மகர விடங்கர்/இடங்கர்

194 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jan 23, 2015, 9:16:07 AM1/23/15
to mint...@googlegroups.com, vallamai, housto...@googlegroups.com, Santhavasantham
இவ்விழையில் இந்தியாவின் மூன்று முதலை இனங்கள் பற்றியும், அவற்றிற்கான தமிழ்ப் பெயர்கள் - சங்க இலக்கியம்
முதலை, இடங்கர், கராம் என புறநானூறு 37, மலைபடுகடாம், குறிஞ்சிப்பாட்டு என மூவகைச் சாதிகள் என்று
நச்சினார்க்கினியர் விளக்கியுள்ளார் - திராவிட மொழிப் பெயர்கள், அவற்றின் சிந்துநாகரீகம் தொட்டு சங்ககாலம் வரை
வழிபடப்பட்ட வரலாறு போன்றவை ஆய்விதழ்களில் கட்டுரைகளும், செம்மொழி மாநாடு (கோவை), 16-ஆம்
உலக சம்ஸ்கிருத மாநாடு (ஜூன் 2015) தாய்லாந்திலும் விரிவாகவும் ஆராய்ந்து வெளியிட உள்ளேன்.
முதலைகள் வழிபாடு முண்டா மொழிகள் இனத்தவரிடமோ, மத்ய ஆசிய மக்களிடமோ இல்லாத
தமிழ்/த்ராவிட ஜனங்களுக்கே உரித்தான சிந்துசமவெளிக் காலம் முதல் சங்க காலம் முடிய இருந்த வழிபாடு
ஆகும்.

மகரம் என்றால் முதலை என சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்னமே விளக்கிய அறிஞர்களுக்கு எம் நன்றி.
ஆனந்த குமாரசாமி, ...  முதலில் காம தேவனுக்கு வாகனம் ஆகிய விடங்கர் (> இடங்கர்) அழகான
சிற்பம் காண்போம். கிழக்கு இந்தியாவில் நகர் என்று அழைக்கப்படும் விடங்கர் எவ்வாறு வருணன்,
காமனுக்கு வாகனம் ஆகியது எனவும் பார்ப்போம்.

தேமொழி எழுதினார்:

”[9] ரதி மன்மதனின் மரச்சிற்பம்:

இது செவ்வக மரப்பலகையில் செதுக்கப்பட்டுள்ள ரதி மன்மதனின் புடைப்புச் சிற்பம்.   இரு சதுர தளங்களில் இடது பக்கம் காதலின் கடவுளான மன்மதனும், வலது பக்கத்தில் சிற்றின்ப தெய்வமான ரதியும் முறையே தங்களது கிளி மற்றும் அன்ன வாகனகங்களில் காட்சி அளிக்கிறார்கள். சிற்பத்தின் விளிம்புகள் கோர்த்த மணிச்சரம் பாதிக்கப்பட்டுள்ளது போன்று அமைக்கப் பட்டிருக்கிறது. மேற்பகுதியில் “சங்கரமூர்த்தி ஆசாரி” என்ற பெயர் பொறிக்கப் பட்டுக்ள்ளது. இதுபோலப் படைப்புகளில் தங்கள் பெயரைப் பொறிக்கும் வழக்கம் தமிழத்தில் மிகவும் அரிது, தென்னிந்திய வழக்கத்தில் இல்லாத ஒன்று.

(குறிப்பு: இது ஸ்ரீலங்கா பகுதியில் இருந்து பெறப்பட்ட தமிழர் படைப்பு என்பது இக்கட்டுரையில் முன்னரே குறிபிடப்பட்டுள்ளது)

9-rijksmuseum tamil

9-rijksmuseum tamil-1

தலைப்பு: ரதி மன்மதனின் மரச்சிற்பம் (Panel with Kama and Rati)”


காதல் கடவுள் காமதேவன் வாகனம் கிளி என்பது மிகப் பிற்காலம். மன்மதனின் வாகனம் மகரம். இது விடங்கர்/இடங்கர் (Gharial) என்னும் முதலை இனம். மகரத்தின் வாய் சிற்பத்தில் கூர்ந்து நோக்கவும். 4200 ஆண்டுகளாய் இன்னமும் விடங்கர்/இடங்கர் (Gharial) வாய் காட்டிக்கொண்டுள்ளது. இதனால் விடங்கர்/இடங்கர் லிங்க விடிவாக சிந்து சமவெளி மக்கள் தொழுதுவந்தனர். வேதம் சிசுனதேவ வழிபாட்டினர் என்று இலிங்க வழிபாட்டைச் சொல்வது இந்த விடங்கர்/இடங்கர் வழிபாட்டைத் தான். பல ஆய்வுக் கட்டுரைகளில் காட்டியுள்ளேன். அவ் வெளியீடுகளில் காணலாம்.

இவ்விழையில் இந்தியாவில் விடங்க/இடங்கர் எண்ணிக்கை அருகிப் போக, சங்க கால இலக்கியங்களில் ஒரு ஸப்ஸ்டிட்யூட் ஆக (substitute of Gharial's long-snout) சுறவக்கோட்டினை வருணனுக்கு சின்னமாகக் கொள்வதும் காண்போம். வருணன் தொல்காப்பியத்தில் நெய்தல் திணைத் தெய்வம். பின்னாளில் சிவபெருமானோடு ஒன்றிவிடுகிறான். 

நா. கணேசன்

மகர இடங்கர் (< விடங்கர்) வாகனத்தில் மன்மதன்: (2300 ஆண்டுக்கு முந்தைய ஆதிகால மகரங்களின் முகம் இருக்கிறதை நோக்கவும்).

படம் நன்றி: தேமொழி அவர்கள், மின்தமிழ் இழை:

https://groups.google.com/d/msg/mintamil/LIA8nBeAw_Q/ZZQ_jCO7ZhIJ





N. Ganesan

unread,
Jan 24, 2015, 12:04:00 PM1/24/15
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, housto...@googlegroups.com
It looks there is some new interest in my theory of Makara ViTaGkar (Crocodile) and his wife KoRRavai (proto-Durga) worship practiced widely in Indus civilization, and spreading to Tamizakam with VeLir chieftains moving from North spreading Paddy cultivation in riverine deltas, and Iron smelting and Steel production. Ultimately Brahmi script getting adopted to Tamil writing in Kodumanal, Porunthal in Kongunadu (the earliest Brahmi & Tamil Brahmi finds in Indian subcontinent), and Jainas adopting Panini, ... into Tamil phonemic script. Only Tamil script is phonemic, while all others are just Sanskrit script which is phonetic in character,

The crocodile cult of IVC, and Sangam Epoch Tamizhakam, Makara yaazh, the names of Crocodiles in India (most are traced to Dravidian),
I have been writing about them for almost a decade now. Now, Iraamaki is starting his research on crocodile names, and we can all read his mails.

