--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/7a1e6981-2fd4-4ad0-81e5-707815ded2b2n%40googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcuBWrhqvuYKQSjHsF07BxGA1tCopPGs2Gp5tS%2BjKawNLA%40mail.gmail.com.
குளக்கீழ் விளைந்த களக்கொள் வெண்ணெல்
முகந்தனர் கொடுப்ப, உகந்தனர் பெயரும்
தென்னம் பொருப்பன் புன்னாட்டுள்ளும்,
ஏழெயில் கதவம் எறிந்து, கைக்கொண்டு நின்;
பேழ்வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை;
பாடுநர் வஞ்சி பாடப், படையோர்
தாதுஎரு மறுகின் பாசறை பொலியப்,
புலராப் பச்சிலை இடையிடுபு தொடுத்த
மலரா மாலைப் பந்துகண் டன்ன
ஊன்சோற் றமலை பாண்கடும்பு அருத்தும்
செம்மற்று அம்மநின் வெம்முனை இருக்கை;
வல்லோன் தைஇய வரிவனப்பு உற்ற
அல்லிப் பாவை ஆடுவனப்பு ஏய்ப்பக்
காம இருவர் அல்லது, யாமத்துத்
தனிமகன் வழங்காப் பனிமலர்க் காவின்,
ஒதுக்குஇன் திணிமணல் புதுப்பூம் பள்ளி
வாயின் மாடந்தொறும் மைவிடை வீழ்ப்ப
நீஆங்குக் கொண்ட விழவினும் பலவே" புறம்.33
சிறு சோறாக்கும் கொண்டாட்டத்தில் செம்மறிக் கறிச்சோறு
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHctek9aNR58jZ-45zHHtSMuajFLhQ8K8MhJgzSYW9H69hA%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUcSbqEXbbYrqmB0VcqNab6%2B5CY3u2gJPqxwAM2V8%3DnvnA%40mail.gmail.com.
வருந்துகிறேன்."வாயின் மாடம் தொறும் மைவிடை வீழ்ப்ப" புறம்.33(இது பாடலில் இறுதி அடிக்கு முந்தைய அடி. என் விரலில் எதிர்பாராத விதமாகச் சிறு நோவு காரணமாகத் துழாவி எடுத்து ஒட்டிய போது நேர்ந்த தவறு. ) என்ற அடி நான் ஒட்டிய பாடலில் விடுபட்டுள்ளது. அது செம்மறிக் கறிச்சோறு தான்.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcuRRAA3r7Fr28%3DfuuszOpDivPvxrThdkRnu6V1D6NyoDw%40mail.gmail.com.
அட்டு ஆன்று ஆனாக் கொழுந் துவை ஊன் சோறும் | |
பெட்டாங்கு ஈயும் பெரு வளம் பழுனி, | |
நட்டனை மன்னோ, முன்னே; |
தனிமகன் வழங்காப் பனிமலர்க் காவின்,
><காம இருவர் அல்லது, யாமத்துத்தனிமகன் வழங்காப் பனிமலர்க் காவின்,
>
வாயில் மாடந்தொறும் மை விடை வீழ்ப்ப,, ம் நீ ஆங்குக் கொண்ட விழவினும் பலவே' (புறம். 33:10-22) இப்பாடலில் குறிக்கும் விழவைச் 'சிறுசோற்று விழவு' எனக் குறிக்கின்றார். பழைய உரைகாரர். சிறுசோறு போல மன்னனது கோநகரில் அவனது பெருங்கோயிலில் நிகழ்ந்த பெருஞ்சோற்று விழா நிகழ்ச்சியைப் பின்வரும் புறப்பாட்டுப் பகுதியில் காணலாம். "அந்தோ எந்தை அடையாப் பேர் இல்; 'வண்டுபடு நறவின் தண்டா மண்டையொடு வரையாப் பெருஞ்சோற்று முரிவாய் முற்றம், வெற்று யாற்று அம்பின் எற்று? அற்று ஆகக் கண்டெனென் மன்ற; சோர்க, என் கண்ணே! (புறம். 261:1-5) ஒரு மன்னன் இறந்துபட அவனது பெருஞ்சோறு வழங்கிய கோயில் முற்றம் பாழ்பட்டுவிட்டதை நினைந்து வருந்திப் பேசுகிறார் ஆவூர் மூலங்கிழார். ஔவையார் அதியமான் இறந்தபோது பாடிய கையறுநிலைப் பாடலில் சிறுசோறு, பெருஞ்சோறு இரண்டையும் குறித்ததோடு அவன் வீரர் முதலியோருக்குக் கள் வழங்கியமையும் பேசுகிறார்.
பதிற்றுப்பத்து 30 = பெருஞ்சோற்று வருணனை:
https://archive.org/details/sanga-thamizhar-vazhipaadum-sadangugalum-shanmugam-pillai/page/126/mode/2up?q=பெருஞ்சோறு
Lovers only park
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHZUM6jQPcrGCMraXjK1881pm-C%2BKj%3DPmrDzka6qZrvxZqg9ow%40mail.gmail.com.
தனிமகன் வழங்காப் பனிமலர்க் காவின்,/// வேந்தர் ஐயா சுட்டிக் காட்டியது ...
இங்கு குறுநில மன்னரின் அடர்ந்த தோட்டத்தைச் சுட்டியதாகத் தான் கொள்கிறேன் ஐயா.
அவர்கள் குளத்துப் பாசனத்தின் மூலம் தான் நெற்பயிரை விளைவிக்கின்றனர். ஆனால்...
அவரது மாளிகையைச் சூழ்ந்த தோட்டம் இங்கே பேசப்படுகிறது. யாமத்தில் தனியாக யாரும் செல்ல அஞ்சக் கூடிய செறிவான தோட்டம். பூக்கள் உதிரப் பூம்பள்ளி சூழ்ந்த மாளிகை. அல்லிக்கூத்து ஆடப் புனைந்த பாவை இணை தவிர யாரும் அச்சம் கொள்ளக் கூடிய சூழல். அத்தகைய மாளிகையின் கதவை யானையால் சிதைத்துப்; புலிச்சின்னம் பொறித்து; கிடாவெட்டும் நடக்கிறது.
சக
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdF07ebjk8PZ%3DB8-f2DwNyfGH68D-8BznQZJ5B-%3DviF0w%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcv1wA-z95ZnSD-3f1aHM%3Dvxj0RK8xAA88Qw2obV-JHPyA%40mail.gmail.com.
வெண் (அ) வெண்ணு = வெண்ணெய் என்று உரைகாரர் கூறுவர்.வெள்யாட்டுக்கு வெண்/வெண்ணு என எங்காவது தமிழ் இலக்கியம், அல்லது மக்கள் வழக்கில் உண்டா எனப் பார்க்கணும்.
On Sun, Oct 8, 2023 at 6:54 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:வெண் (அ) வெண்ணு = வெண்ணெய் என்று உரைகாரர் கூறுவர்.வெள்யாட்டுக்கு வெண்/வெண்ணு என எங்காவது தமிழ் இலக்கியம், அல்லது மக்கள் வழக்கில் உண்டா எனப் பார்க்கணும்.மை என்றால் செம்மறி (செம்பிலிக் கிடாய் என்போம்). அதுபோல், வெண்/வெண்ணு = வெள்ளாட்டின் ஒரு பெயர் என்பது பொருத்தமே.நச்சர் என்ன சொல்லுகிறார் எனவும் பார்க்கணும்.
எறிதல் - நீங்கள் வெண் ‘வெண்யாடு’ எனக் கோடலுக்குப் பொருந்துகிறது:எறிதல் 2. To hack, cut into pieces; வெட்டுதல். எறிந்து களம்படுத்த வேந்துவேள் (புறநா. 19, 12). 3. To chop, as mutton; அறுத்தல். எறிக திற்றி (பதிற்றுப். 18, 2). 4. To shiver into pieces, smash; முறித்தல். கதவெறியாச் சிவந்துராஅய் (புறநா. 4, 10).mutton biryani-யின் தூய தமிழ்ப்பெயர்: “மாக்கண் அமலை” எனலாம்.மாக்கண் - தமிழர் உலகுக்குத் தந்த இரும்பு மெட்டலர்ஜியின் கலைச்சொல். தமிழிசைக் கருவிகளில் - முரசு, தண்ணுமை எனும் மிருதங்கம், தவில் போன்றவற்றில் பயன்படுவதை ஏராளமான சங்கப் பாடல்களில் காண்கிறோம். நறுமணம், ஸ்பைஸஸ், ... சேர்த்துச் செய்யும் மட்டன் பிரியாணி “மாக்கண் அமலை”. தண்ணுமைக்கும் மாக்கண் ஆற்றோரத்து கருமண்ணைச் சோறு, பிசின் கலந்து இன்றும் அப்புவது நடைமுறை. “மாக்கண்” இரும்புத் தொழிற்சொல் எவ்வாறு தமிழிசையை வர்ணிக்கும்போது சங்கச் சான்றோர் ஆள்கின்றனர் என விரிவாக எழுதித் தருவேன்.இன்னொன்று: அம்- அம்மு- > அம்மி என்ற சொற்பிறப்பை விளக்கினேன். https://groups.google.com/g/vallamai/c/wJWaZD9Ay0E/m/uzkTqBGKAwAJகிடாய் வெட்டில், அம்மனுக்குப் பொலிசை (> பலி எனும் வடசொல்) போடும்போது“கிடாய் துளுக்கிவிட்டது” என்ற பின்னரே பண்டாரம் வெட்டுவான். துளுக்கு- துலுக்கு என எழுதுகின்றனர். கடாத்துளுக்கு ஆயிரக்கணக்கில் கிராமதேவதைகளுக்கும், கல்கத்தா காளிக்கும் தினந்தோறும் நடக்கிறது, ராமகிருஷ்ண பரமஹம்சர் பிராமணர். காளிகோயில் உபாசகர்.
துள்- துளுக்குதல். இது துண்ணு-தல். இதன் தொழிற்பெயர் துண்ணி. இச்சொல் சில மாறுபாடுகளுடன், ஆண் உடல் அங்கங்களில் ஒன்றுக்கு தமிழிலும், பிற த்ராவிட பாஷைகளிலும், பிராகிருதத்திலும் இருக்கிறது. துள்- > துண்- இதுபோல், வெள்- > வெண்- ‘வெள்ளாடு’. அம்மனுக்கு வெண்ணுத் துளுக்கு பூசாரி செய்வது கிராமதேவதை வழிபாடு. கடம்பன் என்னும் கடப்பமாலை அணிந்த வேலன் பூசாரி, திருமுருகில் முருகனுக்குப் பொலி (> பலி) போடுகிறான்,
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUeKHaNwDCkqNkCLYnyFkyoY%3DCXsuAMfpXYhnx2WRpwFEg%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcvx0Oaj5_RNGoX8MW%2BxkNj5ZSE7n_qhi8msSrJW4M_VZw%40mail.gmail.com.
///இங்கு குறுநில மன்னரின் அடர்ந்த தோட்டத்தைச் சுட்டியதாகத் தான் கொள்கிறேன் ஐயா.
அவர்கள் குளத்துப் பாசனத்தின் மூலம் தான் நெற்பயிரை விளைவிக்கின்றனர். அவரது மாளிகையைச் சூழ்ந்த தோட்டம் இங்கே பேசப்படுகிறது. யாமத்தில் தனியாக யாரும் செல்ல அஞ்சக் கூடிய செறிவான தோட்டம். பூக்கள் உதிரப் பூம்பள்ளி சூழ்ந்த மாளிகை. அல்லிக்கூத்து ஆடப் புனைந்த பாவை இணை தவிர யாரும் அச்சம் கொள்ளக் கூடிய சூழல். அத்தகைய மாளிகையின் கதவை யானையால் சிதைத்துப்; புலிச்சின்னம் பொறித்து; கிடாவெட்டும் நடக்கிறது./// சக 07.10.'23 எழுதியது...
