கொடும்பை மாநகர்த் திருப்புகழ் (பாலக்காடு மாவட்டம்)

18 views
Skip to first unread message

N. Ganesan

unread,
May 4, 2024, 8:50:30 PM5/4/24
to Santhavasantham, thiruppug...@gmail.com, kanal...@gmail.com
கொடும்பை மாநகர்த் திருப்புகழ் (பாலக்காடு மாவட்டம்)
--------------------------------------------

கொடும்பைத் திருப்புகழ்:
திருப்புகழ் 951 கலைஞர் எணும் கற்பு
https://kaumaram.com/thiru/nnt0951_u.html

https://www.sivaya.org/thiruppugazh_song.php?sequence_no=951&lang=tamil

-----------

கொடும்பைத் திருப்புகழ் பாடுவது கொடும்பாளூர் எனக் கொள்வது சிறப்பில்லை. கொடும்பாளூரில் முருகன் கோயிலே பழமையான காலங்களில் இல்லை.

இத்திருப்புகழ் பாலக்காட்டின் அருகே, கொடும்பை என்ற ஊருக்குப் பாடியுள்ளார் அருணகிரிநாதர். மலையாளத்தில் “கொடும்ப” (കൊടുമ്പ) என அழைக்கிறார்கள்.   சங்க காலத் தலைநகர் வஞ்சி மாநகர் கரூருக்கும். முசிறித் துறைமுகத்திற்கும் இடையறாமல் வணிகமும், கலைகளும் செழித்தோங்கின. ரோமானியப் பேரரசர்களின் காசுகள் இங்கே தான் இந்தியாவிலேயே அதிகம் கிடைக்கின்றன. தொல்லியலருக்குத் தெரியாமல், மழைக்காலங்களில் ஆற்றுப் படுகைகளில் உருக்கப்படும் தங்கம், வெள்ளி நாணயங்கள் அனேகம். பாலக்காட்டுக் கணவாய்ப் பிரதேசத்தின் சரித்திரம் இன்னும் சரியாக ஆராயப்படவில்லை. நொச்சிநியமம், சங்கரரின் காலடி (சங்கர விஜயத்தில் சொல்லும் ஊர்), ... இங்கே உள்ளன. http://niyamasabha.org/  நியமம் என்ற சொல் நாடோறும் பயன்படுவது கேரளாவில் தான்.

கொடும்பை மலையாளத்தில் கொடும்ப. நியமசபை மலையாளத்தில் நியமசப. http://www.niyamasabha.org/codes/13kla/session_9/ans/u04284-270613-796000000000-09-13.pdf
(கொடும்பை ஊர்ப்பெயர் உள்ளது.) நொச்சிநியமம் - நொச்சியூர்/நொச்சூர். அகஸ்தியர் என்ற துறவி இங்கே 20-ஆம் நூற்றாண்டில் இருந்தார். அவர் அனேகம் பாடல்கள் பாடியுள்ளார்.  https://www.youtube.com/watch?v=Gz3ghv8E0uI ( செஞ்சுருட்டி ராகம்)

கொடும்பை:  Alphabetical List of Villages in the Taluks and Districts of the Madras Presidency
Government Press, 1924. page 392:
https://books.google.com/books?id=kXrmTBs_X8wC&pg=PA392&lpg=PA392&dq=കൊടുമ്പ&#v=onepage&q=കൊടുമ്പ&f=false

https://www.google.com/maps/place/Kodumba,+Palakkad,+Kerala,+India/@10.75877,76.6864348,15z/data=!3m1!4b1!4m6!3m5!1s0x3ba86c54254ef521:0x6a85d7817b8e9c2f!8m2!3d10.7560288!4d76.6768936!16s%2Fm%2F0524kth?entry=ttu
https://en.wikipedia.org/wiki/Kodumba
കൊടുമ്പ என இட்டுத் தேடிப் பார்க்கவும். அருணகிரிநாதர் பாடிய கொடும்பை எந்த ஊர் என நன்கு விளங்கும். 1000+ ஆண்டுகளாய் வள்ளி, தேவசேனை உடனாய சுப்பிரமணியர் திருக்கோயில் இங்கே இருக்கிறது. இந்தக் கார்த்திகேய ஸ்வாமியைப் போற்றும் திருப்புகழ் இஃது. https://www.youtube.com/watch?v=0NBTp2oEwug
கொடும்பை முருகன் திருக்கோவில் 2000 வருஷம் என்று அவ்வூர்க்காரர்கள் கூறுகிறார்கள்.

