திருப்புகழ் பெற்ற ஸ்தலம்: வட விஜயபுரம் (Hallavur, Karnataka)

18 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Oct 8, 2020, 9:26:17 PM10/8/20
to Santhavasantham, thiruppug...@gmail.com
திருப்புகழில் “வட விஜயபுரம்” என்னும் தலம் கர்நாடக மாநிலத்தில் உள்ளது. கர்நாடகாவில் ஹம்பி மாநகரில் நிம்பபுரம் என்னும் பகுதியில் தமிழ் ஸ்தபதிகள் கட்டிய சௌமியசோமேசுவர ஆலயத்தைப் பாடியுள்ளார் அருணகிரிநாதர். அங்கே பிரபுட தேவ மகாராஜா என்னும் இரண்டாம் தேவராயர் கல்வெட்டு (கி.பி. 1450) கிடைத்துள்ளமையால் நிம்பபுரம் என்று திருப்புகழில் குறிப்பிடுவது ஹம்பியின் பகுதி என உறுதிப்படுகிறது. ‘அதல சேடனார் ஆட’ எனும் புகழ்பூத்த திருப்புகழில் இம்மன்னன் - இம்மடி தேவராயனை - பாடியிருப்பதால் தான் அருணகிரிநாதர் 15-ஆம் நூற்றாண்டினர் என ஆர். நாகசாமி ஆய்வுக்கட்டுரை எழுதினார். எனவே, இப்போது கிடைத்துள்ள நிம்பபுரக் கல்வெட்டு தமிழ் இலக்கிய வரலாற்றுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. நிம்பபுரத் திருப்புகழில் அன்றில் பறவையாக நின்ற தாரகாசுர வதம் குறிப்பிடப்படுகிறது. இது ஹம்பிக்குக் கிழக்கே கிரவுஞ்சகிரி என அழைக்கப்படும் சண்டூர் மலையில் நிகழ்ந்த வரலாறு.  இதிகாசப் போர்களுக்கு முந்தையது கார்த்திகேயன் - தாரகன் போராடல். ஸ்வாமிமலையில் குமாரசாமி கோவில் மிகப்பழையது. அருகே, காமத்தூர் உள்ளது, காமத்தூர் திருப்புகழைச் சற்று விரிவாகப் பார்த்தோம். https://groups.google.com/g/vallamai/c/CjFAGypU51o/m/2zCjw4czAQAJ

நீம்-/நீவ்- என்னும் வினைச்சொல் திராவிட மொழிகளில் உள்ளது. வெயில் காலத்தில் பூத்து மலர்ந்து, பச்சிலைகள் தருதலால், வே-வேப்பு/வேம்பு எனப் பெயர். வேப்பிலை நோயாளிகளுக்குப் பூசாரிகள் சிறகடித்து நோயைக் குணமாக்குதலிலும், அம்மனைக் கும்பம் தாளித்து ஆற்றிலிருந்து எடுத்துவந்து அலங்கரிப்பதிலும், பொங்கல், மணவிழா, ... போன்றவற்றின் காப்புக்கட்டுதலிலும் முக்கியமானது. அம்மை வார்த்தால் வேப்பிலைதான் பிரதானம், எனவே, மாரியம்மனின் சின்னமாக வேம்பும், இலையும். நோயாளியை வேப்பிலைகொண்டு நீவுதலால், நீவு-/நீமு- எனும் வினை குறுகி நிம்மு-/நிம்பு- (Cf. அம்மா > அம்பா) எனப் பெயர்ச்சொல் பிறக்கும். எனவே, நீம்/நிம்ப எனும் வேப்ப மரத்தின் ஸம்ஸ்கிருதப் பெயர்கள் த்ராவிடபாஷைகள் தந்தவை எனலாம். பாண்டிய மன்னன் குலமரம் வேம்பு. வேப்பந்தார் அணிபவன் தென்னன் என்னும் பாண்டியராஜன்.

