நெஞ்சுக்கு இதமாம் நம்பிக்கை

11 views
Skip to first unread message

இமயவரம்பன்

unread,
Jun 18, 2026, 7:40:18 PM (7 days ago) Jun 18
to santhavasantham
நெஞ்சுக்கு இதமாம் நம்பிக்கை 

(பல்லவி)
நெஞ்சுக் கிதமாம் நம்பிக்கை - இருள்
… நீக்கும் ஒளியாம் நம்பிக்கை.

(அனு பல்லவி)
அஞ்சும் இதயம் அமைதியுற - வரும்
… அன்புத் துணையாம் நம்பிக்கை.

(சரணம்)
கனவுகள் பலித்திடச் சுவடுகள் பதித்திடக்
… கதவுகள் திறந்திடும் நம்பிக்கை - நம் 
மனதினில் நினைத்ததைச் செயத்துடன் முடித்திடும்
… வலிமையை வழங்கிடும் நம்பிக்கை. (1) (நெஞ்சுக்கு)

தனிமையின் சிறையினுள் தவித்திடும் உளத்தினில்
… தளர்வினைத் தடுத்திடும் நம்பிக்கை - நிதம்
கனமிகு நினைவுகள் முழுவதும் கழிந்திடக் 
… கனிவினை நிறைத்திடும்  நம்பிக்கை. (2) (நெஞ்சுக்கு)
 
மதியினில் தெளிவையும் உணர்வினில் மகிழ்வையும்
… மழையெனப் பொழிந்திடும் நம்பிக்கை - அந்த
விதியினை எதிர்த்திடும் இலக்குடன் உழைப்பவர்
… வியர்வையில் மிளிர்ந்திடும் நம்பிக்கை. (3) (நெஞ்சுக்கு)

உரைத்திடும் மொழியிலும் நினைப்பிலும் செயலிலும்
… உயிர்ப்பினை அளித்திடும் நம்பிக்கை - ஒரு
நெருப்பெனச் சுடுந்துயர் மனத்தினில் மறைந்திட   
… நிலைத்திடும் நலம்தரும் நம்பிக்கை. (4) (நெஞ்சுக்கு)

- இமயவரம்பன் 

Siva Siva

unread,
Jun 18, 2026, 9:19:41 PM (6 days ago) Jun 18
to santhav...@googlegroups.com
நம்பிக்கை தரும் பாடல்!

/ மனதினில் நினைத்ததைச் செயத்துடன் முடித்திடும்  /

I generally prefer to use மனம் - மனத்தை - மனத்தினில் etc.

மன(ம்)நினை எவற்றையும் - may also fit.

/ நிதம்  /
Does தினம் also fit here?

V. Subramanian

இமயவரம்பன்

unread,
Jun 18, 2026, 9:28:32 PM (6 days ago) Jun 18
to santhav...@googlegroups.com
Thank you!

“மனம் நினை எவற்றையும்” is a good suggestion, but I’m not sure it would be easily understood by the broader YouTube audience for whom this song is intended.

தினம் fits perfectly here. Thanks so much for the nice suggestion!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCNp-VuP72va5DdVVpRNT3ijN-TueNBmkS6Ac5maJ_gpxw%40mail.gmail.com.

Ram Ramakrishnan

unread,
Jun 18, 2026, 9:29:40 PM (6 days ago) Jun 18
to santhav...@googlegroups.com
நம்பிக்கைக்கு வரம்பில்லை. இதை உறுதிபடத் தந்தார் இமயவரம்பன். வாழ்க, வளர்க.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jun 18, 2026, at 19:40, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Jun 18, 2026, 10:33:50 PM (6 days ago) Jun 18
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. ராம்கிராம் 

இமயவரம்பன்

unread,
Jun 18, 2026, 10:35:51 PM (6 days ago) Jun 18
to santhavasantham, santhavasantham

Arasi Palaniappan

unread,
Jun 18, 2026, 11:05:57 PM (6 days ago) Jun 18
to சந்தவசந்தம்
மிக அருமை இளவலே!

--

இமயவரம்பன்

unread,
Jun 19, 2026, 5:06:20 AM (6 days ago) Jun 19
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி அண்ணலே

Parthasarathy S

unread,
Jun 19, 2026, 7:15:24 AM (6 days ago) Jun 19
to santhav...@googlegroups.com
மிக அழகாக ஆழமாக நம்பிக்கையை விதைத்துள்ளீர்! வளர்க உம் தொண்டு!

புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

--
S. Parthasarathy
 98441 24542/9980794542

இமயவரம்பன்

unread,
Jun 19, 2026, 4:55:23 PM (6 days ago) Jun 19
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
அன்பான வாழ்த்துக்கு மிக்க நன்றி, திரு. பார்த்தசாரதி.

Subbaier Ramasami

unread,
Jun 19, 2026, 11:20:08 PM (5 days ago) Jun 19
to santhav...@googlegroups.com
நம்பிக்கைப் பாடல் நயம்.

இலந்தை

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Arasi Palaniappan

unread,
Jun 20, 2026, 4:52:27 AM (5 days ago) Jun 20
to சந்தவசந்தம்
நெஞ்சுக்கு உரமூட்டும் நம்பிக்கை அபாரம்!

On Fri, 19 Jun 2026, 5:10 am இமயவரம்பன், <anandbl...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Jun 20, 2026, 5:50:00 AM (5 days ago) Jun 20
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி தலைவரே!

இமயவரம்பன்

unread,
Jun 20, 2026, 5:50:21 AM (5 days ago) Jun 20
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி அண்ணலே!

இமயவரம்பன்

unread,
Jun 20, 2026, 10:10:05 AM (5 days ago) Jun 20
to santhavasantham, santhavasantham

Ram Ramakrishnan

unread,
Jun 20, 2026, 11:13:47 AM (5 days ago) Jun 20
to santhav...@googlegroups.com
மிக, அருமை. இனிமையான பாடலைக் கேட்டு மகிழ்ந்தேன்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On 20 Jun 2026, at 10:10 AM, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:

இப்போது இப்பாடலை YouTube-லும் காணலாம்:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages