அதென்ன 'நல்வாழ்த்துக்கள்' ...???

322 views
Skip to first unread message

rajam

unread,
Oct 27, 2019, 5:28:27 PM10/27/19
to mintamil, வல்லமை, தமிழ் மன்றம், rajam
இது 'good wishes’ என்ற அயல்வழக்கத்தை அப்படியே உள்வாங்கி உருவாக்கிய சொல்லா அல்லது புரோட்டோ தமிழா அல்லது வேறு ஏதுமா?

அப்படீன்னா ... தீயவாழ்த்து, கெட்ட வாழ்த்து … ஏதேனும் உண்டா?

Indo-European, Proto Dravidian, Estonian, African, தனித்தமிழ், தூய தமிழ் என்று மிதக்கும் உள்ளங்களே, விடையிறுப்பீராக.

வழுவமைதிக்குத் தொல்காப்பிய நூற்பா ஒன்றை எடுத்துக்காட்டினாலும் நல்லதே!

வாழ்க தமிழ்!

ராஜம்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 27, 2019, 8:11:05 PM10/27/19
to mintamil, வல்லமை, தமிழ் மன்றம், rajam
வணக்கம் அக்கா,
நான் எனது வாழ்த்துக்களைச் சொல்லும் போதெல்லாம் “நல்வாழ்த்துகள்” என்றுதான் சொல்லி வருகிறேன்.

அரசாளுவான், பட்டுக்கிடப்பான், பாடையிலபோவான் என்ற சொற்களால் எனது தயார் திட்டுவார்கள்.  ஆனால் இவையும் வாழ்த்துச் சொற்களாகவே உள்ளன.  இவற்றைத் தீயவாழ்த்து, கெட்டவாழ்த்து எனச் சொல்வதா? அல்லது நல்வாழ்த்து எனச் சொல்வதா?

அக்கா அவர்களுக்குத் தீபாவளி நல்வாழ்த்துகள்.

அன்புடன் 
தம்பி
காளை

-- 

rajam

unread,
Oct 27, 2019, 9:19:39 PM10/27/19
to kalair...@gmail.com, mintamil, வல்லமை, தமிழ் மன்றம், rajam
காசிஶ்ரீ முனைவர் தம்பி காளைராசனவர்களுக்கு வணக்கம். தீபாவளி வாழ்த்துக்கு மிக்க நன்றி. 

‘வாழ்த்து' என்று ஒருமையில் சொன்னாலே போதுமென்று நான் ஒருமையைப் பயன்படுத்துவேன்.

உங்கள் தாயாரின் திட்டுமொழியை ‘வசைமொழி’ என்று சொல்லத்தோன்றுகிறது. 

தீபாவளி/பொங்கல்/பிறந்தநாள்/திருமண/ … வாழ்த்து என்று சொன்னாலே என் தமிழ் அமைதிகொள்கிறது.

ம்ம்ம் … தொல்காப்பியத்தைப் புரட்ட நேரம் கிடைக்கவில்லையா! பணி ஓய்வு பெற்றபின் வேறு என்ன வேலையோ? ;-)

பேரப்பிள்ளைகள் நலமா? என் ‘சமணப்பேரர்’ இப்போது கோட்டும் சூட்டுமாக உலவிக்கொண்டிருக்கும் விடலையாக வளையவந்துகொண்டிருப்பார் என்று நினைக்கிறேன்.

எல்லாருக்கும் என் அன்பும் ஆசியும்,
ராஜம் அக்கா

கந்தன் சாமி சத்திவேல்

unread,
Oct 27, 2019, 10:34:02 PM10/27/19
to mint...@googlegroups.com
"வாழிய நலனே, வாழிய நலனே"  என நம் வழக்கப்படி வாழ்த்தலேமே. ( நன்று ஆகுக்) 

திங்., 28 அக்., 2019, முற்பகல் 2:58 அன்று, rajam <ra...@earthlink.net> எழுதியது:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/BB6E8F22-A1CC-428C-B812-32ED8BC8D15A%40earthlink.net.

kanmani tamil

unread,
Oct 27, 2019, 10:57:30 PM10/27/19
to mintamil
சுபாவமாகக் காலை வணக்கம்; மாலைவணக்கம்; என்று சொல்லித் தமிழை வாழவைக்கும் நம் உடன்பிறவாச் சகோதரத் தமிழார்வலர்கள் மனம் நிறையப் பயன்படுத்துவதைப் பார்த்து நானும் அப்படித்தான் அம்மா பழகி விட்டேன். 

நம் வரலாறு   கொண்டுவந்து சேர்த்த சொத்துக்களுள் ஒன்று இந்த 'நல்வாழ்த்துக்கள்' என்று சொல்லலாம் அல்லவா அம்மா. 

மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்து அம்மா.   
சக 
கைபேசியிலிருந்து....... 

வேந்தன் அரசு

unread,
Oct 27, 2019, 11:45:01 PM10/27/19
to vallamai, mintamil, தமிழ் மன்றம், rajam
திங்., 28 அக்., 2019, முற்பகல் 2:58 அன்று, rajam <ra...@earthlink.net> எழுதியது:
வாழ்க தமிழ்!

செழிப்புடன் வாழ்க தமிழ். 

nkantan r

unread,
Oct 28, 2019, 12:18:39 AM10/28/19
to மின்தமிழ்
தமிழறியான் (பேச, படிக்க, எழுதத் தெரிந்த, சாதாரண த் தமிழன் என்ற அளவில்) கருத்து:

'கள்' விகுதி பற்றி பலரும் பேசியுள்ளனர். மீண்டும் மீண்டும் மனதில் வாழ்த்தினால்? பலகோடி நமஸ்காரங்கள் போலவே.. பலகோடி வாழ்த்து(கள்). 'க்' வருமா என்பதும் சர்ச்சையே.

வாழ் எனச் சொல்வது வாழ்த்து. பன்முறைச் சொன்னால் வாழ்த்துகள். நன்றாய்ப் பெருகி வாழச் சொல்வது நல்வாழ்த்து.நாசமாய்ப் போகச் சொன்னால் வசை.

மொழி மக்களைப் பின்தொடரும். மக்களுக்காக மொழி. மொழிக்காக மக்களில்லை. தற்கால த் தமிழ்க்கு தொல்(பண்டைய)காப்பியம்/லக்ஷணம்/இலக்கணம் அளவுகோலா?

வாழ்த்து, வாழ்த்துகள், நல்வாழ்த்துகள் நன்றே.

rnk

கந்தன் சாமி சத்திவேல்

unread,
Oct 28, 2019, 12:38:36 AM10/28/19
to mint...@googlegroups.com
"நாவுக்கு நன்றல்ல வசை" என்பார் பிறரும்.

திங்., 28 அக்., 2019, முற்பகல் 9:48 அன்று, nkantan r <rnka...@gmail.com> எழுதியது:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 28, 2019, 1:27:18 AM10/28/19
to rajam, mintamil, வல்லமை, தமிழ் மன்றம்
வணக்கம் அக்கா.

On Mon, 28 Oct 2019 at 06:49, rajam <ra...@earthlink.net> wrote:
காசிஶ்ரீ முனைவர் தம்பி காளைராசனவர்களுக்கு வணக்கம்.
பிறக்கும்போது காசிஸ்ரீ முனைவர் எல்லாம் கிடையாது.  ஆனால் ‘தம்பி’ என்ற அன்புநிறைந்த அக்கா செகதாம்பாள் அவர்களின் அழைப்பைக் கேட்டுள்ளேன்.  அருள்மிகு திருப்பூவணனையும் மின்னாளையும் வணக்கும்போதெல்லாம் அக்கா ராஜம் அவர்களது நினைவு எனக்கு வந்து விடும்.

தீபாவளி வாழ்த்துக்கு மிக்க நன்றி. 

‘வாழ்த்து' என்று ஒருமையில் சொன்னாலே போதுமென்று நான் ஒருமையைப் பயன்படுத்துவேன்.

உங்கள் தாயாரின் திட்டுமொழியை ‘வசைமொழி’ என்று சொல்லத்தோன்றுகிறது. 

தீபாவளி/பொங்கல்/பிறந்தநாள்/திருமண/ … வாழ்த்து என்று சொன்னாலே என் தமிழ் அமைதிகொள்கிறது.

ம்ம்ம் … தொல்காப்பியத்தைப் புரட்ட நேரம் கிடைக்கவில்லையா! பணி ஓய்வு பெற்றபின் வேறு என்ன வேலையோ? ;-)

பேரப்பிள்ளைகள் நலமா? என் ‘சமணப்பேரர்’ இப்போது கோட்டும் சூட்டுமாக உலவிக்கொண்டிருக்கும் விடலையாக வளையவந்துகொண்டிருப்பார் என்று நினைக்கிறேன்.

ஆமாம் அக்கா.
சமணப்பேரர் இருவரும் தமிழில் திருக்குறளையும், வடமொழியில் கீதையையும் பயின்று வருகின்றனர். 

எல்லாருக்கும் என் அன்பும் ஆசியும்,
🙏

N. Ganesan

unread,
Oct 28, 2019, 4:27:31 AM10/28/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
On Sun, Oct 27, 2019 at 7:57 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
சுபாவமாகக் காலை வணக்கம்; மாலைவணக்கம்; என்று சொல்லித் தமிழை வாழவைக்கும் நம் உடன்பிறவாச் சகோதரத் தமிழார்வலர்கள் மனம் நிறையப் பயன்படுத்துவதைப் பார்த்து நானும் அப்படித்தான் அம்மா பழகி விட்டேன். 

நம் வரலாறு   கொண்டுவந்து சேர்த்த சொத்துக்களுள் ஒன்று இந்த 'நல்வாழ்த்துக்கள்' என்று சொல்லலாம் அல்லவா அம்மா. 

"கடிசொல் இல்லை காலத்துப் படினே"  (தொல்.)

அனைவர்க்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்!
நா. கணேசன் 
(சுபாவம் - கண்ணதாசன் அடிக்கடி பயன்படுத்திய சொற்களில் ஒன்று.)
 
Velmurugan Subramanian

unread,
Oct 28, 2019, 4:06:02 PM10/28/19
to tamil...@googlegroups.com, mintamil, வல்லமை, rajam
அன்புள்ள அம்மா,

நற்றமிழும் நல்வாத்தும் ஒரே இலக்கணத்திற்கு உட்பட்டவை என்று கருதி எழுதுகிறேன்.  

இலக்கணவழியிற்பார்த்தால்,

நன்மை + வாழ்த்து =  நல் +  வாழ்த்து =  நல்வாழ்த்து

என  பண்புப்பெயர்ப்புணர்ச்சியால் விழைந்தது இச்சொல் என்பது என் புரிதல்

ஆக,
நன்மைபொருந்திய வாழ்த்து / நன்மையான வாழ்த்து என விரிவடையும்!

++++

நேரடியாகப்பார்த்தாலுங்கூட,

வஞ்சப்புகழ்ச்சியின்போது நன்மைபொருந்தாத வாழ்த்தும் இருக்கமுடியும் என்பதால் எனக்கு நல்வாழ்த்து என்பது பிழையாகப்படவில்லை.

நன்றி
வேல் 

ஞாயி., 27 அக்., 2019, பிற்பகல் 2:28 அன்று, rajam <ra...@earthlink.net> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/BB6E8F22-A1CC-428C-B812-32ED8BC8D15A%40earthlink.net.

rajam

unread,
Oct 28, 2019, 10:22:57 PM10/28/19
to Velmurugan Subramanian, தமிழ் மன்றம், mintamil, வல்லமை, rajam
வணக்கம் வேல்முருகன். நல்ல சுருக்கமான நேரிடையான பதிவுக்கு நன்றி.

'நல்வாழ்த்து’ என்பது நன்மை பொருந்திய வாழ்த்து என விரிவடையும் எனக்கொள்வதில் தவறேதும் இல்லை. 

///வஞ்சப்புகழ்ச்சியின்போது நன்மைபொருந்தாத வாழ்த்தும் இருக்கமுடியும் என்பதால் எனக்கு நல்வாழ்த்து என்பது பிழையாகப்படவில்லை. /// 

வாழ்த்து என்பதும் புகழ்ச்சி என்பதும் ஒரே பொருள் கொண்டவையல்ல. வாழ்த்து வேறு, புகழ்ச்சி வேறு. 

++++++++++ 

நல்வாழ்த்து என்று ஏன் நல் என்ற அடைமொழி கொடுத்துச் சிறப்பித்துச் சொல்லவேண்டும்? என்பதுவே என் கேள்வி.

தீய/கெட்ட வாழ்த்து என்பதிலிருந்து வேறுபடுத்திக் காட்டவா? 

இந்தக் கேள்விக்கு … முறையாகத் தமிழ் இலக்கணம் பயின்றவர்களிடமிருந்து விடையை எதிர்பார்த்தேன்/எதிர்பார்க்கிறேன்.

++++++++++

பார்ப்போம், யாராவது தொல்காப்பியத்தைப் புரட்டிப் பார்க்கிறார்களா என்று. ;-)

[குறிப்பு: சென்றமுறை, வெள்ளரிக்காய் என்ற சொல்லைப் பற்றிக் கேட்டபோது … திருத்தம் பொன் சரவணன் அவர்கள் 'வண்ணச்சினைச்சொல்’ பற்றிய தொல்காப்பிய நூற்பாவைக் கண்டுபிடித்துவிட்டார்! அதேபோல இம்முறையும் … யாராவது … நல்~தீய/கெட்ட என்ற இணையில்லாமையைக் கண்டுகொள்கிறார்களா என்று அறிய ஆவல், அவ்வளவே!]

அன்புடன்,
ராஜம் 

Velmurugan Subramanian

unread,
Oct 28, 2019, 10:38:33 PM10/28/19
to rajam, தமிழ் மன்றம், mintamil, வல்லமை
நன்றியம்மா!

ஓ!  வாழ்த்துவதைப்போன்று தூற்றுவதும்[?]  வஞ்சப்புகழ்ச்சியணியின்கீழ் வரும் என்று எண்ணி அக்கருத்தை இட்டிருந்தேன்.

ஒருவேளை, வாழ்த்து என்பதற்கு எதிர்ச்சொல்லே கிடையாதோ? அருள்கூர்ந்து விளக்குங்கள்.

புகழ் X இகழ்
போற்று X தூற்று
வாழ்த்து X ?

உங்கள் கேள்வியின் நுணுக்கம் இப்போதுதான் புரிகிறதுபோலும்! :-)

-வேல் 

திங்., 28 அக்., 2019, பிற்பகல் 7:22 அன்று, rajam <ra...@earthlink.net> எழுதியது:

தேமொழி

unread,
Oct 28, 2019, 11:28:07 PM10/28/19
to மின்தமிழ்

On Monday, October 28, 2019 at 7:38:33 PM UTC-7, Velmurugan Subramanian wrote:
நன்றியம்மா!

ஓ!  வாழ்த்துவதைப்போன்று தூற்றுவதும்[?]  வஞ்சப்புகழ்ச்சியணியின்கீழ் வரும் என்று எண்ணி அக்கருத்தை இட்டிருந்தேன்.

ஒருவேளை, வாழ்த்து என்பதற்கு எதிர்ச்சொல்லே கிடையாதோ? அருள்கூர்ந்து விளக்குங்கள்.

புகழ் X இகழ்
போற்று X தூற்று
வாழ்த்து X ?

வாழ்த்து  எதிர்ச்சொல் வீழ்த்து வராதா 

வாழ்க  x ஒழிக  

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram+unsubscribe@googlegroups.com.

rajam

unread,
Oct 28, 2019, 11:34:30 PM10/28/19
to Velmurugan Subramanian, rajam, தமிழ் மன்றம், mintamil, வல்லமை
அன்புள்ள வேல்முருகன்,

வாழ் என்பதுக்கு எதிர்ச்சொல்லாக வீழ் என்பதை நினைத்துப் பார்க்கலாமே. ஆனால் இந்த என் குறிப்பு வேர்ச்சொல் ஆய்வாளரைப் புகுந்து விளையாடத் தூண்டிவிடும். அது எனக்குப் பிடிபடாது!

தொல்காப்பியம் பார்க்கவும் — இணையில்லாத, இனச்சுட்டு இல்லாத … சொற்களைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறது என்று. ;-)

ஆர்வத்துடன்,
ராஜம்

nkantan r

unread,
Oct 28, 2019, 11:39:11 PM10/28/19
to மின்தமிழ்
Quote:

இந்தக் கேள்விக்கு … முறையாகத் தமிழ் இலக்கணம் பயின்றவர்களிடமிருந்து விடையை எதிர்பார்த்தேன்/எதிர்பார்க்கிறேன்.
----
Naturally i am not expected to continue!
Still...
-----
Quote:

இம்முறையும் … யாராவது … நல்~தீய/கெட்ட என்ற இணையில்லாமையைக்(sic) கண்டுகொள்கிறார்களா என்று அறிய ஆவல்,

Probably எதிர்மறை?

வாழ்த்து என்பதற்கு குணம் கிடையாது. (புகழ்ச்சி x இகழ்ச்சி, போற்று x தூற்று, நல் x தீய...)

கடவுள் வாழ்த்து உண்டு, தெய்வம் வாழ்த்தல் உண்டு...

மரம் போல்... வேப்பம், மா என்றெல்லாம் உண்டு. ஆனால் நெடுமரம் என்று குணம் சேர்த்துச் சொன்னால்..

அதுபோலவே வாழ்த்துடன் நல் எனும் குணம் சேரும்.

தீய வாழ்த்து? வசையே! நந்திக்கலம்பகமே.
-----

தாங்கள் சீதாம்மாவுக்கு சொன்ன வாழ்த்து:
Quote:இனிய பிறந்தநாள் வாழ்த்து, சீதாம்மா.

இந்த இனிய பிறந்தநாளுடன் சேரா. வாழ்த்துடன் சேரும். 'இனியவாழ்த்து'
அதுபோலவே வாழ்த்துடன் நல் எனும் குணம் சேரும். ' நல்வாழ்த்து'

-
இனி முறையாகத் தமிழ் பயின்றவர் எழுதுவர், தொல்காப்பியத்துள் குணம், இணை, நல், வாழ்த்து, என சலிக்கத்(no pun intended) தொடங்குவர்!

rnk

N. Ganesan

unread,
Oct 29, 2019, 1:08:32 AM10/29/19
to மின்தமிழ், vallamai
On Mon, Oct 28, 2019 at 8:28 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
வாழ்த்து  எதிர்ச்சொல் வீழ்த்து வராதா 

வாழ்த்துப்பாடுதல் - இதன் எதிர்ச்சொல் அறம்பாடுதல்.

அறுத்தல் (அறம்) - சாய்த்தல் - வீழ்த்தல். நந்திக்கலம்பகம் அறம்பாடிய நூல்.

நா. கணேசன்

Velmurugan Subramanian

unread,
Oct 30, 2019, 12:32:59 AM10/30/19
to rajam, தமிழ் மன்றம், mintamil, வல்லமை
அன்புள்ள அம்மா,

எனது முயற்சி ... உங்களின் குறிப்புகொண்டு தேடிப்பார்த்தேன்! பிழையிருந்தால் பொறுத்தாற்றுக!

இனச்சுட்டு இல்லாப் பண்புகொள் பெயர்க்கொடை  
வழக்காறு அல்ல செய்யுள் ஆறே

-வேல் 

திங்., 28 அக்., 2019, பிற்பகல் 8:34 அன்று, rajam <ra...@earthlink.net> எழுதியது:

rajam

unread,
Oct 30, 2019, 1:05:49 PM10/30/19
to Velmurugan Subramanian, தமிழ் மன்றம், mintamil, வல்லமை
வாழ்க வேல்முருகன்! வளர்ந்து செழிக்க வேல்முருகனின் தமிழார்வம்!

பாராட்டுடன்,
ராஜம்

Velmurugan Subramanian

unread,
Oct 31, 2019, 3:01:20 PM10/31/19
to rajam, தமிழ் மன்றம், mintamil, வல்லமை
மிக்க நன்றியம்மா. 
உங்களின் கேள்வி எனக்கு இப்போது விளங்கிற்று! "நல்" தேவையில்லாதது என்பது புரிந்தது.

நன்றி
வேல்

புத., 30 அக்., 2019, முற்பகல் 10:05 அன்று, rajam <ra...@earthlink.net> எழுதியது:

N. Ganesan

unread,
Nov 1, 2019, 5:19:41 AM11/1/19
to மின்தமிழ், வல்லமை
On Thu, Oct 31, 2019 at 12:01 PM Velmurugan Subramanian <hen...@gmail.com> wrote:
மிக்க நன்றியம்மா. 
உங்களின் கேள்வி எனக்கு இப்போது விளங்கிற்று! "நல்" தேவையில்லாதது என்பது புரிந்தது.

வாழ்த்து என்பதற்கு இனச்சுட்டு இருக்கிறதே. பேரா. அ. ச. ஞானசம்பந்தன் போன்றோர் நூல்களில்
நல்வாழ்த்து காண்கிறோம். இனச்சுட்டு இருப்பதாலா?

நன்றி,
நா. கணேசன்
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAJJo3cbkoX1pGBKryiWAODYmMwJooQq4ZJ9B6d98GyzX1wOSPw%40mail.gmail.com.
Reply all
Reply to author
Forward
Message has been deleted
0 new messages