216 views
Skip to first unread message

M. Viswanathan

unread,
Dec 26, 2023, 1:41:00 PM12/26/23
to Santhavasantham

NATARAJAN RAMASESHAN

unread,
Jan 3, 2024, 6:50:46 AM1/3/24
to santhav...@googlegroups.com

Please note:


If the previous mail is not ok please follow this mail .Thanks




நாயன்மார் வெண்பா!

             (ஓர் அடியார் - ஒரு வெண்பா)




.                          முன்னுரை


தமிழ் மண்ணில் பிறந்து, பக்தி நெறியை வளர்த்த சிவனடியார்களான நாயன்மார்களின் வரலாற்றைக் கூறுவது பெரிய புராணம் என்று அழைக்கப்படும் திருத்தொண்டர் புராணம்.                                            இதில் கூறப்படும் நாயன்மார்கள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள்; பல்வேறு ஊர்களில் வாழ்ந்தவர்கள்,  தொழிலால், இனத்தால்,பொருளாதார, சமுதாயப் படிநிலைகளால் பெரிதும் வேறுபட்டவர்கள்.

எனினும் சிவபெருமான் மீது வைத்த அளப்பரிய பக்தியால் ஒன்றுபட்டவர்கள்.                                                       

இவர்களது திருக்கதையைப் பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடியவர் சேக்கிழார்.

ஒவ்வொரு அடியாரின் கதையை மிகச் சுருக்கமாகச்  சொல்லிவிட்டு, அக்கதையின் மையக் கருத்தினை ஒரேயொரு வெண்பாவில் வருமாறு பாடும் முயற்சியே இந்நூல் 

தில்லைக் கூத்தனின் எல்லையில்லாத் திருவருள்  துணை புரிவதாக.


                                              -   தில்லைவேந்தன்.






                                சிவன் துதி!


கொன்றையும்,கங்கையும்,கூன்பிறையும் செஞ்சடையில்

ஒன்றியொளிர் ஈசனே,உன்னடியார் - நன்றுபுரி

தொண்டின் கதையைநான் சொல்லவிழை வெண்பாவில் 

கொண்டுன் அருளைநீ கூட்டு!



                                 *****



            

           பெரியபுராணம் உருவான  கதை



அநபாய குலோத்துங்கச் சோழனின் முதலமைச்சர் சேக்கிழார் பெருமான்.

மன்னனின் வேண்டுகோளை ஏற்றுச் சிவனருட் செல்வர்களின் திருக்கதையை எழுதத் தில்லை சென்று அம்பலத்தாடும் ஈசனை வணங்கினார்.

அப்போது, ஈசன் விண்வழியே “உலகெலாம்” என்று அடியெடுத்துக் கொடுக்க,அதனையே தொடக்கமாக வைத்துப் “ பெரிய புராணம்” என்றழைக்கப்படும் ,”திருத்தொண்டர் புராணம்” என்ற நூலைத் தித்திக்கும் தமிழில் எழுதினார்.



                           

               ஆக்கி அளித்தார் அமுது!


ஓங்குதில்லை ஈசன்,“உலகெலாம்” என்றருள,

ஆங்கு முதலாய் அதைவைத்து - வீங்குபுகழ்ச்

சேக்கிழார்,தொண்டர் திருக்கதையைச் செந்தமிழில்

ஆக்கி அளித்தார் அமுது!



                                *****




                 தில்லைவாழ் அந்தணர்கள்!



(தில்லைத் திருநகரைச் சேர்ந்த மூவாயிரம் அந்தணர்கள், அறம்பேணி, மறையோதி, எரியோம்பி மாசற்ற நல்வாழ்க்கை வாழ்ந்து சிவத் தொண்டு புரிந்து வந்தனர்.                                                                                                           

மெய்ப்பொருளாம் சிவனை அறிவதும்,அவன் கோவில் பணிகளைச்  செய்வதும்,மறைகள் ஓதுவதும் அவர்கள் வாழ்க்கை முறையாகும்.        அடியார்களைப் பற்றிக் கூறும் “ திருத்தொண்டத்தொகை” என்ற நூலைச் சுந்தரர்” தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என்றே தொடங்குகின்றார்.)




மாடமலி மாளிகைகள் மன்னுதில்லை அந்தணர்கள்

தேடலென்றும் மெய்ம்மைத் தெளிபொருள் - கூடலென்றும்

ஆடல்  அரசன் அணிகோவில், நான்மறைகள் 

பாடலென்றும் நல்வாழ்க்கைப் பாங்கு!




                              *****




            1)  திருநீலகண்ட நாயனார்



(தில்லைப் பதியில் மட்பாண்டம் செய்யும் குலத்தினரான திருநீலகண்டர் மனைவியுடன் வாழ்ந்து வந்தார்.

அவர் ஒரு நாள் கணிகையர் வீடு சென்று வந்ததால், வருத்தமும், சினமும் கொண்ட  மனைவியார், “ எம்மைத் தீண்டுவீராயின் திருநீலகண்டம்” என்றார்.

“எம்மை” என்று பன்மையில் சொன்னதால், அன்று முதல், மனைவி உட்பட  எந்தப் பெண்ணையும் மனத்தினாலும்  தொடாமல் வாழ முடிவு செய்தார்.             

திருநீலகண்டம்” என்று இறைவன்  பெயரால்  இடப்பட்ட ஆணையை ஏற்று, அயலார் எவரும் அறியாமல் மனைவியுடன் ஒரே வீட்டில் இவ்வாறு  வாழ்ந்து வந்தார். 

காலப் போக்கில்  முதுமை அடைந்தார்.

ஒருமுறை இறைவன், அடியார் உருவில் வந்து திருநீலகண்டரிடம்  ஓடு ஒன்றைக் கொடுத்து அதனைப்  பாதுகாத்து வைக்கச்  சொன்னான்.

பிறகு,அவனே  அந்த ஓட்டை மறைய வைத்து மாயம் செய்தான்..

ஓட்டைக் களவாடவில்லை என்று மனைவியின் கையைப்பற்றி நீரில் மூழ்கிச் சத்தியம் செய்யச் சொன்ன போது, அவர் தங்களுக்குள் நடந்ததைக் கூறினார். பிறகு, இருவரும்  கோல் ஒன்றைப் பற்றி நீரில் மூழ்கி எழும் போது, இறையருளால் பழைய இளமை வடிவைப் பெற்றனர்.                                                                                                 உமையம்மையோடு வானில் காட்சியளித்த இறைவன், “என்றும் இந்த இளமை நீங்காமல் என்னுடன் இருப்பீராக” என்று அருள் செய்தான்.            




‘தீண்டாதீர் எம்மை’யென்ற செப்புமொழி பேணியவர்,

ஆண்டடியார் நல்லோ(டு) அதுதொலைய - நீண்டகோல்

பற்றிநீர் மூழ்கப் பழைய வடிவிளமை

பெற்றதன்றோ நீலகண்டப் பேறு!


                               *****



                     2) இயற்பகை நாயனார்


(இயற்பகையார், காவிரிப்பூம் பட்டினத்தைச் சேர்ந்த பெருவணிகர். சிவனடியார்கள் எது கேட்டாலும், ‘இல்லை’ என்று சொல்லாமல் தருவதைக் கொள்கையாகக் கொண்டவர்.                                            ஒருநாள், மறையவர் வடிவில் வந்த இறைவன், அவரிடம் அவர் மனைவியைத் தருமாறு கேட்க, இயற்பகையாரும் தயங்காமல் அளித்தார்.                                 

நாயனாரின் சுற்றத்தார் வெகுண்டு” இவன் பித்தன்” என்று கூறித் தடுத்தனர்.                                                                                      இயற்பகையார் வாளேந்திப் போரிட்டு அவர்களைக் கொன்று,ஊர் எல்லைவரை துணையாகச் சென்று திரும்பினார்.                                                                                 

அப்போது மறையவர் அழைக்க மீண்டும் வந்தவர்,மனைவி மட்டும் நிற்பதைப் பார்த்தார்.மறையவரைக் காணவில்லை.                                 உடனே  இறைவன், உமையாளுடன்  வானில்  காட்சி தருவதைப் பார்த்தார்.இயற்பகையாரையும், அவர் மனைவியாரையும் சிவலோகத்துக்கு வருமாறு இறைவன் திருவருள் புரிந்தான்.போர் செய்து இறந்த சுற்றத்தாரும் வானுலக இன்பத்தைப் பெற்றனர்.           நாயனார், உலக இயல்புக்கு மாறுபட்டவர் என்பதை உணர்த்தச் சேக்கிழார், ”உலகியல் பகையார்” என்று கூறுவது குறிப்பிடத்தக்கது).


இல்லையெனச் சொல்லாமல் இல்லாளை ஈந்துவிட்டு      வல்லவராய்க் காத்துநின்றார் வாள்வீசி- ஒல்லையில்      ஈசனவன்.காட்சி, இயற்பகைக்குத் தந்ததவர்                   பேசரிய தன்மையின் பீடு!

                (ஒல்லையில்- விரைவில்)



                                *****

        

          3) இளையான்குடி மாற நாயனார்


(இளையான்குடி என்ற ஊரில், வேளாண் பெருங்குடியைச் சேர்ந்த மாறனார் வாழ்ந்து வந்தார்.                                                                      அனைவரையும் சிவனடியாராகக் கருதி உணவளிப்பதையே கடமையாகக் கொண்டவர்.                                                                       நாளடைவில், வறுமையுற்ற போதும் இதனைத் தொடர்ந்து செய்து வந்தார்.                                                                                                  ஒரு மழைக்காலத்து நள்ளிரவில் சிவனடியாராக வந்த இறைவனுக்காக,   வயலில் விதைத்த விதை நெல்லைக் கொண்டு வந்தும்,வீட்டின் கூரையை அறுத்து விறகாக்கியும், தோட்டத்துக் கொல்லையில் இருந்த கீரையைப் பறித்தும் ஏற்பாடுகள் செய்ய, மனைவியார் அமுது சமைத்தார்.                               

அடியாரை அமுதுண்ண அழைக்கும்போது அவர் மறைந்து, அங்குச் சோதிவடிவில் இறைவன் காட்சி தந்தான். மாறனாரும், அவர் மனைவியும் தன்னுடைய பெரிய உலகத்தில் இன்பம் அனுபவிக்க வருமாறு அருள் செய்தான்))

                                                                                              

நட்டவிதை நெல்கொணர்ந்து நாடித்தன் இற்கூரை       வெட்டி எடுத்து விறகாக்கி, - கிட்டிய                                  தோட்டத்துக் கீரையுடன் சோறாக்க, ஈசனும்                   நாட்டத்தால், வாவென்றார் நன்று!

                         

   

                                *****



                4) மெய்ப்பொருள் நாயனார்!

திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த மெய்ப்பொருள் நாயனார், சிவபெருமானின் அடியார் கோலத்தை மிகவும் மதித்து, அவர்களுக்குத் தொண்டு புரிந்து வந்தார்.                     பெரும் வீரரான இவரிடம் பகைகொண்ட முத்தநாதன் என்பவன் பலமுறை  எதிர்த்துப் போரிட்டுத்  தோற்றான்.                                         வஞ்சத்தால் வெல்லக் கருதிய முத்தநாதன், சிவனடியார் வேடம் பூண்டு சுவடிக்குள் கத்தியை மறைத்து  அவர் அரண்மனையுள் புகுந்தான்..தடுத்த, தத்தன் என்னும் மெய்க்காவலனிடம், “அரசனுக்கு உறுதிப் பொருள் கூற. வந்த என்னைத் தடுக்காதே” என்று சொல்லி அரசனின் படுக்கையறைக்குள் புகுந்தான்.அரசியாரையும் அப்பால் செல்ல வைத்தான்.                         

 தரைமேல் இருந்து வணங்கிய நாயனாரை, ஓலைக் கட்டை அவிழ்ப்பவனைப் போல் அதனுள் மறைத்த வைத்திருந்த  கத்தியை எடுத்துக்  குத்தினான்.   முத்தநாதன் உள்ளே சென்ற போதே மனம் அங்கு வைத்த தத்தன் ஓடி வந்து அவனைக் கொல்லத் தன் வாளை ஓங்கினான்.குருதி பெருகும் நிலையிலும் மெய்ப்பொருளார், “தத்தா இவர் நமர்” எனத்தடுத்து வீழ்ந்தார்.முத்தநாதனை நாட்டின் எல்லையைத் தாண்டி பாதுகாத்து விட்டு வருமாறு பணித்தார்.               செய்தியை அறிந்து அக்கொடியவனைக் கொல்ல வந்தவர்களை, மன்னரின் ஆணையைக் கூறித் தடுத்தான் தத்தன். அவனை நகரத்துக்கு வெளியே காட்டில் விட்டு விட்டுத் திரும்பி வந்து மன்னரிடம் அதனை கூற அவரும் அவனை வாழ்த்தினார்.                      உமையம்மையுடன் காட்சி கொடுத்த  ஈசன்  மெய்ப்பொருளாருக்குத் தன் திருவடிப் பேற்றினை அருளினான்.                     


வெல்லுமா மெய்ப்பொருளை வீரமிலா முத்தனவன்.         கொல்லத் தவவேடம் கொண்டுகுத்த -  நல்லவரும்.          தத்தா நமரென்றார் சாய்ந்துதரை வீழ்கையில்,பின்         அத்தனடி சேர்ந்தார் அவர்!



                               *****



                    5) விறன்மிண்ட நாயனார்! 


சேர நாட்டைச் சேர்ந்த திருச் செங்குன்றூரில் வாழ்ந்து வந்த விறன்மிண்டர்,சிவனடியாரை வணங்கிய பின்னரே சிவனை வணங்கும் கொள்கை உடையவர்.                                                            lஒருமுறை விறன்மிண்டர் திருவாரூரில் அடியவரிடையே இருந்த போது, ஆருராகிய சுந்தரர் அவர்களை வணங்காமல் கோவிலுக்குள் சென்றார். உடனே சினம் கொண்ட நாயனார், சுந்தரரையும், அவரை ஆட்கொண்ட இறைவனையும் “புறகு” (அடியவர்க்குப் புறம்பானவர்கள்) என்று கூறினார்.                                                         இதனை அறிந்த சுந்தரர் அடியவரைப் பற்றிக் கூறும் “ திருத்தொண்டத் தொகை” என்னும் பதினோரு பாடல்களைப் பாடினார்.இத்தொகையே, பெரிய புராணம் பாடுவதற்கு முதல் நூலாக அமைந்தது.                                                       திருத்தொண்டத் தொகை பாடுவதற்குக் காரணரான விறன்மிண்டர் பின்னர்க் கயிலாயத்தில் கணநாயகர் ஆகும் பேறு பெற்றார்.


முக்கண் இறைவனுக்கு முன்னடியார் தாள்பணியும்.          தக்கதொரு கொள்கையின் தன்மையிலா- மிக்கபுகழ்.   ஆரூரர்,ஆட்கொண்ட அண்ணல், புறகெனும்சொல்.        சீரார் தொகைதந்த தே!

    

 விளக்கம்:                   

சிவனடியாரை வணங்கிய பின்னரே சிவனை வணங்க வேண்டும் என்ற கொள்கையை  அறியாத    சுந்தரரையும், அவரை ஆட்கொண்ட இறைவனையும் “புறகு” (அடியவர்க்குப் புறம்பானவர்கள்) என்று கூறிய சொல் சிறப்பு மிக்க “திருத்தொண்டத் தொகை” என்ற நூலைத் தந்தது.                         


                             *****

(தொடரும்)


               





Siva Siva

unread,
Jan 3, 2024, 8:24:35 AM1/3/24
to santhavasantham
Looks like the subject line is empty.

புதிய திருத்தொண்டர் திருவந்தாதி வெல்க!

V. Subramanian

NATARAJAN RAMASESHAN

unread,
Jan 3, 2024, 9:03:16 AM1/3/24
to santhav...@googlegroups.com
Dear Sri Siva siva,

Actually it was meant for kuvikam e magazine
By oversight I have sent it to SV.
It is a new serial I have intended to write on Nayanmars lives in Kuvikam and this one is the first episode 
Anyhow you are most welcome to go through it and give your considered opinion 
Thanks

Natarajan Ramasehan

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCMMnnmsVkSE5sMVnMyHj6exi5NG%2BF-A9J27uh8ZmngKFQ%40mail.gmail.com.

Siva Siva

unread,
Jan 3, 2024, 9:08:47 AM1/3/24
to santhav...@googlegroups.com
Oh! ok.
Venba could be more challenging than aruseer viruththam (such as mA mA kAy) for such story narration.

V. Subramanian

NATARAJAN RAMASESHAN

unread,
Jan 3, 2024, 9:13:13 AM1/3/24
to santhav...@googlegroups.com
Thanks .

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

K.R. Kumar

unread,
Jan 4, 2024, 4:05:23 AM1/4/24
to santhav...@googlegroups.com
அன்புள்ள தில்லைவேந்தன்,

🙏👏👏🙏

மிகச் சிறப்பு.

1)முதலில் 'நாயன்மார் வெண்பா' என்று தலைப்பைக் கொடுங்கள்.
2) 2,3,4,5 பாடல்களின் வரிகள், எனது கம்ப்யூடெரில் சரியாக வரவில்லை. 4 வரிகளுக்குப் பதில் இரண்டு வரிகளாக வந்துள்ளன. இதுவரை அம்மாதிரி வந்ததில்லை. இது என் கம்ப்யூடெரின் தவறா அல்லது உங்கள் FORMATல் சிக்கலா ?
3) இதைச் சரி செய்தபின் எல்லாக் கவிதைகளையும் குவிகக் குழுமத்திற்கு அனுப்பும்போது சந்தவசந்தக் குழுமத்திற்கும் அனுப்புங்கள்.
4)நாங்களும் இரசித்து இன்புறுகிறோம்.

குமார்(சிங்கை)


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Jan 4, 2024, 4:13:49 AM1/4/24
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி திரு குமார்(சிங்கை)
தங்கள் அன்புக்கு நன்றி
குவிகத்துக்கு அனுப்பும் போது இங்கும் அனுப்புகிறேன்
முதல் episode ல் இருந்து ஒரு தனி இழையில் பதிவிடுகிறேன் ( நாயன்மார் வெண்பா என்ற தலைப்பில்)
There seems to be some glitch in my format and lines appear jumbled.
I shall try to fix it soon 
Thanks again for your appreciation and encouragement 
      -தில்லைவேந்தன்
..

K.R. Kumar

unread,
Jan 4, 2024, 5:47:57 AM1/4/24
to santhav...@googlegroups.com
🙏🙏You are welcome 🙏🙏

Kumar (Singai)
Sent from my iPhone

On 4 Jan 2024, at 17:13, NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:



Kavip-perum-sudar Hari Krishnan

unread,
Jan 13, 2024, 9:41:16 PM1/13/24
to Santhavasantham


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous.

A

NATARAJAN RAMASESHAN

unread,
Jan 13, 2024, 9:50:17 PM1/13/24
to santhav...@googlegroups.com
நன்றி ஹரியண்ணா.
நலமே விளைக!

       —தில்லைவேந்தன்.
..

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Mar 5, 2024, 5:10:49 AM3/5/24
to santhav...@googlegroups.com

NATARAJAN RAMASESHAN

unread,
Mar 15, 2024, 8:50:51 PM3/15/24
to santhav...@googlegroups.com

Kaviyogi Vedham

unread,
Mar 15, 2024, 8:57:54 PM3/15/24
to santhav...@googlegroups.com
யாவும் படித்தேன்  தில்லை.. மிக அழகு.. 
 யோகியார்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Mar 15, 2024, 9:35:38 PM3/15/24
to santhav...@googlegroups.com
நன்றி யோகியாரே
.,,

NATARAJAN RAMASESHAN

unread,
Apr 16, 2024, 1:36:47 AM4/16/24
to santhav...@googlegroups.com
குவிகம் மின்னிதழில் அடியேன் எழுதும் கவிதைத் தொடர்,   நாயன்மார் வெண்பா -4




RNachi

unread,
Apr 16, 2024, 3:24:22 AM4/16/24
to சந்தவசந்தம்
மிகவும் அருமை ஐயா நாயன்மார் வெண்பாக்கள்
நாயன்மார் திருவடிகள் போற்றி

Arasi Palaniappan

unread,
Apr 16, 2024, 4:09:23 AM4/16/24
to santhav...@googlegroups.com
தூயன்பால் ஈசன் துணையடிகள் சார்ந்தருளும் 
நாயன்மார் போற்றும் நயவெண்பா - வாய்மலர்ந்த 
தேனோ? அமுதமோ? தில்லைநட ராஜனருள் 
தானோ? உரைத்திடுவீர் சற்று!

அரசி பழனியப்பன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Apr 16, 2024, 5:09:26 AM4/16/24
to santhav...@googlegroups.com
நன்றி திரு நாச்சியப்பன்
       -தில்லைவேந்தன்.
..

NATARAJAN RAMASESHAN

unread,
Apr 16, 2024, 5:12:28 AM4/16/24
to santhav...@googlegroups.com
அழகிய  வெண்பாவால் பாராட்டிய  தம்பி 
திரு அரசி பழனியப்பனுக்கு நன்றி

           —தில்லைவேந்தன்.
..

NATARAJAN RAMASESHAN

unread,
May 15, 2024, 11:03:52 PM5/15/24
to santhav...@googlegroups.com

குவிகம் மின்னிதழில் அடியேன் எழுதும் தொடர்-
“நாயன்மார் வெண்பா பகுதி 5:

             —தில்லைவேந்தன்

Ram Ramakrishnan

unread,
May 16, 2024, 2:19:40 AM5/16/24
to santhav...@googlegroups.com

அருமையான பதிவு, திரு. தில்லைவேந்தன்.

எல்லா நாயன்மார் வெண்பாக்எகளும் எழுதி முடித்தபின் ஒரு கோப்பாக pdf ஆவணமாகப் பதிவிடுவீர் என நம்புகிறேன்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On 16 May 2024, at 8:33 AM, NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
May 16, 2024, 3:22:36 AM5/16/24
to santhav...@googlegroups.com
பாராட்டுக்கு நன்றி திரு ராம்கிராம்
தங்கள் கருத்துக்கும்  நன்றி

         —தில்லைவேந்தன்.
..

