அய்யா , வணக்கம், தென்கொங்கின் தொன்மங்கள் எனுந் தலைப்பில் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் இரண்டாவது வெளியீடாக வரும் தைப்பொங்கல் நாளில் வெளியிட உள்ளோம். அதற்குத் தாங்கள் ஒரு வாழ்த்துரை வழங்கி உதவ வேண்டுமாய் மிகவும் பணிவன்புடன் வேண்டுகிறோம். அய்யா குமாரராஜா அவர்கள் சொல்லியே இது அனுப்பப்படுகிறது.
தென்கொங்கு நாட்டில் தொன்மங்கள் – அணிந்துரை
முனைவர் நா. கணேசன், ஹூஸ்டன், அமெரிக்கா
உடுமலை வரலாறு என்று உடுமலைப்பேட்டை நகர வளர்ச்சியின் அண்மையதான சில நூற்றாண்டு சரித்திரத்தை எழுதிய தமிழன்பர்கள், காடு மேடெல்லாம் தேடி உழைத்து “தென்கொங்குத் தொன்மங்கள்” என்ற சிறந்த நூலைத் தொகுத்துள்ளனர். பொதுவாகவே, சங்க இலக்கியத்தில் சையம் என்று அழைக்கப்படுகிற மேற்குத் தொடர்ச்சி மலைப் பிரதேசத்தின் வரலாறு, இன்னும் ஆராய்ந்து விரிவாக எழுதப்படவில்லை. அக்குறையைத் தீர்க்கும் திசையில் இந்த நூல் அமைந்துள்ளது அருமை.
சங்க காலத்தில் சேரர்களின் தலைநகராக விளங்கியது வஞ்சி என அப்போது அழைக்கப்பெற்ற இன்றைய கரூர் மாநகரம். இது ஆன்பொருநை ஆற்றின் கரையில் அமைந்துள்ளதாகச் சங்க இலக்கியங்கள் புகழுகின்றன. நூறாண்டுகளுக்கு முன்னே, சேரர் தலைநகர் வஞ்சி மாநகர் எங்கே இருந்தது என்ற வாதப் பிரதிவாதங்கள் எழுந்தன. ஆனால், பனுவலியல் (Philology) மற்றும், நாணயவியல், கல்வெட்டுக்கள் ஐயமின்றிக் கரூர் தான் சங்க காலத்து வஞ்சி மாநகர் என நிறுவிவிட்டன. பாரதியாரும் இளங்கோ அடிகள் வஞ்சி மாநகரில் வாழ்ந்தது இக் கொங்குநாட்டு நகரம் என எழுதியுள்ளார்: "ஐந்து மஹாகாவியங்களிலே சிறந்ததாகிய ‘சிலப்பதிகாரம்’ செய்த இளங்கோ முனிவர் வஞ்சி நகரத்தில் பிறந்தவர். இந்த வஞ்சி நகரம் இப்போது திருச்சினாப்பள்ளிக்கருகே யுள்ள கரூர் என்று பண்டித மு. ராகவய்யங்கார் தீர்மானம் செய்கிறார். இந்த ஆசிரியரின் ஜன்ம தினத்தையும் நிச்சயமாகச் சொல்வதற்கு வழியில்லை.” (காலவரிசை, தொகுதி 8, பக். 457-459), பாரதி நூல்கள் - கட்டுரைகள், பக். 355, 356. (சுதேசமித்திரன், 19-11-1916, பெ. தூரன், பாரதியார் கட்டுரைகள்).
