வேளாங்கண்ணி மாதா கோயில் - ஒரு கிரித்தவ மோசடி

556 views
Skip to first unread message

Dev Raj

unread,
Oct 28, 2016, 6:54:18 AM10/28/16
to மின்தமிழ்
ஒரு கிரித்தவ மோசடி - வேளாங்கண்ணி மாதா கோயில் :

வேளாங்கண்ணி இப்போது மிகப் பிரபலமான கிரித்தவப் புனிதத் தலம் என்றே நிலைநிறுத்தப் பட்டுவிட்டது. ஆனால், இது எப்படிக் கிரித்தவத் தலமாகிறது என்பதற்கான அடிப்படையான சில கேள்விகள் அப்படியே தான் உள்ளன.

வேளாங்கண்ணியில் உள்ள மேரி மாதாவின் திருத்தோற்றங்களுக்கு (apparitions) எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை என்பது கிரித்தவர்களாலேயே ஒப்புக் கொள்ளப் படுகிறது.  இவ்வாறிருக்க, இந்த சர்ச் ‘கிழக்கின் லூர்து’ ஆனது எப்படி ?

பல அற்புதங்கள் நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் இவ்வழிபாட்டுத்தலத்துக்கு 1962 வரை பஸிலிகா அந்தஸ்து வழங்கப்படாததன் காரணம் என்ன ? அற்புதங்கள் முன்பே நடந்ததாகக் கூறப்படுகிறது. ஆயினும், ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் ஏன் பஸிலிகா அந்தஸ்துக் கிடக்கவில்லை ?

Holy see அங்கீகாரம் இல்லாமல்  இந்த சர்ச் பஸிலிகா ஆனது எப்படி ?

இந்த முரணுக்கு என்ன காரணம்?

ஏராளமான இந்தியக்  கிரித்தவர் குழுமிக் கும்பிடும் வேளாங்கண்ணி சர்ச் ஆலயத்தில் இதுவரை எந்தப் போப்பும் 
ஆரோக்கிய மாதாவை மண்டியிட்டு வணங்கியுள்ளதாகத் தெரியவில்லை. இதற்கு என்ன காரணம்?

வேளாங்கண்ணி முதலிலிருந்தே ஒரு கிரித்தவத் தலம் என்றே நம்மில் பெரும்பாலானோர் நம்பவைக்கப்பட்டுள்ளனர். 
நாம் நினைப்பதுபோல் இது கிறித்தவத் தலமன்று, சைவத் திருத்தலம். கட்டுரை ஆதாரங்களுடன் விளக்குகிறது.

இதன் ஆங்கில வடிவம் -

இதன் மூல வடிவம் -

இதற்கு மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பகிர்வுகள்; விரும்பியவர் எண்ணிக்கை 10,000க்கும் மேல்.

சைவத்தலங்களுக்குக் கேடு நேர்வது தொடர்கதையாகி விட்டது; அண்மைக்காலமாக ஈழத்திலும் இடையூறுகள்.
சீரழிவுகளைத் தடுக்கத் திரு சச்சிதானந்தன் அவர்கள் பெரு முயற்சி செய்து வருகிறார்.

’ஆழ்க தீயதெல்லாம், அரன் நாமமே 
 சூழ்க, வையம் துயர் தீர்கவே ! ‘

அன்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள் !!

தேவ்

velankanni-many-statues-unearthed

N. Ganesan

unread,
Oct 28, 2016, 9:18:47 AM10/28/16
to மின்தமிழ், vallamai

வேளாங்கண்ணியில் இச் சிலைகள் கிடைத்தபோது டாக்டர் ரா. நாகசாமியிடம் பேசினேன்.
வேள், வேளன் = முருகன். கண் என்பது இடம்/ஊர். வேளன் + கண் = வேளாங்கண்ணி.

புளியமரம் புளியாமரம் என்பதுபோல, வேளாங்கண் பேச்சில் வேளாங்கண்ணி.
அதற்கு ஏற்றாற்போல, கிடைத்துள்ள சோழர்காலச் சிலைகளில் உள்ளதிலேயே
பெரியதாக முருகன் நான்கு திருக்கரங்களுடன் இரு தேவிமாருடன் கிடைத்துள்ளதும்
குறிப்பிடத்தக்கது. முருகன் அரிய வில்லேந்திய வடிவமாகத் தெரிகிறது.
தாருகனை வில்லால் தாக்கினான் என்பது முருகன் சரிதம் என நினைவு.

தமிழ் இந்து கட்டுரையைப் படித்து இந்த வார இறுதியில் படித்துப் பார்க்கிறேன்,

Dev Raj

unread,
Oct 28, 2016, 2:10:52 PM10/28/16
to மின்தமிழ்
கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றி, ஐயா.
நெய்வேலிக்கருகில் ‘வில்லுடையான் பட்டு’ ஆலயத்தில்
வில்லேந்திய வேலவர் காட்சி தருகிறார்.
திருப்போரூரிலும் வில்லேந்திய வேலவரின் மூர்த்தம் உள்ளது

Image result for thiruporur murugan

‘எண்கண்’ எனும் தலம் ‘எண்கண்ணி’ எனத் திரிவு பெறவில்லை.
நாகப்பட்டினம் மாவட்டத்திலேயே ‘கருங்கண்ணி’ எனும் ஊரும்
அமையப் பெற்றுள்ளது. தேவாரப் பெயர்களுடன் ஒப்பிடும்போது ‘வேலன கண்ணி’
வேளாங்கண்ணி என மாற்றம் பெற்றுள்ளதாகவே தெரிகிறது.

தேவ்

Maravanpulavu K. Sachithananthan

unread,
Oct 28, 2016, 7:38:26 PM10/28/16
to மின்தமிழ்
கிறித்தவ மோசடி என்ற தலைப்பிட்டே இந்த இழைப் பதிவுகள் தொடர்கின்றன.

அன்பு அறம் அருள் பெருக்கும் முயற்சியில் ஓர் அமைப்பை உருவாக்கினோம் என மின் தமிழாருடன் பகிர்ந்தேன்.
2000 ஆண்டுகளுக்கு முந்தைய யாஅம் இரப்பவை வரிகளை நினைவுகூர்ந்து பதிந்தேன், பகிர்ந்தேன்.

இந்துத் தீவிரவாதமோ என ஐயுறுவதாக மட்டுறுத்தித் திருமதி சுபா குறிப்பு எழுதினார்கள், 
அன்பு அறம் அருள் போற்றும் பதிவுகளைத் தவிர்க்குமாறு எழுதினார்களோ என்று வியந்தேன்.

திருமதி சுபா அவர்களும் ஏனைய மட்டுறுத்துநர்களும் 
கிறித்தவ மோசடி என்ற சொல்லாட்சியில் அன்பு அறம் அருள் பெருக்குவதாகக் கருதுகிறார்களோ அறியேன்.
எஃதை இந்துத் தீவிரவாதம் எனக் கருதுகிறார்களோ அறியேன்.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 28, 2016, 10:02:38 PM10/28/16
to mintamil

வணக்கம்.
வேளாங்கண்ணி பெயர் விளக்கமும் திருஞானசம்பந்தரின் பாடல்வரி விளக்கங்களும் அருமை.
தீபாவளித் திருநாளில் நல்லதொரு பதிவு.
அன்னையின் திருவருள் நம் அனைவருக்கும் ஆகுக.

நல்லதொரு பதிவிற்கு நன்றி ஐயா.  தீபாவளி நல்வாழ்த்துகள்.

அன்பன்
கி.காளைராசன்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Oct 28, 2016, 10:19:02 PM10/28/16
to மின்தமிழ்
இழைப்பின் தலைப்பு குறித்து நானும் என் கண்டனங்களை ஆணித்தரமாகப்  பதிவு செய்கிறேன்.

காலப்போக்கில் இந்தியக் கோயில்கள் ஒரு சமயத்தில் இருந்து மற்றொரு சமயத்திற்குக் கைமாறிப் போனதும், போவதும் நாம் அறிந்ததே. 

ஆகவே,  பதிவின்  நோக்கம் பாப்ரி மஸ்ஜித் போல வன்முறை திசையில் நாட்டைத் திசை திருப்பாமல் செல்வதே நல்லது.

காலம் மாறியதை உணர்ந்து இன்றைய காலத்தின் நடைமுறைக்கு ஏற்ப நாம் வாழத் தேவை. வரலாற்றைப் பொறுத்தவரை நடந்தவை நடந்தவையாகவே மட்டுமே இருக்க வேண்டும்.  

உலக அளவிலோ, இந்திய அளவிலோ  எந்த ஒரு சமயமும் இதில் குற்றம் இழைக்காமல் இல்லை. 

இன்றும் சிவன் கோவில்களுக்கு அருக்கில் புத்தர்  சிலைகளைத் தோண்டி எடுத்த வண்ணம் இருக்கும் செய்திகளைப் படிக்கிறோம். 

கடந்தகால மக்கள் செய்த குற்றத்திற்கு இக்கால மக்கள் பதில் சொல்ல வழியில்லை. 
அதற்கான விளக்கம் தரும்  முயற்சியிலும் அவர்கள் ஈடுபடக்கூடாது. 
அவ்வாறு செய்வது பிரிவுகளிடையே  கசப்புணர்வை வளர்க்கும். 
ரலாற்றுப் பார்வையுடன் நிறுத்திக் கொள்வதே நல்லது. 

வேளாங்கண்ணி நகரின் வரலாற்றை அறிவதில்  திரு. தேவ்  அவர்கள் எடுக்கும் முயற்சி மிகவும்  பாராட்டத்தக்கது.

திரு தேவ் அவர்கள் இலக்கியம் மற்றும்  வரலாற்றுச் சான்றுகளை தொடர்ந்து சேகரித்து அவற்றை ஒரு நூலாக வெளியிட்டு தமிழகத்தின் சமய வரலாற்றைத் தெளிவுபடுத்தும் முயற்சியை எடுப்பதும்  வரவேற்கத் தக்கது.

..... தேமொழி 

Dev Raj

unread,
Oct 29, 2016, 2:37:56 AM10/29/16
to மின்தமிழ்
On Saturday, 29 October 2016 07:49:02 UTC+5:30, தேமொழி wrote:
இழைப்பின் தலைப்பு குறித்து நானும் என் கண்டனங்களை ஆணித்தரமாகப்  பதிவு செய்கிறேன்
 
இதில் ஆணித்தரக் கண்டனங்கள் எதற்கு ?
அடியேன் கொடுத்துள்ள ஆதாரங்கள் ஆணித்தரமாக அமைந்துள்ளதை
அறிஞர்கள் பாராட்டிய பட்டியல் உள்ளது. ஒரு கிரித்தவரே பாராட்டியுள்ளார்.
இதைக்கண்ணுற்ற கிரித்தவ அன்பர்கள் யாரும் மறுப்புத் தெரிவிக்கவில்லை
இதுகாறும். பிற தமிழ்க் குழுமங்களும் மறுப்புத் தெரிவிக்கவில்லை.
இங்கு மட்டும் ஏன் பொங்கி எழுகிறார், புரியவில்லை !

கீதையெனும் புரட்டு’ தலைப்பு மாறாமல் பலநாளாக, பல பதிவுகளாக ஓடியபோது
முற்போக்கு  நடுநிலையாளர் யாரும் மறுப்புத் தெரிவிக்கவில்லை; 
அதே போக்கை இத்தலைப்புக்கும் கடைப்பிடிப்பதே உண்மையான நடுநிலைப் போக்கு.

கீதையெனும் புரட்டு’ -

அன்புடன்
தேவ்

Dev Raj

unread,
Oct 29, 2016, 2:41:22 AM10/29/16
to மின்தமிழ்
On Saturday, 29 October 2016 07:49:02 UTC+5:30, தேமொழி wrote:
இன்றும் சிவன் கோவில்களுக்கு அருக்கில் புத்தர்  சிலைகளைத் தோண்டி எடுத்த வண்ணம் இருக்கும் செய்திகளைப் படிக்கிறோம். 

எங்கு எங்கு தோண்டி எடுத்துள்ளனர் ?
ஆதாரம் கொடுக்கவும்

தேவ் 

தேமொழி

unread,
Oct 29, 2016, 3:09:40 AM10/29/16
to மின்தமிழ்
அந்த இழையைத் துவக்கியதும் நானல்ல.

அந்த இழை துவக்கப்பட்ட காலத்தில் நான் குழுமத்திலும் வந்திருக்கவில்லை. நான் வந்தது நவம்பர் / டிசம்பர் 2012 இல்தான் 

மீண்டும் அந்த இழைக்கு நீங்கள்  உயிர் கொடுத்து ஒரு பழைய தகவலை இட்ட பொழுது, ஏன் இவ்வளவு பழைய செய்தி என்று மட்டும் கேட்டுள்ளேன். அமெரிக்க கல்வியில் பாடமாக வைக்கப்படும் பாடத்திட்ட  நடைமுறையை விளக்க முற்பட்டுள்ளேன். 
அதுவும் நான் இங்கு கல்வி கற்ற பட்டறிவு உண்டு என்ற அடிப்படையில், செய்தியின் பிழையை சரி செய்ய எடுத்த முயற்சி அது.

