கவியரங்கம்: நடைமுறை

557 views
Skip to first unread message

Pas Pasupathy

unread,
May 18, 2011, 11:44:08 AM5/18/11
to santhav...@googlegroups.com

1.  முதலில் பெயர் கொடுக்க வேண்டும்!

2. புதியவர் என்றால், தன்னைப் பற்றிய ஒரு குறுகிய அறிமுகத்தைக் கவியரங்கத்
தலைவருக்குத் தனிமடலில் அனுப்புதல் நலம். அவர் அழைப்பதற்கு
உதவும்.
 
3.  சந்த வசந்த மடல்களைத்  தினமும் படிக்க வேண்டும்! தலைவர் ஒருவரை எப்போது 
கூப்பிடுவார் என்பதைப் பொதுவில் உறுதியாய்ச் சொல்லமுடியாது.  பணித் தொல்லைகள் இருந்தாலோ, கூப்பிடும் நாளைப் பற்றிய பிரச்சனை இருந்தாலோ தனிமடலில் தலைவருடன் தொடர்பு கொள்ளவும்.

4. தலைவர் அழைப்பு விடும் வரை காத்திருந்து, பிறகு தாமதிக்காமல் தன் கவிதையை **அதே இழையில்** இடவேண்டும். 

5. எதிர்பாராத காரணங்களால், அழைப்பு வரும் சமயத்தில் , இணையத்திற்கு வர முடியாது என்ற நிலைமை வந்தால்/ தெரிந்தால், முன்னமே கவி அரங்கத் தலவருக்கு ( தனி மடலில் ) தன் கவிதையை அனுப்புதல் நன்று.

6. மற்றபடி, மற்றோர் கவிதைகளைப் படித்துத் தன் கருத்துகளைப் ( உரைநடையிலோ, கவிதை வடிவிலோ ) பகிர்ந்து கொள்வது மிக நன்று. தலைவர் அழைப்பு + பின்னர்

கவிஞரின் பாடல் + பின்னர் மற்றோரின் கருத்துகள் + பின்னர் தலைவரின் நன்றியுரை.

பின்னர் அடுத்த அழைப்பு...இப்படிப் போகும்.  

7. அழைப்பு வரும்வரை காத்திராமல், கவிதையை எவ்வளவு விரைவில் புனைந்து வைத்துக் கொள்ள முடியுமோ, அவ்வளவுக்கவ்வளவு கவியரங்கம் தொய்வு இல்லாமல் சுவையுடன் ஓடும். மேலும், இவ்வாறு செய்வதால் மற்றோரின் கவிதைகளின் தாக்கங்களும் ஒருவரின் கவிதையில் இருக்காது.

இவை எனக்குத் தோன்றிய சில நடைமுறைப் பழக்கங்கள், பரிந்துரைகள்.

8. யாப்பில் கட்டுப்பாடு உண்டா? எவ்வளவு வரிகள்? என்ற ஒரு கேள்விக்கு
இலந்தை முன்பொரு முறை சொன்னதை மீண்டும் இடுகிறேன்:
 

” யாப்பைப் பொறுத்து எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லை.

அடிக்கணக்கிற்கும எந்தவிதமான கட்டுப்பாடு இல்லை என்றாலும் படிப்பவர்கள் சோர்வடையாத அளவுக்குள் இடுவது நலம். சந்தவசந்தம் தொடங்கப்பட்டபொழுது மரபுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்பட்டு வந்தது. பின்னர் அது தளர்த்தப்பட்டது. ”

9. ஒவ்வொரு கவியரங்கத் தலைவரும் அரங்கை எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம். 
அவருடைய விதிமுறைகளே முடிவானவை. இங்கு நான் இட்டவை, எனக்குத் தோன்றிய சில நடைமுறைப் பழக்கங்கள், பரிந்துரைகள். தலைவர் இவற்றிற்குக் கட்டுப்பட
வேண்டியதில்லை!

 

மேலும், ஐயங்கள் இருந்தால் கேட்கவும்

இத்துடன் கவியரங்கம் -32 -இன் கோப்பை இணைத்திருக்கிறேன்.

படித்துப் பார்க்கவும்; நடைமுறை விளங்கும்.

 

--

KA-32.pdf

selva kumaran

unread,
May 18, 2011, 1:45:13 PM5/18/11
to santhav...@googlegroups.com
சென்ற கவியரங்கம், வெண்பா அந்தாதியாக இருந்தது.

இந்த முறை எந்த வடிவத்திலும் இருக்கலாமா?



2011/5/18 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

VETTAI ANANTHANARAYANAN

unread,
May 18, 2011, 2:50:05 PM5/18/11
to santhav...@googlegroups.com
இருக்கலாம். பசுபதி அழகாகத் தொகுத்தளித்த கவியரங்க முறைகளில் கூறியது போல,  யாப்பின் வகை பற்றிய கட்டுப்பாடு இல்லாமல் தான்  பெரும்பாலான சந்தவசந்தக் கவியரங்கங்கள் அமைந்திருக்கும்.  முந்தைய கவியரங்கள் பலவற்றைச் சந்த வசந்தம் யாஹூ தளத்தில் காணலாம்.  அத்தள உறுப்பினர்கள் கோப்புப் பகுதியில் (http://groups.yahoo.com/group/santhavasantham/files/kaviarangam/) காணலாம்.  உறுப்பினரல்லாதோர் messages click செய்து search-ல் கவியரங்கம் என்றிடலாம் (காட்டு: http://groups.yahoo.com/group/santhavasantham/msearch?query=kaviyarangkam&charset=windows-1252).

அனந்த்

Pas Pasupathy

unread,
May 18, 2011, 4:42:32 PM5/18/11
to santhav...@googlegroups.com
1. One can read the recent  Kaviyarangam files ( in Unicode)
by downloading the zipped files from
 
( NOTE: this will be available only until Aug .31 )
 
2. Many  previous Kaviyarangam files (in TSCII fonts ) are available in links
listed in my mail
 
( stored in public forumhub sites )
Pasupathy
2011/5/18 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

VETTAI ANANTHANARAYANAN

unread,
May 18, 2011, 5:25:13 PM5/18/11
to santhav...@googlegroups.com
33-ஆம் (குரல்வழிக்) கவியரங்கம் தொகுப்பை இங்கே காணலாம்:

https://docs.google.com/viewer?a=v&pid=explorer&chrome=true&srcid=0B4fqquRcuaT7YTdiMDhhNDEtMDY4MS00OTA2LTkyOWYtNmFjZjI0NDczODQy&hl=en

இவ்வரங்கத்தில் ஒலித்த குரல்களில் சிலவற்றை இத்தளத்தில் காணும்
சுட்டிகளைத் தேர்ந்து கேட்கலாம்.

https://docs.google.com/?tab=mo&authuser=0&pli=1#folders/folder.0.0B4fqquRcuaT7YzA0MzY1MDktZTQzMy00YWFkLWJmOGQtNzhhZTM0MmI1YzY0

இந்தச் சுட்டிகளைத் திறப்பதில் ஏதேனும் இடைஞ்சல் இருந்தால் தெரிவிக்கவும்.

