தூங்கணங் குருவி (அ) வேயுங் குருவிகள் (Baya weaver birds of India and South East Asia)

22 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Oct 7, 2021, 8:14:25 PM10/7/21
to Santhavasantham
தூங்கணங் குருவி (அ) வேயுங் குருவிகள் (Baya weaver birds of India and South East Asia)
--------------------------------

தூக்கணங்குருவி என்றும், தூங்கணங் குருவி என்றும் சங்க நூல்களில் வரும் குருவிகளைப் பற்றி நிறையப் படித்து வருகிறேன். தமிழ்ப் புலவர்கள் காலந்தொறும் இந்த அறிவார்ந்த பறவைகளுக்கு முதுக்குறைக் குருவி என்றும் பெயர். வயதுவந்ததும் ஆண் புள், கூடை மிடைதல்போல, புற்களால் கூடு மிடைகின்றன. எனவே, weaver bird என்பதற்கு நேராக, வேயுங்குருவி (அ) வேய்ங்குருவி எனவும் அழைக்கலாம். சிறுபஞ்ச மூலம் போன்றவற்றில், வான்குருவி என வேயுங்குருவிகளுக்குப் பெயர். பனை, தென்னை போன்ற நெடிதுயர்ந்த மரங்களில் தொங்கட்டான் கூடு தூங்குவதால் வான்குருவி என்ற பெயர். கன்னல் என்றும் இலக்கியப் பெயர், இதுவும் கூட்டின் தோற்றத்தால் அமைந்தபெயர் தான். பி. எல். சாமி, கன்னல் என்ற பெயர்க்காரணத்தை அழகாக விளக்கியுள்ளார். கன்னல் :: கன்னகம் என்ற பெயர் உண்டு. கன்னகம் > கின்னகம் என்று பேச்சுவழக்கில் வரும். கடாவைக் கிடா(ய்) என்றும், களாக்காய் ஊறுகாயைக் கிளாக்கா ஊறுகாய் என்கிறோமே. அது போல. ’கின்னக விளக்கம்’ என்ற செய்யுள் இரகுவம்மிசத்தில் இருக்கிறது.  இதனைத் தமிழிற் காவியமாகச் செய்து தந்தவன் அரசகேசரி என்னும் புலவனாவான். இவன் யாழ்ப்பாணத்திலிருந்து அரசோச்சிய ஆரியச்சக்கரவர்த்திகள் குலத்தவனென யாழ்ப்பாண வைபவ மாலை ஆசிரியர் மயில்வாகனப்புலவரும் சுவாமி ஞானப்பிரகாசரும் கூறுவர். கி.பி 1591 முதல் 1616 வரை யாழ்ப்பாணத்தில் அரசாண்ட எதிர்மன்னசிங்கன் என்ற எட்டாம் பரராசசேகரனின் சகோதரன் என்று போர்த்துக்கேய சரித்திர ஆசிரியர் குவேறோசும், அம் மன்னனது மருமகன் என்று யாழ்ப்பாண வைபவமாலை ஆசிரியரும் அரசகேசரியை விவரிப்பர்.

உயிரிகளில் ஒளியுமிழும் உயிரிகள் அதிசயமானவை.  https://en.wikipedia.org/wiki/Bioluminescence Bioluminescence எனப் பெயர். மின்மினிப் பூச்சிகளைத் தூக்கணாங் குருவிகள் கூடுகளில் விளக்காகப் பயன்படுத்தும் என்ற தொன்மக் கதை இந்தியா, தென்கீழ் ஆசியாவில் நிரம்ப உண்டு. அதற்கான காரணம் சில இவ்விழையில் ஆராய்வோம். கச்சியப்ப சிவாச்சார்யர் 12-ஆம் நூற்றாண்டில் பாடி, கச்சிப்பேட்டு ஏகாம்ரேசுவரர் திருக்கோவில் குமரகோட்டத்தில் அரங்கேற்றியது கந்தபுராணம். இந்த வரலாற்றைத் திருப்புகழில் காண்கிறோம். மின்மினிப் பூச்சிகளை தூக்கணங்குருவிகள் கூடுகளில் வைப்பதை மூன்று பாடல்களில் வெவ்வேறு நிகழ்ச்சிகளுக்கு உவமையாகக் கச்சியப்ப சிவாச்சாரியர் அழகுறப் பாடியருளினார், உயிரொளிர்வு (Bioluminescence) பற்றி இந்திய இலக்கியங்களில் முதலில் பதிவு செய்தவர் கச்சியப்பர் எனலாம். இதற்கு முன்பே யாராகிலும் செம்மொழிகளில் பாடியுளரா எனத் தேடவேண்டும். கிரேக்கர்கள், உரோமானியரும்  இந்தியாவைப் பற்றிச் சொல்கையில் இந்த லெஜெண்ட் உள்ளதா எனத் தேடினேன். இல்லையென அறிகிறேன்.