அல்லியம் என்று சிலப்பதிகாரம் பேசும் கூத்து வகை. மிகப் பழைய பொம்மைக் கூத்தாக இருக்க வேண்டும்.
எனக்கு விபரம் தெரிய கோயில் திருவிழா தொடர்பாக நடைபெறும் ஊர்வலங்களில் 'ஆலி' எனும் இரு பொம்மைகளுக்குள் (ஆண் ஒன்றும் பெண் ஒன்றும்- மனிதரின் இயல்பான உயரம்& பருமனை விடப் பெரிதாக...) மனிதர் நுழைந்து ஆடிக் கொண்டு வருவதைக் கண்டு இருக்கிறேன்.
உடுப்பி கிருஷ்ணன் கோயிலுக்குச் சென்ற போது வாசலில் அது போல் இரண்டு பொம்மைகள்; ஆண் ஒன்றும் பெண் ஒன்றும்; மிகுந்த அலங்காரத்துடன் கண்டேன்.
நான் இரண்டாவது முறை உடுப்பி சென்ற போதும் அப்பொம்மைகள் அங்கேயே இருந்தன.
குறிப்பிட்ட பாடலில் இடம் பெறும் குறுநில மன்னர் தம் நாட்டுத் திருவிழாவில் அல்லியம் என்று அழைக்கப்பட்ட கூத்து வகையினை நடத்தியவராய் இருக்க; விழா முடிந்த பிறகு அவை மன்னனின் தோட்டத்தில் ஜோடியாக நிறுத்தி வைக்கப் பட்டு இருக்க; கோவூர் கிழார் அதை நேரில் பார்த்ததால்; யாமத்தில் யாரும் செல்ல அஞ்சும் அடர்ந்த தோட்டத்தில் அல்லிப் பாவைப் பொம்மைகள் தான் செல்லும் என்று எழுதி இருக்கிறார்.
அடுத்த ஆண்டின் திருவிழாவில் அவை மீண்டும் நேர்த்தியாகப் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் ஆட்டம் நடைபெறும்.
இதில் குறிப்பிடத் தக்க வரலாற்றுக் கூறும் உள்ளது. கடவுள் உருவ வழிபாடும் தொன்மக் கதைகளும் தொகைப் பாடல்கள் தோன்றிய காலத்திலேயே வழக்கத்தில் இருந்தன. வைணவம் தொடர்பாக நடைபெறும் அல்லிக் கூத்தை; பலராமனைக் குலதெய்வமாகக் கொண்ட வேளாளர் ஆகிய குறுநில மன்னர் போற்றிப் பின்பற்றியமைக்கு இப்பாடல் சான்று ஆகிறது.
இப்படிப்பட்ட வழக்கங்களைக் கிண்டலடிக்கும் தொகைப் பாடல்களும் உள்ளன.
சக
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHZUM6hrWi5TnG_%3DSj-iEck3DePpq7bJpTFgGNTpFOp63XNyHg%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcv9Dzmqw2%2Bb9aFzsBoofTwVyTCSoyuFos3d0mLCD3EA%3DA%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHZUM6g958idVhOvoRDot-s55tvXo_OpBSWsbtNGiwEq87_APQ%40mail.gmail.com.
முள்அரித்து இயற்றிய வெள்ளரி வெண்சோறு…
திண்டோள் நன்னர்க்கும் அயினி சான்ம்“
(மலை.465-467).
'அரி' என வெண்மையான அரிசி
(=வெள்ளரி) பாடலில் குறிக்கப்படுகிறது.
