ஊர்ப் பெயரால் அறியப்படும் தமிழர்கள்

75 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Oct 16, 2024, 11:50:49 PM10/16/24
to Santhavasantham, Subramanian T S, Subbarayalu Yellava
ஊர்ப் பெயரால் அறியப்படும் தமிழர்கள்
-------------------------------

பல நண்பர்கள், பொதுவெளியில் தமிழ்நாட்டில் பிறந்தாலும், அவர்கள் சென்று
வாழ்ந்த பெயரால் பரவலாக மக்கள் அறிவர். உ-ம்: டெல்லி கணேஷ், ஒரிசா
பாலகிருஷ்ணன் (ஐஏஎஸ்), ஒரிசா பாலு, ... வேறு யாராவது பெயர் ஞாபகத்திற்கு
வருகிறதா? மலேசியா வாசுதேவன், ... பெயர் அளிப்பாருக்கு நனிநன்றி.

மிகப் பெரிய சைவர்களாகவும், சக்கரவர்த்திகளாகவும் விளங்கிய ராஜராஜ சோழன்,
ராஜேந்திர சோழன் போற்றிய சைவர் பரஞ்சோதி. பல பதிற்றாண்டுக்
கல்வெட்டுகளில் மிக உயர்ந்த வாசகங்களால் வர்ணிக்கப்படுபவர் சாவூர்
பரஞ்சோதி. நாட்டிய நாடக ஆசான்களில் மிகச் சிறந்தவர். மகாநட்டுவனார்
இவரைக் கந்தருவப் பேரரையன் என்பர். யாவம்/சாவம்/சாவகம் என்பது இன்றைய
இந்தோனேசியாவில் ஜாவா தீவு. இன்றும் யாழ்ப்பாணத்தில் சாவச்சேரி உள்ளது.
ஜாவா தீவுக்கு கடல் வழியாகச் சென்று வாழ்ந்துவருவோர் இருந்த ஊர்.
கலயநல்லூர் தேவாரத் தலம். சுந்தரரின் மிக அழகான பதிகம், கலியாணங்களில்
சிவாச்சாரியர்களும், ஓதுவாமூர்த்திகளும் இப்பதிகப் பாடல்களைப் பாடுவது
வழமை. கலயநல்லூர் அருகே சாவக்கோட்டை/சாக்கோட்டை ஜாவா தீவின் தொடர்பு
காட்டும் பெயர். சாவம்+ ஊர் = சாவூர். இவ்வூர் சென்று தமிழ் நாடக,
சங்கீத, நாட்டியங்களை அங்கே இருந்த ஹிந்துக்களுக்கு போதித்தவர் சாவூர்
பரஞ்சோதி. இன்று, பலித் தீவில் கிரந்த எழுத்து தான். பரத நாட்டியம் போன்ற
நடனம் இந்தோனேசியாவில் மிகுதி. கிரந்த எழுத்து இந்தோனேசியா உட்பட
தென்கீழ் ஆசியா முழுக்கப் பரவியது. தாய்லாந்து, கம்போடியா, பலித் தீவு
இன்னமும் வைத்துள்ளன (சற்று மாறுதல்களுடன்). நாட்டிய ஆசான் பெயர் சாவூர்
பரஞ்சோதி. இவர் ஓலைநாயகமாகவும் திகழ்ந்தவர். சோழக் கல்வெட்டுகள் தாம்,
வட்டெழுத்தை நீக்கி, கிரந்த எழுத்தில் இருந்து தமிழ் எழுத்தாக
உருவெடுத்தது. இன்றும் தொல்காப்பியத்தின் 18 மெய், கூடவே ஸம்ஸ்கிருத 5
மெய் யூனிகோட் எழுதுருவில் பயன்கொள்கின்றனர் தமிழர். இவற்றைத் தமிழில் பல
நூறுமுறை பயன்படுத்தினோர்களில் முக்கியமானர்கள் சோழ மகாராஜாக்கள்.
இந்தியாவின் இரு செம்மொழிகளையும் நுட்பமாக அறிந்து நாட்டிய, நாடக, ஆவணப்
பேராசானாக விளங்கியவர் சாவூர் பரஞ்சோதி.

தமிழிசை என உருவாக்கிய சீர்காழி மூவருக்கும் மூதாதையர் பரஞ்சோதி
போன்றோரே. சீர்காழி மூவர் செய்த உருப்படிகள், கீர்த்தனங்கள் பின்னர்
கர்நாடக சங்கீதமாக, திருவாரூரில் பிறந்த மூவர் பாடினர். அது நாயக்கர்
ஆட்சிக் காலம்.

அவர் பெயரின் முன்னம் உள்ள பெயரடை மிக முக்கியமானது. ஏன் அப்பெயரைப்
பரஞ்சோதியாருக்குக் கல்வெட்டில் ராஜராஜ சோழனும், ராஜேந்திர சோழனும்
பொறித்தனர் என அடுத்துப் பார்ப்போம்.

நா. கணேசன்
https://nganesan.blogspot.com

kanmani tamil

unread,
Oct 17, 2024, 1:17:52 AM10/17/24
to vallamai
///வேறு யாராவது பெயர் ஞாபகத்திற்கு
வருகிறதா? மலேசியா வாசுதேவன், ... பெயர் அளிப்பாருக்கு நனிநன்றி.///

குன்னக்குடி வைத்தியநாதன் 
சூலமங்கலம் ராஜலட்சுமி 
கொத்தமங்கலம் சுப்பு 
பாபநாசம் சிவன் 
பெங்களூர் ரமணி 
திருச்சி லோகநாதன் 
ஆற்காடு வீராசாமி 
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 
குடந்தை பாலசுப்பிரமணியன் 
மதுரை சோறு.......
சக

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUcRHp5xO5OZ68wgA3jp5NE4%3D2c6iq9eUAQs-YfXXncrOA%40mail.gmail.com.

kanmani tamil

unread,
Oct 17, 2024, 1:19:12 AM10/17/24
to vallamai

வருந்துகிறேன்...
மதுரை சோமு

N. Ganesan

unread,
Oct 17, 2024, 1:41:27 AM10/17/24
to வல்லமை
I wrote to a Houston friend: Anna, if u read my mail, I am not asking names like these. I am asking for Tamils born in TN, but still go by a place name outside of TN. e.g., Delhi Ganesh

N. Ganesan

unread,
Oct 17, 2024, 8:54:02 AM10/17/24
to vall...@googlegroups.com
On Thu, Oct 17, 2024 at 12:17 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
///வேறு யாராவது பெயர் ஞாபகத்திற்கு
வருகிறதா? மலேசியா வாசுதேவன், ... பெயர் அளிப்பாருக்கு நனிநன்றி.///

I wrote to a Houston friend: Anna, if u read my mail, I am not asking names like these. Asking for Tamils born in TN, but still go by a place name outside of TN. e.g., Delhi Ganesh, Dallas Caldwell, New York Bala, ...

நிரஞ்சன் பாரதி கலைத்துறையில் இருந்து இரு காட்டுகள் தந்தார்.
பாம்பே சாணக்யா, சிங்கப்பூர் தீபன்.
இவர்கள் யார் என்று துழாவி அறிந்தேன். நிரஞ்சனுக்கு என் நன்றி பல.
சிங்கப்பூர் தீபன்:  https://youtu.be/KdOf208o344  on his name.

பாம்பே ஸிஸ்டர்ஸ் - இவர்கள் பாலக்காடு பகுதியில் இருந்து மும்பை மாநகர் சென்றோர்.

NG

N. Ganesan

unread,
Oct 20, 2024, 11:17:19 PM10/20/24
to Santhavasantham
கலைத்துறையிலே தாம் புகழ்பெற்ற இடம்/ஊர்ப் பெயர்களை வைத்து அறியப்படுவார் பலர். பிறந்த சொந்த ஊர் வேறாக இருக்கும்.
(1) பெங்களூர் நாகரத்தினம்மாள்
(2) பெங்களூர் ரமணியம்மாள்
(3) பாம்பே சகோதரிகள்
(4) பாம்பே ஜெயஶ்ரீ
(5) பாம்பே சத்யா
(6) சிங்கப்பூர் தீபக்
(7) டெல்லி கணேஷ்
(8) ஒரிசா பாலகிருஷ்ணன் (ஐஏஎஸ்)
(9) ஒரிசா பாலு
(10) பாம்பே ஞானம்
(11) பாம்பே சாணக்யா
(12) கல்கத்தா கே எஸ் கிருஷ்ணமூர்த்தி
(13) தஞ்சாவூர் ஆபிரகாம் பண்டிதர்
(14) மதுரை சோமு
etc. etc.,

இது போன்ற முன்னடை கொண்ட பெயரால் தமிழ்நாடு முழுதும் அறியப்பெற்ற  ஒருவர்: சங்கீத, நாடகப் பேராசான் பரஞ்சோதி (ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் போற்றிய கலைமாமணி) ஆவார்.