இவ்விரண்டு தலங்களுக்கும் செல்லும் முன்னர் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பழைய தலத்தை அருணகிரிநாதர் பாடினார். அதனை வடக்கே உள்ள விஜயபுரம் ~ வடவிஜயபுரம் ~ என்று பாடினார். ”குடல் நிணம் என்பு ... விழியினில் வந்து பகீரதி மிசை வளருஞ் சிறுவா, வட விஜயபு ரந்தனில் மேவிய பெருமாளே”. இப்பாடலிலும், கிரவுஞ்சகிரி முதலான ஏழு குலகிரிகளை மாய்க்கும் முருகவேளின் போர்த்திறத்தைப் பாடிப், பின்னர் சிவபிரானின் திரிபுர தகனப் போரைப் பாடுகிறார். காரணம், வடவிஜயபுரம் என்னும் ஹள்ளவூர் (பள்ளவூர்) துங்கபத்திரை நதிக்கரையில் உள்ளது. பூப்பள்ளி ஹூப்பள்ளி > ஹூப்ளி போல, பள்ளவூர் > ஹள்ளவூர்/ஹள்ளூர். ஹள்ளவூர் என்பது விஜயபுரத்தின் கன்னடப் பெயர். ஹொய்சள மஹாராஜாக்களின் முக்கிய ராஜதானி நகரங்களில் ஒன்றாகவும், ஹொய்சளரில் சிறந்த இரண்டாம் வீர வல்லாள தேவனின் விருப்பமான படைத் தலைநகராகவும் விளங்கியது விஜயபுரம் என்னும் ஹள்ளவூர். கன்னடக் கல்வெட்டுகள், செப்பேடுகள் பலவற்றிலும் விஜயபுரம் குறிப்பிடப்படுகிறது. எனவே தான், ஹம்பியை அடைவதன் முன்னர் இவ் விஜயபுரத்தை அருணகிரிநாதர் பாடிச் சிறப்பித்திருக்கிறார். அவர் வாழ்ந்த காலம் விஜயநகர மன்னர்கள் காலம். அதற்கும் சற்று முன்னால் இருந்த ஹொய்சளப் பேரரசர்களின் ராஜதானி யாகிய விஜயபுரத்தைக் கண்டு பாடியுள்ளார். இதனைப் பலரும் சரித்திரச் செய்திகள், செப்பேடுகள் கொண்டு முன்பு ஆராயவில்லை.

ஆக, நிம்பபுரம், காமத்தூர், வட விஜயபுரம் என்று மூன்று திருப்புகழ் ஸ்தலங்கள் கர்நாடகத்தில் உள்ளன. கண்டவியூக சூத்திரம் என்னும் மகாயான சூத்திரத்தில் உள்ள கர்நாடக, தமிழக இடங்கள் துல்லியமாக ஆராய்ந்தால் இன்னும் பல இடப்பெயர்கள், சங்க காலத்தின் முக்கிய ஊர்கள் பற்றின செய்திகள் கிடைக்கும். மோயாற்றின் தென்கரை அருகே விஜயநகர காலக் கோவில் உள்ளது. மோயாறு ரிசர்வாயர், மசினகுடி, ஊட்டி இவற்றின் நடுவே இயற்கையழகு கொஞ்சும், யானை, புலி, மந்திகள், முசு, அரிய பறவைகள், மீன்கள் எல்லாம் உள்ளது சிறுகூர். சிறுகூர் அருவி மிக அற்புதமானது. நீலகிரி மலைவாசி மொழிகள், கன்னடத்தில் சிறுகூர் சிக்கூர் (Siggur) என்பர். In English, SiRukuur/Sigguur is written as Sigur (Cf. Shivamogga is written as Shimoga in N. Karnataka). திருவண்ணாமலையில் இருந்து சத்தியமங்கலம் வழியாக சிறுகூர் முருகனைப் பாடிப் பரவியபின், மேற் சொல்லிய மூன்று முக்கியமான கர்நாடக ஸ்தலங்களில் முருகனுக்குத் திருப்புகழ்ப் பாக்களை அருணகிரிநாதர் பாடியருளினார். இந்தக் கர்நாடக, தமிழக உறவுகள் அதிபழமை ஆனவை. தமிழ் பிராமி என்னும் சங்க காலத் தமிழ் எழுத்து உருவாகச் சமணர்கள் கொணர்ந்ததும், பாசுபத சைவம் (Cf. கிண்ணிமங்கலம் லிங்கம் - பள்ளிப்படை) கொங்குநாடு வழியாக தென் தமிழ்நாடு அடைந்தது. முத்தமிழ்க் காப்பியம் பாடிய இளங்கோ அடிகளும் சொத்துக்களை இழந்த கோவலன் தன் மனைவியை அழைத்துக்கொண்டு, தம் குலகுரு பீடமாகிய சமணப் பள்ளிக்கு 30 காதம் பயணித்து, கவுந்தி அடிகளின் ஆசி பெற்று, அழைத்துக்கொண்டு மதுரை சென்றான் எனப் பாடியுள்ளார். அடைக்கலம் புகுதற்கு ஸ்ரீமத் ராமாநுஜர் இவ்வழியாக, ஹொய்சள அரசவையை அடைந்தார். அவர் வழியில், வேதாந்த தேசிகர், சத்தியமங்கலத்தில் ’பரமத பங்கம்’ எனும் அரிய நூலைப்பாடி கர்னாடகம் சென்று ஸ்ரீவைஷ்னவத்தை விஜயநகர தலைநகரில் பரப்பினார். 15-ஆம் நூற்றாண்டிலும், அவருக்கு முன்னர் 2500-2000 ஆண்டு தொடர்ந்து வரும் உறவுகளை விளக்கும், தமிழக - கருநாட்டு யாத்திரைகளை அருணகிரிநாதஸ்வாமியும் மேற்கொண்டு, எல்லையில் இயற்கை கொஞ்சும் அம்பலம் (திடல், Plateau) ஆக உள்ள சிறுகூரில் முருகனைப் பாடி, வடக்கே சென்று (1) விஜயபுரம் (இன்றைய ஹள்ளூர், ஹொய்சள ராஜதானி), (2) நிம்பபுரம் =ஹம்பி< பம்பி. பம்பை பாய்தலான்.) (3) காமத்தூர் (க்ரௌஞ்சகிரியின் க்ராமம்) - மூன்று தலங்களிலும் சுப்பிரமணியசாமியைப் அழகிய திருப்புகழ்களால் துதித்துப் போற்றியுள்ளார்.  குஹாரணியம் என்று ஹள்ளூர் பகுதியை அழைத்திருப்பது அருகே உள்ள ஹரிஹரேசுவரம் என்னும் ஹொய்சளர் காலக் கோவில் ஸ்தலபுராணத்தால் விளங்கும்: https://en.wikipedia.org/wiki/Harihar . நிம்பபுரம் போலவே, விஜயபுரத்திலும் சோமேசர் ஆலயம். https://shaivam.org/temples-of-lord-shiva/haveri-district-lord-shiva-temples