N. Ganesan

PS:  Nowadays in Indology, CTamil lists often MinTamil, Vallamai list mails
are referred to. Good academic discussions by scholars and experts will what make
Tamil on par with English, as we all know. Here is my message in CTamil list,

On Sat, Jan 24, 2015 at 7:23 AM, iraamaki <iraa...@bsnl.in> wrote:

It is time that scholars become aware about faulty etymologies and faulty identifications proposed by NG.
 
I intend to take up later in Tamil a article on ”முதலை, மகரம், கராம், இடங்கர் and விடங்கர்”.

I have published articled in English and Tamil on these important words. For example, why
viTaGkar is the name for Lingam-s in Tamil temples. And, why viTaGkar > iTaGkar,
the Sangam texts' word for crocodile. viTaGkar/iTaGkar seems most appropriate for
the long snouted Gharial crocodile. See my 2007 article starting the study of crocodile cult of
the Indus civilization. It is published in Arimaa Nokku, the Journal of the Central Institute
of Classical Tamil, Chennai.
 
Anthropomorphic Axe in OCP sites in Yamuna-Ganetic doan in Post-Harappan sites,
and the Makara ViTaGkar's symbol identified by Parpola in Indus script in Sangam Age
pottery and monumental stone sculpture provide the concrete link between Tamils
of Sangam Epoch and Indus Civilization. will present them at 16th World Sanskrit
Conference in June 2015. Also, writing a book to be published in India.
Please note that no one has considered the Crocodile cult of IVC, 3 Indian species of crocs
and their Dravidian names such as Gharial, Kumbhira, Nakar/Nakkar, vITaGkar/iTaGkar,
Mokara/Makara (< PD * mokaL(a) ) in detail yet. That is an important project that
can be done by all Dravidology specialts. I have shown the art historical evidence
of crocodile-koRRi couple which is very important to construct etymologies.
It is highly significant that the Indian crocodile names are Dravidian, and not Munda at all.
For example, nakar is the Gharial's name in North India. Based upon what Asko
Parpola told looking at Kannada names, it is PD *nekaZ, and compare Tamil's
nekiZ-tal and nakar-tal. It is this nakar/nakkar which referred to in TirupparaGkunRam
Tamil Brahmi inscription. 

You are welcome to explain these words of Crocodiles, but fairly clear to me,
(1) the "mugger", English term for crocodile which American dictionary says
is from Dravidian "makara" has an earlier form *mokaL(a) from which
mocaLe in Kannada, and motale in Tamil (-c- > -t- paper by Emeneau gives
many examples where -c- > -t- in Tamil-Malayalam)
(2) nakar/nakkar also as nAkarA in Tirupparangkunram Tamil Brahmi inscription
possibly 3rd or 2nd century BCE, since it is contemporaneous with
crocodile punched marked and Early Tamil Brahmi inscriptions by Sangam Pandyas,
gives an explanation for Nakkan, the nude, Gharial-like Lingam.

Iravatham Mahadevan has rejected Nakkan as from Naked IE word long ago.
Tirupparankunram Tamil Brahmi inscription of pre-AD centuries gives the
link with Crocodile name, Nakar and Siva's name as Nakkan very clearly.
Nakar as the name of Gharial in East India, and its Lingam shape giving
Nakkar to Siva is Dravidian in origin. And, quite different from what Suresh
says as nagna. Iravatham has rejected Nakkan from Indo-European root 
long ago, The explanation of Nakkan, compare the word, nakkarittal,
nakkarappeTTi, ... in Tamil from a widespread Gharial name, Nakar
in East India goes a long way to explain Siva's name.
Cf. kArtikaa in Sanskrit, kArttikai in Tamil,
arattam in Tamil, ratana ( <aratana in Tamil, arattam/arakku 'red') in Rgveda's
First Shlokam). Similarly, nakkar/nakar 'Gharial'.

Looking forward to your mails on Crocodile names. I will write on
the Makara words, and how the crocodile-shaped Makara yAz,
how slowly Crocodile worship of Earliest Sangam Pandyas
who released Crocodile and Turtle shaped Punch Marked coins,
and Tirupparangundram Tamil Brahmi inscription, changes to
Shark (cuRaa) symbol for VaruNan in the late Sangam and Post-Sangam
times in this MinTamil thread,

Look at the beautiful Makara mount of Kaamadeva from 18th Century Ceylon
in Amsterdam Museum. Its connection earlier Makara crocodiles
is discussed for the first time, I believe.

N. Ganesan

 
iraama.ki.    

N. Ganesan

unread,
Jan 27, 2015, 7:56:27 AM1/27/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com

இவ்விழையில் இந்தியாவின் மூன்று முதலை இனங்கள் பற்றியும், அவற்றிற்கான தமிழ்ப் பெயர்கள் - சங்க இலக்கியம்
முதலை, இடங்கர், கராம் என புறநானூறு 37, மலைபடுகடாம், குறிஞ்சிப்பாட்டு என மூவகைச் சாதிகள் என்று
நச்சினார்க்கினியர் விளக்கியுள்ளார் - திராவிட மொழிப் பெயர்கள், அவற்றின் சிந்துநாகரீகம் தொட்டு சங்ககாலம் வரை
வழிபடப்பட்ட வரலாறு போன்றவை ஆய்விதழ்களில் கட்டுரைகளும், செம்மொழி மாநாடு (கோவை), 16-ஆம்
உலக சம்ஸ்கிருத மாநாடு (ஜூன் 2015) தாய்லாந்திலும் விரிவாகவும் ஆராய்ந்து வெளியிட உள்ளேன்.
முதலைகள் வழிபாடு முண்டா மொழிகள் இனத்தவரிடமோ, மத்ய ஆசிய மக்களிடமோ இல்லாத
தமிழ்/த்ராவிட ஜனங்களுக்கே உரித்தான சிந்துசமவெளிக் காலம் முதல் சங்க காலம் முடிய இருந்த வழிபாடு
ஆகும்.

மகரம் என்றால் முதலை என சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்னமே விளக்கிய அறிஞர்களுக்கு எம் நன்றி.
ஆனந்த குமாரசாமி, ...  முதலில் காம தேவனுக்கு வாகனம் ஆகிய விடங்கர் (> இடங்கர்) அழகான
சிற்பம் காண்போம். கிழக்கு இந்தியாவில் நகர் என்று அழைக்கப்படும் விடங்கர் எவ்வாறு வருணன்,
காமனுக்கு வாகனம் ஆகியது எனவும் பார்ப்போம்.

ஃழான் பிலியோசா அவர்கள் பாண்டிச்சேரியில்  பிரெஞ்சு நிறுவனம் ஆரம்பித்த காலத்தில்
சங்கத்தமிழ் இலக்கியச் சொல்லடைவு மூன்று பெரும் தொகுதிகளாக வெளியிட்டனர்.
அதனில் இடங்கர் (< விடங்கர்) சொல் முதலை இனங்களில் ஒன்றைக் குறிக்கும் எனத்
தொகுத்திருப்பதை அறியலாகும்.

முதலை, கராம், இடங்கர் என்றால் மூவகை முதலைச் சாதிகள் என்று தொல்காப்பிய
உரைகாரர் பேராசிரியர் புறநானூற்றுப் பாடல் 37-ஐ மேற்கோள் காட்டி பொருளதிகார 
வியாக்கியானஞ் செய்துள்ளதை ஏற்கெனவே கொடுத்துள்ளேன். புறநானூறு, பத்துப்பாட்டினில்
குறிஞ்சிப்பாட்டு, மலைபடுகடாம், மணிமேகலை, கல்லாடம், கம்பர் எல்லா நூலிலும்
இடங்கர் போன்ற மூன்று முதலை இனங்கள் குறிப்பிடுகின்றனர். பேராசிரியர் போலவே
உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க்கினியரும் சொல்லியுள்ளார். தமிழில்
மொதளை/முதளை என்றும் முதலை குறிப்பிடப்படுகிறது. -ச- > -த- மாற்றம் இஃது:
கன்னடத்தில் மொசளெ என்பது தமிழில் மொதளை/முதளை/மொதலை என்பவற்றுடன் ஒப்பிடலாம்.

சமண இலக்கியம் ஆகிய யசோதர காவியத்தில் இடங்கர் குறிக்கப்பட்டுள்ளது.
வீடூர் பூரணசந்திர நயினார் உரையில் விளக்கியுள்ளார்கள். அதனைப் பார்ப்போம்.

சுரேஷ் கொலிசாலா அவர்களுக்கு மொகளய் (மொகளை) என்ற தொல்-த்ராவிட (Proto-Dravdian)
வார்த்தை மொகர/மகரம் என சிந்து சமவெளியிலும், மொதளெ என கன்னடத்திலும்,
மொதளை/முதளை/முதலை எனத் தமிழிலும் ஆதற்கு, கொங்குச்சொல் - பெருமாள்
முருகன் அகராதியில் இருக்கும் - ஒன்றைக் காட்டினேன். 
இகல்- > எசலு (தெலுங்கில்), கொங்கில் எசிலி. இதுபோல், 
சிந்தில் மொகளை > மொசளெ (கன்னடம்) > முதளை/முதலை.

எசலு (தெலுங்கு) < இகல் (சங்கத் தமிழ்) (like mocaLe in Kannada < PD *mokaLay )
சுரேஷ் கொலிசாலத்துக்கு எழுதிய மடல்,

esalu 'melee' in Telugu and DEDR 413


413 Ta. ikal (ikalv-, ikaṉṟ-; ikali-)
413 Ta. ikal (ikalv-, ikaṉṟ-; ikali-) to disagree, hate, be inimical, compete; n. enmity, hatred, battle, war; ikalaṉ warrior, jackal; ikaliyār enemies; ikalōṉ enemy; ical (icali-) to be in disagreement with one another, wrangle; icali quarrelsome woman; iyal (iyalv-, iyaṉṟ-; iyali-) to compete, wager; n. rivalry, competition. Ma. ikaluka to hate, reject, vie, compete; ikal fight; iśal resistance. DED 353.

Here are some words that need to be added to DEDR 413. In Tanjore and Kongu dialects (Perumal Murukan's Kongu words' dictionary will have it), ikal
is used in Spoken Tamil as ecili (எசிலி - Kongu dialect) and ecalu (எசலு -Tanjore). 

எசிலி போடுதல் - ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக் கொள்ளுதல். எ.கா. அண்ணனும் தம்பியும் எசிலி போட்டுக்கிறாங்க.
அவருகிட்டப் பண்டம் பாடி வாங்கீட்டுப் போனா ஓலி வருமுன்னு சொல்லி ஏவாரிகள் எசிலி போட்டுட்டு எக்காத்தி வெச்சிட்டுப் பண்ணைக்காரரைக் கூட்டீட்டு வருவாங்களே!
எசிலி - பொறாமை,போட்டி

எசலு = காரணமில்லால் வம்பு இழுத்தல்.

In Telugu,
esalu - a melee dommiyuddhamu.

C. P. Brown's dictionary:
ఎసలు [ esalu ] esalu. [Tel.] Also, a melee దొమ్మియుద్ధము

I thought about these words, when thinking about Suresh's note about mosaLe 'crocodile' in Kannada, and with Kannada word, my suggestion for PD word is : *mokaL(ay) which transforms in later times Mokara/Makara > Mogara in Sind, MosaLe in Kannada, Mosale in Telugu, Motale/Mutalai in Tamil.

Like *mokaL- > mocaL- in Kannada, ikal- > ical- > ecal- in Telugu and Tamil.
Since ecal- < ikal exists both South and South-Central Dravidian, this must be very ancient change seen in DEDR 413.
i-/e- and u-/o- changes are common in Dravidian.

