அரங்கனைக் கண்டேன்

9 views
Skip to first unread message

இமயவரம்பன்

unread,
Jun 8, 2026, 10:29:56 AM (5 days ago) Jun 8
to santhavasantham

அரங்கனைக் கண்டேன் 

(பல்லவி)

அரங்கனைக் கண்டேன் அகமகிழ்ந்தேன் - அவன்

… அருள்மிகு வடிவில் எனைமறந்தேன்

(அனு பல்லவி)

கரங்களைக் குவித்துக் கழல்பணிந்தேன் - உளம் 

… கனிந்திட உருகிக் கரைந்துநின்றேன்

(சரணம்)

மதியினை நிகர்க்கும் ஒளிமுகத்தில் - எழில்

… மலர்விழி இரண்டின் செழுமைகண்டேன்

மதுவென இனிக்கும் மணித்தமிழை - நிதம்

… மடுத்திட மகிழும் செவிகள்கண்டேன்.  (அரங்கனை) (1)

மலைமிசை வீழும் அருவியைப்போல் - திரு

… மார்பினில் மாலை தழையக்கண்டேன்

அலைமிகு பொன்னி அடிவருட - அவன்

… அறிதுயில் புரியும் அழகுகண்டேன். (அரங்கனை) (2)

மலர்மகள் நாதன் மகிமையினால் - நெஞ்சில்

… மயக்கமும் சோர்வும் மறையக்கண்டேன்

நலமிகு கோவில் தரிசனத்தால் - எனை

… நலித்திடும் சோகம் விலகக்கண்டேன். (அரங்கனை) (3)

இரவுடன் பகலாம் இருபொழுதும் - புகழ் 

… இசைத்திடும் அடியார் அடிதொழுதேன்

இருவகை வினையாம் இருளொழிந்தேன் - அந்த

… எழுவகைப் பிறப்பும் கடந்துவிட்டேன். (அரங்கனை) (4)

- இமயவரம்பன் 

Kaviyogi Vedham

unread,
Jun 8, 2026, 10:36:31 AM (5 days ago) Jun 8
to santhav...@googlegroups.com
attakasam  imayam.  vazhi, yo

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/98C72916-96F5-457B-9221-517CD2FE75BF%40gmail.com.

Arasi Palaniappan

unread,
Jun 8, 2026, 10:37:52 AM (5 days ago) Jun 8
to சந்தவசந்தம்
அருமை அருமை 

--

Ram Ramakrishnan

unread,
Jun 8, 2026, 10:48:49 AM (5 days ago) Jun 8
to santhav...@googlegroups.com
அருமை, தரு. இமயவரம்பன்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jun 8, 2026, at 10:29, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:

--

Swaminathan Sankaran

unread,
Jun 8, 2026, 11:52:57 AM (4 days ago) Jun 8
to santhav...@googlegroups.com
அருமையான பாடல்.
கருநாடக இசையில் பாட வேண்டிய ஒரு நல்ல பாடல்.

சங்கரன் 

--
 Swaminathan Sankaran

Siva Siva

unread,
Jun 8, 2026, 2:49:15 PM (4 days ago) Jun 8
to santhav...@googlegroups.com
Nice.

மலைமிசை வீழும் அருவியைப்போல்   /

இவ்விடத்தில் மிசை என்பது உருபுமயக்கமோ?
மலையினின் றிழியும்?

V. Subramanian

On Mon, Jun 8, 2026 at 10:29 AM இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:

இமயவரம்பன்

unread,
Jun 8, 2026, 3:05:39 PM (4 days ago) Jun 8
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி! 

“மலையினின் றிழியும்” சிறப்பான பரிந்துரை! ஆனால், சாதாரண மக்கள் புரிந்து கொள்வது கடினம் போல் தோன்றுகிறது.

“மலையிடைத் தவழும்” - சரியாக இருக்குமா? 

On Jun 8, 2026, at 2:49 PM, Siva Siva <naya...@gmail.com> wrote:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Jun 8, 2026, 3:13:42 PM (4 days ago) Jun 8
to santhav...@googlegroups.com
மலைதனில் மிளிரும் ?

இமயவரம்பன்

unread,
Jun 8, 2026, 3:20:03 PM (4 days ago) Jun 8
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
Excellent, thanks

Swaminathan Sankaran

unread,
Jun 8, 2026, 4:20:16 PM (4 days ago) Jun 8
to santhav...@googlegroups.com
அருவி 'இழியுமா?' கொட்டுமா?

சங்கரன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

--
 Swaminathan Sankaran

Ram Ramakrishnan

unread,
Jun 8, 2026, 4:39:16 PM (4 days ago) Jun 8
to santhav...@googlegroups.com
இழியும் என்பதற்கு "கொட்டும் என்றே பொருள் கொள்ளலாம்.

1) இழி-தல் iḻi-tal (p. 350)
இழி¹-தல் iḻi- , 4 v. intr. [K. M. Tu. iḻi.] 1. To descend, dismount; இறங்குதல். (அகநா. 66.) 2. To fall, drop down; விழுதல். வெண் மதியம் . . . நிலத்திழிந்த தொத்தனவே (சீவக. 2238). 3. To be degraded, disgraced, reduced in circumstances; இழிவுபடுதல். மாந்தர் நிலையி னிழிந் தக்...

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

Siva Siva

unread,
Jun 8, 2026, 4:50:52 PM (4 days ago) Jun 8
to santhav...@googlegroups.com
https://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=7&Song_idField=70740&padhi=074&startLimit=1&limitPerPage=1&sortBy=&ampsortOrder=DESC
Sundarar Thevaram - 7.74.1
மின்னுமா மேகங்கள் பொழிந்திழிந் தருவி
    வெடிபடக் கரையொடுந் திரைகொணர்ந் தெற்றும்
அன்னமாங் காவிரி அகன்கரை யுறைவார்
    அடியிணை தொழுதெழும் அன்பராம் அடியார்
சொன்னவா றறிவார் துருத்தியார் வேள்விக்
    குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
என்னைநான் மறக்குமா றெம்பெரு மானை
    யென்னுடம் படும்பிணி இடர்கெடுத் தானை.

In the kuRippurai:
"பொழிந்தபின்" என்பது, "பொழிந்து" எனத் திரிந்து நின்றது. "அருவி" என்றவிடத்து, ஆக்கம் வருவித்து, அருவியாய் வெடிபட இழிந்து என மாற்றியுரைக்க.

V. Subramanian

இமயவரம்பன்

unread,
Jun 8, 2026, 5:26:05 PM (4 days ago) Jun 8
to santhav...@googlegroups.com
அன்புடன் வாழ்த்திய அனைவருக்கும் எனது நன்றி!

இந்தப் பாடலை இசையுடன் கேட்க :
77adbfce-cb5d-4609-b64f-eefb93ddc69e.jpeg

Parthasarathy S

unread,
Jun 8, 2026, 10:59:58 PM (4 days ago) Jun 8
to சந்தவசந்தம்
மிகவும் அருமையான பாடல். வாழ்த்துகள் இமயவரம்பரே!

புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்

Swaminathan Sankaran

unread,
Jun 8, 2026, 11:04:45 PM (4 days ago) Jun 8
to santhav...@googlegroups.com
Maybe you are correct. But from the quoted examples and  attributed meaning, it looks like it is used in a 
pejorative sense - 'to descend, dismount, to fall, drop down,' ' to be degraded, to be disgraced, reduced in circumstances.'

Sankaran

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

--
 Swaminathan Sankaran

இமயவரம்பன்

unread,
Jun 9, 2026, 11:31:41 AM (4 days ago) Jun 9
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி திரு. பார்த்தசாரதி!

இமயவரம்பன்

unread,
6:55 AM (17 hours ago) 6:55 AM
to santhavasantham

Sai Ganesan H

unread,
10:14 AM (13 hours ago) 10:14 AM
to santhav...@googlegroups.com
அருமையான வரிகள்! இசையமைப்பும் பாடியவரும் யாரெனத் முதலில் தேடினேன். பின்னர்தான் தெரிந்தது AI என்று! அட்டகாசம்! பாராட்டுகள்! 

- சத்ய வேழன். 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
11:28 AM (12 hours ago) 11:28 AM
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
அன்புடன் பாராட்டிய சத்யவேழருக்கு மிக்க நன்றி
Reply all
Reply to author
Forward
0 new messages