NATARAJAN RAMASESHAN

unread,
Jun 16, 2024, 6:27:48 AM6/16/24
to santhav...@googlegroups.com

NATARAJAN RAMASESHAN

unread,
Jul 20, 2024, 7:44:14 AM7/20/24
to santhav...@googlegroups.com
குவிகம்- மின்னிதழில் அடியேன் எழுதும் தொடர்,
“நாயன்மார் வெண்பா” பகுதி -7’(ஜூலை 2024)

                      —தில்லைவேந்தன்















RNachi

unread,
Jul 20, 2024, 10:18:28 AM7/20/24
to சந்தவசந்தம்

தங்களது நாயன்மார் வெண்பாக்கள் மிக அருமை ஐயா. வாழ்த்துகள்

அடியேன் எழுதிய வெண்பாக்கள்:
                                  
தண்டியடிகள் நாயனார் போற்றி

புறக்கண் இலாத பொழுதும் அகக்கண்
மறவனடி கண்டு மகிழ்வார் – அறவாழி
அந்தணன் ஈந்த அருட்கண்ணுள் ளெய்திய
தண்டி யடிகள் தவம்


மூர்க்க நாயனார் போற்றி

சூதில் பொருளீட்டிச் சொற்படி வென்றினும்
நீதி வழுவாது நின்றிடும் – சோதிவாய்
ஆதியும் அந்தமும் ஐயன் திருவடிதாம்
வேதியர் வென்ற விருது

சோமாசிமாறர் நாயனார் போற்றி

அடியார் அடிசார அன்பே சிவமாய்ப்
படியாரப் பூசிக்கும் பண்பு – முடிவிலாக்
கோமானை ஏத்தும் கொடையாளி நாயனார்
சோமாசி மாறர் சுயம்பு

NATARAJAN RAMASESHAN

unread,
Jul 20, 2024, 10:54:24 AM7/20/24
to santhav...@googlegroups.com
அருமை திரு நாச்சியப்பன்
நன்றி

          —தில்லைவேந்தன்.

Siva Siva

unread,
Jul 20, 2024, 11:14:30 AM7/20/24
to santhav...@googlegroups.com
அடியார் பெருமையைக் கூறலும் கேட்டலும் என்றும் இனிதே.
வாழ்க!

V. Subramanian


On Sat, Jul 20, 2024 at 10:18 AM RNachi <rna...@gmail.com> wrote:

தங்களது நாயன்மார் வெண்பாக்கள் மிக அருமை ஐயா. வாழ்த்துகள்

அடியேன் எழுதிய வெண்பாக்கள்:
                                  
தண்டியடிகள் நாயனார் போற்றி

புறக்கண் இலாத பொழுதும் அகக்கண்
மறவனடி கண்டு மகிழ்வார் – அறவாழி
அந்தணன் ஈந்த அருட்கண்ணுள் ளெய்திய
தண்டி யடிகள் தவம்

--> 
இங்கே, மறவன் என்பதை எப்படிப் பொருள்கொள்ளவேண்டும்?


மூர்க்க நாயனார் போற்றி

சூதில் பொருளீட்டிச் சொற்படி வென்றினும்
நீதி வழுவாது நின்றிடும் – சோதிவாய்
ஆதியும் அந்தமும் ஐயன் திருவடிதாம்
வேதியர் வென்ற விருது

--> 
இங்கே, வேதியர் யாரைக் குறிக்கின்றது?
 

சோமாசிமாறர் நாயனார் போற்றி

அடியார் அடிசார அன்பே சிவமாய்ப்
படியாரப் பூசிக்கும் பண்பு – முடிவிலாக்
கோமானை ஏத்தும் கொடையாளி நாயனார்
சோமாசி மாறர் சுயம்பு

--> 
இங்கே, சுயம்பு என்பதை எப்படிப் பொருள்கொள்ளவேண்டும்?
 


RNachi

unread,
Jul 20, 2024, 9:27:28 PM7/20/24
to சந்தவசந்தம்
1) மறவன் (சீவன்களை மேய்க்கும் படைத்தலைவன்) என்று சிவபெருமானைக் குறிப்பிடுகிறேன் ஐயா

2) வேதங்களைத் தழுவி நடப்பவர் என்னும் பொருளில், மூர்க்க நாயனாரை வேதியர் என அழைத்தேன்

3) சுயத்தை உணர்ந்து முத்தி பெற்றதால் சோமாசி மாறரை சுயம்பு எனக் கூறினேன் ஐயா. 

நன்றி
இராம. நாச்சியப்பன்

Siva Siva

unread,
Jul 21, 2024, 8:00:50 AM7/21/24
to santhav...@googlegroups.com
Thanks for the clarifications regarding the meanings you intended for those words.

V. Subramanian

NATARAJAN RAMASESHAN

unread,
Aug 17, 2024, 3:23:48 AM8/17/24
to santhav...@googlegroups.com
குவிகம்- மின்னிதழில் அடியேன் எழுதும் தொடர்,
“நாயன்மார் வெண்பா” பகுதி -8’(ஆகஸ்ட் 2024)

                      —தில்லைவேந்தன்


Ram Ramakrishnan

unread,
Aug 17, 2024, 8:39:38 AM8/17/24
to santhav...@googlegroups.com
அருமையான 3 வெண்பாக்கள்.

“கல்லால் அடித்தான் ஒருவன்” என்ற பாபநாசம் சிவன் அவர்களின் பாடல் வரி இதுகாறும் புரியாமல் இருந்தேன. இப்போது உங்கள் இடுகையால் சாக்கிய நாயனார் பற்றிய விவரம் அறிந்தேன்.

மேலும் சிறுத் தொண்டர் புராணம் பற்றிய விவரம் முழுமையாகத் திரைப் படத்தில் கொணரவில்லை என்பதையும் அறிந்தேன்.

மிக்க மகிழ்ச்சி.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Aug 17, 2024, at 03:23, NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Aug 17, 2024, 9:07:37 AM8/17/24
to santhav...@googlegroups.com
நன்றி திரு ராம்கிராம்

      —தில்லைவேந்தன்
..

Siva Siva

unread,
Aug 17, 2024, 9:38:26 AM8/17/24
to santhav...@googlegroups.com
நல்ல தொண்டு. வாழ்க.

/ சாக்கிய நாயனார் வெண்பா

அணிந்தார் துவராடை, அன்பால் சிவனைப்
பணிந்தார், எறிந்தார்கல் பற்றால், – அணைந்த
விடையான் மகவாய் விழைந்து மகிழ்ந்தான்
அடைந்தார் சிவன்வாழ் அகம். /

3-ஆம் அடியை எப்படிப் பொருள்கொள்ளவேண்டும்?

V. Subramanian

NATARAJAN RAMASESHAN

unread,
Aug 17, 2024, 9:48:29 AM8/17/24
to santhav...@googlegroups.com
நன்றி திரு சிவசிவா


/:3-ஆம் அடியை எப்படிப் பொருள்கொள்ளவேண்டும்::


குழந்தையின் எந்தச் செயலையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் பெற்றோர்களைப் போலச் சிவபெருமான், சாக்கிய நாயனார் கல் எறிந்ததையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டான்

Siva Siva

unread,
Aug 17, 2024, 9:50:54 AM8/17/24
to santhav...@googlegroups.com
Thanks.

N. Ganesan

unread,
Aug 19, 2024, 6:46:01 PM8/19/24
to santhav...@googlegroups.com
On Sat, Aug 17, 2024 at 7:39 AM Ram Ramakrishnan <ramrama...@gmail.com> wrote:
அருமையான 3 வெண்பாக்கள்.

