கவியரங்கம்-35

328 views
Skip to first unread message

SUBBAIER RAMASAMI

unread,
Jul 25, 2011, 9:03:34 AM7/25/11
to சந்தவசந்தம்
அடுத்த கவியரங்கம் -35

தலைவர்- கவிஞர் சந்தர் சுப்பிரமணியம்

தொடக்கநாள்- ஆகஸ்ட் 15

தலைப்பு: என்.. ...

என் என்ற சொல்லுக்குப் பின்னால் கவிஞர்கள் அவரவர்களுக்கு விருப்பமான
எழுத்துகளையோ சொல்லையோ சொற்களையோ சேர்த்துக்கொள்ளலாம்

எ.கா- என் கவிதை, என் குழந்தை, என் ஊர், என் தேசம் என்னைப்பற்றி நான்..
என் ஆசை, என்னால் முடியும், என் தலைவன், என் உள்ளம் கவர் கவிஞன், என்
கனவு, . என்ன, என்ன?

என்ன பரிசை இறைவன் கொடுத்தான்?


என்ன செய்வேன்? என்னவளே..

என்னத்தைச் சொல்ல? இத்யாதி இத்யாதி

இலந்தை

கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் பெயர் கொடுக்கவும்


முதல் ஒப்புதல் -இலந்தை

Pas Pasupathy

unread,
Jul 25, 2011, 11:04:51 AM7/25/11
to santhav...@googlegroups.com
இரண்டாம் ஒப்புதல்: பசுபதி

2011/7/25 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--

magudadheeban

unread,
Jul 25, 2011, 11:17:30 AM7/25/11
to santhav...@googlegroups.com
மூன்றாம் ஒப்புதல் மகுடதீபன்

-மகுடதீபன்

2011/7/25 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

Raja.Tyagarajan

unread,
Jul 25, 2011, 12:23:00 PM7/25/11
to santhav...@googlegroups.com
அன்புள்ள இலந்தையார் அவர்களுக்கும்,
35ஆம் பாவரங்கத் தலைவர் பாவலர் சந்தர் சுப்ரமணியம் அவர்களுக்கும்,
இராஜ.தியாகராஜன் வணக்கம்.

இரண்டாம் ஒப்புதல் என்னுடையது. அடியேன் வணக்கத்துடன்

அன்பன்
இராஜ.தியாகராஜன்.

இராஜ.தியாகராஜன்

unread,
Jul 25, 2011, 12:56:16 PM7/25/11
to சந்தவசந்தம்
அன்புடையீர்,
என்னுடைய இந்த முதல் மடல் எனக்கு பாப் மடலில் வந்து சேரவேயில்லை. காரணம்
தெரியவில்லை. எனக்கு முன்னர் இருவர் ஒப்புதல் அளித்த போதிலும், இந்த
மடல் கிறுக்குத்தனத்தால், எனக்கு வரவேண்டிய அவர்கள் மடலும் வரவில்லை.
இங்கே சந்தவசந்தம் வலைதளத்தில் வந்து பார்த்தால் எல்லாம் இருக்கின்றன.
எனவே எனது ஒப்புதலை மூன்றாவதாகக் கொள்ள வேண்டுகிறேன்.

அன்பன்
இராஜ.தியாகராஜன்.

kalam kader

unread,
Jul 25, 2011, 1:06:39 PM7/25/11
to santhav...@googlegroups.com
நான்காம் ஒப்புதல் அடியேன் உடையாதாகுக
 
“கவியன்பன்” கலாம்

2011/7/25 இராஜ.தியாகராஜன் <tyag...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--
”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
அபுதபி(இருப்பிடம்)
 
எனது வலைப்பூத் தோட்டம் : http://kalaamkathir.blogspot.com
 
மின்னஞ்சல் முகவரி: kalam...@gmail.com
                                       shaic...@yahoo.com
அலை பேசி: 00971-50-8351499 

kirikasan

unread,
Jul 25, 2011, 1:33:48 PM7/25/11
to சந்தவசந்தம்
அடியேனும் என்னால் முடிந்தளவு தர முயற்சிக்கிறேன்(சிறிதாக).
என்பெயரையும் சேர்த்துக் கொள்ளுகிறீர்களா?
அன்புடன் கிரிகாசன்


On 25 Jul., 18:06, kalam kader <kalamkad...@gmail.com> wrote:
> நான்காம் ஒப்புதல் அடியேன் உடையாதாகுக
>
> “கவியன்பன்” கலாம்
>

> 2011/7/25 இராஜ.தியாகராஜன் <tyaga...@gmail.com>


>
>
>
>
>
>
>
>
>
> > அன்புடையீர்,
> > என்னுடைய இந்த முதல் மடல் எனக்கு பாப் மடலில் வந்து சேரவேயில்லை. காரணம்
> > தெரியவில்லை.  எனக்கு முன்னர் இருவர் ஒப்புதல் அளித்த போதிலும், இந்த
> > மடல் கிறுக்குத்தனத்தால், எனக்கு வரவேண்டிய அவர்கள் மடலும் வரவில்லை.
> > இங்கே சந்தவசந்தம் வலைதளத்தில் வந்து பார்த்தால் எல்லாம் இருக்கின்றன.
> > எனவே எனது ஒப்புதலை மூன்றாவதாகக் கொள்ள வேண்டுகிறேன்.
> > அன்பன்
> > இராஜ.தியாகராஜன்.
>
> > On Jul 25, 9:23 pm, "Raja.Tyagarajan" <thiaga...@dataone.in> wrote:
> > > அன்புள்ள இலந்தையார் அவர்களுக்கும்,
> > > 35ஆம் பாவரங்கத் தலைவர் பாவலர் சந்தர் சுப்ரமணியம் அவர்களுக்கும்,
> > > இராஜ.தியாகராஜன் வணக்கம்.
>
> > > இரண்டாம் ஒப்புதல் என்னுடையது. அடியேன் வணக்கத்துடன்
>
> > > அன்பன்
> > > இராஜ.தியாகராஜன்.
>
> > --
> >  நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப்
> > பெறுகிறீர்கள்:
> > இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
> > இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
> > santhavasanth...@googlegroups.com.
> > இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
> >http://groups.google.com/group/santhavasantham?hl=ta
>
> --

>  *”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்*(*பிறப்பிடம்*)
> *அபுதபி*(*இருப்பிடம்*)


>
> எனது வலைப்பூத் தோட்டம் :http://kalaamkathir.blogspot.com
>

> மின்னஞ்சல் முகவரி: kalamkad...@gmail.com
>                                        shaickka...@yahoo.com
> அலை பேசி: 00971-50-8351499

Niranjan Bharathi

unread,
Jul 25, 2011, 1:50:18 PM7/25/11
to santhav...@googlegroups.com
கவியரங்கத்தில் நானும் பங்கு கொள்கிறேன்.

2011/7/25 kirikasan <kanaga...@hotmail.com>

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 25, 2011, 1:57:13 PM7/25/11
to santhav...@googlegroups.com
ஒப்புதல் தந்தால் போதுமானது. அதன் வரிசை எண் பின்னால் பயன்படுத்தப்படத் தேவையில்லை.

அரங்கத் தலைவர் 'என்' பெயரையும் சேர்த்துக்கொள்ள வேண்டுகிறேன்.

அனந்த்  

2011/7/25 இராஜ.தியாகராஜன் <tyag...@gmail.com>
--

Chandar Subramanian

unread,
Jul 25, 2011, 9:54:24 PM7/25/11
to santhav...@googlegroups.com
கவியரங்கம் தலைமையேற்க வாய்ப்பளித்த திரு இலைந்தையார் அவர்களுக்கு மிக்க நன்றி. சிறுவனை நடக்க வைத்து மகிழ்வுறும் தாயுள்ளங்களுக்கும் மிக்க நன்றி.

என்னெஞ்சின் இயல்பென்ன? இயற்கை என்ன?
.. என்னென்ன எண்ணங்கள்? எளிதா எண்ண?  
அன்றென்ன? இன்றென்ன? அடுத்த தென்ன?
.. அன்றாடம் அன்பென்ன? அவலம் என்ன?
முன்னென்ன? பின்சென்ற முழுதும் என்ன?
.. முன்னைக்கும் பின்னைக்கும் முடிவென் றென்ன?
என்றைக்கும் எழுங்கேள்வி! என்னுள் எண்ணம்
.. ஏகந்தான் எனும்போதில் எதுதான் என்ன?



2011/7/25 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--
அன்புடன்
சந்தர் சுப்ரமணியன்
www.MovingMoon.com

Narayan Swaminathan

unread,
Jul 26, 2011, 1:28:45 AM7/26/11
to santhav...@googlegroups.com
 
என்னையும்  ‘என்....’கவியரங்கில்  சேர்த்துக் கொள்ளுங்கள்
 
 சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்


 

2011/7/25 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

Kaviyogi Vedham

unread,
Jul 26, 2011, 1:44:28 AM7/26/11
to santhav...@googlegroups.com
அரங்கில் யானும் என்..கூட வருகின்றேன்.சேர்க்கவும்,
 யோகியார்

2011/7/26 Narayan Swaminathan <swaminath...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--
Can YU Pl. SEE MY NEW BloG and comment on the contents?
யோகியார். வேதம்.(Yogiyar vedham).
Thalaivar,
Sidhdhar Babaji YogaSram, 2/682,
 10th cross st,Renga Reddy garden, Neelankarai, Chennai-600115
அனைவரும் வாழ்க வளமுடன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!
சித்தர் ஸ்ரீ லஹரி பாபாஜி யோகாஸ்ரமம்,2/682Renga Reddy Garden நீலாங்கரை,(Opp. Hotchips new HOTEL)-சென்னை-600115(போன் 64565979)-
*****************************
 

thangamani

unread,
Jul 26, 2011, 5:55:44 AM7/26/11
to சந்தவசந்தம்
என் பெயரையும் சேர்த்துக்கொள்ளவும்.

அன்புடன்,
தங்கமணி.

Chandar Subramanian

unread,
Jul 26, 2011, 9:01:49 PM7/26/11
to santhav...@googlegroups.com
கவியரங்கத்தில் கலந்து கொள்ள இதுவரை பெயர் கொடுத்தவர்களின் பட்டியல்:

கவிமாமணி இலந்தையார்
கவிஞர் பசுபதி
கவிஞர் மகுடதீபன்
கவிஞர் இராஜ.தியாகராஜன் 
கவியன்பன் கலாம்
கவிஞர் கிரிகாசன்
கவிஞர் நிரஞ்சன் பாரதி
கவிஞர் அனந்த்  
கவிஞர் புஷ்பா கிறிஸ்ரி
கவிஞர் சுவாமிநாதன் 
கவியோகி வேதம்
முனைவர் க.தமிழமல்லன்
கவிஞர் தங்கமணி

-----------------------------------------

என்னன்னை எந்தந்தை என்றன் வாழ்க்கை
.. என்பொம்மை என்னிட்டம் என்றன் பள்ளி
என்கல்வி என்னாடை என்றன் ஊர்தி
.. என்வேலை என்செல்வம் என்றன் போக்கில்
என்னில்லாள் என்பிள்ளை என்றன் இல்லம்
.. என்பேரன் என்சொந்தம் என்றன் இன்பம்
என்றெல்லாம் எனக்கென்றும் இருக்கும் போதும் 
.. என்மூச்சு எனக்காக என்றும் ஆமோ?

-----------------------------------------

K.R. Kumar

unread,
Jul 27, 2011, 1:24:24 AM7/27/11
to santhav...@googlegroups.com
வழக்கமாகப் பெயர்கொடுக்கும் சிலர் பெயரைக் காணவில்லை.(சிவ சிவா, வரதராஜன்,சிவ சூரி,சௌந்தர் மற்றும் சிலர்.) இவர்களும் பதிந்துகொண்டுவிட்டால் சந்தர் அவர்களுக்கு அழைப்பு விடுக்க அனுகூலமாக இருக்கும்.
 
அடுத்த கவியரங்கத்திற்கு ஆவலுடன் காத்திருக்கும் அன்பன்,
 
குமார்(சிங்கை)

,2011/7/27 Chandar Subramanian <chandarsu...@gmail.com>
--

Chandar Subramanian

unread,
Jul 27, 2011, 10:07:26 PM7/27/11
to santhav...@googlegroups.com
என் உள்நெஞ்சம்!

நெஞ்சுக்குள் தமிழ்பொங்கும் நேரம் எல்லாம்
.. நேர்நிறையாய் வள்ளுவனும் நிறைய சொல்வான்; 
பிஞ்சுக்கை சம்பந்தன் பேசும் போக்கில்
.. பின்வருடத் தமிழென்னில் பிறக்கும் மீண்டும்;
கொஞ்சிச்சொற் கோலமிடும் குமரி ஆண்டாள்
.. குரல்கேட்பேன்; புகழ்கேட்கும்; குனிந்தெ னக்காய்
எஞ்சும்சொல் இவையென்றே இயம்பும் கம்பன்;
.. இவையாவும் இயல்பாகும் என்னுள் நெஞ்சில்! 

kirikasan

unread,
Jul 28, 2011, 11:36:00 AM7/28/11
to சந்தவசந்தம்
இந்தப் பெரியவர்கள் சபையிலே சிறியவனின் குறும்பை மன்னிக்கவும்
இப்படியும் எழுதிப்பார்த்தேன்.இது வெறும் கலகலப்புக்காக. வேறொரு
நோக்கமுமல்ல


என்னமோ தானே என்னிடம் கேட்டார் எம்மனோ என்றுகூற
என்னையே பார்த்து எம்மதுஎன்றார் என்னது என்று சொன்னேன்
என்னை நீவிட்டால் எம்மாத்திரம் பார் என்றிட ஓ என்றலறி
என்னமோ அல்ல எம்மென்னோ ஓடு எமனாகி விடுவேன் என்றேன்

என்ன இது? கீழே!

