gmail.com> wrote:

Satish Kumar Dogra

unread,
Jan 3, 2019, 11:32:59 AM1/3/19
to mint...@googlegroups.com
Very true, Mr. Chandramohan.
============================================
Read my websites:
English: csprep.in
Tamil: dogratamil.com

My contact number:
+91 98400 93148

செல்வன்

unread,
Jan 3, 2019, 2:03:32 PM1/3/19
to mintamil
On Thu, Jan 3, 2019 at 8:41 AM Satish Kumar Dogra <dogra...@gmail.com> wrote:
செல்வன் அவர்களே,
நீங்கள் எழுதிய ஒவ்வொரு வார்த்தைக்கும் என் சிந்தனைமுறைக்கு முழு ஒற்றுமை இருக்கிறது.
என் கருத்துக்களை எனக்கு புதுமையான கருத்துக்களாகத் தோன்றுவதுபால் அழகாகவும், தெளிவாகவும் சொல்லும் உங்கள் பேச்சாற்றலைப் பாராட்டுகிறேன்.
=


நன்றி டோக்ரா ஐயா..பெரியவர்கள் ஆசி கிட்டுவது பெரும்பேறாக கருதுகிறேன் 
Reply all
Reply to author
Forward
0 new messages