மிகப் பெரிய சைவர்களாகவும், சக்கரவர்த்திகளாகவும் விளங்கிய ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் போற்றிய சைவர் பரஞ்சோதி. பல பதிற்றாண்டுக் கல்வெட்டுகளில் மிக உயர்ந்த வாசகங்களால் வர்ணிக்கப்படுபவர் சாவூர் பரஞ்சோதி. நாட்டிய நாடக ஆசான்களில் மிகச் சிறந்தவர். மகாநட்டுவனார் இவரைக் கந்தருவப் பேரரையன் என்பர்.  யாவம்/சாவம்/சாவகம் என்பது இன்றைய இந்தோனேசியாவில் ஜாவா தீவு. இன்றும் யாழ்ப்பாணத்தில் சாவச்சேரி உள்ளது. ஜாவா தீவுக்கு கடல் வழியாகச் சென்று வாழ்ந்துவருவோர் இருந்த ஊர். கலயநல்லூர் தேவாரத் தலம். சுந்தரரின் மிக அழகான பதிகம், கலியாணங்களில் சிவாச்சாரியர்களும், ஓதுவாமூர்த்திகளும் இப்பதிகப் பாடல்களைப் பாடுவது வழமை. கலயநல்லூர் அருகே சாவக்கோட்டை/சாக்கோட்டை ஜாவா தீவின் தொடர்பு காட்டும் பெயர். சாவம்+ ஊர் = சாவூர். இவ்வூர் சென்று தமிழ் நாடக, சங்கீத, நாட்டியங்களை அங்கே இருந்த ஹிந்துக்களுக்கு போதித்தவர் சாவூர் பரஞ்சோதி. இன்று, பலித் தீவில் கிரந்த எழுத்து தான். பரத நாட்டியம் போன்ற நடனம் இந்தோனேசியாவில் மிகுதி. கிரந்த எழுத்து இந்தோனேசியா உட்பட தென்கீழ் ஆசியா முழுக்கப் பரவியது. தாய்லாந்து, கம்போடியா, பலித் தீவு இன்னமும் வைத்துள்ளன (சற்று மாறுதல்களுடன்). நாட்டிய ஆசான் பெயர் சாவூர் பரஞ்சோதி. இவர் ஓலைநாயகமாகவும் திகழ்ந்தவர். சோழக் கல்வெட்டுகள் தாம், வட்டெழுத்தை நீக்கி, கிரந்த எழுத்தில் இருந்து தமிழ் எழுத்தாக உருவெடுத்தது. இன்றும் தொல்காப்பியத்தின் 18 மெய், கூடவே ஸம்ஸ்கிருத 5 மெய் யூனிகோட் எழுதுருவில் பயன்கொள்கின்றனர் தமிழர். இவற்றைத் தமிழில் பல நூறுமுறை பயன்படுத்தினோர்களில் முக்கியமானர்கள் சோழ மகாராஜாக்கள். இந்தியாவின் இரு செம்மொழிகளையும் நுட்பமாக அறிந்து நாட்டிய, நாடக, ஆவணப் பேராசானாக விளங்கியவர் சாவூர் பரஞ்சோதி.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Nov 20, 2024, 11:06:14 AM11/20/24
to Santhavasantham
சீர்காழியில் தமிழிசை மூவர் தோன்றினர். சங்கீதமும், நாட்டியமும் காவேரி ஆற்றங்கரைக் கோவில்களில் முத்தமிழும் வளர்ந்து வந்ததன் முழுவிளைச்சலாக வளர்த்தெடுத்தனர். அவர்களை அடுத்து, கர்நாடக சங்கீதத்திற் சிறந்த மூவர் (Carnatic Trinity) திருவாரூரில் பிறந்தார்கள்.      பார்க்க: மு. அருணாசலம் ஐயா நூல்கள். தமிழிசை மூவருக்கெல்லாம் பாட்டனாக, ராஜராஜசோழன், ராஜேந்திர சோழன் காலத்திலே, சைவ சமயத்தைச் சார்ந்த சங்கீத ஆசான், பெரிய நாட்டியாச்சாரியார் ஆகப் பரஞ்சோதி விளங்கியுள்ளார். கிழக்கு, மேற்கு தேசங்களில்  எல்லாம் அவர் ஞானம், புகழ் பரவியது. நட்டுவாங்கத்தில் பெருஞானம் கொண்டு 400 தளிச்சேரிப் பெண்டுகளுக்கும் நாயகமாக ராஜராஜ சோழன் தஞ்சாவூர்க் கோவிலில் நியமித்தான். ராஜராஜனின் மறைவிற்குப் பின்னர் ராஜேந்திர சோழன் புதிதாய்க் கட்டிய  கங்கை கொண்ட சோழபுரத்தில் சங்கீதம், நாட்டியம் வளர்க்கத் தலைமை ஆசானாக நியமித்தான். சிவனுக்குக் கோவிலில் விளக்கெரிக்க 96 ஆடுகளை நிவந்தமாக அளித்தவன் சோனகன் சாவூர் பரஞ்சோதி. தமிழ் நிகண்டுகள் சோனகன் = உவச்சன் என்கின்றன. யவன தேசத்துக் கலையாகிய நாட்டிய மரபுகளைக் கூடியாட்டம், கதகளி, தெய்யம் போன்றவற்றில் - உ-ம்: முகமூடி அணிவது - காண்கிறோம். யவன- நாடகத் திரைச்சீலைக்கு யவனிகை எனப் பெயர். யவன- சோனக- ஜொன்னக- என்ற பெயர் இசைவேளாளருக்கு உண்டு. ஜோனக-/ஜொன்னக- தமிழின் கவிச்சக்கிரவர்த்தி கம்பன் பாரதத்தின் இரு செம்மொழிகளிலும் நிபுணன். உவச்சர் மரபு. மூன்றாம் குலோத்துங்கன் காலம். கம்பன்  போன்ற  முத்தமிழ் மன்னர்களுக்கு முன்னோனாக சோழப் பேரரசில் விளங்கியவர் பரஞ்சோதி ஆவார்.  இவ்வுண்மையை அறிய சோழர் கல்வெட்டுகள் உதவுகின்றன.

