ஊர்ப் பெயரால் அறியப்படும் தமிழர்கள்
-------------------------------
பல நண்பர்கள், பொதுவெளியில் தமிழ்நாட்டில் பிறந்தாலும், அவர்கள் சென்று
வாழ்ந்த பெயரால் பரவலாக மக்கள் அறிவர். உ-ம்: டெல்லி கணேஷ், ஒரிசா
பாலகிருஷ்ணன் (ஐஏஎஸ்), ஒரிசா பாலு, ... வேறு யாராவது பெயர் ஞாபகத்திற்கு
வருகிறதா? மலேசியா வாசுதேவன், ... பெயர் அளிப்பாருக்கு நனிநன்றி.
மிகப் பெரிய சைவர்களாகவும், சக்கரவர்த்திகளாகவும் விளங்கிய ராஜராஜ சோழன்,
ராஜேந்திர சோழன் போற்றிய சைவர் பரஞ்சோதி. பல பதிற்றாண்டுக்
கல்வெட்டுகளில் மிக உயர்ந்த வாசகங்களால் வர்ணிக்கப்படுபவர் சாவூர்
பரஞ்சோதி. நாட்டிய நாடக ஆசான்களில் மிகச் சிறந்தவர். மகாநட்டுவனார்
இவரைக் கந்தருவப் பேரரையன் என்பர். யாவம்/சாவம்/சாவகம் என்பது இன்றைய
இந்தோனேசியாவில் ஜாவா தீவு. இன்றும் யாழ்ப்பாணத்தில் சாவச்சேரி உள்ளது.
ஜாவா தீவுக்கு கடல் வழியாகச் சென்று வாழ்ந்துவருவோர் இருந்த ஊர்.
கலயநல்லூர் தேவாரத் தலம். சுந்தரரின் மிக அழகான பதிகம், கலியாணங்களில்
சிவாச்சாரியர்களும், ஓதுவாமூர்த்திகளும் இப்பதிகப் பாடல்களைப் பாடுவது
வழமை. கலயநல்லூர் அருகே சாவக்கோட்டை/சாக்கோட்டை ஜாவா தீவின் தொடர்பு
காட்டும் பெயர். சாவம்+ ஊர் = சாவூர். இவ்வூர் சென்று தமிழ் நாடக,
சங்கீத, நாட்டியங்களை அங்கே இருந்த ஹிந்துக்களுக்கு போதித்தவர் சாவூர்
பரஞ்சோதி. இன்று, பலித் தீவில் கிரந்த எழுத்து தான். பரத நாட்டியம் போன்ற
நடனம் இந்தோனேசியாவில் மிகுதி. கிரந்த எழுத்து இந்தோனேசியா உட்பட
தென்கீழ் ஆசியா முழுக்கப் பரவியது. தாய்லாந்து, கம்போடியா, பலித் தீவு
இன்னமும் வைத்துள்ளன (சற்று மாறுதல்களுடன்). நாட்டிய ஆசான் பெயர் சாவூர்
பரஞ்சோதி. இவர் ஓலைநாயகமாகவும் திகழ்ந்தவர். சோழக் கல்வெட்டுகள் தாம்,
வட்டெழுத்தை நீக்கி, கிரந்த எழுத்தில் இருந்து தமிழ் எழுத்தாக
உருவெடுத்தது. இன்றும் தொல்காப்பியத்தின் 18 மெய், கூடவே ஸம்ஸ்கிருத 5
மெய் யூனிகோட் எழுதுருவில் பயன்கொள்கின்றனர் தமிழர். இவற்றைத் தமிழில் பல
நூறுமுறை பயன்படுத்தினோர்களில் முக்கியமானர்கள் சோழ மகாராஜாக்கள்.
இந்தியாவின் இரு செம்மொழிகளையும் நுட்பமாக அறிந்து நாட்டிய, நாடக, ஆவணப்
பேராசானாக விளங்கியவர் சாவூர் பரஞ்சோதி.
தமிழிசை என உருவாக்கிய சீர்காழி மூவருக்கும் மூதாதையர் பரஞ்சோதி
போன்றோரே. சீர்காழி மூவர் செய்த உருப்படிகள், கீர்த்தனங்கள் பின்னர்
கர்நாடக சங்கீதமாக, திருவாரூரில் பிறந்த மூவர் பாடினர். அது நாயக்கர்
ஆட்சிக் காலம்.
அவர் பெயரின் முன்னம் உள்ள பெயரடை மிக முக்கியமானது. ஏன் அப்பெயரைப்
பரஞ்சோதியாருக்குக் கல்வெட்டில் ராஜராஜ சோழனும், ராஜேந்திர சோழனும்
பொறித்தனர் என அடுத்துப் பார்ப்போம்.
நா. கணேசன்
https://nganesan.blogspot.com