N. Ganesan


N. Ganesan

unread,
Jan 31, 2015, 11:57:38 AM1/31/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com, santhav...@googlegroups.com
இடங்கர் (= Gharial, http://en.wikipedia.org/wiki/Gharial) இந்தியாவில் உள்ள மூவகை முதலை இனங்களில் முக்கியமானது. 1976-ல் எண்ணிக்கை இருநூறுக்கும் குறைவாக ஆனதால், இயற்கை ஆர்வலர்களும், விலங்கியலாரும் பெருமுயற்சி எடுத்து அரசைத் தூண்டிக் காத்தனர். விடங்கு என்றால் ஆண்மை, காமக்குறிப்பு என்கின்றன பழைய நிகண்டுகளும், தமிழ் அகராதிகளும். விடங்கர் ஆண்மையை ரிஷிபத்தினிகளிடம் காட்டும் பிட்சாடனர் என்று பல இடங்களிலே தேவாரம் பாடுகிறது. ஆரண்ய விடங்கர் தேவதாரு எனப்படும் ஹிமாலய Cedar வனங்களிலே விடங்கு காட்டிய வரலாறு சிவபுராணத்தில் அடிப்படையானது. (http://en.wikipedia.org/wiki/Bhikshatana) திருக்கோவில்களிலே விடங்கர் என்றால் லிங்கம். பெட்டியில் மிகப் பாதுகாப்பாய் வைத்து வழிபடப்படுவது. சப்தவிடங்கத் தலங்களிலே விடங்கர் என்னும் இலிங்கம் சோமாஸ்கந்தமூர்த்தி அருகே இருக்கும். சிதம்பரத்திலே சந்திரமௌலீஸ்வர லிங்கம் தில்லை விடங்கர் என்று கல்வெட்டுக்களிலே குறிப்பிடப்படுகிறார். சங்க இலக்கியத்தில் புறநானூற்றிலும், மலைபடுகடாத்திலும், குறிஞ்சிப்பாட்டிலும் மற்ற இன முதலைகளோடு இடங்கர் குறிப்பிடப்பெறுதலை அறிவீர்கள். முதலையின் மூன்று வகைச் சாதி விசேடம் என்கிறார் நச்சினார்க்கினியர். அவர்க்கும் சில நூற்றாண்டுகள் முன்னரே பேராசிரியர் முதலையின் மூன்று இனங்களாய் கராம், இடங்கர், முதலை என்று பேராசிரியர் ஈரிடங்களில் தொல்காப்பியப் பொருளதிகார உரையில் விளக்கியுமிருக்கிறார். விடக்கு/இடக்கு, விடங்கர்/இடங்கர், ... போன்ற சொற்களை ஆராய்ந்து பார்த்தால் சங்க காலத்திலும், பின்னரும் இடங்கர் என்பதற்கு தொல்த்ராவிட (Proto-Dravidian) தாதுச்சொல் விடங்கர் என்பதைத் தெளிவாக உணரலாகும். விடங்கர்/இடங்கர் இந்தியாவின் நாற்பத்தைந்து நூற்றாண்டுச் சமய, கலை வரலாற்றை ஆய்வுக் கட்டுரைகளில் 2007-ல் தொடங்கி விரிவாக எழுதியுள்ளேன். புறம் 37 பற்றியும் அதில் உள்ள இந்தியாவின் மூவகை முதலை வகுப்புகள் பற்றியும் விரிவாக இணையத்தில் சிந்துசமவெளி விடங்கர்/இடங்கர் பற்றிய ஆய்வுகளில் குறிப்பிட்டுள்ளேன். பல ஆண்டுகளாய் ஆராய்ச்சி செய்ததில் மகரவிடங்கர் வழிபாடு (ஆங்கிலத்தில் cult என்ப) தான் சிந்து சமவெளி நாகரீகத்துடன் தமிழர்களும், சங்ககாலத் தமிழகமும் பிணைப்பது என்பதும் தெரிகிறது. விரிவான கட்டுரை இங்கே:

சங்ககாலப் பாண்டியர் நாணயங்களில் மகரவிடங்கர்

(ஓம்சக்தி கோவை 2013 தீபாவளி மலரில் அச்சானது. தவத்திரு. ஊரன் அடிகள் போன் போட்டுப் பாராட்டினார்கள்.)

குறிப்பு: புறநானூற்றுச் சுவடிகளில் இடம்கரும் என்று இல்லை. புறநானூற்றில் உள்ளது “இடங்கரும்” என்றுதான். 

புறம் 37 ன் வரிகள்  
கராஅம் கலித்த குண்டுகண் அகழி
இடங்கரும் குட்டத்து உடன்தொக்கு ஓடி
என்பதுதான்.

இன்று, சிரமண சமயங்களின் காப்பியங்களிலே இடங்கர் (< விடங்கர்) என்னும் கடியால் முதலை மீதான குறிப்புகளைக் காண்போம்.

(1) மணிமேகலையில் கச்சி மாநகர் புக்க காதை

செறித்து அரைப்போர் தம் செழு மனை நீரும் 
என்று இந் நீரே எங்கும் பாய்தலின் 
கன்றிய கராமும் இடங்கரும் மீன்களும் 
ஒன்றிய புலவு ஒழி உடம்பின ஆகி ......... 
                                (கச்சி மாநகர் புக்க காதை, மணிமேகலை)

கன்றிய கராமும் இடங்கரும் மீன்களும் ஒன்றிய புலவொழி உடம்பினவாகி-
பகைமையிற் றழும்பிய கராம் இடங்கர் என்ற முதலையினங்களும், மீன்களும் தம்மீது பொருந்திய புலால் நாற்றம் நீங்கிய உடலினையுடையவாகி. [உரைவேந்தர் ஔவை துரைசாமிப்பிள்ளை உரை]

(2) முதலை இனங்களை எந்த உயிரிக் குடும்பத்தில் சேர்த்துவது? அவை மீன் குடும்பமா? (நீர் வாழ்வன, முட்டை இடுவன)
அன்றேல், விலங்கினமா? (சிங்கம், புலி போல் தாக்கும் திறம் கொண்டவை. நிலத்துக்கும் வரும்.) 
Are reptiles (crocodiles, here) really fish?? Or, they are like mammals (vilangu)?? சூளாமணிக் காப்பியப் பாடலைக் காட்டிப்
பேசுகிறார் அடியார்க்கு நல்லார். அதையொட்டி நச்சரும்.

”நெய்தல்

28.கெண்டை யஞ்சினை மேய்ந்து கிளர்ந்துபோய்
முண்ட கத்துறை சேர்ந்த முதலைமா
வண்டல் வார்கரை மாமக ரக்குழாம்
கண்டு நின்று கனலுங் கழியெலாம்.

 

     (இ - ள்.) கழிஎலாம்-நீர்க்கழிகளில் எல்லாம்; கெண்டை அம்சினை  மேய்ந்து-கெண்டைமீன்களையும் அவற்றின் அழகிய முட்டைகளையுந் தின்று;  கிளர்ந்துபோய்-செருக்கிச் சென்று; முண்டகம் துறை சேர்ந்த முதலைமா-நீர்முள்ளி நிறைந்த நீர்த்துறையை அடைந்த முதலைகள்; வண்டல் வார்கரை-வண்டலையுடைய நீண்ட  கடற்கரையோரங்களிலுள்ள; மாமகரம் குழாம் கண்டு-பெரிய சுறாமீன்களின்  கூட்டத்தைப்பார்த்து; நின்று கனலும்-அஞ்சாது எதிர்த்து நின்று சினக்கும். (எ - று.)

     இது நெய்தல் நிலத்தன்மை. 'நெய்தற்கு மா சுறாவும் முதலையும்' என்றார் நக்கீரர். (இறையனார் களவியல் உரை) இதனை மறுத்து 'மா உமண்பகடு போல்வன. முதலையும் சுறாவும் மீனாதலின், மாவென்றல் மரபன்று' என்றனர் தொல்காப்பியப் பொருளதிகார உரையில் நச்சினார்க்கினியர். தேவர், மனிதர், விலங்கு, புள், ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என்னும் எழுவகைப் பிறப்பினுள், புள் முதலியவைகள்; தேவர், மக்கள், விலங்கு, நரகர் என்னும் நால்வகைக் கதிகளுள் விலங்கு அடங்குவதால் முதலையை மாஎன்றல் பொருந்தும் “சேர வொன்றை யொன்றுமுன் தொடர்ந்து சீறிடங்கர்மா“ என்றார் கம்பர். மா என்பதை வண்டல் வார்கரைக்கு அடையாக்கினும் அமையும். முண்டகம்-முள், தாமரை,  நீர்முள்ளி,கள், நெற்றி, தாழை முதலிய பொருள் குறிக்கும் ஒரு பெயர்த்திரிசொல்.”

”கெண்டை அம்சினை - கெண்டை மீன்களின் அழகிய முட்டைகளை. மேய்ந்து - தின்று. கிளர்ந்துபோய் - களித்துச்சென்று. முண்டகத்துறை - தாழை மலர்ந்துள்ள நீர்த்துறை. முண்டகம் - தாழை. கழிமுள்ளி கடல்முள்ளி என்றலும் ஆம். “மணிப்பூ முண்டகத்து மணன்மலி கானல்” (மதுரைக். 96): “வண்டுபட மலர்ந்த தண்ணறுங்கானல். முண்டகக் கோதை ஒண்டொடி மகளிர் (புறம். 24). 

முதலையை விலங்கென்றல்: மா- விலங்கு: “சேர வொன்றையொன்று முன்தொடர்ந்து சீறிடங்கர்மா” “இடங்கர்மாப் பொருத போரில்” (கம்ப. 6.4: 113). ‘நெய்தற்கு மா சுறாவும் முதலையும்” (இறைய.) அடியார்க்குநல்லார் விலங்கு என்பதை மறுப்பார்: ‘முதலையும் சுறாவும் மாவென்பார். “கெண்டை யஞ்சினை ... முதலைமா ... கனலும் கழியெலாம்” எனக் காட்டுவார் உளராயினும், ‘அவை மீனெனப்படுவ வல்லது மாவெனப் படா” (சிலப். பதிகம்.)” [...]

(3) சமண இலக்கியம் ஆகிய யசோதர காவியத்தில் இடங்கர் குறிக்கப்பட்டுள்ளது.
வீடூர் பூரணசந்திர நயினார் உரையில் விளக்கியுள்ளார்கள். உரைவேந்தர் ஔவை யசோதர காவியத்திற்கு எழுதிய உரை பிழைபட்டது என்று விளக்கி, வீடூர் நயினார் உரை வரைந்தார்.

”199.  சந்தி ரம்மதி நாய்கரு நாகமாய்
  வந்தி டங்கரு மாகிய வாடது
  நந்து பல்பொருள் நாடு கலிங்கத்து
  வந்து மாயிட மாகி வளர்ந்ததே.
(இ-ள்.) சந்திரமதி - --, நாய் கருநாகமாய் - நாயும் கரும்பாம்புமாகி, வந்து -    சிருப்பிரையாற்றில் வந்து, இடங்கரும் ஆகிய ஆடது - முதலையுமாகிய ஆடானது, பல் பொருள் நந்தும் நாடு - பல்வகைப் பொருள்களும் நிறைந்த நாடாகிய, கலிங்கத்து வந்து - கலிங்க தேசத்தில் வந்து, மாயிடம் ஆகி - எருமையாய்ப் பிறந்து, வளர்ந்தது - --,

சந்திரமதி, கலிங்க தேசத்தில் எருமையாய்ப் பிறந்தாளென்க.

சந்திரமதி, மீண்டும் மீண்டும்    பெண்பிறவியே பெற்றமை யறிக.  இடங்கர் - முதலை. மணிகள் முதலியனவும் நிறைதலால், ‘பல் பொருள் நந்தும்‘ என்றார்.  மயிடம் - மாயிடம் என நீண்டு நின்றது; விகாரம்.  இது, மஹிஷம் என்னும் வட சொல்லின் திரிபு.  சந்திரம்மதி, விரித்தல் விகாரம்.          (45)”

கன்னடத்திலே இடங்கர் முதலை எவ்வாறு குறிப்பிடப்படுகிறது? - எனத் தேடி அறிய வேண்டும். இடங்கர் (Gharial) முதலையை கன்னடிய அகராதிகள் குறிப்பிடுகின்றன. யசோதர காவியம் தமிழிற் போலவே கன்னடத்திலும் முதல்நூல்களில் ஒன்று. அதில் “இடங்கர்” பிறவி சந்திரமதி எடுப்பதைச் சொல்லுகையில் என்ன வார்த்தை என்று அறிந்தால் பயனளிக்கும்.

from Butcher Watsa, Kannada English dictionary

(b) http://books.google.com/books?id=E1C3dvguL3YC&pg=PA157&dq=long-nosed+crocodile+kannada&hl=en&ei=zHK9Tr-sJsrciQKQvc2kAw&sa=X&oi=book_result&ct=result&resnum=1&ved=0CC4Q6AEwAA#v=onepage&q=long-nosed&f=false
pg. 157, Kannada-English dictionary, F. Kittel.

Obviously, like Tamil literature, Kannada also knows gharials well enough & has a name for it.

மேலும் பார்ப்போம்,
நா. கணேசன்

N. Ganesan

unread,
Feb 5, 2015, 10:33:05 AM2/5/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com, santhav...@googlegroups.com
நண்பர் சுரேஷ் கொலிசாலா அவர்களுக்கு மிகப் பழைமையான தமிழ்நாட்டின் திருக்கோயில்களில் விடங்கர் என்றால் சிவபிரானின் லிங்கம் என்று விளக்கினேன். கொங்குநாட்டிலே பழைமையான திருக்கோயிலின் கருவறையின் லிங்கம் கொங்க விடங்கர் அல்லது கொங்க விடங்கீசுவரர் எனப்படுகிறது. பாண்டிநாட்டிலே பல கோயில்களில் கருவறையில் உள்ள சுவாமி லிங்கவடிவினர்: பெயர் - பிரளய விடங்கர். உலகமே பெரும் பிரளய காலத்தில் அழிந்துபடும்போது அழியாமல் இருந்த லிங்கம். உ-ம்: திருக் கானூரில் உள்ள பிரளய விடங்கர், இரமண மகரிஷி அவதாரஞ்செய்த திருச்சுழியில் உள்ள கருவறை லிங்கம் பிரளய விடங்கர் தான். மரபுக்கவிதை மரபை இளைய தலைமுறையினர் கற்கும் இடமாகிய சந்தவசந்தத்தை நடாத்தும் கவிமாமணி இலந்தை இராமசாமியார் கானூரின் விடங்கர் மேலான அழகிய பிரபந்தத்தை அங்கே படிக்கலாம். விடங்கர், நக்கர் என்பன சிந்து சமவெளியிலே கொற்றவை கணவரைச் சின்னமாகக் காட்டுகின்றன. இருக்கு வேதத்திலும், பின்னர் சங்ககாலத்தில் தமிழகத்தின் குடிமல்லத்தில் லிங்கமாக தாழம்பூ அணிந்த நெய்தல்திணைத் தெய்வம் வருணனாகவும் காட்டப்படுவன விடங்கர். தமிழகத்தின் முதல் பெருஞ்சிற்பம் - 10 அடி, 12 அடி உயரம், தமிழர்கள் உலகில் முதலில் கண்ட எஃகு உருக்கு உளியால் செய்த கற்சிலை மழுவாள் நெடியோன் மோட்டூரில், உடையாநத்தத்தில் (உடையார் = ஸ்வாமி என்று பின்னால் மொழிபெயர்ப்பு ஆகியது அறிவீர்கள்) விடங்கரை தரிசிக்கலாம். கிறிஸ்துவுக்கு முன்னர் 10 நூற்றாண்டுகளாக சங்க கால தமிழர் வழிபட்ட மகரவிடங்கர் பற்றி விரிவாக தமிழில் எழுதியுள்ளேன்: http://www.vallamai.com/?p=49442

விடங்கர் என்றால் லிங்கம், லிங்கத்தின் அருகே வைக்கப்படும் சோமாஸ்கந்தர் (Family portrait):
இன்றும் சிறப்பான antelopes (தமிழ்: மரை, மரைமா/மரைமான்) வாழும் மரைக்காட்டில் (மறைக்காடு என்றாகி வேதாரணியம் என்ற நாமகரணம் பின்னர் உண்டாயது) வழிபாடுபெறும் லிங்கம் விடங்கர் எனப்படுகிறது:
”அவன் அருளாலே அவன் தாள் வணங்கி நிற்கும் கடல் வேதநதி என்று வளங்கபெருவது, பச்சை மரகத லிங்கமாய் எம்பெருமான் விடங்கர் தினம் தேனிலும் பாலிலும் குளித்து பக்தர்க்கு அருள் வழங்குவது, எல்லா உயிர்களின் மொத்த அழகையும் தன்னுள்கொண்டு புன்னகை பூத்த இதழுடன் காட்சி கொடுக்கும் தென்முக துர்க்கை, யாழின் இசையை விட இனிய குரல் பெற்றதால் ‘யாழைப் பழித்த மொழியம்மை’ என்று தனியாக காட்சி அளிக்கும் அம்மன், அம்மனிடம் தோற்ற காரணத்தால் யாழ்/ வீணை இல்லாமல் காட்சியளிக்கும் சரஸ்வதி, ராவண வதம் முடிவுற்ற பிறகு மனப்பிநியுடன் இருந்த ராமனுக்கு மார்பில் உதைத்து ‘ஹத்தி’ தோஷத்தை நீங்க செய்த ‘வீர ஹத்தி விநாயகர்’ அருள் கொடுப்பது, அப்பர், திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் மூவராலும் பாடல் பெற்றது, ஆயிரம் வேலி நிலம் கொண்டது, வருடம் முழுவதுவும் திருவிழா கொண்டு, வருடம் முழுதும் நாண்கு வீதிகளிலும் தெய்வம் வலம் வருவது.. சன்னதியின் விளக்கழகு, இது அனைத்தும் யானறிந்த எங்கள் ஊர் கோவில் பற்றிய சிறப்புகள்.”

திருக் காறாயிலில் ஆதி விடங்கர்: கறுப்பு அகில் > காறாகில் > காறாயில்
”இவ்வாலயத்தில் உள்ள மரகத லிங்கம் பிரசித்தி பெற்றது. இதற்கும் ஆதி விடங்கர் என்றே பெயர். இந்த சிவலிங்க திருமேனிக்கு தினமும் காலையில் அபிஷேகம் நடைபெறுகிறது. ”

You can see the Chozha temple for Kongu Vidangar, an ancient shrine
under tree in bricks, converted in Chozha times to that of stone (சோழர்
காலத்தில் கற்றளியாக மாறிய கொங்க விடங்கர் திருக்கோயில்):

பாண்டி நாட்டுக் கானூர் விடங்கர் (லிங்கம்):
கானூர் இரட்டை மணிமாலை - தமிழின் சிறந்த பிரபந்தங்களுள் ஒன்று.
நூலை வாசிக்க,
சாரும் உளிகொண்டு தட்டாம லேமுளைத்த
சீரூடைய கானூர்ச் சிவலிங்கம் - பாரினிலே
ஈசனே நேரில் இறங்கிவந்து காக்கின்ற
நேசத்திற் கீதன்றோ நேர்!
                   - இலந்தை
கானூர் விடங்கர், விடங்கீசர் = கானூர்ச் சிவலிங்கம்.

ரமண மகரிஷியின் அவதார ஸ்தலம் திருச்சுழியில் விடங்கர்:
”இங்கே ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீபைரவர் ஆகியோர் தனிச்சந்நிதிகளில் காட்சி தர, பிரளய விடங்கர் எனும் பெயருடன் லிங்க மூர்த்தமாகக் காட்சி தருகிறார் சிவபெருமான். கோயிலின் ஸ்தல விருட்சம்- புன்னை மரம்.”

ஆரணீய விடங்கர் - சுந்தரர் பைஞ்ஞீலி விடங்கரைப் பாடுகிறார்:
தேவதாரு வனத்தின் பிட்சாடனரைப் (விடங்கரைப்) பார்த்து ரிஷ்பத்தினியர் மயங்கிக்
காதல் ஆன காட்சி வர்ணனை. 
அன்னம் சேர் வயல் சூழ் பைஞ்ஞீலியில் ஆரணீய விடங்கரை
மின்னும் நுண்இடை மங்கைமார்பலர் வேண்டிக் காதல் மொழிந்த சொல்
மன்னு தொல்புகழ் நாவலூரன்---வன்தொண்டன்---வாய்மொழி பாடல்பத்து
உன்னி இன்இசை பாடுவார், உமைகேள்வன் சேவடி சேர்வரே.
[[This decade was composed as the words of those ladies who fell in love with the fascinating beauty of Civaṉ when he went begging and were afraid of coming into contact with his form; this idea is mentioned by Cuntarar himself in the last verse]]
Vi. Mu. Subtramaniyaiyar, IFP, Pondichery.

நாகப்பட்டினத்தில் கோமேதக விடங்கர் சுந்தர விடங்கர் எனப்படுகிறார்,

திருநள்ளாற்றில் உள்ள விடங்கருக்கு நகவிடங்கர் எனப்பெயர். நகர்/நக்கர் என்பது
விடங்கர்/இடங்கர் என்னும் Gharial பெயர், நகர் (nakar) என்று கங்கைபாயும் மாகாணங்களில் அழைக்கப்படுவது. இன்றும் நள்ளாற்றிலே நகவிடங்கர் என்று நக்கபிரானின் லிங்கம் அழைக்கப்படுதல் பழமையான வரலாறு. 
விடங்கர்/இடங்கர் பெயரால் நக/நக்க விடங்கர்.

செந்தமிழ் லிஸ்ட்டில் சுரேஷுக்கு யான் எழுதிய மறுமொழி:
Suresh Kolichala in cTamil (Paris) list wrote:
>1. In Ganesan's entire paper, he has not referred 
>to the DEDR entry for viṭaṅkar and he hasn't attempted 
>to prove or disprove why the meaning of 'beauty' found 
>in various Dravidian languages under this entry is 
>incorrect. Since nakkar means nude, he asserts viṭaṅkar 
>must also indicate nudity.  Here is DEDR entry 5472: 

I am well aware of DEDR 5472. But note that ViTaGkar is a term used for special Lingam-s in Shiva temples. It comes from viTakku-viTaGku-./viTaittal. "to be erect" As male Lingam symbolism, viTaGkar gets its name, usually a theological explanation of vi-TaGga is given in Hindu discourses saying "DaGga" means chisel, and viTaGkar means the Linga, self-made and not the one made of chisels. I explained that this is just a folk way of explaining the Lingams' name as ViTaGkar and the meaning of viTakkar/iTakkar & viTaGkar/iTaGkar need to be looked into in  order to understand why Tamils call Lingam-s as viTaGkar.

See in Siva temples viTaGkar is the prized Lingam,
சப்த விடங்கத் தலங்கள் என்று சிவ பெருமானுக்கு ஏழு தலங்கள் உண்டு. உளி படாமல் அமைந்த சிவலிங்க திருமேனிகளை விடங்கர் என்பர். அப்படிஅமைந்த ஏழு தலங்களே சப்த லிடங்கத்தலங்கள்.
தியாக விடங்கர், அவனி விடங்கர், புவன விடங்கர் என்னும் அந்த வரிசையில் ஆதி விடங்க பெருமான் எழுந்தருளியுள்ள தலம். திருக்கார வாசல் தேவாரத்தில் இத்தலம் திருக்கார வாயில் என்று குறிப்பிடப்படுகிறது.
வெள்ளாற்றின் மேற்கரையில் அநமைசந்த ஆலயம் . இறைவன் பெரியர் கண்ணாயிர நாத கல்வெட்டுகளில் திருக்காறாயிரம் நாயனார் என்றும் இத்தலத்து இறைவன் பெயர் காணப்படுகிறது.

I don' t see how vi-DaGga "not chiseled" etymology is correct, I have heard it many times.
viTaGkar/iTaGkar (also, viTakku/viTaGku, iTakku, iTakkar) and the sexual imagery of Lingam are
intimately related, and points clearly to the original meaning of Lingam and the Tamil name
for crocodile and lingam, viTaGkar/iTaGkar. The crocodile cult and it originating the
Linga worship (first for VaruNa in Vedic and up to times of Gudimallam ViTaGkar),
and increasingly as Siva (e.g., Tevaram texts of Pallava period) can be studied further.

See below: Why Pandanus (Taazai) flowers are avoided for Siva
> Nowhere does she indicate that the term Viṭaṅkar has anything to do with Siva's nudity or his virile lingam.

Really?? In Tamil Nadu temples, you can see ViTaGkar referring to special Lingams held near Somaskanda
images, the family portrait of Siva. The Lingam-s nearby Somaskanda are made of Emerald, Garnet or Crystal etc., are
called specifically "ViTaGkar"(விடங்கர்). And, the ancient Lingam symbolism from the male virilty can be analyzed
looking at the meanings of viTaGkar/iTaGkar in Tamil. viTaGkar is formed from the the verb, viTaGu-, itself from viTai-ttal.
ERu (< ERu-tal), viTai- (viTai-ttal) are called kAraNap peyar in Tamil. viTai-ttal, viTaGkutal (cf. iNai- iNaGku-/iNakku pair)

See Rajeswari Ghose explaining the Lingam-s near Somaskanda being called viTaGkar in Chidambaram, Tiruvarur, etc.,
pg. 139
"The mid morning kAlaicanti has the ritual ablution (abhiseka) for all the lingas and offeings to the two main deities. At twelve o'clock the abhiseka is done to the marakata ViTaGkar (the emerald linga) in the Tyagaraja shrine. Offerings are made to the Tyararaja icon. It is interesting to see that no daily abhisekas are done for the Tyagaraja."

pg. 140
"The late evening "iraNTAGkAlam" ritual is also accompanied by
abhiSekas to the marakata linga (the emerald viTaGkar) and the last rite of the day ardhayAmam is when CokkanAtar is broght in a palanquin to the PaLLiyaRai (bed chamber) and after the UnjalATTU rite of swinging the icons the temple gates are closed for the night. Standard Agamic rites are followd in all the temples with minor variations."

On pg. 51, Rajeswari Ghose mentions the ViTaGkar of Chidambaram,
i.e., the Lingam of Tillai called Chandramauliisvara as "Tillai ViTaGkar". She says:
"though the Chidambaram candramaulisvara is made of crystal and it seems most likely that it is this, which is referred to as Tillai ViTankar in epigraphs."

viTai-ttal, viTai are purely Tamil words and not at all from RSabaha/vRSabha of Sanskrit. viTaikkOzi, ... 

Gudimallam Lingam, near Madras, is anthropomorphic & at this stage, it seems to refer to VaruNa. It has a parasu in his hand, and also Pandanus flower indicating Varuna's relationship as Neytal seaside landscape (tiNai) deity
mentioned in Tolkappiyam. Only in later period, Pallava, Lingam worship gets completely merged with Siva.
For example, in Tevaram texts. we see once (varuNa i.e., viTaGkar/iTaGkar crocodile god's) Lingam in the Chandesa
legend. A time of transition when the male virile Lingam as a symbol of varuNa changing to Siva. Note that Theerthankara's  PiNDi (Ashoka flowers), Parsvanatha's dheeksha tree flower (dhAtaki called Aar & Aatti), and VaruNa's tAzai (Pandanus) flowers are completely avoided on Siva's body (tirumEn2i) in Tevaram verses. A time when varuNa and his
viTaGkar/iTaGkar (ghaial snout shaped) Lingam is disassociated and Lingam gets assigned to Siva's worship in Pallava times.

I wrote: "It is a verbal noun from viṭai- 'to enlarge, to thicken, to stiffen up, to stand with pride’. "

N. Ganesan

N. Ganesan

unread,
Mar 8, 2015, 8:48:46 PM3/8/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, santhav...@googlegroups.com
Today I read this book published by University of Madras, 1935. A series of Lectures
by the then Director General, Archaeological Survey of India.

N. Ganesan

unread,
May 2, 2015, 6:34:10 PM5/2/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

You can read the crocodile and manmatha in 19th ceylon woodwork here,

On Saturday, May 2, 2015 at 3:15:49 PM UTC-7, தேமொழி wrote:

 

On Saturday, May 2, 2015 at 10:53:41 AM UTC-7, N. Ganesan wrote:
16th World Sanskrit Conference, Bangkok, Thailand, June 2015:

Indus Crocodile Religion as seen in the Iron Age Tamil Nadu

Abstract:  This article is about some aspects of Indian religion in the Post-Harappan period providing a link to the Indus Valley Civilization seen in its Bronze Age seals. The meaning of the anthropomorphic axes found in the Indo-Gangetic doab plains of the Second Millennium BC as a ritual symbol of a Makara (crocodile) godwill be presented. The characteristic fish sign pointing to the Dravidian language spoken by the elite Harappans has long been explored from the days of Fr. H. Heras, SJ. However, the importance of crocodiles in IVC culture is recently coming to light (A. Parpola, 2011). When this Crocodile cult disappears and gets forgotten in North India, it appears as large monolithic sculptures in the megalithic South. An interpretation of the Tamil Brahmi inscription at Tirupparaṅkuṉṟam, near the ancient Pandyan capital Madurai, discovered by History department, Pondicherry University will be offered as mentioning the crocodile god and his spouse. The Aśvamēdhā sacrifice on the banks of a Water Tank done for a crocodile as evidenced in Pāndyan Peruvaḻuti and Chera coins. Graffiti symbols from Sāṇūr and Sūlūr cāṇūr as linguistic sign for the crocodile deity, and the crocodile couple as seen in Adichanallur burial urn (500 BCE) along with the battle-axe bearing great god in Sangam poetry will be used to illustrate the prevalence of the crocodile based religion until the Early Sangam period. The first stone sculpture made in south India at such places as Mottur, Udaiyanatham, - monumental in size, over ten feet tall -, in the Iron Age will be linked to the earlier metallic Anthropomorphic Axes in the Yamuna-Gangetic doab, found in many Post-Harappan Ochre Colored Pottery sites of North India. The lecture will include etymology of Dravidian names such as ViTaGkar, Nakar, Ghaṛiāl, Makara, Karā for the three species of Indian crocodiles. Finally, an interpretation of Gudimallam VitaGkar (Lingam) as VaruNa, instead of earliest Siva Linga, is offered. In the subsequent periods like Pallava, development of Tantric Saivism includes the tantric term ViTaGkar applied more broadly for the forms of Siva like in the naked Bhiksatana episode, and Somaskanda.



வாழ்த்துகள்  ...உங்களுக்காக இரு படங்கள் இங்கே 

N. Ganesan

unread,
May 2, 2015, 6:35:36 PM5/2/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

You can read the crocodile and manmatha in 19th ceylon woodwork here,

On Saturday, May 2, 2015 at 3:15:49 PM UTC-7, தேமொழி wrote:


On Sat, May 2, 2015 at 3:15 PM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:

நன்றி. தெரிந்த 2 படங்கள் இவை.

யாமை என்பதிலிருந்து யமுனை (ஜம்நா என்பர் ஹிந்திக்காரர்) பெயர் பெற்றது
என்று எழுதியுள்ளேன்.

கங்கையின் படங்கள் போல, யமுனை யாமை மேல் நிற்கும் படங்களும்
தாருங்களேன்.

தேமொழி

unread,
May 2, 2015, 8:39:05 PM5/2/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
[1]
Gupta era terracotta of Ganga found at Ahichchhatra, UP now in National Museum, New Delhi.


[2]
elloracaves


[3]
Mul Chowk, Patan Durbar Square, Nepal 


மேற்கூறிய மூன்று  இடங்களிலும் முதலையுடன் கங்கையும், ஆமையுடன் யமுனையும் 
சேர்ந்து இணை சிற்பங்களாக உள்ளன.

***

அடுத்து கீழ் காணும் இருதளங்கள் கங்கை பற்றி விரிவாக கங்கை + முதலை சிற்பம் & படங்களும் தருகின்றன 


கங்காகுலம்-கவுண்டர்கள் (கொங்க வெள்ளாளர்) --- http://gangakulam.blogspot.com/

Ganga The River Goddess - Tales in Art and Mythology --- http://www.exoticindiaart.com/article/ganga/


தொடர்ந்து சில படங்களை அடுத்துப் பகிர்கிறேன் 

..... தேமொழி 

தேமொழி

unread,
May 2, 2015, 8:46:08 PM5/2/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


தேமொழி

unread,
May 2, 2015, 10:05:41 PM5/2/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
மேலும் சில படங்கள் ... கிடைத்த இடங்கள் படங்களிலேயே....

யமுனாவின் இரண்டு படங்கள் :

கங்கையின் இரண்டு படங்கள்:


மேலும்  தேடுவேன்...பிறகு....

Suba.T.

unread,
May 3, 2015, 3:21:04 AM5/3/15
to மின்தமிழ், Subashini Tremmel
அன்பு தேமொழி,

என் அன்பான வேண்டுகோள்.
இந்த இழையில் உள்ள எல்லா படங்கள் அவை பற்றிய தகவல்களை தொடர்ந்து ஒரு தனி கட்டுரையாக தொகுத்து வாருங்கள். நமது மின் தமிழ் மேடைக்கு அது உதவும். சீரிய ஆய்வ்ற்கும் அது நிச்சயம் உதவும்.

சுபா


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
Suba.T.
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Oru Arizonan

unread,
May 3, 2015, 3:34:36 AM5/3/15
to mintamil


இந்தச சிலையைப்போல மேலாடை உள்ள இரு சிலைகள் தில்லை கூத்தபிரான் கோவில் கிழக்கு நுழைவாயில் [ராஜகோ புரம் அல்ல] தூண்களில் செதுக்கப்பட்டு உள்ளன.  கோவில்களில் மேலாடை போர்த்திய பெண்கள் சிலைகள் -- எனக்குத் தெரிந்தவரை அவைதான்.  இச்சிலைகள் 7ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்றால், தில்லையில் உள்ள அவ்விரண்டு சிலைகள் மட்டும் அப்படி இருப்பானேன்?

என்னிடம் புகைப்படங்கள் இல்லை.  அச்சிளைகளைப் பற்றை யாரேனும் --  தில்லைக்கருகாமையில் உள்ளவர்கள் --  கண்டு ஆராய்ந்தால் நன்றா இருக்குமே!

ஒரு அரிசோனன் 
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Reply all
Reply to author
Forward
0 new messages