அனைவருக்கும் வணக்கம்...........,..... இந்த இந்த கவிதையை நமது சந்தவசந்த நண்பர்களுடன் பகிரத் தோன்றியது................l .. வான் புகழ் வள்ளுவம்--பாரதி கலைக்கழகம் தலைப்பு.... 21.6. 2026 ____________________________________

9 views
Skip to first unread message

sudha's creations

unread,
Jul 7, 2026, 2:35:33 AM (2 days ago) Jul 7
to santhavasantham
ஆர்ப்பரிக்கும் ஆழ்கடலை   
  அளந்திடவே முடியுமா ?
   அகிலத்தில் திருக்குறள் போல்           ஆச்சரியம் உண்டா ?
கார்கால மேகம் போல் ,கருத்துமழை         பொழியும் ,
    கவின்குறள்பா வள்ளுவர்போல்
          இயற்றயார் உள்ளார் ?
பார்புகழும் பாயிரத்தில் இறைவாழ்த்து தொடக்கம்!
பகுத்துஉண்ணும் இல்லறமும், வான் சிறப்பும்  அடக்கம் !
ஊர்மெச்ச வாழ்ந்துசென்ற நீத்தாரைப் புகழ்ந்தார் !
ஊழ்வலிமை,  வல்லான்கை  வகுத்தவகை என்றார் !



துறவறத்தில்,வாய்மையும் ,கருணையும் வேண்டும் !
    துன்பத்தை சிரித்தபடி ஏற்கவும் வேண்டும்!
இறப்பையும் வெல்வதற்கு நற்செயல்கள் வேண்டும்!
     இன்பத்தில் உண்டுதுன்பம்     இதைஉணர வேண்டும் !
பறக்கின்ற காக்கைக்கும்,
பரந்தகுணம் உண்டு
படிக்காத மூடருக்கோ விலங்கறிவே உண்டு !
சிறப்பான குறளாலே சிந்திக்க வைத்தார் !
சீர்திருத்தக்  கருத்தால்நல் சமுதாயம் விதைத்தார் ;

வாழ்க்கைக்கு தேவையாம் வள்ளுவரின்    அதிகாரம்!
வாடாமல் கடைப்பிடிப்போம்
      வளம்சேர்க்கும் அதிகாரம் !
காழ்ப்புணர்ச்சி ,கோபதாபம் விட்டொழிக்கும் அதிகாரம் !
கல்விநட்பு  ,புகழ்என்றே பலசொல்லும் அதிகாரம் !
பாழ்வினைகள்  தரும்துன்பம்  பகன்றிடும் அதிகாரம் !
படை,மாட்சி  தூது,நாடு  பலபேசும் அதிகாரம் !
சூழ்நிலைகள் அறிவுறுத்தும் ஈற்றடிகள் அதிகாரம் !
சுகம்பெறவே தினம்படிப்போம் வள்ளுவரின் அதிகாரம் !

வான்புகழ் வள்ளுவத்தை வாழ்க்கையாக்கி,
வளம் பெறுவோம் !
உளம் களிப்போம்!

நன்றி
வணக்கம்
சுதா வேதம் 

Swaminathan Sankaran

unread,
Jul 7, 2026, 7:47:51 AM (2 days ago) Jul 7
to santhav...@googlegroups.com
அருமையான, எளிய நாடா கவிதை.

சங்கரன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CANcs5oZ1beVgqSrpV1Zy8a7PHniLyh9fEVoEccuhS6vNRvUoxw%40mail.gmail.com.


--
 Swaminathan Sankaran

Siva Siva

unread,
Jul 7, 2026, 10:26:28 AM (2 days ago) Jul 7
to santhav...@googlegroups.com
Nice.

/ ஊர்மெச்ச வாழ்ந்துசென்ற நீத்தாரைப் புகழ்ந்தார்  /

வாழ்ந்துசென்ற நீத்தார் = ?

V. Subramanian

On Tue, Jul 7, 2026 at 2:35 AM sudha's creations <sudhave...@gmail.com> wrote:

Subbaier Ramasami

unread,
Jul 7, 2026, 8:57:52 PM (2 days ago) Jul 7
to santhav...@googlegroups.com
வள்ளுவத்தை மிக அழகாகச் சித்திரித்துவிட்டாய். வாழ்க!

இலந்தை

On Tue, Jul 7, 2026 at 2:35 AM sudha's creations <sudhave...@gmail.com> wrote:
--

M. Viswanathan

unread,
Jul 7, 2026, 10:37:01 PM (2 days ago) Jul 7
to Santhavasantham

இமயவரம்பன்

unread,
Jul 7, 2026, 11:13:47 PM (2 days ago) Jul 7
to santhav...@googlegroups.com, santhavasantham
அருமையான கவிதை.

Govindaraju Arunachalam

unread,
Jul 8, 2026, 2:01:57 AM (yesterday) Jul 8
to santhav...@googlegroups.com
எளிய நடையில் எழிலார்ந்த கவிதை!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.


--
rgds,
 
Dr. A. GOVINDARAJU,
Retired Principal - National Awardee,

sudha's creations

unread,
Jul 8, 2026, 5:50:05 AM (yesterday) Jul 8
to santhavasantham
வாழ்த்திய அன்பு உள்ளங்கள்..
தலைவருக்கும்... எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்...
அன்புடன் சுதா வேதம்

Reply all
Reply to author
Forward
0 new messages