தமிழ்நாட்டின் அரசர்களின் வரலாறு கூறும் ஒரு முக்கியமான ஏடு: கொங்கதேச ராஜாக்கள் சரித்திரம். அதில், கங்க மன்னர்கள் கொங்குநாட்டின் ஸ்கந்தபுரம் (தாராபுரம் அருகே) என்ற ஊரைச் சார்ந்தவர்கள் என்று இருக்கிறது. கொங்கு = கந்தம் (மணம், gandha). கொங்கூர் = கந்தபுரம் எனப் பெயர்ந்து ஸ்கந்தபுரம் ஆயிற்று என்பர் பெரும்புலவர் வே. ரா. தெய்வசிகாமணிக்கவுண்டர், முனைவர் செ. இராசு, ... போன்றோர். அதிலே ஹொய்சள ராஜாக்களைப் பற்றிய செய்திகளில் விஜயபுரம் நகரில் தங்கி ஆண்டமையைக் குறிப்பிடுகிறது. இந்த முக்கியமான வரலாற்று நூலை, வில்லியம் டெய்லர் ஆங்கிலத்தில் 1848-லிலும், பின்னர் 20 நூற்றாண்டில் தமிழ் பதிப்பைக் கோவைகிழார் அவர்களும் அச்சிட்டார்கள். அங்கே காண்மின்.

Beginnings_Of_Vijayanagare_History, by H. Heras, 1929.
https://archive.org/details/beginningsofvija035382mbp/page/n59/mode/2up?q=vijayapura
”Vijayanagara was not a new name for the Hoysala Emperors.
Thus Ballala II after conquering the Haneya fort, made a
city named Vijayagiri (Ep. Carn,, XI, Mk, 12); the same
monarch is once found residing, at Vijayapura "which is
Hallavur" (Ep. Carn., V, Cn, 244). The capital itself Dora-
samudra Is said to be "reckoned as Vijayasamudra" (Ep.
Carn., IV, Ng, 29).

Annual Report Of The Mysore Archaeological Deppt. For The Year 1901 To 1905.
https://archive.org/details/in.ernet.dli.2015.536411/page/n7/mode/2up?q=vijayapura
"Several places in the Tamil country are named at which the kings were
encamped while engaged in expeditions for war, but these have not yet been
identified. On the other hand,  Ballala II appears to have resided for a
considerable time at a place said to be on the Tungabhadra, called Hallavur,
with the classical names of Vijayasamudram and Vijayapura. The only name I can
find corresonding with this is Hulloor of the maps, which is on the left
bank of the Tungabhadra in tin Rane Bennur taluq, not far from Harihar. "

"Male Bennur is not far from Hallavur on the Tungabhadra,
where the Hoysala king Vira-Ballala lived for some time
three  hundred years before."

https://en.wikipedia.org/wiki/Veera_Ballala_I
https://en.wikipedia.org/wiki/Veera_Ballala_II
https://en.wikipedia.org/wiki/Veera_Ballala_III

Sectarianism in Medieval India: Saiva, Vaisnava, and Syncretistic Temple Architecture in Karnataka.
Naseem A. Banerji, 2019.

நா. கணேசன்

     வடவிஜயபுரம் திருப்புகழ்:
தனதன தந்தன தானன தனதன தந்தன தானன
     தனதன தந்தன தானன ...... தனதான

......... பாடல் .........

குடல்நிண மென்புபு லால்கமழ் குருதிந ரம்பிவை தோலிடை
     குளுகுளெ னும்படி மூடிய ...... மலமாசு

குதிகொளு மொன்பது வாசலை யுடையகு ரம்பையை நீரெழு
     குமிழியி னுங்கடி தாகியெ ...... யழிமாய

அடலையு டம்பைய வாவியெ அநவர தஞ்சில சாரமி
     லவுடத மும்பல யோகமு ...... முயலாநின்

றலமரு சிந்தையி னாகுல மலமல மென்றினி யானுநி
     னழகிய தண்டைவி டாமல ...... ரடைவேனோ

இடமற மண்டு நிசாசர ரடைய மடிந்தெழு பூதர
     மிடிபட இன்பம கோததி ...... வறிதாக

இமையவ ருஞ்சிறை போயவர் பதியு ளிலங்க விடாதர
     எழில்பட மொன்று மொராயிர ...... முகமான

விடதர கஞ்சுகி மேருவில் வளைவதன் முன்புர நீறெழ
     வெயில்நகை தந்த புராரிம ...... தனகோபர்

விழியினில் வந்து பகீரதி மிசைவள ருஞ்சிறு வாவட
     விஜயபு ரந்தனில் மேவிய ...... பெருமாளே.
http://www.kaumaram.com/thiru/nnt0815_u.html

Modern fame to Arunagirinathar's Vijayapuram of the North comes from
the Ash Mound dating to Neolithic Age in South India. Something like
Paiyampalli of Tamil Nadu.
https://www.quora.com/Where-is-Hallur-and-Paiyampalli-in-India
https://en.wikipedia.org/wiki/Hallur
https://www.sciencedirect.com/science/article/pii/S2352226718300813
https://www.jstor.org/stable/42936619?seq=1
https://www.cambridge.org/core/books/archaeology-of-south-asia/reemergence-of-regional-differentiation-c-1200600-bce/01AFA06504C0B48A34AEEDB45B796696
https://ars.els-cdn.com/content/image/1-s2.0-S2352226718300813-gr1.jpg
https://karnatakatravel.blogspot.com/2014/10/prehistoric-ash-mound-of-hallur.html


Virus-free. www.avg.com

Subbaier Ramasami

unread,
Oct 8, 2020, 9:58:17 PM10/8/20
to santhavasantham
அருமை

On Thu, Oct 8, 2020 at 8:26 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
திருப்புகழில் “வட விஜயபுரம்” என்னும் தலம் கர்நாடக மாநிலத்தில் உள்ளது. கர்நாடகாவில் ஹம்பி மாநகரில் நிம்பபுரம் என்னும் பகுதியில் தமிழ் ஸ்தபதிகள் கட்டிய சௌமியசோமேசுவர ஆலயத்தைப் பாடியுள்ளார் அருணகிரிநாதர். அங்கே பிரபுட தேவ மகாராஜா என்னும் இரண்டாம் தேவராயர் கல்வெட்டு (கி.பி. 1450) கிடைத்துள்ளமையால் நிம்பபுரம் என்று திருப்புகழில் குறிப்பிடுவது ஹம்பியின் பகுதி என உறுதிப்படுகிறது. CAA%2BQEUfD5E7sE9tUL5S8kNm6EyOwC9Kh%3D8ZT2-QYTkVLcAry%3DQ%40mail.gmail.com.

Pas Pasupathy

unread,
Oct 9, 2020, 6:59:23 AM10/9/20
to Santhavasantham
நல்ல ஆய்வு!

On Thu, 8 Oct 2020 at 21:26, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
திருப்புகழில் “வட விஜயபுரம்” என்னும் தலம் கர்நாடக மாநிலத்தில் உள்ளது. 

ramaNi

unread,
Oct 9, 2020, 7:53:32 AM10/9/20
to சந்தவசந்தம்
பயனுள்ள தகவல்கள்.

// மாரியம்மனின் சின்னமாக வேம்பும், இலையும். நோயாளியை வேப்பிலைகொண்டு நீவுதலால், நீவு-/நீமு- எனும் வினை குறுகி நிம்மு-/நிம்பு- (Cf. அம்மா > அம்பா) எனப் பெயர்ச்சொல் பிறக்கும். எனவே, நீம்/நிம்ப எனும் வேப்ப மரத்தின் ஸம்ஸ்கிருதப் பெயர்கள் த்ராவிடபாஷைகள் தந்தவை எனலாம். //

• निम्बू, is the word in Sanskrit for the common lemon tree--not the neem tree.
निम्बू, निम्बूकः,  निम्बूकफलपानकम् are words found in Sanskrit dictionaries such as those of Amarasimha (CE375), so the word is not likely to be from the Dravidian languages.

• வேம்பு என்ற சொல்லே சங்கத் தமிழ் அகராதியில் பயில்கிறது.
http://sangacholai.in/sangpedia-vee.html#வேம்பு
• நிம்பம் என்பது வேம்பு என்ற பொருளில் மணிமேகலையில்:
https://agarathi.com/word/நிம்பம்

// ஆக, நிம்பபுரம், காமத்தூர், வட விஜயபுரம் என்று மூன்று திருப்புகழ் ஸ்தலங்கள் கர்நாடகத்தில் உள்ளன. //
இவ்வூர்ப் பெயர்கள் குறித்து, 
http://kaumaram.com வலைதளத்தில் காண்பன கீழே. உங்கள் ஆய்வுகளை அவர்களுக்கு அனுப்பி மாற்றச் சொல்லலாம்.

• நிம்பபுரம் என்பது வேப்பூர் என்று கருதப்படுகிறது. நிம்பம் என்றால் வேம்பு.
வேப்பூர் தென்னாற்காடு மாவட்டத்தில் பாலாற்றங் கரையில் ஆற்காட்டுக்கு
அருகில் உள்ளது.
• விஜயபுரம் திருவாரூர் நகரின் ஒரு பகுதி.

அன்புடன்,
குருநாதன் ரமணி

*****

N. Ganesan

unread,
Oct 9, 2020, 2:11:26 PM10/9/20
to Santhavasantham
On Fri, Oct 9, 2020 at 6:53 AM ramaNi <sai...@gmail.com> wrote:
பயனுள்ள தகவல்கள்.

// மாரியம்மனின் சின்னமாக வேம்பும், இலையும். நோயாளியை வேப்பிலைகொண்டு நீவுதலால், நீவு-/நீமு- எனும் வினை குறுகி நிம்மு-/நிம்பு- (Cf. அம்மா > அம்பா) எனப் பெயர்ச்சொல் பிறக்கும். எனவே, நீம்/நிம்ப எனும் வேப்ப மரத்தின் ஸம்ஸ்கிருதப் பெயர்கள் த்ராவிடபாஷைகள் தந்தவை எனலாம். //

• निम्बू, is the word in Sanskrit for the common lemon tree--not the neem tree.
निम्बू, निम्बूकः,  निम्बूकफलपानकम् are words found in Sanskrit dictionaries such as those of Amarasimha (CE375), so the word is not likely to be from the Dravidian languages.

Many words in Sanskrit dictionaries have been shown to be of Dravidian origin. Done by Sanskrit scholars in the last 150 years or more.

"nimbū, is the word in Sanskrit for the common lemon tree--not the neem tree.
 
Thanks. nimbū comes from nimba, acc. to dictionaries.  May be because of their taste.

nimbū, nimbūkaḥ, nimbūkaphalapānakam are words found in Sanskrit dictionaries such as those of Amarasimha (CE375), so the word is not likely to be from the Dravidian languages."
(from Aksharamukha - please use this converter. In addition Indian scripts, if this ISO 15919 standard is used, alongside as an Optional script, Life will be made easier in India.)

It is highly likely that Neem/nimba is from Dravidian languages, as this is NOT found in Iranian, and other Indo-European languages.
have shown the Dravidian verb from which the tree name, neem likely comes from. 

Nimba (निम्ब) is a Sanskrit word, identified with Azadirachta indica (neem) by various scholars in their translation of the Śukranīti. This tree is mentioned as bearing good fruits. The King should plant such domestic plants in and near villages. He should nourish them by stoole of goats, sheep and cows, water as well as meat.

The following is an ancient Indian recipe for such nourishment of trees:

According to Śukranīti 4.4.105-109: “The trees (such as nimba) are to be watered in the morning and evening in summer, every alternate day in winter, in the fifth part of the day (i.e., afternoon) in spring, never in the rainy season. If trees have their fruits destroyed, the pouring of cold water after being cooked together with KuluthaMāṣa (seeds), Mudga (pulse), Yava (barley) and Tila (oil seed) would lead to the growth of flowers and fruits. Growth of trees can be helped by the application of water with which fishes are washed and cleansed.”

Nimba (निम्ब) is a Sanskrit word referring to Azadirachta indica (neem), from the Meliaceae family. Certain plant parts of Nimba are eaten as a vegetable (śāka), according to Caraka in his Carakasaṃhitā sūtrasthāna (chapter 27), a classical Ayurvedic work. The plant is therefore part of the Śākavarga group of medicinal plants, referring to the “group of vegetables/pot-herbs”. It is also known as Prabhadra. Other commonly used English names include “nimtree” and “Indian lilac”. It is native to India and grows in tropical and semi-tropical regions.

The plant Nimba is also mentioned as a medicine used for the treatment of all major fevers, as described in the Jvaracikitsā (or “the treatment of fever”) which forms the first chapter of the Sanskrit work called Mādhavacikitsā. In this work, the plant has the synonym Ariṣṭa. In this work, the plant is mentioned being part of the Nimbayugma group of medicinal drugs.



• வேம்பு என்ற சொல்லே சங்கத் தமிழ் அகராதியில் பயில்கிறது.
• நிம்பம் என்பது வேம்பு என்ற பொருளில் மணிமேகலையில்:

// ஆக, நிம்பபுரம், காமத்தூர், வட விஜயபுரம் என்று மூன்று திருப்புகழ் ஸ்தலங்கள் கர்நாடகத்தில் உள்ளன. //
இவ்வூர்ப் பெயர்கள் குறித்து, 
http://kaumaram.com வலைதளத்தில் காண்பன கீழே. உங்கள் ஆய்வுகளை அவர்களுக்கு அனுப்பி மாற்றச் சொல்லலாம்.

• நிம்பபுரம் என்பது வேப்பூர் என்று கருதப்படுகிறது. நிம்பம் என்றால் வேம்பு.
வேப்பூர் தென்னாற்காடு மாவட்டத்தில் பாலாற்றங் கரையில் ஆற்காட்டுக்கு
அருகில் உள்ளது.
• விஜயபுரம் திருவாரூர் நகரின் ஒரு பகுதி.

There are 20 or so Vijayapurams in India. I've given my reasons why Arunagirinathar chose to sing
Vijayapuram of Karnataka, on his way to Nimbapura. will write on the Nimbapura of Arunagiri soon.
Nimbapura, based on Neem tree, is NOT vEppUr. will write why it's Hampi's
place. Also, closeby is the Vijayapuram. There are scores of villages named after vEmbu/Neem (< nimba/niimba).

Anbudan,
NG

அன்புடன்,
குருநாதன் ரமணி

*****


On Friday, October 9, 2020 at 4:29:23 PM UTC+5:30, பசுபதி wrote:
நல்ல ஆய்வு!

On Thu, 8 Oct 2020 at 21:26, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
திருப்புகழில் “வட விஜயபுரம்” என்னும் தலம் கர்நாடக மாநிலத்தில் உள்ளது. 
=====
 

--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/421b5e0e-10d1-4e98-9bda-50153ac5ba43o%40googlegroups.com.

Virus-free. www.avg.com

N. Ganesan

unread,
Oct 9, 2020, 2:16:19 PM10/9/20
to Santhavasantham
தமிழ் நீவு-/நீமு- 
7245 nímba m. ʻ the tree Azadirachta indica ʼ Gobh., nimbaka -- m. lex.
Pa. nimba -- m., Pk. ṇiṁba -- , liṁba -- , ˚aḍa -- m.; K. nyombu m. ʻ bitter berry of Melia azadirachta used as febrifuge ʼ; S. nimuli˚ f. ʻ M. azadirachta ʼ, L. nim f., P. nimbnimm f., N. A. B. nim, Or. nimalima, Mth. Bhoj. nīm, H. nī˜bnībnīm m., G. lĩbṛɔ m., M. nĩblĩb m., Si. nim̆ba.
*nimbagulikā -- .
Addenda: nímba -- : S.kcch. nimm m. ʻ the tree Azadirachta indica ʼ; A. nim ʻ a partic. tree ʼ AFD 231.

   7246 *nimbagulikā ʻ berry of Melia azadirachta ʼ. [nímba -- , guḍa -- 1]
Pk. ṇiṁbōliyā -- f., S. nimūrī f., L. nabolī f., P. namolī f. H. nĩbaulīnibolī˚baurī f., G. lĩboḷī f., M. nĩboḷī˚buḷī ˚boṇī f.
Addenda: *nimbagulikā -- : S.kcch. nimorī f. ʻ fruit of Melia azadirachta ʼ.

7247 nimbū -- , ˚ūka -- m. ʻ the lime Citrus acida ʼ lex., limpāka- m.n. lex. [← Austro -- as. EWA 166 with lit.]
K. nyombu m. ʻ lemon ʼ; S. līmo m. ʻ lime ʼ; L. niboā, (Ju.) naboā ʻ lime ʼ, awāṇ. nimmū̃ ʻ lemon ʼ; P. nimbūnibū m. ʻ lime ʼ; Ku. nĩbūnimū˚muwālimū˚muwā ʻ lime, lemon ʼ; N. nī˜bu ʻ lime ʼ, nĩbuwānib˚nimuwā ʻ a big lime ʼ; Bhoj. nībū ʻ lemon ʼ, OAw. nīuṁ; H. nimbūnībūnīmūlī˜būlīmū m. ʻ lime ʼ; G. lĩbulību n. ʻ lime, lemon ʼ, lĩboilĩbe f. ʻ lemon tree ʼ; M. nī˜bū̃ n. ʻ lime ʼ, nĩbūṇ˚buṇī˚boṇī˚bī f. ʻ the tree ʼ; Ko. nimbuvolimbiyo ʻ lemon ʼ. -- With e, due to variant source of loan rather than < *naimbuka -- ʻ like a lime ʼ: P.ludh. nḗmbū m. ʻ lemon ʼ; A. nemu ʻ lime ʼ, B. nebulebu, Or. nembule˚lemu; H. lemū m. ʻ lemon ʼ.
Addenda: nimbū -- : WPah.kṭg. nimbu, poet. nimu, kc. limo m. ʻ lemon ʼ; Garh. nimbu ʻ a citrus fruit ʼ; Md. lun̆bō ʻ lime fruit ʼ ← G.?


Virus-free. www.avg.com

N. Ganesan

unread,
Oct 9, 2020, 8:21:26 PM10/9/20
to Santhavasantham
On Fri, Oct 9, 2020 at 6:53 AM ramaNi <sai...@gmail.com> wrote:
பயனுள்ள தகவல்கள்.

// மாரியம்மனின் சின்னமாக வேம்பும், இலையும். நோயாளியை வேப்பிலைகொண்டு நீவுதலால், நீவு-/நீமு- எனும் வினை குறுகி நிம்மு-/நிம்பு- (Cf. அம்மா > அம்பா) எனப் பெயர்ச்சொல் பிறக்கும். எனவே, நீம்/நிம்ப எனும் வேப்ப மரத்தின் ஸம்ஸ்கிருதப் பெயர்கள் த்ராவிடபாஷைகள் தந்தவை எனலாம். //

• निम्बू, is the word in Sanskrit for the common lemon tree--not the neem tree.
निम्बू, निम्बूकः,  निम्बूकफलपानकम् are words found in Sanskrit dictionaries such as those of Amarasimha (CE375), so the word is not likely to be from the Dravidian languages. 

Sanskrit was produced due to interactions between Aryan and Dravidian languages, starting some 2000 years before Amarasimha.
One of the great discoveries is Shiva Sutras:
That led to the development of Brahmi script in the North, and reached Tamil country. When was Brahmi to write Prakrits and Tamil
initially, then after a few centuries, Sanskrit developed? Here are my views:

-----------

ககர மெய்யின் உயிர்மெய் வரிசை எழுத்துக்களில் தொடங்கும் திராவிட மொழிச் சொற்கள், சம்ஸ்கிருதத்தில்
ஶ் ஶ ஶா ஶி ஶீ ஶு ஶூ ஶெ ஶே ஶை ஶொ ஶோ ஶௌ உயிர்மெய் கொண்ட சொற்களாக மாறுவதை ஆராயும் கட்டுரை. பேரா. வ. அய். சுப்பிரமணியன் அவர்கள் தொடங்கிப் பல்லாண்டாய் இயங்கிவரும் மொழியியல் ஆய்வேட்டில் எழுதியுள்ளேன். 

After reading this research article, published in the Linguistics journal (IJDL), please offer your learned comments.

Some K-initial Dravidian Loan Words in Sanskrit:
Preliminary Observations on the Indus Language

(The published paper can be downloaded from:
International Journal of Dravidian Linguistics, 1-20, Vol. XLVII, Number 2, June 2018.

Abstract:  Given the large area that covers the classical Indus valley civilization, many languages must have been spoken there. However, the Indus script, due to its consistency in symbols, was likely to have been created by a single linguistic community [1]. Since Fish and Crocodile played major role in the Indus astronomy, culture and religion, they got represented in the Indus script [2]. Harappans likely called these signs as mīṉ and mokara/makara in their language. The word śiṁśumāra, first referring to Gangetic dolphin by similarity with the gharial crocodile, is analyzed with the suggestion of a Proto-Dravidian root. Many such examples where word-initial k- gets transformed into ś- in Vedic Sanskrit are included. Words connected with asterisms, kāla 'Time', nimiṣa 'second' and, Agricultural terms such as 'timira' from the hump of a Zebu bull, puccha 'tail', indu 'drop, seed' and aṇḍa 'egg' are explained as heritage terms from Indus farming economy.

Attached my article (JDL, 2018) PDF.

N. Ganesan


Virus-free. www.avg.com
NGanesan_IJDL_2018.pdf

N. Ganesan

unread,
Oct 9, 2020, 9:26:15 PM10/9/20
to Santhavasantham, thiruppug...@gmail.com
On Thu, Oct 8, 2020 at 8:58 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
அருமை

On Fri, Oct 9, 2020 at 5:59 AM Pas Pasupathy <pas.pa...@gmail.com> wrote:
நல்ல ஆய்வு!

நனிநன்றி.

தமிழ்நாட்டின் அரசர்களின் வரலாறு கூறும் ஒரு முக்கியமான ஏடு: கொங்கதேச ராஜாக்கள் சரித்திரம். அதில், கங்க மன்னர்கள் கொங்குநாட்டின் ஸ்கந்தபுரம் (தாராபுரம் அருகே) என்ற ஊரைச் சார்ந்தவர்கள் என்று இருக்கிறது. கொங்கு = கந்தம் (மணம், gandha). கொங்கூர் = கந்தபுரம் எனப் பெயர்ந்து ஸ்கந்தபுரம் ஆயிற்று என்பர் பெரும்புலவர் வே. ரா. தெய்வசிகாமணிக்கவுண்டர், முனைவர் செ. இராசு, ... போன்றோர். அதிலே ஹொய்சள ராஜாக்களைப் பற்றிய செய்திகளில் விஜயபுரம் நகரில் தங்கி ஆண்டமையைக் குறிப்பிடுகிறது. இந்த முக்கியமான வரலாற்று நூலை, வில்லியம் டெய்லர் ஆங்கிலத்தில் 1848-லிலும், பின்னர் 20 நூற்றாண்டில் தமிழ் பதிப்பைக் கோவைகிழார் அவர்களும் அச்சிட்டார்கள்.1918 செந்தமிழ் (மதுரை தமிழ்ச் சங்கம்) ஆய்வேட்டில் வல்லாளராஜனின் விஜயபுரம் குறிப்பிடப்பட்டுள்ளது. காலின் மெக்கென்சி ~1800 சேகரித்த
ஏடுகளில் முக்கியமானது இந்த கொங்கதேச ராஜாக்கள் சரிதம். அருணகிரியாருக்கு 150-200 வருடம் சென்றபின் எழுதிய வரலாற்று ஆவணம்.

கோவைகிழார், 1950-ல் அரசு கீழ்த்திசைச் சுவடி நூலக வாயிலாக, செம்பதிப்பு கொனர்ந்தார்:

கொங்கதேச இராசாக்கள்

Madras : Government Oriental Manuscripts Library , 1950

வடிவ விளக்கம் : [xviii], 38 p.

அருணகிரிநாதரின் வட விஜயபுரம் குறிப்பிடப்படும் பகுதி (பக். 22):
Vijayapuram_Kongadesa_Rajakkal.jpg

 
On Thu, Oct 8, 2020 at 8:26 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
திருப்புகழில் “வட விஜயபுரம்” என்னும் தலம் கர்நாடக மாநிலத்தில் உள்ளது. கர்நாடகாவில் ஹம்பி மாநகரில் நிம்பபுரம் என்னும் பகுதியில் தமிழ் ஸ்தபதிகள் கட்டிய சௌமியசோமேசுவர ஆலயத்தைப் பாடியுள்ளார் அருணகிரிநாதர். அங்கே பிரபுட தேவ மகாராஜா என்னும் இரண்டாம் தேவராயர் கல்வெட்டு (கி.பி. 1450) கிடைத்துள்ளமையால் நிம்பபுரம் என்று திருப்புகழில் குறிப்பிடுவது ஹம்பியின் பகுதி என உறுதிப்படுகிறது. CAA%2BQEUfD5E7sE9tUL5S8kNm6EyOwC9Kh%3D8ZT2-QYTkVLcAry%3DQ%40mail.gmail.com.

--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Virus-free. www.avg.com
Reply all
Reply to author
Forward
0 new messages