kumaraguruthasar-pamban swamigal

175 views
Skip to first unread message

SUBBAIER RAMASAMI

unread,
Mar 4, 2009, 10:12:41 AM3/4/09
to சந்தவசந்தம், elan...@yahoo.com, kavim...@yaoo.co.in

குமரகுருதாசர்- பாம்பன் சுவாமிகள்

 

இவனைநான் விடமாட்டேன், இவனன்றி வேறெவரும் என்னுள் வந்தால்

அவனைநான் தொடமாட்டேன், அபயமெனத் தொழமாட்டேன், அவனை என்றன்

இவனேயாய்ப் பாவிப்பேன், இவன்வடிவில் சேவிப்பேன், உறுதி என்றும்

தவறாத குமரகுரு தாசன்நான், சாமியவன் சத்தி யந்தான்.

 

என்றுமனம் கொண்டுபுகழ் வென்றுகவி பாடியவர் இனிய சித்தர்

குன்றுவளர் வடிவழகன் குமரனடி  போற்றியவர், கொள்கை வீரர்

தின்றுவிட வருகொடிய பிணிகளையும் ஒருநொடியில் சிதறச் செய்து

நன்றுபுரி  முருகனவன் அருள்மழையில் நனைந்ததவ , ஞானி, மேதை.

 

வேறு

 

திருவான்மி யூரிலொரு குருவாக வேயருள்

`செய்திடும் ஞான மூர்த்தி

தேடரிய தெய்வதம் ஓடிவந் தேயணி

செய்திடப் பெற்ற கீர்த்தி

உருவேந்தி நேரிலும் அருளேந்திக் கனவிலும்

     ஒப்பற்ற வேலன் வந்தே

     ஒவ்வொரு செய்கையும் செவ்விதாய் நடைபெற

     உதவிடப் பெற்ற ஞானி

கருவேந்து குடரிலே திரியாத நிலைபெறக்

     கவிதைகள் தந்த மேதை

     கந்தனைத் தன்மனப் பந்தணை செய்தவர்

     காருண்யம் உருவானவர்

அருளாளர் திருபாம்பன் குருதாசர் பெருமானின்

     அடிமலர் போற்றி போற்றி

     ஆன்மீகம் ஓங்கவே தான்கண்ட மாமணி

     அடிமலர் போற்றி போற்றி!

 

வேறு

 

அருளுருவாய் இம்மண்ணில் தடம்பதித்த பாதம்

     அறுமுகனின் திருவருளை அளிக்கின்ற போதம்

பெரியதிருக் கையிரண்டும் பூமியினைக் காட்டும்

     பிறந்தவர்கள் உய்வடையும் பேருண்மை நாட்டும்

முருகனுறை மார்பினிலே உத்ராக்ஷ  மாலை

     முதியபிறைச் சடைமுடியோ அருள்தங்கும் சோலை

குருமுகமாய் அமர்ந்திருக்கும் திருக்கோலம் கொண்ட

     குமரகுரு தாசரடி என்றென்றும் போற்றி!

 

தொடரும்
swamigal.jpg

Pas Pasupathy

unread,
Mar 4, 2009, 1:25:49 PM3/4/09
to santhav...@googlegroups.com
அருமையாய்த் தொடங்கியுள்ளது.
 
ஒரு முறை கவிமாமணி மதிவண்ணன் பாம்பன் சுவாமிகளைப் பற்றிச் சென்னையில்  ஒரு சொற்பொழிவு செய்தார். அதன் முடிவில் என்னையும் சில வார்த்தைகள் சொல்லக் கேட்டிருந்தார். சுவாமிகளைப் பற்றி எனக்கோ அதிகம் தெரியாது; அதனால்,  நான் என் சகோதரரிடம் இருந்த சுவாமிகளின் சரித்திரத்தைப் படித்துக் கொண்டு போயிருந்தேன்.
 
மிகச் சுவையான வரலாறு.  அருணகிரிநாதரின் வாக்கைப் போலவே, மிக
சக்தி வாய்ந்த பாடல்கள் அவருடையவை என்பதை எளிதில் உணர முடிந்தது.
 
அதன்பின்னர் தான் அவருடைய சில நூல்களை வாங்கினேன்.
 
ஓய்வு பெற்ற விவேகானந்தா கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர்
ப.இராமன் அவர்களும், சிறு சிறு நூல்களாக பாம்பன் சுவாமிகளின் பல
பாடல்களுக்கு விரிவுரை எழுதி வருகிறார் என்பதையும் அறிந்தேன்.
 
 
பொதியமலை மேவு குறுமுனிவ னின்று
. புதியமணம் வீசு முருகுபுனை தொண்டன்
யதிகள் புகழ் துங்க அருணகிரி சங்கம்
. எறிகடல் மருங்கு சமரபுரி அன்பன்
துதிசெய வுகந்த சிரகிரியன் என்று
. சொலுமுனிகள் ஒன்று திரளுருவின் வந்து
குதிகொள் கலைமங்கை மகிழ்புலமை விஞ்சு
. குமரகுருதாச குருவை நினைவோமே.

-கவியரசு கு.நடேச கவுண்டர் --
 
 
உரை:
 
பொதிகை மலையில் வாழும் அகத்தியர், ஓதுந்தோறும் புதியமணம்
வீசும் திருமுருகாற்றுப்படை அருளிய நக்கீரர், துறவிகள் புகழும் தூய
அருணகிரிநாத முனீந்திரர், திருப்போரூர் சிதம்பர சுவாமிகள், இறைவனைப்
புகழ்ந்து இன்பம் கண்ட தாயுமான அடிகளார் ஆகிய ஐவரும் கூடி ஒரு வடிவம்
கொண்டாலனையரும் நாமகள் போற்றும் புலமையுடயவருமான பாம்பன் ஸ்ரீமத் குமர
குருதாச சுவாமிகளைச் சிந்திப்போமாக.
 
 
பசுபதி
4-3-09
 
 
 
 


 
2009/3/4 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>

N. Ganesan

unread,
Mar 4, 2009, 6:17:03 PM3/4/09
to சந்தவசந்தம்

தாயுமானவர் முக்கியமாய் சிவனடியார் ஆயிற்றே.

கவிராக்‌ஷஸர் நடேச கவுண்டர் சிரகிரி என்றது சென்னிமலையை.
திருப்புகழ் பெற்ற முருகன் பதி. சென்னிமலைக் குருக்கள்
தேவராய பண்டிதர் (மார்க்கண்டேய கோத்திரம்) பாடிய
கந்த சஷ்டி கவசத்தை நினைக்கிறார் கவி.

கு.ந. முருகன் மீது பாடிய கீர்த்தனைகள் தொகுக்கப்படல் வேண்டும்.
அவர் மக்கள் ந. முத்துக்குமாரசாமி, சுப்புலக்‌ஷ்மி இருவரும்
கோவையில் தமிழ்ப் பேராசிரியர்களாய்ப் பணிபுரிந்து ஓய்வு பெற்றுவிட்டனர்.

பழனி முருகன் மீது மயில் விடுதூது பெரிதாய்ப் பாடியவர் கு.ந.
தேவராயரின் சந்ததியர் மடவளாகம் இலக்குமண பாரதி
(முன்பெல்லாம் பாரதி அந்தர்களுக்குரித்து என்று ஹரிகிருஷ்ணன் அவர்களிடம்
விளக்கியிருக்கிறேன். 20-ஆம் நூற்றாண்டிலே மாறிற்று.)
பாடிய சிவமலை மயில் விடுதூது, மடவிளாகப்புராணம் எல்லாம்
அழிந்தன என்று அஞ்சுகிறேன். ஆனால் சிவமலைக் குறவஞ்சி
மிக அழகானது, இன்னும் இருக்கிறது. லட்சுமண பாரதியார்
பழையகோட்டை பட்டக்காரர் பெண்மணிக்கு சிவராத்திரித்
தேவை இதுவென விடுத்த சீட்டுக்கவி முன்புக் கொடுத்தேன்.
கூகுளப்பெருமாளை வேண்டினால் கிட்டும்.

ஆக, இரு மயில் விடு தூதுகள், ஒரு மடலில்
குறிக்க வாய்த்தது முருகருள்!

அன்பிணை,
நா. கணேசன்

> ஆகிய ஐவரும் கூடி ஒரு வடிவம்
> கொண்டாலனையரும் நாமகள் போற்றும் புலமையுடயவருமான பாம்பன் ஸ்ரீமத் குமர
> குருதாச சுவாமிகளைச் சிந்திப்போமாக.
>
> பசுபதி
> 4-3-09
>

> 2009/3/4 SUBBAIER RAMASAMI <eland...@gmail.com>
>
> > *குமரகுருதாசர்- பாம்பன் சுவாமிகள்*
>
> > * *
>
> > *இவனைநான் விடமாட்டேன், இவனன்றி வேறெவரும் என்னுள் வந்தால்*
>
> > *அவனைநான் தொடமாட்டேன், அபயமெனத் தொழமாட்டேன், அவனை என்றன்*
>
> > *இவனேயாய்ப் பாவிப்பேன், இவன்வடிவில் சேவிப்பேன், உறுதி என்றும்*
>
> > *தவறாத குமரகுரு தாசன்நான், சாமியவன் சத்தி யந்தான்.*
>
> > * *
>
> > *என்றுமனம் கொண்டுபுகழ் வென்றுகவி பாடியவர் இனிய சித்தர்*
>
> > *குன்றுவளர் வடிவழகன் குமரனடி  போற்றியவர், கொள்கை வீரர் *
>
> > *தின்றுவிட வருகொடிய பிணிகளையும் ஒருநொடியில் சிதறச் செய்து*
>
> > *நன்றுபுரி  முருகனவன் அருள்மழையில் நனைந்ததவ , ஞானி, மேதை.*
>
> > * *
>
> > *வேறு*
>
> > * *
>
> > *திருவான்மி யூரிலொரு குருவாக வேயருள்*
>
> > *`செய்திடும் ஞான மூர்த்தி*
>
> > *தேடரிய தெய்வதம் ஓடிவந் தேயணி*
>
> > *செய்திடப் பெற்ற கீர்த்தி*
>
> > *உருவேந்தி நேரிலும் அருளேந்திக் கனவிலும்*
>
> > *     ஒப்பற்ற வேலன் வந்தே*
>
> > *     ஒவ்வொரு செய்கையும் செவ்விதாய் நடைபெற*
>
> > *     உதவிடப் பெற்ற ஞானி*
>
> > *கருவேந்து குடரிலே திரியாத நிலைபெறக்*
>
> > *     கவிதைகள் தந்த மேதை*
>
> > *     கந்தனைத் தன்மனப் பந்தணை செய்தவர்*
>
> > *     காருண்யம் உருவானவர்*
>
> > *அருளாளர் திருபாம்பன் குருதாசர் பெருமானின்*
>
> > *     அடிமலர் போற்றி போற்றி*
>
> > *     ஆன்மீகம் ஓங்கவே தான்கண்ட மாமணி*
>
> > *     அடிமலர் போற்றி போற்றி!*
>
> > * *
>
> > *வேறு*
>
> > * *
>
> > *அருளுருவாய் இம்மண்ணில் தடம்பதித்த பாதம்*
>
> > *     அறுமுகனின் திருவருளை அளிக்கின்ற போதம்*
>
> > *பெரியதிருக் கையிரண்டும் பூமியினைக் காட்டும்*
>
> > *     பிறந்தவர்கள் உய்வடையும் பேருண்மை நாட்டும்*
>
> > *முருகனுறை மார்பினிலே உத்ராக்ஷ  மாலை*
>
> > *     முதியபிறைச் சடைமுடியோ அருள்தங்கும் சோலை*
>
> > *குருமுகமாய் அமர்ந்திருக்கும் திருக்கோலம் கொண்ட*
>
> > *     குமரகுரு தாசரடி என்றென்றும் போற்றி!*
>
> > * *
> > *தொடரும்*
>
>

naa.g...@gmail.com

unread,
Mar 4, 2009, 7:06:10 PM3/4/09
to சந்தவசந்தம்


கு. ந. அவர்களின் மயில் விடுதூது:
http://palani.org/mayilvidu-thoothu.htm
”I shall sing “Mayil Virutham” composed by the poet of
Annamalai (Arunagiri) praising thee. I shell sing, rejoice
and dance by reciting the Tiruvaguppu “Adhavan and Ambuli”.
I will sing in praise of thee in the fullness of heart in the
way Murugadasa sung “Mayil Alangaram”. Kumaragurudasa (Pamban
Swamigal)
the author of ‘Paripuranananda Bodham’is like the ocean of bliss
that has no bounds. He is the true jnani who wrote the
“Tagaralaya Rahasyam” and who lost his heart to Muruga.
He is the “Siddhanta Banu” who removes our inner darkness.
I shall sing his “Ponmayil Kanni” sung in praise of thee,
in chaste Tamil, capable of melting even the stony heart and
shaming the sugar-candy in sweetness.”

நடேச கவுண்டர் நிச்சயம் பாம்பனடிகளைக் கண்டு தரிசித்திருப்பார்.
(எங்கள் குடும்பகுருவாக விளங்கிய) சாது சாமிகளின் அடியாரும் கூட.
சாது சுவாமிகள் அன்னதான மடம் பழனிமலை வின்ச் ஸ்டேஷனுக்கு எதிரிலே உள்ளது.


கோ. ந. முத்துக்குமாரசுவாமி, (முன்னாள் முதல்வர், பேருர்த் தமிழ்க்
கல்லூரி)
http://www.thinnai.com/?module=displaystory&story_id=60804107&format=html

------

http://groups.google.com/group/anbudan/msg/e7942852c8b8bffc
வணக்கம். 200 ஆண்டுகளுக்கு முன் ஒரு கவிஞர்
எழுதிய சீட்டுக்கவி. மடவளாகம் இலக்குமண பாரதியார்
இப்போது புகழ்பெற்றுள்ள கந்தசஷ்டிக் கவசத்தின் ஆசிரியர்
தேவராய சாமிகளின் வழிவந்த சிவாச்சாரியர்.
அவர் விண்ணப்பிக்கும் வள்ளியம்மாள் கொங்குநாட்டில்
விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வெள்ளையர்களால்
சங்ககிரி துர்க்கத்தில் தூக்கிலிடப்பட்ட 'தீரன்' சின்னமலையின்
குடும்பத்தவர்.

அன்புடன், நா. கணேசன்,

------------------------------------------------------------------------------------------------------------------------------------

சிவராத்திரித் தேவையிதெனச் சீட்டுக்கவி

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

திருமருவு பழநிமலை முருகேசர் அரவிந்த
செங்கமல பாத தியானம்
திரிகின்ற தண்டுமிண் டுகள்கொண்ட கவிமலை
செகுத்திடச் செய்வச் சிரம்
செய்யகார் காலமழை என்னவே மதுரித
செழுந்தமிழ் கொழிக்கும் மேகம்
தென்பரவு மங்கைபுர இலட்சுமண பாரதி
தெளிந்தெழுதி விட்ட நிருபம்,

தருவுலவு காரையூர் நல்லசே னாபதிச்
சர்க்கரைமன் றாடி ராசன்
தனதுமனை யாள்இனிய கற்பினில் அருந்ததி
சமானசற் குணபூ டணி
சந்ததி நிரம்பிவளர் சிவமலைப் பல்லவன்
தந்தசீ மந்த புத்ரி
தருமமிகு பயிறகுல வள்ளிநா யகியெனும்
தாய்மனம் மகிழ்ந்து காண்க,

அருள்பரவு சிவன்உமைக் குத்திருக் கல்யாணம்
ஆனசுப தினம்நா ளையே
ஆகையால் மாங்கலிய விரதபூ சனைசெய்ய
ஆரும்ஆ தரவ றிகிலேன்
ஐந்துவள் ளப்பச்சை அரிசிபா சிப்பயறு
அதற்குள்ள மேல்முஸ் திதி
ஆவின்நெய் வெல்லம் உழுந்துபால் தயிர்வெண்ணெய்
அரியதயிர் எண்ணு கறிகாய்

மருவுலவு சந்தனம் குங்குமம் புனுகுசவ்
வாதுபரி மளமும் உனது
மருமகட் கோர்புடவை பாக்குவெற் றிலைநல்ல
வாழையிலை இவையா வுமே
வாணருக் கார்அனுப் பினதெனக் கேட்பவர்
மனதுமென் மேலும் மெச்ச
மன்னர்புகழ் சர்க்கரைத் துரைராசி தந்ததென
வரவனுப் பிடவேண் டுமே!

- மடவளாகம் இலக்குமண பாரதி (1767 -1859)


srinivasan s

unread,
Mar 4, 2009, 7:48:01 PM3/4/09
to santhav...@googlegroups.com
திரு பசுபதி அவர்களே, திரு ப.ராமன் இப்பொழுது எங்கே இருக்கிறார்? மயிலை விவேகானந்தா கல்லூரியில் அவர்கள் அடியேனது தமிழ் ஆசிரியர் - 1959-1962. அடியேனது கவிதைகளை அவரிடம் காண்பித்து சீர்செய்து கொண்டேன்.
அவரிடம் அடியேனது வணக்கங்களைத் தெரிவிக்கவும்.
அன்புடன்,
அன்பில் சீனிவாஸன்

2009/3/4 Pas Pasupathy <pas.pa...@gmail.com>
2009/3/4 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>

தொடரும் Phone No: 011-22710873
Mob:+919971079484
vasan...@gmail.com
vasan...@yahoo.com

Pas Pasupathy

unread,
Mar 4, 2009, 9:53:43 PM3/4/09
to santhav...@googlegroups.com
அன்புள்ள சீனிவாசன்,
நான் அவரை நேரில் சந்தித்ததில்லை. நான் சென்னைக்கு 5-6 ஆண்டுகளுக்கு முன் விடுமுறையில் சென்றிருந்தபோது, மதிவண்ணன் சொற்பொழிவிற்குப் பின், ராமன் (பணி ஓய்விற்குப் பின்) விவேகானந்தா கல்லூரிக்கு அருகில் தான் இருக்கிறார் என்றறிந்து, ஒருவரை ஒருநாள் அனுப்பி ஓரிரு 'பாம்பன் சுவாமிகள்' நூல்களை அவரிடம் பெற்று என் சோதரருக்குக் கொடுத்தேன். இன்னும் அவர் அங்கேதான் இருப்பார் என்று நினைக்கிறேன்.
 
