மகிழ்பவர்க்கு வணக்கம்!

25 views
Skip to first unread message

NATARAJAN RAMASESHAN

unread,
Jan 6, 2022, 11:19:52 PM1/6/22
to santhav...@googlegroups.com
.                             மகிழ்பவர்க்கு வணக்கம்!

( ஸ்ரீ ருத்ரம் 7ஆம் அனுவாகத்தின் கடைசி மந்திரத்தின் கருத்தைத் தழுவி எழுதியது) 


எழிலியென மின்னலென இருப்பவர்க்கு வணக்கம்;
    இளவேனில் தெளிவிண்ணாய்ச் சிறப்பவர்க்கு வணக்கம்;
பொழிமழையில் வெயிலெனவே இணைபவர்க்கு வணக்கம்;
    பொலிமழையின் குளிர்காற்றாய் அணைபவர்க்கு வணக்கம்;
அழிவூழிக் காலமென அழிப்பவர்க்கு வணக்கம்;
    அனைத்தில்லப் பொருளாகச் செழிப்பவர்க்கு வணக்கம்;
 இழிவில்லா  மனைநெறியாய்த் திகழ்பவர்க்கு வணக்கம்;
       என்றென்றும் அருளிறையாய்  மகிழ்பவர்க்கு வணக்கம்!

                                   ( எழிலி -- மழைமேகம்)
                              
                             ( அணைபவர்-- பொருந்துபவர்)

                                  (இல்லப் பொருள் -- வஸ்து)

                                      (மனைநெறி -- வாஸ்து)

                                                             -- தில்லைவேந்தன்

rathnam

unread,
Jan 6, 2022, 11:45:09 PM1/6/22
to santhav...@googlegroups.com
ஐயா,  - நம சம  -  இரண்டிற்குமே வணக்கம் என்ற பொருள் வருமா?

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hggKiXbAFrV%3D3Dyc7d8Y14_pg0SbWPV%2BvJNVmqhK767NA%40mail.gmail.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Jan 6, 2022, 11:57:48 PM1/6/22
to santhav...@googlegroups.com
தழுவல் என்று குறிப்பிட்டுள்ளதைக் காண்க.
இது மொழிபெயர்ப்பு அன்று
ஶ்ரீருத்ரம் மத்திரத்தை ஒரு நண்பர்  விளக்கிய அழகில் ஈடுபட்டு inspire ஆனதால் என் மனத்தில் உருவான வரிகள்.
மூலத்தை அப்படியே ஒத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதவில்லை.
It is a free adaptation of the original and not a faithful adaptation or translation 
Thanks 



rathnam

unread,
Jan 7, 2022, 12:00:03 AM1/7/22
to santhav...@googlegroups.com
வேந்தன் ஐயா, என் முந்தைய மடல் என் தனிப்பட்ட ஐயம்.  உங்கள் பாட்டுக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. 'நமகம் சமகம்' பற்றிய ஐயம் அது.

sai...@gmail.com

unread,
Jan 7, 2022, 8:16:11 AM1/7/22
to சந்தவசந்தம்
நம: (நமஹ) என்றால் வணக்கம். ஶ்ரீருத்ரத்தின் முதல் பாகமான நமகத்தில் சிவனை நம:, நமோ என்றெல்லாம்  வணங்குவதால் அது நமகம் என்னும் பெயர் பெறும்.

ச என்றால் மற்றும் (and, also). ஶ்ரீருத்ரத்தின் இரண்டாம் பாகமாக சமகத்தில் சிவனின் நீக்கமற்ற நிறைவைப் பட்டியலிட்டுக் காட்டும்போது, அவர் இதில் இருக்கிறார், இதிலும் இருக்கிறார் எனப் பொருள்படும்படி சமே என்ற சொல்லால் துதிப்பதால் அது சமகம் என்னும் பெயர் பெறும்.

யாகத்திற்கு தன்னை அழைக்காததுடன், தன் மனையாள் பார்வதியையும் தட்சன் அவமானப் படுத்த அவள் யாககுண்டத்தில் விழுந்து உயிர் துறந்தாள் என்றும், சிவன் அவள் உடலைத் தோளில் போட்டுக்கொண்டு அலைந்து ரௌத்ரதாண்டவம் ஆடியபோது, விஷ்ணு தன் சுதர்சன சக்கரத்தை எறிந்து உடலை வெட்டிச் சிதைக்க, வெட்டுண்ட பாகங்கள் பாரதத்தில் விழுந்த 51 இடங்களும் சக்திபீடங்களாக வழிபடப்படுவது வரலாறு. சிவன் தட்சனைத் தண்டிக்க அவன் தலையை வெட்ட, பின் அவன் வேண்டுதலில் ஓர் ஆட்டின் தலையைப் பொருத்தித் தர, தட்சன் மகிழ்ந்து சிவனைத் துதித்த தோத்திரமே ஸ்ரீருத்ரம். சமகம் பாகத்தில் சமே, சமே என்று ஆட்டின் குரல் போல் ஒலித்து முடிவதும் காண்க.

rathnam

unread,
Jan 7, 2022, 10:42:19 AM1/7/22
to santhav...@googlegroups.com
அருமை... இரமணி ஐயா!  கவி படைத்து யோசிக்க வைத்த வேந்தன் ஐயாவுக்கும் நன்றி!

Swaminathan Sankaran

unread,
Jan 7, 2022, 7:57:33 PM1/7/22
to santhav...@googlegroups.com

தட்சனின் யாககுண்டத்தில் வீழ்ந்து சிறந்தவள் 'ஸதி"யன்றோ?
பார்வதி தட்சனின் மக்கள் அல்லவே.

சங்கரன்  

On Fri, Jan 7, 2022 at 8:16 AM sai...@gmail.com <sai...@gmail.com> wrote:

[...] 

N. Ganesan

unread,
Jan 26, 2022, 3:44:40 AM1/26/22
to Santhavasantham
இளவேனில் = வசந்த இருது = சித்திரை-வைகாசித் திங்கள்.

ஸ்ரீருத்ரம் மூல மந்திரத்தில், இளவேனில், அதாவது, வசந்த பருவம் உள்ளதா?

நன்றி,
நா. கணேசன்

--

NATARAJAN RAMASESHAN

unread,
Jan 26, 2022, 3:54:56 AM1/26/22
to santhav...@googlegroups.com
திரு கணேசன் :


N. Ganesan

unread,
Jan 26, 2022, 3:59:45 AM1/26/22
to Santhavasantham

இவ் வெண்பாக்களில் சரியாக, இளவேனில் பருவத்தை விளக்கியுள்ளீர்கள்:
On Wed, Jun 2, 2021 at 8:22 PM தில்லைவேந்தன் <chrome...@gmail.com> wrote:
.    கலிஃபோர்னியா வெண்பாக்கள்!

.  மலைத்தொடரின் ஆளில்லா அழகு!

சாளரம் காட்டும் சரிந்த மலைத்தொடரின்
ஆளரவம் இல்லா அழகினை - நாளெலாம்
பார்த்துக் களித்துப்பின், பார்த்துக் களித்துப்பின்,
போர்த்தியே தூங்கிப்போம் போது!

( கலிஃபோர்னியாவில், சாளரம் வழியாகப் பார்த்தால், மலைத்தொடர்கள் தெரியும்.அவற்றைப் பார்ப்பதும், தூங்குவதுமாகப் பொழுது போகும்)


                  வேனில்  வரவு!

              ( Arrival  of spring)

கொட்டி இலையுதிர்ந்து கோட்டோ வியமான
மொட்டை மரத்தின் முதற்பூவும் -- கிட்ட
எழில்வேனில் வந்ததென ஈங்குரைக்கும் வேளை
பொழிலாகும் ஊரே பொலிந்து!

( இலையுதிர் காலம் முடிந்து இளவேனில் தொடங்கியவுடன் ஊரெங்கும் பூத்துக் குலுங்கும்)


N. Ganesan

unread,
Jan 26, 2022, 4:05:17 AM1/26/22
to Santhavasantham


On Wed, Jan 26, 2022 at 2:54 AM NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:
திரு கணேசன் :

பாடலில் திருத்தம் வேண்டும். சரத் ருது = கூதிர் காலம் (குளிர் காலம்). சரத் >>> சாரதா. தேவி போர்தொடுக்கும் காலம்.

ருது – பருவக்காலம் :
வசந்த ருது- இளவேனில் காலம் ( சித்திரை , வைகாசி)
கிரீஷ்ம ருது- முதுவேனிற் காலம் ( ஆனி, ஆடி)
வருஷ ருது-கார்காலம் (ஆவணி, புரட்டாசி) (= மழைக்காலம்)
சரத் ருது- கூதிர்காலம் (ஐப்பசி, கார்த்திகை ) (= குளிர்காலம்)
ஹேமந்த ருது- முன்பனிக்காலம் (மார்கழி, தை)
சிசிர ருது- பின்பனிக்காலம் (மாசி, பங்குனி)

 


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Jan 26, 2022, 4:11:40 AM1/26/22
to santhav...@googlegroups.com
தாங்கள் கூறுவது சரியே

பாடலை விளக்கிய  நண்பர் வசந்த  காலம் என்றே சொன்னதால் இளவேனில் என்று எழுதினேன்.

உறுதியாகத் தெரிந்து கொண்டு பிறகு திருத்துகிறேன்

நன்றி

N. Ganesan

unread,
Jan 26, 2022, 4:14:09 AM1/26/22
to Santhavasantham
On Wed, Jan 26, 2022 at 3:11 AM NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:
தாங்கள் கூறுவது சரியே

பாடலை விளக்கிய  நண்பர் வசந்த  காலம் என்றே சொன்னதால் இளவேனில் என்று எழுதினேன்.

உறுதியாகத் தெரிந்து கொண்டு பிறகு திருத்துகிறேன்.

நன்கு கேட்டுப் பாருங்கள். சரத் காலம் இளவேனில் அன்று,

நன்றி



ருது – பருவக்காலம் :
வசந்த ருது- இளவேனில் காலம் ( சித்திரை , வைகாசி)
கிரீஷ்ம ருது- முதுவேனிற் காலம் ( ஆனி, ஆடி)
வருஷ ருது-கார்காலம் (ஆவணி, புரட்டாசி) (= மழைக்காலம்)
சரத் ருது- கூதிர்காலம் (ஐப்பசி, கார்த்திகை ) (= குளிர்காலம்)
ஹேமந்த ருது- முன்பனிக்காலம் (மார்கழி, தை)
சிசிர ருது

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Jan 26, 2022, 4:16:28 AM1/26/22
to santhav...@googlegroups.com
தாங்கள் கூறுவதை ஏற்கிறேன்

நன்றி

N. Ganesan

unread,
Jan 26, 2022, 4:17:48 AM1/26/22
to Santhavasantham
தொல்காப்பியர் காலங்களில் (pre-BCE centuries), தமிழர்க்கு வேளாண்மையே பிரதானம். வேளாண் தொழிலுக்கு மழையே பிரதானம். எனவே, வான்சிறப்பு அதிகாரம் குறளில். கார்காலம் (வர்ஷ- :: வஸ்ஸ (ப்ராகிருதம்)) - முதலில் வைத்து ஆறு பெரும்பொழுதுகளைக் கூறுகிறார் தொல்காப்பியர்.

வருடத்தை நான்கு மாதங்கள் கொண்ட மூன்று பிரிவுகளாகப் பகுத்தல் உண்டு.
”இக்ஷ்வாகு மன்னர்களின் கி.பி. 3 - 4ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் கிம்ஹ (கிரீஷ்ம), வஸ்ஸ (வர்ஷ), சரத் என்ற மூன்று காலங்கள் குறிப்பிடப்படுகின்றன. அதாவது கோடை, மழை, பனிக் காலங்களே இவ்வாறு குறிப்பிடப்பட்டன. இந்த வரிசையே தமிழ் இலக்கண மரபிலும் இளவேனில் - முதுவேனில், கார் - கூதிர், முன்பனி - பின்பனி என்று சற்று விரிவாகக் குறிப்பிடப்படுகிறது. எனவே வானநூல் - ஜோதிட அடிப்படையிலும் கோடைக்காலமே ஆண்டின் தொடக்கமாகும்.” (எஸ். ராமச்சந்திரன், தொல்லியல் ஆய்வாளர், சென்னை). சித்திரை  மாதத்தில் வேனிலான் எனப்படும் காமதேவனின் வசந்தோற்சவம். இந்திரவிழா சிறப்பாக நடந்ததை சிலம்பு 5-ம் காதை விவரிக்கிறது.
கிரீஷ்ம, வர்ஷ, சரத் என்னும் நந்நான்கு மாதமாய் ஆண்டினை மூன்று பிரிவாக்குவதைச் சீவகசிந்தாமணி விளக்கியுள்ளது. இங்கே, வேனில், மழை, குளிர் என்று இப்பிரிவுகள். வேனில்பருவம் என்று சித்திரையில் ஆண்டு தொடங்குவதைக் கூறியுள்ளார். இதே போல, திருவலஞ்சுழிக் கல்வெட்டிலும் சித்திரை விஷு என்று தொடங்கி வருடத்தின் நான்கு முக்கியமான சங்கிராந்திகள் கூறப்பட்டுள்ளன.

வருடத்தில் 12 மாதங்கள். 1 X 12 = 2 X 6 = 3 X 4 என 12-ஐப் பகுக்கலாம். 12 ராசிகளை Solar Mansions என்றும், 27 நட்சத்திரங்களை Lunar Mansions என்றும் அழைப்பர். தொல்காப்பியர் இந்த ஸோலார் + லூனார் மேன்ஸன்ஸின் பேர்களில் உள்ள இலக்கணத்தைக் குறிப்பிட்டுச் சூத்திரித்துள்ளார். முன்பெல்லாம். 27 நட்சத்திரங்கள் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டவை என ஆசியாவின்
பழைய இலக்கிய ஆய்வர்கள் (indology, sinology) கூறுவர். இப்பொழுது 27 நட்சத்திரங்கள் பற்றிய அறிவு இந்தியாவில் ஏற்பட்டது (சிந்துக் காலம், அதன் பின் வேதாங்க ஜ்யோதிஷத்தில் மொழிபெயர்ப்பு) என வரலாற்றில் பதிவாக ஆரம்பித்துள்ளது. நட்சத்திரங்களுக்குப் பழம்பெயர்கள் தமிழில் உள்ளதும் இதற்கோர் அடிப்படை. வேனில், மழை, கூதிர் காலங்களை ஆண்டின் மாதங்களை
வரிசைக்கிரமமாக சிந்தாமணி பாடுகிறது. திருத்தக்கதேவர்தாம் Zodiac-கு இப்பாடல்களில் தமிழில் முதன்முதலாகக் கலைச்சொல் தந்தவர். ஃசோடியாக்கை “கனலி வட்டம்” என்றும் ஆடு (Aries) தலையாக உள்ள ராசி சக்கரத்தை அழைக்கிறார். கனலிவட்டம் = ஞாயிற்றுமண்டிலம் = https://en.wikipedia.org/wiki/Zodiac சிந்தாமணியின் அப்பாடல்கள் சித்திரையில் தொடங்கும் வருஷத்தைக் காட்டுவன. தண்டாரணிய முனி அகஸ்தியனிடம் ஆசீர்வாதம் பெற்று, பஞ்சாங்கத்தை தமிழ்நாட்டுக்குக் கொணர்ந்த தமிழ்வேள், சேரமன்னன்  ”ஆடு கோட்பாட்டுச் சேரலாதன்” என்றும், வானியல் விஞ்ஞானத்தை அறிமுகம் செய்வதால்
வானவரம்பன் என்று புகழப்பெறுவதும் பதிற்றுப்பத்து பதிகம் காட்டுகிறது.

முந்நான்கு என்று வருடத்தின் பன்னிரண்டு மாதங்களைப் பகுப்பதை முதலில் தமிழ்நாட்டு சீதோஷ்ண நிலைக்கு ஏற்பப் பயன்படுத்தியவர் தொல்காப்பியர் ஆவார். வட இந்தியாவில் வசந்தம் என்னும் பருவகாலத்தில் (இளவேனில்) தொடங்கி 6 பருவங்கள் பிரிக்கப்படும். ஆறை மூன்றாக்கினால் கிரீஷ்மம் (வேனில்), வர்ஷம் (மழை),  ஶரத் (குளிர்) என்று
குறுக்கிப் பயன்படுத்தலும் உண்டு: இக்‌ஷ்வாகு மன்னர் கல்வெட்டுகள், சீவக சிந்தாமணி. இவை ஆண்டின் தொடக்க மாதமாகிய சித்திரையில் தொடங்குவன. தமிழ்நாட்டுக்கு சங்க காலத்தில் வேளாண்மை அடிப்படை. வேனில் (இள + முது வேனில்) பருவம், பூமத்தியரேகைக்கு அருகே இருப்பதால் கடுமையான வெயில்.
எனவே, இதை வைத்து தொல்காப்பியர் 6 பருவங்களைத் தொடங்கவில்லை. முந்நான்கு - வர்ஷம், ஶரத், க்ரீஷ்மம் என்று உழவர்க்கு இன்றியமையாத மழைக்காலப் பருவத்தை பருவச் சுழற்சியில் முதன்மையாக வைக்கிறார். மழை, பனி (குளிர்), கோடை (வேனில்) என்று அமைக்கிறார் தொல்காப்பியர்:
இதனை மலையாளிகள் பிற்காலத்தில் தமக்கென ஒரு தொடராண்டு - கொல்லம் ஆண்டு என அமைக்கும்போது பயன்படுக்த்துகின்றனர். இதுபோல, தமிழர்கள் தமக்கென ஒரு தொடராண்டு - திருவள்ளுவர் ஆண்டு என தை மாதத்தில் 20-ஆம் நூற்றாண்டில் அமைத்தனர்.

வர்ஷம், ஶரத், க்ரீஷ்மம் - தொல்காப்பியர் இவ்வரிசையில் 6 பருவங்களைத் தருதல்:
கார்காலம்: இது தமிழ் மாதமான ஆவணி, புரட்டாசி யை உள்ளடக்கியது.
கூதிர்காலம்: இது தமிழ் மாதமான ஐப்பசி, கார்த்திகை யை உள்ளடக்கியது. இலைகள் கூம்பி உதிர்வது கூதிர் எனப்படும். (கூடு-தல் > கூது-தல், கடவு > கதவு, ...)
முன்பனிக்காலம்: தமிழ் மாதமான மார்கழி, தை யை உள்ளடக்கியது.
பின்பனிக்காலம்: இது தமிழ் மாதமான மாசி, பங்குனி யை உள்ளடக்கியது.
இளவேனில்காலம்: இது தமிழ் மாதமான சித்திரை, வைகாசி யை உள்ளடக்கியது.
முதுவேனில்காலம்: இது தமிழ் மாதமான ஆனி, ஆடி யை உள்ளடக்கியது.

On Mon, Apr 20, 2020 at 6:03 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
சங்க இலக்கியங்களில் நெடுநல்வாடையில் 12 ராசிகளைக் கொண்ட வருஷத்தில்,
மேஷ ராசி தலை ஆக இருப்பதும், பதிற்றுப்பத்து சேரர்வரலாற்று நூலில்,
அகத்தியர் ஆசிரமம் இருந்த தண்டகாரணியத்தில் வருடை என்னும் மலை ஆட்டைச்
சேரநாட்டுக்குக் கொணர்ந்தான் என ஓர் உருவகமாக, ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
காலத்தில் சக அப்த முறையில் சித்திரை முதலாக ஆண்டு ஏற்படுத்தப்பட்டது என்பதும்
பார்த்தோம். தொல்காப்பியத்திலே 12 மாதப் பெயர்களும், 27 நட்சத்திரப் பெயர்களும்
எந்தெந்த எழுத்தில் முடியும் என ஆராய்ந்து சொல்லப்பட்டிருக்கிறது. சேரலாதன்
வாழ்ந்த வஞ்சி மாநகர் அருகே இருந்தவர் திருத்தக்கதேவர்.
அவர் இயற்றிய சிந்தாமணிக் காப்பியத்தில் அப்போதிருந்த கலைகள் பற்றிய
பல செய்திகள் கிடைக்கின்றன. ஆடல், பாடல், கூத்து பற்றிய அரிய செய்திகள் உள்ளன.
பருந்தும் நிழலும் போலப் பாட்டும் பண்ணும் இருக்கவேண்டும் என்று கூறியவர் அவர்தான்.
பின்னாளில் தமிழ் இசை பற்றி மிகுந்த ஆராய்ச்சிகள் தந்த அடியார்க்குநல்லார் உரையை,
சிலப்பதிகார நூலும், அடியார்க்குநல்லார் உரையும் பருந்தும் நிழலும் போல இருக்கிறது என்று
இந்த உவமையைப் பயன்படுத்திப் புகழ்ந்திருக்கிறார்கள். தமிழ் இசை வளர்த்த மங்கலப்
பண்டிதர்கள் சங்க காலப்  பாணர்கள் வகுப்பாரில் பெரும்பிரிவினர் என்பது சீவக சிந்தாமணியால்
அறிகிறோம். சோதிட சாத்திரச் செய்திகள் பலவும் சிந்தாமணியில் கிடைக்கிறது.
வருடத்திற்குப் 12 திங்கள்கள் என்றும், அயனம் என்னும் கதிரவனின் வட, தென்
திசைச் செலவுகள் பற்றியும் விளக்கியுள்ளார்.

வருடத்தில் 12 மாதங்கள். 12 X 1 = 6 X 2 = 4 X 3 என 12-ஐப் பகுக்கலாம்.
6X2 - இரண்டிரண்டு மாதங்களாய் 6 பருவங்கள் வகுக்கப்பெற்றன.
http://www.tamilvu.org/tdb/titles_cont/inscription/html/panchangam.htm

வசந்த ருது - இளவேனில் காலம் ( சித்திரை , வைகாசி)
கிரீஷ்ம ருது - முதுவேனிற் காலம் ( ஆனி, ஆடி)
வருஷ ருது -மழைக்காலம் (ஆவணி, புரட்டாசி)

சரத் ருது - கூதிர்காலம் (ஐப்பசி, கார்த்திகை )
ஹேமந்த ருது - முன்பனிக்காலம் (மார்கழி, தை)
சிசிர ருது - பின்பனிக்காலம் (மாசி, பங்குனி)
(வசந்தம் மார்ச் 20-ல் தொடங்க வேண்டும். இதுபற்றிப் பாரதியார் நல்ல கட்டுரை எழுதினார்.)

