வேளாங்கண்ணி

67 views
Skip to first unread message

DEV RAJ

unread,
May 29, 2016, 5:59:16 AM5/29/16
to வல்லமை

வேளாங்கண்ணி  [பகுதி 1]

 
நம்மில் பலர் நினைப்பதுபோல் இது கிரித்தவத் தலமன்று, சைவத் திருத்தலம்.


‘கண்ணி’ அழகிய விழிகள் பொருந்திய மகளிரைக் குறிக்கும் சொல். ‘காமக்கண்ணியார்’ குறிஞ்சித் திணை சார்ந்த அகப்பாடல்கள் பாடிய சங்ககாலப் பெண்பாற் புலவரது பெயர். 


தேவாரப் பாக்களை ஊன்றிப்படிக்கும்போது அம்பிகையின் பெயர்கள் பல தெரியவருகின்றன.

வேளாங்கண்ணியின் உண்மையான, பழைய பெயர்  “வேலன கண்ணி” ; அம்பிகைக்குத் தேவாரம் சூட்டிய திருநாமம்.

”மாலை மதியொடுநீ ரர வம்புனை வார்சடையான்
'வேலனகண்ணி'யொடும் விரும் பும்மிடம்.........” 

                                               - திருஞானசம்பந்தர்


சேல் [மீன்] போன்ற கண் அமைவதால் “சேலன கண்ணி”, வேல் போன்ற விழி இருப்பதால் “வேலன கண்ணி”. பிற்காலத்தில் வேளாங்கண்ணி எனத் திரிந்தது.


கருந்தடங் கண்ணி” என்னும் பெயரும் அம்மைக்கு உண்டு. ”வேலினேர்தரு கண்ணி” எனவும் தேவாரம் அம்மையைப் போற்றுகிறது. ”இருமலர்க் கண்ணி” இமவான் திருமகளாரின் மற்றோர் அழகிய பெயர்.


கோடியக்கரை - குழகர் ஆலயத்தில் அம்மையின் நாமம் ’மைத்தடங்கண்ணி’ ; சுந்தரர் தேவாரம். 

சேரமான் பெருமாள் நாயனாரும், சுந்தரமூர்த்தி சுவாமிகளும் ஒருசேர வருகை புரிந்து வழிபட்ட மிக முக்கியமான திருத்தலம். அருணகிரிநாதரும் பாடியுள்ளார். அமரர் கல்கியின் பொன்னியின் செல்வனில் இந்த இடம் சுட்டப்படுகிறது. இதுவும் ஒரு கடற்கரைச் சிவத்தலம்.


வாள்நுதற்கண்ணி” அன்னையின் கடைக்கண்பார்வை வீச்சு ஸ்தாணுவாக -பட்டகட்டையாகத் தவத்தில் ஆழ்ந்திருந்த ஐயனைச் சலனமடையச் செய்தது. விளைவு ?  “ஒரு திருமுருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய”
[”ந சேத் ஏவம் தேவோ ந கலு குஶல: ஸ்பந்திதும் அபி”- ஸௌந்தர்ய லஹரி கூறுவதை நினைவு கூர்க]


அம்பிகைக்கு “மானெடுங்கண்ணி” என்றும் ஒரு திருநாமம். ’மான்போன்ற மருண்ட பார்வையை உடையவள்’ என்பது பொருள் -

’மானெடுங்கண்ணி’ மணிக்கதவு அடைப்ப
இறையவன் இதற்குக் காரணம் ஏது என
மறிகடல் துயிலும் மாயவன் உரைப்பான்.....


அம்பிகையின் கயல் போன்ற விழிகளைக் காழிப்பிள்ளையார் பாடுகிறார் -
’நீலநன் மாமிடற்ற னிறைவன் சினத்தன் நெடுமா வுரித்த நிகரில்
சேலன கண்ணி”வண்ண மொருகூ றுருக்கொள் திகழ்தேவன் மேவு பதிதான்.....’


அழகியலில் தோய்ந்த தமிழடியவர்கள் அம்மைக்கு எண்ணற்ற இனிய நாமங்களைச் சூட்டி மகிழ்ந்துள்ளனர். 

இன்னும் சில பெயர்கள் - காவியங்கண்ணி, நீள் நெடுங்கண்ணி, வேல்நெடுங்கண்ணி,வரி நெடுங்கண்ணி, வாளார் கண்ணி.


வேளாங்கண்ணிக்கருகில் சுமார் 10கிமி தொலைவில் ‘கருங்கண்ணி’ எனும் ஊரும் அமைந்துள்ளது.

இதெல்லாம் தேவாரப் பாதிப்பன்றி வேறில்லை என உறுதிபடச் சொல்ல முடியும்.


www.thevaaram.org


சிவாலயங்கள்தோறும் ஓரிரு பதிகங்களையாவது பளிங்குப் பலகைகளில் பொறித்து வைப்பது அரசின் கடமை.





தேவ்

DEV RAJ

unread,
May 29, 2016, 11:38:15 AM5/29/16
to வல்லமை

வேளாங்கண்ணி  [பகுதி 2]

தமிழ்ச்சைவ வரலாற்றில் நாம் கருத்திற்கொள்ள வேண்டிய செய்தி ஒன்று : சமய குரவர் காலத்திற்குப்பின் எழுந்த சிவாலயங்களிலும் தேவார மூவர் அமைத்த முறையில் இறைவர் - இறைவியர்க்கு அருந்தமிழ்ப் பெயர்களே வழங்கின என்பதே அது.

கீழ்க்கடற்கரைப் பகுதியில் சைவம் செழிப்புற்றிருந்தது.
கீழைக் கடல் சார்ந்த பல ஆலயங்கள் - திருவொற்றியூர், மயிலைக் கபாலீசுவரர் ஆலயம், திருவான்மியூர் மருந்தீசுவரர் ஆலயம், புதுவை வேதபுரீசுவரர் ஆலயம், நாகபட்டினம் காயாரோஹணேசுவரர் ஆலயம், கோடியக்கரைக் குழகர் ஆலயம், வேதாரண்யம் -காரைக்கால் - புகார் ஆலயங்கள் போன்றவை முக்கியமானவை. வேளாங்கண்ணி ஆலயமும் இவற்றுள் ஒன்று. மீனவரான அதிபத்த நாயனார் அரனாருக்கு மீனை அர்ப்பணித்து முத்தி பெற்றார்.

முருகப்பெருமான் போருக்குப் புறப்படுமுன்பாக முக்கட்பிரானை வழிபட்ட கடல் தலம் திருச்செந்தூர்; புராண ஆதாரம் உள்ளது. இராமேசுவரம் இராமபிரான் வழிபட்ட உலகப்புகழ் பெற்ற கடல் தலம்.

”மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச் சரமமர்ந்தான்......”
                            - சம்பந்தர் பூம்பாவைப் பதிகம்

கடற்கரைத் தலங்களில் மாசி மகம் தீர்த்தவாரிக்கு இறைத் திருமேனிகளைக் கடற்கரைக்குக் கொண்டு சென்று தீர்த்தவாரி செய்விப்பது இன்றுவரை நடைபெற்று வரும் திருவிழா.

சில நூற்றாண்டுகளுக்குமுன் கடற்கரைப் பகுதிகளில் குடியேறி அவற்றைக் கைப்பற்றிய கிரித்தவர் ஆலயங்களை அழித்தனர். சென்னை கபாலீசுவரர் ஆலயம், புதுவை வேதபுரீசுவரர் ஆலயம் - கிரித்தவச் சகிப்புத்தன்மைக்கு மிகச் சிறந்த சான்றுகள்.

புதுவையில் வாழ்ந்த துவிபாஷி ஆனந்தரங்கம் பிள்ளை அவர்கள் தம் நாட்குறிப்பில் ஆலயச் சிதைப்புக் குறித்த விவரங்கள் பதிவு செய்துள்ளார் -http://www.columbia.edu/itc/mealac/pritchett/00litlinks/pillai/

பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களும் இது பற்றி எழுதியுள்ளார். ஆலயச் சிலைகள் அகற்றப்பட்டன. பெருமாள் கோவிலின் படிமங்கள் புதுவைக்கருகில் வைத்திக்குப்பம் கடற்கரையில் மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்டன. 1748ல் புதுவையின் பல ஆலயங்கள் அழிக்கப்பட்டன. எஞ்சியவை ஒருசில ஆலயங்களே.

கொங்கணப் பிராந்தியத்திலும் பல ஆலயங்களை மேற்கத்தியர் அழித்தனர். 1567ல் போர்த்துகீசியர் கோவாவில் தரைமட்டமாக்கிய ஆலயங்களின் எண்ணிக்கை 350. இந்துக்கள் துளசிச்செடி வளர்ப்பதற்குக்கூடத் தடை இருந்தது.

வேளாங்கண்ணிப் பகுதி சைவம் செழிப்புற்றிருந்த இடம். புதையுண்ட ஐம்பொன் படிமங்கள் பல கிடைத்துள்ளன.





தேவ்

DEV RAJ

unread,
Sep 6, 2016, 10:49:18 PM9/6/16
to வல்லமை
இதன் ஆங்கில வடிவம் -


தேவ்

DEV RAJ

unread,
Sep 6, 2016, 10:58:29 PM9/6/16
to வல்லமை
Ishwar SharaN ji -

The term ‘basilica‘ is Greek and was used by the Romans to identify their town house or city hall (city’s administrative centre). These buildings had a certain kind of architecture which was later taken over by Christians when they gained social and political power in the Roman Empire and needed big showy churches.

So a basilica church is one built in a certain architectural style, almost always being the cathedral church of the bishop. Many of the old churches of Europe are built in the basilica style.

Later the term came to signify an important pilgrimage church or one with certain ritual privileges. For example San Thome Cathedral Basilica is a minor basilica and the only special privilege it affords the Mylapore bishop is that he has his own altar to say Mass and doesn’t have to share an altar with the parish priest. This gives him ecclesiastical status. San Thome Cathedral is also an important pilgrimage centre for Christians because of the St Thomas fable the Portuguese created and imposed on Madras and Mylapore.

India has three minor baslicas. The most important and oldest is the Basilica of Bom Jesus in Old Goa, which contains the remains of the Spanish missionary pirate ‘St’ Francis Xavier.

The Basilica of Our Lady of Good Health at Velankanni is designated a minor basilica only because it has become through religious propaganda a famous pilgrimage center for Christians. It generates huge profits for the Catholic Church. There is no other reason for this designation whatever the newspaper columnists and TV commentators may say.



Reply all
Reply to author
Forward
0 new messages