வேயுங்குருவி - weaver birds
**************************


வட இந்தியாவில் “வய/வாய” (baya) என்கின்றனர்.  Monier-Williams gives,
vApa 1 m. = 1. %{vAya} , `" weaving "' or `" a weaver "' (see %{tantu-} , %{tantra-} , %{sUtra-v-}).
vApadaNDa m. a weaver's loom L. (cf. %{vAna-} and %{vAya-d-}).
vaya m. (fr. %{ve}) one who weaves , a weaver L. ; (%{I4}) f. a female weaver RV.
vAya 1 m. (fr. %{ve} ; cf. 1. %{vApa}) `" weaving "' or `" a weaver "' (see %{tantu-} , %{tantra-} , %{tunna-} , %{vAso-v-}) ; a thread , strap (see %{tirazcina-v-}).
vAyadaNDa m. a weaver's loom L.
vAyaka 1 m. a weaver , sower Ka1v. Katha1s. BhP.
vAyanakriyA f. weaver's work , weaving A1pGr2. Sch.
vayitrI f. a female weaver Ta1n2d2Br.
வய பக்‌ஷி > பய பக்‌ஷி (baya pakshi in Hindi etc.,) ஆகிவிட்டது. வெண்கால் மரம், வெங்கால் மரம். இப்பகுதி உள்ள நாடு: வெங்கால நாடு - கல்வெட்டுகளில் சங்க காலச் சேரர் தலைநகர் வஞ்சி (கரூர்) பகுதி. அருகே உள்ள வடகொங்கு ஊர் : (1) வெங்காலூரு. இன்றைய பெங்கலூரு, (2) விந்து > பிந்து (bindu) (விந்துமதி வெண்பா> பிந்துமதி வெண்பா. விந்து > இந்து, (3) விடங்கர் > இடங்கர் (4) வஜ்ர > பஜ்ர (கம்புத் தானியம்) ... போல:
https://archive.org/details/NGanesan_IJDL_2018

தூங்கணம் குருவி என்கிறது சங்க இலக்கியம்: முடங்கல் இறைய தூங்கணம் குரீஇ – குறுந்தொகை. (வளைந்த இறகுகளை உடைய தூக்கணங்குருவி.)
கூடை வேய்தல், கூரை வேய்தல் என்கிறோம். கூடை:கூரை, குடம்பை:குரம்பை, கவடி:கௌரி ....

"கூடை வேய்தல், பனை ஓலையில் கைவினைப் பொருட்கள் செய்தல் போன்றவை பற்றிய பயிலரங்குகளும் இடம்பெறுகின்றன. பிரபலமான மாட்டுப் பொங்கல் கொண்டாட்டமும் உண்டு."
https://www.tamilmurasu.com.sg/2017/12/22/14522-அதிக-பயிரலங்குகளுடன்-பொங்கல்-விழா-2018.html

"மலைவாழ் மக்கள் அங்குள்ள பொருட்களை கொண்டு கூடை வேய்தல், முறம் செய்தல் மற்றும் சிறு சிறு கைவினைப் பொருட்களை செய்து வருகின்றனர்."
http://tamizhkallanjiyam.blogspot.com/2014/09/blog-post_40.html

குரம்பை kurampai   n. 1. Small hut, hovel,shed; சிறுகுடில் இலைவேய் குரம்பை (மதுரைக். 310).2. [M. kurambu.] Bird's nest; பறவைக்கூடு.(சது.) 3. Body; உடல் பொருந்திய குரம்பை தன்னைப்பொருளெனக் கருதவேண்டா (தேவா. 488, 1).4. Granary, storehouse for grain; தானியக்கூடு நெற்குவை குரம்பையி னிரப்புவித்தனர் (கந்தபு. நாட்டுப். 26).  

weaver baya bird, https://youtu.be/6svAIgEnFvw
தூங்கணம்/தூக்கணம் தொங்கும் கூடுகளால் அமைந்த பெயர். அதனை வேயும் குருவிகளை வேயுங்குருவி/வேய்ங்குருவி எனவும் அழைக்கலாம். வேய்தல் = மிடைதல், cf. கூரை (அ) கூடை வேய்தல் போல், தூங்கணங் குருவிகள் கூடுகளை வேய்வதில் திறன் கொண்டவை. தூங்கணம். இன்னொரு பெயர்: வேய்ங்குருவி.  இயற்கையின் எஞ்சினீர் பறவைகள் இந்த வேயுங் குருவிகள்!

பிற பின்!
நா. கணேசன்


NATARAJAN RAMASESHAN

unread,
Oct 7, 2021, 11:07:03 PM10/7/21
to santhav...@googlegroups.com
முனைவர் கணேசன் அவர்களின் அற்புதத் தகவல்களுக்கு நன்றி

           — தில்லைவேந்தன்

M. Viswanathan

unread,
Oct 9, 2021, 7:29:24 AM10/9/21
to Santhavasantham

அன்பர் திரு. நா. கணேசன் அவர்களது அரிய தகவல்களுக்கு மிக்க நன்றி.
அன்பன்,
மீ.விசுவநாதன்
 

N. Ganesan

unread,
Dec 7, 2021, 6:52:07 AM12/7/21
to Santhavasantham
நெடிதுயர்ந்த பனைமரங்களில் கூடுகட்டி வாழ்வதால் தூக்கணங்குருவிக்கு “வான்குருவி” எனவும் ஒரு பெயர்,
ஔவையின் பாடல். இதுபோல, சிறுபஞ்சமூலத்திலும் வான்குருவி உண்டு,


https://thamizhppanimanram.blogspot.com/2019/09/blog-post-auvaiyaar-paadal-vaan-kuruviyin-kuudu.html

ஔவையார் பாடல் (01) வான் குருவியின் கூடு ! வல்லரக்கு !
By வை.வேதரெத்தினம்|Jan. 1st, 2019

-----------------------------------------------------------------------------------------------------------

[ஔவையார் அருளிய தனிப்பாடல்]
------------------------------------------------------------------------------------------------------------
வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கரையான்
தேன்சிலம்பி யாவர்க்குஞ் செய்யரிதால் - யாம்பெரிதும்
வல்லோமே யென்று வலிமைசொல வேண்டாம்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது.  
------------------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்

------------------------------------------------------------------------------------------------------------

வான் குருவியின் கூடு வல் அரக்கு தொல் கரையான
தேன் சிலம்பி யாவர்க்கும் செய் அரிதால்  - யாம் பெரிதும்
வல்லோமே என்று வலிமை சொல வேண்டாம் காண் !
எல்லார்க்கும் ஒவ்வொன்று எளிது !

-----------------------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

வான் குருவி எனப்படும் தூக்கணாங் குருவிக்கூடு, அரக்கு எனப் படும் வலிமையான இயற்கைப் பசை,   தேன்அடை,  சிந்தனைச் சிக்கலை நம்முள் உருவாக்கிவிடும் சிலந்தி வலை இவற்றை மேலோட்டமாகப் பார்த்தால் புல்லிய  புலனங்களே  !  ஆனால்  இந்த  அறிவியல் உலகில் எந்த மேதையாலும் இவற்றை உருவாக்க இயலுமா?

ஒவ்வொருவரிடமும் ஒரு சிறப்பு இருக்கிறது; சாதாரண பறவையான வான் குருவி கட்டுகின்ற (தூக்கணாங் குருவிக்) கூட்டை இந்தக் கணினி யுகத்தில் வேறு எவராலும் கட்டித் தொங்கவிட்டு அதில் அக் குருவிகளைக் குடி வைக்க முடியுமா? முடியவே முடியாது !

