--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
யார் அந்தக் கதாசிரியர்? ? அல்லது ரியை?
2014-11-08 13:49 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
நானும் நினைச்சேன் ஷைலாக்காதான்னு!,
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன் .
www.aalosanai.blogspot.com
www.kuviyalgal.blogspot.com
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
நானும் நினைச்சேன் ஷைலாக்காதான்னு!,
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன் .
பார்வதி இராமச்சந்திரன்
ஒரு சிறு மளிகைக் கடையின் முன் வைக்கப்பட்டிருந்த வாக்குப் பெட்டி, என் கவனத்தைக் கவர்ந்தது. சில்லறை வியாபாரத்தில் அந்நிய பன்னாட்டு நிறுவனங்கள் நேரடியாக நுழைவதற்கு அனுமதியளிக்கக் கூடாதென்ற கோரிக்கையுடன், அதற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டி ஒரு பெண்கள் பத்திரிகை வைத்திருந்த வாக்குப் பெட்டி அது.
‘நம் குடும்பத்தில் ஒருவராக இருப்பவரின் வியாபாரத்தை முடக்குவதா?’ என்பது போன்ற வாசகங்களுடன், வாக்குப் பெட்டிக்கு அருகில் இருந்த பேனர்கள் என் கருத்தைக் கவர்ந்தது.
அருகிலிருந்த என் மகள், சிரித்தவாறு, ‘ஒரு கடை வச்சிருக்கிறவர் எப்படி நம் குடும்பத்தில ஒருத்தர் மாதிரி ஆக முடியும்?, காசு கொடுத்து பொருள் வாங்குறோம், அவ்வளவு தானே?’ என்றாள். அவள் கையை அழுத்தியவாறு சொன்னேன்.
‘உனக்குப் புரியாதும்மா!!!!’
அவள் சிறுமி, ஊர் விட்டு ஊர் மாறும் வேலையுடைய என் கணவருடன், நிரந்தரமாக, ஓரிரண்டு வருடத்திற்கு மேல் ஒரு ஊரிலும் இருந்ததில்லை. ஆகையால், அவளுக்கு அந்த வாசகத்தின் மகத்துவம் புரியவில்லை என நினைத்துக் கொண்டேன்.
கடையிலேயே ஒரு வாக்குச் சீட்டை வாங்கி, வாக்களிக்கையில், என் மனம், கணபதி மாமாவை நினைத்துக் கொண்டது. முகமெல்லாம் சிரிப்பாக, எப்போது பார்த்தாலும் ‘என்னா பாப்பா?’ என்று அன்போடு அரவணைக்கிற, எப்போது கடைப்பக்கம் போனாலும் கை நிறைய ஆரஞ்சு மிட்டாய் தருகிற அந்த முகம், எங்கள் குடும்பத்தோடு மட்டுமல்லாமல், ஊரில் எல்லோருடனும் வைத்திருந்த நல்லுறவு என ஒவ்வொன்றாக நினைவு வந்தது. அவர் கதையை பாதியிலிருந்து மட்டுமே நான் அறிவேன். என் பாட்டி, சித்திப் பாட்டி, மாமா, அப்பா என உறவுகள் சொல்லிக் கேட்டதே நிறைய.
முதன் முதலில் மாமா எங்கள் வீட்டுக்கு வந்ததை ஒரு ஆச்சரியம் போல் சொல்வாள் பாட்டி.
‘ஒரு நா வாசல்ல, ஒரு நடுவயசு மனுஷரும் சின்ன பையனும் நின்னா. ஊருக்குப் புதுசுன்னு பாத்த ஒடனே பளிச்சுன்னு தெரிஞ்சது. உள்ள வரலாமான்னுட்டு யோஜனை பண்ணிண்டு நின்னார் பாவம். ஒன் தாத்தா பாத்துட்டு, ‘வாங்கோ உள்ள’ன்னதும் அப்படி ஒரு ஆச்சரியம் அவர் மொகத்துல.
‘வெளியூர்லயிருந்து பொழைக்க வந்துருக்கோம், சின்னதா ஒரு மளிகை வக்கலாம்னு. நீங்க பெரியவங்க ஆதரிக்கணுன்னு’ கேட்டுண்டார். தாத்தா ஒடனே சரின்னுட்டார். பக்கத்துல இருந்த பையனப் பாத்து, ‘ஒம் பேரென்ன?’ன்னார். ‘கணபதி’ன்னு கணீர்னு வந்தது பதில். ‘படிக்கறியா’ன்னார்.’
அந்தக் கேள்விக்கு பதில் வரவில்லையாம். காரணம் கொஞ்சம் நெருடலானது. கணபதி மாமாவின் கால் விரல்கள் வித்தியாசமாக இருக்கும். வலக்காலில் இரண்டு விரல்கள் இருக்காது. கூடப்படிக்கும் பையன்களின் கேலிக்குப் பயந்து பள்ளிக்கூடம் போவதை நிறுத்தி விட்டிருக்கிறார்.
தாத்தா, உடனே அறிவுரை கூறியதோடல்லாமல், அப்போது சின்ன பையனாயிருந்த மாமாவை அழைத்து ‘வெங்கி, நாளைக்கு இந்தப் பையனையும் ஒன்னோட அழைச்சுண்டு போய் ஸ்கூல்ல சேத்துடு, செல்லத்துரை வாத்தியார்ட்ட நான் சொன்னேன்னு சொல்லு’ என்று சொல்லியிருக்கிறார். பூஜையறையிலிருந்து பழங்களை எடுத்து, கணபதி மாமாவின் இருகரங்களிலும் கொடுத்திருக்கிறார் பாட்டி.
‘மொகத்துல சிரிப்பப் பாக்கணுமே, பொன்னாட்டம் வாங்கிண்டுது கொழந்தை ‘!!.
அப்போது துவங்கியது. கடையிலும் அப்பாவுக்கு உதவியாக இருந்தாராம் கணபதி மாமா. சிட்டை(லிஸ்ட்) படி மளிகைப் பொருட்களை அவரவர் வீட்டுக்குக் கொண்டு சேர்ப்பது. சின்ன பற்று வரவு புத்தகத்தில் கையெழுத்து வாங்க வருவது என்று எல்லா வேலைகளும் செய்வார். அதனால் கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது.
குறிப்பாக எங்கள் இல்லத்தில் ஒரு மகன் போலவே ஆனார். வெங்கி மாமாவுக்கு ‘கணா’, என் அப்பா, சித்தப்பாவுக்கு ‘அண்ணே’, என் தாத்தாவுக்கு ‘கணபதி’, என் சின்னத்தாத்தா(தாத்தாவின் தம்பி) மட்டும் மிக நெருக்கமாக ‘பிள்ளைவாள்’ என்பார். அதென்னமோ மாமாவின் மேல் அலாதி பாசம் அவருக்கு. வயதுக்கு மீறிய தோழமை இருவரின் நடுவேயும். இருவருக்கும் பயணம் செய்வதில் அடக்கமாட்டாத ஆசை. ஏதாவது குடும்ப விசேஷங்கள், திருவிழாக்களுக்காக கணபதி மாமா வெளியூர் செல்ல வேண்டி வந்தால், சின்னத் தாத்தாவும் புறப்பட்டு விடுவார். இருவரும் ஏதாவது ஒரு புள்ளியில் சந்தித்து, அருகில் இருக்கும் எல்லா ஊர்களையும் பார்த்து விட்டுத் திரும்புவது வழக்கம். அதைப் போலவே கணபதி மாமாவும் செய்வார்.
அதனால் இருவரில் ஒருவர் வெளியூர் சென்றுவிட்டு, ஊர் திரும்பத் தாமதமானால், பரஸ்பரம் விசாரித்துக் கொண்டு அமைதி காண்பது இருவர் வீட்டு வழக்கமும்.
கணபதி மாமா, தன் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், படிப்பை பள்ளியிறுதியோடு நிறுத்திக் கொண்டார். உடனே திருமணமும் ஆயிற்று. நிறையக் குழந்தைகள் கணபதி மாமாவுக்கு.
கணபதி மாமாவைப் போலவே அவர் மனைவி மீனாட்சி அக்காவும். கலகல என்று இருப்பார். இருக்கும் இடமே திருவிழாப்போல இருக்கும்.
ஊரில் யார் வீட்டுக்கு யார் வந்தாலும் கணபதி மாமாவுக்குத் தெரிந்துவிடும்.
கடைக்கு வருகிறவர்களிடம், காசு வாங்கினோம், பொருளைக் கொடுத்தோம் என்றிருப்பது அவரால் முடியாது.
‘யாரு, அக்காவா, என்னா சேமியா வேணுமா?, தாரேன். பாயாசம் வைக்கிறதுக்கா இல்ல உப்புமாவா?. பாயாசமா? அப்ப சீனி வேணும்ல? இருக்கா?. டே, அந்த சேமியாவ எடு!!, ஆமாக்கா, என்ன விசேசமா?!!, ஆரு வந்திருக்காங்க, நாத்தனாரா?, அதான் பாயாசமா!!, என்னா சும்மாத்தான் ஊரு பாக்கவா இல்ல வேற விசேசம் ஏதாச்சும் உண்டா?, என்னா பொண்ணு கேக்க வந்திருக்காகளா?, என்னா மெல்ல சொல்லுறீக, சட்டுப்புட்டுன்னு பண்ணிறலாம்ல!! வயசும் ஆச்சுல்ல பாப்பாவுக்கு, மாமா என்னா சொல்லுறாரு?,’ என்று கோர்வையாக விசாரிப்பார்.
அன்று சாயங்காலமோ, மறுநாளோ கடைக்கு வந்த அக்காவின் வீட்டுக்காரரைப் பார்க்க நேர்ந்தால், வாசாலகமாக, ‘வாங்க மாமா, என்னா கடப்பக்கமே ரொம்ப நாளா காணும்?’
என்று துவங்கி, ஒரு சுற்று பேசி விட்டு, ‘ஆமா, என்னா எப்ப பாப்பா கல்யாணத்துக்கு சமையல் சாமா(ன்) சிட்டை தரப்போறீக?, நேத்தென்னாமோ, ஒறமொறை வந்திருந்தாக போல’ என்று விஷயத்துக்கு வருவார்.
மாப்பிள்ளை பிடித்தம் இல்லை என்றால் தலையிடமாட்டார். மாறாக, பண விஷயத்துக்காக தவங்குகிறது என்றால் ‘கிடுகிடுவென’ உதவியில் இறங்குவார்.
‘நீங்க கவலப்படாதீங்க, நக நட்டுக்கு, துணிமணிக்கெல்லாம் எவ்வளவு தேவப்படுது?, மண்டபச்செலவு பத்தி பெரச்சனையில்ல, “அங்கயற்கண்ணி” ல சொல்லிரலாம். சமயல் பாத்திரத்துலருந்து, கூட்டிப் பெருக்குற ஆள் வரக்கும் இருக்கு, பாத்துக்கிரலாம். நம்ம ஒறமொறைதான் மண்டபம் வச்சிருக்கிறவரு. நாஞ்சொன்னா செரிம்பாரு. சமயலுக்கு ஆள மட்டும் பாருங்க, சாமா(ன்) செட்டு அத்தனையும், மஞ்சப்பொடிலருந்து, வெத்தல பாக்கு வரக்கும் நாங்கொணாந்து போடுறேன், பெறகு மொள்ளமா கொடுங்க, இப்ப என்னா?, வேற என்னா செலவு?’ என்று அலச ஆரம்பிப்பார். செட்டியார் கடையில், தவணை முறைக் கடனுக்கு ஏற்பாடு செய்வதிலிருந்து எல்லாவற்றிற்கும் உதவிக்கு நிற்பார். கண்டிப்பாய், ஏதேனும் ஒரு சிறிய செலவேனும் தன் பொறுப்பில் ஏற்பார். அநேகமாக, அது பூவாகத்தானிருக்கும். கல்யாணத்திற்கு வேண்டிய பூச்சரம், மாலைகள், உதிரிப்பூ எல்லாவற்றையும் தன் செலவில் வாங்கித் தருவார். திருமணம் முடிந்து, மணமக்களை வண்டி ஏற்றி அனுப்புவது வரை அந்த வீட்டு மனுஷனாக உடனிருப்பார்.
ஒரு முறை பாட்டி சொன்னாள் என்று ஹார்லிக்ஸ் பாட்டில் வாங்கப் போனது நன்றாக நினைவிருக்கிறது. சொன்னதும் உடனே எடுத்துக் கொடுக்கவில்லை.
‘என்னா பாப்பா வந்திருக்கீக, அண்ணன் இல்லையா, வள்ளி எங்க போனா?’
‘அண்ணா மாமா வீட்டுக்குப் போயிருக்கார். வள்ளி மார்க்கட்டுக்கு!!’
‘அதானா, செரி இந்தாங்க ஆரஞ்சு மிட்டாயி, எப்பவாச்சும் தானே ஹார்லிக்ஸூ வாங்குறது நம்ம வீட்டுல, ஆமா, ஆராச்சும் விருந்து வந்திருக்காங்களா?’
‘இல்லல்ல… பக்கத்தாத்து சுந்தரம் மாமா இல்ல, அவர ஆஸ்பத்திரில சேத்துருக்கா… தாத்தா பாக்கப் போறா.. அங்க குடுத்து விடத்தான்’
‘அப்டியா, செரி நீங்க போயி பாட்டிக்கிட்ட நா(ன்) கொண்டாரேன்னு சொல்லுங்க!’
நேரே வீட்டுக்கு வந்து, என்ன ஏது என்று விசாரிப்பதோடு நிற்க மாட்டார். சுந்தரம் மாமாவின் வீட்டுக்குப் போய் என்ன உதவி வேண்டும் என்று கேட்டுச் செய்வதோடு, சுந்தரம் மாமா ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பும் வரை, எப்போது டவுன் பக்கம் போனாலும், தன் சைக்கிளில், அவர் வீட்டிலிருந்து, சாப்பாடு மற்ற சாமான்கள் எடுத்துப் போய், ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய்க் கொடுப்பார்.
தன் கல்யாணமும் அவரால் தான் நடந்தது என்பாள் அம்மா. எங்கே பிள்ளைக்கு கல்யாணமானால், மருமகள் வந்து பிரித்து விடுவாளோ என்ற காரணமற்ற பயத்தினால், அப்பாவின் கல்யாணத்தை ஏதேனும் சாக்கு சொல்லி தள்ளிப் போட்டுக்கொண்டே போனாளாம் பாட்டி. பெண் பார்க்கும் வரை வந்தால் கூட ஏதாவது காரணம் கண்டுபிடித்து ‘வேண்டாம்’ என்று சொல்லிவிடுவாளாம். தாத்தா எவ்வளவு சொல்லியும் பாட்டிக்கு உறைக்கவில்லை. அப்பா, தன் அம்மாவுக்கு அடங்கிய பிள்ளை.
இராமநாதபுரத்தில், அம்மாவைப் பெண்பார்த்து வந்ததும், வழக்கம் போல் பாட்டி காரணம் தேட ஆரம்பிக்க, அப்போது, சாமான் கொண்டு வந்து கொடுக்க வந்த கணபதி மாமா,
‘என்னங்கப்பா, பொண்ணு பாக்கப் போனீங்கல்ல, நல்ல விசயம்தான?’ என்று தாத்தாவிடம் ஆரம்பித்தாராம்.,
‘இல்லடா கணபதி, பொண்ணு கொஞ்சம் குள்ளமாட்டமா இருக்கு!! ..பாட்டி.
‘அதனால என்னா… ரவியும் ஒயரங் கம்மிதான.. செரியா இருக்கும்ல’.
பாட்டி பதில் பேசாமல் இருக்க, ‘இந்தா பாருங்க அம்மா, ரவி வயசுல, எனக்கு கலா சடங்காயிருச்சு… இன்னம் கலியாணமுடிக்காம இருந்தீங்கன்னா, அது பிள்ளைகள வளத்தி நிமுத்த வயசு வேணாமா… இன்னம் சின்னப் புள்ளையா…. ஒங்களுக்கு பேரம்பேத்தி வேணுங்குற ஆச இருக்குதா இல்லையா?, என்ன மாதிரி சின்னவங்க, ஒங்ககிட்ட செரி, தப்பு எடுத்துச் சொன்னா நல்லாவா இருக்கு?.. ஏம்ப்பா… ரவிக்கு பொண்ணு புடிச்சுருக்குல்ல… அப்ப ஆக வேணுங்குறத பாக்கலாம்ல… அம்மா ஒண்ணுஞ் சொல்ல மாட்டாங்க. நீங்க ஒண்ணு பண்ணுங்க… போயி, பொண்ணு புடிச்சுருக்குன்னு ஒரு தந்தி குடுத்துருங்க…. இப்பமே நிச்சயம் பண்ணினாத்தான் செரி வரும். இல்லன்னா மார்கழி வந்துரும். வர ஞாயித்துக்கெழம முகூர்த்த நாளுன்னு பாத்ததா ஞாபகம். அத செரிபாருங்க. செரியா இருந்துச்சுன்னா, அன்னைக்கே நிச்சியம் பண்ணிரலாமான்னும் ஒரு வரி சேருங்க…. நாம் போயி, ‘அங்கயற்கண்ணி’ல ஒரு வார்த்த சொல்லிர்றேன். அங்கயே வச்சிரலாம் நிச்சியம். என்னா?’ என்று அடுக்க…
அப்பா, சின்னதாய்த் தலையசைக்க, பாட்டியின் மௌனத்தை சம்மதமாக எடுத்துக் கொண்டு, தாத்தா, ‘அப்படியே செய்துடுவோம், நான் உங்கூடவே வரேன். என்ன தந்தி ஆபீசுல இறக்கி விட்டுடு…’ என்று கணபதி மாமாவின் சைக்கிளில் ஏறிச் சென்று தந்தி அடித்து விட்டு வந்தாராம்.
‘அவர் மட்டும் பூனைக்கு மணி கட்டலைன்னா… அறுபதாம் கல்யாணம்தான் உங்கப்பாவுக்கு’ என்று சிரிப்பாள் அம்மா.
இது போல், கணபதி மாமா வீட்டுக் கல்யாணம் தாத்தாவால் நிச்சயம் செய்யப்பட்டதும் நடந்ததுண்டு.
கணபதி மாமா, தன் மக்கள் எல்லாரையும் உறவிலேயே மணமுடித்துக் கொடுத்து வந்தார். . கிட்டத்தட்ட எல்லா அக்கா தங்கை உறவிலேயும் கொள்வினை கொடுப்பினை உண்டு. மீனாட்சி அக்காவுக்கு, தன் ஐந்தாவது பிள்ளையை, தன் அண்ணன் மகளுக்கு மணமுடிக்க வேண்டும் என ஆசை. ஆனால், எதனாலேயோ ‘ஒன் ஒறவுல சம்மந்தம் வேணாம்’ என்று சொல்லிவிட்டார் என கண்ணைக் கசக்கிக் கொண்டு தாத்தாவிடம் வந்து நின்றார் மீனாட்சி அக்கா.
‘ஏண்டா, அவ சொல்றதும் ஞாயந்தானே!!’
‘அப்பா, அது சும்மா சொல்லுது… எத்தன பெரச்சன வந்துச்சு அவுங்களாலன்னு ஒங்களுக்கும் தெரியுந்தான…’
‘ஆமா, அதுக்கென்ன பண்றது.. அவங்கப்பா செஞ்சதுக்கு புள்ளை என்ன பண்ணுவான் சொல்லு.. நீரடிச்சு நீர் விலகாது. நாளக்கு அவ சொந்தத்துலயும் ஒருத்தர் வேணுன்னு நெனைக்கறா…’
‘அதுக்காக, இவங்கண்ணன்ட்ட நாம் போயி என்னா பேசுரது…’
‘அது ஒண்ணும் பெருசுல்லா.. சொல்லிவுட்டா அவங்களே வருவாங்க…’ என்றார் அக்கா.
‘எல்லாந் திட்டம் போட்டு வச்சாச்சா?’
‘ கணபதி… நீ கொஞ்சம் இறங்கி வா.. இத்தன நாள் ஒங்கூட சம்சாரம் பண்ணி இருக்கா.. இந்த ஒண்ணுல விட்டுக்குடுத்துடேன்..’
‘ நாளப்பின்ன, அண்ணன் வீட்டுல அத செய்யல, இத செய்யலன்னு இவளே பேசுவாப்பா..’
‘அதொண்ணுமில்ல… எங்க பொறந்தவூட்டுல யான மேல அம்பாரிகட்டி சீர் செய்வாங்க’
‘ஆத்தி!!!, அப்ப ஒன்னோட வந்த யானய முழுங்கிட்டுதா நீ இத்தத்தண்டிக்கு ஆனியா!’
இறுதியாக தாத்தாவின் வார்த்தைக்காக, சம்மந்தத்துக்கு ஒத்துக் கொண்டாராம் கணபதி மாமா.
இப்படி, ஊரில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் முக்கியமான நபராக, நல்லது கெட்டதுகளில் பங்களிப்புச் செய்து கொண்டு, ஊரே தன் குடும்பமாக வாழ்ந்தார். அவரை வேற்றாளாக நினைத்துப் பார்க்க முடியாது யாராலும். ‘உபகாரம்னா, கணபதி’ என்று பேரெடுத்திருந்தார்.
ஆயிரம் இருந்தாலும், கணபதி மாமாவுக்குத் தான் கால் விரல்கள் பற்றிக் குறையான குறை உண்டாம். தனிமையில், சின்னத் தாத்தாவிடம், நிறைய வருத்தப்பட்டிருக்கிறாராம்.
‘விடுடா.. எல்லாத்துக்கும் ஏதாவது காரணமிருக்கும்.. இதனால, ஒனக்கு என்ன கொறைஞ்சு போச்சு?’ என்பாராம் சின்னத் தாத்தா.
ஆனால், காரணம் எவ்வளவு கொடூரமானது என்பதை விதியைத் தவிர யாரும் அறிந்திருக்கவில்லை.
ஒரு கல்யாணத்துக்குப் போய்விட்டு இரவு திரும்ப வேண்டிய கணபதி மாமா, மறுநாள் ஆகியும் வராததால், மீனாட்சி அக்கா, எங்கள் வீட்டுக்கு விசாரிக்க வந்தார்.
‘சித்தியம்மா, சித்தப்பா ஊருக்கா?’.
‘இல்லடி..இங்கதான் ஏன்?’.
‘இல்ல, அவரு திருச்சிக்கு ஒரு கல்யாணத்துக்குப் போயிட்டு வரக்காணும், சித்தப்பா கூட ஊரப்பாக்கப் போயிட்டாராக்கும்னு வந்தேன்’.
சித்திப்பாட்டி திகைத்தாள். இப்படி நடந்ததே இல்லை. ‘வந்துருவான்டி, வேற ஏதாவது வேலையாயிருக்கும்’ சொல்லிக் கொண்டு இருக்கும் போதே சின்னத்தாத்தா வந்துவிட்டார்.
விஷயம் தெரிந்து அவரும் யோசித்தார். ‘சரி, நீ போயிட்டு வா, மீனாட்சி, வந்துடுவான்னே நினைக்கிறேன். இல்லன்னா நா சாயரட்சை கிளம்பிப் போய் விசாரிக்கிறேன்.
அக்கா, போனதும், ‘பருவதம், எனக்கு என்னமோ பண்றது. ஒண்ணும் மனசுக்கு சரியாப்படலை. நான் சரவணப் பொய்கைப் பக்கம் போய்ட்டு வரேன்’ என்று சொல்லிவிட்டு கலங்கிய முகத்துடன் தெருவில் இறங்கினார்.
அதே நேரத்தில், ஒரு தெரு நாய், வீதியின் கோடியில் இருந்த பதினாறு கால் மண்டபத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த தெருக்காரர்களின் முன்பாக, இரைக்க, இரைக்க ஓடிவந்து ஒரு பொருளைக் கொண்டு போட்டு விட்டு ஓடியது. அது ஒரு மனிதக் கால். வலது கால். வித்தியாசமான விரல் அமைப்புகளோடு இருந்த அதில் இரு விரல்கள் இல்லை.
கொஞ்ச நேரத்தில் தெருவே அலறியது. தாத்தா உட்பட தெருவாசிகளுக்குத் தகவல் பறந்தது. அப்பாவும், சித்தப்பாவும், மாமாவும், கண்ணீருடன் தெருவில் பதறி ஓடியது நினைவிருக்கிறது. நாய் சென்ற வழியை உத்தேசமாகத் தொடர்ந்து கொண்டு, ஒரு ஊகத்தில் ஊர் எல்லையில் இருந்த இரயில்வே லைனை அடைந்த போது அத்தனை பேருக்கும் ஒரு கணம் இதயம் நின்று தான் விட்டது. ஊருக்குப் போய்த் திரும்பிய கணபதி மாமா, இரவில், ஆளில்லா இரயில்வே லைனைக் கடக்க முற்பட்ட போது, இரயில் வந்து தூக்கியடித்திருக்கிறது. அவர் உடலின் முன் பாகம் சிதையாமல் இரயில்வே லைனுக்குப் பக்கத்தில் கிடந்ததைத் தூக்கி வந்தார்கள்.
பாட்டி, அம்மா, சித்தி எல்லாரும் கணபதி மாமா வீட்டுக்கு ஓடினார்கள். ஊரே கதறி அழுதது. சின்னத் தாத்தாவின் துயரம் சொல்லில் அடங்குவதாயில்லை. மீனாட்சி அக்கா..?, அதிர்ச்சியில் மயங்கி விழுந்தவர் எழவே இரண்டு நாட்கள் ஆயிற்று. தாத்தா, கணபதி மாமாவின் மூத்த மகன் ராமுவின் பக்கத்திலேயே இருந்து எல்லாம் செய்ய வைத்தார்.
அதன் பின், மீனாட்சி அக்கா, தன்னை ஆச்சரியப்படும் விதத்தில் தேற்றிக் கொண்டு சோகத்தில் இருந்து மீண்டது, கடைப்பொறுப்பை ஏற்றுக் கொண்டது, திருமணமாகாமல் இருந்த ஒரு மகள் மற்றும் இரு மகன்களுக்கு ஊர்க்காரர்கள் அனைவரும் முன்னிற்க, திருமணம் செய்து வைத்தது, எல்லாவற்றிற்கும் மேலாக, எங்கள் வீட்டில், ஊரில் கணபதி மாமாவின் இடத்தை நிரப்பியது என எல்லாமுமே மிகச் சாதாரண வாக்கியங்களால் சொல்லிவிடுகிற விஷயமில்லை. ஒவ்வொன்றும் சரித்திரம்.
சமீபத்தில் ஊருக்குச் சென்றிருந்த போது, அம்மா சொன்னாள் என்று கணபதி மாமாவின் கடையில் வெல்லம் வாங்கச் சென்றேன். அது இப்போது பல்பொருள் அங்காடியாகியிருந்தது. ராமு அண்ணா கல்லாவில் இருந்தார். நான் போனதும், நிமிர்ந்து பார்த்தவர், ‘ஆத்தி, ஆரு ரவி சித்தப்பா மகளா, என்னா ஊர மறந்து போயிட்டீக, வரப்போக இருக்க வேணாமா வீட்டுப் பொண்ணுக?’ என்று அன்பாகவும் உரிமையாகவும் விசாரித்தவர், புறப்படும் போது, வெல்லத்தோடு இரு பிஸ்கட் பாக்கெட்டுக்களையும் சேர்த்துக் கொடுத்தார்.
‘எதுக்குண்ணே?’ என்ற போது, ‘வச்சுக்க பாப்பா, வீட்டுல புள்ளைங்களுக்குக் கொடு, மறுக்கா எப்ப வரியோ? வாங்கிக்க!!!’ என்ற போது, என் கையில் இருந்த பிஸ்கட், க்ஷண நேரத்திற்கு ஆரஞ்சு மிட்டாயாகத் தெரிந்தது. நிமிர்ந்து பார்க்கையில், கடைச் சுவரில், சீரியல் செட்டுக்களால் சட்டமிடப்பட்ட படங்களில் கணபதி மாமாவும் மீனாட்சி அக்காவும் சிரித்தார்கள்.
ஒனக்கு இப்போ `நாள்,’ இல்லே?” தாயாரின் குரலில் கவலை தொனித்தது.
மகள் அலட்சியமாகக் கையை வீசினாள். “இப்போ என்ன அதுக்கு?”
“இல்லே, ஹம்சா. நாளைக்குக் கோயில்ல ஆடப்போறியே..,” மீதியைச் சொல்லாமல் விட்டாள். “ஆமா, எந்தக் கோயில்லேன்னு சொன்னே?”“எங்க கிளாஸ் நடக்கிற கோயில்லதான்!”
“காமாட்சி அம்மன் கோயில்!” என்று சொல்லிக்கொண்டாள் தாய், தனக்குள்.
ஹம்சா மேலே எதுவும் பேசவில்லை. பேசப் பிடிக்கவில்லை. ஒரு பாட்டை மனதிற்குள் பாடியபடி அங்கிருந்து நகர்ந்தாள். கை, தன்னையுமறியாமல், அபிநயம் பிடித்தது.
அப்போதைக்கு அம்மாவிடமிருந்து தப்பித்துப்போனால் போதும் என்றிருந்தது அவளுக்கு. மாடியிலிருந்த தனது அறையை நோக்கிப்போனாள்.
அதுவரை அடக்கி வைத்திருந்த ஆத்திரம் மேலெழுந்தது.
`தீட்டு’என்று இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் பெண்களை மட்டமாகவே நடத்தப்போகிறார்கள்?
ஆதிமனிதன் குகையில் வசித்த காலத்தில், காட்டு விலங்குகள் ரத்த வாடையை முகர்ந்து குகைக்குள் வந்துவிடுமே என்று பயந்து, அக்காலங்களில் பெண்களைத் தனியேவிலக்கிவைத்திருக்கலாம். இப்போது என்ன வந்தது!
பள்ளிக்கோ, அல்லது வேலைக்கோ வெளியே போகும் பெண்கள் வீட்டில் தனித்து விலக்கி வைக்கப்படுவது வெகுவாகக் குறைந்துவிட்டது. ஆனால், கோயில்களில் மட்டும் பழையவிதிமுறைகளை மாற்றாமல், கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்!
சில கோயில்களில், `இவர்களெல்லாம் கோயிலுக்குள் நுழையக்கூடாது!’ என்று ஒரு பெரிய பட்டியல் தயாரித்து, வெளியிலேயே எழுதி வைத்திருக்கிறார்கள்! மாத விலக்கு வந்த பெண்களும்,பெருநோய் வந்தவர்களும் ஒன்றா? கையில்லாத ரவிக்கை அணிபவர்களுக்கு மட்டும் பக்தி இருக்கக்கூடாதா?
அவளுடைய ஆத்திரத்திற்கு முட்டுக்கட்டை போடவேபோல் தொலைபேசி அழைத்தது.
ஹம்சாவுக்குச் சட்டென்று சிரிப்பு வந்தது. யாராவது ஒரு மாணவி, `டீச்சர்! இன்னிக்கு பரத்நாட்யம் க்ளாஸ் இருக்கா?’ என்று கேட்பாள்! முதலில் வரவே யோசித்தவர்களுக்கு இப்போதுதான்எத்தனை ஆர்வம்! நினைத்துப்பார்க்கவே பெருமையாக இருந்தது அவளுக்கு.
பரதநாட்டியம் வசதிபடைத்தவர்களுக்கு மட்டுமே எட்டக்கூடிய ஓர் உயரம் என்ற எழுதப்படாத விதிமுறையை எதிர்த்து, ஹம்சா அந்த வகுப்பை ஆரம்பித்திருந்தாள்.
பெரிதாக இடம் எடுத்து நடத்த வழில்லை. குடிசைகளுக்குப் பதிலாக்க கட்டப்பட்ட அடுக்குமாடி வீடுகள் நிறைந்த அவ்விடத்தில் அவர்களுக்கென இருந்த ஒரு சிறு கோயில் பிரகாரம்தான்நாட்டிய வகுப்பு -- பூஜை இல்லாத நேரங்களில்.
அக்கம்பக்கத்திலிருந்த குடும்பங்களிலிருந்து மாணவிகள் வந்தார்கள் -- இலவசம் என்பதைக் கேள்விப்பட்டு. ஆனால், எதிலும் அவர்களுக்கு துடிப்போ, புதியதாக ஒன்றைக் கற்கும் ஆர்வமோஇருக்கவில்லை. எப்போதும் வாயில் விரல். நிமிர்ந்து நிற்கக்கூட தெம்போ, உத்வேகமோ இல்லாதவர்களாக இருந்தார்கள். எட்டு வயதிலேயே கூனலா! இவர்களை எப்படி வழிக்குக்கொண்டுவருவது என்று அயர்ந்தே போனாள் ஹம்சா.
எப்போதோ அம்மா சொன்ன ஒன்று நினைவுக்கு வந்தது: `சின்னப்பிள்ளைங்களுக்குத் தாகமா இருந்தாலோ, பசியா இருந்தாலோ சொல்லத் தெரியாது. வாயிலே விரல் போட்டுப்பாங்க!’
தன்னுடைய தோழிகள் சிலருடன் கலந்தாலோசித்து, அவர்களுக்குச் சாப்பிட எதையாவது கொடுக்க ஏற்பாடு பண்ணினாள்.
`நாட்டியம் கற்றுக் கொள்கிறார்களோ, இல்லையோ, வயிறாரச் சாப்பிட்டுவிட்டாவது போகட்டுமே!’ தான் பசியே அறியாது வளர்ந்திருந்ததில் சிறிது குற்ற உணர்வுகூட ஏற்பட்டது.
வெளியில் எங்கும் கிடைக்காத தோழமையும், சிரிப்பும், அறிவும் அங்கு கிடைப்பதை உணர்ந்தவர்களுக்குச் சில மாதங்களிலேயே உணவில் ஆர்வம் குறைந்துபோயிற்று.
ஆரம்பத்தில் எதையும், `எனக்கு? எனக்கு?’ என்று பிடுங்கியவர்கள்கூட, `நீங்களும் சாப்பிடுங்க, டீச்சர்,’ என்று உபசாரம் செய்யக் கற்றுக்கொண்டார்கள்.
சில நாட்கள், ஓரிரு பெண்கள் வகுப்புக்கு வராததன் காரணத்தை (`அக்கா சுத்தமில்லே!’) யார்மூலமாவது சொல்லி அனுப்பியபோதுதான் அந்த யோசனை எழுந்தது ஹம்சாவுக்கு.
ஒங்க ஒடம்பைப்பத்தி ஒங்களுக்குத் தெரிஞ்சிருக்கணும். நீங்க தீட்டுன்னு நினைக்கிறது தப்பான உணவாலேயோ, ஆரோக்கியக் குறைவாலேயோ கிடையாது”.
ஒரு பெண் கர்ப்பம் தரிக்கத் தயாராக இருக்கிறாள் என்பதைத்தான் உணர்த்துகிறது மாதாந்திர உதிரப்போக்கு. இயற்கையான ஒரு செயல்! அதற்கு ஆயிரம் தப்பு கண்டுபிடித்து.., என்றெல்லாம் பெண்கள் மருத்துவரான சுந்தரவல்லி அந்த வகுப்புக்கு வந்து விளக்கினாள்.
நம்ப உடம்பை, உயிரை, கடவுள் குடுத்ததுன்னு ஏத்துக்கறோம். இல்லியா? அவரோட செயலே தப்புங்கிறமாதிரி, இயற்கையா நடக்கிற இதுக்குக்காக பயந்துக்கிட்டு, கோயிலுக்கு வராமஇருந்துடாதீங்க. எவ்வளவு கஷடப்பட்டு ஒங்களுக்கு டான்ஸ் கத்துக்குடுக்க வராங்க டீச்சர், தெரியுமா?” என்று சந்தடி சாக்கில், ஹம்சா படும்பாட்டையும் குறிப்பிட்டாள் சுந்தரவல்லி. தன்தோழியைப்பார்த்துக் கண்ண்டித்தாள்.
அப்பெண்களின் முகம் தெளிந்தது. தமக்காகப் பாடுபடும் இரு பெண்மணிகளையும் பார்த்து நட்புடன் சிரித்தார்கள்.
ஏன் இப்படி கூனிக்கிட்டு நடக்கறீங்க?” உரிமையுடன் அதட்டினாள் சுந்தரவல்லி.
ஒரு துணிச்சலான பெண் தங்கள் தர்மசங்கடமான நிலைமையை வெளிப்படுத்தினாள்: “எல்லாரும் எங்க ஒடம்பையே மொறைச்சுப் பாக்கறாங்க, டாக்டர்! வெக்கமா இருக்கு!” குரல்அழுகையாக வந்தது.
பிற மாணவிகளும் தலையை ஆட்டினார்கள். உதடுகள் பிதுங்கின
அலட்சியமாக் கையை வீசினாள், அந்த சிறப்பு விருந்தினர். “அதுக்கென்ன பண்றது? சாமி நமக்கு அப்படி அழகான ஒடம்பை நமக்குக் குடுத்திருக்கு!” என்று புன்சிரிப்புடன் கூறியவள், தன்இருகரங்களால் மூன்று வளைவுகளைக் காட்டினாள்.
எல்லாரும் நிம்மதியும், வெட்கமுமாகச் சிரிக்க, ஒரு பெண், “இரண்டுதானே, டாக்டர்?” என்று சிரிப்புடன் வினவ, டாக்டர் யோசிப்பதைப்போல் பாவனை காட்டினாள். “நீ சொல்றது சரி. இரண்டுவளைவுகள்தான்!”
சிரிப்பு பலத்தது. இப்போது எல்லாரும் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள்.
சில சமயம் ஆட முடியலே. வலிக்குது,” என்று ஒரு பெண் சுட்டினாள்.
ஒங்கம்மாவை கருஞ்சீரகத்தை வறுத்துப் பொடி பண்ணி, மோரிலே கலக்கிக் குடுக்கச் சொல்லு. தினமும் குடிச்சா, கருப்பை வலுவாகும்”.
சொல்லக்கூடாத அந்த வார்த்தையைக் கேட்டதும் எல்லாரும் வெட்கத்துடன் சிரித்தார்கள்.
அறிவுரை தொடர்ந்தது: “ரொம்ப வலிச்சா, வெந்நீர் ஒத்தடம் குடுக்கச்சொல்லு. இந்தமாதிரி சமயங்களிலே சுருண்டு படுக்காம, எக்சர்சைஸ் பண்ணணும். அது ரொம்ப முக்கியம்!”
அதன்பின், வீட்டில் பாட்டியோ, அம்மாவோ ஆட்சேபித்ததையும் மீறிக்கொண்டு, எந்த நாட்களிலும் கோயிலுக்கு வந்து நாட்டியம் கற்றுக்கொள்ளத் துணிந்தார்கள் அப்பெண்கள்.
நான்கு பேர் பார்க்க நாட்டியமாடும் தகுதி அவர்களுக்கு இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட ஹம்சா, சரஸ்வதி பூஜையன்று (அன்று தான்டாக்டர் சுந்தரவல்லியின் உபயம்)அவர்கள் ஆட ஏற்பாடு செய்திருந்தாள். மாணவிகளுடன், அவளும் ஆடவேண்டும் என்று கோயில் குருக்கள் விண்ணப்பித்திருந்தார்.
இப்போது அம்மா அவள் மனத்தைக் கலைத்துவிட்டாள்!
தொலைபேசியில் ரஞ்சனி பேசினாள், தயங்கித் தயங்கி. “டீச்சர்! எனக்கு இப்போ பீரியட். நான் ஆடலாமா?”
“தாராளமா! ஆனா, யார்கிட்டேயும் இதைப்பத்தி சொல்லிக்கிட்டிருக்க வேண்டாம், என்ன?”
ஒவ்வொரு வகுப்புக்கும் தவறாது வந்து, பெருமுயற்சியுடன் கற்ற கலை! இப்போது பல பேர் பார்க்க தன் திறமையை வெளிப்படுத்த ஒரு தருணம் வந்திருக்கிறது. அது நழுவி விடுமோஎன்ற கவலை இனி இல்லை!
“சரி, டீச்சர்!” என்ற சிறுமியின் குரலில் அலாதி நிம்மதி. “ரொம்ப பயந்துக்கிட்டிருந்தேன், டீச்சர் -- டீச்சர் என்ன சொல்வீங்களோன்னு!”
ஹம்சா சிரித்துக்கொண்டாள். “குளிச்சுட்டு வந்தா போதும். காமாட்சி புரிஞ்சுக்குவா!”
“யாரு, டீச்சர்?”
“காமாட்சி அம்மன்!”
“ஓ!” அப்பெண் புரிந்தவளாகச் சிரித்தாள்.
“தைரியமா ஆடு. அதான் முக்கியம். ஏதாவது மாத்தி, தப்பா ஆடினாலும் பரவாயில்லே. அடிச்சு விட்டுடணும். என்னைத் தவிர, யாருக்கும் அது தெரியப்போறதில்லே!” என்று, பல முறை வகுப்பில் சொன்னதையே திரும்பச் சொன்னாள் ஹம்சா. “காமாட்சி அம்மனும் நம்பளைமாதிரி ஒரு பொண்ணுதானே! கோவிச்சுக்க மாட்டா!” தனக்கே தைரியம்அளித்துக்கொள்வதைப்போல் இருந்தது .
கணினியில் பதிவு செய்திருந்த பாட்டை ஒலிக்கவிட்டாள்.
முகத்தில் புன்னகை படர, புடவைத்தலைப்பை இழுத்துச் சொருகிக்கொண்டாள். தரையைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு, பயிற்சியில் இறங்கினாள் ஹம்சா. உடல் லேசானதுபோல் இருந்தது.
[ திரு நரசய்யா எழுதிய முதற்கதை விகடனில் 1964 ஆம் வருடம் செப்டம்பரில் வெளியானது. இக்கதை 100 கதைகளைத் தாண்டியது. திரு நரசய்யா அவர்களின் அரை நூற்றாண்டு இலக்கியப் பயணத்தின் நினைவாக!]
“கல்லுருகுங் காலங் கழுகறியு மக்காலம்
வையக மெல்லா மலர்ந்தபூ வண்டறியும்
ஓங்க லறியு முயர்கடலி னுள்ளாழம்
பாங்கனுக்குப் பாங்கன் பயன்றிவான் மன்ற
அறிவா ரறிவா ரறியா ரறியார்
ஒருகாம் பிருதலையும் பூ”
பெருந்தொகை பாட்டு எண் 1800
அகலிகை வெண்பா முன்னுரையிலிருந்து தொகுக்கப்பட்டது.
(கழைக்கூத்தியொருத்தி கழை மேனின்று ஆடியபோது பூப்படையக் கழையினின்று இறங்குக்காற் பாடியது )
சென்னை மாநகரின் அடையாறில் வசிக்கும் எனக்குக் கழைக்கூத்தாடிகளைப் பற்றி அதிகம் தெரியாதுதான். ஆனாலும் அன்றொருநாள் சர்வ சித்தி விநாயகர் கோவிலுக்குச் சென்று திரும்புகையில் அடிக்கப்பட்ட தம்பட்ட ஒலி என்னை நிறுத்தித் திரும்பிப் பார்க்கச் செய்தது!
அது சாதாரண ஒலியில்லை, ஓலம்! பசியையும் ஏழ்மையையும் அறிவித்து, எங்களைப்பார் என்பதைப் போல இருந்ததால் நின்று கவனித்தேன். அதிகமாக எவரும் கவனிக்கவில்லை. இரண்டு பக்கங்களிலும் கிராஸ வடிவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூங்கில்களின் இடையில் சுமார் 10 அடி நீளத்திற்குக் கட்டப்பட்ட கயிறு. கீழே ஒரு துண்டு விரிக்கப்பட்டிருந்தது. தந்தையும் தாயும் தம்பட்டத்தை அடித்துக்கொண்டு பாடிக்கொண்டு மக்களின் கவனத்தை ஈர்க்க முன்று கொண்டிருந்த நிலை! ஒரு பெண்; சுமார் 10 லிருந்து 13 வயதிற்குள்ளென சொல்லலாம்; தயாராக நின்று கொண்டிருந்தாள். நான் நின்று பார்ப்பதைப் பார்த்த தந்தை இன்னும் வேகமாக தம்பட்டத்தை அடித்துக் கொண்டிருந்த போது இன்னும் சிலர் சேர்ந்தனர். அப்பெண் எப்படியோ அந்த மூங்கில் வழியாக கயிற்றின் மீது ஏறி, கையில் ஒரு நீண்ட குச்சியையும் வைத்துக்கொண்டு கயிற்றில் மீது நடக்க ஆரம்பித்தாள். இன்னும் இரண்டு மூன்று மனிதர்கள் சேர்ந்து விடவே உறசாகத்துடன் தம்பட்டம் ஒலிக்க அவளும் இரண்டு முறை மேலும் கீழுமாக நடந்து விட்டாள். சிலர் சில்லரையை அந்தத் துண்டின் மீது எறிந்து விட்டு அகன்றனர். திடீரென அப்பெண் கீழே இறங்கிவந்து ஏதோ தன் தாயிடம் முணுமுணுக்கவும் தம்பட்ட ஒலி நின்றது. மனைவியைப் பார்த்த அந்த மனிதன் அவள் செயத ஜாடையைப் புரிந்து கொண்டு எக்காராணத்தாலோ தலையில் அடித்துக் கொண்டான்.
********
இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்னால், எனது சகோதரர்களுடனும் அவர்கள் குடும்பத்தினருடனும் தி. நகரின் ஒரு சுமாரான பெரிய ஹோட்டலுக்குச் சென்றிருந்தோம். நாங்கள் சென்றது அங்கு நடக்கவிருந்த ஒரு திருமண வரவேற்புக்காக; அந்த ஹோட்டலின் நுழைவாசலில் சில அறிவிப்புகள் இருந்தன. அதைப் பார்த்து எங்கு செல்ல வேண்டுமெனத் தெரிந்து கொள்ள வேண்டும. திருமண வரவேற்பு எங்கு எனப் பார்த்துக் கொண்டிருக்கையில், அங்கு வைக்கப்பட்டிருந்த மற்றொரு அறிவிப்பு என் கவனத்தை ஈர்த்தது. . . .இன்னாரின் மகளான செல்வி . . . எனப்பட்டவள் புஷ்பவதி ஆகிவிட்டதை அந்த அறிவிப்பு பிரகடனப்படுத்திக் கொண்டிருந்தது. அதற்காக அப்பெண்ணின் பெற்றோர்கள் ஒரு வரவேற்பு ஏற்பாடு செய்திருக்கின்றனர்!
அதற்காக ஒரு விழா எடுக்கப்பட்டுள்ளது. அங்கு அந்த ஏற்பாட்டிற்காக வந்திருந்தவர்களெல்லோருமே சுமாராக பணம் படைத்தவர்களாகத்தான் இருக்க வேண்டும். கைகளில் பல தினுசு தினுசான பரிசுப் பொருளகளும் இருந்தன! என்னதான் செய்கிறார்கள் என்று பார்க்க நானும் அந்த ஹாலின் அருகில், துணைக்கு எனது இளைய சகோதரனின் புத்திரியான ரம்யாவையும் அழைத்துக் கொண்டு சென்றேன். ஒரு கல்யாண வரவேற்பு போலவே இருந்தது. வந்தவர்கள் எல்லோரும் அப்பெண்ணின் பெற்றோரை வாழ்த்தினர். அப்பெண் கையில் பரிசுப் பொருளகளைத் தந்து மகிழ்ந்தனர். அப்பெண்ணின் உருவத்தையும் மீறி அவளுக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தலை நிறையப் பூ! திரும்பவும் வந்து அந்த பிரகடனத்தைப் பார்த்தேன்.
“புஷ்பவதி ஆன… ” அப்போது என்னையும் அறியாமல் சிரித்து விட்டேன். ரமயா ஏன் சிரிக்கிறீர்கள் எனக் கேட்டாள். “ரம்யா நீயே நினைத்துப் பாரேன்.
