‘சைவம்’ என்பது சிவனோடு சம்பந்தமாகுதல் என்ற திருமூல நாயனாரின் திருவாக்கால் சைவ
சமயப் பெரியார் யாவரும் சைவத்தை ‘இந்து’ என்று பெயரிட்டு அழைப்பதை விட சைவ சமயம் என்று கூறுவதையே பொருள் பொதிந்த
சொல்லாக கொள்கின்றனர். அவ்வாறே சைவ சமய ஆதார நூல்களில் தொன்றுதொட்டு குறித்தும் வந்துள்ளனர்.
இதனை யாழ்ப்பான சமயப் பெரியார் இலக்கிய கலாநிதி பண்டிதர் மு. கந்தையா அவர்கள் அவர்தம் ‘சனாதன சைவ சமயம்’ என்னும் நூலில் இவ்வாறு விளக்குகின்றார்:
“சைவ சமயமும் இந்து சமயமும் ஒன்றல்ல. சைவம்தான் தமிழரின் சமயம். அது அனாதியான இயல்புச் சமயம்.
அதற்கெதிர் சமீபகாலத்தவரால் புதுப்படையலாகப் புனையப் பெற்ற சாரமற்ற சப்பைக்கட்டுச் சமயம் இந்து சமயம். இது தாங்கும் ‘இந்து’ என்ற சொல்லே தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் அந்நியம். அச்சொல்லுக்குச் சமய சார்பான அர்த்தமோ அதைவிட அந்நியம். பாரசீகமொழி அகராதி அத்தாட்சி ஆக உள்ள உண்மை இது.”
ஆனால் சைவத்திற்கு அந்நியமாகிப் போன தமிழரே இன்று சைவ சமயத்தை இந்து மதமாக மயக்க அறிவில் காணுகின்றனர். இந்நிலை மாற வேண்டுமானால், ஆங்கிலேயரின் காலனித்துவ ஆட்சியில் ‘இந்து மதம்’ என்ற ஒரு பெயரை ஆங்கிலேயர் பயன்படுத்திய காரணத்தையும் அச்சொல் குறிக்கும் பொருளையும் தமிழர் அறிய வேண்டும்.
‘இந்து மதம் எங்கே போகிறது’ என்ற நூலில் (பக். 331) ‘ஹிந்து மதம்’ என்ற பெயர் ஏற்பட காரணம் என்னவென்பதை வேத, வைணவ நெறியில் பழுத்தப் பழமாகிய அக்னிஹோத்ரம் இராமானுஜ தாத்தாச்சாரியார் கீழ்காணுமாறு விளக்கிச் சொல்கிறார்,
“நமது மதத்துக்குப் பெயராக வேதக்காரர் சொன்னது முதல் வெள்ளைக்காரன் சொல்ல வந்தது வரை பார்த்தோம். சிந்து நதிக்கரைக்காரன் என்ற அடிப்படையிலேதான் நம்மை ZINDOO என எழுதினான் வெள்ளைக்காரன். இது உமக்கு எப்படித் தெரியும் என்று நீர் கேட்கலாம். நான் அந்த பிரிட்டிஷ் டாக்குமென்ட்டை பார்த்திருக்கிறேன், படித்திருக்கிறேன். கும்பகோணத்தில் காவிரிக்கரையோரத்தில் எல்லாம் விளையும். அங்கே காவிரியின் மடியில் அறிவு விளையும், ஞானம் விளையும் ஓர் இடம் இருந்தது. அதுதான் என் ஆசான் ரகுநாதராவ் என்பவருக்குச் சொந்தமான Library. ரகுநாதராவ், என்னை விட வயதில் மூத்தவர். அந்தக் காலத்தில் பரோடா சமஸ்தானத்தில் திவானாக இருந்தவர். அவர் பதவிக் காலத்தில் பிரிட்டிஷ் ராஜாங்கத்தோடு தொடர்பு கொண்டிருந்தவர். அந்த ரகுநாதராவ் திவான் பதவியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் கும்பகோணத்தில் காவிரிக் கரையோரத்தில் ஒரு லைப்ரரியை ஆரம்பித்தார். அங்கே தான் பிரிட்டிஷாரின் டாக்குமென்ட்களையும் பார்த்தேன். முதலில் நம்மைப்பற்றி ZINDOO என்று எழுதி வைத்திருந்தவன், காலப் போக்கில் இந்த உச்சரிப்பை மாற்றி Hindu என்று உச்சரித்தான். அவன் உச்சரித்ததையெல்லாம் படிப்படியாக அவனது டாக்குமென்ட்களில் பதிவும் செய்து வைத்தான். இப்போது ZINDOO என்பது Hindu ஆகிவிட்டது.
ஆக, இப்போது நாம் நம்மை அழைத்துக் கொள்ளும் நமது மதத்தின் பெயரான ‘ஹிந்து’ என்ற பெயர் நாம் சூட்டிக் கொண்டதல்ல. நமக்கு அந்நியன் சூட்டிய பெயர். அதைத்தான் நாம் இன்று சூட்டிக் கொண்டிருக்கிறோம். இன்னும் சொல்லப்போனால், இது Christian சூட்டிய பெயர். நம்மையெல்லாம் என்ன சொல்லி அழைப்பது என்று தெரியாமல் வெள்ளைக்கார Christian கண்டுபிடித்த, கண்டுகூட பிடிக்கவில்லை, தன் வாய்க்கு வசதியாக வந்ததை உச்சரித்ததைத் தான் நாம் இன்று நமக்கான அடையாளமாக சுமந்து கொண்டிருக்கிறோம்.”.
அக்னிஹோத்ரம் இராமனுஜ தாத்தாச்சாரியார் சொன்னதின் உண்மையை மேலும் விரிவாகக் காண்போம்.
பதினெட்டாம் நூற்றாண்டில் கல்கத்தாவை ஆட்சி பீடமாகக் கொண்டு இந்து நாட்டை ஆண்ட ஆங்கிலேயரின் நீதித்துறையில் நீதிபதியாக விளங்கிய ‘சர் வில்லியம் ஜோன்ஸ்’ என்பவர் இந்து நாட்டு மக்களின் சுய சட்டதிட்டங்களை (Personal Law) தொகுத்துக் கூற முயற்சி மேற்கொண்டார். ஆங்கிலேயரின் ஆட்சியில், முசுலிம் மற்றும் முசுலிம் அல்லாத மக்களின் தனி நபர் வழக்கீடுகள் விசாரணைக்கு வருமின் அதற்கு ஆதாரமாக, ஆங்கிலேயரின் அந்நிய சிவில் சட்டங்களைப் பின் பற்றாது, உள்நாட்டு மக்களின் சுய வழக்கங்களைக் கொண்ட சட்ட திட்டங்களை பிரமாணமாகக் கொண்டு தீர்ப்பு வழங்குவதே நீதியாக இருக்கும் என்பதற்காக இம்முயற்சி மேற்கொள்ளப் பட்டது. அவுரங்சிப் ஆட்சி காலம் முதலே முசுலிம் மக்கள் அவர்தம் மத அடிப்படையிலான சுய சட்டதிட்டங்களைக் கொண்டிருந்ததால், இந்துகளுக்கும் அவ்வாறான அதிகாரப் பூர்வமான சட்டம் தேவை என்பதை வங்காள மாகாண ஆளுனரிடம் அவர் வலியுறுத்தினார்.
அதன் அடிப்படையில் வங்காளத்தில் (‘Bengal Presidency’) வாழ்ந்த பிராமணப் பண்டிதர் ஒருவர் கொடுத்த வாய்மொழி விளக்கங்களைக் கொண்டு மனுநீதியையும், ஆரிய பிராமணர் வாழ்வியல் நெறியையும் உள்ளடக்கிய சமசுகிருத நூற்களின் மொழிபெயர்ப்பாக, The Institutes of Hindu Law’ என்றொரு ஆங்கில நூல் தொகுத்தார். இந்நூல் பூர்த்தியாகியது ஏறக்குறைய 1776-ம் ஆண்டாகும். வைதிக வர்ணாசிரம வாழ்வியல் நெறியை விளக்கும் இந்நூலை ஆதாரமாகக் கொண்டு 1778-ம் ஆண்டில் இந்து நாட்டில் வாழும் மக்களின் அவர்தம் ஒப்பந்தச் சட்டம் மற்றும் பூர்வீக சொத்து பங்கீட்டு முறைகளை (‘Contracts and Successions’) உள்ளடக்கிய, ‘Hindu Law’ என்றொரு சட்டத்தை ஆங்கிலேயர் ஆட்சியில் வங்காள மாநிலத்தில் நிறைவேற்றினர். இச்சட்டம், இசுலாமியர் அல்லாதவருக்கு உரியது என்பதால், புத்த, சைன, சீக்கிய மதத்தினரையும் உள்ளடக்கியதாக இருந்தது. ‘இந்து சட்டம்’ என்ற பெயரில் வைதிக மத வாழ்வியல் நெறிகள் அடங்கிய இச்சட்டம் பின்னர் இந்திய நாடு முழுமையாக ஆங்கிலேயர் அங்கீகாரத்துடன் அமுல்படுத்தப்பட்டது. இக்காலம் முதலே ‘இந்து மதம்’ என்ற சொற்றொடர் ஆங்கிலேயரின் ஆட்சியில் அரசியல் அங்கீகாரம் பெற்று இந்து நாடு முழுவதும் பரவப்பட்டது. ஆங்கிலேயரைப் பொறுத்த வரையில் வைதிக மதமே ‘இந்து மதம்’ (‘Hinduism’) என்ற புதிய பெயரில் ஏற்றுக் கொள்ளப் பட்டது. அக்காலக் கட்டத்தில் ஆங்கிலேயர் தென் இந்தியாவில் வாழ்ந்த மக்களின் வாழ்வியல் நெறிகள் அடங்கிய வழக்கங்களையோ அல்லது தென் இந்தியாவில் அவர் வருகைக்கு முன்னமே வேறூன்றியிருந்த சமய நெறிகளையோ அறிந்தவர் அல்லர். அதனால் ஆரம்ப காலத்தில் அவற்றை இச்சட்டத்திட்ட அமூலாக்கத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.
