மதிசூடி துதிபாடி - 18

26 views
Skip to first unread message

Siva Siva

unread,
Apr 25, 2026, 11:15:13 AMApr 25
to santhavasantham

As the - "மதிசூடி துதிபாடி - 17" - thread has more than 900 posts, (https://groups.google.com/g/santhavasantham/c/8op3k3Boy8g?hl=en  )
I am starting this new thread - மதிசூடி துதிபாடி - 18

After completing any ongoing set in the #17 thread, new songs can be posted in this thread.

V. Subramanian

Siva Siva

unread,
Apr 26, 2026, 5:52:36 PMApr 26
to santhavasantham

2020-05-11

வழுவூர்

-----------------

(எழுசீர்ச் சந்த விருத்தம் - தனதான தான தனதான தான தனதான தான தனனா)

(சம்பந்தர் தேவாரம் - 2.88.1 - "துளிமண்டி யுண்டு")

* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;


1)

வானோர்க்கி ரங்கி மலைவில்லை ஏந்தி மதில்மூன்றெ ரித்த ஒருவன்

தேனார்க்கும் வாச மலரோடு பாம்பு திரையாரும் ஆறு புனைவான்

தானோக்கும் அன்பர் வினைதீரு மாறு தயைசெய்யு(ம்) நல்ல தலைவன்

மானோக்கி அஞ்ச மதமாவு ரித்து வழுவூரில் நின்ற பரனே.


(தேன் - வண்டு); (ஆர்த்தல் - ஒலித்தல்); (ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்);


2)

மதனாகம் வேவ நுதலால்வி ழித்த மணிகண்டன் ஆறு முகமார்

சுதனாரை நல்கி இமையோர்கள் உற்ற துயர்தீர்த்த நல்ல துணைவன்

கதநாகம் ஆறு தரிசென்னி மீது கடிநாறு கொன்றை புனைவான்

மதவார ணத்தை உரிசெய்து போர்த்து வழுவூரில் நின்ற பரனே.


(சுதன் - மகன்);

(கதம் - கோபம்); (கடி - வாசனை);

(வாரணம் - யானை);


V. Subramanian


On Sat, Apr 25, 2026 at 11:14 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

Saranya Gurumurthy

unread,
Apr 27, 2026, 7:45:01 PMApr 27
to சந்தவசந்தம்
தொண்டை நாட்டுத் தலங்கள்

237. (1). திருக்கச்சி ஏகம்பம்

சோகம் படராது தொண்டரைக் காத்தருள்வான்
ஏகம்பம் மேவும் இறை


238. (2). திருக்கச்சி மேற்றளி (பிள்ளைப்பாளையம்)

சேற்றினில் வீழ்ந்து சிதையாதே திருக்கச்சி
மேற்றளி மேயானை மெச்சு

சேறு - சம்சாரம் 


239. (3). திருவோணகாந்தன் தளி

வீணனாய் வாழ்ந்து வெதும்பாதே திருக்கச்சி
ஓணகாந் தன்தளியை ஓர்

ஓர்தல் - தொழுதல் / நினைத்தல்


240. (4). திருக்கச்சி அனேகதங்காவதம்

கனாவொத்த வாழ்வைக் கருதாதே கச்சி
அனேகதங் காவதத்தை அண்டு

அண்டுதல் - அடைதைல்


241. (5). திருக்கச்சிநெறிக்காரைக்காடு

குறிக்கோளில் லாமல் குலாவுதல் கேடு;
நெறிக்காரைக் காடனை நேடு


Regards,
Saranya

Siva Siva

unread,
Apr 27, 2026, 9:57:53 PMApr 27
to santhav...@googlegroups.com
/ குறிக்கோளில் லாமல் குலாவுதல் கேடு;
  நெறிக்காரைக் காடனை நேடு /

Did you not try to use கச்சி in the verse?

V. Subramanian

Saranya Gurumurthy

unread,
Apr 28, 2026, 2:52:10 AMApr 28
to santhav...@googlegroups.com
Actually I didn't try sir. Thank you for the suggestion. 

குறிக்கோளில் லாமல் குலவாதே; கச்சி
நெறிக்காரைக் காடனை நேடு

Have changed like this.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCMvLQrf1F_fS2oLCxkMFqTZRpoLezYbPzFWyrnmiO4Bxw%40mail.gmail.com.


