கந்தர் சஷ்டி கவசம் - பதவுரை

129 views
Skip to first unread message

Anand Ramanujam

unread,
Nov 2, 2023, 12:53:00 PM11/2/23
to santhavasantham
வணக்கம்!

முருகக் கடவுளின் புகழினை மொழியும்  "கந்தர் சஷ்டி கவசம்" என்னும் அரும்பெரும் நூலுக்குப் பதவுரை எழுத முயன்றிருக்கிறேன். அன்பர்கள் இதைப் படித்துப் பிழை பொறுத்தருளிக் கருத்துரைக்குமாறு வேண்டுகிறேன். 


திரு. அமிர்தம் சுந்தரநாதபிள்ளை அவர்கள் அருளிய  "கந்தர் சஷ்டி கவசம் – மூலமும் மெய்ப்பொருள் விளக்க விருத்தி உரையும்”  என்னும் நூலைத் தழுவி இப்பதவுரை எழுதப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

நன்றி,
இமயவரம்பன்

Ramamoorthy Ramachandran

unread,
Nov 2, 2023, 11:50:57 PM11/2/23
to santhav...@googlegroups.com
இனிய முயற்சி. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே ! வாழ்த்துகள் !
புலவர் இராமமூத்ர்த்தி 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/0B833C4A-4ACB-4FC7-B2F0-F1ADC270C892%40gmail.com.

Siva Siva

unread,
Nov 2, 2023, 11:52:03 PM11/2/23
to santhav...@googlegroups.com
Very good effort.

Is the following one the work you used as a reference?


I read a few lines in some random pages. 
I saw a minor difference in one place.

/ ஈராறு செவியில் இலகுகுண் டலமும்
 ஆறிரு திண்புயத் தழகிய மார்பில் /

Page 39-40 in that book shows 
ஈரறு செவியில் ....

Regards,
V. Subramanian


Siva Siva

unread,
Nov 3, 2023, 12:01:01 AM11/3/23
to santhav...@googlegroups.com
Suggestion:
Please add  line numbers or stanza numbers - to the verse lines.
It will make it easier to read (and also help others provide feedback easily - enabling a quick and easy reference to specific sections.
Thanks.

V. Subramanian

Anand Ramanujam

unread,
Nov 3, 2023, 6:20:26 AM11/3/23
to santhav...@googlegroups.com
Thank you!

Yes, I mainly used that pdf as my reference.

But I also checked other sources (listed below) for certain words. One such word is ‘ஈரறு’. Though this PDF says ‘ ஈரறு’, all other places including the following say ‘ஈராறு’.. Not sure which usage was found in the original text.



 
-- 
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Anand Ramanujam

unread,
Nov 3, 2023, 1:46:52 PM11/3/23
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, புலவரே!

….

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Nov 3, 2023, 7:24:01 PM11/3/23
to சந்தவசந்தம்
முருகா சரணம் 🙏🙏🙏

NATARAJAN RAMASESHAN

unread,
Nov 3, 2023, 7:57:56 PM11/3/23
to santhav...@googlegroups.com
மிகச் சிறப்பு.
Great job 

         —தில்லைவேந்தன்.

.,,,

      

On Sat, 4 Nov 2023 at 4:54 AM, தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:
முருகா சரணம் 🙏🙏🙏

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Anand Ramanujam

unread,
Nov 3, 2023, 8:11:17 PM11/3/23
to santhav...@googlegroups.com

lns2...@gmail.com

unread,
Nov 3, 2023, 9:59:53 PM11/3/23
to சந்தவசந்தம்
Very nice,

Srini

VETTAI ANANTHANARAYANAN

unread,
Nov 3, 2023, 10:11:12 PM11/3/23
to santhav...@googlegroups.com
 முருகன் அடியார்களுக்கு மிக்கப் பயன் தரும் தொண்டு. 

அனந்த் 

செளவும் = செளவும்; சௌ என்பது சௌபாக்கியம் என்பதன் சுருக்கம். சுமங்கலிகளைக் குறிக்கப் பயன்படும் அடைமொழி.

On Thu, Nov 2, 2023 at 12:53 PM Anand Ramanujam <anandbl...@gmail.com> wrote:
--

Anand Ramanujam

unread,
Nov 4, 2023, 12:01:40 PM11/4/23
to santhav...@googlegroups.com
Thank you! 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Anand Ramanujam

unread,
Nov 4, 2023, 12:03:25 PM11/4/23
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. அனந்த்!

“செள” பற்றிய குறிப்புக்கு நன்றி!


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

N. Ganesan

unread,
Aug 7, 2024, 9:11:53 PM8/7/24
to santhav...@googlegroups.com

சிறப்பு. நூலின் தொடக்கத்திலேயே தாம் திருமேனி தொட்டுப் பூசை செய்யும் சென்னிமலை ஆண்டவரை "சிரகிரி முருகன் சீக்கிரம் வருக" என்று முன்னிலைப் படுத்துகிறார். கோடானுகோடி மக்களின் இதயங்கவர்ந்த எளிய, மந்திரார்த்தம் நிறைந்த, பாடல் கந்தசஷ்டி கவசம். 17-ம் நூற்றாண்டில் சென்னிமலைக் குருக்கள் பாடிய இக் கவசம் பற்றி "பத்தொன்பதாம் நூற்றாண்டு நூல்!! மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை நண்பர் (பெங்களூர் வாணிபச் செல்வர்) பாடியது" என்றெல்லாம் பல பிழைபட்ட செய்திகள் உலவிக்கொண்டிருந்தன.  கவசத்தில் எல்லா உடல் அங்கங்களையும் காக்கச் சொல்வதுபற்றி அவதூறுகள் வந்தன. பக்தகோடிகளின் கடுமையான எதிர்ப்பும் உருவானது. அப்பொழுது கந்த சஷ்டி கவசம் ஆசிரியர் யார் என்றும், அவரது காலத்தையும் பற்றி எழுதினேன். 2020 கட்டுரை இணைத்துள்ளேன். பலர் பாராட்டி எழுதினர். தமிழில் உள்ள மந்திர நூல்களில் மிகப் பிரபலமானதற்கு ஆசிரியர் ஊர், காலம் முதலியவற்றை விளக்கியதில் மகிழ்ச்சி. 2009-ல் திரு. சு. பசுபதி அவர்களுக்கு முக்கியமான முருகடியார்கள் பற்றிய விருத்தம் ஒன்றை விளக்கியிருந்தேன். சரியான பொருளைச் சொல்லியமைக்கு நன்றி தெரிவித்திருந்தார், https://groups.google.com/g/santhavasantham/c/sTXzmy0cRko/m/O8vmcq9tmqoJ
பேரா. சு. பசுபதி மேற்கோள் காட்டிய பாடல் இந்தச் சர்ச்சையில் காட்டியிருந்தேன். அப்பாடல் ஆசிரியர் பேரன், முனைவர் சபாரத்தினம் கோவையில் இருந்து வாழ்த்து அனுப்பினார். 16-ம் நூற்றாண்டு தமிழ் இலக்கிய வரலாற்றில், மு. அருணாசலம் (திருச்சிற்றம்பலம், மயிலாடுதுறை) கந்த சஷ்டி கவசம் பற்றி எழுதியுள்ளார். எல்லாவற்றுக்கும் மேலே, புலவர் செ. இராசு அளித்த கல்வெட்டுச் சான்றுகள் முக்கியமானவை.

சென்னிமலைக் குருக்கள் தேவராய பண்டிதர் செய்த கந்தசஷ்டிக் கவசம் (17-ம் நூற்றாண்டு):
https://nganesan.blogspot.com/2020/07/chennimalai-devarayar-kandasashti.html

முக்கியக் குறிப்பு: வலையப்பேட்டை ரா. கிருஷ்ணன் அவர்கள் விகடன் பிரசுரமாக, “முத்தமிழ் முருகனின் அற்புதத் தொண்டர்கள்“ என்ற நூலை எழுதியுள்ளார். அதில் உ.வே. சாமிநாதையரின் ஆசிரியர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் நண்பர்/மாணவர், பெங்களூர் வணிகர் தேவராசபிள்ளை வரலாற்றை, இந்தச் சிவாச்சாரியர் தேவராயசுவாமிகள் எனக் கருதி எழுதிவிட்டார். இருவரும் வெவ்வேறானவர்கள். கந்தசஷ்டிக் கவசம் வல்லூர் தேவராசபிள்ளைக்கு இரண்டு நூற்றாண்டு காலத்தால் முற்பட்டது.

