"யா" என்ற நூல்

151 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Oct 21, 2022, 4:32:50 AM10/21/22
to வல்லமை, hiru thoazhamai
ஞானம் என்பது தமிழ்ச்சொல் என்று, தனது "யா" என்ற நூலில் நிறுவுகிறார் அருளியார். அவரது ஆய்வினை சுருக்கமாக இங்கே பதிவிட்டுள்ளேன்.
யா: கருமைக் கருத்து மூலவேர்
யா>ஞா [யகர - ஞகரத் திரிபு]
யா>ஞா>ஞா+டு> ஞாடு>ஞாடு+அம்>(ஞாடம்)>ஞாட்டம்>நாட்டம்
ஞாடு>நாடு>நாடு+தல்>நாடுதல்
நாட்டம் = கண்
(காண்க : மலைபடு 46, புறம் 62:16)
நாட்டம் = (கண்)>(பார்வை)>நோக்கம்
"நாட்டம் இரண்டும் அறிவுடம் படுத்தற்கு" (தொல்.பொருள்.களவி:5)
நாட்டம்>நோக்கம் =ஆராய்ச்சி
(காண்க : தொல்.பொருள் : 3:33;2, தொல்.சொல்.குற்:78-5, புறம் 35-14)
நாட்டம்>(கண்)>(பார்வை)> (நோக்கம்)>(ஆராய்ச்சி)>கணியம்
"சொற்பெயர் நாட்டங் கேள்வி நெஞ்சமென்று" (பதிற்றுப்: 211)
ஞாடு>நாடு = கண், பார், ஆராய், தேடு
நாடுதல் = ஆராய்தல் (குறள் 518, 520)
நாடாது = ஆராயாது (குறள் 791, அகம் 268:7)
நாடுதல்= (ஆராய்தல்)>தேடுதல்
நாடுதல்= விரும்புதல்
ஞாடு>ஞோடு (உயிரியைபு மாற்றம்)
ஞோடு>நோடு
நோடுதல் = காணுதல்
நோடு>நோடு+அம்>நோட்டம் = நோக்கம்
கண்+நோட்டம் = கண்ணோட்டம்
ஞாடு என்ற சொல்லின் உயிரியைபு மாற்றத்தால் திரிபெய்திய நோடு என்ற வினைச்சொல் வடிவம் நமது இலக்கியங்களுள் காணப்பெறவில்லை. கூட்டுச்சொல்லாக மட்டுமே ஆளப்பட்டுள்ளது.
காண்க: கண்ணோக்கு, நோட்டம், நோட்டமிடுதல், நோட்டம் பார்த்தல்
தமிழிய மொழிகள் சிலவற்றுள் இச்சொல்:
மலையாளம் : நோட்டம்
கன்னடம் : நோடு, நொடிசு, நோட்டகா
குடகு : நோட்டி
துளு : நோட்டா
யா>ஞா+கு>ஞாகு>ஞோகு>ஞோக்கு>நோக்கு
நோக்கு = பார்வை, கூர்த்த பார்வை
நோக்கு+அல் = நோக்கல் = பார்த்தல்
காண்க: பதி 27:1, மலை : 240, அகம் 297:97, நற் : 82:5, கலி 49:8
நோக்கு = கண்
யா என்னும் கருமைக் கருத்து மூலவேரின்று (யா>ஞா>(ஞா+கு)>ஞாகு>ஞோகு>ஞோக்கு>நோக்கு என்றவாறு உருவாக்கப்பெற்ற காண் என்னும் பொருட்பாடுடைய சொல்- அக்காணுதல் தொழிலை நிகழ்த்தும் உறுப்பாகிய கண்ணுக்கும் வழங்கத் தலைப்பட்டது.
"மலர்ந்த நோக்கின் .... சேயிழை" (பதிற் 65:7...10)
"மாழை நோக்கின், காழ் இயல் வன முலை" (அகம் 116:8)
நோக்குதல் வினை, காட்சியறிவையும் வழங்குவதால் "கண்டறிதல்" என்னும் பொருட்பாட்டிற்கும் வளர்ந்தது.
ஒருவனுக்கு ஓர் அறிவுச் செய்தியை நாம் விளக்கிய பின்னர் - அவனிடம் "நான் கூறியது என்ன என்று தெரிகிறதா?" என்று கேட்போமாயின்- அவன் அதற்கு தெரிகிறது என்றோ தெரியவில்லை என்றோ பதிலளிப்பதனுள்ளும்- காட்சிப் பொருளானது - அறிந்து கொள்ளுகைப் பொருளுக்கு வளர்ந்து நின்றுள்ள நம்மின் மொழியியன்மை வளர்ச்சி வரலாற்றைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம்.
காட்சி என்னும் சொல்லே - "அறிவு" என்னும் பொருட்பாட்டில் தமிழில் வளர்ந்து செழித்து நின்றமையும் - இவ்விடத்திற் கருதுதற்குரியது.
காட்சி = காணுதல்
(காண்க: புறம் 236:10-12, சிறு 136-139, நற் 397 : 1-3)
காட்சி = அறிவு
(காண்க : புறம் 170:2-4, 213:4-6, பெரும் 445, குறிஞ்சி 15-18, மலை 49,50)
காட்சி என்னும் சொல் "அறிவு" என்ற பொருளுக்கு ஆகி நன்கு வளர்ச்சியெய்திய பின்றை - அறிவுப் பொருண்மை சான்ற நூலுக்கும் வளர்ந்த உண்மையும் இவ்விடத்திற் குறிப்பிடத்தக்கதாகும்.
(காண்க: புறம் 192 : 8-12)
நோக்குதல் (கண்ணால் நோக்குதல்) என்னும் கருத்து நிலைக்குப் பின்னர் - "மனத்தால் நோக்குதல்" என்றவாறான அடுத்த படிநிலைக்கு வளரத் தொடங்கியமைக்கு (நோக்கு +அல்+நோக்கம்) நோக்கனோக்கம் என்ற கூட்டுச் சொல்லையே சான்றாக நோக்கி உண்மை அறியலாம்.
