மாலும் குறளாய் வளர்ந்துஇரண்டு மாணடியால்
ஞாலம் முழுதும் நயந்தளந்தான் - வாலறிவின்
வள்ளுவரும் தம்குறள்வெண் பாவடியால் வையத்தார்
உள்ளுவவெல்லாம் அளந்தார் ஓர்ந்து
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை
தேவதாதிதிப்ருத்யாநாம் பித்ரூணாம் ஆத்மநஸ்ச ய: |
ந நிர்வபதி பஞ்சாநாம் உச்ச்வஸந்ந ஸ ஜீவதி | | [3:72]
[தேவதா - அதிதி - ப்ருத்யாநாம் பித்ரூணாம் ஆத்மநஸ்ச ய:]
(தென்புலத்தார் - பிதர:
தெய்வம் - தேவதா
விருந்து - அதிதி
தான் - ஆத்மந:
ஒக்கல் - ப்ருத்யா: [பணியாளர்])
----------------------------------------------------
யதா² க²நந் க²நித்ரேண நரோ வார்யதிகச்ச²தி |
ததா² குருகதாம் வித்யாம் ஶுஶ்ரூஷுரதிகச்ச²தி ||
[2:218]
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றணைத் தூறும் அறிவு.
[396]
[கநநம் - தோண்டுதல், வாரி - நீர், அதிகமநம் - அடைதல்]
------------------------------------------------
அரக்ஷிதா க்ருʼஹே ருத்தா: புருஷேராப்தகாரிபி: |
ஆத்மாநமாத்மநா யாஸ்து ரக்ஷேயுஸ்தா: ஸுரக்ஷிதா: ||
[9:12]
[ ஆத்மாநம் ஆத்மநா - தன்னைத் தானே]
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை. [57]
---------------------------------------
தூய்மை -
அத்பி: காத்ராணி ஶுத்யந்தி,
மந: ஸத்யேந ஶுத்யதி |
[தர்ம சாஸ்த்ரம்]
[காத்ரம் - உடல்; அத்பி: நீரால், ஸத்யேந - வாய்மையால்]
புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.
[அறத்துப்பால் :298]
-------------------------------------------------------------
மறை ஓத்தைக் காட்டிலும் ஒழுக்கமே உயர்ந்தது என மனுவும், வள்ளுவரும் ஒரே குரலில் பேசுவர் -
आचाराद्विच्युतो विप्रो न वेदफलं अश्नुते ।
आचारेण तु संयुक्तः सम्पूर्णफलभाग्भवेत् ।।
ஆசாராத்விச்யுதோ விப்ரோ ந வேதபலம் அஶ்நுதே |
ஆசாரேண து ஸம்யுக்த: ஸம்பூர்ணபலபாக்பவேத் | |
[1:109]
[ஆசாராத் விச்யுத: விப்ர: வேதபலம் ந அச்நுதே|]
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.
மணக்குடவர் உரை:
பிராமணன் வேதத்தினை ஓதி மறந்தானாயினும் பின்னும் ஓதிக் கொள்ளலாம்: ஒழுக்கங் குறையுமாயின் குலங்கெடும். இஃது ஒழுக்கம் கல்வியிலும் வலிதானவாறு கூறிற்று.
[மணக்குடவர் சமணர்]
---------------------------------------------------------------------------
कृषिगोरक्षं आस्थाय जीवेत् “ "க்ருஷி - கோரக்ஷம் ஆஸ்தாய ஜீவேத்” என்று மநு ஸ்ம்ருதி பத்தாம் அத்யாயத்தில் சொல்லப்பட்டுள்ளது. தர்ம சாஸ்த்ரம் வேளாண்மையை ஆதரித்துள்ளது;
குறளில் உழுதொழிலுக்கென்றே ஓர் அதிகாரம்.
-----------------------------------------------------------------------------
यथोद्धरति निर्दाता कक्षं धान्यं च रक्षति ।
तथा रक्षेन्नृपो राष्ट्रं हन्याच्च परिपन्थिनः । । ७.११०
யதோத்தரதி நிர்தாதா கக்ஷம் தாந்யம் ச ரக்ஷதி |
ததா ரக்ஷேந்ந்ருபோ ராஷ்ட்ரம் ஹந்யாச்ச பரிபந்திந : || 7.110||
அந்வயம் -
யதா நிர்தாதா கக்ஷம் உத்தரதி, தாந்யம் ரக்ஷதி, ததா ந்ருப: பரிபந்திந: ஹந்யாந் ராஷ்ட்ரம் ரக்ஷதி |
[களை பறிப்பவர் களைகளைக் களைந்து விளையைக் காப்பதுபோல், மன்னனும் தீயோரை ஒறுத்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும்.]
(கக்ஷம் - களை, தாந்யம் - கூழ், கூலம், ந்ருப: - அரசன்)
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்
[குறள் 550]
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
குறைந்தது நானாவது படித்து பயன் பெறுவேன்.
--
திரு. தேவ் ஐயா அவர்களுக்கு நன்றி,
“”வள்ளுவர் செய் திருக்குறளை
மருவற நன்குணர்ந்தவர்கள்
உள்ளுவரோ மனுவாதி
ஒரு குலதிற்கொரு நீதி.”
என்று பார்த்திருக்கிறேன். அதே மனு சாத்திரத்தில் இருந்து நல்ல கருத்துகளை மேற்கோள்களாக எடுத்து அவற்றை திருக்குறளோடு ஒப்புமை படுத்தி காட்டியிருப்பது வித்தியாசமாக உள்ளது. தொடருங்கள். மீண்டும் நன்றி.
//மற்ற மதங்களின் தற்கால நிலைமையை அலசுங்களேன். சனாதன தர்மம் மட்டும் தான் சீர்திருத்தப்பட வேண்டுமா? மற்றவர்கள் ஒரு பொருட்டு இல்லையா?இல்லை அச்சமா? பிள்ளையார் கோயில் ஆண்டியை போய் திருப்பாச்சேத்தி அரிவாளால் வெட்டலாம்.அதான்.//
“”வள்ளுவர் செய் திருக்குறளை
மருவற நன்குணர்ந்தவர்கள்
உள்ளுவரோ மனுவாதி
ஒரு குலதிற்கொரு நீதி.”
என்று பார்த்திருக்கிறேன். அதே மனு சாத்திரத்தில் இருந்து நல்ல கருத்துகளை மேற்கோள்களாக எடுத்து அவற்றை திருக்குறளோடு ஒப்புமை படுத்தி காட்டியிருப்பது வித்தியாசமாக உள்ளது. தொடருங்கள். மீண்டும் நன்றி.
இப்பகுதியில் பண்டை ஆசிரியர் என்று கெளடலீயர் குறிப்பது வள்ளுவரையே என்றெண்ணுதல் தவறாகாது. இருக்கு வேதத்திற்கு ஆய்வுரை எழுதியவரும் வேதநூல் விற்பன்னருமான சுந்தர்ராஜ் என்பவர் வடநூல்கள் பண்டை ஆச்சாரியார்கள் என்று சுட்டுவது தமிழ் அறிஞர்களையே என்று குறிப்பிடுவார்.
அமைச்சர் இயல்பு கூறும்போது கெளடலீயம் “அரசனைச் சார்ந்தவருடைய வாழ்க்கை சூழலைச் சேர்ந்தொழுகுதல் போன்றதெனக் கூறுப. தீ ஒரு பகுதியையாதல், ஓங்கின் உடல் முழுமையுமாதல் கொளுத்தும் அரசனோவெனின் மக்கள் மனைவியருடன் ஒருவனைச் சேர்த்து அழிக்கவோ ஆக்கவோ வல்லவனாவான்” (ப. 701).
என்றுரைக்கும். திருக்குறள்,
இகல்வேந்தர்ச் சேர்ந் தொழுகுவார் (குறள் 691)
என்று சொல்லழகும் பொருளழகும் தோன்றக் கூறியுள்ள கருத்தே கெளடலீயத்தில் அமைச்சர்க்குக் கூறப்படும் எச்சரிக்கையாக இடம் பெறுகிறது. வள்ளுவர்,
இதற்குரிய சமஸ்கிரத மூலத்தை..
தேவ்