இந்தியா சுதந்திரமடைந்து புதிய அரசியல் சாசனம் பெற்ற காலத்தில் இச்சட்ட அமுலாக்கம் நிறுத்தப் பெற்றது. இதுவே ‘இந்து மதம்’ என்ற சொற்றொடர் தோன்றிய வரலாறு ஆகும். 1779-ம் ஆண்டிற்கு முன்பு ‘இந்து மதம்’ என்றொரு பெயரில் இந்தியாவில் எந்த ஒரு மதமும் இருந்ததில்லை. இதனை விளக்க பேராசிரியர் கா. சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் வரைந்த ‘தமிழர் சமயம்’ (1940-ம் ஆண்டு பதிப்பு) என்ற நூலில் ‘இந்து மதம் ஒரு மதமன்று’ என்ற கருத்தையும் காண்போம்:
“உலகத்தில் மதங்களுக்குப் பெயர் வழிபடும் தெய்வத்தை வைத்தாவது, சமயத் தலைவன் பெயரைத் தழுவியாவது, பிரமாண நூல்களைப் பொறுத்தாவது அமைவதேயன்றி மக்களினத்தின் பெயரால் அமைவதில்லை. வழிபடுங்கடவுளின் பெயர் சிவமாயின் அம்மதம் சைவமெனப்படும். தெய்வத்தின் பெயர் விஷ்னுவாயின் மதம் வைணவம் எனப்படும். கிறிஸ்து மதமும் முகம்மதிய மதமும் புத்தமதமும்,, சைனமதமும் சமயத்தலைவர்கள் பெயரால் ஏற்பட்டவை. செராஸ்டிரிய மதமும் கன்பூசிய மதமும் அத்தகையனவே, வைதிகம், சுமார்த்தம் என்னும் மதங்கள், வேதம் ஸ்மிருதி முதலிய பிரமாண நூல்களின் பெயர் பெற்றன. இந்து மதம் என்ற சொல் கடவுள், ஆசிரியன், பிரமாண நூல் என்பவற்றுள் எதன் பெயரையுஞ் சார்ந்ததாக தெரியவில்லை. சிந்து நதிக்கரையில் இருந்தவர்களை ஹிந்து என்று பாரசீகர் அழைத்தனர். அவர்களை இந்துக்கள் என்று கிரேக்கர்கள் கூறினர். இந்துக்கள் என்ற பெயரிலிருந்தே இந்தியா என்ற பெயர் ஏற்பட்டது. இந்திய நாட்டில் உள்ள பூர்வீக மக்கள் ஐரோப்பா கண்டத்தாரால் இந்துக்கள் என்று அழைக்கப் பட்டனர். இந்துக்களுள் பல மதங்கள் இருப்பதை அறியாத மேலை நாட்டினர் இந்துக்கள் எல்லாருக்கும் ஒரு மதம் இருப்பதாக எண்ணி இந்துமதம் என்ற பெயரைத் தோற்றுவித்தனர்.”
இதுவரையில் ‘இந்து மதம்’ என்ற சொற்றொடர் தோன்றிய வரலாற்றை விளக்கியதில் அப்பெயரில் தனி ஒரு மதம் ஏதும் இல்லை என்பதை அறியாலாம். இன்றோ ஆங்கிலேயர் பொருள்படுத்திக் கொண்டபடி ‘இந்து மதம்’ என்று சொல்லப் படுவது வைதிக மதத்தையும் அதனைச் சார்ந்த வர்ணாசிரம நெறிகளையும் முந்நிலைப் படுத்திக் குறிக்கவே பயன்படுத்தப் படுகின்றது என்பதை தமிழர் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆகையால், ‘இந்து மதம்’ என்ற புதிய பெயர் கொண்ட வைதிக மதத்தை எதிர்ப்பதோ அல்லது அதனைப் புண்படுத்தும் செயலை மேற்கொள்வதிலிருந்தோ விலகி நாம் நம் பூர்வீக சமயத்தைப் பின்பற்றி வாழ்வதே அறிவுடைமயாகும். நமக்கு அந்நியமான மதத்தையும் அதன் நெறிகளையும் நம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு வலிக்குதே வலிக்குதே என்று கதறுவானேன்? சிவசிவ.
மு. கமலநாதன்
‘சைவம்’ என்பது சிவனோடு சம்பந்தமாகுதல் என்ற திருமூல நாயனாரின் திருவாக்கால் சைவ சமயப் பெரியார் யாவரும் சைவத்தை ‘இந்து’ என்று பெயரிட்டு அழைப்பதை விட சைவ சமயம் என்று கூறுவதையே பொருள் பொதிந்த சொல்லாக கொள்கின்றனர். அவ்வாறே சைவ சமய ஆதார நூல்களில் தொன்றுதொட்டு குறித்தும் வந்துள்ளனர்.
இதனை யாழ்ப்பான சமயப் பெரியார் இலக்கிய கலாநிதி பண்டிதர் மு. கந்தையா அவர்கள் அவர்தம் ‘சனாதன சைவ சமயம்’ என்னும் நூலில் இவ்வாறு விளக்குகின்றார்:
“சைவ சமயமும் இந்து சமயமும் ஒன்றல்ல. சைவம்தான் தமிழரின் சமயம். அது அனாதியான இயல்புச் சமயம்.
அதற்கெதிர் சமீபகாலத்தவரால் புதுப்படையலாகப் புனையப் பெற்ற சாரமற்ற சப்பைக்கட்டுச் சமயம் இந்து சமயம். இது தாங்கும் ‘இந்து’ என்ற சொல்லே தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் அந்நியம். அச்சொல்லுக்குச் சமய சார்பான அர்த்தமோ அதைவிட அந்நியம். பாரசீகமொழி அகராதி அத்தாட்சி ஆக உள்ள உண்மை இது.”
...
ஆகையால், ‘இந்து மதம்’ என்ற புதிய பெயர் கொண்ட வைதிக மதத்தை எதிர்ப்பதோ அல்லது அதனைப் புண்படுத்தும் செயலை மேற்கொள்வதிலிருந்தோ விலகி நாம் நம் பூர்வீக சமயத்தைப் பின்பற்றி வாழ்வதே அறிவுடைமயாகும். நமக்கு அந்நியமான மதத்தையும் அதன் நெறிகளையும் நம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு வலிக்குதே வலிக்குதே என்று கதறுவானேன்? சிவசிவ.
--மு. கமலநாதன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
அது போலவே சாக்த மதத்தினர் நிலையும்.
சைவத் தமிழர் நிலை யாது? என்பதே இங்கு விளக்கப் பட்டது.
சைவ சமயத்தில் உருவ புற வழிபாடு என்பது பாலர் பள்ளி நிலை. பாமரரும் இத்தகைய விதியை இலகுவாக பின்பற்ற முடியும் என்பதால் சைவம் வகுத்த நான்கு படிநிலைகளில் இது சரியை எனப்படும் கடை நிலையாகும். இந்நிலையில் உயிர்த் தொண்டுடன் பரம்பொருள் உண்மையறிந்து இறைத்தொண்டு செய்தாலே ஆன்மா படிப்படியாக அறிவு விளக்கம் பெறுமென்று கூறுவது சைவ சமய நெறி. இக்கடை நிலையைத்தான் 90% - 95% தமிழர் இன்று பின்பற்றி வருகின்றனர்.
ஆதியில் இடி, மின்னல், காற்று, மழை மற்றும் மனிதருக்கு தீங்கிழைக்கும் மிருகங்களைக் கண்டு பயந்து அவற்றை வழிபட்டதே மாந்தர் வழிபாட்டின் முதல் கட்டம். பின்னர், ஊர்த் தெய்வம், காவல் தெய்வம், குல தெய்வம் என்று ஒவ்வொரு காரணத்திற்காக ஓர் உருவ வழிபாட்டை மேற்கொண்டது இரண்டாவது கட்டம். இதுவே தமிழரின் மரபு வழிபாடாக இன்றும் பெரும்பாலோரிடம் தொடர்ந்து நிலவி வருகின்றது. இது அவரவர் நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்பட்ட வழிபாடாகும்.
மனித அறிவுத் தெளிவு ஏற்பட்ட பிறகு உயிர் குலங்களையும், பிரபஞ்சத்தையும் இயக்கும் சத்தி மனிதருக்கும் வேறொன்றாக உள்ளது என்ற சிந்தனை தோன்றிற்று. அச்சத்தியே உயிரின் அறியாமையை போக்க வேண்டி உயிருக்கு உடலைக் கொடுத்து அதற்கு கருவிக் கரணங்களைச் சேர்த்து, அதன் வழி இன்ப துன்ப நுகர்ச்சி பெற வேண்டி உலகங்களைப் படைத்து ஐந்தொழில் ஆற்றுகின்றான் என்ற அறிவார்ந்த சமய நெறி ஒன்று தோன்றிற்று. அதற்கு சைவம் என்று பெயர் கொடுத்தனர் தமிழர். அவ்வாறு ஒர் ஆற்றல்மிக்க அறிவுப் பொருளாக இருப்பதை இச்சமயம் ‘சிவம்’ என்று கூறுகின்றது. இச்சிவத்திற்கு சொரூபத்தில் உருவமோ, பெயரோ கிடையாது. சைவ சமயம் என்பது வழிபாடு முதல் படிப்படியாக ஆன்ம வளர்ச்சி அடையும் நெறிகளை வகுத்துக் கூறிவதாகும். இதில் உருவ வழிபாடு என்பது ஒரு சிறு பங்கு மட்டுமே. இதனை நாம் தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொண்டால் பல்வேறு உருவத் திருமேனிகளை வைத்து வணங்குவதால் ஏற்படும் பிணக்குகளை வெகு இலகுவாக வென்றிடலாம். நமக்குள் சாமி சண்டை ஏற்படுதற்கு வழியில்லை.
‘ஏகம் சத் விப்ராஹா பஹூதா வதந்தி’ என்று இருக்கு வேதம் கூறுவதை சைவ சாத்திர நூலாகிய சிவஞான சித்தியார் ‘யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே மாதொரு பாகனார்தாம் வருவர்’ என்று கூறுவது உண்மையல்லவோ? யார் எவ்வுருவில் எத்தெய்வத்தை வணங்கினாலும் ஆங்கே பரம்பொருளாகிய மாதொரு பாகனார்தாம் வந்து அருள் புரிவார் என்று கூறுவது ஓர் இறைக் கோட்பாட்டை வலியுறுத்துவதாகும். பரபிரம்மம் என்பதும் சிவம் என்பதும் ஒரு பொருள் என்று அறிந்தவருக்கு ஏது வேற்றுமை?
உருவத் திருமேனியைக் கொண்டு வேற்றுமை காண்பதும் கொள்வதும் நம் அறியாமையே அன்றி வேறொன்றுமில்லை.
ஆதாலால் தமிழர் சத்தியை, முருகனை, பிள்ளையாரை வணங்கினாலும் ஆங்கே அத்தெய்வங்களின் வடிவில் வந்து அருள் புரிவதும் அச்சிவனே என்று புரிந்து கொண்டால் நமக்கேன் உருவ பேதமை? அவ்வாறு வழிபடும் தெய்வங்களின் உருவ வேறுபாடு என்பது நம் மனதில்தான் உள்ளதே தவிர இறைவனிடமல்ல. இது அறிவார்ந்த சமய நெறிகளை கற்றதினால் ஏற்பட்ட பயன். இத்தகைய அறிவுத் தெளிவு ஏற்படவே ஒவ்வொரு இனக்குழுவும் தத்தமக்கு ஓர் அறிவார்ந்த சமய நெறியை வகுத்துக் கொண்டு அதன் வழி நல்வாழ்வு பெற்றனர். தமிழரும் அவ்வாறே நல்வாழ்வு பெற வேண்டியே இதனை அடியேன் எழுதுகின்றேன்.
தமிழர் சிறுதெய்வ வழிப்பாட்டை 2,000 ஆண்டுகளுக்கு முன்னரும் மேற்கொண்டனர். இன்றும் அந்த நிலையில் இருந்து பெரும்பாலோர் மேல் நிலையை அடையவில்லை என்பதே உண்மை. பிற மதத்தவர் ஓர் இறைக் கொள்கையில் நின்று நம்மை விட வெகு தூரம் முன்னேறி விட்டனர். நாம் பல தெய்வவழிப்பாட்டில் நின்று இன்றுவரை புறம்பேசித் திரிகின்றோம். இதற்கு காரணம் தமிழருக்கு தெளிவான சமய நெறி இருந்தும் அதனையறிந்து பின்பற்றி வாழாததேயாகும். பிறரை வைய்து நாம் அறிவுத் தெளிவு பெற முடியாது. நம் சுய விளக்கமே நமக்கு அறிவுத் தெளிவை ஏற்படுத்தும். சிவசிவ.
மு. கமலநாதன்
நல்லதொரு கட்டுரை.இந்து மதம் என்ற சொல்லின் ஆரம்பத்தைப் பற்றி இன்று காலை தான் ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இப்போது கட்டுரை வடிவில் காண்பதில் மகிழ்ச்சி.இக்கட்டுரையில் இரண்டு விசயங்களில் எனக்கு உடன்பாடில்லை. அதனை விளக்குகின்றேன்.
2017-05-03 16:35 GMT+02:00 Thenee MK <ipohs...@gmail.com>:‘சைவம்’ என்பது சிவனோடு சம்பந்தமாகுதல் என்ற திருமூல நாயனாரின் திருவாக்கால் சைவ சமயப் பெரியார் யாவரும் சைவத்தை ‘இந்து’ என்று பெயரிட்டு அழைப்பதை விட சைவ சமயம் என்று கூறுவதையே பொருள் பொதிந்த சொல்லாக கொள்கின்றனர். அவ்வாறே சைவ சமய ஆதார நூல்களில் தொன்றுதொட்டு குறித்தும் வந்துள்ளனர்.
இதனை யாழ்ப்பான சமயப் பெரியார் இலக்கிய கலாநிதி பண்டிதர் மு. கந்தையா அவர்கள் அவர்தம் ‘சனாதன சைவ சமயம்’ என்னும் நூலில் இவ்வாறு விளக்குகின்றார்:
“சைவ சமயமும் இந்து சமயமும் ஒன்றல்ல. சைவம்தான் தமிழரின் சமயம். அது அனாதியான இயல்புச் சமயம்.
இதனை சாக்த வழிபாட்டினர் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.இதனை வைஷ்ணவ வழிபாட்டினர் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.விநாயக வழிபாடு கி.பி.5 தொடங்கி பின்னர் பிற்காலத்தில் தான் சைவத்திற்குள் உட்புகுகின்றது. ஆ.சிவசுப்பிரமணியனின் பிள்ளையார் அரசியல் நூலில் வரலாற்று ரீதியிலான விரிவான விளக்கத்தை காணலாம்.இதைத் தவிர்த்து தமிழ் நிலத்தில் பெருவாரியாக வாழ்கின்ற தமிழ் மக்களின் குலசாமி கருப்பண்ணசாமியும் பேச்சாயியும், முனியாண்டி சாமியும், காளியம்மனும் போன்ற சாமிகள் தான். இந்த சாமிகளை சைவம் அதிகாரப்பூர்வமாக உள்வாங்கவில்லை. சிறு தெய்வங்கள் என்றே ஒதுக்கி வைக்கின்றது.ஆக, இவ்வாறிருக்க சைவம் தாம் தமிழரின் சமயம் என்பது முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாத கூற்றாக இருக்கின்றது.
அதற்கெதிர் சமீபகாலத்தவரால் புதுப்படையலாகப் புனையப் பெற்ற சாரமற்ற சப்பைக்கட்டுச் சமயம் இந்து சமயம். இது தாங்கும் ‘இந்து’ என்ற சொல்லே தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் அந்நியம். அச்சொல்லுக்குச் சமய சார்பான அர்த்தமோ அதைவிட அந்நியம். பாரசீகமொழி அகராதி அத்தாட்சி ஆக உள்ள உண்மை இது.”
...
ஆகையால், ‘இந்து மதம்’ என்ற புதிய பெயர் கொண்ட வைதிக மதத்தை எதிர்ப்பதோ அல்லது அதனைப் புண்படுத்தும் செயலை மேற்கொள்வதிலிருந்தோ விலகி நாம் நம் பூர்வீக சமயத்தைப் பின்பற்றி வாழ்வதே அறிவுடைமயாகும். நமக்கு அந்நியமான மதத்தையும் அதன் நெறிகளையும் நம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு வலிக்குதே வலிக்குதே என்று கதறுவானேன்? சிவசிவ.
வைதிக நெறியை எதிர்க்காமல் சைவம் முன் நிற்க முடியாதே!விலகி என்பது எப்படி”? இஸ்லாம், கிறித்துவம் போன்றவற்றிலிருந்து விலகி இருப்பது போலவா?சுபா
மு. கமலநாதன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
தமிழர் சிறுதெய்வ வழிப்பாட்டை 2,000 ஆண்டுகளுக்கு முன்னரும் மேற்கொண்டனர். இன்றும் அந்த நிலையில் இருந்து பெரும்பாலோர் மேல் நிலையை அடையவில்லை என்பதே உண்மை. பிற மதத்தவர் ஓர் இறைக் கொள்கையில் நின்று நம்மை விட வெகு தூரம் முன்னேறி விட்டனர். நாம் பல தெய்வவழிப்பாட்டில் நின்று இன்றுவரை புறம்பேசித் திரிகின்றோம்.
#தெய்வம் என்ற கொள்கையைக் கடைபிடித்தால் அவரவர் மன விருப்பப்படி எதிலும் தெய்வத்தை காணலாம்.#
தாங்கள் சொல்வது உண்மையே. அது ஆன்மிக வழிப்பயனத்தின் ஆரம்பம் நிலை.
நமது குறிக்கோளும் இலக்கும் யாது என்று சைவம் சொல்வதை புரிந்து அந்த இலக்கை நோக்கி பயனிப்பதே ஒளிவிளக்காகத் திகளும். சைவத்தின் குறிக்கோள் ஆன்மா வீடுபேறு அடைவதாகும். வீடுபேற்றின் இலக்கு சிவமாகும். அதை திருமூலர் இவ்வாறு விளக்குகின்றார்:
சைவம் சிவனுடன் சம்பந்த மாகுதல்
சைவம் தனையறிந் தேசிவம் சாருதல்
சைவம் சிவமன்றிச் சாராமல் நீங்குதல்
சைவம் சிவானந்தம் சாயுச் சியமே.
இதற்கான பொருள் விளக்கத்தை முதுமுனைவர் சி. அருனை வடிவேல் அவர்கள் இவ்வாறு விளக்கினார்:
`சைவம்` என்னும் சொல்லின் பொருள் `சிவனுடன் தொடர்புற்று நிற்றல்` என்பது, ஆகவே, சீவன்தான் சிவனது அடிமை என்னும் உண்மையை உணர்ந்து அவனைச் சார்ந்து நிற்றலே நிறை வான சிவநெறியாம். சிவனைச் சார்ந்து நின்றபின்னும் அவனை யன்றிப் பிறிதொன்றையும் சாராது அற விடுத்தலும் அந்நெறி நிறை வுடையதாதற்கு இன்றியமையாதது. அத்தகைய நிறைவான சிவ நெறி யின் பயன் சிவனது பேரின்பமே. அவ்வின்பத்தைப் பெற்று அதில் மூழ்கியிருக்கும் நிலையே சாயுச்சமாம்.