"நோக்கல் நோக்கம்" (தொல்.சொல்.வேற் 10:1)
நச் உரை: கண்ணால் நோக்கும் நோக்கமன்றி - மனதால் நோக்கும் நோக்கம்- அதாவது "கருதுதல்"
நோக்கு = அறிவு
"நுழைந்த நோக்கின் கண்ணுள் வினைஞரும்" (மதுரை :517-518)
[ உரை : கூரிய அறிவினையுடைய ஓவிய வினைஞரும்]
நோக்கு+அம் >நோக்கம் = அறிவு
"முழுது கொடுப்பினும் அமரா நோக்கமொடு" (மலை :75)
[உரை : முற்றுங் கொடுப்பினும் அமைதி பிறவாத அறிவுடனே ]
யா>ஞா>ஞா+டு>ஞாடு+அம்>(ஞாடம்) >ஞாட்டம்>நாட்டம்
ஞாடு>ஞோடு>நோடு>நோடு+அம்>(நோடம்)>நோட்டம்
ஞா>ஞா+கு>ஞாகு>ஞோகு>ஞோக்கு>நோக்கு
"கண்" என்னும் அடிப்படைப் பொருளையும் - அதன்வழியே கண்ணாற் காணுகை, மனதாற் காணுகை, அறிகை, ஆராய்கை என்றவாறு பொருள் விளக்கங்களையும் பெற்று வளர்ந்த "நாட்டம்" என்னும் சொல்லுக்கும் -
கண்ணால் பார், உற்று நோக்கு, ஆராய் என்றவாறான பொருள்களில் வளர்ந்து சென்ற "நோடு" என்னும் வினைச்சொல்லின் வழி எழுந்த தொழிற்பெயரான "நோட்டம்" என்ற சொல்லுக்கும்-
கண்ணால் பார், மனத்தால் காண், கருது, அறி என்றவாறான பொருள்களில் வளர்ந்து சென்ற "நோக்கு" என்னும் வினைச்சொல் வடிவினின்று எழுந்த தொழிற்பெயர்களான "நோக்கு", "நோக்கம்" ஆகிய சொற்களுக்கும்-
கருமைக்கருத்து மூலவேராகிய "யா" என்னும் ஒலியே கருவாகும். அக்கரு மூல வேர் - அடுத்த படிநிலைகளில் மூக்கொலியாகச் சிறந்து திரிபுற்று - "ஞா" என்னும் கிளை வேரையும் , "ஞோ" என்னும் கிளை வேரினின்று கிளைத்த பக்கவேரையும் பெற்றது.
"காண்" என்பதுவே, இவ்விருவகை வேர்களுக்குமான கருப்பொருள் ஆகும்.
இவ்விருவகை வேர்களும், இந்திய-ஐரோப்பிய மொழிகள் பலவற்றினுள் அறிகைக் கருத்துக்கும் அதன்வழி வளர்ந்த பொருள் விரிவாக்கங்கள் பலவற்றிற்கும் அடிப்டைகளாக நின்றிலங்குகின்றன.
கிரேக்கம்:
ஞோ(gno) = know
gnosis = knowledge
gnome = opinion
gnomon = indicator
gnostos = unknown
gnomon =judge
இலத்தீன்:
Gnostic = relating to knowledge
Cognoscere = ascertain
Ignorantia = Ignorance
யா>ஞா
ஞா+அனம்>ஞானம் = காட்சியறிவு, அறிவு
(அனம் : ஓர் ஈறு)
[ஒ.நோ: மா+அனம் =மானம்
தா+அனம் = தானம்]
ஞானம் =அறிவு
(காண்க : நாலடி :308-2, 311:3-4, பழ : 298:2-3, சிறுபஞ்: 34:4, மணி : 23-138, 30-262)
ஞானம் = கல்வி (சூடா.நி)
ஞானம் = மெய்யறிவு
"ஞானந் தன்னை நல்கிய நன்மையும்" (திருவாச 2:74)
ஞானம் = மெய்யறிவு நூல் (சூடா.நி)
சில கூட்டுச்சொற்கள்:
ஞானக்கண், ஞானக்காட்சி, ஞானச்சுடர், ஞானப்பிள்ளை, ஞானப்பெண், ஞானன் (அறிவில் முதிர்ந்தோன்)
'ஞா' என்ற ஒலிப்பு தமிழில் உள்ளது போல் சிறப்புறவும், தனிப்பெறவுமான தெளிந்த அமைப்பு வடிவில் - சமற்கிருதத்திலோ அல்லது அம்மொழிக்கு மூலவகைப்பட்ட கிரேக்கத்திலோ இல்லவேயில்லை என்னும் உண்மையும்- "ஞா" என்னும் செப்பத் தமிழ் ஒலிப்பே - gno, gna, gn என்றவாறான பல்வேறு மூலவொலித் திரிபுகளாக - மேலை ஆரிய இனமொழிகள் பலவற்றிலும் இந்திய-ஐரோப்பிய மொழிகள் பலவற்றிலும் படிந்துள்ளன என்னும் உண்மையும் நன்கு உளங்கொள்ள வேண்டிய செய்திகளாகும்.
ஞா+அகம்>ஞாவகம் = அகக்காட்சி, நினைவு
ஞாவகம்>ஞாபகம்
------------------
ஞானம் என்ற சொல் தமிழ்ச்சொல்லே என்று நிறுவிய
அருளியாருக்கு மிக்க நன்றி.
"யா" என்ற நூலைப் பெற : 9791331700/9487146002
மின்னெழுத்தில் வடித்தது,
பெஞ்சமின் பிராங்கிளின். பி
2- துலை- 2022
(19-10-2022) — தமிழ் உடன்