அனந்த்

On 5/18/11, Pas Pasupathy <pas.pa...@gmail.com> wrote:
> 1. One can read the recent Kaviyarangam files ( in Unicode)
> by downloading the zipped files from
> https://groups.google.com/group/santhavasantham?hl=en
>
> ( NOTE: this will be available only until Aug .31 )
>
> 2. Many previous Kaviyarangam files (in TSCII fonts ) are available in
> links
> listed in my mail
> https://groups.google.com/group/santhavasantham/msg/121330ac7365bd5b?hl=en
>
> ( stored in public forumhub sites )
> Pasupathy
> 2011/5/18 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
>
>> இருக்கலாம். பசுபதி அழகாகத் தொகுத்தளித்த கவியரங்க முறைகளில் கூறியது போல,
>> யாப்பின் வகை பற்றிய கட்டுப்பாடு இல்லாமல் தான் பெரும்பாலான சந்தவசந்தக்
>> கவியரங்கங்கள் அமைந்திருக்கும். முந்தைய கவியரங்கள் பலவற்றைச் சந்த வசந்தம்
>> யாஹூ தளத்தில் காணலாம். அத்தள உறுப்பினர்கள் கோப்புப் பகுதியில் (
>> http://groups.yahoo.com/group/santhavasantham/files/kaviarangam/)
>> காணலாம். உறுப்பினரல்லாதோர் messages click செய்து search-ல் கவியரங்கம்
>> என்றிடலாம் (காட்டு:
>> http://groups.yahoo.com/group/santhavasantham/msearch?query=kaviyarangkam&charset=windows-1252
>> ).
>>
>> அனந்த்
>>
>>

>> 2011/5/18 selva kumaran <selvaku...@gmail.com>


>>
>>> சென்ற கவியரங்கம், வெண்பா அந்தாதியாக இருந்தது.
>>>
>>> இந்த முறை எந்த வடிவத்திலும் இருக்கலாமா?
>>>
>>>
>>>
>>>
>>> 2011/5/18 Pas Pasupathy <pas.pa...@gmail.com>
>>>
>>>> 1. முதலில் பெயர் கொடுக்க வேண்டும்!
>>>> 2. புதியவர் என்றால், தன்னைப் பற்றிய ஒரு குறுகிய அறிமுகத்தைக் கவியரங்கத்
>>>> தலைவருக்குத் தனிமடலில் அனுப்புதல் நலம். அவர் அழைப்பதற்கு
>>>> உதவும்.
>>>>
>>>> 3. சந்த வசந்த மடல்களைத் தினமும் படிக்க வேண்டும்! தலைவர் ஒருவரை எப்போது
>>>> கூப்பிடுவார் என்பதைப் பொதுவில் உறுதியாய்ச் சொல்லமுடியாது. பணித்
>>>> தொல்லைகள் இருந்தாலோ, கூப்பிடும் நாளைப் பற்றிய பிரச்சனை இருந்தாலோ
>>>> தனிமடலில் தலைவருடன் தொடர்பு கொள்ளவும்.
>>>>

>>>> 4. தலைவர் *அழைப்பு விடும் வரை காத்திருந்து, பிறகு தாமதிக்காமல் தன்
>>>> கவிதையை **அதே இழையில்** இடவேண்டும். *


>>>>
>>>> 5. எதிர்பாராத காரணங்களால், அழைப்பு வரும் சமயத்தில் , இணையத்திற்கு வர
>>>> முடியாது என்ற நிலைமை வந்தால்/ தெரிந்தால், முன்னமே கவி அரங்கத் தலவருக்கு
>>>> (
>>>> தனி மடலில் ) தன் கவிதையை அனுப்புதல் நன்று.
>>>>
>>>> 6. மற்றபடி, மற்றோர் கவிதைகளைப் படித்துத் தன் கருத்துகளைப் ( உரைநடையிலோ,
>>>> கவிதை வடிவிலோ ) பகிர்ந்து கொள்வது மிக நன்று. தலைவர் அழைப்பு + பின்னர்
>>>>
>>>> கவிஞரின் பாடல் + பின்னர் மற்றோரின் கருத்துகள் + பின்னர் தலைவரின்
>>>> நன்றியுரை.
>>>>
>>>> பின்னர் அடுத்த அழைப்பு...இப்படிப் போகும்.
>>>>
>>>> 7. அழைப்பு வரும்வரை காத்திராமல், கவிதையை எவ்வளவு விரைவில் புனைந்து
>>>> வைத்துக் கொள்ள முடியுமோ, அவ்வளவுக்கவ்வளவு கவியரங்கம் தொய்வு இல்லாமல்
>>>> சுவையுடன் ஓடும். மேலும், இவ்வாறு செய்வதால் மற்றோரின் கவிதைகளின்
>>>> தாக்கங்களும்
>>>> ஒருவரின் கவிதையில் இருக்காது.
>>>>
>>>> இவை எனக்குத் தோன்றிய சில நடைமுறைப் பழக்கங்கள், பரிந்துரைகள்.
>>>> 8. யாப்பில் கட்டுப்பாடு உண்டா? எவ்வளவு வரிகள்? என்ற ஒரு கேள்விக்கு
>>>> இலந்தை முன்பொரு முறை சொன்னதை மீண்டும் இடுகிறேன்:
>>>>
>>>>
>>>> ” யாப்பைப் பொறுத்து எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லை.
>>>>
>>>> அடிக்கணக்கிற்கும எந்தவிதமான கட்டுப்பாடு இல்லை என்றாலும் படிப்பவர்கள்
>>>> சோர்வடையாத அளவுக்குள் இடுவது நலம். சந்தவசந்தம் தொடங்கப்பட்டபொழுது
>>>> மரபுக்கு
>>>> மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்பட்டு வந்தது. பின்னர் அது தளர்த்தப்பட்டது. ”
>>>> 9. ஒவ்வொரு கவியரங்கத் தலைவரும் அரங்கை எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம்.