..... தேமொழி

தேமொழி

unread,
Oct 29, 2016, 3:12:24 AM10/29/16
to மின்தமிழ்
சிவப்புத்துணியால் மூடியிருக்கும் புத்தர் சிலை : வரலாற்று ஆர்வலர்கள் அதிருப்தி

குடவாசல் அருகே, கண்டிரமாணிக்கத்தில் கிடைத்த, கி.பி., 10, 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான, சோழர் கால புத்தர் சிலையை சிவப்புத்துணி போட்டு மூடி வைத்துள்ளதால், வரலாற்று ஆர்வலர்கள் அதிருப்தியடைந்துள்ளனர் . திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா கண்டிரமாணிக்கம் கிராமம், மேட்டுத்தெருவில் வசிப்பவர் மணிகண்டன். இவர், வீட்டுக்கொல்லைப் பகுதியில் கட்டுமானப் பணிக்காக, சமீபத்தில் அஸ்திவாரம் தோண்டியுள்ளார். பெரிய புத்தர் சிலை உள்ளே புதைந்திருப்பது தெரிந்தது. புத்தர் சிலையை மக்கள் பத்திரமாக மீட்டு, கொட்டகை அமைத்து, வழிபடத் துவங்கியுள்ளனர். பழமையான புத்தர் சிலை கிடைத்த தகவலறிந்தும், ஆய்வாளர்கள் குடவாயில் பாலசுப்பிரமணியன், தஞ்சை தமிழ் பல்கலை கண்காணிப்பாளர் ஜம்புலிங்கம் ஆகியோர், நேரில் சென்று ஆய்வு செய்தனர். அந்த சிலை, கி.பி., 10, 11ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனத் தெரியவந்தது. புத்தர் சிலை குறித்து, ஆய்வாளர்கள் குடவாயில் பாலசுப்பிரமணியன், தஞ்சை தமிழ் பல்கலை கண்காணிப்பாளர் ஜம்புலிங்கம் ஆகியோர் கூறியதாவது: குடவாசல் தாலுகா, கண்டிரமாணிக்கம் கிராமத்தில் கண்டெடுத்த புத்தர் சிலை, சோழர் காலத்தைச் சேர்ந்த சிற்பம். இது, கி.பி., 10, 11ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்த சிலை, இந்த கிராமத்திலிருந்த பவுத்த பள்ளியில் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டு இருந்திருக்கலாம். ஒருங்கிணைந்த தஞ்சை, திருச்சி, புதுகை மாவட்டங்களை உள்ளடக்கிய சோழ நாட்டில் காணப்படும், 66வது சிற்பம் இது. பிரமாண்ட புத்தர் சிலை, அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ளது. புத்தர் புன்னகை தவழும் இதழ்களுடன் காணப்படுகிறார். நெற்றியில் திலகக்குறி, நீண்டு வளர்ந்த காதுகள், பரந்த மார்பில் காணப்படும் மேலாடை, இடுப்பில் ஆடை ஆகியவை தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளது. வான் நோக்கியுள்ள வலதுகையில் தர்ம சக்கரக்குறி உள்ளது. சுருள்முடிக்கு மேல் தீச்சுடர் உள்ளது. இச்சிலையின், மூக்குப்பகுதி சிதைந்து இருப்பது, பிற்காலத்தில் ஏற்பட்டிருக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர். கண்டிரமாணிக்கம் கிராமத்தில் இருந்து வருவாய்த்துறையினரால், அவசர அவசரமாக எடுத்து செல்லப்பட்ட புத்தர் சிலை, திருவாரூர் தியாகராஜர் கோவிலிலுள்ள அருங்காட்சியக வாயிலில் வைக்கப்பட்டது. கோவில் வளாகத்தில் புத்தர் சிலையை வைக்க, கோவில் நிர்வாகத்தினர் எதிர்ப்பு காட்டியதால், புத்தர் சிலையை சிவப்பு துணியால் கட்டி மறைத்துள்ளனர். திருவாரூருக்கு இடம் பெயர்ந்த புத்தர் சிலையை, அருங்காட்சியகம் முன் சிவப்பு துணி போட்டு மூடி வைத்துள்ள கலெக்டர் நடராசனுக்கு, எழுத்தாளரும், பேராசிரியருமான மார்க்ஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ""சிவன் கோவில் வளாகத்தில், புத்தர் சிலையை சிவப்பு துணி போட்டு மூடி வைத்து, வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய முடியாமல், மாவட்ட நிர்வாகம் அவமதித்துள்ளது,'' என்றார். கண்டிரமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஞான ஒளி கூறுகையில், ""புத்தர் சிலையை மீட்டு, மீண்டும் கிராமத்திலேயே வைப்போம்,'' என்றார்.

மற்றொன்று இங்கு, http://temple.dinamalar.com/news_detail.php?id=40801
வெட்டி ஓட்ட இயலவில்லை.

தேவ் 

தேமொழி

unread,
Oct 29, 2016, 3:13:43 AM10/29/16
to மின்தமிழ்

On Saturday, October 29, 2016 at 12:12:24 AM UTC-7, தேமொழி wrote:

On Friday, October 28, 2016 at 11:41:22 PM UTC-7, Dev Raj wrote:
On Saturday, 29 October 2016 07:49:02 UTC+5:30, தேமொழி wrote:
இன்றும் சிவன் கோவில்களுக்கு அருக்கில் புத்தர்  சிலைகளைத் தோண்டி எடுத்த வண்ணம் இருக்கும் செய்திகளைப் படிக்கிறோம். 

எங்கு எங்கு தோண்டி எடுத்துள்ளனர் ?
ஆதாரம் கொடுக்கவும்

மன்னிக்கவும் எய்திக்கன  சுட்டியைக்  கொடுக்கத் தவறியுள்ளேன்  http://www.dinamalar.com/news_detail.asp?id=518376&Print=1

தேமொழி

unread,
Oct 29, 2016, 3:20:11 AM10/29/16
to மின்தமிழ்

On Friday, October 28, 2016 at 11:37:56 PM UTC-7, Dev Raj wrote:
On Saturday, 29 October 2016 07:49:02 UTC+5:30, தேமொழி wrote:
இழைப்பின் தலைப்பு குறித்து நானும் என் கண்டனங்களை ஆணித்தரமாகப்  பதிவு செய்கிறேன்
 
இதில் ஆணித்தரக் கண்டனங்கள் எதற்கு ?
அடியேன் கொடுத்துள்ள ஆதாரங்கள் ஆணித்தரமாக அமைந்துள்ளதை
அறிஞர்கள் பாராட்டிய பட்டியல் உள்ளது. ஒரு கிரித்தவரே பாராட்டியுள்ளார்.
இதைக்கண்ணுற்ற கிரித்தவ அன்பர்கள் யாரும் மறுப்புத் தெரிவிக்கவில்லை
இதுகாறும். பிற தமிழ்க் குழுமங்களும் மறுப்புத் தெரிவிக்கவில்லை.
இங்கு மட்டும் ஏன் பொங்கி எழுகிறார், புரியவில்லை !

நானும்தானே உங்களைப் பாராட்டியுள்ளேன் !!!

இறுதி வரிகளைப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் திரு. தேவ்.

..... தேமொழி
 
Dev Raj

unread,
Oct 29, 2016, 5:08:42 AM10/29/16
to மின்தமிழ்

On Saturday, 29 October 2016 12:39:40 UTC+5:30, தேமொழி wrote:
அந்த இழையைத் துவக்கியதும் நானல்ல.
அந்த இழை துவக்கப்பட்ட காலத்தில் நான் குழுமத்திலும் வந்திருக்கவில்லை. நான் வந்தது நவம்பர் / டிசம்பர் 2012 இல்தான் 

மீண்டும் அந்த இழைக்கு நீங்கள்  உயிர் கொடுத்து ஒரு பழைய தகவலை இட்ட பொழுது, ஏன் இவ்வளவு பழைய செய்தி என்று மட்டும் கேட்டுள்ளேன். அமெரிக்க கல்வியில் பாடமாக வைக்கப்படும் பாடத்திட்ட  நடைமுறையை விளக்க முற்பட்டுள்ளேன். அதுவும் நான் இங்கு கல்வி கற்ற பட்டறிவு உண்டு என்ற அடிப்படையில், செய்தியின் பிழையை சரி செய்ய எடுத்த முயற்சி அது.

ஒப்புக்கொண்டதற்கு நன்றி.
கருத்தைப் பகிர்ந்து கொண்டீர்,
ஆனால் தலைப்பைப் பார்க்கவில்லை, அப்படித்தானே ?
 
தேவ்

Dev Raj

unread,
Oct 29, 2016, 5:58:22 AM10/29/16
to மின்தமிழ்
On Saturday, 29 October 2016 07:49:02 UTC+5:30, தேமொழி wrote:
இன்றும் சிவன் கோவில்களுக்கு அருக்கில் புத்தர்  சிலைகளைத் தோண்டி எடுத்த வண்ணம் இருக்கும் செய்திகளைப் படிக்கிறோம். 

' ..... தோண்டி எடுத்த வண்ணம் இருக்கும் செய்திகளை...' 

ஏதோ தமிழகத்தில் எங்கு தோண்டினாலும் பத்தடி ஆழத்துக்குள்
பகவான் புத்தர் வெளிப்படுகிறாரோ எனும் பரவச உணர்வை
இத்தொடர் தோற்றுவிக்கிறது.அருந்தபுரம் புத்தர், கண்டரமாணிக்கம் 
புத்தர் இரண்டு மட்டும்தானா? அம்மையார் பதிவிட்ட வேகத்தில் 
ஏதோ ஆயிரம், இரண்டாயிரம் சான்றுகளை அள்ளி வழங்கப்போகின்றார் 
எனக் காத்திருந்தேன் :((

இவை இரண்டும் சிவாலய வளாகத்துக்குள் இருந்தனவா ?

தேவ் 

Dev Raj

unread,
Oct 29, 2016, 6:10:07 AM10/29/16
to மின்தமிழ்
சீர்காழிக்குக் கிழக்கே 13 கிமீ தொலைவில் அமைந்துள்ள கடல்தலம் -

தென்திருமுல்லைவாயில் :
சுவாமி : முல்லைவன நாதர்
அம்மை : கோதையம்மை

சினைமல்கு புன்னை திகழ்வாச நாறு திருமுல்லை வாயி லிதுவே !
                                                                      - சம்பந்தர் தேவாரம்

இக்குறிப்பு திரு. நு த லோகசுந்தரம் அவர்கள் கொடுத்துதவியது;
அவருக்கு நன்றி. இதை முகநூல் பதிவில் இணைத்துளேன் -

தேவ்

Suba

unread,
Oct 29, 2016, 6:13:29 AM10/29/16
to மின்தமிழ், Subashini Kanagasundaram
2016-10-29 1:38 GMT+02:00 Maravanpulavu K. Sachithananthan <tami...@gmail.com>:
கிறித்தவ மோசடி என்ற தலைப்பிட்டே இந்த இழைப் பதிவுகள் தொடர்கின்றன.

அன்பு அறம் அருள் பெருக்கும் முயற்சியில் ஓர் அமைப்பை உருவாக்கினோம் என மின் தமிழாருடன் பகிர்ந்தேன்.
2000 ஆண்டுகளுக்கு முந்தைய யாஅம் இரப்பவை வரிகளை நினைவுகூர்ந்து பதிந்தேன், பகிர்ந்தேன்.

இந்துத் தீவிரவாதமோ என ஐயுறுவதாக மட்டுறுத்தித் திருமதி சுபா குறிப்பு எழுதினார்கள், 
அன்பு அறம் அருள் போற்றும் பதிவுகளைத் தவிர்க்குமாறு எழுதினார்களோ என்று வியந்தேன்.

​வணக்கம் திரு.மறவன்புலவு சச்சிதானந்தம் ஐயா.
தங்களின் கீண்ட கால பொதுச்சேவையை  நான் அறிவேன். தங்களது தேவார மொழி பெயர்பு முயற்சிகளைப் பெரிதும் வரவேற்று அது பற்றி உலகளாவிய அளவில் தகவல் பரிமாற்றமும் செய்துள்ளேன்.
ஆயினும் அண்மைய தங்களது இலங்கையில் சிவசேனை என்ற முயற்சிகள் மின் தமிழில் பிரச்சாரம் செய்யப்படுவதை நான் தவிர்க்க வேண்டியது என் நிலைப்பாடு என்பதை வலியுறுத்த வேண்டியுள்ளது. சிவசேனையைப் பற்றி விரிவாகப்பேச நான் இங்கே விரும்பவில்லை. அதற்குப் பல ஏனைய தளங்கள் உள்ளன. 
தங்களிடம் கேட்டுக் கொண்டதற்கினங்க தாங்கள் இங்கு தொடர்ந்து அந்த  முயற்சிகள் பற்றிய தகவல்களைப் பகிராமல் இருந்தமைக்கும் ஒத்துழைப்பு நல்கியமைக்கும் எனது நன்றி.
ஆயினும் அதனை அன்பு அறம் என்ற சொற்களுக்குள் வைத்துப் பார்க்க இயலாது என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

திருமதி சுபா அவர்களும் ஏனைய மட்டுறுத்துநர்களும் 
கிறித்தவ மோசடி என்ற சொல்லாட்சியில் அன்பு அறம் அருள் பெருக்குவதாகக் கருதுகிறார்களோ அறியேன்.

​நிச்சயமாக இல்லை.
திரு.தேவ் நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் இங்கே பதிவுகள் பதிய ஆரம்பித்துள்ளார் . இடைவெளிக்குப்பின் வரும் முதல் பதிவே வேறொரு மதத்தின்பால் குற்றம் சாட்டும் தொணியில் உள்ளது. இது என் கவனத்தையும் ஏனையோர் கவனத்தையும் ஒரு சேர ஈர்க்கும் என்ற சிந்தனையில் பதிந்திருக்கின்றார்.
மிகுந்த அனுபவம் கொண்ட, தமிழ் சமஸ்கிருதம் என்ற மொழிப்புலமையும் கொண்ட, நீண்ட காலம் தமிழ் மரபு அறக்கட்டளையில் இணைந்து நமது செயல்பாடுகளை அறிந்த திரு.தேவ் அவர்கள் இத்தகைய தலைப்பில் ஒரு பதிவினை பகிர்வது திகைக்க வைக்கின்றது.