அதாவது இந்த உலகத்தில் ஆற்றிவு படைத்த மனிதர்களாலும் செய்ய முடியாத செயல்களும்  இருக்கவே  செய்கின்றன  என்பதை இடித்துக் காட்டி,  வாழ்வில் பிற மனிதர்களிடத்தும், பிற  உயிர்களிடத்தும் நாம் சமத்துவ   உணர்வு கொண்டிருக்க  வேண்டும்  என்பதை  எடுத்துக் காட்டுவதே இப்பாடலின் நோக்கம் !

‘யாம் பெரிய வல்லாளன்’ என்பதாய் எண்ணம் கொண்டு பிறரைத் தாழ்மையாக நினைத்து விடக் கூடாது’ என்ற எச்சரிக்கையை இப்பாடல் மூலம் நமக்கு அளிக்கிறார் ஔவையார் !
------------------------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:

வான் குருவி = தூக்கணாங் குருவி ; வல் அரக்கு = ஒரு வகைக் குளவி யால் சேகரித்து  உருவாக்கப்படும் அரக்கு ;  தொல் கரையான் = பழங் காலம் முதல் இருந்து வரும் கரையான் உருவாக்குகின்ற மண் புற்று ; தேன் =  தேனீக்கள் பூக்களிலிருந்து துளித் துளியாகத் தேனைச்  சேகரித்து சேர்த்து வைக்கும் அறுகோண வடிவ சிற்றறைகள் கொண்ட தேனடைகள் ; சிலம்பி = சிலந்தி வலை ; (ஆகியவை) யாவர்க்கும் = எந்த மனிதருக்கும் ; செய்யரிதால் = செய்ய முடியாதவை ; யாம் பெரிதும் வல்லோம் = நான் எதையும் செய்ய வல்லவன் ; என்று வலிமை சொல வேண்டாம் = என்று ஆணவம் கொள்ள வேண்டாம் ; காண் = அசைச்சொல் (இதற்கு இவ்விடத்தில் பொருள் ஏதும் இல்லை) ;

------------------------------------------------------------------------------------------------------------

          ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை.

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ:2050,மீனம்,10]
{24-03-2019}

 
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
> To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CACXjW-smYsi%2BG8LtfThNQPXg%2BWTm-WPVMYnE%3DQLLkias3nDKhA%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Dec 7, 2021, 7:23:14 AM12/7/21
to Santhavasantham
சிறுபஞ்சமூலம் 25 (வான்குருவி - தூக்கணங்குருவி)
 

எம்மால் முடியுமா?


இந்த உலக இயற்கை பலவைகையான அற்புத இரகசியங்களால் நிறைந்தது. மிகச்சிறிய கரையான் தன் சின்னஞ்சிறிய வாயால் மண்ணை மென்மையாக்கி எத்தனை பெரிய புற்றைக் கட்டி எழுப்புகிறது! கரையான் புற்றைப்போல் ஒரு புற்றை எம்மால் கட்ட முடியுமா? அங்கும் இங்கும் தொங்கிப் பாய்ந்து தன்னைவிடப் பல மடங்கு பெரிய வலையை பின்னுகிறதே சிலந்தி அதன் வலையை நம்மால் பின்னமுடியுமா? 

எனது சிறுவயதில் ஒரு சிலந்தி வலையைப் பார்த்து அதைப் போல் கீற எனக்கு மூன்று நாட்கள் பிடித்தன என்பது எனக்குத்தான் தெரியும். ஏனெனில் நான் சாப்பிட்டு வரமுன்போ, பாடசாலை சென்று வர முன்போ அது தன் வலையில் சிறிது மாற்றம் செய்திருக்கும். அதுவும் மிகமிக நுட்பமாகச் செய்திருக்கும். அந்த நுட்பத்தைக் கண்டுபிடித்து நான் திருத்தம் செய்யவேண்டி இருந்தது. கரையானால் சிலந்தியால் மிக இலகுவாகச் செய்ய முடிந்தனவற்றை எம்மால் செய்ய முடியாதல்லவா? 


அக்காலப் புலவரான காரியாசான் இத்தகைய ஐந்து அற்புதங்களைக் கூறி, நன்றாகக் கற்றறிந்த வல்லமை உடையோர் கூட அவற்றைச் செய்வோம் என்று நினைக்க மாட்டார்கள் என்றும் சிலருக்குச் செய்ய அருமையாக இருக்கும் செயல்கள் வேறுசிலருக்கு எளிமையாக இருக்குமென்கிறார். காரியாசான் கூறும் செயல்களைச் செய்ய எம்மால் முடியுமா? பாருங்கள்.

“வான்குருவிக் கூடரக்கு வாலுலண்டுநூல் புழுக்கோல்
தேன்புரிந் தியார்க்குஞ் செயலாகா - தாம்புரீஇ
வல்வவர் வாய்ப்பன வென்னாரொ ரோவொருவர்க்
கொல்காதோ ரொன்று படும்”                                      
                                                          - (சிறுபஞ்சமூலம்: 25)

இச்செயல்களைச் செய்வதற்கு முன்னர் காரியாசான் சொல்லும் அற்புதங்கள் ஐந்தும் எவையெனப் புரிந்ததா? காரியாசானின் இவ்வெண்பாவைப் பொருள் விளங்கக் கொஞ்சம் பிரித்துப் படிப்போமா?

“வான்குருவிக் கூடுஅரக்கு வால்உலண்டு நூல் புழுக்கோல்
தேன்புரிந்து யார்க்கும் செயல்ஆகா - தாம்புரீஇ
வல்லவர் வாய்ப்பன என்னார் ஓரோ ஒருவர்க்கு
ஒல்காது ஓரொன்று படும்”                                            
                                                         - (சிறுபஞ்சமூலம்: 25)

அதாவது வான் குருவிக் கூடு, அரக்கு, வால் உலண்டு நூல், புழுக்கோல், தேன் கூடு போன்றவற்றை செய்தல் எல்லோர்க்கும்[யார்க்கும்] செய்ய முடியாது [செயல்ஆகா]. தாமே செய்யக்கூடிய வல்லமை உடையோரும் [வல்லார்] செய்வதற்கு வசதியானது [வாய்ப்பு] எனச் சொல்லார். ஓர் ஒருவர்க்கு [ஓரோஒருவர்க்கு] இயலாதது [ஒல்காது] ஒருவருக்கு இயலும் [ஓரொன்றுபடும்]. 

வான்குருவிக் கூடு, அரக்கு, வால் உலண்டு நூல், புழுக்கோல், தேன் பொதி பார்த்திருக்கிறோம். நாம் அன்றைய தமிழ்ச் சொற்கள் பலவற்றை பயன்படுத்தாமல் விட்டதால் அச்சொற்கள் எவற்றைக் குறிக்கின்றன என்பதை அறிய முடியாதவர்களாக இருக்கின்றோம். அதனாலேயே காரியாசன் கூறும் சொற்களும் எமக்குப் புரியவில்லை. வான்குருவிக் கூடா? வால் உலண்டு நூலா? புழுக்கோலா? அவை என்ன? தீவுப்பகுதியெங்கும் வான்குருவியையும் வான்குருவிக் கூட்டையும் இப்போதும் காணலாம். 

வான்குருவிக் கூடு:

வானத்தில் தூங்குவதால் தூக்கணம் குருவிக் கூட்டை வான்குருவிக் கூடு என்பர். வான் குருவிகள் [தூக்கணம் குருவிகள்] வானத்தில் சிறகடித்துப் பறந்தபடி, மின்மினிப் பூச்சியை மின் விளக்காக வைத்து அடுக்கு மாடி  வீட்டைக் - கூட்டை எவ்வளவு அழகாகக் கட்டுகின்றன! அவை எவ்வளவு எளிமையாய் விரைவாய் அக்கூட்டைக் கட்டுகின்றன. வான்குருவி போல அந்தரத்தே பறந்தபடி அதன் கூட்டைக் கட்ட எம்மால் முடியுமா?

அரக்கு:

நம் முன்னோர்களின் அரிய கண்டுபிடிப்பு இந்த அரக்கு. இப்போ அரக்கு நிறத்தைத் தெரிந்த எமக்கு அரக்கைத் தெரியாது. அந்நாளில் கடிதங்களை பிறர் உடைத்துப் படிக்காது இருப்பதற்காக செந்நிற அரக்கை உருக்கி ஊற்றி, தமது தனிப்பட்ட முத்திரையை [சீல் - seal] அதன் மேல் அடித்து அனுப்புவர். அந்த அரக்கையே இப்பாடலில் காரி நாயனார் குறிப்பிடுகிறார். அரக்கை கல்யாண முருங்கை, பூவரசமரம் போன்ற மரங்களில் இருந்து எடுப்பர். மரத்தின் சாற்றைக் குடித்து வாழும் ஒருவகைப் பூச்சி [அரக்குப் பூச்சி] மரக்கொப்புகளில் பாச்சும் திரவமே காற்றோடு சேர்ந்து அரக்காக மாறுகிறது. அந்த அரக்கை உண்டாக்க எம்மால் முடியுமா? 

வால் உலண்டு நூல்:

‘வால் உலண்டு நூல்’ கேள்விப்பட்டு இருகின்றீர்களா? உலண்டு என்றால் என்ன? கலித்தொகை  ‘உலண்டு’ பட்டுப்புழுவைச் சொல்கிறது. உயர்ந்த பட்டுப்புழுவின் நிறத்தை ஒத்ததாய் எருதின் கண் இருக்கும் என்று சொல்லும் இடத்தில் கலித்தொகை 
“மேல் பட்டு உலண்டின் நிறன் ஒக்கும் புன்குருக் கண்”     
                                                               - (கலித்தொகை: 110: 15)
எனப் பட்டுப்புழுவை 'உலண்டு' என்று கூறுகிறது. வால் என்பது வெண்மையை - வெள்ளை நிறத்தைக் குறிக்கும். பட்டுப்புழு வெண்மை நிறமானது. பட்டுப்பூச்சி இடும் முட்டையில் இருந்து வெளிவரும் பட்டுப்புழு உண்டாக்கும் ‘பட்டு நூலே’ வால் உலண்டு நூலாகும். கயிறு, நூல் போன்றவற்றை ஒன்றில் சுற்றும் போது மேழும் கீழுமாக மாறி மாறிச் சுற்றுவோமே அப்படிச் சுற்றுவதை உலண்டாகச் சுற்றுவது என்றே இன்றும் கூறுகிறோம். அந்த உலண்டாகப் பட்டு நூல்களைச் சுற்றும் செயலை உலண்டுகளே தம் கூட்டைச் சுற்றி முதன்முதல் செய்தன. நாம் அவற்றைப் பார்த்தே அப்படிச் சுற்றக் கற்றோம். வால் உலண்டு நூலை [பட்டு நூலை] உருவாக்க எம்மால் முடியுமா?

புழுக்கோல்:

ஒருவகை அந்துக்கள் நேரான மரக்குச்சிகளை ஒன்றோடு ஒன்று அடுத்தடுத்து வைத்து கூடுகட்டி கூட்டுப்புழுவாக வாழும். அத்தகைய கோல்கூடுகளே புழுக்கோல் என்று அழைக்கப்படும். அந்தப் புழுக்கோலை அமைக்க எம்மால் முடியுமா?

தேன்கூடு:

இயற்கையின் இனிமை ததும்பும் ஓர் அற்புதமே தேன்கூடு. யாராவது தேன் கூட்டை எடுத்து அளந்து பார்த்திருக்கிறீர்களா? எனது சிறுவயதில் தேன் மெழுகை எடுத்து வைத்து, தேன்கூட்டினுள் அறுகோணத்தில் இருக்கும் சின்னஞ்சிறு அறைகளை அளந்து பார்த்திருக்கிறேன். எல்லா அறைகளும் ஒன்றுபோல் எவ்வளவு நேர்த்தியாகக் கட்டுகின்றன. எந்த வெப்பநிலை மாற்றத்தையும் தாங்கி தேன் பழுதடையாமல் இருக்கிறதே. அந்தத் தேனை, தேன் மெழுகை, தேன்கூட்டை செய்ய எம்மால் முடியுமா? 

குருவி, பூச்சி புழுக்களால் மிக இலகுவாகச் செய்ய முடிந்தவற்றை எம்மால் செய்ய முடியுமா? ஆதலால் ஒருவர் மிக இலகுவாகச் செய்ததை மற்றவரால் அதே போல் எளிதாகச் செய்ய இயலாது என்கிறார் காரியாசான். 
இனிதே,
தமிழரசி.

Reply all
Reply to author
Forward
0 new messages