கொங்கு நாட்டில் பறையர் ஆற்றிய கோயில் திருப்பணிகள்

76 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Apr 11, 2019, 12:45:08 AM4/11/19
to seshadri sridharan


கொங்கு நாட்டில் பறையர் ஆற்றிய கோயில் திருப்பணிகள் 

 

கொங்கு நாடு கன்னியாகுமரி போலவே தனக்கெனத் தனிவரலாறு கொண்டிருந்ததானது அங்கத்து கல்வெட்டுகளால் அறிய முடிகின்றது. கொங்கு சோழர் காலத்தில் இங்கு கோயில் இயக்கம் தொடங்கியது முதல் அவர் உத்தாரம் (support) பெற்று நல்லமுறையில் கோயில் இயக்கம் எடுத்துச் செல்லப்பட்டதைக் கல்வெட்டுகளில் காண முடிகின்றது. இவற்றில் வெள்ளாளர் குழுக்களாக, கூட்டமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அதிகாரப் பொறுப்பில் இருந்த வெள்ளாளரிடம் பறையர் காவற் பணியில் இருந்ததை கல்வெட்டுகளால் அறிய முடிகின்றது. இப்பறையர்கள் இங்கத்து கோயில்கள் சிலவற்றில் விளக்கேற்றித் திருத்தொண்டு புரிந்தது பதிவாகி உள்ளது. இது இவர்கள் கோயிலுட் சென்று கருவறை மூலவரை எதிர் வணங்கினமைக்கு சான்றாகின்றது. இதை ஏன் இங்கே சிறப்பாகக் குறிக்க வேண்டி உள்ளது என்றால் புராணங்கள், மனுதர்மம் ஆகியவற்றின்படி இவர்கள் கோயிலில் நுழைய அனுமதி இல்லாத தீண்டத் தகாதோராக நடத்தப்பட்டனர் என்ற தப்பான, பிழையான கருத்தே மக்கள் பெரும்பாலார் நெஞ்சங்களில் குடிகொண்டு உள்ளது. இப்பிழையான கருத்தை முறியடிக்கும் ஆயுதமாக சில கல்வெட்டுகள் கொங்கில் காணக் கிடைக்கின்றன. ஏன் இங்கே மட்டும் கிடைக்கின்றன? மற்ற இடங்களிள் இவ்வாறான கல்வெட்டுகள் இல்லையா? என்ற கேள்விக்கு முதலாவதாக இங்கே தமிழகத்தின் பிற பகுதிகள் போல் அல்லாமல் பெரிய கோயில்கள் மிகக் குறைவு அதனால் கல்வெட்டுகளும் குறைவு. ஆதலால் இங்கத்து சாதி உணர்வுள்ளவரில் சில தனியார் தம் சொந்த செலவில் இங்கத்து கோயில் கல்வெட்டுகளைப் படியெடுத்தும், படித்தும் அச்சில் ஏற்றி நூலாக வெளியிட்டு உள்ளனர். இப்படி மற்ற இடத்தில் பெரிதாக எவரும் செய்யாததால் பறையர் பற்றிய செய்திகள் பிற இடங்களில் அதிகம் வெளியாகவில்லை. வெளியான அளவிற்கு இவை பறையர் சமூக சமநீதிப் போராட்டத்திற்கான சிறந்த ஆயுதங்களாக உள்ளன. இதை உணர்ந்தால் இவர்களுக்கு நன்மை உண்டாகும். அப்படி அல்லாமல் மீண்டும் மீண்டும் புராணத்தையும் மனுதர்மத்தையும் காட்டி சைவ, வைணவ மதங்களை சாடி பிராமணரைப் பழிப்பார்களானால் இக் கல்வெட்டுகள் பிடியில்லா கத்தியாக இவர்களைத் தான் காயப்படுத்தும். கொங்கு கல்வெட்டு போல பிற இடத்து கல்வெட்டுகள் கோயில் வாரியாக நூலாக வெளியாவதற்கு நடுவண் தொல்லியல் துறைக்கு அழுத்தம் தர வேண்டும். இனி சில கல்வெட்டுகள் காண்போம்.    

 

கோயம்புத்தூர் மாவட்டம் சங்கமேசுவரர் கோயில் தெற்கு ஜகதி உள்ள 3 வரிக் கல்வெட்டு.    

 

1.    ஸ்வஸ்திஸ்ரீ விக்கிரம சோழ தேவற்கு யாண்டு பதினேழாவது எதிர் எதிர் பேரூர் நாட்டு கோவன்புத்தூர் உடையார் சங்கீசுரமுடையார் கோயில் பக்கல் வடபரிசார நாட்டி

2.    லிருக்கும் வெள்ளாழன் புல்லிகளில் பறையன் பறையனான நாட்டுக் காமுண்டனேன் வைத்த சந்தியா தீபமொன்றுக்கு மிக்கோயிலிற் காணியுடைய சிவப்பிராமணனுக்கு ஓரச்சு குடுத்தே _ _ _ _

3.    சந்திராதித்தவரை செல்வதாகவு மிக்கோயிற் குடமுங் குச்சியுங் கொடு புக்கானிவனொருவன் செலுத்தக் கடவேனாகவும் கல்வெட்டுவித்தேநிது பன்மாஹேஸ்வர ரக்ஷை.

 

பக்கல் – for, ஆக; நாட்டுக் காமுண்டன் – ஊர் காவலன்; காணியுடைய பிராமணன் – official priest ; அச்சு - காசு; புக்கான் இவன் ஒருவன்- கருவறையில் புகும் உரிமையுள்ள பிராமணன்; பன்மாகேசுவரர் - சிவனடியார்; ரக்ஷை – காக்கவேண்டும்.

 

விளக்கம்: கொங்கு சோழர் மூன்றாம் விக்கிரம சோழனுக்கு 17+1+1 = 19 ஆம் ஆண்டு ஆட்சியில் (கி.பி. 1292 ) கோயம்புத்தூர் தெற்கு சங்கமேசுவரர் கோயிலில் வடபாரிச நாட்டில் வாழ்கின்றவனும் புல்லிகூட்டத்து வெள்ளாளனிடம் பணியில் உள்ளவனுமான பறையனான பறையன் என்பான் ஊர்க் காவல் செய்து வந்தான். அவன் இக்கோயில் காணியுடைய சிவப் பிராமணனிடம் காசு ஒரு அச்சு கொடுத்து சந்தியா விளக்கு ஒன்று எரிக்கச் செய்தான். இது சந்திர சூரியர் காலம் வரை ஏற்று நடத்தப்படும் என்று குடமும் குச்சியும் கொண்டு கருவறையில் நுழையும் அனுமதி பெற்ற பிராமணன் அப்படியே செய்வதாக கல்வெட்டி அதை சிவனடியார் காக்க வேண்டும் என்கிறான்.

 

இக்கல்வெட்டில் பயிலும் காணியுடைய பிராமணன், புக்கான் இவன் ஒருவன் என்ற சொல்லாட்சிகள் கருவறை பிராமணரைப் பிற கோயில் பிராமணரிடம் இருந்து வேறுபடுத்தி உயர்வாகக் காட்டுகின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் அக்காலத்தே கோயில் சாராத (unofficial) ஆனால் அகவை முதிர்ந்த கோயில் சார்ந்த பிராமணருக்கு சார்பாக (substitute) அவர்களது உறவினரும் கோயில் பூசையில் ஈடுபட்டிருந்தனர். இத்தகையோருக்கு அந்த முதிர்ந்த பிராமணர் தான் தன் உரிமையில் இருந்து ஒரு பங்கைச் சம்பளமாக வழங்குவார்.  இது தான் அந்த வேறுபாடு.

 

பார்வை நூல்: கொங்குநாட்டுக் கல்வெட்டுகள், கோயம்புத்தூர் மாவட்டம், பக். 153 மா. கணேசன் & இரா. ஜெகதீசன்.

 

கோயம்பூத்தூர் வடக்கில் அமைந்த இடிகரை ஊரில் உள்ள வில்லீஸ்வரர் கோயில் கருவறைச் சுவர் 15 வரிக் கல்வட்டு

 

ஸ்வஸ்திஸ்ரீ வீரபாண்டிய / தேவற்கு யாண்டு 8 வது வ / டபரிசார நாட்டுக் கொற்ற / மங்கலத்திலிருக்கும் வெள் / ளாழன் பையரில் பறைய / ன் பறையனேன் ஆளுடை / யார் வில்லீஸ்வரமுடையா / ற்கு வைத்த / சந்தியா தீபவிளக்கு / ஒன்றுக்கு ஒடுக்கின வராகன் பணம் 10 இ / ப் பணம் பத்துங் கைக் கொண்டேன் இக் / கோயிற் காணியுடைய சிவ பிராமணன் / காசிவ கோத்திரத்துத் திருநட்டன் அகத்திஸ்வர / முடையானான சித்தரமேழி பட்டனேன் கு / டங் கொடு கோயில் புகுவார் சந்திராதித்த / வரை செல்வதாக பன்மாஹேஸ்வர ரக்ஷை.

 

பையர் – கூட்டம்; ஆளுடையார் - இறைவர்; ஒடுக்கின - கொடுத்த; வராகன் – ஒரு வகை காசு; சந்தி தீபம் – மாலை விளக்கு.

 

விளக்கம்: இது 14 ஆம் நூற்றாண்டு கொங்கு பாண்டியனான வீர பாண்டியனின் 8 ஆம் ஆட்சி ஆண்டில் கொற்ற மங்கலத்தில் இருக்கும் பையர் கூட்டத்தை சேர்ந்த வெள்ளாளனிடம் பணியாற்றும் பறையன் பறையன் என்பான் வில்வீஸ்வரமுடையாருக்கு சந்தி விளக்கு ஒன்றிற்காக10 வராகன் பணம் கொடுக்கின்றான். இதை பெற்றுக்கொண்ட கோயில் காணியுடைய சிவபிராமணன் காசிபகோத்திரத்தில் பிறந்த திருநட்டன் அகத்தீசுவரன் என்ற சித்திரமேழி பட்டன் அதை சந்திர சூரியர் உள்ள காலம் வரை நடத்திச் செல்வதாக உறுதி கூறுகின்றான்.  விளக்கேற்றியவர் கோயிலில் சென்று வழிபடுவது இயல்பு. இதாவது, பறையன் பறையன் உள்ளே சென்று வழிபட்டுள்ளான். இது அவன் தீண்டாமைக்கு ஆட்படவில்லை என்பதற்கு சான்று.

 

பார்வை நூல்: கொங்குநாட்டுக் கல்வெட்டுகள், கோயம்புத்தூர் மாவட்டம், பக். 179, மா. கணேசன் & இரா. ஜெகதீசன்.

 

ஈரோடு பெருந்துறை வட்டம், ஆதியூர் கண் அமைந்த ஆதீசுவரர் கோவிலில் உள்ள கல்வெட்டு

 

ஸ்வஸ்திஸ்ரீ நன்மங்கலஞ் சிறக்க திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ வீரபாண்டிய தேவர்க்குத் திருவெழுத்திட்டுச் செல்லா நின்ற திருநல்லியாண்டு நாலாவது குழப்பு நாட்டு ஆதவூரில் வெள்ளாளன் வண்ணக்கரில் பிள்ளையாழ்வான் கரும்பறையனேன் நாயனார் ஆதீஸ்வரமுடையார் திருக்கோயில் திருநிலைகால் இரண்டு படி இரண்டும் என் தர்மமாகச் செய்வித்தேன் கரும்பறையனேன்.

 

திருவெழுத்திட்டு – முடிசூட்டி; திருநல்லியாண்டு – ஆட்சி ஆண்டு; பிள்ளையாழ்வான் – கீழ்ப்படிந்த வீரன், subordinate warrior, கீழ்படிந்த பணியாள்; திருநிலைக்கால் – கதவு நிலை.

 

விளக்கம்: மதுரை வேந்தன் வீரபாண்டியனின் நான்காம் ஆட்சி ஆண்டான 1269 இல் குழப்பு நாட்டில் அடங்கிய ஆதவூர் வண்ணக்கர் கூட்டத்து வெள்ளாளனின் பணியாளான கரும்பறையன் என்பான் ஆதிசுரமுடைய ஈசன் கோயிலில் இரண்டு திருநிலைக் கதவும் இரண்டு படியும் செய்வித்து கொடுத்து திருத்தொண்டு புரிந்தான்.

 

பார்வை நூல்: கொங்கு வேளாளர் கல்வெட்டும் காணிப் பாடலும், பக். 143

 

கோயம்புத்தூர் உடுமலைப்பேட்டை வட்டம், கடத்தூரில் உள்ள மருதீசர் கோயில் கோபுர வாசல் இடது நிலைக்காலில் வெட்டப் பட்ட 11 வரி கல்வெட்டு.

 

ஸ்வஸ்திஸ்ரீ வீ / ராஜேந்திர தேவற்கு / யாண்டு பத்தாவ / து கடற்றூர் வெ / ள்ளாந் கள்ளந் ப / றையந் நரவீரகே / ரழச் சிலை செட்டி / இட்ட திருநிலை வாய் / முகவணை உ / த்தரமும் திருக்க / தவும் இட்டேந்.

 

திருநிலைவாய் – கோபுரத்தோடு கூடிய வாயில்; முகவணை – வாயிலை ஒட்டிய கற்சுவர்.

 

விளக்கம்: கொங்கு சோழன் வீரராஜேந்திரனின் 10 ஆம் ஆட்சிஆண்டுடில் (கி.பி. 1217) கடத்தூரில் வாழும் வெள்ளாளனுக்கு பணியாற்றும் கள்ளன் பறையன் என்பான் நரவீரகேரளச் சிலைச் செட்டி சார்பாக இக்கோயில் திருநிலை வாயிலுக்கு முகவணை, உத்தரம், திருக்கதவு ஆகியன செய்து இட்டான். இதை வீரகேரளச்செட்டி நேரில் நின்று கவனிக்க முடியாததால் கள்ளன் பறையன் இத் திருப்பணியை அவன் சார்பில் மேற்பார்வை செய்து இட்டான் என்று கொள்வதே முறையானது. அந்த வகையில் கோயிலில் வழிபாடும் நடத்தி இருக்கின்றான்.

 

பார்வை நூல்: கோயம்பத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள், த.நா.அ.தொல்லியல் துறை, பக் 190.

 

கோயம்புத்தூர் வடக்கில் இடிகரை ஊரில் அமைந்த வல்லீஸ்வரர் கோயில் கருவறைச் சுவரில் பொறித்த 4 வரிக் கல்வெட்டு.

 

1.    ஸ்வஸ்திஸ்ரீ வீரபாண்டிய தேவற்கு யாண்டு 12 வது வடபரிசார நாட்டு இடிகரையி லிருக்கும் வெள்ளாழன் பைய்யரில் ச

2.    டையன் நேரியான் பறையனேன் ஆளுடையார் வில்லீஸ்வர முடையாற்கு வைத்த சந்தியா தீபவிளக்கு ஒன்றுக்கு ஒடுக்கின வ

3.    ராகன் பணம் 10. இப்பணம் பத்துங்கைக் கொண்டேன் இக்கோயிற் காணியுடைய சிவபிராமணன் காசிவ கோத்திரத்து திருநட்ட அகத்தீ

4.    ஸ்வரமுடையானான சித்திரமேழிப் பட்டனேன் குடங்கொடு கோயில் புகுவார் சந்திராதித்த வரை செல்வதாக இத்தன்மம். பன்மீயேசுவர ரக்ஷை.

 

விளக்கம்: 14 ஆம் நூற்றாண்டு கொங்கு பாண்டியரில் வீரபாண்டியனுக்கு 12 ஆவது ஆட்சி ஆண்டில் இடிகரையில் வாழும் பையர் கூட்டத்து வெள்ளாளனின் பணியாள் நேரியான் பறையன் வில்லீசுவரமுடைய இறைவர்க்கு மாலை விளக்கு ஏற்ற 10 வராகன் பணம் கொடுத்தான். இதைக் கோயில் அலுவல பிராமணன் சித்திர மேழிப் பட்டன் பெற்றுக் கொண்டு சந்திர சூரியர் உள்ள வரை நடத்துவதாக உறுதி தந்தான்.

 

இதே கோவிலில் 8 ஆம் ஆட்சி ஆண்டின் இதே போல ஒரு கல்வெட்டு மேலே இடம்பெற்றுள்ளது.

 

பார்வை நூல்: கோயம்பத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள், த.நா.அ.தொல்லியல் துறை, பக். 342

 

கோயம்புத்தூர் அவிநாசி வட்டம் சேவூரில் உள்ள கபாலீசர் கோயியில் முன்மண்டப தெற்கு குமுதத்தில் உள்ள 6 வரிக் கல்வெட்டு.

 

1.    ஸ்வஸ்திஸ்ரீ வீரராசேந்திர தேவற்கு யாண்டு இருபத்து நாலாவது _ _ _

2.    பாக்குடியில் இருக்குஞ் சாமந்தரில் குன்றன் _ _ _ _

3.    உடைய பாரசிவரில் வீற்றிருந்த வறியான் _ _ _

4.    இடங்கை நாயகந் நித்தப் பரையன் உள்ளிட்டாரும் வடுக _ _ _

5.    யாரும் இவர் _ _ _ _ பிடாரியாற்கு சந்தியா தீபத்துக்கு _ _ _

6.    இதுபன்மாயேசுவர ரக்ஷை.

 

பாரசிவர் – அம்மன் கோயில் பூசகர்; சாமந்தன் – அமைச்சன் அல்லது படைத்தலைவன்;  பிடாரி – துர்கை.

 

விளக்கம்: கொங்கு சோழரில் வீர ராஜேந்திரனுக்கு 24 நாலாவது ஆட்சிஆண்டில் (கி.பி.1230) பாக்குடியில வாழும் சாமந்தன் குன்றன், கோயில் பூசகரான பாரசிவர் வீற்றிருந்த வறியான், இடங்கைப் பிரிவுத் தலைவன் நித்தப் பரையன் உள்ளிட்டோர் ஆன இவர்கள் பிடாரிக்கு மாலை விளக்கு எரிக்க ஆவன செய்துள்ளனர்.

 

பார்வை நூல்: கோயம்பத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள், த.நா.அ.தொல்லியல் துறை, பக். 270

 

திருப்பூர் காங்கேயம் வட்டம் பட்டாலியில் உள்ள பால்வண்ணீசுவரர் கோயில் தெற்கு சுவர் கல்வெட்டு.

 

1.   ஸ்வஸ்திஸ்ரீ விக்கிரமசோழ தேவர்க்கு யாண்டு இருபதாவது பட்டாலி காவலன் குறும்பிள்ளரில்

2.    செயங்கொண்ட வேளானும் செயங் கொண்ட வேளாந் மகந் பறையநும் இவ்விருவரும் பட்டாலியிற் பால் 

3.   வெண்ணீஸ்வரமுடையாற்குச் சந்தியா தீபம் இரண்டுக்கும் குடுத்த பொந் இருகழஞ்சும் இக்கோயி

4.   ல் காணி உடைய சிவப்பிராமணந் கூத்தந் கூத்தனும் திருமழபாடியுடையாநான கடைக்கிறிச்சியும் இருவோம் இப்

5.   பொந் இருகழஞ்சுங் கொண்டு நித்தப்படி சந்திராதிச்சம் செலுத்துவோமாக  இச்சந்தியாதீபம் கு

6.   டமுங் குச்சியும் கொண்டு மிக்கோயில் புக்காந் இவ்விளக்கிடுவாநா வந் _ _ _ _  

வேளான் – அரசன், அரசமரபினன், ஆட்சியாளன்; மகன் – கீழ்படிந்த வீரன், subordinate warrior

விளக்கம்: கொங்கு சோழரில் மூன்றாம் விக்கிரம சோழனின் 20 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி.1293) வெட்டப்பட்ட கல்வெட்டு. வேட்டுவ மரபினரான குறும்பிள்ளர் மரபில் வந்த செயங் கொண்டன், அவனுக்கு கீழ்படிந்த வீரன் பறையன் இருவருமாகச் சேர்ந்து காங்கேயம் பட்டாலியில் உள்ள பால்வண்ண ஈசுவரர் கோவில் இறைவருக்கு இரண்டு சந்தியா விளக்கு எரிக்க அக் கோவிலின் காணி பெற்ற சிவப்பிராமணர்கள் கூத்தன் கூத்தன் மற்றும் கடைக்குறிச்சி ஆகிய இருவரிடம் அதற்காக இருகழஞ்சு கொடுத்தனர். சிவப்பிராமணர் ஞாயிறும் நிலவும் உள்ள வரை சந்தி விளக்கு ஏற்ற உறுதிஉரைத்தனர்.

பார்வை நூல்: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள், பக். 11, 2012,  த.நா.அ. தொல்லியல்துறை.


http://nammacoimbatore.in/article_view.php?newsId=3659 

http://inscriptionsofvellalars.blogspot.com/2017/10/  

வல்லமையில்  http://www.vallamai.com/?p=91485

seshadri sridharan

unread,
Apr 11, 2019, 7:36:19 AM4/11/19
to thiru-th...@googlegroups.com, வல்லமை
//James Robert Cholanar Mr. Seshadri Sridharan அவர்களே, நீங்கள் காண்பித்த கல்வெட்டுக்களில் எந்த இடத்தில் "பணியாள்" என்று வருகிறது என்று தெரியப்படுத்துங்கள். இல்லாத ஒன்றை மிக சாமர்த்தியமாக இருப்பதாக சொல்லி விளக்கம் கொடுப்பது அழகல்லவே அருமை நண்பரே//.  

இரண்டும் கல்வெட்டுகளில் பிள்ளையாழ்வான்,  மகன்  ஆகிய சொற்களை கவனியுங்கள். இதன்  பொருள்  வெள்ளாளன் பெற்ற மகன் என்பதல்ல மாறாக இச்சொல் கீழ்படிந்த போர் வீரனை குறிப்பது. இதாவது வெள்ளாளனுக்கு  பணிந்த கீழ்நிலைப்  போர்வீரன் low rank subordinate warrior என்பதே அதன் பொருள். பிறகல்வெட்டுகளில் மகன் என்ற சொல்லாட்சி இல்லை அவ்வளவே. அங்கே இல்லாவிட்டாலும்  இருப்பதாகவே புரிந்து கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் பொருள் திரிபு தான் ஏற்படும். எடுத்துக்காட்டாக ஒருசில  நடுகல் கல்வெட்டைத் தருகிறேன்   
1. பிள்ளையாழ்வான் கரும்பறையனேன்   

செல்லம்பட்டி கல்வெட்டு 1
 
ஸ்வஸ்திஸ்ரீ சகரயாண் டெண்ணூற் றிருபது
கங்காணுமன் சாய(டு) மாளத் தகடூர் மாவலிவாண
ராடரடியான் கடல் மாணிக்கன்(னு)ளை குன்றினை ஆ(ள)வன்
மாமன் கோவூர் நாட்டைந் நூறுமுடைய மழற்பை
யன் னடியான் குழி புளியன் புலி எறிந்து பட்டான் மதியுளி 
 
ஊத்தன்கரை வட்டம் ரெட்டியூர் கல்வெட்டு
 
ஸ்வஸ்திஸ்ரீ அய்யப்பதேவன்
நாடாள வேணுடுடைய இருசப்பை
யனார் அடியான் அரைய குட்டி பன்றி
குத்தி பட்டான்.
 
அரூர் வட்டம் பெரிய மன்னி மடுவு கல்வெட்டு
 
ஸ்வஸ்திஸ்ரீ ஸிரி
ஐயப்ப
தேவன்புற
மலை நாடு
ப்ரரிசியம்
செய்ய 
யனாகர்க்கு
இன்னாடி இரு
கலம் பகயா
வர் மகன்
பூமயன் தொறுன்
மீட்டுப்பட்டா

வேந்தன் அரசு

unread,
Apr 11, 2019, 10:06:48 AM4/11/19
to vallamai, thiru thoazhamai
ஒருகால், வடுகர்கள் வந்தபின்னர்தான் பறையர்  இழிகுலத்தவர் ஆனாரோ. கொங்கில் மாதிகா  மக்கள்தான்  அதிகம்.

வியா., 11 ஏப்., 2019, முற்பகல் 4:36 அன்று, seshadri sridharan <ssesh...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

seshadri sridharan

unread,
Apr 11, 2019, 10:33:09 PM4/11/19
to வல்லமை, thiru-th...@googlegroups.com
On Thu, 11 Apr 2019 at 19:36, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
ஒருகால், வடுகர்கள் வந்தபின்னர்தான் பறையர்  இழிகுலத்தவர் ஆனாரோ. கொங்கில் மாதிகா  மக்கள்தான்  அதிகம்.
 

உண்மையில் கில்ஜி, துக்லக் போன்ற இசுலாமியர் படையெடுப்பால் வடநாட்டிலும் தென்னாட்டிலும் நான்குஅதிகார அடுக்கு குலைந்தது. அதனால் அரையர், கிழார் என்ற இரு கீழ் நிலைப் பதவிகள்  தேவையற்றுப் போயின. அப்போது மூன்றாம் அதிகார அரையர் நான்காம் அதிகார கிழார்களை ஒழித்து அவரிடம் இருந்த நிலங்களை பிடுங்கிக் கொண்டனர். இதனால் கிழார்கள் தமது ஆதரவாளருடன் கிளர்ச்சி  செய்தனர். கிழாருக்கு உத்தாரமாக இருந்த பறையர் அரையர்களின் நிலங்களில் வேலைசெய்ய மாட்டோமென்று போராட்டம் செய்கின்றனர். இந்த அரையருக்கு எதிரான போராட்டத்தை மொத்த கிராமத்தையும் எதிர்க்கும் போராட்டம் என்று அரையர்கள் திரித்து   பறையர்களை பணிக்கு அமர்த்தக்க கூடாது என்று ஆணை பிறப்பித்தனர். விளைவு வறுமை பட்டினி.. இதனால் சிலர் களவு திருட்டு போன்ற செயலில் ஈடுபட்டபோது அதை தடுக்க ஊருள் நுழையக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்தனர். அவரோடு தொடர்பு வைத்திருப்போர் விலக்கி வைக்கப்பட்டனர். இது தொடக்கத்தில் அங்கொன்றுமிங்கொன்றும் என நடந்தது. பின்னர் தீண்டாமையாக உருவெடுத்தது. இந்தியா முழுவதும் இப்படித்தான் நாலாம் அதிகாரத்திற்கு ஆதரவாக இருந்த மக்கள் விலக்குதலுக்கு ஆளாயினர். தமிழகத்தில் இத்தகு போக்கு 15  ஆம் நூற்றாண்டில் தொடங்கி  16 ஆம் நூற்றாண்டில் தெலுங்கு ஆட்சியர் நல்லாதராவோடு   தீண்டாமை அடக்குமுறை நடந்தேறியது. 17 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் பல தீண்டத்தகாத சாதிகள் உண்டாயின. 

மாதிக ஆந்திரத்தில் இருந்து ஒட்டிக்கொண்டு வரப்பட்டவர். 

இதற்கு புதுக்கோட்டை கல்வெட்டு ஒன்று சான்றாக உள்ளது. நான் அது போல மேலும் சில கல்வெட்டுகளை எதிர்பார்க்கின்றேன். 

எண் 948. 3 வரி கல்வெட்டு. திருமெய்யம் வட்டம், தேக்காட்டூர், அகத்தீசுவரர் கோவிலில் தர்மசமர்த்தினி அம்மன் கோவிலின் கீழ்புறச் சுவரில் உள்ள கல்வெட்டு.

1.   சவுமிய வருஷம் ஆடி மாதம் 26 நாள் கானனாட்டுத் தெற்காட்டுர் ஊர்கமைந்த ஊரவரோம் மேற்படியூர் புறஞ்சேரியிலிருக்கும் பறையற்குப் பிடிபாடு பண்ணிக்குடுத்தபடி, இவர்கள் முன்னுக்கு களஞ் செதுக்குகையில் இப்போ களஞ்செதுக்க_ _ _ _ _ ங்களு

2.   க்கு ஆற்றாதென்கையில் பின்பு ஊராகக் கூடிப் பறையரைக் களஞ் செதுக்க வேண்டாமென்று கட்டளையிட்டுக் குடுத்த (யிட்டுக் குடுத்த) படியிலே சந்திறாதித்தவரை செல்ல முன்னுண்டான சுவந்திரமும் பற்றி ஊருலே குடியிருக்கவும் கல்லிலுஞ் செம்பிலும் வெட்டி

3.   க் கொள்ளக்கடவாராகவும் _ _ _  வாணாதராயர் எழுத்து. தெற்காட்டூர் வேளார் எழுத்து. சொல்லி ஆடுவார் எழுத்து நாட்டுக் கணக்குத் தென்னவரையன் எழுத்து. இந்த _ _ _ _ மந்திருமே _ _ _ _ ம்பான் மூளி பெரியான் உள்ளி[ட்]டாரு.

பிடிபாடு – வழிகாட்டு நெறி (Behavioral guidelines): களம் – வயல்;

விளக்கம்: விசயநகர ஆட்சி உண்டான பின் 60 ஆண்டு குறிப்பு தமிழ்க் கல்வெட்டுகளில் இடம் பெற்றது. நாயக்கர் ஆட்சி என்றால் வேந்தர் பெயர், ஆட்சி ஆண்டு தமிழ்வேந்தர் காலத்தில் இருந்தது போலவே குறிக்கப்பட்டிருக்கும். அவ்வாறு அல்லாமல் இக்கல்வெட்டு சௌமிய ஆண்டு ஆடி 26 ஆம் நாள் என்று வெட்டப்பட்டுள்ளது. எனவே இது கம்பண்ணர் படையெடுப்பிற்கு பின்னான நிகழ்வு எனக் கொண்டால் 1429 AD அல்லது 1489 AD இல் வெட்டப்பட்டிருக்க வேண்டும். இதில் கிழமைக் குறிப்பு இருந்திருந்தால் சரியான ஆண்டை நம்மால் குறிக்க வியலும். அப்படி இதில் கிழமை ஏதும் குறிக்க இல்லை.

கான நாட்டின் தெற்காட்டூர் ஊரூக்கு அமைந்த ஊர் சபையோர் இவ்வூரின் கண் உள்ள புறச்சேரியில் வாழும் பறையர் குல மக்களுக்கு பிடிபாடு (behavioural guidelines) ஏற்படுத்துகின்றனர். இவ்வூரில் முன் போல வயல்களை செதுக்க இயலாது என்று பறையர் கூறிவிட்டபடியால் ஊரார் ஒன்றுகூடி இனி பறையருக்கு வயல் செதுக்கும் பணியைத்தரக் கூடாது என்று முடிவெடுத்து கட்டளையிட்டபடி சந்திராதித்தர் வரை நடைமுறைப்பட வேண்டும். அதே வேளையில் முன்பிருந்த உரிமை போலவே (சுதந்திரம்) இப்போதும் இவர்கள் ஊருள்ளே குடிஇருப்பதற்கு கல்லிலும் செப்பேட்டிலும் எழுத்திலும் வடிக்கும் உரிமையை தந்தனர். அதை அரசர் வாணாதராயர் உள்ளிட்ட ஆட்சிப் பொறுப்பாளர்கள் ஆதரித்து கெயெழுத்திட்டனர்.

ஊருக்குள் முன்னைப் போல் உரிமையோடு குடிபுக உரிமை இருப்பதை இக் கல்வெட்டு காட்டுவதால், குறிப்பாக தீண்டாமை நடைமுறைகளான காலில் செருப்பு அணியாமை, ஊர் குளத்தில் தண்ணீர் மொள்ளாமை, ஊருள் சில தெருக்களில் நடந்து போகாமை, வேட்டியை இந்த முறையில் தான் கட்ட வேண்டும், எச்சில் துப்பக் கூடாது என்பன போன்ற செயல்கள் இல்லாமையை காட்டுவதால் 15 ஆம் நூற்றாண்டும் அதற்கு முன்பும் தமிழகத்தில் சாதி தீண்டாமை ஒடுக்குமுறை இருந்ததே இல்லை என்பதற்கான பொன்னான சான்றாகும் இக்கல்வெட்டு.   



 நின்று நிமிர்ந்தான்  

seshadri sridharan

unread,
Apr 12, 2019, 12:31:26 AM4/12/19
to வல்லமை, thiru-th...@googlegroups.com

There were no such thugs as Pindharis in Ancient India. They were creation of British rule in early 19th century. Lord William Bentick signed humiliating treaties with several local kings. This is called SUBSIDARY ALLIANCE. According to one of the clauses of this treaty, Indian prince signing this treaty has to disband its army almost completely. Hence tens of thousands of soldiers became unemployed suddenly. Most of them took to armed robbery. Hence British rule created another misfortune & next round of misery & poverty



--
--
உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள thiru-th...@googlegroups.com
மின்வரிக்கு அனுப்புக. தங்களால் இக்குழுவில் தொடர இயலா நிலை இரு்பபின், thiru-thoazham...@googlegroups.com
மின்வரிக்குத் தெரிவிக்கவும். தோழமை பற்றி அறிய
http://groups.google.com/group/thiru-thoazhamai?hl=ta காண்க.
தோழமையுடன்

---
You received this message because you are subscribed to the Google Groups "தோழமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thiru-thoazham...@googlegroups.com.

seshadri sridharan

unread,
Apr 13, 2019, 5:50:00 AM4/13/19
to வல்லமை, thiru-th...@googlegroups.com
வெள்ளாளரில் பறையர், பறையரில் வெள்ளாளர் என்று வராது ஏனென்றால் இரண்டும் வெவ்வேறு சாதி   

On Fri, 12 Apr 2019 at 08:03, seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:
--
--
உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள thiru-th...@googlegroups.com
மின்வரிக்கு அனுப்புக. தங்களால் இக்குழுவில் தொடர இயலா நிலை இரு்பபின், thiru-thoazham...@googlegroups.com
மின்வரிக்குத் தெரிவிக்கவும். தோழமை பற்றி அறிய
http://groups.google.com/group/thiru-thoazhamai?hl=ta காண்க.
தோழமையுடன்

---
You received this message because you are subscribed to the Google Groups "தோழமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thiru-thoazham...@googlegroups.com.

வேந்தன் அரசு

unread,
Apr 13, 2019, 10:28:01 PM4/13/19
to vallamai, thiru thoazhamai


வியா., 11 ஏப்., 2019, பிற்பகல் 9:31 அன்று, seshadri sridharan <ssesh...@gmail.com> எழுதியது:

There were no such thugs as Pindharis in Ancient India. They were creation of British rule in early 19th century. Lord William Bentick signed humiliating treaties with several local kings. This is called SUBSIDARY ALLIANCE. According to one of the clauses of this treaty, Indian prince signing this treaty has to disband its army almost completely. Hence tens of thousands of soldiers became unemployed suddenly. Most of them took to armed robbery. Hence British rule created another misfortune & next round of misery & poverty


முன்னாள்படைவீரர்கள் ஒய்வுவாங்கினால் செளக்கிதாரர்தான் ஆகணும். வேறுதொழில் அறிந்தாரிலர்.

seshadri sridharan

unread,
Apr 13, 2019, 11:16:43 PM4/13/19
to வல்லமை, thiru-th...@googlegroups.com
மூன்றாம் அதிகார பொறுப்பில் இருந்த துளுவ வெள்ளாள , செங்குந்த முதலியார், படையாட்சி, கொங்கு வெள்ளாளர் போன்றோரும் சத்திரியர் தாம். நாலாம் அதிகார பொறு ப்பில் இருந்தோருக்கு படையாள் ஆக இருந்த பறையரும் சாத்திரியர்தாம். ஆனால் இன்க்ட்ரு அவர்கள் தீண்டாத தகாதோர் ஆக்கப்பட்டனர்.

படைத்துறை வேலைகள் இல்லாது போனதால் திருடு கொலை கொள்ளையர் ஆனோர் பலரென்பது உண்மை. ஆனால் அதில் ஈடுபடாமல் மாற்றுத் தொழில் நாடி பிழைத்த படைச் சாதிகளும் உண்டு. கைக்கோளரான செங்குந்தர் தமிழ் வேந்தர் ஆட்சி இருந்த வரையில் படைவீரராகவே மதிப்போடு இருந்தனர். பின்பு நெசவு, வணிகம் ஆகிய தொழில்களை மேற்கொண்டு தமது நிலை தாழாமல் தப்பினர். இத்தனைக்கும் அவர்கள்  அதிக வரிவிதிப்புக்கு ஆட்பட நேர்ந்தது. இதை பற்றி "தமிழ் கல்வெட்டுகள் வெளிச்சமிடுகின்ற  அரிய உண்மைகள்" (circa 300-1800)   என்ற நூலில் க. பன்னீர்செல்வம்  அவர்களைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார். 

அதே போல் தென்பாண்டி நாட்டில் தொடர்ந்த பாண்டியர் ஆட்சி, சேதுபதி மன்னர், புதுக்கோட்டை மன்னர் ஆகியோர் ஆட்சி 18 ஆம் நூற்றாண்டு வரை இருந்ததால் கள்ளர், மறவர் அவ்வாறான நிலைக்கு தள்ளப்படாமல் படைத்துறையிலேயே நீடித்தனர். 
  

Reply all
Reply to author
Forward
0 new messages