சமய நல்லிணக்கத்தை இவ்வகை சொல்லாடல்கள் வளர்க்காது
சமய பிணக்கத்தைத் தான் வளக்கும்
இதனை திரு.தேவ் நன்கறிவார்.

ஒரு மதத்தை அழிக்க அதன் வழிபாட்டு சின்னங்களை சீரழித்த சம்பவங்கள் உலகம் முழுவதும் நிகழ்ந்துள்ளன.
​தமிழகத்திலும் அதற்குத் தக்கச் சான்றாக சில தொடர்ந்து அடையாளம் காணப்பட்டு வருகின்றன.
அப்படி அடையாளம் காணும் போது அதனை செய்தியாகப் பகிரலாமே தவிர
இந்துக்கள் செய்த மோசடி
கிறித்துவர் செய்த மோசடி
யூதர் செய்த மோசடி
இஸ்லாமியர் செய்த மோசடி 
.. என சொல்லமுடியாது. அது வரலாற்றுப் பார்வையும் அல்ல!

அரசும் அதிகாரமும் எப்பக்கம் இருக்கின்றதோ அப்பக்கம் குரல் ஓங்கி நிற்பதும் அரசு சார்ந்த மதம் போற்றப்படுவதும் எதிரான மதங்கள்சிறப்பு இழக்கச் செய்வதும் உலகம் முழுவதும் நடப்பவைதான்.

இத்தகைய தலைப்புக்களை திரு.தேவ் அவர்கள் வரும் பதிவுகளில் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

சுபா

 ​
 
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Visit THF pages and blogs
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
nkantan r

unread,
Oct 29, 2016, 6:31:20 AM10/29/16
to மின்தமிழ்
1) i dont feel offended by the topic title (moderators need to have control to censor or modify; but i normally dont want any changes); it simply reflects succinctly the attitude, intent and the the tone of the article and probably reflects the mind of the writer. so moderators can change the topic, but certainly cannot moderate the mood, mind and the human level of the writer; why clothe such an attitude in gentler words?

2) religions, per se, as philiosophy for educated are good to read and learn; by practice, preaching and rituals by laymen are destructive; make fools of learned; barbarians of wealthy and shows weak as kind and generous.

3) i also read the attached weblinks; (as in many tamil historic references, it quotes old poems and liberally links it to the town velankanni;  ) i also wanted to know where actually the statues were unearthed; what was the date of the statues and the surrounding soil ( i am sure people understand the difference); i can put a  500 year old statue in my house and after 500 years the statue will be 1000 years old but the surrounding soil will be 500 years old!) (இப்பகுதியில் புதையுண்ட தெய்வச் சிலைகளும் ஐம்பொன் தெய்வத் திருமேனிகளும் மிகுந்த அளவில் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப் பட்டுள்ளன.)  where exactly is the area and location mentioned in இப்பகுதி?

if we dig in any place in tamil nadu covering a suitable acreage, we can always find relics from sanga kaalam to 20th century! 

4) now coming the destruction and conversion, portugese who came here are not 20th century guys; they were from the world which thought christianity is the sole real religion and foolishly believed that they were right in destroying,and rebuilding worship places to their denomination;  (where went the valour of mara thamizhar to stand up to them?) so whoever were powerful, they decided how it is to be !
(and we are now correcting them? after destroying babar masjid we want to reclaim velankanni???)

as vadivelu said,. போங்கப்பா; போய் பசங்களை படிக்க வைக்கற வழியே பாருங்க

regards
rnkantan

Dev Raj

unread,
Oct 29, 2016, 6:31:51 AM10/29/16
to மின்தமிழ்

’மோசடி’, ‘புரட்டு’ இரண்டுக்கும் என்ன வேறுபாடு ?
மொழியியல், வேரியல் வல்லுநர் பலர் நிறைந்த அவை இது. அவர்கள் தெளிவு படுத்த வேண்டும். 

வேண்டுமானால் ‘கீதையெனும் புரட்டு’ இழை விவாத அலைகளுடன் கரை புரண்டு ஓடியதுபோல்
கிரித்தவப் புரட்டு’ எனத் தலைப்பை மாற்றித் தொடர அனுமதி கிடைத்தாலும்  மறுக்கப்போவதில்லை, 
இன்னும் சில பல செய்திகளைச் சொல்ல வேண்டியுள்ளது.

ஒரு சமயத்தைச் சார்ந்த - உலகம் போற்றும் நூல் ஒன்றினை எடுத்த எடுப்பில் ‘புரட்டு
எனச் சொல்வது எந்த அளவு இணக்கத்தை வளர்க்கும் ? இதில் குற்றம் சாட்டும் த்வனி தென்படவில்லையா ?

மென்மையான மொழிகூறி மட்டுறுத்தும் குழுத்தலைவி அவர்கள் இதற்கும் மறுமொழி கூற வேண்டும்

அன்புடன்,
தேவ்

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Suba

unread,
Oct 29, 2016, 6:49:35 AM10/29/16
to மின்தமிழ், Subashini Kanagasundaram
2016-10-29 12:31 GMT+02:00 Dev Raj <rde...@gmail.com>:

’மோசடி’, ‘புரட்டு’ இரண்டுக்கும் என்ன வேறுபாடு ?
மொழியியல், வேரியல் வல்லுநர் பலர் நிறைந்த அவை இது. அவர்கள் தெளிவு படுத்த வேண்டும். 

வேண்டுமானால் ‘கீதையெனும் புரட்டு’ இழை விவாத அலைகளுடன் கரை புரண்டு ஓடியதுபோல்
கிரித்தவப் புரட்டு’ எனத் தலைப்பை மாற்றித் தொடர அனுமதி கிடைத்தாலும்  மறுக்கப்போவதில்லை, 
இன்னும் சில பல செய்திகளைச் சொல்ல வேண்டியுள்ளது.

ஒரு சமயத்தைச் சார்ந்த - உலகம் போற்றும் நூல் ஒன்றினை எடுத்த எடுப்பில் ‘புரட்டு
எனச் சொல்வது எந்த அளவு இணக்கத்தை வளர்க்கும் ? இதில் குற்றம் சாட்டும் த்வனி தென்படவில்லையா ?

மென்மையான மொழிகூறி மட்டுறுத்தும் குழுத்தலைவி அவர்கள் இதற்கும் மறுமொழி கூற வேண்டும்

​இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் திரு.தேவ்.

ஒரு இடத்தில் தவறு நடந்தால் அதே தவறை மறு முறை நாமும் செய்வோம்  எனச் சொல்வது என்ன நன்மையை அளிக்கும் என நாம் யோசிக்கலாம்?
என்னைப் பொறுத்தவரை 

“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் 
நாண நன்னயம் செய்துவிடல்”

என்ற நிலைப்பாடு நன்மை பயக்கும்.

தங்களைப் போன்ற வயதிலும் அனுபவத்திலும் மூத்தோர் இத்தகைய வழி முறைகளை இலையோருக்கும் காட்டினால் ஏனையோரும் நலமே பின்பற்றி அறிந்து கொள்ள அது உதவும்.

சுபா

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Dev Raj

unread,
Oct 29, 2016, 8:08:32 AM10/29/16
to மின்தமிழ்
On Saturday, 29 October 2016 16:19:35 UTC+5:30, Suba.T. wrote:
“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் 
நாண நன்னயம் செய்துவிடல்”
என்ற நிலைப்பாடு நன்மை பயக்கும்.

தாங்கள் மிகவும் மதிப்பளித்துப் பேசுவதால்
இதைச் சொல்கிறேன்.

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் 
கோடாமை சான்றோர்க் கணி
எனும் குறட்பாவும் உள்ளது. குழு மட்டுறுத்துநர் அனைவரும் பின்பற்றத்தக்கது.

இரட்டை டம்ளர் முறை எத்தனை இழிவானதோ அத்தனை இழிந்தது
‘இரட்டை அளவுகோல் முறை’.இதைக் கைவிட்டால் தேவையற்ற 
விவாதங்களுக்கு இடமிருக்காது; நம் நேரமும் வீணாகாது.

’வேளாங்கண்ணி மாதா கோயில் - ஒரு கிரித்தவ மோசடி’ இதைத் தடைசெய்வதில்
காட்டும் பரபரப்பை, வேகத்தை ‘ராமாயணமா , கீமாயணமா ?’ ‘கீதையெனும் புரட்டு’
தலைப்புகளிலும் நீங்கள் காட்டியிருந்தால் உங்கள் அறிவுரைகளில் பொருள்
இருக்கும். இல்லையென்றால் உங்களது ஒருதலைச்சார்பான நிலைப்பாடு உறுதிப்படும்

தேவ் 

Dev Raj

unread,
Oct 29, 2016, 10:43:19 AM10/29/16
to மின்தமிழ்
On Saturday, 29 October 2016 05:08:26 UTC+5:30, Maravanpulavu K. Sachithananthan wrote:
அன்பு அறம் அருள் பெருக்கும் முயற்சியில் ஓர் அமைப்பை உருவாக்கினோம் என மின் தமிழாருடன் பகிர்ந்தேன்.
2000 ஆண்டுகளுக்கு முந்தைய யாஅம் இரப்பவை வரிகளை நினைவுகூர்ந்து பதிந்தேன், பகிர்ந்தேன்.
இந்துத் தீவிரவாதமோ என ஐயுறுவதாக மட்டுறுத்தித் திருமதி சுபா குறிப்பு எழுதினார்கள், 
அன்பு அறம் அருள் போற்றும் பதிவுகளைத் தவிர்க்குமாறு எழுதினார்களோ என்று வியந்தேன்.

தல மீட்பு,  சிதைந்த ஆலயங்களின் மீட்டுருவாக்கம்,  சிதைவுத் தடுப்பு, அரிய நூல் - கலைப்படைப்புகளை காட்சிப்படுத்துதல், இணையமேற்றுதல் இவை பண்பாட்டுப் பாதுகாப்பு முயற்சிகள்; இவற்றை இந்துத் தீவிரவாதம் என்று கொச்சைப் படுத்துவது தவறான போக்கு.

காழிப்பிள்ளையார் வருகை புரிந்து மீட்காமல் இருந்தால் இன்று நாம் காணும் உலகப்புகழ் படைத்த மீநாக்ஷி அம்மன் கோயில் இல்லை.
சமணர்களால் மறைக்கப்பட்ட பழையாறை வடதளி,   அப்பர் சுவாமிகள் உண்ணாநோன்பிருந்தபின்  வெளி உலகுகாணத் தெரிய வந்ததும் வரலாறுதான். இந்நிகழ்ச்சிகளை இந்துத் தீவிரவாதம் எனச் சொல்ல முடியாது.

மிகத் தீவிரமாகப்  பல இடையூறுகளை எதிர்கொண்டு திருமிகு சுபா அம்மையார் பழங்கோயில்களுக்குச் சென்று விடாப்பிடியாக வரலாற்றை விழியப் பகிர்வுகளாக மாற்றி வெளிக்கொணர்வதும் மிகச் சிறந்த பணியே. இதையும் இந்துத் தீவிரவாதம் எனச் சொல்ல முடியாது.

எல்லாமே அன்பு அறம் அருள் பெருக்கும் முயற்சிகள்தாம்.

மறவன்புலவு ஐயா அவர்கள் இணையக் குழுக்கள் அனைத்திலும் தம் முயற்சிகளைத் தொடர்ந்து தெரிவித்து வரவேண்டும் என்று தாழ்மையுடன் கோருகிறேன்

nkantan r

unread,
Oct 29, 2016, 12:09:35 PM10/29/16
to மின்தமிழ்
sir
1) i went through links regarding maduari amman kovil including tamilwiki https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D

i could not get direct link for காழி பிள்ளையார் மதுரையம்மன் கோயில் மீட்டது ; 
do give more details on this so that we can be informed on this

2) i dont mind digging and recovering statues and putting it in a museum in or near the velankanni temple  ( i dont think christians should oppose that) once it is proved that an existing temple had been demolished to build the basilica. put a plaques giving the history (about the extant temple, how it is was destroyed and how new basilica was built)., that will show the history as happened.

3) if we consider that portugese were barbarians to destroy an existing temple to build a new basilica (what else to expect in 16th-17th century), it is anachronistic to recover the old temple ( you have to destroy the basilica for that, right? ) are we that enlightened?

regards
rnkantan

N. Ganesan

unread,
Oct 29, 2016, 12:28:42 PM10/29/16
to மின்தமிழ்

On Saturday, October 29, 2016 at 9:09:35 AM UTC-7, nkantan r wrote:

I agree. In India, it will lead to endless conflicts between 3 major religions two from Middle East and one native. All the three religions are dated, and we want more food, infrastructure, Science and Technology, and preservation and fostering
of Environment, Bioreserves ... Monitoring funds from outside India for religious conversions will help. 

N. Ganesan

Dev Raj

unread,
Oct 29, 2016, 12:28:44 PM10/29/16
to மின்தமிழ்
On Saturday, 29 October 2016 21:39:35 UTC+5:30, nkantan r wrote:
3) if we consider that portugese were barbarians to destroy an existing temple to build a new basilica (what else to expect in 16th-17th century), it is anachronistic to recover the old temple ( you have to destroy the basilica for that, right? ) are we that enlightened?