“கல்லால் அடித்தான் ஒருவன்” என்ற பாபநாசம் சிவன் அவர்களின் பாடல் வரி இதுகாறும் புரியாமல் இருந்தேன. இப்போது உங்கள் இடுகையால் சாக்கிய நாயனார் பற்றிய விவரம் அறிந்தேன்.

பாபநாசம் சிவன் பாடல் எது? நன்றி.

நா. கணேசன்


மேலும் சிறுத் தொண்டர் புராணம் பற்றிய விவரம் முழுமையாகத் திரைப் படத்தில் கொணரவில்லை என்பதையும் அறிந்தேன்.

மிக்க மகிழ்ச்சி.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Aug 17, 2024, at 03:23, NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:


குவிகம்- மின்னிதழில் அடியேன் எழுதும் தொடர்,
“நாயன்மார் வெண்பா” பகுதி -8’(ஆகஸ்ட் 2024)


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hi%3DR7DrkzCQrJMkceTnMxS8Fu-vpLU%2BWx1MQiqZfojrxA%40mail.gmail.com.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Swaminathan Sankaran

unread,
Aug 19, 2024, 7:16:26 PM8/19/24
to santhav...@googlegroups.com
'காரணம் கேட்டு வாடி, காதலன் சிதம்பரநாதன் இன்னும் வராத'.
  'கல்லால் அடித்தான் ஒருவன்' என்று நினைக்கிறேன்.
கல்லால் ஒருவன் அடிக்க, காண்டீபன் எப்பும் வில்லால் ... என்று வரும் என்பதாக ஞாபகம்.
தவறாக இருக்கலாம்.

சங்கரன் 



--
 Swaminathan Sankaran

N. Ganesan

unread,
Aug 19, 2024, 7:27:44 PM8/19/24
to santhav...@googlegroups.com
கவியோகி சுத்தானந்த பாரதி பாடல்.



Ram Ramakrishnan

unread,
Aug 19, 2024, 8:31:54 PM8/19/24
to santhav...@googlegroups.com
தந்தை்தாயிருந்தால்்உனக்கிந்தத்
தாழ்வெல்லாம் வருமோ ஐயா

என்ற பாட்டு.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Aug 19, 2024, at 18:46, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:



Ram Ramakrishnan

unread,
Aug 19, 2024, 8:39:06 PM8/19/24
to santhav...@googlegroups.com
இது கோபாலகிருஷ்ண பாரதியின் பாட்டு எனத் 
தெரிகிறது. நான் நினைத்தபடி பாபநாசம் சிவன் பாட்டு அல்ல.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Aug 19, 2024, at 20:31, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:

தந்தை்தாயிருந்தால்்உனக்கிந்தத்

Ram Ramakrishnan

unread,
Aug 19, 2024, 8:41:37 PM8/19/24
to santhav...@googlegroups.com
அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Aug 19, 2024, at 20:39, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:

இது கோபாலகிருஷ்ண பாரதியின் பாட்டு எனத் 

N. Ganesan

unread,
Aug 19, 2024, 9:02:19 PM8/19/24
to santhav...@googlegroups.com
பாபநாசம் சிவன் பாடல் அல்ல.

N. Ganesan

unread,
Aug 19, 2024, 9:03:39 PM8/19/24
to santhav...@googlegroups.com
கோபால கிருஷ்ண பாரதியோ, பாபநாசம் சிவனோ இப்பாடலை இயற்றவில்லை.

Ram Ramakrishnan

unread,
Aug 19, 2024, 9:06:06 PM8/19/24
to santhav...@googlegroups.com
நீங்கள் சொல்வது சரியே.

நான் முன்னமே இட்டபடி இது கோபாலகிருஷ்ண பாரதியார் பாடல்


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Aug 19, 2024, at 21:02, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:



Ram Ramakrishnan

unread,
Aug 19, 2024, 9:07:08 PM8/19/24
to santhav...@googlegroups.com
நாஞ்சில்நாடன்.com வலையில் அப்படித்தான் கண்டேன்.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Aug 19, 2024, at 21:03, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:



Ram Ramakrishnan

unread,
Aug 19, 2024, 9:11:04 PM8/19/24
to santhav...@googlegroups.com
The relevant portion from Nanjilnadan.com is quoted below:


“கூடவே கோபாலகிருஷ்ண பாரதியார் பாடலொன்றும் நினைவுக்கு வருகிறது. முகாரி அல்லது சண்முகப்பிரியா ராகத்தில் பாடுவார்கள். இசைப்பேழையில் என்.சி. வசந்தகோகிலம் பாடித் திரும்பத் திரும்பக் கேட்டிருக்கிறேன். ‘தந்தை தாயிருந்தால் உமக்கிந்த தாழ்வெலாம் வருமோ ஐயா?’ என்று. பிறப்பறியாப் பெற்றியனைப் பாடியதை நாம் மொழிக்கும் பாடலாம்.”

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)
On Aug 19, 2024, at 21:03, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:



N. Ganesan

unread,
Aug 20, 2024, 6:40:37 AM8/20/24
to santhav...@googlegroups.com, vallamai
On Mon, Aug 19, 2024 at 7:39 PM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
இது கோபாலகிருஷ்ண பாரதியின் பாட்டு எனத் 
தெரிகிறது. நான் நினைத்தபடி பாபநாசம் சிவன் பாட்டு அல்ல.
நாஞ்சில்நாடன்.com வலையில் அப்படித்தான் கண்டேன்.

அன்பின் கவிஞர் ராம்கிராம்,

பல கர்நாடக சங்கீதக் கீர்த்தனைகள் பற்றிய செய்திகள் - ஆசிரியர் பெயர் போன்றவை - தவறாக இணையப் பக்கங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. புகழ்பெற்ற நிந்தாஸ்துதிக் கீர்த்தனையான "தந்தை தாய் இருந்தால் உமக்கிந்தத் தாழ்வெல்லாம் வருமோ ஐயா!" அவ்வாறு நிகழ்ந்துள்ளது. பாபநாசம் சிவன், கோபாலகிருஷ்ண பாரதி என்றெல்லாம் போட்டிருப்பார்கள். இவர்கள் பாடல் புத்தகங்களில் இப்பாடல் இல்லை.

ஆனால், புகழ்மிக்க தஞ்சை நால்வர் எனப்படும் சங்கீதம், நடன ஆச்சாரியர்கள் மரபில் பிறந்தவரும், அண்ணாமலைப் பல்கலையில் இசைத்துறைத் தலைவரும், தமிழிசை இயக்கத்தை வழிநடத்தியவர்களில் முக்கியமானவரும் ஆன, தஞ்சை கே. பொன்னையாபிள்ளையவர்கள் பாட்டு இது. சங்கீத கலாநிதி விருது பெற்றவர். இவரது முன்னோர்கள் வயலினைக் கச்சேரியில் அறிமுகம் செய்தனர். இன்றைய பரத நாட்டியப் பத்ததி தஞ்சை நால்வர் அமைத்ததே. https://en.wikipedia.org/wiki/Thanjavur_Quartet

திரு. பொன்னையாபிள்ளை பாடல்கள் நூலிலே இப்பாடல் இருக்கிறது.