On 28 Jul., 03:07, Chandar Subramanian <chandarsubraman...@gmail.com>
wrote:
> *என் உள்நெஞ்சம்!*

kirikasan

unread,
Jul 28, 2011, 11:40:58 AM7/28/11
to சந்தவசந்தம்
MNO என்றெழுதிய துண்டினைக் காட்டி

NMO தானே என்னிடம் கேட்டார் MNO என்றுகூற
N ஐயே பார்த்து Mஅதுஎன்றார் Nஅது என்று சொன்னேன்
N ஐ நீவிட்டால் M மாத்திரம் பார் என்றிட O என்றலறி
NMO அல்ல MNO ஓடு எமனாகி விடுவேன் என்றேன்

கிரிகாசன்னை மன்னிக்க!

Chandar Subramanian

unread,
Jul 28, 2011, 9:57:15 PM7/28/11
to santhav...@googlegroups.com
என் கண்கள்!

இருட்டொளியென் றிவையிடையே எழுந்த வாயில்!
.. ஏற்கும்பின் அசைபோட எருதின் வாயாய்!
பருப்பொருளை உருமாற்றிப் பருகும் அன்னம்!
.. பார்க்குமெலாம் பதுக்குகின்ற பார்வைக் கள்வன்!
உரிப்பொருளை உளமேற்றும் உணர்வுக் கொல்லன்!  
.. ஓயாது துடிக்கின்ற உண்மை ஈரல்!
நெருப்பதனை விழுங்குகின்ற நீர்ஆர் ஆழி!
.. நில்லாத என்கண்கள் நிசத்தின் வேரே!

kirikasan

unread,
Jul 29, 2011, 1:05:47 AM7/29/11
to சந்தவசந்தம்
`என் ஆசை’ புது உலகம்

இருட்டில்லா உலகத்தில் எரியும் வெய்யோன்
எப்போது மிளிர்கின்ற இளமை மீண்டும்
கருப்பில்லாப் புவி,பச்சை பசுஞ்சோலைகள்
காற்றோடு மலர்வாசம், குருவிச்சத்தம்
நெருப்பில்லா உணவோடு நேசம்மட்டும்
நிலைக்கின்ற நெஞ்சங்கள், நிகழ்காலத்தின்
உருக்கொல்லும் மன்னர்கள் அரசே அற்ற
ஒன்றாகிக் களிகின்ற மாந்தர்கூட்டம்

Kaviyogi Vedham

unread,
Jul 29, 2011, 3:07:11 AM7/29/11
to santhav...@googlegroups.com
அய்யய்யோ கிரிகாசரே..
 இன்று காலையில்தான் அப்பாடா இப்போதுதான் தலைவலி இல்லை என்று களித்திருந்தேன்....எமனோ என்று அதுவந்து படுத்திற்றே!..தேவையா ஆங்கிலத்தோடு
தமிழ்ச்சொல் கலந்து விளையாடல்.? நகு நகு என்று நகைக்க மனம் வரவிலையே!
யோகியார்

2011/7/28 kirikasan <kanaga...@hotmail.com>

kirikasan

unread,
Jul 29, 2011, 3:21:08 AM7/29/11
to சந்தவசந்தம்
ஐயா,
ஏற்கனவே மன்னிப்பு கேட்டுவிட்டேன். இவன் இப்படித்தான். தங்கள் மனதை
வருத்தமுறச் செய்துவிட்டேன் என்றால் மன்னிக்கவும். என் பிதற்றல்களை
உடன் களைந்து கொள்ளும் உரிமை தங்களுக்குண்டு

அன்புடன் கிரிகாசன்


On 29 Jul., 08:07, Kaviyogi Vedham <kaviyogi.ved...@gmail.com> wrote:
> அய்யய்யோ கிரிகாசரே..
>  இன்று காலையில்தான் அப்பாடா இப்போதுதான் தலைவலி இல்லை என்று
> களித்திருந்தேன்....எமனோ என்று அதுவந்து படுத்திற்றே!..தேவையா ஆங்கிலத்தோடு
> தமிழ்ச்சொல் கலந்து விளையாடல்.? நகு நகு என்று நகைக்க மனம் வரவிலையே!
> யோகியார்
>

> 2011/7/28 kirikasan <kanagaling...@hotmail.com>

Kaviyogi Vedham

unread,
Jul 29, 2011, 3:25:28 AM7/29/11
to santhav...@googlegroups.com
பரவாயில்லை..சும்மா ஒரு சிறு அறிவுரை அது.விட்டுவிடுங்கள்.
அதுபோகட்டும் உங்க காய்ச்சல் இப்போ தேவலையாகிவிட்டதா?
யோகியார்

2011/7/29 kirikasan <kanaga...@hotmail.com>

kirikasan

unread,
Jul 29, 2011, 3:37:41 AM7/29/11
to சந்தவசந்தம்

பூரண சுகம் ஐயா! தங்கள் அன்புக்கு நன்றி!

முதலே ஒருகவி எழுதினேன் ஐயா! அதை ஈழம் பற்றிய கவியில்
போடுகிறேன். அதுதான் நான்!


அன்புடன் கிரிகாசன்

On 29 Jul., 08:25, Kaviyogi Vedham <kaviyogi.ved...@gmail.com> wrote:
> பரவாயில்லை..சும்மா ஒரு சிறு அறிவுரை அது.விட்டுவிடுங்கள்.
> அதுபோகட்டும் உங்க காய்ச்சல் இப்போ தேவலையாகிவிட்டதா?
> யோகியார்
>

> 2011/7/29 kirikasan <kanagaling...@hotmail.com>

Siva Siva

unread,
Jul 29, 2011, 7:46:08 AM7/29/11
to santhav...@googlegroups.com
/ நெருப்பில்லா உணவோடு /

அட! 'அடாத உணவை விடாது உண்போம்' என்ற கொள்கையோ?  :)

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2011/7/29 kirikasan <kanaga...@hotmail.com>

   `என் ஆசை’ புது உலகம்

இருட்டில்லா உலகத்தில் எரியும் வெய்யோன்
 எப்போது மிளிர்கின்ற இளமை மீண்டும்
கருப்பில்லாப் புவி,பச்சை பசுஞ்சோலைகள்
 காற்றோடு மலர்வாசம், குருவிச்சத்தம்
நெருப்பில்லா உணவோடு நேசம்மட்டும்
 நிலைக்கின்ற நெஞ்சங்கள், நிகழ்காலத்தின்
உருக்கொல்லும் மன்னர்கள் அரசே அற்ற
  ஒன்றாகிக் களிகின்ற மாந்தர்கூட்டம்



--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

kirikasan

unread,
Jul 29, 2011, 7:57:42 AM7/29/11
to சந்தவசந்தம்
நன்றிகள்!

இயற்கை உணவு. முனிவர்கள் காட்டில் உண்பார்களாமே பழங்கள் போன்றன.
முக்கியமாக மாமிசம் தவிர்த்த உணவு.

அடுத்தது இரவில்லாத பகல் மட்டும். குற்றங்களுக்கு துணிவூட்டுவது இரவு.
இது எனது சிறிய மூளைக்கு எட்டியது இவைதாம்.

கிரிகாசன்


On 29 Jul., 12:46, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> / நெருப்பில்லா உணவோடு /
>
> அட! 'அடாத உணவை விடாது உண்போம்' என்ற கொள்கையோ?  :)
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2011/7/29 kirikasan <kanagaling...@hotmail.com>


>
> >    `என் ஆசை’ புது உலகம்
>
> > இருட்டில்லா உலகத்தில் எரியும் வெய்யோன்
> >  எப்போது மிளிர்கின்ற இளமை மீண்டும்
> > கருப்பில்லாப் புவி,பச்சை பசுஞ்சோலைகள்
> >  காற்றோடு மலர்வாசம், குருவிச்சத்தம்
> > நெருப்பில்லா உணவோடு நேசம்மட்டும்
> >  நிலைக்கின்ற நெஞ்சங்கள், நிகழ்காலத்தின்
> > உருக்கொல்லும் மன்னர்கள் அரசே அற்ற
> >   ஒன்றாகிக் களிகின்ற மாந்தர்கூட்டம்
>

> --http://nayanmars.netne.net/

OAGAI NATARAJAN

unread,
Jul 29, 2011, 12:46:05 PM7/29/11
to santhav...@googlegroups.com
என்னென்னின் எண்ணிக்கை என்னெஞ்சும் எண்ணயெண்ண
என்னென்னில் இல்லாதும் என்?
 
என் பெயரையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
 
ஓகை நடராஜன்.

2011/7/27 Chandar Subramanian <chandarsu...@gmail.com>
--

Chandar Subramanian

unread,
Jul 29, 2011, 9:55:39 PM7/29/11
to santhav...@googlegroups.com
கவியரங்கத்தில் கலந்து கொள்ள இதுவரை பெயர் கொடுத்தவர்களின் பட்டியல்:

கவிமாமணி இலந்தையார்
கவிஞர் பசுபதி
கவிஞர் மகுடதீபன்
கவிஞர் இராஜ.தியாகராஜன் 
கவியன்பன் கலாம்
கவிஞர் கிரிகாசன்
கவிஞர் நிரஞ்சன் பாரதி
கவிஞர் அனந்த்  
கவிஞர் புஷ்பா கிறிஸ்ரி
கவிஞர் சுவாமிநாதன் 
கவியோகி வேதம்
முனைவர் க.தமிழமல்லன்
கவிஞர் தங்கமணி
கவிஞர் ஓகை நடராஜன்

-------------------


கவிதை

சொற்களுக்குள் நடக்கின்ற சுயம்வ ரந்தான்!
.. தூண்டிலதில் நகைமீன்கள் சொற்கள் ஆகும்!
கற்பனைக்குள் சொல்நுழைந்து கவியாய்க் கோக்கும்!
.. காதுக்கும் நாகொடுக்கும், கருத்தே தேனாய்!
நிற்பதென்றே அறியாத நீள்சொல் ஆட்டம்!
.. நினைவுகளின் காலத்தை நிகழ்வாய் மாற்றும்!
அற்புதத்தை அடிகளுக்குள் அடைக்கும் மாயம்!
.. அதையீவோர் கவிஞரெனின் அடியேன் ஏனோ?

Chandar Subramanian

unread,
Jul 30, 2011, 10:47:12 PM7/30/11
to santhav...@googlegroups.com
ஆடியென்னே? 

பொங்குநதி ஆடியென்னே? புனலாய் ஆழி
.. புகுகின்ற வரையன்றோ பொய்யாய் ஆட்டம்?
எங்குமொளி வீசியென்னே? இமைகள் மூடா(து)
.. இருக்கின்ற வரையன்றோ இருளைப் போக்கும்?
தங்குவளம் குவிந்தென்னே? சரியாய் ஊனும் 
.. சாகின்ற வரையன்றோ தடுக்கும் மூச்சை?
அங்கமுடல் வளர்ந்தென்னே? ஐயன் பாதம்
.. அடைகின்ற வரையன்றோ அதன்கண் பாசம்?

Kaviyogi Vedham

unread,
Jul 31, 2011, 2:46:38 AM7/31/11
to santhav...@googlegroups.com
ஆகா! அண்ணாச்சி கவியரங்கத் தலமை ஆகுமுன்னரே இந்தப்போடு போட்றாரே!
 முத்தாய்ப்பு வரிகளாகவே அவுத்துவிட்ராரே!பலே பல்லே! அவரது முயற்சி வாழ்க வெல்க!
 யோகியார்

2011/7/31 Chandar Subramanian <chandarsu...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

துரை.ந.உ

unread,
Jul 31, 2011, 3:09:29 AM7/31/11
to santhav...@googlegroups.com
ஐயா...என்னையும் சேர்த்துக்கோங்க ஐயா ....EMO (134).gif

2011/7/30 Chandar Subramanian <chandarsu...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--
என்றும் அன்புடன்  --  துரை --
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
படம்         : ‘எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.com/
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்:'தமிழ்த்தென்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral

EMO (134).gif

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 31, 2011, 11:05:45 AM7/31/11
to santhav...@googlegroups.com
அருமை!!

அனந்த்

On 7/30/11, Chandar Subramanian <chandarsu...@gmail.com> wrote:
> *ஆடியென்னே? *

Siva Siva

unread,
Jul 31, 2011, 7:02:08 PM7/31/11
to santhav...@googlegroups.com
/எங்குமொளி வீசியென்னே? இமைகள் மூடா(து)
.. இருக்கின்ற வரையன்றோ இருளைப் போக்கும்?  /

மிக உண்மை! உள்ளம் மூடியிருந்தால் என்னே தெரியும்?

2011/7/30 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

SUBBAIER RAMASAMI

unread,
Jul 31, 2011, 9:14:11 PM7/31/11
to santhav...@googlegroups.com
என்னயென்ன என்னவென ஏராள மாய்ப்பூக்கும்
மின்னல் கவிதை விளக்கு.

இலந்தை


On 8/1/11, Siva Siva <naya...@gmail.com> wrote:
> /எங்குமொளி வீசியென்னே? இமைகள் மூடா(து)
> .. இருக்கின்ற வரையன்றோ இருளைப் போக்கும்? /
>
> மிக உண்மை! உள்ளம் மூடியிருந்தால் என்னே தெரியும்?
>
> 2011/7/30 Chandar Subramanian <chandarsu...@gmail.com>
>

>> *ஆடியென்னே? *
>>

>> பொங்குநதி ஆடியென்னே? புனலாய் ஆழி
>> .. புகுகின்ற வரையன்றோ பொய்யாய் ஆட்டம்?
>> எங்குமொளி வீசியென்னே? இமைகள் மூடா(து)
>> .. இருக்கின்ற வரையன்றோ இருளைப் போக்கும்?
>> தங்குவளம் குவிந்தென்னே? சரியாய் ஊனும்
>> .. சாகின்ற வரையன்றோ தடுக்கும் மூச்சை?
>> அங்கமுடல் வளர்ந்தென்னே? ஐயன் பாதம்
>> .. அடைகின்ற வரையன்றோ அதன்கண் பாசம்?
>>
>>
>>
>

Chandar Subramanian

unread,
Jul 31, 2011, 9:43:27 PM7/31/11
to santhav...@googlegroups.com
வாழ்த்திக் கருத்திட்ட திருவாளர்கள் கவியோகி, வேட்டையார், சிவ சிவா, இலந்தையார் ஆகியோர்க்கு எனது நன்றி.


2011/8/1 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>

Chandar Subramanian

unread,
Jul 31, 2011, 9:45:22 PM7/31/11
to santhav...@googlegroups.com
கவியரங்கத்தில் கலந்து கொள்ள இதுவரை பெயர் கொடுத்தவர்களின் பட்டியல்:

கவிமாமணி இலந்தையார்
கவிஞர் பசுபதி
கவிஞர் மகுடதீபன்
கவிஞர் இராஜ.தியாகராஜன் 
கவியன்பன் கலாம்
கவிஞர் கிரிகாசன்
கவிஞர் நிரஞ்சன் பாரதி
கவிஞர் அனந்த்  
கவிஞர் புஷ்பா கிறிஸ்ரி
கவிஞர் சுவாமிநாதன் 
கவியோகி வேதம்
முனைவர் க.தமிழமல்லன்
கவிஞர் தங்கமணி
கவிஞர் ஓகை நடராஜன்
கவிஞர் துரை

------------------------------------------

என்று?

என்றுள்ளம் விழித்தறிவால் ஏற்றம் கொள்ளும்?
.. என்னுள்ளார் இருளனைத்தும் என்று செல்லும்?
என்றுள்ளம் களித்தன்பின் இனிமை உள்ளும்? 
.. என்னுள்ளார் அழுக்கனைத்தும் என்று செல்லும்?
என்றுள்ளம் பகுத்துண்மை ஏதென் றாயும்?
.. என்னுள்ளார் பொய்யனைத்தும் என்று மாயும்?
அன்றுள்ளம் அவனுறையும் உள்ளம் ஆகும்;
.. அதுவரையில் 'நானெ'ன்னும் அகந்தை ஒன்றே!

-------------------------------------------

Chandar Subramanian

unread,
Aug 1, 2011, 9:57:40 PM8/1/11
to santhav...@googlegroups.com
என்பிறப்பு

தான்பெற்ற முக்குறையால் தானாய் வாழும்
.. சக்தியெலாம் இழந்திருந்தும் ஹெலன் கெல்லர்
ஊன்பெற்ற காரணத்தால் உலகில் வெற்றாய்  
.. உழல்கின்ற நிலையுற்றும் உணர்வால் ஓங்கி
ஏன்பெற்றேன் இப்பிறப்பை என்றே எண்ணும்
.. இயல்பழித்துச் சாதனையின் இமயம் கண்டார்;
ஏன்பெற்றேன் இப்பிறப்பை என்றே எண்ணும்
.. என்பிறப்பும் ஏற்றமதை ஏகும் என்றோ? 

Girija Varadharajan

unread,
Aug 2, 2011, 1:39:57 AM8/2/11
to santhav...@googlegroups.com
என் என்ற தலைப்பில் இடம் பெறும் கவியரங்கத்தில் என் பெயரையும் சேர்த்துக்கொள்ளுங்கள் .

(சேராவிட்டால் உதைப்பேன் என்று குமார் பயமுறுத்துகிறார். )
 

வரத ராஜன் . அ. கி 

2011/8/2 Chandar Subramanian <chandarsu...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:

Siva Siva

unread,
Aug 2, 2011, 7:33:27 AM8/2/11
to santhav...@googlegroups.com
நல்ல நண்பர்!

2011/8/2 Girija Varadharajan <girijavar...@gmail.com>

Chandar Subramanian

unread,
Aug 2, 2011, 8:58:16 PM8/2/11
to santhav...@googlegroups.com
இடிக்கும் கேளிர்! 

இன்னும் மூவரை இடித்துள்ளார் என்று நினைக்கிறேன்! இடிபட்ட அந்த  நெஞ்சங்களிடமிருந்தும் மடல் வருமா?



2011/8/2 Siva Siva <naya...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Chandar Subramanian

unread,
Aug 2, 2011, 9:00:40 PM8/2/11
to santhav...@googlegroups.com
கவியரங்கத்தில் கலந்து கொள்ள இதுவரை பெயர் கொடுத்தவர்களின் பட்டியல்:

கவிமாமணி இலந்தையார்
கவிஞர் பசுபதி
கவிஞர் மகுடதீபன்
கவிஞர் இராஜ.தியாகராஜன் 
கவியன்பன் கலாம்
கவிஞர் கிரிகாசன்
கவிஞர் நிரஞ்சன் பாரதி
கவிஞர் அனந்த்  
கவிஞர் புஷ்பா கிறிஸ்ரி
கவிஞர் சுவாமிநாதன் 
கவியோகி வேதம்
முனைவர் க.தமிழமல்லன்
கவிஞர் தங்கமணி
கவிஞர் ஓகை நடராஜன்
கவிஞர் துரை
கவிஞர் அ. கி. வரதராஜன்

----------------------------------------------------

என்றைக்கும் இல்லாமல்...

என்றைக்கும் இல்லாதோர் இன்பம் நெஞ்சில்,
.. இருப்புள்ள இனிப்பெல்லாம் இணைந்தாற் போலே!
மென்றுள்ளே விழுங்கிவிட முடியாப் பார்வை
.. மேலோங்கி எனைவிழுங்க மோக முற்றேன்!
'இன்றென்ன? இன்றென்ன?' எண்ணும் போதே
.. இமையாலே எனைநெறுக்கி ஏதோ செய்தாள்!
ஒன்றுக்கும் ஆகாமல் உடைந்த போதும்
.. உள்ளுக்குள் உயிர்மயங்கும் உணர்வைப் பெற்றேன்!

Siva Siva

unread,
Aug 2, 2011, 9:09:36 PM8/2/11
to santhav...@googlegroups.com
/ என்றைக்கும் இல்லாதோர் இன்பம் நெஞ்சில், /
'இலாததோர்' என்று சொல்லவந்தீர்களோ?
(http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=8&Song_idField=81070&padhi=07&startLimit=17&limitPerPage=1&sortBy=&ampsortOrder=DESC )

/ நெறுக்கி /
நெருக்கி?

2011/8/2 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

Chandar Subramanian

unread,
Aug 2, 2011, 9:14:59 PM8/2/11
to santhav...@googlegroups.com
ஆம். நீங்கள் குறிப்பிட்டது சரியே. நன்றி.


2011/8/3 Siva Siva <naya...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Siva Siva

unread,
Aug 2, 2011, 9:38:45 PM8/2/11
to santhav...@googlegroups.com
என் பேரையும் சேர்த்துக்கொள்க!


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2011/8/2 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

Chandar Subramanian

unread,
Aug 3, 2011, 8:56:20 PM8/3/11
to santhav...@googlegroups.com
கவியரங்கத்தில் கலந்து கொள்ள இதுவரை பெயர் கொடுத்தவர்களின் பட்டியல்:

கவிமாமணி இலந்தையார்
கவிஞர் பசுபதி
கவிஞர் மகுடதீபன்
கவிஞர் இராஜ.தியாகராஜன் 
கவியன்பன் கலாம்
கவிஞர் கிரிகாசன்
கவிஞர் நிரஞ்சன் பாரதி
கவிஞர் அனந்த்  
கவிஞர் புஷ்பா கிறிஸ்ரி
கவிஞர் சுவாமிநாதன் 
கவியோகி வேதம்
முனைவர் க.தமிழமல்லன்
கவிஞர் தங்கமணி
கவிஞர் ஓகை நடராஜன்
கவிஞர் துரை
கவிஞர் அ. கி. வரதராஜன்
கவிஞர் சிவசிவா

==========================

என்னென்ன எண்ணங்கள்...
 
என்னென்ன எண்ணங்கள் இதயத் துக்குள்?
.. எக்கணமும் புதுப்புதிதாய் ஏதோ சேர்க்கும்; 
முன்னென்ன தொடர்பென்ன முடிவாய் என்ன?
.. முழுவதையும் தன்னுள்ளே முடிந்து வைக்கும்;
தன்சின்ன வெளிக்குள்ளே சாகும் மட்டும்
.. தான்சேர்த்த நினைவெல்லாம் சேர்த்து நோக்கின்
முன்நிற்கும் அண்டத்தின் முழுமை கூட
.. முத்தளவே! எண்ணத்துள் முடங்கும் யாவும்!

==========================

SuganthiVenkatesh

unread,
Aug 3, 2011, 11:07:21 PM8/3/11
to சந்தவசந்தம்
dear all,
சுகந்தி வெங்கடேஷ்
 இது தான் என்னுடைய முதல் முயற்சி
விதி முறைகளைப் பற்றி எங்கே படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்?
On Jul 25, 9:03 am, SUBBAIER RAMASAMI <eland...@gmail.com> wrote:
> அடுத்த கவியரங்கம் -35
>
> தலைவர்- கவிஞர் சந்தர் சுப்பிரமணியம்
>
> தொடக்கநாள்- ஆகஸ்ட் 15
>
> தலைப்பு: என்.. ...
>
> என் என்ற சொல்லுக்குப் பின்னால் கவிஞர்கள் அவரவர்களுக்கு விருப்பமான
> எழுத்துகளையோ சொல்லையோ சொற்களையோ  சேர்த்துக்கொள்ளலாம்
>
> எ.கா- என் கவிதை, என் குழந்தை, என் ஊர், என் தேசம் என்னைப்பற்றி நான்..
> என் ஆசை, என்னால் முடியும், என் தலைவன், என் உள்ளம் கவர் கவிஞன், என்
> கனவு,  . என்ன, என்ன?
>
> என்ன பரிசை இறைவன் கொடுத்தான்?
>
> என்ன செய்வேன்?   என்னவளே..
>
> என்னத்தைச் சொல்ல? இத்யாதி இத்யாதி
>
> இலந்தை
>
> கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் பெயர் கொடுக்கவும்
>
> முதல் ஒப்புதல் -இலந்தை

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 4, 2011, 1:52:39 PM8/4/11
to santhav...@googlegroups.com
விதிகளின் தொகுப்பை இங்கே காணலாம்:

https://mail.google.com/mail/?zx=yzy815dfhrhq&shva=1#search/kaviyarangam+-34/13003c74ebbd5c7a

உங்கள் முதல் முயற்சி வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்,

அனந்த்

2011/8/3 SuganthiVenkatesh <vkn...@gmail.com>
--

SuganthiVenkatesh

unread,
Aug 4, 2011, 3:28:33 PM8/4/11
to சந்தவசந்தம்
மன்னிக்கவும் என்னால் எஅதையும் பார்க்க முடியவில்லையே?

On Aug 4, 1:52 pm, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
> விதிகளின் தொகுப்பை இங்கே காணலாம்:
>

> https://mail.google.com/mail/?zx=yzy815dfhrhq&shva=1#search/kaviyaran...

Siva Siva

unread,
Aug 4, 2011, 4:12:33 PM8/4/11
to santhav...@googlegroups.com
Please try this link:
http://groups.google.com/group/santhavasantham/browse_thread/thread/6246696103cd9b60/670823ba54953c9e?hl=en#670823ba54953c9e


2011/8/4 SuganthiVenkatesh <vkn...@gmail.com>

மன்னிக்கவும் என்னால் எஅதையும் பார்க்க முடியவில்லையே?

On Aug 4, 1:52 pm, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
> விதிகளின் தொகுப்பை இங்கே காணலாம்:
>
> https://mail.google.com/mail/?zx=yzy815dfhrhq&shva=1#search/kaviyaran...
>
> உங்கள் முதல் முயற்சி வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்,
>
> அனந்த்
>
> 2011/8/3 SuganthiVenkatesh <vkn...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > dear all,
> > சுகந்தி வெங்கடேஷ்
> >  இது தான் என்னுடைய முதல் முயற்சி
> > விதி முறைகளைப் பற்றி எங்கே படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்?
>
> > On Jul 25, 9:03 am, SUBBAIER RAMASAMI <eland...@gmail.com> wrote:
> > > அடுத்த கவியரங்கம் -35
>
> > > தலைவர்- கவிஞர் சந்தர் சுப்பிரமணியம்
>
> > > தொடக்கநாள்- ஆகஸ்ட் 15
>
> > > தலைப்பு: என்.. ...
>

--

வித்யாசாகர்

unread,
Aug 4, 2011, 4:16:38 PM8/4/11
to santhav...@googlegroups.com
ன்'என்று ஏதுமிலாப் போதும் உலகை யெனதென்றே
எண்ணி வாழுமென் எண்ணம்நிறை யுறவுகள்
கூடுமிக் கவியரங்கின் ஓரம் நின்று கைதட்டி
கூறுமிவ் வாழ்த்தினை ஏற்குமோ இம் மாமன்றம்???

அனைவருக்குமென் மிக்க வாழ்த்துக்களும் வணக்கமும் அன்பும்!!

வித்யாசாகர்


2011/8/4 SuganthiVenkatesh <vkn...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--
வித்யாசாகர்
------------------------------------------------------------------------
வலைதளம்: www.vidhyasaagar.com/about/
தொலைபேசி எண்: +965 67077302, +919790855594
விலாசம்:
11, சூர்யா தோட்டம், குதிரை குத்தி தாழை
மாதவரம் பால்பண்ணை, சென்னை, தமிழ்நாடு - 51
இயற்கையை காப்போம்; இயற்கை நம்மைக் காக்கும்!!

Suganthi

unread,
Aug 4, 2011, 7:55:06 PM8/4/11
to santhav...@googlegroups.com, சந்தவசந்தம்
அனைவருக்கும் மிக்க நன்றி
கவியரங்கத் தலைவருக்கு மடல் அனுப்பி விட்டேன்.
SuganthiVenkatesh

Taking Tamil to the Next Generation

http//:www.tamilunltd.com


Sent from my iPhone

Chandar Subramanian

unread,
Aug 4, 2011, 8:50:57 PM8/4/11
to santhav...@googlegroups.com
விதிகளின் தொகுப்பு குறித்த இழையை இங்கு இட்ட திரு அனந்த அவர்களுக்கு மிக்க நன்றி.

2011/8/4 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Chandar Subramanian

unread,
Aug 4, 2011, 8:52:48 PM8/4/11
to santhav...@googlegroups.com
வெறும் கைத்தட்டல் மட்டும் ஏனோ? விருப்பமெனின் கலந்து கொள்ளலாம்.



2011/8/5 வித்யாசாகர் <vidhyas...@gmail.com>



--

Chandar Subramanian

unread,
Aug 4, 2011, 8:54:07 PM8/4/11
to santhav...@googlegroups.com
கவியரங்கத்தில் கலந்து கொள்ள இதுவரை பெயர் கொடுத்தவர்களின் பட்டியல்:

கவிமாமணி இலந்தையார்
கவிஞர் பசுபதி
கவிஞர் மகுடதீபன்
கவிஞர் இராஜ.தியாகராஜன் 
கவியன்பன் கலாம்
கவிஞர் கிரிகாசன்
கவிஞர் நிரஞ்சன் பாரதி
கவிஞர் அனந்த்  
கவிஞர் புஷ்பா கிறிஸ்ரி
கவிஞர் சுவாமிநாதன் 
கவியோகி வேதம்
முனைவர் க.தமிழமல்லன்
கவிஞர் தங்கமணி
கவிஞர் ஓகை நடராஜன்
கவிஞர் துரை
கவிஞர் அ. கி. வரதராஜன்
கவிஞர் சிவசிவா
கவிஞர் சுகந்தி வெங்கடேஷ்

==========================

என் பாட்டு

ஜல்லென்னும் சலங்கையொலி சொல்லாய் மாறும்
.. ஜதிக்குள்ளே என்னெண்ணம் சரசம் ஆடும்;
சொல்லொன்றில் அவள்நடத்தும் அபிநயத்தால்
.. தோற்றோடும் சொல்பொருளைத் தொலைத்து நிற்கும்; 
தில்லானா நடத்துங்கால் தேடுங் கண்கள்
.. திருவண்ணப் பாடலையும் திருத்தப் பார்க்கும்;
நில்லாது காலிரண்டும் நிகழ்த்தும் ஆட்டம்
.. நிற்கின்ற நேரமெலாம் நிஜமாய் மௌனம்!


==========================

Kaviyogi Vedham

unread,
Aug 5, 2011, 12:31:32 AM8/5/11
to santhav...@googlegroups.com
தில்லானா நடத்துங்கால் தேடுங் கண்கள்
.. திருவண்ணப் பாடலையும் திருத்தப் பார்க்கும்;
நில்லாது காலிரண்டும் நிகழ்த்தும் ஆட்டம்
.. நிற்கின்ற நேரமெலாம் நிஜமாய் மௌனம்!”--
 
 
 அட்டகாசமான கருத்து வரிகள். ஜமாய் நீ,
 யோகியார்

Lalitha & Suryanarayanan

unread,
Aug 5, 2011, 9:19:51 AM8/5/11
to santhav...@googlegroups.com
என்  பேரையும் சேர்த்துக் கொள்க.

சிவ.சூரி


2011/8/5 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

Raja.Tyagarajan

unread,
Aug 5, 2011, 11:03:09 AM8/5/11
to santhav...@googlegroups.com
அன்புள்ள கவிஞர் வித்யாசாகர்,
இராஜ.தியாகராஜனின் வணக்கம்.
 
கவிஞரே!  கவியரங்கில் நீங்களும் பங்கு பற்ற வேண்டுமென்ற அவாவில் உங்களுக்கோர் அழைப்பு,  கவிதை வடிவில்!
 
கல்வி யெனுங்கட லுன்றன்  பெயரினில் கண்டவனே!
முல்லை மணமனை  முத்துக் கவிபுனை   முன்னவனே!
வெள்ளை யதனுயர் அன்புக் கரத்துடன் வித்தகர்கள்;
எல்லை எதுவென இங்கே  உரைத்திட  ஏற்றிடுவாய்!
   
புள்ளி யிடவரும் கோல மெனுமெழி லோவியமாய்,
அள்ளித் தருந்தமி ழாற்ற லுடன்பலர் காவியமாய்,
தெள்ள முதச்சுவை பொங்க நறுங்கவி செய்திடுவார்;
பிள்ளைத் தமிழென மன்றத் தலைவரும் பெய்திடுவார்;
 
மின்னல் புதுக்கவி நெய்து புகழ்மிக வென்றவனே!
நின்று கரவொலி செய்து சுவைப்பது மேலெனினும்,
உன்னில் நிறைந்துனை என்று முயர்த்திடும் ஒண்டமிழில்
உன்றன் கவியதை மன்றில் இடுமென வேண்டுவனே!
 
அன்பன்
இராஜ.தியாகராஜன்.
vidya1.mp3

வித்யாசாகர்

unread,
Aug 5, 2011, 2:39:12 PM8/5/11
to santhav...@googlegroups.com
ன்னன்பு சகோதரருக்கும், சந்தவசந்தத்திற்கும், மேன்மை மிகு கவியரங்கத் தலைமைக்குமென் சிரம் தாழ்ந்த வணக்கம். நாலுபேர் கூடியுள்ள சபையில் நாமும் நின்று பேசும் துணிவிருக்கோ என்னவோ இம்மண்ணின் மீது பற்றும் நம் தமிழின் மீது அசரா நம்பிக்கையும் நிறைந்திருக்கிறது சகோதரர். கேட்டோருக்கு எழுதிக் கொடுத்தும், அழைத்தோரின் முன் சென்று பேசியும், செய்வதை திருந்தச் செய்யும் எண்ணமுமே இத்தனை புத்தகத்திற்கான காரணமென்று நம்புகிறேன் என்றாலும், நீங்கள் பேசும் தமிழ் நாவில் இனிக்கும் தமிழ், கேட்போருள்ளம் உருக வைக்கும் தமிழ்.

//என்னென்ன எண்ணங்கள் இதயத் துக்குள்?
.. எக்கணமும் புதுப்புதிதாய் ஏதோ சேர்க்கும்; 
முன்னென்ன தொடர்பென்ன முடிவாய் என்ன?
.. முழுவதையும் தன்னுள்ளே முடிந்து வைக்கும்;
தன்சின்ன வெளிக்குள்ளே சாகும் மட்டும்
.. தான்சேர்த்த நினைவெல்லாம் சேர்த்து நோக்கின்
முன்நிற்கும் அண்டத்தின் முழுமை கூட
.. முத்தளவே! எண்ணத்துள் முடங்கும் யாவும்// எழ இயலாதவனைக் கூட எழுந்து நிற்கவைக்கும் வரிகள்.

//ஜல்லென்னும் சலங்கையொலி சொல்லாய் மாறும்
.. ஜதிக்குள்ளே என்னெண்ணம் சரசம் ஆடும்;
சொல்லொன்றில் அவள்நடத்தும் அபிநயத்தால்
.. தோற்றோடும் சொல்பொருளைத் தொலைத்து நிற்கும்; 
தில்லானா நடத்துங்கால் தேடுங் கண்கள்
.. திருவண்ணப் பாடலையும் திருத்தப் பார்க்கும்;
நில்லாது காலிரண்டும் நிகழ்த்தும் ஆட்டம்
.. நிற்கின்ற நேரமெலாம் நிஜமாய் மௌனம்// இதை படித்தபின் வார்த்தைகளை ஜீரணிக்கவே மனமில்லை. புரியாதவனைப் போல மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்தேன். படிக்க படிக்க இனிக்கிறது தமிழ்.

எனக்குமிச் சான்றோர் முன்னிலையில் ஒரு மோதிரக் குட்டுவாங்கியேனும் எனை சீர்செய்துக் கொள்ளும் ஆசையுண்டு. இருப்பினும், ஒரு மொழி இத்தனை அமுதாய் சொட்டுமிடத்தில் என் உரைநடை எத்தனை தூரம் தாண்டுமோ தெரியவில்லை. என்றாலும் தங்களின் இத்தனை சிரத்தையெடுத்து விடுத்த அக்கறைமிகு அழைப்பை மறுக்க இயலாதவனாகவும், கவியரங்க தலைமையின் கட்டளையை ஏற்றவனாகவும்  கவியரங்க ராஜபாட்டையின்' ஓரம் நின்று தட்டியக் கைகளோடு, யானும் எழுந்து நடக்க முயற்சி செய்கிறேன். உங்களைப் போன்றோரனைவரின் அன்புள்ளம் கொடுக்கும் ஆசியும் தமிழாளின் அருளும் எனக்கும்  துணை நிற்கட்டும்!

மிக்க நன்றிகளும் வணக்கத்துடனும்..,


வித்யாசாகர்

.

2011/8/5 Raja.Tyagarajan <thia...@dataone.in>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--
வித்யாசாகர்

kalam kader

unread,
Aug 5, 2011, 3:03:12 PM8/5/11
to santhav...@googlegroups.com
வித்தை சாகரம் வீரமாய்ப் பாடவே
வித்தை ஊன்றிய வேந்தராம் பாவலர்
மொத்தப் பேறினை மேய்ந்தன ராதலால்
மொத்தம் சாற்றுவோம் மோகன ராகமே
 


 
2011/8/5 வித்யாசாகர் <vidhyas...@gmail.com>



--
”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
அபுதபி(இருப்பிடம்)
 
எனது வலைப்பூத் தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com
 
மின்னஞ்சல் முகவரி: kalam...@gmail.com
                                       shaic...@yahoo.com
                                       kalaam...@gmail.com
 
 
அலை பேசி: 00971-50-8351499 
 

Chandar Subramanian

unread,
Aug 5, 2011, 10:31:57 PM8/5/11
to santhav...@googlegroups.com
கவியரங்கத்தில் கலந்து கொள்ள இதுவரை பெயர் கொடுத்தவர்களின் பட்டியல்:

கவிமாமணி இலந்தையார்
கவிஞர் பசுபதி
கவிஞர் மகுடதீபன்
கவிஞர் இராஜ.தியாகராஜன் 
கவியன்பன் கலாம்
கவிஞர் கிரிகாசன்
கவிஞர் நிரஞ்சன் பாரதி
கவிஞர் அனந்த்  
கவிஞர் புஷ்பா கிறிஸ்ரி
கவிஞர் சுவாமிநாதன் 
கவியோகி வேதம்
முனைவர் க.தமிழமல்லன்
கவிஞர் தங்கமணி
கவிஞர் ஓகை நடராஜன்
கவிஞர் துரை
கவிஞர் அ. கி. வரதராஜன்
கவிஞர் சிவசிவா
கவிஞர் சுகந்தி வெங்கடேஷ்
கவிஞர் சிவ.சூரி 
கவிஞர் வித்யாசாகர்

========================

என் மௌனம்...

உள்ளுக்குள் ஒளிந்துள்ள உணர்ச்சிக் குண்டின்
.. ஒற்றைப்பூந் திரியாக உறையும் மௌனம்!
கள்ளுக்குள் கரந்துறையும் களிப்பைத் தேடும்
.. காலத்தின் ஒலியாகிக் கடக்கும் மௌனம்! 
புள்ளுக்குள் புதைந்திருந்தும் புதிதாய் ஓர்நாள்  
.. புறச்சிறகை விரித்துவிடும் பொழுதின் மௌனம்!
முள்ளுக்குள் சிக்காது முகிழ்க்கும் பூவாய்
.. மொழிபேச வருமுன்னர் மொக்கின் மௌனம்!

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 5, 2011, 10:49:47 PM8/5/11
to santhav...@googlegroups.com
புள்ளுக்குள் புதைந்திருந்தும் புதிதாய் ஓர்நாள்  
.. புறச்சிறகை விரித்துவிடும் பொழுதின் மௌனம்!
முள்ளுக்குள் சிக்காது முகிழ்க்கும் பூவாய்
.. மொழிபேச வருமுன்னர் மொக்கின் மௌனம்!

அருமை!

அனந்த்


2011/8/5 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

Siva Siva

unread,
Aug 5, 2011, 10:57:33 PM8/5/11
to santhav...@googlegroups.com
/என் மௌனம்...

உள்ளுக்குள் ஒளிந்துள்ள உணர்ச்சிக் குண்டின்
.. ஒற்றைப்பூந் திரியாக உறையும் மௌனம்!
/

மௌனமே இவ்வளவு பேசினால்! :)

நல்ல பாடல்.


2011/8/5 Chandar Subramanian <chandarsu...@gmail.com>



வித்யாசாகர்

unread,
Aug 5, 2011, 11:18:52 PM8/5/11
to santhav...@googlegroups.com
//வித்தை சாகரம் வீரமாய்ப் பாடவே
வித்தை ஊன்றிய வேந்தராம் பாவலர்
மொத்தப் பேறினை மேய்ந்தன ராதலால்
மொத்தம் சாற்றுவோம் மோகன ராகமே//

மி
க்க நன்றி ஐயா. உங்களின் என் மீதான நம்பிக்கை தரும் துணிவின் மீது நின்று எனை மேலும் செம்மைப் படுத்த முயல்கிறேன், இங்கே ஒளிர்வதற்கு!

எது நமக்கு அதீதமாய் வேண்டுமோ அது இறையருளால் கிடைக்குமென நம்புவோம்!!

நன்றிகளுடன்...


வித்யாசாகர்

2011/8/5 kalam kader <kalam...@gmail.com>

OAGAI NATARAJAN

unread,
Aug 5, 2011, 11:35:17 PM8/5/11
to santhav...@googlegroups.com

என் மௌனம்...


உள்ளுக்குள் ஒளிந்துள்ள உணர்ச்சிக் குண்டின்
.. ஒற்றைப்பூந் திரியாக உறையும் மௌனம்!
கள்ளுக்குள் கரந்துறையும் களிப்பைத் தேடும்
.. காலத்தின் ஒலியாகிக் கடக்கும் மௌனம்!
புள்ளுக்குள் புதைந்திருந்தும் புதிதாய் ஓர்நாள் 
.. புறச்சிறகை விரித்துவிடும் பொழுதின் மௌனம்!
முள்ளுக்குள் சிக்காது முகிழ்க்கும் பூவாய்
.. மொழிபேச வருமுன்னர் மொக்கின் மௌனம்!
 
அருமை!
2011/8/6 Chandar Subramanian <chandarsu...@gmail.com>
--

K.R. Kumar

unread,
Aug 5, 2011, 11:37:56 PM8/5/11
to santhav...@googlegroups.com
இன்னும் சௌந்தரைக் காணோமே ??!!

அன்புடன்,

குமார்(சிங்கை)

2011/8/6 Chandar Subramanian <chandarsu...@gmail.com>
--

kirikasan

unread,
Aug 11, 2011, 11:34:49 AM8/11/11
to சந்தவசந்தம்
கவியரங்கம் - ஒரு வாழ்த்து

நித்தம் பூக்கள் மலரட்டும்
நினைவில் கதிராய் ஒளிரட்டும்
புத்தம்புதிதாய் புலர்வோடு
பொழுது என்றும் விடியட்டும்
சித்தங் கவரும் சொல்லரிய
செந்தேன் கவிகள்பொலியட்டும்
நித்தம் வானின் உயரத்தில்
நிற்குஞ் சுடராய் ஒளிரட்டும்


அன்புடன் கிரிகாசன்

On 6 Aug., 04:37, "K.R. Kumar" <krishra...@gmail.com> wrote:
> இன்னும் சௌந்தரைக் காணோமே ??!!
>
> அன்புடன்,
>
> குமார்(சிங்கை)
>

> 2011/8/6 Chandar Subramanian <chandarsubraman...@gmail.com>


>
>
>
>
>
>
>
> > கவியரங்கத்தில் கலந்து கொள்ள இதுவரை பெயர் கொடுத்தவர்களின் பட்டியல்:
>
> > கவிமாமணி இலந்தையார்
> > கவிஞர் பசுபதி
> > கவிஞர் மகுடதீபன்
> > கவிஞர் இராஜ.தியாகராஜன்
> > கவியன்பன் கலாம்
> > கவிஞர் கிரிகாசன்
> > கவிஞர் நிரஞ்சன் பாரதி
> > கவிஞர் அனந்த்
> > கவிஞர் புஷ்பா கிறிஸ்ரி
> > கவிஞர் சுவாமிநாதன்
> > கவியோகி வேதம்
> > முனைவர் க.தமிழமல்லன்
> > கவிஞர் தங்கமணி
> > கவிஞர் ஓகை நடராஜன்
> > கவிஞர் துரை
> > கவிஞர் அ. கி. வரதராஜன்
> > கவிஞர் சிவசிவா
> > கவிஞர் சுகந்தி வெங்கடேஷ்
> > கவிஞர் சிவ.சூரி
> > கவிஞர் வித்யாசாகர்
>
> > ========================
>

> > *என் மௌனம்...*

Chandar Subramanian

unread,
Aug 11, 2011, 9:17:46 PM8/11/11
to santhav...@googlegroups.com
கவியரங்கம்

கூடை ஏந்தும் எனதுமனம் - பூக்
.. கொய்யக் கண்முன் நந்தவனம்!
தேடத் தேடத் திகைப்பூட்டும் - புதுச்
.. சீரார் வண்ண மலர்க்கூட்டம்!

ஆண்டுக் கொருநாள் சிலபூக்கும் - சில
.. அன்றே பூக்கும் அவசரமாய்!
வேண்டி நிற்கும் சிலபூக்கள்! - சில
.. வேண்டா மென்றும் விலகிவிடும்!

வெள்ளை வண்ணம் சிலவிரிக்கும் - சில
.. வேகம் காட்டிச் சிவந்துவிடும்!
கொள்ளை நீலம் சிலகுவிக்கும் - சில
.. கொள்ளும் மஞ்சள் மடலெங்கும்!

சின்ன முத்தாய்ச் சிலபூக்கும்! - உடன்
.. சேர்ந்துக் கொத்தாய்ச் சிலபூக்கும்!
முன்னர் நீண்டு சிலபூக்கும்! - சில
.. மொக்காய் நிற்கும் முறையேற்கும்! 

வாசம் எத்தனை வகையிருக்கும்! - அவை
.. வாயில் வந்து வரவேற்கும்!
வேசம் இல்லாச் சிலபூக்கள் - மணம்
.. வெற்றென் றெண்ணி விலக்கிவிடும்!

பூக்கள் பூக்கும் போதெல்லாம் - இலை
.. பூரித் தாடி படபடக்கும்!
ஈக்கள் சேரும் இடமறக்கும்! - தேன்
.. இன்னும் எங்கே எனப்பறக்கும்!

தென்றல் பூவைத் தழுவிவரும் - அதன்
.. தேனை எங்கும் தெளித்துவிடும்!
மன்றம் எங்கும் மணம்பரப்பும் - அதில்
.. மையல் கொண்டு மனமயங்கும்!

கூடை நிரம்பி வழிகிறது! - மனம்
.. குளிர்ந்துப் பூவாய் மொழிகிறது!
தேடிப் பூவை எடுக்கிறது! - மனம்
.. சேர்க்கும் நாராய்த் தொடுக்கிறது!

மாலை இங்கே தினம்பிறக்கும் - அதன்
.. வண்ணம் காண மனம்பறக்கும்!
ஓலை இங்கே தினம்கிடைக்கும் - அதில்
.. ஓயாக் கவிதை ஒலிசிறக்கும்!

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 11, 2011, 9:33:06 PM8/11/11
to santhav...@googlegroups.com
இப்படி அடுக்கடுக்காக அழகிய கவிதை மலர்கள் கொட்டுவதைப் பார்த்தால் கவியரங்கம் ஏற்கனவே தொடங்கி விதம் விதமாகப் பல கவிஞர்கள் தங்கள் கவிதைகளை அளித்து வருவது போன்ற பிரமை ஏற்படுகிறது! 


அனந்த்

சேர்ந்துக் கொத்தாய்; குளிர்ந்துப் பூவாய் - ஒற்று மிகை

2011/8/11 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

Chandar Subramanian

unread,
Aug 11, 2011, 9:35:50 PM8/11/11
to santhav...@googlegroups.com
ஒற்றுப்பிழைகளை குறிப்பிட்டதற்கு நன்றி.


2011/8/12 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

வித்யாசாகர்

unread,
Aug 12, 2011, 12:44:18 AM8/12/11
to santhav...@googlegroups.com
வணக்கம் ஐயா,

//கூடை நிரம்பி வழிகிறது - மனம்
.. குளிர்ந்துப் பூவாய் மொழிகிறது!
தேடிப் பூவை எடுக்கிறது - மனம்
.. சேர்க்கும் நாராய்த் தொடுக்கிறது//

விதையை அழகென்றால் சிலர், அதெப்படி அழகு பூக்கும் கவிதைகளில், மாறாக இனிமை என்று தானே சொல்லலாம் என்பார்கள் சிலர். அவர்களுக்கெல்லாம் உங்களின் கவிதைககளைக் காட்டி வாசிக்கச் சொன்னால், இத்தனை அழகா எழுதி இருக்கிறாரேயென்று மெய்மறந்து சொல்லலாம்.

பொதுவாக சந்தவசந்தத்தின் படைப்புக்களை நேரம் கிடைக்கையில் வாசிக்கிறேன், உடனே பாராட்டுமுணர்வுகள் மனதில் கிளர்ந்தெழும். இருப்பினும், இதற்கெல்லாம் நாமெங்கு கருத்து சொல்லவென்றெண்ணி, சொல்லாமலே விட்டுவிடுவேன். சொல்லிடாத வாழ்த்தும் பாராட்டும் சந்தவசந்தத்தின் பேரில் உள்ளே நன்றிகளாய் நிறைந்துப் போகும். உண்மையில் ஒவ்வொருவரின் கவிதைகளும் காலத்திற்கும் போற்றத் தக்க 'முதுக்களுக்கும் மேலாகும்!!

மதிப்பிற்குரிய தமிழ் மேலோர் எல்லோருக்குமே என் நன்றிகளும் வணக்கமும் வாழ்த்துக்களும்!!


வித்யாசாகர்

2011/8/12 Chandar Subramanian <chandarsu...@gmail.com>



--
வித்யாசாகர்

Kaviyogi Vedham

unread,
Aug 12, 2011, 4:20:48 AM8/12/11
to santhav...@googlegroups.com
அட்டகாசம் செய்கின்றீர் ஸ்வாமி,
யோகியார்
(அநந்த் சொல்லும் பிழைகளை இனியேனும் தவிர்க்க)-

2011/8/12 Chandar Subramanian <chandarsu...@gmail.com>
கவியரங்கம்

கூடை ஏந்தும் எனதுமனம் - பூக்
.. கொய்யக் கண்முன் நந்தவனம்!
தேடத் தேடத் திகைப்பூட்டும் - புதுச்
.. சீரார் வண்ண மலர்க்கூட்டம்!

ஆண்டுக் கொருநாள் சிலபூக்கும் - சில
.. அன்றே பூக்கும் அவசரமாய்!
வேண்டி நிற்கும் சிலபூக்கள்! - சில
.. வேண்டா மென்றும் விலகிவிடும்!

வெள்ளை வண்ணம் சிலவிரிக்கும் - சில
.. வேகம் காட்டிச் சிவந்துவிடும்!
கொள்ளை நீலம் சிலகுவிக்கும் - சில
.. கொள்ளும் மஞ்சள் மடலெங்கும்!

சின்ன முத்தாய்ச் சிலபூக்கும்! - உடன்
.. சேர்ந்து..(க்X)- கொத்தாய்ச் சிலபூக்கும்!
முன்னர் நீண்டு சிலபூக்கும்! - சில
.. மொக்காய் நிற்கும் முறையேற்கும்! 

வாசம் எத்தனை வகையிருக்கும்! - அவை
.. வாயில் வந்து வரவேற்கும்!
வேசம் இல்லாச் சிலபூக்கள் - மணம்
.. வெற்றென் றெண்ணி விலக்கிவிடும்!

பூக்கள் பூக்கும் போதெல்லாம் - இலை
.. பூரித் தாடி படபடக்கும்!
ஈக்கள் சேரும் இட+(ம்)-மறக்கும்! - தேன்
.. இன்னும் எங்கே எனப்பறக்கும்!

தென்றல் பூவைத் தழுவிவரும் - அதன்
.. தேனை எங்கும் தெளித்துவிடும்!
மன்றம் எங்கும் மணம்பரப்பும் - அதில்
.. மையல் கொண்டு மனமயங்கும்!

கூடை நிரம்பி வழிகிறது! - மனம்
.. குளிர்ந்து..x)(ப்) பூவாய் மொழிகிறது!
தேடிப் பூவை எடுக்கிறது! - மனம்
.. சேர்க்கும் நாராய்த் தொடுக்கிறது!

மாலை இங்கே தினம்பிறக்கும் - அதன்
.. வண்ணம் காண மனம்பறக்கும்!
ஓலை இங்கே தினம்கிடைக்கும் - அதில்
.. ஓயாக் கவிதை ஒலிசிறக்கும்!


--
அன்புடன்
சந்தர் சுப்ரமணியன்
www.MovingMoon.com

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--
Can YU Pl. SEE MY NEW BloG and comment on the contents?
யோகியார். வேதம்.(Yogiyar vedham).
Thalaivar,
Sidhdhar Babaji YogaSram, 2/682,
 10th cross st,Renga Reddy garden, Neelankarai, Chennai-600115
அனைவரும் வாழ்க வளமுடன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!
சித்தர் ஸ்ரீ லஹரி பாபாஜி யோகாஸ்ரமம்,2/682Renga Reddy Garden நீலாங்கரை,(Opp. Hotchips new HOTEL)-சென்னை-600115(போன் 64565979)-
*****************************
 

OAGAI NATARAJAN

unread,
Aug 12, 2011, 2:39:44 PM8/12/11
to santhav...@googlegroups.com
அருமை! அருமை!!

2011/8/12 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

karthik emaya

unread,
Aug 14, 2011, 4:59:42 AM8/14/11
to santhav...@googlegroups.com
நானும் கலந்து கொள்ள விழைகிறேன் ....

உதவ முடியுமா...?


2011/8/11 kirikasan <kanaga...@hotmail.com>

Girija Varadharajan

unread,
Aug 14, 2011, 9:29:29 PM8/14/11
to santhav...@googlegroups.com
கவியரங்கம் இன்று துவக்கம். 

கட்டியம் இதோ: 


சுதந்திர நாளில் சுகம்தரும் வண்ணம்

இதந்தரும் பாக்க ளியம்பு - விதம்பலவாய்  

காட்டுவோம் நம்திறம் காசினி போற்றிட 

நாட்டுவோம் பாவரங்கம் நாம்.


நாமெல்லாம் சேர்ந்தின்று நன்று துவக்குவோம்   

பாமகள் பாதம் பணிந்தேத்தித் - தூமழைபோல்

கொட்டியே தீர்ப்போம் குவலயம் கொண்டாட  

அட்டியதற் கில்லை அறி. 


வரத ராஜன். அகி

 
2011/8/14 karthik emaya <kkn...@gmail.com>

Siva Siva

unread,
Aug 14, 2011, 9:46:31 PM8/14/11
to santhav...@googlegroups.com
துவக்கம்? தொடக்கம்? இரண்டுமே சரியோ?

2011/8/14 Girija Varadharajan <girijavar...@gmail.com>

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 14, 2011, 10:51:38 PM8/14/11
to santhav...@googlegroups.com
கழக அகராதி: துவக்கல் = தொடங்கல்; துவங்குதல் = தொடங்குதல்

Cologne Online Tamil Lexicon:
tuvakkam (துவக்கம்)- beginning, commencement;
toTakkam (தொடக்கம்) 1. origin; 2. beginning, commencement


2011/8/14 Siva Siva <naya...@gmail.com>

Chandar Subramanian

unread,
Aug 15, 2011, 4:29:15 AM8/15/11
to santhav...@googlegroups.com
நீங்களும் கலந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி. உங்கள் பெயரையும் சேர்த்துள்ளேன்.


கவியரங்கத்தில் கலந்து கொள்ள இதுவரை பெயர் கொடுத்தவர்களின் பட்டியல்:

கவிமாமணி இலந்தையார்
கவிஞர் பசுபதி
கவிஞர் மகுடதீபன்
கவிஞர் இராஜ.தியாகராஜன் 
கவியன்பன் கலாம்
கவிஞர் கிரிகாசன்
கவிஞர் நிரஞ்சன் பாரதி
கவிஞர் அனந்த்  
கவிஞர் புஷ்பா கிறிஸ்ரி
கவிஞர் சுவாமிநாதன் 
கவியோகி வேதம்
முனைவர் க.தமிழமல்லன்
கவிஞர் தங்கமணி
கவிஞர் ஓகை நடராஜன்
கவிஞர் துரை
கவிஞர் அ. கி. வரதராஜன்
கவிஞர் சிவசிவா
கவிஞர் சுகந்தி வெங்கடேஷ்
கவிஞர் சிவ.சூரி 
கவிஞர் வித்யாசாகர்
கவிஞர் கார்த்திக் 



2011/8/14 karthik emaya <kkn...@gmail.com>

Chandar Subramanian

unread,
Aug 15, 2011, 5:22:45 AM8/15/11
to santhav...@googlegroups.com
கவியரங்கம் - 35
தலைப்பு: என்...
நாள்: 15/08/2011

சந்த வசந்தத் தமிழ் நெஞ்சங்களே, 

முதற்கண் அனைவர்க்கும் விடுதலை நாள் வாழ்த்துகள்! 

கவியரங்கத்தலைமை என்னும் பொறுப்பு மிகவும் உயர்ந்த பொறுப்பு. என்னை மதித்து அப்பொறுப்பினை எனக்களித்த தலைவர் திரு இலைந்தையார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. 

என் பணியில் ஏதும் தவறிருப்பின் எடுத்தியம்ப வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.

=============================================================

கடவுள் வாழ்த்து

ஆலெழுந்து விழுதுலகை அடைக்கும் போதும் 
.. ஆரம்பம் வித்தொன்றால் அமைந்தாற் போலே
சூலெழுந்த பிறப்பெனவாய்த் தொடரும் வாழ்க்கைச்
.. சூத்திரத்தின் மூலமெனத் தோன்றி நெஞ்சின்
பாலெழுந்த உணர்வாகிப் பாட லாகிப்
.. பார்க்கின்ற பொருளாகிப் படைப்பாய் ஆகி
நாலெழுத்து நான்பாட நடத்தி வைக்கும்
.. ஞானத்தின் முதல்வித்தாம் நாதன் வாழ்க! 

=============================================================

தமிழ் வாழ்த்து

சொல்லாகிப் பொருளாகிச் சுவையு மாகித்
.. தொன்மையுடன் புதுமையெனத் தொடர்ந்தே என்றும்
நில்லாது செல்கின்ற நிகழ்வாய் ஆகி
.. நிற்காத ஆறாகி நினைவாய் ஆகிச்
செல்லாது செம்மொழியாய் செழித்து பல்லோர்
.. சிந்தனையின் சீர்சேர்த்துத் தெரிந்து மாசே
இல்லாத தேனாகி இசையாய் இன்றும்
.. இருக்கின்ற தமிழணங்கே என்றும் வாழ்க! 

=============================================================

அவையடக்கம்

சேயொன்றாய் நானரங்கம் சேர்ந்த போதில் 
.. தேந்தமிழின் சுவையூட்டித் தெளிவைச் சேர்த்த
தாயன்பர் பலரிங்கே தமிழில் நானும் 
.. தடுமாறும் போதெல்லாம் தாமாய் என்பா
ஆய்ந்தென்பால் அன்புசெயும் அவர்க்கென் நன்றி! 
.. அறிஞரெலாம் இங்கிருக்க அடியேன் என்னை
வாஎன்றிக் கவியரங்க மன்றம் தன்னை 
.. வழங்குதற்காய் வழிசெய்த வர்க்கும் நன்றி!

=============================================================

அவைக்கு அழைப்பு

கூடையொன்றை மடலாக்கிக் கொண்டு வந்தேன்!
.. கொட்டுகின்ற மலரனைத்தும் கொள்ள வேண்டி!
தேடுகின்ற மலரவற்றின் தேனை நீங்கள்
.. சின்னவிரல் நகம்பதித்து திரையிற் சேர்த்திவ்
வூடகத்தின் வழியாக உலகில் மற்றோர்
.. உண்பதற்காய் அளித்திடுக! உள்ள ஊற்றின்
பாடலெலாம் பலர்செவிக்கே! பாகை ஊற்றும்
.. பாவலர்காள் வருகவென பாதை யிட்டேன்! 

=============================================================

Chandar Subramanian

unread,
Aug 15, 2011, 5:28:56 AM8/15/11
to santhav...@googlegroups.com
தலைமைக் கவிதை

என்னுலகம் 2300

உலகதன் ஓட்டம் போலே ஓடிடும் நாள்கள் எல்லாம்!
நிலையெலாம் மாறும், ஏதும் நிரந்தரம் ஆகாப் போதில்,
புலருமிந் நாளை ஒட்டிப் போகுமுந் நூறாம் ஆண்டில்
நிலத்தெழு மாற்றம் என்னே? நினைப்பதன் பதிவே இப்பா! (1)

வளருமந் நாளில் மண்ணை வகுத்திட நாடென் றேதும்
அளவிலை, எல்லை யென்னும் அவையெலாம் மாறி ஒன்றாய்
உளநிலம், உள்ளோர் வாழ்வை உழற்றிடும் போருக் கென்றோர் 
களமிலா உலகம், காதல் கருத்தினில் உறையும் காலம்! (2)

குழவியை வயிற்றில் ஏந்திக் கொடுக்குமக் காலம் எல்லாம்
பழைமையாய் மாறிப் போகும்; பண்டமாய் ஆய்வுச்சாலைக் 
குழலிடை அண்டம் விந்து கொண்டதை வளர வைக்கப்
பழகிடும் முறையே எங்கும் பழக்கமாய் ஆகும் காண்க! (3)

வருவது பெண்ணா ஆணா? வளர்ப்பவர் விருப்பம் ஆகும்!
மரபணுத் தேர்வின் மூலம் வருகிற பிணிகள் எல்லாம்
கருவினில் உள்ள போதே கண்டவை நீங்கச் செய்யும்
மருத்துவம் கொண்ட தாலே மானுடம் செழிக்கும் மேலும்! (4)

சிறப்புடை மரபைத் தேர்ந்து செம்மையை மேலும் கூட்டித்
திறமையை குவிக்கச் செய்து தேர்ந்திடும் துறையைச் சார்ந்த 
அறிவிலே ஆழம் காணும் அமைப்பினை மூளை சேர்த்துப் 
பிறப்பதை வளமை ஆக்கும் பெருஞ்செயல் எளிதாம் அந்நாள்! (5)

உடல்நிலை ஆய்ந்து காணும் உப்புடன் கொழுப்பும் மற்ற
திடநிலைக் கூறுக் கேற்ப தெரிந்துதம் உணவின் ஊட்ட
எடைதனை சமச்சீர் ஆக்கி எழுதிய வாய்பா டொத்த 
கடையுண வொன்றே நன்றாய்க் கருதுவர் அந்நாள் காண்க! (6)

அருசுவை அதுநா காணும் ஆழ்மனப் பழக்கம் அன்றோ!
ஒருதனி வேதிச் சேர்வை உணவுடன் நாவுக் கென்றே
தரும்விதம் புதிதாய்த் தோன்றும்! தனிநபர் சுவைக்கும் போக்கில்
வரும்பல விதமாய்ச் சேர்வை! வளர்ச்சியென் றிதையே காணும் (7)

தணலிடை உயிரை வாட்டி தான்பெறும் வாய்ச்சு வைக்காய்
கணமொரு விலங்கை கொல்லும் கடைநிலை இலையென் றாகும்!
மணமுடன் சுவையும் சேர்த்து மகிழ்ச்சியை ஊட்டும் நல்ல
உணவென இறைச்சித் துண்டம் உருபெறும் குளோனிங் ஊடே! (8)

தாவரம் அழிக்கும் செய்கை தவறென வாகும் அந்நாள்!
பூவொடு பழம்காய் யெல்லாம் பறிப்பது குற்றம் ஆகும்!
நாவினுக் கேற்ற தாக நற்சுவைப் பொருளை எல்லாம்
மேவிட குளோனிங் ஒன்றே முறையென வாகும் காண்க! (9) 

மரங்களின் அடர்த்தி தன்னை மதிப்பிடும் கருவி கொண்டு
நிரம்பிய காடே எங்கும் நிலைத்திட வழிகள் சேர்க்கும்;
தரமுடை கருவி, திட்டம், தனிநிலை இயக்கம் கொண்டு
பரவிடும் பசுமை தன்னை பரப்பிடும் உலகம் எங்கும்! (10)

விலங்குகள் வாழும் காட்டில் விதிபல மனிதர்க் காகும்!
உலவிட தடையாம் அங்கே! உடைமைகள் மனிதர்க் கில்லை!
அலைக்கதிர் வீச்சால் மாஆர் அடர்த்தியை அறிவால் ஆய்ந்து
தலைமுறை காக்கும் செய்கை சாதனை படைக்கும் காண்க! (11)  

திடநிலைச் சுவர்கள் எல்லாம் தீதென உலகம் காணும்!
இடமது விரியும், மண்ணால் எழும்பிய சுவரே எங்கும்!
அடர்நிலை நகரம் மாறி அண்மையில் கிராமம் சேரும்!
தொடர்ந்திடும் வாழ்வில் மாசு தொலைந்திடும்; தூய்மை எங்கும்! (12)

ஒளிவழித் தொடர்பை ஏற்கும் உலகுடை பணிகள் யாவும்;
களப்பணி குறையும்; வீட்டுக் கட்டிலில் அலுவல் யாவும்;
தெளிவினைப் பெறுவ தற்காய் செய்திகள் இணையம் தன்னில்   
அளவிலா தமையும்; வாழ்க்கை அமைந்திடும் அமைதி யோடே! (12)

செப்படி வித்தை போன்றே தொலைவுள சுற்றத் தாரின்
முப்பரி மாண பிம்பம் முழுமையாய்க் கண்முன் தோன்றும்!
அப்படி ஆகும் காலம் அந்நியம், தூரம் யெல்லாம்
ஒப்பிலை என்றாய் வையம் ஒருங்கிடும்; ஒன்றென் றாகும்! (13)

சேதியைக் காட்சி யாகச் சேர்த்திடும் நுட்பத் தாலே
பாதைகள் குறைந்து போகும்! பயணமும் அரிதாய்ப் போகும்!
வீதியே இல்லாப் போதில் விரைந்திடும் வாழ்வே தில்லை!
ஆதியில் மனிதர் கண்ட அமைதிசேர் வாழ்வே மீளும்! (14)

இயற்கையை ஒத்த வாழ்வில் இலையினி உணவுப் பஞ்சம்;
வயிற்றெழும் பசியைப் போக்க வளமுடை மண்ணே ஈயும்!
முயற்சியை மேலும் காட்ட முயல்பவர் இணையம் தன்னில்
வயப்படும் வாய்ப்பை ஏற்று வளமையைக் காண்பர் அந்நாள்! (15) 

மண்மிசை விளையா டல்கள் மற்றொரு புதுமை காணும்!
எண்திசை யாவும் பிம்பம் எழு மின் மன்றின் ஊடே
கண்வளர் காட்சி யோடு கலந்துளம் காயம் நீக்கி
எண்ணமாய் எழுந்து நீழல் இயல்பெனும் மாயை ஏற்கும்! (16) 

பிறப்பினால் சமய மேற்கும் பிழையினி மறைந்து போகும்!
முறைப்படி சிறுவர் வாழ்க்கை முடியுமப் பொழுதில் எல்லா
மறைகளும் ஓதிப் பார்த்து மனத்தெழும் பேச்சைக் கேட்டு 
நிறையுளத் தோடொன் றேற்கும்; நீக்கிடும் நிலையும் பார்க்கும்! (17)

வாயிலங் கெட்டோ டென்கோண் வடிவிலோர் மன்றம் ஊரின்
கோயிலாய் அமையும்; மையம் கொள்ளிடம் விண்ணை நோக்கும்!
தாயெனக் காக்கும் ஏகம் தன்னுரு திரிந்து வெவ்வே
றாயினன் என்னும் உண்மை அனைவரும் அறிந்தே வாழ்வார்! (18) 

ஒவ்வொரு மொழியும் எழுத்தை, ஒன்றிலை, இரண்டாய்க் கொள்ளும்,
செவ்வியல் வழக்க மென்றும் சேர்ந்தமை வடிவ மென்றும்!
இவ்வியல் பாலிம் மண்ணின் எழுத்தெலாம் இணையும் அந்நாள்!
அவ்விதம் ஆகு மாயின் அனைவரின் மொழியும் ஒன்றே! (19)

எத்தனை எழுச்சி பெற்றும் இயல்பினில் ஏழ்மை செல்வம்
இத்தர வேற்று மைகள் இயற்கையாய்த் தொடரும் போதும்
நித்தியத் தேவை யாவும் நிலைபெற கிடைக்கச் செய்யும்
அத்தகு நிலையை மாந்தர் அனைவரும் அடைவர் அந்நாள்! (20)

Girija Varadharajan

unread,
Aug 15, 2011, 6:22:03 AM8/15/11
to santhav...@googlegroups.com
கவிதையில் நீரொரு பொருப்பு.
கேடுகள் கண்டால் நெருப்பு,
அதனால் அளித்தார் பொறுப்பு,
யாருரை சொல்வார் மறுப்பு ?

முதலிரண்டு வரிகளைப் படித்ததும் தோன்றிய எண்ணமிது. 
மற்றவை பின்னால் 

வரத ராஜன். அகி 

2011/8/15 Chandar Subramanian <chandarsu...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:

Girija Varadharajan

unread,
Aug 15, 2011, 7:04:55 AM8/15/11
to santhav...@googlegroups.com


என்னுல கீதென் றியம்பினீர் மற்றதுவும் 

பொன்னுல கென்றே பொலிந்தது.  -- மன்னுலகு  

மாற்ற மிவையெல்லாம் மங்காது கண்டிடின் 

ஏற்றமது தானே யெமக்கு. 