தினமணியில், கொடும்பைத் திருப்புகழின் சரியான ஊரை அடையாளம் கண்டு கட்டுரை அச்சாகியுள்ளது:
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/Jan/27/பழநியில்-பாதி-கொடும்பு-2639249.html

மூன்று காரணங்கள்:
(1) இன்றும் கொடும்பை (கொடும்ப - மலையாளம்) கூறப்படும் பழைய முருகன் திருத்தலம். பாலக்காடு மாவட்டத்தருக்குப் பழனியில் பாதி இத் தலம்.

(2) மலையாளிகளில் செட்டி என்ற ஜாதி இல்லை. தமிழ்நாட்டு வணிகர்கள் தாம் அப்பெயருடன் கேரளாவில் இயங்குகிறார்கள். வணிகத்தில் சிறந்த செட்டியார்கள், முதலியார்கள் (கைக்கோளர்) வாழ்கிற ஊர். அதனால், செட்டி என முருகனைக் குறிப்பிடுகிறார்.
"செகம் ஏழும் திருகு சிகண்டிப் பொற் குதிரை விடும் செட்டித் திறல! கொடும்பைக்குள் பெருமாளே!”
கம்ப ராமாயணத்தின் “தோல்பாவைக் கூத்து” இன்றும் நிகழும் இடம் இது.

(3)
திருப்புக்கொளியூர், அவினாசி:
https://kaumaram.com/thiru/nnt0948_u.html
பேரூர்:
https://kaumaram.com/thiru/nnt0949_u.html
பேரூர்:
https://kaumaram.com/thiru/nnt0950_u.html
கொடும்பை: சுப்பிரமணியர் திருக்கோயில் - மிகப்பழமையானது.
https://kaumaram.com/thiru/nnt0951_u.html
கீரனூர்: (தாராபுரம் அருகே):
https://kaumaram.com/thiru/nnt0949_u.html

தலமுறையில் முருகன் தலங்கள் உள்ளது. எனவே, கொடும்பை கொங்குநாட்டுக்குரியது, அப்பெயரில் உள்ள ஊர், பழைய முருகன் கோயில் எனக் கொள்வது பொருத்தம்.
-----------------

இதே போல, மாணிக்கவாசகருக்குப் பாண்டியர்கள் கட்டிய மிமோரியல் கோயில், ஆவுடையார் கோயில். ஆனால், அவர் சிவனிடம் ஞான உபதேசம் பெற்ற திருப்பெருந்துறை சோழநாட்டுத் தலம்:  https://nganesan.blogspot.com/2014/02/manickavasakar-and-chola-seashore-town.html
இதுவும், கொடும்பை எந்த ஊர் என நிச்சயிக்கும் தலமுறை போலவே, மாணிக்கவாசகருக்குச் சிவன் அருள் பெற்ற திருப்பெருந்துறை பற்றியும் திருப்புகழ் காட்டுகிறது.

வடக்குப்பற்று த. சுப்பிரமணியபிள்ளை, அவரது திருமகன்களும் அரிதின் முயன்று ஓலைச்சுவடிகளைட் தமிழகமெங்கும் தேடி அச்சில் கொண்டுவந்தது அருணகிரியார் பாடிய திருப்புகழ். அதில் சோழநாட்டுத் தலமாகவே மாணிக்கவாசகர் வரலாற்றுடன் திருப்பெருந்துறை வைக்கப்பெற்றுள்ளது. திருப்புகழ் பாடல் 801-850 தல வைப்புமுறையைப் பார்ப்போம். திருப்பெருந்துறையும், அங்கே மாணிக்கவாசகர் குருமூர்த்தியைச் சந்தித்ததும் சோழநாட்டுத் தலமாக இருக்கிறது. திருப்புகழ் பாடல் 801 - கந்தன்குடி, 802-804 திலதைப்பதி, 805 - அம்பர், 806 - அம்பர் மாகாளம், 807 - இஞ்சிகுடி, 808 - திருநள்ளாறு, 809-810 வழுவூர், 811 - கன்னபுரம், 812 - திருவாஞ்சியம், 813 - செங்காட்டங்குடி, 814 - திருவிற்குடி, 815 - விசயபுரம், 816-822 திருவாரூர், 823 - பெரியமடம், 824 - திருவாரூர்ச் சோமநாதன்மடம், 825 - திரியம்பகபுரம், 826-827 சிக்கல், 828-830 நாகப்பட்டினம், 831 - 834 எட்டிகுடி, 835 - எண்கண், 836-837 குடவாசல், 838 வலிவலம், 839-841 வேதாரணியம், 842 - கோடி குழகர்கோவில், 843-845 திருப்பெருந்துறை, 846 - திருத்துருத்தி, 847 - வீழிமிழலை, 848 - திருவாவடுதுறை, 849 - மருத்துவக்குடி, 850 - பந்தணைநல்லூர். 843-845 பழைய திருவிளையாடல் குறிப்பிடும் மிழலை நாட்டுத் திருப்பந்துறை என்பது திண்ணம்.

இந்த திருப்பந்துறை/திருப்பெருந்துறைத் திருப்புகழ் (843 - இரத்த முஞ்சியு மூளை..) உலகில் குருவாய் விளங்கும் உனது தந்தையாகிய சிவபெருமானுக்கு வேத உபதேசம் அளித்த பரமகுருவே, உன் தந்தை மாணிக்கவாசகருக்கு ஞானச் சொற்பொழிவு செய்த தலமாகிய திருப்பெருந்துறையில் விரும்பி வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே. செகத்தி னின்குரு வாகிய தந்தைக் களித்தி டுங்குரு ஞானப்ர சங்கத் திருப்பெருந்துறை மேவிய பெருமாளே! (844 - வரித்த குங்கும மணிமுலை...) குருமூர்த்தியாய் மாணிக்கவாசகருக்கு திருப்பந்துறையில் எழுந்தருளிய வரலாற்றைப் பதிவுசெய்கிறது: பிரமன் முதலான தேவர்களும் உன் திருவடிகளை விரும்பிப் போற்ற, திருக் குருந்த மரத்து அடியில் வீற்றருளிய குருமூர்த்தியாகிய சிவபெருமானுடன் திருப்பெருந்துறையில் அமர்ந்திருக்கும் பெருமாளே. சதுமுக திருட்டியெண் கணன்முத லடிபேணத் திருக்குருந் தடியமர் குருத்வசங் கரரொடு திருப்பெருந் துறையுறை பெருமாளே! (845 - முகர வண்டெழும் ...) மாணிக்கவாசர் அருள்பெற்ற குருந்தைப் போற்றுகிறது. திருப்பந்துறையின் கடல்வளம் ஆன முத்து, பவழமுடன் நெல் வயல் சூழ்ந்த நிலம்) பேசுகிறது. நிலவு அரும்பு தண் தரளமும் மிளிர் ஒளிர் பவளமும் பொரும் பழனமும் அழகு உற நிழல் குருந்தமும் செறி துறை வளர் உறு பெருமாளே! திருப்பெருந்துறைக்கான திருப்புகழ் மூன்றின் ஈற்றடிகளிலும் மாணிக்கவாசகர்-குருமூர்த்தி வரலாற்றை திருப்பந்துறைத் திருப்புகழில் அருணகிரியார் குறித்துள்ளது அரிய இலக்கிய வரலாற்று ஆவணங்கள்.

நா. கணேசன்
கொடும்பைத் திருப்புகழ்

தனதனனந் தத்தத் தனதனனந் தத்தத்
     தனதனனந் தத்தத் ...... தனதான

......... பாடல் .........

கலைஞரெணுங் கற்புக் கலியுகபந் தத்துக்
     கடனபயம் பட்டுக் ...... கசடாகுங்

கருமசடங் கச்சட் சமயிகள்பங் கிட்டுக்
     கலகலெனுங் கொட்புற் ...... றுடன்மோதும்

அலகில்பெருந் தர்க்கப் பலகலையின் பற்றற்
     றரவியிடந் தப்பிக் ...... குறியாத

அறிவையறிந் தப்பற் றதனினொடுஞ் சற்றுற்
     றருள்வசனங் கிட்டப் ...... பெறலாமோ

கொலைஞரெனுங் கொச்சைக் குறவரிளம் பச்சைக்
     கொடிமருவுஞ் செச்சைப் ...... புயமார்பா

கொடியநெடுங் கொக்குக் குறுகவுணன் பட்டுக்
     குரைகடல்செம் பச்சக் ...... கரவாளச்

சிலைபகஎண் டிக்குத் திகிரிகளும் பத்துத்
     திசைகளினுந் தத்தச் ...... செகமேழுந்

திருகுசிகண் டிப்பொற் குதிரைவிடுஞ் செட்டித்
     திறல கொடும் பைக்குட் ...... பெருமாளே.

Govindaraju Arunachalam

unread,
May 4, 2024, 9:38:22 PM5/4/24
to santhav...@googlegroups.com
மிகச் சிறப்பு. விரைந்து நூலாக்கம் செய்க. 

rgds,
 
Dr. A. GOVINDARAJU,
Retired Principal - National Awardee,



--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAA%2BQEUdS%3D86qOEVKyhnK4xGtyjNWgUjK6MzANthF4fJbOzp57A%40mail.gmail.com.

N. Ganesan

unread,
May 5, 2024, 9:41:06 AM5/5/24
to santhav...@googlegroups.com, kanal...@gmail.com, thiruppug...@gmail.com, Dr. Y. Manikandan
On Sat, May 4, 2024 at 8:38 PM Govindaraju Arunachalam <agrp...@gmail.com> wrote:
மிகச் சிறப்பு. விரைந்து நூலாக்கம் செய்க. rgds,
Dr. A. GOVINDARAJU,
Retired Principal - National Awardee,

நன்றி, கவிஞர் இனியன். ரா. ராகவையங்கார், வஞ்சி மாநகர்; மு. ராகவையங்கார், சேரன் செங்குட்டுவன் - தமிழ் வரலாற்று ஆய்வுகளில் முத்திரை பதித்தன. பின்னர், 1970களில் தொல்லியல் ஆய்வுகள் மு. & ரா. ரா. ஆய்வு முடிபுகள் சரி என நிறுவின. நீங்கள் வசிக்கும் கரூர் தான் சங்கச் சேரர்களின் தலைநகர் வஞ்சி எனச் சங்க காலத்தில் இலக்கியங்கள் பராவுமிடம் என்ற நிரூபணம். குலசேகர ஆழ்வாருக்குப் பின்னர், இந்த வஞ்சி மாநகர் சேரர் கொடுத்த நெருக்கடியால் மேற்கே நகரலாயிற்று. முதலில், தாராபுரம் (பெருவஞ்சி ஆயிற்று). அப்போது அங்கே வாழ்ந்தவர் சீவக சிந்தாமணி தந்த திருத்தக்கதேவர். இன்றும் சிந்தாமணியூர் உள்ளது. பின்னர், கரூரில் இருந்த வித்துவக்கோடு, பட்டாம்பி அருகே செலுத்தப்பட்டது. வித்துவக்கோடு அரண்மனைப் பெண்டிர், குழந்தைகள் வழிபடும் விஷ்ணு ஆலயமாகக் கரூரில் இருந்திருக்கிறது. Something like Palace Chapel in England, Buddhist temple in Japan, etc., இன்றும் கரூரின் அக்கிரகாரப் பெயர்: வித்துவக்கோட்டு அகரம். வயல்களுக்கு நடுவே நிற்கிறது. கொச்சி அரசர்களுக்கு, அஞ்சைக்களம் தலைநகரம் ஆகிவிட்டது.

மு. & ரா. 1900 முதல் பத்தில், வஞ்சி மாநகர் பற்றிக் கூறும் திருப்புகழ் எல்லாம் அச்சாகவில்லை. திருப்புகழில் வஞ்சி மாநகர் என்று வரும் இடங்களைப் பற்றி நல்ல கட்டுரை எழுதவியலும். “Axis Mundi" இந்தக் கரூர் என்ற பொருளில் வரும் திருப்புகழ்கள் உண்டு. 

முனைவர் இரா. கிருஷ்ணமூர்த்தி, தென்னிந்தியாவின் ஒரே Fellow, Royal Numismatic Society, London, UK. FRNS. சங்க கால நிர்ணயத்தை நாணய ஆய்வுகளால் செய்தவர்.

டாக்டர் ரா. கிருஷ்ணமூர்த்தி கூறும் கரூரில் கிடைக்கும் காசுகளைப் பற்றிய 23 ஆய்வுக் கட்டுரைகள் தொகுத்துத் தனி நூலாக வரவேண்டும். தமிழ்நாட்டுக் கல்லூரிகளின் சரித்திரத் துறை ஆசிரியர்கள், மாணவர்கள் செய்யவேண்டிய அருஞ்செயல் இது.


இரா. கிருஷ்ணமூர்த்தி, ரா. நாகசாமி, ஐராவதம் மகாதேவன் மூவருக்கும் இருந்த தர்க்கங்கள், கிடைத்த தெளிவுகள், ஐயங்கள், ... சிலவற்றை அறிவேன். நேரிலே தனித்தனியாய்ச் சொல்லியவை. It is indeed a fortunate coincidence that these 3 experts were with us at the same time, interacted, and cleared things up from the misty veil on Tamils' history.

’பெருவழுதி’ என்ற மிகப்பழைய பாண்டியர் காசில் இருக்கும் சின்னம் என்ன? - எனச் சென்னைப் பல்கலைக்கழகச் சொற்பொழிவில் பேசினேன். கேட்டு மேடையேறி வந்து கட்டித் தழுவிக் கொண்டார். பேரா. ய. மணிகண்டன் ஏற்பாடு செய்திருந்த உரை அது. நீங்கள் வாழ்த்திய தசாங்கத்தில் உள்ள கருத்துக்கு ஆய்வினைத் தூண்டி விட்டவை மேலே நான் குறிப்பிடும் மூன்று அறிஞர் ஆய்வுகள் ஆகும்.

முனைவர் ரா. கிருஷ்ணமூர்த்தி, ஆண்டுக்கு எத்தனை டன் நாணயங்கள் கரூரில் இருந்து திருப்பூர் போகின்றன எனக் கள ஆய்வில் கண்டு எழுதியுள்ளார். வரலாறு அழிவது இப்படித்தான்.
முதன் முதலாக, 'பெருவழுதி' என்ற பெயர் பொறித்த, நாணயம் கிடைத்த பிறகு தான், சங்க காலத்தில் மன்னர்கள் நாணயங்களை வெளியிட்டனர் என்ற கீர்த்தி வெளிவந்தது.

உருக்கு ஆலைக்கு விற்றனர் : அதற்கு முன், வரலாற்று நூல் ஆசிரியர்கள், 'சேர, சோழ, பாண்யர்கள், சிறு வட்டத்தில் ஆண்ட மன்னர்கள்; அவர்களுக்கு நாணயம் வெளியிடும் தொழில்நுட்பம் கிடையாது; அவர்களுக்கு நாணயத்தின் தேவையும் கிடையாது; பண்ட மாற்று முறைதான் இருந்தது' என்று கூறி வந்தனர். ஆனால், இந்த 'பெருவழுதி' நாணயம் கிடைத்த பிறகு, அந்த கூற்று மாற்றப்பட்டது. 1987ம் ஆண்டு, கரூர், அமராவதி ஆற்றில் இருந்து, ஏராளமான, பிற்காலத்திய ரோம நாட்டு செப்பு நாணயங்கள், கிரேக்க நாட்டு நாணயங்கள், சேரர் நாணயங்கள் கிடைத்தன. தகவலறிந்து, நான் அங்கு சென்று பார்த்த போது, கரூர் பஜாரில் உள்ள, சிறு சிறு பாத்திரக் கடைகளில் எல்லாம், அவற்றை குவித்து வைத்திருந்தனர். அந்த நாணயங்கள் குறித்து கேட்ட போது, அவர்கள், 'கடந்த ஒரு மாதமாக கிடைக்கிறது. இவற்றில், ஐந்து டன் நாணயங்களுக்கும் மேலாக, திருப்பூர் உருக்கு ஆலைக்கு அனுப்பி வைத்து விட்டோம்' என்று கூறினர்.

அதைக் கேட்டதும் நான், அளவில்லாத துக்கம் அடைந்தேன். முதன் முதலாக, அங்கு தான், சங்க கால சேரர் நாணயங்கள் கிடைத்தன. அடுத்த ஐந்து ஆண்டுகளில் சோழர், பாண்டிய, மலையமான் காலத்து நாணயங்களும் கிடைத்து விட்டன. கரூரில் கிடைத்த, பிற்காலத்திய ரோம நாட்டு செப்பு நாணயங்கள், கி.பி., 5ம் நூற்றாண்டை சேர்ந்தவை. அந்த நாணயங்களை சுத்தம் செய்து, ஆய்வு மேற்கொண்டு, நூல் எழுதினேன். அதற்கு முன் இந்தியாவில், அது குறித்து யாரும் நூல்கள் எழுதவில்லை.

-------
மகரம் என்பது தமிழர்கள் தந்த வானியல் கோட்பாடு. மகரம் = தை. இந்தியாவின் தொல்வானியல் சாத்திரத்தில் நிலைபெற்ற பெயர்கள் ஆகும். காரணம் இங்கே.
Indus Creation Mythology in the Iron Age Tamil Nadu
(This was published by Fr. Anand Amaladoss, SJ in CenkaantaL, Madras Christian College magazine)
Fr. Henry Heras was from Spain, and was the first one to propose based on the Fish sign that Indus civilization elites were speaking a (North) Dravidian language. Fr. H. Heras, SJ belonged to Jesuit priesthood, https://en.wikipedia.org/wiki/Jesuits

Prime Minister of India announced the ICCR Chair of Indian Studies, University of Houston:

Prof. Kanali T. Vijayalakshmi, Visiting Professor, ICCR Chair of Indian Studies, University of Houston wrote:
On Sat, May 4, 2024 at 8:31 PM Kanali vijayalakshmi <kanal...@gmail.com> wrote:
கொடும்பு என்ற ஊர் பாலக்காடு மாவட்டத்தில் புதுநகரம், கொடுவாயூர், தத்தமங்கலம், என்னும் ஊருகளுக்குப் பக்கத்தில் உள்ளது . கேரளத்தில் மத்தளம் செய்வதற்கு மிகுந்த புகழ்பெற்ற ஊர் அது. இன்றும் தரமான மத்தளம் வாங்குவதற்கு இசைக் கலைஞர்கள் கொடும்புக்கு போவதுண்டு.அந்த ஊரில் எனக்கு நண்பர்கள் இருந்தனர். உங்கள் கட்டுரையை வாசித்த போது ஆச்சரியமாக இருந்தது. 
விஜி

கொடும்பைக்குள் பெருமாளே என முடியும் திருப்புகழ், முன்னும் பின்னும் கொங்குநாட்டுத் தலங்களுக்கு இடையே  கோக்கப்பட்டுச் சுவடிகளில் கிட்டுதலான், கொடும்பை என இன்றும் வழங்கும் தலம் இது என முடிவுக்கு வரலாம். பழைய சுப்பிரமணியர் தலம் இது. கொடும்பாளூரில் பழைய முருகன் கோயிலும் இல்லை. சுவடிகளில் உள்ள ஸ்தலமுறையும் பொருந்துவதில்லை. செட்டி என முருகனை இத் தலத்தில் புகழக் காரணம் குறிப்பிட்டுள்ளேன்.
(இன்னும் 10 திருப்புகழ் தலங்கள் பற்றிச் சிறு குறிப்புகள் கொடுத்துள்ளேன்.)

Have you seen one of the most important books on Carnatic Music, written by Sangeetha Kalanidhi-designate, T. M. Krishna on MattaLam making? Sebastian & Sons. will send a PDF. மா = கருமை. முரசுப் பறையில், இரும்புத் தாதுமண் பூசப்பெற்றது. அனேகம் பாடல்கள் சங்க நூல்களில். இதுவே, பொருள்விரிந்து, மா(வு) என எல்லா மாவுக்கும் சொல்லானது. எண்ணெய் எள் தான் முதலில். சுமேரியாவில் கூட, சிந்துவெளி நாகரிகம் தந்த “எள்” அதே பெயருடன் இருக்கிறது. எண்ணெய் எல்லா ஆயிலுக்கும் ஆமாப்போல, மா(மாவு) மத்தளவியல் தந்த பெயர்ச்சொல். பொருள்விரிவு. பிற பின். டி. எம் கிருஷ்ணா நூலுக்கு வருகிறேன்: பாலக்காடு மணி ஐயரின் ஒளிப்படம், மத்தளம் செய்வோருடன் அருமையாக அச்சிட்டுள்ளனர்.  ஆமதாபாத் பல்கலை, லக்ஷ்மி ஸ்ரீராம், ஃப்ரண்ட்லைன் கட்டுரை காண்க: https://dbsjeyaraj.com/dbsj/?p=83819

கொடும்பை என்னும் பெயர் கொடுவாய் (+ஊர். குருகுவாய் + ஊர் >> குருவாயூர், அதற்கேற்ற புராணக்கதைகள் ...) என்பதுடன் தொடர்பானதுதான். தத்தமங்கலம் ஒரு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நான் உள்ளிட்ட எங்கள் குடும்ப ஜாதகங்கள் எழுதியவர். மகாவித்துவான் வே. ரா. தெய்வசிகாமணிக்கவுண்டர், தேவி பராக்கிரமம் எழுதும்போது வடமொழியில் இருந்து பொருளை அறிய, தத்தமங்கலத்தில் தங்கினார்கள். முதல்பகுதி அச்சானது: புரவலர், அருட்செல்வர் நா. மகாலிங்கம். இரண்டாம் பகுதி அச்சாகாமல் இருந்தது.

-------------

  1. கோயில்கள்
  2. தமிழ் மாநில கோயில்கள்
  3. POLLACHI/பொள்ளாச்சி
  4. KODUMPU-MURUGAN/கொடும்பு-முருகன்/கல்யாணசுப்ரமண்யர்

KODUMPU-MURUGAN/கொடும்பு-முருகன்/கல்யாணசுப்ரமண்யர்

செல்லும் வழி: பொள்ளாச்சி-30, பாலக்காடு-6
தகவல்கள்:

ஊர்: கொடும்பு
மூலவர்: ஸ்ரீகல்யாண சுப்ரமண்யர்,வள்ளி,தெய்வானை
இறைவன்: ஸ்ரீகோஷ்டீஸ்வரர்,
இறைவி: ஸ்ரீமரகதாம்பிகை
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீ ஐயப்பன், ஸ்ரீநாகர், ஸ்ரீசண்டிகேஸ்வரர், ஸ்ரீகாலபைரவர், ஸ்ரீநவகிரகங்கள்
ஐந்துநிலை ராஜ கோபுரம்                                                                                                                                                                                                                                                              மரம்: செண்பகமரம்
தீர்: கிணறு
நான்குகாலபூஜைகள்-காரண ஆகமம்                                                                                                                                                                                                                                    தி.நே-0530-1200,1630-2000

சிறப்புகள்:

தலவரலாறு: சேரமன்னன் ஆட்சிக்குட்பட்ட கொடும்பை பகுதியில் தங்களது ஆடை தேவைகளுக்காக சோழ நாட்டு நெசவாளர் குடும்பங்களை அழைத்து வந்து சோகநாசினி நதிக்கரையில் குடி அமர்த்தினார்கள். அவர்கள் தங்களது தொழிலுக்காக அவினாசி அருகிலுள்ள இடங்களிலிருந்து நூல் வாங்கி வந்தனர். அப்படி நூல் வாங்கி வரும்போது ஒரு மண்மேட்டிலிருந்து என்னையும் அழைத்துப் போங்கள் என குரல்வர அங்கிருந்த முருகன் சிலையை ஒரு மாட்டு வண்டியில் ஏற்றி தாங்கள் இருக்குமிடம்வர அந்த மாடு அங்கிருந்த ஒரு சிவன் கோவிலருகில் படுத்துக் கொண்டது. அங்கு முருகனுக்கு கோவில் கட்டப்பட்டது. அங்கிருந்த  நம்பூதிரிகள் மலையாள முறைப்படி பூஜை செய்ய வேண்டும் என்றும் நெசவாளர்கள் தமிழ் முறைப்படி பூஜை செய்ய வெண்டுமென்று சொல்லியதால் திருவுளச் சீட்டு போட்டு தமிழ் முறைப்படி பூஜை செய்ய முடிவானது. நம்பூதிரி அருகில் உள்ள 1கி.மீ நிலத்தை மான்யமாக எழுதி தந்தார். 

மகாமண்டபம் சிவன், முருகன் கோவிலுக்குப் பொதுவானது.

வரை படம்: விரிவாக்கு(enlarge)


Reply all
Reply to author
Forward
0 new messages