----------

தமிழிசை இயக்கத்தை வளர்த்த பாடல்களில் என். சி. வசந்தகோகிலம் கச்சேரிப் பாடல்கள் இருக்கும். சங்கீத கலாநிதி பொன்னையாபிள்ளையின் இப்பாட்டைப் பாடிப் பிரபலப்படுத்தினார்: https://www.youtube.com/watch?v=30EGt1FXBcY

அருணா சாயிராம் இப்பாடலைக் கற்றது எப்படி? அவரே சொல்லுகிறார்:
" There is a story of personal significance behind this song of mine. Back in the early 90s when I was struggling to make a mark in the Chennai Carnatic world, a friend of mine suggested that I sing the song - Thandai Thai Irundal - originally sung by the diva N. C. Vasanthakokilam, at my concert that year. However, after listening to it, I was so daunted by it that I was convinced I wouldn't match up to the tremendous articulation and power that you experience in N. C. Vasanthakokilam's version. But on his insistence, I learned and practised the song and managed to render it at one of the two concerts I had that year. About 3 years later, I was once again in Chennai on the 31st of December, performing a concert when a lady came up to me and requested me to sing that song. She said that it was her payday and her family could use the money but despite that, she left work early so that she could hear me perform that song live. Even now, that interaction has remained a precious memory to me. Also, over the years, a lot of my rasikas fell in love with this song and it went on to become an integral part of my repertoire."

----

2014-ம் வருஷம் - பத்து ஆண்டுகளுக்கு முன்னர் - இப்பாடல், அதன் ஆசிரியர் பற்றி எழுதிய மடல். இணையக் குழுக்களில் நான் முதலில் சொன்னதாக நினைவு. அப்பொழுது எழுதியதைப் பார்க்கவும்:

On Saturday, August 30, 2014 10:23:41 PM UTC-7, தேமொழி wrote:
நல்ல முயற்சி சுபா.

பாடல்: தந்தை தாய் இருந்தால்
சுட்டி:  http://youtu.be/Y7mIOTG1WYE

நல்ல பாடல். வசந்தகோகிலம் நீண்டநாள் வாழ்ந்திருந்தால் எம்.எஸ்ஸுக்கு போட்டியாய் இருந்திருக்கும் என்பர்.

நடை கோபாலகிருஷ்ண பாரதி போல் இல்லை என நினைத்தேன்.
இப்பாடல் தஞ்சை நால்வர் வழிவந்த பொன்னையாப்பிள்ளை பாடினது.

யுட்யூப் பாடலுக்கும், அச்சான பாடத்துக்கும் வேறுபாடுகள் இருக்கும்.
பார்க்கவேண்டும்.


நா. கணேசன்


N. Ganesan

unread,
Aug 20, 2024, 7:52:31 AM8/20/24
to santhav...@googlegroups.com, MarabinMaindan Muthiah
On Mon, Aug 19, 2024 at 8:11 PM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
The relevant portion from Nanjilnadan.com is quoted below:


“கூடவே கோபாலகிருஷ்ண பாரதியார் பாடலொன்றும் நினைவுக்கு வருகிறது. முகாரி அல்லது சண்முகப்பிரியா ராகத்தில் பாடுவார்கள். இசைப்பேழையில் என்.சி. வசந்தகோகிலம் பாடித் திரும்பத் திரும்பக் கேட்டிருக்கிறேன். ‘தந்தை தாயிருந்தால் உமக்கிந்த தாழ்வெலாம் வருமோ ஐயா?’ என்று. பிறப்பறியாப் பெற்றியனைப் பாடியதை நாம் மொழிக்கும் பாடலாம்.”

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

தகவலுக்கு நன்றி. நாஞ்சில்நாடன் கோவைவாசி. என் நண்பர் தான். இது பொன்னையாபிள்ளையவர்கள் பாடல் எனச் செய்தி அனுப்பிப் போனில் பேசுகிறேன்.

தமிழிசைவாணர் தஞ்சை க. பொன்னையாபிள்ளை (1888 - 1945) - இகழ்ச்சிப்புகழ்ச்சிக் கீர்த்தன ஆசான் - வரலாறு.


தஞ்சை இசைக்கலாநிதி க. பொன்னையாபிள்ளை

11.jpg

12.jpg

https://youtu.be/E6g9xgYhmYk மதுரை சேஷகோபாலன் 25:40 நிமிடம் பாடியுள்ளார்.

நா. கணேசன்

Ram Ramakrishnan

unread,
Aug 20, 2024, 2:09:38 PM8/20/24
to santhav...@googlegroups.com
அருமையான விளக்கமும் ஆதாரமும்.

மிக்க நன்றி, திரு. கணேசன்.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Aug 20, 2024, at 06:40, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

N. Ganesan

unread,
Aug 20, 2024, 10:46:48 PM8/20/24
to santhav...@googlegroups.com

On Mon, Aug 19, 2024 at 8:11 PM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
The relevant portion from Nanjilnadan.com is quoted below:


“கூடவே கோபாலகிருஷ்ண பாரதியார் பாடலொன்றும் நினைவுக்கு வருகிறது. முகாரி அல்லது சண்முகப்பிரியா ராகத்தில் பாடுவார்கள். இசைப்பேழையில் என்.சி. வசந்தகோகிலம் பாடித் திரும்பத் திரும்பக் கேட்டிருக்கிறேன். ‘தந்தை தாயிருந்தால் உமக்கிந்த தாழ்வெலாம் வருமோ ஐயா?’ என்று. பிறப்பறியாப் பெற்றியனைப் பாடியதை நாம் மொழிக்கும் பாடலாம்.”

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)


நாஞ்சில்நாடனின் சங்கீதத்தில் ஆழ்தல் பற்றிய நல்ல கட்டுரை வாசிக்கத் தந்தமைக்கு நன்றி.
https://solvanam.com/2020/10/24/ஓசை-பெற்று-உயர்-பாற்கடல்/
இன்னொன்று:
தெலுங்குப் பாட்டைக் கன்னடம் என்கிறார்:
"‘ப்ரம்மம் ஒக்கட்டே, பரப்பிரம்மம் ஒக்கட்டே’ எனும் அன்னமாச்சாரியாவின் பாடல் வரி அர்த்தமாகக் கன்னடம் தெரிந்திருக்க வேண்டாம். சுதா ரகுநாதனின் குரல் இனிமை போதும்."

https://youtu.be/lL719S81FS0 சுதா ரகுநாதன்
https://youtu.be/jLQqWQW4S4s இராகுல் வெள்ளாள் ((சின்னஞ்சிறுவன் ஆக இருந்த காலை)
https://krishnapriya22013.wordpress.com/2020/11/25/brahmam-okate-%F0%9F%98%8A%F0%9F%99%8F%F0%9F%92%96/

நா. கணேசன்

Ram Ramakrishnan

unread,
Aug 21, 2024, 11:29:55 AM8/21/24
to santhav...@googlegroups.com
நன்றி, திரு. கணேசன்.

நாடும் முழுமையாகப் படிக்கவில்லை.

வெகு நீளமான கட்டுரை.

நாஞ்சில்நாடன் அவர்களது கர்நாடக சங்கீத ஈர்ப்பு மலைக்க வைத்தது.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Aug 20, 2024, at 22:46, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 21, 2024, 1:38:02 PM8/21/24
to santhav...@googlegroups.com

Dr. Lakshman Ragede (Canada) has collected and given the lyrics of available Carnatic songs;  

Karanam kettu vadi sakhi kadalan chidambara--Purvikalyani--Adi--Gopalakrishna Bharati--J 53--ISI/pg304--

ananth

சிறுவயதில், வீட்டருகில் இருந்த ’சினிமாக் கொட்டகையில்’ படம் தொடங்குமுன் இந்தப் பாடலும், வசந்தகோகிலம், 

எம்.எஸ். சுப்புலக்ஷ்மி பாடல்களும் ஒலிபெருக்கி வழியாக மிதந்து வரும். 

