தமிழரின் வேக வளர்ச்சி

1 view
Skip to first unread message

Maravanpulavu K. Sachithananthan

unread,
Jul 27, 2009, 11:32:58 PM7/27/09
to mintamil
வணக்கம்.
குறில் மற்றும் நெடில் உகரங்களின் உயிர் மற்றும் உயிர்மெய் வடிவங்கள் காலந்தோறும் மாறிவந்துள்ளன.
இன்றைய வழக்கில் உள்ள குறில் மற்றும் நெடில் உகரங்களின் உயிர் மற்றும் உயிர்மெய் வடிவங்கள் வளர்ச்சியைப் பாதிக்கும் சுமையே.
மாற்றுவது இன்றிமையாதது. 
நாம் மாற்றறாவிட்டால் நம் வழிவருவோர் மாற்றுவர் என்பது திண்ணம்.
வரிவடிவ மாற்றம் தமிழின் சீரிளமைத் திறத்தைக் குறைக்காது.
இப்பொழுதே மாற்றுவது அறிவுசார்ந்தது. 
வளர்ர்ச்சி சார்ந்தது.
ஒகரக் குறில் மற்றும் நெடில் வரிவடிவங்குக்கு ஒலிக்குறி எழுவுத்தின் இருபக்கமும் வருவதும், 
ஔகார வரிவடிவத்தில் ளகரம் வருவதும் அத்தகையனவே.
அகர, இகர, உகர, எகர,  ஒகரக் குறிலும் நெடிலும் ஐகார, ஔகாரமும் உயிர்மெய்யாக வரிவடிவெடுக்கையில் ஒலிக்குறிகள் எழுத்துக்குப் பின் வருமாறு அமையும் தமிழ் நெடுங்கணக்குத் தமிழரின் வளர்ச்சிப் படி.
காலப்போக்கில் இவை அவ்வாறு அமையவுள்ளன. 
நம் தலைமுறையில் நாமே அத்திருப்பணியாளராய்த் தமிழரின் வேக வளர்ச்சிக்குத் துணை நிற்கலாமல்லவா?
நன்றி.

--
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
Maravanpulavu K. Sachithananthan
Reply all
Reply to author
Forward
0 new messages