>>>> *அவருடைய விதிமுறைகளே முடிவானவை*. இங்கு நான் இட்டவை, எனக்குத் தோன்றிய சில

magudadheeban

unread,
May 18, 2011, 7:10:09 PM5/18/11
to santhav...@googlegroups.com
பசுபதி ஐயா அவர்களின் மேலான
வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி ....
அனந்த் அவர்களே உங்களுக்கும் சேர்த்தே !

-மகுடதீபன்

2011/5/19 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

Kaviyogi Vedham

unread,
May 19, 2011, 2:17:15 AM5/19/11
to santhav...@googlegroups.com
சாரி அநந்த்..ஒன்று கூட திறக்க முடியவில்லை. அது சொன்னது. it is outdated.. shd be renewedசரியா? செக் செய்யவும்.
 யோகியார்

2011/5/19 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>



--
Can YU Pl. SEE MY NEW BloG and comment on the contents?
யோகியார். வேதம்.(Yogiyar vedham).
Thalaivar,
Sidhdhar Babaji YogaSram, 2/682,
 10th cross st,Renga Reddy garden, Neelankarai, Chennai-600115
அனைவரும் வாழ்க வளமுடன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!
சித்தர் ஸ்ரீ லஹரி பாபாஜி யோகாஸ்ரமம்,2/682Renga Reddy Garden நீலாங்கரை,(Opp. Hotchips new HOTEL)-சென்னை-600115(போன் 64565979)-
*****************************
 

Lalitha & Suryanarayanan

unread,
May 20, 2011, 5:02:01 AM5/20/11
to santhav...@googlegroups.com
அய்யா!

 உங்களின் விரிவான  ,தெளிவான விளக்கங்களுக்கு என் நன்றிகள். அதைப்  படித்த பிறகு என்னாலும் இந்தக் கவியரங்கத்தில் பங்கேற்க முடியும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. ஆனால்  ஜூன் மாதம் 3 -ஆம் தேதி எங்கள் இல்லத்தில் திருமணம் நடக்க இருப்பதால், ஜூன் 2  மற்றும் 3 ஆம் தேதிகளில் என்னால்  பங்கேற்க முடியாது . தங்களின் அறிவுரைப்படியே நான் தலைவருக்குத் தனி மடலில் என் கவிதையை  முன்கூட்டியே எப்போது வேண்டுமானாலும் அனுப்ப இயலும். இன்றே  கவிரங்கத்தில் பங்கேற்க  என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்துவிடுகிறேன்.

வணக்கம்.

சிவ.சூரி.

