கின்னரம் ~ ராவணஹஸ்தம் (Pre-Violin History)

233 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Nov 4, 2018, 12:15:59 AM11/4/18
to Santhavasantham, George Hart
கின்னரம் என்று சங்க இலக்கியத்திலும், பக்திப் பனுவல்களிலும் குறிப்பிடப்படும் நரம்பிசைக்கருவி பற்றிய வரலாற்றை ஆராய்தல் வேண்டும். தற்கால வயலினின் முன்னோடி இந்தக் கின்னரம் (பிற்காலப் பெயர்: ராவணஹஸ்தம்) என இசையியலாளர் குறிப்பிடுகின்றனர் [1], 

கின்னார (அ) கின்னரம் என்னும் இச்சொல் தமிழ்/த்ராவிடச் சொல் மிகப் பழையது என்றும், 4000 ஆண்டுகளாக இந்தியாவில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று வழங்கியது என்றும் பண்டைமொழியியல் அறிஞர்கள் ஆய்ந்துள்ளனர். நார் அல்லது நரம்பு என்ற தமிழ்ச்சொல் கில்- என்னும் முன்னொட்டுடன் சேரும் போது பிறப்பது: கில்+நார்/நரம்(பு) = கின்னாரம்/கின்னரம். மனிதனுக்கே உரிய மொழியை ஏற்படுத்தும் குரல்வளைக்குக் (larynx) கீழே உள்ள தொண்டைக்குழியில் இருந்து காற்று வெளியேறி உருவாவது குரலோசை. இதனால், கில்லம் என்று வாக்குத்தசைக்குக் கீழே உள்ள பகுதிக்குத் தமிழில் பெயர்:  கில்லம் killamn. cf. gala. 1. Neck; கழுத்து. (பிங்.) 2. The hollow just below Adam's apple; தொண்டைக்குழிLoc. (MTL).
கிளத்தல் என்பது கில்லத்தில் இருந்து காற்று வெளியேறுவதால் ஏற்படும் வாக்குநாண் (Vocal Chord) அசைவைப் பொருத்து மனிதனின் இசையும், சொல்லும்  உருவாகின்றன: https://www.youtube.com/watch?v=P2pLJfWUjc8&t=206
கில்லம் எனும் சொல் கிலுமொலு, கிலுகிலு என்ற ஒலிக்குறிப்புச் சொற்களுடன் தொடர்புடையது. கிலுக்கை, கம்பன் கூறும் கிலுக்கம் கில்லத்துடன் தொடர்புடையது.
சிலுக என்றா தெலுங்கில் கிளி. கின்னரங் குரண்டங் கிலுக்கஞ் சிரல் (கம்பன். ஊர்தேடு. 151).. கிலுக்கம் என்பது இங்கே கிளி வகுப்புகள் எனப் பொருள் கொள்ளவேண்டும். கிலுக-. > சிலுக. கிளத்தல், கிளவி, கிள்ளை/கிளி போன்றனவும் கில்லம் என்ற குரலோசை எழுப்பும் உறுப்பினோடு தொடர்புடைத்து.
கிலுக்கு kilukkun. < கிலுக்கு-. 1. Rattling, tinkling, clinking; ஒலிக்கை. (W.) 2. [T. giluka, K. gilike.]   

கிலுமொலெனல் kilumol-eṉaln. 1. Onom. expr. signifying buzzing, humming sound; வண்டு முதலியவற்றின் ஒலிக்குறிப்பு. 2. Expr. signifying crowding, swarming, as vermin in the head, maggots in a carcass; அடர்ச்சிக் குறிப்பு. (W.)  கில்லம் (குரல்வளை நாணடி ஆகிய உடல் அங்கம்) < கிலுமொலு என்னும் அனுகரணவோசைச் சொல்லில் உருவாவது என்பது வெள்ளிடைமலை.
வண்டுகளின் ஓசையை முரலுதல் என்பர்: வண்டினம் முரலும் சோலை  (தொண்டரடிப்பொடி ஆழ்வார்). 
கின்னரம் என்னும் இசைக்கருவியின் ஓசையும் முரலுதல் தான்: கின்னரம் முரலும் அணங்குடைச் சாரல் (பெரும்பாணாற்றுப்படை).
எனவே தான், கின்னரம்/கின்னாரம் = கில் +நரம்(பு)/நார் எனப் பிரிபடும். வினைத்தொகை என்றும் கொள்ளலாம். கில்- என்னும் வினைச்சொல் முரலுதல் என்னும் பொருள் உடையது. Onom. expr. signifying buzzing, humming sound.

இராவணன் கயிலை அடியில் இருந்து அரற்றியதால் அப்பெயர் அடைந்தான் என்பது ராமாயணம். அவ்வாறு அழுதபோது ஒரு தலையை அறுத்து, ஒரு கையைத் “தண்டி” என்னும் கின்னரத்தின் தண்டு ஆக்கி, வயிற்றைப் பிளந்து நார் எடுத்து தந்தி ஆக்கிக் கின்னரம் கருவியாக இசைத்து சிவனிடம் அருள் பெற்றான் என்கின்றன ராமாயணங்கள் (உத்தர காண்டம்). இதனை, பல சிற்பங்கள், ஓவியங்களில் காணலாகும். தேவாரத் தலம் திருக்கோணமலையின் தலபுராணமே இதுதான்.  https://en.wikipedia.org/wiki/Ravananugraha
image.png
இராவணன் ஒரு தலையைத் துணித்தல்:
lift.jpg

அப்பர் தேவாரம்:
மைஞ்ஞல மனைய கண்ணாள் பங்கன்மா மலையை யோடி
மெய்ஞ்ஞரம் புதிரம் பில்க விசைதணிந் தரக்கன் வீழ்ந்து
கைஞ்ஞரம் பெழுவிக் கொண்டு காதலா லினிது சொன்ன
கிஞ்ஞரங் கேட் டுகந்தார் கெடிலவீ ரட்ட னாரே.  

மெய் நரம்பு = இராவணனின் குடல் நரம்பால் வீணாதண்டம் (தண்டி) செய்த கின்னரம் என்னும் கருவியை வாசித்தான் அசுரன்.
அதைக் கேட்டு உகந்தார் கெடில வீரட்டனார். 

”மைஞ்ஞலம் அனைய கண்ணாள் பங்கன் மாமலையை ஓடி மெய்ஞரம்பு உதிரம் பில்க விசைதணிந்து அரக்கன் வீழ்ந்து
    the arakkaṉ ran and lifted the big mountain belonging to Civaṉ who has a lady whose eyes are as beautiful as the blue nelumbo flower, and fell down and his haste abated, and when blood flowed from the sinews of the body. 
கைஞ்ஞரம்பு எழுவிக் கொண்டு
    producing music from the nerves of his hand. 
காதலால் இனிது சொன்ன கிஞ்ஞரம் கேட்டு உகந்தார் கெடில வீரட்டனார் (ஏ)
    Civaṉ in Ketiḷa vīraṭṭam, was pleased to listen to the music by the instrument Kiññaram which was played with devotion pleasing to the ear.   ” (Digital Tevaram).

There are many instances in Tevaram, Divya Prabandham about Kinnaram. I will show some ancient sculptures of 'Siva playing on the Kinnaram (Ravanastron) as well.

சூளாமணி:
மைஞ்ஞலம் பருகிய கருங்கண் மாமணிப்
பைஞ்ஞலம் பருகிய பரும வல்குலார்
மெய்ஞ்ஞலம் விஞ்சையர் விரவ மேலெலாம்
கிஞ்ஞர மிதுனங்கள் கிளர்ந்து தோன்றுமே.
     
     (இ - ள்.) மைஞ் ஞலம் பருகிய கருங்கண் - மையினது நன்மையை உண்ட கரிய
கண்ணையுடையவரும், மாமணிப் பருமம் - சிறந்த பதினென்கோவை மணிவடம் பூண்ட,
பைஞ்ஞலம் பருகிய - பாம்புப் படத்தின் எழிலையுடைய, அல்குலார் - அல்குற்றடத்தை
யுடையவருமாகிய மகளிரோடே, மெய்ஞ்ஞலம் விஞ்சையர் விரவ - உடலழகுமிக்க
விச்சாதரர்கள் வந்து பரவா நிற்ப, மேல் எலாம் - விசும்பிடமெங்கும், கிஞ்ஞர மிதுனங்கள்
- கின்னரம் என்னும் ஆண் பெண் ஆகிய இணைப்பறவைகள், தோன்றும் - தோன்றா
நின்றன, (எ - று)  

--------------

ராவணன் கையை வெட்டி இந்த யாழுக்குத் தண்டி ஆக்குதல்:

எய்தி வெள்ளிமலை பெயர்த்தானும் இறுத்த தன் 
கையில் வீணை தொட்டு இன்னிசை பாடக் கனிந்தவன் 
செய்த தீங்கு பொறுத்தது மன்றித் திண் தேரொடும் 
மொய்கொள் வாளும் கொடுத்தனன்புண்ணியமூர்த்தியே
                                                                                        - திருவிளையாடற் புராணம்

    கவ்வு தீக்கணை மேருவைக் கால் வளைத்து
    எவ்வினான் மலை ஏந்திய ஏந்து தோள்
    வவ்வு சாந்து தம் மாமுலை வௌவிய
    செவ்வி கண்டு குலாவுகின்றார் சிலர்.       5.3.177

    கூடி நான்கு உயர் வேலையும் கோக்க நின்று
    ஆடினான் புகழ் அம் கை நரம்பினால்
    நாடி நால் பெரும் பண்ணும் நயப்பு உறப்
    பாடினான் புகழ் பாடுகின்றார் சிலர்.       5.3.178

என் வினா:
கின்னரத்தின் சுரை (குடம்) ஆக, தன் தலையைச் செய்தான் ராவணன்
என்று கூறும் பாடல்கள் தமிழில் உண்டா? ஒட்டக் கூத்தரின் உத்தர ராமாயணம்.
கோணாசல மகாத்மியம், திருக்கோணமலைப் புராணம்,  சைவ நூல்கள், ... ? நன்றி.
இவை பற்றி வேறு இந்திய மொழிகளில் சான்றுகள் இருக்கும்.
கையை வெட்டியதும், உடலில் நரம்பு எடுத்ததும் இலக்கிய ஆதாரங்கள் கிடைத்துவிட்டன.

-----------

உமை நடுங்கித் தம்பிரானை அணைய, கயிலை மலையை இராவணன் அசைத்தல்.
கம்போடியா கோவிலின் சிற்பம்:

இராவணன் பாடிய சிவ தாண்டவ ஸ்தோத்திரம், (தாண்டுதல் > தாண்டவம்)

கிழவி சொன்னால் கின்னாரக்காரனுக்கு ஏறுமா என்பது பழமொழி. காத்தவராயன் - ஆரியமாலை காதற்கதையில்
காத்தவராயன் கின்னாரம் வாசிப்பதில் வல்லவன். 
’கின்னரம் வாசிக்கும் கிளி’ - காளமேகம் வெண்பாவின் ஈற்றடி. காத்தவராயன் சினிமாவில் ஆரியமாலா கிளியுடன் பாடுகிறாள்:

கின்னரம் - தமிழர்களின் பழைய இசைக்கருவி. ராவணன் வாசித்ததால் ராவணஹஸ்தம் என்ற பெயர்.
இதே போல, கின்னரங்கள் வைத்திருப்பதை மாமல்லை, காஞ்சி (கைலாசநாதர் கோயில்), கம்போடியா, இந்தோனேசியா போன்ற இடங்களில் காண்க.

நா. கணேசன்

[1] ராவணஹஸ்தம் என்பதன் பழம்பெயர்: கின்னரம். சில குறிப்புகள்,


N. Ganesan

unread,
Nov 14, 2018, 9:24:00 AM11/14/18
to Santhavasantham, George Hart
On Sat, Nov 10, 2018 at 12:58 AM dorai sundaram <doraisu...@gmail.com> wrote:
அருமையான செய்தி. சுட்டியை என் சேர்ப்பில் இணைத்துக்கொண்டேன்.
நன்றி.
சுந்தரம்.

இந்தியா முழுதும் கோவில்களில் உள்ள சிற்பங்களில் இருக்கும் இசைக்கருவிகள் ஆராயப்படவேண்டும்.
இப்போது 50 கோடி வலைபேசிகளில் (ஸ்மார்ட் ஃபோன்ஸ்) ஒளிப்படமிகள் இருப்பதால்,
பல்கலைக் கழகங்கள் ஓர் ஆய்வுத் தளம் அமைத்து, அந்த வலைக்கண்ணுக்கு
சிற்பம், இருக்குமிடம் செய்திகளுடன் மக்கள் எடுக்கும் படங்களை அனுப்புக
என்று வேண்டி, இசைக்கலை, கருவிப் பேராசிரியன்மார் ஆராயலாம்.
மார்க்கம் இருக்கிறது. மனசு பல்கலைக் கழக அறிஞர்கள் கொண்டால் நடக்குந்தானே.
ஓவியங்களில் இருக்கும் சங்கீதக்கருவிகள் ஆராயவும் இணையம் துணைவரும்.
தலைனையேற்று நடத்த இந்திய பல்கலைகள் முன்வரணும்.

------

வில்யாழ் பற்றி யோசித்தேன். அது இருவகைப்படும்.
(1) விரலால் வாசிப்பது. (2) வில்லால் வாசிப்பது.
வில்லக விரலில் பொருந்தி - குறுந்தொகை.

கருங்கோடு என்றால் எருமைக்கொம்பு, ஆமான் (இந்தியன் பைஸன்) கொம்பு.
இதனைச் சங்க இலக்கியத்தில் காண்க. கருங்கோட்டி யாழ் என்பது
எருமைக்கொம்பு போன்ற வளைவான தண்டில் நரம்புகளைக் கட்டின யாழ் ஆகும்.

செங்கோடு என்றால் நேரான கோடு. நேரான மரத் தண்டி அமைந்த யாழ் வகை
செங்கோட்டியாழ் என்பதாகும். சிலம்பிலே இவ்வகை யாழைப் பாடியுள்ளார் அடிகள்.
இது தற்கால வீணையின் முந்தைய வடிவம் எனலாம். 

நாரதர், தும்புரு - இரு இசைத் தேவதையும் த்ராவிடப் பெயர் கொண்டோரே.
நார் (நரம்பு) - கின்னாரம் - தொடர்புடையவர் நாரதர்.
இவர் வைத்திருக்கும் கருவி மஹதி வீணை என்பர்.
சுரைக் குடங்கள் கொண்டது மஹதி யாழ். மகுடி என்ற சொல் மாறி மஹதி எனலாம்.
மகள் என்னும் சொல் மஹில என்றாகும். கடம்பு > கதம்ப (வடமொழியில்)
மதுரை கடம்பவனம். எனவே, மீனாக்ஷி கதம்பவன வாசினி. அதாவது கடம்பவனமுடையாள்.
தும்புரு - தும்பல் எனும் சுரைக் குடத்தால் அமையும் பெயர்.

கருங்கோட்டியாழ், செங்கோட்டியாழ் பார்த்தோம். இவை மிகப் பழைய பெயர்கள்.

ராவணஹஸ்தம், ராவணஸ்றான், வயோலா, வயலின், chinese violin (Er-hu, two strings, https://www.foreigners-in-china.com/chinese-musical-instrument.html )போன்றவை
வில் நாண் ஒன்றை குறுக்கே இழுத்து/செலுத்தி வாசிக்கப்படுபவை.
இவற்றை வில்லிழு யாழ் (அ) வில்நாண் யாழ் என்க. 
The violin typically has four strings tuned in perfect fifths, and is most commonly played by drawing a bow across its strings, though it can also be played by plucking the strings with the fingers (pizzicato) and by striking the strings with the wooden side of the bow (col legno).

எனவே, Bowed_string_instrument = வில்நாண் யாழ் (அ) வில்லிழுயாழ். இந்த வில்லைப் போட்டு இழுத்து வாசிக்கும் யாழ்/வீணை பற்றிய தமிழ் இலக்கியப் பாடல் தெரிந்தோர் உதவினால் நன்றியுடையேன். கம்பன் சொல்லியிருப்பான். விபுலாநந்தர், வரகுணபாண்டியன் எழுதியிருக்கலாம். 

வில்யாழ் - (1) வாசிக்கும்வகையால் வில்லிழு யாழ், வில்லிலா யாழ் எனப் பகுப்பது கண்டோம்.

வில்யாழ் (2) வடிவத்தால் பெறும் பெயர் : வில்கோட்டி யாழ். வில்கோடு = வளைந்த கோடு. அதில் நரம்புகள் கோக்கப்படும்.  வில்கோட்டி யாழ் போல இருப்பதால் தான், ராமேசுவரம் கடற்கரைக்கு
வில்கோடி எனப் பண்டைத் தமிழர் பெயரிட்டனர். பாரதத்தின் பக்தகோடிகள் கூடும் தீர்த்தம் ஆதலால் - 'ஆ சேது ஹிமாசலம்', 'ஆ சேது பர்யந்தம்' மிகப் பழைய மரபுத்தொடர்கள், சேதுபதிகளுக்கு சேதுகாவலர் என்பது
பக்தர்களுக்கு எவ்வித இடைஞ்சலும் ஏற்படாமல் காக்கும் அரசர்கள் என்பதால் - தநுஸ்கோடி என விற்கோடி மொழிபெயர்க்கப்பட்டது. வில்கோட்டி யாழால் ஏற்பட்ட பெயர் இந்த இடப்பெயர்.

விற்கோட்டி யாழ் : விக்கோட்டி யாழ் என பக்கம் 47-ல் தரப்பட்டுள்ளது:
பொதுவாக வில்கோட்டியாழ் ஹார்ப் எனப்படும். 
Domu harps in Congo, Africa

பண்டை எகிப்தில் பெண்கள்: வில்கோட்டி யாழும், திருச்சின்னமும், சிறுபறையும் கொண்டு இசைத்தல்.
சிறுபறை ஆண்டாள் கைக்கொண்டது.

திருச்சின்னம்:

trumpet - துத்திரி (தேவாரம்). துத்தரிக்கொம்புந் துடியும் (சீவக. 434, உரை). எகிப்தில் பழைய துத்திரி 1922-ல் தொல்லியலார் கண்டனர்.
காளம் (எக்காளம்) துத்தரியினும் பெரிது - Bugle.

N. Ganesan

unread,
Nov 16, 2018, 8:39:54 PM11/16/18
to Santhavasantham, மின்தமிழ், Jean-Luc Chevillard, Jean-Luc Chevillard

கச்ச யாழும், கரட யாழும் - ஒரே அளவு ஆன resonator கொண்டது. இரு மொழிக் குடும்பத்தின் வார்த்தைகள் இணைந்த விதம் சுவையானது. விரிவாகப் பார்க்கணும்.

கச்சி என்ற சங்க காலப் பெயர்  பிராகிருதத்தில் கஞ்சி என அழைக்கப்பட்டுள்ளது. குப்தர்கள் கல்வெட்டில் கஞ்சி/காஞ்சி ஆகிறது. அதன் பின் காஞ்சி என்று சாளுக்யர்கள் குறிப்பிடுகின்றனர்,
மணிமேகலையில் தான் முதன்முதலாக காஞ்சீபுரம் எனத் தமிழில் வருகிறது. காஞ்சி என்று அப்பர் பெருமான் முழுப் பதிகமே பாடியருளினார்:
காஞ்சிமா நகர்தன் னுள்ளால் - என எல்லாப் பாடலிலும் - ஒன்று தவிர - வருகிறது.

குறிக்கொண் டிருந்துசெந் தாமரை யாயிரம் வைகல்வைகல்
நெறிப்பட விண்டை புனைகின்ற மாலை நிறையழிப்பான்
கறைக்கண்ட நீயொரு பூக்குறை வித்துக்கண் சூல்விப்பதே
பிறைத்துண்ட வார்சடை யாய்பெருங் காஞ்சியெம் பிஞ்ஞகனே.
பெருங்காஞ்சி = பெரிய காஞ்சி என இன்றும் அழைக்கப்படுகிறது.

ஏனோ மீண்டும் எண்ணிம தேவாரம் இயங்கலை. ழான் பார்க்கவேண்டும்.

பாண்டியராஜா தளம்:
தேவார முதலிகள் மூவரும் கச்சி என்றும், காஞ்சி என்று பாடியுள்ளனர்.
சம்பந்தர்: 
#4026
வெள் எருக்கொடு தும்பை மிலைச்சியே ஏறு முன் செல தும்பை மிலைச்சியே
அள்ளி நீறு அது பூசுவ தாகமே ஆன மாசுணம் மூசுவது ஆகமே
புள்ளி ஆடை உடுப்பது கத்துமே போன ஊழி உடுப்பது உகத்துமே
கள் உலாம் மலர் கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பு அதே

 மேல்

#4027
முற்றல் ஆமை அணிந்த முதல்வரே மூரி ஆமை அணிந்த முதல்வரே
பற்றி வாள் அரவு ஆட்டும் பரிசரே பாலும் நெய் உகந்து ஆட்டும் பரிசரே
வற்றல் ஓடு கலம் பலி தேர்வதே வானினோடு கலம் பலி தேர்வதே
கற்றிலா மனம் கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பதே

 மேல்

#4028
வேடன் ஆகி விசையற்கு அருளியே வேலை நஞ்சம் மிசையல் கருளியே
ஆடு பாம்பு அரை ஆர்த்தது உடை அதே அஞ்சு பூதமும் ஆர்த்தது உடையதே
கோடு வான் மதி கண்ணி அழகிதே குற்றம் இல் மதி கண்ணி அழகிதே
காடு வாழ் பதி ஆவதும் உமது ஏகம்பம் மா பதி ஆவதும் உம்மதே

 மேல்

#4029
இரும் புகை கொடி தங்கு அழல் கையதே இமயமாமகள் தம் கழல் கையதே
அரும்பு மொய்த்த மலர் பொறை தாங்கியே ஆழியான்-தன் மலர் பொறை தாங்கியே
பெரும் பகல் நடம் ஆடுதல் செய்துமே பேதைமார் மனம் வாடுதல் செய்துமே
கரும்பு மொய்த்து எழு கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பு அதே

 மேல்

#4030
முதிரம் மங்கை தவம் செய்த காலமே முன்பும் அம் கைதவம் செய்த காலமே
வெதிர்களோடு அகில் சந்தம் முருட்டியே வேழம் ஓடகில்சந்தம் உருட்டியே
அதிர ஆறு வரத்து அழுவத்தொடே ஆன் ஐ ஆடுவர தழுவத்தொடே
கதிர் கொள் பூண் முலை கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பதே

 மேல்

அப்பர்:
#2208
பிணம் புல்கு பீறல் குரம்பை மெய்யா பேதப்படுகின்ற பேதைமீர்காள்
நிணம் புல்கு சூலத்தர் நீல_கண்டர் எண் தோளர் எண் நிறைந்த குணத்தினாலே
கணம்புல்லன் கருத்து உகந்தார் காஞ்சி உள்ளார் கழிப்பாலை மேய கபால அப்பனார்
மணம் புல்கு மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே

சுந்தரர்:
#218
பார் ஊர் பல்லவன் ஊர் மதில் காஞ்சி மா நகர்-வாய்
சீர் ஊரும் புறவில் திரு மேற்றளி சிவனை
ஆரூரன் அடியான் அடித்தொண்டன் ஆரூரன் சொன்ன
சீர் ஊர் பாடல் வல்லார் சிவலோகம் சேர்வாரே
---------------
'இந்தியன் ஸ்டார் டார்ட்டாய்ஸ்' எனப்படும் கச்சம் கச்சூர் என்றும், கச்சி என்றும் ஊர்ப்பெயர்களுக்கு
அடிப்படை.

இன்றும் கூத்து, இசைவாணர்களைத் தானே தமிழர்கள் தலைவர்கள் ஆக்குகின்றனர்.
எம்ஜிஆர், ஜெயலலிதா, ரஜினிகாந்த், விஜய், ... எனப் பட்டியல் நீளமானது.

-----

இந்தக் கச்சம் (Indian star tortoise) பார்க்க:
இந்தியர் வரலாற்றை மிக விரிவாக 50 ஆண்டுகளாய் ஆஸ்கோ எழுதிவருகிறார்.
ஆனால், கச்சம் என்ற சொல் தமிழ்ச் சொல் என இல்லை. காரணம் மேன்ஃப்ரெட் மேய்ர்ஹாஃப்ர்
போன்றோர் அகராதிகளில் காணும் குறிப்புகள். ஆனால், க'ஸ்யப எப்படி கச்சபம் என்றாகும்???

தமிழில் கச்சம், கச்சி, கச்சல் போன்ற சொற்களைப் பார்க்கின் அது சம்ஸ்கிருதத்தில்
இருந்து வந்ததாகக் கொள்ள இயலவில்லை என சம்ஸ்கிருத அறிஞரிடை குறிப்பிட்டுள்ளேன்.

இந்த கச்ச ஆமை வடிவில் இருப்பதால் கச்சி என்ற பெயர் தேங்காய்ச் சிரட்டைக்கு வாய்த்துள்ளது.
கொட்டம் - கொட்டுதல். மூங்கில் குழாயில் செய்து மாடுகட்கு மருந்து ஊற்றும் குழாய் கொட்டம்
எனப்படுவது. கொட்டுதல் கரண்டி போலப் பயன்படுவதைக் கொட்டங் கச்சி என்பது கச்சம் வடிவில்
இருப்பதால்.

கச்சி2 kacci, n. < காய்ச்சி. 1. Coconut shell; கொட்டாங்கச்சி. (W.) 2. Half of a dried palmyra-nut; ஊமற்பிளவு. (யாழ். அக.)
கச்சி3 kacci, n. < Pkt. kañci < kāñcī. The city of Conjeevaram; காஞ்சீபுரம். (மணி. பதி. 90.)
வட்டக்கைச்சில் (p. 3467) vaṭṭa-k-kaiccil வட்டக்கைச்சில் vaṭṭa-k-kaicciln. < வட்டம்1 + கச்சி2. The lower half of a coconut-shell; தேங்காயின் அடிப்பாதியோடு. (யாழ். அக.)

காய்ச்ச- > காச்ச/கச்ச. இந்த சிற்றாமைப் பெயர் என விளக்கியுள்ளேன், சீந்து/சிந்து என்றாதற் போல, காச்ச/கச்சம்.
> Miin in Dravidian has two meanings: fish & star. Take the case of kaccam for Geochelone elegans tortoises.
> The ancient name given by Dravidian language speakers come from (1) the bumps on its shell:
> "kaay kaayaak kaaccirukku", "kaay kaayaak kaa(y)ppu kaaccirukku" (2) the star like rays emanating
> from the kaccam tortoise shell protrusions. You can see stars like these on kaccam tortoises
> shown inside the buffalo horns of Indus deities in many ceramics and seals.

கங்கு - எல்லை, ஓரம். கங்குகரை காணாமல் என்பது ஓர்க. சீ- : சீந்து > சிந்து என்ற பெயர்.
சீந்து > ஈந்து/ஈச்சு/ஈக்கு/ஈஞ்சு : ஒரு மரப் பெயர் இவ்வளவு வழிகளில் அழைப்பது இம் மரத்தையே.
அதே போல, நகரும் உயிரிகளில் (ஜங்கம ப்ராணி) கச்சம் தான் பல சொற்களை அளித்துள்ளது.
கச்சி எனச் சில பகுதிகளில் தேங்காய்த்தொட்டி அழைப்பர். பிற பகுதிகளில் கொட்டங்-கச்சி.

கச்சி - கஞ்சி என்று ஊர்ப்பெயர். இது காஞ்சி என்றும் ஆகிறது. காஞ்சி என்றால்
அணியும் மேகலை என்றும், கஞ்சுகம் : பாம்பின் சட்டை, மேலாடை என்றெல்லாம்
வருதல் யாமை ஓட்டால் வரும் உவமையாகு பெயர்கள். கச்ச யாழும், கெரட/கரட யாழும்
உள்ளன. கெரட/கரட ::  > சிரட்டை/சரட்டை (தமிழில்).

கச்சு : கொங்கை மேல் அணியும் துணி. கச்சு அது கடிந்து - கல்லாடம்.
கச்சை1 kaccain. cf. kañcuka. 1. Coat of mail; கவசம். (பிங்.) 2. cf. kacchu. Scar, cicatrice, mark made by a blow or wound; தழும்பு. (பிங்.)

2626 *kañcu ʻ skin of a snake ʼ. 2. kañcuka -- m. ʻ corselet, jacket ʼ R., ʻ snake's slough ʼ Pañcat., ʻ husk ʼ BhP. [Poss. ← Mu. Kuiper AO xvi 307, EWA i 140]
1. Pk. kaṁcu -- m. ʻ snake's slough, woman's bodice ʼ; L. awāṇ. kuñj ʻ snake's slough ʼ, P. kañjkuñj f., WPah. khaś. sap -- koċ, śeu. sap -- coc, 1. rudh. sap -- ganj̈, marm. sap -- kos.
2. Pa. kañcuka -- m. ʻ snake's slough, bodice, armour ʼ, Pk. kaṁcua -- m.; N. kã̄jo ʻ band of metal round joint of a khukri ʼ; H. kã̄cūkãcuwā m. ʻ bodice, shirt ʼ; M. kã̄ċvā m. ʻ a sort of waistcoat ʼ.
kañculī -- .
Addenda: kañcu -- . 2. kañcuka -- : OMarw. kaṁcū m. ʻ bodice ʼ.
kañcuka -- see kañcu -- Add2.

   2627 kañculī˚likā -- f., ˚cūla -- m.n. ʻ bodice ʼ lex. [*kañcu -- ]
NiDoc. kaṁculi, Pk. kaṁculiā -- f., S. kañjuro m., ˚rī f., L. kañjlī f.; P. kañjalī f. ʻ snake's slough ʼ; Ku. kã̄cal˚culī ʻ snake's slough ʼ, kã̄culī ʻ clothes ʼ, gng. kã̄cui ʻ snake's slough ʼ; N. kã̄julikã̄c˚ ʻ snake's slough, scab ʼ; A. kã̄suli ʻ woman's bodice ʼ, B. kã̄culi, Or. kañcuḷa˚ḷīkāñculā˚li, OMth. kã̄cali; H. kã̄culī f. ʻ bodice, sheath ʼ; G. kã̄cḷī f. ʻ snake's slough, bodice ʼ; M. kã̄ċoḷīkāċ˚ f. ʻ bodice ʼ with o from coḷī < cōḍa -- 1, kāċoḷā m. ʻ husk of corn ʼ. -- With unexpl. eai: H. kẽcul˚līkẽclīkaĩc˚ f. ʻ snake's slough ʼ.
Addenda: kañculī -- : S.kcch. kañjarī f. ʻ snake's slough ʼ.
kaṭa -- 5 m. ʻ bier, corpse ʼ lex.: see kaḍēbara -- Add2.

கச்சி - கச்சல்/கந்தல்/கஞ்சல் என்று கச்சம் என்னும் நட்சத்திர ஓடு கொண்ட ஆமைகள்
வாழும் நிலப் பகுதி. நீர்க்கோடு = கச்சம் என அழைக்கப்படுவது இதனால் தான்.
கஞ்சல்கோரை, ... 

2618 kaccha m. ʻ bank, shore, marshy ground ʼ MBh. [Conn. with kákṣa -- (EWA i 139) doubtful, but see kacchapa -- ]
Pa. kaccha -- n. ʻ marshy land ʼ; Pk. kaccha -- m. ʻ bank, shore, flooded forest, land near a river, garden to grow radishes &c. in ʼ, kacchara -- m. ʻ mud, morass ʼ; Sh. (Lor.) k*lč with obl. ʻ beside, near ʼ, k*lči adv. ʻ near ʼ, k*lčilo adj.; P. kāchaṛ˚al f. ʻ river bank ʼ; N. kachār ʻ hillside, foot of hill ʼ; B. kāchāṛ ʻ steep slope ʼ; Bi. kāch ʻ low marshy land ʼ; H. kachār m. ʻ moist lowland by a river ʼ, kāchī m. ʻ caste of market gardener ʼ (< *kacchin -- ), kachiyānākachwārā m. ʻ vegetable plot ʼ.

   2619 kacchapa m. ʻ turtle, tortoise ʼ MBh. 2. *kacchabha -- . [By pop. etym. through kaccha -- for kaśyápa -- VS. J. Charpentier MO xxvi 110 suggested equivalence in MIA. of kassa -- = kaccha -- to explain creation of kacchapa -- ~ kassapa -- . But K. kochuwu, unless a loan from Ind., points to *kakṣapa -- , which would make the formation earlier.]
1. Pa. kacchapa -- m. ʻ tortoise, turtle, ˚pinī -- f., Pk. kacchava -- m., ˚vī -- f., K. kochuwu m. (see above), S. kachãũ˚chū̃ m., L. kachū̃ m., P. kacchūkacchūkummã̄ m. (< kūrmá -- 1), N. kachuwā, A. kācha, B. kāchim, Or. kechu˚chokẽchukaï˜cha˚cakachima˚cima, Mth. kāchu, Bhoj. Aw. lakh. kachuā; H. kachuā˚chwā m., ˚uī˚wī f. ʻ tortoise, turtle ʼ, kach -- mach m. ʻ dwellers in the water ʼ (< mátsya -- ) whence kacchkach m. ʻ turtle, tortoise ʼ, M. kāsavkã̄s˚ m., Ko. kāsavu.
2. Pk. amg. kacchabha -- , ˚aha -- m., ˚bhī -- f.; Si. käsum̆bu˚ubu H. Smith JA 1950, 188; -- G. kācbɔ m., ˚bī f. with unexpl. retention of -- b -- and loss of aspiration in c.
Addenda: kacchapa -- . 1. A. kācha (phonet. -- s -- ) ʻ tortoise ʼ AFD 217.
2. *kacchabha -- (with -- pa -- replaced by animal suffix -- bha -- ): Md. kahan̆bu ʻ tortoise -- shell ʼ.
*kacchabha -- see kacchapa -- Add2.

ஈச்சு > ஈங்கு போல, கச்சம் > கங்கு. ஆற்றின் கரைக்குப் பெயர்.
கங்கு1 kaṅkun. 1. Ridge to retain water in paddy fields; வயல்வரம்பு. கங்குபயில்வயல் (சேதுபு. திருநாட். 66). 2. Dam, anicut; அணை, கங்குங்கரையுமறப் பெருகுகிற (திவ். திருப்பா. 8, வ்யா. 108). 3. Side of a bank or ridge; வரம்பின் பக்கம். (திவா.)4. Limit, border; எல்லை. (ஈடு, 5, 4, 7.) 5. Row, regular order; வரிசை. கங்கு கங்காய் முனைதரப்பொங்கி (இராமநா. ஆரணி. 14). 6. Base of a palmyra stem; பனைமட்டையின் அடிப் புறம். (J.) 7. Cinder, glowing coal; தீப்பொறிLoc. 8. Shred, piece; துண்டு. சீலை கங்குகங்காய்க் கிழிந்துபோயிற்று. (W.)
கங்குகங்காய் = கச்சல்கச்சலாய் : நெசவாளர் பேச்சில் உள்ளது.

ஆக, மேலே நான் கொடுத்துள்ள சொற்களை ஆராய்ந்து பார்த்தால்
இவை க'ஸ்யப என்ற சொல்லில் இருந்து உருவானவை அல்ல என்பது
வெள்ளிடைமலை. சம்ஸ்கிருதப் பேராசிரியர்கள் தமிழின்
கச்சம் 'சிற்றாமை', கச்சி 'சிரட்டை, நகரேஷு காஞ்சி எனப்படும் பழைய ஊரின் பெயர்',
கச்சல்(/கஞ்சல்/கந்தல்), கங்கு இவற்றை ஆராய முற்படுவரேல் 
இவை தெள்ளிதின் விளங்கும்.

நா. கணேசன்

>
> கச்சி - இடப்பெயர் ஆய்வு
>
> கச்சி என்னும் ஊர்ப்பெயர் ஒருவகை ஆமையால் ஏற்பட்ட பெயராகும். 
https://en.wikipedia.org/wiki/Indian_star_tortoise
> Indian star tortoise (Geochelone elegans) - மிக அழகானதும், சிறியதும் ஆன யாமை.
>
> இதன் ஓட்டில் இருந்து செய்யும் யாழ்: கச்ச யாழ். கச்சபி என்று சரசுவதி கையில் இருந்த
> ஆதியாழ். கச்சம் என்பான் கம்பன். கச்சத் தீவு. கச்சபேசுவரர் கோவில் 
> கச்சியிலும், கச்சூரிலும் (கச்சிப்பேட்டுக்கு மிக அருகு). கச்ச +  ஊர்  = கச்சூர்.
> பாணர்கள் இந்தியாவில் தெருக்களில் பாடி இசை வளர்த்தவர்கள். அவர்கள் வைத்திருந்த
> யாழ்கள் சிரட்டை/கொட்டங்கச்சி யாழ் (1) கெரட/கரட யாழ் (2) கச்ச யாழ் (கச்சபி என்பர் வடமொழியில்).
> இன்னொன்றும் தாந்திரீக சமயச் சடங்குகளில் பயன்பட்டது: (3) மண்டை யாழ் - மண்டையோடு றெசனேட்டர் ஆகும்.
> இவற்றின் வளர்ச்சியே, வில்நாண் யாழ்களாம்.
>
> க'ஸ்யப- என்ற இந்தோ-ஈரானியச் சொல் கச்சப என்றாகும் என்பார் சம்ஸ்கிருத அறிஞர்கள்.
> அவர் அறியார். There is no -'sya- > -ccha- in Sanskrit, except what Sanskritists claim
> as ka'syapa > kacchapa. This is folk etymology, just like viTaGkar initially crocodile, then for naked 'Siva (Linga)
> is given an explanation: tanga means chisel, vitanga, 'one without chiseling' etc.,
> will write a paper on Dravidian kacca- and Indo-Iranian ka'syapa. have to explain to
> Sanskrit specialists how this merger is not known to them.
>
> Miin in Dravidian has two meanings: fish & star. Take the case of kaccam for Geochelone elegans tortoises.
> The ancient name given by Dravidian language speakers come from (1) the bumps on its shell:
> "kaay kaayaak kaaccirukku", "kaay kaayaak kaa(y)ppu kaaccirukku" (2) the star like rays emanating
> from the kaccam tortoise shell protrusions. You can see stars like these on kaccam tortoises
> shown inside the buffalo horns of Indus deities in many ceramics and seals.
>
> ஆறு, கடல் அருகே உள்ள ஈரப்பசை உள்ள நிலம் கச்சல், கஞ்சல். தாழ்வான பகுதி. கஞ்சல் கோரை போன்ற சொற்களை ஆய்க.
>
> சீ- > சீந்து/சிந்து ' '; அது சொல்முதல் சகரம் இழந்து, ஈச்சு/ஈந்து/ஈஞ்சு என்று ஆகிறது அல்லவா?
> அதேபோல, கச்சம் - கச்சல்/கஞ்சல்/கந்தல் என்றாகிறது. கச்சி = கஞ்சி. இது காஞ்சி என்றாக்கினர் வடநாட்டார். நகரேஷு காஞ்சி.
>
> பிராமணர்களில் காஸ்யப கோத்திரம் என்னும் உருவாக்கம், ஈரானிய மொழியின் க'ஸ்யப, த்ராவிட மக்களின் கச்ச யாழ் வாசிக்கும்
> பாணர்கள் கலப்பால் உருவானது. வட இந்திய மொழிமாற்றம் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்கையில்.
>
> விரிவாக, சிந்து சமவெளி - தமிழர் தொடர்புகள் பற்றி ஐராவதம் அமைத்துள்ள ரோஜா முத்தையா நூலகத்தின்
> இண்டஸ் ரிசெர்ச் செண்ட்டரில் ஆற்றும் பொழிவில் குறிப்பிடுவேன்,  நீங்கள் வர அழைக்கிறேன்.
>
> More later!
> நா. கணேசன்
>
>

N. Ganesan

unread,
Nov 18, 2018, 10:17:25 AM11/18/18
to சந்தவசந்தம்

விளரி (அ) விளரிப்பாலை என்னும் பண் தோடி ராகம் என்கிறார்கள்.

தோடி துன்பச் சுவை, சோகத்தைச் சொல்லவல்ல ராகமா?

இதுபற்றி யாராவது எழுதியுளரா? 

அசோக், அனந்த், பசுபதி, சிவசூரி, புலவர், ... சங்கீதம் தெரிந்த சந்தவசந்தக் கவிகள் தெரிவித்தால் நன்றியுடையேன்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Dec 4, 2018, 8:15:05 PM12/4/18
to Santhavasantham
பூசுணிக்காய், சிவலிங்கம் - சிலேடை. A rare veNpA on the Ravanastron episode.

கொண்டத்தூர் நாகப்பட்டினம் அருகே உள்ள ஊர்.

பூசுணிக் கறியை வியந்து பாடியது என காஞ்சிபுரம் மகாவித்துவான் இராமசாமிநாயுடு உரைசெய்துள்ளார்.
ஆனால், இதில் உள்ள இராவணன் கயிலையை அசைத்து, கண்டத்தை அறுத்து யாழின் குடம் ஆக்கிய
செயல் பாடப்பட்டுள்ளது எனக் கண்டவர் செங்கை பொதுவன் அடிகள்.
புலியூர்க் கேசிகன் உரை பொருத்தமாக இல்லை. இரட்டுற மொழிதல் நயம் யாரும் பேசவில்லை.


பூசுணிக்காய், சிவலிங்கத்தின் சிலேடை (காளமேகம்). பூசு (பூசை) உணும் காய் = இலிங்கம் (பூசுணி போலும் உரு).
அழகான இந்த ராவணஸ்ற்றான் வெண்பா புலவர் புலியூர்க் கேசிகன் சரியான பொருள் தரவில்லை எனக் கருதுகிறேன்.
தண்டை அணிந்த பெண் சமைத்த பூசுணிக் கறியை வாழ்த்துகிறார் காளமேகம். தாழ்த்தவில்லை என்பது தெளிவு.
புலவர் செங்கை பொதுவன் விளக்கம் பொருந்துகிறது. 


பூசுணிக்கும், இலிங்கத்துக்கும் சிலேடை:
 
கண்டங்கால் கிட்டுங் கயிலாயங் கைக்கொண்டுட்
கொண்டக்கால் மோட்சங் கொடுக்குமே – கொண்டத்தூர்
தண்டைக்கால் அம்மை சமைத்துவைத்த பூசுணிக்காய்
அண்டர்க்காம் ஈசருக்கு மாம் 

ஒப்பு:
அடிநந்தி சேர்தலா லாகம் வெளுத்துக்
கொடியுமோர் பக்கத்திற் கொண்டு - வடிவுடைய
மாசுணத்தைப் பூண்டு வளைத்தழும்பு பெற்றதனால்
பூசுணிக்கா யீசனெனப் போற்று!!  - கவி காளமேகம்

மையுண்கண் = மை உடைய கண் (சங்கம்)
பூசுணிக்காய் = பூசு (பூசை < பூசல்) உடைய காய் = லிங்கம்.

பிற பின்!
நா. கணேசன்



--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Feb 18, 2019, 9:52:00 AM2/18/19
to Santhavasantham, George Hart, sirpi balasubramaniam, Erode Tamilanban Erode Tamilanban, Dr.Krishnaswamy Nachimuthu, S. V. Shanmukam
அகத்துறைப் பாடல் ஆகிய குறுந்தொகை 370-க்கு தமிழிசை, தமிழ்நாட்டுச் சிவபெருமான் கோவில்களின் சிற்பங்கள் வரலாற்றை ஆராயும்போது பொருள் காண முடிகிறது.

கின்னரம் என்பது தமிழரின் மிகப் பழைய நரம்பிசைக் கருவி. தமிழ்நாட்டில் இக்கருவியை வில்லகம் (violin’s bow) கொண்டு மீட்டும் தமிழிசை மரபு அழிந்தொழிந்தது. கின்னரத்தின் இன்றைய பெயர் ‘கொட்டாங்கச்சி வயலின்’. இந்த அரியகலையைக் கற்று தமிழ்நாட்டில் மேடைகளிலும், பிளாட்பாரங்களிலும் இசைத்த சீர்காழி ராமு அண்மையில் மறைந்துவிட்டார். அவரது நினைவைப் போற்றும் வகையில் அவரது கின்னர வாசிப்புகள் தேடப்பெற்று காணொளிகளும், கேட்பொலிகளும் (ஆடியோ) இணையத்தில் வலையேற வேண்டும். அவரது 8 மக்களிடமோ, நண்பரிடமோ ராமுவின் கின்னர இசைப் பதிவுகள் கட்டாயமாய் இருக்கும். 10 பேராவது ஒவ்வொரு பழைய முழவு, துளை, நரம்பு, கஞ்சம் என்னும் சங்கீதக் கருவிகளைக் கற்று வாசிக்கும் திறன் பெறவேண்டும். சீகாழி தமிழிசையின் தலைமை ஸ்தானம். சம்பந்தர் பிறந்த ஊர். கர்நாடக மூவருக்கும் முன்பிருந்த தமிழிசை மூவர்களும் வாழ்ந்த ஊர். அவர்களில் மூத்தவர் 16-ம் நூற்றாண்டினர் ஆகிய முத்துத்தாண்டவர் என்னும் இசைவேளாளர். அவர்தான் தில்லைக் கூத்தப்பிரானை முதன்முதலில் கீர்த்தனை என்னும் வடிவை அமைத்துப் பாடித் தொழுதவர் (ஆதாரம்: மு. அருணாசலம், திருச்சிற்றம்பலம் (மயிலாடுதுறை) எழுதிய நூல்கள்). இந்த இசைவாணரின் எளிய வாழ்வினைப் பற்றி அவரது நண்பர் எழுதிய ‘தீக்கதிர்’ கட்டுரையை முழுமையாகத் தருகிறேன். பலரும் அறிந்துகொள்ளவேண்டியவர், குடும்பத்தாருக்கும் உதவலாம். கின்னரத்தை ராவணஹஸ்தம் என்றும் அழைப்பதுண்டு. ராவணன் கின்னரம் தன் நரம்பால் செய்து மீட்டியதைத் தேவாரம் பாடும். கின்னரம் வாசிக்கும் இராவணனைக் காளமேகப் புலவர் பூசுணிக்கும், சிவலிங்கத்துக்குமான சிலேடை வேண்பாவில் அழகுறப் பாடியுள்ளார் [1].

ஜோயப் போர் (Dr. Joep Bor) போன்ற இசையியல் அறிஞர்கள் நரம்பிசைக் கருவிகளைத தேய்த்து வாசிக்கும் வில்நாண் உடைய ‘வில்லகம்’ பற்றி இன்னும் சரியாக ஆராயவில்லை என்றே தோன்றுகிறது. அவர் போன்றவர்கள் இந்த வில்லகக்கருவி கி.பி. 10-ஆம் நூற்றாண்டின் முன் கிடைக்கவில்லை என்கின்றனர். ஆனால் தமிழகத்தின் சிவாலயங்களில் – குடைவரைகள், கட்டுமானக் கோவில்கள் இன்னும் பார்க்கவில்லை. திருச்சி டாக்டர் இரா. கலைக்கோவன், அவரது மாணவி அர. அகிலா எழுதிய கட்டுரைகளில் சிரட்டைக் கின்னரி கொண்ட சிற்பங்களைப் பற்றி நிறைய 20 ஆண்டு முன்னரே எழுதியுள்ளனர். நடேசப் பெருமானின் கீழே கின்னரம் வாசிக்கும் சிவ கணங்கள் உள்ள முக்கியக் குடைவரையாக திருமலைப்புரம் என்னும் 7-ஆம் நூற்றாண்டின் பாண்டியர் குடைவரையைக் குறிப்பிடலாம். 8-ஆம் நூற்றாண்டிலே காஞ்சிபுரத்தில் இராஜசிம்மேசுவரம் என்னும் முதல் கற்றளியில் உள்ள கின்னரம் வாசிக்கும் பூத கணங்கள் இரண்டு இடங்களில் இருப்பது சிறப்பு. சோழர் காலப் படைப்புகள் என்று பார்த்தால் சுமார் 30 சிரட்டைக் கின்னரங்கள் தேறும் எனலாம். திருமலாபுரம், காஞ்சியில் உள்ள மூன்றுமே வில்லால் மீட்டும் சிரட்டைக் கின்னரி தான். சிரட்டை என்பது கொட்டாங்கச்சி. இதற்கு பதிலாகக் கச்சம் என்ற ‘நட்சத்திர ஆமை’ ஓட்டையும் பயன்படுத்தல் உண்டு. அந்தவகை நரப்பிசைக் கருவி கச்சபி என்றும், சரஸ்வதி கையில் உள்ளது இந்தக் கச்சக் கின்னரி என்றும் இந்திய சங்கீத நூல்கள் குறிப்பிடுகின்றன. பிற்காலத்தில் எல்லாவகை வீணைகளும் இந்தக் கின்னரத்தின்றும் பிறந்ததே. கூர்மவீணை என்றும், கூர்மி என்றும் குறிப்பிடும் ஆமையாழ் தோன்றி மத்திய கிழக்கு நாடுகளுக்கு ரபாப்/ரெபெக் என்ற பெயரில் இந்தியாவில் இருந்து பரவிற்று. இதே போல, தும்புரு யாழ் என்பதும் பரவியது. ரபாப்/ரெபெக் மத்திய கிழக்கில் இருந்து இத்தாலி சென்று ஐரோப்பாவின் வயலினாக உருவெடுத்தது. பாலுஸ்வாமி தீட்சிதரும், தஞ்சை நால்வரில் வடிவேலுவும் திரும்பவும் கர்னாடக சங்கீதத்திற்கு வயலினை பிரிட்டிஷார் காலத்தில் மீளறிமுகம் செய்கின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சியும், சரஸ்வதி வீணையைவிடச் சிறிதானதாகவும் இருப்பதால் கச்சேரிகளில் வயலின் சிலமாற்றங்களுடன் இடம்பெறலாயிற்று.

சிரட்டைக் கின்னரி (கொட்டாங்கச்சி வயலின்):

திருக்கோவில்களில் தேவாரம் கின்னரம் கொண்டு இசைக்கப்பட்டதாகத் தெரிகிறது. கின்னரி என்னும் இந்த Pre-violin நரம்புக் கருவிக்குச் சங்க இலக்கியத்தில் இருந்து மூன்று எடுத்துக்காட்டுகள் தருகிறேன். இவை இல்லாமல்தான் மேலையாசிரியர் இந்திய இசைக்கருவிகள் பற்றி இதுகாறும் ஆய்ந்துளர்.

(1) பெரும்பாணாற்றுப்படை 493-495:
இன்சீர்க்


கின்னரம் முரலும் அணங்குடைச் சாரல்

மஞ்ஞை ஆலும் மரம்பயில் இறும்பின். – பெரும்பாணாற்றுப்படை 493-495.

கின்னரம் வாசிக்கும் ஆந்தை ஜோடிகளை நிறைய அர்ஜுனன் தபசு சிற்பத்தில் மாமல்லையில் காணலாகும். பல்லவர் காலச் சிற்பங்கள். அதற்கு முன்னரே வரும் சங்கச் சான்று மேலே காணும் பெரும்பாண் வரிகள். இனிய தாளத்துடன் கின்னர மிதுனங்கள் கின்னரியாழை மீட்ட, அதற்கேற்றபற்றபடி மரங்கள் அடர்ந்த சோலையில் மயில்கள் நடமாடும். ஆங்கே அச்சுறுத்தும் அணங்கு என்னும் தெய்வங்கள் வாழும். கின்னரம் வில்லகவிரல் என்னும் நாணுடை வில்லாலோ, பாணன் கையின் விரலாலோ மீட்டலாம்.

(2) பெரும்பாணாற்றுப்படை 180-182
குமிழின் புழற் கோட்டுத் தொடுத்த மரல் புரிநரம்பின்
வில்யாழ் இசைக்கும் விரல் எறி குறிஞ்சி – பெரும்பாண்.

மரல் கயிறாகிய விரலாலே தெறித்து வாசிக்கும் (நச்சினார்க்கினியர் உரை). இங்கே விரல் என்பது அதன் தொழிலால் கயிறுக்கு ஆகி வந்த உவமையாகு பெயர்.

பெரும்பாணாற்றுப் படையின் பழைய உரையில் கை விரலால் மீட்டுதற்குப் பதிலாக வில்லில் பொருத்திய மரல்கயிறு ஆகிய விரலாலே தெறித்து வாசிப்பது என்பதால் கின்னரத்தை வில்லால் மீட்டினர் என்பது அறியலாகும். கின்னரம் வயலின் போல இருப்பதும், மிகப் பழையதான ஒரு வில்லிசைக் கருவி. வில்லிசைக் கருவிகளே (Bowed Chordophones) உலகத்திற்கு  இந்தியாவின் கொடை. அதில் கின்னரம் பற்றி முவ்விடங்களில் (முத்தமிழ் போல!) சங்கப் புலவர்கள் பதிவு செய்திருப்பதும், தமிழகத்தின் சிற்பக்கலை தோன்றுகிறபோதே கின்னரம் சிவகணங்கள் கையில் காட்டுவதும் அருமையிலும் அருமை. எங்கே பார்த்தாலும், காரைக்கால் அம்மை கைத்தாளத்துடன் இருப்பார். அபூர்வமாக, திருப்புகலூரில் சிரட்டைக் கின்னரியுடன் இருப்பதை முனைவர் இரா. கலைக்கோவன் தம் ஆய்வேட்டில் எழுதியுள்ளார்.

இதனைப் பாண்டியர், பல்லவர் சிற்பங்களில், சிவகணங்களில் காட்டியுள்ளனர் என்பது வயலின் வரலாற்றின் மேலையுலக ஆய்வாளர்கள் இன்னும் அறியாத செய்தி ஆகும். இந்த இடத்த்தில் செங்கோட்டியாழ், கருங்கோட்டியாழ் என்பன பற்றிச் சில சொற்கள் குறிப்பிடல் பொருந்தும். செங்கோடு என்பது வளைவில்லாத வீணாதண்டம். இதனை stick zither என்பர் இசையியலார். கருங்கோடு என்பது எருமையின் கொம்பு எனச் சங்க இலக்கியம் காட்டும். எருமைக் கொம்பைப் போல் வளைந்த கோடு உடைய யாழ் என்பது கருங்கோட்டியாழ். வில் போன்று வளைந்த தண்டம் உடையது கருங்கோட்டியாழ் (வில்யாழ்). விபுலானந்தர் காட்டிய மகரயாழ், சகோட யாழ் போன்றவை காண்க. இவை harp எனப்படுபவை.

பெரும்பாணாற்றுப்படையிலே “விரல்” என்பது ஓர் இசைநுட்பக் கலைச்சொல். இதனைக் குறுந்தொகை 370 கொண்டும் வில்லகவிரல் என்பது Violin’s bow-with-cord என்பது அறியலாம்.

(3) குறுந்தொகை 370

(“பரத்தை தலைவனைப் புறம்போகாவாறு பிணித்துக் கொண்டாள்” என்று தலைவி கூறியதாக அறிந்த பரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்ப, “தலைவன் ஈண்டு இருப்பின் அவனோடு பொருந்தியும் அவன் பிரியின் யாம் தனித்தும் இருப்பேம்” என்று கூறியது.)

பொய்கை ஆம்பல் அணிநிறக் கொழுமுகை
வண்டுவாய் திறக்குந் தண்டுறை ஊரனொடு
இருப்பின் இருமருங் கினமே கிடப்பின்
வில்லக விரலிற் பொருந்தியவன்
நல்லகஞ் சேரி னொருமருங் கினமே.
– வில்லக விரலினார்.

வில்லின் நாணினால் வாசிக்கும் கின்னரக் கருவியைப் பற்றிய அரிய பாடல் இது. முதலில் ஒன்று சொல்லவேண்டும்: அண்மைக்கால உரையாசிரியர்கள் இதனைப் பகைவனொடு உடற்றும் போரில் அம்பு எய்து கொல்லும் வில் என்று எடுத்த உரை செய்துள்ளனர். அது புறத்துறை ஆதலின், அகப்பாடலுக்கு போர்வில் உவமையாக வாராது என்பது திண்ணம்.

மிகச் சிறிய பாட்டாக தமிழிசையின் உலகப் பங்களிப்பைத் தருகிறார் இந்தச் சங்கச் சான்றோர். Red Earth and Pouring Rain என்ற ஏ. கே. ராமாநுஜனின் புகழ்பெற்ற மொழிபெயர்ப்பு வரியால் செம்புலப்பெயல் நீரார் பாடல் உலகமெல்லாம் பரவியது. வட இந்தியரான விக்ரம் சந்திரா இத்தலைப்பில் நாவல் செய்தார். தமிழில் உவமையால் பெயர்பெற்ற புலவர்கள் பலர். “வில்லக விரலினார்” என்பது சீகாழி ராமு போன்றோர் இசைத்த கின்னரக் கருவியின் வில்லின் நாணால் பெற்ற பெயர் ஆகும். பழைய தமிழிசைக் கருவி என்பதால் இவ்வரிய பாடலைச் சங்கத் தொகைப்பாட்டாகத் தெரிந்தெடுத்துச் சேர்த்துள்ளனர். நச்சினார்க்கினியர், பரிமேலழகர் போன்றவர்களின் உரை குறுந்தொகைக்குக் கிட்டியிருந்தால் கின்னரம் என்னும் செங்கோட்டியாழ், அதை மீட்டும் வில்லகம் என விளக்கியிருப்பர். ஆனால், குறுந்தொகைக்குப் பண்டைய உரை ஏதும் கிடைக்கவில்லை.

தமிழிசைக் கருவி உவமையாகப் பயன்படுத்துவதால், முன்னுரையே இசையின் தொடர்பாக அமைத்துள்ளார் சங்கக் கவிஞர். ஆம்பல் மலர் எங்கும் போவதில்லை. வண்டு தான் ஆம்பலைத் தேடி வருகிறது. அதுபோல், பரத்தை தன் நல்லகத்தில் தான் இருக்கிறாள். அவளைத் தேடி வந்து துய்க்கிறான் தலைவன் என்பது உள்ளுறை உவமம். ஆம்பல் என்பது மருதத் திணையின் பண். தற்காலச் சுத்த தன்யாசி ராகம். சீகாமரம் (ஸ்ரீகாமரம்) என்பது தேவார காலப் பண்ணின் பெயர். ‘காமரு தும்பி காமரம் செப்பும்’ (சிறுபாண். 77). ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழி (சிலம்பு). ‘ஆபெயர் கோவலர் ஆம்பலொடு அளைஇ’ (அகம்).

பாண்வாய் வண்டு நேர்திறம் பாடக்
காண்வரு குவளை கண்மலர் விழிப்ப (சிலம்பு)

பொய்கையிலே உள்ள ஆம்பலினது அழகிய நிறத்தையுடைய கொழுவிய அரும்பில் வண்டுகள் இதழைத் திறக்கும் தண்ணிய நீர்த்துறைகளை உடைய ஊருக்கு உரியனாகிய தலைவனோடு நாம் இருந்தால் இரண்டு உடலையுடையேம்; இது பகல் வேளையிலே எனலாம். அவரோடு துயின்றால் எம் இல்லத்தில் கின்னரத்தின் செங்கோட்டுடன் இணையும் வில்லக-விரல் ( violin’s bowstring) போல ஓர் உடலை யுடையேம்.

முடிபு: ஊரனொடு ஊரார் இருப்பின் இருமருங்கினம்; இரவில் கிடப்பின் பொருந்தி ஒரு மருங்கினம். இப்பாடலில் தமிழிசையின் மூத்த கருவிகளில் ஒன்றாகிய கின்னரம் என்னும் நரப்பிசைக்கருவி சொல்லப்பட்டுள்ளது. வில்லகவிரல் என்பது ஒரு இசைத்துறைக் கலைச்சொல் (technical vocabulary). வில்லகவிரல் = Kinnari’s bow-string. கையினால் மீட்டும்போது அது கையக விரல்.இதனைப் பாரதியார் “வீணையடி நீயெனக்கு, மேவும் விரல் நானுனக்கு” என்று சரசுவதிவீணை வாசிப்பைப் பேசுகிறார். 2000 ஆண்டுக்கு முன் இருந்த வில்லகவிரலினார் கின்னரத்தை மீட்டும் வில்நாணை (=வில்லக விரல்) உவமையாகச் சொல்லியுள்ளார். வில்லகவிரல் என்பது உவமையாகுபெயராய் வில்நாணைக் குறிப்பது. இதனை பெரும்பாணாற்றுப்படையின் பண்டை உரையினால் அறிக. அற்புதமான தமிழிசை வரலாறு காட்டும் சங்கச் செய்யுள் இஃது. வில்லகவிரலால் கின்னரம் மீட்டும் பாணனின் 1810-ஆம் ஆண்டு ஓவியம் இணைத்துள்ளேன்.

நா. கணேசன்
[1] கின்னரம் ~ ராவணஹஸ்தம் (Pre-Violin History)https://groups.google.com/d/msg/santhavasantham/aMK2Pa10Wvc/50g4ci83CQAJ

https://theekkathir.in/2018/12/03/ஒரு-கொட்டாங்கச்சி-வயலின்/
ஒரு கொட்டாங்கச்சி வயலின் கண்ணீர் வடிக்கிறது…!

N. Ganesan

unread,
Feb 19, 2019, 11:37:58 AM2/19/19
to Santhavasantham, kanmani tamil
On Mon, Feb 18, 2019 at 9:21 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
குறுந்தொகை -370 பாடலுக்கு நீங்கள் சொல்லும் பொருள் ஏற்புடைத்தே.

நன்றி, பேரா. கண்மணி.

N. Ganesan

unread,
Feb 26, 2019, 10:20:53 AM2/26/19
to Santhavasantham
On Mon, Feb 25, 2019 at 9:04 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
///

N. Ganesan

11:04 AM (10 hours ago)
to tiruvalluvarhoustontamilvallamaiமின்தமிழ்
தமிழில் இருந்து சுமேரியாவுக்கு சென்ற மிகப் பழைய சொற்களில் முக்கியமானது "கின்னரம்".///Dr.N.Ganesan wrote 10 hrs ago.

சான்றாதாரம் ?
சக 


கின்னரம் என்ற சொல் சுமேரியாவுக்குச் சென்ற முதல் தமிழ்ச்சொல்களில் முக்கியமானது. எள்ளு (< நெள்ளு/நெள்ளு. நள்ளி = நண்டு. அலவன், இருளில் வெளியே திரிவன.) தானியமும்,
தமிழ் என்ற சொல்லோடு தொடர்புடைய மிழகம் என்ற வார்த்தையும் உண்டு. கின்னரம் என்பதுதான் தமிழில் உள்ள வார்த்தைகளில் காலத்தால் முதலில் பதிவான வார்த்தை.
சுமேரியாவில் உள்ள களிமண் பலகைகளில் உள்ள எழுத்தில். இதற்கு ஆதாரம்:
The Roots of Hinduism, Oxford University Press, 2015.  
இந்த நூலை வாங்கிவிட்டேன் என்று சென்ற ஆண்டு குறிப்பிட்டீர்கள். இந்நூலை அறிமுகப்படுத்தி நீங்கள் ஒரு நீண்ட கட்டுரை எழுதலாமே.
கின்னரம் பற்றிச் சுருக்கமாக இந்த நூலில் உள்ளது. பின்னர் விரிவாக எழுதுகிறேன்.

கின்னரம்: நரம் = நரம்பு, நார், ஞரலுதல்/நரலுதல் (பல்லை நரநர எனக் கடித்தான் என்பதில் உள்ள ஒலிக்குறிப்பு. இதில் இருந்து நரம்/நரம்பு வந்திருக்கும்.
இது தெரியாமல், நர = புருஷன் என்றெடுத்து, கின்னரம் = கிம்+ நரம் (ம்=அநுஸ்வாரம்), கிம்புருஷ- என்னும் கற்பனை மிருகம் சிருஷ்டிக்கப்பட்டுள்ளது. 2000 வருஷம் முன்னே.
கில்- = கில்லம் : மனிதனின் தொண்டைக்குழி. கின்னரத்தில் இருந்து வளர்ச்சி பெற்றதே எல்லா நரம்பிசைக் கருவிகளும். கில்+நரம் = கின்னரம். வீணை (stick zither) கின்னர யாழின் வளர்ச்சி.
மனிதனின் குரலை அப்படியே ஒலித்துக்காட்டும் கருவி வீணை, வயலின் போன்றவை. வயலினின் முன்மாதிரி கூர்ம யாழ் (ஆமையாழ்) இதனை 2-ம் நூற். அமராவதி சிற்பங்களில் காணலாகும்.

கூர்ம வீணை என்பது வேறு, அதற்கும் பழைய கச்ச வீணை என்பது வேறு. கூர்மம் பெரிய ஆமை.  ஆனால் கச்சம் = Indian Star Tortoise. கொட்டாங்கச்சி அளவினது.
இதனை, பேரா. வி. ராகவன் (சம்ஸ்கிருதத்தில் புகழ்பெற்ற சென்னைப் பல்கலைப் பேராசிரியர், 1940s&50s) புரிந்துகொள்ளவில்லை. இதனால், சிவராமமூர்த்தி,
... அதன் விளைவாக, Emmie te Nijehuis (Dattilam: A Compendium of Ancient Indian Music) ...என்று போகிறது. சரசுவதி/கலைமகள் வைத்திருப்பது கச்சபி என்னும்
கச்சவீணை. இது கின்னரம் தான். ஆதி கின்னரங்கள் கயில் என்று பழந்தமிழ் கூறும் கொட்டாங்கச்சியோ, கச்சம் என்னும் ஸ்டார் டார்ட்டாய்ஸ் கொண்டோ அமைக்கப்பட்டவை.
கன்னடம் அதற்கும் வடக்கே கயில் யாழ்/வீணையைக் கரட வீணை என்கிறார்கள். கரட- = கொட்டாங்கச்சி. இதுவும் தமிழ்ச்சொல்லே. தாமஸ் பர்ரோ கரடம் பற்றி
எழுதிய குறிப்பை முன்னர் கொடுத்துள்ளேன். அதைத் துழாவி தொகுக்கணும்.

கரடவீணை என்று வடக்கே கூறப்படும் கின்னரம் (கொட்டாங்கச்சி வீணை), பழைய தமிழர்கள் கயில் என்றே அழைத்துள்ளனர் என தெரிகிறது.
இதனைத் தேவாரத்தில் காணலாம். இருபொருளில் இராவணன் பற்றியும், சிவன் வைத்திருப்பதாகவும் தேவாரப் பாடல்கள் உள்ளன.
ஜோஎப் பார் (Joep Bor) கயில் பற்றிச் சொல்லியிருந்தாலும், அவருக்கு சரியான தேவாரப் பாடல்களை யாரும் கொடுக்கலை போலும். அவர் ஆதாரம் காட்டும்
பாடல்களை விடச் சிறப்பானவை தேவாரத்தில் உள. அவற்றைப் பாருங்கள்.

கயில் கொட்டாங்கச்சி, (அ) கொட்டாங்கச்சி வீணை என்ற பொருளில் உள்ள பாடல்கள் இருந்தால் தாருங்கள். நனிநன்றி.

கொட்டாங்கச்சி யாழ்/வீணை/வயலினில் நரம்பைக் கோத்துக் கட்டி முடிக்கும் இடம் கயில் என்னும் கொட்டாங்கச்சி ஆகும்.
எனவே, சிரட்டைக்கின்னரியின் இந்தத் தொழில் நுட்பம் சங்கத்தமிழில் "முடிச்சு போடும் இடம், முடிச்சு" என்ற பொருளில்
கயில் என்ற சொல் சங்கத் தமிழில் பயன்படுத்துகிறார்கள். தமிழிசை நுட்பம் பொதுப்பயனுக்குத் தந்த சொல்: கயில்.
ஆங்கிலத்தில், "don't harp on the subject" என்பது போன்ற ம்யூஸிக் தொடர்பான சொற்கள் வருகிறதே. அதுபோல,
தமிழில் இசைபற்றிய சொற்கள் பொதுப்பயனில் என்ன இருக்கின்ரன என தொகுத்து யாராவது கட்டுரை எழுதினால் சிறப்பு,

கயில்+கடை:
1) கயிற்கடை (p. 734) kayiṟ-kaṭai கயிற்கடை kayiṟ-kaṭain. < கயில்1 +. Curved extremity of a hook; கொக்குவாய். கயிற்கடை முக்காழ் (மணி. 3, 135).
வீணையின் பாகங்களில், கயிலில் நரம்பை (இப்போது, உலோகக் கம்பி)க் கோக்கும் கொக்கி. மணிமேகலையில் வரும் செய்தி இது.

கயில் கின்னரியின் தொழில்நுட்பம் பிறசொற்களுக்குப் பெயர் ஆகிறது:
கயில்1 kayiln. 1. Clasp of a necklace; பூண்கடைப்புணர்வு. (திவா.) 2. Nape of the neck; பிடர். கயில்கலந் திருண்டுதாழ்ந்த கருங்குழல் (சூளா. சுயம். 112).

நாகபாஶம் என்று ஸரஸ்வதி வீணையில் அழைக்கப்படுவது சங்கத்தமிழில் "கயில்". இது கொட்டாங்கச்சி வயலின் தொழில்நுட்பக் கலைச்சொல்.
கயில் ரெஸொனேட்டரில் யாழ்நரம்பைக் கோத்துக் கட்டுவதால் "கயில்" = clasp என்று பெயர் ஆகியுள்ளது. 
கயில் = ஆபரணத்தின் கடைப்பூட்டு என வரும் சங்கப் பாடல்:
அம் தண் புனல் வையை யாறு' எனக் கேட்டு, மின் அவிர் ஒளி இழை வேயுமோரும், பொன் அடர்ப் பூம் புனை திருத்துவோரும், அகில்கெழு சாந்தம் மாற்றி ஆற்றப் புகைகெழு சாந்தம் பூசுவோரும், கார் கொள் கூந்தல் கதுப்பு அமைப்போரும், வேர் பிணி பல் மலர் வேயுமோரும், புட்டகம் பொருந்துவ புனைகுவோரும், கட்டிய கயில் அணி காழ் கொள்வோரும்; வாச நறு நெய் ஆடி, வான் துகள் மாசு அறக் கண்ணடி வயக்கி, வண்ணமும் தேசும் ஒளியும் திகழ நோக்கி, வாச மணத் துவர் வாய்க் கொள்வோரும்; இடு புணர் வளையொடு தொடு தோள்வளையர், கட்டு வடக் கழலினர், மட்டு மாலையர், ஓசனை கமழும் வாச மேனியர், மட மா மிசையோர், பிடிமேல் அன்னப் பெரும் படை அனையோர் - பரிபாடல்-12 . தேவாரம் கயில் என்று சிரட்டைக்கின்னரியைப் பாடுவதைப் பார்ப்போம்
saraswati-veena.gif

மனிதனின் இசையை அப்படியே பதிவு செய்ய வல்லது யாழ்/வீணை. கயில்வீணை (கரடவீணை/சிரட்டைக்கின்னரி), கச்சவீணை (கச்சபி) இவற்றில் மிகப் பழமையானவை.
வீணையின் திறன் பற்றிய கட்டுரை இணைப்பில்.

நா. கணேசன்

வாத்தியங்களில் வீணையின் சிறப்பு தெரியுமா?
அக்டோபர் 04,2012 

மற்ற இசைக்கருவிகளுக்கு இல்லாத சில தனிச் சிறப்புகள் வீணைக்கு உண்டு. அது, தோற்றத்துக்கு இனிய உருவத்தை உடையது. பெரு முழக்கம் செய்யாமல் தார ஸ்தாயியிலும் மந்தர ஸ்தாயியிலும் இனிதாக இசைப்பது. வீணையை மீட்டி நிறுத்தி விட்டால், அதன் இன்னொலி உடனே நின்றுவிடுவதில்லை. அதன் ஒலி அலைகள் பின்னும் நீண்டு ஒலித்து மெல்லிய அலைகளைப் போல அடுத்தடுத்துப் பரவி நிற்கும். வலது கையிலே மீட்டிய ஒலி இடக்கையில் வாசிக்கும் போதும் இடையறாது ஒலித்து இன்பத்தை உண்டாக்குகிறது. மற்ற வாத்தியங்களில் அப்படியல்ல; வாத்தியத்திலிருந்து கையை எடுத்தவுடன் ஒலியும் நின்றுவிடும். பிடி கருவியில் வில்லை எடுத்துவிட்டால் உடனே ஒலி நிற்பதைக் காணலாம். வீணை அத்தகையதல்ல. அதனுடைய கமகம் வேறு எதற்கும் வராது. பிரணவ நாதம் வாத்தியத்தின் அமைப்புக்கேற்றபடி நீண்டு ஒலிக்கும். சரியானபடி அமைக்கப்பட்ட வீணையில் இந்த நாதம் நெடுநேரம் நிற்கும். இதனால் மனிதக் குரலைப் போலவே தோன்றும்படி வாசிக்க முடிகிறது. ஸ்வரங்களையும் கமகங்களையும் தக்கபடி இசைக்க முடிகிறது.