--
Regards,
Saranya

Siva Siva

unread,
Apr 29, 2026, 9:06:51 AMApr 29
to santhavasantham

3)

நலியாத வண்ணம் அடியார்க்கு நாளு(ம்) நல(ம்)நல்கு கின்ற பெருமான்

பொலியார மாக அரவம்பு னைந்த புரிநூலன் இண்டை மதியம்

ஒலியார்த ரங்கம் உடையாறு சூடி ஒளிநீறு பூசும் ஒருவன்

வலியார்க ளிற்றை உரிசெய்து போர்த்து வழுவூரில் நின்ற பரனே.


(ஆரம் - மாலை);

(இண்டை - முடிமாலை); (தரங்கம் - அலை);


4)

பாதங்கள் ஏத்தி வழிபாடு செய்து பலதேவர் வேண்ட அவர்தம்

ஏதங்கள் தீர வடிவேலை ஏந்தும் இளையோனை நல்கும் இறைவன்

வாதங்கள் செய்த அமண்மாய வைகை நதியேடு நீந்த வருவான்

மாதங்கம் ஒன்றை உரிசெய்து போர்த்து வழுவூரில் நின்ற பரனே.


(ஏதம் - துன்பம்);

(மாதங்கம் - யானை);


5)

கல்லானை முன்பு பலர்முன்க ரும்பு களியோடு தின்ன வருவான்

கொல்லானை முன்னர் உழவார அன்பர் தமைநீங்கி ஓட அருள்வான்

நல்லானை ஏத்து விசயற்கு நாடு படையீந்த நாதன் உமைகோன்

வல்லானை தன்னை உரிசெய்து போர்த்து வழுவூரில் நின்ற பரனே.


(படை - ஆயுதம்);


6)

இனவீயெ டுத்து மணமாலை கட்டி இருதாளில் இட்டு மகிழ்வார்

இன(ம்)மாநி லத்தில் இடரார்பி றப்பில் இளையாத வண்ணம் அருள்வான்

முனமோர்பொ ருப்பை வளைவித்து மூன்று புரம்வேவ நக்க முதல்வன்

வனவார ணத்தை உரிசெய்து போர்த்து வழுவூரில் நின்ற பரனே.


(வீ - பூ);

(இனம் - இன்னம் - இன்னும் - மறுபடியும்; மேலும்);

(பொருப்பு - மலை);


V. Subramanian


On Sun, Apr 26, 2026 at 5:52 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

2)

Saranya Gurumurthy

unread,
May 1, 2026, 6:26:05 AMMay 1
to சந்தவசந்தம்
242. (6). திருக்குரங்கணில்முட்டம்

குரங்கணில் முட்டத்துக் கோன்தாள் பணிவார்க்(கு)
அரங்குதல் இல்லை அறி

அரங்குதல் - அழிதல்


243. (7). திருமாகறல் 

மோகம் அறுந்து முதல்வனுடன் கூடிட
மாகறல் மன்னை மதி


244. (8). திருவோத்தூர்

ஓத்தூர் உறையும் ஒளிசேர் சடையானை
ஏத்தாதார்க்(கு) என்றும் இழிவு


245. (9). திருவன்பார்த்தான் பனங்காட்டூர்

மனங்கூர்ந்(து) எழுவார்க்கு மாண்பருள்வன் பார்த்தான்
பனங்காட்டூர் மேயானைப் பாடு


246. (10). திருவல்லம்

வல்லத் தரையன் மலர்தாள் பணிபவர்
செல்லல் படாரெனச் செப்பு

செல்லல் - துன்பம் 


Regards,
Saranya

Siva Siva

unread,
May 1, 2026, 9:16:03 AMMay 1
to santhavasantham

7)

நெய்யார்ந்த தீப(ம்) மணமார்ந்த தூப(ம்) நிறையன்பு கொண்டு மலரும்

கையேந்தி வாழ்த்தும் ஒருமாணி கண்டு கருமேதி யானை முனிவான்

பையார்ந்த பாம்பை அணிமார்பன் எந்தை பனிவெற்பு மங்கை வெருவ

மையார்ந்த மேனி மதமாவு ரித்து வழுவூரில் நின்ற பரனே.