வருடத்தை நான்கு மாதங்கள் கொண்ட மூன்று பிரிவுகளாகப் பகுத்தல் உண்டு.
”இக்ஷ்வாகு மன்னர்களின் கி.பி. 3 - 4ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் கிம்ஹ (கிரீஷ்ம), வஸ்ஸ (வர்ஷ), சரத் என்ற மூன்று காலங்கள் குறிப்பிடப்படுகின்றன. அதாவது கோடை, மழை, பனிக் காலங்களே இவ்வாறு குறிப்பிடப்பட்டன. இந்த வரிசையே தமிழ் இலக்கண மரபிலும் இளவேனில் - முதுவேனில், கார் - கூதிர், முன்பனி - பின்பனி என்று சற்று விரிவாகக் குறிப்பிடப்படுகிறது. எனவே வானநூல் - ஜோதிட அடிப்படையிலும் கோடைக்காலமே ஆண்டின் தொடக்கமாகும்.” (எஸ். ராமச்சந்திரன், தொல்லியல் ஆய்வாளர், சென்னை). சித்திரை  மாதத்தில் வேனிலான் எனப்படும் காமதேவனின் வசந்தோற்சவம். இந்திரவிழா சிறப்பாக நடந்ததை சிலம்பு 5-ம் காதை விவரிக்கிறது.
கிரீஷ்ம, வர்ஷ, சரத் என்னும் நந்நான்கு மாதமாய் ஆண்டினை மூன்று பிரிவாக்குவதைச் சீவகசிந்தாமணி விளக்கியுள்ளது. இங்கே, வேனில், மழை, குளிர் என்று இப்பிரிவுகள். வேனில்பருவம் என்று
சித்திரையில் ஆண்டு தொடங்குவதைக் கூறியுள்ளார். இதே போல, திருவலஞ்சுழிக் கல்வெட்டிலும் சித்திரை விஷு என்று வருடத்தின் நான்கு முக்கியமான சங்கிராந்திகள் கூறப்பட்டுள்ளன.

சித்திரையில் வருட தொடக்கம் எனக் காட்டும் சீவகசிந்தாமணி பாடல்கள்:
http://tamilvu.org/slet/l3100/l3300uri.jsp?page=1730
3070 நளிசிலம் பதனி னுச்சி நாட்டிய பொன்செய் கந்தி
னொளியொடு சுடர வெம்பி யுருத்தெழு கனலி வட்டந்
தெளிகடல் சுடுவ தொத்துத் தீயுமிழ் திங்க ணான்கும்
விளிவரு குரைய ஞான வேழமேற் கொண்டு நின்றான்.

   (இ - ள்.) நளி சிலம்பதனின் உச்சி - (முற்கூறியவை) செறிந்த குன்றின் உச்சியிலே; விளிவு அரும் ஞான வேழம் மேற்கொண்டு - கெடுதல் இல்லாத ஞானமாகிய வேழத்தை ஊர்ந்து; நாட்டிய பொன் செய் கந்தின் - நாட்டப்பெற்ற பொன்னாலாகிய தூண்போல; உருத்து எழு கனலி வட்டம் - சினந்து எழும் ஞாயிற்றின் வட்டம்; தெளி கடல் சுடுவது ஒத்து - தெளிந்த கடலைச் சுவறப் பண்ணுந் தன்மையை ஓத்து; ஒளியொடு சுடர வெம்பி - ஒளியோடே விளங்கும்படி சினந்து; தீ உமிழ் திங்கள் நான்கும் - நெருப்பைச்சொரியும் திங்கள் நான்கும்; நின்றான் - நின்றான்.

   (வி - ம்.) குரைய : அசை,

   நளி - செறிவு, சிலம்பு - மலை, கந்தின் - தூணைப்போன்று , கனலி வட்டம் - ஞாயிற்று மண்டிலம். சித்திரை வைகாசி ஆனி ஆடி யாகிய திங்கள் நான்கும் என்க. இஃது இளவேனிலும் முதுவேனிலும் ஆகிய கோடைக்காலத்துச் சீவகன் றவநிலை கூறிற்று.

( 472 )
3071 பார்க்கடல் பருகி மேகம் பாம்பினம் பதைப்ப மின்னி
        வார்ப்பிணி முரசி னார்த்து மண்பக விடித்து வான
        நீர்த்திரள் பளிக்குத் தூணி சொரிந்திட நின்று வென்றான்.
        மூர்த்தியாய் முனிவ ரேத்து முனிக்களி றனைய கோமான்.

   (இ - ள்.) மூர்த்தியாய் முனிவர் ஏத்தும் முனிக்களிறு அனைய கோமான் - தவவுருவினனாகி, முனிவர்கள் வாழ்த்தும் முனிக்களிறு போன்ற அரசன்; வானம் மேகம் பார்க்கடல் பருகி - வானிலே முகில் பாறையையுடைய கடலிலே நீரைப் பருகி; பாம்பு இனம் பதைப்ப மின்னி - பாம்பின் திரள் துடிக்க மின்னி; வார்ப்பிணி முரசின் ஆர்த்து - ஆர்ரால் இறுகிய முரசென முறுகி; மண்பக இடித்து - நிலம் பிளக்க இடித்து; நீர்த் திரள் பளிக்குத் தூணி சொரிந்திட நின்று வென்றான் - நீர்த்திரளைப் பளிங்குக் கோல் கிடக்குந் தூணி அதனைப் பெய்வது போலப் பெய்ய (ஆவணி முதலிய திங்கள் நான்கும்) நின்று வென்றான்.

   (வி - ம்.) இஃது ஆவணி புரட்டாதி ஐப்பசி கார்த்திகை யாகிய காரும் கூதிருமாகிய பருவத்துத் தவநிலை கூறுகின்றது. பார் - பறை, பாப்பினம் - பாம்பின் திரள். ”விரிநிற நாகம் விடருளதேனும் உருமின் கடுஞ்சினம் சேணின்று முட்கும்” ஆதலான் பாப்பினம் பதைப்ப என்றார். மேகம் நீர்த்திரளைப் பளிக்குத்தூணி பளிக்குக்கோலைச் சொரிவதுபோலச் சொரிய என்க. பக - பிளக்க. மூர்த்தி - தவவேடம்.

( 473 )
3072 திங்கணான் கவையு நீங்கத் திசைச்செல்வார் மடிந்து தேங்கொள்
பங்கயப் பகைவந் தென்னப் பனிவரை யுருவி வீசு
மங்குல்சூழ் வாடைக் கொல்கான் வெள்ளிடை வதிந்து மாதோ
விங்குநான் காய திங்க ளின்னுயி ரோம்பி னானே.

   (இ - ள்.)

நான்கு திங்கள் அவையும் நீங்க - நான்கு திங்களாகிய காரும் கூதிரும் கழிந்த பிறகு; திசைச் செல்வார். மடிந்து - திசைதொறும் செல்கின்றவர் செல்லாமற் சோம்பியிருக்க; தேம் கொள் பங்கயப் பகை வந்தென்ன - அவ்விடங்களிலே கொண்ட பனி வந்ததாக, பனிவரை உருவி வீசும் மங்குல் சூழ் வாடைக்கு ஒல்கான - பனி மலையைத் தடவி வரும் இருள் சூழும் வாடைக்குத் தளராதவனாய்; வெள்ளிடை வதிந்து - வெளியிடத்திலே தயங்கியிருந்து; இங்கு நான்கு ஆய திங்கள் இன உயிர் ஓம்பினான் - தங்கிய அந்நான்கு திங்களாகிய பனிக்காலத்திலே இனிய உயிரைக் காப்பாற்றினான்.

விளக்கம் : முன்பனி, பின்பனி இரண்டுங் கூடிய பனிக்காலத் தவநிலை கூறினார். பங்கயப்பகை - பனி, இங்குதல் -தங்குதல். (474)

https://temple.dinamalar.com/news_detail.php?id=13563
சித்திரை திங்கள் வருஷத்தின் முதல் மாதம் எனக் காட்டும் முக்கியமான இலக்கியமாக
சீவக சிந்தாமணி திகழ்கிறது.
நா. கணேசன்

On Sat, Apr 18, 2020 at 8:51 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
சித்திரையில் வருஷப் பிறப்பைத் தமிழர் கொண்டாடினர் என்பதற்கு
அரிய கல்வெட்டுச் சான்று உள்ளது. சக்கரவர்த்தி ராஜராஜ சோழனின்
ஆட்சியில் திருவலஞ்சுழி தலத்தில் க்ஷேத்திர பாலகர் திருக்கோயில்
கல்வெட்டு, கி.பி. 998-ஆம் ஆண்டு எழுதப்பட்டுள்ளது.
இக்கோயிலில் ராஜராஜன், ராஜேந்திரன் என்னும் பெருமன்னர்கள்
கல்வெட்டுக்கள் தாம் உள்ளன. ராஜராஜ சோழன் சிவபாதசேகரன் என்றழைக்கப்பட்டது போல,
ராஜேந்திரசோழன் சிவசரணசேகரன் என ழைக்கப்பட்டது தெரிவது இத்தலக்
கல்வெட்டுக்களால் தான். அவர்கள் காலத்தில் எந்தத்
தனிநபர் கல்வெட்டும் இங்கே எழுதப்படவில்லை.

(1) சித்திரை விஷு (2) தட்சிண அயனம் (3) ஐப்பசி விஷு (4) உத்தர அயனம்
என்ற வரிசைக் கிரமத்தில் வருஷத்தின் நான்கு முக்கியமான சங்கிராந்திகள் எழுதப்பட்டுள்ளது.
ராஜராஜ சோழன் ஆட்சிக் கல்வெட்டு தமிழ்வருஷப் பிறப்பு சித்திரை விஷு என்று காட்டுகிறது.
அதுவே முதல் சங்கிராந்தியாக உள்ளது, திருக்கோவில்களில் பஞ்சாங்கம் படித்தல் என்னும்
நிகழ்ச்சி நடக்கும். இந்த வருஷப் பிறப்பைத் தமிழர்கள் தென்கிழக்கு ஆசியா முழுதும்
பல்லவர் காலத்தில் பரப்பியுள்ளனர், சித்திரை விஷு, ஐப்பசி விஷு இரண்டும்
“அரைநாள்” எனச் சங்க இலக்கியம் கூறும் Equinox.
வடசெலவு = உத்தராயணம், தென்செலவு = தட்சிணாயனம்.
இவை இரண்டும் ஞாயிறு திசை திரும்புநாள்கள் (Solstcies).
    சித்திரை விஷு = Vernal Equinox
    தட்சிணாயனம் = Summer Solstice
    ஐப்பசி விஷு = Autumnal Equinox
    உத்தராயணம் = Winter Solstice
https://www.weather.gov/cle/Seasons
https://www.youtube.com/watch?v=SCm5ws87uyY

இக் கல்வெட்டுச் சான்று போலச் சில இலக்கியச் சான்றுகள் பார்ப்போம்.

நா. கணேசன்

On Thu, Jan 20, 2022 at 7:42 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
On Thu, Jan 20, 2022 at 12:52 AM Dr.Krishnaswamy Nachimuthu <tamizhkina@...> wrote:
> அன்புடையீர்,
> வணக்கம். நல்ல வரலாற்றுத் தொகுப்பு.ஆவணப்படுத்தவேண்டியது. நாம் எல்லாம் நீர் மேல் ஓடத்தில் போகிறோம் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு. வாழ்க. நன்றி
> கி.நாச்சிமுத்து

தமிழிலே ’ஃசோடியாக்’ வெகுகாலமாக உண்டு. உ-ம்: நெடுநல்வாடையில் தமிழ்ப் புத்தாண்டு பற்றிய குறிப்பில், ஆடு என 12 ராசிகளில் முதல் ராசி குறிப்பிடப்படுகிறது. ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்பது வஞ்சி மாநகருக்கு - இன்றைய கரூர் - வடநாட்டு சோதிட நிபுணர்களைக் கொணர்ந்து முதன்முதலாக, ஆண்டுக் கணிப்பை விக்கிரம சகாப்தம் வழியாக நாட்டியதால், சேர மன்னன் பெற்ற விருதுப் பெயர் என்ற விளக்கம் இருக்கிறது. ஆடு என்பது யாதவர் மேய்க்கும் ஆடு (கால்நடை) அன்று என்பது சொல்லாமலே விளங்கும். இலக்கியமாகப் பார்த்தால், கொங்கு நாட்டுப் பெரும்புலவர், சமண முனிவர் திருத்தக்க தேவர் சீவக சிந்தாமணியில் 12 ராசிகளையும், அதனால், தமிழ் ஆண்டு சித்திரையில் (ஆடு ராசி) தொடங்குவதைப் பாடல்களால் விவரித்துள்ளார். சமணர்களின் திருவள்ளுவ தேவர் என்னும் வழக்கையும், அவர்கள் தேவர் என்றாலே, வள்ளுவரைக் குறிப்பதையும் ஒப்பிடுக. ’கனலிவட்டம்’ என்று Zodiac-க்கு அழகிய கலைச்சொல் படைத்தளித்தவர் சிந்தாமணி உடையார் தாம்.
கனலிவட்டம் - தமிழில் Zodiac என்பதன் கலைச்சொல் (சிந்தாமணியில்)
https://groups.google.com/g/santhavasantham/c/-E6P993IAz8/m/0qx1ig1BAgAJ

மகர விஷு, மகர ரவி, மகர நாயறு, மகர ஞாயிறு என்றெல்லாம் சேரர், சோழர், பாண்டியர் கல்வெட்டுக்களில் ராசிப் பேரை வைத்துத் தை மாதம் குறிப்பிடப்படுகிறது. ராசிகளின் பெயர்களைக் குறிப்பிடும் கல்வெட்டுகள் எல்லாவற்றையும் முழுமையாக எழுதி, பிற்கால மூவேந்தர்களின் வானியல் ஆராயும் கட்டுரைகளைத் தமிழ் ஆசிரியர்கள் கல்லூரிகளில் எழுதவேண்டும். தொல்லியல் துறையினரும், தமிழ்  முனைவர்களும் சேர்ந்து இப்பணி செய்யின் சிறக்கும்.

மர்ரே எஸ். ராஜம்,
https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZIdjuMy.TVA_BOK_0002443/page/471/mode/2up
மகர நாயறு, மகர ஞாயிறு - கல்வெட்டுச் சான்றுகள் காண்க. ஆக, 2000 ஆண்டுகளாகத் தமிழர்கள் புழங்கிவரும், தை மாதத்திற்கான
ராசிப் பெயர் மகரம். இதனை மாற்றத் தேவையில்லை. புலவர் இ. மு. சு. பிள்ளை சுறவம் என 1950-ல் எழுதியது, மகரம் என்ற பொருள்
மறைந்த காலத்திலே ஏற்பட்டதாகும்:  http://nganesan.blogspot.com/2022/01/makaram-in-tanittamil-12-rasi-months.html

நன்றி,
நா. கணேசன்

பாரதிதாசனின் 1960களில் கருத்து மாற்றம்,
https://groups.google.com/g/santhavasantham/c/c1hlaid5pMw

காளமேகத்தின் ராசி சக்கரம் மீதான இரு வெண்பாக்கள்:
(1)
12 ராசிகளைத் தொடர்ச்சியாக ஒரே வெண்பாவில் அமைத்துள்ளார் கவி காளமேகம்:
      பகருங்கால் மேடமிட பம்மிதுனங் கர்க்க
      டகஞ்சிங்க கன்னி துலாம்விர்ச் – சிகந்த
      நுசுமகரங் கும்பமீ னம்பன்னி ரண்டும்
      வசையறு மிராசி வளம்
இங்கே, மகரம் என்று தான் தை மாதம் வருகின்றதை அவதானிக்கவும். http://nganesan.blogspot.com/2022/01/makaram-in-tanittamil-12-rasi-months.html

(2)
யாண்டு/ஆண்டு (யாட்டை < யாடு) என்பது சித்திரை முதல் நாள் (நெடுநல்வாடை, சிந்தாமணி). ஆனால், அரசர் ஆட்சிக் காலம் கணக்கிடப் பட்டமேற்ற தினத்திலும், பருவங்கள் தொடங்குதல் மழைக்காலத்
தொடக்கத்திலும், கருப்பவாசம், கருவுற்ற நாளிலிருந்தும் கணிப்பர்.

விட்டிசைத்தல் பற்றிக் கற்பிக்க நல்ல உதாரணமாக ஒரு வெண்பாத் தந்துள்ளார் கவி காளமேகம். ”ஒஓ” என்னும் மூன்றாம் அடி மூன்றாம் சீரை விட்டிசைத்து வாசிக்கவேண்டும்.
இதில் 12 மாதங்களையும் முந்நான்கு என்று பகுக்கும் முறையை ஆண்டுள்ளார்.

       முந்நான்கில் ஒன்றுடையான் முந்நான்கி லொன்றெடுத்து
       முந்நான்கி லொன்றின்மேல் மோதினான்-முந்நான்கில்
       ஒன்றரிந்தா லாகுமோ ஒஓ மடமயிலே
       அன்றணைந்தான் வாராவிட் டால்!

முந்நான்கு = 12 ராசி.
(1) மகரம் - மகரகேதனன் - மன்மதன்
(2) தனுசு
(3) கன்னி
(4) மேஷம் (ஆடு).

N. Ganesan

unread,
Jan 26, 2022, 4:46:47 AM1/26/22
to சந்தவசந்தம்
On Wednesday, January 26, 2022 at 3:16:28 AM UTC-6 தில்லைவேந்தன் wrote:
தாங்கள் கூறுவதை ஏற்கிறேன்

நன்றி

நன்றி. 2008-ம் ஆண்டிலிருந்து தமிழ் இணையத்தில் ஒரு குழப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இளவேனில் என்பது தை மாதத்தில் தொடங்குவது என்று ஆரம்பித்துள்ளனர்.
இது தை மாதம் தமிழ் புது வருஷம் என்றாக்க முயற்சிகளில் வகிபாகம் அளிக்கிறது, தமிழரின் தொன்மையான 6 பருவங்களை மாற்றும் முயற்சி ஆகும்.

இப்போதெல்லாம் வாட்ஸப் குழுக்களில் பல கக்‌ஷிக்காரர்களும், இஷ்டத்திற்கு மீம்ஸ் செய்து அனுப்புவதைக் காண்கிறோம்.
இது போல், 2008-ல் உருவானது தான் இந்த “பாரதிதாசன்” செய்யுள் எனத் தெரிகிறது: ப்ரடக்‌ஷன் புதுசு, ஏனெனில் எந்தப் பாரதிதாசன் கவிதையிலும்
இந்த யாப்பில்லா வசனம் இல்லை.


"நித்திரையில் இருக்கும் தமிழா!, 
சித்திரையல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு, 
அண்டிப் பிழைக்கவந்த ஆரியர் கூட்டம் காட்டியதே 
அறிவுக் கொவ்வாத அறுபது ஆண்டுகள் 
தரணியாண்ட தமிழருக்கு 
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!''-
(It looks this is a new writeup generated around 2008 CE, using the name of Bharatidasan.)

சித்திரை - இளவேனிலை ஆண்டுத் தொடக்கம் என 1958-ல் பாடினார் புரட்சிக்கவி. 1960-களில் தை புது வருஷம் என்று பாடுகிறார்.
இம்மாற்றம் காரணம் என்ன? ஆராய்வோம்.

நா. கணேசன்

பாரதிதாசன் அறிஞர்களைக் கேட்டுள்ளேன். தெரிந்தோர் கூறினால் நன்றி.
தமிழ்நாட்டு அரசாங்கம் முதலில் மஞ்சப் பைகளில் ’தமிழ்ப் புத்தாண்டு’ எனத் தைப் பொங்கல் இலவசம் வழங்கும் பைகளை அச்சடித்தது. பின்னர் ’தமிழர் திருநாள்’ எனத் திருத்தி வெளியிட்டது. திமுக-காங்கிரஸ் கூட்டணியில் பிரமுகர்கள் வலியுறுத்தியதும் ஒரு காரணம் என்கின்றனர். சிவகங்கை எம்பி, கார்த்தி சிதம்பரம் ஏப்ரல் 14 தான் தமிழ்ப் புத்தாண்டு என ஆண்டுதோறும் வலியுறுத்தி வருகிறார்.
https://tamil.oneindia.com/news/chennai/inc-mp-karti-chidambaram-pongal-wish-mentioing-chithirai-as-new-year-netizens-criticize-445364.html

நிகழும் 2022-ம் ஆண்டு, தமிழ் புத்தாண்டு தினங்கள் விவாதத்தில் ஓர் மைல்கல். அரசாணைகள், தமிழரசு என்னும் அரசு இதழ் போன்றவற்றில் தொடராண்டு (லீனியர் ஆண்டு) எனப் பல்லாண்டுகளாக தை 1 திருவள்ளுவர் ஆண்டு கி.மு. 31-ல் தொடங்குகிறது. சங்க இலக்கியங்கள் (உ-ம்: நெடுநல்வாடை) காட்டும் சித்திரை/ஆடு (Aries) மாதம் பிறப்புநாளை, ’தமிழ்ப் புத்தாண்டு தினம்’ என கி.பி. 2022-லும் தமிழ்நாடு அரசாங்கம் விடுமுறை நாள் என அறிவித்து, 2022-ம் ஆண்டின் விடுமுறை நாள்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அரசாங்கம், பெரும்பான்மை மக்கள் கொண்டாடும் தமிழ்ப் புத்தாண்டு எனச் சித்திரை 1-ம் தேதியை ஏற்றுக்கொண்டுள்ளதைக் காட்டும் அறிக்கைகள் இவை. யூனிகோட் நிறுவனம் ISO அமைப்புடன் இணைந்து இயங்குவது. The Unicode character repertoire is synchronized with ISO/IEC 10646 (https://en.wikipedia.org/wiki/Unicode). பெரும்பான்மை எழுத்து வடிவத்தை எல்லா மொழிகளின் இலிபிகளிலும் ஏற்பதை நடைமுறையில் காணலாகும். காட்டாக, சென்னைப் பல்கலைப் பேரகராதியில் உள்ள 18 தமிழ்மெய்கள், 5 வடவெழுத்தும் தமிழ் யூனிகோட் கொண்டு வாட்ஸப், ட்விற்றர், ஃபேஸ்புக், ... இயங்குகிறது. அது போன்ற செயலாக, தமிழக அரசின் திருவள்ளுவர் தொடராண்டு, தமிழ்ப் புத்தாண்டு (ஏப்ரல் 14) அறிக்கையைக் காண்கிறேன். கேரளத்திலும், சித்திரை 1 சித்திரைக் கனி காண்பது என்று கொண்டாடப்பெறுகிறது. கொல்லம் ஆண்டு ஆவணி 1 தொடங்கும். நம் திருவள்ளுவர் ஆண்டு போன்ற லீனியர் ஆண்டு.


On Wed, Jan 19, 2022 at 12:06 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
பாரதிதாசன் பாடினதா இச் செய்யுள்?

எந்த ஆண்டு? யார் முதலில் பதிப்பித்தனர்?

"நித்திரையில் இருக்கும் தமிழா!, 
சித்திரையல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு, 
அண்டிப் பிழைக்கவந்த ஆரியர் கூட்டம் காட்டியதே 
அறிவுக் கொவ்வாத அறுபது ஆண்டுகள் 
தரணியாண்ட தமிழருக்கு 
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!''-

NATARAJAN RAMASESHAN

unread,
Jan 26, 2022, 4:51:11 AM1/26/22
to santhav...@googlegroups.com
நன்றி திரு கணேசன்
Reply all
Reply to author
Forward
0 new messages