1970-களில், தினமலர் முனைவர் ரா. கிருஷ்ணமூர்த்தி, இரா. நாகசாமி, ஐராவதம் மகாதேவன் போன்றோர் தொல்லியல் ஆய்வுகள் காட்டுவது சங்கச் சேரர் தலைநகர் வஞ்சி அமராவதிக் கரையின் நகரம் என்று நிறுவினர். ஆன்பொருநை நதியின் இன்றைய பெயர் அமராவதி ஆறு. உடுமலை அருகே அமராவதி அணைக்கட்டு அமைந்துள்ளது. திருமூர்த்தி மலையில் அமணலிங்கேசுவரர் என்று தீர்த்தங்கரர் உருவம் புடைப்புச் சிற்பமாக இருக்கிறது. அமணசமுத்திரம் என, இங்கே நீர்நிலை குறிக்கப்பெற்றதைக் கல்வெட்டு பதிவு செய்துள்ளது. அமணர் என்னும் சொல் சமணர் என்ற சொல்லில் இருந்து பிறப்பதாகும்.
கொங்குநாட்டின் தலைமைத் தலம் உடுமலை அருகே, தமிழ்க்கடவுள் ஆகிய
பழனி முருகன் திருக்கோவில் ஆகும். வருமானத்தில் எப்பொழுதும் தமிழ்நாட்டிலே முதற்கோவில்
பழனி தான். ஆவி என்ற வேளிர் குடியினர் ஆண்ட பகுதி இது: “ஆதி அந்த உலா ஆசு பாடிய
சேரர் கொங்கு வைகாவூர் நன்னாடு” என்றார் அருணகிரிநாதரும். சேரமான் பெருமாளின் நண்பர்
சுந்தரர். அவர் குரக்குத்தளி என்று கூறும் சர்க்கார் பெரியபாளையம் ஈசுவரன் கோவிலில்
உள்ள சித்திரமேழி நாட்டார் கல்வெட்டையும் சிற்பத்தையும் விரிவாக ஆய்ந்துள்ளமை பாராட்டுக்கு
உரியது. இதே போன்ற சித்திரமேழி நாட்டார் சிற்பம், பழனி அருகே கோதைமங்கலத்திலும் கிடைத்துள்ளது.
’கொங்கில் குறும்பில் குரக்குத்தளியாய்’ எனப்பாடினார் சுந்தரர். சோழர் கால ஐம்பொன்
படிமங்கள் இப்போது பல இடங்களில் காவேரி டெல்ட்டா பகுதியில் பூமியைத் தோண்டும்போது கிடைக்கின்றன.
அவற்றைப் பொறுமையாக, வெளியெடுக்க வேண்டும். ’பொக்குளி’ எந்திரங்களால் அவசரப்படும் போது
உடைந்து விடுகின்றன. ஆயிரம் ஆண்டுகள் அழகாக, ஒரே வடிவில் இருந்தவை, கிடைத்ததும் உடைபடும்
அவலத்தைத் தமிழ் வரலாற்று ஆர்வலர்கள் தடுக்கவேண்டும். முதன்முறையாக, குரக்குத்தளியில்
தான் சுமார் ஒரு நூற்றாண்டு முன்னே சோழர்காலப் படிமங்கள் பல கிடைத்தன.
கொங்கு என்ற சொல் பற்றி ஒன்று சொல்லவேண்டும். குணக்கு என்றால் கிழக்கு. வடகிழக்குப் பருவ மழை குணக்குத் திசையில் வரும் மழை. எனவே, கொண்கமழை. கொங்க மழை எனக் குறிப்பிடுகிறோம். கேரளத்தின் முசிறிப்பட்டனம் போன்றவை உள்ள கடற்கரைல் இருந்து வரும் தென்மேற்குப் பருவமழையைக் கோடை மழை என்கிறோம். கொண்க/கொங்கமழை வேறு. கொங்குநாட்டு என்ற பெயர் அமைந்த காரணம் வேறு. கொங்கு என்றால் வளைவு. வளை என்று அழைக்கப்படும் சங்கு, கொங்கு என்ற சொல்லில் தோன்றுவதே. வளவி வளையில்/சங்கில் அறுத்துச் செய்யப்படும் வளையல். கழுத்து நீண்டும், வளைந்தும் உள்ளது கொக்கு/கொங்கம். கொங்கம் வடமொழியிலும், தெலுங்கிலும் கங்கம் என அழைக்கப்படுதல் காண்க. கங்க ராஜ்யம் வட கொங்கு நாடாக விளங்கியது. கொங்கூர் என்ற தாராபுரத்துக்கு அருகே, கங்க ராஜ்ய ராசாக்கள் பட்டம் சூடினர். கொங்கூர் வடமொழியில் கந்தபுரம்/ஸ்கந்தபுரம் ஆனது.