(மேதி - எருமை); (முனிதல் - கோபித்தல்);

(பை - பாம்பின் படம்);

(மை - கருநிறம்); (மதமா - யானை);


8)

கரையற்ற கோபம் எழவானில் ஓங்கு கயிலாயம் வீச வருகோன்

நிரையுற்ற பத்து முடிவாய ரற்ற விரலொன்றை ஊன்று நிமலன்

உரையற்ற மோன நிலையுற்று நால்வர் உடனான ஆல நிழலன்

வரையொத்த மேனி மதமாவு ரித்து வழுவூரில் நின்ற பரனே.


(நிரை - வரிசை);

(வரை - மலை);


V. Subramanian


On Wed, Apr 29, 2026 at 9:06 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

6)

Saranya Gurumurthy

unread,
May 2, 2026, 7:19:43 PMMay 2
to சந்தவசந்தம்
247. (11). திருமாற்பேறு

மாற்பே(று) உறைவானை வாழ்த்தி வணங்குவதே 
மேற்பேறாய் மெச்சப் படும்

மேற்பேறு - மேல் பேறு - மேலான - சிறந்த 


248. (12). திருஊறல் (தக்கோலம்)

ஊறல் உறைவான்தன் ஒண்கழல் ஏத்திட
ஊறில்லை யாமென்(று) உணர்


249. (13). திருஇலும்பையங்கோட்டூர்

இலும்பையங் கோட்டூர் இறைவனைப் போற்ற
அலம்பில்லை யாமே அறி

அலம்பு - வறுமை


250. (14). திருவிற்கோலம் (கூவம்)

விற்கோலம் மேயானை மெய்யன்பால் பாடியவன்
நற்கோலம் காண்பது நன்று

பாடியவன் - பாடி அவன்

251. (15). திருவாலங்காடு (பழையனூர்)

திருவாலங் காடுறையும் தேவன் அருளே
கருவூலம் ஆகும் நமக்கு


Regards,
Saranya

Siva Siva

unread,
May 2, 2026, 8:59:31 PMMay 2
to santhav...@googlegroups.com
See typo correction below.

On Sat, May 2, 2026 at 7:19 PM Saranya Gurumurthy <saranya.g...@gmail.com> wrote:

249. (13). திருஇலும்பையங்கோட்டூர்

இலும்பையங் கோட்டூர் இறைவனைப் போற்ற
அலம்பில்லை யாமே அறி

அலம்பு - வறுமை

==>  இலம்பையங் கோட்டூர்   



sankara dass nagoji

unread,
May 3, 2026, 3:13:15 AMMay 3
to சந்தவசந்தம்
சிவசிவா அவர்கள் 12 ஆண்டுகளாக, இணையத்தில், திருமுறை வகுப்புகள் நடத்தி வருகிறார். இன்றோடு ஒரு மாமாங்கம் நிறைவுறுகிறது. அருமையான விஷயம். என்ன ஒரு ஆர்வம், என்ன ஒரு கடப்பாடு! பாடல்களை ஆங்கில, ஹிந்தி இவற்றில் transliterate செய்து, பலருக்கும் பயன்படும்படி உதவி  செய்கிறார். 

முதல் வகுப்பு - 3-May-2014.
இதுவரை சொல்லிக் கொடுத்த மொத்தப் பதிகங்கள்  = 143
திருப்புகழ் திருவகுப்பு = 43
சம்பந்தர் = 53
அப்பர்  = 46
சுந்தரர்  = 21
திருவாசகம் = 13
9ஆம் திருமுறை = 4
11ஆம் திருமுறை = 6

வாழ்க அவர் சிவத்தொண்டு.

சங்கர தாஸ்.

Nagoji

unread,
May 3, 2026, 3:26:04 AMMay 3
to santhav...@googlegroups.com
See the class details here:




--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/JRTJ1E9mqVI/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/1e2a2874-49a4-48a6-b0a2-eba43c056ed1n%40googlegroups.com.

Siva Siva

unread,
May 3, 2026, 10:37:18 AMMay 3
to santhav...@googlegroups.com
Thanks.

V. Subramanian

Saranya Gurumurthy

unread,
May 3, 2026, 8:58:35 PMMay 3
to சந்தவசந்தம்
Thank you sir. Actually mixed with the other name எலுமியன்கோட்டூர் for இலம்பையங்கோட்டூர்.

Regards,
Saranya

Siva Siva

unread,
May 3, 2026, 10:58:36 PMMay 3
to santhavasantham

Final 3 songs of this padhigam:

9)

அலைமேற்கி டந்த திருமாலு(ம்) நாறும் அலர்மேலி னானும் அறியா

உலவாத சோதி உருவோடு யர்ந்த ஒருவன்சி வந்த சடையன்

இலைமூன்று காட்டும் அயில்வேலு(ம்) மானும் எரியுந்த ரித்த இறைவன்

மலைபோலெ திர்ந்த மதமாவு ரித்து வழுவூரில் நின்ற பரனே.


(அயில் - கூர்மை);


10)

பொய்க்கென்று(ம்) நாணம் இலராகி நீறு புனையார்க்கு நன்மை புரியான்

கைக்கின்ற நஞ்சை அமுதாக உண்டு கறையார்ந்த கண்டம் உடையான்

கைக்கொண்ட போது கழலிட்ட அன்பர் கலிதீர நல்கு வரதன்

மைக்கண்ணி அஞ்ச மதமாவு ரித்து வழுவூரில் நின்ற பரனே.


(கைத்தல் - கசத்தல்);

(போது - பூ); (கலி - துன்பம்; தரித்திரம்);


11)

படமஞ்சு கொண்ட அரைநாண ணிந்து பலியட்டு மென்று திரிவான்

கடனஞ்சை உண்டு மணிபோலி லங்கு கறையேற்ற கண்டம் உடையான்

நடனங்கள் ஆட இடுகானை நல்ல இடமென்று நாடும் இறைவன்

மடமங்கை அஞ்ச மதமாவு ரித்து வழுவூரில் நின்ற பரனே.


(பலி - பிச்சை); (அட்டுதல் - இடுதல்);


V. Subramanian


On Fri, May 1, 2026 at 9:15 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

8)

Saranya Gurumurthy

unread,
May 11, 2026, 8:59:02 PM (11 days ago) May 11
to சந்தவசந்தம்
252. (16). திருப்பாசூர்

பாசூர் உறையும் பரமனைப் பாடுவார்
கூசாரே கூற்றுவனைக் கண்டு

கூசுதல் - அஞ்சுதல்


253. (17). திருவெண்பாக்கம் (பூண்டி)

பண்பாடிப் பாதம் பணிவார்க்கு வீடருள்வான் 
வெண்பாக்கம் மேவிய வித்து


254. (18). திருக்கள்ளில்

கள்ளில் நகர்வாழ் கறைகண்டன் பக்தர்கள்
கள்ளத்தில் கட்டுப் படார்


255. (19). திருக்காளத்தி 

கண்ணப்பர்க்(கு) இன்னருள்செய் காளத்திப் பெம்மானை
வண்ணப்பா மாலையால் வாழ்த்து


256. (20). திருவொற்றியூர்

ஒற்றியூர் உத்தமனை ஓதும் அடியார்க்கு
வெற்றி அருள்வான் விழைந்து


Regards,
Saranya

Siva Siva

unread,
May 11, 2026, 10:01:35 PM (11 days ago) May 11
to santhav...@googlegroups.com
/  கறைகண்டன்    /

கறைக்கண்டன் 

V. Subramanian

Siva Siva

unread,
May 11, 2026, 10:35:28 PM (11 days ago) May 11
to santhav...@googlegroups.com

2020-06-16

நாரையூர்

-----------------

(வஞ்சித்துறை - தான தானனா - சந்தம்

(திருவிருக்குக்குறள் அமைப்பு)

(சம்பந்தர் தேவாரம் - 1.92.1 - "வாசி தீரவே")


1)

வேதம் ஓதிய .. நாதன் நாரையூர்ப்

போதன் தாள்தொழ .. ஏதம் இல்லையே.


2)

உம்பர் ஏத்திடும் .. நம்பன் நாரையூர்

இன்பன் அன்பர்தம் .. துன்ப(ம்) நீங்குமே.


3)

கானில் ஆடிடும் .. ஞானன் நாரையூர்

மானன் னாம(ம்)நம் .. ஊன(ம்) நீக்குமே.


கானில் ஆடிடும் ஞானன் -

நாரையூர் மான் நன்னாமம் நம் ஊனம் நீக்குமே -


V. Subramanian


Siva Siva

unread,
May 13, 2026, 9:10:41 AM (10 days ago) May 13
to santhav...@googlegroups.com

4)

நீறு பூசிபூ .. நாறு நாரையூர்

ஆறு சூடிபேர் .. கூறும் இன்பமே.


5)

எல்லை அற்றவன் .. நல்லன் நாரையூர்ச்

செல்வன் நாமமே .. சொல்ல இன்பமே.


6)

செக்கர் மேனியன் .. நக்கன் நாரையூர்

முக்கண் மூர்த்திபேர் .. துக்க(ம்) நீக்குமே.


7)

மதியன் வேணியில் .. நதியன் நாரையூர்ப்

பதிநன் னாமமே .. துதிமின் நன்மையே.


V. Subramanian


On Mon, May 11, 2026 at 10:35 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

3)

Siva Siva

unread,
May 14, 2026, 9:55:13 AM (9 days ago) May 14
to santhav...@googlegroups.com

Final 4 songs of this padhigam:

8)

வரையி டந்தவன் .. சிரமொர் பத்தடர்

அரவன் நாரையூர் .. பரவி உய்ம்மினே.


(வரை - மலை); (இடத்தல் - பெயர்த்தல்); (அடர்த்தல் - நசுக்குதல்);


9)

வேதன் மால்தொழு .. பாதன் ஏறமர்

நாதன் நாரையூர் .. ஓதி உய்ம்மினே


10)

பொய்யர் சொல்விடும் .. செய்யன் நாரையூர்

ஐயன் நாமமே .. உய்வு நல்குமே.


11)

மணிமி டற்றினன் .. அணிகொள் நாரையூர்

பணியும் அன்பர்தம் .. பிணிகள் நீங்குமே


V. Subramanian


On Wed, May 13, 2026 at 9:10 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

7)

Nagoji

unread,
May 14, 2026, 12:06:44 PM (8 days ago) May 14
to santhav...@googlegroups.com
aahaa! miga arumai!
-sdn

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/JRTJ1E9mqVI/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
May 14, 2026, 3:42:47 PM (8 days ago) May 14
to santhav...@googlegroups.com
Thanks.

On Thu, May 14, 2026 at 12:06 PM Nagoji <nag...@gmail.com> wrote:
aahaa! miga arumai!
-sdn

On Thu, May 14, 2026 at 7:25 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

Final 4 songs of this padhigam:

...

Saranya Gurumurthy

unread,
May 15, 2026, 2:48:24 AM (8 days ago) May 15
to சந்தவசந்தம்
257. (21). திருவலிதாயம் (பாடி)

கலிதாபம் தீர்த்துக் கரையேற்றி ஆள்வான்
வலிதாயம் மேவும் மருந்து


258. (22). வடதிருமுல்லைவாயில்

வடதிருமுல் லைவாயில் வாகன் அருளால்
படர்தரும் தீவினை பாழ்

படர் - வருத்தம்


259. (23). திருவேற்காடு

வேற்கா டுறையும் விசிட்டனே நம்துணையென்(று)
ஏற்காதார்க்(கு) என்றும் இடர்

260. (24). திருமயிலை (மயிலாப்பூர்)

மயிலை நகருறை மாதேவன் பேரைப்
பயிலத் தொலையும் பவம்

பயிலுதல் - சொல்லுதல்


261. (25). திருவான்மியூர்

பான்மையைத் தீர்த்துப் பவத்தை அழித்தருள்வான்
வான்மியூர் மேவும் மருந்து

பான்மை - பழவினை
பவம் - பிறவிப்பிணி


Regards,
Saranya

Siva Siva

unread,
May 15, 2026, 9:05:07 AM (8 days ago) May 15
to santhav...@googlegroups.com
/ வடதிருமுல் லைவாயில்  /

You can also explore using the name without திரு as வடமுல்லைவாயில்.

/  ஏற்காதார்க்(கு)   /

I think it may come as ஏலாதார்க்கு /  ஏலார்க்கு.

V. Subramanian

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CALz5qbxuSbaoM2Gwt2ZFQAc9x4PDRB5Nihiu8jy9eXFt%2BZDk0A%40mail.gmail.com.

Siva Siva

unread,
May 15, 2026, 9:51:15 AM (8 days ago) May 15
to santhav...@googlegroups.com

2020-06-17

வழுவூர்

-----------------

(சந்த வஞ்சிவிருத்தம் - தனனா தனனா தனதானா - சந்தம். முதற்சீர் தானா என்றும் வரலாம்)

(சம்பந்தர் தேவாரம் - 1.37.1 - "அரவச் சடைமேல் மதிமத்தம்")


1)

இலைமூன் றுடைவேல் தனையேந்தி

மலைபோல் மதமா உரிமூடி

அலையார் சடையான் இடமென்பர்

மலரார் பொழில்சூழ் வழுவூரே.


(மதமா - மதமுடைய யானை); (உரி - தோல்);


2)

மதவேள் உடலைப் பொடிசெய்தான்

மதியோ டரவைச் சடைவைத்தான்

முதலாய்க் கடையாம் பெருமானூர்

மதுவீப் பொழில்சூழ் வழுவூரே.


(வீ - பூ);


V. Subramanian


Siva Siva

unread,
May 16, 2026, 9:01:02 AM (7 days ago) May 16
to santhav...@googlegroups.com

3)

அணையார் புரமூன் றெரிசெய்தாய்

துணைநீ எனவே தொழுவார்க்குப்

புணையாய் வருவான் இடமென்பர்

மணமார் பொழில்சூழ் வழுவூரே.


(அணையார் - பகைவர்);

(புணை - தெப்பம்);


4)

குளமாய் இருகண் கசியன்பர்

உளமே தளியா மகிழண்ணல்

இளமா விடையான் இடமென்பர்

வளமார் வயல்சூழ் வழுவூரே.


V. Subramanian


On Fri, May 15, 2026 at 9:50 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

2)

Saranya Gurumurthy

unread,
May 17, 2026, 1:15:55 AM (6 days ago) May 17
to சந்தவசந்தம்
Have modified as below 



258. (22). வடதிருமுல்லைவாயில்

வடமுல்லை வாயிலுறை வாகன் அருளால்
படர்தரும் தீவினை பாழ்

படர் - வருத்தம்

259. (23). திருவேற்காடு

உயர்திருவேற் காடுறையும் உத்தமனே நம்துணையென்(று)
இயம்பிடுவார்க்(கு) இல்லை இடர்


Regards,
Saranya

Saranya Gurumurthy

unread,
May 17, 2026, 1:19:28 AM (6 days ago) May 17
to சந்தவசந்தம்
262. (26). திருக்கச்சூர் (ஆலக்கோயில்)

கச்சூர் உறையும் கருணையனை மெச்சுவார் 
நச்சாரே நாசர்தம் நட்பு

நச்சுதல் - விரும்புதல்
நாசர் - அழியும் தன்மை உடையவர் 


263. (27). திருவிடைச்சுரம்

இடைச்சுரத்(து) எந்தைதன் இன்னருளே என்றும்
கடைக்காப்பாய் வந்திடும் காண்

கடைக்காப்பு - இறுதிக்காலத்தில் பாதுகாப்பு 


264. (28). திருக்கழுக்குன்றம் 

கழுக்குன்றப் பெம்மான் கழலைப் பணிவார்
வழுக்காரே வாய்மையிலி ருந்து


265. (29). திருவச்சிறுப்பாக்கம்

அச்சிறுப் பாக்கத்(து) அதிபன் அடியிணையை
உச்சியில் வைத்தல் உயர்வு


266. (30). திருவக்கரை

வக்கரை மேயானை வாழ்த்தார் பவக்கடலின்
அக்கரை காண்ப(து) அரிது

Regards,
Saranya

Siva Siva

unread,
May 17, 2026, 10:55:13 AM (6 days ago) May 17
to santhav...@googlegroups.com
/  கடைக்காப்பு - இறுதிக்காலத்தில் பாதுகாப்பு    /

As that word already has a different commonly understood meaning, maybe worth considering a tweak.

கடைக்காப்பு kaṭai-k-kāppu , n. < id. Last verse which is an invocation song the poem known as patikamபதிகத்தின் இறுதி முத்திரைப்பாட்டு.


/  வழுக்காரே வாய்மையிலி ருந்து /

Did you intend to say "வழுவாரே" ?

/  திருவச்சிறுப்பாக்கம்   /

No ப் in that name.

V. Subramanian

On Sun, May 17, 2026 at 1:19 AM Saranya Gurumurthy <saranya.g...@gmail.com> wrote:
...

Siva Siva

unread,
May 17, 2026, 9:43:18 PM (5 days ago) May 17
to santhav...@googlegroups.com

5)

அருமா விடமுண் டமுதீந்த

பெருமான் சடைமேற் பிறைசூடி

அருவாய் உருவாம் அரனூராம்

வருவார் மகிழும் வழுவூரே.


6)

பண்டங் கழலைத் தொழுதேத்தும்

வெண்டிங் களைவே ணியில்வைத்தான்

கண்டங் கரியான் இடமென்பர்

வண்டின் னிசைசெய் வழுவூரே.


(பண்டு - முன்பு); (அம் - அழகு); (வேணி - சடை);


7)

பறிமா மலரால் பணிவார்தம்

செறிதீ வினைதீர்த் தருள்தேவன்

பொறியார் அரவம் திகழ்மார்பன்

மறியார் கரனூர் வழுவூரே.


(பொறி - புள்ளி);


8)

செழுமா மலைபேர்த் தவன்வாடி

அழுமா றுநெரித் திசைகேட்டான்

தொழுவார்க் கருளும் தொழிலேந்தல்

மழுவாட் பரனூர் வழுவூரே.


V. Subramanian


On Sat, May 16, 2026 at 9:00 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

4)

Saranya Gurumurthy

unread,
May 18, 2026, 9:28:01 PM (4 days ago) May 18
to சந்தவசந்தம்
Ok sir.

Modified as below 



On Sun, May 17, 2026, 20:25 Siva Siva <naya...@gmail.com> wrote:
/  கடைக்காப்பு - இறுதிக்காலத்தில் பாதுகாப்பு    /

As that word already has a different commonly understood meaning, maybe worth considering a tweak.

கடைக்காப்பு kaṭai-k-kāppu , n. < id. Last verse which is an invocation song the poem known as patikamபதிகத்தின் இறுதி முத்திரைப்பாட்டு.

இடைச்சுரத்(து) எந்தைதன் இன்னருளே நம்மைக்
கடைத்தேற்றிக் காத்திடும் காண்



/  வழுக்காரே வாய்மையிலி ருந்து /

Did you intend to say "வழுவாரே" ?
Yes sir.


/  திருவச்சிறுப்பாக்கம்   /

No ப் in that name.

Ok sir.


V. Subramanian

On Sun, May 17, 2026 at 1:19 AM Saranya Gurumurthy <saranya.g...@gmail.com> wrote:
...
263. (27). திருவிடைச்சுரம்

இடைச்சுரத்(து) எந்தைதன் இன்னருளே என்றும்
கடைக்காப்பாய் வந்திடும் காண்

கடைக்காப்பு - இறுதிக்காலத்தில் பாதுகாப்பு 



கழுக்குன்றப் பெம்மான் கழலைப் பணிவார்
வழுக்காரே வாய்மையிலி ருந்து


265. (29). திருவச்சிறுப்பாக்கம்

அச்சிறுப் பாக்கத்(து) அதிபன் அடியிணையை
உச்சியில் வைத்தல் உயர்வு


Regards,
Saranya

Saranya Gurumurthy

unread,
May 18, 2026, 9:59:53 PM (4 days ago) May 18
to சந்தவசந்தம்
Also modified this

கழுக்குன்றப் பெம்மான் கழலைப் பணிவார்
வழுக்காரே வாய்மையிலி ருந்து

கழுக்குன்றப் பெம்மான் கழலைப் பணிவார்
இழுக்கா(று) அடையார் இயம்பு

Regards,
Saranya

Siva Siva

unread,
May 19, 2026, 5:46:29 PM (3 days ago) May 19
to santhav...@googlegroups.com
Good.

Siva Siva

unread,
May 19, 2026, 5:47:04 PM (3 days ago) May 19
to santhav...@googlegroups.com

Final 3 songs of this padhigam:

9)

நறைமா மலரான் அரிகாணா

இறையான் எழிலார் உமைபங்கன்

கறையார் மிடறன் கயிலாயன்

மறைநா வினனூர் வழுவூரே.


(இறையான் - இறைவன்);


10)

மதியீ னர்கள்சொல் புறனெல்லாம்

மதியா தடைமின் மகிழ்வெய்த

கொதியா வருகூற் றுதைசெய்தான்

மதிசூ டியிடம் வழுவூரே.


(கொதியா வரு - கொதித்து வந்த);


11)

பணிகின் றவர்தம் பய(ம்)நீக்கிப்

பிணிவல் வினைதீர்த் தருள்பெம்மான்

துணிவெண் பிறையன் சுடுநீற்றன்

மணிகண் டனிடம் வழுவூரே.


V. Subramanian


On Sun, May 17, 2026 at 9:43 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

8)

Siva Siva

unread,
May 20, 2026, 9:02:01 PM (2 days ago) May 20
to santhav...@googlegroups.com

2020-06-18

காழி (சீகாழி)

-----------------

(சந்த வஞ்சிவிருத்தம் - தானன தானன தானதனா)

(தானன என்பது தனதன என்றும், தானதனா என்பது தனதனனா/தானதானா என்றும் வரலாம்)

(சம்பந்தர் தேவாரம் - 1.112.1 - "இன்குரல் இசைகெழும் யாழ்முரலத்")


1)

அவ(ம்)மலி வேள்வியை அன்றுசெய்து

தவறிழை தக்கனைத் தலையரிந்தான்

கவுணியர்க் கமுதருள் காழிநகர்ச்

சிவனடி இணைதனைச் சிந்திநெஞ்சே.


2)

வனமலர் வாளிவன் மதனழிய

அனலுமிழ் கண்ணனை அதிசயனைக்

கனலெரி ஏந்தியைக் காழிநகர்ப்

புனலணி சடையனைப் போற்றுநெஞ்சே.


(வனம் - அழகு); (வாளி - அம்பு); (மதன் - காமன்);


3)

பொடியணி மேனியன் போர்விடையன்

கொடியிடை கூறமர் கொள்கையினான்

கடிமல ரான்தொழு காழிநகர்

அடிகளை அடிதொழ அறுமிடரே.


V. Subramanian


Saranya Gurumurthy

unread,
5:25 AM (18 hours ago) 5:25 AM
to சந்தவசந்தம்
267. (31). திருஅரசிலி (ஒழுந்தியாப்பட்டு)

அரசிலி அப்பனின் அந்தாள் பணிவார்
துரிசடை யாரென்று சொல்


268. (32). திருஇரும்பைமாகாளம்

வரம்பில்லா ஆனந்தம் வாய்த்திடச் செய்வான்
இரும்பைமா காளத்(து) இறை 


தொண்டை நாட்டுத் தலங்கள் நிறைவுற்றன


துளுவ நாட்டுத் தலம்

269. (1). திருக்கோகர்ணம்

கோகர்ணம் தன்னில் கொலுவிருக்கும் மாதொரு
பாகர்தாள் பாடுதல் பாங்கு

துளுவ நாட்டுத் தலம் நிறைவுற்றது


மலை நாட்டுத் தலம்

270. (1). திருவஞ்சைக்களம்

சஞ்சலம் தீர்ந்து சமாதி நிலையடைய
அஞ்சைக் களத்தை அடை

மலை நாட்டுத் தலம் நிறைவுற்றது


Regards,
Saranya

Siva Siva

unread,
8:38 AM (15 hours ago) 8:38 AM
to santhav...@googlegroups.com

4)

இமையவர் அமுதுண இருள்மிடறன்

அமலையை ஒருபுறம் அமர்பெருமான்

கமலனுக் கருளிய காழிநகர்

விமலனைத் தொழுதெழ வினையறுமே.


5)

விண்ணவர் தலைவனை வெண்மதியம்

தண்ணதி தாங்கிய சடையிறையைக்

கண்ணமர் நுதலனைக் காழிநகர்

அண்ணலை அடிதொழ அறுமிடரே.


6)

வாரணம் உரிசெய்த மைந்தனருள்

காரணம் கொண்டுருக் காட்டிடுவான்

காரிகை பங்கனைக் காழிநகர்ச்

சீரனை ஏத்திடத் திருவருமே.


7)

மறையணி நாவனை வாளரவம்

பிறையணி சடையுடைப் பிஞ்ஞகனைக்

கறையணி கண்டனைக் காழிநகர்

இறைவனை ஏத்திட இடர்கெடுமே.


V. Subramanian


On Wed, May 20, 2026 at 9:00 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

3)

Reply all
Reply to author
Forward
0 new messages