நீங்கள் சென்னை சென்றால் போய்ப் பார்த்தால் நிச்சயம் மகிழ்வார்.
 
பசுபதி
4-3-09

2009/3/4 srinivasan s <vasan...@gmail.com>

Pas Pasupathy

unread,
Mar 4, 2009, 10:40:50 PM3/4/09
to santhav...@googlegroups.com


2009/3/4 N. Ganesan <naa.g...@gmail.com>


On Mar 4, 12:25 pm, Pas Pasupathy <pas.pasupa...@gmail.com> wrote:
> >
> பொதியமலை மேவு குறுமுனிவ னின்று
> . புதியமணம் வீசு முருகுபுனை தொண்டன்
> யதிகள் புகழ் துங்க அருணகிரி சங்கம்
> . எறிகடல் மருங்கு சமரபுரி அன்பன்
> துதிசெய வுகந்த சிரகிரியன் என்று
> . சொலுமுனிகள் ஒன்று திரளுருவின் வந்து
> குதிகொள் கலைமங்கை மகிழ்புலமை விஞ்சு
> . குமரகுருதாச குருவை நினைவோமே.
>
> -கவியரசு கு.நடேச கவுண்டர் --
>
> உரை:
>
> பொதிகை மலையில் வாழும் அகத்தியர், ஓதுந்தோறும் புதியமணம்
> வீசும் திருமுருகாற்றுப்படை அருளிய நக்கீரர், துறவிகள் புகழும் தூய
> அருணகிரிநாத முனீந்திரர், திருப்போரூர் சிதம்பர சுவாமிகள், இறைவனைப்
> புகழ்ந்து இன்பம் கண்ட தாயுமான அடிகளார்

தாயுமானவர் முக்கியமாய் சிவனடியார் ஆயிற்றே.

கவிராக்‌ஷஸர் நடேச கவுண்டர் சிரகிரி என்றது சென்னிமலையை.
திருப்புகழ் பெற்ற முருகன் பதி. சென்னிமலைக் குருக்கள்
தேவராய பண்டிதர் (மார்க்கண்டேய கோத்திரம்) பாடிய
கந்த சஷ்டி கவசத்தை நினைக்கிறார் கவி.//
 
 
சரியான பொருளை விளக்கியதற்கு நன்றி.
 
பசுபதி
4-3-09
 
 

 

srinivasan s

unread,
Mar 5, 2009, 2:35:06 AM3/5/09
to santhav...@googlegroups.com
தகவலுக்கு மிக்க நன்றி.
சீனிவாஸன்

2009/3/5 Pas Pasupathy <pas.pa...@gmail.com>
2009/3/4 srinivasan s <vasan...@gmail.com>
2009/3/4 Pas Pasupathy <pas.pa...@gmail.com>
2009/3/4 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>


Mayur Vihar phase - 1 Ext
Delhi - 110091

N. Ganesan

unread,
Mar 5, 2009, 3:37:40 AM3/5/09
to santhav...@googlegroups.com
On 3/4/09, Pas Pasupathy <pas.pa...@gmail.com> wrote:
> அன்புள்ள சீனிவாசன்,
> நான் அவரை நேரில் சந்தித்ததில்லை. நான் சென்னைக்கு 5-6 ஆண்டுகளுக்கு முன்
> விடுமுறையில் சென்றிருந்தபோது, மதிவண்ணன் சொற்பொழிவிற்குப் பின், ராமன் (பணி
> ஓய்விற்குப் பின்) விவேகானந்தா கல்லூரிக்கு அருகில் தான் இருக்கிறார்
> என்றறிந்து, ஒருவரை ஒருநாள் அனுப்பி ஓரிரு 'பாம்பன் சுவாமிகள்' நூல்களை அவரிடம்
> பெற்று என் சோதரருக்குக் கொடுத்தேன். இன்னும் அவர் அங்கேதான் இருப்பார் என்று
> நினைக்கிறேன்.
>
> நீங்கள் சென்னை சென்றால் போய்ப் பார்த்தால் நிச்சயம் மகிழ்வார்.
>
> பசுபதி
> 4-3-09
>

திரு. ப. ராமன் அவர்களை ஒருமுறை விவேகானந்தர்
கல்லூரியில் இருந்து கிண்டி பொறியியற் கல்லூரிக்கு
அழைத்துப் பேசச் செய்தோம். அப்போது பாம்பன்
சுவாமிகள் நூல்களை முனைவர் பட்டத்துக்கு
ஆய்வு செய்து கொண்டிருந்தார்.

----------------

மேலை நாடுகளில் உள்ள பாம்பன் சுவாகளின் பக்தர்கள்
ஒன்று செய்யலாம். சீனி விசுவநாதன் முயற்சியால்
நியூ ஜெர்சி முருகானந்தம், கபாலி, பி. கே. சிவகுமார்
(வார்த்தை என்ற மாதப்பத்திரிகை நடத்துகிறார்), நல்லி, ...
உதவி பாரதியின் எழுத்துக்கள் 9 தொகுதி காலவரிசைப்
படுத்தி அச்சாகியுள்ளன. அதுபோல, பாம்பன் சாமிகளின்
அடியார்கள் ஒரு ட்ரஸ்ட் தொடங்கி, வலைப்பக்கத்தால்
விளம்பரம் செய்து பாம்பனாரின் எல்லா பாடல், உரைநடை
நூல்களையும் வலையேற்றலாம்.

ராமலிங்கர், திருமுறைகள் இருக்கின்றன. பாம்பன் சுவாமிகள்
பாடல் இல்லை. மொத்தம் 6666 செய்யுள். முதலில்
இதைச் செய்த பின், உரைநடை நூல்கள் வலையேற்றலாம்.
அமெரிக்கா, கனடா, ... ஒரு 5.6 பேர் சேர்ந்தால்,
பாம்பன் அடியார் சங்கம், சென்னை தொடர்பு கொண்டு
இதைச் சாதிக்க முடியும். ப. ராமனையும் உறுப்பினர்
ஆக்க வேண்டலாம். காந்தளகம் சச்சிதானந்தம் போன்றோருடன்
தொடர்புகொண்டால், வலைத்தலம் அமைக்க
எத்தனை தொகை என்று காண்ட்ரேக்ட் பேசி முடிக்கலாம்.
ஒவ்வொரு நூலாக இவ்வளவு டாலர்/ரூபாய் என்று
கொடுக்கலாம். வலைத்தளத்தில் விளம்பரம் செய்தால்
நிச்சயம் சேர்ந்துவிடும்.

http://tamilmanam.net ஒரு நாளைக்கு 10,000 - 12,000 பேரால்
படிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் வலை, பதிவுகள் பற்றி
அறிமுகம் செய்யப் பயிலரங்குகள் இலவசமாய் நடத்துகிறோம்.
உ-ம்: திருச்செங்கோட்டில் கேஎஸ்ஆர் கல்லூரியில்
வரும் 14ஆம் தேதி நடப்பதை தமிழ்மணம் இடது பத்தி
உச்சியில் முகப்புப் பக்கத்தில் காட்டப்பட்டுள்ளது.
அதுபோல். பாம்பனார் நூல்கள் வலையேற்றும் திட்டம்
என்று அறிவித்தால் முருகனடியார்கள் நிதிக்கொடை
அளிப்பர் அல்லவா?

5-10 பேர் சேர்ந்து இதை முனைப்பாகச் செய்யின்
பாம்பனார் நூல்கள் யாவும் வலையில் காலமெல்லாம்
பரிமளிக்கும் - புராஜக்ட் மதுரை போன்ற தளங்களில்.
நிதி எவ்வளவு தேவை என்ற எஸ்டிமேட், அதை
வாங்க வரிச்சலுகை, சென்னையில் பாம்பனார்
புத்தகங்கள் ஏற்கெனவே டைப் ஆகியுள்ளன,
அவர்களிடம் சிடி பெறுதல், அல்லது புதிதாய்
தட்டெழுதல், மெய்ப்பு பார்த்தல், ப. ராமனிடம் ஒப்புதல்
பெறல், ....
வலைத்தள நிர்வாகம் (உ-ம்: காந்தளகம், அண்ணா சாலை,
சென்னை), .... சிலர் கூடினால் செய்துவிடலாம்.
நானும் என்னால் ஆன உதவிகளைச் செய்துதருகிறேன்.
பணம் வேண்டுமானால் அருட்செல்வர் நா. ம,
பழனி அறங்காவலர் குழு தலைவர் எஸ். வி. பாலசுப்பிரமணியம்,
... பேசலாம், அறிமுகம் செய்து கொடுக்கிறேன்.

அன்புடன்,
நா. கணேசன்

---------

naa.g...@gmail.com

unread,
Mar 5, 2009, 4:13:12 AM3/5/09
to சந்தவசந்தம்


தமிழ்இந்து வலைத்தலத்திலும் பாம்பன் அடிகள் பாடல்
இடம்பெறலாம்:
http://www.tamilhindu.com/

தமிழில் நம் கோவில்களுக்கு ஏராளமான பிரபந்தங்கள்,
தலபுராணங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகு,
அரிய செய்திகளை, வரலாறுகளைச் சொல்வன.
அவற்றில் அரசியலார், .... அக்கறையில்லை.

தமிழிந்து வலைத்தளம் நடத்துவோர், ஆதரவாளர்கள்
இதுவரை வலையுலா வராத பிரபந்தங்களை
பிழையின்றிச் சரிபார்த்து கணினி வாகனத்தில்
மின்னுலா வரச் செய்தல் வேண்டும்.
ஆன உதவிகளை அன்பர்கள் வேண்டினால் உலகெங்கும்
இருந்து உதவிகள் வரும்.

அரசோ, பல்கலைக் கழகங்களோ செய்யா. நாம் தான்
செய்யவேண்டும்.

நா. கணேசன்

SUBBAIER RAMASAMI

unread,
Mar 5, 2009, 9:28:12 AM3/5/09
to சந்தவசந்தம்

பாம்பனெனும் ஊரினிலே அவதாரம் செய்தார்

      பையனென இருக்கையிலே முதற்பாட்டு நெய்தார்

வீம்பனெனப் பிறர்கூறும் சிறப்புள்ள வண்ணம்

      வேண்டுவது முருகொன்றே என்றிடுவார் திண்ணம்

சாம்பனவன் தன்மகனோ தமிழ்மொண்டு தந்தான்

      சங்கடங்கள் அவர்பெர்றால் அவன் உள்ளம் நொந்தான்

கூம்பலிலா நெஞ்சுடைய அருளாளர் ஆன

      குமரகுரு தாசர்பதம் என்றென்றும் போற்றி

 

ஊர்பலவும் இவர்சென்றார், இவர்செல்லும் முன்னே

      உயர்முருகன் தான் சென்றான், வசதிகளைச் செய்தான்

‘கோர்ட்’டினிலே  வழக்குவர நீதிபதி இன்ன

      கூறிடுவார் கலங்காதே எனமுருகன் சொன்ன

வார்த்தைகளைக் கேட்டுமனம் புளகித்தார் அன்று

      வரலாறு கவிதைகளில் தான்படைத்தார் நன்று

கூர்மதியும் பெருந்தவமும் கொண்ட அருட் சீலர் 

      குமரகுரு தாசர்பதம் என்றென்ரும் போற்றி!

 

துறவு பெற வடிவேலன் உத்தரவு பெர்ரேன்

      தொடங்கிவிட்டேன் என்பயணம் என்றொர்பொய் சொல்ல

அறுமுகனின் கோபத்திற் காளாகிப் போனார்

      யானழைக்கும் வரைபழனி வாராதே என்றான்

முறைபடவே ஒவ்வொன்றும் அவன் ஆணை பெர்ரே

      முன்பாதை அவன்காட்டைவர்பின்னே சென்றார்

குறைவெதுவும் இல்லாத கோலங்கொள் ஞானி

      குமரகுரு தாசர்பதம் என்றென்றும் போற்றி!

 

ஆறெழுத்து மந்திரமே அவர்கண்ட வேதம்

      அவன்புகழைப் பாடுவதே அவர்கவிதைக் கீதம்

தூறெடுத்துத் தெளிவாக்கிப் பருகுவதற் கென்றே

தூயதிரு நீர்கொடுத்து பக்தியெனும் கனியின்

சாறெடுத்துத் தந்துள்ளார், நோயின்றி வாழச்

      சண்முக கவசமதை யாத்துள்ளார், செஞ்சொல்

கூறுமொழி குமரன்மொழி என உரைத்தர், ஞானக்

      குமரகுரு தாசர்பதம் என்றென்றும் போற்றி!

SUBBAIER RAMASAMI

unread,
Mar 5, 2009, 9:30:40 AM3/5/09
to சந்தவசந்தம்

பாம்பனெனும் ஊரினிலே அவதாரம் செய்தார்

      பையனென இருக்கையிலே முதற்பாட்டு நெய்தார்

வீம்பனெனப் பிறர்கூறும் சிறப்புள்ள வண்ணம்

      வேண்டுவது முருகொன்றே என்றிடுவார் திண்ணம்

சாம்பனவன் தன்மகனோ தமிழ்மொண்டு தந்தான்

      சங்கடங்கள் அவர்பெற்றால் அவன் உள்ளம் நொந்தான்

கூம்பலிலா நெஞ்சுடைய அருளாளர் ஆன

      குமரகுரு தாசர்பதம் என்றென்றும் போற்றி

 

ஊர்பலவும் இவர்சென்றார், இவர்செல்லும் முன்னே

      உயர்முருகன் தான் சென்றான், வசதிகளைச் செய்தான்

‘கோர்ட்’டினிலே  வழக்குவர நீதிபதி இன்ன

      கூறிடுவார் கலங்காதே எனமுருகன் சொன்ன

வார்த்தைகளைக் கேட்டுமனம் புளகித்தார் அன்று

      வரலாறு கவிதைகளில் தான்படைத்தார் நன்று

கூர்மதியும் பெருந்தவமும் கொண்ட அருட் சீலர் 

      குமரகுரு தாசர்பதம் என்றென்றும் போற்றி!

 

துறவு பெற வடிவேலன் உத்தரவு பெற்றேன்

      தொடங்கிவிட்டேன் என்பயணம் என்றோர்பொய் சொல்ல

அறுமுகனின் கோபத்திற் காளாகிப் போனார்

      யானழைக்கும் வரைபழனி வாராதே என்றான்

முறைபடவே ஒவ்வொன்றும் அவன் ஆணை பெற்றே

      முன்பாதை அவன்காட்ட இவர்பின்னே சென்றார்

குறைவெதுவும் இல்லாத கோலங்கொள் ஞானி

      குமரகுரு தாசர்பதம் என்றென்றும் போற்றி!

 

ஆறெழுத்து மந்திரமே அவர்கண்ட வேதம்

      அவன்புகழைப் பாடுவதே அவர்கவிதைக் கீதம்

தூறெடுத்துத் தெளிவாக்கிப் பருகுவதற் கென்றே

தூயதிரு நீர்கொடுத்து பக்தியெனும் கனியின்

சாறெடுத்துத் தந்துள்ளார், நோயின்றி வாழச்

      சண்முக கவசமதை யாத்துள்ளார், செஞ்சொல்

கூறுமொழி குமரன்மொழி என உரைத்தார், ஞானக்

      குமரகுரு தாசர்பதம் என்றென்றும் போற்றி!



Pas Pasupathy

unread,
Mar 5, 2009, 9:54:16 AM3/5/09
to santhav...@googlegroups.com
அன்புள்ள கணேசன்,
 
நான் முன்பு குறிப்பிட்ட மதிவண்ணன் சொற்பொழிவின் போது, பாம்பன் சுவாமிகளின் அன்பர்...
ஒரு வைத்தியர், பெயர் மறந்துவிட்டது ... ஒருவரைச் சந்தித்தேன். அவர்தான் பெருமுயற்சி எடுத்து
பணம் செலவழித்து, சுவாமிகளின் எழுத்துகளை, உரையுடன் பதிப்பித்து வருகிறார். இலவசமாக அவற்றைக் கொடுத்தும் வருகிறார்.
 
அவரிடம் உங்கள் கருத்துகளைப் போன்ற சிலவற்றைப் பல ஆண்டுகளுக்கு முன்பே நான் அன்று சொன்னேன்.
 
அவரும் அவற்றை ஒத்துக் கொண்டார். கூடிய விரைவில் எல்லா நூல்களுக்கும் உரை வந்துவிடும்
என்றும் சொன்னார். இப்போது முடிந்து இருக்கும் என்று நம்புகிறேன்.
கிரி டிரேடிங் போன்ற இடங்களில் சுவாமிகளின் பல பாடல்கள் இசையுடன் கிடைக்கின்றன.
சுவாமிகளின் சீடர்கள் பலர். மிகுந்த ஆர்வத்துடன் செயலாற்றி வருகின்றனர்.
 
சுவாமிகளின் சீடர்கள் , அன்பர்கள் வரிசையில்: ஸ்ரீ சுப்பிரமண்ய தாசர், சச்சிதானந்தம் பிள்ளை, திருப்பழனி சாது ஸ்ரீ தங்கவேல் சுவாமிகள், பி.மா. சோமசுந்தரனார் ..இவர்களின் பணி பற்றி நிறையப் பேசலாம்.
 
அவருடைய எல்லா நூல்களையும் கீழ்க்கண்ட முகவரியில் பெறலாம்.
 
N.ஜெயராமன்
குமரகுரு இல்லம்,
பழைய எண் 27 (புதிய எண் 130), புஷ்பாவதி அம்மாள் வீதி
மேற்கு மாம்பலம், சென்னை -600033
 
பசுபதி
5-3-09
 
 


 
2009/3/5 N. Ganesan <naa.g...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages