வீயம் > பீஜம் (biija) "paddy = vriihi" : ஓர் சொல்லாராய்ச்சி

50 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jul 24, 2014, 11:19:53 PM7/24/14
to mint...@googlegroups.com, vallamai, tiruva...@googlegroups.com, housto...@googlegroups.com
vaDiki - Proto-Dravidian word for rice
-----------------------------------------
முதலில் அரிசிக்கு தொல்திராவிடமொழியில் என்ன பெயர் இருந்தது என்று ஆராய்வோம்.  நெல் என்ற சொல் முதிர்ந்த நெற்று என்பதன் வேர்ச்சொல். தேங்காய் நெற்று, ... தெலுங்கை மத்திய திராவிட  மொழி, கன்னடம், தமிழ் தென்திராவிட மொழிகள் என்பர். நெல்லம் பயிரின் முக்கியமான பண்பு அதன் கதிர்கள்  விளைந்து முற்றும்போது தலைசாய்ந்து வளைந்து இருப்பதாகும். 




எனவே, வளை- என்ற தாதுவேர் மூலமாக வட்- என்பது தெலுங்கு வட்டு (vaḍḍu) என்ற நெற்பெயரைப்  புரிந்துகொள்ளமுடிகிறது. vaḍḍu - தெலுங்கில் ஒருமை, வட்லு என்பது தெலுங்கில் பன்மை.
vaḍḍlu. [from Skt. వృహి. and plu. of వరి.] n. Paddy, rice in the husk, rice grain. 
వరిధాన్యము. శాలిధాన్యము. పిషాణపువడ్లు a fine sort of paddy.
நல்ல-வட்லு "black paddy"
பல நெல் வகைகள்:

If we reconstruct *vaDiki as the Proto-Dravidian word for rice plant, a unified reconstruction for many words for rice in all of Indian languages  emerges. Let us see how.  The common semantic clustering of -L-/-D-/-r- as the second syllable in words for rice can be seen quite easily. எடுத்துக்காட்டுகள்:
காளி/காரி, நாளணன்/நாடணன்/நாரணன் ‘black-hued Narayana',
ஆளத்தி/ஆலத்தி/ஆரத்தி, நாளம்/நாடி/நார், ஒடியா/ஒரியா, சுள்-/சுட்-/சுர்- (சுள்ளி/சுட்ட/சுருசுரு), குளம்பு/குரம், ...

From vaDiki > (v)ariki > arici In Kannada, vaDiki > (v)ariki > arki > akki (consonant assimilation)

DEDR 215 Ta. ari rice, paddy, ear of paddy; arici rice without husk, any husked grain. Ma. ari grain of rice freed from chaff, seed, grain; (Kauṭ.) arici rice. Ko. aky grain of any grain food when husked. To. ašky rice; nes̱išky id. (cf. s.v. 3753 Ta. nel). Ka. akki rice deprived of its husk, grain that resembles rice. Koḍ akki husked rice. Tu. ari rice freed from husk, any small grain; akki rice, corn (only in cpds.). Bel. (LSB 2.2) argi rice. ? Te. (B, K) arise a sweetmeat made of rice, flour, and jaggery. Cf. 3829 Ko. pace·k, To. po&cangle;išky. DED(S, N) 178.

vaDiki > variki 
DEDR 5265 Ta. vari paddy. Ma. vari a wild-growing rice with rough beards. Te. vari paddy. Pa. verci (usually in pl. vercil) id. Ga. (Oll.) varsil (pl.),  (S.) varcil (pl.) id.; (S.3) vars (pl. varcil) id.; vars pīru (rice) straw (see 4225). Go. (Tr.) wanjī rice, both growing and in the grain; (M.) vanjī  paddy; (L.) vanjī rice, seed; (SR.) venjī perek rice (pere id.; see 3982); (A. Mu. Ma. Ko.) vanji paddy (Voc. 3146). Cf. 5287 Ta. valci. DED 4306.

From DEDR 5265, when v- changes to m-, the result becomes:
DEDR 4639 Ga. (Oll.) mã̄jik rice; (S.3) manjig unhusked rice; (P.) noŋgre manjik broken pieces of rice after pounding (for noŋgre, see 3728). Konḍa (BB)  manzi (pl. -k) husked rice. Pe. manji id. (balance word of 3982 preyi). Kuwi  manji (F.) raw rice, (S.) rice without husk, (Su. P.; pl. -ŋa) husked rice, (Isr.) a grain of rice; (Isr.) manjiṅ husked rice. Kur. mãńjī seed in general. Cf. Go. wanjī, s.v. 5265 Ta. vari. DED(S) 3790.

vaDiki > varki > valci (Tamil)
DEDR 5287 Ta. valci paddy, husked rice, boiled rice, food. Ma. vaṟṟu grain of boiled rice from which the water is strained off. Te. vaḍlu unhusked rice, paddy. Kol. val (pl. valkul) grain of unhusked rice; val bi·am husked rice. Nk. val paddy. Nk. (Ch.) valku (pl.) paddy, rice. Cf. 5265 Ta. vari. DED(S)  4325.

In sum,
It was Dr. F Kittel (http://en.wikipedia.org/wiki/Ferdinand_Kittel, [1]) who first mentioned that Sanskrit word for rice vriihi is related to the Dravidian word, variki (1st edition of Kittel's Kannada-English dictionary, Mangalore 1893). And this can be slighltly extended:
 vriihi (with Dravidian fricative sound h for intervocalical -k- as in Meluhha) < *vaDiki/variki.

N. Ganesan

[1] on F. Kittel's work:

[2] 
F. Southworth, Rice in Dravidian,

[3] 

The Near-Eastern Roots of the Neolithic in South Asia

  • Kavita Gangal ma
  • Graeme R. Sarson,

  •  
  • Anvar Shukurov

  • Published: May 07, 2014
  • DOI: 10.1371/journal.pone.0095714


N. Ganesan

unread,
Jul 25, 2014, 10:03:14 PM7/25/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, tiruva...@googlegroups.com, housto...@googlegroups.com
Subject: rice in Dravidian

It has been proposed by F. Kittel in his 1893 Kannada dictionary that Drav. variki is related to Sanskrit, vriihi "rice". This Unified Theory by Kittel to link the word for rice in the two ancient language families of India is like the Unified Theories in Physics [1].

vaL-/vaD- "to bend down, to hang" is the root and the ripe paddy grains bend down in the field ready for harvest.
Telugu retains vaDlu (pl.) & corresponding vaDDu (sg.) for rice. So, from the PD root vaD-/vaL-(வட்-/வள்-), if we reconstruct *vaDiki as the Proto-Dravidian word for rice plant, a unified reconstruction for many words for rice in all of Indian languages  emerges. Let us see how.  The common semantic clustering of -L-/-D-/-r- as the second syllable in words for rice can be seen quite easily. For example,
kALi/kAri 'black', nALaNan/nADaNan/nAraNan ‘black-hued Narayana'(cf. NADagiri/nALagiri, elephant in Buddha legend and also in KonguveL's PeruGkatai, ALatti/Aratti/Alatti 'turmeric-lemon water to remove 'evil eye'', 'nALam/nADi/nAr 'vein, tube', oDisa/oriya,  சுள்-/சுட்-/சுர்- (சுள்ளி/சுட்ட/சுருசுரு 'heat'-related words), குளம்பு/குரம் 'hoof', ... Note that vaDiki is the pronunciation for vaTiki, as -T- will sound as -D- in Dravidian.

From *vaDiki > (v)ariki > arici (Tamil). In Kannada, vaDiki > (v)ariki > arki > akki (consonant assimilation).
This also works for the Sangam Tamil mword, valci < *vaLki < *vaDiki. All the DEDR entries are given in:

In sum,
It was Dr. F Kittel(http://en.wikipedia.org/wiki/Ferdinand_Kittel, [2]) who first mentioned that Sanskrit word for rice vriihi is related to the Dravidian word, variki (1st edition of Kittel's Kannada-English dictionary, Mangalore 1893). And this can be slightly extended:
 vriihi (with Dravidian fricative sound h for intervocalical -k- as in Meluhha) < *vaDiki/variki.

[1] Unified Theory developed by Physicists:

[2] on F. Kittel's work:

[3] F. Southworth, Rice in Dravidian,

[4] The Near-Eastern Roots of the Neolithic in South Asia
Kavita Gangal, Graeme R. Sarson, Anvar Shukurov
Published: May 07, 2014

N. Ganesan

unread,
Jul 29, 2014, 10:01:41 PM7/29/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, tiruva...@googlegroups.com, housto...@googlegroups.com
We just saw the basic word, arici (& vari, valci) in Tamil for rice is ultimately derivable from Proto-Dravidian *vaDiki. Telugu vaDDu (sg.), vaDlu  (pl.) seems to be the closest to PD word than south Dravidian words for rice in Kannada or classical Tamil. In 1893, Kittel proposed Drav. variki as the source for Sanskrit word vriihi, with -h- the ancient fricative sound of of -k- in  Tamil/Dravidian. Kittel's variki is obviously formed from vaDiki. vaD-  "to  bend down, drooping or hanging down". The -L-/-D- changing to -r- is in the place name of the port of saltpan city, Sopara recorded in Greek navigators. cuppu is "salt" in Dravidian and pronounced as suppu/soppu and -aLam is the saltpan where sea water is evaporated to make salt. -aLam > -ara in the coastal town name, Sopara < cuppu + aLam (http://en.wikipedia.org/wiki/Sopara). aLam > aram in Sopara of Greek naval records is like nALaNan > nAraNan "black god" later sanskritized as Narayana in MBh epic.

Note that words with the same semantics of plants carrying ripened paddy  grains bending down in the vast expanses of rice fields is used for the other  word for rice in  Tamil,  "வை”(vai) & "வயல்” (vayal) "paddy fields" etc., Let  us look at these Word formations more closely.

வீயம் > பீஜம் (biija) "paddy = vriihi" : ஓர் சொல்லாராய்ச்சி
------------------------------------------------------

Whenever a bunch of flowers in a plant hangs downwards, the word, vii (வீ, cf.  வீழ் “drooping down", like சீ:சீழ்) is used in Sangam texts. With vii "bending down", flowers are described for a wide variety of plants in all Sangam texts. Some samples:

(1) பல் வீ படரிய பசு நனை குரவம்
(2) ஐயவி அன்ன சிறு வீ ஞாழல் 
(3) சுடர் வீ வாகைக் கடி முதல் தடிந்த
(4) சிறு வீ முல்லைத் தேங்கமழ் பசுவீ 
(5) சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
(6) முட் கொம்பு ஈங்கைத் துய்த் தலைப் புது வீ
(7) விள்ளும் வீ உடைப் பானலும்
& so on.

வீ என்பது நெல்லம்பயிருக்குப் பெயராக, வீ பயிரின் கதிர்கள் முற்றி வளைந்திருப்பதே காரணம்.


வீ என்றால் தொங்கல், வீழ்தல். நெல்லம் பயிரில் நெல்மணிகள் முற்றும்போது தலைதாழ்ந்து (வீய்ந்த நிலையில்)  இருக்கும், வீ = drooping, hanging down. எனவே நெல்லரிசிக்கு வீயம் என்று பெயர், இது biijam என  வடக்கே திரிபாகியுள்ளது. கன்னடத்திலேயே வ ba ஆகும் (bayalu < vayal,
basava < vayavar ...). பீஜம் என சொல் தமிழின் வீயம் என்ற சொல்லின் திரிபு என்பர் வடமொழி நிபுணர்கள்.

DEDR 60 Ta. vīyam seed; rice. Ka. bīya rice when cleaned from the husk, food.  Te. biyyamu seeds or grains of Oryza sativa without husks, paddy deprived of  the husk, rice. Kol. bi · am (pl. bi · al) rice. / Turner, CDIAL, no. 9250, bīja- seed, H. bīā, bĭ̄yā, Mar. bī˜, bī; with change of meaning in the Dr. languages ('unhusked seed' > 'husked grain or rice'). DED 4485.