N. Ganesan

unread,
Aug 21, 2024, 3:15:21 PM8/21/24
to santhav...@googlegroups.com
On Wed, Aug 21, 2024 at 12:38 PM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:

Dr. Lakshman Ragede (Canada) has collected and given the lyrics of available Carnatic songs;  

Karanam kettu vadi sakhi kadalan chidambara--Purvikalyani--Adi--Gopalakrishna Bharati--J 53--ISI/pg304--

ananth

 
fyi
கவியோகி சுத்தானந்த பாரதி பாடல்.

On Mon, Aug 19, 2024 at 6:16 PM Swaminathan Sankaran <swamina...@gmail.com> wrote:
'காரணம் கேட்டு வாடி, காதலன் சிதம்பரநாதன் இன்னும் வராத'.
  'கல்லால் அடித்தான் ஒருவன்' என்று நினைக்கிறேன்.
கல்லால் ஒருவன் அடிக்க, காண்டீபன் எப்பும் வில்லால் ... என்று வரும் என்பதாக ஞாபகம்.
தவறாக இருக்கலாம்.

சங்கரன் 

 

சிறுவயதில், வீட்டருகில் இருந்த ’சினிமாக் கொட்டகையில்’ படம் தொடங்குமுன் இந்தப் பாடலும், வசந்தகோகிலம், 

குருநாதன் ரமணி

unread,
Aug 22, 2024, 12:03:53 AM8/22/24
to சந்தவசந்தம்

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 16, 2024, 11:47:12 PM9/16/24
to santhav...@googlegroups.com
குவிகம் மின்னிதழில் அடியேன் எழுதும் கவிதைத் தொடர்,நாயன்மார் வெண்பா -9

                  —தில்லைவேந்தன் 

👇 👇 👇

..

RNachi

unread,
Sep 17, 2024, 8:18:43 PM9/17/24
to சந்தவசந்தம்
ஐயா உங்கள் நாயன்மார் வெண்பாக்களைக் குவிதம் மின்னிதழில் கண்டேன். மிகவும் அருமை.

அடியேன் அந்த நாயன்மார்களுக்கு எழுதிய வெண்பாக்கள்:

ஸ்ரீ சேரமான் பெருமாள் நாயனார் திருவடிகள் போற்றி
ஆரூரர் நட்பை அகலமுடி யாதசேரர்
வேரூன்றி விண்ணிலே வென்றாஅர் - சேரும்
புலமை செறியப் புகழ்வேதம் பாடும்
கழறிற் றறிவார் கழல்

ஸ்ரீ கணநாத நாயனார் திருவடிகள் போற்றி
நறுமலர்ச் சோலையில் நந்தவனம் மேவி
அறுதொழி லாற்றிய அம்மான் - உறையும்
கணங்களின் கண்மணிக் காவலன் போற்றும்
கணநாதர் பூங்கழல் கள்

ஸ்ரீ திருக்கூற்றுவ நாயனார் திருவடிகள் போற்றி
வாள்சுழற்றிப் போர்புரியும் வாகையின் பற்றற்றான்
தாள்போற்றும் பத்தி தவழூஉம் - ஆளும்
திருசடை அண்ணல் திருவடி சூடும்
திருக்கூற்று வர்தம் சிறப்பு

இராம.நாச்சியப்பன்

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 17, 2024, 8:27:39 PM9/17/24
to santhav...@googlegroups.com
நன்றி திரு நாச்சியப்பன்
அருமையான வெண்பாக்கள்
தங்கள் ஆர்வம் போற்றத்தக்கது

NATARAJAN RAMASESHAN

unread,
Oct 16, 2024, 3:24:05 PM10/16/24
to santhav...@googlegroups.com

குவிகம் மின்னிதழில் (அக்டோபர்,2024)அடியேன் எழுதும் கவிதைத் தொடர்,நாயன்மார் வெண்பா -10

                    —தில்லைவேந்தன்

👇 👇 👇

https://kuvikam.com/2024/10/16/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be-10-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88/

RNachi

unread,
Oct 19, 2024, 9:54:21 AM10/19/24
to சந்தவசந்தம்
அருமை ஐயா நாயன்மார் வெண்பாக்கள்

அடியேன் அந்த நாயன்மார்களுக்கு எழுதிய வெண்பாக்கள்:

ஓம் ஸ்ரீ புகழ்ச்சோழர் நாயனார் திருவடிகள் போற்றி

திகழ்சோழன் ஓம்பிய தெய்வநெறித் தொண்டின்
புகழார் கனல்மூழ்கிப் போந்தார் – செகத்தில்
நிகரிலா வன்புடன் நீடுழி வாழும்
புகழ்ச்சோழர் நாயனார் போற்று

ஓம் ஸ்ரீ நரசிங்கமுனையரையர் நாயனார் திருவடிகள் போற்றி

திருநீறே செல்வம் சிவநாம வேதம்
திருக்கோயிற் பூசனைகள் செய்யும் – திருத்தித்
திருவா திரைதோறும் செம்பொன் அமுது
தரும்நர சிங்கர் தனம்

ஓம் ஸ்ரீ அதிபத்த நாயனார் திருவடிகள் போற்றி

உலைகுடல் நோக உயிர்நலிந்தும் தங்கத்
தலைமீன் படைக்கும் தலைவன் - மலையாய்ப்
பதிபத்தி ஓங்கப் பரமனை நாடி
அதிபத்தர் பெற்ற வருள்

இராம. நாச்சியப்பன்

NATARAJAN RAMASESHAN

unread,
Oct 19, 2024, 12:50:12 PM10/19/24
to santhav...@googlegroups.com
நன்றி திரு நாச்சியப்பன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Nov 15, 2024, 9:24:17 PM11/15/24
to santhav...@googlegroups.com
குவிகம் மின்னிதழில் (நவம்பர்,2024)அடியேன் எழுதும் தொடர். “நாயன்மார் வெண்பா” பகுதி -11 

                                   —தில்லைவேந்தன் 
👇 👇 👇

.

RNachi

unread,
Nov 16, 2024, 2:06:50 AM11/16/24
to சந்தவசந்தம்
அருமை ஐயா அனைத்து வெண்பாக்கள்களும்

அடியேன் அந்த நாயன்மார்களுக்கு எழுதிய வெண்பாக்கள்:

கலிக்கம்ப நாயனார் திருவடிகள் போற்றி

அடியவர் மத்தியில் அன்பிசெய்த பேதம்
அடிபணியா இல்கரத்தை அன்பன் - தடிந்தே
எளியசிவன் தோன்றி எழிலாய் அருளக்
கலிக்கம்ப நாயனார் காண்

கலிய நாயனார் திருவடிகள் போற்றி

அணையா விளக்கேற்றும் அம்பலத்தான் அன்பில்
இணையான இல்லாள் இழந்தும் – துணைக்கண்
உதிர முதிர உயிரை உவந்த
மதியர் கலியனார் மாண்பு

சத்தி நாயனார் திருவடிகள் போற்றி

அடியவரைத் தம்முன் அவதூறு பேசும்
கொடியவர் நாவரியும் கோமான் - அடியாரை
நித்தம் வழிபடும் நீலகண்டன் நீழல்சேர்
சத்திநாய னார்பெற்ற சால்பு

இராம நாச்சியப்பன்

NATARAJAN RAMASESHAN

unread,
Dec 15, 2024, 5:58:09 PM12/15/24
to santhav...@googlegroups.com
குவிகம் மின்னிதழில் (டிசம்பர்,2024)அடியேன் எழுதும் தொடர். “நாயன்மார் வெண்பா” பகுதி -12

                                —தில்லைவேந்தன் 

NATARAJAN RAMASESHAN

unread,
Jan 15, 2025, 8:20:09 PM1/15/25
to santhav...@googlegroups.com

குவிகம் மின்னிதழில் (ஜனவரி -2025) என் கவிதைத் தொடர் -நாயன்மார் வெண்பா-13

 👇 👇

RNachi

unread,
Jan 16, 2025, 8:31:06 AM1/16/25
to சந்தவசந்தம்
சிறப்பான வெண்பாக்கள் ஐயா.

அடியேன் அந்த நாயன்மார்களுக்கு எழுதிய வெண்பா

ஓம் ஸ்ரீ நின்றசீர் மாறர் நாயனார் திருவடிகள் போற்றி

இம்பர் தொழுதேத்தும் ஈசனடி சேரமணர்
சம்பந்தர் நீறுபெறச் சைவமானார் - அம்மையார்
கொண்டசிவ பத்திமுதல் கொற்றவன் ஆட்சியில்
நின்றசீர் மாறர் நெறி

ஓம் ஸ்ரீ வாயிலார் நாயனார் திருவடிகள் போற்றி

அறிவால் விளக்கேற்றி அஃதொன்றே அன்பாய்
அறிவன் படைக்கும் அமுது - அரியவர்
கோயிலாய் உள்ளம் கொழுந்து மலர்ப்பாதம்
வாயிலார் சூடிய வாகு

ஓம் ஸ்ரீ முனையடுவார் நாயனார் திருவடிகள் போற்றி

துணையென்று வந்தால் துயரம் துடைக்க
முனைந்து பகைமை முரிப்பார் – அணையத்
தனைநாடி வந்தோர்க்குத் தானங்கள் செய்யும்
முனையடுவார் சிப்பிக்குள் முத்து



இராம நாச்சியப்பன்

Ram Ramakrishnan

unread,
Jan 16, 2025, 11:09:29 AM1/16/25
to santhav...@googlegroups.com
மிகச் சிறப்பான வெண்பாக்கள், திரு. தில்லைவேந்தன்..

63 நாயனர்மார் வெண்பாக்களும் முடித்தாயிற்றா? முழு PDF document ஆகக் கிடைத்துப் படித்தல் ஆகின்
பெரியபுராணத்தின் குறுகிய வடிவைப் படித்தற் போலாகும்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Jan 16, 2025, 11:16:29 AM1/16/25
to santhav...@googlegroups.com
அருமை திரு நாச்சியப்பன் 
தங்கள் ஆர்வத்தைப் பாராட்டுகின்றேன்

              —தில்லைவேந்தன்.

NATARAJAN RAMASESHAN

unread,
Jan 16, 2025, 11:20:33 AM1/16/25
to santhav...@googlegroups.com
நன்றி திரு ராம்கிராம்.
இதுவரை 63ல் 50 எழுதியுள்ளேன்.
தங்கள் அன்புக்கு நன்றி 

           —தில்லைவேந்தன்
.

NATARAJAN RAMASESHAN

unread,
Feb 15, 2025, 8:10:12 PM2/15/25
to santhav...@googlegroups.com
குவிகம் மின்னிதழில் (பிப்ரவரி 2025) என் கவிதைத் தொடர் “நாயன்மார் வெண்பா-14

                  -தில்லைவேந்தன் 👇 👇 👇 

NATARAJAN RAMASESHAN

unread,
Mar 17, 2025, 2:02:14 AM3/17/25
to santhav...@googlegroups.com
குவிகம் மின்னிதழில் (மார்ச் 2025),என் கவிதைத் தொடர் “நாயன்மார் வெண்பா-15”
          -தில்லைவேந்தன்


NATARAJAN RAMASESHAN

unread,
Apr 15, 2025, 9:33:37 PM4/15/25
to santhav...@googlegroups.com
குவிகம்- மின்னிதழில்( மே 2025) அடியேன் எழுதும் தொடர் நாயன்மார் வெண்பா -16



Siva Siva

unread,
Apr 15, 2025, 9:46:50 PM4/15/25
to santhav...@googlegroups.com
நல்ல பணி. வாழ்க!

சூழு பழிதுடைத்த தூயமங்கை /
சூழ்பழி என்பது சூழுபழி என்றும் வருவது உண்டா?

V. Subramanian


NATARAJAN RAMASESHAN

unread,
Apr 15, 2025, 10:28:42 PM4/15/25
to santhav...@googlegroups.com
நன்றி 

வாழ்நாள் என்பது வாழுநாள் என்று சிலப்பதிகாரத்தில் வருவதைக் காண்க 

👇



RNachi

unread,
Apr 16, 2025, 7:07:04 AM4/16/25
to சந்தவசந்தம்
அருமை ஐயா. வாழ்த்துகள்

அந்த நாயன்மார்களுக்கு அடியேன் எழுதிய வெண்பா:


மங்கையர்க்கரசி அம்மையார்

பாண்டிநகர் காத்தநல் பாண்டிமா தேவிதனை
வான்புகழ் சம்பந்தர் வாழ்த்துவர் – தேனிசை
மங்கையருள் பேறுபெற்ற மானியெனும் தேவியார்
மங்கை யருக்கரசி மாண்பு

நேச நாயனார்

நேசம் நிறையவே நெய்தொழில் செய்துமே
ஆசனைப் போற்றுமே ஆடையும் – ஈசச்
சிவத்தொண்டு செய்யுங்கால் செம்பொருள் கண்ட
சிவநேச நாயனார் சீர்


கோச்செங்கட் சோழ நாயனார்

சிலந்தியாய்ச் செய்த சிவப்பற்றால் சோழர்
குலத்தில் பிறந்த குரிசில் - அழகிய
ஆலயங் கள்கட்டி அம்மான் அடிசேர்ந்த
சோழமான் கோச்செங்கர் சொல்

இராம நாச்சியப்பன்

Siva Siva

unread,
Apr 16, 2025, 8:32:39 AM4/16/25
to santhav...@googlegroups.com
Thanks for that reference.
I wonder if any sandhi rule causes that usage in silappadhikaram.

Anyway, if you have reviewed and you are fine, then I do not have any additional questions.

V. Subramanian

NATARAJAN RAMASESHAN

unread,
Apr 16, 2025, 9:44:52 AM4/16/25
to santhav...@googlegroups.com
நன்றி திரு நாச்சியப்பன் 
தங்கள் வெண்பாக்கள் அருமை 

          —தில்லைவேந்தன்


NATARAJAN RAMASESHAN

unread,
May 19, 2025, 10:50:28 AM5/19/25
to santhav...@googlegroups.com
குவிகம்- மின்னிதழில்( மே 2025) அடியேன் எழுதும் தொடர் நாயன்மார் வெண்பா -17




NATARAJAN RAMASESHAN

unread,
Jun 15, 2025, 9:31:36 PM6/15/25
to santhav...@googlegroups.com
குவிகம் மின்னிதழில் அடியேன் எழுதும் “நாயன்மார் வெண்பா” என்னும் தொடரின் நிறைவுப் பகுதி
👇 👇 👇




RNachi

unread,
Jun 16, 2025, 8:25:38 PM6/16/25
to சந்தவசந்தம்
தங்களின் நாயன்மார் வெண்பாக்கள் யாவும் அருமை. வாழ்த்துகள்
நாயன்மார் திருவடிகள் போற்றி 

NATARAJAN RAMASESHAN

unread,
Jun 16, 2025, 8:58:47 PM6/16/25
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி திரு நாச்சியப்பன் 
             தில்லைவேந்தன்.
..
Reply all
Reply to author
Forward
0 new messages