நல்ல முயற்சியாக, அறியப்படாத தென்கொங்குச் சிற்பங்கள், கல்வெட்டுகள் பற்றிய இந்த நல்ல நூலைத் தமிழ்நாட்டார் வாங்கி ஆதரித்து இதுபோன்ற புதிய உழைப்புகளை ஊக்குவிக்க வேண்டுகிறேன்.
வாழ்த்துடன்,
--
You received this message because you are subscribed to the Google Groups "karanthaijayakumar" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to karanthaijayaku...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/karanthaijayakumar/CAA%2BQEUeQ0VY95_GcR0%3DYdUzJ4Lyy5gEq%2B2bvFh%2BjAZuF6Fdd7A%40mail.gmail.com.
தொன்மம் என்றால் என்ன பொருள்?தமிழ் அகராதியில் இல்லையே. (https://dsal.uchicago.edu/cgi-bin/app/tamil-lex_query.py?page=2104).தொகுத்தவர்கள் பார்வையில் தப்பிய சொல்லா?
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCPQs11adubOrLBNzLV2uAG_DTZeDnnNbm3gMoZiHHqw2g%40mail.gmail.com.
ஆம். பலர் எழுத்தில்!On Thu, 16 Dec 2021 at 11:24, Siva Siva <naya...@gmail.com> wrote:புராணம் என்ற சொல் நவீன காலத்தில் தீண்டத் தகாத சொல் ஆகிவிட்டதா?On Thu, Dec 16, 2021 at 11:22 AM Pas Pasupathy <pas.pa...@gmail.com> wrote:அண்மையில் வந்த சொல். புராணம், பழங்கதை, Myth.
தொன்மம் பற்றி முந்திய பாடங்களில் அறிந்திருக்கிறோம். புராணம், பழங்கதைகள் இவற்றில் வரும் பாத்திரங்களோ, நிகழ்வுகளோ கவிதையில் ஓரிரு வார்த்தைகளில் சுட்டிக் காட்டப்படும். இவ்வாறு சுட்டினால், பக்கம் பக்கமாக விவரிக்க வேண்டிய தேவையே இல்லாமல் சொல்ல வந்த கருத்தை அது உணர்வோடு விளக்கிவிடும். இதனால் உலகெங்கும் சிறந்த கவிஞர்கள் இந்தக் கலைத்திறனை விரும்பிக் கையாளுகின்றனர். இது தொன்மம் எனப்படுகிறது.
அப்துல் ரகுமானின் கவிதைகளில் தொன்மம் மிகுதியாக இடம் பெறுகிறது.
‘ஆறாவது விரல்’, ‘சிலுவை’ - இவை பைபிள் தொன்மங்கள். முன்னரே இக்கவிதை உங்களுக்கு விளக்கப்பட்டிருக்கிறது.
இராமாயணத்தின் பல பாத்திரங்கள், கோவலன், கண்ணகி, நெற்றிக்கண், வாமனன், பாற்கடல், விசுவரூபம், துச்சாதனன், கவுரவர் முதலிய பிற தொன்மங்கள் இவரது கவிதைகளில் அதிகமாகக் காணப்படுகின்றன. சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதற்கு இவருக்கு மிகவும் பயன்பட்டுள்ளன.
இந்திய நாட்டுத் தேர்தல்கள், மக்களாட்சி பற்றிய கவிதை ஐந்தாண்டுக்கு ஒருமுறை. இதில் நளன் கதைத் தொன்மம் இடம் பெறுகிறது.
சுயம்வரம் என்பதை அறிவீர்களா? அரச குமாரிகள் தமக்குப் பிடித்த மணாளரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் ஏற்பாடு அது. (சுயம் = தானாக; வரம் = வரிப்பது, தேர்ந்தெடுப்பது). அப்துல் ரகுமான் இன்றைய இந்தியத் தேர்தல் - மக்களாட்சி முறையை ஒரு புது வகைச் சுயம்வரமாகப் பார்க்கிறார். இந்தச் சுயம்வரத்தில் ஏமாற்றப் படுகிற மங்கையாக இந்திய மக்களைக் காட்சிப்படுத்துகிறார் கவிஞர். இந்த நாட்டில் பேராசை பிடித்த, சுயநலக்காரப் பதவி வெறியர்களே அரசியல் அரங்கில் மேல்நிலை பெறுகிறார்கள். அவர்கள் எல்லாருக்கும் அதிகாரத்தைக் கைப்பற்றுவது ஒன்றுதான் நோக்கம். எல்லாரும் நல்லவர் போல வேடம் போடுகிறார்கள்.
நளன் கதையில், நளனை மணக்க விரும்பினாள் தமயந்தி. சுயம்வரத்தில் அவனுக்கு மாலையிட்டு மணந்து கொள்ள மண்டபத்துள் நுழைந்தாள். இவள் நளனை விரும்புவதை அறிந்து கொண்ட தேவர்கள் நளனைப் போலவே தங்கள் உருவை மாற்றிக் கொண்டு (போலி வேடமிட்டு) இருக்கைகளில் அமர்ந்து கொண்டனர். தமயந்தி தன் அறிவுக் கூர்மையால் உண்மையான நளனைக் கண்டறிந்து மாலையிட்டு மணந்து கொண்டாள். இவ்வாறு சுயம்வர நிகழ்ச்சி புராணத்தில் சொல்லப்படுகிறது.
இன்றைய சுயம்வரத்தில் உண்மை நளன் எவருமே இல்லை. எல்லாருமே போலி நளன்கள். கையில் வாக்குச்சீட்டு என்ற மாலையோடு தவித்து நிற்கும் குருட்டுத் தமயந்திதான் வாக்காளர்கள். அதாவது தெளிந்த அறிவு இல்லாத ஏமாளிகள். எப்படி நல்ல ஆட்சி அமையும்? ஐந்தாண்டுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தல் சுயம்வரக் கவிதையை இப்போது படியுங்கள்:
புறத்திணைச் சுயம்வர மண்டபத்தில்
போலி நளன்களின் கூட்டம்
கையில் மாலையுடன்
குருட்டுத் தமயந்தி (பால்வீதி, ப. 70)
பக்கம் பக்கமாய் விவரிக்க வேண்டிய செய்தியை இரக்கம், எள்ளல் உணர்வுகளுடன் நான்கு வரிகளில் சொல்லி விடுகிறார்.
நண்பர்களே, கவிதைகளை உருவாக்கும் கலையில் தேர்ந்த கலைஞரான அப்துல் ரகுமானின் படைப்பு ஆக்கக் கலைத்திறன்களைச் சில சான்றுகள் வழி அறிந்து கொண்டீர்கள்.
----On Thu, 16 Dec 2021 at 11:17, Siva Siva <naya...@gmail.com> wrote:தொன்மம் என்றால் என்ன பொருள்?தமிழ் அகராதியில் இல்லையே. (https://dsal.uchicago.edu/cgi-bin/app/tamil-lex_query.py?page=2104).தொகுத்தவர்கள் பார்வையில் தப்பிய சொல்லா?
பசுபதி
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCPQs11adubOrLBNzLV2uAG_DTZeDnnNbm3gMoZiHHqw2g%40mail.gmail.com.
--
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAH9BvALLbb3Bi5TWguZ0qzN2Jsd2rcY9j8WWC%2BdvK9pOk%2BzW5Q%40mail.gmail.com.
அண்மையில் வந்த சொல். புராணம், பழங்கதை, Myth.
"அமுதசுரபியைத் தான் நீ விட்டுச் சென்றாய்இப்போதுஎங்கள் கையில் இருப்பதோ பிச்சைப்பாத்திரம்" - மேத்தா.மணிமேகலைக் காப்பியச் செய்தியை உள்ளடக்கிய தொன்மப் படிமம்.பாடல்தலைப்பு- தேசப்பிதாவுக்கு ஒரு தெருப்பாடகனின் அஞ்சலிஇப்போது பொருள்... சொல்லாமலே மனதில் படியும்.கிட்டத்தட்ட கவிதை வாசிக்கும் பழக்கமே என்னிடம் அற்றுப் போய் விட்டது. இந்த மேற்கோள் 1974ல் முதுகலைப் பாடத்தில் படித்தது.சக
"அமுதசுரபியைத் தான் நீ விட்டுச் சென்றாய்இப்போதுஎங்கள் கையில் இருப்பதோ பிச்சைப்பாத்திரம்" - மேத்தா.மணிமேகலைக் காப்பியச் செய்தியை உள்ளடக்கிய தொன்மப் படிமம்.பாடல்தலைப்பு- தேசப்பிதாவுக்கு ஒரு தெருப்பாடகனின் அஞ்சலிஇப்போது பொருள்... சொல்லாமலே மனதில் படியும்.கிட்டத்தட்ட கவிதை வாசிக்கும் பழக்கமே என்னிடம் அற்றுப் போய் விட்டது. இந்த மேற்கோள் 1974ல் முதுகலைப் பாடத்தில் படித்தது.சக
--On Thu, 16 Dec 2021 at 11:17, Siva Siva <naya...@gmail.com> wrote:தொன்மம் என்றால் என்ன பொருள்?தமிழ் அகராதியில் இல்லையே. (https://dsal.uchicago.edu/cgi-bin/app/tamil-lex_query.py?page=2104).தொகுத்தவர்கள் பார்வையில் தப்பிய சொல்லா?
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAH9BvAJWQXHVxm7RcVtyvsRH3jpYF3T%3D7ZuT2qkOVB06qD8psA%40mail.gmail.com.
On Thu, Dec 16, 2021 at 10:22 AM Pas Pasupathy <pas.pa...@gmail.com> wrote:அண்மையில் வந்த சொல். புராணம், பழங்கதை, Myth.
ஆம். இவை மட்டுமன்று. தொல்லியல் விஞ்ஞானம், கலைவரலாறு, பனுவலியல், நாணயவியல், ஒப்பீட்டு மொழியியல் .... போன்றன வெளிச்சம் இட்டுக் காட்டும் தொன்மைகளையும் தொன்மம், தொன்மவியல் என்பது வழக்கம். என்னிடம் முன்னுரை கேட்டுப் பெற்ற அறிஞர்கள் கொங்குநாட்டுத் தொன்ம இயலாளர். புராணம் என்பது தொன்மத்தின் ஓர் ’ஸப்ஸெட்’ எனலாம். உதாரணமாக, துடிசைகிழார், மொழியியல் வாயிலாக, மரைக்காடு என்பது மறைக்காடு என்றாகி, வேதாரணிய புராணங்கள் தேவாரம், பெரியபுராணம் எனச் சைவர்கள் கதை உருவானது என அறிவியல் ஆய்வு செய்து எழுதினார். இதனை, மரைக்காடு மறைக்காடு என மாறிய தொன்ம வரலாறு என்பர். புராணங்களை வாசிப்பது, அறிவியல் வழி விளக்குவதும் தொன்ம இயல். இதனுள் பல நவீன சர்வகலாசாலை ஆய்வுகள் அடங்கும். மேலும், தமிழர்கள் மிக முயன்று டாக்டர், எஞ்சினீர், எம்பிஏ, ஃபைனான்ஸ், ... படிக்க முயலும் ஹார்வர்ட், சிகாகோ, பிலடெல்பியா, ஸ்டான்போர்ட், கொலோன், ஹைடல்பர்க், ஆக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ், சார்போன், ... போன்றவற்றில் நிகழும் வேதங்கள் ஆராய்ச்சியைத் தொன்ம இயலின் ஒரு பகுதி.