 
வரத ராஜன். அ.கி 

  

2011/8/15 Chandar Subramanian <chandarsu...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:

வித்யாசாகர்

unread,
Aug 15, 2011, 7:23:14 AM8/15/11
to santhav...@googlegroups.com
மிழ் இத்தனை கற்றால் போதும் - அவர் உலகம் மொத்தம் அறிந்தவராவர்" என்று ஒரு வரியையும் சேர்த்திருக்கலாம். ஒரு கவியோகி கண்ட சமூகம் பற்றிய கனவின் நிகழ்வில் நின்று கொண்டு உலகத்தைப் பார்ப்பவர்கள் நாம்.  நாளையும் இங்ஙனமே விடியுமெனும் நம்பிக்கை கொண்ட தங்களின் வரிகளை வாசிக்க வாசிக்க புத்துணர்வினால் பூரித்துப் போகிறோம்.

//வளருமந் நாளில் மண்ணை வகுத்திட நாடென் றேதும்
அளவிலை, எல்லை யென்னும் அவையெலாம் மாறி ஒன்றாய்
உளநிலம், உள்ளோர் வாழ்வை உழற்றிடும் போருக் கென்றோர் 
களமிலா உலகம், காதல் கருத்தினில் உறையும் காலம்//

சமூகம் கண்டு வெகுண்டுப் போன நேரம் உதிக்கிறது இச்சமூகத்திற்கான தீர்ப்பும் கவிதையும் எனில், நாளைய நம் தேசம் அல்லது உலக மனிதர்களின் மாற்றத்திற்கு இதே முன்வைத்த அளவீடாகக் கொண்டாலும் மறுப்பதற்கில்லை ஐயா.

//எத்தனை எழுச்சி பெற்றும் இயல்பினில் ஏழ்மை செல்வம்
இத்தர வேற்று மைகள் இயற்கையாய்த் தொடரும் போதும்
நித்தியத் தேவை யாவும் நிலைபெற கிடைக்கச் செய்யும்
அத்தகு நிலையை மாந்தர் அனைவரும் அடைவர் அந்நாள்// இதெல்லாம் எழுத உண்மையில் அறிவுமேன்மை கடந்து ஒரு கருணை நிறைந்த விசால மனதும் தேவை இருக்கிறது என்பதை படிப்போர் உள்மனசு வரை உணர இயலும்.

//பிறப்பினால் சமய மேற்கும் பிழையினி மறைந்து போகும்!
முறைப்படி சிறுவர் வாழ்க்கை முடியுமப் பொழுதில் எல்லா
மறைகளும் ஓதிப் பார்த்து மனத்தெழும் பேச்சைக் கேட்டு 
நிறையுளத் தோடொன் றேற்கும்; நீக்கிடும் நிலையும் பார்க்கும்// எத்தனைப் பேர் ஏற்பரோ இவ்வரிகளை ஆனால் இதன்றி இனிவருங்காலம் உதிக்கப் போகும் ஞானம் வேறில்லை!

இப்படி இன்னும் சொல்ல எத்தனையோ அடக்கி தமிழில் கோர்த்து பா'யேற்றி பின் தலைமைக்கு தகுந்தீரா' எனும் கேள்வியெல்லாம் மிகை என்றே பறைசாற்றுகிறது உங்களின் ஒவ்வொரு வரியும்.

நேரம் தின்னும் வேலைகளுக்கு இடையே வாய்ப்பு கிட்டுமெனில் மீண்டும் கூட நிறைய விவரிக்கும் அளவு மனது லயித்துப் போயிற்று உங்களின் தமிழின் புலமைதன்னிலும், அறிவின் தெளிவுதன்னிலும், மனதின் தூய்மையிலும்!!

இறையருள் உங்களுக்கு எப்பொழுதும் நிறைந்திருக்கட்டும். மிக்க வாழ்த்துக்களும் வணக்கமும்!!


வித்யாசாகர்



2011/8/15 Girija Varadharajan <girijavar...@gmail.com>



--
வித்யாசாகர்

kalam kader

unread,
Aug 15, 2011, 9:41:51 AM8/15/11
to santhav...@googlegroups.com
பணி பளு மற்றும் ரமலான் நோன்பு காரணமாக தாமதமாக வந்துள்ளேன்
 
வாழ்த்துரை:
 
இருக்கைத் தலைவராய் இங்குள்ள வர்க்கும்
வருகை யுள்ளோர்க்கும் வாழ்த்து
 
 
என் தேசம் = பாரதம் (தலைப்பு)
 
எந்தேசம் காணுமே இன்று விடுதலைச்
 
சந்தோசக் கொண்டாட்டச் சங்கமம்- இந்நேரம்
 
பாட்டின் தலைப்பிலும் பாரதம் என்பதைப்
 
போட்டேன் பொருத்தமாய்ப்  போச்சு.
 
 

நுனிநாக்கி லாங்கிலம் நுட்பக் கணினி

தனியார்வ நோக்கில் தணியாத தாகம்

இனியென்ன வேண்டுமிங் கிந்தியர் என்றும்

நனிசிறந்தே வாழ்வர் நவில்.

 

 கடின உழைப்பும் கடமை  யுணர்வும்

 படியும் குணமும் பலமான போட்டியுறும்

 சந்தையில் இன்று சிறப்பான எங்கள்

 இந்தியர் என்றே இயம்பு.

 

காடும் மலையும் கடலுமே தாண்டி

வாடும் உடலும்தம் உள்ளமும் வேலையில்

ஈடுபட்டுத் தேனீயென் றீட்டிட இந்தியர்

பாடு படுவதைப் பாடு!

 

 

சிந்தும் உழைப்பும் சிறந்த தியாகமே

இந்தியச் சந்தை இழந்த உழைப்பினை

அன்னிய நாட்டவர் அங்கீ கரித்தனர்

தன்னிறை என்பதுஎந் நாள்

 

எம்மைத் தந்த எம்மண் ணிற்கு
என்னச் செய்தோம்  எண்ணிப் பார்ப்போம்
நன்றி கொன்ற நம்மை தேசம்
என்றுமே வளர்த்து மெப்படி யுதவிச்
செய்து மென்னச் செய்தோ மின்னும்
பொய்தா னெங்கள் போலிப் பற்று
இந்தியர் அனைவரு மிணைந்துப் போரில்
சிந்திய தியாகம்; சிந்தைக் கூறின்
ஒன்று பட்ட வுண்மை வெற்றி
இன்றும்  கிட்டு மின்னும் பெற்றி
வேற்றுமை மறப்போம்; வேரொன் றென்றுப்
போற்றிக் கொண்டால்  போதும் வெல்லவே
 
 
வாழ்வினை வளமாய் வழங்கிய தேசம்
         வளர்த்திடு வதனுடன் நேசம்
தாழ்விலு முயர்வாய் மதித்திடு நாட்டை
        தரையிலும் கடலிலும் நாட்டைப்
பாழ்படுத் திடுவர் யாரெனக் கண்டு
      பழித்திடத் துடித்திடு இன்று
காழ்ப்புணர் வின்றி பழகிடும் தன்மை
       காத்திடும் வேற்றுமை(யில்) ஒருமை

 

"”கவியன்பன்” கலாம்


 
2011/8/14 karthik emaya <kkn...@gmail.com>



--

Siva Siva

unread,
Aug 15, 2011, 12:18:19 PM8/15/11
to santhav...@googlegroups.com
சிலர் 'துவக்கு', 'துவங்கு' என்பன போன்ற பிரயோகங்களைத் தவிர்க்கவேண்டும் என்றும் சொல்கிறார்கள்.
அதனால் அவ்வையம்.
====================

http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-26%20:%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D,%20%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D!&artid=375206&SectionID=146&MainSectionID=146&SectionName=Kadhir&SEO=

மொழிப் பயிற்சி-26 : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!
கவிக்கோ ஞானச்செல்வன
First Published : 13 Feb 2011

.............
.............
துவக்கமா? தொடக்கமா? 

ஊராட்சி துவக்கப்பள்ளி, விழாவைத் துவக்கி வைத்தார் என்று பார்க்கிறோம், கேட்கிறோம். தொடக்கப்பள்ளி, தொடங்கி வைத்தார் என்றும் காண்கிறோம். எது சரி? 

தொடு - தொட - தொடக்கு - தொடங்கு என்று பார்த்தால், ஒன்றைத் தொடங்கும்போது கைகளால் தொட்டு அல்லது சொற்களால் தொட்டுத்தானே ஆக வேண்டும். ஆதலின் தொடக்கம், தொடங்கினார் என்பன சரியான சொற்கள். (தொடு - (பள்ளம்) தோண்டு; தொட்டு-(பள்ளம்) தோண்டி எனும் பொருள் உண்டு.) 

துவ - துவக்கு என்று பார்த்தால் துவ என்பதன் பொருள் ஒன்றுமில்லை. துவள் எனும் பகுதி உண்டு. இது துவளுதல் - துவண்டு போதல் ஆகும். ஆதலின் துவக்கினார் என்பதும், துவக்கப்பள்ளி என்பதும் பிழையெனத் தோன்றவில்லையா?

.............
.............











2011/8/14 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>



--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Pas Pasupathy

unread,
Aug 15, 2011, 8:48:30 PM8/15/11
to santhav...@googlegroups.com
சந்தரின் தலைமைப் பாடல்
. சமைத்ததோர் உலகம் தன்னில்
விந்தைகள் புதுமை யாக
. விரிந்தன அழகாய்க் கண்முன்.
புந்தியின் பங்கைச் சொல்லும்
. புனைவுகள் மிளிரக் கண்டோம்.
சிந்தையை அள்ளும் நல்ல
. தீஞ்சுவை விருந்தை உண்டோம்.
 

 
2011/8/15 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

தலைமைக் கவிதை

என்னுலகம் 2300

உலகதன் ஓட்டம் போலே ஓடிடும் நாள்கள் எல்லாம்!
நிலையெலாம் மாறும், ஏதும் நிரந்தரம் ஆகாப் போதில்,
புலருமிந் நாளை ஒட்டிப் போகுமுந் நூறாம் ஆண்டில்
நிலத்தெழு மாற்றம் என்னே? நினைப்பதன் பதிவே இப்பா! (1)

--

Siva Siva

unread,
Aug 15, 2011, 10:53:27 PM8/15/11
to santhav...@googlegroups.com
தலைமைக் கவிதை அழகு
அதில் விஞ்ஞான உலகு
உயிர்வதை யில்லா ஊன்!
பார்க்கும்இடம் எங்கும் கான்!

அறுசீரில் சீருறு பாடல்.
வாழ்க!

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2011/8/15 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

Kaviyogi Vedham

unread,
Aug 16, 2011, 1:54:56 AM8/16/11
to santhav...@googlegroups.com
ம்ம்..நம் சந்தர் தலைமையில் கவியரங்கம் அட்டகாசமாய்த் தொடங்கியாச்சு.
கவியும் தத்துவபரமாய்ச்சொலிக்கிறது. வாழ்க தலைவர்!ம்ம் நடக்கட்டும்..தேன் பாதை..
 யோகியார்

2011/8/15 Chandar Subramanian <chandarsu...@gmail.com>
தலைமைக் கவிதை

என்னுலகம் 2300

உலகதன் ஓட்டம் போலே ஓடிடும் நாள்கள் எல்லாம்!
நிலையெலாம் மாறும், ஏதும் நிரந்தரம் ஆகாப் போதில்,
புலருமிந் நாளை ஒட்டிப் போகுமுந் நூறாம் ஆண்டில்
நிலத்தெழு மாற்றம் என்னே? நினைப்பதன் பதிவே இப்பா! (1)

வளருமந் நாளில் மண்ணை வகுத்திட நாடென் றேதும்
அளவிலை, எல்லை யென்னும் அவையெலாம் மாறி ஒன்றாய்
உளநிலம், உள்ளோர் வாழ்வை உழற்றிடும் போருக் கென்றோர் 
களமிலா உலகம், காதல் கருத்தினில் உறையும் காலம்! (2)

குழவியை வயிற்றில் ஏந்திக் கொடுக்குமக் காலம் எல்லாம்
பழைமையாய் மாறிப் போகும்; பண்டமாய் ஆய்வுச்சாலைக் 
குழலிடை அண்டம் விந்து கொண்டதை வளர வைக்கப்
பழகிடும் முறையே எங்கும் பழக்கமாய் ஆகும் காண்க! (3)

SUBBAIER RAMASAMI

unread,
Aug 16, 2011, 2:46:52 AM8/16/11
to santhav...@googlegroups.com
இரண்டாயிரத்து முப்பதில் என்னுலகம் எப்படி

இருக்கும் என்ற அறிவியல் கவிதை
திரண்ட கருத்தொடும் சிந்தனைச்சிறப்பொடும் அறிவியல்
தெளிவொடும்தலைவர் அளித்தார்
நல்ல தொடக்கம் வாழ்க அவர் திறம்
பத்துஆண்டுகட்கு முன்பு நான் எழுதிய எதிர்கால அறிவியல் கவிதை இதோ:


ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் காணா அறிவியல் பூத்ததிப்போது- இந்த
அற்புதம் அந்தநாள் ஏது?
மாயிருஞாலம் ஒரு சிறு புள்ளி-
வந்ததுபார் புது விந்தை- இனி
வானத்தில் போடுவோம் சந்தை

ஆண்மகவா இல்லை பெண்மகவா அதை
அப்படியேபெற லாகும் அதன்
அங்கம் விதித்திடலாகும்
வேண்டும் வகைவகை வீதிக்கு மேலே
விரைந்து பறக்கும் பேருந்து- விண்
வெளியினில் ஆடுவோம் பந்து

ஒருசிறு மாத்திரை உண்டிடில் போதும்
ஒருவருடம் பசிக்காது- இந்த
ஒன்றினுக் கொப்புமை ஏது?
வருகென மாரி வரச் செய்திடலாம்
மாறும் பருவம்நம் கையில்- நினைத்தால்
வசந்தமும் காணலாம் தையில்

முதுமையே வாரா தொழிகெனச்சொல்ல
முறைகள் பல உருவாகும் -மண்ணில்
மூப்பு வராமலே போகும்
பதுமைகள் பலவும் இயந்திரமாகப்
ப்ணிகள் புரிந்திடும் வீட்டில்
-இனிப்
பள்ளிகளே இலை நாட்டில்
தாளுக் கினியொரு வேலையே இல்லை-
தானே பலவும் நடக்கும்- - கணினி
தயவில் அனைத்தும் கிடைக்கும்
மூளைய மாற்றும் அறுவை சிகிச்சை
மூலைக்கு மூலை நடக்கும்-வெறும்
மூடர்க் கறிவு கொடுக்கும்
இம்மா உலகினில் எல்லாம் இனிமேல்
எந்திர நிச்சய மாகும்- ஆமாம்
எல்லாம் அதன்வழிப் போகும்
அம்மா, உலகம் அனைத்தும் இயக்கும்
ஆதிப் பரம்பொருள் சக்தி இங்கே
யாரறிவார்உன்றன் உத்தி?

thangamani

unread,
Aug 16, 2011, 6:26:54 AM8/16/11
to சந்தவசந்தம்
எண்ண வெளியில் பறந்தே
...இறகு விரிக்கும் பறவை
விண்ணின் உயரம் இவரின்
...மேன்மை கவிதைத் திறமே
வண்ண மயமாய்த் தெரியும்
...வளர்ச்சி விந்தைப் புதுமை
திண்ணம் சந்தர் தலைமைச்
...சிறப்பே வாழ்க! வளர்க!

அன்புடன்,
தங்கமணி.


On Aug 15, 2:28 pm, Chandar Subramanian <chandarsubraman...@gmail.com>
wrote:
> தலைமைக் கவிதை...

Kaviyogi Vedham

unread,
Aug 16, 2011, 9:48:59 AM8/16/11
to santhav...@googlegroups.com
ஆகா! நல்ல கற்பனை,
 யோகியார்

2011/8/16 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 16, 2011, 11:10:33 AM8/16/11
to santhav...@googlegroups.com

இன்னும் முன்னூ றாண்டின் பின்னே

.. எவ்வா றிருக்கும் உலகம்?

என்னும் கேள்விக் கேற்ற விடையை

.. எம்கண் முன்னே அளித்தார்

தின்னும் பொருள்கள் முதலாய் உடலில்

.. தீரா நோய்கள், பயணம்

இன்ன வகையாய் எதிலும் மாற்றம்

.. இருக்கும் என்பதை விரித்தார்

 

சொன்ன விதமும் திரட்டிய கருத்தும்

.. தொடுத்த யாப்பும் அருமை

என்ன திறமை இவர்க்கே! என்று

.. எவரும் வியத்தல் பெருமை

பன்னும் பனுவல் இருவகை எழுத்தில்

.. படைத்தல் இயலும் என்றார்

அன்ன வகையில் அமையும் கவிதை

.. அரங்கை ‘வசந்தம்’ அமைக்கும்!

 

..அனந்த்


ஒவ்வொரு மொழியும் எழுத்தை, ஒன்றிலை, இரண்டாய்க் கொள்ளும்,

செவ்வியல் வழக்க மென்றும் சேர்ந்தமை வடிவ மென்றும்!

இவ்வியல் பாலிம் மண்ணின் எழுத்தெலாம் இணையும் அந்நாள்!

அவ்விதம் ஆகு மாயின் அனைவரின் மொழியும் ஒன்றே! (19)


2011/8/15 Chandar Subramanian <chandarsu...@gmail.com>
தலைமைக் கவிதை

என்னுலகம் 2300

உலகதன் ஓட்டம் போலே ஓடிடும் நாள்கள் எல்லாம்!
நிலையெலாம் மாறும், ஏதும் நிரந்தரம் ஆகாப் போதில்,
புலருமிந் நாளை ஒட்டிப் போகுமுந் நூறாம் ஆண்டில்
நிலத்தெழு மாற்றம் என்னே? நினைப்பதன் பதிவே இப்பா! (1)


பிறப்பினால் சமய மேற்கும் பிழையினி மறைந்து போகும்!
முறைப்படி சிறுவர் வாழ்க்கை முடியுமப் பொழுதில் எல்லா
மறைகளும் ஓதிப் பார்த்து மனத்தெழும் பேச்சைக் கேட்டு 
நிறையுளத் தோடொன் றேற்கும்; நீக்கிடும் நிலையும் பார்க்கும்! (17)

Chandar Subramanian

unread,
Aug 16, 2011, 10:01:53 PM8/16/11
to santhav...@googlegroups.com
மின்மடல் மூலம் வையம்
.. மேவுமிக் கவிய ரங்கில்
என்முதற் பாடல் தன்னை
.. இழையினில் படித்த வர்க்கும்
நன்றென இடுகை யிட்ட
.. நட்புடை அன்பர் கட்கும்
நன்றிகள் பலவாம் என்றே
.. நல்கிடும் நெஞ்சம் இங்கே! 

Chandar Subramanian

unread,
Aug 16, 2011, 10:03:49 PM8/16/11
to santhav...@googlegroups.com
முதல் அழைப்பு: கவிமாமணி இலந்தை

சந்தமதிற் சிறந்தாரை சாதித் தாரை
.. சங்கமெலாம் ஒலிப்பாரை தங்கத் தாரை 
சிந்தனையில் உயர்ந்தாரை செம்மை யாரை
.. சிங்கநிகர்க் குரலாரை தீஞ்சொல் லாரை
முந்தையனை விழைவாரை முன்னால் மாரி
.. முகிலெனப்பா மொழிவாரை முன்நிற் பாரை
இந்தஅவைத் தலைஅவரை இலந்தை யாரை
.. இசைப்பாடல் இடவேண்டி அழைத்து நின்றேன்!   

Girija Varadharajan

unread,
Aug 16, 2011, 10:18:18 PM8/16/11
to santhav...@googlegroups.com
வயதில் சற்று இளையவனாக இருக்கும் ஒருவனுக்கு இவ்வழைப்பு என்றால், 
இலந்தையாரின் யானைப் பாடல் போல் மற்றுமொன்று கிட்டும்.


சந்தமதில் சிறந்தானை, சாதித் தானை
         சங்கமெலாம் ஒலிப்பானை, தங்கத் தானை 
..................................................... 

என்று கற்பனை செய்து பார்த்து மகிழ்ந்தேன்.

சந்தர், 

அற்புதம் உங்கள் அழைப்பு 
அடியேனுக் கில்லையிவ் வுழைப்பு.. 


வரத ராஜன். அ.கி.

என்முறை வரும் போது, இவ்வளவு சிறப்பாக அழைக்கப் படுவானேயாகில், அவ்வழைப்புக் ஏற்ப, அதற்குத் தகுந்த மதிப்பும் மரியாதையும் தரும் வகையில்,  எப்படிப் பாக்கள் தருவது என்ற கிலி இப்போழுடே ஆட்டிப் படைக்கிறது !



2011/8/17 Chandar Subramanian <chandarsu...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:

SUBBAIER RAMASAMI

unread,
Aug 17, 2011, 3:29:44 AM8/17/11
to santhav...@googlegroups.com
தலைவர் வணக்கம்

அரங்கம் தொடங்குமுனே அற்புதமாய் இங்கே
சுரங்கத் திருந்துகவி தோண்டி எடுத்ததைப்போல்
அள்ளிக் கொடுத்திருக்கும் அன்புக் கவி ஆலை
தள்ளரிய பாடல்தரும் சந்தருக் கென்வணக்கம்.


என்நிலை
எழுத முடியவில்லை- எண்ணம்
எழுத்தில் படிவதில்லை
பழுது எலும்பிலென்றால்- அட
பாட்டும் முடம்படுமோ
உழுத வயலினிலே முன்பே
உற்பத்தி ஆனவொன்றை-
எழுதி இடுகின்றேன்- அதை(வை)
ஏற்றிட வேண்டுகிறேன்
இலந்தை
என் உளம் கவர் கவிஞன்

அந்தக் கவிஞனைத் தேடுகிறேன் அவன்
யாரென இன்னும் நான் காணவில்லை- எந்த
இடத்திலும் காணலாம் என்கிறார் ஏனோ
எனக்குத் தெரியவில்லை அந்தக்

உள்ளுக்குள் நின்றெனை ஊக்கப் படுத்தியே
ஒவ்வோர் உணர்வினைத் தட்டுகிறான்
கள்ளத் தனமாக என்றன் கனவினில்
காணாமலே இசை கொட்டுகிறான் அந்தக்

கோடை இடியிலே கொண்டல் பொழிவிலே
கொட்டும் அருவி முழவினிலே
ஆடை கழற்றிய புல்லின் உராய்விலே
அட்டகாச மாகப் பாடுகிறான் அந்தக்

சோறு கொதிக்கும் உலையில் அகவலின்
சுத்த சங்கீதத்தைக் காட்டுகிறான்
ஆறு நடக்கும் நடையில் விருத்தத்தின்
அத்தனை சந்தமும மீட்டுகிறான் அந்தக்..

சாக்கடை நாற்றத்தை வார்த்தையில் பூசியே
ஜவ்வாது போலவே மாற்றுகிறான்
தீக்கடையும் உலைக் கூடத் துருத்தியின்
ஜீவனை வாங்கியே சாற்றுகிறான் அந்தக்


துள்ளுமனமெனில் துள்ளுகிறான் சுக
சோகத்தை வார்த்தையில் அள்ளுகிறான்
பள்ளு சந்தம் சிந்து பாவகை யாவையும்
பாடிப் பாடிப் பாடித் தள்ளுகிறான்

அங்கொரு மல்லிகை மெல்லிதழ் கோதியே
ஆகா, மதுர கவி மொழிவான்
எங்கும் இயங்கும் இயக்கம் அனைத்திலும்
ஏற்றதோர் ஆசு கவி பொழிவான்

காலை வெளுப்பிலும் மாலைச் சிவப்பிலும்
காட்டும் மிறைப்பா ஒரு புதுமை
ஓலக் கடலலை உச்சியில் வித்தாரம்
ஓமெனப் பாடுதல் ஓர் இனிமை

சேவலின் கட்டியம் யார்கவிதை எழும்
சிங்கத்தின் கர்ஜனை யார்கவிதை
நாவல் மரக்குயில் தொண்டையிலே இசை
நாதம் பொழிவது யார்கவிதை

காணவில்லை தனைக் காட்டவில்லை என்ன
காரணம் என்றும் புரியவில்லை
பாணம் விரைகிற ஓசையைக் கேட்கிறேன்
பார்வையில் ஏனோ தெரியவில்லை

காட்சிகள் யாவும் கவியெனச் செய்பவன்
காட்சிப் பொருளென மாறுவனோ?
சாட்சியாய் நின்றவன் சாற்றும் புதுப்புதுச்
சங்கதி யாவையும் கூறுவனோ அந்தக்

என்றன் உளம்கவர் அந்தக் கவிஞனை
எந்தப் பெயர் சொல்லிக் கூப்பிடுவேன்?
என்ன இருக்குது பேரினில் நண்பரே
என்சொற் கவனையே காப்பிடுவேன்! அந்தக்


On 8/17/11, Chandar Subramanian <chandarsu...@gmail.com> wrote:
> *முதல் அழைப்பு: கவிமாமணி இலந்தை*

Kaviyogi Vedham

unread,
Aug 17, 2011, 4:33:08 AM8/17/11
to santhav...@googlegroups.com
ஆகா! முதல் கவியே அட்டகாசம். கீழ்க்கண்ட வரிகள் யாவும் எனைச் சிலிர்க்க வைத்தன. அழகு,அழகு.. வாழ்க இலந்தையானை. சாரி.. இலந்தையார்
 யோகியார்
 

அந்தக் கவிஞனைத் தேடுகிறேன் அவன்
 யாரென இன்னும் நான் காணவில்லை-  எந்த
இடத்திலும் காணலாம் என்கிறார் ஏனோ
எனக்குத் தெரியவில்லை                    அந்தக்

உள்ளுக்குள் நின்றெனை ஊக்கப் படுத்தியே
ஒவ்வோர் உணர்வினைத் தட்டுகிறான்
கள்ளத் தனமாக என்றன் கனவினில்
காணாமலே இசை கொட்டுகிறான்            அந்தக்

dheeban

unread,
Aug 17, 2011, 6:12:48 AM8/17/11
to santhav...@googlegroups.com
அருமையான ஆரம்பம் ... !


சோறு கொதிக்கும் உலையில் அகவலின்
சுத்த சங்கீதத்தைக் காட்டுகிறான்
ஆறு நடக்கும் நடையில் விருத்தத்தின்
அத்தனை சந்தமும மீட்டுகிறான்              
 
முதல் அழைப்பில் இருந்து கவிஞன் தேடல் தொடரட்டும் !

இலந்தைக் கவிதை இலந்தை அல்ல.. இனிய பலா !

-மகுடதீபன்
2011/8/17 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>
--

Pas Pasupathy

unread,
Aug 17, 2011, 10:30:59 AM8/17/11
to santhav...@googlegroups.com
சந்தர் அழைப்புச் சபாஷ்!
 
தன்னைக் கவர்ந்த கவிஞரைப் பற்றியே
. சந்த மணிகளைச் சிந்திவிட்டார் !
இன்னும் குழப்பம் எனக்கிலையே என்னை
. ஈர்க்கும் கவிஞர் இலந்தையென்று!
 


 
2011/8/17 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>
என் உளம் கவர் கவிஞன்

அந்தக் கவிஞனைத் தேடுகிறேன் அவன்
 யாரென இன்னும் நான் காணவில்லை-  எந்த
இடத்திலும் காணலாம் என்கிறார் ஏனோ
எனக்குத் தெரியவில்லை                    அந்தக்

--

kirikasan

unread,
Aug 17, 2011, 11:12:35 AM8/17/11
to சந்தவசந்தம்
ஐயா,
தங்கள் கவிதையை வாழ்த்தும் சிறுபிள்ளை நான்!
அற்புதம். அழகான கவி மனதில் இனிமையாக ஒலிக்கிறது.
மிகமிக மகிழ்ந்தேன்! பாராட்ட வார்த்தைகள் அறியேன்! அதனால்
வாழ்த்தி மகிழ்கிறேன்!

அன்புடன் கிரிகாசன்

Siva Siva

unread,
Aug 17, 2011, 12:05:48 PM8/17/11
to santhav...@googlegroups.com
தாரையெனப் பொழியும் அழைப்பு! அருமை.

2011/8/16 Chandar Subramanian <chandarsu...@gmail.com>
It is loading more messages.
0 new messages