சிவராத்திரித் தேவையிதெனச் சீட்டுக்கவி:
https://nganesan.blogspot.com/2009/07/chittukkavi.html

எளிய நூலுக்கும் கோடிக்கணக்கான பக்தர்களுக்கு உதவும் வகையில் சிலர் உரை செய்துள்ளனர். சுந்தரநாதர் தவிர, மேலும் உரைகள் உண்டு.

 தேவராய சுவாமிகள் அருளிய ஶ்ரீ கந்தர் சஷ்டிக் கவசம்.
வித்துவான் ஈக்காடு சபாபதி முதலியார் எழுதிய பதவுரையுடன்.
சில ஆண்டு முன் ஆஸ்திரேலியத் தமிழர் கோயில் தளத்தில் கண்டேன்.
உங்கட்கு உபயோகம் ஆகலாம்.
https://archive.org/details/kanthasashtikavasam

இன்னும் சிலரும் எழுதியுளர். தேடவேண்டும்.
(1)
https://ta.wikisource.org/wiki/தமிழ்ச்_சொல்லாக்கம்/தமிழ்ச்_சொல்லாக்கம்
நூல் : கந்தர் சஷ்டி கவசம் மூலமும் உரையும் (1921 பக்கம் 24)
நூலாசிரியர் : மதுரை ஜில்லா, செம்பூர் - வித்வான் வீ. ஆறுமுகஞ் சேர்வை.
(2)
https://ta.wikisource.org/wiki/ஆறுமுகமான_பொருள்/கந்த_சஷ்டி_கவசம்_முன்னுரை
தொ. மு. பாஸ்கரத் தொண்டமான்
"ஆண்டு தோறும் திருச் செந்தூரில் கந்த சஷ்டி விழா சிறப்பாக நடைபெறும். அங்கு ஆறு நாளும் உண்ணாவிரதம் இருந்து நோன்பு நோற்பவர்களும் அநேகர். இவர்களில் பலரும் கந்தர் சஷ்டி கவசத்தைப் பாராயணம் பண்ணிக் கொண்டிருப்பர். ஆனால் பலருக்குப் பொருள் விளங்கியிருக்காது. நம்பிக்கையோடு செய்யும் பிரார்த்தனையாக இருக்கும். மாணிக்கவாசகர் சொன்னதுபோல் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லவும் தெரிந்து கொண்டோமானால் சிறப்பாக இருக்கும் அல்லவா. நானறிந்த மட்டில் இக் கவசத்திற்கு இதுவரையாரும் உரை எழுதியதாகத் தெரியவில்லை. இந்தக் குறையை நிவர்த்தி செய்கிறார் நண்பர் திரு. P.A. நடேசபிள்ளை அவர்கள். இதனை அச்சிட்டு இலவசமாகவே வழங்க முன்வருகிறார். இவர்களது பணி சிறக்க என்று வாழ்த்துகின்றேன். "
(3)
 Skanda Sasti Kavacham - Pujyasri Swami Omkarananda - Vedapuri சுவாமி ஓங்காரானந்தர் சுவாமி சித்பவானந்தரின் சீடர். இரு செம்மொழிகளின் உச்சரிப்பும் அருமை. கொரான நச்சிலால் மறைந்துவிட்டார்.
https://www.youtube.com/watch?v=4-UrDnHvigM&list=PL3wdgvULoHmdIblBjh3N7NCRvbBMEpIyv

(3) கந்தர் சஷ்டி கவசம், சுகி சிவம், ஸன் ரிவி.
https://www.youtube.com/watch?v=hDsf_iSdOwc  பகுதி 1.
https://www.youtube.com/watch?v=0fDgknCKIGs  பகுதி 2.
https://www.youtube.com/watch?v=NCLeeQuNRM4 பகுதி 3.
https://www.youtube.com/watch?v=CKQE_th0akM  பகுதி 4.

சுகி சிவம் - கவசம் அவதூறு சர்ச்சையின் போது பேசிய பேச்சு:
https://youtu.be/GgZpIdwwN7o
சாவித்திரி கண்ணன் கட்டுரை:  https://desiyamurasu.com/expand-your-knowledge/kandha-sashti-kavasam-controversy/

அரிய காணொளி - சூலமங்கலம் சோதரியர்
https://www.youtube.com/watch?v=_nxx7y-vazw

பிற பின்!
NG

நன்றி,
இமயவரம்பன்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages