திருவிடைமருதூரில் சோழர் காலத்தில் சாக்கைக் கூத்து நாடகம்

36 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Mar 28, 2019, 5:40:00 AM3/28/19
to seshadri sridharan

திருவிடைமருதூரில் சோழர் காலத்தில் சாக்கைக் கூத்து நாடகம் பற்றிய கல்வெட்டு

 

tvdai 1.JPG

முத்தமிழில் ஒன்று நாடகத் தமிழ். இந்த நாடகக் கலை கூத்துவடிவில் சோழர் கால ஆட்சியில் கோவில்களில் நடத்தப்பெறுதற்கு வேண்டிய கொடையை நல்கி நல்லாதரவு தந்து வளர்த்ததற்கு சான்றாக உள்ளவையே கீழ் உள்ள கல்வெட்டுகள். இவை இரண்டும் திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்கேசுவரர் கோவில் மண்டப வடக்கு சுவரில் பொறிக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் ஆதித்ய கரிகாலனின் ஆட்சியில் சாக்கைக் கூத்தனுக்கு பசிக்கு கூலியாக ஒரு வேலி நிலம்.

கல்வெட்டுப் பாடம்:

ஸ்வஸ்திஸ்ரீ பாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி பந்மற்கு யாண்டு 4 ஆவது திருவிடைமருதில் ஸ்ரீ மூலஸ்தானத்தில் பெருமானடிகளுக்கு ஆரியக் கூத்தாட ஸ்ரீ காரியம் ஆராய்கின்ற சிற்றிங்கண் உடையான் கோயில் மயிலை ஆன பராந்தக மூவேந்த வேளாரும் திரைமூர் நாடுடையாரும் திருவிடைமருதில் நகரத்தாரும் தேவகந்மிகளும் நாடக சாலையிலேயிருந்து கித்திமறைக்காடன் ஆன திருவெள்ளறை சாக்கைக்கு நிவந்தஞ் செய்து குடுக்க என்று ஏவலால் இத்தேவர் தேவதானம் விளங்குடி நிலத்தில் பறைச்சேரி பத்து உள்பட நிலம் வேலியும் இவ்வாண்டின் எதிராமாண்டு முதல் இந்நிலங்கொண்டு தைப்பூசத் திருநாளிலே ஒரு கூத்தாடுவதாகவும், திருத்தம் ஆடின பிற்றை நாள் துடங்கி மூன்று கூத்தாடுவதாகவும்,  வைகாசித் திருவாதிரையின் பிற்றைநாள் தொடங்கி மூன்று கூத்தாடுவதாகவும் ஆக இந்தக் கூத்து ஏழு அங்கமும் ஆடுவதாகவும் பண்டாரத்தே பதினாற்கல நெல்லு கொற்றுப் பெறுவதாகவும் இந்நெல்லும் விலை அடைப்படி நெல்லும் கொற்றும் இரட்டி அவ்வவ் வாட்டையாடுகவும். இப்பரிசு கித்திமறைகாடனால் திருவெள்ளறை சாக்கைக்குச் சந்திராதி _ _ _ _ _

சொற்பொருள்:  
காரியம் ஆராய்கின்ற – கருத்தாலோசிக்கும், consultant; சிற்றிங்கண் – தணிக்கை செய்கிற. முதுகண் என்பதற்கு எதிர்ச்சொல் ஆகுமோ; கோயில் மயிலை -     ; தேவகன்மிகள் – இறைப்பணியாளர்; நிவந்தம் – கோயிற்பணி செலவு; ஏவல் - மேலிடத்துக் கட்டளை; எதிராமாண்டு - ; திருத்தம் – பத்தாம் நாள் நடைபெறும் தீர்த்தவாரி; கொற்றும் – உணவு; கூத்து – ஆடி நடிப்பது.

கல்வெட்டு விளக்கம்:  

இரண்டாம் ஆதித்ய கரிகாலனின் 4 ஆம்ஆண்டு ஆட்சியில் (கி.பி. 968) திருவிடைமருதூர் மூலவருக்கு ஆரியக் கூத்தாடுவற்கான திருப்பணி பற்றி கருத்தாலோசனை செய்கின்ற தணிக்கை செய்கின்ற அதிகாரியான பராந்தக மூவேந்த வேளாரும், திரைமூர் நாட்டவரும், திருவிடைமருதூர் நகரத்தாரும், இறைபணியாளர்களும், நாகடசபையில் கூத்தாடும் திருவெள்ளறை சாக்கையான கித்திமறைக்காடன் என்பானும் இவனுக்கு பணிக்கூலி கொடுக்க மேலிடக் கட்டளையால் ஒன்று கூடி ஆலோசித்து விளங்குடியில் இவ்இறைவர்க்கு உள்ள தேவதான நிலத்தில் பறைச்சேறிபற்று உள்பட ஒரு வேலி நிலத்தை  கோயிற்பணி கூலியாக ஏற்றுக் கொண்டு எதிர்வரும் ஆண்டு முதல், இதாவது, ஐந்தாம் ஆட்சி ஆண்டு முதல் தைப்பூசத்தன்று ஒரு கூத்தாடவும், தீர்த்தவாரி கழிந்து வரும் பின் மூன்று நாளும், வைகாசித் திருவாதிரைக்கு பின் மூன்று நாளும் ஆக இந்தக் கூத்து ஏழு அங்கங்கள் ஆடவேண்டும். கோயில் அலுவலகத்தில் 16 கலம் நெல், உணவு பெற்றுக் கொள்ளவும் இசைவு தரப்பட்டது. அடுத்தடுத்த ஆண்டுகளில் கூத்து நடத்த 16 கல நெல்லும், விலை அடைப்படி நெல்லும், உணவும் இரட்டிப்பாக பெற்றுக் கொள்ளலாம். இந்த வெகுமதிப் பரிசு திருவெள்ளறை சாக்கையருக்கு கித்தமறைக்காடனால் சந்திராதித்தர் வரை தொடர்வதாக என்று குறிக்கப்பட்டுள்ளது.

திருவிடைமருதூர் கோவிலில் நாடகசபை ஒன்று இருந்ததையும் அதில் மூலவருக்காக ஆண்டுதோறும் கூத்து நடைபெற ஏற்பாடு ஆனது பற்றியும் அறியமுடிகின்றது. சாக்கை கூத்து ஆடியவர்கள் பறையர்கள் என்பதால் கித்தமறைக்காடனுக்கு பறைச்சேரியில் உள்ள பற்று ஒதுக்கப்படுகின்றது. அதைக் கொண்டு அவர் பறையர் என்பதையும் அறிய முடிகின்றது. புராணத்தில் பக்த நந்தனார் தீண்டாமைக்கு ஆட்பட்டு கோயிலுக்கு வெளியே நிறுத்தப்பட்டார். ஆனால் இங்கோ கித்திமறைக்காடன் என்ற பறையர் கோயிலில் அமைந்த நாடக சபையில் கூத்து நிகழ்த்துகிறார். இவ்விரண்டு செய்திக்கும் எத்தனை முறண். இது சோழர் காலத்தில் தீண்டாமை இல்லை என்பதற்கு சான்று. எவரும் தாழ்த்தி ஒடுக்கப்கவில்லை என்பதற்கு சான்று. இதனால் இரண்டாயிரம் ஆண்டு ஒடுக்குமறை என்பது பொய்யன்றோ?

 

முதற் பராந்தகன் காலத்தில் உடுக்கை அடிப்போனுக்கு பணிக்கூலியாக நிலம்.

கல்வெட்டுப் பாடம்:

ஸ்வஸ்திஸ்ரீ மதுரைகொண்ட கோப்பரகேசரி பந்மற்கு யாண்டு 17 ஆவது திருவிடைமருதூருடையாருக்கு ஸ்ரீ காரியம் ஆராய்கின்ற குறும்பில் வாஸுதேவனார் ஆராய்ச்சியில் திரைமூர் ஸபையாரும் _ _ _ _ _ த _ _ _ ரல் நகரத்தாரும் திருக்கோயிலுடையார்களும் பதிபாத மூலத்தாரும் நாடக சாலையிலிருந்து திருவிடைமருதூருடையார்க்குத் திருஓலக்கத்து மூன்றுஸந்தியும் உடுக்கை வாசிப்பான் ஒருவனுக்கு விளங்குடி தேவர் நிலத்தில் நிவந்தமாகச் செய்த நிலம் முக்கால்.

சொற்பொருள்:  
ஆராய்ச்சி – கருத்தாலோசனை, consult; பதிபாத -  சிவன்கோயில் பூசகர்; திருஓலக்கம் – நாயனம், நாதஸ்வரம்.

கல்வெட்டு விளக்கம்:  

முதற் பராந்தகனின் 17 ஆம் ஆண்டு ஆட்சியின் (கி.பி. 924) போது திருவிடைமருதூர் ஈசன் கோயிலில் கருத்தாலோசனை செய்கின்ற குறும்பில்லைச் சேர்ந்த வாசுதேவன் நடத்தின கருத்தாலோசணை கூட்டத்தில் பங்கெடுத்த திரைமூர் கருவறை பட்டர்களும், நகரத்தவரும், திருக்கோயில் பணியாளர்களும், சிவன்கோயில் பூசகரும் கூடி நாடக சபையில் இருந்து திருவிடைமருதூருடைய ஈசர்க்கு நாதாவரம் வாசிக்கின்ற போது மூன்று கால பூசனையின் போது உடுக்கை அடிப்பவனுக்கு விளங்குடியில் உள்ள தேவதான நிலத்தில் தானமாகக் கொடுத்த நிலம் முக்கால் பங்கு வேலி.

கூத்து, நாடகம் முதலியவை கோவிலகளில் இராசராசனுக்கு முன்பே பல்லவர் காலத்திலேயே தொடங்கி விட்டன போலும்.  உடுக்கை அடிப்பவர் பறையர் என்பதால் விளங்குடியில் அவருக்கு நிலக் கொடை வழங்கப்பட்டது.

 

பார்வை நூல்: திருவிடைமருதூர் கல்வெட்டுகள், வெளியீடு 1960, ஸ்ரீ மகாலிங்க சுவாமி தேவாதானம்.

இந்த மகாலிங்க சுவாமி தேவஸ்தானம், திருப்பதி தேவஸ்தானம் போல ஆங்காங்கே உள்ள திருக்கோயில் நிருவாகத்தார் தமது கோயில் கல்வெட்டுகளை அச்சில் ஏற்றி இருந்தால் தமக்கு இப்போது எவ்வளவோ கல்வெட்டுகள் ஆராயக்கிட்டி இருக்கும்.