2011/5/18 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

Pas Pasupathy

unread,
May 20, 2011, 8:58:32 AM5/20/11
to santhav...@googlegroups.com
நன்று, சிவசூரி. ( உங்கள் ஒப்புதலை அந்த இழையில் பார்த்தேன்.
நன்று)
 
கவியரங்கத்தில் சேர நினைப்பவர்கள்  தங்கள் ஒப்புதலைக் கவியரங்கம் என்று இருக்கும் இன்னொரு இழையில் தெரிவித்தல் நலம். (ஒரு தனிமடலையும் தலைவருக்கும்  அனுப்புதல் நலம். எந்த நாள்களில் இணையத்தில் நேராகப் பங்கேற்க முடியாது என்பதையும் தெரிவிக்கலாம்.)
 
 
முடிந்தவரை கவிஞரே மடற்குழுவில்  தன் பாடலை இடுவதே சுவை கூட்டும்.  தலைவர் மூலம் தன் கவிதையை இடுவது இரண்டாம் பட்ச..ஏன், கடைசித் ...தேர்வாகவே... இருக்கட்டும். ஏற்கனவே தலைவருக்கு நிறைய பணி. கொஞ்சம் வேலையைக் குறைக்கலாம், இல்லையா?
 
சில சமயம், கவிஞர் வரமுடியாதபோது, கவிதையை ஏற்கனவே பெற்ற கவிஞரின் ( நம்பத்தக்க!:-)) ஒரு நண்பரும் கவிஞரின் கவிதையைத் தாமதமின்றி அரங்கில் இடுவது உண்டு. மிஞ்சிப் போனால், தலைவர் தன் அழைப்பிற்குப் பின் ஓரிரு நாள் காத்திருந்து விட்டு, அடுத்த கவிஞரின் அழைப்பை இடுவார். கொடுத்த அழைப்பைப் (பொதுவில்!:-))  வாபஸ் வாங்க மாட்டார்!  ஓரிரு நாள் கழித்து, இணையத்தில் மீண்டும் மெதுவாகத் தலைகாட்டும் கவிஞர் தன் கவிதையை இடுவதும் உண்டு,!)
 
இந்த இழையை நடைமுறைத் தகவல்களுக்கு, அதைப் பற்றிய கேள்விகளுக்கு  மட்டும் ஒதுக்கலாம். ( ஒவ்வொரு கவியரங்கத் தொடக்கத்திலும் இப்படிப் பட்ட கேள்விகள் வருவதால், இந்த இழையைத் தொடங்கினேன்.
மீண்டும் மீண்டும்  இத்தகவல்களைத் தருவதைத் தவிர்த்து,  இந்த இழையைக் காட்டலாம் என்ற சுயநல எண்ணத்தில் தான்! )
 
பலர் கடைசியாகக் கூப்பிடுங்கள் என்று கேட்பதும் வழக்கம்தான்!
( ஏனென்று எனக்குப் புரியவில்லை! பொதுவாக, கவியரங்கத்
தலைப்பைத் தலைவர் பல வாரங்களுக்கு முன்னே கொடுத்து
விடுவார். அதற்கு மேலும், கவியரங்கம் தொடங்கிச் சிலவாரங்களுக்குப் பின்னர் என்னைக் கூப்பிடுங்கள் என்று சொல்வது எதற்கு?  கவிதையில் அழைப்பைப் பார்த்த பிறகுதான்
கவிதையைப் புனைவேன் என்ற விரதமா?  எல்லோரும் கடைசிதான் என்று சொல்லி ஒரு தலைவர் ஒரு குறிப்பிட்ட
நாள் சொல்லி, அன்று **எல்லோரும்** கவிதைகளை இடவேண்டும்
என்று சொன்னால் என்ன? அன்று இடாதவரின் கவிதையை
சந்தவசந்தக் கவிதைத் தொகுப்பில் சேர்க்கமுடியாது என்று
சொன்னால் என்ன?:-))
 

 
2011/5/20 Lalitha & Suryanarayanan <lall...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Kaviyogi Vedham

unread,
May 20, 2011, 9:35:41 AM5/20/11
to santhav...@googlegroups.com
தூள் கிளப்புறீர் பாஸ்..
புதிய சிந்தனை..தலைவர் கூப்பிடும்போது பட்டெனத் தன்கவியை இடுவதே சாலச்சிறந்தது.. அப்போ கூப்பிடு இப்போ என்னைக் கூப்பிடு எனத் தலைவர்க்கே கேள்வி விடுதல் நன்றன்று...
 யோகியார்

2011/5/20 Pas Pasupathy <pas.pa...@gmail.com>



--

Lalitha & Suryanarayanan

unread,
May 20, 2011, 9:37:10 AM5/20/11
to santhav...@googlegroups.com
அன்புடைய அய்யா அவர்களே!

வணக்கம்.
நன்றி.

என்னைப் பொறுத்த வரையில் எல்லோரும் ஒரே நாளில் தனது கவிதையை  இடுதல் என்பது மிகவும் உயர்ந்தது;  அப்படிச் செய்தால் மற்றவரின் கவிதைகளால் தனது கவிதை பாதிக்கப்படாமல் ஒவ்வொருவரும்  காத்துக் கொள்ளலாம் . ஒரே பொருளில் கவிதைகளை எழுதும் போது அப்படிப்பட்ட  பாதிப்பு வரக் கூடும்.  எனினும் நானும் விருப்புடன் என்னை நமது  கவியரங்கத்தின் விதி முறைகட்கு உட்படுத்திக் கொள்கிறேன்.


அன்புடன்
சிவ.சூரி

2011/5/20 Pas Pasupathy <pas.pa...@gmail.com>
நன்று, சிவசூரி. ( உங்கள் ஒப்புதலை அந்த இழையில் பார்த்தேன்.
நன்று)
 


Kaviyogi Vedham

unread,
May 20, 2011, 9:41:28 AM5/20/11
to santhav...@googlegroups.com
நீங்கள் சொல்வது கவியரங்கமே அன்று... ஒரே நாளில் எல்லோரும் உயர்ந்த உணவு கொடுத்தால் வயிறு எப்படித்தாங்கும்.?.. இப்போது உள்ள நடைமுறையே சாலச்சிறந்தது.
யோகியார்
2011/5/20 Lalitha & Suryanarayanan <lall...@gmail.com>
அன்புடைய அய்யா அவர்களே!
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--

selva kumaran

unread,
May 20, 2011, 9:43:27 AM5/20/11
to santhav...@googlegroups.com
நீங்கள் சொல்வதில் ஒரு பெரிய பிரச்சனை உள்ளது சிவசூரி ஐயா.

பொதுவாக யாரொருவராலும்  300 சொற்களுக்கு மேல் தொடர்ந்து ஆழ்ந்துப் படிக்க முடியாது, இணையத்தில்.

ஒருவரது கவிதையையே ஆழ்ந்து பிறரால் படிக்க முடியுமா என்பதே இப்போதெல்லாம் கேள்விக்குறியாக இருக்கிறது.

இதில் ஒரே நாளில் அத்தனைப் பேர் கவிதையையும் இட்டால், எதையுமே சரிவர படிக்க முடியாமல் போய் விடும் ஆபத்திருக்கிறது.

2011/5/20 Lalitha & Suryanarayanan <lall...@gmail.com>
அன்புடைய அய்யா அவர்களே!

Pas Pasupathy

unread,
May 20, 2011, 11:54:51 AM5/20/11
to santhav...@googlegroups.com
’போனஸ்’ மதிப்பெண்ணுக்கு ஒரு கேள்வி:-))
 
தற்காலத்தில் நேரில் நடக்கும் கவியரங்கையும், இணையக் கவியரங்கத்தையும் ஒப்பிடுக. குறை, நிறைகளை நிரலிடுக.

SUBBAIER RAMASAMI

unread,
May 20, 2011, 12:15:31 PM5/20/11
to santhav...@googlegroups.com
சந்தவசந்தம் கவியரங்கம் நடத்துவது இது முதன்முறையல்ல.இணையத்தில்  முதன்முதல் தமிழ்க்கவியரங்கம் நடத்திய பெருமை சந்தவசந்தத்திற்குண்டு.  முப்பதுக்கும் மேற்பட்ட கவியரங்கங்கள் நடத்தி அதை எப்படி நடத்தவேண்டும் என்ற வரன்முறை வகுத்து வெற்ரிகரமாக நடத்தியிருக்கிறோம். புதிதாக உறுப்பினர்களாகச் சேர்ந்தவர்கள் கவியரங்கம் எப்படி நடத்தப்படுகிறது என்பதை உன்னிப்பாகக் கவனியுங்கள். 
 
நெறிமுறைகளை இப்பொழுது மாற்றுகிற எண்ணமில்லை. குரல்வழிக் கவியரங்கம் போன்று புதிய உத்திகளைக் கையாளும் போது பார்த்துக்கொள்ளலாம். கவியரங்கம் தொடங்கிவிட்டால் கவியரங்கத் தலைவரின் உரிமையில் குறுக்கிடுகிற வழக்கமில்லை. அவர் எப்படி நடத்துகிறாரோ அதை ஏற்றுக்கொள்கிறோம்.
 
ஒரு கவிஞர் கவிதையை இட்டபின் அதைப்பற்றிய விமரிசங்களைச்  சந்தவசந்தக் குழுமத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் இடலாம்.  கேள்விகளை எழுப்பலாம்.்கருத்துகளைச் சொல்லலாம்.
சில குறைகள் கண்டவிடத்து,  மற்றவர்கள் அதைச் சுட்டிக்காட்டலாம்.. விமரிசனம் செய்பவர் கவியரங்கில் கலந்துகொள்ளும் கவிஞராகத்தான் இருக்க வேண்டுமென்கிற அவசியமில்லை.  இது கவிஞரின் நன்மையைக் கருதியே செய்யப்படுகிறது. இதை ஆக்கமாகக் கவிஞர்கள் ஏற்றுக்கொள்ள் வேண்டும்.. விமர்சனங்க்ளை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் அந்தந்தக் கவிஞர்களைச் சார்ந்தது. இங்கே காழ்ப்போ ஒருசார்போ கிடையாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். 
ஒப்புக்கொண்ட வரிசையில் அழைக்கிறபோது நாம் எப்பொழுது அழைக்கப்படுவோம் என்று தெரிந்துவிடுவதால் மற்றக் கவிஞர்களின் கவிதைகளைப் படிக்காமல் போய்விட வாய்ப்புண்டு..எ னவே எந்த நேரத்திலும் எந்தக் கவிஞரையுமழைக்கலாம். தயாராக இருப்பது நல்லது
 
இது ஒரு பயிற்சித்தளம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
இணையத்தில் சில ஆங்கிலக் கவிதைத் தள்ங்கள் இருக்கின்றன. அங்கே கவிதைகளை இட்டால் அவற்றைப் படித்துத் திறனாய்வு செய்து வழிகாட்டக் கட்டணம் கேட்கிறார்கள். இங்கே அப்படியில்லை. மிக்க அனுபவம் மிக்க கவிஞர்கள் தாமாகவே முன்வ்ந்து வழிகாட்டுகிறார்கள். இது ஒரு நல்ல வாய்ப்பு. பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
 
இலந்தை
 
 
 
 
ர் 5/20 Lalitha & Suryanarayanan <lall...@gmail.com>

VETTAI ANANTHANARAYANAN

unread,
May 20, 2011, 12:45:00 PM5/20/11
to santhav...@googlegroups.com
பின்னூட்டத்திற்கு நன்றி. இந்தத் தொகுப்புகளை Google Documents என்னும் கோப்பில் சென்ற குரல்வழிக் கவியரங்க இறுதியில் சேமித்து அப்போதே பிறர் இவற்றைப் படிக்க முடிகிறதா என்று கேட்டிருந்தேன். பதிலளித்த ஒரு சிலரில் ஓரிருவருக்கே இது இயன்றதென நினைவு.  அடுத்த வாரம் இக்கோப்பை யாவரும் படிக்கக் கூடிய வேறு ஒரு தளத்திற்கு மாற்ற முயல்கிறேன்.

அனந்த்

2011/5/19 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages