கனக வல்லி கமழ்பதம் வாழ்க - திருவெவ்வுள் கனகவல்லி தாயார் துதி

2 views
Skip to first unread message

இமயவரம்பன்

unread,
Feb 19, 2026, 8:07:58 PM (14 hours ago) Feb 19
to santhavasantham
கனக வல்லி கமழ்பதம் வாழ்க - திருவெவ்வுள் கனகவல்லி தாயார் துதி
(கட்டளைக் கலிப்பா)

இனியள் எங்கள் இருந்துணை ஆனவள்,
… இலங்கும் எவ்வுள் இருந்துல காள்பவள், 
வினைக டிந்து மிடிமையும் மாய்ப்பவள், 
… விழையும் நன்மை விரைவினில் சேர்ப்பவள்,
மனம்நி றைந்த மகிழ்வினை வார்ப்பவள்,
… வரும் பிணிக்கு மருந்தெனக் காப்பவள்,
கனிவு மிக்க கடைவிழிப் பார்வையள் 
… கனக வல்லி கமழ்பதம் வாழ்கவே.

புவனம் யாவும் புரந்திடும் தாயவள்,
… புனித நான்மறை வான்பொருள் ஆனவள், 
குவியும் அன்புடன் கூவித் துதிப்பவர் 
… குறைகள் தீர்த்தருள் கூரும் குணத்தினள்,
எ(வ்)வுள் இராகவன் மார்பினில் வாழ்பவள்,
… எழில்நி லாவென வாண்முகம் வாய்ந்தவள்,
கவிதை யாவிலும் ஓர்களிப் பானவள் 
… கனக வல்லி கமழ்பதம் வாழ்கவே.

- இமயவரம்பன்

Siva Siva

unread,
Feb 19, 2026, 9:08:51 PM (13 hours ago) Feb 19
to santhav...@googlegroups.com
Nice.

எ(வ்)வுள் இராகவன் மார்பினில் வாழ்பவள்,/

Is that a Rama temple?
Or, do we have such prior usage?

V. Subramanian


On Thu, Feb 19, 2026 at 8:07 PM இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
கனக வல்லி கமழ்பதம் வாழ்க - திருவெவ்வுள் கனகவல்லி தாயார் துதி
(கட்டளைக் கலிப்பா)

இமயவரம்பன்

unread,
Feb 19, 2026, 9:15:18 PM (13 hours ago) Feb 19
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
Thank you!

The deity’s name is வீரராகவன்.
We also call Him as ராகவன்.

Ram Ramakrishnan

unread,
Feb 19, 2026, 9:20:18 PM (13 hours ago) Feb 19
to santhav...@googlegroups.com
அருமையான கட்டளைக் கலிப்பாக்கள், திரு. இமயவரம்பன் 

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 19, 2026, at 21:15, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:

Thank you!
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/D62CEEEB-FB42-4490-9D4F-FE44718145F9%40gmail.com.
Reply all
Reply to author
Forward
0 new messages