பாரதியின் புகழ்மிக்க பாடல்களில் - குரங்கு கடலைத் தாவிய புராணத்தை, இன்றைய கல்லூரி பேராசிரியர்கள் தொன்மத்தை ஆராயும் நோக்கில் - விரிவாகப் பாடியுள்ளார். லோகோபகாரி பத்திரிகையில் வெளிவந்த பாரதியார் பாடல். செகதீச சந்த்ர வசு போல, ஆன்மீகத்தையும், மேற்கத்தைய விஞ்ஞானத்தையும் இணைத்து சுவாமி விவேகானந்தர் என்னும் தேசிய துறவி காட்டிய வழியில், செல்ல பாரதிக்கு என்றுமே ஆர்வம் இருந்துள்ளது. வங்கத்தில் கல்லூரிக் கல்வியால் ஏற்பட்ட மறுமலர்ச்சி, இந்தியா முழுமையும் பரவினமைக்கு பாரதி நல்ல சாட்சி. சென்னையில் வாழ்ந்த வள்ளலார், அன்றைய செய்திகளை ஆர்வமுடன் படித்து சமய, சமூக மறுமலர்ச்சிக்குத் தமிழரிடையே வித்திட்டார். நிரஞ்சன் பாரதியார், வள்ளலார் கட்டுரைகளை ஒப்பிட்டால், பாரதியின் கருத்துக்களில் பல வள்ளலார் எளிய தமிழில் பொதுஜனங்களுக்குப் புரியும்வகையில் தொடங்கிவைத்தது என அறியலாம். இவ்வகையில், வள்ளலார் ஆய்வர் தவத்திரு. வடலூர் ஊரன் அடிகள் எழுதிய நூல்கள் துணைசெய்யும். பாரதியின் லோகோபகாரிப் பாடல், ஒரு நல்ல தொன்ம ஆய்வு ஆகும். பழைய தமிழ் இலக்கணத்தில் இறந்துபட்ட செய்திகளை விட்டுவிட்டு, சமுதாயத்தின் இன்றைய பயன்பாடுகளைப் பாடுதல்வேண்டும் என்ற குறிப்புகள் உண்டு. அதை நடைமுறைப்படுத்தியதில் வள்ளலார், பாரதியார் இருவருக்கும் பெரும்பங்கு உண்டு. பாரத - பாரதத்தின் கீஸ்டோன் ஸ்டேட் ஆக விளங்கும் தமிழகத்தின் தொன்மொழியை, தொன்மங்களை நவீன யுகத்திற்கு மேலை அறிவியலைச் சொல்லும் பத்திரிகைகளைப் படித்தும், மொழிபெயர்த்தும் - இவர்களும், இவர்களைப் போன்றோரும் தமிழர் சமூகத்தை நவீனப் பாதையில் செலுத்தும் பைந்தமிழ்ப் பாகர்கள்.நா. கணேசன்On Wednesday, December 22, 2021 at 11:07:52 PM UTC-6 kanmani...@gmail.com wrote:"அமுதசுரபியைத் தான் நீ விட்டுச் சென்றாய்இப்போதுஎங்கள் கையில் இருப்பதோ பிச்சைப்பாத்திரம்" - மேத்தா.மணிமேகலைக் காப்பியச் செய்தியை உள்ளடக்கிய தொன்மப் படிமம்.பாடல்தலைப்பு- தேசப்பிதாவுக்கு ஒரு தெருப்பாடகனின் அஞ்சலிஇப்போது பொருள்... சொல்லாமலே மனதில் படியும்.கிட்டத்தட்ட கவிதை வாசிக்கும் பழக்கமே என்னிடம் அற்றுப் போய் விட்டது. இந்த மேற்கோள் 1974ல் முதுகலைப் பாடத்தில் படித்தது.சக
--On Thu, 16 Dec 2021 at 11:17, Siva Siva <naya...@gmail.com> wrote:தொன்மம் என்றால் என்ன பொருள்?தமிழ் அகராதியில் இல்லையே. (https://dsal.uchicago.edu/cgi-bin/app/tamil-lex_query.py?page=2104).தொகுத்தவர்கள் பார்வையில் தப்பிய சொல்லா?