seshadri sridharan

unread,
Oct 21, 2022, 4:34:48 AM10/21/22
to வல்லமை
image.png

--
--
உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள thiru-th...@googlegroups.com
மின்வரிக்கு அனுப்புக. தங்களால் இக்குழுவில் தொடர இயலா நிலை இரு்பபின், thiru-thoazham...@googlegroups.com
மின்வரிக்குத் தெரிவிக்கவும். தோழமை பற்றி அறிய
http://groups.google.com/group/thiru-thoazhamai?hl=ta காண்க.
தோழமையுடன்

---
You received this message because you are subscribed to the Google Groups "தோழமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thiru-thoazham...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thiru-thoazhamai/CAHwwLPSuFuhGVMdJ3hDtacrqZbpfQ97LDw%3Dp%3D8knSuD6XtxoEw%40mail.gmail.com.

வேந்தன் அரசு

unread,
Oct 21, 2022, 10:00:10 AM10/21/22
to vall...@googlegroups.com, hiru thoazhamai
நோடு--> note, notice

வெள்., 21 அக்., 2022, பிற்பகல் 2:02 அன்று, seshadri sridharan <ssesh...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHwwLPSuFuhGVMdJ3hDtacrqZbpfQ97LDw%3Dp%3D8knSuD6XtxoEw%40mail.gmail.com.


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்
Message has been deleted

N. Ganesan

unread,
Oct 21, 2022, 4:47:28 PM10/21/22
to வல்லமை
On Friday, October 21, 2022 at 3:32:50 AM Seshadri   wrote:
> யா: கருமைக் கருத்து மூலவேர்

எந்த வார்த்தையில் யா என்றால் கருமை என்று இருக்கிறது?
கல் என்றால் வெள்ளை என்பது போலவா?

நா. கணேசன்

seshadri sridharan

unread,
Oct 22, 2022, 12:58:53 AM10/22/22
to vall...@googlegroups.com
கல் என்றால் வெள்ளை என்பது போலவா?- நா. கணேசன்

இது அருளியாரின் முதல் வேரியல் நூல் எனத் தெரிகிறது. நல்ல கேள்வி இந்த பதிவில் உள்ள சொற்களில் "யா" தொடக்கம் இல்லை தான் ஆனால் "யா" வை  வைத்து பிற சொற்களை கருமைக் கருத்தில் காட்டியுள்ளார். தமிழில் சொல்லாய்வு ஒரு நெறிப்படி (formula) மேற்கொள்ளப்படுகிறது. அதில் வடிவம், வண்ணம் என ஒத்த கருத்துள்ள சொற்கள் இன்ன பிற எல்லா கருத்தில் கொள்ளப்பட்டு தொடக்க வேர் இது என்று கொள்ளப்படுகிறது. அந்த தொடக்க வேரில் சொற்கள் இல்லாமலேயோ குறைவாகவோ இருக்கலாம் ஆனாலும் அதுவே வேர்.

உ > இ > எ > அ என்ற வரிசையில் வேரியலார்  சொற்களை தேடுகின்றனர், பொருத்துகின்றனர். அதன்படி சில இடங்களில் சொற்கள் இலக்கியத்திலோ, கல்வெட்டிலோ, பேச்சு வழிக்கிலோ இன்று இல்லாமல் இருக்கலாம். காட்டாக குல் > கில் > கெல் > கல் என்பதே அந்த நெறி (formula) . இப்படியே சொற்கள்  மேலும் மேலும் விரியும். "கள்" வெண்மை என்றால் அதன் வேர் "கல்" என்று முடிபு கொண்டு கல் என்ற வரிசையில் சொற்களை தேட முற்படவேண்டும்.

//யா என்னும் கருமைக் கருத்து மூலவேரின்று (யா>ஞா>(ஞா+கு)>ஞாகு>ஞோகு>ஞோக்கு>நோக்கு என்றவாறு உருவாக்கப்பெற்ற காண் என்னும் பொருட்பாடுடைய சொல்- அக்காணுதல் தொழிலை நிகழ்த்தும் உறுப்பாகிய கண்ணுக்கும் வழங்கத் தலைப்பட்டது நோக்கம், கண், பார், ஆராய், தேடு//

கண்ணை கருமை கருத்தில் சேர்த்ததில் தான் எனக்கு இதில் உடன்பாடு இல்லை. கருமை என்பது இருட்டு. இருட்டில் எதையும் பார்க்க முடியாது. ஒளி, வெளிச்சம் இருந்தால் மட்டுமே பார்க்க முடியும். அதனால் தான் கண்ணொளி எனப்படுகிறது. கல் > கள் > கண் வெண்மை கருத்து வேரில் இருந்து பிறந்த ஒளிக்கருத்து. 

