என் ஐயம் வேறு.'பொம்மல்' பழைய சோற்றைக் குறிப்பது போல; 'நிமிரல்' பழைய சோற்றைக் குறிக்கிறதோ என....சக
----
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdxdigfdpq2O6XqhhTSob9e58Tv4EpyiQgqQLWdz8Mg8w%40mail.gmail.com.
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHctxMFryx4HxWQE%2B%2BOMYad%3DxgKrM%3DQdnYHEcoDYM%3D-ttiA%40mail.gmail.com.
SK> > கொக்குகிர் நிமிரல் = கொக்கின் நகம்போன்ற ? என்பது ஆய்விற்கு உரியது.
கொக்கின் நகம் - அரிசிச் சோற்றுக்கு உவமை
---------------------------------
சிலவகை பழைய அரிசி சோறாகும்போது வளைந்து கொக்கின் நகம் (உகிர்) போல வளைந்திருக்கும் போலும். some subspecies of rice - curved/bent like the nails of cattle egret? உ-ம்: வாசமதி (Basmati) அரிசி நறுமணத்தால் பெயர்பெறுவது (வாசம் = மணம்). நீளமான அரிசி சமைத்தபின் வளைந்த தோற்றம் தருவது. https://www.thespicespoon.com/blog/basmati/
https://www.thespicespoon.com/blog/fresh-dill-spiced-rice-in-the-afghan-manner-chelo-shibit/
இவ்வாறு நீண்ட அரிசி வளைவதைச் சங்கப் புலவர் 3 முறை போற்றியுளர்:
(1) கொக்கு உகிர் நிமிரல் மாந்தி எல் பட - நற் 258/6
(2) பெரும் செய் நெல்லின் கொக்கு உகிர் நிமிரல் - புறம் 395/36
(3) கொக்கு உகிர் நிமிரல் ஒக்கல் ஆர - புறம் 398/25
நீறுபூசி வேளாளரும், நீறுபூசா வேளாளரும்
***************************************************
தமிழ்நாட்டில் வேளிர் வருகையால் வேளாண் தொழில் சிறப்பாக அமையலாற்று. வேளாண்மைக்கு மழையே மழையால் வரும் நீரே இன்றியமையாதது. சைவமும், சமணமும் வெள்ளாளர்கள் கொணர்ந்த சமயங்கள். இரண்டுக்கும் ஊடாடல்கள் பல காலமாக நிகழ்கின்றன. சைவ ஆகமங்களில் ஜைந சமயத்தின் தாக்கத்தைக் காண்கிறோம். சைவ உணவு என்பதை ஆருகத (< அர்ஹத்) உணவு என்றே யாழ்ப்பாணத்தில் வழங்குகின்றனர். திருக்குறள், நாலடியார் போன்றவை வேளாண் வேதம் எனப் பெயர்பெற்றவை. கொங்குவேளிர் வானவில்லைக் கரந்துறைகோள் என்கிறார். தூளிசாலம் என்ற வானவில் பெயரால் ஜினாலயத்தின் முதலாவதாகிய வெளிமதில் அமைந்துள்ளது என்கிறது மேருமந்தர புராணம்.
இராம நாடகக் கீர்த்தனையின் ஆசிரியர், நீறுபூசி வேளாளர் என்னும் குலமரபு உடையார். அதாவது, சமணத்தினின்றும், சைவத்துள் புகுந்த வேளாளர்கள். அவ்வகையில், விவசாயத்தைக் குலத்தொழில் ஆகக் கொண்ட சீகாழி அருணாசலக் கவிராயரின் “புள்ளிவில்” என்ற சொல், தூளிசாலம் போன்ற பழைய சொற்களையும், தமிழரின் பண்டைய வானவில் கோட்பாடு பற்றி அறியவும் துணை ஆகிறது. இவரது முதல் மகன் அம்பலவாணக் கவிராயர் கொங்குநாட்டில் வாழ்ந்தவர் ஆவார். காங்கேயம் சிவமலைப்புராணத்தில் (தி. அ. முத்துசாமிக் கோனார் பதிப்பு, 1918) விரிவாகக் காணலாம்.
”இன்றும், தமிழ்நாட்டின் சில இடங்களில் ‘நீறுபூசும் வேளாளர்’ என்போர் உள்ளனர். இவரும் முன்பு சமணராக இருந்து பின்னர்ச் சைவராக மாறியவர். இவர் நீறணிந்து சிவனை வழிபடுகின்றனராயினும் இரவில் உண்ணாதிருத்தல் முதலிய சமணசமய ஒழுக்கங் களையும் ஒழுகி வருகின்றனர். இராமநாதபுரம் மாவட்டத்தில் ‘மஞ்சுபுத்தூர் செட்டிகள்’ என்று ஒரு வகுப்பார் உளர். இவர்கள் இப்போது சைவர்கள். ஆனால், வெள்ளிக்கிழமை தோறும், இளையான்குடி சிவன் கோவிலுக்கு வெளியேயுள்ள ‘அமணசாமி’யைத் தொழுது வருகின்றனர். இந்த அமணசாமி இவர்களின் குல தெய்வம் என்றும் சொல்லுகின்றனர். இப்போது சைவராக உள்ளவர்களில் பெரும் பகுதியோர் பண்டைக் காலத்தில் சமணராக இருந்தவர்களே என்பதற்குப் போதிய சான்றுகள் பல உள.” (சமணமும் தமிழும், மயிலை சீனி வேங்கடசாமி).