சப்போசிங் மெனோபாஸுக்கு இந்த மாதிரி ஒரு விழா எடுத்தால் எப்படியிருக்குமென்று?’
“சீ” * * * *
திடீரெனத் தம்பட்ட ஓசை நின்று விட்டதையடுத்து. தலையில் கை வைத்துக் கொண்டிருந்த அந்த தந்தையின் அருகில் சென்றேன். “என்னாச்சு?” “என்னத்தை சொல்ல சார். இவளை நம்பித்தான் நாங்க பொழப்பு நடத்துறோம் இப்போ பாருங்கோ திடீர்னு பொண்ணு பெரியவளாயிட்டதா இவ சொலறா. .”
தனது மனைவியைச் சுட்டிக்காட்டிச் சொன்ன அந்த மனிதனின் நிலைமையைக் கண்டால் பரிதாபமாயிருந்தது. தாய்க்கு மட்டும் தான் தெரியும் அப்பெண் பூப்பெய்து விட்டது; அதைத்தான அறிவார் அறிவார் என்றும் அறியார் அறியார் என்றும் சொன்னார்களோ! தாயோ, ஒரே நேரத்தில், சந்தோஷத்தையும் துக்கத்தையும் தனது முகத்தில் காட்டிக்கொண்டிருந்தது எனக்குத் தெரிந்தது. துண்டில் கிடந்த சில்லரையில் சிலவற்றைப் பொறுக்கியெடுத்துக் கொண்டு கோவிலுக்குச் சென்று அங்கு பூ விற்றுக்கொண்டிருந்த மாதிடம் இவ்விஷயத்தைச் சொல்லவும், அம்மாதோ, சற்றும் தயங்காது, பணத்தை மறுத்து விட்டு இரண்டு முழம் பூவை எடுத்து அந்த தாயிடம் அளித்து வாழ்த்தும் சொன்னாள்! அதைக் கொண்டு வந்து அப்பெண்ணிற்கு அணிவித்து விட்டு கட்டிப்பிடித்துக் கொண்ட தாய் யுகாந்திரமாக தாய்மார்கள் அனுபவிக்கும் சந்தோஷத்தை வெளிப்படுத்த முடியாமல் நின்று கொண்டிருந்தாள். வெளியிலிருந்தே உள்ளே வீற்றிருக்கும விநாயகரை நோக்கித் தொழுது நிற்கையில் அப்போதே வெளியிலிருந்து வந்து கொண்டிருந்த அர்ச்சகார் நாராயண சாஸ்திரியைப் பார்த்து அம்மாது சொன்னாள்: “சாமி, எம்பொண்ணு பெரியவளாயிட்டா; கும்பிடறேன்” என்றாள். “அப்பிடியா! இனணிக்கு திதி நடசத்திரம் எல்லாமே பேஷா இருக்கு ஒம்பொண்ணு பிரகாசிப்பா; இந்தா” என்று அவர் குங்குமப் பிரசாதமும் பூவும் கொடுத்தார். அப்பெண்ணின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை!
தந்தையின் முகம் மாறுபட்டிருந்தது. அவர் சந்தோஷத்தில் உள்ளாரா, துக்கத்தில் ஆழந்து கிடக்கிறாரா என்று விவரிக்க இயலவில்லை! அவர்களது சம்பாத்தியமே இப்பெண்ணின் மூலம் தான்! மூவர் சாப்பாடும் அவள் கையில்தான்! ஆனாலும் அவர்களும் மனிதர்கள்தானே! தமது பெண் பெரியவளானது அவர்களுக்கும் சந்தோஷத்தைத் தானே அளிக்கவேண்டும. ஏனிந்த ஒரே நிகழ்ச்சி சிலருக்குச் சந்தோஷத்தையும் மற்றும் சிலருக்குத் துக்கத்தையும் அளிக்க வேண்டும்? கயிற்றினின்றும் இறங்கிவிட்ட அப்பெண் எவ்வளவு மாறுபட்ட அக உணர்வுப் போராட்டங்களை உண்டாக்கிக் கொண்டிருந்தாள்! திடீரென சைரன் ஒலிக்கும் கார் ஒன்று எங்களைத் தாண்டிச் சென்றது. அதுவும் ஒரு ஓசை தான்; ஏன் ஒரு ஓலம் தான்! நான் கவனிக்கப்பட வேண்டியவன் என்று அறிவித்துக்கொண்டு செல்கிறார் அக்காரினுள் உள்ளளவர். தான் செல்வது மற்றவர்களுக்குத் தெரியவில்லை என்றால், அது தன்னுடைய கர்வபங்கம் என்று நினைத்துத் தான்அவ்வாறு ஓலத்தை ச் செயது கொண்டு அவரும் பாவம் செல்கிறார்!
அதிலிருப்பபவரும் மனிதன் தான். அரசியல் வாதியோ அல்லது உயர்ந்த பதவியிலிருக்கும் அதிகாரியாகவோ இருக்க வேண்டும். வெட்கம் கெட்டவர்கள்! எனது வாய் முணுமுணுத்தது இவர்கள் செல்வது உலகுக்கு எல்லாம் தெரியவேண்டுமா? “சைரனுக்குப் பதிலாக, நீயும் ஒரு தம்பட்டத்தை ஏன் கையில் எடுத்துக் கொள்ளக்கூடாது. அதை அடிக்கக்கூட உனக்கு ஆட்கள் தயாராகக் கிடைப்பார்களே!” எனக் கேட்கலாம் போலிருந்தது! இங்கு தம்பட்டம் அடித்து தனது இருப்பிடத்தை உணர்த்திக் கொண்டிருக்கும் இந்த கழைக்கூத்தாடிக்கும் சைரனை அடித்துக்காட்டிக்கொன்டு மற்றவர்கள் உபயத்தில் பெரும் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் இந்த”பெரிய” மனிதர்களுக்கும் என்ன வித்தியாசம்?
இந்த கழைக்கூத்தாடியே சிறந்தவர்! ஆனாலும் நடைமுறையில் தினசரி சாப்பாட்டிற்கே ஆட வேண்டிய நிலை! பள்ளி செல்ல வேண்டிய வயதில் கழைக்கூத்து! சைரன் கார்காரர் தனது சொந்த விளம்பரத்திற்காக “சிறாக்களைப் பள்ளிக்கு அனுப்புங்கள்; வேலை செய்ய அனுப்பாதீர்கள்” எனச் சொல்லலாம்! வேறுபாடுகள் இவ்வளவா?
ஹோட்டலில் வாழ்த்துப் பெற்றவளும் ஒருத்தி தான். இங்கு நிற்கும் இக்காம்பு, தனது இரு மருங்கிலும் பூ ததும்ப நிற்கிறாளே இவளும் ஒரு மனுஷிதான்! ஆனால் மனிதர்களுள எவ்வளவு வேறுபாடு! மூங்கில்களை சேர்த்துக் கொண்டுகயிற்றையும் சுற்றிக் கொண்டு கிளம்பத் தயாராகிவிட்டார் அந்தக் கழைக்கூத்தாடி! சுற்றிக் கொண்டிருந்த துண்டின் அருகில் சென்று என் பையிலிருந்து எடுத்த ரூபாய் நோட்டை அத்துண்டில் போட்டேன். அக்கூத்தாடியின் கண்கள் அகல விரிந்தன. “ஐயா! நீங்கள் பிள்ளை குட்டிகளோடே நல்லா இருக்கணுமய்யா!” என்ற போது அந்த வார்த்தைகளின் உண்மையும், ஹோட்டலில் பார்த்த சமுதாய நோக்கிற்காகச் சொல்லப்பட்ட வார்த்தைகளின் ஆழமின்மையும், அரசியல் வாதியோ ஒரு அதிகாரியோ சென்ற அக்காரின் அபத்தமான சைரனின் ஒலியும் இரைந்தே சொல்லியவை, ” மன்ற அறிவா ரறிவா ரறியா ரறியார்” என்ற வார்த்தைகள்தாம்! அவ்வார்த்தைகள் அந்த இடத்திலெல்லாம் வியாபித்து, எல்லா பக்கங்களிலிருந்தும் என்னைத் தாக்கின. இருதலையும் பூ கொண்ட அப்பெண்ணை இப்போது பெற்றோர்கள் அரவணைத்து ஆனந்தத்துடன் முத்தமிட்டனர்! அவர்கள் அறிவர். வையக மெல்லா மலர்ந்தபூ வண்டறியும்; ஓங்கல் அறியும் கடலாழம்!
நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=65668
நரசய்யா has written 3 stories on this site.
இலக்கியப் பயணத்தில் அரை சதம் (50 ஆண்டுகள்) கடந்து வந்து எழுத்துலகில் பெரும் சாதனை புரிந்து, எண்ணற்றோருக்கு வழிகாட்டியாகவும் இருப்பவர் திரு. நரசய்யா அவர்கள். எளிமையும், தன்னடக்கமும் தன்னகத்தேக் கொண்ட இவரது அனுபவம் வாய்ந்த எழுத்துகளும், தெளிந்த ஆய்வுக் கட்டுரைகளும், நூல் விமர்சனங்களும், ஆங்கிலம் மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும், வருங்கால எழுத்தாளர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்வது என்றால் அது மிகையாகாது. இவருடைய முதல் தமிழ் சிறுகதை, தாம் தமிழ் மொழியை முழுமையாக அறியாத காலத்தில் எழுதிய கதையே, 1964ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், ஆனந்த விகடன் முத்திரைக் கதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்று ஒன்பது கதைகள் முத்திரையிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. கப்பலில் மாலுமியாக இவர்தம் நெடிய வாழ்க்கைப் பயணம் பல சாதனைகள் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமூகநல சேவகியாக தமிழக அரசில் முப்பத்துநான்கு ஆண்டுகள் பணியாற்றி, துணை இயக்குனர் பதவியில் இருக்கும் பொழுது ஓய்வு பெற்றவர் திருமதி சீதாலட்சுமி சுப்பிரமணியன் அவர்கள். அவரை அறிந்தவர்களால் சீதாம்மா என்று அன்புடன் அழைக்கப்படும் முற்போக்கு சிந்தனைகளும் கொள்கைகளும் கொண்ட சீதாம்மா பெண்களின் உரிமைக்காகவும், குழந்தைகள் நலனுக்காகவும் சமூகப்பணியாற்றியவர். இவரது எழுத்துக்களும், பணிகளும் சமுதாய நலனில் அக்கறை கொண்டவையாக இருப்பதுடன் தன்னை சமூகசேவகி என்று அடையாளம் காணுவதில் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்பவர்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
அணையா நெருப்பு!--கமல்ஹாசன்
...
காதல் ஓர் விநோத நோய். தேரைக்கும் பாறைக்கும் ஏற்பட்ட காதல் போல யாரும் அறியாது நிகழ்ந்த இந்தக் காதல் சங்கமத்தில், என் காமச் சூட்டைவிட காதல் வண்ணம் மேலோங் கியது.என் முதல் காதல் நாசமாய்ப் போனதே… அதுபோல் இதுவும் ஆகும் என்று தோன்றியது.அவளை எனதாக்கிக் கொள்ளும் அவசரத்தில், அவளையே கரிக்கிச் சாம்பலாக்கிவிடுவேன் நான். தெரியும் எனக்கு. தோற்ற என் முதல் காதல் தந்த அனுபவம் இது.‘முதல் காதல் யாருடன்?’ என்று நண்பர் கேள்வியைக் கேட்கும் முன், சுடச்சுட வந்தது பதில்.‘‘முதல் காதல் காட்டுடன், வனமோகினியுடன். நான் அப்போது மலைமகன். விடலை. என் காதலைச் சொன்னவுடன் வெகுண்டு வெடித்தார் தந்தையார். என்னை வீட்டைவிட்டு வெளியேற்றினார். குழம்பிப் போனேன். காதலியைத் தேடிப் போனேன். பல நாள் கனவிலே செய்ததை அன்று நினைவில் செய்தபோது, காதலி கரிந்துபோனாள். என் காதலும்தான்! என் காதல் தோற்ற கோபத்தில் காதல், காமம் என்ற வார்த்தை களைக் கேட்டாலே எரிந்து விழுந்தேன். சிவனின் மகன் மாறன் கரிந்ததும் என்னால் தான். அந்நிலை இன்று இவளுக்கும் ஆகும். தெரியும் எனக்கு. இவளுடன் ஒன்று சேருவதை விட இவளைக் காப்பதே என் கடமை என்றது காதல். என் கைக்குள்ளே வந்த சீதையிடமோ குரோதமும் ஆதங்கமுமே தெரிந்தது. மோதியழ ஒரு தோள் நான். அவ்வளவே!அவள் என் மேல் அன்று பொழிந்தது காதல் மழையல்ல, கருணை மழை! உதட்டளவில் தானமாகக் கொடுத்தாள் காதலை.‘‘உன்னுடன் வருகிறேன் என்றவளை ஏன் வேண்டாம் என ஒதுக்குகிறாய். ஏற்க என்னை!’’ என்றாள்.‘‘சீதா! காதல் ஒன்று சேருவதில் மட்டுமே வருமெனில், ராமனின் காதல் இந்நேரம் வெகுவாகக் கூடி இருக்க வேண்டுமே! கூடியபின் குறையும் குணம் உள்ளது காதல். என்னருமை சீதா! காமத்தில் நான் குளித்து நனைந்தால், யாருக்கும் இன்றி அவிந்தேபோவேன். நீ அயோனிஜா, மீண்டும் உன் தாய் வீட்டுக்கே போவாய். மற்றவர்போல், கடைசியிலேனும் என் கைவசப்படுவாய் என்ற நம்பிக்கையும் இல்லை எனக்கு. என்னைப் போல் நீயும் நியதிகளுக்கு அப்பாற்பட்டவள். உன் கற்பும் கலையாமல், நம் காதலும் கரையாமல் இருக்க, நாம் கூடவே கூடாது.என்னைக் கடந்து செல், உன் சுயநல ராமனிடம்! இந்தக் கூடாத கூடலில், நியதிகளுக்குள் அடங்காத நானே கருத்தரிப்பேன்! நம் காதலின் நினைவாக உன் வடிவில் ஒரு குமாரத்தி யைப் பிரசவிப்பேன்! அவளுக்கு திரௌபதை என்று பெயரிடுவேன். சம்மதமா?’’ என்றேன்.சீதை என் காதல் கேட்டுக் கண்கலங்கினாள். ‘இத்தகைய காதலை நான் அனுபவித்ததே இல்லை. இத்தகைய ஆணையும் நான் சந்தித்தது இல்லை. இனியும் அது நிகழாது'.
உன் இந்த அன்புச் சூட்டில் உன் கை தவழ்ந்து வெளியேறிய பின், உன் நினைவாகவே இருப்பேன். என் கற்பு, ராமன் போன்றவர் வாழும் பிரதேசத்தில் அழுகித்தான் போகும். என் கற்பு உன்னிடமே இருக்கட்டும்.
எழுத்தாளர் ஜெயகாந்த்னின் நூல்களை எனக்கு அறிமுகம் செய்தவர் என் அம்மா ஜனகா.அவரை எனக்கு நேரில் அறிமுகம் செய்தவர் சீத்தாம்மா. அந்த சந்திப்பின் போது அவர் கையெழுத்துப் போட்டு கொடுத்த நூல்கள் என்னிடம் இருக்கின்றன.இந்த கதையை மிக இளம் வயதில் அம்மாவின் நூல் சேகரிப்பில் வாசித்திருக்கின்றேன். அதே நினைவும் இப்போது வாசிக்கும் போதும்.ஒரு சமூகச் சிற்பி ஜெயகாந்தன்.ஒரு கதையிலேயே நூற்றாண்டுகளின் அழுக்கை துடைத்து சுத்தம் செய்துவிடும் லாவகம் இந்தக் கதையில்.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
On Saturday, February 20, 2016 at 10:19:32 AM UTC-8, Suba.T. wrote:
எழுத்தாளர் ஜெயகாந்த்னின் நூல்களை எனக்கு அறிமுகம் செய்தவர் என் அம்மா ஜனகா.அவரை எனக்கு நேரில் அறிமுகம் செய்தவர் சீத்தாம்மா. அந்த சந்திப்பின் போது அவர் கையெழுத்துப் போட்டு கொடுத்த நூல்கள் என்னிடம் இருக்கின்றன.இந்த கதையை மிக இளம் வயதில் அம்மாவின் நூல் சேகரிப்பில் வாசித்திருக்கின்றேன். அதே நினைவும் இப்போது வாசிக்கும் போதும்.ஒரு சமூகச் சிற்பி ஜெயகாந்தன்.ஒரு கதையிலேயே நூற்றாண்டுகளின் அழுக்கை துடைத்து சுத்தம் செய்துவிடும் லாவகம் இந்தக் கதையில்.
இன்று ஜெயகாந்தனின் முதல் நினைவு நாள் (ஏப்ரல் 8).ஏப்ரல் 24 அவரது பிறந்த நாள்.இரு வாரங்களுகளுக்கு அவருடைய சிறுகதைகளையும் கூட நாம் இங்கு பகிர்ந்து கொள்ளலாம்.ஜெயகாந்தனின் சிறுகதைகள்..மதுரை திட்டத்தின் வழி கீழ்காணும் சுட்டிகளில் படிக்கக் கிடைக்கும்....சிறுகதைகள் - தொகுப்பு - 1 http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0198.htmlசிறுகதைகள் - தொகுப்பு - 2 http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0199.htmlசிறுகதைகள் - தொகுப்பு - 3 http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0204.html..... தேமொழி
இன்று தமிழ் நாட்டில் விநாயகர் மூர்த்தி பிரதிஷ்டை செய்யப்பட்டிராத இடத்தைப் பார்ப்பது வெகு அபூர்வமாகத்தான் இருக்கும். எந்த கிராமத்திலும் ஒரு சிறிய பிள்ளையார் கோவில் இருக்கும். ஒரு சிறு அறை, கம்பிக்கதவு. உள்ளே எரியும் சிறு விளக்கு. அவ்வளவு தான். ஏரி, குளக்கரைகளில், கிணற்றங்கரையில் பெரிய ஊர்களில், தெரு முனைகளில், நகரங்களில் அனேக நடைபாதைகளில், விநாயகருக்கு இல்லாத இடம் இல்லை. ஆனால் இந்த இடங்களில் அவருக்கு ஒரு அறை, பூட்டிய கதவு என்று எதுவும் தேவையில்லை. மரத்தடியில் ஒரு மேடை இருந்தால் போது, பாரிய உடம்பானாலும், எங்கும் இருக்க அவருக்குச் சம்மதம் தான். கிணற்றடியில், குளக்கரைகளில் இருக்கும் பிள்ளையார் பற்றி கதைகள் சொல்லக் கேட்டிருக்கிறேன். பெண்கள் காலையிலும் மாலையிலும் குளிக்க, தண்ணீர் எடுத்துச் செல்ல கூட்டம் கூட்டமாக வரும் இடத்தில் பிள்ளையார் காத்திருக்கிறாராம். தன் அன்னை பார்வதி தேவியைப் போல அழகான, புத்திசாலியான பெண்ணைத் தேடி. ஆசை யாரை விட்டது? இதைச் சொல்லும்போது, பாட்டியிலிருந்து என் அம்மா, மாமி வரை எல்லோரும் ஒரு நமுட்டுச் சிரிப்பு உடன் உதடுகளில் மொட்டுக் கட்டியிருக்கும். அவர்கள் கிண்டல் செய்வது போல இருக்கும். பிள்ளையாரையா, அல்லது என்னையா என்பது தெரியாது. இப்படி பிள்ளையாரையும் விஷமத்தனமாக கிண்டல் செய்யும் ஹிந்து சமூகத்தைப் பற்றி இப்போது எனக்கு கர்வம் தான்.
நான் ஒன்றும் அவ்வளவு சமயப் பற்று கொண்டவன் இல்லை. ஹிந்து சமூகத்தில் பிறந்தேன். ஹிந்துவாக இருக்கிறேன். வேறு எதுவாகவும் மாறுவதற்கான சாதாரண காரணங்கள் கூட எனக்குத் தென்படவில்லை. எங்கு போனாலும் இந்தக் கதைதான் என்பது திட்ட வட்டமாகத் தெரிகிறது அன்றாட உலக நிலவரங்களைப் பார்க்கும்போது. அதனால் ஹிந்து என்றால் திருடன் என்று நான் நம்பவில்லை. திருடனுக்கு மதம் இல்லை. நான் ஹிந்துவாகப் பிறந்ததற்கு வெட்கப்படவும் இல்லை.
இந்த ஹிந்து மதத்தில் தான் எவ்வளவு சுதந்திரம்! ஹிந்து என்றால் திருடன் என்று யாரும் சொன்னால், ஹிந்துவாக பிறந்ததற்காக வெட்கப்படுவதாக சொன்னால், அதற்காக ஹிந்து மதம் அரண்டு வெறி பிடித்து என்ன தண்டனை கொடுக்கலாம் என்று வெறியாட்டம் போடுவதில்லை. அதனால் தான் அவர்களுக்கு இப்படிச் சொல்லும் தைரியம் வந்ததோ என்னவோ. அந்த தைரிய்த்தையும் சுதந்திரத்தையும் கொடுத்த ஹிந்து மதத்தில் பிறந்ததற்கு அவர்கள் சந்தோஷப்படலாம். பிள்ளையாரைப் பற்றிய சுதந்திரம், அவரை எப்படி வேண்டுமானாலும் நடத்த அவர் நமக்கு சுதந்திரம் தந்துள்ளாரா அல்லது எப்படி வேண்டுமாலாலும் எங்குவேண்டுமானாலும் இருக்க அவர் சுதந்திரம் கொண்டுள்ளாரா என்பது பற்றி நிச்சயமாகச் சொல்லிவிட முடியாது. இரண்டும் தான். பிரம்மாண்ட கோவில்களில், எல்லோரும் தொடப்பட முடியாத, விதிமுறைகள், சடங்குகள் நிறைந்த பிரதி நிதியாகவும் அந்த மூர்த்தி வடிவமாக இருக்க அந்த தெய்வத்திற்கு இஷ்டம் தான். அரசமரத்தடியில் சடங்குகள் ஏதுமின்றி பிரதிஷ்டை செய்யப்பட்டு, காக்கை எச்சமிட வெட்ட வெளியில் அமர்ந்திருக்கவும் அந்த பிள்ளையாருக்கு ட்சேபணை இல்லை. வெகு வயதான மரத்தின் வேர்கள் தரையில் பரவும் கோலம் பிள்ளையாரின் தோற்றத்தைத் தந்தால், அந்த வேர்களிலும் பிரசன்னமாகி, குங்குமம், சந்தனம் இட்டுக்கொள்ளத் தயார் தான். சமீப காலங்களில் அரசியல் கட்சிகள் சிலவற்றின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டிருந்தாலும், இவ்வளவு வெகுஜனப்ரியரான ஒரு கடவுள் வேறு உண்டா என்று தெரியவில்லை.
வினாயக சதுர்த்தி அன்று வீட்டிலேயே பூஜை அறையில் வினாயகரை பிரதிஷ்டை செய்து பூஜிக்க, சின்ன மர அச்சுக்களில் களிமண்ணால் ன பிள்ளையார் சிலைகளை எட்டணா ஒரு ரூபாய் என்று வாங்கிச்சென்ற ஞாபகம். இப்போதும் அந்த பழக்கம் உண்டா என்று தெரியவில்லை. சின்ன களிமண் பிள்ளையார். பூஜை முடிந்த மறுநாள் அந்த பிள்ளையாருக்கு வீட்டில் இடமிருக்காது. கிணறு, ஏரி, குளம், று என்று அவருக்கு வாசஸ்தலம் தேடப்படும். ஒரு வம்பு தும்பில்லை. அவருக்கும் ஏது ஆட்சேபனை இருந்ததில்லை.
இந்த தலைமுறைக்கு நினைவு இருக்கிறதோ என்னவோ, ஒரு சமயம், பகுத்தறிவுத் தந்தையின் நாஸ்திக பிரச்சாரம் பிள்ளையாரை உடைப்போம் என்று தம் திட்டத்தைச் சொல்லி பயமுறுத்தியது. அவரது நாஸ்திகம் பிள்ளையாரைத் தான் தனிமைப் படுத்தியது. வேறு எந்த கடவுளையும் தொடவில்லை. அப்போது ராஜாஜி முதன் மந்திரியாக இருந்தார். நாயக்கரும் ஆச்சாரியாரும் 1920லிருந்து நண்பர்கள். காங்கிரஸ் கட்சியில் நாயக்கரைச் சேர்த்ததே ச்சாரியார் தான். அதெல்லாம் பழைய கதை. இப்போதைய பிள்ளையார் சிலை உடைப்பு ரகளை முன்னிற்கிறதே. பகுத்தறிவுத் தந்தை உடைக்கத் திட்டமிட்டது மர அச்சில் வடிக்கப்பட்ட களி மண் பிள்ளையார் தான். அதை பிள்ளையார் உபாசகர்களே மறு நாள் அந்த அச்சுப் பிள்ளையாரை கிணற்றில் குளத்தில் எறியத் தான் போகிறார்கள். "அது பொம்மைப் பிள்ளையார் தான். உடைத்துவிட்டுப் போகட்டும்" என்று ராஜாஜி சொல்லவே, எந்த ரகளையும் ஏற்படாமல், பொது மக்கள் வேடிக்கை பார்க்க, "பிள்ளையார் சிலை உடைப்பு" அமைதியாக, வெற்றிகரமாக நடந்தேறியது. அதன் பிறகு அந்தப் போராட்டம் தொடரப்படவில்லை. ஆனால் பிள்ளையார் பூஜைகள், ஒவ்வொரு வருட சதுர்த்தசி தினமும் நடந்து வருகிறது. நடைபாதைப் பிள்ளையாருக்குக் கூட ஏதும் பத்து வரவில்லை. அவர் சௌக்கியமாகவே இருந்து வருகிறார். தஞ்சை ரயில் நிலயத்தில் நட்ட நடுவில் ஒரு பிள்ளையார் கோயில் இருக்கிறது தெரியுமோ. தஞ்சை ரயில் நிலயம் என்ன, சிலைகளை உடைக்கச் சொன்ன பெரியார் ஒவ்வொரு ஊரிலும் கிராமத்திலும் தெரு முனையில் முச்சந்தியில், பூங்காக்களில், வாகனச் சந்தடி நடுவே தானே சிலையாகி நிற்பதே ஒரு விடம்பனம் தான்.
இதெல்லாம் போகட்டும். முன்னர் ஒவ்வொரு வீட்டினுள்ளும் சின்ன அளவில் அமைதியாக நடந்து வந்த பிள்ளளையார் பூஜை இப்போது சமூக நிகழ்வாகப் பெரிதாகி விட்டது. எவ்வளவு வேகத்தில் பந்தை எறிகிறோமோ அவ்வளவு வேகத்தில் அது சுவற்றில் அடிபட்டுத் திரும்பும். அப்படித்தானோ என்னவோ. பெரிய பிள்ளையார் சிலைகள். ஆறு அங்குல மர அச்சில் வார்த்த களி மண் பிள்ளையார் இருந்த இடத்தில் இப்போது மூன்றடி உயரத்திலிருந்து பத்து அடி உயர் பிள்ளையார் வரை, 500 ரூபாயிலிருந்து 15000 ரூபாய் விலையில் பிள்ளையார் சிலைகள் உருவாக்கப்படுகின்றன. இப்போது சமீப காலமாகத்தான் இப்படி ஒரு சமூக விழாவாக இது கியுள்ளது.
மகா ராஷ்டிராவில் தான், மராத்தியர்கள் தான் விநாயக பூஜையை இப்படி கோலாகலமாக பெரிய அளவில் நடத்துவார்கள். நம்மூர்களில் நடக்கும் உறியடியும் அங்கு நடக்கும். மிக உயரத்தில் கட்டப்பட்டிருக்கும் உறியில் பணம், தவிர இன்னும் என்னென்னவோ வைக்கப்பட்டிருக்கும். அந்த உறியைக் கைப்பற்ற மனித கோபுரம் எழுப்பப்படும், நான்கைந்து மனித உயரத்திற்கு. கீழே தாங்கி நிற்பவர்களின் தோளில் ஏறி இப்படி பல அடுக்குகளில் கோபுரம் எழும். ஒரு காலத்தில் மகாராஷ்டிரத்திலும் முன்னர் நம்மூர்களில் இருந்தது போல வீட்டு நிகழ்வாகத்தான் அது இருந்தது என்று நினைக்கிறேன். இதை ஒரு சமூக நிகழ்வாக, தேச பக்த உணர்வை எழுப்பும் செயல்பாடாக க்கியது, பால கங்காதர திலகர். சிறந்த கல்விமான். தத்துவங்களில், நிறைந்த ஞானம் உள்ளவர். மாண்டலே சிறையில் இருந்த போது கீதா ரகஸ்யம் என்ற பெரிய நூலை இயற்றினார். அது அவரது உலக, தத்துவப் பார்வையைச் சொல்லும். கீதையில் சொல்லப்பட்டுள்ளது அனைத்தும் கர்ம யோகத்தை நோக்கிச் செல்வது. என்பது அவர் முடிபு. அந்த கர்ம யோகம் இன்று வலியுறுத்துவது தேச விடுதலை. மனித விடுதலை என்பது திலகர் கருத்து. அவர் மராத்தியர்களுக்கு தேச பக்தி உணர்வை ஊட்ட இரண்டு பெரிய சமூக செயல்பாட்டை ரம்பித்து வைத்தார். ஒன்று கணேஷ் பூஜை. இரண்டாவது சிவாஜியை, அன்னியர்களை விரட்டிய முதல் வீர புருஷனாக உணர்த்தியது. அனேகமாக ஒரு நூற்றாண்டு காலமாகப் போகிறது. இரண்டும் மகாராஷ்டிரத்தில். மராத்தியர் வாழும் இடங்களில் எல்லாம் பெரிய அளவில் கொண்டாடப்படுகின்றன.
ஆனால், இங்கு பெரிய அளவில் நடத்தப்படும் பிள்ளையார் சிலை ஊர்வலத்திற்கும் அதன் சங்கமத்திற்கும் பெரிய அளவில் கட்டுப்பாடுகள் தோன்றியது ஏனே தெரியவில்லை. ஏன் இவ்வளவு எதிப்பை, முஸ்லீம் கள் காட்டுகிறார்களோ இல்லையோ, அரசு முஸ்லீம்களுக்கு எதிரானது என்று காரணம் சொல்லி, சட்டம் ஒழுங்குக்கு அபாயம் என்று பயமுறுத்துகிறார்கள். கடைசியில் எந்த வழி செல்ல வேண்டும், எப்படிச் செல்ல வேண்டும், போலீஸ் பாதுகாப்பு என்றெல்லாம் சொல்லி கடைசியில் அந்த ஊர்வலத்தின் விழாக் கொண்டாட்டத்தின் உயிரையே பறித்து சக்கையாக்கி விட்டிருக்கிறார்கள். முஸ்லீம்கள் எதிர்ப்பு என இல்லாத ஒன்று உருவாக்கப்படுகிறது என்று தான் தோன்றுகிறது. முஸ்லீம்கள் பெருமளவில் உள்ள ஆனால் ஹிந்துக்களே பெரும்பான்மையாக உள்ள தில்லியில் ங்காங்கே போக்குவரத்து நிறைந்த சாலைகளில் கூட முகர்ரம் பண்டிகையின் ஊர்வலங்களில் பெரிய பெரிய தாஜியாக்கள் எடுத்துச் செல்வார்கள். எல்லாம் அமைதியாக நடக்கும். அவையும் ஒர் அழகு தான். வாழ்க்கையைக் கொண்டாடும் ஒர்பாங்கு. ஆனால், இங்கு ஏன் பீதி கிளப்பப் படுகிறது என்று தெரியவில்லை. இதையெல்லாம் பார்க்கும் போது, வீட்டளவிலேயே நடக்கும் சின்ன மர அச்சுப் பிள்ளையாரே அமைதியும் அழகும் நிறைந்தவராகத் தோன்றுகிறார் எனக்கு. ஒரு குழந்தைமையும் அவருக்கு இருப்பதாகத் தோன்றுகிறது. விக்னேஸ்வரர் அதாவது இடர்பாடுகளை நீக்குபவர் என்று பொருள் பெற்ற பெயர் கொண்ட அவர் விக்னங்களையே, அதாவது இடர்பாடுகளையே சமூகத்தில் விதைப்பவராக இங்கு க்கப்பட்டுள்ளது, தமிழ் வாழ்க்கையில் காணும் விடம்பனம் தான்.
இவ்வளவு வம்புகளுக்கும் காரணம் திலகரின் தேச பக்த உணர்வில் பிறந்த இந்த பத்தடியோ பதினைந்தடியோ உயர ஊர்வல மூர்த்தியான எண்ணெய் வண்ண பிள்ளையார் தான் என்று நினைக்கக் கூடாது. பிள்ளையாரே நமக்கு மகாராஷ்டிரத்திலிருந்து பெறப்பட்டவர் தான். இறக்கு மதி தான். ஏழாம் நூற்றாண்டில் நரஸிம்மவர்ம பல்லவன் இரண்டாம் புலிகேசி என்னும் சாளுக்கிய மன்னனைத் தோற்கடித்து வாதாபியைக் கைப்பற்றினான். அந்தப் போரில் நரசிம்ம வர்மப் பல்லவனின் சேனாதிபதியாக இருந்தவர் பின்னர் சிறுத்தொண்ட நாயனார் என்று பெயர் பெற்ற பரஞ்சோதி. அவர் தான் வாதாபியிலிருந்து விநாயகர் சிலையைக் கொணர்ந்து விநாயக வழிபாட்டைத் தமிழ்நாட்டில் தொடங்கி வைத்தார். இதைத் தான் முத்து சாமி தீக்ஷ¢தர் தம் ஹம்சத்வனி ராக கிருதி, "வாதாபி கணபதிம் பஜே" யில் குறிப்பிடுகிறார், வாதாபி கணபதி என்றே. இதற்கு முன் தமிழ் நாடு விநாயகரை அறியாது. திருமாலை அறியும். சிவனை அறியும். கொற்கை என்னும் துர்க்கையை அறியும். முருகனை அறியும். ராமாயணத்தை, மகாபாரதத்தை தமிழர் அறிவர். விநாயகரை அல்ல. பரஞ்சோதி வாதாபி சென்று புலிகேசியை வென்று திரும்பிய 630-640 கி.பிக்கு முந்திய எந்த தமிழ் நூலிலாவது விநாயகருக்கு வாழ்த்து சொல்லப் பட்டுள்ளதா என்று பார்க்கலாம். இல்லை யென்று தான் நான் நினைக்கிறேன். தமிழ் புலமை சான்றோர் இது பற்றித் தம் நுண்மாண் நுழைபுலக் கருத்து ஏதும் சொன்னால் நான் நன்றியுடையவனாக இருப்பேன்.
இதன் பின் பிள்ளையார் இல்லாத இடம் இல்லை. எந்த காரியம் தொடங்கினாலும் விக்னம் இல்லாது நடக்க அவன் துணை வேண்டியிருக்கிறது. எந்த புலவரும் வினாயகருக்கு வாழ்த்துப் பாடித் தான் தம் நூலை இயற்றத் துணிகிறார். பாரதி வரை. ஒம் சக்தி என்று தொடங்கினாலும் அடுத்தாற்போல் :கணபதி ராயனின் இருகாலைப் பிடித்திடத்தான் அவர் மனம் செல்கிறது. அவர் எல்லா ஊருக்கும் எல்லைக்கடவுள் போல் கிவிட்டார். ஆனாலும், விக்னங்களை நாசம் செய்பவர், விக்னங்களையே தருபவராக சமூகத்தின் ஒரு பாலாரால், சில கட்சிகளால் கருதப்பட்டாலும், அவருக்குக் கற்பிக்கப்பட்டுள்ள உருவே அந்த விளயாட்டுச் சிறுவனின் பிரதிமையே வேடிக்கை உணர்வைத் தருகிறது. மகாராஷ்டிரத்தில் ஒரு பெண்மணி இன்னும் ஒரு சில நூறு பிரதிமைகள் செய்துவிட்டால் 50,000 பிரதிமைகளைச் செய்த இலக்கை அடைந்து விடுவேன் என்கிறார். இவ்வளவு பிரதிமைகள் செய்த பழக்கத்தாலோ என்னவோ, கண்களைக் கட்டிக் கொண்டே கூட அவரால் பிரதிமைகளைச் செய்துவிட முடிகிறது. அதுவும் நவீன சிற்பிகளைப் போல வித விதமான படிமங்களில் வித்தியாசமான பிரதிமைகளை அவர் சில நிமிடங்களில் அவர் விரல்கள் செய்யும் மாயத்தில் ஒரு நவீன படிம வினாயகர் உருவாக்கி விடுகிறார். சென்னையில் கூட கடந்த வருடம் ஒரு வாலிபர் எண்ணற்ற வினாயக சிற்பங்களைச் சேகரித்து வைத்திருந்ததை ஒரு தொலைக்காட்சியில் பார்த்தேன். கையில் கிரிக்கெட் மட்டை தாங்கிய் வினாயகர், பந்தின் மேல் கால் வைத்து உதைக்கத் தயாராயிருக்கும் வினாயகர், பைக்கில் அமர்ந்த கோலத்தில், இப்படி பல தோற்றங்களில். பாண்ட்டும் சர்ட்டும் போட்ட வினாயகர் கூட இருந்ததாக ஞாபகம்.
சிற்பிகளுக்கும் வினாயகர் பிரதிமை தரும் உற்சாகமும், கற்பனைப் பெருக்கமும், பார்த்தவர்களுக்குத் தான் தெரியும். அந்த பிரதிமை வாய்த்திருப்பது அப்படி. என்னென்ன விதமாக வெல்லாம், அந்த உருவம் தரும் வாய்ப்புகளுக்கும் அப்பால் கற்பிக்கத் தோன்றுகிறது. நிறைந்த கவர்ச்சியும், அழகும் வாய்ந்த பிரதிமை அது. முக்கியமாக நடனமாடும் விக்னேச்வரர் சிற்பங்களைப் பார்த்திருக்கிறேன். அப்படிப்பட்ட ஒரு கவர்ச்சி நடராஜப் பிரதிமைக்கே உண்டு.
எதுவானாலும், அதிலிருந்து மேம்பட்ட சிந்தனையையும், அழகுணர்வுகளையும் பெறுவது நமக்குள்ளிருந்து பிறக்க வேண்டும். அது நாம் எப்படிப்பட்ட ன்மா என்பதைப் பொறுத்துள்ளது. பரஞ்சோதி கொணர்ந்த கொடை நம் சங்கீதத்தை, சிற்பக் கலையை, கவிதையை, வாழ்க்கையை, விழாக்களை சிறுவர்களின் விளையாட்டு மனத்தையும் கூடத்தான் வளப்படுத்தியுள்ளது. நமது மனக்கட்டமைப்பு வேறானால், அழிப்பதற்கு எதுவும் சாக்காகும்.
பாரதியின் சிறுகதை- தற்காலத் தமிழில்
'காந்தாமணி... உன் அப்பாவின் பெயர் என்ன?' பாட்டி கேட்டாள். அது ஒரு கிணற்றடி. காலை நேரம். இளைய சூரியன் வானத்தை அழகாக்கிக் கொண்டிருந்தான். அந்தக் கிணற்றில் தானே நீர் இறைத்து ஒரு கிழவர் குளித்துக்கொண்டிருந்தார். அவர் பெயர் பார்த்தசாரதி அய்யங்கார். போலீஸ் வேலையிலிருந்து நீக்கம் செய்யப்பட்டவர். 'ராம நாம'த்தை ஜெபித்து காலத்தைப் போக்கிக்கொண்டிருந்த கிழவர் அந்தப் பாட்டியையே பார்த்துக் கொண்டிருந்தார்.
அது வேப்பந்தோப்பில் அமைந்த கிணறு. செழித்திருந்த அந்தத் தோப்பில் மூலிகைகள் நிறைய கிடைக்கும் என்பதால் நான் அங்கே வந்திருந்தேன்.
'உன் அப்பாவின் பெயர் என்ன?' என்ற பாட்டியின் கேள்விக்கு 'எங்க அப்பாவின் பெயர் பார்த்தசாரதி அய்யங்கார்'' என்று காந்தாமணி பதில் சொன்னாள். அவளின் குரல் குழலின் இசையைப் போன்றிருந்தது.
கிழவி போலீஸ் பார்த்தசாரதி அய்யங்காரை முறைத்துப் பார்த்தாள். பார்த்தசாரதி அய்யங்காருக்கு கைகால் வெலவெலத்துவிட்டது. அய்யங்காருக்கு உடம்பு தலையெல்லாம் நரைத்த முடி. ஆனால், உடம்பு 18 வயது பையனின் உடம்பு போல உருண்டு திரண்டிருந்தது. ஆண் புலியை வேட்டையாடும் ஆள் என்றும், பாம்புகளைப் பிடிக்கும் ஆள் என்றும் தன்னைப் பற்றி பார்த்தசாரதி அய்யங்கார் என்னிடம் சொல்லியிருக்கிறார்.
இப்படிப்பட்ட சூராதி சூரர் ஒரு பாட்டியின் பார்வைக்கு பயந்து நடுங்குவது ஆச்சரியமாக இருந்தது. அந்தப் பாட்டி பார்த்தசாரதி அய்யங்காரைச் சுட்டிக்காட்டி, 'இவரா உன் தந்தை?' என்று கேட்டாள்.
காந்தாமணி, 'அடக் கடவுளே' என்பதுபோல, வானத்தை நோக்கி கையை உயர்த்தி, நக்கல் சிரிப்புடன், 'இந்த ஆள் கருப்பாக, ஆசாரி போலிருக்கிறார். எங்கப்பா செக்கச் செவேலென்று, எலுமிச்சை நிறத்தில் வாலிபராக இருப்பார்'' என்று சொன்னாள்.
அப்போது போலீஸ் பார்த்தசாரதி, காந்தாமணியைப் பார்த்து, ''உங்கப்பாவிற்கு எந்த ஊரில் வேலை?' என்று கேட்டார்.
''எங்கப்பா சங்கரநாதன் கோவிலில் சப்- இன்ஸ்பெக்டர்'' என்று சொன்னாள். சப் இன்ஸ்பெக்டர் என்ற வார்த்தை பார்த்தசாரதி அய்யங்காரின் காதில், பாம்பின் காதில் விழுந்த இடிச் சத்தம் போல விழுந்து. அப்படியே பம்மிவிட்டார்.
அதன்பின் பாட்டியும் காந்தாமணியும் பேசிக்கொள்ள ஆரம்பித்தனர்.
'நீங்கள் அக்கா, தங்கை எத்தனை பேர்? ” என்று பாட்டி கேட்டாள்.
'எங்கக்காவுக்குப் பதினெட்டு வயது. போன மாசந்தான் ஸ்ரீவைகுண்டத்தில் சாந்தி முகூர்த்தம் நடந்தது; எனக்கு அடுத்த மாசம் சாந்தி முகூர்த்தம். என் தங்கை ஒருத்தி சாந்தி முகூர்த்தத்திற்குக் காத்திருக்கிறாள். நாங்கள் மூன்று பேரும் பெண்கள். எங்கப்பாவுக்கு ஆண் பிள்ளை இல்லை என்ற தீராத மனக் கவலை. என்ன செய்யலாம்? பெருமாள் கருணை கிடைத்தால் மட்டும் அவமானத்தில் இருந்து தப்பிக்க முடியும்.. வேறு வழியிருக்கா? அதற்காக அவர் சோதிடம் பார்த்தார். எங்கம்மாவுக்கு இனிமேல் ஆண் குழந்தை பிறக்காதென்று பாழாய் போன ஒரு சோதிடன் சொல்லிவிட்டான். அதை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு எங்க அப்பா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கப் போறார். பெண்ணின் ஊர் மன்னார்கோவில். முகூர்த்தமெல்லாம் முடிவு செய்தாயிற்று" என்று முழு கதையையும் சொன்னாள் காந்தாமணி.
'உங்க அப்பாவுக்குப் பெண் கொடுக்கப்போறவரின் பெயரென்ன?' என்று அந்தப் பாட்டி கேட்டாள். 'அவர் பெயர் கோவிந்த ராஜய்யங்காராம். அந்த ஊரிலே அவர் பெரிய மிராசாம். அவருக்கு ஒரே பெண்தானம். கால் முதல் வைரங்களைப் போட்டு அனுப்புவாராம். தேவலோகத்து ரம்பை போல அழகாம் அந்தப் பெண்' என்று பதில் சொன்னாள் காந்தாமணி.
"அப்படிப்பட்ட அழகான பணக்கார இடத்துப் பெண்ணை இளையாளாகக் கொடுக்கக் காரணமென்ன?’ என்று பாட்டி கேட்டாள். அந்தப் பெண் பெரியவளாகி மூன்று வருஷங்களாய்விட்டன. அதன் தாயும் இறந்துபோய்விட்டாள். அதன் நடையுடை பாவனைகளெல்லாம் ஐரோப்பியர் மாதிரி. ஆதலால் இதுவரை அவளைக் கல்யாணம் செய்ய யாரும் வரவில்லை. எங்கப்பா அந்த ருதுவான வார்த்தையெல்லாம் வீண் பொய்யென்று சொல்லித் தாம் கல்யாணம் பண்ணிக் கொள்ள சம்மதப்பட்டுவிட்டார். மேலும் தனக்கு ருதுவான பெண் கிடைப்பது பற்றி இவருக்கு மனதுக்குள்ளே சந்தோஷந்தான்.. இன்றைக்குக் காலேயிலே கூட அவரும் எங்கம்மாவும் பேசிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் இந்த ஊர்ச் சத்திரத்திலேதான் ஒரு வாரமாக தங்கியிருக்கிறோம். எங்கப்பாவும், அம்மாவும் பேசிக் கொண்டிருந்தபோது அம்மா சொன்னாள்: "மன்னார்குடிப் பெண் வயதுக்கு வந்து மூன்று வருஷமாய் விட்டதாக இந்த ஊரிலே கூடப் பலமான பேச்சு அடிபடுகிறது'' என்றாள். அப்பா அதற்கு : 'நெவர்மைன்ட். அந்தக் குட்டி பெரியவளானது பற்றி நமக்கு இரட்டை சந்தோஷம். நமக்குப் பணம் கிடைக்கும். ஆண் பிள்ளை பிறக்கும். குட்டி ஏராளமான அழகு. இந்த மாதிரி பெண் கிடைக்கும்போது நமக்கு சாத்திரம் முக்கியமா?'' என்றார்..... ' என்று காந்தாமணி சொன்னாள்.
இவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருக்கிற சத்தம் என் காதில் விழுந்தது. என்னுடைய பார்வை முழுவதும் போலீஸ் பார்த்தசாரதி ஐயங்கார் மேல் இருந்த்து. அவரைப் பார்த்துக் கொண்டிருக்கையிலே என் மனதில் திடீரென்று ஒரு யோசனை பிறந்தது.
அங்கிருந்தவர்களில் எனக்குக் காந்தாமணியின் முகந்தான் புதிது. பார்த்தசாரதி ஐயங்காரையும் தெரியும்; அந்தக் கிழவியையுந் தெரியும். அந்தக் கிழவி அய்யங்கார்ச்சியில்லை; அந்தக் கிராம முன்சீபின் தங்கை. அவளுக்கும் போலீஸ் பார்த்தசாரதி அய்யங்காருக்கும் பால்யத்தில் பலமான காதல் நடை பெற்று வந்ததென்றும், அதனால் போலீஸ் பார்த்தசாரதி அய்யங்காருக்கும் மேற்படி கிராம முன்சீபுக்கும் பல முறை மோதல் நடந்தது என்றும், அப்படியான சண்டை ஒன்றில்தான் பார்த்தசாரதி அய்யங்காருக்கு ஒரு கண்ணில் பலமான காயம்பட்டு அது பொட்டையாய் விட்டதென்றும் நான் கேள்விப் பட்டதுண்டு.
இந்த செய்திகளை மனதில் வைத்துக்கொண்டு, அய்யங்காரின் முகத்தில் தோன்றிய உணர்ச்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்து எனக்கு ஒரு விஷயம் தெளிவாகத் தெரிந்தது. அந்தக் கிழவியின் மீதான அய்யங்காரின் காதல் இன்னும் மாறவில்லை. தனது காதலைக் கிழவியிடம் காட்ட அய்யங்கார் முயற்சிக்கிறார்.
காந்தாமணி போன்ற இளம் பெண்ணின் அருகே அந்தக் கிழவி நின்றபோதும், அய்யங்காருக்கு கிழவியே அழகியாகத் தோன்றுகிறாள். அவரின் காதல் அனலாய் பொங்கிக்கொண்டிருந்தது.
ஆனால், காந்தாமணியைப் பார்க்காமல் கிழவியை மட்டும் பார்த்து காதல் கணை வீச அய்யங்கார் சிரமப்பட்டு நடிக்கிறார் என்றும் எனக்குத் தோன்றியது. பெண்களைப் படைத்த பிரம்மனே காந்தாமணியைப் பார்க்கக் கண் கூசுவான். அவளைப் பார்க்காமல் கிழவியைப் பார்ப்பதாக நடித்த அய்யங்கார் மிகவும் சிரமப்படுகிறார் என்றும் எனக்குத் தோன்றியது.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், மறைவில் இருந்து நான் கிழவனைப் பார்த்துக் கொண்டிருந்தது போலவே காந்தாமணியும் கிழவியும் கிழ அய்யங்காரைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
பெண்களுக்குப் பாம்பை விட கூர்மையான காது. பருந்தைக் காட்டிலும் தெளிவான பார்வை. எனவே, அய்யங்காரின் மனது என்ன யோசிக்கிறது என்று இரண்டு பெண்களும் தெளிவாகப் புரிந்து கொண்டிருந்திருப்பார்கள்.
இந்த சூழலில் 20 வயதுள்ள ஒரு மலையாளிப் பையன் அங்கு வந்தான். அவன் பெருங்காய வியாபாரம் செய்பவன். அவனை நான் பலமுறை கிராமத்தில் பார்த்திருக்கிறேன். அவன் பார்வைக்கு மன்மதன் போலிருந்தான். கரிய விழிகள். நீண்ட மூக்கு. சுருள் சுருளான முடி. படர்ந்த உச்சிக் குடுமி. அவனைக் கண்ட எனக்கு அவன் மீது மோகம் உண்டாயிற்று என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அவன் கிணற்றுக்கு அருகே நின்று தாகத்துக்குத் தண்ணீர் வேண்டும் என்று கிழவியிடம் கேட்டான்.
அவனைப் பார்த்தவுடன் காந்தாமணி நடுங்கிப் போனாள். அந்த மலையாளி அவனைப் பார்த்தான். அவன் பார்வை பட்ட உடன், காந்தாமணி இடுப்பில் இருந்த பானை கீழே விழுந்து நசுங்கியது.
காந்தாமணி அதைக் குனிந்தெடுத்து 'ஐயோ, நான் என்ன செய்வேனம்மா ? குடம் ஆரங்குல ஆழம் அமுங்கிப் போய்விட்டதே ? எங்கம்மா எனக்குத் தூக்குத் தண்டனை விதிப்பாளே? ' என்று சொல்லிப் பெருமூச்சு விட்டாள். மார்புத் துணியை நெகிழவிட்டாள். தூரத்தில் இருந்த பொதியை மலைத் தொடரை நோக்கினாள்.
இந்தக் காந்தாமணி மேற்படி மலையாளிப் பையனிடம் அளவுக்கு மீறிய காதல் கொண்டவள் என்பதை நான் உணர முடிந்தது. பிறகு ஒரு சமயம் நான் விசாரித்தபோது, காந்தாமணியின் அப்பாவாகிய பார்த்தசாரதி மலையாளப் பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்திருக்கிறார். அந்த மலையாளி சிறுவனாகவும் காந்தாமணி சிறுமியாகவும் இருந்த நாளிலிருந்தே அவர்களுக்கு நேசம் இருந்திருக்கிறது. காதல் வளர்ந்து முற்றிப் போய்விட்டது.
ஆனால், சப் இன்ஸ்பெக்டர் வேறொரு கணக்கு வைத்திருந்தார். ஓய்வூதியத்திற்கான துணை கலெக்டராகவும் கந்தலாபுரம் ஜமீனின் திவானாவும் இருந்து 55 வயதுள்ள கோழம்பாடு ஸ்ரீநிவாலாசாரியார் என்பவருக்கு விவாகம் செய்து கொடுத்து விட்டார். அந்த ஆளுடன் வாழ்வதற்கு காந்தாமணிக்குச் சம்மதமில்லை. இந்த செய்தியை எல்லாம் நான் பின்னர் விசாரித்து தெரிந்துகொண்டேன்.
இப்போது கதைக்கு வருவோம். 'குடத்தை உடைத்தேனென்று அம்மா திட்டுவாளே' என்று அழுதபடியே கிணற்றை விட்டுப் புறப்பட்ட காந்தாமணி தன் தாய் தந்தையர் இருந்த சத்திரத்துக்குப் போகவில்லை. அந்த ஊருக்கு மேற்கேயிருந்த நதிக்குப் போனாள். அதன் பின் அந்த மலையாளியும் அங்கே போய்ச் சேர்ந்தான்.
இதற்குள் எனக்கு சந்தியாவந்தனம் செய்ய வேண்டிய நேரம் கடந்துவிட்டபடியால், நான் மறைவிலிருந்து வெளியே வந்துவிட்டேன்.
அன்று மாலை என் வீட்டுக்கு மேற்படிக் கிராமத்து வாத்தியார் சுந்தர சாஸ்திரி வந்தார். வந்தவர் திடீரென்று, ''கேட்டீர்களோ விஷயத்தை வெகு ஆச்சரியம்! வெகு ஆச்சரியம் !'' என்று கூக்குரலிட்டார். '
'என்ன ஒய் ஆச்சரியம்? கடந்ததைச் சொல்லிவிட்டுப் பிறகு கூக்குரல் போட்டால் எனக்குக் கொஞ்சம் வசதியாக இருக்கும்' என்றேன்.
'சத்திரத்திலே சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி அய்யங்கார் சங்கரநாதன் கோவிலிலிருந்து வந்து இறங்கியிருக்கிருரோ, இல்லையோ? அவர் ஒரு பெண்ணையும் கூட்டிக்கொண்டு வந்தார். அவருடைய மகள், அந்தக் குட்டி வெகு அழகாம். திலோத்தமை, ரம்பையையெல்லாம் இவளுடைய காலிலே கட்டி அடிக்கவேண்டுமாம். அதற்குப் பெயர் காந்தா மணியாம். சொல்லுகிறபோதே நாக்கில் ஐலம் சொட்டுகிறது. காந்தாமணி... காந்தாமணி.... என்ன நேர்த்தியான காமம். ரஸம் ஒழுகுகிறது' என்று சுந்தர சாஸ்திரி காந்தாமணியை வர்ணித்துக் கொண்டு போவதை நான் இடையே மறித்து : “மேலே நடந்த கதையைச் சொல்லும் ' என்றேன்.
"அந்தக் காந்தாமணியைக் காணவில்லையென்று விடியற் காலமெல்லாம் தேடிக் கொண்டிருந்தார்கள். இப்போதுதான் அம்பாசமுத்திரத்திலிருந்து ஒரு தந்தி கிடைத்ததாம். இன்று பகல் 8 மணிக்கு மேற்படி காந்தாமணியும், ஒரு மலையாளப் பையனும் கிறிஸ்தவக் கோவிலில் விவாகம் செய்து கொண்டார்களென்று அந்தத் தந்தி சொல்லுகிறதாம்” என்றார்.
சில தினங்களுக்கப்பால் மற்றொரு ஆச்சரியமான செய்தி வந்தது.
கிராமத்து மாஜிப் போலீஸ் சேவகர் நரைத்த தலைப் பார்த்தசாரதி அய்யங்காரும், அன்று கிணற்றங்கரையில் அவருடைய காதற் பார்வைக்கிலக்காயிருந்த கிழவியும் ரங்கூனுக்கு ஒடிப் போய் விட்டார்கள்.
அதன்பின், அந்தக் கிழவி தலையில் முடி வளர்த்துக்கொண்டாள் என்றும், பார்த்தசாரதி அய்யங்காரும் அவளும் புருஷனும் பெண்சாதியுமாக வாழ்கிறார்களென்றும் அய்யங்கார் அங்கொரு நாட்டுக்கோட்டைச் செட்டியிடம் வேலை பார்த்து, தக்க சம்பளம் வாங்கிக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறார் என்றும் ரங்கூனிலிருந்து செய்தி வந்தது.
====================================================
(பாரதியார் எழுதிய காந்தாமணி என்ற கதையை தற்காலத் தமிழர்களுக்குப் புரியும் வகையில் மாற்றி எழுதியிருக்கிறேன். முடிந்தவரை பாரதியின் வார்த்தைகளை வைத்துக்கொண்டு, தற்கால நிலைமைக்கு ஏற்ப சுருக்கவும் செய்திருக்கிறேன். எனது தவறுகள் பற்றிய உங்கள் கருத்தை வெளிப்படையாகத் தெரிவியுங்கள். மகிழ்வேன்.)
- சி.மதிவாணன்
நன்றி விகடன் : http://www.vikatan.com/news/tamilnadu/91141-abdul-rahman-special-article.html
அப்துல் ரகுமான் எழுதிய நான்கு சிறுகதைகள் ஆனந்த விகடனில் வெளிவந்திருக்கின்றன. 'ராட்சஸம்' என்ற சிறுகதை 14.3.1993 ஆனந்த விகடன் இதழில் வெளிவந்தது. அந்தச் சிறுகதை....
தலைவர் ‘பார்ட்’ பார்ட்’டாய் வந்து இறங்கினார். தலையிலிருந்து மார்பு வரை, மார்பிலிருந்து இடுப்பு வரை, இடுப்பிலிருந்து முழங்கால் வரை, முழங்காலிலிருந்து பாதம் வரை என்று நான்கு பெரிய வர்ணத் துண்டுகள்.
சாரம் முன்பே கட்டப்பட்டுவிட்டது. துண்டுகளை ஒட்டுப் போட்டுத் தூக்கி நிறுத்த வேண்டியதுதான் பாக்கி.
பெருமாளின் தலைமையில் ஆட்கள் பம்பரமாய்ச் சுழன்று கொண்டிருந்தனர். நாளை காலையில் கூட்டம். விடிவதற்குள் முடித்தாக வேண்டும். அந்தப் பரபரப்பில் ஏற்பட்ட பதற்றமும் எரிச்சலும் அவருடைய ஏவல்களில் தெரிந்தன.
-46_(1)_15395.jpg)
பையன் டீ கொண்டுவந்து கொடுத்தான். வேலையிலிருந்து கண்களைப் பெயர்க்காமலே பெருமாள் டீயை வாங்கிக் குடித்தார்.
பெருமாள் பழைய தலைமுறையைச் சேர்ந்தவர். பெரிய பெரிய தலைவர்களையெல்லாம் அவர் பார்த்திருக்கிறார். அவர்களுக்கெல்லாம் இப்படி ராட்சஸக் கட்-அவுட்டுகள் தேவைப்படவில்லை. அவர்கள் சுயமான விஸ்வரூபத்தில் உயர்ந்து, மக்கள் மனத்தில் பிரமாண்டமாக நின்றார்கள். அவர்களுடைய உயரம் தூரிகையாலும் மரத்தாலும் ஆனதல்ல; அவர்களைத் தூக்கி நிறுத்தச் சாரமும் தேவைப்பட்டதில்லை.
“ஐயா...” என்ற குரலில் அவர் சிந்தனை கலைந்தது. எதிரில் ஓர் இளைஞன்.
“நானும் கூடமாட ஒத்தாசை செய்யட்டுமா?”
“வேண்டாம் தம்பி... போதுமான ஆட்கள் இருக்காங்க...”
“கூலி ஒண்ணும் வேணாங்க, சும்மா செய்றேன். தலைவருன்னா எனக்கு உசுரு. அவருக்குக் கட்-அவுட் வெக்கறதிலே நானும் சேந்துக்கணும்னு ஆசையா இருக்கு...”
“ஓம் பேரு என்ன?” - பெருமாளின் கேள்வியில் கொஞ்சம் வியப்பும் கலந்திருந்தது.
“கபாலிங்க...”
“சரி.. போய்ச் செய்...”
கபாலி உற்சாகமாக ஓடினான். சாரத்தில் கால்பகுதி கட்டப்பட்டு முடிந்திருந்தது. அவன் அந்தக் கால்களில் விழுந்து வணங்கினான். எழுந்து பக்கத்தில் தரையில் கிடந்த தலைவரின் முகத்தை ஆசையோடு தடவினான். வலை வீசும் இந்தப் புன்னகை யாருக்கு வரும்..? அவனுக்குள் சுரந்த பயபக்தி முகத்தில் கசிந்தது.
கபாலி கட்சிக்காரன் அல்ல. உண்மையான அர்த்தத்தில் அரசியலும் அவனுக்குத் தெரியாது. காட்டப்படுவதை நம்பும் இனம் அவன். தலைவர் கிழவியின் தலையைத் தடவுவது, ஊனமுற்ற சிறுவனுக்குச் சக்கர வண்டி கொடுத்து அவனுக்கு முத்தமிடுவது, தீ விபத்தில் வீடு இழந்தவர்களுக்கு உணவுப்பொட்டலம், வேட்டி, சேலை கொடுப்பது... இதையெல்லாம் படங்களில் பார்த்து, ஏழைகளுக்காக உருகி உருகிப் பேசுவது, அவர்கள் உரிமைகளுக்காக வீராவேசமாக முழங்குவது... இதையெல்லாம் கேட்டு, அவனுடைய இதயத்தில் ஒரு சிம்மாசனம் போட்டு அவரை உட்கார வைத்திருந்தான். செய்தித்தாள்களில் காட்டப்படும் வெளிப்பக்கத்தை மட்டுமே தரிசிக்கிறவன் அவன். தூண்டில் முள்ளை மறைக்கும் புழுவை அடையாளம் காணும் பக்குவமெல்லாம் அவனுக்கு இல்லை.
தலைவர் எங்கே பேசினாலும் அங்கே போய்விடுவான். ‘என் கண்ணின் மணிகளே!’ என்று அவர் தொடங்கும்போது பரவசமாகி, மெய்சிலிர்த்து, விசிலடித்து ஆரவாரித்துக் கைதட்டுவான். தேர்தல் காலத்தில் அவருக்காகப் பசி, தாகம் பார்க்காமல் வேலை செய்வான். போஸ்டர் ஒட்டுவான்; சுவரில் எழுதுவான்; ஊர்வலம் போவான்; உரக்கக் கோஷம் போடுவான்; அவரை யாராவது குறைத்துப் பேசினால், சண்டைக்குப் போய்விடுவான். இதில் எத்தனையோ முறை அடி உதை பட்டு ரத்தம் சிந்தியிருக்கிறான். இதையெல்லாம் தலைவருக்குக் காணிக்கையாகவே நினைத்துக்கொள்வான். தேர்தலில் தலைவர் ஜெயித்துவிட்டால், தானே ஜெயித்ததுபோல் பட்டாசு கொளுத்திக் கூத்தாடுவான். அந்த ராமனுக்குதான் ஓர் அணில் என்று அவனுக்கு நினைப்பு. ஆனால், அவன் முதுகு எப்போதும், யாராலும் தடவிக் கொடுக்கப்பட்டதில்லை. அதை அவன் எதிர்பார்த்ததும் இல்லை.
ஆட்கள், இடுப்புப் பகுதியைத் தூக்க வந்தார்கள். கபாலியும் அவர்களோடு சேர்ந்து கைகொடுத்தான். அந்தக் கனம் அவனுக்குச் சுமையாகப் படவில்லை. தலைவரைத் தூக்குகிறோம் என்ற பெருமையும் மகிழ்ச்சியும் அவன் முகத்தில் பளிச்சிட்டன.
நேரம் ஆக ஆக, பெருமாளுக்குப் பதற்றம் அதிகரித்தது. கொஞ்ச நேரத்துக்கு முன்னால்தான் அமைச்சர் ஒருவர் வந்து, வேகம் போதாதென்று கெட்ட வார்த்தையில் திட்டிவிட்டுப் போனார். அவர் பரபரப்பாக ஆட்களை வேகப்படுத்தினார். அது கட்சிக் கூட்டம்தான். ஆனாலும் மேடை பந்தல் வேலைகளில் அரசாங்க அதிகாரிகள் பயபக்தியோடு ஈடுபட்டிருந்தனர். அரசாங்க வாகனங்கள் இங்கும் அங்கும் புழுதி பறக்க ஓடிக்கொண்டிருந்தன.
“இவங்களுக்கெல்லாம் பெரிசாக் காட்டணும். அதுவும் அவசரமா காட்ட ணும். ஜனநாயகம்கிறானுங்க... அமைச்சர்கள் ஜனங்களுடைய சேவகர்கள் என்கிறானுங்க... ஆனா, ஜனங்களைவிட, தான் ஒசத்தி... ஜனங்க தங்களை அண்ணாந்து பாக்கணும்.. தங்களை அற்பமா நெனச்சு கால்லே விழுந்து வணங்கணும்... கப்பம் கட்டணும்னு நெனக்கிறானுங்க... தெரியாத தேவதையைவிட தெரிந்த அரக்கன் மேல்ங்கற ஜனங்க மனப்பான்மையை இவங்க நல்லா தெரிஞ்சு வெச்சிருக்கானுங்க. அதனாலே தங்களுடைய உருவத்தை, முகத்தை செயற்கையா அசிங்கமா பெரிசாக்கி, பாமரர் மனசிலே பலவந்தமா திணிக்க முயற்சி பண்றாங்க. உருவத்தைப் பெரிசா காட்டுனா பெரிய மனுஷன் ஆயிட முடியுமா? இது படங்களை நம்புற தேசம். அதனாலே எல்லாரும் படங்காட்ட றானுங்க.. தூத்தேறி...” - பெருமாள் காறித் துப்பினார்.
தலைப்பகுதியைப் பொருத்திவிட்டு ஆட்கள் இறங்கிக்கொண்டிருந்தார்கள். கபாலிக்கு உடையெல்லாம் அழுக்காகி விட்டது. உடம்பில் அங்கங்கே சிராய்ப்பு. ஆனால், அவனுக்குக் களைப்போ, வலியோ தெரியவில்லை. அவன் தூரத்தில் போய் நின்று பார்த்தான். தலைவர் வானளாவ உயர்ந்து அட்டகாசமாக, கம்பீரமாக நின்றுகொண்டிருந்தார். பின்னால் இருந்த கோயில் கோபுரம்கூடத் தெரியவில்லை. அதைவிட உயரமாக அதை மறைத்துக்கொண்டு நின்றிருந்தார் தலைவர். அந்தப் புன்னகை... யாருக்கு வரும் அந்தப் புன்னகை? கபாலியின் உடம்பெல்லாம் பரவசம் பரவியது. அவன் கையெடுத்துக் கும்பிட்டான்.
“எவ்வளவு செலவாகியிருக்கும்?” - யாரோ ஒருவன் கேட்டான்.
“ஐம்பதாயிரம் ரூபாய்னு சொன்னாங்க...”
“ஐம்பதாயிரமா? அடப்பாவிங்களா... ஐம்பது குடும்பம் ஒரு மாசத்துக்குப் பசியில்லாம சாப்பிடலாமே... ராட்சஸன் மாதிரி அவ்வளவையும் விழுங்கிக்கிட்டு நிக்கிறதைப் பாரு...”
கபாலிக்கு இதயத்தில் ‘சுரீர்’ என்றது. கோபத்தோடு திரும்பிப் பார்த்தான். கட்டையும் குட்டையுமாக இருந்தவன்தான் அப்படிப் பேசிக்கொண்டிருந்தான்.
கபாலி அவன்மேல் பாய்ந்தான். “எங்க தலைவரு தெய்வம்யா... அவரைப் போய் ராட்சஸன்னா சொல்றே?” என்று கத்தியபடி அவன் முகத்தில் குத்தினான்.
எதிர்பாராத தாக்குதலில் முதலில் நிலைகுலைந்து திகைத்துப்போன அந்த ஆள், தன்னைச் சமாளித்துக்கொண்டு கபாலியை ஓங்கி எட்டி மிதித்தான். கபாலி குலைந்துபோய்க் கீழே விழுந்தான்.
“இவனாடா தெய்வம்? ஏண்டா தெய்வம்ங்கற வார்த்தையை இப்படி அசிங்கப் படுத்துறீங்க... உன்ன மாதிரி முட்டாப் பசங்களுக்குத்தான்டா இவன் தெய்வம்... உடுத்த மறு வேட்டி இல்லாம இந்த ஊருக்கு வந்தவன்டா ஒங்க தலைவன். இப்போ இந்த ஊர்லே பாதி அவனுக்குச் சொந்தம்... எங்கேயிருந்துடா வந்தது இவ்வளவு பணம்? குடியை ஒழிக்காம சாகமாட்டேன்னு கூவுறானே ஒங்க தலைவன்... பினாமியிலே ரெண்டு சாராயத் தொழிற்சாலை இருக்குடா அவனுக்கு... உனக்குத் தெரியுமா? சேரியை எல்லாம் ஒழிக்காம தூங்கமாட்டேன்னு மேடையெல்லாம் முழங்குறானே... அவன் எப்படி எங்க சேரியை ஒழிச்சான் தெரியுமா? தனக்குப் பெட்டி பெட்டியா கொண்டுவந்து கப்பம் கட்டறவன் ஓட்டல் கட்டறதுக்காக, ஒரு சேரியையே நெருப்பு வெச்சுக் கொளுத்த வெச்சவன்டா ஒங்க தலைவன்... அந்தத் தீயிலே வீடு, வாசல், குழந்தையைப் பறிகொடுத்தவன்டா நான்...” - அந்த ஆள் பொங்கி வெடித்துச் சிதறிக் கொண்டிருந்தான்.
கைகலப்பைப் பார்த்துப் பதறிக் கொண்டு ஓடிவந்தார் பெருமாள். வம்பு எதுவும் வந்துவிடக் கூடாதே என்று, அந்த ஆளைச் சமாதானம் பண்ணி காலில் விழாத குறையாகக் கெஞ்சி அவனை அனுப்பிவைத்தார். பிழைப்புக்குக் கேடு வரும் என்றால் எதனோடும் சமரசம் செய்துகொள்ளப் பழகிவிட்டவர் அவர். கபாலியையும் சமாதானப்படுத்திவிட்டு அவர் போய்விட்டார்.
காலையில் கூடும் கும்பலின் காலடிகள் பட்டு அதுவும் மறைந்துவிடும்.
கபாலிக்கு இதயத்தில் வலித்தது. ‘இல்லை... இல்லை... இதெல்லாம் உண்மையா இருக்க முடியாது... இருக்கக் கூடாது. அவன் எதிர்க்கட்சிக்காரனா இருப்பான்... பொய் சொல்றான்... தலைவர் இப்படியெல்லாம் செய்யமாட்டார்...’ -ஆனால், அவன் இதயத்திலிருந்த சிம்மாசனம் லேசாக ஆடத் தொடங்கியது.
கட்-அவுட்டை அவன் நிமிர்ந்து பார்த்தான். ‘தலைவரே, இது உண்மையா? உண்மையா?’ என்று அவன் இதயம் அலறியது.
காற்று ‘ஹோ.. ஹோ..’ என்று இரையத் தொடங்கியது. மரங்கள் பேயாடின. தலைவரின் அந்தப் புன்னகை மெதுவாக மறைந்தது. வாயின் இரண்டு பக்கத்திலும் கோரப் பற்கள் முளைத்தன. முகம் விகாரமானது.
கபாலி எழுந்து ஓடினான். “இல்லை.. இது உண்மை இல்லை” என்று கட்-அவுட்டின் கால்களைப் பிடித்துக் கொண்டு கதறினான்.
ஆணைக்குக் காத்திருந்ததுபோல், காற்று சீறிச் சினந்து ஆவேசமாகக் கட்-அவுட்டை அசைத்தது. கொஞ்ச நேரத்தில் கட்-அவுட் மடமடவென்று இரைச்சலுடன் சரிந்து விழுந்தது.
கட்-அவுட்டின் இடிபாடுகளை அகற்ற வந்தவர்கள், அதன் அடியில் ஒரு பிணத்தைக் கண்டு திடுக்கிட்டார்கள். பிணம் ரகசியமாக அப்புறப்படுத்தப்பட்டது. அந்த இடத்தில் சாட்சியாகக் கொஞ்சம் ரத்தக் கறை மட்டும் இருந்தது - ‘இது உண்மையா...? உண்மையா?’ என்ற மௌனமான அலறலோடு.
காலையில் கூடும் கும்பலின் காலடிகள் பட்டு அதுவும் மறைந்துவிடும்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இந்தக் கதையை மின் தமிழ் மேடையில் கவிஞரின் நினைவாகப் பதிந்து வைப்போமே.
https://twitter.com/kulendiren
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
Peryazhwar could not understand how the mother could go about the daily chores without any remorse. This reminds me of a scene in the American poem "Home Burial".
--
1997. தமிழக இளைஞர்களின் இதயத்திலிருந்த குஷ்புவை, ‘வி.ஐ.பி’ திரைப்படம் மூலம் சிம்ரன் வெளியேற்றிய ஜூலை மாதம். என் அப்பாவுக்கு திடீரென்று திருச்சியிலிருந்து மதுரைக்கு டிரான்ஸ்ஃபராக… மதுரையில் வீடு பார்த்துக் குடியேறினோம். நான் எம்.எஸ்ஸி., பிஸிக்ஸ் படித்து முடித்துவிட்டு வெட்டியாக இருந்த நாள்கள் அவை.
ஒரு மாத காலத்திற்குள் மதுரை, சிம்மக்கல் சென்ட்ரல் லைப்ரரியில் உறுப்பினரானேன். வண்டியூர் பழனி ஆறுமுகம், வில்லாபுரம் மது ஆகிய தியேட்டர்களில் பலான மலையாளப் படங்கள் தொடர்ச்சியாகப் பார்த்து மலையாளம் என் இரண்டாம் தாய்மொழியானது. விளக்குத்தூண் ஃபேமஸ் ஜிகர்தண்டாவும், ஆறுமுகம் கடை புரோட்டாவும், சுவரொட்டிக் குழம்பும் சாகும் வரை மதுரையிலேயே வாழவேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தது. நட்பைப் புனிதமாகக் கருதும் பாசக்கார மதுரைப் பசங்கள், நண்பர்களைப் பங்காளியாக்கி, பின்னர் அதை ‘பங்கு’ என்று சுருக்கி அழைப்பது பிடித்துப்போயிற்று. பக்கத்து வீட்டு செந்தில் நெருங்கிய நண்பனாக… மதுரை வாழ்க்கை நண்பர்களால் நிறைய ஆரம்பித்தது.
உள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்!
1997 செப்டம்பர் 1. செந்தில், “ஒரு எழவு விசாரிக்கணும்… வா…” என்று என்னை சைக்கிளில் ஆரப்பாளையத்திற்கு அழைத்துச் சென்றான். அந்தத் தெருவில் நுழைந்தவுடனேயே சங்கு ஊதும் சத்தமும், சகுண்டி அடிக்கும் சத்தமும் கேட்க… ஒரு பந்தல் வீட்டு முன்பு செந்தில் சைக்கிளை நிறுத்தினான். எங்கிருந்தோ மெலிதாக ஒலித்த, “ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ…” பாடலைக் கேட்டபடி, “யாருடா செத்துட்டா?” என்றேன். செந்தில் சுவரில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரைக் காண்பிக்க… நான் அதிர்ந்தேன்.

போஸ்டரில், ‘அகால மரணமடைந்த வேல்ஸ் இளவரசி டயனாவிற்குக் கண்ணீர் அஞ்சலி… தோற்றம்: 1.7.1961. மறைவு: 31.8.1997’ என்று போட்டிருந்தது. டயானாவின் போட்டோவிற்குக் கீழே இருந்த வாசகங்களைக் கவிதை என்று சொன்னால் கவிஞர்கள் சண்டைக்கு வருவார்கள். இருந்தாலும் போஸ்டர்காரர்கள் அதைக் கவிதை என்றுதான் சொல்வார்கள் என்பதால் கீழே அந்தக் கவிதை:
பூமிப்பந்தின் புன்னகை நிலா மறைந்தது.
இனி எங்களுக்கு தினம் தினம் அமாவாசைதான்.
மீளாத்துயருடன்… ஜெராக்ஸ் ஜோ, லிரில் சோப் லிங்கம், ரின் ரியாஸ், பட்டாசு பாண்டி ஆகியோர் அஞ்சலி செலுத்தியிருந்தார்கள். நான், “செந்திலு… இந்த லிங்கம் லிரில் சோப் ஏஜென்டா?” என்றேன்.
“இல்ல… லிங்கம் தினம் லிரில் சோப் போட்டுத்தான் குளிப்பான்” என்றவுடன் அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வர எனக்குச் சில விநாடிகளாகின. நாங்கள் பந்தலுக்குள் நுழைந்தவுடன் காசுக்கு அழைத்துவரப்பட்டிருந்த ஒப்பாரி பெண்கள், “வெள்ளைக்கார சீமாட்டி… வெந்துபோகப் போறாளே… ஹ்ம்…” என்று மூக்கைச் சிந்தினர். பந்தலில் நான்கைந்து இளைஞர்கள், “பாடிய எப்ப எடுப்பாங்க?” என்பதுபோல் சோகமான முகபாவத்துடன் அமர்ந்திருந்தனர். அதற்குமேல் அடக்கமுடியாமல் நான் சிரித்தபடி, “டேய்… டயானா செத்ததுக்கு இங்க என்னடா பண்றாங்க?” என்று கேட்க… செந்தில் பதறிவிட்டான்.
“டேய் சிரிக்காதேடா, ஜோ பாத்தான்… கொன்டேபுடுவான். டயானா செத்துப்போயிடுச் சுன்னு பயங்கர சோகத்துல இருக்கான்” என்றான் செந்தில். நான் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக்கொண்டு, “யாருடா ஜோ?” என்றேன். செந்தில், “அங்க டயானா போட்டோ பக்கத்துல நிக்குறான் பாரு. ஜோயல்னு பேரு. நாங்க ஜோன்னு கூப்பிடுவோம். டயானா நற்பணி மன்றத் தலைவர்” என்று காண்பித்தான். அந்த வீட்டிற்கு முன்பு, டயானாவின் போட்டோவை வைத்து மாலை போட்டிருந்தார்கள். அருகில் கூலிங்கிளாஸ் போட்டபடி நீல நிற டிஷர்ட் அணிந்துகொண்டு, வேட்டியுடன் நின்றுகொண்டிருந்தவன்தான் ஜோவாக இருக்க வேண்டும். ஜோ உயரமாக சிவப்பாக அழகாகத்தான் இருந்தான். என்னைவிட நான்கைந்து வயது அதிகமிருக்கும்.
அப்போது கையில் மாலையுடன் நான்கு இளைஞர்கள் நுழைய… பரபரப்பானது. அந்த இளைஞர்கள் டயானா போட்டோவுக்கு மாலை அணிவித்துவிட்டு ஜோவின் கைகளைப் பிடித்து ஆறுதல் கூறினர். ஒருவன், “என்னாச்சு ஜோ… போன மாசம்கூட டயானா போஸ்னியாவுக்குப் போய் கண்ணிவெடில அடிபட்டவங்கள பாத்துட்டு வந்தாய்ங்களே… ” என்றான். அதற்கு ஜோ, “நல்லாதான் காளி இருந்துச்சு… லவ்வர் டோடி பயத்தோட டயானா பாரீஸுக்கு வந்துருக்கு… இந்தப் பப்பாரஸி போட்டோக்காரங்க இருக்காய்ங்கள்ல?” என்றவுடன், “பப்பாரஸின்னா?” என்றான் காளி. சட்டென்று அந்த இடம் அமைதியானது. ஜோ பதில் சொல்லாமல், திருதிருவென்று விழித்தபடி சுற்றிலும் பார்த்தான். உடனே அனைவரும் சோகமாக இருப்பதுபோல் தலையைக் குனிந்துகொண்டனர். தொடர்ந்து ஜோ, “அவிங்க டயானாவ வெரட்டிட்டுப் போயிருக்காய்ங்க. அப்ப ஆக்ஸிடென்ட் ஆயி...” என்றவனின் தொண்டை அடைக்க… கூலிங்கிளாஸைக் கழற்றி, கண்களைத் துடைத்துக்கொண்டான்.
இப்போது செந்திலைப் பார்த்துவிட்ட ஜோ, “வா செந்திலு” என்று கூற… நானும் செந்திலும் ஜோவை நெருங்கினோம். செந்திலைக் காண்பித்து ஜோ தன்னருகில் நின்ற இளைஞனிடம், “லிங்கம்… செந்தில்தான் டயானா 36ஆவது பிறந்தநாள லண்டன்ல கொண்டாடுச்சுன்னு, பேப்பர்ல போட்டோ காமிச்சான். ஸ்லீவ்லெஸ் கறுப்பு கலர் கவுன போட்டுக்கிட்டு அம்சமா நின்னுச்சு. அப்பவே நினைச்சேன்… எதுக்கு இந்தப் பொண்ணு பொறந்தநாளும் அதுவுமா கறுப்பு போட்டிருக்குன்னு… நான் பயந்தபடியே ஆயிடுச்சு” என்று கூற… செந்தில் ஜோவை அணைத்து ஆறுதல் சொன்னான். அடுத்து ஜோ என்னிடம் ஆறுதல் பெறுவதற்காக என் கையைப் பிடிக்க… வேறு வழியின்றி நானும் ஜோவை அணைத்து ஆறுதல் சொன்னேன். நான் லிங்கத்தின் அருகில் நெருங்கி, லிரில் சோப் வாசனை வருகிறதா என்று பார்த்தேன். அமோகமாக வந்தது.

ஜோவிடம் என்னை அறிமுகப்படுத்திய செந்தில், “இது மகேந்திரன். எங்க தெருவுக்குப் புதுசா வந்திருக்காய்ங்க” என்றான்.
“அப்புறம் துக்கம்ல்லாம் முடிஞ்சவுடனே வாங்க தம்பி. ஃப்ரீயா பேசலாம்” என்று எங்களை அனுப்பி வைத்தான்.
பந்தலை விட்டு வெளியே வந்தவுடன் நான், “ஜோ என்ன வேலைல இருக்கான்?” என்றேன்.
“வேலையா, அவன் ரெண்டு தலைமுறைக்கு உக்காந்துகிட்டே சாப்பிடலாம். லைன் வீடுங்க, காம்ப்ளக்ஸ்னு ஏகப்பட்ட சொத்த வெச்சுட்டு அவங்கப்பா சின்ன வயசுலயே செத்துட்டாரு. வாடகையே மாசம் எழுபதாயிரம் வருது” என்றவுடன் நான் மிரண்டுபோனேன். தொடர்ந்து செந்தில், “பேருக்கு டவுன்ஹால் ரோட்டுல ஜெராக்ஸ் கடை வெச்சிருக்கான். ஆளு வெச்சுப் பாக்குறான். போரடிச்சுதுன்னா என்னைக்காச்சும் போய்ட்டு வருவான்” என்றபடி செந்தில் சைக்கிளை எடுத்தான்.
“ஜோவுக்குக் கல்யாணமாயிடுச்சா?” என்றேன்.
“இல்ல… ஜோ கலைச்செல்வின்னு ஒரு புள்ளய லவ் பண்ணினான். ஜோ கிறிஸ்டீன்னு அந்தப் புள்ள வீட்டுல ஒத்துக்கல. வேற ஒருத்தன் கூட கல்யாணம் பண்ணி வெச்சுட்டாய்ங்க. மூணு வருஷமாயிடுச்சு. அந்தப் புள்ளைக்கி கொழந்தையே பொறந்துடுச்சு. இன்னும் அவளையே நினைச்சுட்டிருக்கான். வேற எந்தப் புள்ளையையும் பாக்கமாட்டான். 27 வயசாவுது. கல்யாணமும் பண்ணிக்கமாட்டேங்கிறான்” என்றான். இந்தக் காலத்திலும் பழைய காதலியை நினைத்துக்கொண்டு, திருமணம் செய்யாமலிருக்கும் ஜோமீது எனக்கு ஒரு தனிப் பிரியம் வந்தது.
மறுநாள் ஜோவை ராஜாஜி பார்க்கில் நான் செந்திலுடன் பார்த்தேன். என் கையை இறுக்கிப் பிடித்த ஜோ, பின்னர் நான் மதுரையில் இருந்த காலம் வரைக்கும் அந்தக் கைகளை விடவேயில்லை. நான் புத்தகங்கள் படிப்பேன், வார இதழ்களில் கவிதைகள் எழுதுவேன் என்பதால் ஜோவிற்கு என்னிடம் ஒரு தனிப் பிரியம். ஜோ என்னைவிட நான்கு வயது பெரியவன் என்றாலும், சீக்கிரமே ‘வாடா… போடா…’ என்று கூப்பிடும் அளவுக்கு நெருக்கமாகிவிட்டோம்.
நாங்கள் அறிமுகமாகிப் பல மாதங்களுக்குப் பிறகு, குஷ்பு ஒயின்ஸில் ஒருநாள் தண்ணி அடித்தபோது ஜோ திடீரென்று, “கலைச்செல்வி மேட்டர செந்தில் சொல்லியிருப்பானே” என்றான்.
“ம்…” என்றேன்.
“இன்னைக்கிதான் நாங்க லவ்வ சொல்லிக்கிட்ட நாள். மனசு ஒரு மாதிரியா இருக்கு. அதுக்குத்தான் தண்ணியடிக்கக் கூப்பிட்டேன். நீ ஒரு தடவை கலைச்செல்விய பாக்கணும் மகேந்திரா… இந்த உலகத்துலயே அழகான பொண்ணு அவதான்” என்றான். இது பொதுவாக எல்லாக் காதலன்களும், தங்கள் காதலி பற்றிச் சொல்வதுதானென்பதால் நான் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை.
தொடர்ந்து ஜோ, “நான் மதம்லாம் பாக்காம, மதுரைல நடக்கிற எல்லாத் திருவிழாவுக்கும் போவேன். முத முதல்ல அவள சித்திரைத் திருவிழா, எதிர்சேவையப்ப பாத்தேன். அவ அழகர பாத்துக்கிட்டே இருந்தா. பாத்தவுடனே அசந்துபோய்ட்டேன். எனக்குன்னே பொறந்தவ மாதிரி தோணுச்சு. பக்கத்துல போனேன். அப்ப திடீர்னு திரும்பி என்னையப் பாத்தா பாரு…அவ்ளோதான் மாப்ள… அப்புறம் அவ அழகரப் பாக்கவே இல்ல. என்னையத்தான் பாத்துக்கிட்டிருந்தா. ஒரே மாசத்துல லவ் பண்ண ஆரம்பிச்சிட்டோம்” என்ற ஜோ ஒரு மடக்கு ரம்மைக் குடித்தான்.
நான், “இப்ப கலைச்செல்வி எங்க இருக்காங்க?” என்றேன்.
“மதுரைலதான் கட்டிக்கொடுத்திருக்காய்ங்க. வழில எங்காச்சும் பாத்தா பேசிக்குவோம். என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லும். ஆனா… எனக்கு என்னமோ யாரையும் கல்யாணம் பண்ணிக்கத் தோணல. ஒருவேளை மறுபடியும் ஒருத்தியப் பாத்து எனக்காகப் பிறந்தவன்னு தோணுச்சுன்னா பாக்கலாம்” என்ற ஜோவை நான் ஆச்சர்யத்துடன் பார்த்தேன். இன்னும் பழைய காதலியை நினைத்து உருகிக்கொண்டிருந்தாலும், மறுபக்கம் டயானா நற்பணி மன்றத் தலைவராக வாழும் ஜோவை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.
பாரிலிருந்து வெளியே வந்தபோது உச்சக்கட்ட போதையில் இருந்த ஜோ, தடுமாற்றத்துடன் ஒரு லாரிக்கு முன்பு விழப்பார்த்து, கடைசி விநாடியில் மீட்டோம்.
மறு வாரத்தில், எங்கள் ஏரியா மாரியம்மன் கோயில் முளைப்பாரித் திருவிழாவின் கடைசி நாள் மாலை. கோயில் முன்பு முளைப்பாரிகளை வைத்திருந்தனர். ஒரு கிழவி மைக்கில், ‘தானானே…’ பாட, பெண்கள் கைகளைக் கொட்டிக்கொண்டு முளைப்பாரிகளைச் சுற்றி வந்தனர். கோயில் வாசலில் நூறு பேருக்கு மேல் இருப்பார்கள். பெரும்பாலும் பெண்கள். இளம்பெண்களை வேடிக்கை பார்த்தபடி நாங்கள். ஜோ பெண்களையெல்லாம் கவனிக்காமல், பாண்டியுடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தான்.
அப்போது செந்தில், “ஜோ… கலைச்செல்வி வாராடா…” என்று கூற, ஜோ வேகமாகத் திரும்பிப் பார்த்தான். பாண்டி என்னிடம், “இதான் ஜோ ஆளு” என்றவுடன் ஆர்வத்துடன் பார்த்தேன். இடுப்பில் குழந்தையுடன் வேகமாக ஜோவிற்கு அருகில் வந்த கலைச்செல்வி, “என்னைய அழவெச்சாதான் உனக்கு சந்தோஷமாடா?” என்று ஆரம்பித்ததும், நான் நகர ஆரம்பித்தேன். ஜோ, “இர்ரா… தனியா பேசினா யாராச்சும் தப்பா நினைப்பாய்ங்க…” என்றவன் செல்வியைப் பார்த்து, “இப்ப எதுக்கு அழுதுகிட்டு நிக்குற, புருஷன் நல்லாதானே வெச்சுருக்கான்.”
“அதுக்கெல்லாம் ஒரு கொறச்சலும் இல்ல. அது என் சாமில்ல… நம்ம சேதி தெரிஞ்சும் என்ன அப்படி பாத்துக்கிடுது. நீதான்டா என் உசுர வாங்குற… போன வாரம் ஓவராக் குடிச்சுப்புட்டு, லாரில அடிபடப் பாத்தியாமே… எங்கூட்டுக்காரரு பாத்துட்டு வந்து சொன்னாரு.”
“அதான் உசுரோட முன்னாடி நிக்குறோம்ல?”
“கெரகம்… இதெல்லாம் கேட்டுத் தொலையாம, எங்கயாச்சும் வெளியூர்ல கட்டிக் கொடுத்தி ருக்கலாம். இங்க பாருடா…” என்று கலைச்செல்வி அவன் கையைத் தொட்டாள். ஜோ வேகமாக, ``ஏய்… கைய எடு. கல்யாணமாய்ட்டு… அறிவில்ல?” என்ற ஜோ, கலைச்செல்வியின் குழந்தையை நோக்கிக் கையை நீட்டினான். அது டபக்கென்று சிரிப்புடன் தாவி ஜோவிடம் வந்ததைப் பார்த்ததும், ஏனோ தெரியவில்லை, எனக்கு நெகிழ்ந்துவிட்டது. அருகில் உள்ள கடைக்குச் சென்று குழந்தைக்கு சாக்லேட் வாங்கித் தந்துவிட்டு கலைச்செல்வியிடம், “சரி நீ போ… எவனாச்சும் பாத்தா கதை கட்டி விடுவாய்ங்க” என்ற ஜோவை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. கலைச்செல்வி தெருமுனையில் திரும்பும் வரையிலும் அவளையே பார்த்துக்கொண்டு நின்றான் ஜோ.
அப்போது சற்றே சத்தமாக, “தேன்மொழி” என்று ஒரு பெண் அழைக்கும் குரல் கேட்க… திரும்பிப் பார்த்த அத்தனை பசங்களும் ஆடிப்போய்விட்டோம். ஆடிப்போனது… கோயில் வாசலில், கையில் குழந்தையுடனிருந்த தேன்மொழியைப் பார்த்து அல்ல. சற்றுத் தொலைவிலிருந்து தேன்மொழியை அழைத்தவளைப் பார்த்து. ஏனெனில் தேன்மொழியை அழைத்தவள் அவ்வளவு அழகாக இருந்தாள்.
மணமகன் வீட்டுக்குப் பெண் வீட்டார் அனுப்பும் பெண் புகைப்படம்போல் மரியாதையான தோற்றம். சிவப்பிற்கும், அதீத சிவப்பிற்கும் இடையே இருந்தாள். கடவுள் இந்த உலகம் தோன்றிய நாள் முதல் இதுவரையிலும் படைத்த மனிதர்களில், அதிக நேரம் எடுத்துக்கொண்டு செதுக்கிய முகம் அவளுடைய முகமாகத்தான் இருக்கும். அவ்வளவு திருத்தமான அழகிய முகம். உயிரோட்டமான அகன்ற கண்கள். அவள் இப்போது தேன்மொழியின் குழந்தையை வாங்கி முகத்துக்கு நேரே தூக்கி, முகமெங்கும் பொங்கி வழியும் சிரிப்புடன் நாக்கைத் துருத்தி, “ரூ… ரூ…” என்று கொஞ்சிக்கொண்டிருந்தாள். அழகான பெண்கள் குழந்தைகளைக் கொஞ்சும்போது மேலும் அழகாகிவிடுகிறார்கள்.
நாங்கள் அவளைப் பார்த்ததில் எந்த ஆச்சர்யமுமில்லை. ஆனால் ஜோவும் அவளைக் கவனிப்பதைப் பார்த்தவுடன் நாங்கள் அசந்துவிட்டோம். ஜோ அவளைப் பார்த்த பார்வையைப் பார்த்தவுடன், நாங்கள் அனைவரும் உடனே ஆட்டத்திலிருந்து விலகி, அவளை அண்ணி ஆக்கிக்கொண்டோம். இத்தனை மாதப் பழக்கத்தில் அப்போதுதான் ஜோவின் கண்களில் வெளிச்சத்தைப் பார்த்தேன். அவன் முகத்தில் நிரந்தரமாகப் படிந்திருந்த துயர ரேகைகள் சட்டென்று மாயமாகியிருந்தன.
“என்னா ஜோ, உனக்குன்னு பொறந்தவ மாதிரி தோணுதா?” என்றேன். “சீ…” என்று அழகாக வெட்கப்பட்ட ஜோ, “அதெல்லாம் ஒண்ணுமில்லடா…” என்றான். பாண்டி, “தேன்மொழி நம்ப சரவணன் தங்கச்சிதான். புள்ள யாரு என்னான்னு விசாரிச்சுருவோமா?” என்றபோது, “டேய் சும்மா இருங்கடா…” என்ற ஜோ, அந்தப் பெண்ணிடமிருந்து பார்வையை விலக்கவில்லை.
அந்தப் பெண் தேன்மொழியிடம் விடைபெற்றுக்கொண்டு சென்றவுடன் ஜோ, “ஏன்னே தெர்லடா… அவ இருந்த வரைக்கும் இந்த இடமே ஜெகஜோதியா இருந்துச்சு. அவ போனவுடனே சட்டுன்னு வானத்துல யாரோ கரன்ட்ட ஆஃப் பண்ண மாதிரி ஆயிடுச்சு” என்று சொல்ல… நாங்கள், “சிக்கிட்டான்டா… மாப்ள சிக்கிட்டான்டா” என்று கத்தினோம். ஜோ வெட்கத்துடன் சிரித்தபடி, “சும்மா அலப்பறை உடாம யாரு என்னான்னு விசாரிங்கடா” என்றான்.

மறுநாள் மாலை, நாங்கள் தல்லாகுளம் பொட்டலில் டாப்படித்திருந்தோம். அப்போது அங்கு வந்து வேகமாக சைக்கிளை நிறுத்திய பாண்டி, “சரவணன்கிட்ட பூராத்தையும் விசாரிச்சாச்சு. அவளும் கிறிஸ்டீன்தான். பேரு டயானா” என்றவுடன் ஜோவின் முகத்தில் சந்தோஷம். “டயானாவா?” என்று நாங்கள் உற்சாகமாகக் கத்தினோம். தொடர்ந்து பாண்டி, “செல்லூர்ல இருந்து, இப்பதான் இங்க குடிவந்துருக்காய்ங்க. டாக்டர் அருளானந்தம் க்ளினிக்ல டோக்கன் கொடுக்குற வேலை பாக்குது” என்றவுடனேயே ஜோ இரும ஆரம்பித்துவிட்டான். இருமியபடியே எழுந்த ஜோ, “மகேந்திரா… நேத்திலருந்து ஒரே இருமல். வா… டாக்டர் வீட்டுக்குப் போயிட்டு வந்துடலாம்” என்று புல்லட்டை ஸ்டார்ட் செய்தான்.
நாங்கள் அருளானந்தம் க்ளினிக்கில் நுழைந்தோம். ஒரு டேபிளுக்குப் பின்னால் அமர்ந்திருந்த டயானாவை நெருங்கி இருமியபடி, “டாக்டரப் பாக்கணும்” என்றான் ஜோ. டோக்கனை நீட்டிய டயானா, “டோக்கன் நம்பர் 24. ஊடால வெளிய போய்ட்டுல்லாம் வரக்கூடாது. இருந்து பாத்துட்டுப் போவணும்.”
“நாங்க என்னாத்துக்குப் போறோம்…”
நாற்காலியில் அமர்ந்த ஜோ கழுத்துச் செயினிலிருந்த சிலுவை டாலரை எடுத்து வெளியில் விட்டபடி, “மத்தேயு எழுதின சுவிசேஷத்துல, ஏழாம் அதிகாரத்துல என்ன சொல்லியிருக்குன்னா…” என்று சத்தமாகக் கூற… நான் பயந்துவிட்டேன். இத்தனை மாதப் பழக்கத்தில் அவன் ஒருமுறைகூட சர்ச்சுக்குச் சென்றோ, பைபிள் படித்தோ பார்த்ததில்லை. “ஏழாம் அதிகாரத்துல என்னடா?” என்றேன். இப்போது குரலை அடக்கிய ஜோ, “எவன்டா கண்டான்? வேற மதம்னா பாப்பா பயப்படுமுல்ல? அதான் கிறிஸ்டீன்னு இன்ஃபார்ம் பண்றேன்” என்றபடி அவளைப் பார்த்தான்.
சில நிமிடங்கள் கழித்து அவளிடம் சென்று, “எத்தனை டோக்கன் போயிருக்கு?” என்றான் ஜோ. அவள் “ஏழு” என்றாள். “ஏழுதான் போயிருக்கா? எனக்கு இருபத்து நாலுன்னா…” என்ற ஜோ தன் கைவிரலை நீட்டி, “எட்டு, ஒன்பது…” என்று கணக்குப் போட… டயானா, “இன்னும் பதினாறு பேரு” என்றாள் வெடுக்கென்று. “சரி” என்று மீண்டும் இருக்கையில் அமர்ந்துகொண்டான். சில நிமிடங்கள் கழித்து மீண்டும் அவளிடம் சென்று “இப்ப எத்தனை போயிருக்கு?” என்றான். டயானா, “ஹலோ… உங்க டோக்கன் வர்றப்ப நாங்க சொல்வோம்” என்று இறுக்கமாகக் கூற… ஜோ வேறு வழியின்றி வந்து அமர்ந்தான். டயானாவை உற்றுப் பார்த்தபடி ஜோ, “பாக்க பாக்க ஒவ்வொரு செகண்டும் லவ் ஏறிக்கிட்டேயிருக்குடா” என்றான்.
“அது அப்படித்தான் ஏறும். அப்புறம் கல்யாணமானவுடனே இறங்கிரும்” என்று நான் கூற… ஜோ முறைத்தான். அப்போது ஜோவின் நம்பர் அழைக்கப்பட்டது. டாக்டரைப் பார்த்துவிட்டு வந்து டயானாவைப் பார்த்து ஜோ சிரிக்க… அவள் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
மறுநாள் மாலை, என்னைப் பார்த்தவுடன் என் கழுத்தைத் தொட்டுப் பார்த்த ஜோ, ‘என்னடா… இவ்ளோ காய்ச்சலா இருக்கு? வா வா… டாக்டர்ட்ட போய்ட்டு வந்துடலாம்” என்றவுடன் சிரித்துவிட்டேன். ஜோ, “டெய்லி எனக்கே உடம்பு சரியில்லன்னு போனா பாப்பா நம்பாது. அதுக்குத்தான்…” என்று புல்லட்டை ஸ்டார்ட் செய்தான்.
க்ளினிக்கில் எங்களை சந்தேகமாகப் பார்த்த டயானா, “18” என்று டோக்கனை நீட்டினாள். நாற்காலியில் அமர்ந்து டயானாவை உற்றுப் பார்த்த ஜோ, “எதுக்குடா இம்புட்டு பேரும் டாக்டரப் பாக்குறானுங்க? டயானாவ கண்ணால பாத்தாலே எல்லா நோயும் சரியாய்டாது?” என்றான்.
“அது உனக்கு.”
“நேத்து திடீர்னு ஒரு கவலை. எனக்குப் பொண்ணு பொறந்தா கலைச்செல்வின்னு பேர் வைக்கலாம்னு இருந்தேன். ஆனா டயானா ஒத்துக்காதுல்ல?”
“டேய்… மொதல்ல அவ லவ் பண்ணட்டும்டா” என்றேன் அழுவதுபோல்.
மறுநாள் பாண்டியிடம் ஜோ, “இன்னைக்கி நீ டாக்டர்கிட்ட வர்றியா?” என்றான். அப்போது செந்தில், “டெய்லி ஃப்ரண்ட்ஸ்ங்களுக்கு உடம்பு சரியில்லன்னா சந்தேகப்படுவாடா” என்றான். “அதுவுஞ் சரிதான்” என்று யோசித்த ஜோ, “உங்க ஏரியா பெருசுங்க யாருக்காச்சும் உடம்பு சரியில்லாம இருக்கா?” என்றான்.
“ம்… நம்ம ஆசாரி தெரு மீனாட்சி பாட்டிக்கு உடம்பு சரியில்லாம இருக்கு” என்று செந்தில் கூறிய அடுத்த ஐந்தாவது நிமிடம், நானும், ஜோவும் ஆப்பிள் பழங்களோடு மீனாட்சி பாட்டி வீட்டில் இருந்தோம். ஜோ, “பாட்டி முழங்கால் வலின்னு நடக்கமுடியாமக் கெடக்கு. யாருக்காச்சும் பொறுப்பு இருக்கா? நான் டாக்டர்ட்ட கூட்டிட்டுப் போறேன்… டேய் மகேந்திரா… ஒரு ஆட்டோ பிடிடா…” என்று என்னை ஏவினான்.
அடுத்தடுத்த நாள்களில், தனக்குத் தெரிந்த பெருசுகளையெல்லாம் ஜோ க்ளினிக்கிற்கு அழைத்துப்போனதில், டாக்டர் அருளானந்தத்தின் கலெக்ஷன் கிர்ரென்று எகிற… ஜோ டாக்டரின் நண்பனாகிவிட்டான். ஆனால் ஜோ தனக்காகத்தான் வருகிறான் என்று புரிந்துகொண்ட டயானா, அவனிடம் ஒன்றும் பேசாமல் டோக்கன் கார்டை மட்டும் நீட்டுவாள். ஜோ ஏதும் கேள்வி கேட்டாலும் கண்டுகொள்ளாததுபோல் போனை எடுத்து டயல் செய்ய ஆரம்பித்துவிடுவாள்.
நாள்கள் மிக வேகமாகச் சென்றன. ஜோ வாரத்துக்கு மூன்று நாள்களாவது, யாரையாவது அழைத்துக்கொண்டு க்ளினிக் சென்றுவிடுவான். எங்களுடன் பேசும் நேரங்களிலெல்லாம் டயானா பற்றியே பேசிக்கொண்டிருந்தான். ஜோவின் மனதில் டயானாவைத் தவிர மற்ற அனைத்து விஷயங்களும் மறந்துவிட்ட நாள்கள் அவை.
நாற்காலியில் அமர்ந்த ஜோ கழுத்துச் செயினிலிருந்த சிலுவை டாலரை எடுத்து வெளியில் விட்டபடி, “மத்தேயு எழுதின சுவிசேஷத்துல, ஏழாம் அதிகாரத்துல என்ன சொல்லியிருக்குன்னா…” என்று சத்தமாகக் கூற… நான் பயந்துவிட்டேன்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு, அன்று மதுரையைச் சுற்றியுள்ள அனைத்துப் பெரிசுகளும் சர்வ சகல ஆரோக்கியத்துடன் இருந்ததால், வேறு வழியின்றி எனக்குக் காய்ச்சல் என்று க்ளினிக் சென்றோம். டாக்டரிடம் காண்பித்துவிட்டு வெளியே வந்தோம். ஜோ டயானாவைப் பார்த்தபடியே செருப்பைப் போட… டயானா அவனை முறைத்தாள்.
நாங்கள் வெளியே சாலைக்கு வந்து நடந்தபோது, “ஹலோ…” என்று பின்னாலிருந்து குரல் கேட்டுத் திரும்பினோம். டயானா. உற்சாகத்துடன் ஜோ, “என்னையத்தான்டா கூப்பிடுறா…” என்றபடி நின்றான். எங்கள் அருகில் வந்த டயானா ஜோவைப் பார்த்து, “நீங்க எதுக்காக தினம் இங்க வர்றீங்கன்னு தெரியுது. இனிமே என் பின்னாடி சுத்துற வேலை வெச்சுக்காதீங்க” என்றாள்.
“சரி… இனிமே வரலங்க. ஆனா விஷயத்தச் சொல்லிடுறேன். நான் டவுன்ஹால் ரோட்டுல ஜெராக்ஸ் கடை வெச்சிருக்கேன். வீட்டு வாடகைல்லாம் மாசம் எழுபதாயிரம் வருது. உங்கள எனக்கு ரொம்பப் புடிச்சுப்போச்சுங்க. நானும் கிறிஸ்டீன்தான். நீங்க சரின்னா, வீட்டுல வந்து பொண்ணு கேக்கச் சொல்றேன்” என்று ஜோ தடாலடியாகக் கூற… எனக்கு வெலவெலத்து விட்டது. சில விநாடிகள் ஒன்றும் சொல்லாமல் ஜோவைப் பார்த்த டயானா, “நீங்க கிறிஸ்டியன்தான், நிறைய சொத்தெல்லாம் இருக்கு, எல்லாஞ் சரி… ஆனா… என்னால உங்கள லவ் பண்ண முடியாது?”
“ஏங்க?”
“ஏன்னா…” என்று சில விநாடிகள் தயங்கிய டயானா, “நான் ஒருத்தன ரெண்டு வருஷமா லவ் பண்ணிகிட்டிருக்கேன். அவனதான் கல்யாணம் பண்ணிக்கப்போறேன். தயவுசெஞ்சு இனிமே என் பின்னாடி சுத்தாதீங்க…” என்று கூறியவள் எங்கள் பதிலுக்காகவெல்லாம் நிற்கவில்லை. திரும்பி க்ளினிக்கை நோக்கிப் போய்க்கொண்டேயிருந்தாள். ஜோவின் முகம் செத்துப்போய்விட்டது. சில விநாடிகள் அதிர்ச்சியுடன் என்னைப் பார்த்த ஜோ, என் தோளைப் பிடித்தபோது அவன் கை நடுங்கியது. “என்னடா… பொசுக்குன்னு இப்படிச் சொல்லிப்புட்டா…” என்று சிரிக்க முயன்ற ஜோவின் கண்கள் லேசாகக் கலங்கினாற்போல் இருந்தது. “மாப்ள…” என்று நான் ஆறுதலாக அவன் தோளைத் தொட… அவன் என் கையை விலக்கிவிட்டு வேகமாக நடந்தான்.
அன்றிரவு தளபதி ஒயின்ஸில் தண்ணியடித்துக் கொண்டிருந்த ஜோவைப் பார்க்க பயமாக இருந்தது. கிட்டத்தட்ட நான்கு மணி நேரமாக விடாமல் குடித்துக்கொண்டிருக்கிறான். திடீரென்று ஜோ சத்தமாக, “நடுநெஞ்சுல கத்தியால குத்திட்டு, அந்தக் காயத்துல ஆசிட்ட ஊத்தி, மிளகாத்தூளத் தடவி, தீயால பத்த வெச்சா எப்படித் தெரியுமா இருக்கும்? அப்படி இருக்குடா எனக்கு…” என்ற ஜோ அழ ஆரம்பித்துவிட்டான். காதல் தோல்வியில் பாரில் அழாத ஆண்கள் யாரும் இருக்கிறார்களா என்ன?
நான், “டேய்… என்னடா…” என்று அவன் தோளை அணைத்தபடி சுற்றிலும் பார்த்தேன். “செத்துடலாம் போல இருக்குடா” என்ற ஜோ கண்களைத் துடைத்துக்கொண்டான்.
“சீ... இதுக்குப்போய் சாவியா? கலைச்செல்வி போனதையே தாங்கிக்கிட்ட… இது சும்மா ஒன்ஸைடுதானடா?” என்றேன். என்னை உற்றுப் பார்த்த ஜோ, “ஒன்ஸைடுன்னாலும் இதுவும் காதல்தான்டா. எல்லாக் காதலுக்கும் ஒரே வலிதான் மாப்ள... ஏன்னே தெரியல… டயானாவ மொதமொதல்ல பாத்தவுடனே, சட்டுன்னு எல்லாக் கஷ்டமும் போயி மனசு சந்தோஷமாயிடுச்சு. தெனம்… பாத்து பாத்து ரொம்ப ஆசையை வளத்துக்கிட்டேன். அவ கூட வாழறதப் பத்தி நிறைய கனவு கண்டுட்டேன் மாப்ள… அவ இல்லாம ஒரு வாழ்க்கைய நெனச்சுக்கூட பாக்கமுடியலடா…” என்ற ஜோ தொடர்ந்து கண்ணீர் விட்டுக்கொண்டேயிருந்தான்.
ஜோ அந்தக் கண்ணீரிலிருந்து மீண்டு வர இரண்டு மாதங்களாகின. இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஜோ குடியை நிறுத்தியிருந்த ஒரு மாலை. அன்று நாங்கள் தல்லாகுளம் பொட்டலில் உட்கார்ந்திருந்தபோது ஜோவின் ஜெராக்ஸ் கடையில் வேலை செய்யும் முத்து வந்தான்.
ஜோ, “என்னடா… அதுக்குள்ள கடைய சாத்திட்டியா?” என்றான்.
“ஒரு முக்கியமான வேலைண்ணே… என் பெரியம்மா பையன்… இளங்கோன்னு பேரு…” என்று தூரத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு இளைஞனைக் காண்பித்தான். தொடர்ந்து முத்து, “செல்லூர்ல புரோட்டோக் கடை வெச்சிருக்கான். ஒரு புள்ளய லவ் பண்ணிக்கிட்டிருக்கான். புள்ள வீட்டுல ஒத்துக்காம. புள்ளய இடம் மாத்தினாய்ங்க. நாலஞ்சு மாசம் பாத்துக்காம இருந்தாய்ங்க. ஆனா லெட்டர் கான்டாக்ட்ல இருந்தாய்ங்க. இப்ப அதுவும் புள்ள வீட்டுக்குத் தெரிஞ்சுபோயி மடக்கி வீட்டுல அடைச்சி வெச்சிருக்காய்ங்க. அந்தப் புள்ளக்கி வேகமா மாப்பிள்ளை பாத்துட்டு இருக்காய்ங்க. ரெண்டு பேரும் ஓடிப்போற முடிவுக்கு வந்துட்டாய்ங்க… நீங்கதாண்ணே ஹெல்ப் பண்ணணும்” என்றான். தனது காதல் தோற்றபிறகு, ஜோ நான்கைந்து காதல் திருட்டுக் கல்யாணங்களுக்கு உதவி செய்திருக்கிறான். அதனால்தான் முத்து ஜோவிடம் வந்திருக்கிறான்.
“பொண்ணு எந்த ஏரியா?”
“முதல்ல செல்லூர்லதான் குடியிருந்துச்சு. இப்பதான் உங்க ஏரியாவுக்கு வந்துருக்கு. கிறிஸ்டீன்தான். பொண்ணு பேரு டயானா… டாக்டர் அருளானந்தம் க்ளினிக்ல வேலை பாத்துட்டிருந்துச்சு. இப்ப ஒரு மாசமா வீட்டுலயே மடக்கிப் போட்டுருக்காய்ங்க…” என்றவுடன் ஜோவின் முகம் மாறியது. இடிபோல் இறங்கிய அதிர்ச்சியை மறைத்துக்கொண்டு ஜோ அமைதியாக சாலையை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். ஜோவைவிட அதிர்ந்துபோயிருந்த நாங்கள் என்ன செய்வதென்று புரியாமல் ஜோவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தோம். சில விநாடிகளுக்குப் பிறகு ஜோ குரலில் எந்த உணர்ச்சியுமின்றி, “அப்படியா... எங்காளுங்க... கொஞ்சம் யோசிச்சுதான் செய்யணும். எப்படிப் பண்ணமுடியும்னு பாக்கணும்? யோசிச்சு ரெண்டு நாள்ல சொல்றேன்” என்று முத்துவை அனுப்பி வைத்தான்.
நாங்கள், “என்னடா… செய்யப்போறியா?” என்றோம். “யோசிக்கணும்” என்ற ஜோ மேற்கொண்டு ஒன்றும் பேசாமல் எழுந்து சென்றான். அதற்குப் பிறகு வந்த ஒரு வார காலமும் ஜோ எங்களிடம் அதிகம் பேசாமல், ஏதோ யோசனையிலேயே இருந்தான். எங்கள் யாரையும் அழைக்காமல், எங்கெங்கோ சென்று வந்தான்.
ஒரு வாரத்திற்குப் பிறகு ஜோ என்னிடம், “மகேந்திரா, டயானாவ பொண்ணு பாக்கப்போறேன்…” என்றவுடன் எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. என் வாழ்வில் நான் சந்தித்த மிகப்பெரிய அதிர்ச்சிகளில் ஒன்று அது. தொடர்ந்து ஜோ, “டயானா தேவதைடா… அவள கல்யாணம் பண்றதுக்கெல்லாம் ஒரு தகுதி வேணும்டா. இந்த இளங்கோ பயகூட போயி ரோட்டுக்கடைல, குடிகாரப் பசங்களுக்கு புரோட்டா போட்டுத் தருவா. அவன் கூட அவ கஷ்டப்படுவாடா… அதான் நானே கல்யாணம் பண்ணிக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டேன். டயானாவப் பத்தி டீப்பா விசாரிச்சேன். எங்கப்பாவோட ஃபிரெண்டு பெஞ்சமினுக்கு சொந்தம். அவரப் பாத்துப் பேசினேன். அவரு இளங்கோ மேட்டரச் சொன்னாரு. நான் பரவால்லன்னு சொல்லிட்டேன். அவங்க வீட்டுல வரச்சொல்லியிருக்காய்ங்க. நீ வரியா?” என்றான்.
நான் கோபத்துடன், “மாப்ள… டயானா மேல உனக்கு ஆசை இருக்கலாம். ஆனா இளங்கோ நம்ம உதவி கேட்டு வந்த பய… அவனுக்கு உதவி பண்ணலன்னாலும், துரோகம் பண்ணக்கூடாதுடா.”
“மகேந்திரா… வாழ்க்கைல ஒருத்தனுக்காச்சும் துரோகம் பண்ணாம, இங்க யாரும் ஜெயிக்க முடியாது. என்னா… வர்றியா?”
ஜோவின் செயலில் எனக்கு உடன்பாடில்லை. இருந்தாலும் அவன் மிகவும் வற்புறுத்தியதால் அவனுடன் சென்றேன். ஜோவுடன் அவன் அம்மா மற்றும் அக்கா குடும்பத்தினரும் வந்திருந்தனர். காபி எடுத்துக்கொண்டு வந்த டயானாவிற்கு ஜோவைப் பார்த்தவுடன் அதிர்ச்சி. ஜோ டயானாவிடம் தனியாகப் பேசிவிட்டு வந்து டயானாவின் அப்பாவிடம், “எனக்கு பொண்ணப் பிடிச்சிருக்கு. இளங்கோ மேட்டரெல்லாம் பெரிய விஷயமில்ல. இதெல்லாம் வயசுல வர்றதுதான்னு பொண்ணுகிட்ட சொல்லிட்டேன். யோசிச்சு உங்க முடிவச் சொல்லுங்க” என்று கூறிவிட்டு வெளியே வந்தான்.
என்னிடம் ஜோ, “டயானாகிட்ட, ‘அந்த இளங்கோ ஒரு வெத்துப் பய… எனக்கு இவ்ளோ சொத்து இருக்கு. நான் உன்ன மதுரைல ராணி மாதிரி வெச்சுக்குறே’ன்னு பக்குவமாப் பேசினேன். யோசிச்சுச் சொல்றன்னு சொல்லியிருக்கு” என்றான்.
அதன் பிறகு ஏறத்தாழ ஒரு வாரம் வரை நான் ஜோவைச் சந்திக்கவேயில்லை. எட்டாம் நாள் என் வீட்டிற்கு வந்த ஜோ, “டயானா ஓகே சொல்லிருச்சு. கல்யாண தேதி முடிவாயி, பத்திரிகைல்லாம் அடிக்கக் கொடுத்தாச்சு. நாளைக்கி என் கூட சினிமாக்கு வரேன்னுருக்கு” என்றவுடன், நான் கசப்பாகச் சிரித்தேன்.
மறுநாள் இரவு. எட்டு மணிபோல் இருக்கும். என் வீட்டுக்கு வந்த ஜோ என்னை வெளியே அழைத்துக்கொண்டு வந்தான். நாங்கள் தெருமுனைக்கு வந்தபோது பிள்ளையார் கோயில் அருகில் நின்றுகொண்டிருந்த டயானாவைப் பார்த்தேன். இவளை எதற்கு இங்கு அழைத்து வந்திருக்கிறான்? என்னைப் பார்த்தவுடன் டயானா மெலிதாகச் சிரித்தாள். அப்போது ஜோ, “மகேந்திரா… இப்ப உன்கிட்ட ஒரு உண்மையச் சொல்லப்போறேன்... யாருகிட்டயும் சொல்லமாட்டேன்னு சத்தியம் பண்ணு” என்று கையை நீட்டினான். நான் ஒன்றும் புரியாமல் சத்தியம் செய்தேன்.
ஜோ, “இப்ப நானும், டயானாவும் எதுக்கு தெரியுமா வெளிய வந்துருக்கோம்… இளங்கோவோட டயானாவ அனுப்பி வைக்க…” என்றவுடன், நான் அரண்டுபோனேன். தொடர்ந்து ஜோ, “நீயெல்லாம் இங்க வர்றதுக்கு முன்னாடி அன்புன்னு ஒரு ஃபிரெண்டு, அவனையும் அவன் லவ்வரையும் ஊர விட்டு அனுப்பி வெச்சோம். மறுநாள் பாண்டியும், லிங்கமும் நல்லா தண்ணியப் போட்டுட்டு எங்கயோ உளறி வெச்சுருக்காய்ங்க. ஒரே நாள்ல புள்ளய கமுக்கமா தூக்கிட்டு வந்து, வேற ஒருத்தனுக்குக் கல்யாணம் பண்ணி வெச்சுட்டாய்ங்க. அதான் இந்தத் தடவை யாருக்கும் சொல்லல. ஆனா உன்கிட்ட மறைக்கிறது… மனச உறுத்திக்கிட்டே இருக்கு. அதான் சொல்லிட்டேன்” என்ற ஜோவை இன்னும் அதிர்ச்சி அடங்காமல் பார்த்துக் கொண்டேயிருந்தேன்.
சில விநாடிகள் இடைவெளிக்குப் பிறகு ஜோ, “முத்து சொன்னவுடனே யோசிச்சேன். மொதல்ல டயானாவ வீட்ட விட்டு வெளிய கூட்டிட்டு வரணும். ஆனா அவிங்க வீட்டுல எங்கயும் வெளிய விடுறதுல்ல. கக்கூஸ் போறப்பக்கூட காவலு. அதுக்குத்தான் நான் கல்யாணம் பண்ணப் போற மாதிரி போனேன். டயானாகூட தனியா பேசறப்ப என் பிளானச் சொல்லிட்டேன். இளங்கோகிட்டயும் விஷயத்தைச் சொல்லிட்டேன்” என்று சொல்லச் சொல்ல… என் பிரமிப்பு எகிறிக்கொண்டேயிருந்தது.

தொடர்ந்து ஜோ, “கேரளா, திருச்சூர்ல இருக்கிற என் ஃபிரெண்டு ஒருத்தன் வீட்டுக்கு அனுப்பப்போறேன். மதுரைல கார் பிடிச்சா ட்ராவல்ஸ்ல விசாரிச்சுக் கண்டுபிடிச்சுடுவாய்ங்க. அதனால திருச்சூருலேருந்தே ட்ராவல்ஸ்ல ஒரு கார இங்க வர வெச்சிருக்கேன். ஃபாத்திமா காலேஜ்கிட்ட கார் நிக்குது. இப்ப நானும், டயானாவும் அங்க போறோம். இளங்கோ என் ஜெராக்ஸ் கடைல இருக்கான். எங்க வரணும்னு இளங்கோக்குத் தெரியாது. நாங்க போயி கூட்டிட்டுப் போனா, யார் கண்லயாச்சும் பட்டா வம்பு. அதனால நீ போயி அவன அழைச்சுக்கிட்டு ஃபாத்திமா காலேஜ் வந்துரு…” என்ற ஜோ தெருவில் சென்ற ஆட்டோவைக் கைதட்டி அழைத்தான்.
நான் நடப்பதையெல்லாம் நம்பமுடியாமல் பரபரப்புடன் கிளம்பினேன். நான் இளங்கோவை அழைத்துக்கொண்டு ஃபாத்திமா காலேஜ் வந்தபோது, மணி இரவு ஒன்பதாகியிருந்தது. கல்லூரியைத் தாண்டி நின்ற ஒரு கார் கேரளப் பதிவு எண்ணுடன் இருந்தது. எங்களைப் பார்த்தவுடன் காரிலிருந்து ஜோவும் டயானாவும் இறங்கினர். டயானா ஓடி வந்து இளங்கோவைக் கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதாள்.
கார் புறப்படுவதற்கு முன்பு டயானாவும், இளங்கோவும் ஜோவின் காலில் திடீரென்று விழுந்தனர், “ஏய்… என்னப்பா…” என்று அவர்களை எழுப்பிய ஜோ, “போய் நல்லபடியா இருங்க. கொறஞ்சது மூணு மாசம் இங்க யாரு கூடயும் பேசாதீங்க. நடுவுல நான் அங்க வந்து என்னாச்சுன்னு சொல்றேன்” என்றவன் தன் பாக்கெட்டிலிருந்து கொத்தாகப் பணத்தை எடுத்தான். இளங்கோ, “எங்கிட்ட இருக்குண்ணே…” என்று தடுக்கத் தடுக்க இளங்கோவின் சட்டைப் பாக்கெட்டில் பணத்தைச் செருகி, அவர்களை காரில் ஏற்றி விட்டான். கார் கிளம்பியது. தூரத்தில் லைட் வெளிச்சத்துடன் கார் மறைய… ஜோ கண்களைத் துடைத்துக்கொண்டான். ஜோவைப் பார்க்கப் பார்க்க… இப்படி ஒருவனுடன் பழகியதற்காகப் பெருமையாக இருந்தது.
“எப்படிரா உன்னால இதைச் செய்யமுடியுது?” என்றேன்.
“காதல் தோல்வியோட வலி, எவ்வளவு கொடுமைன்னு எனக்குத் தெரியும் மகேந்திரா… கலைச்செல்விக்குக் கல்யாணமாயி குழந்தைல்லாம் பொறந்த பின்னாடி, ஒரு நாள் டவுன்ஹால் ரோட்டுல பாத்தேன். அவளுக்கு பிரேமவிலாஸ் அல்வான்னா உசுரு. வாங்கிக் கொடுத்தேன். ஆசையா தின்னுச்சு. தின்னுகிட்டு என்னைப் பாத்துக்கிட்டே இருந்துச்சு. மனசுல என்ன நினைச்சுச்சோ… திடீர்னு கடகடன்னு கண்ணுல தண்ணி. நான், “என்னா புள்ள’ங்கிறேன்... ஒண்ணுமே சொல்லல. அழுதுகிட்டே ஒரு ஆட்டோ புடிச்சு ஏறிப் போயிருச்சு. அடிமனசுல அவ்ளோ வலி இருக்குடா மாப்ள... பொட்டப் புள்ளைங்க மனசுவலிய வெளிய காட்டிக்காதுங்க. அந்த வலி டயானாவுக்கு வேணாம்டா… என்ன இருந்தாலும் நான் காதலிச்ச பொண்ணுல்ல?”
“இருந்தாலும் இதைச் செய்றதுக்கு ஒரு மனசு வேணும்டா. நீ டயானாவ சுத்திட்டிருந்தது இளங்கோவுக்குத் தெரியுமா?”
“ம்ஹ்ம்… சொல்லவேண்டாம்னு டயானாகிட்ட சொல்லிட்டேன்” என்ற ஜோவை சில விநாடிகள் உற்றுப் பார்த்த நான் சட்டென்று அவனை இறுக்கமாக அணைத்துக்கொண்டேன். என்னையறியாமல் என் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.
பின்னர் ஜோ டயானா வீட்டில், பாதி சினிமாவில் டயானா காணாமல்போய்விட்டாள் என்று கூறிவிட்டான். அவர்கள் இளங்கோ வீட்டில் விசாரிக்க… அவனும் காணவில்லை என்பது தெரிய வர... அவர்கள் ஓடிவிட்டது புரிந்தது. பத்திரிகை அச்சடிப்பு வரை சென்றுவிட்டதால் ஜோமீது அவர்கள் வீட்டில் சந்தேகம் வரவில்லை. எங்கெங்கோ தேடிப் பார்த்து ஓய்ந்துவிட்டார்கள்.
இவையெல்லாம் நடந்து இரண்டு மாதத்தில் எனக்குச் சென்னையில் வேலை கிடைத்து வந்துவிட்டேன். பிறகு அப்பாவிற்கும் சென்னைக்கு டிரான்ஸ்ஃபராகி, சென்னையில் செட்டிலானோம். இரண்டாண்டுகள் கழித்து நான் சிங்கப்பூருக்கு வேலைக்குச் செல்லும் வரை, ஜோ யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல்தான் இருந்தான். பிறகு மதுரை நண்பர்களுடன் சுத்தமாகத் தொடர்பு அறுந்துபோனது.
2019. கடந்த வாரம் நான் சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்தபோது, சென்னை ஏர்போர்ட்டில் நான் ஜோவை அவனின் மனைவி, குழந்தைகளோடு தற்செயலாகப் பார்த்தேன். ஒரு திருமணத்துக்காகச் சென்னை வந்திருப்பதாகக் கூறினான். அவர்களை வீட்டுக்கு அழைத்து வந்தேன்.
அன்றிரவு லஸ் கார்னர் பிக்னிக் பிளாஸா பாரில் பிராந்தியை அருந்தியபடி ஜோவிடம், “டயானா இப்ப எங்கடா இருக்கா?” என்றேன்.
“மூணு வருஷம் கழிச்சு மதுரை வந்து, இப்ப எல்லாம் ராசியாய்ட்டாங்க… டயானாதான் எனக்குப் பொண்ணு பாத்து கல்யாணம் பண்ணி வெச்சுது.”
“டயானாவவிட உன் ஒய்ஃப் ரொம்ப அழகா இருக்காங்கடா…” என்று உண்மையாகவே சொன்னேன்.
“தெரியும். அதுக்காக டயானா மாதிரி வருமாடா? இது கல்யாணம்… அது லவ்வுடா…” என்ற ஜோவின் கண்களை உற்றுப் பார்த்தேன். அன்று டயானா வேறொருவனைக் காதலிப்பதாகச் சொன்னபோது பார்த்த அதே வலியை, இப்போதும் ஜோவின் கண்களில் என்னால் பார்க்க முடிந்தது. அந்த வலியைப் புரிந்துகொள்ள நாம் ஜோவாகப் பிறந்திருக்க வேண்டும்.
ஒருகாம்பு இருதலையும் பூ
நரசய்யா
"கல்லுருகுங் காலங் கழுகறியு மக்காலம்
வையக மெல்லா மலர்ந்தபூ வண்டறியும்
ஓங்க லறியு முயர்கடலி னுள்ளாழம்
பாங்கனுக்குப் பாங்கன் பயனறிவான்; மன்ற
அறிவா ரறிவா ரறியா ரறியார்
ஒருகாம் பிருதலையும் பூ"
பெருந்தொகை பாட்டு எண் 1800) அகலிகை வெண்பா முன்னுரையிலிருந்து தொகுக்கப்பட்டது. *
(கழைக்கூத்தியொருத்தி கழை மேனின்று ஆடியபோது பூப்படையக் கழையினின்று இறங்குக்காற் பாடியது )
சென்னை மாநகரின் அடையாறில் வசிக்கும் எனக்குக் கழைக்கூத்தாடிகளைப் பற்றிஅதிகம் தெரியாதுதான். ஆனாலும் அன்றொருநாள்
சர்வ சித்தி விநாயகர் கோவிலுக்குச் சென்று திரும்புகையில் அடிக்கப்பட்ட தம்பட்ட ஒலி என்னை நிறுத்தித் திரும்பிப் பார்க்கச் செய்தது!
அது சாதாரண ஒலியில்லை, ஓலம்! பசியையும் ஏழ்மையையும் அறிவித்து, எங்களைப் பார் என்பதைப் போல இருந்ததால் நின்று கவனித்தேன்.
அதிகமாக எவரும் கவனிக்கவில்லை. இரண்டு பக்கங்களிலும் கிராஸ் வடிவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மூங்கில்களின் இடையில் சுமார்
10 அடி நீளத்திற்குக் கட்டப்பட்ட கயிறு. கீழே ஒரு துண்டு விரிக்கப்பட்டிருந்தது. தந்தையும் தாயும் தம்பட்டத்தை அடித்துக்கொண்டு பாடிக்கொண்டு
மக்களின் கவனத்தை ஈர்க்க முயன்று கொண்டிருந்த நிலை! ஒரு பெண்; சுமார் 10 லிருந்து13 வயதிற்குள்ளென சொல்லலாம்; தயாராக நின்று
கொண்டிருந்தாள். நான் நின்று பார்ப்பதைப் பார்த்த தந்தை இன்னும் வேகமாக தம்பட்டத்தை அடித்துக்கொண்டிருந்தபோது இன்னும் சிலர்
சேர்ந்தனர். அப்பெண் எப்படியோ அந்த மூங்கில் வழியாக கயிற்றின் மீது ஏறி, கையில் ஒரு நீண்ட குச்சியையும் வைத்துக்கொண்டு கயிற்றின் மீது
நடக்க ஆரம்பித்தாள். இன்னும் இரண்டு மூன்று மனிதர்கள் சேர்ந்துவிடவே உற்சாகத்துடன் தம்பட்டம் ஒலிக்க அவளும் இரண்டு முறை மேலும்
கீழுமாக நடந்து விட்டாள். சிலர் சில்லரையை அந்தத் துண்டின் மீது எறிந்து விட்டு அகன்றனர். திடீரென அப்பெண் கீழே இறங்கிவந்து ஏதோ தன்
தாயிடம் முணுமுணுக்கவும் தம்பட்ட ஒலி நின்றது. மனைவியைப் பார்த்த அந்த மனிதன் அவள் செய்த ஜாடையைப் புரிந்து கொண்டு எக்காராணத்தாலோ
தலையில் அடித்துக் கொண்டான்.
எனது நினைவு பின்னோக்கிப் பாய்ந்தது. இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்னால், எனது சகோதரர்களுடனும் அவர்கள் குடும்பத்தினருடனும்
நாங்கள் தி. நகரின் ஒரு சுமாரான பெரிய ஹோட்டலுக்குச் சென்றிருந்தோம். நாங்கள் சென்றது அங்கு நடக்கவிருந்த ஒரு திருமண வரவேற்புக்காக; அந்த
ஹோட்டலின் நுழைவாசலில் சில அறிவிப்புகள் இருந்தன. அதைப் பார்த்து எங்கு செல்ல வேண்டுமெனத் தெரிந்துகொள்ள வேண்டும். திருமண வரவேற்பு
எங்கு எனப் பார்த்துக் கொண்டிருக்கையில், அங்கு வைக்கப்பட்டிருந்த மற்றொரு அறிவிப்பு என் கவனத்தை ஈர்த்தது. . . .இன்னாரின் மகளான செல்வி . . .
எனப்பட்டவள் புஷ்பவதி ஆகிவிட்டதை அந்த அறிவிப்பு பிரகடனப்படுத்திக் கொண்டிருந்தது. அதற்காக அப்பெண்ணின் பெற்றோர்கள் ஒரு வரவேற்பு ஏற்பாடு
செய்திருக்கின்றனர்! அதற்காக ஒரு விழா எடுக்கப்பட்டுள்ளது. அங்கு அந்த ஏற்பாட்டிற்காக வந்திருந்தவர்களெல்லோருமே சுமாராக பணம்
படைத்தவர்களாகத்தான் இருக்க வேண்டும். கைகளில் பல தினுசு தினுசான பரிசுப் பொருள்களும் இருந்தன! என்னதான் செய்கிறார்கள் என்று பார்க்க நானும்
அந்த ஹாலின் அருகில்,துணைக்கு எனது இளைய சகோதரனின் புத்திரியான ரம்யாவையும் அழைத்துக் கொண்டு சென்றேன். ஒரு கல்யாண வரவேற்பு
போலவே இருந்தது. வந்தவர்கள் எல்லோரும் அப்பெண்ணின் பெற்றோரை வாழ்த்தினர். அப்பெண் கையில் பரிசுப் பொருள்களைத் தந்து மகிழ்ந்தனர்.
அப்பெண்ணின் உருவத்தையும் மீறி அவளுக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தலை நிறையப் பூ! திரும்பவும் வந்து அந்த பிரகடனத்தைப் பார்த்தேன்.
"புஷ்பவதி ஆன... " அப்போது என்னையும் அறியாமல் சிரித்து விட்டேன். ரம்யா ஏன் சிரிக்கிறீர்கள் எனக் கேட்டாள். "ரம்யா நீயே நினைத்துப் பாரேன்.
சப்போசிங் மெனோபாஸுக்கு இந்த மாதிரி ஒரு விழா எடுத்தால் எப்படியிருக்குமென்று?'
"சீ . . .”
தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மையைப் போல அன்றைய நினைவுக்குத் திரும்பினேன். திடீரெனத் தம்பட்ட ஓசை நின்று விட்டதையடுத்து. தலையில்
கை வைத்துக்கொண்டிருந்த அந்த தந்தையின் அருகில் சென்றேன்.
"என்னாச்சு?"
"என்னத்தை சொல்ல சார். இவளை நம்பித்தான் நாங்க பொழப்பு நடத்துறோம். இப்போ பாருங்கோ திடீர்னு பொண்ணு பெரியவளாயிட்டதா இவ சொல்றா. ."
தனது மனைவியைச் சுட்டிக்காட்டிச் சொன்ன அந்த மனிதனின் நிலைமையைக் கண்டால் பரிதாபமாயிருந்தது. தாய்க்கு மட்டும்தான் தெரியும் அப்பெண்
பூப்பெய்துவிட்டது; அதைத்தான் அறிவார் அறிவார் என்றும் அறியார் அறியார் என்றும் சொன்னார்களோ! தாயோ, ஒரே நேரத்தில், சந்தோஷத்தையும்
துக்கத்தையும் தனது முகத்தில் காட்டிக்கொண்டிருந்தது எனக்குத் தெரிந்தது.
துண்டில் கிடந்த சில்லறையில் சிலவற்றைப் பொறுக்கியெடுத்துக் கொண்டு கோவிலுக்குச் சென்று அங்கு பூ விற்றுக்கொண்டிருந்த மாதிடம்
இவ்விஷயத்தைச் சொல்லவும், அம்மாதோ, சற்றும் தயங்காது, பணத்தை மறுத்து விட்டு இரண்டு முழம் பூவை எடுத்து அந்த தாயிடம் அளித்து
வாழ்த்தும் சொன்னாள்! அதைக் கொண்டு வந்து அப்பெண்ணிற்கு அணிவித்துவிட்டுக் கட்டிப்பிடித்துக் கொண்ட தாய் யுகாந்திரமாக தாய்மார்கள்
அனுபவிக்கும் சந்தோஷத்தை வெளிப்படுத்த முடியாமல் நின்று கொண்டிருந்தாள். வெளியிலிருந்தே உள்ளே வீற்றிருக்கும விநாயகரை நோக்கித்
தொழுது நிற்கையில் அப்போதே வெளியில் வந்து கொண்டிருந்த அர்ச்சகர் நாராயண சாஸ்திரியைப் பார்த்து அம்மாது சொன்னாள்: "சாமி, எம்பொண்ணு
பெரியவளாயிட்டா; கும்பிடறேன்" என்றாள். "அப்பிடியா! இன்னிக்கு திதி நட்சத்திரம் எல்லாமே பேஷா இருக்கு ஒம்பொண்ணு பிரகாசிப்பா; இந்தா"
என்று அவர் குங்குமப் பிரசாதமும் பூவும் கொடுத்தார். அப்பெண்ணின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை!
தந்தையின் முகம் மாறுபட்டிருந்தது. அவர் சந்தோஷத்தில் உள்ளாரா, துக்கத்தில் ஆழ்ந்து கிடக்கிறாரா என்று விவரிக்க இயலவில்லை! அவர்களது
சம்பாத்தியமே இப்பெண்ணின் மூலம்தான்! மூவர் சாப்பாடும் அவள் கையில்தான்! ஆனாலும் அவர்களும் மனிதர்கள்தானே! தமது பெண் பெரியவளானது
அவர்களுக்கும் சந்தோஷத்தைத்தானே அளிக்கவேண்டும. ஏனிந்த ஒரே நிகழ்ச்சி சிலருக்குச் சந்தோஷத்தையும் மற்றும் சிலருக்குத் துக்கத்தையும்
அளிக்க வேண்டும்?
கயிற்றினின்றும் இறங்கிவிட்ட அப்பெண் எவ்வளவு மாறுபட்ட அக உணர்வுப் போராட்டங்களை உண்டாக்கிக் கொண்டிருந்தாள்! திடீரென சைரன் ஒலிக்கும்
கார் ஒன்று எங்களைத் தாண்டிச் சென்றது. அப்போது இந்த அசிங்கமான ஓசை இன்னும் அமலில் இருந்தது. அதுவும் ஒரு ஓசைதான்; ஏன் ஒரு ஓலம்தான்!
நான் கவனிக்கப்பட வேண்டியவன் என்று அறிவித்துக்கொண்டு செல்கிறார் அக்காரினுள் உள்ளவர். தான் செல்வது மற்றவர்களுக்குத் தெரியவில்லை
என்றால், அது தன்னுடைய கர்வபங்கம் என்று நினைத்துத்தான் அவ்வாறு ஓலத்தைச் செய்துகொண்டு அவரும் பாவம் செல்கிறார்!
அதிலிருப்பவரும் மனிதன்தான். அரசியல்வாதியோ அல்லது உயர்ந்த பதவியிலிருக்கும் அதிகாரியாகவோ இருக்க வேண்டும். வெட்கம் கெட்டவர்கள்!
எனது வாய் முணுமுணுத்தது இவர்கள் செல்வது உலகுக்கு எல்லாம் தெரிய வேண்டுமா? "சைரனுக்குப் பதிலாக, நீயும் ஒரு தம்பட்டத்தை ஏன் கையில்
எடுத்துக் கொள்ளக்கூடாது. அதை அடிக்கக்கூட உனக்கு ஆட்கள் தயாராகக் கிடைப்பார்களே!" எனக் கேட்கலாம் போலிருந்தது! இங்கு தம்பட்டம் அடித்து
தனது இருப்பிடத்தை உணர்த்திக் கொண்டிருக்கும் இந்த கழைக்கூத்தாடிக்கும் சைரனை அடித்துக்காட்டிக்கொண்டு மற்றவர்கள் உபயத்தில் பெரும் வாழ்க்கை
நடத்திக்கொண்டிருக்கும் இந்த "பெரிய" மனிதர்களுக்கும் என்ன வித்தியாசம்?
இந்த கழைக்கூத்தாடியே சிறந்தவர்! ஆனாலும் நடைமுறையில் தினசரி சாப்பாட்டிற்கே ஆட வேண்டிய நிலை! பள்ளி செல்ல வேண்டிய வயதில்
கழைக்கூத்து! சைரன் கார்காரர் தனது சொந்த விளம்பரத்திற்காக "சிறாக்களைப் பள்ளிக்கு அனுப்புங்கள்; வேலை செய்ய அனுப்பாதீர்கள்" எனச் சொல்லலாம்!
வேறுபாடுகள் இவ்வளவா?
ஹோட்டலில் வாழ்த்துப் பெற்றவளும் ஒருத்திதான். இங்கு நிற்கும் இக்காம்பு, தனது இரு மருங்கிலும் பூ ததும்ப நிற்கிறாளே இவளும் ஒரு மனுஷிதான்!
ஆனால் மனிதர்களுள் எவ்வளவு வேறுபாடு! மூங்கில்களை சேர்த்துக் கொண்டு கயிற்றையும் சுற்றிக் கொண்டு கிளம்பத் தயாராகிவிட்டார் அந்தக்
கழைக்கூத்தாடி! சுற்றிக் கொண்டிருந்த துண்டின் அருகில் சென்று என் பையிலிருந்து எடுத்த ரூபாய் நோட்டை அத்துண்டில் போட்டேன். அக்கூத்தாடியின்
கண்கள் அகல விரிந்தன. "ஐயா! நீங்கள் பிள்ளை குட்டிகளோடேநல்லா இருக்கணுமய்யா!" என்றபோது அந்த வார்த்தைகளின் உண்மையும், ஹோட்டலில்
பார்த்த சமுதாய நோக்கிற்காகச் சொல்லப்பட்ட வார்த்தைகளின் ஆழமின்மையும், அரசியல்வாதியோ ஒரு அதிகாரியோ சென்ற அக்காரின் அபத்தமான
சைரனின் ஒலியும் இரைந்தே சொல்லியவை, " மன்ற அறிவா ரறிவா ரறியா ரறியார்" என்ற வார்த்தைகள்தாம்! அவ்வார்த்தைகள் அந்த இடத்திலெல்லாம்
வியாபித்து, எல்லாப் பக்கங்களிலிருந்தும் என்னைத் தாக்கின. இருதலையும் பூ கொண்ட அப்பெண்ணை இப்போது பெற்றோர்கள் அரவணைத்து
ஆனந்தத்துடன் முத்தமிட்டனர்!
அவர்கள் அறிவர். வையக மெல்லா மலர்ந்த பூ வண்டறியும்; ஓங்கல் அறியும் கடலாழம்!
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/50d38184-afc7-4eed-b21a-5a94a62f7cacn%40googlegroups.com.