பாராட்டி மகிழ்கிறேன்
On Sun, Dec 12, 2021 at 9:28 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
On Thu, Nov 11, 2021 at 8:28 AM Pothigai 2013 <pothig...@gmail.com> wrote:
On Sun, Dec 12, 2021 at 12:27 PM podhuvan sengai <podh...@gmail.com> wrote:
பாராட்டி மகிழ்கிறேன்
கண்ணகி தொன்மம் (Legend/Myth of Kannaki)
-------------------------------------------
https://bookspage.in/book?variableName=%273162%27
”தமிழ்ச்சமூகம் போன்ற பழைமைச் சமூகங்களின் தொன்மங்கள், உறைந்த குறியீடுகள் கொண்டவை; பன்முகப் பொருண்மைகள் நிறைந்தவை; வரலாறு நெடுக அரசியல், சமூகம், பண்பாட்டு மிகுஅசைவியக்கங்களை உணர்த்தவல்லவை; இன்னும் பரந்துபட்ட தளங்களோடு ஊடுருவிப் பொருள் உணர்த்தி நிற்பவை; அத்தகைய பரிமாணங்கள் கொண்ட கண்ணகி தொன்மம் தமிழ்ச் சமூகத்தின் ஒரு மூலப்படிவமான தொன்மமாகும். இத் தொன்மத்தின் ஆழ்ந்த, நுட்பமான பரிமாணங்களைச் சமூக மானிடவியல் நோக்கில் முதன்முறையாக இந்நூல் முன்வைக்கிறது.”
இது ஓர் காலச்சுவடு பிரசுரம். சிலம்பு நா. செல்வராசு எழுதியுள்ளார்.
தமிழ்ச்சமூகம் போன்ற பழைமைச் சமூகங்களின் தொன்மங்கள், உறைந்த குறியீடுகள் கொண்டவை; பன்முகப் பொருண்மைகள் நிறைந்தவை = Ancient societies like that of Tamils possess myths with multi-dimensional meanings. These antique myths have frozen symbolism across the Ages.
-------------
பாரத வானியலின் பழைமையான தொன்மக் குறியீடு:
-----------------------------------------
கலைமான் கொற்றவைக்கும், மகரம் துருவ நக்ஷத்திரத்திற்கும், தமிழர் வானியலில் நாம் காணும் 4700 ஆண்டுக்காலத் தொன்மக் குறியீடுகள். ராசி சக்கரம் இந்தியாவிற்குப் பாபிலோனில் இருந்து வந்தடைந்தபோது தை (மகரம்) மாதப் பெயர் ஒன்று மட்டுமே தொல்தமிழினின்றும், சோதிட சாத்திரத்தில் இந்திய உபகண்டம் எங்கும் நிலைத்தது. தை - தந்தை, எந்தை, முந்தை, நுந்தை/உந்தை, எகிப்தில் தமிழ் பிராமியாகப் பானையோட்டில் கிட்டும் [க]ண்ணந்தை, சாத்தந்தை, கொற்றந்தை, பூந்தை (பூதன் + தை), ஆந்தை (ஆதன் + தை), போன்றவற்றில் உள்ள அடிப்படையான சொல்: தை. தலைவன், கடவுள் எனப் பொருள். (1) கைதை என்னும் தமிழ்ச்சொல் கேதகீ எனவும், (2) வையை > வைகை > வேகவதி எனவும் ஆதல் போல, (3) தை/தைஇ (நாஇ, தாஇ, குரீஇ ... போல தைஇ) எனும் தொன்றுதொட்டு வரும் பெயர், திஸ்ய/திஸ்ஸ/திஷ்ய என வட இந்தியா, இலங்கையில் மாறியுள்ளது. தேஷ்ய என வேரு சொல் இருப்பதால், திஷ்ய. தைப்பூசம் பௌர்ணமி வரும். பூசம் பௌஷ்ய நட்சத்திரம். அதற்கு திஷ்ய என்ற பெயர் தொல்தமிழின் தை என்ற சொல்லின் மாற்றம். வடமொழி -ஐ என்ற எழுத்தில் தொடங்கும் த்ராவிட பாஷைச் சொற்களை மாற்றும் இயல்பு கொண்டது. தைஇ, நாஇ, தாஇ :: தையி, நாயி, தாயி என்பவற்றின் போலி என்கிறார் இளம்பூரண அடிகள். கலன்/கலம்/கலயம் > கலசம் > கலஶம் ஆதல் போல, தையி (தைஇ) > தைஷ்ய என்று மாறியுள்ளது. தையல் - வாலை எனப் பொருள் என்று உவேசா குறிப்பிட்டுள்ளார்கள். சான்றாக, வைத்தீசுவரன் கோவிலில் தையல்நாயகி, வடமொழியில் ’வாலாம்பிகை’ எனக் காட்டியுள்ளார் தமிழ்த்தாத்தா உவேசா. தை - தையல் தம்பதியர் தொன்மம் இந்த 4700 ஆண்டுத் தொன்மையான சிந்துவெளி முத்திரையிலே காண்க. ஆராய்க.
Divine Couple in Ancient Indian Astronomy from Binjor to Adichanallur: Makara Viṭaṅkar & Kolli/Koṟṟavai
https://nganesan.blogspot.com/2021/02/divine-couple-binjor-amulet-to.html
இன்னும் 3 மணி நேரத்தில். ஜேம்ஸ் வெப் டெலெஸ்கோப் விண்ணில் நாசா ஏவுகிறது. வெற்றியடைய தை-தையல் தம்பதி துணையை வேண்டுவோம்,
https://jwst.nasa.gov/content/about/launch.html
Launch Date: Webb's launch date is set for December 25, 2021 07:20am EST ( 2021-12-25 12:20 GMT/UTC).
நா. கணேசன்
இந்தியர்/தமிழர் தொன்மங்களை மேலை அறிவியல் வழி ஆராயப் பாரதியார் “உயிர்பெற்ற தமிழர்பாட்டு” பாடிப் போந்தார். நவீன யுகத்தில் (Modernity) தமிழரைக் காலமென்னும் பெருங்கடலில் செலுத்தும் மாலுமிகளில் வள்ளலார், பாரதியார் முக்கியம். வசனத்திலும், கவிதையிலும் முன்னத்தி ஏர். சொல்வயலைப் பொன்னேர் பூட்டி உழுதோர்
ஆழமான பார்வைகொண்ட அருமையான கட்டுரை.
On Sun, Dec 12, 2021 at 10:00 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:On Thu, Nov 11, 2021 at 8:28 AM Pothigai 2013 <pothig...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBC%2Bz5E50-xg%2B9xL43R%2Bnp%3DDuOvNj71GsGD8WoA_1hqfaw%40mail.gmail.com.