CDIAL
bīˊja 9250 bīˊja n. ʻ seed, semen ʼ RV., bījaka -- n. Suśr. Pa. bīja -- n. ʻ seed ʼ, °aka -- ʻ offspring ʼ; NiDoc. bijˊi, bhijˊa, bhiśa ʻ seed ʼ, Pk. bīa -- n., Ash. Wg. Kt. bī ʻ seed, grain ʼ (prob. ← Ind. NTS ii 247, xvii 236), Dm. bī ʻ grain ʼ; Paš. bī ʻ seed ʼ, Woṭ. bīˊu; Gaw. bīu ʻ a single grain ʼ; Kal.rumb. bī ʻ grain ʼ; Kho. bi ʻ seed, semen ʼ; Bshk. bī ʻ grain ʼ; Sh.gil. bi m. ʻ seed ʼ, koh. gur. bīh m., L. bī m., awāṇ. bī, pl. bī˜; P. bī m. ʻ seed ʼ, bī˜ m. ʻ seed, cutting of a plant ʼ; WPah.bhal. bī n. ʻ seed ʼ, cur. cam. bī, Ku. bĩyo, biyõ; N. biu ʻ seed ʼ, biyũ ʻ grain of rice remaining unhusked ʼ, pl. biyã̄ ʻ seeds of fruits other than corn ʼ; B. biā ʻ seed ʼ, Bi. bīyā, Mth. bĭ̄ā, Bhoj. bīyā, Aw. lakh. biā, H. bīā, bĭ̄yā m., G. bī, bīyũ n., M. bī˜ n., bī f., Ko. bī. bīˊjya -- , *baijya -- ; *bījakāla -- , *bījadhāna -- 1, *bījadhānya -- ,  *bījavāṭī -- , bījavāpa -- , *bījākara -- , *bījālaya -- , *bījāsa -- ; nirbīja  -- ; *āmlābīja -- , *karpāsabīja -- . bījakāla 9251 *bījakāla ʻ seed -- time ʼ. [bīˊja -- , kālá -- 2] L. biyāl f. (?) ʻ seed -- time, grain given by farmers to village artisans at  seed -- time ʼ. bījadhāna 9252 *bījadhāna1 ʻ seed -- corn ʼ. [bīˊja -- , dhānāˊ -- 1]
S. ḇīhaṇu m. ʻ seed ʼ; M. b(i)yāṇẽ n. ʻ seed for sowing ʼ. -- See *bījadhānya -- .

கோவைக்காயைக் கொவ்வைக்காய் என்பதுபோல, வீ என்னும் நெல்லுக்கான பெயர் வீயம் (தமிழ்),
viiyam (Tamil) are cognates with biiya (Kannada), biyyamu (Telugu) [DEDR 60].

 கொங்குநாட்டாராகிய திருத்தக்கதேவர் கம்பனுக்கு விருத்தத்திலேயே காவியம் பாடலாம் என்ற கருத்தைக் கொடுத்தவர்! பல ஆண்டு முன்னர் தேவர் பாடற்கருவில் தோசைக்கு ஒரு செய்யுள் வார்த்தேன்.

"சூலின் நிரையினால் சுடர்முடி பணிந்து
மேலின் நிலையவர் வாழ்நெறி விளக்கும்
சாலிப் பயிர்க்கதிர் சார்ந்தவெண் அரிசியை
மாலின் வண்ணமாம் மையார் உழுந்துடன்
பாலின் நிறம்போல் படிய அரைத்து
ஓர்நாள் நன்கு புளித்து 
வார்க்கத் தோசை வட்ட நிலாவே” 

ஆஸ்திரேலியப் பெண்மணி அதற்கு உரைவரைந்துள்ளார்:

*வடிகி, வீ, படி (Paddy) - நெல்லெனும் 3 தமிழ்ச் சொற்களுக்கும் கதிரின் எடையினால் வளையும் பயிர் என்று அர்த்தம். அக் கருத்தை மக்கள் வாழ்க்கைக்கு உவமையாக்குகிறார் தமிழில் விருத்தத்தால் அமைந்த முதல்  காப்பியத்தில் சிந்தாமணியுடையார்.

சொல்அரும் சூல்பசும் பாம்பின் தோற்றம் போல்,
மெல்லவே கருஇருந்து, ஈன்று, மேல்அலார்
செல்வமே போல், தலை நிறுவித், தேர்ந்த நூல்,
கல்வி சேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே!

தா:தை என்றால் பிதா, அதிலிருந்து கடவுள், அரசன் என்றெல்லாம் தமிழில் ஆகிறது. “தை” என்னும்  முறைப்பெயர் பற்றி அறிய சென்னைப் பல்கலை அகராதி, இளம்பூரணர் போல தொல்காப்பியம் முழுமைக்கும் உரையியற்றிய பாவலரேறு அவர்களின் காண்டிகையுரை காண்க. தா:தை போல, வீ:விய் எனவாகும். தெலுங்கில் விய்யம் (biyyamu) என்றால் நெல், அரிசி. வீ-/விய்- என்றால் வளைதல் என்ற வினைச்சொல். விற்றல்  தொழிலில் “வில்லுன்னா வில்லு, வில்லாட்டிப் போ” என்பதை “விய்யுன்னா விய், விய்யாட்டிப் போ” என்பதும்  தமிழ்நாட்டின் சிலபகுதிகளில் இருக்கிறது என பேரா. வாசு ரெங்கநாதன் சொன்னார். விய்- என்பதற்கு வில்-(விற்க) என இருப்பதாலோ என்னவோ,               விய் > வய்/வை என நெற்பயிருக்குப் பெயர் ஆகிவிட்டது. வய்+அல் = வயல் “Paddy field".வைக்கோல் - hay from paddy, வைப்போர் = வைக்கோற்போர் - hay stack. ”எரிமுன்னர் வைத்தூறு போல” (குறள்). தையும் மாசியும் வையகத்து உறங்கு (கொன்றைவேந்தன்). தை, மாசி மாதங்களில் பனிவருத்தம் தராத வைக்கோல் கூரைகொண்ட அகத்தில் -  வையகத்தில் - உறங்குக என்றார் ஔவையார். சீ என்னும் இகழ்ச்சிக்குறிப்பு “சை” என்றாவதுபோல், வீ வை  ஆனது எனினும் அமையும்.

இகரமுதல் அகரமாய்த் திரியும் சொற்களில் (1) திரை/திரங்கம் (< திரங்குதல்) - இதனின்றும் பிறக்கும் வடசொல்  “தரங்கம்” என்பர் வடமொழிப்பேராசிரியர்கள். உ-ம்: தரங்கம்பாடி (< திரங்கம்பாடி/தெரங்கம்பாடி). (2) நினைவு > நனவு. அதுபோல், (3) வீ:விய்  > வய்/வை என ஆகி வயல், வைக்கோல் போன்ற மிகுதியும் பயன்படும் சொற்கள் ஆகியுள்ளன.

இன்னொன்றும் இங்கே குறிப்பிடவேண்டும். Paddy என்னும் ஆங்கிலச் சொல் மலாயா, இந்தோனெசியா நாடுகளில் பெற்றது என்பர். மலையகம் மலாயா என்றும், கப்பல் என்ற சொல்லும், tin bronze நுட்பியலும் தமிழர் - தென்கீழ் ஆசியாவின் தொன்மையான உறவுகளைக் காட்டுகின்றன. அப்போது படி (cf. ஆசானுக்குக் கீழ்ப்படிதல் உள்ள மாணவன், ...) என்ற தமிழ்ச் சொல் (வடிகி/வரிசி, வீ/விய்/வை போலவே படிதல் என்றாலும் வளைதல் என்ற பொருள் இருக்கிறது அல்லவா?) மலாயாவுக்குச் சென்றிருக்கிறது. படி/பறை இரண்டும்  நெல்லின் அளவைக்கருவி. அதுவே, பறை என்னும் frame drum இசைக்கருவி ஆனதும் சங்க இலக்கியம் விளக்குகிறது.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jul 29, 2014, 10:27:43 PM7/29/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, tiruva...@googlegroups.com, housto...@googlegroups.com

கறியை Curry என்று எழுதுதல்போலே, பறை/படி - நெல்லளவைக்கருவியை - Paddy என்று எழுதுகிறார்கள்.
Reply all
Reply to author
Forward
0 new messages