வருடத்தை நான்கு மாதங்கள் கொண்ட மூன்று பிரிவுகளாகப் பகுத்தல் உண்டு.
”இக்ஷ்வாகு மன்னர்களின் கி.பி. 3 - 4ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் கிம்ஹ (கிரீஷ்ம), வஸ்ஸ (வர்ஷ), சரத் என்ற மூன்று காலங்கள் குறிப்பிடப்படுகின்றன. அதாவது கோடை, மழை, பனிக் காலங்களே இவ்வாறு குறிப்பிடப்பட்டன. இந்த வரிசையே தமிழ் இலக்கண மரபிலும் இளவேனில் - முதுவேனில், கார் - கூதிர், முன்பனி - பின்பனி என்று சற்று விரிவாகக் குறிப்பிடப்படுகிறது. எனவே வானநூல் - ஜோதிட அடிப்படையிலும் கோடைக்காலமே ஆண்டின் தொடக்கமாகும்.” (எஸ். ராமச்சந்திரன், தொல்லியல் ஆய்வாளர், சென்னை). சித்திரை மாதத்தில் வேனிலான் எனப்படும் காமதேவனின் வசந்தோற்சவம். இந்திரவிழா சிறப்பாக நடந்ததை சிலம்பு 5-ம் காதை விவரிக்கிறது.
கிரீஷ்ம, வர்ஷ, சரத் என்னும் நந்நான்கு மாதமாய் ஆண்டினை மூன்று பிரிவாக்குவதைச் சீவகசிந்தாமணி விளக்கியுள்ளது. இங்கே, வேனில், மழை, குளிர் என்று இப்பிரிவுகள். வேனில்பருவம் என்று சித்திரையில் ஆண்டு தொடங்குவதைக் கூறியுள்ளார். இதே போல, திருவலஞ்சுழிக் கல்வெட்டிலும் சித்திரை விஷு என்று தொடங்கி வருடத்தின் நான்கு முக்கியமான சங்கிராந்திகள் கூறப்பட்டுள்ளன.
வருடத்தில் 12 மாதங்கள். 1 X 12 = 2 X 6 = 3 X 4 என 12-ஐப் பகுக்கலாம். 12 ராசிகளை Solar Mansions என்றும், 27 நட்சத்திரங்களை Lunar Mansions என்றும் அழைப்பர். தொல்காப்பியர் இந்த ஸோலார் + லூனார் மேன்ஸன்ஸின் பேர்களில் உள்ள இலக்கணத்தைக் குறிப்பிட்டுச் சூத்திரித்துள்ளார். முன்பெல்லாம். 27 நட்சத்திரங்கள் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டவை என ஆசியாவின்
பழைய இலக்கிய ஆய்வர்கள் (indology, sinology) கூறுவர். இப்பொழுது 27 நட்சத்திரங்கள் பற்றிய அறிவு இந்தியாவில் ஏற்பட்டது (சிந்துக் காலம், அதன் பின் வேதாங்க ஜ்யோதிஷத்தில் மொழிபெயர்ப்பு) என வரலாற்றில் பதிவாக ஆரம்பித்துள்ளது. நட்சத்திரங்களுக்குப் பழம்பெயர்கள் தமிழில் உள்ளதும் இதற்கோர் அடிப்படை. வேனில், மழை, கூதிர் காலங்களை ஆண்டின் மாதங்களை
வரிசைக்கிரமமாக சிந்தாமணி பாடுகிறது. திருத்தக்கதேவர்தாம் Zodiac-கு இப்பாடல்களில் தமிழில் முதன்முதலாகக் கலைச்சொல் தந்தவர். ஃசோடியாக்கை “கனலி வட்டம்” என்றும் ஆடு (Aries) தலையாக உள்ள ராசி சக்கரத்தை அழைக்கிறார். கனலிவட்டம் = ஞாயிற்றுமண்டிலம் =
https://en.wikipedia.org/wiki/Zodiac சிந்தாமணியின் அப்பாடல்கள் சித்திரையில் தொடங்கும் வருஷத்தைக் காட்டுவன. தண்டாரணிய முனி அகஸ்தியனிடம் ஆசீர்வாதம் பெற்று, பஞ்சாங்கத்தை தமிழ்நாட்டுக்குக் கொணர்ந்த தமிழ்வேள், சேரமன்னன் ”ஆடு கோட்பாட்டுச் சேரலாதன்” என்றும், வானியல் விஞ்ஞானத்தை அறிமுகம் செய்வதால்
வானவரம்பன் என்று புகழப்பெறுவதும் பதிற்றுப்பத்து பதிகம் காட்டுகிறது.
முந்நான்கு என்று வருடத்தின் பன்னிரண்டு மாதங்களைப் பகுப்பதை முதலில் தமிழ்நாட்டு சீதோஷ்ண நிலைக்கு ஏற்பப் பயன்படுத்தியவர் தொல்காப்பியர் ஆவார். வட இந்தியாவில் வசந்தம் என்னும் பருவகாலத்தில் (இளவேனில்) தொடங்கி 6 பருவங்கள் பிரிக்கப்படும். ஆறை மூன்றாக்கினால் கிரீஷ்மம் (வேனில்), வர்ஷம் (மழை), ஶரத் (குளிர்) என்று
குறுக்கிப் பயன்படுத்தலும் உண்டு: இக்ஷ்வாகு மன்னர் கல்வெட்டுகள், சீவக சிந்தாமணி. இவை ஆண்டின் தொடக்க மாதமாகிய சித்திரையில் தொடங்குவன. தமிழ்நாட்டுக்கு சங்க காலத்தில் வேளாண்மை அடிப்படை. வேனில் (இள + முது வேனில்) பருவம், பூமத்தியரேகைக்கு அருகே இருப்பதால் கடுமையான வெயில்.
எனவே, இதை வைத்து தொல்காப்பியர் 6 பருவங்களைத் தொடங்கவில்லை. முந்நான்கு - வர்ஷம், ஶரத், க்ரீஷ்மம் என்று உழவர்க்கு இன்றியமையாத மழைக்காலப் பருவத்தை பருவச் சுழற்சியில் முதன்மையாக வைக்கிறார். மழை, பனி (குளிர்), கோடை (வேனில்) என்று அமைக்கிறார் தொல்காப்பியர்:
இதனை மலையாளிகள் பிற்காலத்தில் தமக்கென ஒரு தொடராண்டு - கொல்லம் ஆண்டு என அமைக்கும்போது பயன்படுக்த்துகின்றனர். இதுபோல, தமிழர்கள் தமக்கென ஒரு தொடராண்டு - திருவள்ளுவர் ஆண்டு என தை மாதத்தில் 20-ஆம் நூற்றாண்டில் அமைத்தனர்.
வர்ஷம், ஶரத், க்ரீஷ்மம் - தொல்காப்பியர் இவ்வரிசையில் 6 பருவங்களைத் தருதல்:
கார்காலம்: இது தமிழ் மாதமான ஆவணி, புரட்டாசி யை உள்ளடக்கியது.
கூதிர்காலம்: இது தமிழ் மாதமான ஐப்பசி, கார்த்திகை யை உள்ளடக்கியது. இலைகள் கூம்பி உதிர்வது கூதிர் எனப்படும். (கூடு-தல் > கூது-தல், கடவு > கதவு, ...)
முன்பனிக்காலம்: தமிழ் மாதமான மார்கழி, தை யை உள்ளடக்கியது.
பின்பனிக்காலம்: இது தமிழ் மாதமான மாசி, பங்குனி யை உள்ளடக்கியது.
இளவேனில்காலம்: இது தமிழ் மாதமான சித்திரை, வைகாசி யை உள்ளடக்கியது.
முதுவேனில்காலம்: இது தமிழ் மாதமான ஆனி, ஆடி யை உள்ளடக்கியது.
On Mon, Apr 20, 2020 at 6:03 AM N. Ganesan <
naa.g...@gmail.com> wrote:
சங்க இலக்கியங்களில் நெடுநல்வாடையில் 12 ராசிகளைக் கொண்ட வருஷத்தில்,
மேஷ ராசி தலை ஆக இருப்பதும், பதிற்றுப்பத்து சேரர்வரலாற்று நூலில்,
அகத்தியர் ஆசிரமம் இருந்த தண்டகாரணியத்தில் வருடை என்னும் மலை ஆட்டைச்
சேரநாட்டுக்குக் கொணர்ந்தான் என ஓர் உருவகமாக, ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
காலத்தில் சக அப்த முறையில் சித்திரை முதலாக ஆண்டு ஏற்படுத்தப்பட்டது என்பதும்
பார்த்தோம். தொல்காப்பியத்திலே 12 மாதப் பெயர்களும், 27 நட்சத்திரப் பெயர்களும்
எந்தெந்த எழுத்தில் முடியும் என ஆராய்ந்து சொல்லப்பட்டிருக்கிறது. சேரலாதன்
வாழ்ந்த வஞ்சி மாநகர் அருகே இருந்தவர் திருத்தக்கதேவர்.
அவர் இயற்றிய சிந்தாமணிக் காப்பியத்தில் அப்போதிருந்த கலைகள் பற்றிய
பல செய்திகள் கிடைக்கின்றன. ஆடல், பாடல், கூத்து பற்றிய அரிய செய்திகள் உள்ளன.
பருந்தும் நிழலும் போலப் பாட்டும் பண்ணும் இருக்கவேண்டும் என்று கூறியவர் அவர்தான்.
பின்னாளில் தமிழ் இசை பற்றி மிகுந்த ஆராய்ச்சிகள் தந்த அடியார்க்குநல்லார் உரையை,
சிலப்பதிகார நூலும், அடியார்க்குநல்லார் உரையும் பருந்தும் நிழலும் போல இருக்கிறது என்று
இந்த உவமையைப் பயன்படுத்திப் புகழ்ந்திருக்கிறார்கள். தமிழ் இசை வளர்த்த மங்கலப்
பண்டிதர்கள் சங்க காலப் பாணர்கள் வகுப்பாரில் பெரும்பிரிவினர் என்பது சீவக சிந்தாமணியால்
அறிகிறோம். சோதிட சாத்திரச் செய்திகள் பலவும் சிந்தாமணியில் கிடைக்கிறது.
வருடத்திற்குப் 12 திங்கள்கள் என்றும், அயனம் என்னும் கதிரவனின் வட, தென்
திசைச் செலவுகள் பற்றியும் விளக்கியுள்ளார்.
வருடத்தில் 12 மாதங்கள். 12 X 1 = 6 X 2 = 4 X 3 என 12-ஐப் பகுக்கலாம்.
6X2 - இரண்டிரண்டு மாதங்களாய் 6 பருவங்கள் வகுக்கப்பெற்றன.
http://www.tamilvu.org/tdb/titles_cont/inscription/html/panchangam.htm