இதுவே ஆன்மா வீடுபேறு அடைவதற்கான வழியாம்.
முதலில், சிவனுடன் தொடர்புற்று நிற்றல். இதனை சைவர் எங்ஙனம் செய்வார்? சிவனுடன் சம்பந்தமுடைய தெய்வங்களுடன் சிவனையும் சேர்த்து பொதுவாக வணங்குதலாகும்.
இவ்வாறு செய்து வருங்கால், ஆன்ம பக்குவம் படிப்படியாக முன்னேற உயிரானது தான் சிவனது அடிமை என்று உணரும். அவ்வாறு உணர்ந்த பிறகு சிவனைச் சார்ந்து நிற்கும். இது தொடர்ந்து சிவசிந்தனையில் இருப்பது என்று பொருளாகும். இது இரண்டாம் கட்ட நிலையாகும்.
மூன்றாவதாக, அவ்வாறு தொடர்ந்து சிவ சிந்தனையில் இருப்போருக்கு சிவனே பரம்பொருள் என்ற அறிவுத் தெளிவு ஏற்படும். அப்பொழுது பொருள் உலகத்தையும் பிற தெய்வங்களையும் விட்டு சிவத்தை மட்டுமே அகத்தால் சிந்தித்திருப்பார். இது சிவனுடன் கலந்து இன்பம் பெறும் யோக நிலையாகும்.
நான்காவது நிலையாக, அவ்வாறு சிவத்தையே சிந்தித்திருப்போருக்கு, சடமான இவ்வுடல் வேறு உயிர் வேறு என்ற அறிவுத் தெளிவு ஏற்படும். அத்தகைய தெளிவு ஏற்பட்டோருக்கு ஐம்புலன்களை அடக்கி ஆளும் திறன் ஏற்படும். அதன் பிறகே இறைவன் திருவருளால் அவர் திருப்பாதம் சென்றடைய முடியும். இதுவே பேரின்பம் பெற வழியாகும்.
இந்த நான்கு படிகளைத் தாண்ட நம்மில் எத்தனை பேருக்கு இன்னும் கால அவகாசம் உள்ளது என்பதை அவரவர் நிலையைக் கொண்டு புரிந்து கொள்ள முடியும்.
ஆதாலால், அவரவர் மன விருப்பப்படி எதிலும் தெய்வத்தை காணலாம் என்பது ஆரம்ப கால நிலை என்பதைப் புரிந்து கொண்டால் ‘இன்பமே எந்நாளும் துன்பமேதுமில்லை’ என்ற நிலையை இறுதியில் இறைவன் நமக்கு அருளுவான்.
மு. கமலநாதன்
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/NWt0dXvwazM/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
#தெய்வங்களில் சிறு தெய்வம் பெருந்தெய்வம் என்ற வேறுபாடெல்லாம் தெய்வத்தை உருவாக்கிய மக்கள் தங்களது கொள்கையைப் பரப்பும் நோக்கில் உருவாக்கிய அடுத்த கட்ட நடவடிக்கை.#
சிவஞான சித்தியாரில், அருண்நந்தி சிவாச்சாரியார் ‘மற்றத் தெய்வங்கள்” என்ற சொல்லைத்தான் உபயோகித்தார். நமது புரிந்துணர்வுக்காக நாம் அதனை ‘சிறு தெய்வம்” என்று கூறிக் கொள்கிறோம். சுபபக்கம் 115 செய்யுள்:
யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வ மாகி ஆங்கே
மாதொரு பாக னார்தாம் வருவர்மற் றத்தெய் வங்கள்
வேதனைப் படும் இறக்கும் பிறக்கும்மேல் வினையுஞ் செய்யும்
ஆதலான் இவையி லாதான் அறிந்தருள் செய்வ னன்றே.
பொழிப்புறை: தத்துவப்பிரகாசர்
நால்வகை யோனியுள் ஒரு யோனிவாய்ப்பட்டுப் பிறப்பன யாவை அவையெல்லாஞ் சீவவர்க்கம். அவ்வாறு பிறத்தலில்லது யாது அது பதிப்பொருளென்னும் இதுவொன்றே ஏனைச் செயல்களான் வேற்றுமை யறியவாராத அவ்விரண்டற்குந் தம்முள் வேற்றுமையறிய நிற்பதாகலின், ஏனைத் தேவரெல்லாம் அங்ஙனம் பிறந்திறத்தல் கேட்கப் படுதலானும், சிவனுக்கஃதுண் டென்பது யாண்டானும் கேட்கப்படாமையானும், சிவனொருவனே வினைவயத்தனாதலின்றி அவ்வத்தேவரிடமாக நின்று உயிர்கட்கு அவற்றையறிந்து கூட்ட வல்லுவன்; ஏனைத்தேவர் அது செய்யமாட்டாரென்பது தானே போதரும்.
மற்று
வினைமாற்று. பொதுவகையான் எடுத்துக் காட்டிச் சிறப்பு வகையாற் கூறினாராகலிற்
பால்வழுவின்மை யுணர்க. அற்றேல் ஒருவரை வழிபட மற்றொருவர் பயன் கொடுத்தல் உலகத்திற்
கண்டில மென்பாரை நோக்கி அது காட்டுதற் கெழுந்தது வருஞ்செய்யு ளென்ப
இதன் பொருள் விளங்காது போனால் கேளுங்கள் விளக்குகின்றேன்.
மு. கமலநாதன்
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/NWt0dXvwazM/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
#இதைப் படிக்கும் பொழுது கடவுள் என்ற கொள்கையையே கைவிட்டு மனிதர்களுக்கு மட்டும் மதிப்பளித்து சமமாக நடத்துபவர்கள் எல்லோரிலும் மேலானவர்கள் என்று சொல்ல எனக்கும் விருப்பமாக இருக்கிறது.#
சித்தாந்தம் பயிலாமல் சிவநெறியை அறியாமல் வாழ்ந்த காலத்தில் எமக்கும் தங்களைப் போலவே எண்ணம் தோன்றிற்று.
சைவ சமய அறிவுத் தெளிவு பெற்ற பிறகே எமது பொன்னான காலத்தையெல்லாம் வீணடித்து விட்டேனே என்று வருந்தினேன்.
இன்று இருக்கும் குறுகிய காலத்தில் இறைவன் திருவருளின் துணையோடு அவன் திருவடி சென்றடைய வேகமாக ஓடிக் கொண்டிருக்கின்றேன். அவன் திருப்பாதம் அடைவதும் அடையாததும் இறைவன் திருவருளே அன்றி எமது செயலாவது ஒன்றுமில்லை அம்மா.
சிவனை நம்புங்கள். அவனை அறிய முற்படுங்கள். அவன் திருவருளால் தங்களுள்ளும் மாற்றம் ஏற்படுவதை உணர முடியும். தாங்கள் மேலே சொல்லிய கருத்துக்கும் பொருள் புரியும். சிவசிவ.
மு. கமலநாதன்
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/NWt0dXvwazM/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
தமிழர் சிறுதெய்வ வழிப்பாட்டை 2,000 ஆண்டுகளுக்கு முன்னரும் மேற்கொண்டனர். இன்றும் அந்த நிலையில் இருந்து பெரும்பாலோர் மேல் நிலையை அடையவில்லை என்பதே உண்மை.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/NWt0dXvwazM/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
தங்களின் பார்வை சமய நெறிகளின் அடிப்படையில் நில்லாமல் ஒரு பொது நிலையில் நின்று பெறப்பட்ட கருத்தாக உள்ளது.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
--
#சிறுதெய்வம் பெருந்தெய்வம் எனப்பிரிப்பதுவே அறியாமையின் வெளிப்பாடுகளில் ஒன்று எனக் கருதுகின்றேன்.#இது அறியாமையின் வெளிப்பாடு அல்ல. அப்படி சொன்னது அறிவார்ந்த ஞானிகளின் நிலை. தாங்கள் சொல்லும் குற்றம் அவர்களுடையது என்றால் அதற்கு பொறுப்பு அவர்தாம்.தங்களின் கூற்றுப்படி சைவ குரவர்களாகிய நால்வர் பெருமக்களும் அறியாமையின் வெளிப்பாடு உடையவர்களாகி விடுவார் காரணம் அவர்களும் ஆதி அந்தம் இலாத பொருளும் ஆன்ம வர்கத்தையும் பிரித்தறிந்துதான் கூறியுள்ளனர். திருமுறையே அதற்கு தக்கச் சான்று.
திரு செல்வன்தங்களிடம் கூட இத்தகைய எண்ணம் இருப்பது வியப்பாக இருக்கிறது. இந்து மதம் என்பது ஒரு வசதிக்காக ஏற்பட்டது அன்று.வேதாந்த சித்தாந்த சமரசம் என்று இயங்கி வந்த ஒன்றே ஒரு காலத்தில் இந்து மதம் என்று பெயர் பெறுகிறது. அவ்வண்ணமே உலக மதங்களும் தாம் தோன்றிய பொழுது தமக்கிருந்த பெயர் மாற்றம் அடைந்து கால வழக்கில் ஒவ்வொரு பெயர் அடைந்து இருக்கிறது.
அவ்வாறு பொதுமையும், பரந்த நோக்கும் கொண்டவையாக மாறாமல் சமய நெறிகளை கொண்டு செலுத்தி வந்துள்ளது இந்து மதம் என்று சொல்லப்படும் வேதாந்த சித்தாந்த சமரச நிலைப்பாடுகள்.***
இதற்குத் தாங்கள் விரும்பும் வகையில் குறிப்பாகப் பதிலிறுக்க என்னால் முடியவில்லை. ஒரு வேளை நான் கவனம் செலுத்தாத துறையாக இது இருக்கலாம்.
விவேகாநந்தர் இந்து மதத்தின் புனர்வடிவாக்கத்தின் முதன்மை ஆசிரியர்களில் முக்கியமானவர். ஆனால் இந்து மதம் என்பது வேதாந்த சித்தாந்தங்களின் கூட்டியக்கமாக பன்னெடுங்காலம் இந்துக்களின் உணர்விலும் செயல்களிலும் வந்துகொண்டிருக்கும் ஒன்று.இல்லை நண்பரே. தாங்கள் கூறுவது வெளியிலிருந்து பிறர் கூறும் கருத்து. நூல்களின் உள்ளோடும் கருத்துகளின் வரலாற்றையும் கொஞ்சம் நேரம் கிடைக்கும் போது கவனம் செலுத்தினீர் என்றால் செம்மையான வடிவம் கிட்டும் என்பது என் எண்ணம்.தாங்களாக இருக்கவே கொஞ்சம் உரிமை எடுத்துக்கொண்டு சொல்லிவிட்டேன். தவறாகக் கொள்ளற்க.
#அதாவது வர்ணாச்சிரம ஒழுக்கம் என்பது சைவத்திற்குத் தேவையில்லாதது, அது வைதிகர்க்கு மட்டுமே அக்கறையான ஒன்று. சைவர்கள் அதைப் பற்றிக் கருத வேண்டியதில்லை - என்னும் கருத்து ஏற்படும்படியாகக் கூறினீர்கள். ஆனால் தங்களின் அளவுகோல்படி சமயக் குரவர்கள் எவரேனும் அல்லது சந்தானக் குரவர்கள் எவரேனும் எங்கேனும் வர்ணாச்சிரம ஒழுக்கத்தை மறுத்தோ, கண்டித்தோ அல்லது கைவிடலாம் என்றோ கூறியதுண்டா? திருமுறைகளில் எங்கேனும் அவ்வாறு வர்ணாச்சிரம ஒழுக்கத்திற்கு மறுப்பாக, கைவிடலாம் என்னும் முறையில் கூறும் இடங்கள் உண்டா?#
திருவாளர் மோகனரங்கன் அவர்களின் கருத்துக்கு பதில் கூற கடமைப் பட்டுள்ளேன்.
தாங்கள் இதற்கு முன்பு பதிவிட்ட கருத்தையும் இவ்விடம் பதிவிட்ட கருத்தையும் கொண்டு தாங்கள் வைணவ சம்பிரதாயமுடையவர் என்பதை அறிகிறேன். இங்கே நாம் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வது ஒர் அறிவார்ந்த கருத்துப் பரிமாற்றமாகவே (‘intellectual discourse’) வைத்துக் கொள்வோம். அதுவே நாம் அனைவருக்கும் நல்லது.
இங்கே சைவம் என்று குறிக்கும் பொழுது தென்னாடுடைய சித்தாந்த சைவ நெறிகளை ஒட்டி மட்டுமே கூறுப்படுவனவாகும்.
சைவத்தில் தேவாரத் திருமுறை திருவாசகம் அருளிய நால்வர் பெருமக்கள் வாழ்ந்த காலம் 7 – 9-ம் நூற்றாண்டு வரை. நாயன்மார்கள் காலம் 3-ம் நூற்றாண்டு முதல் 9-ம் நூற்றாண்டு வரை நீடிக்கும் என்பதை திருத்தொண்டர் புராணத்தைக் கொண்டு அறியலாம்.
தென்னாட்டு சைவத்தில் வர்ணாசிரமம் போற்றப்பட்டதா என்ற கேள்விக்கு நாயன்மார்களின் செயல்முறையைக் கொண்டும், அவர்தம் திருவாக்கு கொண்டும் மற்றும் அவர் வழித்தோன்றல் கொண்டும் தெளிவாக பதில் அளிக்க இயலும்.
திருஞானசம்பந்தர்:
ஆரிய பிராமண மரபில் பிறந்தவர். வர்ணாசிரம தர்மங்களில் ஒன்று சமசுகிரத மொழியைக் கொண்டே வேதமோதி வேதியர் தொழில் செய்ய வேண்டும். ஆனால் அவர் அதனை பின்பற்றவில்லை.
தன்னைத் ‘தமிழ் விரகன்’, ‘தமிழ்ஞான சம்பந்தன்’ என்று இப்படி பலவாறாக தம் தமிழ் பற்றை வெளிப்படுத்தி தமிழுக்கும் சைவத்திற்கும் தன்னை அர்பணித்துக் கொண்டவர்.
அவர் உபயநயன சடங்கில் ‘காயத்திரி மந்திரம்’ ஓதி சடங்கை பூர்த்தி செய்த பொழுதும், அங்கு கூடியிருந்தவருக்கு ‘அந்தியில் மந்திரம் அஞ்செழுத்துமே’ என்று கூறியவர். வேத நெறியைப் பின்பற்றினார் இல்லை.
வயது வந்த வாலிப பிராமணர் திருமணம் செய்த பிறகே வேதியர் தொழில் செய்ய வேண்டும் என்பது அவர்தம் தர்மம். அதற்கு அவர்தம் பெற்றோர் உறவினர் வேண்டுதலின்படி திருமணத்திற்கு சம்மதித்தாரேயினும், அச்சடங்கில் மந்திரத்தால் ஏற்றிய எரியோம்பலை வலம்வராது கைப்பிடித்த பெண்ணுடன் திருப்பெருமணம் என்னும் திருக்கோயிலை நாடிச் சென்றார் என்பதை சேக்கிழார் பெருமான்,
விருப்புறும் அங்கி யாவார் விடை
உயர்த் தவரே என்று
திருப்பெரு மணத்தை மேவும்
சிந்தையில் தெளிந்து செல்வா
என்று கூற அவர் வைதிக திருமணம் முற்றுப் பெறாமல் போனதை அறிகிறோம்.
மேலும், அவர் வைதிக வர்ணாசிரமத்தைப் பின்பற்றி வாழ்ந்தாரில்லை என்பதை அவர்தம் அடியார்களோடு உண்டு, உறங்கி கோயில் யாத்திரை மேற்கொண்டார் என்பதால் புரியும். அவ்வகையால் திருஞானசம்பந்தர் தம் செயலால் வர்ணாசிரம தர்மத்தைப் பின்பற்றி வாழாது தம் அடியவருக்கு முன் உதாரணமாக (‘leadership by example’) திகழ்ந்தார் என்பதும் புரியும்.
தங்களிடம் நட்பு பாராட்டும் பொழுது அடியேன் தங்கள் மனம் புண்படும்படி பேசுவேனோ? ஆனால், எமது எழுத்து வழி எம் உள்ளக்கிடையை தெரிவிப்பதிலிருந்து தங்களின் கருத்துக்கு உடன்படவில்லை என்பதை சூசகமாக தெரிவிக்கின்றேன் அல்லவா?. அது போலவே, ‘வேதநெறி தழைத்தோங்க’ என்று சேக்கிழார் பெருமான் பிள்ளையாரின் தோற்றத்தைப் பற்றி கூறுவதும், பிள்ளையார் வேத நெறியுடன் நட்பு பாராட்டி அதே வேளையில் அந்நெறி கூறும் தர்மத்தில் நில்லாமல் செயலில் காட்டினார் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டுகிறேன்.
அவ்வாறே வேதாந்தத்தின் முத்திக் கோட்பாட்டை மறுத்து தம் மாலை மாற்றுப் பதிகத்தில் பாடினார் என்பதாலும் அவர் வேத நெறியைப் பின்பற்றாதவர் என்பது புரியும். பிள்ளையார் செயலும், சொல்லும் ஒரு பொருளையே காட்டுவன.
அதுபோலவே,
அப்பர் பெருமான்,
சாத்தி ரம்பல பேசுஞ் சழக்கர்காள்
கோத்தி ரமுங் குலமுங்கொண் டென்செய்வீர்
பாத்தி ரஞ்சிவ மென்று பணிதிரேல்
மாத்தி ரைக்கு ளருளுமாற் பேறரே
என்று கூறியதும்,
“சாதிகுலம் பிறப்பென்னுஞ்
சுழிப்பட்டுத் தடுமாறும்
ஆதமிலி நாயேனை”
என்று மாணிக்கவாசகர் கூறியதும் வர்ணாசிரம பேதத்தை புறக்கணித்தாகும்.
இப்படி இன்னும் பிற நாயன்மார்களின் வரலாற்றை கொண்டு சைவம் வர்ணாசிரமத்தைப் புறந்தள்ளியது என்பதை தெள்ளத் தெளிவாக காட்டலாம். ஆதலால், அவர்களை எம் குருமார்களாகக் கொண்டு வர்ணாசிரமத்தைப் புறந்தள்ளுவது எவ்வாறாகேனும் சைவத்திற்கு எதிரானது ஆகாது ஐயா. வர்ணாசிரமத் தடையை விலக்கிச் செல்வது நாயன்மார்களின் வழிகாட்டுதல்படி உடன்பட்டுச் செல்கிறது என்பதை புரிந்து கொண்டோமானால் தென்னாடுடைய சைவத்தின் மேன்மை புரியும். சிவசிவ.
தாங்கள் சந்தானக் குரவர் பற்றி குறிப்பிட்டதை ஒரு தனி இழையில் கூற வேண்டும். 14-ம் நூற்றாண்டு சைவம் வேத நெறியுடன் சமரசம் செய்து கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தது. இதற்கு காரணம் அவ்வேளையில் வைதிகச் சைவம் தென்னாட்டில் வலுவாக காலூன்றி விட்டது. அதனால்தான் சந்தான குரவர் சைவ சமரசம் செய்தனர் என்பதை மெய்கண்ட சாத்திரத்தின் வழி நூலாகிய சிவஞான சித்தியாரிலும், சார்பு நுலாகிய சிவபிரகாசத்திலும் காணலாம். அவை ஆகம நெறியினைக் கூற வந்த இடத்தில் ஆகமத்திலிருந்து சற்றே விலகி வைதிக நெறியுடன் சமரசம் செய்து கொண்டன. வைதிகச் சைவ ஆதிக்கத்தினால் வந்ததுதான் சைவத்தின் தற்சமய தாழ்மை. அதனால்தன் சிற்றம்பலமேறி திருமுறை பாட முடியாமல் போனது தில்லையில்!.
தங்களின் இந்து மத சமரசத்தைப் பற்றி பின் கருத்துப் பதிவிடுவோம்.
இவ்வுரையாடலில் தாங்கள் பங்கெடுத்துக் கொண்டதற்கு நன்றி ஐயா. சமயம் அறிந்தோரிடையே காமம், வெகுளி, மயக்கம் அற்று பேசுவோமானால் நம் கருத்து படிப்போருக்கு விருந்தாக அமையும் என்பது எம் எண்ணம். கற்றது கை மண் அளவு என்பதை அறிந்தே உரையாடுகிறேன். சிவசிவ.
மு. கமலநாதன்
--
திருவாளர் மோகனரங்கன் அவர்களின் கருத்துக்கு பதில் கூற கடமைப் பட்டுள்ளேன்.
தாங்கள் இதற்கு முன்பு பதிவிட்ட கருத்தையும் இவ்விடம் பதிவிட்ட கருத்தையும் கொண்டு தாங்கள் வைணவ சம்பிரதாயமுடையவர் என்பதை அறிகிறேன்.
வணக்கம் தேமொழி.
'இந்து' என்ற சொல்லுக்கு விளக்கம் தேடி பல்வகையில் தகவல் கொடுத்தமைக்கு நன்றி.
தங்களின் நற்செயலுக்கு உதவிட இவ்விடம் ஒரு நூலை PDF கோப்பு வடிவத்தில் இணைக்கின்றேன்.
இது ஆவணி 10-ம் நாள், 1684-ல் இராமேசுவரத்தை ஆண்ட சேதுபதி கட்டத் தேவர் என்னும் சிற்றரசரும் இலங்கையை ஆண்டு வந்த டச்சு அரசாங்கமும் செய்து கொண்ட வியாபார உடன்படிக்கையின் தகவல்கள் அடங்கிய தமிழ் மொழி பிரதி. அவ்வுடன்படிக்கையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து விளக்கவுரையுடன் வெளியிடப் பட்ட ஓர் ஆராய்ச்சி நூலாகும்.
இவ்வுடன்படிக்கையின் 2-வது மற்றும் 6-வது வரியில் இந்திய நாடு அக்காலத்தில் ‘சிந்து தேசம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் பார்க்கும் பொழுது இந்தியாவின் வட பகுதி ‘சிந்து தேசம்’ என்ற வழக்கிலிருந்து 18-ம் நூற்றாண்டில்தான் ‘இந்து தேசம்’ என்று உருமாறியிருக்கின்றது என்று திட்டவட்டமாகச் சொல்லலாம். அதன்பிறகே அப்பகுதி ‘சிந்து’ ‘இந்து’வாகி ‘ஹிண்டுஸ்தான்’ என்று வழங்கலாயிற்று என்று ஊகிக்க இடமுள்ளது.
1. Hindustan
2. Pakistan
3. Afghanistan
4. Turkmenistan
5. Kyrgystan
6. Tajikstan
7. Uzbekistan
இப்படி ‘stan’ என்ற சொல்லோடு முடிவடைவது பாரசீக மற்றும் உருது மொழிகளில் ஒரு இடத்தை அல்லது நாட்டைக் குறிக்கும் என்பதாக ‘வைக்கிபீடியா’ விளக்குகின்றது.
இதில் ‘Hindustan’ என்பது ‘Land of Indus River’ என்று பொருள்படுவதாக மேலும் அவ்விணையத் தளம் அறிவிக்கின்றது. ஆதலால், ‘ஹிண்டுஸ்தான்’ என்பது சிந்துவெளியை ஒட்டி வாழும் வடநாட்டு மக்களின் பகுதியாகவே விளங்கி வந்துள்ளது. தென் இந்திய பகுதிகள் வெவ்வேறு பெயர் கொண்டு விளங்கி வந்துள்ளது என்பது தாங்கள் அடையாளம் காட்டிய ‘An Universal History’ Vol VI என்ற நூலின் வழி தெரியவருகின்றது. இவ்வாறே பல ஆராய்ச்சியாளர்களும் ‘இந்து’ என்ற சொல் தோன்றியதன் காரணத்தை இதற்கு முன்பாகவே அறிவித்து வந்துள்ளனர்.
ஆதலால், ‘இந்து மதம்’ (‘Hinduism’) என்று ஆங்கிலேயர்கள் 18-ம் நூற்றாண்டில் பொருள் கொண்டது வடநாட்டு மக்களின் மதத்தையே குறித்தது என்பது புலனாகும். அவ்வாறு அவர் குறித்தது வைதிக மதமே என்பது இதனால் அறியப்படுகின்றது. அச்சொல் தென்னகத்தில் வாழ்ந்த மக்களின் சமயத்தை ஒருகாலும் குறித்ததாகாது என்பதை இதன் வழி உறுதியாக கூறலாம்.
மு. கமலநாதன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/NWt0dXvwazM/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
//அதனால்தன் சிற்றம்பலமேறி திருமுறை பாட முடியாமல் போனது தில்லையில்!. //
//மற்றபடி தாங்கள் எழுதியுள்ளவை குறிப்பாக நான் கேட்டதற்கு நேரடியாகப் பதில் சொல்லாமல் உங்கள் பார்வைகளையும் விளக்கங்களையும் சமயக் குரவர்களின் கருத்து முடிபுகள் போல் காட்டித் தங்களுடைய அணுகுமுறைக்கு நியாயம் தேடிக் கொள்கிறீர்கள். அது உங்கள் விருப்பம். அதுவும் சைவத்தை வாழ்வில் கடைப்பிடிக்கும் ஒருவர் தமது சமயக் கருத்துக்களை எவ்விதம் காலத்திற்கேற்ப பொருள் கண்டு கொள்கிறார் என்பது அனைத்து மதங்களிலும் தொடர்ந்து நடைபெறும் ஒன்று. அதை வெளியிலிருந்து பார்ப்பவர் கருதும் முறை வேறு.ஆனால் உங்களுக்குப் பிடிக்காத ஒன்றைக் கைவிடுவதற்கு நியாயப் படுத்தும் விதமாக சமயக் குரவர்களின் ஒப்புதல், வார்த்தைகள் என்பனவற்றை சௌகரியப்படி விளக்கம் காண்பதும், ஆனால் பிடிக்காத விஷயத்திற்கு கடும் விரதம் போல் பெரியவர்கள் சொன்னதைத் தாண்டி இப்படி அப்படி மாற்றிச் சொல்ல நமக்கு என்ன தகுதி என்பது போல் வாதிடுவதும் பொருந்தாத அணுகுமுறை என்பதைச் சுட்டிக் காட்டவே நான் குறிப்பிட்டுக் கேட்டது. //
எனது கருத்தும் இதுவே, அரங்கனாரே! இவ்வளவு அழகாகச் சொல்லவந்ததை ஆழமாக, அழுத்தமாகச் சொள்ளும்திறன் என்னிடம் இல்லையே என்றெண்ணி ஏங்குகிறேன்.அன்புடன்,ஒரு அரிசோனன்
//நல்வார்த்தைகளுக்கு நன்றி அரிசோனரே. ஆயினும் திரு தேனீ ஐயா அவர்கள் தொடர்ந்து அவருடைய நோக்கில் சைவத்தைப் பற்றிப் பதிவதற்கு நான் குறுக்கீடாக இருக்க விரும்பவில்லை. எனவே இனி என் குறுக்கீடுகள் இருக்காது. //
இதன் அடிப்படையில் பார்க்கும் பொழுது இந்தியாவின் வட பகுதி ‘சிந்து தேசம்’ என்ற வழக்கிலிருந்து 18-ம் நூற்றாண்டில்தான் ‘இந்து தேசம்’ என்று உருமாறியிருக்கின்றது என்று திட்டவட்டமாகச் சொல்லலாம். அதன்பிறகே அப்பகுதி ‘சிந்து’ ‘இந்து’வாகி ‘ஹிண்டுஸ்தான்’ என்று வழங்கலாயிற்று என்று ஊகிக்க இடமுள்ளது.
அனைத்து தரப்பிரும் அர்ச்சகர் ஆகும் சட்டம் வந்தவுடன் மாறும் என்று நினைக்கிறேன். அரிசோனன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்
--
மறுக்க முடியாத உண்மையாக இருந்தாலும் சபை நாகரிகம் கருதி,தமிழைப் போற்றும் பகுதிகளை மட்டும் தேர்வு செய்து அளித்த பண்பாடு நயமிக்கது.செய்தவரு(ர்களு)க்கு பாராட்டுகள்...... தேமொழி
On Saturday, April 29, 2017 at 3:50:45 AM UTC-7, singanenjan wrote:"நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில்
தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்
தக்க சிறு பிறைநுதலும் தரித்த நறும் திலகமுமே
அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும்
தமிழணங்கே, தமிழணங்கே,
உன் சீர் இளமைத் திறம் வியந்து
செயல் மறந்து வாழ்த்துதுமே,
வாழ்த்துதுமே, வாழ்த்துதுமே"சுந்தரனார் இயற்றிய முழு பாடலும் இங்கில்லை."தமிழணங்கே" வைத் தொடர்ந்து தளை தட்டுவதை கவனி யுங்கள்.எத்திசையும் ............தமிழணங்கே" வைத் தொடர்ந்து ,"பல்லுலகும் பல உயிரும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்எல்லையறு பரம்பொருள் முன்னிருந்தபடி இருப்பதுபோல்கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும்உன்னுதிரத்துதித்தெழுந்து ஒன்று பல ஆயிடினும்ஆரியம்போல் உலக வழக்கழிந்தொழிந்து சிதையா நின்சீரிளமைத் ...."இப்போது பாருங்கள் , முழுமையான பாடல் எவ்வளவு நன்றாக இருக்கிறது.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
On Friday, May 5, 2017 at 9:49:35 AM UTC-7, oruarizonan wrote:2017-05-05 9:16 GMT-07:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>://நல்வார்த்தைகளுக்கு நன்றி அரிசோனரே. ஆயினும் திரு தேனீ ஐயா அவர்கள் தொடர்ந்து அவருடைய நோக்கில் சைவத்தைப் பற்றிப் பதிவதற்கு நான் குறுக்கீடாக இருக்க விரும்பவில்லை. எனவே இனி என் குறுக்கீடுகள் இருக்காது. //"பெரியோர்கள் நிறைந்த சபையில் அறமில்லாததை ஒருவர் சொன்னால், அதை எதிர்த்துச் சொல்லாமலிருந்தால், நாமும் அவ்வறமில்லாததற்குத் துணைபோவதாவே பொருள்!" என்று மஹாபாரதத்தில் பாஞ்சாலியைத் துகிலுரியமுனைந்தபோது விகர்ணன் செப்பியதை நினைவுகூர்ந்து, அறமென்று சொல்லவேண்டியத்தைச் சொல்லுங்கள், அரங்கனாரே! அதுவே அறமாகும்.
சிவசிவ
சிற்றம்பலம் ஏறி திருமுறை பாட மேலோருக்கு ஏது தடை?
சிவபெருமான் வாக்கு மனம் கடந்தவன். அவனே ஓசை ஒலியெல்லாம் ஆனவன் என்று அப்பர் பெருமான் கூறுவார்.
ஆதலால் நாம் ஜெர்மானிய அல்லது மலாய் மொழியில் அருசித்தாலும், போற்றினாலும் பெருமானுக்கு எல்லாமே ஏற்கும்.
ஆனால் நாம் பெருமானைப் போற்றுவதும் வழிபடுவதும் பெருமானின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக அல்ல. பிற மதங்களில் கூறுவது போன்று தன்னை உயிர் குலங்கள் போற்ற வேண்டி பெருமான் நமக்கு தனு, கரண, புவன, போகங்களைப் படைத்தருளவில்லை. அவன் வரம்பிலின்பம் உடையவன். தனக்கு எத்தேவையும் உடையவன் அல்ல. ஆதலால் பெருமானைப் போற்றிப் பாடுவதும் வணங்குவதும் ஆன்ம பக்குவம் ஏற்படவேயன்றி இறைவனின் இன்பதிற்காக அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டுகிறேன்.
அப்படி ஆன்ம பக்குவம் ஏற்படவே தமிழச்சைவர் திருமுறையை தமிழில் ஓதி வழிபடுகின்றார். அவ்வாறே தமிழால் அருச்சனைப் பாட்டைப் பாட வேண்டி சுந்தரமூர்த்தி நாயனாரை இப்பூவுலகத்திற்கு சிவபெருமான் அனுப்பியதாக சேக்கிழார் பெருமான் கூறுவார்,
‘பெற்றனை நமக்கு மன்பிற்
பெருகிய சிறப்பின் மிக்க
அற்சனை பாட்டே யாகும்
ஆதலான் மண்மேல் நம்மைச்
சொற்றமிழ் பாடு கென்றார்
தூமறை பாடும் வாயார்’
ஆன்ம பக்குவம் ஏற்பட வேண்டுமானால் அவ்வுயிருக்கு தான் எப்பொருளில் பெருமானை வேண்டி வணங்குகின்றேன் என்று புரிய வேண்டும். அப்படி பொருள் புரிந்த உயிரானதே படிப்படியாகப் பக்குவப்படும். இது ஒரு படிமுறை வளர்ச்சி.
அதனால்தான், மாணிக்கவாசகரும்,
‘சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்’
என்று பாடினார். இது ஒரு சிவஞானியின் திருவாக்கு.
பெருமானைப் போற்றிப் பாடும் பொருள் புரியவில்லையானால் அவ்வுயிரானது எப்படி பக்குவமடையும்? எப்படி சிவலோகப் பதவி கிட்டும்? எப்படி வீடுபேரின்பம் பெற முடியும்?
ஆகையால்தான் தமிழர் செந்தமிழில் போற்றிப் பாடி அருச்சனை செய்ய வேண்டுமென்பது. இது ஏதோ எனக்கு எம்மொழிதான் பெரியது என்று சொல்வதற்காக அல்ல மாறாக ஓர் ஆன்மா பக்குவம் பெற வேண்டியே அவரவர் அறிந்த மொழியில் அருச்சனை செய்வதும் போற்றிப் பாடுவதும் தென்னாடுடைய தமிழ்ச் சைவத்தின் நிலைப்பாடு. இது தமிழரின் தெளிந்த நிலை.
இறைவன் எல்லா மொழியும் அறிவான். ஆதாலால் சமசுகிரதத்தில் மந்திரம் ஓதினாலும் இறைவன் அறிவான் என்ற பொய் பிரச்சாரத்தை உண்மைப் பொருள் அறியாதவரிடம் சொல்லிக் கொண்டிருக்கலாம். அது அவ்வாறு சொல்லுபவருக்கு அறமாக இருக்கலாம். ஆனால் இறை வழிப்பாட்டின் உண்மைப் பொருள் புரிந்த தமிழ்ச் சைவனுக்கு அப்பசப்பு வார்த்தைகள் அறமற்றச் செயல் என்பது புரியும். சிவசிவ.
அதுபோலவே, திருமுறையை ஓதிவிட்டால் தாம் பெருமானுக்கு நணியோனாகி விடுவதில்லை. அத்திருமுறையை குற்றமற கற்று, அதனில் உணர்த்திய பொருளின்படி சைவ வாழ்க்கை மேற்கொள்வதே ஒரு சைவனின் கடமையாகும். அத்தகு சைவ வாழ்க்கை நெறியைப் பின்பற்றி முன்னுதாரண குருமார்களாக நின்று நல்வழி காட்டியோர்தான் நால்வர் பெருமக்கள்..
அந்த நால்வர் பெருமக்கள் விலக்கிய சாதி, குலம் பேணி திருசிற்றம்பலமேறி திருமுறை ஓதுவதால் பயன் என்? கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியாரையே தள்ளி வைத்தோர்தானே தீட்சிதர்! 14-ம் நூற்றாண்டில் அது நடந்தது. 21-ம் நூற்றாண்டிலும் அவ்வாறே நடந்தது. உண்மையான மெய்வழிப்பாடிற்கு புறம்பாக பொய்யான வழிபாட்டைக் கண்டு நாணிச் சிரித்து ஒதுங்கி நிற்பான் சிவபெருமான் என்பதை,
‘நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும் பொன்னார்சடைப் புண்ணியன்
பொக்க மிக்கவர் பூவுநீ ருங்கண்டு
நக்கு நிற்பர் அவர்தம்மை நாணியே’
என்று கூறுவார் அப்பர் பெருமான்.
இனியும் உண்மையை எடுத்தியம்புவோரை அறமற்றச் செயல் புரிவோரென்று புறம்பேசித் திரியவேண்டாம். சிவசிவ.
அன்புடன் கமலநாதன்
//நல்ல எடுத்துக்காட்டு தந்துள்ளீர்கள், திரு. அரிசோனன். லெமூரியாக் கண்டம்.........நா. கணேசன்//
//சிற்றம்பலம் ஏறி திருமுறை பாட மேலோருக்கு ஏது தடை?//
//ஆனால் நாம் பெருமானைப் போற்றுவதும் வழிபடுவதும் பெருமானின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக அல்ல. பிற மதங்களில் கூறுவது போன்று தன்னை உயிர் குலங்கள் போற்ற வேண்டி பெருமான் நமக்கு தனு, கரண, புவன, போகங்களைப் படைத்தருளவில்லை. அவன் வரம்பிலின்பம் உடையவன். தனக்கு எத்தேவையும் உடையவன் அல்ல. ஆதலால் பெருமானைப் போற்றிப் பாடுவதும் வணங்குவதும் ஆன்ம பக்குவம் ஏற்படவேயன்றி இறைவனின் இன்பதிற்காக அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டுகிறேன்.//
//‘சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்’
என்று பாடினார். இது ஒரு சிவஞானியின் திருவாக்கு.பெருமானைப் போற்றிப் பாடும் பொருள் புரியவில்லையானால் அவ்வுயிரானது எப்படி பக்குவமடையும்? எப்படி சிவலோகப் பதவி கிட்டும்? எப்படி வீடுபேரின்பம் பெற முடியும்?//
//அதுபோலவே, திருமுறையை ஓதிவிட்டால் தாம் பெருமானுக்கு நணியோனாகி விடுவதில்லை. அத்திருமுறையை குற்றமற கற்று, அதனில் உணர்த்திய பொருளின்படி சைவ வாழ்க்கை மேற்கொள்வதே ஒரு சைவனின் கடமையாகும். அத்தகு சைவ வாழ்க்கை நெறியைப் பின்பற்றி முன்னுதாரண குருமார்களாக நின்று நல்வழி காட்டியோர்தான் நால்வர் பெருமக்கள்..
அந்த நால்வர் பெருமக்கள் விலக்கிய சாதி, குலம் பேணி திருசிற்றம்பலமேறி திருமுறை ஓதுவதால் பயன் என்? கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியாரையே தள்ளி வைத்தோர்தானே தீட்சிதர்! 14-ம் நூற்றாண்டில் அது நடந்தது. 21-ம் நூற்றாண்டிலும் அவ்வாறே நடந்தது. உண்மையான மெய்வழிப்பாடிற்கு புறம்பாக பொய்யான வழிபாட்டைக் கண்டு நாணிச் சிரித்து ஒதுங்கி நிற்பான் சிவபெருமான் என்பதை,
இனியும் உண்மையை எடுத்தியம்புவோரை அறமற்றச் செயல் புரிவோரென்று புறம்பேசித் திரியவேண்டாம். //
#விளக்கம் தருக, கமலநாதன் அவர்களே!#
அந்த நால்வர் பெருமக்கள் விலக்கிய சாதி, குலம் பேணி திருசிற்றம்பலமேறி திருமுறை ஓதுவதால் பயன் யாது?
#மும்மலம் கழியப்பெற்று, அருள்வேண்டிநிற்கும் ஆன்மாக்கள் வழிபடும் முறையும், மும்மலங்கள் நிரம்பிய ஆன்மாக்கள் வழிபடும் முறைக்கும் வேறுபாடு உண்டு என்பது தங்களறியாததா? #
மாயை என்னும் ஒரு மலம் நீங்கப் பெற்ற பிரளயாகலர் ஆன்மாவும்; மாயை, கன்மம் என்னும் இருமலம் நீங்கப் பெற்று ஆணவ மலம் இறைவன் திருவருளின் முன் ஒடுங்கி நிற்கும் விஞ்ஞானகலர் ஆன்மாவும் நாம் வாழும் பிரகிருதி மாயையைக் கடந்த நிலை அல்லவா? அத்தகைய சுத்த நிலையினைப் பெற்ற ஆன்மாக்களுக்கு ஏது தூல வழிபாடு?்
சிவலிங்கத் திருமேனி தீண்டி குருமார் செய்யும் சிவாலய வழிபாடும், அவ்வழிபாட்டில் பங்கெடுத்துக் கொள்ளும் உயிர் குலங்கள் அனைத்துமே மும்மலக் கட்டில் அடங்கிய சகலர் நிலையில் உள்ளவையே. முன்னவர் முறைப்படி சிவதீக்கைப் பெற்று இறைவன் திருமேனி தீண்டி சிவாலய கிரியை செய்யத் தகுதியுடையவர். பின்னவர் அந்த தகுதியைப் பெறாதவர். இதுதான் வேறுபாடே ஒழிய திருசிற்றம்பலமேறி இறைவனுக்குத் திருமுறை துதி பாட சைவ ஒழுக்கங்கங்களைப் பின்பற்றும் பொதுச்சைவருக்கும் அத்தகைய உரிமை உண்டு என்பதை மறுக்க முடியாது. அத்தகைய பொதுச்சைவர் திருசிற்றம்பலமேறி இறை துதி பாட தில்லையில் மறுக்கப் பட்டது குற்றமே.
பக்குவமடைந்தோரும், பக்குவமடையாதோரும் மேற்கொள்ளும் ஆன்மார்த்த பூசை அவருக்கும் இறைவனுக்கும் உள்ள அந்தரங்க உறவு. அதில் பிறர் உட்பிரவேசிக்க முடியாது. இதுவே, பக்குவப் பட்ட ஆன்மாக்களுக்கும் பக்குவப்படாத ஆன்மாகளுக்கும் உள்ள வேறுபாடு. சிவஞானிகளுக்கு புறத் திருமேனி வழிபாடு இல்லை என்பதை திருமூலர் இப்படி விளக்குவார்,
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே.
ஞானிகளுக்குப் புற வழிபாடு வேண்டுவதில்லை என்பது இதன் பொருள். அவ்வாரே யோக நிலையில் அகப்பூசை செய்ய வல்லவருக்கும் புற வழிபாடு வேண்டுவதில்லை என்பது சைவநெறி. பத்தி நெறியில் வேறுபாடு என்பது அவரவர் பக்குவநிலையைப் பொருத்ததேயன்றி சாதி குலம் வழி நிச்சயிக்கப் படுவது அல்ல.
சைவ பகறும் இத்தகைய உடன்பாட்டுக்கு தாங்கள் பற்றி நிற்கும்
வைதிக மதம் @ இந்து மதம்
உடன்படுமா? அப்படி உடன்படும் என்றால் வர்ணாசிரமத்தை
இக்காலத்திலும் உயர்த்திப் பிடிப்பது தகுமோ என்று சொல்லுங்கள்.
#திருவாதவூராரின் சிவபுராணத்தைப் பொருளறிந்து தினமும் ஓதுபவன் நான். பொருளறியாமல் பாடும் பாட்டிலே உணர்விருக்காது என்னும்போது, தோத்திரப்பொருளை அறியத்தானே வேண்டும்! அது மும்மலம் நீங்காததோறால் இயலுமோ? #
தங்களைத் தாங்களே
மும்மலம் நீங்கியோராக கருதுவது எப்படி?
கொஞ்சம் தமிழ்
தெரிந்தாலே போதும். சிவபுராணத்தின் விளக்கவுரை நூலைக் கொண்டு பொருள் அறிந்து தினமும்
பாடலாம். அதனால்தான் அவரவர் அறிந்த மொழியில் அருச்சனைத் துதி பாட வேண்டுவது.
#எனக்குள் மும்மலமிருக்கிறது என்பதை நானறிவேன். சிவபெருமான் இதைக்கண்டு ஒதுங்கிநிற்பான் என்று தாங்கள் குறிப்பிடுவதிலிருந்து அவை தங்களிடமில்லை என்று தாங்கள் கூறுவதாவே எனக்குப்படுகிறது.#
மும்மலம் நீங்கியோர் முத்தர். ஊழ்வினைக் காரணமாக
அவர் சடமான உடலுடன் வாழ்ந்தால் சீவன் முத்தர். எம்முடைய கருத்துப் பதிவிலிருந்து எங்காவது
சீவன் முத்தர் என்று தெரிகின்றதா? அப்புறம் எம்மிடம் இல்லாத ஒன்றை எப்படி தாங்களே
சுயமாக கற்பித்துக் கொள்ள முடியும்?
பாவணை வழிபாடு செய்வோரைக் கண்டு சிவபெருமான் ஒதுங்கி
நிற்பான் என்று கூறியது சாதி, குலம் பேணி வர்ணாசிரம தர்மம் பின்பற்றி சிவவழிபாடு
செய்வது பாவணா வழிபாட்டில் அடங்கும். அத்தகைய பாவணை வழிபாட்டில் இருந்து ஒதுங்கியவன்
அடியேன்.
தங்களின் சமயப் பற்றுக்கும் சமயத் தொண்டிற்கும்
தலை வணங்குறேன். சமயப் பற்று வேறானாலும் அன்பிற்கும் நட்புக்கும் அவை தடையாக இருப்பதில்லை
என்பதை இருவருமே புரிந்து கொண்டால் சரி.
எம்முடைய கருத்துப் பதிவை இக்கட்டுரையின் வழி சாற்றியதற்கு காரணம் ‘இந்து மதம்’ என்பதைப் பற்றி தமிழருக்கு ஒரு தெளிவு ஏற்பட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் செய்யப் பட்டது.
கடந்த 60 வருடங்களுக்கு மேலாக இந்து மதம் தமிழருக்கு எதிரான மதம். அது வர்ணாசிரமத்தைக் கொண்ட மதம். தமிழரின் மதம் மரபு வழிபாடு மட்டுமே என்று திராவிட இயக்கத்தினர் செய்த தப்பான எதிர்பிரச்சாரத்தால் இன்றைய படித்த தமிழ் இளைஞரில் அதிகமானோர் தென்னாட்டுச் சித்தாந்த சைவமும் அவ்வகையத்தே என்றெண்ணி, அது ஓர் அறிவார்ந்த வளர்ச்சியடையந்த சமயம் என்பதையறியாது, விலகிச் செல்கின்றனர்.
இத்தகைய தப்பான எண்ணம் உயரிய கல்வித் தகுதியுடைய மலேசியத் தமிழரிடமும், இன்னும் உலகவாழ் தமிழரிடமும் வெகுவாக பரவி வருவதால், ஆங்கிலேயர் காலத்தில் ஏற்பட்ட ஒரு வரலாற்றுப் பிழையை சரி செய்யவே இக்கட்டுரையை எழுதினேன் மாறாக வைதிக மதத்தின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டல்ல என்பதை இங்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
எமது கருத்தை நிறுவ இரண்டு நூல்களை ஆதாரமாக முன்
வைத்தேன்.
இந்து மதம் (‘Hinduism’) எனப்படுவதை மேற்கத்தியர் கொண்ட பொருளென்ன என்பதை இக்கட்டுரை விளக்குகின்றது. மேற்கத்தியர் கொண்ட இத்தப்பான கருத்தானது வைதிக மதத்தவருக்குச் சாதக பலனைக் கொடுத்ததால் அதுவே அம்மதம் தொடர்ந்து நிலைப்பதற்கு உரிய புதுச்சட்டை என்றெண்ணி போர்த்திக் கொண்டது. 21-ம் நூற்றாண்டிலும் தமிழர் தென்னாடுடைய சைவத்தின் உண்மை நிலையறியாது திராவிட கழகத்தாரின் புறங்கூறலைக் கேட்டுக் கொண்டு புறந்தள்ளுவது நிறுத்தப் பட வேண்டும் என்பதற்காகவே இக்கட்டுரை படைக்கப் பட்டது.
எம் கருத்து பிழையென்று நிறுவ விரும்புவோர் ‘இந்து மதம்’ என்பதற்கான இலக்கணத்தை வகுத்துக் கூறிய பிரமாண நூலை முன் வைத்து அவர்தம் கருத்தைப் பதிவு செய்தால் படிப்போருக்குப் பயனளிக்கும். சிவசிவ.
மு. கமலநாதன்
//தங்களின் சமயப் பற்றுக்கும் சமயத் தொண்டிற்கும் தலை வணங்குறேன். சமயப் பற்று வேறானாலும் அன்பிற்கும் நட்புக்கும் அவை தடையாக இருப்பதில்லை என்பதை இருவருமே புரிந்து கொண்டால் சரி.//