கட்டுரை முழுவதும் நன்றாகப் படித்தபின் வினாத்தொடுப்பீராக

தேவ் 
Message has been deleted

Dev Raj

unread,
Oct 29, 2016, 2:53:07 PM10/29/16
to மின்தமிழ்
கணேசர் ஐயா அன்று எழுதியது -
On Thursday, 13 October 2016 20:11:32 UTC+5:30, N. Ganesan wrote:

> பௌத்தத்தின் சங்கம் என்ற பெயரில் செய்யும் அட்டூழியங்களை அன்றே கண்டித்தவர் திருவள்ளுவர்.
> இவ்விழையில் சொ. வினைதீர்த்தான் ஐயா அவர்களுக்கு திருக்குறள் ஒன்றின் விளக்கத்தைக் குறிப்பிட்டேன் 2011-ல்:
> துப்புர வில்லார் துவரத் துறவாமை
> உப்பிற்கும் காடிக்கும் கூற்று.       1050
> https://groups.google.com/forum/#!msg/mintamil/HLfQOPxZ0Lc/-RcdgXoQkVQJ
>
> தமிழும், சைவமும் இரு கண்கள் என பழைய காலங்களில் போற்றிய ஈழத் தீவில் இரண்டுமே இல்லாமல்
> செய்ய தமிழர்களிடையே பிளவுகளை உண்டுபண்ணி, தமிழர்கள் புராதனமான வழிபாட்டிடங்களை
> அழித்து வருகிறது சிங்களப் பெரும்பான்மை அரசும், ராணுவமும். இதனை இந்தியாவை ஆளும்
> பாஜக அரசும், தமிழ்நாட்டின் திராவிடக் கட்சிகளும் தடுக்க வேண்டும்.

ஐயா இன்று எழுதுவது -

On Saturday, 29 October 2016 21:58:42 UTC+5:30, N. Ganesan wrote:

> I agree. In India, it will lead to endless conflicts between 3 major religions two from Middle East and one native. All the three religions are dated, and we want more food, infrastructure, Science and Technology, and preservation and fostering of Environment, Bioreserves ... Monitoring funds from outside India for religious conversions will help. 

இந்துக்களுக்கு ஈழத்தில் பிரச்னை என்றால் சயன்ஸ், டெக்னாலஜி, இன்ஃப்ராஸ்ட்ரக்சர்,ஃபுட்
அனைத்தையும் ஒதுக்கிவிட்டு மைய, மாநில அரசுகள் தலையிட வேண்டும்.
பாரதத்தில் மைய, மாநில அரசுகள் சயன்ஸ், டெக்னாலஜி, இன்ஃப்ராஸ்ட்ரக்சர்,ஃபுட்  என்பதோடு
நிறுத்திக்கொள்ள வேண்டும், இந்துக்களின் பிரச்னையில் தலையிடக் கூடாது, அவர்களுக்கு 
இடையூறு நேரா வண்ணம் தடுக்க முயலக்கூடாது என்கிறார் கணேசர்

தேவ்

N. Ganesan

unread,
Oct 29, 2016, 3:53:26 PM10/29/16
to மின்தமிழ்

On Saturday, October 29, 2016 at 11:53:07 AM UTC-7, Dev Raj wrote:
கணேசர் ஐயா அன்று எழுதியது -
On Thursday, 13 October 2016 20:11:32 UTC+5:30, N. Ganesan wrote:

> பௌத்தத்தின் சங்கம் என்ற பெயரில் செய்யும் அட்டூழியங்களை அன்றே கண்டித்தவர் திருவள்ளுவர்.
> இவ்விழையில் சொ. வினைதீர்த்தான் ஐயா அவர்களுக்கு திருக்குறள் ஒன்றின் விளக்கத்தைக் குறிப்பிட்டேன் 2011-ல்:
> துப்புர வில்லார் துவரத் துறவாமை
> உப்பிற்கும் காடிக்கும் கூற்று.       1050
> https://groups.google.com/forum/#!msg/mintamil/HLfQOPxZ0Lc/-RcdgXoQkVQJ
>
> தமிழும், சைவமும் இரு கண்கள் என பழைய காலங்களில் போற்றிய ஈழத் தீவில் இரண்டுமே இல்லாமல்
> செய்ய தமிழர்களிடையே பிளவுகளை உண்டுபண்ணி, தமிழர்கள் புராதனமான வழிபாட்டிடங்களை
> அழித்து வருகிறது சிங்களப் பெரும்பான்மை அரசும், ராணுவமும். இதனை இந்தியாவை ஆளும்
> பாஜக அரசும், தமிழ்நாட்டின் திராவிடக் கட்சிகளும் தடுக்க வேண்டும்.

You wrote on the same issue in Ceylon:

What I wrote will be clear if Indians understand what China is doing in Lanka and small countries around India, with money, military, etc.,

NG

On Thursday, 13 October 2016 20:11:32 UTC+5:30, N. Ganesan wrote:
தமிழும், சைவமும் இரு கண்கள் என பழைய காலங்களில் போற்றிய ஈழத் தீவில் இரண்டுமே இல்லாமல்
செய்ய தமிழர்களிடையே பிளவுகளை உண்டுபண்ணி, தமிழர்கள் புராதனமான வழிபாட்டிடங்களை
அழித்து வருகிறது சிங்களப் பெரும்பான்மை அரசும், ராணுவமும். 
 
ஆம்; தமிழும், சைவமும் ஈழத்தின் மிக முக்கியமான அடையாளங்கள்;
அவற்றைக் காக்கும் பொறுப்பை ஈழ அரசே முதலில் உணர்ந்துகொள்ள
வேண்டும். தொன்மை வாய்ந்த தலங்களை அழிப்பது தன் நாட்டையே அழிப்பதற்கு 
நிகராகும். மைய - மாநில அரசுகள் இக்கொடுமைக்கு முடிவுகட்ட
வேண்டும்

தேவ் 

N. Ganesan

unread,
Oct 29, 2016, 4:18:10 PM10/29/16
to மின்தமிழ், vallamai
On Friday, October 28, 2016 at 11:10:52 AM UTC-7, Dev Raj wrote:
கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றி, ஐயா.
நெய்வேலிக்கருகில் ‘வில்லுடையான் பட்டு’ ஆலயத்தில்
வில்லேந்திய வேலவர் காட்சி தருகிறார்.
திருப்போரூரிலும் வில்லேந்திய வேலவரின் மூர்த்தம் உள்ளது

அத்திப்பற்று (அ) வில்லுடையான்பற்று - வேளாங்கண் சிலைபோலப் பழையதாகத் தோன்றவில்லை.

முருகன் வில்லேந்திய தலங்கள்:

Image result for thiruporur murugan

‘எண்கண்’ எனும் தலம் ‘எண்கண்ணி’ எனத் திரிவு பெறவில்லை.
நாகப்பட்டினம் மாவட்டத்திலேயே ‘கருங்கண்ணி’ எனும் ஊரும்
அமையப் பெற்றுள்ளது. தேவாரப் பெயர்களுடன் ஒப்பிடும்போது ‘வேலன கண்ணி’
வேளாங்கண்ணி என மாற்றம் பெற்றுள்ளதாகவே தெரிகிறது.

எனக்கு வேலனகண்ணி மாறி வேளாங்கண்ணி ஆனதாகத் தெரியவில்லை. சம்ஸ்கிருதப் பெயரைப் பார்த்தாலும் தெரியும்.
முன்பும் - 2011ல் - எழுதியுள்ளேன்.

எண்கண் என்பது ஒருபுராணக்கதையில் கண் பற்றி வருவதால் இருக்கிறது. ஆனால், எண்கண்ணில் உள்ள -கண் = இடம் என்ற பொருள்தான்.
எண்கண்ணின் பழைய பெயரை ஆராய்ந்தால் விளங்கும்.

கருங்கண்ணி - ஒரு மீன். Bigeye travelly. அழகான பெரிய கருங்கண் உடைய பாரைமீன். ஓங்கில் என்று டால்பின் பெயரால் நெய்தல் நிலப்
பெயர் ஊருக்கு ஈழத்திலே உண்டு. பழைய மடலில் எழுதியுள்ளேன். அதேபோல், கருங்கண்ணி மீன்வகையால் நெய்தல் திணையூர்.
“கருங்கண் வரால்” - சங்கம். 

வேலனகண்ணி - வேளாங்கண்ணி எவ்வாறு ஆகும்? அம்பாளின் அவயவங்களை - வாய் (சொல், பண்ணின்நேர்மொழியாள், யாழைப்பழித்த மொழியாள்,
அஞ்சொலாள் (மாயூரம்), ..) கண், வகிடு, புருவம், நாசி, காது, தலைமுடி, கழுத்து, நகில்கள், தோள் (வேயனதோளி), .. கைகள் (பந்தணைவிரலி),வயிறு,
இடை, கால்கள், பாதம், .... எல்லாவற்றுக்கும் தேவாரத்தில் தொடர்கள் பல எடுக்கலாம். இவற்றையெலாம், தேவியின் உடலுறுப்புகளை வைத்துப்
பேருள்ள தலங்கள் தேவாரப்பாட்டால் தமிழ்நாட்டில் உண்டா?? 

நா. கணேசன்
 
தேவ்

N. Ganesan

unread,
Oct 29, 2016, 4:21:57 PM10/29/16
to மின்தமிழ், vall...@googlegroups.com
2010-ல் நான் இச்சிலைகள் கிடைத்தபோழ்து தொடங்கிய இழை காண்க:

வேளாங்கண்ணி வில்லேந்திய வேலவன் - சோழர்காலம்

Dev Raj

unread,
Oct 30, 2016, 1:53:40 AM10/30/16
to மின்தமிழ்
On Sunday, 30 October 2016 01:48:10 UTC+5:30, N. Ganesan wrote:
எண்கண் என்பது ஒருபுராணக்கதையில் கண் பற்றி வருவதால் இருக்கிறது. ஆனால், எண்கண்ணில் உள்ள -கண் = இடம் என்ற பொருள்தான்.
எண்கண்ணின் பழைய பெயரை ஆராய்ந்தால் விளங்கும்.

இடம் எனும் பொருள் இல்லை; சங்கதப் பெயர் ‘அஷ்டநேத்ரபுரி’, என்கண் கொண்ட நான்முகனின் பெயர்.
‘திருவிண்சாருடையார்’ சுவாமி பெயர்; கல்வெட்டுத் தெரிவிக்கும் பெயர். பொருள் தெரியவில்லை. 
அருணகிரிநாதர் காலத்துக்குப்பின் முருகன் தலமாகப் பிரசித்தி பெற்றிருக்கலாம்

தேவ்

Dev Raj

unread,
Oct 30, 2016, 10:05:34 AM10/30/16
to மின்தமிழ்

On Friday, 28 October 2016 18:48:47 UTC+5:30, N. Ganesan wrote:
வேளாங்கண்ணியில் இச் சிலைகள் கிடைத்தபோது டாக்டர் ரா. நாகசாமியிடம் பேசினேன்.
வேள், வேளன் = முருகன். கண் என்பது இடம்/ஊர். வேளன் + கண் = வேளாங்கண்ணி.

முருகனைக் குறிப்பதற்கு ‘வேள்’ எனும் சொல்லே பயனாகிறது;
‘வேளன்’ [முருகன்] எனும் சொற்பயன்பாடு எந்த நூலின்கண் உள்ளது ?
திருப்புகழ் முருகனை ‘வேளன்’ எனும் சொல்லால் சுட்டுகிறதா ?
’வேளன்கண்’ தலத்துக்கான திருப்புகழ் உண்டா ?

தேவ் 

N. Ganesan

unread,
Oct 30, 2016, 10:56:09 AM10/30/16
to மின்தமிழ்
வேள் என்ற சொல் விள்-/வெள்- என்ற சொல்லின் விரிவு. வேளன் (அ) வேளான்
வெள்ளாளருக்கும் (வேளாளருக்கும்), குலாலருக்கும் மிகப் பரவலாகக் கல்வெட்டுகளில் பார்க்கலாம்.
”தென்னவன் மூவேந்த வேளன் எனும் பொய்கை நாடு கிழவன் ஆதித்தன் சூரியனார்” - தஞ்சை பெரியகோயில் கல்வெட்டு.
ராசராசசோழனின் நிர்வாக அதிகாரி.

வேளனை வேண்டல் (புலவர் செங்கை பொதுவன்)
அன்பு மலர வேண்டும் – அதற்கு 
அடியேன் உதவ வேண்டும்
இன்பம் பொங்க வேண்டும் – வேளா 
எளியேன் உதவ வேண்டும் 1

--------------

வேளனின் மஞ்சமாகினாள் வள்ளி
அடங்க மறுக்கும் 
குடங்கள் தாங்கி 
நுடங்கும் இடுப்பு-நூல் – அச்ச
மடங்கொள் பயிர்ப்புக்-கோல் 
மடங்கல் ஏறு
அடங்கிச் சுழல 
நடங்கொள் கொடியைக் கேள் – வேளன் 
இடங்கொள் தோளைக் கேள் 5

பிஞ்சு விரல்கள் 
கொஞ்சும் இதழைக்
கெஞ்சிக் கோதுமாம் – எழில் 
விஞ்சி ஒழுகுமாம்
நெஞ்ச விளக்கில் 
பஞ்சு நெய்யாய்த் 
தஞ்ச மாகினாள் – வேளன் 
மஞ்ச மாகினாள் 6

Suba

unread,
Oct 30, 2016, 11:06:39 AM10/30/16
to மின்தமிழ், Subashini Kanagasundaram
​தவறாக நினைக்க வேண்டாம். இத்தகைய விவாதங்களே நேர விரயம் என நான் கருதுகிறேன்.

ஆயினும் கேள்வி கேட்கப்படுவதால் என் கருத்து -
 1. ‘கீதையெனும் புரட்டு’ - ஏற்கனவே வந்து கண்டனம் செய்யப்பட்டு  தொடரப்படாத இழை. இனி தொடர தேவையும் இல்லை.
​2. 
‘ராமாயணமா , கீமாயணமா ?’ ​ -- இது ஒரு நூலின் பெயர். இழையில் புதிதாக உருவாக்கப்பட்டதல்ல.

இனி புத்தாக நாம் ஏதும் பிரச்சாஇயை உருவாக்க வேண்டாமே. மத நல்லிணக்கத்தைப் பேணுவோம். அதே வேளை ஆய்வுக்காக தகவல்களை தொடர்ந்து  ஆய்ந்து பகிர்ந்து  வருவோம்.

சுபா

தேவ் 

Suba

unread,
Oct 30, 2016, 11:09:13 AM10/30/16
to மின்தமிழ், Subashini Kanagasundaram
2016-10-29 16:43 GMT+02:00 Dev Raj <rde...@gmail.com>:

மிகத் தீவிரமாகப்  பல இடையூறுகளை எதிர்கொண்டு திருமிகு சுபா அம்மையார் பழங்கோயில்களுக்குச் சென்று விடாப்பிடியாக வரலாற்றை விழியப் பகிர்வுகளாக மாற்றி வெளிக்கொணர்வதும் மிகச் சிறந்த பணியே. இதையும் இந்துத் தீவிரவாதம் எனச் சொல்ல முடியாது.
​எனது பணிகளில் எந்த மதச் சார்பும் இருக்காது. ஏனெனில் நான் எல்லா புனிதத்தலங்களுக்கும் (அவர்கள் என்னை அனுமதிக்கும் பட்சத்தில்) நான் செல்கின்றேன். கடவுள் எல்லா புனித தலங்களிலும் இருக்கின்றார் என்பதும் எல்லா உயிரிலும் இருக்கின்றார் என்பதும் எனது கொள்கை. ஆதலாம்.
 
எல்லாமே அன்பு அறம் அருள் பெருக்கும் முயற்சிகள்தாம்.

மறவன்புலவு ஐயா அவர்கள் இணையக் குழுக்கள் அனைத்திலும் தம் முயற்சிகளைத் தொடர்ந்து தெரிவித்து வரவேண்டும் என்று தாழ்மையுடன் கோருகிறேன்
​.

​மின் தமிழில் சிவசேனை தொடர்பான  ஆக்டிவிட்டி அறிக்கைகள் பதிய இங்கே அனுமது வழங்கப்படாஅது என்பதை மீண்டும் வலியுறுத்திக்  கொள்கின்றே
ன்!!

​சுபா

N. Ganesan

unread,
Oct 30, 2016, 11:33:01 AM10/30/16
to மின்தமிழ், vallamai, Dr. K. Nachimuthu

On Sunday, October 30, 2016 at 7:05:34 AM UTC-7, Dev Raj wrote:

On Friday, 28 October 2016 18:48:47 UTC+5:30, N. Ganesan wrote:
வேளாங்கண்ணியில் இச் சிலைகள் கிடைத்தபோது டாக்டர் ரா. நாகசாமியிடம் பேசினேன்.
வேள், வேளன் = முருகன். கண் என்பது இடம்/ஊர். வேளன் + கண் = வேளாங்கண்ணி.

முருகனைக் குறிப்பதற்கு ‘வேள்’ எனும் சொல்லே பயனாகிறது;
‘வேளன்’ [முருகன்] எனும் சொற்பயன்பாடு எந்த நூலின்கண் உள்ளது ?
திருப்புகழ் முருகனை ‘வேளன்’ எனும் சொல்லால் சுட்டுகிறதா ?
’வேளன்கண்’ தலத்துக்கான திருப்புகழ் உண்டா ?

தேவ் 

2010-ல் மடல்:

முக்கியமாக, இக் கண்டுபிடிப்புகளால்
ஊரின் பெயர் விளங்குகிறது. வெள்ளாறு கடலில்
கலக்குமிடம். சோழர் கால முருகன் கோவில்
இருந்திருக்க வேண்டும். அவசரம் அவசரமாக
வடக்கத்திய படைகளுக்காக சிலைகள்
மணலில் புதைக்கப்பட்டது வழக்கம்.

வேள்+அம்+கண்ணி = முருகன் ஊர்
என்று பொருள். கண் = இடம்.

வாழ்க வேளங்கண்ணி வேலன்!

https://groups.google.com/forum/#!msg/mintamil/qbqQ4cHgIfE/BTHQhFSuD5MJ

அம் என்பது சாரியை. ஊர்ப்பெயர்களில் அமையும்.

காடு, கோடு, ... என முடியும் ஊர்ப்பெயர்களில் நூற்றுக்கணக்கில் காணலாம்.

ஆல் + அம் + காடு = ஆலங்காடு (பல ஊர்கள். திரு ஆலங்காடு - காரைக்காலம்மை அமர்ந்த பதி.

விள(வு) + அம் + கோடு = விளவங்கோடு

அரசு = அரை என்று தொல்காப்பியப்பெயர் கொண்ட போதிமரம்.

அரசு + அம் + பாளையம் = அரசம்பாளையம்

(கோவை அருகே உள்ள அயோத்திதாச பண்டிதரின் ஊர். பார்க்க: தலித் சாகித்திய அகாடமி நூல்கள்.

http://www.thehindu.com/news/cities/Coimbatore/death-centenary-of-a-dravidian-leader/article6594092.ece

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/remembering-the-precursor-of-dravidian-movement/article3438425.ece  )

ஆல் + அம் + பாளையம் = ஆலம்பாளையம், ஆலாம்பாளையம்

ஆல் + அம் + துறை = ஆலந்துறை

உசில் + அம் + பட்டி = உசிலம்பட்டி

யா (shorea tree) மரத்தின் கொம்பு = யா + அம் + கோடு = யாங்கோடு, யாஅத்துக்கோடு.

பிடா + அம் + கோடு = பிடாக்கோடு, பிடாங்கோடு ....

இவை போல, வேள் + அம் + கண் ==> வேளங்கண், வேளாங்கண்ணி என வரும்.

வேளன்/வேளான் - வெள்ளான், வெள்ளாளன் என வழங்குதல் உண்டு.

வெள்ளான் veḷḷāṉ   n. See வெள்ளாளன்.வெள்ளான் நத்தங்கள் (S. I. I. ii, 114).

இப்பெயரால் வேளாங்கண்ணி அழைக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு அதன் வடமொழியாக்கப் பெயர் நல்ல சான்று.
ராஜதகிரீசுவரஸ்வாமி - ராஜதம் = வெள்ளி. இது வெள்ளான்/வேள் என்ற சொல்லை வெள்ளி எனக் கொண்டுள்ளனர் என்பது வெள்ளிடைமலை.
கண் = இடம். இங்கே, மலை எனக்கொண்டு ராஜதகிரி ஆக்கியுள்ளனர். வெள்ளி+அம்+கிரி = வெள்ளியங்கிரி கோவை அருகே உள்ளதும்
ஒப்பிடலாம். 

ஸம்ஸ்கிருதப் பெயராக்கம் வேள், வெள்ளான் என்று -ள்- இருந்ததைக் காட்டி நிற்பதாலும், வேலனகணி என்பது எப்படி வேளாங்கண்ணி
ஆகும் என்பதாலும், இவ்வூர்ப் பெயர் வேளாங்கண்ணி = வேள் + அம் + கண் என்ற மூலச்சொற்கள் கொண்டு பிறந்தது எனக் கொள்கிறேன்.

நா. கணேசன்

எனக்கு வேலனகண்ணி மாறி வேளாங்கண்ணி ஆனதாகத் தெரியவில்லை. சம்ஸ்கிருதப் பெயரைப் பார்த்தாலும் தெரியும்.
முன்பும் - 2011ல் - எழுதியுள்ளேன்.

எண்கண் என்பது ஒருபுராணக்கதையில் கண் பற்றி வருவதால் இருக்கிறது. ஆனால், எண்கண்ணில் உள்ள -கண் = இடம் என்ற பொருள்தான்.
எண்கண்ணின் பழைய பெயரை ஆராய்ந்தால் விளங்கும்.

கருங்கண்ணி - ஒரு மீன். Bigeye travelly. அழகான பெரிய கருங்கண் உடைய பாரைமீன். ஓங்கில் என்று டால்பின் பெயரால் நெய்தல் நிலப்
பெயர் ஊருக்கு ஈழத்திலே உண்டு. பழைய மடலில் எழுதியுள்ளேன். அதேபோல், கருங்கண்ணி மீன்வகையால் நெய்தல் திணையூர்.
“கருங்கண் வரால்” - சங்கம். 

வேலனகண்ணி - வேளாங்கண்ணி எவ்வாறு ஆகும்? அம்பாளின் அவயவங்களை - வாய் (சொல், பண்ணின்நேர்மொழியாள், யாழைப்பழித்த மொழியாள்,
அஞ்சொலாள் (மாயூரம்), ..) கண், வகிடு, புருவம், நாசி, காது, தலைமுடி, கழுத்து, நகில்கள், தோள் (வேயனதோளி), .. கைகள் (பந்தணைவிரலி),வயிறு,
இடை, கால்கள், பாதம், .... எல்லாவற்றுக்கும் தேவாரத்தில் தொடர்கள் பல எடுக்கலாம். இவற்றையெலாம், தேவியின் உடலுறுப்புகளை வைத்துப்
பேருள்ள தலங்கள் தேவாரப்பாட்டால் தமிழ்நாட்டில் உண்டா?? 

Dev Raj

unread,
Oct 31, 2016, 12:10:40 AM10/31/16
to மின்தமிழ்
On Sunday, 30 October 2016 20:36:39 UTC+5:30, Suba.T. wrote:
ஆயினும் கேள்வி கேட்கப்படுவதால் என் கருத்து -​
 1. ‘கீதையெனும் புரட்டு’ - ஏற்கனவே வந்து கண்டனம் செய்யப்பட்டு  தொடரப்படாத இழை. இனி தொடர தேவையும் இல்லை.

எந்த இடத்தில் , யார் கண்டனம் தெரிவித்தனர் ?
இழையை மீண்டும் தந்துள்ளேன் -

தேவ்
 
Dev Raj

unread,
Oct 31, 2016, 12:24:27 AM10/31/16
to மின்தமிழ்
On Sunday, 30 October 2016 21:03:01 UTC+5:30, N. Ganesan wrote:

...............சோழர் கால முருகன் கோவில் இருந்திருக்க வேண்டும். அவசரம் அவசரமாக

வடக்கத்திய படைகளுக்காக சிலைகள் மணலில் புதைக்கப்பட்டது வழக்கம்.

வேள்+அம்+கண்ணி = முருகன் ஊர் என்று பொருள். கண் = இடம்.

முருகன் பெயரோடு முருகனுக்கே உரிய ஆலயமாக ஒன்று விளங்கியிருக்கும்
பக்ஷத்தில் சோழநாட்டுப் பதிகளைப் பாடிய அருணகிரிநாதர், இத்தலத்தைப்
பாடாமல் ஒதுக்கி இருக்க மாட்டார்; இல்லையெனில் அப்பாடல்கள் நம்
கையகப் படாமல் மறைந்து போயிருக்க வேண்டும் 

தேவ்

Hari Krishnan

unread,
Oct 31, 2016, 12:33:37 AM10/31/16
to mintamil

2016-10-31 9:54 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
முருகன் பெயரோடு முருகனுக்கே உரிய ஆலயமாக ஒன்று விளங்கியிருக்கும்
பக்ஷத்தில் சோழநாட்டுப் பதிகளைப் பாடிய அருணகிரிநாதர், இத்தலத்தைப்
பாடாமல் ஒதுக்கி இருக்க மாட்டார்; இல்லையெனில் அப்பாடல்கள் நம்
கையகப் படாமல் மறைந்து போயிருக்க வேண்டும் 

பிரதானமாக முருகன் தலம் என்றில்லாத பல தலங்களையும் பாடியிருக்கிறார்.  உதாரணமாக திருமுட்டம் (தற்காலத்தில் ஸ்ரீமுஷ்ணம்).  இத்தலத்துக்கான பாடலும் உரையும் இன்றும் நாளையும் தினமணியில் அப்டேட் ஆகும்.

இப்படிப் பல தலங்கள் உண்டு.  வேள் ஆம் கண்ணி தலத்தை ஏன் பாடவில்லை என்பது சிந்தனைக்கு உரியது.  அப்படியொரு தலம் இருந்திருந்தால்.

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

இறையடியான்

unread,
Oct 31, 2016, 1:17:26 AM10/31/16
to mintamil
எந்த ஒரு மதத்தின் உணர்வுகளையும் புண்படுத்தாமல் கருத்தை சொல்லலாம் என்பது எனது அபிப்பிராயம்

ஒரு இந்து கோயில் கிறித்தவ கோயிலாக்கப்பட்ட வரலாறுன்னு எழுதலாம் ஆனால் எதுவுமே ஆதராமாக பதிவு செய்யப்படவேண்டும் அன்பரே

யேசுராஜன்

truth is pathless land

--

Pandiyaraja

unread,
Oct 31, 2016, 1:17:44 AM10/31/16
to மின்தமிழ்
>>
 1. ‘கீதையெனும் புரட்டு’ - ஏற்கனவே வந்து கண்டனம் செய்யப்பட்டு  தொடரப்படாத இழை. இனி தொடர தேவையும் இல்லை.

எந்த இடத்தில் , யார் கண்டனம் தெரிவித்தனர் ?
>>

கீதையெனும் புரட்டு என்பது ஒருசாரார் மனத்தைப் புண்படுத்தும் கூற்று என்பதில் ஐயமில்லை. அவருக்கு மட்டும்தான் புண்படுத்த உரிமை உண்டோ, நானும் புண்படுத்துவேன் என்று 'மோசடி' போன்ற சொற்களைப் பயன்படுத்தி என்போன்றோர்களைப் புண்படுத்தல் நியாயமா?
ப.பாண்டியராஜா

தேமொழி

unread,
Oct 31, 2016, 1:43:01 AM10/31/16
to மின்தமிழ்
நண்பர்களின் கவனத்திற்கு:

திரு.தேவ் குறிப்பிடும் இழையை, இப்பொழுதான் நான் முதலில் இருந்து படித்தேன்.

அதில் விஜயராகவன் என்பவர்  (இவரை நான் யாரென  அறிந்ததில்லை) 

கீழ்வருமாறு  இழையைத் துவக்கியவருடன் உரையாடியுள்ளார் 

இவர் கருத்துக்கள் எனக்கு உடன்பாடே....

மேலும் வல்லமையிலும் தேவ் அவர்கள் இப்பதிவை சென்ற மே மாதமே வெளியிட்டுள்ளார்

குறிப்பாக தலைப்பு "வேளாங்கண்ணி" என்று மட்டுமே உள்ளது.

அவரது வேளாங்கண்ணி குறித்த  ஆய்வை வல்லமையில் யாரும் இன்றுவரை  பொருட்படுத்தவில்லை.

காரணம் கவனத்தைக் கவரா தலைப்பாகவும் இருக்கக்கூடும்.

எனவே இது சுபா இந்த இழையில் குறிப்பிட்டது போல ...

///
திரு.தேவ் நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் இங்கே பதிவுகள் பதிய ஆரம்பித்துள்ளார் . இடைவெளிக்குப்பின் வரும் முதல் பதிவே வேறொரு மதத்தின்பால் குற்றம் சாட்டும் தொணியில் உள்ளது. இது என் கவனத்தையும் ஏனையோர் கவனத்தையும் ஒரு சேர ஈர்க்கும் என்ற சிந்தனையில் பதிந்திருக்கின்றார்.
///

இம்முயற்சி ஒரு கவன ஈர்ப்பு நோக்கில்  இருக்கக்கூடும்.

கீழே திரு விஜயராகவனின் பதிவு.

On Thursday, March 29, 2012 at 1:28:31 AM UTC-7, விஜயராகவன் wrote:
ஆவி அவர்களே

நீங்கள் செய்வது ஃப்ளேமிங்.

http://en.wikipedia.org/wiki/Flaming_(Internet)

Flaming, also known as bashing, is hostile and insulting interaction
between Internet users. Flaming usually occurs in the social context
of an Internet forum, Internet Relay Chat (IRC), Usenet, by e-mail,
game servers such as Xbox Live or Playstation Network, and on video-
sharing websites. It is frequently the result of the discussion of
heated real-world issues such as politics, religion, and philosophy,
or of issues that polarise subpopulations, but can also be provoked by
seemingly trivial differences.

உங்கள் ஃப்ளேமிங் உபாயமே தலைப்பில் உள்ளது. நீங்கள் நெடுமாரனின்
புஸ்தகத்தை critical faculty யோடு படிக்காமல், அது சொன்ன்வற்றை ஏற்றுக்
கொண்டீர்கள். அப்படியே இருக்கட்டும் , உங்கள் மனநிலைகளை ஃப்ளேமிங் உடன்
போட்டால், அதில் ஏன் மற்றவர்கள் கருத்து தெரிவிக்க வேண்டும், அதைதான்
தேவுக்கு எச்சரிக்கை கொடுத்தேன் , ஃப்ளேம் செய்பவர்களுடன்
விவாதிக்காதீர்கள் என. . நான் செய்த்தது எச்சரிக்கையே தவிர , அறிவுரை
அல்ல. நான் யாருக்கும் அறிவுரைகள் தருவதில்லை - மற்றவர்கள் கேட்டு எனக்கு
விருப்பம் இருந்தால் ஒழிய.

வகொவி

Suba

unread,
Oct 31, 2016, 4:35:58 AM10/31/16
to மின்தமிழ், Subashini Kanagasundaram
2016-10-31 6:17 GMT+01:00 Pandiyaraja <pipi...@gmail.com>:
>>
 1. ‘கீதையெனும் புரட்டு’ - ஏற்கனவே வந்து கண்டனம் செய்யப்பட்டு  தொடரப்படாத இழை. இனி தொடர தேவையும் இல்லை.

எந்த இடத்தில் , யார் கண்டனம் தெரிவித்தனர் ?
>>

கீதையெனும் புரட்டு என்பது ஒருசாரார் மனத்தைப் புண்படுத்தும் கூற்று என்பதில் ஐயமில்லை. அவருக்கு மட்டும்தான் புண்படுத்த உரிமை உண்டோ, நானும் புண்படுத்துவேன் என்று 'மோசடி' போன்ற சொற்களைப் பயன்படுத்தி என்போன்றோர்களைப் புண்படுத்தல் நியாயமா?
ப.பாண்டியராஜா

​இதைத்தான் ஐயா நானும் திரு.தேவ் அவர்களிடம் கேட்கின்றேன்.இப்படி ஒருவருக்கு ஒருவர் என குறைச்சொல்லி பழிப்பதனால் என்ன பலன்? எனக்கு ஏதும் பலனிருப்பதாகத் தெரியவில்லை.

வேளாங்கண்ணி கோயிலைப்பற்றியும் அதன் ஆரம்ப கால வரலாற்று விசயங்களையும் வெறுப்போ பழிபோடும் முயற்சியோ என்றில்லாமல் ஆய்வாக  அனுகலாமே. அதனை தவறென்று மின்தமிழில் ​ மட்டுமல்ல தனிப்பட்ட முறையிலும் நான் கூற மாட்டேன்.

சுபா

Dev Raj

unread,
Oct 31, 2016, 6:39:43 AM10/31/16
to மின்தமிழ்
On Monday, 31 October 2016 11:13:01 UTC+5:30, தேமொழி wrote:
திரு.தேவ் குறிப்பிடும் இழையை, இப்பொழுதான் நான் முதலில் இருந்து படித்தேன்.
அதில் விஜயராகவன் என்பவர்  (இவரை நான் யாரென  அறிந்ததில்லை) 
 
இவர் வன்பாக்கம் விஜயராகவன் அவர்கள். ஜெர்மெனியில் வாழ்கிறார்.
இவர் மி த மட்டுறுத்துனர் குழுவில் என்றுமே பொறுப்பு வகித்தது கிடையாது.
இவர் இழைத்தலைப்பைப் பற்றிக் கண்டனம் தெரிவிக்கவில்லை.
இந்த இழைத் தலைப்புக்குக் கொட்டை எழுத்துகளில் நீவிர் கண்டனம்
தெரிவித்ததுபோல் அந்த இழைக்குள் புகுந்து யாரும் செய்யவில்லை.
கவன ஈர்ப்பில் பழக்கம் இருப்பவருக்குத்தான் பிறரும் கவன ஈர்ப்புச் 
செய்வதாகத் தோன்றும்.
 
எதையோ எழுத வேண்டும் என்பதற்காக இவரை உள்ளே இழுக்காதீர்கள். 

இம்முயற்சி ஒரு கவன ஈர்ப்பு நோக்கில்  இருக்கக்கூடும்.

மின் தமிழ்க் குழு ஒன்றின் வாயிலாகத்தான் ஒருவர் கவனத்தை ஈர்த்தாக
வேண்டும் எனும் நிலை இன்று இணையத்தில் இல்லை. எனக்குப் புதிதாகக்
கவன ஈர்ப்புச் செய்யும் தேவையும் கிடையாது.

என் பங்களிப்பு தமிழ் மரவு விகியில் ஏற்கெனவே பதிவானதுதான். ‘இலக்கியத் துணிச்சல்’
‘பரிமேலழகரின்றி வள்ளுவம் இல்லை’  ‘சமணம் அறிவோம்’போன்ற எனது இழைகள் கவன 
ஈர்ப்பு நோக்கம் கொண்ட முயற்சியா ? 

நடுநிலையாளர் நன்கறிவர்

தேவ்

N. Ganesan

unread,
Oct 31, 2016, 9:37:12 AM10/31/16
to மின்தமிழ், vallamai
பல சமயங்களின் ஆரம்பகாலக் கதைகள் இவ்வாறே அமைந்திருக்கும். இந்தியாவின் சைவம், வைணவம், பௌத்தம், சமணம், ... இவற்றிலும் பார்க்கலாம். உ-ம்: ஞானசம்பந்தர் பற்றிய கதைகள் பற்றி மின்தமிழில் பேசப்பட்டுள்ளது. அதிலும், மத்தியகிழக்கின் பாலைவன மதங்கள் அதிகமான தூற்றலும், கோயில்களை இடிப்பதுமாக போர்ச்சுகீசிய ஆட்சிக் காலத்திலிருந்து இருந்திருக்கின்றன என்பது இந்திய வரலாறு. மீனவர்களில் பலர் கிறித்துவர்களாக மாறினர். இதற்கு போர்த்துகீசியர்களின் சர்ச்கள், உருவாக்கிய புராணங்கள், .. பெருமளவில் உதவியுள்ளன. இன்னும் செய்ய போப்பாண்டவர் தலைமை இருக்கும். மேற்குலக நாடுகளின் சர்ச்சுகள் பணமும் துணைசெய்யலாம். இதேபோல, ஆழமானதும், இப்போதைய அறபி நாடுகளின் செல்வம், பண அளிப்பு இஸ்லாம் வளர்ச்சிக்கு எவ்வளவு தூரம் இந்தியாவில் இந்த நூற்றாண்டுகளில் இருக்கும் என்பதை ஆய்வாளர்கள் எழுதுவார்கள் எனலாம். பல்கலைக் கழக ஆய்வுகளுக்கு இடமுண்டு.

விஞ்ஞான முறையில் ஹிந்து, கிறித்துவம், இசுலாம், ... புராணங்களை ஆய்வு செய்தல்வேண்டும். அப்போது பல உண்மைகளை அறியலாகும். கிறித்துவ மதத்தின் ஆரம்ப கால வரலாறுகள் பலவும் Dead sea scrolls ஆய்வுகளால் வெளியா உ-ம்: Elaine Pagels, Prof. of Religion, Princeton University ... தேவ் எழுதிய வேளாங்கண்ணி ஊர்ப்பெயர் தமிழ் ஊர்ப்பெயர் ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்ள இயலா நிலையில் உள்ளது. இதுபற்றிக் குறிப்புகள் கொடுத்துள்ளேன். பழங்காலத்திலும் -ளகரம்- வேளாங்கண்ணியில் இருந்திருக்கவேண்டும். வேளாங்கண், வேளாங்கண்ணி. இது வெள்ளாங்கண்ணி எனவும் அழைத்திருக்கலாம். ரஜதம் என்றால் வெள்ளி. எனவே, வடமொழியாளர் வேளாங்கண் என்ற இடப்பெயரை “ரஜதகிரி” =வெள்ளிமலை என மொழிபெயர்த்துள்ளனர். வெள்ளிமலையீச்சுரம் = ரஜதகிரீசுவரம். வெள்ளிமலையப்பர் - வேல்நெடுங்கண்ணி என ஸ்வாமி-அம்பாள் பெயர்கள் வேளாங்கண்ணி பழமையான ஆலயத்தில் உள்ள தெய்வதப் பெயர்கள். கடலருகே உள்ளதால், முருகன் சூரபத்மன், அவர் தம்பியருடன் போர் செய்ய வில்லேந்திய நிலையில் உள்ள சிலைகள் அழகாக சோழர்காலத்தில் வடிக்கப்பட்டுள்ளன. வேளாங்கண்ணி வேளனின் சிலைகள் கிடைத்துள்ளது அருமை. தேவாரம், திருப்புகழ் எழுத வேண்டலாம்.

போர்ச்சுகீசிய, பின் வந்த பாதிரியார்கள் ஹிந்து சமயங்கள், நம்பிக்கைகள், வழிபாடுகள், புராணங்கள், ... பற்றி எழுதிய ஆவணங்கள் ஐரோப்பிய நூலகங்களில் ஏராளமாகக் கிடக்கின்றன. அவற்றை எல்லாம் இணையத்தில் ஏற்றினால் கடலோர நெய்தல் திணை நிலங்களில் ஐரோப்பிய காலனீய அரசுகளும், சர்ச்களும் இணைந்து செயல்பட்ட முறைகளும், தமிழ் சமூகங்களின் வரலாறுகளும் பற்றி ஒருவாறு ஆராய்ந்து அறிந்துகொள்ள இயலும். கி.பி. 16 - 19-ஆம் நூற்றாண்டுகளுக்கு முக்கிய ஆவணங்கள்.

சர்ச்கள் இந்தியாவில் - தமிழகத்தில் ஹிந்துக்களின் பள்ளிகள் எவ்வாறு நடந்தன? - என்பதை ஆராய்ந்து அந்த ஸிஸ்டத்தை உடைக்க பெரும்முயற்சிகள் செய்தனர். அவ்வாறே, பள்ளிக்கூடங்கள் மாறின. போர்ச்சுகீசியர் ஆட்சி மறைந்தாலும், பாதிரியார்கள் போர்த்துசீஸ், ஸ்பெயின், பிரான்சு, நெதர்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து, ... என வந்துகொண்டிருந்தாலும் போர்ச்சுகீசியர்களின் சர்ச் நடவடிக்கைகள் அஸ்திவாரம் இட்டு விளங்குகின்றன. Pyal school (or) Pial school என்று போர்ச்சுகீசிய வார்த்தையை மேலைநாடுகளின் எல்லா சர்ச்களும் கையாண்டு ஹிந்துக்களின் பள்ளிக்கூட முறைகளை அவதானித்து மாற்றங்கள் கொண்டுவந்தன. 

நா. கணேசன்

On Tuesday, September 27, 2016 at 4:25:43 PM UTC-7, Suba.T. wrote:
மதுரையில் திண்ணைப் பள்ளிக்கூடங்களில் ஓலைச்சுவடிகளைச் சிறார்கள் வாசிப்பதைக் காட்டும் ஒரு புகைப்படம் இது. இதனைப் பகிர்ந்து கொண்ட முனைவர்.சந்திரபோஸ் அவர்களுக்கு நம் நன்றி.

இணையத்தில் இப்போது 1910-ஆம் வருட படம் என எழுதுகிறார்கள்.

-----------------

ஆனால், 1895-ஆம் வருட நூலிலேயே இருக்கிறது: பக். 479
 
pial school என பழைய புத்தகங்களில் இன்னும் பல படங்கள் உண்டு.

அமெரிக்க பல்கலைகளில் உலகம் முழுக்க (முக்கியமாக, மூன்றாம் உலகம் எனப்படும் இந்தியா போன்றவற்றில்) உள்ள சமயங்கள், அவற்றைப் பின்பற்றுவோர் பற்றி ஆராய சுமார் 7000 பேராசிரியர்கள் உள்ள பலமான துறை. ஐரோப்பாவில் பல பல்கலைகள் நல்ல ஆராய்ச்சிகளை இந்தியா மீது முன்னெடுக்கிறது. சர்ச்ச்கள் ஒருபுறம். செக்யுலரிஸ பல்கலை ஆராய்ச்சிகள் ஒருபுறம். Knowledge is Power என பணம், மனிதவளம் செலவிட்டு செய்கின்றனர். இந்தியப் பல்கலைகளில் சமய ஆராய்ச்சிகள் செய்ய துறைகளே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

நா. கணேசன்

சுபா

Dev Raj

unread,
Oct 31, 2016, 9:45:30 AM10/31/16
to மின்தமிழ்
On Monday, 31 October 2016 10:03:37 UTC+5:30, Hari wrote:
பிரதானமாக முருகன் தலம் என்றில்லாத பல தலங்களையும் பாடியிருக்கிறார்.  உதாரணமாக திருமுட்டம் (தற்காலத்தில் ஸ்ரீமுஷ்ணம்).  இத்தலத்துக்கான பாடலும் உரையும் இன்றும் நாளையும் தினமணியில் அப்டேட் ஆகும்.
இப்படிப் பல தலங்கள் உண்டு.  வேள் ஆம் கண்ணி தலத்தை ஏன் பாடவில்லை என்பது சிந்தனைக்கு உரியது.  அப்படியொரு தலம் இருந்திருந்தால்.

ஆம். ’வேளம்கண்ணி’ திருப்புகழில் ஏன் இடம் பெறவில்லை
என்றே சிந்தனை எழுகிறது. கூடவே திருவாலங்காட்டினில் 
வீறிய பெருமாளாக முருகனைப்  பாடியதும் நினைவுக்கு வருகிறது.
பிற தலங்களும் உள

தேவ்

N. Ganesan

unread,
Oct 31, 2016, 9:47:32 AM10/31/16
to மின்தமிழ்

On Sunday, October 30, 2016 at 10:43:01 PM UTC-7, தேமொழி wrote:
நண்பர்களின் கவனத்திற்கு:

திரு.தேவ் குறிப்பிடும் இழையை, இப்பொழுதான் நான் முதலில் இருந்து படித்தேன்.

அதில் விஜயராகவன் என்பவர்  (இவரை நான் யாரென  அறிந்ததில்லை) 

தமிழில் அதிகம் பயிற்சி இல்லாதவர் நண்பர் விஜயராகவன். 
அதனாற்போலும், அப்போது சில திங்கள் எழுதிய வகொவி
தமிழில் எழுதுவதை பின்னர் தவிர்த்துவிட்டார்.

ஆங்கிலத்தில் பலரும் நியோ-வேதாந்தம், ஹிண்டுயிஸம், ஹிந்துத்வா, ... என எழுதுவதை
இணையம் வந்தபின்னர் பார்க்கலாம். அவர்களில் பலருக்கும் தாய்மொழியில்
எழுதவோ, பேசவோ பயிற்சி இருக்காது. பரத நாட்டிய கச்சேரி மேடைகளிலே
மதறாஸிலே, அமெரிக்காவிலே பார்க்கலாம்.

நல்லதமிழ் விளங்கிய ஊர்ப்புறங்களிலும் தமிழ்நாட்டை ஆளும் திராவிடக்கட்சிகள் நடத்தும்
தொலக்காட்சி, ரேடியோ போன்றவற்றால் தமிங்கிலம் பரவி ஒரு டையலெக்ட் ஆகிவருகிறது.
ஆங்கிலம் 60-70 % என தமிழ் வாக்கியங்கள் அமைகின்றன. புலவர் கல்லூரிகள் மூடப்பட்டு
சாதா ஆர்ட்ஸ் காலேஜ்கள் ஆகின்றன.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Oct 31, 2016, 10:02:05 AM10/31/16
to மின்தமிழ், vallamai
(1) திருப்புகழில் அச்சாகாத பாடல்கள் சுவடிகளில் இருப்பதைப் பலர் எழுதியுள்ளனர். உ-ம்: மு. அருணாசலம், திருச்சிற்றம்பலம் (மாயூரம்).
எல்லாச் சுவடிகளும் எடுத்து, எண்மியப்படுத்தி ஆராய நிறுவனமும் காணோம்.

(2) பல ஊர்ப் பெயர்கள் திருப்புகழில் உணரப்படாமல் இருக்கின்றன. உ-ம்: குளந்தை என வரும் திருப்புகழ் தலம் பற்றி எழுதியுள்ளேன்.
செங்குன்றாபுரம் என்ற திருப்புகழ் தலம் எங்குள்ளது எனவும் விளக்கியுள்ளேன். இக் குழுவில்.

நேற்று சுந்தரர் ஊர்த்தொகை படித்துக்கொண்டிருந்தேன். விளத்தூர் நாட்டு விளத்தூர் என்பது எங்கே என யாரும் எழுதவில்லை.
அவ்விடம் தெரிகிறது. அதே போல, வேளா(ர்) நாட்டு வேளூர் என்பதன் இடமும் விளங்குகிறது.

வேளா(ர்) நாட்டு வேளூர் - கடலூர் அருகே முட்டலூர் என தி.வே. கோபாலையர் யூகிக்கிறார். ஆனால், கல்வெட்டுஜ்கள் பார்த்தால்
வேளார் நாடு அதுவல்ல எனத் தெரியும். இந்த வேளூர் சாலியூர் போல நெல்வளம் மிகுந்தது. சங்க இலக்கியத்திலே குறிப்பிடப்படுவது.

பிற பின்!

N. Ganesan

unread,
Oct 31, 2016, 10:10:05 AM10/31/16
to மின்தமிழ்

On Sunday, October 30, 2016 at 10:17:26 PM UTC-7, இறையடியான் wrote:
எந்த ஒரு மதத்தின் உணர்வுகளையும் புண்படுத்தாமல் கருத்தை சொல்லலாம் என்பது எனது அபிப்பிராயம்

ஒரு இந்து கோயில் கிறித்தவ கோயிலாக்கப்பட்ட வரலாறுன்னு எழுதலாம் ஆனால் எதுவுமே ஆதராமாக பதிவு செய்யப்படவேண்டும் அன்பரே

இந்து கோயில் வேளாங்கண்ணியில் இருக்கிறதே. பழமை வாய்ந்தது. வட இந்திய சுல்தான்கள் படையெடுப்பின்போது
அதன் சில சிலைகள் புதைக்கப்பட்டன. இப்போது கிடைத்துள்ளது. அதனால், கோயில் கீர்த்தி மங்கியிருக்கலாம்.
அருணகிரிநாதர் காலம் வரும்போது வேளாங்கண்ணி வேள் பெருமையை அவருக்கு சொல்லப்படாமல் விட்டிருக்கலாம்.

கிறித்தவர்கள் தங்கள் மாதாவுக்கு ஒரு கோயில் கட்டியுள்ளார்கள். 

நா. கணேசன்
 
சொ. வினைதீர்த்தான்

unread,
Oct 31, 2016, 2:14:18 PM10/31/16
to mintamil
ஸ்ரீமுஷ்ணம் பூவராகவன் கோவிலுக்குப் பின்புறத்தில் மிகப்பெரிய தீர்த்தக் கரையில் பலகல்வெட்டுக்கள் உள்ள நிதீஸ்வரர் ஆலயம் உள்ளது. அக்கோயிலின் முருகனை அருணகிரிநாதர் பாடியுள்ளதாக இரண்டு திருப்புகழ் பாடல்கள் கல்லில் பதிந்துள்ளார்கள். எனவே வைணவத்தலத்துடன் இணைந்து சிவத்தலமாகவும் ஸ்ரீமுஷ்ணம் விளங்குகிறது. பூவராகன் கோவிலில் எந்த கல்வெட்டும் இல்லை. ஆனால் சிவன்கோவில் முழுவதும் கல்வெட்டுக்கள் நிறைந்துள்ளன திரு ஹரிகி.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

2016-10-31 10:03 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:

Dev Raj

unread,
Oct 31, 2016, 2:48:21 PM10/31/16
to மின்தமிழ்
வேளாங்கண்ணி மாதா கோவில் அருகே13 சாமி சிலைகள் கண்டெடுப்பு:
AUGUST 3, 2010

வேளாங்கண்ணியில் உள்ள புகழ் பெற்ற மாதா கோவில் ஆர்ச் அருகில் தீயணைப்புத்துறை அலுவலகம் உள்ளது. அதற்கு எதிரில் உள்ள வெற்றிடத்தை ஆரோக்கிய சாமி என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் விலைக்கு வாங்கினார். அந்த இடத்தில் வீடு கட்ட முடிவெடுத்தார் ஆரோக்கியசாமி. வீட்டின் அஸ்திவாரத்துக்கு குழி தோண்டியபோது, 3 சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இது குறித்து தொல்பொருள் ஆராய்ச்சித்துறைக்கு அவர் தகவல் கொடுத்தார். இந்த தகவல் மாவட்ட ஆட்சியருக்கும் கிடைத்தது. அங்கு வந்த மாவட்ட ஆட்சியர் முனியநாதன் முன்னிலையில் தொல்பொருள் ஆராய்ச்சித்துறையினர் மீண்டும் தோண்டினர். அப்போது மேலும் 10 சாமி சிலைகள் கிடைத்தன. இதையடுத்து, அந்த இடத்தில் மேலும் சிலைகள் கிடைக்க வாய்ப்பிருப்பதாக தொல்பொருள் ஆராய்ச்சித்துறையினர் தெரிவித்தனர்.

தேவ்

Dev Raj

unread,
Oct 31, 2016, 3:02:37 PM10/31/16
to மின்தமிழ்
On Monday, 31 October 2016 19:40:05 UTC+5:30, N. Ganesan wrote:
இந்து கோயில் வேளாங்கண்ணியில் இருக்கிறதே. பழமை வாய்ந்தது. வட இந்திய சுல்தான்கள் படையெடுப்பின்போது
அதன் சில சிலைகள் புதைக்கப்பட்டன. இப்போது கிடைத்துள்ளது. 

சுல்தான்கள் கீழைக் கடற்கரை வரை வந்ததற்கு ஆதாரம் உள்ளதா ?
கீழ்க்கடற்கரையில் அவர்கள் சிதைத்த ஆலயங்கள் எத்தனை ?
பழைய படிமங்களைப் புதைத்துவிட்டுப் புதிதாகச் செய்தனரா ?
புதையுண்ட படிமங்கள் பழமை வாய்ந்த ஆலயத்தின் அருகில்
கிடைத்தனவா ?

இத்தொடுப்பு படிமங்கள் சர்ச் அருகில் கிடைத்ததாகச் சொல்கிறதே
 
தேவ்

Dev Raj

unread,
Oct 31, 2016, 3:29:04 PM10/31/16
to மின்தமிழ்
On Monday, 31 October 2016 19:40:05 UTC+5:30, N. Ganesan wrote:
இந்து கோயில் வேளாங்கண்ணியில் இருக்கிறதே. பழமை வாய்ந்தது. வட இந்திய சுல்தான்கள் படையெடுப்பின்போது
அதன் சில சிலைகள் புதைக்கப்பட்டன. இப்போது கிடைத்துள்ளது. 

தஞ்சைப் பெரிய கோவிலும், திருவாரூர் ஆலயமும் முகமதியத் தாக்குதலுக்குள்ளாயினவா ?
கீழ்ப்புறம் கடற்கரையோரம் ஒதுங்கி இருக்கும் இந்த ஆலய மூர்த்திகளுக்கு முகமதியர்களால் ஊறு
நேர வழியில்லை என்றே தோன்றுகிறது

தேவ்

Dev Raj

unread,
Oct 31, 2016, 3:37:55 PM10/31/16
to மின்தமிழ்
On Sunday, 30 October 2016 01:48:10 UTC+5:30, N. Ganesan wrote:
கருங்கண்ணி - ஒரு மீன். Bigeye travelly. அழகான பெரிய கருங்கண் உடைய பாரைமீன். ஓங்கில் என்று டால்பின் பெயரால் நெய்தல் நிலப்
பெயர் ஊருக்கு ஈழத்திலே உண்டு. பழைய மடலில் எழுதியுள்ளேன். அதேபோல், கருங்கண்ணி மீன்வகையால் நெய்தல் திணையூர்.
“கருங்கண் வரால்” - சங்கம். 
 
அரியலூர் மாவட்டத்தில் ‘இடங்கண்ணி’ எனும் ஊர்

தேவ்

Oru Arizonan

unread,
Oct 31, 2016, 4:42:53 PM10/31/16
to mintamil

2016-10-31 12:29 GMT-07:00 Dev Raj <rde...@gmail.com>:
//தஞ்சைப் பெரிய கோவிலும், திருவாரூர் ஆலயமும் முகமதியத் தாக்குதலுக்குள்ளாயினவா ?
கீழ்ப்புறம் கடற்கரையோரம் ஒதுங்கி இருக்கும் இந்த ஆலய மூர்த்திகளுக்கு முகமதியர்களால் ஊறு
நேர வழியில்லை என்றே தோன்றுகிறது//

கீழைக் கடற்கரை ஆலயங்கள்  மட்டுமன்றி, முக்கியமாகத்,  தொல்லையும், திருவரங்கமும், மதுரையும்கூட மாலிக் காபூரின் தாக்குதலுக்கு உள்ளாகின என்று முகமதிய வரலாற்றால் எழுதியதாக எஸ். கிருஷ்ணசாமி அய்யங்காரும், [South India and her Mohammedan Invaders], S.A. ஸ்ரீனிவாச சாஸ்திரியும் அவர்களின் வரலாற்று நூல்களில் தக்க சான்றுகளுடன் எழுதியுள்ளார்கள்.

மாலிக் காபுரைத் தொடர்ந்து உலுக் கானும் [முகம்மது பின் துக்ளக்], தமிழ்நாட்டின்மீது படையெடுத்து பல ஆலயங்களை அழித்தார்கள்.

வேளாங்கண்ணியைப் பற்றி தகவல் எதுவும் இல்லை.  போர்ச்சுகீசியர் வந்த சமயம் அதற்குப் பிறகு என்றுதான் எண்ணுகிறேன்.
ஒரு அரிசோனன் 

Oru Arizonan

unread,
Oct 31, 2016, 4:45:42 PM10/31/16
to mintamil
தொல்லையும் ==>  தில்லையும்  என்று மாற்றிப்படித்துக்கொள்ளுங்கள்.  தட்டச்சுப்பிழைக்கு வருந்துகிறேன்.

அவ்வமயம், தில்லை ஆடலரசனின் திருவுருவம் பாதுகாப்பாக வைப்பதற்காக வேறிடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுத் திரும்பிக்கொணரப்பட்டது என்றும் வரலாற்றாளர்கள் கூறுகிறார்கள்.

--
பணிவன்புடன்,

N. Ganesan

unread,
Oct 31, 2016, 8:42:35 PM10/31/16
to மின்தமிழ், vallamai
On Sunday, October 30, 2016 at 9:33:37 PM UTC-7, Hari wrote:

2016-10-31 9:54 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
முருகன் பெயரோடு முருகனுக்கே உரிய ஆலயமாக ஒன்று விளங்கியிருக்கும்
பக்ஷத்தில் சோழநாட்டுப் பதிகளைப் பாடிய அருணகிரிநாதர், இத்தலத்தைப்
பாடாமல் ஒதுக்கி இருக்க மாட்டார்; இல்லையெனில் அப்பாடல்கள் நம்
கையகப் படாமல் மறைந்து போயிருக்க வேண்டும் 

பிரதானமாக முருகன் தலம் என்றில்லாத பல தலங்களையும் பாடியிருக்கிறார்.  உதாரணமாக திருமுட்டம் (தற்காலத்தில் ஸ்ரீமுஷ்ணம்).  இத்தலத்துக்கான பாடலும் உரையும் இன்றும் நாளையும் தினமணியில் அப்டேட் ஆகும்.

இப்படிப் பல தலங்கள் உண்டு.  வேள் ஆம் கண்ணி தலத்தை ஏன் பாடவில்லை என்பது சிந்தனைக்கு உரியது.  அப்படியொரு தலம் இருந்திருந்தால்.

வேளாங்கண்ணி தலம் - பழைய சிவன்கோயில் நல்ல நிலையில் இன்றும் உள்ளது:
வெள்ளிமலையப்பர் - வேல்நெடுங்கண்ணி திருக்கோயில்.  சோழர் காலச் சிலைகள் பல கிடைக்கின்றன.
முருகன் வில்லேந்திய கோலத்தில் இரு தேவிமாருடன் கிடைத்துள்ளான். வேளாங்கண்ணி ஊர்ப்பெயர் ஆதலின்
பொருத்தமாக ஸ்வாமி-அம்பாள் பெயர்கள். வேளாங்கண்ணியை ரஜதகிரீசுவரம் என முன்னாளில் மொழிபெயர்த்துள்ளனர்.
டில்லி வடவர் படையெடுப்பில் சில நூற்றாண்டுகள் கழித்து அவதரித்தவர் அருணகிரிநாதர். அப்போது இக்கோயில்
பிரசித்தி இல்லாமல் அவருக்கு யாரும் சொல்லாமல் இருக்கலாம். அல்லது, மறைந்துபோன திருப்புகழ்களில் இருக்கலாம்.

வேளங்கண்ணி  பகுதியில் டில்லித் துருக்கர் படையெடுப்பால் புதைக்கப்பட்ட பல சிலைகள் 10-15 மைல் வட்டாரத்தில்
பற்பல சிலைகள் கிடைத்துள்ளன. நாகசாமி போன்றோர் பத்தூர், சிவபுரம் சிலைகள் மீட்பு ....

வேளாங்கண்ணியில் கிடைத்த பல சோழர் சிற்பங்கள் 140 ஆண்டுகளாய் சென்னை ம்யூஸியத்தில் காட்சிப்படுத்தப்படுகின்றன.
உ-ம்: வேளாங்கண்ணி மாகேசுவரி: இவைஎல்லாம் மண்ணுள் புதையுண்டிருந்ததால் அருணகிரிநாதருக்கு தெரியவில்லையோ??

யாராகிலும் வேளாங்கண்ணி நடராஜாவை இங்கே இடலாம். சென்னை ம்யூஸியத்தில் இருந்து படமெடுத்து.

நா. கணேசன்

Dev Raj

unread,
Oct 31, 2016, 11:14:57 PM10/31/16
to மின்தமிழ்
கணேசர் அவர்களுக்கு நன்றி.

அவர் தந்துள்ள ஆதாரங்கள் கீழ்க்கடற்கரையில் சைவம் தன்படியே செழித்த நிலையில் இருந்ததை மேலும் மேலும்
உறுதி செய்கின்றன; காரைக்கால் அம்மை, வாயிலார் நாயனார்,அதிபத்த நாயனார், இயற்பகை நாயனார் போன்ற
 நாயன்மார்கள் கீழ்க் கடற்கரையில் அவதரித்துள்ளனர். முகமதியர் கடல் தலங்களைச் சேதப்படுத்தியதற்கு
ஆதாரம் காணப்படவில்லை.

மேலும் புத்தர் சிலைகளைத்  தோண்டி எடுத்தவண்ணம் உள்ளனர் எனும் செய்தியும்
பொய்த்துப்போகிறது.  

மயிலைக் கடற்கரையில் சம்பந்தர் பெருமான் பாடிய சிவாலயம் கிரித்தவரால் அழிக்கப்பட்டபின்
மாற்று ஏற்பாடாக ஏற்கெனவே சற்று உள்ளடங்கிய இடத்தில் அமைந்திருந்த சிங்கார வேலர்
ஆலயத்தினருகில் தற்போதைய கபாலீசுவரர் ஆலயம் நிறுவப்பட்டது. இந்தச் சிங்கார வேலர் ஆலயம்
தனித்த கொடிமரத்துடன் திகழும் எழில்மிக்க ஆலயமாகும்; சிங்கார வேலர் கிழக்கு நோக்கி
அமர்ந்துள்ளார்; ஈசனாருக்கும் முருகனுக்குமாக இரு  வேறு ஆலயங்கள் முன்பு இருந்துள்ளன. 
அதுபோல வேளாங்கண்ணியிலும் வில்லேந்திய வேலவருக்கும்,
ரஜத கிரீசுவரருக்கும் தனித்த ஆலயங்கள்  முன்பு இருந்திருக்க வாய்ப்புள்ளது.

இது மற்றொரு திறக்கிலும் ஆராய்ச்சியைத் தூண்டுகிறது. கடல் தலங்களில்
கார்த்திகேயர் தேவ ஸேநாபதியாக - யுத்த ஸந்நத்தராகப் போர்க்கோலம் தாங்கிய வடிவில் 
இருப்பதாக வடிவமைக்கும் மரபும் இருந்திருக்கலாம். சாயாவனம் ஆலயத்திலும் 
வில்லேந்திய வேலவர் உள்ளார்; வேளாங்கண்ணியிலும் அவ்வாறே. செந்திலம்பதி, செவ்வேள் 
போருக்குமுன் முக்கட்பிரானைப் பூசிக்கும் புகழ்பெற்ற தலம்.

ஆனால் வேளாங்கண்ணி மாதா கோயில் தொடர்பான ஐயப்பாடுகள் விடை காணாமல்
அப்படியே நிற்கின்றன

திருச்சாய்க்காடு :

தேவ்

Suba

unread,
Nov 1, 2016, 4:00:47 AM11/1/16
to மின்தமிழ், Subashini Kanagasundaram
மின்தமிழ் அன்பர்கள் அனைவருக்கும் எனது தாழ்மையான வேண்டுகோள்.
இந்தப்பதிவில் இனி பதிவுகளைத் தொடரவேண்டாம்.

குறிப்பாக திரு.தேவ், திரு.கணேசன், ஒரு அரிசோணன் அகியோருக்கு வலியுறுத்திக்கூறிக்கொள்கின்றேன்.

வேளாங்கண்ணி கோயில் தொடர்பான ஆய்வுகளை தனி இழையில் இனி தொடர்க. அதற்காக புது இழை ஒன்றினை தொடக்கியுள்ளேன்.

உங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி.

சுபா
மின்தமிழ் மட்டுறுத்துனர்

Dev Raj

unread,
Nov 2, 2016, 8:24:10 AM11/2/16
to மின்தமிழ்
சுபா அம்மையார் அவர்கள் கவனத்துக்கு,
 
மரபு விகியில் இருந்த எனது பதிவுகளை அகற்றி விட்டேன்,
அதிகமான பார்வைகள் பெற்ற சில பதிவுகள் உள்பட.
கவன ஈர்ப்புக் கிடைத்துவிடுமோ எனும் அச்சம் தேவையில்லை.

நன்றி

தேவ்

Dev Raj

unread,
Nov 8, 2016, 6:03:45 AM11/8/16
to மின்தமிழ்
தேமொழி அவர்கள் தெரிவித்த கருத்து [மயிலையார் எழுதிய நூலின் அடிப்படையில்] :

நாகைப்பட்டினத்துக்கு வடக்கே, ஒன்று அல்லது இரண்டு கல்தொலைவில், 'புது வெளிக் கோபுரம்' என்றும், 'சீனா கோயில்' என்றும், 'கறுப்புக் கோயில்' என்றும் பெயருள்ள ஒரு கோபுரம் இருந்ததென்றும், இக்கோபுரம் நாகைப்பட்டினத்துக்கு வருகிற கப்பல்களுக்கு ஒரு அடையாளமாகக் கடலில் தோன்றியதென்றும், இந்தக் கோபுரம் தாம் நேரில் 1846 -ஆம் ஆண்டில் கண்டதென்றும் சர். வால்டர் எலியட் (Sir Walter Elliot) என்பவர் எழுதியிருக்கின்றார். (படம் 1 காண்க).

படம் 1.

நாகைப்பட்டினத்தில் இருந்த பௌத்தக்கோயில் கோபுரம்.1846-இல் இந்த நிலையில் இருந்தது.

இந்தக் கோபுரம் இருந்த இடத்தில், ஏசுவின் சபைப் பாதிரிமார் இப்போது கட்டிடம் கட்டியிருக்கிறார்கள். 1867 -இல் இந்தக் கோபுரத்தை இடித்துவிட்டுக் கட்டிடம் கட்டிக்கொள்ள அரசாங்க உத்தரவுபெற்று இதை இடித்துப் போட்டார்கள்.

இவ்விடத்தில் இருந்த மிகப்பழைய இலுப்பை மரம் ஒன்றை ஏசுவின் சபைப் பாதிரிமார் 1856 -இல் வெட்டியபோது, அம்மரத்தின் அடியில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த ஐந்து சிறிய பௌத்த விக்கிரகங்களைக் கண்டெடுத்தனர். இவற்றில் நான்கு உலோகத்தினால் ஆனவை; ஒன்று பீங்கானால் செய்யப்பட்டது. இவற்றில் ஒன்று புத்தர் நின்று கொண்டு உபதேசம் செய்வதுபோல் அமைக்கப்பட்டது. கவர்னராயிருந்த நேப்பியர் பிரபு (Lord Napier) நாகைக்குச் சென்றபோது, பாதிரிமார் இதை அவருக்குக் கொடுத்தார்கள். ////

கிட்டத்தட்ட இதே போக்கில்தான் நானும் எழுதியுள்ளேன். 

மேற்கத்தியக் கிரித்தவர் சிவாலயத்தை இடித்தனர் என்று குற்றம் சாட்டவில்லை; ஐயப்பாட்டைத் தெரிவித்தேன். பழைய பவுத்த வழிபாட்டுத்தலத்தை இடித்தனர்; சிலைகள் மட்டும் கிடைத்துள்ளன. வேளாங்கண்ணியிலும் இதே விதமாகத்தான் வரலாறு அமைந்திருக்கக் கூடும்.

தேவ்

Reply all
Reply to author
Forward
0 new messages