(1) நெருவூர் >> நெரூர் (கரூர் அருகே).  நெரு- நெருஞ்சி. சதாசிவ பிரமேந்திரர் சமாதி.
(2) கருவூர் >> கரூர் (சங்க காலச் சேரர் தலைநகர் வஞ்சி மாநகர்  அரண்மனை இருந்த "downtown". கருவூரில் இருந்த சங்கப் புலவர் பலர்.)
(3) நொச்சியூர் >> நொச்சூர் (பாலக்காட்டுக் கணவாய் ஊர். வணிகப் பெருவழியில் இருப்பது. நொச்சி நியமம் பழைய பெயர். அகஸ்திய ஆசிரம் உண்டு. "அகஸ்தியர்" பாடிய கர்நாடக சங்கீதப் பாடல்கள் பிரபலம். ஒரு நூற்றாண்டு ஆன பாடல்: ஸ்ரீ சக்ர ராஜ சிம்ஹாசனேஸ்வரி.    https://www.youtube.com/watch?v=Gz3ghv8E0uI
https://www.youtube.com/watch?v=LNdrZQvC7WI
(4)ஹரவூர் > ஹரூர். கொங்குநாட்டில் புகழ்மிக்க சிவஸ்தலம் தீர்த்தமலை. சைவ எல்லப்ப நாவலர் பாடிய (வட கொங்கின்) தீர்த்தகிரிப் புராணம் அழகியது. தீர்த்தகிரி என்ற பெயர் மேற்கு மாவட்டங்களில் மிகுதி. அம்மலை அடிவாரத்தில் ஹரூர் உள்ளது. ஹர(ன்)     + ஊர் = ஹரவூர் > ஹரூர் (அரூர்). Harur taluk, Dharmapuri district.
(5) பரவூர் >> பரூர்.  Parur synagogue is in the Jew Street, Paravur.
https://medium.com/@inkedbypinklace/the-synagogue-of-parur-25a456c1a6d7
(6) சாவம் + ஊர் >> சாவவூர் >> சாவூர்.  சாவம் < யாவம் (Java).சாவச்சேரி, யாழ்ப்பாணம்.
தமிழ்நாட்டு சங்கீதம், நாட்டிய ஆசானாய் யாவத் தீவு சென்று போதித்தவர் சாவூர் பரஞ்சோதி.

In the above 6 examples of place names, consonant assimilation of -vavuu- to -vuu- occurs. More assimilation examples,
(1) உதாஹரணம் > உதாரணம்
(2) ராசாவானாலும் > ராசானாலும் ( ‘டில்லிக்கு ராஜானாலும் தல்லிக்குப் பிள்ளை’)
(3) கோடினகா (அ) கோடியகா > கோடிகா
(4) வியவஹாரம் (vyavaharam) > விவகாரம்
(5) அழகர்மலை > அழககிரி > அழகிரி/அளகிரு
https://groups.google.com/g/houstontamil/c/4iXZNybCEIU/m/3CeLtkXBBQAJ

NG
Reply all
Reply to author
Forward
0 new messages