வல்லமையில் இன்று - ஆத்திசூடி யார்? – ஓர் சுவையான கருத்தாடல்

228 views
Skip to first unread message

Megala Ramamourty

unread,
May 12, 2014, 12:28:31 AM5/12/14
to vall...@googlegroups.com

ஔவையார் எழுதிய புகழ்பெற்ற அறநூல்களில் ஒன்று ’ஆத்திசூடி’ என்பது அனைவரும்  அறிந்ததே. ஆயினும், அதில் ஆத்திசூடியாகக் குறிக்கப்படுபவர் யார் என்பதில் அறிஞர் பெருமக்களிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. அதுகுறித்து ஓர் சுவையான கருத்தாடல் நிகழ்த்தி ஆத்திசூடி குறித்த பல புதிய தகவல்களை வாசகர்களுக்கு அறியத் தரலாமே என்ற எண்ணத்தின் வெளிப்பாடே ‘ஆத்திசூடி யார்? – ஓர் சுவையான கருத்தாடல்’ எனும் இப்பகுதி.

இதில் அறிஞர்கள் பலர் பங்கேற்று ’ஆத்திசூடி’ பற்றித் தங்கள் கருத்துக்களை, விளக்கங்களை நம்முன் படைக்க இருக்கின்றார்கள்.

முதலில், ’ஆத்திசூடி’ என்பது சமண சமயத்தைச் சேர்ந்த தீர்த்தங்கரர் ஒருவரைக் குறிப்பதாகும் என்று நிறுவ வருகின்றார் முனைவர் நா. கணேசன் அவர்கள்.

இனி அவருடைய கருத்துக்கள் நம் சிந்தனைக்கு…

“ஆத்திசூடி அமர்ந்த தேவன்” என்று சமணர்கள் கொண்டாடும் தேவர், பார்சுவநாத தீர்த்தங்கரர். அவர் ஒரு வரலாற்று நாயகர். பார்சுவநாதர், நேமிநாதரை அடுத்துத் தோன்றியவர். கி.மு 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். சமணர்களின் 23-ஆவது தீர்த்தங்கரராகப் போற்றப்படுபவர்.

அரச குலத்தில் தோன்றிய பார்சுவநாதர் நூறு ஆண்டுகள் உயிர்வாழ்ந்தார். தம் வாழ்நாளில் 30 ஆண்டுகள் இல்லறத்தை மேற்கொண்டும், 70 ஆண்டுகள் துறவறத்தை மேற்கொண்டும் சிறப்புற்றார். உயிர்க்கொலை, சாதிப் பாகுபாடு ஆகியவற்றைக் கடுமையாக எதிர்த்தவர் அவர்.

போதி மர நீழலில் புத்தர் ஞானம் பெற்றதுபோல, ஆத்தி (வடமொழியில் தாதகி என்பர்) மர நீழலில் தவஞ்செய்து ஞானம் அடைந்தவர் பார்சுவநாதர். புத்தரும், பார்சுவநாதரும் காசி அருகே மகத மண்டலத்திலே சமகாலத்தில் வாழ்ந்தவர்களாகக் கருதப்படுகின்றனர்.

ஔவைக் குரத்தியார் தாம் எழுதிய ஆத்திசூடி என்ற நூலின் கடவுள்வாழ்த்துப் பாடலில்,

ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே”
என்று ஆத்திமர நீழலில் அமர்ந்து ஞானம் பெற்ற  பார்சுவநாதரையே குறிப்பிடுகின்றார். ஏனெனில் ’சூடுதல்’ என்றால் ’அணிதல்’ என்ற பொருள்மட்டுமின்றிச் சூழ்ந்து கவிந்திருத்தல் என்ற பொருளும் உண்டு. அந்த அடிப்படையில் ஔவையால் ’ஆத்திசூடி’யாகச் சுட்டப்படுவர் பார்சுவநாதரே எனக் கொள்வதில் தவறேதுமில்லை.

அலங்காரமான ஆத்தி/தாதகி நீழலில் அமரும் தேவன்:

Parsvanatha_Lodhruva

’சூடுதல்’ என்ற சொல்லுக்குச் சூழ்ந்து கவிந்திருத்தல் என்ற பொருள் இருப்பதைச் சென்னை தமிழ்ப் பேரகராதியும் உறுதிசெய்கின்றது.

Madras Tamil Lexicon:
சூடு¹-தல் cūṭu-
To surround, envelope; கவிதல்.

இதற்கான சான்றுகள் சில சங்க நூல்களிலிருந்தும் கீழே தரப்பட்டுள்ளன:

சான்று 1:

புறநானூறு 35

நளியிரு முந்நீ ரேணி யாக
வளியிடை வழங்கா வானஞ் சூடிய
மண்டிணி கிடக்கைத் தண்டமிழ்க் கிழவர்
முரசுமுழங்கு தானை மூவ ருள்ளும்…

உரை: நளியிரு முந்நீர் ஏணியாக – நீர் செறிந்த பெரிய கடல்
எல்லையாக; வளியிடை வழங்கா – காற்று ஊடு போகாத; வானம்
சூடிய மண்திணி  கிடக்கை – வானத்தைச்  சூடிய  மண்செறிந்த
உலகத்தின்கண்; தண் தமிழ்க் கிழவர் – குளிர்ந்த தமிழ்நாட்டிற்
குரியராகிய;

சான்று 2:

வானஞ் சூடிய மலர்தலை யுலகத்துள்ளும் (பெரும்பாண். 409).

 இதற்கு நச்சினார்க்கினியரின் உரை:

409-10: புலவு கடல் உடுத்து வானம் சூடிய மலர்தலை உலகத்துள்ளும்-புலால் நாற்றத்தையுடைய கடல்சூழ்ந்த ஆகாயங்கவிந்த அகன்ற இடத்தையுடைய உலகத்து நகரில் விசேடித்தும்..

சான்று 3:

வான்கவிந்த வையகமெல்லாம்” (நாலடி.பொறை.10)

சான்று 4:

ஐங்குறுநூறு 209

அன்னாய் வாழிவேண் டன்னை நீமற்று
யான்அவர் மறத்தல் வேண்டுதி யாயின்
கொண்டல் அவரைப் பூவின் அன்ன
வெண்டலை மாமழை சூடித்
தோன்றல் அனாதுஅவர் மணிநெடுங் குன்றே.

இவையல்லாது, ஆத்திமரத்தின் கீழ் அமர்ந்த  தீர்த்தங்கரர் (பார்சுவநாதர்) மீதான பாடல் தமிழிலக்கண நூலான வீரசோழியத்தில் உள்ளது. மேலும் ஒரு பாடல் அகத்துறையாய்ச் சோழ மன்னன் மீதும் இருக்கிறது. பார்சுவநாதரது அடியாராகிய ஒரு குரவடிகள் சோழமன்னர்களுக்கு ஆத்தியைக் குலமரமாகப் பரிந்துரைத்திருக்கலாம் என்று எண்ணுதற்கும் இடமுண்டு.

 ’ஆத்திசூடி’ சிவபெருமானைக் குறித்தது என்று கருதுவோரும் உளர். ஆனால் அதற்குத் தகுந்த ஆதாரங்கள் இல்லை. ஆத்தியைச் சிவனது திருமேனியிலே காட்டும் சிற்பங்களோ, தேவாரமோ இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பல சிற்பங்களில் ஆத்தி தாவரமும், நாகக் குடையும் கொண்டு பார்சுவநாத தீர்த்தங்கரரே விளங்குகிறார்.

சுமார் 1500 வருடப் பழமை வாய்ந்த ஆத்திசூடித் தீர்த்தங்கரர் சிற்பம் ஒன்று கர்நாடகாவில் கிடைத்துள்ளது. தீர்த்தங்கரசாமிமேல் முழுவதும் ஆத்தி தாவரம். அந்த அலங்காரத்தின் உச்சியில் ஒரே ஓர் அரவம். இந்த உச்சி நாகத்தால்தான் அந்த ஆத்திசூடித் தீர்த்தங்கரர் பார்சுவர் என அடையாளம் தெரிகின்றது.

parsuvanatha with one snake

எனவே, ஆத்திசூடி நூலின் கடவுள்வாழ்த்தில் ’ஆத்திசூடி’யாகக் குறிப்பிடப்படுவர் சமண தீர்த்தங்கரராகிய ‘பார்சுவநாதரே’ என்பது ஐயத்திற்கிடமின்றித் தெளிவாகின்றது.

Innamburan S.Soundararajan

unread,
May 12, 2014, 4:23:01 AM5/12/14
to vall...@googlegroups.com
மேகலெடிட் ஜோர்.

--

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

வேந்தன் அரசு

unread,
May 12, 2014, 7:23:02 AM5/12/14
to vallamai
தீர்ப்பை மதிக்கிறோம்

பாரதிதான் குழப்பிட்டார்.

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

Megala Ramamourty

unread,
May 12, 2014, 10:27:07 AM5/12/14
to vall...@googlegroups.com
நன்றி ‘இ’ ஐயா.

அன்புடன்,
மேகலா

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/vallamai/_ytQ2FuE0bY/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Megala Ramamourty

unread,
May 12, 2014, 10:30:27 AM5/12/14
to vall...@googlegroups.com
இது தீர்ப்பில்லை வேந்தன் ஐயா. முனைவர் நா. கணேசன் அவர்களின் கருத்துக்களின் தொகுப்பு. ஒவ்வொருவரும் அவரவர் பார்வையில் ஆத்திசூடியை அணுகிக் கருத்துரைக்கலாம் கட்டுரை வடிவில். அதனை வல்லமை இதழில் வெளியிடுவோம்!

அன்புடன்,
மேகலா

--

Iyappan Krishnan

unread,
May 12, 2014, 10:51:56 AM5/12/14
to vall...@googlegroups.com
அவர் எடுத்துக்காட்டு என்று காட்டிய படங்களில் பெரும்பாலானவற்றில் இலைகள் என்பதற்கான அடையாளமே இல்லை. அப்படியாக கற்பிதம் செய்து கொண்டு இது தான் இலை.. அதுவும் ஆத்தி இலை என்றால் என்ன சொல்வது ?

தாதகி தான் ஆத்தி என்று   ரொம்ப காலமா “ வழக்கமான முறையில் ஆதாரத்தோடு “ சொல்லிக் கொண்டு இருக்கிறார்.

சரி அது நிற்க.

கொடுத்திருக்கும் படங்களில் அவர் இலைகள் என்று சொல்பவை இலை போலில்லாமல் புடைத்த மாதிரி இருப்பதை கவனியுங்கள்.... சற்றே உற்று கிட்டே  பார்க்கலாம்.

 படம் 1 :

 படம் 2 

இதில் தெரிவது இலை என்று யாருக்கேனும் படுகிறதா ? இல்லை இது பூப்போன்ற வடிவம் , பூவில் கிளைத்தெழும் இதழ்கள் ( உதாரணத்திற்கு சூரிய காந்தி என்று கொள்வோமா ?)  போன்று தெரிகிறதா என்று பார்ப்பவர்கள் முடிவெடுக்கட்டும்.

இதை இலை என்று எந்த ஆராய்ச்சியாளர் ஒப்புக் கொள்கிறார்கள் என்று தான் தெரியவில்லை.  

ஆதாரம் இருக்கிறது, ஆராய்ச்சியாளர்கள் சொல்லி இருக்கிறார்கள்... எல்லாம் சரி.. எங்கே ஆய்வின் முடிவு ? வாயால் வடை சுட்டால் கேட்கும் செவிக்கு வேண்டுமானால் நல்லது. சாப்பிட உதவாது. 

நிற்க.

ஓவியங்களில் அழகினைக் கூட்ட வரைவுகள் /வளைவுகள் அதிகம் வரும். எந்த ஒரு சிற்பக் கலைஞரும் அழகற்றதாக இருக்க எண்ண மாட்டார்.  போலவே நீங்கள் சிற்பியாக இருந்தால் மரத்தின் கீழ் அமர்ந்த சிற்பம் பின்னே என்னத்தை வரைவீர்கள்.. இலை, பூ, நாகம் போன்றவை  தவிர்த்து வேறு ஏதும் ?  

மேலும்  சிற்பங்களில் செதுக்கப் பட்ட இலைகள் யாவும் ஆத்தி இலைகள் தான் என்று எதை வைத்து முடிவு செய்தார்கள் ?  ஏதோ ஒன்றை முடிவு செய்து கொண்டு அதற்கேற்றார் போல் எல்லாவற்றையும் யூகித்துக் கொண்டு அது தான் ஆய்வு முடிவு என்றால் எப்படி ஏற்க முடியும்???

இலைகள் யாவும் ஆத்தி, தேவன் யாவும் தீர்த்தங்கர்கள் என்பது வேண்டுமானால் எண்ணிக் கொள்பவர்களின் ஆசைக்கு நன்றாக இருக்கலாமே தவிர்த்து உரிய ஆதாரம் இல்லாமல்  உண்மையாகிவிடாது.

Megala Ramamourty

unread,
May 12, 2014, 11:30:10 AM5/12/14
to vall...@googlegroups.com
அன்புள்ள திரு. ஐயப்பன் அவர்களுக்கு,

நாங்கள் வல்லமை இதழில் வெளியிட்டுள்ள ’ஆத்திசூடி யார் - ஓர் சுவையான கருத்தாடல்’ என்ற பகுதியில் ஆத்திசூடி குறித்து ’முடிந்த முடிபாக’ எதனையும் வெளியிடவில்லை. முனைவர் நா. கணேசன் அவர்களின் கருத்து என்று குறிப்பிட்டேதான் அவருடைய ‘கருத்துக்களை’ வெளியிட்டிருக்கிறோம் என்பதைக் கவனித்திருப்பீர்கள் என எண்ணுகிறேன். அவரவர் தரப்புக் கருத்துக்களை எடுத்துவைக்க அவரவர்க்கு உரிமையுண்டு அல்லவா? அந்த அடிப்படையில் இதழில் இடம்பெற்றிருப்பதே இந்தக் கருத்தாடல்!

எனவே ஆத்திசூடி குறித்து நீங்கள் ஏதேனும் கருத்துக்களைத் தெரிவிக்க விரும்பினால், அது பற்றிய உங்கள் பார்வை, எண்ணம், அதற்குப் பலம்சேர்க்கும் சான்றுகள் ஆகியவற்றையும்,  ஆத்திசூடி குறித்த பிற அறிஞர்களின் கருத்துக்களை நீங்கள் உங்கள் கட்டுரையில் மறுக்கவோ, விமர்சிக்கவோ விரும்பினால் அதற்கான ஆதாரங்கள், கருத்துக்கள், படவிளக்கங்கள் முதலியவற்றையும் சேர்த்து ஓர் கட்டுரை வடிவில்  vallama...@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள்.

உங்கள் கட்டுரையையும் விரைவில் வல்லமையில் வெளியிடுவோம்.  :-)

அன்புடன்,
மேகலா

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/vallamai/_ytQ2FuE0bY/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to vallamai+u...@googlegroups.com.

Iyappan Krishnan

unread,
May 12, 2014, 11:33:32 AM5/12/14
to vall...@googlegroups.com

2014-05-12 23:30 GMT+08:00 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
உங்கள் கட்டுரையையும் விரைவில் வல்லமையில் வெளியிடுவோம்.  :-)

​நன்றிங்க்கா. இப்ப சொன்னதே  என் கருத்தாக எடுத்துக் கொள்ளவும். வல்லமை அளவுக்கெல்லாம் நான் பெரியாள் இல்லை... மன்னிச்சூ ​

Iyappan Krishnan

*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை எந்நாளும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**

N. Ganesan

unread,
May 12, 2014, 11:38:42 AM5/12/14
to vall...@googlegroups.com, mintamil, thami...@googlegroups.com
On Monday, May 12, 2014 4:23:02 AM UTC-7, வேந்தன் அரசு wrote:
தீர்ப்பை மதிக்கிறோம்

பாரதிதான் குழப்பிட்டார்.

தேசியகவி பாரதியார் பரமானந்தமான கவிஞர். உதாரணமாக, இல்லாத அகத்தியர் தந்தது தமிழ் என்று அழகான தமிழ்த்தாய் வாழ்த்தில் பாடினார். கவித்துவமானது என்றாலும் ஆராய்ச்சிகளால் அகத்தியர் என்பவரே தமிழுக்கு முதல் இலக்கணம் செய்யவில்லை என்று தமிழறிஞர்கள் காட்டிவிட்டனர். முதலில் செய்தவர் சென்னைப் பேரா. கா. நமச்சிவாயர் என்பதாக ஞாபகம். பாரதியின் ப்ரதம சிஷ்யர் பாரதிதாசன் அகத்தியர் பற்றி ஆராய்ந்து அகவல் பாடியுள்ளார். மேகலா அவர்களுக்கும், தேமொழி அவர்களுக்கும் தெரியும். எல்லோரும் படித்துச் சிந்திக்கவேண்டிய பாடல்களில் ஒன்று. இன்றைய அரசியல் தலைவர்களின் தாரகமந்திரம்: “எம்மதமும் சம்மதம்”. உலகோடு வணிகமும், கல்வியும், நுட்பமும் ஊடாடும் பாரதமாதாவின் மக்களுக்கு இது சிறந்த மகாவாக்கியம். இந்தியாவில் எழுத்து, கலைகள், கல்வி தோற்றுவித்த 2 சமண சமயங்களுக்கும் பொதுவாக பாரதியார் பாடினார் எனலாம். அவ்வாறு பாரதி பாடப் பாட்டை போட்டுக் கொடுத்தவர் ஔவை என்னும் சமணக் குரத்தியார் காரணம்.

ஆத்திமரத்தடியில் இருப்பது தீர்த்தங்கரர். கல்லால மரத்தடியில் இருப்பது சிவன். ஆயிரக்கணக்கான
பாடல்களில், சிற்பங்களில் இது பொது. ஒரு இடத்தில் மாறுவதால் ஆத்திசூடி என்றால் சிவன் எனல்
பொருந்தாது. அந்தத் தேவாரப் பாடல் இலிங்க வழிபாட்டை அறிமுகம் செய்யும் பாட்டில், சண்டியின்
ஹேகியோக்ராஃபி-க்காக சமண சமயத்தின் அப்ராப்ரியேஷன். இதனை விரிவாக்கி வளர்த்தவர் ஒட்டக்கூத்தர்
(12-ஆம் நூற்றாண்டு) அவர் வழியிலே பலர் செல்லத் தொடங்கினர்: உ-ம்: அருணகிரிநாதர். பாரதியின் பரம்பொருள் 
வாழ்த்தில் தமிழ்வளர்த்த தீர்த்தங்கரரை ஆத்திசூடி என்று வாழ்த்திப்
பிற கடவுளரை - அல்லா, ஏசுவின் தந்தை, பெருமாள், சிவபிரான் - வணங்குகிறார் என உரைக்கலாம்.
எம்மதமும் சம்மதம் என்னும் தத்துவத்தை பாரதமாதா மக்களாக தமிழர் மாறுகிற கால கட்டத்தில் 
உரைக்கும் பாடலாக பாரதியார் பாடிய வழிநூலில் தானாக 2 சமணசமயங்களுக்கும் குறியீடாக
ஆத்திசூடி பாகல்வண்ணர் இருத்தல் சிறப்பு. 

(1) ஆத்திசூடி, - (2) இளம்பிறை அணிந்து

மோனத் திருக்கும் முழுவெண் மேனியான், -

(3) கருநிறங் கொண்டுபொற் கடல்மிசைக் கிடப்போன், -

(4) மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன், -

(5) ஏசுவின் தந்தை  - எனப்பல மதத்தினர்

உருவகத் தாலே உணர்ந்துணராது

பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்

ஒன்றே அதனியல் ஒளியுறும் அறிவாம்;

அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;

அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்.

இந்தியாவில் உள்ள 5 பெருஞ்சமயங்களுக்கும் வாழ்த்தைச் சொல்கிறார் பாரதியார்.

முதற்சமயமாக சமண சமயங்களைச் சொல்லவைத்த பெருமை ஔவைக் குரத்திக்குத்தான்.

ஆத்திசூடி தீர்த்தங்கரஸ்வாமி:

http://www.maotorino.it/opera.php?id=78

https://www.flickr.com/photos/magika2000/5066880525/in/photostream/

இலண்டன் விக்டோரியா & ஆல்பர்ப் ம்யூஸியத்தில்

ஆத்திசூடி தீர்த்தங்கரர்: 7-ஆம் நூற்றாண்டினது.

மிகப் பழைய சிற்பங்களில் ஆத்திசூடி காட்டப்படுவது வழக்கம்.

ஆத்தி/தாதகி மரம் பார்க்கவும் - 7-ஆம் நூற்றாண்டு:

http://www.vam.ac.uk/content/articles/j/jainism_illuminated_manuscripts-and-jain-paintings/

போதிசூடி புத்தர், ஆத்திசூடி தீர்த்தங்கரர் - இவற்றைப்

பல நூற்றாண்டுகளாய்ப் பார்த்து ஆல்சூடியாய் பொதிகைத் தெக்கிணாமூர்த்தி

தோற்றம் அடைகிறார் (7-ஆம் நூற்றாண்டு). இது மகரவிடங்கரின்

வடவ்ருக்‌ஷம் சிவனுக்காகும் நிலை. சிவனுக்கு ஆவதன் முன்னம் இதனைப்

பரிபாடல் பாடுகிறது. அந்த சங்ககால சமய நிலையை 9-ஆம் நூற்றாண்டில்

நம்மாழ்வார் அழகாக சங்கத்தாருக்கு எழுதிய அகவலில் உரைக்கிறார்.

உரைகண்டு தெளிய எழுதலாம்.

நா. கணேசன்

Nagarajan Vadivel

unread,
May 12, 2014, 11:44:13 AM5/12/14
to vallamai

2014-05-12 21:08 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
ஔவை என்னும் சமணக் குரத்தியார்

​குரத்தி என்ற ​ஒளவையின் சிறப்புப் பெயருக்கு விளக்கமும் ஆதாரமும் தேவை

சவடால்

Iyappan Krishnan

unread,
May 12, 2014, 11:44:23 AM5/12/14
to vall...@googlegroups.com, mintamil, தமிழாயம்

2014-05-12 23:38 GMT+08:00 N. Ganesan <naa.g...@gmail.com>:

போதிசூடி புத்தர், ஆத்திசூடி தீர்த்தங்கரர் - இவற்றைப்

​நவீன இரண்டாம் விக்கிரமாதித்தர் ( முதல் ஹிஹி நாந்தான்... ) திரு நாகராஜன் ஐயா வந்து போதி சூடி குறித்து மீண்டும் தன் கேள்வியை வைப்பார்.​

N. Ganesan

unread,
May 12, 2014, 11:48:08 AM5/12/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்

On Monday, May 12, 2014 8:30:10 AM UTC-7, Megala Ramamourty wrote:
அன்புள்ள திரு. ஐயப்பன் அவர்களுக்கு,

நாங்கள் வல்லமை இதழில் வெளியிட்டுள்ள ’ஆத்திசூடி யார் - ஓர் சுவையான கருத்தாடல்’ என்ற பகுதியில் ஆத்திசூடி குறித்து ’முடிந்த முடிபாக’ எதனையும் வெளியிடவில்லை. முனைவர் நா. கணேசன் அவர்களின் கருத்து என்று குறிப்பிட்டேதான் அவருடைய ‘கருத்துக்களை’ வெளியிட்டிருக்கிறோம் என்பதைக் கவனித்திருப்பீர்கள் என எண்ணுகிறேன். அவரவர் தரப்புக் கருத்துக்களை எடுத்துவைக்க அவரவர்க்கு உரிமையுண்டு அல்லவா? அந்த அடிப்படையில் இதழில் இடம்பெற்றிருப்பதே இந்தக் கருத்தாடல்!

எனவே ஆத்திசூடி குறித்து நீங்கள் ஏதேனும் கருத்துக்களைத் தெரிவிக்க விரும்பினால், அது பற்றிய உங்கள் பார்வை, எண்ணம், அதற்குப் பலம்சேர்க்கும் சான்றுகள் ஆகியவற்றையும்,  ஆத்திசூடி குறித்த பிற அறிஞர்களின் கருத்துக்களை நீங்கள் உங்கள் கட்டுரையில் மறுக்கவோ, விமர்சிக்கவோ விரும்பினால் அதற்கான ஆதாரங்கள், கருத்துக்கள், படவிளக்கங்கள் முதலியவற்றையும் சேர்த்து ஓர் கட்டுரை வடிவில்  vallama...@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள்.

உங்கள் கட்டுரையையும் விரைவில் வல்லமையில் வெளியிடுவோம்.  :-)

அன்புடன்,
மேகலா

சமண சமயத்தை ஆராயும் பேராசிரியர்கள் ஆத்திசூடி தீர்த்தங்கரர் சிற்பங்கள், அவர் ஆத்தியின் சூழலில் (சூளாமணி-சூடாமணி) ஞானம் பெற்றதைச் சொல்லும் மிகப்பழைய சமண நூல்களில் இருந்து காட்டி ஆத்தி(தாதகி) மரம் என்று ஏராளமான நூல்களில் எழுதியுள்ளனர்.
அழகாக, ஔவைக் குரத்தியாரும் தீர்த்தங்கரரைப் போற்றிப்பாடி கோடிக்கணக்கானோர் தமிழ்பயிலும் முதல்நூல் தந்துள்ளார்.
ஆத்திக்கும் பார்சுவ தீர்த்தங்கரருக்கும் தொடர்பே இல்லை, ஆத்திசூடி தீர்த்தங்கரர் சிற்பம், சித்திரங்களில் ஆத்தி இல்லை என ஆய்வுக் கட்டுரைகள் அளித்தால் படிக்கக் காத்திருக்கிறோம்.

நா. கணேசன் 

Iyappan Krishnan

unread,
May 12, 2014, 11:49:41 AM5/12/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்
:)) நீங்க ஏதோ ஒண்ணு இட்டு கட்டி சொல்லிட்டு.. அதை எங்களை இல்லைன்னு மறுக்கனுங்கறது எந்தவகைல நியாயம் ? இதுதாங்கறதுக்கு உண்டான ஆதாரம் எல்லாரும் கேட்டுட்டு இருக்கோம். ஒரு ஆதாரமாவது குடுத்தா நல்லாருக்கும்.  

ஐ மீன் ஒரு ஆதாரம் ப்ளீஸ் ?

Iyappan Krishnan

*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை எந்நாளும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**

--

N. Ganesan

unread,
May 12, 2014, 11:52:46 AM5/12/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்

On Monday, May 12, 2014 8:49:41 AM UTC-7, Iyappan Krishnan wrote:
:)) நீங்க ஏதோ ஒண்ணு இட்டு கட்டி சொல்லிட்டு.. அதை எங்களை இல்லைன்னு மறுக்கனுங்கறது எந்தவகைல நியாயம் ? இதுதாங்கறதுக்கு உண்டான ஆதாரம் எல்லாரும் கேட்டுட்டு இருக்கோம். ஒரு ஆதாரமாவது குடுத்தா நல்லாருக்கும்.  

ஐ மீன் ஒரு ஆதாரம் ப்ளீஸ் ?

ஆதாரம் பார்க்கலையா.

Iyappan Krishnan

unread,
May 12, 2014, 11:52:46 AM5/12/14
to vall...@googlegroups.com, mintamil, தமிழாயம்

​பாம்பு  இருக்கிறது. பின்னாடி இலை இருக்கிறது. அந்த இலை ஆத்தி இலை தான் என்பதற்கு உண்டான ஆதாரம் என்ன ?

​கடைசி படத்தில் குடை பிடித்திருக்கிறார்கள். சிற்பம் மிகத்தெளிவாகவே குடை பிடித்திருப்பதையும்  காண்பிக்கிறது. அதில் ஆத்தி எங்கே இருந்து வந்தது

Iyappan Krishnan

*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை எந்நாளும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**

--

Iyappan Krishnan

unread,
May 12, 2014, 11:55:01 AM5/12/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்
ஆதாரம்னு சொன்னதை மறுத்து  கேள்வி எழுப்பினா அது தான் ஆதாரம்னு சொல்லிட்டே இருந்தா அதுவா  ஆதாரம் ?

:)) அப்பத்தில இருந்து நாகராஜன் ஐயா  பல கேள்விகளை எடுத்து வச்சார். எதுக்கும் உரிய பதில் சொன்ன மாதிரி தெரியல. 

சரி பாம்புக்கும் கீரிக்கும் எப்பத்தான் சண்டை விடப் போறீங்க ? 

N. Ganesan

unread,
May 12, 2014, 11:55:16 AM5/12/14
to vall...@googlegroups.com
குரத்தி kuratti
, n. Fem. of குரவன். Jaina female ascetic; சைன தவப்பெண். ஒர் குரத்தி யோட (பெரியபு. திருஞான. 638).

குரத்தியறை என்று ஔவையார் கோவில் உள்ள மலை குமரி மாவட்டத்தில் உள்ளது
என்றும் தெரிகிறது. எஸ். பத்மநாபன் ‘தி இந்து’ கட்டுரை கொடுத்தேன்.

நா. கணேசன் 

N. Ganesan

unread,
May 12, 2014, 12:01:29 PM5/12/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்
ஔவைக் குரத்தி பாடும் தீர்த்தங்கரர். குரத்தியார் வாழ்ந்த
காலகட்டமாக இருக்கலாம்.

இலண்டன் விக்டோரியா & ஆல்பர்ப் ம்யூஸியத்தில்

ஆத்திசூடி தீர்த்தங்கரர்: 7-ஆம் நூற்றாண்டினது.

மிகப் பழைய சிற்பங்களில் ஆத்திசூடி காட்டப்படுவது வழக்கம்.

ஆத்தி/தாதகி மரம் பார்க்கவும் - 7-ஆம் நூற்றாண்டு.

Iyappan Krishnan

unread,
May 12, 2014, 12:02:13 PM5/12/14
to vall...@googlegroups.com
ஐயா அவர்கள் ஆத்தி மரம்னு ஒரு படம் போட்டு சொன்னாருங்க. 

அது கொஞ்சம் உத்து கவனிச்சா தெரியும்ங்க அது ஆலமரம்னு,. இலைகளின் பக்கத்தில் காய்கள் /கனிகள்.  அந்த படத்தை கொஞ்சம் ஜூம் செஞ்சு போட்டிருக்கேன்.  அந்த இலையின் அமைப்பையும் இலைகளுக்குப் பக்கத்தில் இருக்கும் காய்கள் என பார்த்து அவை ஆல் அல்லது ஆத்தி இரண்டி எது என்று தெளிவான முடிவுக்கு வரவும்.

Iyappan Krishnan

unread,
May 12, 2014, 12:04:03 PM5/12/14
to vall...@googlegroups.com

2014-05-13 0:01 GMT+08:00 N. Ganesan <naa.g...@gmail.com>:

ஆத்தி/தாதகி மரம் பார்க்கவும் - 7-ஆம் நூற்றாண்டு.

அய்யோ ராமா... இதுல எதுங்க ஆத்தி ?

குடையா ? இல்ல பின்னாடி நீள நீளமா போட்டிருக்கிற கோடா ? அவ்வ்வ்வ்....... குடைன்னா ஆத்தி மரத்தப் பிடிங்கி கைல பிடிச்சிருக்காங்களா :)))​

N. Ganesan

unread,
May 12, 2014, 12:06:00 PM5/12/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்

On Monday, May 12, 2014 9:01:29 AM UTC-7, N. Ganesan wrote:
ஔவைக் குரத்தி பாடும் தீர்த்தங்கரர். குரத்தியார் வாழ்ந்த
காலகட்டமாக இருக்கலாம்.

இலண்டன் விக்டோரியா & ஆல்பர்ப் ம்யூஸியத்தில்

ஆத்திசூடி தீர்த்தங்கரர்: 7-ஆம் நூற்றாண்டினது.

மிகப் பழைய சிற்பங்களில் ஆத்திசூடி காட்டப்படுவது வழக்கம்.

ஆத்தி/தாதகி மரம் பார்க்கவும் - 7-ஆம் நூற்றாண்டு.

Physical description

This sublimely beautiful sculpture illustrates Parsvanaths's triumph over Samvara in considerable detail. Parsvanatha, the 23rd Tirthankara of the Jain religion, is depicted naked beneath a Dhataki tree, seated in a meditative posture on a simhasana (lion-supported throne). Meghakumara (Samvara) has sent a great storm (symbolised by the hands and drums in stylized clouds in the upper corners) to disturb his meditations, but the serpent-king Dharanendra raises up his seven hoods to provide shelter to the Jina. Dharanendera's consort Padmavati, seen to the Jina's left, holds an umbrella to further protect Parsvanatha from the forces of the storm. The wheel of law (dharmachakra), symbolizing the Jina's teachings, is beneath the throne, supported by a squatting gana (dwarf-like attendant). Flywhisk bearers stand in attendance, and celestial figures with garlands hover beneath the rain clouds.

Place of Origin

Madhya Pradesh, India (made)

Date

7th century (made) 

Iyappan Krishnan

unread,
May 12, 2014, 12:12:40 PM5/12/14
to vall...@googlegroups.com

2014-05-13 0:06 GMT+08:00 N. Ganesan <naa.g...@gmail.com>:

Physical description

This sublimely beautiful sculpture illustrates Parsvanaths's triumph over Samvara in considerable detail. Par

​​
svanatha, the 23rd Tirthankara of the Jain religion, is depicted naked beneath a Dhataki tree, seated in a meditative posture on a simhasana (lion-supported throne). Meghakumara (Samvara) has sent a great storm (symbolised by the hands and drums in stylized clouds in the upper corners) to disturb his meditations, but the serpent-king Dharanendra raises up his seven hoods to provide shelter to the Jina. Dharanendera's consort Padmavati, seen to the Jina's left, holds an umbrella to further protect Parsvanatha from the forces of the storm. The wheel of law (dharmachakra), symbolizing the Jina's teachings, is beneath the throne, supported by a squatting gana (dwarf-like attendant). Flywhisk bearers stand in attendance, and celestial figures with garlands hover beneath the rain clouds.

Place of Origin

Madhya Pradesh, India (made)

Date

7th century (made)

அதாவது அந்த பின்னாடி நீள நீளமா நெளிச்சு வளைச்சுப் போட்டக் கோடுகள் தான் ஆத்திங்கறீங்க.   அது கிரேட் ஸ்டார்ம் ஆல் ஏற்பட்ட மழை  இல்லையா?  எனிவே... அந்த ஆல இலைக்கும் இப்படி ஒரு கட்டிங் ஒட்டிங் செஞ்சு அதை ஆத்தின்னு சொல்ல ஏதும் வழி இருக்கான்னு பாருங்க.  ?? 

Nagarajan Vadivel

unread,
May 12, 2014, 12:44:02 PM5/12/14
to vallamai
ஆலமரத்தடி என்பது சிவனுக்கும் தக்ஷினாமூர்த்திக்கும் புத்தருக்கும் என்று ஒரு ஆய்வாளர் தெரிவிப்பது கீழே

The tree symbolizes the Trimurti – Vishnu is believed to be the bark, Brahma, the roots and Shiva, the branches. Banyan also symbolises life and fertility in many Indian cultures. For this reason, banyan tree is worshipped by those who are childless and also, it is never cut.

Lord Dakshinamurthy, who is revered as the ‘ultimate guru’, is usually depicted beneath a banyan tree. He represents Lord Shiva and is seen as the embodiment of knowledge and the destroyer of ignorance.

The tree is also sacred to the Buddhists. After attaining enlightenment, Buddha is believed to have sat under a banyan tree for seven days.

அரச மரத்தின்கீழ்  புத்தர் ஞானம் பெற்றார் என்ற செய்தி கீழே

http://ecoheritage.cpreec.org/Viewcontall.php?$mFJyBfK$MA5hj$m1Rt&7c

Religious association

The peepal tree, with its heart-shaped leaves, is one of the most revered trees in India. The tree is considered as an incarnation of Lord Vishnu. The tree also symbolises the continuity of life because the tree itself lives and grows for hundreds of years. Childless couples worship the tree, tying threads of white, red and yellow silk around it to pray for progeny and rewarding parenthood.

The peepal tree is also sacred to the Buddhists, because Lord Buddha is believed to have attained enlightenment under this tree. Due to this, the peepal tree is often referred to as the Bodhi tree or the ‘tree of enlightenment’.

தீர்த்தங்கரருக்கு என்று எதுவும் இங்கே குறிப்பிடப்படவில்லை

எனவே ஆத்திசூடி மர்ந்த தேவன் சிவனா அல்லது புத்தரா என்று மட்டுமே  முடிவெடுக்கவேண்டியது ஆய்வுகாட்டும் முடிவு

சவடால்

2014-05-12 21:08 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
May 12, 2014, 12:45:52 PM5/12/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, மின்தமிழ்

On Monday, May 12, 2014 9:06:00 AM UTC-7, N. Ganesan wrote:

On Monday, May 12, 2014 9:01:29 AM UTC-7, N. Ganesan wrote:
ஔவைக் குரத்தி பாடும் தீர்த்தங்கரர். குரத்தியார் வாழ்ந்த
காலகட்டமாக இருக்கலாம்.

இலண்டன் விக்டோரியா & ஆல்பர்ப் ம்யூஸியத்தில்

ஆத்திசூடி தீர்த்தங்கரர்: 7-ஆம் நூற்றாண்டினது.

மிகப் பழைய சிற்பங்களில் ஆத்திசூடி காட்டப்படுவது வழக்கம்.

ஆத்தி/தாதகி மரம் பார்க்கவும் - 7-ஆம் நூற்றாண்டு.

Physical description

This sublimely beautiful sculpture illustrates Parsvanaths's triumph over Samvara in considerable detail. Parsvanatha, the 23rd Tirthankara of the Jain religion, is depicted naked beneath a Dhataki tree, seated in a meditative posture on a simhasana (lion-supported throne). Meghakumara (Samvara) has sent a great storm (symbolised by the hands and drums in stylized clouds in the upper corners) to disturb his meditations, but the serpent-king Dharanendra raises up his seven hoods to provide shelter to the Jina. Dharanendera's consort Padmavati, seen to the Jina's left, holds an umbrella to further protect Parsvanatha from the forces of the storm. The wheel of law (dharmachakra), symbolizing the Jina's teachings, is beneath the throne, supported by a squatting gana (dwarf-like attendant). Flywhisk bearers stand in attendance, and celestial figures with garlands hover beneath the rain clouds.

கலை வரலாற்று முனைவர்களும், சமண அறிஞர்களும், பேராசிரியர்களும் பார்சுவர் சூடி இருப்பது ஆத்தி என ஆய்வுநூல்களில் எழுதுகின்றனர்.

நா. கணேசன்
 
Nagarajan Vadivel

unread,
May 12, 2014, 12:47:53 PM5/12/14
to vallamai
முதல்வர் சொல்லுக்கு மறுப்புண்டோ  இந்திரலோகத்தில் இந்திரன் மாறினாலும் இந்திராணி நிரந்தரம் மாதிரி விக்கிரமாதித்தர்கள் எத்தனைபேர் வந்தாலும் வேதாளம் ஒன்றே

சவடால்

--

Innamburan S.Soundararajan

unread,
May 12, 2014, 12:57:50 PM5/12/14
to vall...@googlegroups.com
முதல்வர் சொல்லுக்கு மறுப்புண்டோ இந்திரலோகத்தில் இந்திரன் மாறினாலும்
இந்திராணி நிரந்தரம் மாதிரி விக்கிரமாதித்தர்கள் எத்தனைபேர் வந்தாலும்
வேதாளம் ஒன்றே

சவடால்

~ அத்தியானாலும், அரசனாலும், ஆலும் ஆனாலும், மரம் மரமே, மராமரமே!
அட ஆத்தி !

