உலக புத்தக தினம்.

23 views
Skip to first unread message

ருத்ரா (இ.பரமசிவன்)

unread,
Apr 23, 2025, 4:24:23 PMApr 23
to வல்லமை

உலக புத்தக தினம்.

_______________________________


அச்சும் காகிதமும்

குவாண்டத்து

கரையான்களின்

தீனிகள் ஆன பின்

நாவல்களும்

கவிதைகளும்

மட்டுமே 

இங்கு மொட்டைவெளிகள்.

வணிகம் மருத்துவம் ஆனது.

மருத்துவம் வணிகம் ஆனது.

பசி மொய்க்கும் 

பொருளாதாரம்

டிஜிடல் சோற்றை

அளைந்து கொண்டிருக்கிறது.

மனிதன் கவலை

உடனுறை மனிதனின் 

பட்டினிச்சாவுகளில் இல்லை.

இற்று விழ்ந்த அவன்

எலும்பு மிச்சங்களிலும் இல்லை.

எங்கோ பல‌

ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள‌

ஏதோ ஒரு கோளின்

நீலக்கண்ணும் பச்சை உடம்புமாய்

உள்ள "அயலி"களின் மீது 

மட்டுமே.

ஆன் லைன் ஆராய்ச்சிகளுக்கும்

"ஃபூரியர்" சிமிலேஷன்களுக்கும்

குறைச்சல் இல்லை.

அரசமரத்து

அறிவொளியின்

"புத்தம்"தந்த புத்தகம்

இன்று வெறும்

எழுத்துக்காடுகளா?

மனிதம் அரிக்கப்பட்டு விட்ட‌

வெறும் மண்டைக்காடுகளா?

காலம் தான் பதில் சொல்லும்

என்பதும் வெறும் பொய்யே.

காலம் என்பதும்

இந்த கணித இயற்பியலில்

கருந்துளையால்

என்றோ தின்னப்பட்டு விட்டது.


__________________________________________

சொற்கீரன்

N. Ganesan

unread,
Apr 23, 2025, 8:18:40 PMApr 23
to வல்லமை
அருமை, கவிஞரே.

N. Ganesan

unread,
Apr 23, 2025, 8:30:22 PMApr 23
to vall...@googlegroups.com
அருமை, கவிஞரே.  நீங்கள் குறிப்பிடும் "ஃபூரியர் சிமிலேஷன்ஸ்" தான் நமக்கு இத்தனை எண்ணிமக் கருவூலங்களைக் காட்டுகிறது!

கிரேக்கர்களின் அலெக்சாண்டிரியா, இந்தியர்களின் நாலந்தா பல்கலை நூலக அழிப்புகள் நினைவுக்கு வரும்.

உலகப் புத்தக நாள் (23-4-2025)! ஒரு லட்சம் புத்தகங்கள் (மே 31, 1981 யாழ் நூலகம் எரிப்பு பற்றிய சுஜாதா சிறுகதை) யாழ்ப்பாணப் பொது நூலகம் இலங்கை அரசினால் எரிக்கப்பட்ட நாள். மே 31, 1981. எழுத்தாளர் சுஜாதா இந்தக் கொடுமை பற்றி ஓர் சிறுகதை எழுதினார். அவர் மறைந்தபோது, தமிழ் நூலகங்களுக்கு ஏற்பட்ட மூன்று போகூழ் நிகழ்வுகளைப்பற்றி எழுதினேன். 2008-ல் எழுதிய பதிவு:

தமிழன்னை அழுத தருணங்கள் சில. சென்னையிலே கலெக்டராயிருந்த பிரான்சிஸ் வைட் எல்லிசு திருவள்ளுவனாரைச் சமணத் துறவியாகத் தங்கக் காசுகள் வெளியிட்டவர். திராவிட மொழிக் குடும்பம் சமற்கிருத்தினின்று வேறுபட்ட மூலத்தில் தோன்றியது என்று உலகுக்கு அறிவித்தவர் எல்லீசனே. 35 ஆண்டு கழித்து 1856-ல் நூலாக விரித்தவர் கால்டுவெல் பாதிரியார். எல்லிஸ் இராமநாதபுரஞ் சென்றபோது நஞ்சுண்டு இளவயதில் மாண்டார். அடுத்து வந்த வெள்ளை ஆட்சியருக்குத் தமிழின்பால் நாட்டமில்லை. எல்லிஸ் அகாலத்தில் அகன்றதால், புலவர்கள் அவரிடம் ஒப்படைத்த பொக்கிசங்களைக் கலெக்டர் மாளிகை 'பட்லர்' சுடுதண்ணீர் அடுப்பெரிக்கப் பயன்படுத்தினான். அத்தனை ஓலைச்சுவடிகளும் ஒன்றில்லாமல் ஒழிந்தன, சமணக் காவியங்கள் (உ-ம்: வளையாபதி), பௌத்தப் பொத்தகங்கள், .... 1820களில் தீக்கிரையாயின. ஏராளமான பழந்தமிழ்ப் புலவர்கள் சேதுபதி, பாலவநத்தம் பொன்னுசாமித் தேவர், பெத்தாச்சி வள்ளல் போன்ற புரவலர்களை நாடித் தஙகியிருந்த சோலை மதுரைத் தமிழ்ச் சங்கம். அன்றைய தாழ்நிலையில் தமிழ்த் திறமையைக் கொண்டு சினிமா, பத்திரிகை, தொலைக்காட்சி என்றெல்லாம் சந்தைப்படுத்திக் காசுபார்க்க முடியாது. 20 - சனவரி - 1920ல் மதுரைத் தமிழ்ச் சங்க நூலகம் தீப்பற்றி எரிந்தது, எண்ணிறந்த கருவூலங்களைத் (எ-டு: குறளின் பழைய உரைகள் பல) தமிழ் அன்றும் இழந்துபட்டது. பின்னர் சிங்களக் காடையர்கள் 31- மே- 1981ல் கொளுத்திய யாழ்ப்பாணப் பொது நூல்நிலைய இழப்பு. இத் தீயழிப்பு பற்றிச் சுஜாதா 'ஒரு லட்சம் புத்தகங்கள்' என்னும் சிறுகதை எழுதியுள்ளாராம்.  ~NG, 2008 ---------------- ஒரு லட்சம் புத்தகங்கள் - சுஜாதா சிறுகதை
https://azhiyasudargal.blogspot.com/2012/06/blog-post.html இந்தச் சிறுகதை பற்றிய திறனாய்வு - பேரா. அ. ராமசாமி


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/vallamai/7fee1822-b2ea-4227-bf6a-4e4a3577d461n%40googlegroups.com.

N. Ganesan

unread,
Apr 23, 2025, 9:02:15 PMApr 23
to vallamai
இங்கு உங்கள் கவி.

"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/mintamil/69f8077d-4fe4-4a4e-8058-0d245c660f1cn%40googlegroups.com.

Eskki Paramasivan

unread,
Apr 24, 2025, 1:03:47 AMApr 24
to vall...@googlegroups.com
பகிர்வுக்கு மிக்க நன்றி திருமிகு நா. கணேசன் அவர்களே.

வியா., 24 ஏப்., 2025, 6:32 AM அன்று, N. Ganesan
<naa.g...@gmail.com> எழுதியது:
> You received this message because you are subscribed to a topic in the Google Groups "வல்லமை" group.
> To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/vallamai/BNvx9IsfwK4/unsubscribe.
> To unsubscribe from this group and all its topics, send an email to vallamai+u...@googlegroups.com.
> To view this discussion visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUfWiQOsxU_HNptGLKEW2sSftPpuUU8CBtzkh4QNLNfvtg%40mail.gmail.com.
Reply all
Reply to author
Forward
0 new messages