இனி உ > இ > எ > அ என்ற அடிப்படையில் மீண்டும் வெண்மை கருத்தை, ஒளிமை கருத்தை முன் வைக்க விரும்புகிறேன். புதிதாக நுல் > நில் > நெல் > நல்.

நுல் + கு = நுக்கு > நுங்கு - பனங்காயின் வெந்நிற சோறுள்ள விதை. நுரை > நீரின் வெண் குமிழ்.  நுக்கு > நோக்கு - வெண்மையை கண். பார் என்பதும் நோக்கு தான் என்றால் அது "பால்" என்ற வெண்மை கருத்தில் இருந்து தோன்றியதே. பாவாணர் பார்ப்பனர் என்றால் வெள்ளையானவர் என்கிறார். ஆக பார் வெண்மை / ஒளிமை கருத்தே என்பதை ஈண்டு கவனிக்க வேண்டும். 

நில் > வெண்ணிறமான நிலவு, நிலா; நீல் > நீர் - தெலுங்கிலும் தமிழிலும் புனல் இவ்வாறு வழங்குகிறது. மலையாளத்தில் வெள்ளம் எனப்படுகிறது. பாவாணர் வெள்ளம் என்பதை வெள்ளையாக உள்ள புதுப்பெருக்கு நீர் என்று சொல்கிறார். ஆனால் நீர், வெள்ளம் நிறத்தை குறிப்பன என்பதை புறந்தள்ளிவிட்டார்.

நெல் - பொன் என ஒளிரும் கூலம். நெருப்பு -  ஒளிரும் தீ.    

நல் >  நள் >  நாள் - ஒளிரும் விண்மீன். நாளை வரும்நாட் பகல், காலை. நரை - வெளுத்த மயிர்.

தெள் > தேடு - வெண்மையான வெளிச்சத்தில் தான் தேட முடியும். எனவே கண் வெண்மையான வெளிச்சத்தை தான் குறிக்கும் கருமையை குறிக்காது????? 

ஆராய் < ஆய் என்பதில் இருந்து வந்தது.ஆய் என்பதற்கு whiteness என்று செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலி குறிக்கிறது. எனவே வெண்மை தான் ஒளிமை, ஒண்மை. ஒளியின்றி கண் >  காண் >  காட்சி இல்லை. 

image.png




.

seshadri sridharan

unread,
Oct 22, 2022, 3:57:04 AM10/22/22
to vall...@googlegroups.com
நள் வெண்மை கருத்து வேர் இன்னும் சில சொற்கள்.

நள்ளி - நண்டு வெண்மை கருதி.

நளத்தி - நளவன்  என்றால் யாழ் அகராதி கள் இறக்கும் இனத்தவர் என்கிறது. களவு செய்பவர் கள்ளர் என்றால் வெண்மையான கள்ளை இயக்குபவர் நளவர் என்றானால் கள் "நள" என்ற சொல்லை கொண்டிருக்க வேண்டும்.  நள் > நள என்பது வெண்மை அடிப்படையில் உண்டானால் கள் என்பதும் வெண்மை அடிப்படையில் தானே வழங்கி இருக்க வேண்டும்? ஆனால் தேமொழி மயக்கம் தருவது கள் அதனால் வெண்மை இல்லை என்பது தவறு தானே.   

நளப்பன் என்றால் வெண் பாலை என்கிறது சொற்பிறப்பியல் பேரகரமுதலி.
 
நறவம் - நறா என்பன வெண்மையான கள்ளை குறிக்கும். நறவம் என்றால் வெண்மையான பால்.

நரம்பு - வெண்மையான நாளம். 

seshadri sridharan

unread,
Oct 22, 2022, 12:08:51 PM10/22/22
to vall...@googlegroups.com
 
கள் நறவம், நறா என்று வெண்மை கருத்து அடிப்படையில் தான் கூறப்பட்டது. தேறல் என்றொரு சொல் வெண்மையை குறிக்கும் தெல் > தெள் என்ற மூலத்தில் இருந்து வெண்மையான கள்ளையே குறிக்கிறது. பின் எப்படி "கள்" மட்டும் கருமை கருத்தின்  அடிப்படையில் வரும்?  தமிழறிஞர் பலரும் செய்த பெருங் குற்றம் இந்த கல் > கள் > கண்  வேரை கருமையாக காட்டியதே.  கண் கருமை என்றால் கண்ணாடி (கண் + ஆடி) எப்படி  உருவம் காட்டும்? கண் கருமை என்றால் உருவத்தை அல்லவா மறைக்கும்? இதை ஏன் தமிழாய்வாளர், தமிழார்வலர், தமிழறிஞர் சிந்திக்க வில்லை.    