சக்தி அம்சமும் சிவ அம்சமும் உடைய வீணையில் நயமும் கம்பீரமும் ஒருங்கே திகழ்கின்றன. ஆத்மானுபூதிக்குத் துணை நிற்கும் வாத்தியம் வீணை. அதனால் இதைத் தேவவாத்தியம் என்பார்கள். தெய்வத் திருவருளைப் பெறுவதற்கும், ஆத்மாவின் பக்திப் பெருக்கை வெளியிடுவதற்கும் ஏற்றதாக விளங்குகிறது வீணை. யாக்ஞவல்கியர் தம்முடைய மனைவியருள் கார்கியை மட்டும் தம்முடன் மோட்சத்துக்கு அழைத்துச் சென்றாராம். மைத்ரேயியை அழைத்துச் செல்லவில்லை. அவளிடம், நீ உன் வீணைத் திறனால் மோட்ச லோகத்துக்குத் துணை இன்றியே வரலாம் என்று அவர் கூறினார். வீணையின் நாதம் மோட்ச இன்பத்தையும் கூட்ட வல்லது என்கிற தத்துவத்தையே இது குறிக்கிறது.

வீணை வகைகள்: வீணையை சிவபெருமானே உருவாக்கினார். அதனால் அதற்கு ருத்திர வீணை என்றும் பெயர். உருவ வேறுபாட்டினால் வீணையின் பெயர்களும் வேறுபடும். வட நாட்டில் ருத்திர வீணை, விசித்திர வீணை, கச்ச வீணை, சிதார், ஸூர் பஹார், ஸூர் சிங்கார் என்ற வகை வீணைகள் உள்ளன. தமிழ்நாட்டில் வீணையும், கோட்டு வாத்தியம் என வழங்கும் மகா நாடக வீணையும் வழக்கத்தில் உள்ளன. தென்னாட்டில் இசைக்கப்படும் வீணைக்கு சரஸ்வதி வீணை என்ற பெயரும் உண்டு.

மகா பெரியவரை சந்தித்த வீணை காயத்ரி…

Veena Gayatri's experience with Maha Periva.
என்னுடைய 11-வது வயதில், காஞ்சி பெரியவர் முன்னிலையில் வீணை வாசிக்க அழைப்பு வந்தது. காஞ்சிப் பெரியவர், ‘சந்திரமௌலீஸ்வரர்’ பூஜை பண்ணும் போது நான் வாசிக்க வேண்டும். யாருக்குமே கிடைக்காத அரிய பாக்கியம் அது. கச்சேரிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு எனக்கு டைஃபாய்டு காய்ச்சல் வந்து படுத்த படுக்கையானேன். என்னால் நிமிர்ந்துகூட உட்கார முடியவில்லை. இருந்தும், மடத்தில் உள்ளவர்கள், ‘ஒரு பாட்டையாவது வாசிக்கச் சொல்லுங்கள்!’ என்றனர். என் பெற்றோருக்கும் எனக்கும் மறுப்பு சொல்ல மனம் இல்லை. அன்று, என்னையும் அறியாமல், அரை மணி நேரம் தொடர்ந்து வாசித்தேன். கிளம்பும் நேரத்தில், மகா பெரியவர் ஓரிக்கைக்கும் வந்து வாசிக்கக் கூப்பிட்டு அனுப்பினார். அன்று சுவாமிகள் மௌன விரதம். இரண்டு கால்களையும் மடித்துவைத்தபடி என் வாசிப்பை அவர் கண் மூடி ரசித்துக் கேட்டது இன்றும் எனக்குப் பசுமையாக நினைவில் இருக்கிறது. திடீரென என்னைப் பார்த்து வாசிப்பை நிறுத்தச் சொல்லி கையால் சைகை செய்தார்.

15 நிமிடங்கள் கழித்து ஏலக்காய், லவங்கம் பதித்த சந்தனத்தால் ஆன ஓம்காரக் கிரீடத்தைக் கொடுத்து, அதை என் தலையில் அணியச்செய்து வாசிக்கச் சொன்னார். நானும் வாசித்தேன். ‘இது போல பல கிரீடங்கள் உனக்கு வரும்’ என்று எழுதிக் காட்டினார். அன்று பெரியவாளின் அருள்வாக்குதான் இன்று என் புகழ், பதவிக்கும் மகுடம் சூட்டி இருக்கிறது. அந்த நொடியிலேயே, என் உடல்நிலை தேறி, உற்சாகமாக இருப்பதைப் போன்று உணர்ந்தேன். 35 வருடங்களாக சுவாமிகள் தந்த கிரீடத்தைப் பத்திரமாகப் பராமரித்து வருகிறேன். கிரீடத்தைப் பார்க்கும்போதெல்லாம் பழைய நினைவுகள் என்னைப் பரவசப்படுத்தும்.

–நன்றி சக்தி விகடன்
.

Read more: http://periva.proboards.com/thread/2513/significance-veena-vaadhyam#ixzz5geKpXKui


 
On Mon, Feb 25, 201 
9 at 11:04 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
தமிழில் இருந்து சுமேரியாவுக்கு சென்ற மிகப் பழைய சொற்களில் முக்கியமானது "கின்னரம்". பழைய ஏற்பாடு என்னும் கிறித்துவ ஆகமத்திலும் இச்சொல் பயின்று வருகிறது (C. R. Day, 1891). சிவபிரானுக்கு விருப்பான நரம்பிசைக் கருவி கின்னர யாழ் என தேவாரம் பாடுகிறது (கின்னரம், கயில் என்ற சொற்களால் குறிப்பர் தேவாரமுதலிமார்). கின்னரம் என்ற சொல்லின் ஆழமான பயன்பாட்டை இசையியலார் Prof. Joep Bor போன்றோர் இன்னும் அறியவில்லை என்றே தெரிகிறது.

வில்லக-விரல் (Bowstring) கொண்டு வாசிக்கும் கின்னரம்.  சங்கத்தமிழில் இந் நரப்பிசைக் கருவி: http://www.vallamai.com/?p=90679
- இப்போது கொட்டாங்கச்சி-வயலின், தமிழ் திரைப்படங்களில் இருப்பதைப் பார்ப்போம்:

(1) செம்மறி ஆடே - வள்ளைப்பாட்டை எஸ்பிபி பாடக் கேட்போம்:
(உழவன் மகன், 1987)

(2) சிப்பிக்குள் முத்து - கமல் நன்கு வாசித்துக் காட்டுகிறார்.
படம் முழுக்க இவ்விசைக் கருவி. 
தெலுங்குப் படத்தில்,

(3) ராமராஜன் - பாட்டுக்கு நான் அடிமை

(4) டிஎம்எஸ் - சிரட்டைக் கின்னரி:

(5) ஸ்ரீபிரியா - https://www.youtube.com/watch?v=z1dlaf5docU
'நட்சத்திரம்' என்று ஒரு படம். நீயா பட வெற்றிக்குப்பின் ஸ்ரீபிரியா தயாரித்தார். தெலுங்கில் ஜெயசுதா நடித்து வெளிவந்த 'சிவரஞ்சனி' படத்தின் தமிழ் ரீமேக். துரை இயக்கத்தில் சங்கர் கணேஷ் இசையில் வந்தது.

படத்தின் இன்னொரு சிறப்பம்சம் இதில் நடிகர்திலகம், ரஜினி, கமல், சாவித்திரி, மஞ்சுளா, இயக்குனர் ஸ்ரீதர் ஆகியோர் கௌரவ தோற்றத்தில் நடித்திருப்பார்கள். 

கிராமத்தில் கொட்டாங்கச்சி பிடில் செய்து விற்கும் ஸ்ரீபிரியா எப்படி நகரத்துக்கு சென்று பெரிய சினிமா நடிகையாகி ஒரு அயோக்கியனின் வலையில் சிக்கி, மனமுடைந்து இறந்துபோகிறாள் என்பது கதை. கதாநாயகனாக அந்த நடிகையின்மேல் உயிரையே வைத்திருக்கும் அவளது ரசிகன் (ஹரி பிரசாத்). கொஞ்சம் வித்தியாசமான கதைதான். இதில் 'அவளொரு மேனகை என் அபிமான தாரகை' என்ற அருமையான பாடல் ஏற்கெனவே இங்கு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

இன்னொரு மனதை மயக்கும் பாடல். கதாநாயகி ஸ்ரீபிரியா கிராமத்தில் கொட்டாங்கச்சி பிடில் விற்பவளாக வரும்போது பாடும் பாடல்.. 

"வைகை கரையினில் ஒரு பறவை - அது 
வானத்தில் தேடுது தன் உறவை" 

தெருத்தெருவாக நடந்து பிடில் விற்கும்போது பாடிக்கொண்டே சென்று, ஒரு வீட்டுத்திண்ணையில் அமர்ந்து விற்பனை செய்துகொண்டே, பாடலில் தன் கதையையும் சொல்லியவாறு தொடர்ந்து பாடும்போது இனம் புரியாத சோகம் நம் மனதில் படரும். எந்தவித பந்தாவான கைகால் அசைவுகள் இல்லாமல் முகத்தில் ஒரு மாதிரியான சோகம் இழையோடும் முகபாவத்துடன் ஸ்ரீபிரியா பாடும்போது பாடலுடன் நாம் ஒன்றிப்போவோம். கடைசியில் ஓடிவந்து காசை நீட்டும் சிறுவனிடம் 'எல்லாம் விற்றுவிட்டது' என்று சொல்வதுபோல கூடையைக் கவிழ்த்துக் காட்டியபடி பாடலை பாடி முடிக்கும்வரை நம் மனதை என்னவோ செய்யும். 

தெரிவு,
நா. கணேசன்


N. Ganesan

unread,
Feb 27, 2019, 7:16:26 AM2/27/19
to Santhavasantham, Ramachandran Mahadevan, Ashok Subramaniam
On Wed, Feb 27, 2019 at 3:01 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
///தமிழில் இசைபற்றிய சொற்கள் பொதுப்பயனில் என்ன இருக்கின்ரன என தொகுத்து யாராவது கட்டுரை எழுதினால் சிறப்பு ///
 Dr.N.Ganesan wrote 18 hrs ago.

நற்றிணை- 200ல் இடம்பெறும் இக்கருத்து உங்களுக்குப் பயன் தருமா?
"கைகவர் நரம்பிற் பனுவற் பாணன் ..."- கூடலூர்ப் பல்கண்ணனார்.
உரையாசிரியர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்- 'கை விரும்புதற்குக் காரணமான நரம்பினை உடைய யாழில் பாடும் இசைப்பாட்டு நுவலவல்ல பாணன்' என்கிறார்.
எனக்குத் தோன்றும் பொருள்: 'வில் இன்றிக் கையால் மீட்டுவதற்குரிய இசைக்கருவியில் வல்ல பாணன்'
கண்மணி    


கின்னரம் (கயில் யாழ் (கொட்டாங்கச்சி வயலின், கரட யாழ் என்பர் வடக்கே), கச்ச யாழ் (கச்சம் என்னும் சிற்றாமைகொண்டு செய்யும் கின்னரி), மகர யாழ், ....) முதலில் கை விரலால் மீட்டப்படிருக்கவேண்டும்.
யமுநா எனப் பெயர்வரக் காரணமான பேராமை அல்ல, கச்சபி என்னும் கலைமகளின் யாழ். இந்த வேறுபாட்டை அறியாமல் - கச்சபம் vs. கூர்மம் - பலர் எழுதியுள்ளனர் எனக் குறிப்பிட்டேன்.
கின்னர தம்பதியர் - ஒரு 10 ஜோடி - மாமல்லையில் அர்ச்சுனன் தபசு புடைச்சிற்பத்தில் பார்க்கலாம். எல்லாம் இவ்வகைக் கின்னரிகளே. கின்னரன் என்னும் பாணன்
இக்கருவி வைத்திருக்க, அவன் மனைவி கைத்தாளம் வைத்திருக்கும். நீங்கள் குறிப்பிடும் நற்றிணை 200 ""கைகவர் நரம்பிற் பனுவற் பாணன் ..." ஒப்பிடலாம்:
mahabali.jpg
(மாமல்லபுரத்தில் ஒரு 10 கின்னரஜோடி இருக்கலாம். இவற்றை அழகாக ஒளிப்படங்கள் எடுத்து பதிவிடலாமே. உ-ம்: உதயனுக்கு மடலிடுகிறேன்.)

கின்னரர் வைத்திருக்கும் சிற்பம் ஆயினும், சிவபிரான் கின்னரத்துடன் உள்ள விக்கிரகங்களிலும் இதுபோன்ற கின்னரி தான் காட்டப்படும்.
வீணை வாசிப்போர் விரலில் உலோகக் கொப்பு அணிந்து வாசிப்பர். Plectrum for plucking these string instruments.

ஆந்தைகளை கார்த்திகை மாதம் (தீபாவளி) அருகே, பலி கொடுக்கும் வழக்கம் இந்தியா முழுக்க உண்டு. அதுபோல்.
பாணன், விறலிகளை வேத யாகங்களில் (உ-ம்: அசுவ மேதம்) அரசன், பட்டமஹிஷி பகரியாக (ஸப்ஸ்டிட்யூட்) பலி கொடுக்கப்பட்டனர்.
அதன் விளைவே கின்னரர், வித்யாதரர், .... இவற்றை சமண, பௌத்த நூல்களில் காணலாம். வித்யாதரர் > விச்சாதரன்.
இதனால் தான் மாமல்லபுரம் போன்ற இடங்களில் கின்னரர் Fish-owl ( https://en.wikipedia.org/wiki/Tawny_fish_owl ) உடலாகக் காட்டப்படுகின்றனர் என்பது அறியலாம்.
கின்னர-  கிம்+நர என மொழியியலால் பிரிக்கப்பட்டு, கிம்புருடன் என்ற குதிரைமுகம் கொண்ட உருவத்தில் உருவாக்கம் பெறுவதும் எழுதினேன்.
நரம்(பு)  நர=மனுஷன் என்று பிழைபடப் புரிதலால் எழுந்த கற்பனாமிருகம் கிம்புருஷ. கிம்புருடன் என்று தமிழ்ப்படுத்துவார் கல்வியிற் பெரிய கம்பர்.

கின்னரம் கேட்க அணங்குகள் விரும்பும் என்கிறது பெரும்பாணாற்றுப்படை. http://www.vallamai.com/?p=90679
குறுந்தொகை 370-ம், பெரும்பாணாற்றுப்படையும் "வில்லக-விரல்" என்னும் வில்நாண் கொண்டு யாழ்மீட்டுவதைத் தெரிவிக்கும்
இலக்கியங்கள். உலகிலேயே வில்நாண் கொண்டு நரப்பிசைக்கருவி மீட்டலைப் பாடிப் பதிவு செய்யும் முந்து இலக்கிய வரிகள் இவைதான்.

மெசொப்படாமியா கின்னரம் சென்றபோதும் "கைகவர் நரம்பு" கொண்டதான இசைக்கருவிதான் சென்றிருக்கிறது.
இதற்கெல்லாம் ஒரு 1000 ஆண்டு கழிந்தபின்னரே வில்லால் யாழை வாசிப்பது (உ-ம்: குறுந்தொகை 37) தோன்றியிருக்கவேண்டும்.

இன்னொன்று: சிவபிரான் சிற்பங்களோ, கின்னரர் சிற்பங்களோ "வில்லகவிரல்" (Bow-string of the violin) இல்லாமல்
செய்யும்போது, வில்நாண் இல்லை எனக் கருதமுடியாது. Technically difficult to cast such a bronze by lost-wax process.
So, it is customary not to show the bowstring of the violin. 

இராவணன் கின்னரம் (ராவனஹஸ்தம்) மீட்டுவதைப் பாடிய வெண்பாவில் காரைக்கால் அம்மையாரை (தமிழிசையின் தாய்) போற்றுகிறார்
காளமேகப் புலவர். காரைக்கால் அம்மை செய்துதந்த பூசுணிக்காய் என்று சிவபிரானைச் சொல்கிறார்.
அதாவது, வரலாற்றுநோக்கில் லிங்க வழிபாடு சிவனுக்கு என உறுதிசெய்தவர் காரைக்கால் அம்மை என்கிறார்.
அவருக்கு முன், இலிங்க வழிபாடு நெய்தல் திணைத் தெய்வதம் வருணனுக்கு (வேதத்தின் பெருந்தெய்வம்) இருந்ததை விரிவாக எழுதியுள்ளேன்.

ஒரு பெண் கின்னரம் மீட்டியதை, கின்னரி வாசிக்கும் கிளி என்கிறார் காளமேகம்.

       ஆடல்புரிந் தானென் றந்நாளிலே மூவர்
       பாடலு வந்தானென்ற பான்மையான் கூடலிலே
       நன்னரி வாசிக்கு நடைபயிற்றி னானென்றும்
       கின்னரி வாசிக்கும் கிளி 

மேலும் பார்ப்போம்,
நா. கணேசன்
 

N. Ganesan

unread,
Sep 19, 2019, 10:57:47 PM9/19/19
to Santhavasantham, Ramachandran Mahadevan, Ashok Subramaniam
சங்க காலத்தில் பகலில் காக்கைகளுக்கு பலிச் சோறு (பிண்டம்) கொடுப்பதுபோல,
முதுகாட்டு கடவுள்கள் வாழும் மரங்களிலே (இரவில்) ஆந்தைகளுக்கு பலி சோறு
அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது. நற்றிணை 83:
https://groups.google.com/forum/#!msg/santhavasantham/440LZZ7JGfA/SuOKWMe2AQAJ
இப்பாடலில் “வாய்ப் பறை” என்ற தொடர்முக்கியமானது. “படாஅப் பறை” என்னும் திருக்குறள்
போல, இங்கே ஆந்தையின் அலறல் அமங்கலமான பறையாகக் கொள்ளப்படுகிறது.
குறட்டை ஒலி, நீண்ட அழுகுரல் ஒலி, குழறும் ஒலி, ... எனப் பல சப்தங்களை ஆந்தைகள் எழுப்பும்
பேய்களுக்கும், ஆந்தைகளுக்கும் உள்ள தொடர்பைச் சங்க இலக்கியம் பேசுகிறது.
ஆந்தை என்ற சொல் சங்க இலக்கியத்தில் காணோம். ஆனால், ஆந்தை இனங்களாக
கூகை, குரால், குடிஞை, ஊமன், ஆண்டலை போன்றவற்றைக் காண்கிறோம்.

“பொத்த அறையுள் போழ்வாய்க் கூகை
சுட்டுக்குவியென செத்தோர்ப்பயிரும்
கள்ளியம் பறந்தலை” – (புறம்.240)

பொருள்: ஆய் அண்டிரன் இறந்தவுடன் அவனது உரிமை மகளிரும் தீப்பாய்ந்து மாய்ந்தனர். பிளவுபட்ட வாயுடைய பேராந்தைகள், ‘சுட்டுக்குவி’ என்று செத்தோரை அழைப்பது போலக்கூவும். கள்ளிச் செடிகளை உடைய சுடுகாட்டில்,,,,,,,,,,,,,,
கவிசெந்தாழிக் குவிப்புறத்திருந்த (புறம் 238). எனவே, பிணத்தை எரித்தபின் முதுமக்கட்டாழியில் குவித்தனர்.
அதற்குக் கூகை “சுட்டுக் குவி” என்றதாம்.

ஆய் அண்டிரன் நூலிழை மகளிர் என, தாலி மங்கலவணி அணிந்த பல மகளிரை மணந்து
அரசவாழ்வு வாழ்ந்தவன். அவன் இறந்தபோது ஸதி என்னும் பழைய தமிழர்களின்
சடங்காக, மனையர் இறந்தனர். அவர்களின் செத்துப்போன உயிர்களை அழைப்பதாக
கூகை குழறியதாம். இதே போல, மணிமேகலையிலும் உண்டு. செத்தோர் என்பது பன்மை.
எனவே, இங்கே ஆய் ஒருவன் மட்டுமில்லை, அவன் மனைவியரும் சதிப்பாய்ந்து மாண்டனர்
என்பதை தெரிவிக்கும் சங்கப் பாடல் இது. ஈழத்தில் சாவுக்குருவி, சாக்குருவி என்பது
ஆந்தைக்குப் பெயர். சாவுப்பிட்ட - தெலுங்கு. (பிட்ட = குருவி). கூகூ என்னும் ஒலிக்குறிப்பு
தரும் பெயர் கூகை (சிர்சிர் என்ற ஒலியால் சிரல், சிட்சிட் என்ற ஒலியால் சிட்டுக்குருவி).
இழிபிறப்பாளன் அடிக்கும் துடிபோன்ற குரல் உடையது குடிஞை (புறம் 170). கொல்லன்
துருத்தியில் ஊதும் பூம்பூம் ஒலி போல வெகுதொலைவு செல்லும். “துடிக்குடிஞை” (பொருநராற்றுப்படை).

இந்த “அண்டிரன்” என்ற பெயர் “ஆந்திரம்” என்ற இடப்பெயர்களின் மூலமோ?

ஆண்டலை: இது ஆந்தை வகைகளுள் ஒன்று என ஆராய்ந்து அறிவித்தவர் பி. எல். சாமி ஆவார்.
Fish Owl. நீர்நிலைக்கு அருகே வாழ்வது. இதுபோல் தான் கின்னரப் புள் வடிக்கப்பட்டது.
ஏராளமான கின்னர மிதுனங்களை மாமல்லபுரம் அருச்சுனன் தபசில் காணலாகும். கின்னரம்
கையில் ஒரு பழைய வீணையை வைத்திருக்கும். ஆந்தையை ஆடெலு எனத் தெலுங்கிலும்,
ஆண்டெக என தெலுங்கு, கன்னடத்திலும் வழங்குகின்றனர். கின்னரத்தின் உருவம் எழுதிய
கொடி ஆண்டலைப் புள் கொடி எனத் திருமுருகாற்றுப்படையில் வருகிறது. இதற்கு
உதாரணமாக, மகாபலிபுரச் சிற்பங்களில் கின்னரத்தைப் பாருங்கள்.  ஆந்தையைக் கின்னரம் என்று எல்லா
நிகண்டுகளும் கூறியுள்ளன.
ஆந்தை மனிதனின் தலையைப் போல தன் தலையைக் கொண்டது. எனவே, ஆண்டலை/ஆடெலு/ஆண்டெக
என்ர பெயர் அமைந்ததாய்க் கொள்ளலாம்.
கடவு/கதவு, கடலி/கதலி (ஊர்ப்பெயர், வாழைவகை), படலை/பதலை (தாளக்கருவி), கடம்பு/கதம்பம்,
யாடவர்/யாதவர் உடும்பு/உதும்பரம் (அத்தி), ... போல, ஆண்டலை > ஆண்டை > ஆந்தை என
ஆயிற்று போலும்.

”பேய் முதலியன பலிகளை நுகராமல் தலை ஆண்மகன் தலையும் உடல் புள்ளின் வடிவமுமாக எழுதிய கொடி என்க.” (நச்சர் உரை, ஆண்டலைப் புள்ளின் கொடி, திருமுருகு). யாழின் குரல் போலச் சில சமயங்களில் உள்ள ஆண்டலையை (= ஆந்தையை), கின்னரர் என்னும் வானவாசிகள் ஆக்கியுள்ளனர். நகர் - பிள்ளையார் கோயிலென்றுமாம். (நச்.) முருகு
என்பது ஓர் அணங்கு. அதன் வழிபாடு பேசப்படுகிறது. கின்னரக் கொடி = ஆண்டலைப் புள்ளின் கொடி பழைய வேதகாலப்
பலிகளை நினைவூட்டும் கொடி என்க.

நீண்ட பலிபீடத்தில் அரிந்து வைத்த
     நெடுங்குஞ்சிச் சிரத்தைத்தன் இனம் என்று எண்ணி
ஆண்டலைப் புள் அருகு அணைந்து பார்க்குமாலோ
     அணைதலும் அச்சிரம் அச்சம் உறுத்துமாலோ - கலிங்கத்துப் பரணி

நா. கணேசன்  
Reply all
Reply to author
Forward
0 new messages