மநு தர்ம சாஸ்திரம் - ஏன் தமிழர்களுக்கான ஒரு நூலல்ல!!

403 lượt xem
Chuyển tới thư đầu tiên chưa đọc

Suba

chưa đọc,
08:02:26 11 thg 3, 201711/3/17
đến மின்தமிழ், Subashini Kanagasundaram
தமிழ் நிலத்தில் தமிழ் மக்களின் பண்பாட்டில் வைதீக தருமம் அதன் விரிவாக்கத்தை அமைத்த பின்னர் மிகப்பல சமூகக் கேடுகள் தமிழர் பண்பாட்டுத் தளத்தில் நுழைந்தன. அதன் தொடர்ச்சியாகச்   சாதி அமைப்பும் அதனைச் சார்ந்த கொள்கைகளும் "நீதி", "சமய ஒழுக்கம்" என்ற பெயரில் அக்கால அரசுகளின்  துணையோடு விரிவாக்கம் கண்டன. இதனால் தமிழ்ப்பெருங்குடி மக்களான பழங்குடி மக்கள், சமூகத்தின் கடைக்கோடி மனிதராக சமூதாய அளவுகோளில் வைக்கப்படும் நிலமை உருவானது. அது இன்றும் தொடர்கின்றது. 

இந்தச் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்திய வைதீக  சாத்திரங்களாக அமைவனவற்றுள் மநுதர்ம சாத்திரம் முக்கிய இடம் வகிக்கின்றது. கல்வி அறிவு எட்டாக்கணியாக இருந்த சாமானிய மக்கள்  அரசும், சமய அமைப்பும் சொல்லும் நீதியையே எதிர் கேள்வி கேட்காமல் இருந்த காலகட்டத்தில், தமிழரிடையே பிரிவினை என்பது சமூக ரீதியாக கட்டமைக்க இந்த மநு தர்ம சாத்திரம் மிகப் பெரிய அளவில் உதவி இருக்கின்றது.  கடந்த சில காலங்களில் சமஸ்கிருதத்தில் இருந்த மநு தர்ம சாத்திரம்  ஏனைய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டபோது, ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியாக இந்த நூலையும் அது என்ன தான் சொல்கின்றது என்பதையும் அறிந்து கொள்ள பலருக்கும் வாய்ப்பு அமைந்தது.

அந்த வகையில் தமிழில் திருலோக சீதாராம் அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டு ஆர்.கே.எல். பிரிண்டர்ஸ் அச்சகத்தின் பதிப்பாக வந்த தமிழ் மொழி பெயர்ப்பிலிருந்து சில வாசகங்களை இந்த இழையில் பகிர்ந்து  கொள்கிறேன்.

வாசித்து அறிந்து கொள்வோமே!!

1.87 உலக நியதி நின்று நிலைக்கும் பொருட்டாக நால் வருணத்தாருக்கும் உரிய கடமைகளைத் தனித் தனியே கடவுள் விதித்தார்.

1.88. அந்தணாளர் வேதம் ஓதியும், ஓதுவித்தும், தியாக வேள்விகள் புரிந்தும், புரிவித்தும், செல்வராயின் பிறர்க்கு ஈந்தும், வறிஞராயின் செல்வரிடம் ஏற்றும் வாழத் தக்கவராயினர்.

1.89. பிரஜா பரபாலனம் செய்வது, ஈகை. வேள்விகள் புரிவது, வேத பாராயனம் செய்விப்பது, விஷய சுகங்களின் மனத்தை அலைய விடாமல் உறுதியாக நிற்பது மன்னர் கடமையாகும்.

1.90. வாணிபர்க்கு ஆநிரைகளைக் காத்தல், தானம் கொடுத்தல், கடலாரம், மலையாரம், கனிப்பொருள், விளை பொருள், தானியங்கள் இவற்றை வியாபாரம் செய்தல், வட்டிக்கு விடுதல், பயிர்த்தொழில் செய்தல் ஆகியவற்றை விதித்தார்.

1.91. ஏவலரான மக்கள் மேலே சொன்ன மூவர்க்கும் பொறாமையின்றிப் பணி புரிதல் ஒன்றையே முதன்மையாகக் கொள்ளக் கடவரென்றும், ஈதல் முதலிய சத்கருமங்களும் அவர்களுக்கு உண்டென்றும் படைத்தார்.

ஆக எந்தப் பொறாமையுமின்றி அந்தணர், சத்திரியர், வைசியருக்கு சேவகம் செய்வதே சூத்திரரின் கடமை என நிர்ணயிக்கின்றது மநு தர்மம்.  இது ஒரு தர்மமா? 

இக்காலத்தில் சமூகத்தின் எல்லா சமூகத்தோரும் கல்வி கற்று, எது நீதி எது நியாயம் எது அநியாம என உணர்ந்திருக்கின்றோம். அடிப்படை மனித  உரிமை அறிந்த உலக மக்கள், மநுதர்மம் கூறும் இந்த வாசகங்கள் இன்னும் நாகரிகம் அடையாத ஒரு சமூகத்தின் சிந்தனைகளின் பிரதிபலிப்பு எனத்தான் எண்ண முடியும்.

தொடரும்..

சுபா

செல்வன்

chưa đọc,
11:26:02 11 thg 3, 201711/3/17
đến mintamil, Subashini Kanagasundaram

2017-03-11 7:02 GMT-06:00 Suba <ksuba...@gmail.com>:
ஆக எந்தப் பொறாமையுமின்றி அந்தணர், சத்திரியர், வைசியருக்கு சேவகம் செய்வதே சூத்திரரின் கடமை என நிர்ணயிக்கின்றது மநு தர்மம்.  இது ஒரு தர்மமா? 

சூத்திரனுக்கு ஒரு நீதி
தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு ஒரு நீதி, 
சாத்திரம் சொல்லுமாயின்
 அது சதியெனக் காண்போம்

பாரதி

--

nkantan r

chưa đọc,
11:33:26 13 thg 3, 201713/3/17
đến மின்தமிழ்
i find there is a strong undercurrent to keep discussing manu smriti in this group; though it is welcome to discuss the manusmiriti, the reason for discussion seems to be the presumption that tamils were enlightened and without social differences (i dont want to use the word casteless) and they got corrupted by manu smiriti. (it is a misnomer to call it as manu dharma)

i read some cantos of manusmiriti in english/tamil (thanks to my science teacher, who i have referred to many a time!) and lost interest soon afterwards; it is not worth reading to follow! btw we have to realise the meaning of word smiriti and then automatically we can see how a smiriti is dated even when it is compiled!

1) manu smiriti is a very very dated sanskrit text just as dated as many religious texts such as gita, koran or bible etc
2) manu smiriti probably is in prominence because english and european indophiles took it across to show hinduism is barbaric compared to christianity
3) manu smiriti doesnot claim to laydown the rules (though the correct way of living is a major part); and most brahmins like me have been taught to read  yajnawalkya smiriti which is "more" sensible! actually this claims to lay down rules and punishments (like ipc!) and probably had been the basis of rules of many hindu kings from 4th century to 9th or 10th century and not manu smiriti. But it is also a dated text not suitable for the current temps.
4) when i read the phrases "தமிழ் நிலத்தில் தமிழ் மக்களின் பண்பாட்டில் வைதீக தருமம் அதன் விரிவாக்கத்தை அமைத்த பின்னர் மிகப்பல சமூகக் கேடுகள் தமிழர் பண்பாட்டுத் தளத்தில் நுழைந்தன", it gives a picture of a people who resist but succumb to another race and lose. is it so? are we here talking of AIT?
5) i dont carry a torch for these smirities; but to blame them for current ills of castes is hiding the issues
6) smiriti talk of four varnas but the தமிழர் சமூகக் கேடுகள் is a plethora of castes and sub-castes
7) the perpetuation of these castes is because the father and mother and grand-parents in a family still talk of caste pride; they dont quote the smiriti but talk of gods, hinduism, their own version of epics and their perception of pride or humility of castes! this idea is instilled in their offsprings and is perpetuated.

manusmiriti or yajnawalkya smiriti is worth reading by academics and probably social scientists but nothing more!

regards
rnkantan

Oru Arizonan

chưa đọc,
14:19:37 13 thg 3, 201713/3/17
đến mintamil

2017-03-13 8:33 GMT-07:00 nkantan r <rnka...@gmail.com>:

//manusmiriti or yajnawalkya smiriti is worth reading by academics and probably social scientists but nothing more!//

You nailed it correctly, rnkantan, Sir!  It seems that it is fashionable to chase a boogeyman of yore to assign the reason for the present ills of any society.

Regards,
Oru Arizonan

Suba

chưa đọc,
14:47:07 13 thg 3, 201713/3/17
đến மின்தமிழ், Subashini Kanagasundaram
பதிவு 2

தற்போதைய சூழலில், வைதீக சாத்திரங்களைத் தமிழ்ச் சமூகத்தில் புகுத்தி அதன் வழி சமூகத்தில் ஏற்றத்தாழ்வினை   ஏற்படுத்திய மநு தர்ம சாஸ்திரம் ஏன் தமிழர்களுக்கான ஒரு நூல் அல்ல என்பதை ஆராய வேண்டிய அவசியம் எழுந்திருக்கின்றது.   அந்த வகையில் தமிழில் திருலோக சீதாராம் அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டு ஆர்.கே.எல். பிரிண்டர்ஸ் அச்சகத்தின் பதிப்பாக வந்த தமிழ் மொழி பெயர்ப்பிலிருந்து சில வாசகங்களை இந்த இழையில் தொடர்வோம்.

2.31  நாமகரணத்தினால் பிராம்மணனுக்கு மங்களமும், ஷத்திரியனுக்குப் பலமும், வைஸ்யனுக்குத் தனமும், ஏனையோருக்கு அவர்தம் பணியையும்  குறிக்கும் பெயர்களை இட வேண்டியது.

2.32 பிராம்மனனுடைய பெயர் மேன்மையைக் குறிக்கும் சர்மன், ஷத்திரியனுக்குப் பலத்தைக் குறிக்கும் வர்மன், வைசியனுக்கு வளத்தைக் குறிக்கும் பூபதி, நாலாமவனுக்குப் பணிவிடையைக் குறிக்கும் தாசன் என்றிவ்வாறு அவரவர் பெயர்களுடன் பட்டங்கள் வழங்கி வர வேண்டியது.

2.44. பிராம்மணனுடைய பூணூல் பஞ்சினாலும், ஷத்திரியனுக்குச் சணப்பையினாலும், வைசியனுக்கு வெள்ளாட்டு ரோமத்தாலும் நூலிழைத்து மூவடமாகத் தோளில் அணிய வேண்டியது.

2.67. பெண்களுக்கு விவாகமே உபநயனமாகும். கணவனுக்குப் பணி புரிந்திருத்தலே அவர்களது குருகுலவாசமெனப்படும். இல்லத்தைக் காத்து நடத்துதலே அவர்களுக்கு சமிதா தானமாகும்.

பெயர் வைக்கும் போதே அதில் உயர்வு எது தாழ்வு எது என நிர்ணயிக்கின்றது மநு தர்மம். பிறக்கும் ஒரு குழந்தை பூமிக்கு வந்து விழும் போது அதன் உலகம் புதிது. அந்தப் புதிய உலகின் ஆரம்பமே சூத்திரர் எனும் வருணத்தாருக்கு அடிமை வாழ்வை சட்டமாக்கி அதனை உறுதி செய்கிறது மநு தர்மம். இதுதான் தர்மமா?

4ம் வருணத்தாருக்காவது வெளி உலகு என்ற ஒன்றினை விட்டு வைக்கும் மநு, பெண்களுக்கு நான்கு சுவர்களை மட்டுமே உலகமாக்குகின்றார். வெளி உலக வாசனை அற்ற அடிமைகளாகப் பெண்கள் இருத்தலை மநு தர்மம் சிறந்த தர்மமாகச் சொல்கின்றது. இதுதான் தர்மமா?

தொடரும்

சுபா
--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Visit THF pages and blogs
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
தேமொழி

chưa đọc,
15:59:18 13 thg 3, 201713/3/17
đến மின்தமிழ்

திரு அரிசோனனோ   அல்லது   திரு. nkantan r  அவர்களோ மநுவை மறைமுகமாக நுழைக்கும் முயற்சியில் உள்ள இழைகளில் இக்கருத்துக்களை இட்டிருக்கலாமே. 

"cherry picking"  செய்வது போல சிலவற்றைத் தேர்ந்தெடுத்து போட்டு அது ஓர் உயர்ந்த கருத்தாக்கம் கொண்ட நூல் போன்ற பரப்புரை செய்யும்  இழைகளில் அமைதியாக இருப்பது / அல்லது பாராட்டி ஊக்கப்படுத்தி பின்னூட்டம் இடுவது என்ற கொள்கையைக் கடைப்பிடிப்பதும்,  இப்பொழுது இது சரியல்ல என்பது போன்ற கருத்திடுவதும்   முரண் கொண்ட நடவடிக்கை.   

வாழைப்பழத்தில் ஊசிஏற்றுவது போலத் தந்திரமாக  நுழைக்கப் படும் அந்த நூல் ஒரு உயர்ந்த நூலல்ல, அதன் உண்மையான மறுபக்கம் என்ன என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ள பதிவுகளை நேரடியாகத் தாக்கி எதிர்ப்பைத் தெரிவிப்பதன் பின்னணி என்ன?

விளைவுகளைத் தாக்கும் முறையினால் தாக்குவதன் உண்மை நோக்கம் வெளிவருகிறது.

திரு அரிசோனான், பீட்டர் ட்ரக்கர் பிரின்சிபில்ஸ் தொடர்கிறதா?!!!

மனுநூலும், வள்ளுவமும் என்ற திரு. தேவ்ராஜ் அவர்கள் இழையில் பாராட்டி பின்னூட்டம் 
எடுத்துக்காட்டுகளுக்கு நன்றி, தேவ் ராஜ் அவர்களே!

என்று பின்னூட்டம் கொடுத்த நீங்கள், இந்த இழையில் அதற்கு மாறாகப் பேசுவது சரியா?  இருபக்கமும் உள்ள உண்மையும் வரட்டும் என்று அமைதி காப்பதுதான் முறையல்லவா?

..... தேமொழி

செல்வன்

chưa đọc,
16:33:13 13 thg 3, 201713/3/17
đến mintamil

On Mon, Mar 13, 2017 at 1:19 PM, Oru Arizonan <oruar...@gmail.com> wrote:
You nailed it correctly, rnkantan, Sir!  It seems that it is fashionable to chase a boogeyman of yore to assign the reason for the present ills of any society.

மெயின்காம்ஃப் நூல் இருக்கிறது.

அதை விமர்சித்தால்  தற்போதைய ஜெர்மானியர்கள் வருத்தபடுவார்களா? 

அதை தற்போதைய ஜெர்மனி மீதான தாக்குதலாக கருதவேண்டியதில்லை.

மெயின்காம்ப் விமர்சனம் பயனுள்லதா, பயனற்றதா என்பதை பற்றியும் கவலைபடவேண்டியதில்லை.

ஸ்மிரிதி என்பது மாற்றத்துக்குள்ளாவது என சொல்லிவிட்டபின்னர் பழைய நூலை ஆய்வுநோக்கில் யார் ஆராய்ந்தால் என்ன?

எனக்கு கடவுள் நம்பிக்கை உள்ளது. ஆனால் மனுஸ்மிரிதியை நம்பவில்லை. அதை ஒரு பெரிய மானுடதவறாக காண்கிறேன். 

அதனால் அந்த விமர்சனங்களை என்னால் என் நம்பிக்கை மீதான தாக்குதலாக காண இயலவில்லை.

--

Oru Arizonan

chưa đọc,
17:18:18 13 thg 3, 201713/3/17
đến mintamil

2017-03-13 12:59 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:

//திரு அரிசோனனோ   அல்லது   திரு. nkantan r  அவர்களோ மநுவை மறைமுகமாக நுழைக்கும் முயற்சியில் உள்ள இழைகளில் இக்கருத்துக்களை இட்டிருக்கலாமே. 

"cherry picking"  செய்வது போல சிலவற்றைத் தேர்ந்தெடுத்து போட்டு அது ஓர் உயர்ந்த கருத்தாக்கம் கொண்ட நூல் போன்ற பரப்புரை செய்யும்  இழைகளில் அமைதியாக இருப்பது / அல்லது பாராட்டி ஊக்கப்படுத்தி பின்னூட்டம் இடுவது என்ற கொள்கையைக் கடைப்பிடிப்பதும்,  இப்பொழுது இது சரியல்ல என்பது போன்ற கருத்திடுவதும்   முரண் கொண்ட நடவடிக்கை.   

வாழைப்பழத்தில் ஊசிஏற்றுவது போலத் தந்திரமாக  நுழைக்கப் படும் அந்த நூல் ஒரு உயர்ந்த நூலல்ல, அதன் உண்மையான மறுபக்கம் என்ன என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ள பதிவுகளை நேரடியாகத் தாக்கி எதிர்ப்பைத் தெரிவிப்பதன் பின்னணி என்ன?

விளைவுகளைத் தாக்கும் முறையினால் தாக்குவதன் உண்மை நோக்கம் வெளிவருகிறது.

திரு அரிசோனான், பீட்டர் ட்ரக்கர் பிரின்சிபில்ஸ் தொடர்கிறதா?!!!

மனுநூலும், வள்ளுவமும் என்ற திரு. தேவ்ராஜ் அவர்கள் இழையில் பாராட்டி பின்னூட்டம் 
எடுத்துக்காட்டுகளுக்கு நன்றி, தேவ் ராஜ் அவர்களே!

என்று பின்னூட்டம் கொடுத்த நீங்கள், இந்தஇரண்டு  இழையில் அதற்கு மாறாகப் பேசுவது சரியா?  இருபக்கமும் உள்ள உண்மையும் வரட்டும் என்று அமைதி காப்பதுதான் முறையல்லவா?

..... தேமொழி//

இரண்டு இழைகளிலும் நான் சரியாகத்தான் கருத்து இட்டிருக்கிறேன், தேமொழி அவர்களே! 

உங்களுக்கு எப்படிக் கருத்து இட உரிமையுள்ளதோ, அவ்வாறே எனக்கும் உள்ளது.

boogey manஐ எங்கும் தேடலாம் -- என் பதிவிலும்கூட. அதற்கு உங்கள் பதிவே சான்று.

ஒரு அரிசோனன் 

தேமொழி

chưa đọc,
17:23:59 13 thg 3, 201713/3/17
đến மின்தமிழ்
ஒன்றின் நோக்கம் (அங்கு) =  ஆதரவு

ஒன்றின் நோக்கம் (இங்கு) = எதிர்ப்பு

இதை மறுக்க அல்லது மறைக்க விருப்பமா?

Oru Arizonan

chưa đọc,
17:29:35 13 thg 3, 201713/3/17
đến mintamil
2017-03-13 13:32 GMT-07:00 செல்வன் <hol...@gmail.com>:

On Mon, Mar 13, 2017 at 1:19 PM, Oru Arizonan <oruar...@gmail.com> wrote:
You nailed it correctly, rnkantan, Sir!  It seems that it is fashionable to chase a boogeyman of yore to assign the reason for the present ills of any society.

//மெயின்காம்ஃப் நூல் இருக்கிறது.

அதை விமர்சித்தால்  தற்போதைய ஜெர்மானியர்கள் வருத்தபடுவார்களா? 

அதை தற்போதைய ஜெர்மனி மீதான தாக்குதலாக கருதவேண்டியதில்லை.

மெயின்காம்ப் விமர்சனம் பயனுள்லதா, பயனற்றதா என்பதை பற்றியும் கவலைபடவேண்டியதில்லை.

ஸ்மிரிதி என்பது மாற்றத்துக்குள்ளாவது என சொல்லிவிட்டபின்னர் பழைய நூலை ஆய்வுநோக்கில் யார் ஆராய்ந்தால் என்ன?

எனக்கு கடவுள் நம்பிக்கை உள்ளது. ஆனால் மனுஸ்மிரிதியை நம்பவில்லை. அதை ஒரு பெரிய மானுடதவறாக காண்கிறேன். 

அதனால் அந்த விமர்சனங்களை என்னால் என் நம்பிக்கை மீதான தாக்குதலாக காண இயலவில்லை.//

செல்வரே,

நானும் நீங்கள் எழுதியபடியே //அந்த விமர்சனங்களை என்னால் என் நம்பிக்கை மீதான தாக்குதலாக காண இயலவில்லை.//
nrkantan னும், நானும் எங்களுக்குத் தோன்றியதை எழுதினோம்.

திருக்குறளிலேயே சில குறள்களை நீக்கவேண்டும் என்றும் முன்பு எழுதினார்கள், அதற்கும் எதிர்மொழிவைத்தேன்.

எந்த அறநூல்களிலும் காலத்திற்கு ஒவ்வாத கருத்துக்கள் இருக்கும்.  அவை அவ்வப்பொழுது மாற்றப்படும், நூல்களே தூக்கி எறியப்படும்.
நான் முன்பு எழுதியதையே மீண்டும் எழுதுகிறேன்.

"செத்தபாம்பின் தோல் நைந்து உருத்தெரியாமல் போனபின்னும், அதன் எலும்புகள் நொறுங்கித் தூள்தூளானபின்னும், விடாமல் அதை அடித்துக்கொண்டேயிருப்பதின் நோக்கம்தான் என்ன?"

நீங்களே சொல்லுங்களேன்.

ஒரு அரிசோனன் 

செல்வன்

chưa đọc,
21:46:18 13 thg 3, 201713/3/17
đến mintamil

2017-03-13 16:29 GMT-05:00 Oru Arizonan <oruar...@gmail.com>:
நான் முன்பு எழுதியதையே மீண்டும் எழுதுகிறேன்.

"செத்தபாம்பின் தோல் நைந்து உருத்தெரியாமல் போனபின்னும், அதன் எலும்புகள் நொறுங்கித் தூள்தூளானபின்னும், விடாமல் அதை அடித்துக்கொண்டேயிருப்பதின் நோக்கம்தான் என்ன?"

நீங்களே சொல்லுங்களேன்.

எல்லா பதிவுகளையும் யார் என்ன நோக்கில் எழுதுகிறார்கள் என தெரிந்து என்ன ஆகபோகிறது அரிசோனரே? 

செத்த பாம்பை ஒருத்தர் அடிக்கிறார் என நீங்கள் நினைத்தால் ஒரு புன்னகையுடன் அதை கடந்து செல்லவேன்டியதுதான். அவரிடம் போய் "பாம்பு செத்துவிட்டது, ஏன் அடிக்கிறாய், அதனால் கிடைக்கும் நன்மை என்ன" என கேள்விக்கணைகளை தொடுத்தால் இன்னும் ரெண்டு அடி பாம்பை சேர்த்து அடிக்கத்தான் செய்வார்கள்.

--

nkantan r

chưa đọc,
01:10:55 14 thg 3, 201714/3/17
đến மின்தமிழ்
1) i normally dont write a post on general idea; i write points or revert to points; only here i thought i would write my opinion;
2) this sort of argument - why you didnot respond to that, why you remained silent here or there -- is never an acceptable premise;  this is normally used by politicians to sidestep issues or to win brownie points;  whether i respond to a thread or not depends on many things- i should first see and then read; then i should formulate a response in mind and then type out; so many a time i read a thread and out of sheer lethargy i dont respond;  as regards the other two threads on manu smiriti, one is a very big thread so i dont read it at all!
3) as regards thirukural and manu, let me point out that i spent few hours with three french citizens in Paris in sep 1989 (two were french born, and another puduchery born but had become a french citizen); they were working on a thesis of comparing Dhamma literature with Kural. i remember seeing almost many chapters matching.  so i specifically googled it when i read that thread ; then i thought why should add to the clutter instead of just reading an intersting thread.... so i left it as such
4) i never said manusmirit is acceptable in toto; i rather mentioned it is as dated as many religious books; for information, we have to realise that smiriti means recollections (what is remembered); when books are written on what periyar, or sankarachariyar or anna said or did (not biography but recollections) they are smiritis. Just as what periyar or ambedkar or sankarachariyar or bernard shaw were alleged to have said cannot be accepted in toto as proper framework of living after they expired, same goes with these smiritis.  Moreso because a manu or yajnawalkya are mythical figures - we never know they existed-- and the recollections were made probably hundreds of years later.
5) just as gita or quoran cannot be taken in toto to be suitable for modern times, same is the case with most literature.
6) "வாழைப்பழத்தில் ஊசிஏற்றுவது போலத் தந்திரமாக  நுழைக்கப் படும் அந்த நூல் ஒரு உயர்ந்த நூலல்ல, அதன் உண்மையான மறுபக்கம் என்ன?"  i dont know who is promoting this now and who are all accepting it; for me it is a book of past, that too a bad recollection;  only way we can use this book is to know what is all wrong with it; that is again left to social scientists and not for common public;  and this book has no great literary content also!
7) my tamil is bad; so can you explain in simpler tamil or english terms: 
விளைவுகளைத் தாக்கும் முறையினால் தாக்குவதன் உண்மை நோக்கம் வெளிவருகிறது.

regards
rnkantan

(PS: i never expected this from the(n)mozhi where a thread is replied not pointwise but in generalities and personalities!)

தேமொழி

chưa đọc,
01:59:11 14 thg 3, 201714/3/17
đến மின்தமிழ்

On Monday, March 13, 2017 at 10:10:55 PM UTC-7, nkantan r wrote:

துவக்கம்/காரணம்  => விளைவு 
 
cause => effect 

causal effect

( like....Newton's third law is: For every action, there is an equal and opposite reaction)

தவறான செய்திகளை பரவவிட மேற்கொள்ளும் முயற்சியை சுட்டிக்காட்ட முழு உண்மையையும் முன்வைப்பது. (snopes.com  செய்யும் முயற்சி போல, இது ஒரு முக்கியமான சமூகத் தொண்டு).

சுபாவின் வரிகள்... "தற்போதைய சூழலில், வைதீக சாத்திரங்களைத் தமிழ்ச் சமூகத்தில் புகுத்தி அதன் வழி சமூகத்தில் ஏற்றத்தாழ்வினை   ஏற்படுத்திய மநு தர்ம சாஸ்திரம் ஏன் தமிழர்களுக்கான ஒரு நூல் அல்ல என்பதை ஆராய வேண்டிய அவசியம் எழுந்திருக்கின்றது."

அந்தக் கோணத்தில் பதிவிடப் படும் இழையில், 
i find there is a strong undercurrent to keep discussing manu smriti in this group  என்பது  மனுவை "தாக்குவதை" முதற்கொள்கையாக கொண்டதைக் கண்டு கொடுக்கப்படுவதாக பொருள் வருகிறது.

இதனை 
மனுவின் பிற்போக்கான கொள்கைகளை சுட்டிக் காட்டும் இழையில் கொடுத்தால்  மனுநீதியின் ஆதரவாளர் எனப் பொருள் வரும்.

இப்பொழுது  படியுங்கள் 

வாழைப்பழத்தில் ஊசிஏற்றுவது போலத் தந்திரமாக  நுழைக்கப் படும் அந்த நூல் ஒரு உயர்ந்த நூலல்ல, அதன் உண்மையான மறுபக்கம் என்ன என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ள பதிவுகளை நேரடியாகத் தாக்கி எதிர்ப்பைத் தெரிவிப்பதன் பின்னணி என்ன?

விளைவுகளைத் தாக்கும் முறையினால் தாக்குவதன் உண்மை நோக்கம் வெளிவருகிறது.

நீங்கள் சொல்வதை .... manu smiriti is a very very dated sanskrit text just as dated as many religious texts such as gita, koran or bible etc
 manu smiriti probably is in prominence because english and european indophiles took it across to show hinduism is barbaric compared to christianity

 என்பதை மனுவின் மேன்மை குறிக்கும் பதிவுகளிலோ, அல்லது விளக்கம் கேட்கும் பதிவுகளிலோ  கொடுத்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என எண்ணிப் பார்த்தேன். 

மனு தர்மம் பற்றி

On Tuesday, November 15, 2016 at 2:12:36 PM UTC-8, Dr.K.Subashini wrote:
 
நமது குழுமத்தில் இந்து சமய நூல்களை ஆராய்ச்சி செய்யும் பலர் இருக்கின்றீர்கள், 
மனுஸ்ம்ருதி / மனு தர்மம்... இந்த நூலுக்கும் இந்து சமயத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
மனு தர்மம் இந்து சமய நூலா?

மனு தர்மத்தை நான் வாசிக்கவில்லை, பார்த்ததில்லை என நினைத்து எனக்கு கருத்து சொல்ல வேண்டாம். என் இல்லத்தில் மனு தர்மம் தமிழில் ஒரு நூல் வைத்துள்ளேன். ஓரிரு முறை முழுமையாகப் படித்திருக்கின்றேன். 

என் கேள்வி இது இந்து சமய நூல்களில் ஒன்று என அடங்குகின்றதா?
ஆம் என்றால் எந்த வகையில்?

(note: this open ended) 

போன்ற சிறிய பதிவில் துவங்கி  (283 posts by 28 authors ஓடிய இழை) ஒரே ஒரு பதிவு கொடுத்தும் நீங்கள் பங்கேற்கவில்லையே ...என்று தோன்றிய காரணமே எனது பதிவில் உங்களைக் குறிப்பிட்டேன்.

அதைத் தவிர்த்ததுடன், இந்த உழையில்  "barbaric" (உங்கள் சொல்) elements என்று பட்டியலிடும்பொழுது,  அந்த உண்மையை சுட்டிக்காட்டுவதை நீங்கள்  விரும்பவில்லை என்ற தோற்றத்தைத் தருகிறது. 

..... தேமொழி

nkantan r

chưa đọc,
06:02:50 14 thg 3, 201714/3/17
đến மின்தமிழ்
 i am again forced here to write generally rather than to specific points

1) i dont think and didnot expect that one should interpret my sentence " i find there is a strong undercurrent to keep discussing manu smriti in this group;"  to mean that i am supporting manusmiriti and that i am opposing the points being raised by Dr subhashini;
1a)" i find there is a strong undercurrent to keep discussing manu smriti in this group  என்பது  மனுவை "தாக்குவதை" முதற்கொள்கையாக கொண்டதைக் கண்டு கொடுக்கப்படுவதாக பொருள் வருகிறது" ----  when i said discussing is equivalent to attack or criticize?
2) my intent in that sentence is very clear and my sentence "the reason for discussion seems to be the presumption that tamils were enlightened and without social differences (i dont want to use the word casteless) and they got corrupted by manu smiriti. (it is a misnomer to call it as manu dharma)
 the point i was making is dont start with a premise that there were no social differences in tamil speaking group and that all ills that are still continuing today all spring out in a book probably compiled in an alien language some 2000 years back
3) that is why i was surprised at the caption and the opening sentence of the post; my perception is that the book is not relevant to not only tamils but all indians (or hinduism practioners) of the current times.
4)again i dont think one can find fault with someone for not responding or writing in a thread and writing in another thread ( i never expected that i have to mark attendance in all threads and it is mandatory to participate :)
5) i am still vague about your accusation; you assumed i am attacking (விளைவுகளைத் தாக்கும் முறையினால்) . and you are attributing an intent (தாக்குவதன் உண்மை நோக்கம் வெளிவருகிறது) to that; well that is your right to presume and proceed accordingly;
6) as far as i am concerned it is a very dated text; and certainly current ills are not happening based on this; the ills are due to bad parents, bad teachers, bad community leaders and politicians. (well, when a husband beats a wife or a woman is degraded, they dont quote verse and song of any of the smiriti; they do it because their parents /elders/teachers didnot instill values in them!)
7) again i am at loss about the last sentence "barbaric" and "elements";  what i wrote is very clear; manu smiriti is never in vogue or practice among hindu rulers; rather yajnawalkya smiriti  was allegedly more widely used by the court purohits and pandits; simply because british / european indophiles first translated manusmiriti, it became the "face" of hinduism in continent and britain; i would even go the extent of saying that because ambedkar, who is considered as the shining light for all dalits, had the dahan of manu smiriti (as he considered it symbolic to the evils of hinduism), it got wider audience; otherwise i dont think any one cares what is said there!  ( actually i read there was a move to include in guiness records:manusmiriti as the book whose copies have been burnt more than of any other book in the history)

regards
rnkantan

தேமொழி

chưa đọc,
06:29:42 14 thg 3, 201714/3/17
đến மின்தமிழ்
தங்கள் கோணத்தை விளக்கியமைக்கு நன்றி திரு. rnkantan. 

இழையின் பதிவைப் படித்த பொழுது, உங்களுக்குத் தோன்றிய கருத்தைப் பகிர்ந்து கொண்டது போலவே, உங்கள் பதிவைப் படித்த பொழுது எனக்குத் தோன்றிய கருத்தையும் நான் பகிர்ந்து கொண்டேன். 

பதிவிடுபவர்  பதிவிடும்   கருத்துக்கள் ஒன்றைக் குறிப்பிட, அதற்குக்  கருத்து சொல்ல விரும்பியவர் கூறியது  அதனை  ஒட்டாது அமைவதை இழையில் பதிவான கருத்துக்கள்  காட்டுகின்றன. 
என் கருத்தைப் பொருட்படுத்தி விளக்கமளித்தற்கு நன்றி.

..... தேமொழி

Suba

chưa đọc,
07:50:38 18 thg 3, 201718/3/17
đến மின்தமிழ், Subashini Kanagasundaram
பதிவு 3.

எனது கடந்த பதிவில் மநு தர்ம சாஸ்திரம் நூலில் உள்ள ஒரு சுலோகத்தைக் குறிப்பிட்டிருந்தேன். அந்த சுலோகத்தின் ஒரு வாசகம் எனக்கு வேறு  ஒரு கோணத்திலான சிந்தனையை எழுப்பியது.

சுலோகம் 
2.32 பிராம்மனனுடைய பெயர் மேன்மையைக் குறிக்கும் சர்மன், ஷத்திரியனுக்குப் பலத்தைக் குறிக்கும் வர்மன், வைசியனுக்கு வளத்தைக் குறிக்கும் பூபதி, நாலாமவனுக்குப் பணிவிடையைக் குறிக்கும் தாசன் என்றிவ்வாறு அவரவர் பெயர்களுடன் பட்டங்கள் வழங்கி வர வேண்டியது.

"தாசி" என்ற சொல் தன் உடலை விற்று வாழும் பெண்களைக் குறிப்பிடுவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றது. இதன் ஆண்பாலான தாசன் எனும் சொல்லோ  மநுவின் பரிந்துரைப்படி நான்காம் வருணத்தவரான சூத்திரர் வைத்துக் கொள்ள வேண்டிய பெயர் அடையாளமாகச் சொல்லப்படுகின்றது. சரி.. ஏன் தாசி எனும் பெயர் தன் உடலை விற்று வாழும் பெண்களைக் குறிப்பிடுவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றது?  ஏன் இத்தகைய பெண்களுக்கு சர்மனுக்கு பெண்பாலான சர்மி என்றோ, வர்மனுக்கு பெண்பாலான வர்மி என்றோ பூபதிக்கு பெண்பாலான ஏதோவொன்றோ வழக்கில் இல்லை?

சுபா

nkantan r

chưa đọc,
09:07:54 18 thg 3, 201718/3/17
đến மின்தமிழ்
disclaimer (attention to Mm. Themozhi and Dr Subhashini); dont intrepet my explanations or posts as supporting or upholding manusmiriti)

1) you are confusing the tamil use (that too colloquially) of word தாசி  with sanskrit word dasi. 
2) daasah or daasi means servant or slave

my major issue with manusmiriti is the compartmentalisation of four groups; like four different people put in four different rooms without any connection or four different storeys with no staircase! one cannot move out or move out; again there is no (direct) explanation how they arrived in these rooms!

well this book is bizarre

regards
rnkantan

Seshadri Sridharan

chưa đọc,
04:34:52 19 thg 3, 201719/3/17
đến mintamil, p...@giasmd01.vsnl.net.in, Prakash Sugumaran, jsthe...@gmail.com, Banukumar Rajendran, N D Llogasundaram, செல்வன், Mohanarangan V Srirangam, வேந்தன் அரசு, dorai sundaram, Raju Saravanan, Jalasayanan Chellappa, Mukunthan Pathmanesan, Krishnan S, nkantan r, Anbu Jaya, திருத்தம் பொன்.சரவணன், rajalakshmi paramasivam, yesura...@gmail.com, Shrinivasan T, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Innamburan S.Soundararajan, Kalairajan Krishnan, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, Aravindan Neelakandan, Rathinam Chandramohan, Neduchezhian T. Chezhian, S NEELAKANTAN, Vetha Nayagy, ts.m...@gmail.com, நா. கணேசன், Gowthama Sanna, Nagarajan Vadivel, Parvathy ramanathan, Subashini Tremmel, Jay Jayabarathan, ipohs...@gmail.com
2017-03-18 17:20 GMT+05:30 Suba <ksuba...@gmail.com>:
பதிவு 3.

எனது கடந்த பதிவில் மநு தர்ம சாஸ்திரம் நூலில் உள்ள ஒரு சுலோகத்தைக் குறிப்பிட்டிருந்தேன். அந்த சுலோகத்தின் ஒரு வாசகம் எனக்கு வேறு  ஒரு கோணத்திலான சிந்தனையை எழுப்பியது.

சுலோகம் 
2.32 பிராம்மனனுடைய பெயர் மேன்மையைக் குறிக்கும் சர்மன், ஷத்திரியனுக்குப் பலத்தைக் குறிக்கும் வர்மன், வைசியனுக்கு வளத்தைக் குறிக்கும் பூபதி, நாலாமவனுக்குப் பணிவிடையைக் குறிக்கும் தாசன் என்றிவ்வாறு அவரவர் பெயர்களுடன் பட்டங்கள் வழங்கி வர வேண்டியது.

"தாசி" என்ற சொல் தன் உடலை விற்று வாழும் பெண்களைக் குறிப்பிடுவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றது. இதன் ஆண்பாலான தாசன் எனும் சொல்லோ  மநுவின் பரிந்துரைப்படி நான்காம் வருணத்தவரான சூத்திரர் வைத்துக் கொள்ள வேண்டிய பெயர் அடையாளமாகச் சொல்லப்படுகின்றது. சரி.. ஏன் தாசி எனும் பெயர் தன் உடலை விற்று வாழும் பெண்களைக் குறிப்பிடுவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றது?  ஏன் இத்தகைய பெண்களுக்கு சர்மனுக்கு பெண்பாலான சர்மி என்றோ, வர்மனுக்கு பெண்பாலான வர்மி என்றோ பூபதிக்கு பெண்பாலான ஏதோவொன்றோ வழக்கில் இல்லை?

சுபா

 தாசன் என்றால் அடிமை. அதன் பெண் பால் தாசி. போரில் பிடித்து வரப்பட்ட பெண்கள் பலர் வீட்டு அடிமைகளாக ஆசை நாயகிகளாக பயன் படுத்தப்பட்டனர். ஆரிய மரபு ஆண் மரபு அதனால் சருமன், வருமன், பூபதி என்பன ஆண்களுக்கு மட்டுமே உண்டானது. ஆரியத்தில் பெண் எப்போதுமே அடிமை என்பதால் அப்பெயர்கள் பெண்களுக்கு இல்லை. 

The system of four varńas was simply nominal at the time of the Mahábhárata (3,500 years ago), as it was in the Vaedika age. The system of varńas was only due to war purposes in the Vaedika period. In the Mahábhárata age this system got somewhat strengthened. The worldly father of Lord Krśńa was Vasudeva, a popular ksatriya leader, being an army commander. But Lord Krśńa's guardians, Nanda and Upananda, the cousins of Vasudeva, were known as gopa yadava (milkmen). His worldly father, Vasudeva, was a kśatriya by profession. His guardian, Nanda, was a gopa (vaeshya); and his uncle, Maharsi Garga, was a vipra, because he adopted a life of scriptural study, contemplation and meditation. There was no rigidity in the caste system. Some time later the rigidity came into being.

The leader of the Mahábhárata was neither the Pandavas nor the Kaoravas, but Lord Krśńa Himself, both directly and indirectly. It was all foreseen by Maharsi Garga. I will say something more about Maharsi Garga some time later. It was Maharsi Garga himself who named the child Krśńa: “Krśńa náma rákhen Garga dhyánete jániyá” – in dhyána he realized that Puruśottama was to take birth, and he thought it proper to name the child Krśńa.

3 August 1967, Ranchi, Published in:Discourses on the Mahábhárata, chapter: The Role of Lord Krsna

We apprehend phonic as well as alphabetical difference quite accurately due to these vibrational differences. Short, long or galloping intonations are merely degrees of vibrational differences. The differences in Svaravarńas (vowels) and Vyaiṋjanvarńas (consonants) are also totally dependent on the difference in their vibrational characteristics. In the Saḿskrta language, the letters of the alphabet are called Varńas or colours and all the consonants end in the first vowel “a”. So you see that Varńa-Paricaya (the first book of the alphabet) literally means “acquaintance with colour” and this colour is, of course, the colour vibration. The Giitá also says that the four Varńas or castes are evolved from the differences of attributes of activities. The differences in attributes account for the differences in activities and the differences in activities account for the differences in colours. With the change of attributive activity, the colour will also change. Hence the distinction of Varńa or caste in social life is not an unchangeable or inviolable institution. The varńa has evolved according to one's activities and by changing one's activities one can change the caste.

Phálgunii Púrńimá 1956 DMC, Published in: Ananda Marga Ideology and Way of Life in a Nutshell Part 4, chapter: Vibration Form and Colour.

Twice Born
17 December 1971 morning, Patna

Janmaná jáyate shúdrah saḿskárát dvija ucyate;
Veda pát́hát bhavet viprah Brahma jánáti bráhmańah.

[By birth everybody is a shúdra, i.e., with an animal-like mentality. Going through a renewal ceremony, the person becomes a dvija, i.e., expresses the desire to become human. By studying scriptures, a person next becomes a vipra, an intellectual. And finally, when the person realizes Brahma (through psycho-spiritual initiation), he or she becomes a bráhmańa.]

You know about vipra, kśatriya, vaeshya and shúdra. Vipra means an intellectual who helps the society with the help of his or her intellect, who teaches others, guides others; he or she is a vipra. A kśatriya protects the society, protects the weak. How? With his or her valour, with his or her strength. A kśatriya utilizes his or her strength and courage in protecting the society. And vaeshya means – ? [to a sádhaka] You – vaeshya means – ?

[Sádhaka replies, “Capitalist.”]

Vaeshya means producer, manufacturer. That is, agriculturists (a farmer is an agriculturist), factory labourers, technicians – they are all vaeshyas. And shúdra – the unskilled labourer, or one who does nothing, or wastes his or her time, or depends on others. They are all shúdras.

Now you see, so far as mental colour is concerned – according to the mental tendency, the mind has colour, and that colour is according to the wavelengths of thoughts. For a vipra it will be whitish, for a kśatriya reddish, for a vaeshya yellowish, and for a shúdra blackish. Black here means not the colour of the skin, not the complexion, you know, but the mental colour. Actually it concerns – what? Mental colours. And one may change one's mental colour by dint of one's sádhaná.

There are certain misunderstandings in India regarding these shúdras. Some people used to think that those non-Aryan people – Austrics, Mongoloids, and the Negroid population of India, Austrico-Negroid – that they were the shúdras because of their black skin. No, it's not a matter of black skin, but of a black mind. The son of an intellectual may be a shúdra if he is mentally black. A person may be a vipra even if he or she is physically black.

Janmaná jáyate shúdrah [“By birth, one is a shúdra”]. A newborn babe just after taking birth is a shúdra. All newborn babes are shúdras, because they do nothing and they depend solely on their parents. So a babe is a shúdra – certainly a shúdra – depending on the mother.

17 December 1971 morning, Patna, Published in: Ánanda Vacanámrtam Part 30, chapter: Twice Born

Suba

chưa đọc,
17:16:19 23 thg 3, 201723/3/17
đến மின்தமிழ், Subashini Kanagasundaram
பதிவு 4

தற்போதைய சூழலில், வைதீக சாத்திரங்களைத் தமிழ்ச் சமூகத்தில் புகுத்தி அதன் வழி சமூகத்தில் ஏற்றத்தாழ்வினை   ஏற்படுத்திய மநு தர்ம சாஸ்திரம் ஏன் தமிழர்களுக்கான ஒரு நூல் அல்ல என்பதை ஆராய வேண்டிய அவசியம் எழுந்திருக்கின்றது.   அந்த வகையில் தமிழில் திருலோக சீதாராம் அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டு ஆர்.கே.எல். பிரிண்டர்ஸ் அச்சகத்தின் பதிப்பாக வந்த தமிழ் மொழி பெயர்ப்பிலிருந்து சில வாசகங்களை இந்தப் பதிவில் தொடர்வோம்.

1.135 பத்தே வயதுடையவனாயினும் அந்தணன் தந்தைக்குச் சமமாகவும், நூறு வயதாகிய ஷத்திரியனைப் பிள்ளையாகவும் மதிக்க வேண்டும்.

இந்த சுலோகம் செய்து வைத்திருக்கும் அபத்தம் மிக அதிகம் தான். சிறியவர்களாகினும் கூட அந்தண சமூகத்தவர்களை சாமி என அழைக்கும் ஏனைய சமூகத்தினர் உருவாக இத்தகைய வாசகமே அடித்தளத்தை அமைத்திருக்கின்றது. இந்த நிலை மாற கடந்த ஒரு நூற்றாண்டில் நிகழ்ந்த மாற்றங்கள் தான் எத்தனை எத்தனை? ஆனாலும் கூட இன்னும் பெருவாரியாக தமிழ்ச்சமூகத்துச் சிந்தனையில் இந்தக் கருத்து ஆழமாகப் புதைந்து தான் இருக்கின்றது.   குறிப்பாக கிராமப்புரங்களில்.

1.213 தங்கள் அலங்காரத்தில் மனிதரைக் கவரும் தன்மை பெண்களின் இயல்பாகையால் அறிந்தோர் பெண்களிடம் கவனக்குறைவாக நடந்து கொள்ளமாட்டார்கள்.

1.214.  புலன்களை அடக்கியவாயினும், அறிவிலியாயினும், அவர்களைத் தங்களது தொடர்பால் காமக் குரோத செய்வர் மாதர்.

1.215 தாய் தங்கை, மகள் ஆகியோராயினும்,  அவர்களுடன் தனித்து ஒன்றியமாகக் கூடாது. ஏனெனில் பொறி புலன்களின் கூட்டமானது தம் வழியே செயற்படுவதில் ஊக்கமுடையன. தெரிந்தவனையும் அவை தம்பால் அடிமைப்படுத்தி விடும்..

பெண்களை இவ்வளவு தரக்குறைவாகப் பேசும் இப்பகுதியை பிரச்சாரம் செய்து பெண்களை அறிவற்றவர்களாகக் காட்டவே மநு தர்மம் முயற்சிக்கின்றது. தாய் தந்தை மகள் கூட தனித்து இருத்தல் தவறு எனச் சொல்லும் மநு, பெண்ணை உயிருள்ள ஒரு மனிதராகப் பார்க்கத் தவறி ஒரு உடலாக மட்டுமே பார்க்கும் தர்மத்தை வலியுறுத்தி இருப்பதை இங்கு காண்கின்றேன். 

இத்தகைய தரக்குறைவான வாசகங்கள் இருந்தும் இந்த நூலை தர்ம சாத்திரம் என சிலர் பிரச்சாரம் செய்கின்றனர் எனும் போது அதைப்பற்றி தெரிந்து கொள்ளாமல் மேலோட்டமாக ஏதோ பேசுவதைத் தவிர்த்து, இவற்றை வாசித்து தெரிந்து கொண்டு, இந்த நூல் தமிழர் பண்பாட்டுக்கு உகந்ததல்ல எனச் சொல்லி இந்த நூலை புரிதலுடன்  ஒதுக்கி வைத்துப் போக வேண்டியது நம் கடமை.

தொடரும்..
சுபா

தேமொழி

chưa đọc,
17:39:36 23 thg 3, 201723/3/17
đến மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com

On Thursday, March 23, 2017 at 2:16:19 PM UTC-7, Dr.K.Subashini wrote:

1.213 தங்கள் அலங்காரத்தில் மனிதரைக் கவரும் தன்மை பெண்களின் இயல்பாகையால் அறிந்தோர் பெண்களிடம் கவனக்குறைவாக நடந்து கொள்ளமாட்டார்கள்.

1.214.  புலன்களை அடக்கியவாயினும், அறிவிலியாயினும், அவர்களைத் தங்களது தொடர்பால் காமக் குரோத செய்வர் மாதர்.

1.215 தாய் தங்கை, மகள் ஆகியோராயினும்,  அவர்களுடன் தனித்து ஒன்றியமாகக் கூடாது. ஏனெனில் பொறி புலன்களின் கூட்டமானது தம் வழியே செயற்படுவதில் ஊக்கமுடையன. தெரிந்தவனையும் அவை தம்பால் அடிமைப்படுத்தி விடும்..

0/100 மதிப்பெண் கொடுக்கவும் 

ருத்ரா இ.பரமசிவன்

chưa đọc,
03:08:08 24 thg 3, 201724/3/17
đến மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com
ஞான ஒளி
=============================================ருத்ரா

கடவுள் என்றால் என்ன‌
என்ற கேள்வி தான்
இன்னும் இவர்களின்
பாஷ்யங்களில் 
தொங்கிக்கொண்டிருக்கும்
அறிவின் தொப்பூள் கொடி.
ஆனால்
அதை அறுத்து எறியும் விதமாய்
இவன் தான் கடவுள்
இவன் தான் 
நான்கு வர்ணம் சொன்னான்.
நான்காவது வர்ணம்
மூன்றின் கீழ் நசுங்கிக்கிடப்பதே
கடவுள் வேதம் எனச்சொல்வது 
அநாகரிகங்களின்
அயோக்கியத்தனங்களின்
சிகரம் ஆகும்.

அதுவே சாஸ்திரம் ஆகி
மானுடத்தை படுகொலை செய்யவந்தது.
மானுடத்தை கசாப்பு செய்ய‌
இத்தனை சமஸ்கிருத வாந்தியெடுப்புகளா?

வேதங்கள்
அழகிய வாக்கியங்களாய் தான்
இருப்பதாய்
கூச்சல் போடுகிறார்கள்!
ஆனால்
அதற்குள் இருப்பது
"அந்த தாஸர்களை வெட்டிகொல்லு"
ஓ! இந்திரா!
இந்த சோமபானத்தைக்குடித்து
சுருதியேற்றிகொள்.
அந்த "தாஸர்கள் கட்டிய அணைகளை அடித்து நொறுக்கு"
என்ற‌
கசாப்புகளின் வெட்டரிவாள்கள் தான்.
வேதங்கள் ஒலிக்கும் முன்பேயே
இருந்த மண்ணின் மைந்தர்களை
நோக்கிப் பாயும் நச்சு வரிகளே
வேதாந்த பாஷ்யங்கள்.
மனு தர்மம் சொல்லும் அந்த நான்காம் வர்ணமே
தாஸன் என்பது.
அதற்கும் கீழே இருப்பவன் "பஞ்சமன்"
அவன் பூமியில் இருக்கவே கூடாது
என்பது வேதங்களின் சாரம்.
அதன் அடியில் பூத்த‌
நாய்க்குடைக்காளான்களே
மனுதர்ம சாஸ்திரங்கள்.

ஆனாலும் பாருங்கள்
இந்த தந்திர வரலாற்று சாகசங்களை.
தமிழர்கள் இன்றும்
இந்த மந்திரங்களைக்கொண்டு
தங்களையே சிரச்சேதம் செய்துகொள்ளும்
மடமையில் தான்
மக்கி அழிந்து கொண்டிருக்கிறார்கள்.
அதனால் தான்
தமிழ் 
மொழியாக இருப்பதை விட‌
ஒரு உளியாக இருக்கவேண்டும்.
இந்த மரணப்பாறைகளை
வெட்டிப்பிளக்கும்
வழியும் அதில் இருக்கவேண்டும்.
சமுதாய அறிவியலின்
ஞான ஒளியும் அதில் தெறிக்கவேண்டும்!
தமிழே! 
பொங்கும் சுடராய்
எங்கும் பரவுக!

============================================

Singanenjam Sambandam

chưa đọc,
03:13:05 24 thg 3, 201724/3/17
đến mint...@googlegroups.com
"சமுதாய அறிவியலின் ..........தமிழே எங்கும் பரவுக '  புரட்சிக் கவிஞரின் பாடலை படிப்பது போல் உள்ளது.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Suba

chưa đọc,
05:28:08 24 thg 3, 201724/3/17
đến mintamil, Subashini Kanagasundaram
2017-03-24 6:05 GMT+01:00 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:
1.215 தாய் தங்கை, மகள் ஆகியோராயினும்,  அவர்களுடன் தனித்து ஒன்றியமாகக் கூடாது. ஏனெனில் பொறி புலன்களின் கூட்டமானது தம் வழியே செயற்படுவதில் ஊக்கமுடையன. தெரிந்தவனையும் அவை தம்பால் அடிமைப்படுத்தி விடும்..

பெண்களை இவ்வளவு தரக்குறைவாகப் பேசும் இப்பகுதியை பிரச்சாரம் செய்து பெண்களை அறிவற்றவர்களாகக் காட்டவே மநு தர்மம் முயற்சிக்கின்றது. தாய் தந்தை மகள் கூட தனித்து இருத்தல் தவறு எனச் சொல்லும் மநு, பெண்ணை உயிருள்ள ஒரு மனிதராகப் பார்க்கத் தவறி ஒரு உடலாக மட்டுமே பார்க்கும் தர்மத்தை வலியுறுத்தி இருப்பதை இங்கு காண்கின்றேன். 

தனித்து இருத்தல் தவறு என்று சொல்ல வில்லை மாறாக தனித்து இருக்க வேண்டும் என்று தான் சொல்லுகிறது. நீங்கள் தவறாக படித்து தவறாக புரிந்து கொ ண்டுள்ளீர்கள் சுபா.தாய் தங்கை மக்கள் என்றாலும் தனித்து தான் இருக்க வேண்டும் என்று தான் சொல்லப்பட்டுள்ளது. 

​சேசாத்ரி -  இப்படியெல்லாம் இருப்பதை மாற்றி வேறு வகையில் விளக்கம் கூறி மன சாந்தி அடைந்து கொள்ளும்படி யார் அழுதார்கள்? இருப்பதை இருப்பதாகப் பார்க்க தைரியம் முதலில் நமக்கு வேண்டும்!!

சுபா​

Seshadri Sridharan

chưa đọc,
05:32:04 24 thg 3, 201724/3/17
đến mintamil, தேமொழி, Subashini Tremmel, Innamburan Innamburan
1.215 தாய் தங்கை, மகள் ஆகியோராயினும்,  அவர்களுடன் தனித்து ஒன்றியமாகக் கூடாது. ஏனெனில் பொறி புலன்களின் கூட்டமானது தம் வழியே செயற்படுவதில் ஊக்கமுடையன. தெரிந்தவனையும் அவை தம்பால் அடிமைப்படுத்தி விடும்..

பெண்களை இவ்வளவு தரக்குறைவாகப் பேசும் இப்பகுதியை பிரச்சாரம் செய்து பெண்களை அறிவற்றவர்களாகக் காட்டவே மநு தர்மம் முயற்சிக்கின்றது. தாய் தந்தை மகள் கூட தனித்து இருத்தல் தவறு எனச் சொல்லும் மநு, பெண்ணை உயிருள்ள ஒரு மனிதராகப் பார்க்கத் தவறி ஒரு உடலாக மட்டுமே பார்க்கும் தர்மத்தை வலியுறுத்தி இருப்பதை இங்கு காண்கின்றேன். 

தனித்து இருத்தல் தவறு என்று சொல்ல வில்லை மாறாக தனித்து இருக்க வேண்டும் என்று தான் சொல்லுகிறது. நீங்கள் தவறாக படித்து தவறாக புரிந்து கொ ண்டுள்ளீர்கள் சுபா.தாய் தங்கை மக்கள் என்றாலும் தனித்து தான் இருக்க வேண்டும் என்று தான் சொல்லப்பட்டுள்ளது. 

மனு நூல் இந்நாட்டின் சட்டமாக இருந்ததில்லை. தீர்ப்பு கூறினார் மனு நூலைக் கற்றவர் அல்லர்.

மாரக்கல் 

Suba

chưa đọc,
05:35:24 24 thg 3, 201724/3/17
đến மின்தமிழ், Subashini Kanagasundaram
2017-03-24 8:08 GMT+01:00 ருத்ரா இ.பரமசிவன் <ruthra...@gmail.com>:
ஞான ஒளி
​..
அதனால் தான்
​​
தமிழ் 
மொழியாக இருப்பதை விட‌
ஒரு உளியாக இருக்கவேண்டும்.
இந்த மரணப்பாறைகளை
வெட்டிப்பிளக்கும்
வழியும் அதில் இருக்கவேண்டும்.
சமுதாய அறிவியலின்
ஞான ஒளியும் அதில் தெறிக்கவேண்டும்!
தமிழே! 
பொங்கும் சுடராய்
எங்கும் பரவுக!

​​
​//
தமிழ் 
மொழியாக இருப்பதை விட‌
ஒரு உளியாக இருக்கவேண்டும்.//

ஆகா.. வீரம் தெரிக்கின்றது இந்த வார்த்தைகளில்.

சமுதாய அறிவியலின் ஞானம் பொங்க வேண்டும். இதுவே எனது எதிர்பார்ப்பும்.

அருமையான இக்கவிதையை மின்தமிழ் மேடையில் இணைக்கப் பரிந்துரைக்கின்றேன்.

சுபா​

தேமொழி

chưa đọc,
06:03:11 24 thg 3, 201724/3/17
đến மின்தமிழ், ksuba...@gmail.com
என்ன இப்படியெல்லாமா ஒரு நீதி/சமய  நூல் சொல்கிறது என்று வியந்து பார்த்தால் , பொருள் விளக்கம் தருவதில்  மற்றும் சில முறைகளை சொல்லும் வழக்கமுண்டு...
மறை பொருளும் தத்துவங்களும் என்று விளக்கம் கொடுத்து   படுத்தும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல ...
  • இந்த நூலை இப்படி படிக்க வேண்டும்... ஒவ்வொரு அத்தியாயத்தையும் அப்படி அப்படியே படிக்க வேண்டும்.  மொத்தமாக தொடர்பு படுத்தக் கூடாது... 
  • ஞான, பக்தி, கர்மம்,  என்று ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியாகப் படிக்க வேண்டும். 
  • இல்லாவிட்டால் அவை கூறும் தத்துவங்களின் மறை பொருள் புரியாது.
  • முரண்கள் என்று கூறினால் உனக்கு மறைபொருள் புரியவில்லை, அவற்றை நீ முறையாகக் குரு மூலம்  கற்றுத்  உணர வேண்டும்
  • நீ மூல நூலைப் படித்தாயோ? சமஸ்கிரதத்தில் இருந்து நேரே படித்துப் பொருள்  உணரவேண்டும்
  • வெள்ளைக்காரர்கள், ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த பொழுது கலாச்சாரம் புரியாததால் மாற்றிப் பொருள் கொண்டு விட்டார்கள் 
  • அந்த மொழிபெயர்ப்பின் அடிப்படையில் உன் மொழியில் மீண்டும் மொழி பெயர்க்கப்படும் பொழுது முற்றிலும் மாறான பொருள் வரும்
  • இவ்வளவு மோசமாகவா இருக்கிறது.  நூலின் பிற கருத்துகளுடன் முரண் என்றா வருகிறது?  அது இடைச்செருகல் என்பது தெரிகிறது 
இன்னமும் கூட பல சப்பை கட்டுகள் இருக்கின்றன 

..... தேமொழி

சுபா​

செல்வன்

chưa đọc,
09:24:07 24 thg 3, 201724/3/17
đến mintamil, Subashini Kanagasundaram

2017-03-24 4:35 GMT-05:00 Suba <ksuba...@gmail.com>:
சமுதாய அறிவியலின் ஞானம் பொங்க வேண்டும். இதுவே எனது எதிர்பார்ப்பும்.

அருமையான இக்கவிதையை மின்தமிழ் மேடையில் இணைக்கப் பரிந்துரைக்கின்றேன்.

ருத்ரா இ.பரமசிவன்

chưa đọc,
03:05:24 6 thg 4, 20176/4/17
đến மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com
மிக்க நன்றி திருமிகு.சுபாஷிஷிணி அவர்களே

அன்புடன் ருத்ரா

ருத்ரா இ.பரமசிவன்

chưa đọc,
03:06:53 6 thg 4, 20176/4/17
đến மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com
.

மிக்க நன்றி திரு செல்வன் அவர்களே
Trả lời tất cả
Trả lời tác giả
Chuyển tiếp
0 tin nhắn mới