 
image.png                      image.png


seshadri sridharan

unread,
Oct 23, 2022, 4:55:08 AM10/23/22
to vall...@googlegroups.com
On Sat, 22 Oct 2022 at 21:38, seshadri sridharan <ssesh...@gmail.com> wrote: 
கள் நறவம், நறா என்று வெண்மை கருத்து அடிப்படையில் தான் கூறப்பட்டது. தேறல் என்றொரு சொல் வெண்மையை குறிக்கும் தெல் > தெள் என்ற மூலத்தில் இருந்து வெண்மையான கள்ளையே குறிக்கிறது. பின் எப்படி "கள்" மட்டும் கருமை கருத்தின்  அடிப்படையில் வரும்?  தமிழறிஞர் பலரும் செய்த பெருங் குற்றம் இந்த கல் > கள் > கண்  வேரை கருமையாக காட்டியதே.  கண் கருமை என்றால் கண்ணாடி (கண் + ஆடி) எப்படி  உருவம் காட்டும்? கண் கருமை என்றால் உருவத்தை அல்லவா மறைக்கும்? இதை ஏன் தமிழாய்வாளர், தமிழார்வலர், தமிழறிஞர் சிந்திக்க வில்லை.            



///கண் கருமை என்றால் கண்ணாடி (கண் + ஆடி) எப்படி  உருவம் காட்டும்? கண் கருமை என்றால் உருவத்தை அல்லவா மறைக்கும்? இதை ஏன் தமிழாய்வாளர், தமிழார்வலர், தமிழறிஞர் சிந்திக்க வில்லை. /// 

அவர்கள் சிந்தித்துப் பார்த்த பொழுது, 
காணும் தொழிலைச் செய்வதால்  விழியைக்  கண்  என்கிறார்கள் என்று புரிந்து கொண்டவர்களாக இருக்க வேண்டும் - தேமொழி

காண் என்பது கண் என்பதில் இருந்து தோன்றிய ஏவல் வினை. காண வேண்டும் என்றால் ஒளி வேண்டும். கருமையால்  காண முடியாது. பின் எப்படி கருமை கருத்தை வலிந்து திணிக்கின்றனர்?  கல் > கள் >  கண் என்று வெண்மை கருத்தில் இருந்து சொல் ஆக்கிக் கொண்டார்கள். அறிவு நமக்கு ஐந்து வகையில் கிட்டுகிறது கண், காது, மூக்கு, நாக்கு, உடல். இவற்றை புலன் என்கிறோம் புல் > வெண்மை கருத்து வேர். புலன் என்ற அறிவை குறிக்கும் சொல் புல் இல் இருந்து ஆக்கப்பட்டது.

வெண்மையான ஒளியை வாங்கி காட்சி காண்பதால் தான் கண், விழி என்று வெண்மையை குறிக்கும் வேரில் இருந்து சொற்கள் ஆக்கப்பட்டன. ஓசையை வாங்குவதால் காது எனப்பட்டது.  கல் ( கால் - கால் +து) ஒலிக் கருத்து வேரும் ஆகும். கலகல  என்பதை நோக்குக. செவி ஒலிக் கருத்தில் தான் குறிக்கப்பட்டிருக்க வேண்டும்.  மணத்தை முகரும் மூக்கு மணத்தை வாங்கும் கருத்திலேயே அமைந்தது. முல் > மல் (முல்லை, மல்லி) ஆகிய சொற்களை நோக்குக. முல் + கு  > முகு >  மூக்கு. சுவையை வாங்கு நாக்கு "நால்"  என்ற தொங்கும், வளைத்து நீளும் கருத்தில் உருவானது போல தோன்றுகிறது.  சுவை கருத்து பண்டு "நால்" க்கு இருந்ததா என்று ஆராய வேண்டும். உடம்பு தொடு உணர்வை வாங்குவதால் உல் என்ற வேரில் இருந்து உணர் என்ற சொல்லை பெற்றது.  உணர் என்பது அறிவு. உல் என்பதில் உலர், உலை,  உரசு போன்ற கருத்து உள்ளதால் பண்டு வெண்மை, ஒளிமை கருத்து இருந்திருக்க வேண்டும். அதை தேடினால் அறிய முடியும். உல் என்பதற்கு சேர்க்கை கருத்தும் உண்டு. அதில் இருந்து உடல் என்ற சொல் உருவாகி உள்ளது.  யாக்கை என்பதும் கை, கால், தலை என்ற உறுப்புகளின் சேர்க்கை குறித்தது தான்.      

உ > இ > எ > அ என்ற formula படி சகரத்தில் வெண்மை, ஒளிமை கருத்தையும் ஒலிக் கருத்தையும் ஈண்டு காணலாம்.  சுல் >  சில் > செல் >  சல் வெண்மைக் கருத்து:

சுல் > சுல்லு = வெண்மையான வெள்ளி,  சுல்லி  - எரியும் அடுப்பு; சுல்லம் - சிவந்த செம்பு; சுள்ளி - வெண்மையான மல்லிகை. வெண்மை, செம்மை, மஞ்சள் ஆகியவற்றால் ஒளி உண்டாகும் என்பதையும் நோக்குக. சுண்டு - வெண்மையான கள்.

சில்லிகை > கதிரொளி    

செல் > வெண்மையான கறையான் (இங்கே கறை கருமையை குறித்ததல்ல. கல் என்ற வெண்மை வேர்).

சல்லகி - வெள்ளை குங்கலியம்;  சரம் > வெண்மையான நீர்.   

வெண்மை கருத்து வழி ஒண்மை வந்தது . ஒண்மை அறிவை ஏற்படுத்தும். சுளகு (சுள்) - நுட்பறிவு.  சுவடு - ஏடு, நூல், புத்தகம் (புல் வேர்) ஆகியன கற்கும் துறையில் வெளிச்சம் ஏற்படுத்துபவை (throw light) என்பதால் அறிவிற்கு வேறான எல், நுல், புல் ஆகியவற்றினின்றே அவையும் உருவாயின.    

ஒலிக்  கருத்து:

சில் > இரைச்சல், ஆரவாரம்; சிலம்பு - ஒலிக்கும் கால் அணி.

சல் > சல்லகம் - தாளக்கருவி. சலங்கை - ஒலிக்கும் கால் அணி.   
 

seshadri sridharan

unread,
Oct 23, 2022, 10:11:27 AM10/23/22
to vall...@googlegroups.com
 இதில் ஒன்றை முகாமையாக குறிக்க மறந்தேன். சுல்  > வெண்மைக் கருத்து வழி ஒண்மை, ஒளிமையை குறிக்கும். அந்த வகையில் கல்>கள் > கண் >காண் போல "சுல்" என்பதில் இருந்து "சுட்டு" என்ற வினை ஏவல் சொல் தமிழில் காட்டு என்பதை குறிக்கிறது. அப்படி எனில் சுடு > சூடு என்ற காண், பார் பொருள் கொண்ட ஒரு சொல் தமிழில் இருக்க வேண்டும் என்கிறார் பாவாணர். தெலுங்கில் பார் என்பதை "சூடு" - choodu என்கின்றனர்.  தமிழில் சுடு - சூடு என்ற சொல் இக்கால் இல்லை. தெலுங்கை வைத்து பார்த்தால் தமிழில் முன்பொரு காலம் அப்படி ஒரு சொல் இருந்திருக்க வேண்டும். மீண்டும் சுல்  என்ற வெண்மைக் கருத்தில் "கண்" என்பதும் வெண்மைக் கருத்தே என்று நிறுவ உதவுகிறது.

N. Ganesan

unread,
Oct 23, 2022, 10:36:21 AM10/23/22
to vall...@googlegroups.com
யா என்ற சொல்லுக்குக் கருமை என்ற பொருளே இல்லை. எப்படிக் கல் என்ற சொல்லுக்கு வெள்ளை என்ற பொருள் இல்லையோ அப்படி.

நா. கணேசன்

seshadri sridharan

unread,
Oct 23, 2022, 12:19:06 PM10/23/22
to வல்லமை
On Sun, 23 Oct, 2022, 20:06 N. Ganesan, <naa.g...@gmail.com> wrote:
யா என்ற சொல்லுக்குக் கருமை என்ற பொருளே இல்லை. எப்படிக் கல் என்ற சொல்லுக்கு வெள்ளை என்ற பொருள் இல்லையோ அப்படி.


கறையான் வேர் என்ன என்ற சொல்லும்.

N. Ganesan

unread,
Oct 23, 2022, 12:20:17 PM10/23/22
to வல்லமை
> வெண்மைக் கருத்தில் "கண்" என்பதும் வெண்மைக் கருத்தே என்று நிறுவ உதவுகிறது.

இப்படி எல்லாமா தமிழ் அமைந்திருகிறது?

கள் (cf. மக்-கள்), கண், கட்டு, கண்டு - தொடர்புடைய உறவுச் சொற்கள். They exhibit Dravidian Rule of Retroflexion, these retroflexes enter Sanskrit from Dravidian. கண்- கணு. பொருந்து, துளை, துவாரம் என்னும் பொருள் உடைய சொல். மண்டையோட்டில் துவாரம் கண் உள்ள இடம். அங்கே கண் கட்டப்பட்டுள்ளது. கண், கணு/கண்ணு.

இவற்றுக்கு வெள்ளை நிறம் என்ற பொருளே இல்லை.

நா. கணேசன்



N. Ganesan

unread,
Oct 23, 2022, 12:30:16 PM10/23/22
to வல்லமை
On Friday, October 21, 2022 at 9:00:10 AM UTC-5 வேந்தன் அரசு wrote:
நோடு--> note, notice

தொடர்பு இல்லாதவை. நோடு- நுள்- என்னும் தாதுவேர்.

annotate, note (musical note) = mark, sign. இதற்கும் த்ராவிட பாஷைகளின் நோடு, நோட்டம் தொடர்பில்லை.
just sound resemblance, but their etymological roots are quite different. That difference shows up in their meanings,

N. Ganesan

seshadri sridharan

unread,
Oct 23, 2022, 11:22:35 PM10/23/22
to vall...@googlegroups.com
On Sun, 23 Oct 2022 at 21:50, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
கள் (cf. மக்-கள்), கண், கட்டு, கண்டு - தொடர்புடைய உறவுச் சொற்கள். They exhibit Dravidian Rule of Retroflexion, these retroflexes enter Sanskrit from Dravidian. கண்- கணு. பொருந்து, துளை, துவாரம் என்னும் பொருள் உடைய சொல். மண்டையோட்டில் துவாரம் கண் உள்ள இடம். அங்கே கண் கட்டப்பட்டுள்ளது. கண், கணு/கண்ணு.நா. கணேசன்


கல் தோண்டு, துளைபொருள் கல்லு - கன்னு > கன்னக்கோல். கள் தான் கண் ஆகும். கட்டு ஒன்றை ஒன்றுடன் பிணித்து  கட்டுவதை குறிக்கும்.  கண்ணுக்கு நீர் கூறும் பொருள் தப்பானது


கறையான்    என்பதற்கு என்ன வேர் பொருள்

N. Ganesan

unread,
Oct 24, 2022, 7:02:23 AM10/24/22
to vall...@googlegroups.com, housto...@googlegroups.com

On Sun, 23 Oct 2022 at 21:50, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
கள் (cf. மக்-கள்), கண், கட்டு, கண்டு - தொடர்புடைய உறவுச் சொற்கள். They exhibit Dravidian Rule of Retroflexion, these retroflexes enter Sanskrit from Dravidian. கண்- கணு. பொருந்து, துளை, துவாரம் என்னும் பொருள் உடைய சொல். மண்டையோட்டில் துவாரம் கண் உள்ள இடம். அங்கே கண் கட்டப்பட்டுள்ளது. கண், கணு/கண்ணு.நா. கணேசன்


கல் தோண்டு, துளைபொருள் கல்லு - கன்னு > கன்னக்கோல்.

ஆம். கல்வி பற்றி விளக்கும் போது சொன்னேனே. https://groups.google.com/g/vallamai/c/htZQJAQZYFc/m/XR5gIHEKAgAJ

கல்- தோண்டுதல். தோண்டப்பட்டது கலம்/கலன் (உ-ம்: மரக்கலம்) நோக்குக. கலயம் > கலசம் ...
கல்லூற் றுழியூறும் ஆறேபோல் (நாலடி). கல் ஊற்று = வினைத்தொகை; தோண்டும் ஊற்று
கல்- வினைச்சொல்லாக வரும்போது தோண்டுதல். இதுதான் கன்னம்வைத்தல் என்பதன் தாதுவேர். தொட்டனைத்து ஊறும் மணற்கேணி எனும் குறளில் வள்ளுவர் விளக்கியுள்ளது இது தான்.

கல்- திண்மை என்ற பொருளில் Stone என்னும் போது வரும். கற்பு, கன்னி எப்னதற்கெல்லாம் “கற்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின்” என வள்ளுவர் கூறுவது இதனால். கற்பு - (1) படிப்பு, (2) குலமகளுக்கு உள்ள திண்மை.

கல் என்றால் வெள்ளை ஒளி என்ற பொருள் கிடையாது. நறை/நறவு/நறா என்பதும் வெள்ளை என்ற பொருளால் உருவானதல்ல. அவை வெள்ளையாகவும் இல்லை. வள்ளுவர் குறளால், ஏன் நறவுக்குப் பெயர் என அறியலாம்.
 
கள் தான் கண் ஆகும். கட்டு ஒன்றை ஒன்றுடன் பிணித்து  கட்டுவதை குறிக்கும். 

ஆமாம். அது தானே  Dravidian Rule of Retroflexion,  என 20+ ஆண்டுகளாய் நான் கூறுவது.
கள் (cf. மக்-கள்), கண், கட்டு, கண்டு - தொடர்புடைய உறவுச் சொற்கள். They exhibit Dravidian Rule of Retroflexion, these retroflexes enter Sanskrit from Dravidian. கண்- கணு. பொருந்து, துளை, துவாரம் என்னும் பொருள் உடைய சொல். மண்டையோட்டில் துவாரம் கண் உள்ள இடம். அங்கே கண் கட்டப்பட்டுள்ளது. கண், கணு/கண்ணு.

உங்கள் மடல்களில் எதோ புஸ்தகங்களில் உள்ள சுல் > சுள், சுடு ... ஆவது எல்லாம் தமிழுக்குப் பொருத்தமில்லாதது. இது போல், ல் ள் ஆவது எல்லாம் தமிழில் அடிப்படையாக இல்லை. ல், ள் வெவ்வேறு சொற்களைப் பிறப்பிப்பவை.

 
கண்ணுக்கு நீர் கூறும் பொருள் தப்பானது

Not Really.

NG

N. Ganesan

unread,
Oct 24, 2022, 7:42:20 AM10/24/22
to vall...@googlegroups.com, housto...@googlegroups.com
பெண் என்னும் பெயர் பிளத்தல் என்னும் வினைச்சொல்லைத் தாதுவேராகக் கொண்டது. பிள்- பெண்/பெண்டு/பெட்டை. பிணா. பெண்ணை = பெண் பனை. http://nganesan.blogspot.com/2011/06/pennai-female-palmyrah-tree.html

பிணம் வாயைப் பிளந்திருக்கும். சாய்- > சாவு. சவம் சம்ஸ்கிருதத்துக்குச் சென்ற சொல்.

ஞெள்-/நெள்- செறிவு, இருள், கருமை. இது இருளில் திரியும் ஞெண்டுக்குப் பெயர். ஞெள்-/நெள்- >> எள்ளு/எண். நள்- கருமை. நல்லமலை = கருமலை. அதில் பிறப்பது கரும்பெண்ணை (கம்பன்). க்ருஷ்ணபெண்ணா. கண்ஹபெண்ணா >> க்ருஷ்ணவேணீ. இப்போது கிருஷ்ணா எனும் பெருநதி. நெள்-நள்- > நல்- ‘கருமை, நல்லெண்ணெய்’, நல்லான் சக்ரவர்த்தி (க்ருஷ்ணர்). நாளகிரி - புத்தரைக் கொல்லவந்த யானை. பெருங்கதையிலும் நாளகிரி உண்டி. நாளணன் > நாரணன் (ஆழ்வார்களில்). நாள் இருளில் தோன்றும் விண்மீன். திங்களும் நாளும் முந்து கிளந்தன்ன (தொல்காப்பியம்) ....

அது போல,
கண் ‘eye' என்னும் பெயர் கள் என்னும் தாதுவேர் கொண்டது. கள்ளு-/கட்டு- . மனத்தைக் கட்டுவது/மசங்கச் செய்வது என்ற பொருளில் கள் ‘பூந்தேன், மது’ வருவன.

N. Ganesan

unread,
Oct 24, 2022, 7:45:56 AM10/24/22
to vall...@googlegroups.com, housto...@googlegroups.com
On Mon, Oct 24, 2022 at 6:41 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
பெண் என்னும் பெயர் பிளத்தல் என்னும் வினைச்சொல்லைத் தாதுவேராகக் கொண்டது. பிள்- பெண்/பெண்டு/பெட்டை. பிணா. பெண்ணை = பெண் பனை. http://nganesan.blogspot.com/2011/06/pennai-female-palmyrah-tree.html

பிணம் வாயைப் பிளந்திருக்கும். சாய்- > சாவு. சவம் சம்ஸ்கிருதத்துக்குச் சென்ற சொல்.

ஞெள்-/நெள்- செறிவு, இருள், கருமை. இது இருளில் திரியும் ஞெண்டுக்குப் பெயர்.

நெள்- > நள்- > நல்- > அலவன். இதுபற்றிப் பேரா. எமனோவிடம் பேசியிருக்கிறேன். பெர்க்கிலியில் நிரந்தர தமிழ் இருக்கை ஹார்ட் அமைத்த கால கட்டங்களில். அவர்தான், த்ராவிட வேர்ச்சொல் அகராதி செய்தவர். ஆ. வேலுப்பிள்ளையின் ஆசான், தாமஸ் பர்ரோவுடன். இருவரும் சம்ஸ்கிருத, தமிழ் மொழியியற் புலிகள்.

seshadri sridharan

unread,
Oct 24, 2022, 11:18:13 AM10/24/22
to vall...@googlegroups.com
On Mon, 24 Oct 2022 at 16:32, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
கல் தோண்டு, துளைபொருள் கல்லு - கன்னு > கன்னக்கோல்.

ஆம். கல்வி பற்றி விளக்கும் போது சொன்னேனே. https://groups.google.com/g/vallamai/c/htZQJAQZYFc/m/XR5gIHEKAgAJ

கல்- தோண்டுதல். தோண்டப்பட்டது கலம்/கலன் (உ-ம்: மரக்கலம்) நோக்குக. கலயம் > கலசம் ...
கல்லூற் றுழியூறும் ஆறேபோல் (நாலடி). கல் ஊற்று = வினைத்தொகை; தோண்டும் ஊற்று
கல்- வினைச்சொல்லாக வரும்போது தோண்டுதல். இதுதான் கன்னம்வைத்தல் என்பதன் தாதுவேர். தொட்டனைத்து ஊறும் மணற்கேணி எனும் குறளில் வள்ளுவர் விளக்கியுள்ளது இது தான்.

கல்- திண்மை என்ற பொருளில் Stone என்னும் போது வரும். கற்பு, கன்னி எப்னதற்கெல்லாம் “கற்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின்” என வள்ளுவர் கூறுவது இதனால். கற்பு - (1) படிப்பு, (2) குலமகளுக்கு உள்ள திண்மை.

கல் என்றால் வெள்ளை ஒளி என்ற பொருள் கிடையாது. நறை/நறவு/நறா என்பதும் வெள்ளை என்ற பொருளால் உருவானதல்ல. அவை வெள்ளையாகவும் இல்லை. வள்ளுவர் குறளால், ஏன் நறவுக்குப் பெயர் என அறியலாம்.
 
கள் தான் கண் ஆகும். கட்டு ஒன்றை ஒன்றுடன் பிணித்து  கட்டுவதை குறிக்கும். 

ஆமாம். அது தானே  Dravidian Rule of Retroflexion,  என 20+ ஆண்டுகளாய் நான் கூறுவது.
கள் (cf. மக்-கள்), கண், கட்டு, கண்டு - தொடர்புடைய உறவுச் சொற்கள். They exhibit Dravidian Rule of Retroflexion, these retroflexes enter Sanskrit from Dravidian. கண்- கணு. பொருந்து, துளை, துவாரம் என்னும் பொருள் உடைய சொல். மண்டையோட்டில் துவாரம் கண் உள்ள இடம். அங்கே கண் கட்டப்பட்டுள்ளது. கண், கணு/கண்ணு.

உங்கள் மடல்களில் எதோ புஸ்தகங்களில் உள்ள சுல் > சுள், சுடு ... ஆவது எல்லாம் தமிழுக்குப் பொருத்தமில்லாதது. இது போல், ல் ள் ஆவது எல்லாம் தமிழில் அடிப்படையாக இல்லை. ல், ள் வெவ்வேறு சொற்களைப் பிறப்பிப்பவை.

கல் என்பது வேர் தான். ஆனால் அதற்கு துளை,  சேர்க்கை, கூர்மை, கருமை வெண்மை என பல பொருள்களில் சொற்களை தோற்றுவிக்கிறது. நீர் எல்லாவற்றை கதம்பமாக கலந்து பொருள் கொள்கிறீர்.  
 
Reply all
Reply to author
Forward
0 new messages