"பெரும்பெயர் ஆதி, பிணங்கரில் குடநாட்டு, எயினர் தந்த எய்ம்மான் எறிதசைப் பைஞ்ஞிணம் பெருத்த பசுவெள் அமலை, வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய, | 15 |
இரும்பனங் குடையின் மிசையும்" |
'கறிசோறு' என்ற தொடரைக் கபிலர் தான் முதலில் கையாள்கிறார் (புறம்.14). அவரது பயன்பாட்டில் கறியும் சோறும் எனப் பொருள் கொள்ளத்தக்க வகையில் உம்மைத் தொகையாகத் தான் வழங்குகிறது. இடையில் /ப்/ ஒற்று மிகவில்லை.
On Saturday, October 14, 2023 at 3:04:28 AM UTC-5 kanmani...@gmail.com wrote:'கறிசோறு' என்ற தொடரைக் கபிலர் தான் முதலில் கையாள்கிறார் (புறம்.14). அவரது பயன்பாட்டில் கறியும் சோறும் எனப் பொருள் கொள்ளத்தக்க வகையில் உம்மைத் தொகையாகத் தான் வழங்குகிறது. இடையில் /ப்/ ஒற்று மிகவில்லை.இடையில் /ச்/ ஒற்று மிகவில்லை.இன்னொரு ஊன்சோறு. தென்மேற்குப் பருவமழை தொடங்கியதும், கரையான் புற்றுகளில் இருந்து ஈசலை மலசர்கள் பிடித்து, வெள்ளைத் துண்டில் கட்டிக் கொணர்வர். அதை வறுத்து உண்பர். ஈசல் - ஈயல் என வழங்கி இருக்கிறது. அந்த ஊன் உண்டதும் சங்க நூல்களில் உள்ளது.
இன்னொரு ஊன் உணவும் உண்டு. அதைப் படையல் ஆக்கியும் தந்தனர். முன்பு பேசினோம்.முன்னதாக இந்த இழையில் பேசிய ஏழுவகைக் கறிச்சோறு தான் நெல்லரிசியோடு சேர்த்துச் சமைக்கப் பட்டுள்ளன.உடும்பு, மான், (உப்புக்கண்டம்) ஆகிய ஊன் வகைகள் மூங்கிலரிசியோடும் புல்லரிசியோடும் சேர்த்துச் சமைக்கப்படுவதைக் காண்கிறோம்.குறிஞ்சியிலும் முல்லையிலும் வேட்டையாடிப் பெற்ற ஊன் மூங்கிலரிசியோடு இணை சேர்ந்த வழிவகையைப் புரிந்து கொள்ள இயல்கிறது.(முற்றும்)சக
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/8337c6fc-e5d9-499a-be92-870e7e8d79a1n%40googlegroups.com.
On Saturday, October 14, 2023 at 3:04:28 AM UTC-5 kanmani...@gmail.com wrote:'கறிசோறு' என்ற தொடரைக் கபிலர் தான் முதலில் கையாள்கிறார் (புறம்.14). அவரது பயன்பாட்டில் கறியும் சோறும் எனப் பொருள் கொள்ளத்தக்க வகையில் உம்மைத் தொகையாகத் தான் வழங்குகிறது. இடையில் /ப்/ ஒற்று மிகவில்லை.இடையில் /ச்/ ஒற்று மிகவில்லை.இன்னொரு ஊன்சோறு. தென்மேற்குப் பருவமழை தொடங்கியதும், கரையான் புற்றுகளில் இருந்து ஈசலை மலசர்கள் பிடித்து, வெள்ளைத் துண்டில் கட்டிக் கொணர்வர். அதை வறுத்து உண்பர். ஈசல் - ஈயல் என வழங்கி இருக்கிறது. அந்த ஊன் உண்டதும் சங்க நூல்களில் உள்ளது.
கறியும் சோறும் எனப் பொருள் கொள்ளத்தக்க வகையில் உம்மைத் தொகையாகத் தான் வழங்குகிறது. இடையில் /ப்/ ஒற்று மிகவில்லை.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUfo4QQQoyc%2BeoOwMYbiuFKYONViHBOngp1G2N_zo2u%2B1Q%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcvXOAm81boJaThQx4BsNPCnJO2BcwRHyJcn4UG7dbsd8Q%40mail.gmail.com.