Megala Ramamourty

unread,
May 12, 2014, 1:04:30 PM5/12/14
to vall...@googlegroups.com
ஏற்கனவே சிவனாருக்கு உட்கார ஆலமரத்தடி இருக்கிறது; புத்தருக்குப் போதி மரத்தடி. தீர்த்தங்கர சாமிக்குத்தான் உட்கார இடமில்லை. பேசாமல் ஆத்தி மரத்தடியை அவருக்குக் கொடுத்துவிடுவோமே! (எல்லாம் ஒரு சமாதான முயற்சிதான்!)  :-)))

அன்புடன்,
மேகலா

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/vallamai/_ytQ2FuE0bY/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to vallamai+u...@googlegroups.com.

Nagarajan Vadivel

unread,
May 12, 2014, 1:06:21 PM5/12/14
to vallamai

2014-05-12 22:15 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
ஆத்தி/தாதகி மரம் பார்க்கவும்

​படம் தெரியல

சவடால்​

Innamburan S.Soundararajan

unread,
May 12, 2014, 1:09:04 PM5/12/14
to vall...@googlegroups.com
சமயத்தில் சமாதானம் செய்யலாமோ?

அப்றம், கனேசன், தேவ், பானு எல்லாரும் என்ன செய்வாஹ.

வேப்பமரத்தடியார் யாரு?

Iyappan Krishnan

unread,
May 12, 2014, 1:09:09 PM5/12/14
to vall...@googlegroups.com

2014-05-13 1:04 GMT+08:00 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
ஏற்கனவே சிவனாருக்கு உட்கார ஆலமரத்தடி இருக்கிறது; புத்தருக்குப் போதி மரத்தடி. தீர்த்தங்கர சாமிக்குத்தான் உட்கார இடமில்லை. பேசாமல் ஆத்தி மரத்தடியை அவருக்குக் கொடுத்துவிடுவோமே! (எல்லாம் ஒரு சமாதான முயற்சிதான்!)  :-)))

அன்புடன்,
மேகலா

​அப்படி வேணும்னா கேட்டு வாங்கிடட்டும்க்கா. ஆனா அடாவடியா இதான் என்னுதுன்னா என்ன செய்யறது :)))) ​

Nagarajan Vadivel

unread,
May 12, 2014, 1:09:39 PM5/12/14
to vallamai

2014-05-12 22:34 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
தீர்த்தங்கர சாமிக்குத்தான் உட்கார இடமில்லை

​குகை இருக்கு வெயில் மழை தாக்காமல் பள்ளி கொண்ட தீர்த்தங்கரரை ஏன் மரத்துக்குக்கீழே உட்காரவைக்கனும்

சவடால்​

Innamburan S.Soundararajan

unread,
May 12, 2014, 1:12:41 PM5/12/14
to vall...@googlegroups.com
சவடால்,

ஆத்திக்கு போட்ற கூத்திலெ நீங்க வந்து புகல் என்ன நீதி?

வேந்தன் அரசு

unread,
May 13, 2014, 7:18:44 AM5/13/14
to vallamai

12 மே, 2014 10:30 முற்பகல் அன்று, Megala Ramamourty <megala.r...@gmail.com> எழுதியது:
இது தீர்ப்பில்லை வேந்தன் ஐயா. முனைவர் நா. கணேசன் அவர்களின் கருத்துக்களின் தொகுப்பு.

ஓ உங்கள் தெளிவுபடைக்கு மிக்க நன்றி. கணேசர் ஐயா உங்களைப்போல் சுருங்க சொல்லி விளங்கவைக்க இனிமேல் முயல்வார் என எதிர்பார்க்கிறேன்
 
உங்களுக்கு சங்கத்தமிழில் புலமை இருப்பதால் சூடி எனும் சொல்லுக்கு பொருள் கொடுப்பீர்கள் என ஆவாலாக இருக்கேன்.
 
சூடி என்றால் சூழ்தல் எனும் பொருள் எனக்கு உடன்பாடு இல்லை.

வேந்தன் அரசு

unread,
May 13, 2014, 7:34:28 AM5/13/14
to vallamai, mintamil, தமிழாயம்

12 மே, 2014 11:38 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
கணேசர்

உங்க வாதம் எல்லாம் தவிடுபொடி ஆகியது
இரண்டு முதல் ஐந்துவரை மதத்தலைவர்களை ஒற்றை சொல்லாலே சொல்லவில்லை. ஒன்றாம் மதம் மட்டும் ஏன் ஆத்திசூடி எனும் ஒற்றைச்சொல். 
2, 3 ம் தெய்வங்களாகவே காட்டப்பட்டு, 3, 4  மனிதர்களாக காட்டியுள்ளார். ஒன்று??? வேறு பாடல்களில் உள்ளதுபோல் ”ஆத்திசூடி அமர்ந்த தேவனுக்”கு அருள் புரிந்தோன் என பாடி இருக்காலம்

புத்த மதம் ஏன் சொல்லப்படவில்லை? புத்தனுக்கு ஞானஒளி கொடுத்தோன் என பாடி இருக்கலாம்.

ஒன்றே தெய்வம் எனும் கோட்பாட்டில், வெண்மேனியனான சிவனே, கடல்மிசை கிடந்து, நபிக்கு அருள் புரிந்து ஏசுவுக்கு தந்தையானான் என்று  பாடுக்றார். எல்லா மத தெய்வங்களையும் அல்ல. 

இந்த வாதம் நீங்க ஏற்கமாட்டீங்க.  இருதரப்பிலும் ஈடுபடாதவங்களுக்காக சொல்லுகிறேன் 

Iyappan Krishnan

unread,
May 13, 2014, 7:36:51 AM5/13/14
to vall...@googlegroups.com, mintamil, தமிழாயம்

2014-05-13 19:34 GMT+08:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
இந்த வாதம் நீங்க ஏற்கமாட்டீங்க.  இருதரப்பிலும் ஈடுபடாதவங்களுக்காக சொல்லுகிறேன் 
வேந்தன் ஐயா :))

அவரு ஒருமுறை முடிவு பண்ணிட்டா அவர் பேச்சை அவரே கேக்க மாட்டாரு. ​

N. Ganesan

unread,
May 13, 2014, 7:41:32 AM5/13/14
to mint...@googlegroups.com, vallamai, தமிழாயம்
ஆத்தி சூடி இரண்டு சொற்கள்.
 
2, 3 ம் தெய்வங்களாகவே காட்டப்பட்டு, 3, 4  மனிதர்களாக காட்டியுள்ளார். ஒன்று??? வேறு பாடல்களில் உள்ளதுபோல் ”ஆத்திசூடி அமர்ந்த தேவனுக்”கு அருள் புரிந்தோன் என பாடி இருக்காலம்

பாரதி முதல் நூலுக்கு மதிப்பளித்து ஆத்தி சூடி என்று தொடங்குகிறார். எல்லோருக்கும் தெரிந்த ஆத்திச் சூடி அமர்ந்த தேவன் என்பதன்
குறுக்கம். 

Iyappan Krishnan

unread,
May 13, 2014, 7:43:58 AM5/13/14
to vall...@googlegroups.com, mintamil, தமிழாயம்

2014-05-13 19:41 GMT+08:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
பாரதி முதல் நூலுக்கு மதிப்பளித்து ஆத்தி சூடி என்று தொடங்குகிறார். எல்லோருக்கும் தெரிந்த ஆத்திச் சூடி அமர்ந்த தேவன் என்பதன்
குறுக்கம். 

​கூடிய விரைவில் பாம்புக்கும் கீரிக்கும் சண்டை வரப் போகுது... எல்லாரும் ஜோரா கையத் தட்டுங்கோ.......

N. Ganesan

unread,
May 13, 2014, 8:06:33 AM5/13/14
to mint...@googlegroups.com, vallamai, தமிழாயம்

On Tuesday, May 13, 2014 4:34:28 AM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:

புத்த மதம் ஏன் சொல்லப்படவில்லை? புத்தனுக்கு ஞானஒளி கொடுத்தோன் என பாடி இருக்கலாம்.

போதிசூடி புத்தருக்கு முன்னாடி வாழ்ந்தவர் ஆத்திசூடி. சமணசமயங்களுக்கு பொதுவாக ஆத்திசூடியைச் சொல்லிவிட்டார்
- ஔவைக் குரத்தி அருள்வாக்கால். மேலும், மைனாரிட்டி ரிலிஜன் புத்தம் அழிந்துவிட்டது இந்தியாவில். அப்பத்தான்
அதன் ஹிஸ்டரி தெரியவந்துகொண்டிருந்தது.
 
ஒன்றே தெய்வம் எனும் கோட்பாட்டில், வெண்மேனியனான சிவனே, கடல்மிசை கிடந்து, நபிக்கு அருள் புரிந்து ஏசுவுக்கு தந்தையானான் என்று  பாடுக்றார். எல்லா மத தெய்வங்களையும் அல்ல. 

ஏன்? நபியே சிவனாகவும், ஏசு தந்தையாயும், பள்ளிகொண்டானாகவும் இருந்தான் என்று பாடுகிறார் என்றும் சொல்லலாமே.
பாரதி “பல மதத்தினர்” என்கிறார். அவர் வங்கத்தில் உருவான நியோ-வேதாந்தவழிச் சென்றவர். எனவே எல்லோர் கடவுள்களைச் சொல்கிறார்.
சிறப்பாக, சிவனே எல்லாக் கடவுள் ஆனார்-னு பாடற மாதிரி தெரியலை.

Iyappan Krishnan

unread,
May 13, 2014, 8:08:12 AM5/13/14
to vall...@googlegroups.com
2014-05-13 19:34 GMT+08:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
இந்த வாதம் நீங்க ஏற்கமாட்டீங்க.  இருதரப்பிலும் ஈடுபடாதவங்களுக்காக சொல்லுகிறேன் 

​ஐயா ... உங்கள் வாக்கு பொய்க்கல  :)) ​

PRASATH

unread,
May 13, 2014, 8:14:43 AM5/13/14
to vallamai, mint...@googlegroups.com, தமிழாயம்
ஐயா,
 
ஆத்தி சூடி யாராக வேணும்னாலும் இருக்கட்டும்...
 
புத்தருக்கு "போதிசூடி"னு பெயர் எந்த இலக்கியங்களில், யார்யாரால் சொல்லப்பட்டிருக்கிறது அப்படின்றதுக்கு மாத்திரம் ஆதாரம், ஆதாரம் தாங்க பிளீஸ்...
 
மீண்டும், எனக்கு முன்னமே உண்மையான ஆராய்ச்சியாளர்கள் பலரும் போதிசூடி புத்தர் என குறிப்பிட்டுள்ளார்கள், அதில் சில இங்கு கொடுத்துள்ளேன் எனச் சொல்லாமல்  எனக்காக புத்தரை போதிசூடி என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் இடங்களை நீங்கள் வைத்த ஆதாரங்களில் வண்ணமிட்டாச்சும் காண்பியுங்க... எனக்கு இந்த ஆதாரம் கண்ணில் படவே இல்லை...
 
தயவு செய்யுங்க பிளீஸ்...
 
2014-05-13 17:36 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

Nagarajan Vadivel

unread,
May 13, 2014, 8:15:24 AM5/13/14
to vallamai

2014-05-13 17:13 GMT+05:30 Iyappan Krishnan <jee...@gmail.com>:
கூடிய விரைவில் பாம்புக்கும் கீரிக்கும் சண்டை வரப் போகுது... எல்லாரும் ஜோரா கையத் தட்டுங்கோ.

​ஹ்ஹூம்

நானும் 1962-ல் சென்னை மவுன்ட் ரோடில் அரசினர் கலைக் கல்லூரியில் புகுமுக வகுப்புக்குப் படிக்கும்போது எதிர்ப்புறம் கன்னிமாரா ஹோட்டல் கேட் அருகில் ஒருவர் பாம்பு கீரி சண்டை விடுவதாகச் சொல்லி உட்கார்ந்திருப்பார்

அப்பவும் சரி இப்பவும் சரி கீரி சண்டை பாம்பு பாத்ததே கிடையாத்

பாத்தவ்ங்க மட்டுக் கை தூக்கவும்

சவடால்​

PRASATH

unread,
May 13, 2014, 8:16:55 AM5/13/14
to vallamai, mint...@googlegroups.com, தமிழாயம்
சொல்ல மறந்துட்டேன்....
 
ஆத்திசூடி அமர்ந்த தேவன் னு பாட்டு இருக்குறாப்புல 
 
எதாச்சும் 
 
போதிசூடி அமர்ந்த புத்தர்னு பாட்டு இருந்தா ஆதாரம் அற்புதமானதாக இருக்கும்...

Iyappan Krishnan

unread,
May 13, 2014, 8:21:18 AM5/13/14
to vall...@googlegroups.com

2014-05-13 20:14 GMT+08:00 PRASATH <pras...@gmail.com>:
புத்தருக்கு "போதிசூடி"னு பெயர் எந்த இலக்கியங்களில், யார்யாரால் சொல்லப்பட்டிருக்கிறது அப்படின்றதுக்கு மாத்திரம் ஆதாரம், ஆதாரம் தாங்க பிளீஸ்...

​நவீன மூன்றாம் விக்கிரமாதித்தன் ​ பிரசாத் அவர்களே... வரிசையில் நிற்கவும். வேதாளம் மரத்துக்கு மரம் தாவுமே தவிர்த்து உம்மிடம் சிக்கிடுமா என்ன ? 

Nagarajan Vadivel

unread,
May 13, 2014, 8:24:19 AM5/13/14
to vallamai

2014-05-13 17:46 GMT+05:30 PRASATH <pras...@gmail.com>:
போதிசூடி அமர்ந்த புத்தர்னு பாட்டு இருந்தா ஆதாரம் அற்புதமானதாக இருக்கும்...

​அதுக்கென்னங்கய்யா

பித்தா பிறை சூடி மெட்டில் ஒரு ரீமிக்ஸ் பண்ணீட்டாப் போச்சு

சவடால்​

PRASATH

unread,
May 13, 2014, 8:24:08 AM5/13/14
to vallamai
எனக்கு பதில் கிடைக்கும் என்கிற நம்பிக்கை நூறு சதவிகிதம் இருக்கிறது...
 
2014-05-13 17:51 GMT+05:30 Iyappan Krishnan <jee...@gmail.com>:
 
Nagarajan Vadivel

unread,
May 13, 2014, 8:26:53 AM5/13/14
to vallamai
2014-05-13 17:51 GMT+05:30 Iyappan Krishnan <jee...@gmail.com>:
வேதாளம் மரத்துக்கு மரம் தாவுமே தவிர்த்து உம்மிடம் சிக்கிடுமா என்ன ? 

​ஒரு திருத்தம் ப்ளீஸ்

வேதாளம் ஆலமரம் அத்தி மரம் போதிமரம் எல்லாம் ஏறாது

ஒன்லி முருங்கைமரம்

​சவடால்

Iyappan Krishnan

unread,
May 13, 2014, 8:27:26 AM5/13/14
to vall...@googlegroups.com, mintamil

On 13 May 2014 20:24, PRASATH <pras...@gmail.com> wrote:
எனக்கு பதில் கிடைக்கும் என்கிற நம்பிக்கை நூறு சதவிகிதம் இருக்கிறது...

​அப்படியே ஆலமரத்திலை எப்படி ஆத்தி இலையாச்சுன்னும் ஒரு விவரம் கேட்டு சொல்லு. இல்லாட்டி அது  “தட் .. வெள்ளயா இருக்கவன் பொய் சொல்லமாட்டான்யா “ மூமெண்ட்டான்னும் கேட்டுச் சொல்லவும். ​

PRASATH

unread,
May 13, 2014, 8:29:55 AM5/13/14
to vallamai, mintamil
முதலில் எனக்கு தேவையானது, பிறகு தான் மத்ததெல்லாம்... ம்க்கும்...

PRASATH

unread,
May 13, 2014, 8:32:57 AM5/13/14
to vallamai
அவசியம் இருக்காது என நம்புகிறேன் ஐயா...
 
நமக்குத் தெரியாத சங்க இலக்கியங்களில் எங்கேனும் கணேசன் ஐயா போதிசூடி என்னும் விளியைப் புத்தருக்கு பயன்படுத்தி இருப்பதைக் கண்டிருக்கலாம் அல்லவா...
 
காத்திருப்போம்...
 
அன்றேல், தாங்கள் சொல்லிய விதம் ஒரு பாடல் எழுதுவதைப் பற்றி சிந்திக்கலாம்...  

N. Ganesan

unread,
May 13, 2014, 8:48:05 AM5/13/14
to mint...@googlegroups.com, vallamai, mintamil

On Tuesday, May 13, 2014 5:29:55 AM UTC-7, பிரசாத் வேணுகோபால் wrote:
முதலில் எனக்கு தேவையானது, பிறகு தான் மத்ததெல்லாம்... ம்க்கும்...

என்ன தேவை ஐயா?

நா. கணேசன் 

PRASATH

unread,
May 13, 2014, 8:50:15 AM5/13/14
to vallamai, mint...@googlegroups.com
தேவை 1
 
//
புத்தருக்கு "போதிசூடி"னு பெயர் எந்த இலக்கியங்களில், யார்யாரால் சொல்லப்பட்டிருக்கிறது அப்படின்றதுக்கு மாத்திரம் ஆதாரம், ஆதாரம் தாங்க பிளீஸ்...
மீண்டும், எனக்கு முன்னமே உண்மையான ஆராய்ச்சியாளர்கள் பலரும் போதிசூடி புத்தர் என குறிப்பிட்டுள்ளார்கள், அதில் சில இங்கு கொடுத்துள்ளேன் எனச் சொல்லாமல் எனக்காக புத்தரை போதிசூடி என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் இடங்களை நீங்கள் வைத்த ஆதாரங்களில் வண்ணமிட்டாச்சும் காண்பியுங்க... எனக்கு இந்த ஆதாரம் கண்ணில் படவே இல்லை...//
 
தேவை 2
 
//
ஆத்திசூடி அமர்ந்த தேவன் னு பாட்டு இருக்குறாப்புல
எதாச்சும்
போதிசூடி அமர்ந்த புத்தர்னு பாட்டு இருந்தா ஆதாரம் துல்லியமானதாக இருக்கும்...
//
 
N. Ganesan

unread,
May 13, 2014, 8:56:02 AM5/13/14
to mint...@googlegroups.com, vallamai
பிரசாத் ஐயா,

சூடுதல் என்றால் குடைபோல் கவிந்து சூழ்தல் என்பது சங்க இலக்கியம்.
ஆத்தி சூடி = ஆத்தி கவிகை ஆக இருக்கும் தீர்த்தங்கரர். ஆத்தி - ஞானமரம்.
போதி சூடி = அரைசு கவிகை ஆக இருக்கும் புத்தர். போதி - ஞானமரம்.

நா. கணேசன்

//
ஆத்திசூடி அமர்ந்த தேவன் னு பாட்டு இருக்குறாப்புல
எதாச்சும்
போதிசூடி அமர்ந்த புத்தர்னு பாட்டு இருந்தா ஆதாரம் துல்லியமானதாக இருக்கும்...
//
 
ஆம்.

வேந்தன் அரசு

unread,
May 13, 2014, 8:57:28 AM5/13/14
to vallamai, mintamil, தமிழாயம்

13 மே, 2014 7:34 முற்பகல் அன்று, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> எழுதியது:
”ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்” என பாரதியே பாடியதால், ஈசனையே பிற மத கடவுளராகவும் அவர் மதிக்கிறார்.

பாரதி 20 நூற்றாண்டு கவிஞன். அதானால் அவன் பாட்டில்  வலிய திணிக்கவேண்டிய தேவை இல்லாத எளிமை இருக்கு. (வள்ளுவனும் அப்படித்தான். ஆனால் 20 நூற்றாண்டுகள் ஓடிய பெற்றியால் நமக்குதான் குழப்பம்). நான் நேரடி பொருளையே ஏற்பேன்.

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
May 13, 2014, 9:00:27 AM5/13/14
to vall...@googlegroups.com, mintamil, தமிழாயம்
ஈஸ்வரன்/ஈசன் என்று பெருமாளுக்கும் பெயர். நீங்க சிவன் = ஈசன் என்று எடுக்கிறீர்கள்.
ஒரு வரி ஆராய்ச்சிக்கு போதும். ஆனால், ஈசன் என்றால் என்ன பொருள் என்பது முழுமைக்கும் பொருந்துமா?

PRASATH

unread,
May 13, 2014, 9:04:08 AM5/13/14
to vallamai, mint...@googlegroups.com
கணேசன் ஐயா,
 
சூடுதல் என்றால் குடைபோல் கவிந்து சூழ்தல் என்பது சங்க இலக்கியம் என்னும் கருத்தினை முன் வைத்து 
 
போதி மரம் புத்தரை குடைப் போல் கவிழ்ந்து சூழ்ந்திருப்பதால், புத்தருக்குத் தாங்களாக வைத்த விளி இந்த போதிசூடி என எடுத்துக் கொள்ளலாமா????
 
2014-05-13 18:26 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
பிரசாத் ஐயா,

சூடுதல் என்றால் குடைபோல் கவிந்து சூழ்தல் என்பது சங்க இலக்கியம்.
ஆத்தி சூடி = ஆத்தி கவிகை ஆக இருக்கும் தீர்த்தங்கரர். ஆத்தி - ஞானமரம்.
போதி சூடி = அரைசு கவிகை ஆக இருக்கும் புத்தர். போதி - ஞானமரம்.

நா. கணேசன்

//
ஆத்திசூடி அமர்ந்த தேவன் னு பாட்டு இருக்குறாப்புல
எதாச்சும்
போதிசூடி அமர்ந்த புத்தர்னு பாட்டு இருந்தா ஆதாரம் துல்லியமானதாக இருக்கும்...
//
 
ஆம்.
 
இத்தகைய ஆதாரங்கள் இருக்கிறதா இல்லையா???? இதற்கு உண்டு / இல்லை என பதில் சொல்லவும்.
 
அன்றேல், இருக்கலாம், இத்தகைய தரவுகளைத் தேடுகிறேன். கிடைத்ததும் பகிர்கிறேன் எனவும் சொல்லலாம்... 
 
மேலும்,
 
"சூடுதல் என்றால் குடைபோல் கவிந்து சூழ்தல் என்பது சங்க இலக்கியம்" எனக் குறிப்பிட்டுள்ளீர்கள்...
 
சங்க இலக்கிய பாடல்களைத் தரவுகளாக இதற்கு தர இயலுமா.... 

N. Ganesan

unread,
May 13, 2014, 9:09:00 AM5/13/14
to mint...@googlegroups.com, vallamai

On Tuesday, May 13, 2014 6:04:08 AM UTC-7, பிரசாத் வேணுகோபால் wrote:
கணேசன் ஐயா,
 
சூடுதல் என்றால் குடைபோல் கவிந்து சூழ்தல் என்பது சங்க இலக்கியம் என்னும் கருத்தினை முன் வைத்து 
 
போதி மரம் புத்தரை குடைப் போல் கவிழ்ந்து சூழ்ந்திருப்பதால், புத்தருக்குத் தாங்களாக வைத்த விளி இந்த போதிசூடி என எடுத்துக் கொள்ளலாமா????
 
உங்கள் விருப்பம் ஐயா.

Nagarajan Vadivel

unread,
May 13, 2014, 9:09:30 AM5/13/14
to vallamai

2014-05-13 18:26 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
போதி சூடி = அரைசு கவிகை ஆக இருக்கும் புத்தர். போதி - ஞானமரம்

​கி.பி 2 ஆம் நூற்றாண்டின் அமராவதிச் சிற்பம்

சவடால் வைத்தி

​​

Iyappan Krishnan

unread,
May 13, 2014, 9:11:22 AM5/13/14
to vall...@googlegroups.com

On Tuesday, May 13, 2014 6:04:08 AM UTC-7, பிரசாத் வேணுகோபால் wrote:
கணேசன் ஐயா,
 
சூடுதல் என்றால் குடைபோல் கவிந்து சூழ்தல் என்பது சங்க இலக்கியம் என்னும் கருத்தினை முன் வைத்து 
 
போதி மரம் புத்தரை குடைப் போல் கவிழ்ந்து சூழ்ந்திருப்பதால், புத்தருக்குத் தாங்களாக வைத்த விளி இந்த போதிசூடி என எடுத்துக் கொள்ளலாமா????
 
உங்கள் விருப்பம் ஐயா.
 
​அடாடா... என்ன மாதிரியான ஆதாரங்கள். பதிலில் மனம் குளிர்ந்ததா பிரசாத் ஐயா :))) சீனியர்களை விட்டு தானே முன் சென்று பதில் வாங்கலாம்னு நினைச்சா நடக்குமான்னேன்.... ஐயா யாருன்னு நினைச்சுட்டு இருக்க.... 

N. Ganesan

unread,
May 13, 2014, 9:12:37 AM5/13/14
to mint...@googlegroups.com, vallamai

On Tuesday, May 13, 2014 6:09:00 AM UTC-7, N. Ganesan wrote:

மேலும்,
 
"சூடுதல் என்றால் குடைபோல் கவிந்து சூழ்தல் என்பது சங்க இலக்கியம்" எனக் குறிப்பிட்டுள்ளீர்கள்...
 
சங்க இலக்கிய பாடல்களைத் தரவுகளாக இதற்கு தர இயலுமா.... 

மேகலா என் மடலில் இருந்து கொடுத்துள்ளாரே. படிக்கவில்லையா?

PRASATH

unread,
May 13, 2014, 9:13:02 AM5/13/14
to vallamai, mint...@googlegroups.com
2014-05-13 18:39 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

On Tuesday, May 13, 2014 6:04:08 AM UTC-7, பிரசாத் வேணுகோபால் wrote:
கணேசன் ஐயா,
 
சூடுதல் என்றால் குடைபோல் கவிந்து சூழ்தல் என்பது சங்க இலக்கியம் என்னும் கருத்தினை முன் வைத்து 
 
போதி மரம் புத்தரை குடைப் போல் கவிழ்ந்து சூழ்ந்திருப்பதால், புத்தருக்குத் தாங்களாக வைத்த விளி இந்த போதிசூடி என எடுத்துக் கொள்ளலாமா????
 
உங்கள் விருப்பம் ஐயா.
 
இதில் என் விருப்பம் எங்கிருந்து வருகிறது....
 
தாங்கள் இதுகாறும் புத்தரை போதிசூடி என பல இடங்களில் குறிப்பிட்டுள்ளீர்கள்.... அவ்வாறு இதற்கு முன்னமே எவரேனும் குறிப்பிட்டுள்ளார்களா அல்லது தாங்கள் தான் துவக்கி வைத்துள்ளீர்களா எனக் கேட்டால் என் விருப்பத்திற்கு எடுத்துக் கொள்ளலாம் எனச் சொல்வது எத்தகைய பதில்...
 
2014-05-13 18:26 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

பிரசாத் ஐயா,

சூடுதல் என்றால் குடைபோல் கவிந்து சூழ்தல் என்பது சங்க இலக்கியம்.
ஆத்தி சூடி = ஆத்தி கவிகை ஆக இருக்கும் தீர்த்தங்கரர். ஆத்தி - ஞானமரம்.
போதி சூடி = அரைசு கவிகை ஆக இருக்கும் புத்தர். போதி - ஞானமரம்.

நா. கணேசன்

//
ஆத்திசூடி அமர்ந்த தேவன் னு பாட்டு இருக்குறாப்புல
எதாச்சும்
போதிசூடி அமர்ந்த புத்தர்னு பாட்டு இருந்தா ஆதாரம் துல்லியமானதாக இருக்கும்...
//
 
ஆம்.
 
இத்தகைய ஆதாரங்கள் இருக்கிறதா இல்லையா???? இதற்கு உண்டு / இல்லை என பதில் சொல்லவும்.
 
அன்றேல், இருக்கலாம், இத்தகைய தரவுகளைத் தேடுகிறேன். கிடைத்ததும் பகிர்கிறேன் எனவும் சொல்லலாம்... 
 
மேலும்,
 
"சூடுதல் என்றால் குடைபோல் கவிந்து சூழ்தல் என்பது சங்க இலக்கியம்" எனக் குறிப்பிட்டுள்ளீர்கள்...
 
சங்க இலக்கிய பாடல்களைத் தரவுகளாக இதற்கு தர இயலுமா.... 
 
பதிலளிக்காத பிற கேள்விகளுக்கு நான் என்ன பதில் என்று எடுத்துக் கொள்வது.... 

PRASATH

unread,
May 13, 2014, 9:18:17 AM5/13/14
to vallamai, mint...@googlegroups.com
மிக்க நன்றி... படித்துப் பார்க்கிறேன் ஐயா...
 
எனது இன்னும் இரு கேள்விகளுக்கு நேரடியான பதிலை தங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்...
 
கேள்வி 1
 
போதிசூடி என்னும் பெயர், புத்தருக்கு விளியாக முதன்முதலில் எங்கு யாரால் பயன்படுத்தப்பட்டது? அல்லது தாங்களாக அவ்வாறு குறிப்பிடுகிறீர்களா...
 
கேள்வி 2
 
போதிசூடி அமர்ந்த புத்தர் எனச் சொல்வதற்கு சங்க இலக்கிய ஆதாரம் ஏதும் இருக்கிறதா இல்லையா? ஆதாரம் இருந்தால் சுட்டியாகத் தராமல் பாடல்களைப் பகிரவும்...

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
May 13, 2014, 9:20:03 AM5/13/14
to mint...@googlegroups.com, vallamai
On Tuesday, May 13, 2014 6:13:02 AM UTC-7, பிரசாத் வேணுகோபால் wrote:

இதில் என் விருப்பம் எங்கிருந்து வருகிறது....

ஆத்திசூடி, போதிசூடி என்பவர்கள் பற்றிய ஆராய்ச்சியில் விருப்பம் தெரிவிக்கிறீர்கள்.
அதைக் குறிப்பிட்டேன். 

ஆய்வுலக நண்பர்கள் ஆத்திசூடி தீர்த்தங்கரர் அல்லர் என்று ஆய்வுக்
கட்டுரை எழுதினால் படித்து மறுமொழி அளிக்கலாம்.

Iyappan Krishnan

unread,
May 13, 2014, 9:21:26 AM5/13/14
to vall...@googlegroups.com

2014-05-13 21:20 GMT+08:00 N. Ganesan <naa.g...@gmail.com>:

​ஐயா :)) 

பிரசாத்தின் கேள்வி தெளிவாக இருக்கிறது.  இது ஒன்றும் ராக்கெட் சைன்ஸ் இல்லைங்களே... இப்படி போட்டு குழப்பிக்க :)))​

N. Ganesan

unread,
May 13, 2014, 9:23:45 AM5/13/14
to vall...@googlegroups.com

On Tuesday, May 13, 2014 6:21:26 AM UTC-7, Iyappan Krishnan wrote:

2014-05-13 21:20 GMT+08:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
On Tuesday, May 13, 2014 6:13:02 AM UTC-7, பிரசாத் வேணுகோபால் wrote:

இதில் என் விருப்பம் எங்கிருந்து வருகிறது....

ஆத்திசூடி, போதிசூடி என்பவர்கள் பற்றிய ஆராய்ச்சியில் விருப்பம் தெரிவிக்கிறீர்கள்.
அதைக் குறிப்பிட்டேன். 

ஆய்வுலக நண்பர்கள் ஆத்திசூடி தீர்த்தங்கரர் அல்லர் என்று ஆய்வுக்
கட்டுரை எழுதினால் படித்து மறுமொழி அளிக்கலாம்.

​ஐயா :)) 

பிரசாத்தின் கேள்வி தெளிவாக இருக்கிறது.  இது ஒன்றும் ராக்கெட் சைன்ஸ் இல்லைங்களே... இப்படி போட்டு குழப்பிக்க :)))​

உங்கள் ஆய்வுக் கட்டுரை படிக்க அறிஞர்கள் காத்துள்ளனர்.

PRASATH

unread,
May 13, 2014, 9:24:57 AM5/13/14
to vallamai, mint...@googlegroups.com
நான் மறுபடியும் சொல்கிறேன்....
 
எனது கேள்வி ஆத்திசூடி தீர்த்தங்கரரா, தீர்த்தங்கரர் அல்லாதவரா என்பது அல்ல...
 
எனது கேள்வி,
புத்தரை போதி மரம் கவிழ்ந்திருப்பதால் போதிசூடி என்னும் பெயர் கொண்டு தாங்கள் அழைக்கிறீர்களா
 
அல்லது 
 
போதிசூடி என்னும் பெயர் புத்தருக்கு பழங்காலத்திலேயே உள்ளதென்றால் எந்த நூற்றாண்டுகளிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது... சங்க இலக்கிய ஆதாரங்கள் அதற்கு வேண்டும் என்பதே...

N. Ganesan

unread,
May 13, 2014, 9:26:14 AM5/13/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
On Tuesday, May 13, 2014 6:18:17 AM UTC-7, பிரசாத் வேணுகோபால் wrote:
மிக்க நன்றி... படித்துப் பார்க்கிறேன் ஐயா...
 
படித்துப் பாருங்கள் ஐயா. தங்கள் ஆராய்ச்சிகளுக்கு உதவும்.

N. Ganesan

unread,
May 13, 2014, 9:31:22 AM5/13/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
On Tuesday, May 13, 2014 6:18:17 AM UTC-7, பிரசாத் வேணுகோபால் wrote:

போதிசூடி அமர்ந்த புத்தர் எனச் சொல்வதற்கு சங்க இலக்கிய ஆதாரம் ஏதும் இருக்கிறதா இல்லையா? ஆதாரம் இருந்தால் சுட்டியாகத் தராமல் பாடல்களைப் பகிரவும்...

ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு கேள்வி. சங்க இலக்கியத்தில் புத்தர் பற்றிப் பேசப்படுகிறதா?
ஆதாரம் இருந்தால் சுட்டியாகத் தராமல் பாடல்களைப் பகிரவும்...

நா. கணேசன்
 
Iyappan Krishnan

unread,
May 13, 2014, 9:44:01 AM5/13/14
to vall...@googlegroups.com
பிரசாத்... கையப் புடிச்சு இழுத்தியா... 
என்ன கைய புடிச்சு இழுத்தியா...

பாவம் பிரசாத்து.... :))) ​

2014-05-13 21:31 GMT+08:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு கேள்வி. சங்க இலக்கியத்தில் புத்தர் பற்றிப் பேசப்படுகிறதா?
ஆதாரம் இருந்தால் சுட்டியாகத் தராமல் பாடல்களைப் பகிரவும்...

நா. கணேசன்

N. Ganesan

unread,
May 13, 2014, 9:47:43 AM5/13/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்

On Tuesday, May 13, 2014 4:18:44 AM UTC-7, வேந்தன் அரசு wrote:

12 மே, 2014 10:30 முற்பகல் அன்று, Megala Ramamourty <megala.r...@gmail.com> எழுதியது:
இது தீர்ப்பில்லை வேந்தன் ஐயா. முனைவர் நா. கணேசன் அவர்களின் கருத்துக்களின் தொகுப்பு.

ஓ உங்கள் தெளிவுபடைக்கு மிக்க நன்றி. கணேசர் ஐயா உங்களைப்போல் சுருங்க சொல்லி விளங்கவைக்க இனிமேல் முயல்வார் என எதிர்பார்க்கிறேன்
 
உங்களுக்கு சங்கத்தமிழில் புலமை இருப்பதால் சூடி எனும் சொல்லுக்கு பொருள் கொடுப்பீர்கள் என ஆவாலாக இருக்கேன்.
 
சூடி என்றால் சூழ்தல் எனும் பொருள் எனக்கு உடன்பாடு இல்லை.

சங்க இலக்கியத்தில் இருந்து சூடுதல் என்றால் சூழ்ந்து கவிந்து இருத்தல் என்னும் பொருள் காட்டியிருக்கிறேன்.
அதை திருநிறை. மேகலை அளித்துள்ளார் - இழையின் முதல்மடலிலே. பார்க்கவும்.

அதனால் தான், ஔவைக் குரத்தியார் ஏத்தும் ஆத்திசூடி என்ற பெயர் தீர்த்தங்கரருக்கு என விளங்குகிறது.
பழைய 2200 ஆண்டு சமண கலைகள், இலக்கியங்கள் காட்டுவதும் அதனையே. 

நா. கணேசன்
 
--

N. Ganesan

unread,
May 13, 2014, 9:57:23 AM5/13/14
to vall...@googlegroups.com, vall...@googlegroups.com
Thanks, Professor. Nice sculpture showing the Bodhi tree's importance in Buddhism,
Likewise, in Theerthankar Parsvanathar's life the Aaththi tree is significant as we
see in Arts and Literature.

NG
 
N. Ganesan

unread,
May 13, 2014, 10:09:34 AM5/13/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்
சூடுதல் - கவிகை போற் சூழ்தல் (ஆதாரம்: சங்க இலக்கியம்). இப்பொருளில் போதிசூடியாய் புத்தரும், 
ஆத்திசூடியாய் தீர்த்தங்கரரும் இருப்பதை விளக்கியாயிற்று. தேவாரத்திலும் சிவன் திருமேனியில் 
ஆத்தியே காணோம். அதனால் தான் ஔவைக் குரத்தியின் ஆத்திசூடி கடவுள்வாழ்த்திற்குச் சிவன் 
என்ற பொருளைச் சொல்லுதல் சிறவாமல் இருக்கிறது.  ’ஆத்திசூடி அமர்ந்த தேவன்’ என்னும் ஆய்வுக் 
கட்டுரையைப் பூர்த்திசெய்து ஆய்விதழுக்கு அனுப்புகிறேன். போதிசூடி அல்லர் புத்தர் என்றோ, ஆத்திசூடி 
அல்லர்  தீர்த்தங்கரர் என்றோ ஆய்வுகளால் நிறுவமுடியாது என நினைக்கிறேன். போதிசூடி புத்தர்
பெருமான், ஆத்திசூடி தீர்த்தங்கரசாமி சிலைகளைப் பார்த்து சில நூற்றாண்டுகள் சென்றபின்னர்
பல்லவர் காலத்தில் தட்சிணாமூர்த்தி சிலைகள் தமிழகத்தில் தோற்றங்கொள்கின்றன.

காலவாரியாகப் பார்த்தால் தமிழகத்தின் சமய வளர்ச்சி முதலில் சமண சமயங்கள், பின்னர்
சைவம், வைணவம் பக்தி மார்க்க வளர்ச்சி இவற்றை துல்லியமாக அறியக் கூடும்.

நா. கணேசன்
 
On Tuesday, May 13, 2014 6:09:30 AM UTC-7, சவடால் வைத்தி wrote:

Iyappan Krishnan

unread,
May 13, 2014, 10:11:14 AM5/13/14
to vall...@googlegroups.com

On 13 May 2014 21:57, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
Thanks, Professor. Nice sculpture showing the Bodhi tree's importance in Buddhism,
Likewise, in Theerthankar Parsvanathar's life the Aaththi tree is significant as we
see in Arts and Literature.

​:))

ஒரு பையன் கிட்ட க்ளாஸ் டீச்சர்  “ மரம் “ பற்றிய கட்டுரை நாளைக்கு எழுதனும் ​அப்படின்னாங்க. அந்த பையன் கூகிள், யாஹூ  முதலான ஆய்வாளர்களிடம் பேசி  மரம் பற்றிய தகவல்களை சேகரித்து வைச்சுக்கிட்டான்.  மறு நாள் ஸ்கூல் போனதும் டீச்சருக்கு மூடு மாறிட்டு.  மரம் வேண்டாம்.... பசு பத்தின கட்டுரை எழுதுங்கன்னுட்டாங்க.  உடனே பையன் கட்டுரை எழுதினான்.

மரம் மிகவும் பயனுள்ளது. காய்கனிகள் தரவல்லது. மரத்தினால் மழை பொழிகிறது. மரம் இல்லையேல் மனிதர்கள் மட்டுமல்ல எந்த உயிர்களும் இல்லைன்னு...  மரத்தின் பெருமைகளை பத்து பக்கத்துக்கு எழுதிட்டு கடைசியா எழுதினான்.. 

இப்படியான அருமைகளும் பெருமைகளும் கொண்ட மரத்தில் பசு மாடு கட்டலாம். ’

என்று முடித்தான். மேலே படித்ததும் அந்த நினைவு வந்துவிட்டது :)))

துரை.ந.உ

unread,
May 13, 2014, 10:20:34 AM5/13/14
to வல்லமை

ஹா ஹா ஹா ..கொஞ்சம் விட்டுப் பிடிங்க :))))

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

N. Ganesan

unread,
May 13, 2014, 10:23:28 AM5/13/14
to vall...@googlegroups.com

On Tuesday, May 13, 2014 7:20:34 AM UTC-7, துரை.ந.உ wrote:

ஹா ஹா ஹா ..கொஞ்சம் விட்டுப் பிடிங்க :))))

ஆராய்ச்சிக் கட்டுரை எழுதுவார். நிறைய பழக்கம்
முனைவர்களுடன் தொழிலில், ஆராய்ச்சிகளில்.
காத்திருப்போம்.

நா. கணேசன் 

Iyappan Krishnan

unread,
May 13, 2014, 10:39:12 AM5/13/14
to vall...@googlegroups.com
எப்படி இலைகளெல்லாம் ஆத்தி, தேவனெல்லாம் பார்ஸ்வநாதர், தமிழெல்லாம் சைவம் என்று நீங்கள் கருதுவது போல .. கமெண்டெல்லாம் உங்களுக்கேன்னு எடுத்துக்கிட்டீங்க போல. :)) 

எனக்கு புருடா கட்டுரைல்லாம் எழுதி நாலு பேரு கிட்ட பெத்த பேர்வாங்கிக்கனும்னு ஆசை இல்லைங்க.  அதுக்குன்னே இருக்கிறாங்க சில பேர். ஆட்டைத் தூக்கி மாட்டுல போட்டு மாட்டைத் தூக்கி ஆட்டுல போட்டு... யானைய குருதையாக்கி குருதைய யானையாக்கி... நமக்கு இந்த மாதிரி புரட்டெல்லாம் வராதுங்க...  

ப்ரூடா ஆய்வு என்பது ப்ரூடா ஆதாரத்துடன் செய்ய வேண்டியது. ...ப்ரூடா முனைவர் பட்டம் வாங்கியவர்களே தொடரவேண்டும்...  :)))  நானில்லை. 

Iyappan Krishnan

*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை எந்நாளும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/vallamai/_ytQ2FuE0bY/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
May 13, 2014, 10:43:06 AM5/13/14
to vall...@googlegroups.com

On Tuesday, May 13, 2014 7:39:12 AM UTC-7, Iyappan Krishnan wrote:
எப்படி இலைகளெல்லாம் ஆத்தி, தேவனெல்லாம் பார்ஸ்வநாதர், தமிழெல்லாம் சைவம் என்று நீங்கள் கருதுவது போல .. 

அப்படி நான் கருதவில்லை.

பெரிய ஆராய்ச்சியாளர் நீங்க-னு கருதறேன். நிறைய ஆராய்ச்சி கட்டுரை எழுதவும்.

நா. கணேசன் 

Iyappan Krishnan

unread,
May 13, 2014, 10:47:38 AM5/13/14
to vall...@googlegroups.com

2014-05-13 22:43 GMT+08:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
On Tuesday, May 13, 2014 7:39:12 AM UTC-7, Iyappan Krishnan wrote:
எப்படி இலைகளெல்லாம் ஆத்தி, தேவனெல்லாம் பார்ஸ்வநாதர், தமிழெல்லாம் சைவம் என்று நீங்கள் கருதுவது போல .. 

அப்படி நான் கருதவில்லை.
​மன்னிக்கவும். 

தமிழெல்லாம் சமணம் என்று வந்திருக்க வேண்டும். தவறு தான் :))

N. Ganesan

unread,
May 13, 2014, 10:49:16 AM5/13/14
to vall...@googlegroups.com

On Tuesday, May 13, 2014 7:47:38 AM UTC-7, Iyappan Krishnan wrote:

அப்படி நான் கருதவில்லை. முனைவர்களும் கருதுவதாக தெரியவில்லை.

Iyappan Krishnan

unread,
May 13, 2014, 10:49:53 AM5/13/14
to vall...@googlegroups.com

2014-05-13 22:43 GMT+08:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
பெரிய ஆராய்ச்சியாளர் நீங்க-னு கருதறேன். நிறைய ஆராய்ச்சி கட்டுரை எழுதவும்.

​படத்தில் இருப்பது ஆலமரம்னு படம் போட்டு விளக்கியாச்சு. அதுக்கு பதில் சொல்லச் சொன்னா என்னை முனைவர்/ஆராய்ச்சியாளர்னு ஆரம்பிப்பீங்க.  உங்க கிட்ட எஸ்கேப்பிசம் பயில வேண்டும். மிக நன்றாக செய்கிறீர்கள்.  உண்மையில் அது எனக்கு  கடினமான கலையும் கூட. ​

Iyappan Krishnan

unread,
May 13, 2014, 10:50:20 AM5/13/14
to vall...@googlegroups.com

2014-05-13 22:49 GMT+08:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
அப்படி நான் கருதவில்லை. முனைவர்களும் கருதுவதாக தெரியவில்லை.

​அட? நீங்கள் வேறு முனைவர்கள் வேறா.... :)) ​

N. Ganesan

unread,
May 13, 2014, 10:54:47 AM5/13/14
to vall...@googlegroups.com
On Tuesday, May 13, 2014 7:50:20 AM UTC-7, Iyappan Krishnan wrote:

2014-05-13 22:49 GMT+08:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
அப்படி நான் கருதவில்லை. முனைவர்களும் கருதுவதாக தெரியவில்லை.

​அட? நீங்கள் வேறு முனைவர்கள் வேறா.... :)) ​

முனைவர் ஒருவரா? உங்களுக்கு தெரியாததா? 
நீங்கள் உங்கள் ஆராய்ச்சிகளில் எவ்வளவு முனைவர்களோடு பழகுகிறீர்கள் அல்லவா?
எனக்கும் கணியுலக முனைவர்கள் பலரைத் தெரியும்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
May 13, 2014, 10:56:59 AM5/13/14
to vall...@googlegroups.com

On Tuesday, May 13, 2014 7:47:38 AM UTC-7, Iyappan Krishnan wrote:

2014-05-13 22:43 GMT+08:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
On Tuesday, May 13, 2014 7:39:12 AM UTC-7, Iyappan Krishnan wrote:
எப்படி இலைகளெல்லாம் ஆத்தி, தேவனெல்லாம் பார்ஸ்வநாதர், தமிழெல்லாம் சைவம் என்று நீங்கள் கருதுவது போல .. 

அப்படி நான் கருதவில்லை.
​மன்னிக்கவும். 

தமிழெல்லாம் சமணம் என்று வந்திருக்க வேண்டும். தவறு தான் :))

முனைவர்களும், ஆராய்ச்சியாளர்களும் அவ்வாறு கருதுவதில்லை என தெரிகிறது.

Iyappan Krishnan

unread,
May 13, 2014, 11:18:10 AM5/13/14
to vall...@googlegroups.com

2014-05-13 22:56 GMT+08:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
முனைவர்களும், ஆராய்ச்சியாளர்களும் அவ்வாறு கருதுவதில்லை என தெரிகிறது.

​அப்பாடா,  முதன் முதலாக “ முனைவர்கள் அப்படித்தான் கருதுகிறார்கள்/ அப்படி கருதவில்லை “ என்று முன் முடிவோடு வருவதை விட்டு  அவ்வாறு கருதுவதில்லை ”என தெரிகிறது“​ ஒரு ஐயத்துடன் முடித்திருக்கிறீர்கள். நல்ல முன்னேற்றம். இப்படியே பழகினால் உண்மையான ஆய்வு கை கூடக் கூடும். எதையுமே தான் சொன்னது தான் சரி என்று இல்லாமல், பல நோக்கில் ஆராய்ந்து பார்ப்பது நல்லது தான். ஆய்வின் அடிப்படையே அதானாம். 

Nagarajan Vadivel

unread,
May 13, 2014, 11:28:31 AM5/13/14
to vallamai
​இந்த ஆட்டம் பெரியாரும் குன்றக்குடி அடிகளாரும் சேர்ந்து ஆடிய ஆட்ட வகையைச் சேர்ந்தது

கடவுள் இல்லைன்னு பெரியாராலும் நிறுவ முடியாது கடவுள் உண்டென்று அடிகளாராலும் நிறுவ முடியாது

இதை உணர்ந்த அவர்கள் கருத்து மோதலுக்கு இடம் கொடுத்ததே கிடையாது

உன் கருத்து உனக்கு என் கருத்து எனக்கு வெளியிடும்போது நமக்குத் தெரியாத கருத்துக்கள் நிறையக் கிடைக்கும்

கணேசனார் இணையத்தில் ஒரு நடமாடும் தகவல் களஞ்சியம்.  அவர் சொந்தக் கருத்தாக எதையும் வெளியிடும்போது மற்ற ஆய்வாளர்கள் முனைவர்களின் கருத்தை மட்டும் முன் வைக்கிறார்

அவர் கொடுப்பதில் மணியானவற்றைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தப் பொறுமை வேண்டும்

சவடால் வைத்தி

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

PRASATH

unread,
May 13, 2014, 12:06:25 PM5/13/14
to vallamai, mint...@googlegroups.com
இதன் மூலம் தாங்கள் சொல்ல வருவது யாதெனின், புத்தர் பற்றி பேசப்படும் சங்க இலக்கியங்கள் யாதிமில. மேலும், தனக்கு பிடித்தவர்களைச் செல்ல பெயர்கள் வைத்து அழைப்பது போல (அவர்கள் கடவுளரே ஆயினும்) புத்தரைத் தாங்கள் போதிசூடி என அழைத்து வருகிறீர்கள்...

ஆனால் போதிசூடி என்பதை ஏனோ தானோ என்றில்லாமல், சூடுதல்(சூழ்தல்) என்னும் பொருள் தருமாறு போதிசூடி என்பதை பொருளோடே வைத்திருப்பதாக தெரிகிறது உங்கள் வாதம்...

உங்களுக்கு உங்கள் வாதத் திறமை மீதோ ஏன், உங்களின் மீதோ கூட முழு நம்பிக்கை இல்லை... எதனையும் தெளிவாக முன்வைக்க அல்லது கேட்ட கேள்விகளுக்கு நேரிடையாக பதில் சொல்ல தெரிவதில்லை, அதற்கு முனைப்பும் காட்டுவதில்லை...

நான் முனைவர் இல்லை... ஆனால் நானும் ஒரு காலத்தில் ஒரு தொழில்நுட்பக் கல்லூரியில் சாதாரண விரிவுரையாளராக பணியாற்றி இருக்கிறேன்... பொறியியலில் எம்டெக்கும் முடித்திருக்கிறேன்...

கண்டிப்பாக, நான் எடுத்துக் கொண்ட வேலையிலோ, அல்லது படிப்புக்காக நான் செய்த ஆய்வுகளிலோ என்னை நோக்கிக் கேள்வி வரும் சமயம் அதனை தைரியமாக எதிர்நோக்கி, நான் இதைத்தான் செய்தேன் என்று சொல்லும் துணிவு (அது தவறாகவே இருந்தாலும்) என்னிடம் இருந்திருக்கிறது.

இவை யாதுமே உங்கள் வாதத்திலோ ஆய்வுகளிலோ காண இயலவில்லை... 

எந்த ஒரு கேள்விக்காகவேனும், கேள்வி கேட்டவருக்கு முதல் முறையிலேயே தாங்கள் நேரிடையாக பதில் சொல்லி இருக்கிறீர்களா... 

ஏன், ஏன் முடியவில்லை உங்களால்...

உங்களை உங்களுள் உண்மையை நோக்கிச் செல்ல தடுப்பது எது?

நீங்கள் கொண்டுள்ள கொள்கைகளா அல்லது உங்கள் வறட்டு கௌரவமா????

ஆய்வு செய்து முடிவை எழுத வேண்டுமே தவிர, முடிவை எழுதி வைத்து விட்டு ஆய்வு செய்தலோ, அல்லது முடிவுக்கு ஏற்ற ஆதாரங்களைச் சேகரிப்பதோ கூடாது...

ஒன்றே ஒன்று மட்டும் இறுதியாக சொல்லிக் கொள்ள விழைகிறேன்... இனி வரும் காலம் இணையத்தின் காலமாக இருக்கப் போகிறது... அதனால் தயவு செய்து, வருங்காலச் சந்ததியினரின் நன்மை கருதியாவது பொய்யுரைகளை எழுதாமல், சரியான வழியில் ஆய்வுக்கட்டுரைகளை எழுதிப் பதிப்பீர்களாக... 

2014-05-13 19:01 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

N. Ganesan

unread,
May 13, 2014, 12:43:29 PM5/13/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
Dear Prasath,

Thanks for your advice on how to conduct research.
I will look forward to learning from your research
experience and advice.

Please tell us if there is anything wrong in
calling Aaththichudi as Theerthankara and
Bodhichudi as Buddha as these titles use
these trees as their Enlightenment trees.
Note that 'chuuDuthal' is used in Sangam literature
for enveloping or covering as parasol etc.,
I have shown many examples. And, the absence
of Aaththi on Siva's body in Tevaram tells
the fact that Aaththi is not special for Siva
at all. To study the earlier period of history
of Buddha, Theerthankara and Siva, please help
us do research.

Anbudan
N. Ganesan

PRASATH

unread,
May 13, 2014, 1:11:26 PM5/13/14
to vallamai, mint...@googlegroups.com

ஆத்திசூடி அமர்ந்த தேவன் எனக் குறிப்பிடப்படுபவர் யார்?

ஆத்திசூடி அமர்ந்த தேவர் தீர்த்தங்கரர் பார்சுவநாதர் என்று முனைவர் நா. கணேசன் ஐயா திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்த மொழிதலில் ஏதும் உண்மை இருக்கிறதா என்றால் துளியளவும் இல்லை.

சூடி என்பதற்கு அணிந்த என்பதே பொருள் என்று யாவரும் அறிவோம். ஆனாலும், அதனை மறுத்து சூடி என்றால் சூழ்ந்த என்னும் பொருள் இருப்பதாகவும், அதற்கு சான்றாக சில பாடல் வரிகளையும் முனைவர் ஐயா அவர்கள் தந்திருந்தார்.

அவற்றை நாம் மீண்டும் படித்து தெளிவு காண்போம்.

சான்று 1

//நளியிரு முந்நீ ரேணி யாக
வளியிடை வழங்கா வானஞ் சூடிய
மண்டிணி கிடக்கைத் தண்டமிழ்க் கிழவர்
முரசுமுழங்கு தானை மூவ ருள்ளும்…//

இதில் வானம் சூடிய என்பது தரும் பொருள் யாதெனின், வானத்தைச் சூடிய மண்செறிந்த உலகம், அதாவது, மண்செறிந்த இவ்வுலகமானது வானத்தைச் அணிகலனாக அணிந்து இருக்கிறது. ஆய்வு நோக்கில் காணுங்கால், வானம் என்பது என்ன? எனக் கேள்வி எழலாம். வானம் என்பது இப்பரந்த பூமிக்கு மேலாக பரவி விரிந்து கிடக்கும் பால்வெளி. அதாவது இவ்விடத்து உலகம் முழுவதும் எனக் குறிப்பால் உணர்த்த பயன்படுத்தப்பட்டதே வானஞ் சூடிய என்னும் பதங்கள்.

இரண்டாம் சான்றான

வானஞ் சூடிய மலர்தலை யுலகத்துள்ளும்”

 என்பதும் முதல் சான்றினுக்களித்த அதே பொருளிலேயே வருகிறது.

மூன்றாவது சான்றாக ஐயா கொடுத்திருப்பது

வான்கவிந்த வையகமெல்லாம் 

இதில் எங்கே சூடி என வந்திருக்கிறது என்பது தெரியவில்லை...

மேலும், முனைவர் ஐயா அவர்கள்,

//சுமார் 1500 வருடப் பழமை வாய்ந்த ஆத்திசூடித் தீர்த்தங்கரர் சிற்பம் ஒன்று கர்நாடகாவில் கிடைத்துள்ளது. தீர்த்தங்கரசாமிமேல் முழுவதும் ஆத்தி தாவரம். அந்த அலங்காரத்தின் உச்சியில் ஒரே ஓர் அரவம். இந்த உச்சி நாகத்தால்தான் அந்த ஆத்திசூடித் தீர்த்தங்கரர் பார்சுவர் என அடையாளம் தெரிகின்றது.//

எனக் குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தையும் அளித்துள்ளார்.

அந்த புகைப்படத்தில் ஐயா குறிப்பிடும் படி ஆத்தி இலை எங்கும் காணோம். உதாரணத்திற்கு ஆத்தி இலையின் இணையப் புகைப்பட மாதிரியைக் கீழே கொடுத்துள்ளோம். இந்த இலையின் வடிவமைப்புக்கும், முனைவர் ஐயா கொடுத்த புகைப்படத்தில் இருக்கும் விரிந்த மலர் போல காட்சியளிக்கும் ஏதோ ஒன்றிற்கும்( அது இலையா/ மலரா என்று அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை) என்ன ஒற்றுமை இருக்கிறது என பெரியவர்கள் தாம் சொல்ல வேண்டும்...

தீர்த்தங்கரரைச் சுற்றிலும் இருப்பது ஆத்தி தாவரம் என்று எந்த நூலும் குறிப்பிடவில்லை. தீர்த்தங்கரர் பார்சுவநாதர் ஆத்தி மர நிழலில் ஞானம் அடைந்ததாகச் சொல்லப்படுவதற்கும் ஆதாரங்கள் ஏதும் இல்லை...

மேலும் முனைவர் ஐயாவே தன் ஆய்வில் குறிப்பிட்டுள்ளபடி, தீர்த்தங்கரர் பார்சுவநாதரை அடையாளம் காட்ட, ஆய்வாளர்கள் ஏற்றுக் கொண்டது உச்சியில் இருக்கும் ஓர் அரவம் என்பதே தின்னம் ஆகினபடியால் அரவம் சூடி தீர்த்தங்கரர் பார்சுவர் என அழைக்கலாமே ஒழிய ஆத்தி சூடி என தீர்த்தங்கரர் பார்சுவரை அழைக்க வேண்டிய அவசியம் இல்லை...

ஆகையால் ஔவையாரின் பாடலில் வரும் ஆத்தி சூடி அமர்ந்த தேவன் தீர்த்தங்கரர் பார்சுவநாதர் இல்லை என்று அறுதியிட்டு கூற இயலும்....

அதே சமயம், ஆத்தி சூடி அமர்ந்த தேவன் சிவபெருமான் என்பதற்கும் ஆத்தியைச் சூடியவாறு இருக்கும் சிவபெருமானையோ தட்சினாமூர்த்தியையோ இதுவரை யாரும் ஆதாரமாக தராததால் ஆத்திசூடி அமர்ந்த தேவன் சிவபெருமான் என்றும் அறுதியிட்டுக் கூற இயலாது.

ஆத்தியைச் சூடியவாறு காட்சியளிப்பவர் யார் என்பதற்கு இன்னும் ஆழமான ஆய்வுகள் தேவைப்படுகிறது. இதுகுறித்து சரியான தகவல்களை மேலும் திரட்டி ஆதாரபூர்வமாக ஆத்தி சூடிய பெருமான் யார் என்பதைத் தெளிய வேண்டிய நிலையிலேயே இன்றைய சூழலும் ஆராய்ச்சிகளும் இருக்கிறது.

ஆகையால், அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் ஆதாரம் கிடைக்கும் வரை ஆத்தி சூடிய பெருமானாக எவரையும் தொழ எவருக்கும் தனிப்பட்ட உரிமை உண்டு. ஆனால் ஆத்தி சூடி இவர் தான் என தீர்க்கமாக வரலாறாக எழுதி வைக்கும் உரிமை யார்க்கும் கிடையா.

ஆத்தி சூடி யார், என்ன என ஆய்வு செய்வது ஒருபுறம் இருந்தாலும், ஆத்திசூடி சொல்லும் கருத்துகள் உயர்வானதாக இருப்பதால் ஆத்திசூடி கருத்தின்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலே பொதுமக்களின் வாழ்க்கையை செம்மைப்படுத்தும்.  

N. Ganesan

unread,
May 13, 2014, 2:02:51 PM5/13/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com

On Tuesday, May 13, 2014 10:11:26 AM UTC-7, பிரசாத் வேணுகோபால் wrote:

ஆத்திசூடி அமர்ந்த தேவன் எனக் குறிப்பிடப்படுபவர் யார்?

ஆத்திசூடி அமர்ந்த தேவர் தீர்த்தங்கரர் பார்சுவநாதர் என்று முனைவர் நா. கணேசன் ஐயா திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்த மொழிதலில் ஏதும் உண்மை இருக்கிறதா என்றால் துளியளவும் இல்லை.

Madras Tamil Lexicon:
சூடு¹-தல் cūṭu-
To surround, envelope; கவிதல்

வானஞ் சூடிய மலர்தலை யுலகத்துள்ளும் (பெரும்பாண். 409).
= ஆகாயங் கவிந்த அகன்ற இடத்தையுடைய உலகத்து

"வான் கவிந்த வையகமெல்லாம்” (நாலடி.பொறை.10)

etc.,

சூடி என்பதற்கு அணிந்த என்பதே பொருள் என்று யாவரும் அறிவோம். ஆனாலும், அதனை மறுத்து சூடி என்றால் சூழ்ந்த என்னும் பொருள் இருப்பதாகவும், அதற்கு சான்றாக சில பாடல் வரிகளையும் முனைவர் ஐயா அவர்கள் தந்திருந்தார்.

அவற்றை நாம் மீண்டும் படித்து தெளிவு காண்போம்.

சான்று 1

//நளியிரு முந்நீ ரேணி யாக
வளியிடை வழங்கா வானஞ் சூடிய
மண்டிணி கிடக்கைத் தண்டமிழ்க் கிழவர்
முரசுமுழங்கு தானை மூவ ருள்ளும்…//

இதில் வானம் சூடிய என்பது தரும் பொருள் யாதெனின், வானத்தைச் சூடிய மண்செறிந்த உலகம், அதாவது, மண்செறிந்த இவ்வுலகமானது வானத்தைச் அணிகலனாக அணிந்து இருக்கிறது. ஆய்வு நோக்கில் காணுங்கால், வானம் என்பது என்ன? எனக் கேள்வி எழலாம். வானம் என்பது இப்பரந்த பூமிக்கு மேலாக பரவி விரிந்து கிடக்கும் பால்வெளி. அதாவது இவ்விடத்து உலகம் முழுவதும் எனக் குறிப்பால் உணர்த்த பயன்படுத்தப்பட்டதே வானஞ் சூடிய என்னும் பதங்கள்.

இரண்டாம் சான்றான

வானஞ் சூடிய மலர்தலை யுலகத்துள்ளும்”

 என்பதும் முதல் சான்றினுக்களித்த அதே பொருளிலேயே வருகிறது.

மூன்றாவது சான்றாக ஐயா கொடுத்திருப்பது

வான்கவிந்த வையகமெல்லாம் 

இதில் எங்கே சூடி என வந்திருக்கிறது என்பது தெரியவில்லை...

சூடிய = கவிந்த
 
Madras Tamil Lexicon:
சூடு¹-தல் cūṭu-
To surround, envelope; கவிதல்

வானஞ் சூடிய மலர்தலை யுலகத்துள்ளும் (பெரும்பாண். 409).
= ஆகாயங்கவிந்த அகன்ற இடத்தையுடைய உலகத்து

"வான் கவிந்த வையகமெல்லாம்” (நாலடி.பொறை.10)

etc.,
 
Hope this helps in Aaththichhudi, Bodhichuudi, etc.,

N. Ganesan

N. Ganesan

unread,
May 13, 2014, 3:36:01 PM5/13/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com

>அந்த புகைப்படத்தில் ஐயா குறிப்பிடும் படி ஆத்தி இலை எங்கும் காணோம். உதாரணத்திற்கு ஆத்தி இலையின்
> இணையப் புகைப்பட மாதிரியைக் கீழே கொடுத்துள்ளோம். இந்த இலையின் வடிவமைப்புக்கும், முனைவர்
>ஐயா கொடுத்த புகைப்படத்தில் இருக்கும் விரிந்த மலர் போல காட்சியளிக்கும் ஏதோ ஒன்றிற்கும்(
>அது இலையா/ மலரா என்று அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை) என்ன ஒற்றுமை இருக்கிறது என
>பெரியவர்கள் தாம் சொல்ல வேண்டும்

In Indian art, plants are idealized. And, learned Art Historians say
the plant around Parshvanath is Aaththi. You can read this in many
Jaina art works from Universities.

>தீர்த்தங்கரரைச் சுற்றிலும் இருப்பது ஆத்தி தாவரம் என்று எந்த நூலும் குறிப்பிடவில்லை. தீர்த்தங்கரர்
>பார்சுவநாதர் ஆத்தி மர நிழலில் ஞானம் அடைந்ததாகச் சொல்லப்படுவதற்கும் ஆதாரங்கள் ஏதும் இல்லை...

Many books whenever they see a plant, say it's the plant what is Aaththi
in Tamil

>மேலும் முனைவர் ஐயாவே தன் ஆய்வில் குறிப்பிட்டுள்ளபடி, தீர்த்தங்கரர் பார்சுவநாதரை அடையாளம் காட்ட, >ஆய்வாளர்கள் ஏற்றுக் கொண்டது உச்சியில் இருக்கும் ஓர் அரவம் என்பதே தின்னம் ஆகினபடியால்
>அரவம் சூடி தீர்த்தங்கரர் பார்சுவர் என அழைக்கலாமே ஒழிய ஆத்தி சூடி என தீர்த்தங்கரர் பார்சுவரை
>அழைக்க வேண்டிய அவசியம் இல்லை...

Because of Parsva's life hsitory that he got Enlightenment under
Aaththi tree, Auvai Kuratti calls him AaththichuuDi. Pl. remember
in Sangam lit., the word chuuDuthal = kavithal which is chuuzhthal.
Aaththi-chhuDi is Theerthankar in the same sense as BodhichuuDi
is Buddha.

N. Ganesan

வேந்தன் அரசு

unread,
May 13, 2014, 7:45:13 PM5/13/14
to vallamai, mintamil, தமிழாயம்

13 மே, 2014 8:57 முற்பகல் அன்று, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> எழுதியது:

13 மே, 2014 7:34 முற்பகல் அன்று, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> எழுதியது:

12 மே, 2014 11:38 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

On Monday, May 12, 2014 4:23:02 AM UTC-7, வேந்தன் அரசு wrote:
தீர்ப்பை மதிக்கிறோம்

பாரதிதான் குழப்பிட்டார்.

தேசியகவி பாரதியார் பரமானந்தமான கவிஞர். உதாரணமாக, இல்லாத அகத்தியர் தந்தது தமிழ் என்று அழகான தமிழ்த்தாய் வாழ்த்தில் பாடினார். கவித்துவமானது என்றாலும் ஆராய்ச்சிகளால் அகத்தியர் என்பவரே தமிழுக்கு முதல் இலக்கணம் செய்யவில்லை என்று தமிழறிஞர்கள் காட்டிவிட்டனர். முதலில் செய்தவர் சென்னைப் பேரா. கா. நமச்சிவாயர் என்பதாக ஞாபகம். பாரதியின் ப்ரதம சிஷ்யர் பாரதிதாசன் அகத்தியர் பற்றி ஆராய்ந்து அகவல் பாடியுள்ளார். மேகலா அவர்களுக்கும், தேமொழி அவர்களுக்கும் தெரியும். எல்லோரும் படித்துச் சிந்திக்கவேண்டிய பாடல்களில் ஒன்று. இன்றைய அரசியல் தலைவர்களின் தாரகமந்திரம்: “எம்மதமும் சம்மதம்”. உலகோடு வணிகமும், கல்வியும், நுட்பமும் ஊடாடும் பாரதமாதாவின் மக்களுக்கு இது சிறந்த மகாவாக்கியம். இந்தியாவில் எழுத்து, கலைகள், கல்வி தோற்றுவித்த 2 சமண சமயங்களுக்கும் பொதுவாக பாரதியார் பாடினார் எனலாம். அவ்வாறு பாரதி பாடப் பாட்டை போட்டுக் கொடுத்தவர் ஔவை என்னும் சமணக் குரத்தியார் காரணம்.

ஆத்திமரத்தடியில் இருப்பது தீர்த்தங்கரர். கல்லால மரத்தடியில் இருப்பது சிவன். ஆயிரக்கணக்கான
பாடல்களில், சிற்பங்களில் இது பொது. ஒரு இடத்தில் மாறுவதால் ஆத்திசூடி என்றால் சிவன் எனல்
பொருந்தாது. அந்தத் தேவாரப் பாடல் இலிங்க வழிபாட்டை அறிமுகம் செய்யும் பாட்டில், சண்டியின்
ஹேகியோக்ராஃபி-க்காக சமண சமயத்தின் அப்ராப்ரியேஷன். இதனை விரிவாக்கி வளர்த்தவர் ஒட்டக்கூத்தர்
(12-ஆம் நூற்றாண்டு) அவர் வழியிலே பலர் செல்லத் தொடங்கினர்: உ-ம்: அருணகிரிநாதர். பாரதியின் பரம்பொருள் 
வாழ்த்தில் தமிழ்வளர்த்த தீர்த்தங்கரரை ஆத்திசூடி என்று வாழ்த்திப்
பிற கடவுளரை - அல்லா, ஏசுவின் தந்தை, பெருமாள், சிவபிரான் - வணங்குகிறார் என உரைக்கலாம்.
எம்மதமும் சம்மதம் என்னும் தத்துவத்தை பாரதமாதா மக்களாக தமிழர் மாறுகிற கால கட்டத்தில் 
உரைக்கும் பாடலாக பாரதியார் பாடிய வழிநூலில் தானாக 2 சமணசமயங்களுக்கும் குறியீடாக
ஆத்திசூடி பாகல்வண்ணர் இருத்தல் சிறப்பு. 

(1) ஆத்திசூடி, - (2) இளம்பிறை அணிந்து

மோனத் திருக்கும் முழுவெண் மேனியான், -

(3) கருநிறங் கொண்டுபொற் கடல்மிசைக் கிடப்போன், -

(4) மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன், -

(5) ஏசுவின் தந்தை  - எனப்பல மதத்தினர்

உருவகத் தாலே உணர்ந்துணராது

பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்

ஒன்றே அதனியல் ஒளியுறும் அறிவாம்;

அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;

அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்.

இந்தியாவில் உள்ள 5 பெருஞ்சமயங்களுக்கும் வாழ்த்தைச் சொல்கிறார் பாரதியார்.

முதற்சமயமாக சமண சமயங்களைச் சொல்லவைத்த பெருமை ஔவைக் குரத்திக்குத்தான்.

கணேசர்

உங்க வாதம் எல்லாம் தவிடுபொடி ஆகியது
இரண்டு முதல் ஐந்துவரை மதத்தலைவர்களை ஒற்றை சொல்லாலே சொல்லவில்லை. ஒன்றாம் மதம் மட்டும் ஏன் ஆத்திசூடி எனும் ஒற்றைச்சொல். 
2, 3 ம் தெய்வங்களாகவே காட்டப்பட்டு, 3, 4  மனிதர்களாக காட்டியுள்ளார். ஒன்று??? வேறு பாடல்களில் உள்ளதுபோல் ”ஆத்திசூடி அமர்ந்த தேவனுக்”கு அருள் புரிந்தோன் என பாடி இருக்காலம்

புத்த மதம் ஏன் சொல்லப்படவில்லை? புத்தனுக்கு ஞானஒளி கொடுத்தோன் என பாடி இருக்கலாம்.

ஒன்றே தெய்வம் எனும் கோட்பாட்டில், வெண்மேனியனான சிவனே, கடல்மிசை கிடந்து, நபிக்கு அருள் புரிந்து ஏசுவுக்கு தந்தையானான் என்று  பாடுக்றார். எல்லா மத தெய்வங்களையும் அல்ல. 

இந்த வாதம் நீங்க ஏற்கமாட்டீங்க.  இருதரப்பிலும் ஈடுபடாதவங்களுக்காக சொல்லுகிறேன் 

”ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்” என பாரதியே பாடியதால், ஈசனையே பிற மத கடவுளராகவும் அவர் மதிக்கிறார்.

பாரதி 20 நூற்றாண்டு கவிஞன். அதானால் அவன் பாட்டில்  வலிய திணிக்கவேண்டிய தேவை இல்லாத எளிமை இருக்கு. (வள்ளுவனும் அப்படித்தான். ஆனால் 20 நூற்றாண்டுகள் ஓடிய பெற்றியால் நமக்குதான் குழப்பம்). நான் நேரடி பொருளையே ஏற்பேன்.

ஈசன் சிவனா மாலா என்பது இங்கு தேவையற்ற ஆய்வு. அவரே ஏசுவாகவும் அவர் மதிக்கிறார்.

ஆத்தி சூடி என்பது இரண்டு சொற்களானால் இங்கு சூடி என்பது பெயர்சொல் அல்ல.

ஆத்தி சூடி என்பது அருகனை குறிக்கும் பெயர் என்றால் ஆத்திச்சூடி  அல்லது ஆத்தி சூடியான் என வரும். இலக்கணம் அறிந்தவர் விளக்குங்கள்.
அதனால் ”ஆத்தி சூடி இளம்பிறை அணிந்து மோனத்து இருக்கும் திருவெண் மேனியான் “ ஒரே கடவுளையே குறிக்கும். 

தேமொழி

unread,
May 13, 2014, 7:52:29 PM5/13/14
to mint...@googlegroups.com, vallamai

வேந்தரின் கருத்தே எனது கருத்தும்.... உங்கள் விளக்கத்தை ஒப்புக் கொள்ள இயலவில்லை திரு. கணேசன்.

..... தேமொழி 

On Tuesday, May 13, 2014 4:34:28 AM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:

கணேசர்

உங்க வாதம் எல்லாம் தவிடுபொடி ஆகியது
இரண்டு முதல் ஐந்துவரை மதத்தலைவர்களை ஒற்றை சொல்லாலே சொல்லவில்லை. ஒன்றாம் மதம் மட்டும் ஏன் ஆத்திசூடி எனும் ஒற்றைச்சொல். 
2, 3 ம் தெய்வங்களாகவே காட்டப்பட்டு, 3, 4  மனிதர்களாக காட்டியுள்ளார். ஒன்று??? வேறு பாடல்களில் உள்ளதுபோல் ”ஆத்திசூடி அமர்ந்த தேவனுக்”கு அருள் புரிந்தோன் என பாடி இருக்காலம்

புத்த மதம் ஏன் சொல்லப்படவில்லை? புத்தனுக்கு ஞானஒளி கொடுத்தோன் என பாடி இருக்கலாம்.

ஒன்றே தெய்வம் எனும் கோட்பாட்டில், வெண்மேனியனான சிவனே, கடல்மிசை கிடந்து, நபிக்கு அருள் புரிந்து ஏசுவுக்கு தந்தையானான் என்று  பாடுக்றார். எல்லா மத தெய்வங்களையும் அல்ல. 

இந்த வாதம் நீங்க ஏற்கமாட்டீங்க.  இருதரப்பிலும் ஈடுபடாதவங்களுக்காக சொல்லுகிறேன் 

N. Ganesan

unread,
May 13, 2014, 10:57:46 PM5/13/14
to vall...@googlegroups.com, mintamil, தமிழாயம்

On Tuesday, May 13, 2014 4:45:13 PM UTC-7, வேந்தன் அரசு wrote:

கணேசர்

உங்க வாதம் எல்லாம் தவிடுபொடி ஆகியது
இரண்டு முதல் ஐந்துவரை மதத்தலைவர்களை ஒற்றை சொல்லாலே சொல்லவில்லை. ஒன்றாம் மதம் மட்டும் ஏன் ஆத்திசூடி எனும் ஒற்றைச்சொல். 
2, 3 ம் தெய்வங்களாகவே காட்டப்பட்டு, 3, 4  மனிதர்களாக காட்டியுள்ளார். ஒன்று??? வேறு பாடல்களில் உள்ளதுபோல் ”ஆத்திசூடி அமர்ந்த தேவனுக்”கு அருள் புரிந்தோன் என பாடி இருக்காலம்

புத்த மதம் ஏன் சொல்லப்படவில்லை? புத்தனுக்கு ஞானஒளி கொடுத்தோன் என பாடி இருக்கலாம்.

ஒன்றே தெய்வம் எனும் கோட்பாட்டில், வெண்மேனியனான சிவனே, கடல்மிசை கிடந்து, நபிக்கு அருள் புரிந்து ஏசுவுக்கு தந்தையானான் என்று  பாடுக்றார். எல்லா மத தெய்வங்களையும் அல்ல. 

சிவனே நபி, ஏசு என்று பாரதி பாடவில்லை. ”பலமதத்தினர் பலவகை ஆகப் பரவிடும் பரம்பொருள்” என்கிறார். 
 4 மதம் என்பதை ஔவை பாட்டின் பொருளால் 5 மதம் என்றேன். ஆத்திசூடி அருகன் என்றால்
சமண (=சிரமண) சமயங்கள் இரண்டும் அடங்கும் (புத்தனுக்கு ஔகன் (அர்ஹத்) என்பதும் ஒரு பெயர்தான்.
ஔவை பாட்டின் உண்மைப் பொருளை உணர்வோ பாரதியின் பல மதத்தினர் என்பது 4 மதம் என்னாமல் 5 மதம்
எனும் சொல்லலாம் தானே.

> ஆத்தி சூடி என்பது அருகனை குறிக்கும் பெயர் என்றால் ஆத்திச்சூடி  அல்லது ஆத்தி சூடியான் 

தேவையில்லை. பித்தா! பிறைசூடி! - நோக்குக.

-------------

சூழ்தல் - சூடுதல் இரண்டுக்குமான தொடர்பை வள்ளுவர் விளக்குகிறார்.
ஒரு குறளில் கூட சூழ்- என்னும் வினை (அ) பெயர்ச்சொல் சுற்றியிருத்தல் 
என்ற பொருளில் காணோம். தெலுங்கில் சூடு- “நினை, ஆராய்ச்சி செய்தல்” என்ற
பொருளிலேதான் எல்லாக் குறளிலும் சூழ்- என்ற தாதுவேர் வருகிறது. சூழ்ச்சி அதற்கான பெயர்ச்சொல்.
இப்போது சொல்லும் பொருளிலே சூழ்தல், சூழ்ச்சி குறளிலே காணோம். பெரி. சந்திரா
இதுபற்றி முன்பு எழுதினார். அப்ஸ்றேக்ட் ஆக எண்ணமெல்லாம் ஒன்றில்
கவிந்திருந்தால்/சூடியிருந்தால் சூழ்தல், சூழ்ச்சி என்ற சொற்கள் உள்ள இடங்களின்
பொருளைப் புரிந்துகொள்ளவியல்கிறது. அதேபோல், பருப்பொருள் உதாரணங்களாகப்
பார்த்தால், இருள் சூடிய நேரம் (=இருள் சூழ்ந்த நேரம்), மேகம் சூடிய மலை = மேகம் சூழ் மலை
(ஐங்குறுநூறு), வானம் சூடிய உலகு = வானம் சூழந்த உலகு (புறநானூறு), ....
இவற்றைப் பார்க்கிறபோது சுடு/சூடு ‘வெம்மை’ சுள்ளி/சூளை என்னும் ள் எழுத்துடனும்,
சூடு ‘நினைத்தல்’ - சூழ் என்னும் வினையின் ழ் எழுத்துடனும் தொடர்புபடுத்த முடியும்.
 சூழ்- > சூடு/சூட்டு ‘சூழ்தல், கவிதல்’, சுள்-/சூள்- சூடு ‘வெப்பு’ இரண்டும்
பொருள் அறவே மாற்படுகின்றன. சூழுதல்/சூடுதல் - முழுதுமாகக் குடைபோலக் கவிதல்
என்னும் சங்க காலப் பொருளிலே ஔவைக் குரத்தியார் அருகனைப் பாடினார். 
இப்படிப் பார்த்தால், சூளாமணி என்று கன்னடம் வழியாக தமிழுக்கு வந்த சொல்
சூழாமணி என்பது மூலத்ராவிடச் சொல் சூழாமணி/சூடாமணி எனலாம்.
சூளிகை என்றால் மென்மாடம், இதுவும் சூழிகை/சூடிகை என்பதன் கன்னட (> தமிழ்)
வார்த்தையாகலாம்.

நா. கணேசன்
 
இந்த வாதம் நீங்க ஏற்கமாட்டீங்க.  இருதரப்பிலும் ஈடுபடாதவங்களுக்காக சொல்லுகிறேன் 
”ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்” என பாரதியே பாடியதால், ஈசனையே பிற மத கடவுளராகவும் அவர் மதிக்கிறார்.

பாரதி 20 நூற்றாண்டு கவிஞன். அதானால் அவன் பாட்டில்  வலிய திணிக்கவேண்டிய தேவை இல்லாத எளிமை இருக்கு. (வள்ளுவனும் அப்படித்தான். ஆனால் 20 நூற்றாண்டுகள் ஓடிய பெற்றியால் நமக்குதான் குழப்பம்). நான் நேரடி பொருளையே ஏற்பேன்.

ஈசன் சிவனா மாலா என்பது இங்கு தேவையற்ற ஆய்வு. அவரே ஏசுவாகவும் அவர் மதிக்கிறார்.

ஆத்தி சூடி என்பது இரண்டு சொற்களானால் இங்கு சூடி என்பது பெயர்சொல் அல்ல.

ஆத்தி சூடி என்பது அருகனை குறிக்கும் பெயர் என்றால் ஆத்திச்சூடி  அல்லது ஆத்தி சூடியான் என வரும். இலக்கணம் அறிந்தவர் விளக்குங்கள்.
அதனால் ”ஆத்தி சூடி இளம்பிறை அணிந்து மோனத்து இருக்கும் திருவெண் மேனியான் “ ஒரே கடவுளையே குறிக்கும். 

Hari Krishnan

unread,
May 13, 2014, 11:45:40 PM5/13/14
to vallamai, mintamil

2014-05-14 8:27 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
> ஆத்தி சூடி என்பது அருகனை குறிக்கும் பெயர் என்றால் ஆத்திச்சூடி  அல்லது ஆத்தி சூடியான் 

தேவையில்லை. பித்தா! பிறைசூடி! - நோக்குக.

பிறைசூடி என்றால், பிறையால் சூழப்பட்டவன் என்று பொருளன்று.  பிறையைச் சூடியவன் என்பதுதான் பொருள்.  ஆகவே, ஆத்தியால் சூழப்பட்டவனுக்கு, பிறையைச் சூடியவன் எடுத்துக்காட்டாக மாட்டான்.  

அல்லது எந்த ஆய்வாளரின் ஆய்வின்படி இந்த எடுத்துக்காட்டு பொருந்தும் என்பதை எடுத்துக் காட்டுக.

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

PRASATH

unread,
May 14, 2014, 3:07:22 AM5/14/14
to vallamai, mint...@googlegroups.com
2014-05-14 1:06 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

In Indian art, plants are idealized. And, learned Art Historians say
the plant around Parshvanath is Aaththi. You can read this in many
Jaina art works from Universities.
 
can you please quote me which study/article/research describes "Plants are Idealized in indian arts". I need proof, not just a statement.
 
Also, you mentioned that, "learned Art Historians say the plant around Parshvanath is Aaththi". May I know their names please. Also can you describe what makes a historian in to a learned art historian?
 
//You can read this in many Jaina art works from Universities.//
 
give some scanned copies of these universities art work to consider as a proof?
 
>தீர்த்தங்கரரைச் சுற்றிலும் இருப்பது ஆத்தி தாவரம் என்று எந்த நூலும் குறிப்பிடவில்லை. தீர்த்தங்கரர்
>பார்சுவநாதர் ஆத்தி மர நிழலில் ஞானம் அடைந்ததாகச் சொல்லப்படுவதற்கும் ஆதாரங்கள் ஏதும் இல்லை...

//Many books whenever they see a plant, say it's the plant what is Aaththi
in Tamil//

I really dont understand what do you mean by this. Can you please rephrase the statement in appropriate manner to understand your thoughts. 
 
>மேலும் முனைவர் ஐயாவே தன் ஆய்வில் குறிப்பிட்டுள்ளபடி, தீர்த்தங்கரர் பார்சுவநாதரை அடையாளம் காட்ட, >ஆய்வாளர்கள் ஏற்றுக் கொண்டது உச்சியில் இருக்கும் ஓர் அரவம் என்பதே தின்னம் ஆகினபடியால்
>அரவம் சூடி தீர்த்தங்கரர் பார்சுவர் என அழைக்கலாமே ஒழிய ஆத்தி சூடி என தீர்த்தங்கரர் பார்சுவரை
>அழைக்க வேண்டிய அவசியம் இல்லை...

Because of Parsva's life hsitory that he got Enlightenment under
Aaththi tree, Auvai Kuratti calls him AaththichuuDi. Pl. remember
in Sangam lit., the word chuuDuthal = kavithal which is chuuzhthal.
Aaththi-chhuDi is Theerthankar in the same sense as BodhichuuDi
is Buddha.

Can you send me a scan copy of  Parsava's life history which tells he got enlightenment under aaththi tree.
 
Apart from you none in the literature or anywhere in the world calls Budha as Bodhichudi... You have created the word "Bodhichudi" to give some support on your Aathichudi statement. it doesnt have any meaning apart from that.

Banukumar Rajendran

unread,
May 14, 2014, 4:36:11 AM5/14/14
to vallamai

2014-05-12 22:14 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
ஆலமரத்தடி என்பது சிவனுக்கும் தக்ஷினாமூர்த்திக்கும் புத்தருக்கும் என்று ஒரு ஆய்வாளர் தெரிவிப்பது கீழே

The tree symbolizes the Trimurti – Vishnu is believed to be the bark, Brahma, the roots and Shiva, the branches. Banyan also symbolises life and fertility in many Indian cultures. For this reason, banyan tree is worshipped by those who are childless and also, it is never cut.

Lord Dakshinamurthy, who is revered as the ‘ultimate guru’, is usually depicted beneath a banyan tree. He represents Lord Shiva and is seen as the embodiment of knowledge and the destroyer of ignorance.

The tree is also sacred to the Buddhists. After attaining enlightenment, Buddha is believed to have sat under a banyan tree for seven days.

அரச மரத்தின்கீழ்  புத்தர் ஞானம் பெற்றார் என்ற செய்தி கீழே

http://ecoheritage.cpreec.org/Viewcontall.php?$mFJyBfK$MA5hj$m1Rt&7c

Religious association

The peepal tree, with its heart-shaped leaves, is one of the most revered trees in India. The tree is considered as an incarnation of Lord Vishnu. The tree also symbolises the continuity of life because the tree itself lives and grows for hundreds of years. Childless couples worship the tree, tying threads of white, red and yellow silk around it to pray for progeny and rewarding parenthood.

The peepal tree is also sacred to the Buddhists, because Lord Buddha is believed to have attained enlightenment under this tree. Due to this, the peepal tree is often referred to as the Bodhi tree or the ‘tree of enlightenment’.

தீர்த்தங்கரருக்கு என்று எதுவும் இங்கே குறிப்பிடப்படவில்லை

:-)

‘‘ஆலநெடு நிழலமர்ந்தனை
காலம் மூன்றும் கடந்தனை
தாழ்சடை முடிச் சென்னிக்
காசறு பொன்னெயிற் கடவுளை’’

இரா.பா,
சென்னை

எனவே ஆத்திசூடி மர்ந்த தேவன் சிவனா அல்லது புத்தரா என்று மட்டுமே  முடிவெடுக்கவேண்டியது ஆய்வுகாட்டும் முடிவு

சவடால்

முதற்சமயமாக சமண சமயங்களைச் சொல்லவைத்த பெருமை ஔவைக் குரத்திக்குத்தான்.

ஆத்திசூடி தீர்த்தங்கரஸ்வாமி:

http://www.maotorino.it/opera.php?id=78

https://www.flickr.com/photos/magika2000/5066880525/in/photostream/

இலண்டன் விக்டோரியா & ஆல்பர்ப் ம்யூஸியத்தில்

ஆத்திசூடி தீர்த்தங்கரர்: 7-ஆம் நூற்றாண்டினது.

மிகப் பழைய சிற்பங்களில் ஆத்திசூடி காட்டப்படுவது வழக்கம்.

ஆத்தி/தாதகி மரம் பார்க்கவும் - 7-ஆம் நூற்றாண்டு:

http://www.vam.ac.uk/content/articles/j/jainism_illuminated_manuscripts-and-jain-paintings/

போதிசூடி புத்தர், ஆத்திசூடி தீர்த்தங்கரர் - இவற்றைப்

பல நூற்றாண்டுகளாய்ப் பார்த்து ஆல்சூடியாய் பொதிகைத் தெக்கிணாமூர்த்தி

தோற்றம் அடைகிறார் (7-ஆம் நூற்றாண்டு). இது மகரவிடங்கரின்

வடவ்ருக்‌ஷம் சிவனுக்காகும் நிலை. சிவனுக்கு ஆவதன் முன்னம் இதனைப்

பரிபாடல் பாடுகிறது. அந்த சங்ககால சமய நிலையை 9-ஆம் நூற்றாண்டில்

நம்மாழ்வார் அழகாக சங்கத்தாருக்கு எழுதிய அகவலில் உரைக்கிறார்.

உரைகண்டு தெளிய எழுதலாம்.

நா. கணேசன்

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

வேந்தன் அரசு

unread,
May 14, 2014, 6:54:48 AM5/14/14
to vallamai, mintamil

13 மே, 2014 11:45 பிற்பகல் அன்று, Hari Krishnan <hari.har...@gmail.com> எழுதியது:

2014-05-14 8:27 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

> ஆத்தி சூடி என்பது அருகனை குறிக்கும் பெயர் என்றால் ஆத்திச்சூடி  அல்லது ஆத்தி சூடியான் 

தேவையில்லை. பித்தா! பிறைசூடி! - நோக்குக.

பிறைசூடி என்றால், பிறையால் சூழப்பட்டவன் என்று பொருளன்று.  பிறையைச் சூடியவன் என்பதுதான் பொருள்.  ஆகவே, ஆத்தியால் சூழப்பட்டவனுக்கு, பிறையைச் சூடியவன் எடுத்துக்காட்டாக மாட்டான்.  

ஆடுவண்டு இமிரா அழல் அவிர்  தாமரை,
நீடு இரும்  பித்தை  பொலியச்  சூட்டி”

பொன் தாமரையை தன் குடுமியில் பாணன் சூடிக்கிறான். இங்கு சூழ்ந்து என்ற பொருள் இல்லை. எங்கும் இல்லை. அகராதியை திருத்த வேண்டும். 

ஆத்தி சூடி “ இலக்கண குறிப்பு சொல்லுங்க ஹரி கி ஐயா

Hari Krishnan

unread,
May 14, 2014, 7:48:36 AM5/14/14
to vallamai, mintamil

2014-05-14 16:24 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
ஆத்தி சூடி “ இலக்கண குறிப்பு சொல்லுங்க ஹரி கி ஐயா

இரண்டாம் வேற்றுமைத் தொகை.  தொகையில் மிகாது, விரியில் மிகும்.

N. Ganesan

unread,
May 14, 2014, 8:36:04 AM5/14/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com

On Wednesday, May 14, 2014 12:07:22 AM UTC-7, பிரசாத் வேணுகோபால் wrote:

2014-05-14 1:06 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

In Indian art, plants are idealized. And, learned Art Historians say
the plant around Parshvanath is Aaththi. You can read this in many
Jaina art works from Universities.
 
can you please quote me which study/article/research describes "Plants are Idealized in indian arts". I need proof, not just a statement.
 
I will give quotations in my research article on Aahthichuudi amarntha Devar as Theerthankkara, I will be an Indian journal so
people will have easy access to read. Like IJDL or AavaNam or J. Inst. of Asian studies

N. Ganesan

N. Ganesan

unread,
May 14, 2014, 8:50:46 AM5/14/14
to vall...@googlegroups.com, mintamil

On Wednesday, May 14, 2014 3:54:48 AM UTC-7, வேந்தன் அரசு wrote:

13 மே, 2014 11:45 பிற்பகல் அன்று, Hari Krishnan <hari.har...@gmail.com> எழுதியது:

2014-05-14 8:27 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

> ஆத்தி சூடி என்பது அருகனை குறிக்கும் பெயர் என்றால் ஆத்திச்சூடி  அல்லது ஆத்தி சூடியான் 

தேவையில்லை. பித்தா! பிறைசூடி! - நோக்குக.

பிறைசூடி என்றால், பிறையால் சூழப்பட்டவன் என்று பொருளன்று.  பிறையைச் சூடியவன் என்பதுதான் பொருள்.  ஆகவே, ஆத்தியால் சூழப்பட்டவனுக்கு, பிறையைச் சூடியவன் எடுத்துக்காட்டாக மாட்டான்.  

ஆடுவண்டு இமிரா அழல் அவிர்  தாமரை,
நீடு இரும்  பித்தை  பொலியச்  சூட்டி”

பொன் தாமரையை தன் குடுமியில் பாணன் சூடிக்கிறான். இங்கு சூழ்ந்து என்ற பொருள் இல்லை. எங்கும் இல்லை. அகராதியை திருத்த வேண்டும். 

அகராதி திருத்த வேண்டாம் ஐயா. சூடு இரண்டு விதமான வேர்களால் பிறக்கிறது:
(1) சூடு/சுடு : சூளை/சுள்- (2) சூடு :சூழ்- (சூழ்தருதல் - சூடுதல்/சூழுதல்).

கலித்தொகை - நெய்தற் கலி 125

கண்டவர் இல் என, உலகத்துள் உணராதார்,
தங்காது தகைவு இன்றித் தாம் செய்யும் வினைகளுள்,
நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பினும், அறிபவர்
நெஞ்சத்துக் குறுகிய கரி இல்லை ஆகலின்,
வண் பரி நவின்ற வய மான் செல்வ! 5
நன்கு அதை அறியினும், நயன் இல்லா நாட்டத்தால்,
அன்பு இலை என வந்து கழறுவல்; ஐய! கேள்;
மகிழ் செய் தேமொழித்
தொய்யில் சூழ் இள முலை
முகிழ் செய முள்கிய தொடர்பு, அவள் உண்கண்
அவிழ் பனி உறைப்பவும், நல்காது விடுவாய்! 10
இமிழ் திரைக் கொண்க! கொடியைகாண் நீ

”தொய்யில் சூழ் இளமுலை”  - தொய்யில் சூடிய இள நகில்கள்.

சூட்டிய - சூழ்ந்த என்ற பொருளிலும் சங்க காலப் பாடல்கள் உள்ளன.
ஔவை பாடும் அடிப்படையான் சூழுதல்/சூடுதல் பொருளும்
அகராதிகளிலும், பாடல்களிலும், தமிழிலும் இருக்கட்டும்.
எடுத்துவிட்டால் தமிழின் ஆழம் குன்றும்.

மேகலை அவர்கள் என் குறிப்புகளில் இருந்து கொடுத்திருந்த
சில காட்டுகளுக்கு மேலும் சில கொடுக்கிறேன் - இன்று மாலையில்.

சூழ்தல் - சூடுதல் இரண்டுக்குமான தொடர்பை வள்ளுவர் விளக்குகிறார்.
ஒரு குறளில் கூட சூழ்- என்னும் வினை (அ) பெயர்ச்சொல் சுற்றியிருத்தல் 
என்ற பொருளில் காணோம். தெலுங்கில் சூடு- “நினை, ஆராய்ச்சி செய்தல்” என்ற
பொருளிலேதான் எல்லாக் குறளிலும் சூழ்- என்ற தாதுவேர் வருகிறது. சூழ்ச்சி அதற்கான பெயர்ச்சொல்.
இப்போது சொல்லும் பொருளிலே சூழ்தல், சூழ்ச்சி குறளிலே காணோம். பெரி. சந்திரா
இதுபற்றி முன்பு எழுதினார். அப்ஸ்றேக்ட் ஆக எண்ணமெல்லாம் ஒன்றில்
கவிந்திருந்தால்/சூடியிருந்தால் சூழ்தல், சூழ்ச்சி என்ற சொற்கள் உள்ள இடங்களின்
பொருளைப் புரிந்துகொள்ளவியல்கிறது. அதேபோல், பருப்பொருள் உதாரணங்களாகப்
பார்த்தால், இருள் சூடிய நேரம் (=இருள் சூழ்ந்த நேரம்), மேகம் சூடிய மலை = மேகம் சூழ் மலை
(ஐங்குறுநூறு), வானம் சூடிய உலகு = வானம் சூழந்த உலகு (புறநானூறு), ....
இவற்றைப் பார்க்கிறபோது சுடு/சூடு ‘வெம்மை’ சுள்ளி/சூளை என்னும் ள் எழுத்துடனும்,
சூடு ‘நினைத்தல்’ - சூழ் என்னும் வினையின் ழ் எழுத்துடனும் தொடர்புபடுத்த முடியும்.
 சூழ்- > சூடு/சூட்டு ‘சூழ்தல், கவிதல்’, சுள்-/சூள்- சூடு ‘வெப்பு’ இரண்டும்
பொருள் அறவே மாற்படுகின்றன. சூழுதல்/சூடுதல் - முழுதுமாகக் குடைபோலக் கவிதல்
என்னும் சங்க காலப் பொருளிலே ஔவைக் குரத்தியார் அருகனைப் பாடினார். 
இப்படிப் பார்த்தால், சூளாமணி என்று கன்னடம் வழியாக தமிழுக்கு வந்த சொல்
சூழாமணி என்பது மூலத்ராவிடச் சொல் சூழாமணி/சூடாமணி எனலாம்.
சூளிகை என்றால் மேன்மாடம், இதுவும் சூழிகை/சூடிகை என்பதன் கன்னட (> தமிழ்)
வார்த்தையாகலாம்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
May 14, 2014, 10:21:21 AM5/14/14
to vall...@googlegroups.com, vall...@googlegroups.com, thami...@googlegroups.com, tiruva...@googlegroups.com, housto...@googlegroups.com, மின்தமிழ், Banukumar Rajendran, banukumar rajendran
On Wednesday, May 14, 2014 1:36:11 AM UTC-7, R Banukumar wrote:

2014-05-12 22:14 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
ஆலமரத்தடி என்பது சிவனுக்கும் தக்ஷினாமூர்த்திக்கும் புத்தருக்கும் என்று ஒரு ஆய்வாளர் தெரிவிப்பது கீழே

The tree symbolizes the Trimurti – Vishnu is believed to be the bark, Brahma, the roots and Shiva, the branches. Banyan also symbolises life and fertility in many Indian cultures. For this reason, banyan tree is worshipped by those who are childless and also, it is never cut.

Lord Dakshinamurthy, who is revered as the ‘ultimate guru’, is usually depicted beneath a banyan tree. He represents Lord Shiva and is seen as the embodiment of knowledge and the destroyer of ignorance.

The tree is also sacred to the Buddhists. After attaining enlightenment, Buddha is believed to have sat under a banyan tree for seven days.

அரச மரத்தின்கீழ்  புத்தர் ஞானம் பெற்றார் என்ற செய்தி கீழே

http://ecoheritage.cpreec.org/Viewcontall.php?$mFJyBfK$MA5hj$m1Rt&7c

Religious association

The peepal tree, with its heart-shaped leaves, is one of the most revered trees in India. The tree is considered as an incarnation of Lord Vishnu. The tree also symbolises the continuity of life because the tree itself lives and grows for hundreds of years. Childless couples worship the tree, tying threads of white, red and yellow silk around it to pray for progeny and rewarding parenthood.

The peepal tree is also sacred to the Buddhists, because Lord Buddha is believed to have attained enlightenment under this tree. Due to this, the peepal tree is often referred to as the Bodhi tree or the ‘tree of enlightenment’.

தீர்த்தங்கரருக்கு என்று எதுவும் இங்கே குறிப்பிடப்படவில்லை

:-)

‘‘ஆலநெடு நிழலமர்ந்தனை
காலம் மூன்றும் கடந்தனை
தாழ்சடை முடிச் சென்னிக்
காசறு பொன்னெயிற் கடவுளை’’

இரா.பா,
சென்னை

ஆதிபகவன் (குறள் எண்: 1) திருவருளைப் போற்றும் திருக்கலம்பகப் பாடல்.

“ஆலமர் செல்வன்” என்று பொதிகைமலையில் சிறுபாணாற்றுப்படை பாடுவதும்
அவன் யார்? என்பதும் பல மதத்தினரும் தங்கள் கடவுள் என்று போற்றியிருப்பதும்
பண்டை இலக்கியங்களால் அறிகிறோம். பெருங்கதையில் பார்த்தால் பொதியில்
கடவுள் தாங்கள் கொண்டாடியவர் என்கின்றார் கொங்குவேள். சிலப்பதிகார உரையில்
கடவுள் என்று இந்த முனிவரைச் சொன்னார்கள். தென்னன் என்னும் மதுரைக்
காஞ்சி அடிகள் பின்னர் விரிந்து தெக்கிணண் என்று சிலம்பில் ஆகி, பல்லவர்
காலத்தில் தெக்கிணாமூர்த்தி என சிவனுக்கு ஆகிறது. ஆனால், அவர் வடிவத்தில்
இன்றும் கையில் பத்மபாணியாக இருக்கிறார் (உ-ம்: திருவூறல் என்னும் தக்கோலம்,
மயிலாடுதுறை. மற்ற சில காட்டுகளை பத்மபாணி அவலோகிதன் - தட்சிணாமூர்த்தி
வழிபாட்டுக் கட்டுரையில் பார்க்கலாம். அரிமாநோக்கு (J. of the Central Inst. of Classical
Tamil, Chennai ஆய்வேடு, also, in Poetry in Stone's Vijay's website) பத்மபாணி அவலோகிதனை 
வீரசோழியம் பாட (அதில் ஆத்திசூடி அருகரைப் போற்றும் பக்திப் பாடலும், ஆத்தி சூடும் சோழனைப் 
புகழும் அகப்பாடலும் மேற்கோள் பாடல்களாக உள்ளன. இவை மிகப்பழைய பாடல்கள் என்று கொண்டால்,
ஆத்திசூடி தீர்த்தங்கரரைப் போற்றிய ஒரு போதனர் தேர்ந்தெடுத்து ஆத்தியைச்
சோழகுலத்தவர் மரமாக கொடுத்தார் என எண்ணலாம். இது சங்க கால தொடக்கத்தில்
(கி.மு. 4ஆம் நூற்றாண்டு) நிகழ்ந்திருக்க வேண்டும். அப்போதுதான் சமண சமயங்கள்
உருவாகி வணிக வளர்ச்சியினால் தெற்கு நோக்கி வருகின்றன (Lanka, Tamizakam). வீரசோழியத்தில்
ஆத்திசூடி அருகபத்தரான போதநர் மீதான பழைய மேற்கோள் பாடல் வடமொழியில்
ஒரு விருத்த யாப்புக்கு இலக்கணமாக இருப்பதை முனைவர் க. கணேசலிங்கனாருக்கு
எழுதிய மடலில் கொடுத்துள்ளேன். காண்க. 

ஆதிபகவன் ஆலமர்செல்வன் ரிஷபநாதரின் சைவ-சமண சமய ஊடாடல்:
மயிலை சீனி. வேங்கடசாமி, சமணமும் தமிழும்
கி.மு. நூற்றாண்டுகளில் விடங்கர்(வருணன்)-கொற்றி என சிந்துவெளியின்
சமயமாக இருந்த தமிழர் சமயம் தமிழ் மூவேந்தரால் கொண்டாடப்பட்டுள்ளதை
அவர்கள் வெளியிட்ட காசுகளும் (அசுவமேத யாகம் நடத்தியபின்னர் 
commemorative issue coinage), திருப்பரங்குன்றம் தமிழ்ப்ராமி கல்வெட்டும் 
நிரூபிக்கின்றன. விடங்கனின் ஆலமரம் (வடவ்ருக்‌ஷம் என்பதில் உள்ள
வடம் என்னும் தமிழ்ச்சொல் ரிக்வேதத்தில் வருணனுக்கே உரிமையுடையது)

நூதலோசு அவர்கள் மோனத்தில் அமரும் சிவன் சைவசித்தாந்ததிற்கு எவ்வாறு
எதிராக உள்ளது என்று விளக்கினார். ஆல்சூடியாய் சிவன் அமர, ஆதிபகவனை
சமணர்கள் அவ்வாறு வழிபட்டதே காரணம் எனலாம். போதிசூடி புத்தரும்,
ஆத்திசூடி பாகல்வண்ணரும், ஆல்சூடி ஆதிபகவரும் சமண சமயங்களின்
பத்தர்குழாங்கள் வடிவமைக்க, சைவம் பல்லவர் காலத்தில் தென்னன்/தெக்கிணனை
வடிவமைக்கிறது. அவரது தோற்றத்தை காட்டும் ஆதி சான்றுகளாக
சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, சிலம்பு போன்றவற்றை ஆதாரங்கொள்ளலாம்.

இன்னொன்று: ஆய் போற்றும் ஆலமர்செல்வன் பற்றிய சிறுபாணாற்றுப்படை
வரிக்கு திரு. நூதலோசு ’நீல நாகம் நல்கிய கலிங்கம்’ - கரிய யானைகள் கொண்டுவந்த
ஆடை என்றார். இவ்வுரையை விடப் பொருத்தமான உரை இருக்கிறது.

"நீல நாகம் நல்கிய கலிங்கம்
ஆலமர் செல்வர்க் கமர்ந்தனன் கொடுத்த
சாவந் தாங்கிய சாந்துபுலர் திணிதோள்
ஆர்வ நன்மொழி ஆய்" (96 - 99)

”நாகங்களின் புணர்ச்சிக்காலத்து, அவற்றின் மேல் போர்க்கப்பட்ட ஆடை மிகவும் பவித்திரமானதென்றும், அது தேவதைகளுக்கு மிகவும் உகப்புடை தென்றும் வழக்குண்டு.” (வேளிர் வரலாறு, மு. ராகவையங்கார்).

சாவம் - வில். சாய்தல் - வளைதல் இந்த வினைச்சொல் தரும் சாவம்,
‘shaapa'  என்று வடமொழியில் வழங்குகிறது. இது த்ராவிடச்சொல் எனக்
காட்டியவர் அறிஞர் பர்ரோ அவர்கள். ‘sayana 'bed', saayaNa 'name of first commentator on Rgveda',
shava 'corpse' - எல்லாம் சாய்- என்னும் தமிழ் வினைச்சொல் தரும் வடமொழிச்
சொற்கள் தாம், வடக்கே தொல்தமிழ் ஆரியர் வருகையால் திரிந்து ஹிந்தி,
குஜராத்தி என ஆனபோது மாறியவை, அமெரிக்கா கண்டத்தில் செவ்விந்திய மொழிகள்
போய் இன்று ஸ்பானிஷ், ஆங்கிலம் ஆனாற்போல, இந்தியா வரலாற்றில் அதற்குமுன்
நிகழ்ந்த நிகழ்ச்சி இது.

நா. கணேசன்

வேளிர் வரலாறு, மு. இராகவையங்கார்

”வேள்-ஆய்

இவன் கடைச்சங்கநாளில் விளங்கிய கடையேழுவள்ளல்களில் ஒருவன் என்பது-158-ம் புறப்பாட்டாலும், சிறுபாணாற்றுப் படையாலும் நன்கு விளங்குகின்றது. இவ்வேளைப்பற்றிய சரித்திர முழுதும் தெரியவிடமில்லையேனும், இவன் விஷயமாகப் பழைய நல்லிசைப்புலவர் பாடிய செய்யுள்கள் இவ்வள்ளலது வரலாறுகள் சிலவற்றை அறிதற்கு உதவியாயிருத்தலோடு, இவனது அரிய குண விசேடங்களையும் பெரிய கொடைச்சிறப்பையும் இக்காலத்தார்க்குப் புலப்படுத்துகின்றன. இவ்வள்ளல் வேளிர் குலத்தைச் சேர்ந்தவனென்பது, 'மாவேள் ஆய்', 'தேர்வேள் ஆய்' எனப் புறநானூற்றில் வருதலாற்றெரியலாம். அந்நூலில் "கழறொடி ஆஅய்மழைதவழ் பொதியில்" எனவும், "தென்றிசையாய்குடி" எனவும் கூறப்படுதலின், ஆய்நாடு பொதிய மலைப்பக்கத்து உள்ளதென்பதும், அவன் தலைநகர் 'ஆய்குடி' எனப் பெயர்பெற்ற தென்பதும் விளங்கும். இவன் மலை வேற்றரசரால் தாக்கமுடியாத அரண்வலியுடைய தென்பர்; "கழறொடி யாஅய் மழைதவழ் பொதியில் - ஆடுமகள் குறுகினல்லது - பீடுகெழு மன்னர் குறுகலோ அரிதே" எனக் காண்க. இவனாட்டில் கவிரம் என்னும் மலைப்பகுதியில் இனிய பல சுனைகளுண்டென்றும், சூரரமகளிர்பலர் அதில் வாழ்வதாக ஐதிகமிருந்த தென்றும் தெரியவருகிறது. இதனை--

"தெனாஅது, ஆஅய் நன்னாட் டணங்குடைச் சிலம்பிற்
கவிரம் பெயரிய உருகெழு கவாஅன்
ஏர்மலர் நிறைசுனை யுறையும்
சூர்மகள் மாதோ என்னுமென் னெஞ்சே." (அகம்-198)

என்னும் அடிகளிற் காண்க. ஆய்நாட்டில் யானைகள் மிகுந்த காடுகள் உண்டென்றும், பரிசிலர்க்கு யானைக்கொடை மிகுதியாக அளித்து வந்தவன் இவ்வள்ளலென்றும் தெரிகின்றன. இங்ஙனம், இவனது யானைக் கொடையின் மிகுதியை நோக்கி, ஒருபுலவர், "விளங்கு மணிக் கொடும்பூண் ஆஅய்நின் னாட்டு-இளம்பிடி ஒருசூல் பத்தீனும் மோ" என்று நயப்பக் கூறுதலுங் காண்க. இவ்வள்ளலுக்கு 
----------
page 29 

"அண்டிரன்" என்னும் மற்றொரு பெயரும் உண்டென்பது, இவனைப் பற்றிய பாடல்கள் பலவற்றிற் காணலாம். புறநானூற்று - உரைகாரரும், 'அண்டிரன் - ஆய்க்கு ஒரு பெயர்' என்பர். இவ்வண்டிரன் என்ற பெயர்வழக்கின் காரணம் முன் வேளிர் வரலாற்றினுள் விளக்கப்பட்டது.* புறப்பாட்டில், "ஈகையரிய இழையணிமகளிர்" "கோடேந் தல்குற் குறுந்தொடி மகளிரொடு" என வருதலால், ஆய் மகளிர்பலரை மணம்புரிந்தவனென்பது அறியப்படும். இவனுக்குரிய மாலை சுரபுன்னை ஆகும். இவ்வள்ளல், தன் பெருங்கொடைக்கேற்ப, இன்சொல்லே தன்சொல்லாகப் படைத்தவனென்பர். இவ்வேளிர் தலைவன், கொங்கு நாட்டாரோடு போர்புரிந்து, அவரை மேல்கடற் பக்கத்தே ஓட்டினவனென்று, 130-ம் புறப்பாடல் அறிவிக்கின்றது. இவன், ஒருகால், நீலநாக மொன்றால் அளிக்கப்பெற்ற அருமை பெருமை வாய்ந்ததோர் ஆடையைச் சிவ
பிரானே அணியத்தக்கதென்று கருதி, அப்பிரானுக்கு உவந்து சாத்தினன் என்று சிறுபாணாற்றுப் படையில் வியக்கப்படுகின்றான். இதனை,

"நீல நாகம் நல்கிய கலிங்கம்+
ஆலமர் செல்வர்க் கமர்ந்தனன் கொடுத்த
சாவந் தாங்கிய சாந்துபுலர் திணிதோள்
ஆர்வ நன்மொழி ஆய்" (96 - 99)

என்பதனால் அறிக. இவ்வரலாறு, ஆய், சிவபக்தி மிக்கவன் என்பதை நன்கு விளக்குவது. இவ் வள்ளலின் நாளோலக்கம் மிகச் சிறந்து விளங்கும் என்பர். (நற்.-30) இப்பெருந்தகையைப் பாடிய புலவர்பெருமக்கள் உறையூர் ஏணிச்சேரி-முடமோசியார், துறையூர் - ஓடைகிழார், குட்டுவன் - கீரனார் என்போர். இவருள் முடமோசியார் அந்தணரென்பது தொல்காப்பிய மரபியலுரையால் (சூத் 74) அறிந்தது. இம்மோசியாரே, வேள்-ஆயின் அருமை பெருமைகளை அதிகமாக வெளியிட்டவர். வேள்-பாரிக்குக் கபிலர் போலவும், 
-
* வேளிர் வரலாறு, 16-ம் பக்கம் பார்க்க.
+ நாகங்களின் புணர்ச்சிக்காலத்து, அவற்றின் மேல் போர்க்கப்பட்ட ஆடை மிகவும் பவித்திரமானதென்றும், அது தேவதைகளுக்கு மிகவும் உகப்புடை தென்றும் வழக்குண்டு.

----------
page 30 

அதிகமானுக்கு ஔவைபோலவும், ஆய்க்கு மோசியாரே பெரிது முரிமை பூண்டவரென்பது " திருந்துமொழி மோசி பாடிய ஆயும்" எனப் பெருஞ்சித்திரனார் என்ற புலவர் கூறுதலால் (புறம்-158) தெரியலாம்.

வேள் - ஆயின் வள்ளன்மையையும் அருங்குணங்களையும் புறநானூற்றில் வரும் பாடல்கள் மிகவும் அழகுபடக் கூறுகின்றன. மோசியார் தன் மனைவியரது மாங்கல்ய சூத்திரம் ஒழிய மற்றவையனைத்தையும் பரிசிலர்க்கு வழங்கி விட்டனனாயினும், கொடுக்கும் இன்பத்தை அனுபவித்தறியாது தம்வயிறருத்திக் கழியும் மற்றப் பெருஞ் செல்வர்கள் மனைபோலப் பொலிவிழக்காது ஆயின் அரண் மனை அழகுமிகுந்து விளங்கும்" என்கிறார். இப்புலவர், ஆயைக் காணாதமுன்பு, பிறர் சிறிய இசையைக் கேட்டும் நினைந்தும் பாடியும் போந்த தமக்கு, அவனைக் கண்டதும் அவனது அறுங்குணங்களும் பெருங்கொடைத்திறமும் அளவிறந்த அதிசயம் விளைத்தமையால், "முன்னுள்ளு வோனைப் பி்ன்னுள்ளினேனே - ஆழ்கென் னுள்ளம் போழ்கென் னாவே - பாழூர்க் கிணற்றிற் றூர்கவென் செவியே" எனத் தம் அறியாமையை இழிப்பதன்மூலம் ஆயின் உத்தம குணங்களை வியந்தனர். இவ்வள்ளலின் அருமை பெருமைகள் தம் போன்ற பெரும்புலவர்களைப் பணித்துவிட்டமைபற்றி " புலவர்கள் நீயில்லாத உலகத்தில் இனி வாழாதிருக்கக் கடவர்" என்றும், " பெரிதாக ஏத்தினாலும் சிறிதும் உணரமாட்டாத, பெருமையில்லாதுபெருகிய செல்வத்தையுடைய அரசரை எம்மவர் பாடார்" என்றும் புகழுவர். (புறம்-373) இங்ஙனம், வேள் ஆயின் பேரபிமானத்துக்கு உரிமை பூண்டு விளங்கிய இப்புலவர், மலைக்காட்டுவழியே ஒருகாற் செல்லும்
போது, ஆண்டுக் களித்து வாழும் யானைக் கூட்டங்கள் தம் கண்ணுக்குப் புலப்பட, அப்போது--

" மழைக்கணஞ் சேக்கு மாமலைக் கிழவன்
வழைப்பூங் கண்ணி வாய்வா ளண்டிரன்
குன்றம் பாடின கொல்லோ
களிறுமிக வுடைய இக்கவின்பெறு காடே"

---------
page 31 

என்னும் இனிய பாடலைக் கூறினார். " யானைகளை மிகுதியாகவுடைய இவ்வழகிய காடு, அண்டிரனுடைய (ஆய்) மலையைப் பாடிப் பரிசில் பெற்றதுகொல் என்பது இகன் கருத்து. ஆயின் யானைக்கொடை, காட்டியானைகளைக் கண்டதும் தம் மனதில் தோன்ற, அப்போது தானே சுரந்தெழுந்த பாடல் இஃதென்பது அறியலாம். இன்னும்,
மோசியார் ஆயின் ஒப்புயர்வற்ற கொடைத்தூய்மையை--

" இம்மைச் செய்தது மறுமைக் காமெனும்
அறவிலை வாணிகன் ஆஅய் அல்லன்
பிறரும் சான்றோர் சென்ற நெறியென
ஆங்குப் பட்டன் றவன்கை வண்மையே"

என்ற பாட்டாற் குறித்தனர். இவ்வுலகில் அறங்கள் செய்யின் அவை மறுமைக்குதவு-மென்று மறுபயன் பெறும் எண்ணத்தடன் தருமவியாபாரம் செய்யும் வாணிகலன்னன் ஆய்; அவனது கொடை, பெரியோர்கள் சென்ற வழியென்று உலகோர் கருதும்படி அமைந்தது" என்பது இப்பாட்டின் போந்த பொருள். இனி, அம்மோசியார் மற்றோரிடத்தில்,

வடதிசை யதுவே வான்றோ யிமயம்
தென்றிசை ஆஅய் குடியின் றாயிற்
பிறழ்வது மன்னோவிம் மலர்தலை யுலகே"

என இவ்வள்ளல் உலகிற்குபகாரப்படும் சிறப்பைப் புகழ்வர். இவ்வடிகளில் அமைக்கப்பட்ட கருத்து, பொதியில் மலைக்குரிய அகத்தியர்க்கு வழங்கும் புராணகதையடியாக உண்டாகியிருத்தல் வேண்டும்.

இவ்வாறு, " ஆடுநடைப் புரவுியுங் களிறுந் தேரும் - வாடாயாணர் நாடு மூரும் - பாடுநர்க் கருகா ஆஅய் அண்டிரன்" பெருவள்ளலாய் உலகோர் தன்னை என்றும் நினைக்கும்படி விளங்கி, பின் ' காலனென்னுங் கண்ணிலி யுய்ப்ப—மேலோருலக மெய்தினன்'. இவ்வள்ளல் பிரிவிற்காற்றாது, இவனதுரிமை மனைவியர் தீப்பாய்ந்து உயிர்விட்டொழிந்தனர். ஆய் இறந்தபோது அவனது பிரிவுக்குப் பெரிதும் இரங்கிப் பாடிய புலவர்கள், உறையூர் ஏணிச்சேரி 
------------ 
page 32 

முடமோசியார், குட்டிவன் கீரனார் என்போர். இவருள், மோசியார், ஆயண்டிரன் விண்ணிலகு சென்றதற்கிரங்கி அடியில்வரும் உருக்கமான பாடலைக் கூறினர்:

"திண்டேர் இரவலர்க் கீத்த தண்டார்
அண்டிரன் வரூஉ மென்ன வொண்டொடி
வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுட்
போர்ப்புறு முரசங் கறங்க
ஆர்ப்பெழுந் தன்றால் விசும்பி னானே"*

பெரும்புகழினனாகிய அண்டிரனை விண்ணுலகத்தில் இந்திரன் வாத்திய கோஷங்களுடன் வரவேற்று எதிர்கொண்டான் என்பது இதன் கருத்து; 
என்றது ஆய் சுவர்கஞ்சென்றான் என்பதாம்.”
It is loading more messages.
0 new messages