"கீர்த்தனை என்று அந்தப் பாட்டுக்களைச் சொன்னாலும் – ’ராம நாடகக் கீர்த்தனைகள்’ என்றே அந்த ‘ஒர்க்’குக்குப் பெயர் சொல்வதுண்டு; அப்படிச் சொன்னாலும் – அந்தப் பாட்டுக்கள் குறிப்பாக ‘தரு’ (daru) என்ற பாடல் வகையைச் சேர்ந்ததேயாகும். பல பாட்டுக்களைத் தொடர்ச்சியாக அமைத்து ஒரு கதையைச் சொல்லிக் கொண்டு போகிறபோது அந்தப் பாட்டுக்கு ‘தரு’ என்றே தனிப்பெயர் கொடுத்திருக்கிறது.
அருணாசலக் கவிராயர் நான் சொல்லி வந்த சைவ-வைஷ்ணவ ஸமரஸத்தைக் காட்டுபவராக இருப்பதும் ஒரு விசேஷம்! அவருடைய பெயரே, விஷ்ணு அவதாரமான ராமர் கதையைச் சொன்ன அவர் சைவர் என்று காட்டுகிறது. ‘நீறுபூசி வேளாளர்’ என்று விபூதியிட்டுக் கொள்வதை வைத்தே பெயர் ஏற்பட்ட ஸமூஹத்திலே பிறந்தவரவர். ஒரு காலத்தில் ஜைனர்களாக இருந்து அப்புறம் ஹிந்து மதத்திற்கு, அதிலே சைவ மரபுக்கு வந்தவர்களின் ஸமூஹத்துக்கு அப்படிப் பேர். தஞ்சாவூர் ஜில்லா தில்லையாடியில் இருந்த அந்தக் குடிகளில் ஒன்றிலே பிறந்தவரவர். கல்யாணமான பிறகு சீர்காழிக்கு வந்து அங்கேயே கடைசி வரை இருந்தார். அதனால் அவரைச் சீர்காழிக் கவிராயர் என்றே சொல்வதாக ஆயிற்று.
சைவக் குடும்பத்திலே பிறந்த அவர் படித்ததும் – தமிழ், ஸம்ஸ்கிருதம் இரண்டிலும் அவர் நிரம்பவே படித்திருக்கிறார்; அப்படிப் படித்ததெல்லாமும் – சைவ மடமான தர்மபுர ஆதீனத்தில்தான். ஆனாலும், சைவமா, வைஷ்ணவமா என்று பேதம் பாராட்டாத அவருக்கு ராம கதையிலேயே ஒரு தனி ருசி இருந்தது. அதனாலேயே இப்படித் தம்முடைய காவிய ஸ்ருஷ்டியை உண்டாக்கினார்.” (காஞ்சிப் பெரியவர்).
> 'கருனை' பற்றிச் சரிவரப் புரிந்து கொள்ளத் தனி இழை தொடங்கி இருக்கிறேன். அங்கே பேசலாம்.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAA%2BQEUdKrjD_Qg4am9pAHT8Ktk_jFtNTr8ytHiRKHwLe4%2BT16w%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAA%2BQEUdKrjD_Qg4am9pAHT8Ktk_jFtNTr8ytHiRKHwLe4%2BT16w%40mail.gmail.com.
On Mon, Oct 16, 2023 at 10:41 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
>
> 'பொம்மல் பெருஞ்சோறு' என நற்றிணை-60 குறிப்பிடும் பழையசோற்றைப் புறம்.395ல்
> "பழஞ்சோற்றுப் பெரும் புகவு" என்கிறார் நக்கீரர்.
>
> பிடவூர் கிழான் மகன் பெருஞ் சாத்தன் உறந்தை மாநகர்க்குக் கிழக்கே நெடுங்கை வேண்மான் எனும் குறுநில மன்னனுக்காக வயலில் இறங்கி உழுத உழவர்களின் தலைவன் ஆவான். அவனது ஊரைச் சார்ந்த உழவர் தாம் உண்ட பழைய சோற்றுக்குக் குறுமுயலின் கறியைக் குழைவாகச் சுட்டும்; வாளை மீன்களை உவித்தும் (வேக வைத்தும்) சேர்த்து உண்டனர
அவித்தல், உவித்தல் - வினைச்சொற்கள் ஆராயத்தக்கன. அவியல் அவித்தல் ஆவியில் வேகவைப்பது. இட்டிலி, சந்தகை (இழையப்பம் > இடியப்பம்.) பிட்டு (புட்டு, கேரளம்) அவித்துச் சமைப்பவை.
இன்றும் தெலுங்கின் தாக்கம் தமிழில் அதிகமாய் உள்ளது. உதாரணமாக, இரு உயிரெழுத்தின் நடுவே வரும் க் மெய், தமிழின் ஒலிப்பு இல்லாவிட்டாலும், -g- என எழுதுவதைக் குறிப்பிடலாம். Murugan, Agananuru, piRagu, ...
உவித்தல் - நீரில் இட்டு கொதிக்கச் செய்து, வற்ற வைத்து ஆக்கும் உணவு. சும்புதல் :: வாடிச் சுருங்குதல்/வற்றுதல். உவித்தல் (உவியல்), உப்பு- உப்பரி - 'to boil'. இந்த அறை ஒரே உப்புசமா இருக்கு - humidity-ஆல் வேர்த்துப் புழுங்கச் செய்யுமிடம். உவித்தல் = புழுக்குதல். புழுங்கல் அரிசி செய்முறை “உவித்தல்” தான். வாளை மீனை நீரில் இட்டுக் கறி (குழம்பு) சமைத்தனர்: "நெடு வாளை பல் உவியல்" – புறம் 395/4.
பலவான, நெடிய வாளை மீன்களை உவித்துச் செய்யும் கறி (= குழம்பு).