ReplyForward

வல்லமையில்  http://www.vallamai.com/?p=91234  

N D Logasundaram

unread,
Mar 28, 2019, 8:29:24 AM3/28/19
to vallamai, mintamil, தமிழ் மன்றம், thamizayam, SivaKumar, podhuvan sengai, Vasudevan Letchumanan, Maravanpulavu K. Sachithananthan, muthum...@gmail.com, ara...@gmail.com, thirumurai, Raji M, Thenee MK, Muthu muthali, Banukumar Rajendran, Suresh Kumar, Kanaka Ajithadoss
நூ த லோ சு
மயிலை
 அன்புள்ள திரு சேசாசாத்திரி 

ஸ்வஸ்திஸ்ரீ பாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி பந்மற்கு யாண்டு 4 ஆவது திருவிடைமருதில் ஸ்ரீ மூலஸ்தானத்தில் பெருமானடிகளுக்கு ஆரியக் கூத்தாட ஸ்ரீ காரியம் ஆராய்கின்ற சிற்றிங்கண் உடையான் கோயில் மயிலை ஆன பராந்தக மூவேந்த வேளாரும் திரைமூர் நாடுடையாரும் திருவிடைமருதில் நகரத்தாரும் தேவகந்மிகளும் நாடக சாலையிலேயிருந்து கித்திமறைக்காடன் ஆன   

இங்கு காணும் கோயில்மயிலை ஆன  என்பதில் கோயில்மயிலை என்பதன் பொருள் கோயில் காரியங்களுக்காகவே நேர்ந்து விடப்பட்டவன் அதாவது அதுதான்அவன் முழு நேர  தொழில்=பொறுப்புடைவான் என்பதாகும் = கோயில் காளை ( யதர்த்தமாக 
 மக்கள் வாயில் கோயில் மாடு போல் கேட்பாறற்று  சுற்றுகின்றான்  என ஓர் இழினிலை பயன்படும் உண்டு ) வடநாட்டு பட்டினங்களில் போ க்குவரத்து சாலைகளில் கெடப்பாரற்று இந்த கோயில் காளைகள் சுற்றும் அவைகளை ஒன்றும் செய்ய`க்கூடாது என்பது 5

அதுபோல் கோயில் பெண்டுகள் என்றால் வேறு தனியாக (குடும்பம் போன்று )  வேறு வேலை ஏதும் ஏற்காது கோயில் வேலையே 
 முழுநேர வேலையகக் கொள்ளவேண்டியவர்கள் ஆவார்கள் அதவது மடவார் வளாகத்தினர் 

மயிலக்காளை என்றால் காளையில்  ஓர் இனம் போன்று தோன்றினாலும்  அதுவல்ல பொருள்
அதான்று நந்தி வர்மன்  மயிலைக்காகவலன் எனும் பயன்பட்டிலும்மயிலை எனும்துறைமுக பட்டினம் ஆட்சிசெய்பவன் எனபதுடன் காளைக்குக் காவலன் அதவது சைவ சமயத்திற்ம் பாதுகப்பாக இருப்பவன் எனும் குறிக்கும் 
  நந்தி=காளை நந்தினி=பெண்பால் பாலகறக்குைம் பசு பங்கலூருவில் பால்வளத்துறைக்க்குநந்தினி எனப்பெயர் கொடுத்துள்ளநர்

மயிலை என்பது மயிலாப்பூருக்கு  மட்டுமல்ல மாயவரம் எனும் மயிலாடு துறைக்கும்  மரூஉ ஆகும் 

மேலும் ஒன்று இடைமருதில் என்பதில் இல் எனும் ஈறு ஊர்=செம்மையாக்கட்ட மக்கள் கூடி வாழும் இடம்  என பொருள்படும் 

மயிலாப்பூருக்கு பெயர் இதே பின்னொட்டுடன் கூடியதே 
 மயிலார்ப்பில் என்பது (அப்பர் தேவாரம் அதாவது மயில்கள் ஆர்ப்பரிக்கின்ற = பலவகையில் ஒலிக்கின்ற கூவுகின்ற சோலைகள் கூடியது 
என்பதாகும் 
அன்பில் செந்தில் குடமூக்கில் என நீண்ட நிரலைக்கட்டமுடியும் 
இன்றும் கேரளத்தில் இந்த இல் எனும் இடப்பெயர் பின்னொட்டு வழக்கத்தில் இருந்து தமிழின் தாய்மையைக்காட்டும் 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N D Logasundaram

unread,
Mar 28, 2019, 10:06:33 AM3/28/19
to vallamai, mintamil, தமிழ் மன்றம், thamizayam, SivaKumar, podhuvan sengai, Vasudevan Letchumanan, Maravanpulavu K. Sachithananthan, muthum...@gmail.com, ara...@gmail.com, thirumurai, Thenee MK, Muthu muthali, Suresh Kumar, Banukumar Rajendran, Kanaka Ajithadoss
நூ த லோ சு
மயிலை
 : seshadri sridharan <ssesh...@gmail.com>
: Thu, Mar 28, 2019 at 3:10 PM

நூ த லோ சு
மயிலை
 அன்புள்ள திரு சேசா த்திரி 
பறைச்சேரி யில் உள்ள நிலம் தானத்தில் உள்ளது என்பதுதான் பொருள் அப்படியிருக்க பறையர் எப்படி கூத்தாடினார் எனக்கொள்கின்கிறீர் புரியவில்லை விளக்கவும்

சாக்கைஓர்  கூத்து வகையாகாது   கூத்துதான் வகையில் ஆரியக்கூத்தாகி விட்டதே 
 சாக்கை எனும் ஊரில் உள்ளவனுக்கு அதாவது வெள்ளறை சாக்கைக்கு என்பது
 திரு வெள்ளறை எனும் ஊரினனான சாக்கை என்பவனுக்கு
அல்லது வெள்ளறை அடுத்த சாக்கை எனும் ஊ ரினனுக்கு எனவும் பொருளாகலாம்
 கூத்தாடியவர் திரு வெள்ளறை எனும் ஊறினராகும் திருவெள்ளறை திருச்சிக்கு அருகு முசிறிக்கும் முன் உள்ளது அறிவீர்
 வெள்ளறை யும் அல்ல அதனினும் அடகுத்துள்ள சாக்கை எனும் ஊரினர் சாக்கை என இரு வேறு ஊர்கள் தமிழகத்தில் உள்ளன திருத்துறைப்பூண்டி அரு கும் தஞ்சாக்கை (தண் சாக்கை) மதுரை திருப்பூவணம் அருகும் உள்ளன இந்த தஞ்சாக்கை =தஞ்சை  வாணன் கோவை நூலின்  தலைவன் ஊர்  மற்றும் தேவார வைப்புத்தலம்  

சிற்றின்கண் ஓர் ஓடப்பெயர்
எண்கண் ஓர் இடப்பெயர் ஆவது அறிவீர் நாகை அருகு முருகன்  கோயில் பேர்பெற்றது 
அதுபோல் இன்கண் = இங்கண் அதன் வேறுபாடு சிற்றின்கண் சிறி ஊரான சிற்றிங்கண் 
எனக்கொள்ள வேண்டும் ணும் என்பது என் கருத்து 

மற்றும்

ஓலக்கம்  என்றால் நாதசுரம் எனும் பொருளல்ல பெருந் தவறு 
 தர்பாரில் வீற்றிருப்பது  எனப்பொருள்படும் 
ஓலக்கம் என்றால் ஒருவர் மேடையில் நடுவணா க இருந்து மற்றவர்கள் ஏதானும் செய்வது 
மன்னன்  ஓலக்கம் இருந்தான் என்றால் பலரும் அறிய வீற்றிருந்து அனைவருக்கும் 
 வேண்டியதை செய்ய இருக்கும் நிலை திருமணத்திலும் மருஒலக்கம் என உண்டு 

மற்றும் ஒன்று இல் எனும் இடப்பெயர் பின்னொட்டு
இடைமருதில் என்பதுபோல் குறும்பில் என்பதிலும் வருகின்றமைக்காண்க 
இந்த இல்  அதனில் இதனில் என்பதில் காணும்  வேறறுமை உறுப்பல்ல 

வேந்தன் அரசு

unread,
Mar 28, 2019, 10:45:56 AM3/28/19
to தமிழ் மன்றம், vallamai, mintamil, thamizayam, SivaKumar, podhuvan sengai, Vasudevan Letchumanan, Maravanpulavu K. Sachithananthan, muthum...@gmail.com, ara...@gmail.com, thirumurai, Thenee MK, Muthu muthali, Suresh Kumar, Banukumar Rajendran, Kanaka Ajithadoss
இருவர்கருத்தும் சிறப்பு

வியா., 28 மார்., 2019, முற்பகல் 7:06 அன்று, N D Logasundaram <selvi...@gmail.com> எழுதியது:
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.

For more options, visit https://groups.google.com/d/optout.


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

seshadri sridharan

unread,
Mar 29, 2019, 4:01:12 AM3/29/19
to thiru-th...@googlegroups.com, வல்லமை, seshadri sridharan

பொருள் விளக்க முயன்றதற்கு நன்றி.

திருவெள்ளறையை சேர்ந்த சாக்கையன் (கூத்தாடி) கித்திமறைக்காடன் கூத்து நிகழ்த்தக் கூலியாக ஒரு வேலி நிலம் தரப்பட்டது. வேலி என்பது விளைநிலம் என்பதை நோக்குக. பறைச்சேரிப்பற்றில் உள்ள நிலம் உட்பட மொத்தம் ஒரு வேலி அவனுக்கு தரப்பட்டது. பறைச்சேரி என்பது வாழ்விடம்.   விளங்குய்டு நிலம்  இரண்டும் முன்பு யாரோ ஒருவரால் கோவிலுக்கு தேவதானமாக விடப்பட்ட நிலங்கள். இவை அருகருகே ஒட்டி இருந்ததால் அதை இவனுக்கு கொடுக்கிறார்கள்.

பண்டு ஒரே தொழில் செய்வோர் கூடி வாழ்ந்த் இடம் சேரி எனப்பட்டது. பண்டு பாணர் விறலியர் தாம் இப்படி கூத்து, தோலிசைக் கருவிகளை கையாண்டு வந்தனர். இவர்களின் வழிவந்தோரே பறையர்.  பறையர் என்பது பட்டப் பெயர். கித்திமறைக்காடன், அவனது கூத்து உறுப்பினர்கள் பறையர் என்பதால் இவர்களே தமக்கான நிலத்தை கோவிலிடம் கேட்டு பறைச்சேரியில் தேர்ந்திருக்க வேண்டும். 

மூன்று பொழுதும் நாதசுரம் வாசிக்கும் போது உடுக்கை அடிக்க என்று பொருள்கொண்டு பாருங்கள். தர்பார் மண்டபத்தை மூன்று முறை கூட்ட தேவை ஏற்படுமா? கோவிலில் தர்பார் இருக்குமா? . நாடக சபையில் இருந்து நாதசுரம் வாசித்தபடி மூலவர் சிலை அருகில் வந்து  நாதசுரம் வாசிக்கையில் உடுக்கை அடிக்க ஏற்பாடு செய்தனர். செந்தமிழ் சொற் பிறப்பியல் பக்கங்களை இணைத்துள்ளேன். அவற்றை  பெரிது படுத்தி பார்க்க வேண்டுகிறேன்.  நான் சரியான பொருளைத்தான் தந்துள்ளேன்.



image.png
image.png
    
 


seshadri sridharan

unread,
Mar 29, 2019, 4:07:26 AM3/29/19
to seshadri sridharan

கல்வெட்டுகளில் காரைக்கால் பகுதிகள், 60 கல்வெட்டுகள் கொண்ட நூல், ஆசிரியர் வில்லியனூர் புலவர் ந. வேங்கடேசன், பக் 141- 144, கல்வெட்டு கீழே விளக்கத்துடன்.

 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர்க் கோயிர் திருஉண்ணாழி வடக்குச் சுவர் கல்வெட்டு விஜயராஜேந்திரனான முதல் ராஜாதிராஜனின் 35 ஆம்ஆட்சி ஆண்டில் (கி.பி. 1043) இக்கோயிலில் ஆரியக்கூத்து நிகழ்வை பற்றி இக்கல்வெட்டு 43 வரிகளில் பதிவு செய்துள்ளது.

1.    ஸ்வஸ்திஸ்ரீ  கலியாணபுரமும் வெளி

2.    க் கிராமமுங் கொண்ட கோவிராஜ

3.    கேசரி பந்மராந உடையார் ஸ்ரீ வி

4.    ஜைய ராஜேந்திர தேவர்க்கு யாண்டு 30 5 (35)

5.    ஆவது ஜயங் கொண்டசோழவள

6.     நாட்டு முழையூர் நாட்டு பிரமதேயந் திரு

7.    நள்ளாற்று திருநள்ளாறுடையார்

8.    ஸ்ரீ கோயிலில் முன்பு ஆரியக்கூத்துக்

9.    காணியுடைய ஸ்ரீ கண்டன் கம்பநான

10. அபிமான மேரு நாடகப் பேரரையனு

11. ம் ஸ்ரீ கண்டன் அரங்கன் மக்களும்

12. இ _ _ _ _ தாதம் பச்சை பதிய

13. நிறு _ _ _ நில்  இவர்களுக்கு மாசிமக

14. த்திருநாளில் ஐஞ்சங்கமும் வை

15. காசி விசாகத் திருநாள் ஐஞ்ச

16. ங்கமும் ஆடக் கடவார்களாக விட்ட நி

17. லம் மூவேலி இன்நிலமாவுது

18. புரவுவரி வாய்க்காலுக்குத் தெற்கு

19. ம் தலைகணி வாய்க்காலுக்குக்

20.  கிழக்கும் இத்தேவர் நிலத்து

21. க்கு மேற்கும் தரும்புரத் தெல்

22. லைக்கும் உடையார் நிலத்துக்கு

23. வடக்கும் இப்பெரு நான்கெல்லை

24. உட்படு நிலம் இருவேலியும் சு

25. ப்ரமண்ய வதிக்குக் கிழக்கு மூன்

26. றாஞ் சதுரத்துக் கிழக்கும் ஊர் ந

27. த்தத் திடலுக்குத் தெற்கு பாச்சிவா

28. ய்க்கு மேற்கும் உடையர் நிலத்

29. துக்கு வடக்கும் உட்படு நிலம் வே

30. லியும் ஆக நிலம் மூவேலியும்

31. இறையிலி அனுபவித்து நிவ

32. ந்தஞ் செலுத்தக் கடவர்களாகவும்

33. இத்தேவர் ஸ்ரீ பண்டாரத்தேய் இர

34. ண்டு திருநாளுக்கும் இவர்களுக்கும் இவ

35. ர்கள் கூட்டத்தார்க்கும் திருவிழாக் கொற்று இரு

36. பதின் கல நெல்லும் முகமெழுத எண்

37. ணை அங்கத்தால் நாழியும் மாவுக்கு அ

38. ரிசி அங்கத்தால் நாழியு பெறக் கடவர்க

39. ளாகவும் இப்படி இவர்களுக்கும் இவர்கள்

40. வற்க்கத் தார்க்கும் சந்திராதித்தவற் செய்

41. து இவ்விரண்டு திறத்தாற்க் குங்கா

42. ணப்ப பாதியாகக் கல்லில் வெட்டி

43. ஸ்ரீ பந்மாகேஸ்வர ரக்ஷை.

திருநள்ளாற்றில் இறைமூலவர் முன்பு ஆரியக் கூத்தாட கூத்தாடிஸ்ரீ கண்டன் கம்பன் என்பானும் அவனுடன் ஸ்ரீ கண்டன் அரங்கன் பிள்ளைகளும் காணி பெற்று இருந்தனர். மாசிமகத் திருளால் ஐந்து அங்கமும் வைகாசி விசாகத் திருநாள் ஐந்துஅங்கமும் ஆரியக்கூத்து ஆடுவதற்கு விட்ட நிலம் மூன்று வேலி ஆகும். இப்படி ஆரியக்கூத்து ஆட விட்ட நிலங்கள் ஆரியக்கூத்து காணி எனப்பட்டன. அவை இருக்கும் இடம் பற்றி விரிவாக சொல்லப்பட்டுள்ளது. விழா நாட்களில் ஆரியக் கூத்து  நிகழ்த்தும்  இவர்களுக்கும்  இவர் வர்க்கத்தவர்க்கும் ‘விழாக் கொற்று’ என்னும் 20 கலம் நெல்லும், ஒப்பனைக்கு ஒவ்வொரு அங்கத்திற்கு ஒருநாழி எண்ணெயும், அரிசியும் ஒவ்வொரு அங்கத்துக்கும் ஒரு நாழியும் பெறக்கடவார்களாக என்று கூறப்பட்டுள்ளது. இது சந்திராதித்தவர் உள்ளவரை செல்லக்கடவதாக சொல்லப்பட்டு உள்ளது    

N D Logasundaram

unread,
Mar 29, 2019, 8:01:22 AM3/29/19
to vallamai
ஓலக்கம் எனபது தர்பார் என்றுதான் போட்டிருக்கின்றது 
வேறென்ன ?

நீங்கள் சொலவ்து போல் ஒலக்கத்தில்  நாயனம் வாசித்தல் ஓலக்கம் நாயனம் ஆகிவிடுமா? 
அப்போது உடுக்கை கூட அடிக்கினறனர் என உள்ளது அப்போது உடுக்கை ஓலக்கம் ஆகிவிடுமா ?

ஒரு ஓலக்கம் எழுந்தருளியுள்ளது என்றால் பலரு ம் வந்து பார்த்து வழிபட எ ழில்பெற சீர்மை அழகு  செய்து வைக்கப்பட்டுள்ளது
ஏன் மூன்று வேளை யும் இருக்கமுடியாதா  இப்போது மயிலையில் விடையாற்றி என திருவிழா முடிந்து அடுத்த 10 நாட்களும் 
காலை மலை திருஓ லகத்தில்தான் கபாலீசுவரர் உள்ளார் மற்றும் துணை பரிவார தெய்வங்களும் உண்டு  இதற்கு போட்டா
போட்டி நா ன் செய்கிறேன் நீசெய் என விழுத்தடிக்க வருகின்றனர் விருப்பமுள்ளவர் தினமும் சொற்பொழிவு ஆடல்பாடல்
 நிகழ்ச்சிகள் (மரபு வழி தொடர்ந்து ) நடக்கின்றன இதனிற்கும் நிகழ்ச்சி நா ன் செய்கிறேன் போன்ற போட்டிகளும் உண்டு 
  மேலும்
 அடுத்து வசந்தஉத் சவம் இது 10 நாட்கள் நடையப்பெறும் இதனிலும் கபாலீசுவரர் ஓலக்கம் எழுந்தருளி இருப்பர் இதனிலும் 
போட்டி இருப்பதன் அதனை பெரிதாக்கி முருகனுக்கு என 15 நாட்கள்  விரிவு படுத்தயியும் உள்ளார்கள் 

நவராத்திரி என ஒன்று அதனில் அம்மைக்கு தனி தர்பார் மண்டபத்தில் 9 நாளும் திரு ஒலக்கத்தில்தான் இருப்பார் 

திரு ஒற்றியூர் கோயில் மண்டபத்தில் சோழமன்ன ஓ லோகத்தில் இருந்த போதுதான் இன்னின்ன தர்மங்கள் செய்தன என
கூறுவதை கல்வெட்டு காட்டும்

மனிதருக்கும் ஓலக்கம் உண்டு ஓர் பெண் பெரியவளானால் மஞ்சள் நீராட்டு விழா எனும் பெயரில் அவளை சீர்பெற சிங்காரிது 
வைத்தது அனைவரும் பார்க்க  சம்பந்தம் பேச நாங்கள் தயார் என அறிவிக்கும் நிக்கழ்  ச்சியும் ஒலக்கம் என்னதான் குறிக்கப்படும் 
பிராமணர்களுக்குத்தான் மஞ்சள் நீராட்டு விழா என்பதெல்லாம்  கிடையாது 
நூ த லோ சு
மயிலை
 

seshadri sridharan

unread,
Mar 29, 2019, 9:52:29 PM3/29/19
to வல்லமை
எனது பையர் பருவத்தில் நாங்கள் குடியிருந்த வீட்டில் மற்ற குடித்தனத்தார் தெலுங்கர். அவருள் ஒரு மூதாட்டி நீங்கள் நாகஸ்வரம் என்பதை நாங்கள் ஓலக்கம் என்போம் என்பார்கள். அந்த நினைவு இன்னமும் உள்ளது. சொற்பிறப்பியல் அகரமுதலியில் கூட அதை காணலாம். இந்த குறிப்பிட்ட கல்வெட்டில் நாடக சபையில் இருந்து என்ற சொற்றொடரை கவனியுங்கள், ஓலக்க தர்பாரில் இருந்து என்றால் நாடக சபையில் இருந்து என்ற சொற்றொடர் வந்திருக்காது. எனவே திருஓலக்கம் என்பது நாயனவாசிப்பின் போது என்ற பொருளில் தான் வரும்.

உங்களது ஆழ்ந்த அறிவின் மூலம் ஓலக்கம் என்பதற்கு நிறைய பொருளை  அறியத் தந்தீர்கள். இவை நான் இதுவரை கேட்டறியாதவை.தொடர்ந்து எழுதுங்கள் ஐயா! தொடர்ந்து எழுதுங்கள்!!

நாறும்பூவன்  


திருவிடைமருதூரில் சோழர் காலத்தில் சாக்கைக் கூத்து நாடகம்

திருவிடைமருதூரில் சோழர் காலத்தில் சாக்கைக் கூத்து நாடகம் பற்றிய கல்வெட்டு

 


N D Logasundaram

unread,
Mar 30, 2019, 2:35:13 AM3/30/19
to vallamai, mintamil, தமிழ் மன்றம், thamizayam, SivaKumar, podhuvan sengai, Vasudevan Letchumanan, Maravanpulavu K. Sachithananthan, muthum...@gmail.com
நூ த லோ சு
மயிலை
அன்புள்ள திரு சேசாத்திரி 
உங்கள் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் பயன்கொண்டது ஓர் வகையில் திரிந்த நிலை
எதனை எதனோடு பொருத்துவது எது எதனுக்கு ஆகுபெயராகும் என்பது அறியாத மக்கள் 
 அதாவது தெலுங்கர்கள் வாயில் வந்தது அல்லது அவர் பயின்ற மொழியில் வந்துள்ள நிலை 

ஓலம் என்பது இசையின்றி ஒலிக்கும் செயல் கத்துவது என்பது போல் உயர்ந்த திறனுடன்
வெளிவரும் ஒலி அதனில் இனிமை கூடிய ஓர்  இசைக்கு இயைந்த கருவியில் வெளிப்படும்
 ஒலிக்கு ஆகிவந்தது என்றால் இசை என்னும் இனிமை இயைந்த நிலை க்கான சொல் வேறு
 இருப்பது அறியாது அவ்வளவாக பொருந்தாத நிலை என்பதுடன் நூலில் எழுதும் மரபினுக்கு
சற்றேபிறழ்ந்த நிலை என அறியாத மக்கள் நிலையில்  அவர் மொழியில் புகுந்தசொல்
என்பது கருத்து நாதசுரம் என்பதில் இசை என்பதும்  உள்ளது என்பது என் கருத்து     

மேலும் மன்னனின் திரு ஓலக்கம் கல்வெட்டுகளில் (தமிழகம் முழுதும்) உள்ள பயன்பாடு
எனலாம் அதனால் தான் நான் அதனைக்காட்டினேன் மன்னிக்க சிறந்த ஆய்வாளரான
 உங்களை திருத்தும் நிலையில் வைக்கவில்லை என் மனதில் பட்டதைக்காட்டினேன் 

 உங்கள் விளக்கம் வழி ஓலக்கம் என்பது ஓலம் என்பதன் வழிவந்த ஓலகம் என்னும் கருவிவழி 
 வரும் ஒலிக்கு ஆகி பின் இசையுடன் இயைந்துவருவது ஒலிக்கு என்றாகி  பின் அது பயன்பட்ட
தர்பாருக்கு ஆகிய வந்த மும்டி ஆகுபெயர் எனல் வேண்டும் 

ஓர்முறை  விளையாட்டுப்புலவன் ஒருவன் தமிழ்  மொழியில் சிற்றறிவே படைத்த சிற்றூர்
 ஜமீன்தார் போனறவர்களை தமிழ் பாடல் வழி  மகிழ்விக்க அல்லது தன்  திறமை எனக்கா ட்ட 
                        "வாலி திரோபதை மூக்கரிந்ததல்லவோ மகாபாரதம் " 
என்றானாம் எல்லோரும் எப்படி //வாலி இராமாயணம்//திரவ்பதை மகாபாரதம் // மூக்க ரிதல் 
இராமாயணம் என இருக்க இது  எப்படி எனக்கேட்க 
அப்புலவன்  (1) விலங்கின் ஓர் உறுப்பு ஆவது  வால்  (2) அது போன்று உருவத்தில் கான்பது  பாம்பு 
(3) அதனைக் கொ டியாக கொண்டவன்  துரியோதனன் 
 மூக்கரித்தல் என்றால் பொதுவாக அவமானப்படுத்துதல் ("மூக்கை உடைச்சுட்டான்") எனப்
பொருள்படும் அதனால் நான் சொன்னது   மும்மடி ஆகுபெயர் வழி சரியாகும் என்றானாம் 



seshadri sridharan

unread,
Mar 30, 2019, 12:11:35 PM3/30/19
to வல்லமை
நல்லது ஐயா 

உங்கள் கருத்தை நெஞ்சில் நிறுத்தினேன். இதில் எனது நடுவிற்கும் நடுவான நோக்கம் பறையர்கள் கருவறை முன் ஆடினார்கள் என்பது தான். பறை -  பரை வேறு வேறு என்று காட்டியவர்கள் இதில் என்ன கருத்து சொல்லப்போகிறர்கள்? என்பது தான். 

seshadri sridharan

unread,
Apr 4, 2019, 4:47:40 AM4/4/19
to UTHIRDAM.G UTHIRADAM.G, வல்லமை
On Thu, 4 Apr 2019 at 10:19, UTHIRDAM.G UTHIRADAM.G <kavi...@gmail.com> wrote:
கல்வெட்டு செய்தி மற்றும் மூலபாடம் அருமை பாராட்டுக்கள் 

உங்கள் உவேசா நூலகத்திற்கு வந்து தான் இந்த  திருவிடைமருதூர் கல்வெட்டுகள், வெளியீடு 1960, ஸ்ரீ மகாலிங்க சுவாமி தேவாதானம். நூல் கிடைக்கப்பெற்றேன். அந்த வகையில் நூலக காப்பாட்சியர் உமக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் கல்வெட்டு நூல்கள் இருந்தால் தெரியப்படுத்துங்கள்.
 சேசாத்திரி 

 

வேந்தன் அரசு

unread,
Apr 4, 2019, 10:14:05 PM4/4/19
to vallamai, UTHIRDAM.G UTHIRADAM.G
<கூத்து, நாடகம் முதலியவை கோவிலகளில் இராசராசனுக்கு முன்பே பல்லவர் காலத்திலேயே தொடங்கி விட்டன >

இரண்டும் ஒன்றல்லவா?


seshadri sridharan

unread,
Apr 4, 2019, 11:36:41 PM4/4/19
to வல்லமை
நான் ஆடலுடன் பாடலை  கூத்து என்றும் நாடகத்தை நாடகம் என்றும் கொண்டுவிட்டேன். உண்மையில் இவை இரண்டும் ஒன்றா வேறா என்று எனக்குத் தெரியாது. இவற்றை கோவில்களில் பல்லவர்கள் தாம் தொடங்கி வைத்தனர். ஏனென்றால் கம்பவர்மன் காலத்தில் தமக்கு நிலம் வழங்கப்பட்டதை  தெரிவித்து குலோத்துங்க சோழனிடம் திருமடை விளாகத்தில் 200 தேவரடியார் நிலம் பெற்றனர். இந்த கல்வெட்டை வல்லமையில் நான் ஏற்கனவே இட்டுள்ளேன்.  ஆனால் திராவிடம் பேசுவார் இனப்பாசம் காரணமாக பல்லவரைத் திட்டுவதில்லை சோழரை திட்டுகின்றனர் தமிழர் என்பதால் . 

நாறும்பூவன் 

வேந்தன் அரசு

unread,
Apr 5, 2019, 9:08:12 AM4/5/19
to vallamai
பல்லவர், சோழர்களில் எவருடைய கல்வெட்டுகளில் தமிழ் மொழி சிறப்பாக இருக்கு? குலோத்துங்கங்காலத்துக்குப்பின்னரே கல்வெட்டுகள் தமிழில் மட்டும் அமைந்ததாக  உணர்கிறேன். தெளிவுறுத்துக 

வியா., 4 ஏப்., 2019, பிற்பகல் 8:36 அன்று, seshadri sridharan <ssesh...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

seshadri sridharan

unread,
Apr 5, 2019, 11:34:42 PM4/5/19
to வல்லமை
On Fri, 5 Apr 2019 at 18:38, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
பல்லவர், சோழர்களில் எவருடைய கல்வெட்டுகளில் தமிழ் மொழி சிறப்பாக இருக்கு? குலோத்துங்கங்காலத்துக்குப்பின்னரே கல்வெட்டுகள் தமிழில் மட்டும் அமைந்ததாக  உணர்கிறேன். தெளிவுறுத்துக 

 நான் இதுவரை சற்றொப்ப 7,000 கல்வெட்டு  பாடங்களை படித்துள்ளேன். சோழர் கால கல்வெட்டுகள் என்பன தந்திவர்மன் அவன் மகன் கம்ப வர்மன் காலத்திலேயே தொடங்கிவிட்டன. இந்த கல்வெட்டுகள் தேவார மொழி போல் இருப்பவை. தேவாரத்தில் சமற்கிருதம் உண்டு அது போல சோழர் கல்வெட்டுகளில் சமற்கிருத பெயர்கள் சொற்கள் உண்டு. பெரும்பாலும் பிராமணர் வெள்ளாளரால் பொறிக்கப்பட்டவை.

மகேந்திரன் நரசிம்மவர்மன் காலக் கல்வெட்டுகள் சங்க காலத்திற்கு மிக நெருங்கிய காலம் என்பதால், அவை மக்கள் மொழியில் இருப்பதால். திருக்குறள் தமிழோடு ஓப்பதாக உள்ளன. சமற்கிருத சொற்கள் மிகக் குறைவு. அதே போல் பல்லவர் கால கல்வெட்டுகளும் குறைவு.
Reply all
Reply to author
Forward
0 new messages