ஆரோக்கிய வாழ்விற்கு வழிகோலும் மத்தியதரைக்கடல் நாடுகளின் உணவுமுறை

1,031 views
Skip to first unread message

தேமொழி

unread,
Apr 3, 2016, 1:01:23 AM4/3/16
to மின்தமிழ்
நன்றி சிறகு: http://siragu.com/?p=20170

ஆரோக்கிய வாழ்விற்கு வழிகோலும் மத்தியதரைக்கடல் நாடுகளின் உணவுமுறை



arokiya vaazhvirku1மெடிட்டரேனியன் டயட் (Mediterranean Diet) என்ற பத்திய உணவுமுறை ஒரு ஆரோக்கியமான உணவுமுறை என்று மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் உணவுமுறையாகும். இந்த மாதம், மார்ச் 2016, தேசிய ஊட்டச்சத்து மாதம் (March is National Nutrition Month 2016) என்பதால் இந்த உணவுமுறை மீண்டும் இம்மாதம் பரவலாக செய்திகளில் பேசப்படுகிறது. உலகப்புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மருத்துவப்பிரிவு பிரசுரிக்கும் “ஹார்வர்ட் ஹார்ட் லெட்டர்”(Harvard Heart Letter – http://www.health.harvard.edu/newsletters/harvard_heart_letter/2016/april) என்ற செய்தி அறிக்கையின் சமீபத்தியப் பதிப்பு (ஏப்ரல் – 2016); மெடிட்டரேனியன் டயட் உணவுமுறை இதயநோய் வருவதைத் தடுக்க உதவும் என்பதுடன் நிரந்தர உடல் எடை குறைப்பிற்கும் உதவுகிறது என்று குறிப்பிட்டுள்ளது. ஐந்து ஆய்வறிக்கைகளை ஆராய்ந்து இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

சற்றொப்ப 1,000 அதிக எடையும், உடற்பருமனும் (overweight or obese people) கொண்டவர்கள் பங்குபெற்ற ஆய்வில் மெடிட்டரேனியன் டயட் உணவு முறையுடன், பிற உடல் எடை குறைக்கப் பரிந்துரைக்கப்படும் உணவு முறைகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அவை முறையே குறைந்த கொழுப்பு உணவு (low-fat diet), குறைந்த மாவுச்சத்து உணவு (low-carb diet), மற்றும் அமெரிக்க நீரிழிவு சங்கம் (ADA-American Diabetes Association) பரிந்துரைக்கும் உணவு ஆகிய உணவு முறைகளாகும். ஒரு ஆண்டுக்குப்பிறகு மெடிட்டரேனியன் டயட் உணவு முறையைப் பின்பற்றியவர்கள் 5 முதல் 10 கிலோ வரை எடை குறைந்திருப்பதும், குறைந்த கொழுப்பு உணவு முறையைப் பின்பற்றியவர்களையும் விட அதிக எடை குறைந்தவர்களாக அவர்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

verkadalai8உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்குப் பலவகை உணவுமுறைகளைப் பின்பற்ற வாய்ப்பிருந்தாலும், 30% மாரடைப்பையும் பக்கவாதத்தையும் தடுக்க உதவும் மெடிட்டரேனியன் டயட் முறையைப் பின்பற்றுவதை கடைப்பிடிக்கலாம், இதய நோய்களைத்தடுக்க மெடிட்டரேனியன் டயட் உணவு முறை சிறந்தது என்று அந்த அறிக்கையில் அறிவுரையும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆம்! ஆரோக்கிய வாழ்விற்குப் பலவகை உணவுமுறைகளைப் பின்பற்றி உணவுக்கட்டுப்பாட்டில் இருக்க விரும்புபவர்களுக்கு, நிரந்தரமாகப் பலனளிப்பது ஒரு சில உணவு முறைகளே. அதிலும் மருத்துவர்களால் உடல்நலத்திற்கு ஏற்ற, சமச்சீர் ஊட்டச்சத்து கொண்ட, சரிவிகித உணவு முறை என்றுஇதயநோய், நீரிழிவு நோய் போன்றவை வருவதைத் தடுக்க உதவும் உணவுமுறைகள் என்று பரிந்துரைக்கப்படும் முறைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். பெரும்பான்மையான உடல் எடையைக் குறைக்கப் பரிந்துரைக்கப்படும் உணவு முறைகள் ஏதோ ஒருவகையில் சமச்சீரற்ற உணவுவகையாக அமைவதுடன், சுவையிலும், நடைமுறையில் கடைபிடிப்பதிலும் குறைவைப்பதால் சிறிது நாட்களுக்குப் பிறகு அந்த உணவுமுறைகள் கைவிடப்படுவதும் வழக்கம். பல உணவுமுறைகளைப் பயன்படுத்திப் பார்த்து கைவிட்டவர்கள் ஏராளமானோர்.

arokiya vaazhvirku2உடலெடையைக் குறைப்பதற்கு என்று பரிந்துரைக்கப்படும் உணவுமுறைகள் யாவுமே உண்பதைக் குறைக்கவும், பசி எழாமல் வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுக்கும் உணவுகளை உண்பதற்கும் பரிந்துரைக்கும். அவை கார்போஹைட்ரேட் என்ற மாவுச்சத்து அல்லது சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதையும், வயிறு முழுமையடையும் உணர்வைத் தரும் புரதச்சத்துக்களையும், நார்ச்சத்துக்களை அதிகரிப்பதையும் முதன்மைப்படுத்தும். அதிகக் கொழுப்புவகைகளை, குறிப்பாக இதயத்திற்குத் தீங்கு விளைவிக்கும் கொழுப்பு வகைகளைக் கட்டுப்படுத்துவதைக் குறிக்கோளாகவும் கொண்டிருக்கும். இந்த அடிப்படையைப் பலவகைகளில் மாற்றியமைத்து உணவின் அளவைக் குறைப்பதையும் அத்துடன் உடற்பயிற்சியை அதிகரிக்கும் அறிவுரைகளும் கொடுக்கப்படும்.

ஆரோக்கியமான உணவை உடலுக்குத் தேவையான முறையில், வயதுக்கு ஏற்ற வகையில், செய்யும் உடல் உழைப்பிற்குத் தக்க அளவில் உண்பதும் உடற்பயிற்சியும் தொடர்ந்து மருத்துவர்களால் ஆரோக்கிய வாழ்விற்காகப் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது, இதில் இன்று வரை எந்த மாறுதலும் இல்லை.

இதயநோய் வருவதைத் தடுக்க உதவும் என்று பரிந்துரைக்கப்படும் மெடிட்டரேனியன் டயட் என்பது மத்தியதரைக்கடலைச் சுற்றியுள்ள நாடுகளில் வசிக்கும் மக்கள் காலம் காலமாகப் பின்பற்றும் உணவு முறை. இது தாவர உணவு முறையை முதன்மையாகக் கொண்டது. இந்த உணவு முறையில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், அவரை, மொச்சை, பயறு, பருப்பு, கொட்டை வகைகள், மூலிகைகள், மீன், கடல் உணவு மற்றும் ஆலிவ் எண்ணெய் ஆகியன நிறைந்திருக்கும். முட்டை, பால், தயிர், பாலாடைக் கட்டி, பறவைக்கறி ஆகியவை மிகக் குறைவாக உட்கொள்ளப்படும். சிவப்பிறைச்சி, அதிகக் கொழுப்பு, உப்பு நிறைந்த உணவுகள் தவிர்க்கப்படும். இந்த உணவும் அதை உண்ணும் கலாச்சார முறையும் யுனெஸ்கோ (UNESCO) நிறுவனத்தால் மானுடவியல் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பல மருத்துவ ஆய்வறிக்கைகள் மெடிட்டரேனியன் டயட் உணவுமுறையைப் பின்பற்றினால் மாரடைப்பு (heart attack), பக்கவாதம் (stroke), சர்க்கரை/நீரிழிவு நோய் (type 2 diabetes), உயர் இரத்த அழுத்தம் (high blood pressure), முடக்கு வாதம் (Rheumatoid arthritis), மன அழுத்தம் (Depression), மறதி நோய்கள் (Parkinson’s disease and Alzheimer’s disease), புற்றுநோய் (Cancer) ஆகியவை தடுக்கப்படும் என்றும்ஆயுள் (longevity) அதிகரிக்கும், முதுமையின் அறிகுறிகள் (Aging) தாமதப்படுத்தப்படும் என்றும் தொடர்ந்து கூறி வருகின்றன.

இவ்வாறு தொன்றுதொட்டு கடைபிடிக்கும் ஆரோக்கிய உணவுமுறையினால் மத்தியதரைக்கடல் நாடுகளின் பகுதிகளில் வாழும் மக்களிடம் நோய்கள் குறைவாக இருப்பதும், அவர்கள் நீண்ட நாள் வாழ்வதையும் கவனித்தப் பிறகு இந்த உணவுமுறை “மெடிட்டரேனியன் டயட் ” என அமெரிக்க மக்களிடம் அறிமுகப்படுத்தப்பட்டு சற்றொப்ப ஒரு கால் நூற்றாண்டும் ஆகிறது. ஒவ்வொரு உணவிலும் சிவப்பிறைச்சி, அதிக சர்க்கரை கொண்ட பானங்கள், மாவுச்சத்து நிறைந்த உணவுகள், அதிகக் கொழுப்பு நிறைந்த உணவுகள் என்பது போன்ற உணவுப் பழக்கத்தினைக் கடைப்பிடிக்கும் அமெரிக்க மக்களுக்கு இந்த ஆரோக்கிய மெடிட்டரேனியன் டயட் உணவுமுறை 1993 ஆண்டு ‘ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் மருத்துவப்பள்ளி’, ‘உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய அலுவலகம்’ மற்றும் ‘ஒல்ட்வேஸ்’ என்ற அமைப்பு (the Harvard School of Public Health, the European Office of the World Health Organization and Old ways) ஆகியன ஒருங்கிணைந்து உருவாக்கி, ஹார்வர்ட் பல்கலைக்கழக கருத்தரங்கு ஒன்றில், உணவுப் பிரமிடு படத்துடன், உணவுமுறையைக் கடைப்பிடிக்கும் விளக்கத்துடன் வெளியிட்டன.

arokiya vaazhvirku13இந்த உணவுப் பிரமிடு 1960-களில் மத்திய தரைக்கடல் நாடுகளில் நோய்கள் குறைவாக இருந்தபொழுதும், மருத்துவ வசதிகள் இல்லாத இடங்களிலும் மக்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்த காலத்தில் அவர்கள் உட்கொண்ட உணவுமுறையைப் பின்பற்றியும், தற்கால அறிவியல் ஆய்வுகள் வழியாகக் கிடைத்த முடிவுகளைக் கொண்டும் வடிவமைக்கப்பட்டது. இந்த உணவுப் பிரமிடு பல ஆரோக்கிய உணவுமுறைகளைப் வடிவமைப்பதற்கும் வழி காட்டியாக அமைந்தது. எனவே தொன்றுதொட்டு பலன்தரும் உணவுக் கலாச்சாரம் ஒன்று மேற்குலகில் மக்களின் கவனத்தைக் கவர்ந்து, அரை நூற்றாண்டாக அமெரிக்க மண்ணிலும் மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆனாலும், அவசரகதி வாழ்க்கையில் சிவப்பிறைச்சி, பதப்படுத்தப்பட்ட உணவு, விரைவுணவு, அதிக இனிப்புகள், இனிப்பு நிறைந்த பானங்கள், குறைந்த அளவே உணவில் காய்களும் பழங்களும், அதிகக் கொழுப்பு, அதிக மாவுச்சத்து என்ற உணவுமுறையும், உடற்பயிற்சியே இல்லாத வாழ்க்கைமுறைதான் பெரும்பாலான அமெரிக்கர்களின் வாழ்க்கைமுறையாக அமைந்து உடற்பருமன், அதன் விளைவாக இரத்த அழுத்தம், இதயநோய், சர்க்கரை நோய் என்பது மாற்ற முடியாத வழக்கங்கள் மக்களிடம் நிலைபெற்றுவிட்டது.

மெடிட்டரேனியன் டயட் என்பதன் அடிப்படை:

மத்தியதரைக்கடலைச் சூழ்ந்துள்ள நிலப்பரப்பில் உள்ள நாடுகளில்; குறிப்பாக சைப்ரஸ், குரோஷியா, ஸ்பெயின், கிரீஸ், இத்தாலி, மொராக்கோ, போர்ச்சுகல் (Cyprus, Croatia, Spain, Greece, Italy, Morocco, Portugal) ஆகிய நாட்டு மக்களின் உணவுப் பழக்கமும், வாழ்க்கை நடைமுறைகளையும் அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட உணவுமுறையே மெடிட்டரேனியன் டயட் என்பதன் அடிப்படை. மெடிட்டரேனியன் டயட் முறையைப் பின்பற்றுவோர்…

1. arokiya vaazhvirku4ஆலிவ் எண்ணெய்யை உணவின் முதன்மைக் கொழுப்பாக அல்லது எண்ணெய்யாகப் பயன்படுத்த வேண்டும். ஆலிவ் எண்ணெய்யில் உள்ள வைட்டமின் E, பீட்டா கரோட்டின், மோனோ அன்சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட் (vitamin E, beta-carotene, monounsaturated fatty acid) ஆகியவை இதயநோய்களை தடுக்க உதவுகிறது. அத்துடன் சமைக்கும் உணவையும் சுவை மிகுந்ததாக மாற்றுகிறது.

2. arokiya vaazhvirku5அதிகக் காய்கறிகளையும், பழங்களையும், கொட்டைகளையும், பருப்பு, பயறு வகைகளையும் உண்ண வேண்டும். காய்கறிகள் மற்றும் பழங்கள் மூலம் நார்ச்சத்து, வைட்டமின் என்னும் உயிர்ச்சத்துக்கள், தாதுப்பொருட்கள் ( fibre, vitamins, and minerals) ஆகியவையும், நீரும் நம் உடலுக்குக் கிடைக்கின்றன. தினமும் 5 பழம் அல்லது காய்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பசுமையான தாவர உணவுகளில் உள்ள அதிக ஆன்டி ஆக்சிடென்ட்ஸ் (antioxidants), நார்ச்சத்து ஆகியன முதுமை அறிகுறிகளைத் தாமதப்படுத்துவதுடன், இதயநோய், சிலவகைப் புற்றுநோய் ஆகியவற்றையும் தவிர்க்கவும் உதவுகின்றன.

3. arokiya vaazhvirku6ரொட்டி மற்றும் பிற தானிய உணவுகளை (பாஸ்டா, அரிசி, முழு தானியங்கள்) தினமும் உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவற்றினால் உடலுக்குச் சக்தி கொடுக்கும் கார்போஹைட்ரேட் என்ற மாவுச் சத்துகள் நம் உடலில் சேரும். நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் ஆகியவற்றையும் தானிய உணவு நமக்குக் கொடுக்கின்றன.

4. புதியவனவாக உள்ளூர் சந்தையில் கிடைக்கும் பொருட்களை, அந்தந்த பருவகாலத்தில் கிடைக்கும் உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்பது ஊட்டச்சத்தும், சுவையும் மணமும் நிறைந்த உணவாக அமையும். வேதிப்பொருட்களால் பதப்படுத்தப்பட்ட, அதிக நாட்கள் சேமித்து வைத்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

5. lacteosபால், பால் பொருட்களை முக்கியமாகத் தயிர் மற்றும் சீஸ் என்னும் பாலாடைக்கட்டி உணவுகளைத் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பால் பொருட்களின் மூலம் உடலுக்குத் தேவையான புரதங்கள் (proteins), கால்சியம், பாஸ்பரஸ் முதலிய தாதுப்பொருட்கள் அல்லது கனிமங்கள், வைட்டமின்கள் கிடைக்கின்றன. நொதிக்கவைக்கப்பட்ட அல்லது புளித்த தயிர் போன்ற பால் பொருட்களில் உள்ள நுண்ணுயிர்கள் குடலின் நலத்தை மேம்படுத்த உதவுகின்றன.

6. arokiya vaazhvirku8மிகக் குறைந்த அளவே சிவப்பிறைச்சியை உண்ணவேண்டும், இயன்றால் தவிர்த்துவிட வேண்டும். பிற உணவுகள் தயாரிப்பில் சிவப்பிறைச்சியையோ, பதப்படுத்திய சிவப்பிறைச்சியையோ சிறிதளவு எப்பொழுதாவது சேர்த்துக் கொள்ளலாம். சிவப்பிறைச்சியை முதன்மை உணவாக உட்கொள்ளக்கூடாது. சிவப்பிறைச்சியில் இரும்புச் சத்தும், புரதமும் இருந்தாலும், அதிக அளவில் கொழுப்பும் உள்ளது. அதிக அளவு கொழுப்பு உடலுக்கு ஊறு விளைவிக்கும், உறைகொழுப்பாக இரத்த நாளங்களில் படிந்து அவை அடைப்பை ஏற்படுத்தி இதயநோய்க்கு அடிகோலும். எனவே இவற்றை முடிந்தவரைத் தவிர்த்துவிட வேண்டும்.

7. trout filletமுட்டையைக் குறைந்த அளவிலும், மீன்களை அதிக அளவிலும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சிவந்த நிற மீன் இறைச்சி கொண்ட, கொழுப்புச் சத்து அதிகமுள்ள மீன்களை வாரத்திற்கு இருமுறையாவது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மீன் இறைச்சி விலங்கு இறைச்சி வகையைச் சேர்ந்தவை என்றாலும் மீனில் உள்ள கொழுப்பு தாவரக் கொழுப்பிற்கு இணையானது. இதயத்திற்கு நலம் தரும் கொழுப்பு வகையைச் சார்ந்தது. முட்டை இன்றியமையாப் புரதங்கள், உயிர்ச்சத்துக்கள், தாதுப்பொருட்கள், கொழுப்பு   ஆகியவை அடங்கிய ஒரு முழுமையான உணவு. எனவே மீனுக்குப் பதிலாகவோ அல்லது இறைச்சிக்குப் பதிலாகவோ வாரம் மூன்று அல்லது நான்குமுறை வரைகூட முட்டையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மீன் அல்லது இறைச்சிக்கு நல்லதொரு மாற்று உணவு பலவகை சத்துக்கள் முழுமையாக நிறைந்த முட்டை.

8. arokiya vaazhvirku10புதிய பழங்களில் கிடைக்கும் இனிப்பு மட்டுமே தினசரி உண்ணும் இனிப்பாக இருக்க வேண்டும். பாலில் செய்தஇனிப்புகளோ, அல்லது மற்ற கேக், ஐஸ்க்ரீம் போன்ற பிற இனிப்புச் சிற்றுண்டிகளையோ எப்பொழுதாவது ஒருமுறை மட்டுமே உண்ண வேண்டும். இனிப்புச் சிற்றுண்டிகள் தினசரி உணவில் இடம் பெறக்கூடாது. இனிப்புகளுக்கு நல்லதொரு மாற்று உணவாக ஊட்டச்சத்துகள் நிறைந்த பழங்களை மட்டுமே கருத வேண்டும்.

9. arokiya vaazhvirku11அதிக அளவு நீர் குடிக்க வேண்டும். சிவப்பு வைன் மதுக் குடிக்கும் பழக்கமுள்ளோர் மிகக் குறைந்த அளவு உணவின் ஒரு பகுதியாக அதனை அருந்தலாம். வைன் மெடிட்டரேனியன் டயட்டின் ஒரு கலாச்சார அடிப்படையாக இருந்தாலும், அது சில உடல் நலப் பலன்கள் கொடுத்தாலும், வைன் மதுவைக் குறைந்த அளவே சமச்சீர் உணவின் பகுதியாகக் கொண்டு, அதிக அளவிலான நீரைச் சரிவிகித உணவின் அடிப்படையாகக் கொள்ள வேண்டும். போதைக்கு அடிமைப்படுத்திவிடும் மதுவைத் தவிர்த்தலே நலம்.

10. arokiya vaazhvirku12ஆரோக்கிய உணவை உண்பது மட்டுமல்லாமல், தேவையான அளவு உடற்பயிற்சியும் செய்ய வேண்டும். சுறுசுறுப்பான முறையில் உடலுக்குப் பயிற்சி கொடுப்பதும் உடல்நலம் பேணும் ஆரோக்கிய வாழ்விற்கு இன்றியமையாத அடிப்படை வாழ்க்கைமுறை.

சுருக்கமாக, தேவையான அளவு ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சியைப் பகுதியாகக் கொண்ட வாழக்கைமுறை ஆகியவற்றைத் தொடர்ந்து கடைப்பிடிப்பது நோயற்ற நீண்ட ஆயுளுக்கு வழி வகுக்கும் என்பது மெடிட்டரேனியன் டயட் உணவுமுறையின் அடிப்படை.

______________________________________________________________


மேலும் மெடிட்டரேனியன்  டயட் பற்றிய தகவலுக்கு: 

Mediterranean diet beats low-fat diet for long-term weight loss; Harvard Heart Letter –  April 1, 2016

http://www.health.harvard.edu/staying-healthy/mediterranean-diet-beats-low-fat-diet-for-long-term-weight-loss

.

Systematic Review of the Mediterranean Diet for Long-Term Weight Loss. Mancini, Joseph G. et al.

The American Journal of Medicine , Volume 129 , Issue 4 , 407 - 415.e4  – Dec. 22, 2015, issue of The American Journal of Medicine.

http://www.amjmed.com/article/S0002-9343(15)30027-9/abstract

.

An Olive a Day? The Preventive Power of the Mediterranean Diet

Richard W. Besdine, M.D.; Medical Officer, American Federation for Aging Research,  – 03/23/2016

http://www.huffingtonpost.com/richard-w-besdine-md/an-olive-a-day-the-preven_b_9531392.html

.

The Complete Mediterranean Diet: Everything You Need to Know to Lose Weight and Lower Your Risk of Heart Disease... with 500 Delicious Recipes Paperback – April 29, 2014, by Michael Ozner 

http://www.amazon.com/The-Complete-Mediterranean-Diet-Everything/dp/1939529956

.

Mediterranean diet (Cyprus, Croatia, Spain, Greece, Italy, Morocco, Portugal); Inscribed in 2013 (8.COM) on the Representative List of the Intangible Cultural Heritage of Humanity.

http://www.unesco.org/culture/ich/en/RL/mediterranean-diet-00884

.

Mediterranean Diet Pyramid, Traditional Med Diet

http://oldwayspt.org/



***


மெடிட்டரேனியன்  டயட் நோய் தவிர்க்க உதவுவதாகக் கூறும்  ஆய்வுக் கட்டுரைகள்:

Primary Prevention of Cardiovascular Disease with a Mediterranean Diet

Ramón Estruch, M.D., Ph.D. et al., 

http://www.nejm.org/doi/full/10.1056/NEJMoa1200303?query=featured_home

.

Plasma Phospholipid Long-Chain ω-3 Fatty Acids and Total and Cause-Specific Mortality in Older Adults: A Cohort Study

Dariush Mozaffarian, MD, DrPH;  et al., 

http://annals.org/article.aspx?articleid=1671714

.

Adherence to a Mediterranean diet and risk of incident cognitive impairment

Georgios Tsivgoulis, MD, et al., 

http://www.neurology.org/content/80/18/1684.short?sid=ecbc0e41-026a-4ebd-81ee-7a402bc5d5d0

.

Mediterranean Diet and Invasive Breast Cancer Risk Among Women at High Cardiovascular Risk in the PREDIMED Trial: A Randomized Clinical Trial. Toledo E, Salas-Salvadó J, Donat-Vargas C, et al.JAMA Intern Med. 2015;175(11):1752-1760. doi:10.1001/jamainternmed.2015.4838.

http://archinte.jamanetwork.com/article.aspx?articleid=2434738

.

Rheumatoid arthritis management with nutrition, Mediterranean and anti-inflammatory diets

By: Emily Lunardo | Arthritis | Thursday, March 24, 2016

http://www.belmarrahealth.com/rheumatoid-arthritis-management-with-nutrition-mediterranean-and-anti-inflammatory-diets/

.

Mediterranean Diet May Help Preserve Memory

http://www.medpagetoday.com/TheGuptaGuide/Neurology/38746

.

Research shows Mediterranean diet can help fight depression, Extra virgin olive oil is crucial ingredient

http://www.click2houston.com/news/research-shows-mediterranean-diet-can-help-fight-depression


______________________________________________________________

செல்வன்

unread,
Apr 4, 2016, 10:13:02 AM4/4/16
to mintamil
இதில் மிகப்பெரிய கொடுமை என்னவெனில் இந்த டயட்டுக்கு மெடிட்டெரேனியன் டயட் என பெயர் வைத்தது தான். மெடிட்டரேனியன் பகுதியில் சிகப்பிறைச்சியை தவிர்ப்பார்கள் என்றால் அவர்கள் விழுந்து, விழுந்து சிரிப்பார்கள். அதிலும் காய்கறி, நட்ஸ் எல்லாம் தான் முதன்மை, இறைச்சி குறைவு என்றால் நல்ல காமடி.

இத்தாலியில் சராசரியாக ஆண்டுக்கு நபர் ஒருவர் 91 கிலோ சிகப்பிறைச்சி உண்கிறார். கிரேக்கத்தில் 83 கிலோ. ஒபீட்ட்டுக்கு உலக சராசரி 41 கிலோ, அமெரிக்க சராசரி 122 கிலோ.


தேமொழி

unread,
Apr 4, 2016, 1:13:37 PM4/4/16
to மின்தமிழ்


On Monday, April 4, 2016 at 7:13:02 AM UTC-7, செல்வன் wrote:
இதில் மிகப்பெரிய கொடுமை என்னவெனில் இந்த டயட்டுக்கு மெடிட்டெரேனியன் டயட் என பெயர் வைத்தது தான். மெடிட்டரேனியன் பகுதியில் சிகப்பிறைச்சியை தவிர்ப்பார்கள் என்றால் அவர்கள் விழுந்து, விழுந்து சிரிப்பார்கள். அதிலும் காய்கறி, நட்ஸ் எல்லாம் தான் முதன்மை, இறைச்சி குறைவு என்றால் நல்ல காமடி.

இத்தாலியில் சராசரியாக ஆண்டுக்கு நபர் ஒருவர் 91 கிலோ சிகப்பிறைச்சி உண்கிறார். கிரேக்கத்தில் 83 கிலோ. ஒபீட்ட்டுக்கு உலக சராசரி 41 கிலோ, அமெரிக்க சராசரி 122 கிலோ.




The Island Where People Forget to Die

Ikaria: The Mindful Mediterranean Diet on the Greek Island Where People Forget to Die

"ikaria greece diet"


 இக்காரியன் மக்களின் உணவுமுறை... நீங்களே இந்தக் கதையை குழுமத்தில் எழுதிய நினைவு உள்ளதா? 

கட்டுரையில் கீழ்காணும் பகுதி உள்ளது செல்வன்.


இவ்வாறு தொன்றுதொட்டு கடைபிடிக்கும் ஆரோக்கிய உணவுமுறையினால் மத்தியதரைக்கடல் நாடுகளின் பகுதிகளில் வாழும் மக்களிடம் நோய்கள் குறைவாக இருப்பதும், அவர்கள் நீண்ட நாள் வாழ்வதையும் கவனித்தப் பிறகு இந்த உணவுமுறை “மெடிட்டரேனியன் டயட் ” என அமெரிக்க மக்களிடம் அறிமுகப்படுத்தப்பட்டு சற்றொப்ப ஒரு கால் நூற்றாண்டும் ஆகிறது. ஒவ்வொரு உணவிலும் சிவப்பிறைச்சி, அதிக சர்க்கரை கொண்ட பானங்கள், மாவுச்சத்து நிறைந்த உணவுகள், அதிகக் கொழுப்பு நிறைந்த உணவுகள் என்பது போன்ற உணவுப் பழக்கத்தினைக் கடைப்பிடிக்கும் அமெரிக்க மக்களுக்கு இந்த ஆரோக்கிய மெடிட்டரேனியன் டயட் உணவுமுறை 1993 ஆண்டு ‘ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் மருத்துவப்பள்ளி’, ‘உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய அலுவலகம்’ மற்றும் ‘ஒல்ட்வேஸ்’ என்ற அமைப்பு (the Harvard School of Public Health, the European Office of the World Health Organization and Old ways) ஆகியன ஒருங்கிணைந்து உருவாக்கி, ஹார்வர்ட் பல்கலைக்கழக கருத்தரங்கு ஒன்றில், உணவுப் பிரமிடு படத்துடன், உணவுமுறையைக் கடைப்பிடிக்கும் விளக்கத்துடன் வெளியிட்டன.arokiya vaazhvirku13இந்த உணவுப் பிரமிடு 1960-களில் மத்திய தரைக்கடல் நாடுகளில் நோய்கள் குறைவாக இருந்தபொழுதும்,ருத்துவ வசதிகள் இல்லாத இடங்களிலும் மக்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்த காலத்தில் அவர்கள் உட்கொண்ட உணவுமுறையைப் பின்பற்றியும், தற்கால அறிவியல் ஆய்வுகள் வழியாகக் கிடைத்த முடிவுகளைக் கொண்டும் வடிவமைக்கப்பட்டது. இந்த உணவுப் பிரமிடு பல ஆரோக்கிய உணவுமுறைகளைப் வடிவமைப்பதற்கும் வழி காட்டியாக அமைந்தது. எனவே தொன்றுதொட்டு பலன்தரும் உணவுக் கலாச்சாரம் ஒன்று மேற்குலகில் மக்களின் கவனத்தைக் கவர்ந்து, அரை நூற்றாண்டாக அமெரிக்க மண்ணிலும் மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆனாலும், அவசரகதி வாழ்க்கையில் சிவப்பிறைச்சி, பதப்படுத்தப்பட்ட உணவு, விரைவுணவு, அதிக இனிப்புகள், இனிப்பு நிறைந்த பானங்கள், குறைந்த அளவே உணவில் காய்களும் பழங்களும், அதிகக் கொழுப்பு, அதிக மாவுச்சத்து என்ற உணவுமுறையும், உடற்பயிற்சியே இல்லாத வாழ்க்கைமுறைதான் பெரும்பாலான அமெரிக்கர்களின் வாழ்க்கைமுறையாக அமைந்து உடற்பருமன், அதன் விளைவாக இரத்த அழுத்தம், இதயநோய், சர்க்கரை நோய் என்பது மாற்ற முடியாத வழக்கங்கள் மக்களிடம் நிலைபெற்றுவிட்டது. 

 உணவுமுறைக்கு பெயர் வைத்ததில்தான் உங்களுக்குப் பிரச்சனையா?  

மத்தியத் தரைக்கடல் பகுதியில் வாழ்ந்த மக்களின் உணவுமுறை என்று அவர்கள் பெயரிட்டதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லையே.

இப்பொழுதும் உணவுமுறையை அடிப்படையாகக் கொண்டுதான்   இந்திய உணவு, சீன உணவு, கொரிய உணவு, மெக்சிகோ உணவு என்றெல்லாம்  பெயர் வைக்கப்படுகிறது. 

நீங்கள் கொடுத்த தகவலின் தலைப்பே "Current Worldwide Annual Meat Consumption per capita" 
உலகம் முழுவதுமே இப்பொழுது உணவுமுறை மாறிப்போய்தான்உள்ளது.  அதற்குக் காரணம் அறிவியல் வளர்ச்சி, உணவு பதப்படுத்தும் முறை, போக்குவரத்து வசதியில்  மாறுதல் எனப் பல பின்னணிக் காரணங்கள்.  அமெரிக்காவிலேயே இரயில் பாதை போட்ட பிறகும், ஹைவே போட்ட பிறகும், ட்ரக், தொடர்வண்டி முறை வந்தவுடன்தான் உணவுமுறை மிகவும் மாறியது.  இல்லாவிட்டால் காலையில் பேக்கன் சாப்பபிட்ட வழக்கமெல்லாம் உண்டே.  இன்று சீரியல் சாப்பிடும் தலைமுறை வந்துவிட்டது. 'ஐ லவ் லூசி' பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.  1950 அவர்கள் காட்டும் உணவு முறைதான் இன்றைய அமெரிக்கக் குடும்பங்களில் கடைபிடிக்கப்படுகிறதா?  இல்லை இன்றிய இந்தியர்கள்தான்  உங்கள் கொள்ளுத்தாத்தா சாப்பிட்ட வகையில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்களா?                  உணவு முறையின் அடிப்படை என்ன என்று பாருங்கள். 

செல்வன்

unread,
Apr 4, 2016, 3:07:44 PM4/4/16
to mint...@googlegroups.com
தேமொழி,

மெடிட்டரேனியன் என்பது இத்தாலி, ரோம், கிரேக்கம், துருக்கி, அல்பேனியா, மாசிடொனியா, சைப்ரஸ், பிரான்சு, ஜிப்ரால்டர், ஸ்பெய்ன்  போன்ற நாடுகளை உள்ளிட்ட பகுதி..ஐகாரியா அதில் ஒரு துளி மட்டுமே. அந்தமான், நிகோபாரில் உள்ள குட்டி தீவு ஒன்றின் டயட்டை எடுத்து "தெற்காசிய டயட்" என பொதுமைபடுத்த முடியுமா?

இத்தாலி, பிரெஞ்சுகாரர்கள், ஸ்பெய்ன் உணவில் பேகன், சாஸேஜ் எல்லாமே அதிகம். அன்றும், இன்றும் அவர்கள் கடும் சிகப்பிறைச்சி பிரியர்கள். அதனால் இந்த பெயர் மிஸ்லீடிங் ஆக இருப்பதே எனக்கு வருத்தமே ஒழிய, யாரும் எந்த டயட்டையும் பின்பற்றினால் எனக்கு பிரச்சனை இல்லை.





--

செல்வன்

unread,
Apr 4, 2016, 3:16:12 PM4/4/16
to mint...@googlegroups.com
காய்கறி அதிகம், சிறுதானியம் அதீகம்
சிக்கன், மீன் மட்டுமே மாமிசம். சிகப்பிறைச்சி குறைவு.

இத்த்ககைய தன்மை கொண்டடயட் மெடிட்டரேனியன் டயட் அல்ல..இந்தியன் டயட். இதுக்கு இந்தியன் டயட் என பெயர் வைத்தால் பொருத்தமா இருக்கும்.




--

Suba

unread,
Apr 4, 2016, 3:55:39 PM4/4/16
to மின்தமிழ், Dr.Subashini
2016-04-04 21:16 GMT+02:00 செல்வன் <hol...@gmail.com>:
காய்கறி அதிகம், சிறுதானியம் அதீகம்
சிக்கன், மீன் மட்டுமே மாமிசம். சிகப்பிறைச்சி குறைவு.

இத்த்ககைய தன்மை கொண்டடயட் மெடிட்டரேனியன் டயட் அல்ல..இந்தியன் டயட். இதுக்கு இந்தியன் டயட் என பெயர் வைத்தால் பொருத்தமா இருக்கும்.



​மெடிட்டரேனியன் டயட் என்று தாராளமாகச் சொல்லலாம். ஏனெனில் மெடிட்டரேனியன் நாடுகளான எகிப்து, இத்தாலி, மொனாக்கோ, மொரொக்கோ, சைப்ரஸ், 
கிரேக்கம், ஸ்பெயின் ந்க்கெல்லாம் ஆலிவ் ந்ணெய், ஆலிவ் காய்கள்,பச்சை காய்கறிகல், சீஸ், கடலைகள், மீன், கடல் உணவுகள், கடலை வகைகள் எல்லாம் உணவுகளில் மிக அதிகம் பயன்பட்த்துவர். நான் நேரடியாக இங்கு சென்று உணவு சாப்பிட்டுப் பார்த்திருப்பதாக் சொல்கிறேன்.

இத்தாலி ஸ்பெயின் வகைகளில் நீங்கள் சொல்வது போல மாட்டிறைச்சி, பன்றியிறைச்சி வகைகள் அதிகம் என்ராலும் அதை மட்டும் சாப்பிடவே மாட்டர்கள். அதோடு ஆலிவ் எண்ணையில் தோய்த்த காய்கறிகள் இருக்கும். கடலைகள் இருக்கும். 
மீன்களும் இங்கே நன்கு சாப்பிடுவார்கள்.  
ஸ்பெயின் கிரேக்கம் இத்தாலி மூன்றுமே கடல் சுற்றி அமைந்த நாடுகள். 

இங்கே மீன்களும் ஆலிவ் எண்ணெய் கடலை பச்சை காய்கறி இல்லாத ஒரு உணவகத்தை  பார்க்க முடியுமா என்பது சந்தேகம்.

சுபா





--

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Visit THF pages and blogs
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

தேமொழி

unread,
Apr 4, 2016, 4:06:21 PM4/4/16
to மின்தமிழ்


On Monday, April 4, 2016 at 12:07:44 PM UTC-7, செல்வன் wrote:
தேமொழி,

மெடிட்டரேனியன் என்பது இத்தாலி, ரோம், கிரேக்கம், துருக்கி, அல்பேனியா, மாசிடொனியா, சைப்ரஸ், பிரான்சு, ஜிப்ரால்டர், ஸ்பெய்ன்  போன்ற நாடுகளை உள்ளிட்ட பகுதி..

மெடிட்டரேனியன் டயட் என்பதன் அடிப்படை:
மத்தியதரைக்கடலைச் சூழ்ந்துள்ள நிலப்பரப்பில் உள்ள நாடுகளில்; குறிப்பாக சைப்ரஸ், குரோஷியா, ஸ்பெயின், கிரீஸ், இத்தாலி, மொராக்கோ, போர்ச்சுகல் (Cyprus, Croatia, Spain, Greece, Italy, Morocco, Portugal) ஆகிய நாட்டு மக்களின் உணவுப் பழக்கமும், வாழ்க்கை நடைமுறைகளையும் அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட உணவுமுறையே மெடிட்டரேனியன் டயட் என்பதன் அடிப்படை. 


என்று இப்படி ஒரு விளக்கத்தை நான்தான் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேனே செல்வன்  !!!



 
ஐகாரியா அதில் ஒரு துளி மட்டுமே. அந்தமான், நிகோபாரில் உள்ள குட்டி தீவு ஒன்றின் டயட்டை எடுத்து "தெற்காசிய டயட்" என பொதுமைபடுத்த முடியுமா?

Ikaria: The Mindful Mediterranean Diet on the Greek Island Where People Forget to Die

மேலே Huffingtonpost  என்ன தலைப்பு கொடுத்திருக்கிறது?
 

இத்தாலி, பிரெஞ்சுகாரர்கள், ஸ்பெய்ன் உணவில் பேகன், சாஸேஜ் எல்லாமே அதிகம். அன்றும், இன்றும் அவர்கள் கடும் சிகப்பிறைச்சி பிரியர்கள். அதனால் இந்த பெயர் மிஸ்லீடிங் ஆக இருப்பதே எனக்கு வருத்தமே ஒழிய,

செல்வன் இது அந்த உணவுமுறைக்கு நான் வைத்த பெயர் அல்லவே!!!!. 

இந்த ஆரோக்கிய மெடிட்டரேனியன் டயட் உணவுமுறை 1993 ஆண்டு ‘ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் மருத்துவப்பள்ளி’, ‘உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய அலுவலகம்’ மற்றும் ‘ஒல்ட்வேஸ்’ என்ற அமைப்பு (the Harvard School of Public Health, the European Office of the World Health Organization and Old ways) ஆகியன ஒருங்கிணைந்து உருவாக்கி, ஹார்வர்ட் பல்கலைக்கழக கருத்தரங்கு ஒன்றில், உணவுப் பிரமிடு படத்துடன், உணவுமுறையைக் கடைப்பிடிக்கும் விளக்கத்துடன் வெளியிட்டன.

என்பதைக் கட்டுரையில் காணலாம். 

இத்தகவல் கிடைத்த இடம்:

 The American Society for Clinical Nutrition, Inc

Mediterranean diet pyramid: a cultural model for healthy eating.

  1. W C Willett
  2. F Sacks
  3. A Trichopoulou
  4. G Drescher
  5. A Ferro-Luzzi
  6. E Helsing, and
  7. D Trichopoulos

-Author Affiliations

  1. Department of Epidemiology, Harvard School of Public Health, Boston, MA 02115, USA.

Abstract

We present a food pyramid that reflects Mediterranean dietary traditions, which historically have been associated with good health. This Mediterranean diet pyramid is based on food patterns typical of Crete, much of the rest of Greece, and southern Italy in the early 1960s, where adult life expectancy was among the highest in the world and rates of coronary heart disease, certain cancers, and other diet-related chronic diseases were among the lowest. Work in the field or kitchen resulted in a lifestyle that included regular physical activity and was associated with low rates of obesity. The diet is characterized by abundant plant foods (fruit, vegetables, breads, other forms of cereals, potatoes, beans, nuts, and seeds), fresh fruit as the typical daily dessert, olive oil as the principal source of fat, dairy products (principally cheese and yogurt), and fish and poultry consumed in low to moderate amounts, zero to four eggs consumed weekly, red meat consumed in low amounts, and wine consumed in low to moderate amounts, normally with meals. This diet is low in saturated fat (< or = 7-8% of energy), with total fat ranging from < 25% to > 35% of energy throughout the region. The pyramid describes a dietary pattern that is attractive for its famous palatability as well as for its health benefits.

மேலும் இந்தக் "ஆய்வறிக்கையை" 1,270  (https://scholar.google.com/scholar?um=1&ie=UTF-8&lr&cites=10148032239261979091)  ஆய்வறிக்கைகள் தங்கள் ஆய்வறிக்கையில் மேற்கோள் காட்டியுள்ளதாக கூகிள் ஸ்காலர் சொல்கிறது. 

யாரும் எந்த டயட்டையும் பின்பற்றினால் எனக்கு பிரச்சனை இல்லை.

ஆனால் எனக்குப் பிரச்சனை .... எனக்குத் தெரிந்த அறிவியல் கூறும் தகவலை கொடுத்துதவுவதை எழுத்தாளர் என்ற முறையில் என் கடமையாக நினைக்கிறேன்.







--

செல்வன்

unread,
Apr 4, 2016, 4:36:56 PM4/4/16
to mintamil
தேமொழி,

மெடிட்டரேனியன் டயட் என்பது நீங்கள் சூட்டிய பெயர் என நான் கூறவில்லை. இதை உருவாக்கிய டயட்டிசியன்களையே குற்றம் சுமத்துகிறேன்...அவர்களது கொழுப்பு ஃபோபியாவை அடிப்படையாக வைத்து உருவான டயட்டுக்கு மத்தியதரைக்கடல் நாடுகளின் பெயரை சூட்டி அந்நாடுகளின் உணவுக் கலாசாரத்துக்கு முரணான டயட்டுக்கு அப்பெயரை சூட்டிவிட்டார்கள் என.

இதற்கு "லீன் மீட் டயட்" என்பது போல எதாவது பெயரை சூட்டியிருக்கலாம்.


யாரும் எந்த டயட்டையும் பின்பற்றினால் எனக்கு பிரச்சனை இல்லை.

ஆனால் எனக்குப் பிரச்சனை .... எனக்குத் தெரிந்த அறிவியல் கூறும் தகவலை கொடுத்துதவுவதை எழுத்தாளர் என்ற முறையில் என் கடமையாக நினைக்கிறேன்.


அதற்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.




தேமொழி

unread,
Apr 5, 2016, 3:07:37 AM4/5/16
to மின்தமிழ்


On Monday, April 4, 2016 at 1:36:56 PM UTC-7, செல்வன் wrote:
தேமொழி,

மெடிட்டரேனியன் டயட் என்பது நீங்கள் சூட்டிய பெயர் என நான் கூறவில்லை. இதை உருவாக்கிய டயட்டிசியன்களையே குற்றம் சுமத்துகிறேன்...அவர்களது கொழுப்பு ஃபோபியாவை அடிப்படையாக வைத்து உருவான டயட்டுக்கு மத்தியதரைக்கடல் நாடுகளின் பெயரை சூட்டி அந்நாடுகளின் உணவுக் கலாசாரத்துக்கு முரணான டயட்டுக்கு அப்பெயரை சூட்டிவிட்டார்கள் என.

இதற்கு "லீன் மீட் டயட்" என்பது போல எதாவது பெயரை சூட்டியிருக்கலாம்.

Although it was first publicized in 1945 by the American scientist Ancel Keys stationed in Pioppi, Italy, the Mediterranean diet failed to gain widespread recognition until the 1990s. Wikipedia 
என்பது விக்கி கூறும் தகவல்.  70 ஆண்டுகள் கடந்துவிட்டது, இத்தனை ஆண்டுகளில் மக்களும் பழகிப்போயிருப்பார்கள் 
 


யாரும் எந்த டயட்டையும் பின்பற்றினால் எனக்கு பிரச்சனை இல்லை.

ஆனால் எனக்குப் பிரச்சனை .... எனக்குத் தெரிந்த அறிவியல் கூறும் தகவலை கொடுத்துதவுவதை எழுத்தாளர் என்ற முறையில் என் கடமையாக நினைக்கிறேன்.


அதற்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.


நன்றி  

மேலும் ஒன்று...

On Monday, April 4, 2016 at 12:16:12 PM UTC-7, செல்வன் wrote:
காய்கறி அதிகம், சிறுதானியம் அதீகம்
சிக்கன், மீன் மட்டுமே மாமிசம். சிகப்பிறைச்சி குறைவு.

இத்த்ககைய தன்மை கொண்டடயட் மெடிட்டரேனியன் டயட் அல்ல..இந்தியன் டயட். இதுக்கு இந்தியன் டயட் என பெயர் வைத்தால் பொருத்தமா இருக்கும்.

என்று கூறியிருந்தீர்கள்...  இதனை நானும் நினைத்தேன்...

அவரவர் நாட்டில் கிடைப்பதை அவரவர் சாப்பிடுகிறார்கள் என்பதைத் தவிர  "அடிப்படை" வேறுபாடு குறைவு ...
காய், 
பழம், 
கார்போஹைட்ரேட் (நமது அரிசி கோதுமைக்கு பதில் ... அவர்களுக்கு பாஸ்டா & ரொட்டி), 
குறைந்த அளவு இறைச்சி (நம் ஊரில் வாரம் ஒருமுறை குழம்பில் போட்டு சாப்பிடுவது போல), 
மோனோ அன்சாச்சுடுரடேட் பேட்டி ஆசிட் எண்ணெய் (இதயத்திற்கு நன்மைதரும் ஆலிவ் எண்ணெய் அவர்களுக்கு,  நமக்கு நல்லெண்ணெய் பார்க்க (>>> http://www.heart.org/HEARTORG/HealthyLiving/HealthyEating/Nutrition/Monounsaturated-Fats_UCM_301460_Article.jsp#.VwNHvKQrKHs)
எப்பொழுதோ ஒருமுறை இனிப்பு வகைகள், நொறுக்குத் தீனிகளும் குறைவு, 
வேலையே உடற்பயிற்சியான வாழ்க்கை ...
என்பது நமது (அக்கால) இந்திய உணவுமுறை போல அமைந்ததுதான் இந்த மெடிடேரேனியன் உணவு முறையும் என்று   மேலும் பற்பல உணவுமுறைகளை ஒப்பிடும் எனது மற்றொரு கட்டுரையில் எழுதியுள்ளேன்.  

அதில் ஆசிய உணவை அமெரிக்கர்கள்/மேலை நாட்டு மக்கள் பின்பற்ற ஆர்வம் இல்லாத காரணம் அவர்களுக்கு அரிசி உணவு பிடிக்காது என்பதுதான் அடிப்படைக் காரணம், ஆனால் இந்த அடிப்படையை ஒட்டிய  உணவுமுறையில் பழக்கம் கொண்ட இந்தியர்களுக்கு   இதைப் பின்பற்ற சிரமம் இருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளேன்.  

அதனால் இந்தியர்கள் மிகப் பெரிய மாறுதல் எதுவும் செய்யத் தேவையில்லாத உணவு முறைதான் இது.  அந்தக் கட்டுரையை பிறகு குழுமத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.  



தேமொழி

unread,
Apr 17, 2016, 2:16:53 AM4/17/16
to மின்தமிழ்
நன்றி சிறகு: http://siragu.com/?p=20300




diet1பொன்னகை அணிந்த மாளிகைகள்

புன்னகை மறந்த மண்குடிசை

பசி வர அங்கே மாத்திரைகள்

பட்டினியால் இங்கு யாத்திரைகள்

என்று இருவேறுபட்ட உணவு உண்ணும் நிலைமை உலகில் உள்ளதைக் கவிஞர் கண்ணதாசன் சுட்டிக் காட்டியிருப்பார்.

ஆனால், மற்றொரு மாறுபட்ட கோணமும் நம்மிடம் உண்டு. நன்கு வகைவகையாக சமைத்துச் சாப்பிட வேண்டும் என்று சமையற்குறிப்புகளைத் தேடி அலைவது ஒரு பக்கம் என்றால், சாப்பிட்ட உணவு உடற்பருமனையும், அதன் மூலம் பிற வகையில் உடல் ஆரோக்கியத்தை சீர்குலைக்கக் கூடாது என்ற நோக்கில், ஆரோக்கியமான உணவுமுறை எது என்றும் மறுபக்கம் நாமே தேடிக் கொண்டிருப்போம். உணவு பற்றிய கட்டுரை என்பதால் “You can’t eat your cake, and have it too” என்ற ஆங்கிலப் பழமொழியையோ, “கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை” என்ற தமிழ்ப்பழமொழியையோ நினைவு கூரலாம். “The irony of life” என்று இது ஆங்கிலத்தில் சொல்லப்படுவது போல எதிரெதிர் பலன்களையும் அடைய விரும்பும் மனநிலை நம்மிடம் இருப்பதுதான் நடைமுறை.

இதனை ஒருமுறை நேரடியாக அலுவலகப்பணியில் எதிர்கொள்ள நேர்ந்தது. பணியில் உடன்பணியாற்றும் ஊழியர்கள் சந்தித்து கலந்துரையாட வேண்டிய நிலையில், திட்டமிடப்படாத அக்கூட்டத்தில் பலர் கலந்து கொள்ள விருப்பத்துடன் அறைக்கு வந்துவிட நேர்ந்தது. இருக்கைகள் குறைவாகப் போன நிலையில் அலுவலகத்தில் இதற்கென ஒதுக்கப்படும் கூட்ட அறைகளில் ஒன்றில் கூடுவோம் என்று அப்பகுதிக்குச் சென்றோம். முன்பதிவு செய்யாத நிலையில் அந்த அறைகள் கிடைப்பதும் சிரமம், அன்றும் அவ்வாறான நிலையே. இருந்த இரு அறைகளிலும் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. வரப்போகும் கிறிஸ்துமஸ் விழாவிற்கு என்னென்ன உணவு சமைத்து கொண்டாடலாம் என்று ஒரு பிரிவு ஒரு அறையில் தீவிர ஆலோசனையில் இருந்தார்கள். மறு அறையில் நிறுவனத்தின் மனித வளத்துறை பிரிவு தங்களது ஊழியர்களின் உடல்நலம் பேணும் பொருட்டு ஏற்பாடு செய்திருந்த “எடை குறைக்கும் உணவுமுறை” பற்றிய கலந்துரையாடல் நடந்து கொண்டிருந்தது. இதுதான் உலகம். குறளில் வள்ளுவர் மருந்து என்ற அதிகாரத்தில் “உணவே மருந்து” என்ற கோட்பாட்டை வலியுறத்த அதில் உணவு கட்டுப்பாடு பற்றித்தான் பலகுறள்களை எழுதி வைத்துள்ளார். அதன் அடிப்படையில், எத்தகைய உணவுமுறைப் பழக்கத்தைக் கடைப்பிடித்தால் நோயின்றி வாழலாம் என்பதைத் திட்டமிட்டு அதனை நடைமுறையில் நாமும் பின்பற்றலாம்.

சிறந்த உணவுமுறை எது?

diet2சிறந்த உணவுமுறை எது, என்று வழக்கத்தில் இருக்கும் பல உணவுமுறைகளை நாம் ஒப்பிட்டு அறிய விரும்பினால், நாம் அத்துறையில் ஆய்ந்து அறிந்த அறிஞர்கள் கூறும் தகவல்களைப் பின்பற்றுவதுதான் அறிவுடைய செயல் என்பதைச் சொல்லத் தேவையில்லை. குறிப்பாக அமெரிக்கர்களுக்கு ‘யூஎஸ்நியூஸ்’ (usnews.com) நிறுவனம் இந்த உதவியைச் செய்ய முன் வந்திருக்கிறது. யூஎஸ்நியூஸ் செய்தி நிறுவனம் ‘சிறந்த பல்கலைக்கழகம்’, ‘சிறந்த கல்லூரி’, ‘சிறந்த மருத்துவ வசதி கொண்ட மருத்துவமனை’, ‘வாழ்வதற்குச் சிறந்த ஊர்’, ‘ஓய்வு பெற்ற முதியோர் வாழச் சிறந்த ஊர்’ போன்று பல வகைகளில் சிறந்து விளங்குவனவற்றைத் தரவரிசைப்படுத்தி பயனர்களுக்கு உதவியான தகவல்களை தொடர்ந்து அளித்து வருகின்றது. அவ்வாறு தரவரிசைப்படுத்த என்னென்ன காரணிகள் அடிப்படையாகக் கொள்ளப்பட்டன என்ற அவர்களது ஆய்வுமுறையைப் பற்றிய விரிவான தகவலையும் அவர்கள் கொடுத்து வழங்குவது அத்தகவலைப் பயன்படுத்துவோருக்கு உதவியாகவும் இருந்து வருகிறது.   இதுபோன்ற தரவரிசைப்படுத்தும் முறையில் “ஆரோக்கிய வாழ்விற்குச் சிறந்த உணவுமுறை” (Best Diets Overall) என்று அமெரிக்காவில் பரவலாக அறியப்படும் 38 உணவு முறைகளையும் தரவரிசைப்படுத்தி பட்டியிலிட்டுள்ளது இந்த நிறுவனம் (http://health.usnews.com/best-diet/best-overall-diets).

ஆரோக்கிய வாழ்வுக்கு வழிகாட்டும் வல்லுநர்கள் அடங்கிய ஆய்வுக்குழு ஒன்றின் உதவியுடன் 38 உணவுமுறைகளை ஆய்வுக்குட்படுத்திய பொழுது, ஒரு உணவுமுறை சிறந்த உணவுமுறை (top-rated) என்ற தகுதியைப் பெற அதுஎளிதில் பின்பற்றக் கூடிய உணவுமுறையாகவும் (relatively easy to follow), ஊட்டச்சத்து மிக்க சமச்சீர் உணவாகவும் (nutritious), பாதுகாப்பானதாகவும் (safe), உடலெடையைக் குறைப்பதற்கும் (effective for weight loss), நீரிழிவு/சர்க்கரை நோய் மற்றும் மாரடைப்பு/இதயநோய் ஆகியவற்றைத் தவிர்ப்பதற்கு (protective against diabetes and heart disease) உதவும் உணவுமுறையாக இருப்பது முக்கியமான பண்புகளாக எடுத்துக் கொள்ளப்பட்டன.

diet

இது போன்ற வரையறைகளை நிறைவு செய்ததன் அடிப்படையில் 38 உணவுமுறைகளுக்கும் மதிப்பெண்கள் அளிக்கப்பட்ட பின்னர் அவை தரவரிசைப்படுத்தப்பட்டன. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தப் பரிந்துரைக்கப்படும் ‘டேஷ் டயட்’ (Dietary Approaches to Stop Hypertension – DASH) உணவுமுறை மிகச் சிறந்த உணவு முறையாக முதலிடத்தைப் பிடித்தது. இதன் மற்றொரு சிறப்பு என்னவெனில், ஆய்வுகளின் அடிப்படையில் அரசும் ‘டேஷ் டயட்’ டைப் பரிந்துரைத்துள்ளது. கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 38 உணவுமுறைகளின் தரவரிசைப் பற்றியும் அறியலாம். சில உணவுமுறைகள் ஒரே மதிப்பெண்கள் பெற்றதால் வரிசையில் ஒரே இடத்தையும் பகிர்ந்து கொள்கின்றன. குறிப்பாக இரண்டாம் இடத்தை இரு உணவுமுறைகள் பிடித்துள்ளன (குறிப்பு: பட்டியலில் * நட்சத்திரக் குறியுடன் காட்டப்பட்டுள்ள “17″ உணவுமுறைகள் ‘வணிகமுறையில் சந்தைப்படுத்தப்படும் உணவுமுறைகள்’).

முதல் ஐந்து இடங்களுக்குள் வரும் உணவுமுறைகளை சற்று விரிவாகக் காணலாம் (இவற்றுள், உலகில் பல பகுதிகளில் வசிப்பவர்களுக்குக் கிடைப்பதற்கு வழியில்லை என்ற காரணத்தால், வணிகமுறையில் சந்தைப்படுத்தப்படும் உணவுமுறைகள் பற்றி நாம் இங்கு பொருட்படுத்தத் தேவையில்லை).

(1) டேஷ் டயட்

(2) மைண்ட் டயட்

(3) டி எல் சி டயட்

(4) மெடிட்டரேனியன் டயட்

(5) தி ஃபெர்டிலிட்டி டயட்

(1) டேஷ் டயட்:

diet6இரத்த அழுத்தத்தைக் குறைக்க, அல்லது வருவதைத் தடுக்க உதவும் வகையில் உள்ள உணவுகளை அடிப்படையாகக் கொண்ட உணவுமுறை டேஷ் டயட். இது, உடல் ஆரோக்கியத்திற்குப் பரிந்துரைக்கப்படும் உணவு சரிவிகித உணவாக, தேவையான அளவு மாவுச்சத்து, புரதம், கொழுப்பு ஆகியவை கொண்ட உணவு முறை.

(2) மைண்ட் டயட்:

diet7அறிவியல் அடிப்படையில் சிறந்த உணவுமுறைகளாக நிரூபிக்கப்பட்டுள்ள மேற்கூறிய டேஷ் டயட்டையும், மெடிட்டரேனியன் டயட்டையும் இணைத்து, அவற்றில் மூளைக்கு, சிந்திக்கும் திறனுக்கு உதவும் உணவுவகைகளை அதிகப்படுத்தி உருவாக்கப்பட்டது மைண்ட் டயட். இந்த உணவுமுறையின் அடிப்படை நோக்கம் ‘அல்சைமர்’ (Alzheimer’s disease) போன்ற மறதி நோய்கள் வருவதைத் தடுப்பது.

(3) டி எல் சி டயட்:

diet8இதய ஆரோக்கியத்திற்காக, ‘தி நேஷனல் இன்ஸ்டிடியுட்ஸ் ஆஃப் ஹெல்த்’ என்ற நிறுவனம், இரத்தத்தில் கொலெஸ்டிரால் அளவைக் குறைக்க உதவும் வகையில் தேசிய அளவில் விழிப்புணர்வு பிரசாரத்தில் (the National Institutes of Health’s National Cholesterol Education Program) பயன்படுத்த ‘டி எல் சி டயட்’ (Therapeutic Lifestyle Changes Diet – TLC) என்ற உணவுமுறையை உருவாக்கியது. அமெரிக்காவின் ‘அமெரிக்கன் ஹார்ட் அசோஸியேஷன்’ (American Heart Association) நிறுவனமும் பரிந்துரை செய்துள்ள உணவுமுறை இது. இரத்தத்தில் கொலெஸ்டிரால் அளவைக் குறைப்பது இந்த உணவுமுறையின் நோக்கம். ஆறு வாரங்களில் 8 இல் இருந்து 10 விழுக்காடு வரை இரத்தத்தின் கொலெஸ்டிரால் அளவை இந்த உணவுமுறை குறைக்க உதவுவதாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படை அதிகக் கொழுப்புள்ள உணவை அறவே தவிர்ப்பது. சிவப்பிறைச்சி, முழுமையான பால், எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகள் தவிர்க்கப்பட வேண்டியவை.

(4) மெடிட்டரேனியன் டயட்:

diet10மெடிட்டரேனியன் டயட் என்பது மத்தியதரைக்கடலைச் சுற்றியுள்ள நாடுகளில் வசிக்கும் மக்கள் காலம் காலமாகப் பின்பற்றும் உணவு முறை. இது தாவர உணவு முறையை முதன்மையாகக் கொண்டது. இந்த உணவு முறையில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், அவரை, மொச்சை, பயறு, பருப்பு, கொட்டை வகைகள், மூலிகைகள், மீன், கடல் உணவு மற்றும் ஆலிவ் எண்ணெய் ஆகியன நிறைந்திருக்கும். முட்டை, பால், தயிர், பாலாடைக் கட்டி, பறவைக்கறி ஆகியவை மிகக் குறைவாக உட்கொள்ளப்படும். சிவப்பிறைச்சி, அதிகக் கொழுப்பு, உப்பு நிறைந்த உணவுகள் தவிர்க்கப்படும். (மேலும் விரிவான தகவலுக்குப் பார்க்க, சிறகு கட்டுரை: http://siragu.com/?p=20170),

(5) தி ஃபெர்டிலிட்டி டயட்:

diet11குழந்தைப் பேற்றிற்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்ட உணவுமுறை இது. இதனால் கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகப்படுத்தலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. உணவுமுறையை மாற்றி, உடற்பயிற்சியை அதிகரித்து, உடல் எடையைக் குறைப்பதன் மூலம் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும் என்பது இந்த உணவுமுறையின் அடிப்படை. இந்த உணவுமுறை சர்க்கரை நோயையும் கட்டுப்படுத்துவதிலும் முதன்மையாக விளங்குகின்றது.

முதல் ஐந்து இடங்களுக்குள் வந்த மேலே குறிப்பிடப்பட்ட உணவுமுறைகள் யாவற்றிலும் மெடிட்டரேனியன் டயட் உணவுமுறையைத் தவிர மற்றவை இரத்த அழுத்தத்தைக் குறைக்க, மூளையின் செயல்திறனை மேம்படுத்த, இதயத்திற்கு உதவ, மகப்பேற்றுக்கு உதவ என்ற ஒரு குறிப்பிட்ட உடல்நலனுக்கென உருவாக்கப்பட்டவை. ஆனால், அவையாவுமே சமச்சீர் ஊட்டச்சத்து கொண்ட ஆரோக்கிய உணவாக இருப்பதுடன், எடையைக் குறைக்கவும் உதவுவதால் அவை உடல் எடையைக் குறைப்பதற்கும் பரிந்துரைக்கப்படுகின்றன. மெடிட்டரேனியன் டயட் மட்டும் ஆரோக்கிய வாழ்வு முறைக்கு அடிப்படையாக, எடையைக் குறைத்து தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வாழ்க்கை முறையாக அமைந்திருப்பதைக் காணலாம்.

பொதுவாக மிகச் சிறந்த உணவுமுறை என்று தரவரிசைப்படுத்தியபிறகு, மேலும் சில சிறப்புப் பிரிவுகளிலும் உணவுமுறைகள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன அவை:

1. வணிகமுறையில் சந்தைப்படுத்தப்படுவதில் சிறந்த உணவுமுறை (Best Commercial Diet Plans)

2. உடல் எடையைக் குறைக்க உதவும் சிறந்த உணவுமுறை (Best Weight-Loss Diets)

3. மிக விரைவில் உடலெடையைக் குறைக்க உதவும் சிறந்த உணவுமுறை (Best Fast Weight-Loss Diets)

4. சர்க்கரை நோயாளிகளுக்கு உதவும் சிறந்த உணவுமுறை (Best Diabetes Diets)

5. இதயநலத்திற்கு உதவும் சிறந்த உணவுமுறை (Best Heart-Healthy Diets)

6. ஆரோக்கிய உடல் நலத்திற்கான சிறந்த உணவுமுறை (Best Diets for Healthy Eating)

7. தாவர உணவு உண்பவர்களுக்கான சிறந்த உணவுமுறை (Best Plant-Based Diets)

8. எளிதில் பின்பற்றக்கூடிய சிறந்த உணவுமுறை (Easiest Diets to Follow)

என்ற பிரிவுகளில் தனிப்பட்டத் தேவை கொண்டோருக்காகவும், உணவுமுறைகளை தரவரிசைப்படுத்தியுள்ளது ‘யூஎஸ்நியூஸ்’ நிறுவனம்.

வணிகமுறையில் சந்தைப்படுத்தப்படும் உணவுமுறைகள்:

diet13தரவரிசைப்படுத்தபட்ட 38 உணவுமுறைகளில், சற்றொப்ப பாதி உணவுமுறைகள், அதாவது சரியாக 17 உணவுமுறைகள் வணிகமுறையில் சந்தைப்படுத்தப்படும் உணவுமுறைகளாக அமைந்துள்ளது. இது உடல் எடையைக் குறைக்க மக்கள் காட்டும் ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது. வணிகமுறையில் சந்தைப்படுத்தப்படும் உணவுமுறைகளில் கலோரிகளை கணக்கிடுவது, அவர்கள் பரிந்துரைக்கும் உணவை மட்டுமே உண்பது, அல்லது அவர்களே தயாரித்து அளிக்கும் உணவுமுறைகளை மட்டுமே உண்பது, பரிந்துரைக்கப்படும் உடற்பயிற்சி முறைகளை மேற்கொள்வது என்று பலவிதக் கட்டுப்பாடுகள் இருக்கும். அவற்றில் சிலவற்றிற்கு உறுப்பினர் கட்டணமும் இருக்கலாம். அத்துடன், அவர்கள் தயாரித்து விற்கும் உணவுகளை உண்பதும் என்ற கட்டுப்பாடுகளும் இருக்கும் என்பதால் அமெரிக்காவில் வசிப்பவர்கள் தவிர பிற நாடுகளில் வசிப்பவர்கள் விரும்பினாலும் அவர்களுக்குக் கிடைக்க வழியில்லாது இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. மேலும், உணவுத்திட்டம் அமெரிக்க கலாச்சார அடிப்படையில் உள்ள உணவாக இருந்தால் தாவர உணவைக் கடைப்பிடிப்பவர்களுக்கோ, அமெரிக்க வகை உணவுகளும் பானங்களும் கிடைக்க வழியில்லாத நாடுகளில் வசிப்பவர்க்கும் இவை நடைமுறைப்படுத்த உதவாமல் போகலாம். அப்படியே கிடைக்க வழியுள்ளது என்றாலும் உறுப்பினர் கட்டணங்களும், உணவுக்காகச் செலவழிக்க வேண்டிய பணமும் அமெரிக்க டாலரில் கட்டுப்படியாகாமலும் போகலாம். எனவே இத்தகைய கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு நாமும் அவற்றை மேற்கொண்டு ஆராயாமல் ஒதுக்கிவிடலாம்.

உடல் எடையைக் குறைக்க உதவும் உணவுமுறைகள்:

diet15தற்கால வாழ்க்கை முறையினால், பணிபுரியும் இடத்தில் கணினியிலும், அலுவலக மேசையடியிலும் நாள் முழுவதும் வேலை செய்யும் நிலை,

ஓய்வு நேரத்திலோ தொலைக்காட்சி முன்னரும், வீடியோ கேம் விளையாடுவது, இணையத்தில் பொழுதுபோக்குவது என்ற வாழ்க்கைமுறை,

நேரமில்லை என்று காரணம் கூறி எப்பொழுதும் கார், பேருந்து என்று ஊர்திகளைப் பயன்படுத்துவது போன்ற உடற்பயிற்சியற்ற தினசரி நடவடிக்கைகள்,

அதிக கலோரி தரும் கார்போஹைட்ரேட், கொழுப்பு வகைகளை அடிப்படையாகக் கொண்ட உணவுப் பழக்கத்திற்கு அடிமையானதால்,

மிட்டாய், கேக், ஐஸ்கிரீம், எண்ணெயில் பொறித்த ஆயத்த உணவுகள் போன்ற நொறுக்குத் தீனிகளும், சோடா, பெப்சி, கோக் போன்ற சர்க்கரைப் பானங்கள் பருகுவதும்,

சமைக்க நேரமில்லாது போனால் உணவுவிடுதி உணவுகள், பீட்சா, பர்கர் முதலிய விரைவுணவுகளை உண்பது என்ற வாழ்க்கை முறைக்கு மாறிவிட்டவர்களுக்கு உடல் எடை அதிகரிப்பதும் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.

அதனால் பெரும்பாலோரின் கவலை உடல் எடையைக் குறைப்பதாகவே இருக்கிறது.

diet5ஆரோக்கியமான உணவுமுறையையும், வாழ்க்கை முறையையும் கடைப்பிடிப்போம் என்பதைவிட விரைவில் உடல் எடையைக் குறைக்க என்ன வழி, அதற்கேற்ற உணவு என்ன என்பதில்தான் நம்மில் பலருக்கு அக்கறை வருகிறது. வாழ்வில் ஒருமுறை வரும் மறக்கமுடியாத நிகழ்வுகளான பட்டமளிப்பு, திருமணம் போன்றவற்றிற்காகவாவது, நிரந்தரமாக அமைந்துவிடும் படத்தில் சிறப்பாகத் தெரிய வேண்டும் என்ற எண்ணத்தில் அதிவிரைவில் ஓரிரு மாதங்களுக்குள் உடலெடையைக் குறைக்க விரும்பும் இளைஞர்களும் பலர். இந்த உணவுமுறைகள் விரைவில் உடல் எடையைக் குறைக்க உதவினாலும், தொடர்ந்து கடைப்பிடிக்கத் தவறினால் மீண்டும் உடல் எடை முன்னர் இருந்ததைவிடவும் அதிகரித்துவிடுவதைப் பலர் எதிர்கொண்டுள்ளனர். தொடர்ந்து கடைப்பிடிக்க முடியாமல் போவதன் காரணமும் எளிது. இந்த உணவுமுறைகள் குறைந்த கொழுப்பு, குறைந்த கார்போஹைட்ரேட், அதிகப் புரதம் என்ற ஏதோ ஒரு அடிப்படையை மையப்படுத்தி உருவாக்கப்படுவதால், தினம் தினம் ஒரே வகையாகச் சுவையற்ற உணவை உண்ணும் முறையில் அமைந்துவிடுகிறது. அதனால் தொடர்ந்து கடைப்பிடிக்கவும் இயலாது போகிறது.

உடல்நலத்திற்குத் தீங்கு நேராத வண்ணம், சீரான உடல் எடையை நிரந்தரமாகப் பெற தினசரி வாழ்க்கையில் அதற்கேற்ற பழக்கவழக்கங்களையும், உணவுமுறைகளையும் கடைப்பிடிப்பதே சிறந்தது. இக்கருத்தை உடலெடையைக் குறைக்கு உதவும் உணவுமுறைகளைத் தரவரிசைப்படுத்திய இருவேறு பகுதிகளிலும் ‘யூஎஸ்நியூஸ்’ நிறுவனம் வலியுறுத்துவதையும், பயனர்களின் கவனத்திற்கு அதைக் கொண்டு செல்வதையும் கீழ்காணும் வகையில் செய்துள்ளது.

While these diets enable quick weight loss for those with a short-term goal – there’s a strong chance you’ll drop significant weight within the first 12 months – keep in mind that this is markedly different from long-term weight loss, which is more important for your health. (http://health.usnews.com/best-diet/best-fast-weight-loss-diets & http://health.usnews.com/best-diet/best-weight-loss-diets)

விரைவில், அல்லது அதிவிரைவில் உடல் எடையைக் குறைக்க திட்டமிடப்பட்ட உணவுவகைகளில் பெரும்பான்மையானவை வணிகமுறையில் சந்தைப்படுத்தப்படும் உணவுமுறைகள்தான். எனவே நீடித்த வகையில் வாழ்க்கை முறையையே ஆரோக்கியமாக மாற்றியமைக்க உதவும் உணவுமுறைகளில் மட்டும் நாம் கவனம் செலுத்துவதே அறிவுடைமை.

‘யூஎஸ்நியூஸ்’ தரவரிசைப்பட்டியலில் இப்பொழுது பரவலாக பேசப்படும், கற்கால மனிதர்களின் உணவுமுறையை அடிப்படையாகக் கொண்டது எனக் கூறப்படும் ‘பேலியோ உணவுமுறை’, ‘யூஎஸ்நியூஸ்’ தரவரிசைப் பட்டியலில்- எளிதில் பின்பற்றக் கூடிய உணவுமுறை, ஆரோக்கியமான ஊட்டச்சத்து அடிப்படை, சர்க்கரை நோய் பாதிப்பு குறைக்க, இதயநோய் பாதிப்பு தடுக்க, ஆக மொத்தம் சிறந்த உணவுமுறை என்ற பலவகை வரிசைப்படுத்தியதிலும் பட்டியலின் இறுதி இடங்களில் மட்டுமே இடம்பிடித்துள்ளது. குறிப்பாக உடல் எடையைக் குறைக்க உதவுவதில் இறுதியில் இருப்பது பேலியோ உணவுமுறைதான் (http://health.usnews.com/best-diet/paleo-diet).

உணவு முறைகளில், மெடிட்டரேனியன் டயட் உணவு போன்று அமைந்துள்ள சமச்சீர் உணவுமுறை (Balanced), அதிகப் புரதம் (High-Protein), குறைந்த மாவுச்சத்து (Low-Calorie Carbohydrate), குறைந்த கொழுப்பு (Low- Fat) என்பது போன்ற வெவ்வேறு அடிப்படைப் பண்புகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட எடைக்குறைத்தலுக்கான பலவகை உணவுமுறைகளில், எந்த உணவுமுறை சிறந்தது, எது உடல் ஆரோக்கியத்திற்கு உதவுவது, எது கடைப்பிடிக்க எளிது என்று பற்பல வகைகளிலும் ஒப்பிட்டு மேலும் ஆய்வுகள் பல நடத்தப்பட்டும் வருகின்றன.

Reference:

U.S. News Best Diet Rankings – http://health.usnews.com/best-diet


2 Comments

Pannir Selvam · 
Works at Self employer
பொன்னகை அணிந்த மாளிகைகள்
புன்னகை மறந்த மண்குடிசை
பசி வர அங்கே மாத்திரைகள்
பட்டினியால் இங்கு யாத்திரைகள்

Kanimozhi MV
சிறப்பான , இன்றைய சூழலில் தேவையான கட்டுரை..

_______________________________________________________________________________

செல்வன்

unread,
Apr 21, 2016, 4:37:31 PM4/21/16
to mintamil
எல்லாம் போங்காட்டம்....

பேலியோவை விட வீகன் டயட் பெஸ்ட் என்கிறது இந்த ஆய்வு...ஹா..ஹா 


செல்வன்

unread,
Apr 21, 2016, 4:50:44 PM4/21/16
to mintamil

2016-04-05 2:07 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
Although it was first publicized in 1945 by the American scientist Ancel Keys stationed in Pioppi, Italy, the Mediterranean diet failed to gain widespread recognition until the 1990s. Wikipedia 
என்பது விக்கி கூறும் தகவல்.  70 ஆண்டுகள் கடந்துவிட்டது, இத்தனை ஆண்டுகளில் மக்களும் பழகிப்போயிருப்பார்கள் 


ஆன்சல் கீஸா? கிழிஞ்சது கிருஷ்ணகிரி

இந்தாங்க அவரை பற்றி நான் எழுதின கட்டுரை




குறைந்தகொழுப்பு டயட்டுகளின் தந்தை என்று அழைக்கப்படுபவர், கீஸ். இரண்டாம் உலகப்போர் சமயம் அமெரிக்க வீரர்களுக்குப் போதுமான ஊட்டச்சத்துடன் உணவுப்பொருள்கள் தயாரிக்கும் கமிட்டியின் தலைவராக இருந்தார். அவர் வடிவமைத்த உணவு ரேஷன், வீரர்களுக்கு மிகவும் பிடித்துப்போனதால் அவற்றை கே ரேஷன் என அவரது பெயரின் முதல் எழுத்தால் அழைத்தார்கள். இதனால் கீஸின் புகழ் நாடெங்கும் பரவியது. இந்தச் சூழலில் ‘மாரடைப்புக்கு காரணம் கொழுப்பே’ என்ற ஏழுநாடுகளின் ஆய்வு ஒன்றை கீஸ் உருவாக்கினார். 22 நாடுகளை வைத்து செய்யப்பட்ட அந்த ஆய்வில் மாரடைப்புக்கும் கொழுப்புக்கும் எத்தொடர்பும் கிடைக்கவில்லை. அதனால் தோல்வியை ஒப்புக்கொள்ள மனமின்றி அந்த 22 நாடுகளில் இருந்து வெறும் 7 நாடுகளை மட்டும் தேர்ந்தெடுத்து, கொழுப்பால் மாரடைப்பு ஏற்படும் என்று சொல்லி ஆய்வைப் பதிப்பித்தார் கீஸ்.

இத்தனை பெரிய விஞ்ஞானி சொல்லிவிட்டாரே என டைம் பத்திரிக்கை ‘மிஸ்டர் கொலஸ்டிரால்’ என அவருக்கு அடைமொழி கொடுத்து, அவரது புகைப்படத்தை அட்டையில் வைத்து ‘கொலஸ்டிரால் ஆபத்து’ என கவர்ஸ்டோரி வெளியிட்டது. அந்தக் காலகட்டத்தில் கீஸுக்கு எதிராகப் பல விஞ்ஞானிகள் வாதாடினார்கள். ஆனால் கீஸ் பிடிவாதகாரர். ஒருவர் தன்னை எதிர்ப்பது தெரிந்தால் அதைத் தனிப்பட்ட முறையிலான தாக்குதலாக எடுத்துக்கொள்வார். அவரைப் பொறுத்தவரை அவரை தனிப்பட்ட முறையில் தாக்குவதும், அவரது ஆய்வைத் தவறு என்று கூறுவதும் ஒன்றே. கீஸின் ஆய்வு தவறானது என்று பின்னாளைய விஞ்ஞானிகள் ஒப்புக்கொண்டாலும் அன்று கீஸிடம் யாரும் ஒரு கேள்விகூட எழுப்பவில்லை.

தேசிய அளவில் கீஸுக்கு இருந்த நற்பெயர், பிரபலம் ஆகியவை பிற விஞ்ஞானிகளுக்கு இல்லை. பல மருத்துவ அமைப்புகளின் தலைவராக கீஸ் இருந்தார். அவரை எதிர்த்தவர்களை முட்டாள்கள், மடையர்கள் எனத் திட்டி அறிக்கை வெளியிட்டார். இதனால் அவர்களுக்கான நிதியுதவிகள், ஆய்வு செய்தற்கான உதவித்தொகைகள் ஆகியவை நிறுத்தப்பட்டன. கீஸ் சொன்னதை ஆதரித்து வெளியிடும் ஆய்வறிக்கைகளுக்கே நிதியுதவி கிடைக்கும் என்கிற நிலை உருவானது. இப்படி ஒரு தனிமனிதரின் ஈகோ மற்றும் முரட்டுப்பிடிவாதம் ஆகியவை அறிவியல் துறையையே தலைகீழாகப் புரட்டிப்போட்டது. பலருடைய உடல்நலம் கெடவும், தவறான மருத்துவப் பரிந்துரைகள் பரவவும் கீஸ், செனட்டர் மெக்கவர்ன் போன்ற இருவருடைய தவறான முடிவுகளும், ஈகோவுமே காரணமாக இருந்தன.

ஆனால், கொலஸ்டிரால் மோசம் என ஊருக்கே உபதேசம் செய்த கீஸ், கடைசிவரை தினமும் மாட்டிறைச்சியையும், பன்றிக்கொழுப்பையும், முட்டையையும் உண்டுவந்தார். 1904-ல் பிறந்த கீஸ், தன் இளம்வயதில் காலை உணவாக முட்டை, பேகனை (பன்றிவயிற்றுக்கறி) சாப்பிட்டவர். இந்த உணவுப் பழக்கத்தை அவரால் கடைசிவரை கைவிடமுடியவில்லை. ஆனால் நகைமுரணாக கொலஸ்டிரால் ஆபத்து என கீஸின் கட்டுரையைப் பதிப்பித்த டைம் இதழ், அட்டைப் படத்தில் முட்டை மற்றும் பேகன் படத்தை வைத்து அக்கட்டுரையை வெளியிட்டது. அதுவே கீஸின் விருப்ப உணவாக கடைசிவரை இருந்தது. அதாவது எந்த உணவை மக்களைச் சாப்பிடவேண்டாம் என்றாரோ அதையே கடைசிவரை கீஸ் உண்டுவந்தார். சீரியல், ஓட்ஸ் போன்ற ‘ஆரோக்கிய உணவுகளை’ அவர் மக்களுக்குப் பரிந்துரைத்தபோதும் கடைசிவரை அவர் அதைத் தொடவே இல்லை.

பேட்டி ஒன்றில், ‘நீங்கள் ஏன் சீரியலையும் பாலையும் காலை உணவாக எடுப்பதில்லை’ என கீஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு கீஸ் ‘அந்தக் கூழை குடிப்பதா? எனக்கு குமட்டிக்கொண்டு வரும்’ என்றார். இப்படி ஆரோக்கிய உணவைக் கடைசிவரை உண்டுவந்த கீஸ், அதன் பலனாக உடல்பருமனின்றி ஒல்லியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்து தன் 101-வது வயதில் மரணமடைந்தார்.

 



--

செல்வன்

unread,
Apr 21, 2016, 4:56:46 PM4/21/16
to mintamil
மற்றவர்களுக்கு உபதேசிப்பதை தானே பின்பற்றாத சராசரி முற்போக்காளரே ஆன்சல் கீஸ் :-) 


தேமொழி

unread,
Apr 22, 2016, 2:56:12 AM4/22/16
to மின்தமிழ்


On Thursday, April 21, 2016 at 1:50:44 PM UTC-7, செல்வன் wrote:

2016-04-05 2:07 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
Although it was first publicized in 1945 by the American scientist Ancel Keys stationed in Pioppi, Italy, the Mediterranean diet failed to gain widespread recognition until the 1990s. Wikipedia 
என்பது விக்கி கூறும் தகவல்.  70 ஆண்டுகள் கடந்துவிட்டது, இத்தனை ஆண்டுகளில் மக்களும் பழகிப்போயிருப்பார்கள் 


ஆன்சல் கீஸா? கிழிஞ்சது கிருஷ்ணகிரி

இந்தாங்க அவரை பற்றி நான் எழுதின கட்டுரை


இதுதான் காது காதுன்னா கேது லேதுன்னு சொல்வதா செல்வன் ????

நான்தான் அந்த ஆண்டை ஹைலைட் செய்துள்ளேனே!!!

1945 ஆம் ஆண்டிலிருந்து, கடந்த 70 ஆண்டுகளாக மக்கள் மெடிட்டரேனியன் டயட்  என்று சொல்லவதற்கே பழகிப் போய்விட்டார்கள் ... பெயரில் ஏன் குற்றம் குறை கண்டுபிடிக்கத் தொடங்க வேண்டும்  என்பது போலக் கேட்டால் நீங்கள் ஏனோ ஆன்சல் கீஸ் பக்கம் போகிறீர்கள்? 

தேமொழி

unread,
Apr 22, 2016, 3:10:01 AM4/22/16
to மின்தமிழ்


On Thursday, April 21, 2016 at 1:37:31 PM UTC-7, செல்வன் wrote:
எல்லாம் போங்காட்டம்....

பேலியோவை விட வீகன் டயட் பெஸ்ட் என்கிறது இந்த ஆய்வு...ஹா..ஹா 



அடடா!! என்ன செல்வன் இது !!!  இவ்வளவுதானா பதில்...  


யூஸ் நியூஸ் போங்காட்டம் ஆடுகிறார்களா ?   அப்படி போடுங்க !!!

அந்தத் துறையின் வல்லுநர்களைக் கொண்டு மதிப்பிட்டதில்,  எந்த ஒரு மதிப்பீட்டிலும் 'பேலியோ டயட்'... கட்டக் ...கட்டக் ...கடேசியில்... இடம் பிடிப்பதற்குக் காரணம் "எல்லாம் போங்காட்டம்" 

என்பதுதான் உங்கள் கருத்தா?


சிறுபிள்ளைத் தனமான பதில் என்பதைத் தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை.  




Selva Murali

unread,
Apr 22, 2016, 3:44:15 AM4/22/16
to minTamil


--கிழிஞ்சது கிருஷ்ணகிரி --

எங்க மாவட்டத்தை ரொம்ப கிழிக்க வேண்டாம் செல்வன் அண்ணா. இங்க ஆல்ரெடி எல்லாம் கிழிச்சதுல ரோடு எல்லாம் பெப்பரபேன்னு இருக்கு :)

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
M.S.Murali (B+ve)
99430-94945
----------------------------------------------------------
India`s Leading Web Hosting Providers
www.rupeeshost.com
India`s First Cloud Hosting Provider
www.cloudsindia.in
----------------------------------------------------------

செல்வன்

unread,
Apr 22, 2016, 9:32:32 AM4/22/16
to mintamil

2016-04-22 2:10 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:

யூஸ் நியூஸ் போங்காட்டம் ஆடுகிறார்களா ?   அப்படி போடுங்க !!!

அந்தத் துறையின் வல்லுநர்களைக் கொண்டு மதிப்பிட்டதில்,  எந்த ஒரு மதிப்பீட்டிலும் 'பேலியோ டயட்'... கட்டக் ...கட்டக் ...கடேசியில்... இடம் பிடிப்பதற்குக் காரணம் "எல்லாம் போங்காட்டம்" 

என்பதுதான் உங்கள் கருத்தா?


சிறுபிள்ளைத் தனமான பதில் என்பதைத் தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை.  



சும்மா எக்ஸ்பெர்ட், வல்லுனர் என பேர் போட்டுகொண்டு யாராச்சும், எதையாச்சும் சொன்னா நம்பிடுவோமா? :-)

இப்படித்தான் எக்ஸ்பெர்ட்டுகள் எல்லாம் சேர்ந்து முட்டை கெடுதி, மட்டன் கெடுதி என காமடி செய்தார்கள்.

அதை எல்லாம் பேலியோ இயக்கத்தில் தூக்கிபோட்டு உடைத்தோம்.

இந்த ரேட்டிங்கில் கலந்து கொண்ட எக்ஸ்பெர்ட்டுகள் ஒன்றும் தெரியாத மாங்கா மண்டையர்கள் என்பது அவர்கள் கொடுத்த தரவரிசையை பார்த்தே கண்டுபிடிக்க முடிகிறது

இந்த தண்டசோற்று தடிராமன்களுக்கு சம்பளம் கொடுத்து, ரேட்டிங் போட சொன்ன யூ.எஸ் நியூஸ் சரியான காமடி பீஸ் என்பதும் தெரிகிறது

இப்படி எல்லாம் அவர் சொன்னார், இவர் சொன்னார், பெரியவர் சொன்னார், எப்ஸ்பெர்ட் சொன்னார், ஜீயர் சொன்னார், ஆயர் சொன்னார் என எல்லாம் சொல்லிகொண்டு எதையும் நம்பாதீர்கள். அது பகுத்தறிவல்ல :-)

எப்போருள் யார் யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு



--

தேமொழி

unread,
Apr 24, 2016, 3:31:11 AM4/24/16
to மின்தமிழ்
இப்பொழுது ஏதோ தேர்தல் பிரச்சாரத்தைக் கேட்பது போல இருக்கிறது எனக்கு....

எப்போருள் யார் யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு

இது நீங்கள் கூறுவதற்குத்தான் பொருந்துகிறது.

மெய்ப்பொருள் என்னவாக இருக்கும் என்று தேடுபவர்களுக்கு யுஎஸ்  நியூஸ் கொடுத்துள்ள தரவரிசைப் பட்டியல் கிடைக்கும்.

பிறகு மக்களுக்கு இருப்பது இரண்டே வாய்ப்பு.

ஒன்று தொழில்முறையில் அத்துறைக்குப் பயிற்சி பெற்று, அதனைத் தங்கள் வாழ்வாதாரமாகவும் கொண்டிருப்பவர்கள். அவர்கள் அசட்டையாக, ஏதாவது ஏடாகூடமாகப் பிழையான கருத்துச் சொன்னால் அது தங்கள் புகழுக்கே உலைவைத்துவிடும் என்று நினைப்பவர்கள், சொல்வதற்கு முன்னர் நம்பிக்கைக்குரிய ஆய்வுகளின் அடிப்படையில் முடிவெடுத்துச் சொல்பவர்கள், தாங்கள் சொல்வதால் யாருக்கும் எந்த ஒரு ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்று தொழில்முறை நெறிகளைக் கடைப்பிடிக்கும் "மாங்கா மடையர்கள்". இவர்கள் கவனக்குறைவாக உளறினால் தண்டம் கட்டவேண்டும், அவர்கள் குளறுபடி வரலாற்றுப் பாடமாகக் காட்டப்படும்.


மற்றொன்று, உடலியற்கூறுகளில், அதன் செயல்பாடுகள், வளர்சிதைமாற்றம் ஆகியவற்றினை பற்றி ஒட்டுமொத்தமாகக் கருத்தில் கொண்டு முடிவெடுக்காமல், தொழில்முறையில் பயிற்சி பெற்றவர்களையே மாங்கா மடையர்கள் என்று கூறுபவர்கள். ஒன்று கிடக்க ஒன்றானால் இவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை, நான் என்னைப் பொறுத்த அளவில் தெரிந்து கொண்டதை எல்லோருக்கும் சொன்னேன் என்று கூறிவிட்டு துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு தங்கள் தினசரி வேலையைப் பார்க்கப் போய்விடும் "தேங்கா மடையர்கள்".  இவர்களிடம் இழப்பீட்டுத் தொகையும் கேட்க முடியாது, அவர்களைத் தொழில்முறையில் முடக்கவும் முடியாது. பாதிப்பு ஏற்பட்டால் புலம்புபவர்கள் சீட்டுக் கம்பெனியில் பணம் போட்டு இழந்தவர்களின் கூட்டத்தோடு சேர நேரலாம். 

எனவே மெய்ப்பொருள் காண விரும்பும் மக்கள் முடிவெடுப்பது எளிது ...

மாங்கா மடையர்களா vs தேங்கா மடையர்களா 

யார் பக்கம் செல்வது?


 

செல்வன்

unread,
Apr 24, 2016, 11:38:15 AM4/24/16
to mintamil

2016-04-24 2:31 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
மெய்ப்பொருள் என்னவாக இருக்கும் என்று தேடுபவர்களுக்கு யுஎஸ்  நியூஸ் கொடுத்துள்ள தரவரிசைப் பட்டியல் கிடைக்கும்.

யு.எஸ்.நியூஸ் சொல்லுவதுதான் மெய்ப்பொருள் என வள்ளுவர் சொன்னதாக எனக்கு தெரியவில்லை.

மெய்ப்பொருளை நாமே தேடிகண்டுபிடிக்கவேண்டும். யு.எஸ்.நியூஸ் சொல்வது "யார் யார் வாய் கேட்பினும்" என்பதிலேயே அடங்கும்



ஒன்று தொழில்முறையில் அத்துறைக்குப் பயிற்சி பெற்று, அதனைத் தங்கள் வாழ்வாதாரமாகவும் கொண்டிருப்பவர்கள். அவர்கள் அசட்டையாக, ஏதாவது ஏடாகூடமாகப் பிழையான கருத்துச் சொன்னால் அது தங்கள் புகழுக்கே உலைவைத்துவிடும் என்று நினைப்பவர்கள், சொல்வதற்கு முன்னர் நம்பிக்கைக்குரிய ஆய்வுகளின் அடிப்படையில் முடிவெடுத்துச் சொல்பவர்கள், தாங்கள் சொல்வதால் யாருக்கும் எந்த ஒரு ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்று தொழில்முறை நெறிகளைக் கடைப்பிடிக்கும் "மாங்கா மடையர்கள்". இவர்கள் கவனக்குறைவாக உளறினால் தண்டம் கட்டவேண்டும், அவர்கள் குளறுபடி வரலாற்றுப் பாடமாகக் காட்டப்படும்.


இவர்கள் எல்லாம் மருந்து கம்பனி லாபி, உணவுலாபிக்கு கட்டுபட்ட விஞ்ஞானத்தை கிளிப்பிள்ளை போல படித்து ஒப்பிப்பவர்கள். இந்த ஜோக்கர்களுக்கு பெயர் தான் எக்ஸ்பெர்ட்டுகள்.

இந்த கோமாளிகள் சொல்லும் டயட்டை கேட்டால் ஆயுளுக்கும் நோயாளியாக தான் இருக்கவேண்டும்


மற்றொன்று, உடலியற்கூறுகளில், அதன் செயல்பாடுகள், வளர்சிதைமாற்றம் ஆகியவற்றினை பற்றி ஒட்டுமொத்தமாகக் கருத்தில் கொண்டு முடிவெடுக்காமல், தொழில்முறையில் பயிற்சி பெற்றவர்களையே மாங்கா மடையர்கள் என்று கூறுபவர்கள். ஒன்று கிடக்க ஒன்றானால் இவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை, நான் என்னைப் பொறுத்த அளவில் தெரிந்து கொண்டதை எல்லோருக்கும் சொன்னேன் என்று கூறிவிட்டு துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு தங்கள் தினசரி வேலையைப் பார்க்கப் போய்விடும் "தேங்கா மடையர்கள்".  இவர்களிடம் இழப்பீட்டுத் தொகையும் கேட்க முடியாது, அவர்களைத் தொழில்முறையில் முடக்கவும் முடியாது. பாதிப்பு ஏற்பட்டால் புலம்புபவர்கள் சீட்டுக் கம்பெனியில் பணம் போட்டு இழந்தவர்களின் கூட்டத்தோடு சேர நேரலாம். 




தவறு.

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற மருத்துவர்களில் பலர் பேலியோ டயட்டை பின்பற்றி, தம் நோயாளிகளுக்கு பரிந்துரைத்து வருகிறார்கள். ஜிப்மர் மருத்துவமனை சார்பாக ஆரோக்கியம் நல்வாழ்வு குழுவில் ஆராய்ச்சி நடத்தபட்டு, மெடிக்கல் கான்பரன்ஸ்களில் எங்கள் குழுமத்தை பற்றி பேசி, ஆய்வுகட்டுரைகளை சமர்ப்பித்துள்லார்கள்.

 காண்க:




எனவே மெய்ப்பொருள் காண விரும்பும் மக்கள் முடிவெடுப்பது எளிது ...

மாங்கா மடையர்களா vs தேங்கா மடையர்களா 

யார் பக்கம் செல்வது?



இரு டயட்டையும் தலா மூன்று மாதம் பின்பறூங்கள். அதன்பின் உண்மை உங்களுக்கே பிடிபட்டுவிடும்.

டயட்டையே பின்பற்றாமல் அது மோசம் என்பது நகைச்சுவை. இந்த எக்ஸ்பெர்ட் கோமாளிகளில் எத்தனை ஜோக்கர்கள் பேலியோவை பின்பற்றினார்கள்? பத்து இட்டிலியையும், கெட்டி சட்னியைக்யும் தின்றுவிட்டு பேலியோ என்றால் என்ன என பேப்பரில் மட்டும் படித்து அதுக்கு மதிப்பெண் போட்டு 33ம் இடத்தை கொடுப்பார்களாம்..அதை நாலு ஆண்டுகளாக பின்பற்றி வரும் நாங்கள் உண்மை என ஏற்றுக்கொன்டு "இதான் மெய்ப்பொருள்" என சொல்லி சல்யூட் அடிக்கணுமாம் :-)

அவங்களை எல்லாம் அவரவர் பேரன்,பேத்தியையாவது ஒழுங்கான நியுட்ரிஷன் சயன்ஸா படிக்க சொல்லுங்க :-)

--

தேமொழி

unread,
Apr 24, 2016, 3:03:06 PM4/24/16
to மின்தமிழ்


On Sunday, April 24, 2016 at 8:38:15 AM UTC-7, செல்வன் wrote:

2016-04-24 2:31 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
மெய்ப்பொருள் என்னவாக இருக்கும் என்று தேடுபவர்களுக்கு யுஎஸ்  நியூஸ் கொடுத்துள்ள தரவரிசைப் பட்டியல் கிடைக்கும்.

யு.எஸ்.நியூஸ் சொல்லுவதுதான் மெய்ப்பொருள் என வள்ளுவர் சொன்னதாக எனக்கு தெரியவில்லை.

மெய்ப்பொருளை நாமே தேடிகண்டுபிடிக்கவேண்டும். யு.எஸ்.நியூஸ் சொல்வது "யார் யார் வாய் கேட்பினும்" என்பதிலேயே அடங்கும்


உங்கள் பதிலையே திருப்பினால் ..... ஜிப்மர் மருத்துவர்களே சொல்லிவிட்டார்கள் என்று சொல்கிறீர்களே அப்பொழுது மட்டும் அவர்கள் உங்களுக்குத் தேவையா?


 


ஒன்று தொழில்முறையில் அத்துறைக்குப் பயிற்சி பெற்று, அதனைத் தங்கள் வாழ்வாதாரமாகவும் கொண்டிருப்பவர்கள். அவர்கள் அசட்டையாக, ஏதாவது ஏடாகூடமாகப் பிழையான கருத்துச் சொன்னால் அது தங்கள் புகழுக்கே உலைவைத்துவிடும் என்று நினைப்பவர்கள், சொல்வதற்கு முன்னர் நம்பிக்கைக்குரிய ஆய்வுகளின் அடிப்படையில் முடிவெடுத்துச் சொல்பவர்கள், தாங்கள் சொல்வதால் யாருக்கும் எந்த ஒரு ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்று தொழில்முறை நெறிகளைக் கடைப்பிடிக்கும் "மாங்கா மடையர்கள்". இவர்கள் கவனக்குறைவாக உளறினால் தண்டம் கட்டவேண்டும், அவர்கள் குளறுபடி வரலாற்றுப் பாடமாகக் காட்டப்படும்.


இவர்கள் எல்லாம் மருந்து கம்பனி லாபி, உணவுலாபிக்கு கட்டுபட்ட விஞ்ஞானத்தை கிளிப்பிள்ளை போல படித்து ஒப்பிப்பவர்கள். இந்த ஜோக்கர்களுக்கு பெயர் தான் எக்ஸ்பெர்ட்டுகள்.

இந்த கோமாளிகள் சொல்லும் டயட்டை கேட்டால் ஆயுளுக்கும் நோயாளியாக தான் இருக்கவேண்டும்


இந்தக் கோமாளிகள் குடும்பத்தில்தான் நான் பிறந்து வளர்ந்தது.  

என்னைத் தவிர என் அம்மாவைத் தவிர எல்லோரும் (அப்பா, தம்பி, தங்கை மருத்துவர்கள் .....வீட்டிற்கு வந்த மருமகளும் மருத்துவர்)  ஆனால் இவர்கள் யாவரும் கோமாளியாக காமடி செய்து பார்த்த அனுபவம்  அரை நூற்றாண்டாக எனக்கு இல்லை .

 


மற்றொன்று, உடலியற்கூறுகளில், அதன் செயல்பாடுகள், வளர்சிதைமாற்றம் ஆகியவற்றினை பற்றி ஒட்டுமொத்தமாகக் கருத்தில் கொண்டு முடிவெடுக்காமல், தொழில்முறையில் பயிற்சி பெற்றவர்களையே மாங்கா மடையர்கள் என்று கூறுபவர்கள். ஒன்று கிடக்க ஒன்றானால் இவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை, நான் என்னைப் பொறுத்த அளவில் தெரிந்து கொண்டதை எல்லோருக்கும் சொன்னேன் என்று கூறிவிட்டு துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு தங்கள் தினசரி வேலையைப் பார்க்கப் போய்விடும் "தேங்கா மடையர்கள்".  இவர்களிடம் இழப்பீட்டுத் தொகையும் கேட்க முடியாது, அவர்களைத் தொழில்முறையில் முடக்கவும் முடியாது. பாதிப்பு ஏற்பட்டால் புலம்புபவர்கள் சீட்டுக் கம்பெனியில் பணம் போட்டு இழந்தவர்களின் கூட்டத்தோடு சேர நேரலாம். 




தவறு.

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற மருத்துவர்களில் பலர் பேலியோ டயட்டை பின்பற்றி, தம் நோயாளிகளுக்கு பரிந்துரைத்து வருகிறார்கள். ஜிப்மர் மருத்துவமனை சார்பாக ஆரோக்கியம் நல்வாழ்வு குழுவில் ஆராய்ச்சி நடத்தபட்டு, மெடிக்கல் கான்பரன்ஸ்களில் எங்கள் குழுமத்தை பற்றி பேசி, ஆய்வுகட்டுரைகளை சமர்ப்பித்துள்லார்கள்.

 காண்க:



இதுதான் எனக்குப் புரியவே இல்லை.... ஏன் இப்பொழுது சொல்வதுதானே...

இவர்கள் எல்லாம் மருந்து கம்பனி லாபி, உணவுலாபிக்கு கட்டுபட்ட விஞ்ஞானத்தை கிளிப்பிள்ளை போல படித்து ஒப்பிப்பவர்கள். இந்த ஜோக்கர்களுக்கு பெயர் தான் எக்ஸ்பெர்ட்டுகள்.

இந்த கோமாளிகள் சொல்லும் டயட்டை கேட்டால் ஆயுளுக்கும் நோயாளியாக தான் இருக்கவேண்டும்

என்று!!!!





எனவே மெய்ப்பொருள் காண விரும்பும் மக்கள் முடிவெடுப்பது எளிது ...

மாங்கா மடையர்களா vs தேங்கா மடையர்களா 

யார் பக்கம் செல்வது?



இரு டயட்டையும் தலா மூன்று மாதம் பின்பறூங்கள். அதன்பின் உண்மை உங்களுக்கே பிடிபட்டுவிடும்.


நீங்கள் அந்தப் பட்டியலில் இருக்கும் எத்தனை டயட்டை தலா மூன்று மூன்று மாதங்கள் பின்பற்றிவிட்டு பேலியோ  பக்கம் சென்றீர்கள்.

குறைந்தது அவர்கள் பட்டியலில் இருக்கும் முதல் ஐந்துகளில் எவற்றையெல்லாம் மூன்று மூன்று மாதம் பின்பற்றி ஆய்வு  செய்து இந்த முடிவுக்கு .... அதாவது மெய்ப்பொருள் காணும் முடிவுக்கு வந்தீர்கள்.  அப்படிச் செய்துதான் அதை வழங்கியவர்களை மாங்கா மடையர்கள், கோமாளிகள் என்று சொல்கிறீர்கள் என்று நான்புரிந்து கொள்ளலாமா?

இல்லை வாய் புளித்ததோ மங்காய் புளித்ததோ என்று சொல்லும் அறிக்கைகள்தானா?  

எனக்கு யாருக்கும் ஆதரவு தரவேண்டிய நிலையோ ....அல்லது எதிர்க்க வேண்டிய நிலையோ கிடையாது.

ஒரு ஆய்வறிக்கையைக்  கொடுத்து இவர்கள் இப்படிச் சொல்கிறார்கள்  இந்த இந்தக் காரணத்தினால் இப்படிச் சொல்கிறார்களாம்.  உணவுமுறையைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கு இது ஒரு வழிகாட்டியாக  இருக்கும் என்பதும்... இப்பட்டியலில் இது இது சிறந்த உணவுமுறை என்று சொல்கிறார்கள் என்று சுட்டிக் காட்டிவிட்டுப் போவதும் மட்டுமே நான் செய்துள்ளது.

அதைப் படித்தவுடன்.  பா..ஹம்பக்... போங்காட்டம் என்றெல்லாம் சொல்ல எனக்குச் சரியான சான்றுகள் வேண்டும். இதற்காக நான் ஒவ்வொன்றையும் பின்பற்றி முடிவு சொல்ல முடியாது. நெருப்பு சுடும் என்று சொல்கிறார்கள் என்றாள் நீ விரலை தீயில் வைத்து மெய்ப்பொருள் காணாமல் சொல்கிறாய் என்பீர்கள் போலிருக்கிறது. 

நீங்கள் இதைச் சொன்னவர்கள் மாங்கா மடையர்கள் என்று சொன்னால் அதற்கு நான் தலையாட்ட முடியாது.   
உணவுமுறையைப் பரிந்துரைக்க அடிப்படை அறிவியல் படித்தவர்கள் எல்லாம் மாங்கா மடையர்கள் எனப் பொதுமைப்படுத்துவதிலும் எனக்கு உடன்பாடு  இல்லை.



டயட்டையே பின்பற்றாமல் அது மோசம் என்பது நகைச்சுவை. இந்த எக்ஸ்பெர்ட் கோமாளிகளில் எத்தனை ஜோக்கர்கள் பேலியோவை பின்பற்றினார்கள்? பத்து இட்டிலியையும், கெட்டி சட்னியைக்யும் தின்றுவிட்டு பேலியோ என்றால் என்ன என பேப்பரில் மட்டும் படித்து அதுக்கு மதிப்பெண் போட்டு 33ம் இடத்தை கொடுப்பார்களாம்..அதை நாலு ஆண்டுகளாக பின்பற்றி வரும் நாங்கள் உண்மை என ஏற்றுக்கொன்டு "இதான் மெய்ப்பொருள்" என சொல்லி சல்யூட் அடிக்கணுமாம் :-)

யார் !!!!!!!!!!!
யூ எஸ் நியூஸ் தரவரிசைப் படுத்துவதில் பங்கு பெற்றவர்களா  பத்து இட்டிலியையும், கெட்டி சட்னியையும் தின்றுவிட்டு பேலியோ என்றால் என்ன எனப் பேப்பரில் மட்டும் படித்து அதுக்கு மதிப்பெண் போட்டு 33ம் இடத்தைக் கொடுத்தார்கள் ... அந்தக் குறிப்புகளையும் கட்டுரையில் யூ எஸ் நியூஸ் கொடுத்துள்ளார்களா!!!!! ... என் கண்ணில் தட்டுப்படவில்லையே... இல்லை நீங்கள் தனிப்பட்ட முறையில் துப்பறியும் நிறுவனம் ஒன்றை நடத்தி யார் யார் என்னென்ன சாப்பிடுகிறார்கள் என்பதையெல்லாம் துப்பறிந்து  கொண்டிருக்கிறீர்களா? 

தேமொழி

unread,
Apr 24, 2016, 4:39:03 PM4/24/16
to மின்தமிழ்
சரியாகச் சொல்ல வேண்டுமென்றால்...

கடைசிக்கு முதல் இடம்....36 ஆவது இடம் எனத் திருத்திப் படிக்கவும்.

Rankings:
Paleo Diet ranked #32 in Easiest Diets to Follow. 38 diets were evaluated with input from a panel of health experts. See how we rank diets here.

Paleo Diet is ranked:
 #32 (tie)      inEasiest Diets to Follow
 #34 (tie)       inBest Diets for Healthy Eating
 #35       inBest Diabetes Diets
 #36 (tie)       inBest Diets Overall
 #36       inBest Heart-Healthy Diets
 #38       inBest Fast Weight-Loss Diets
 #38 inBest Weight-Loss Diets


..... தேமொழி

பழமைபேசி

unread,
Apr 24, 2016, 7:36:47 PM4/24/16
to மின்தமிழ்
இந்த டயட், இந்த ரேங்க் என்பதெல்லாம் அவரவர் கோணத்தைப் பொறுத்தது. எடுத்துக்காட்டு: நீரிழிவு நோயைக்கட்டுக்குள் வைத்தல் என்பவருக்கு அதற்கேற்ற டயட். முட்டை, இறைச்சி ஒவ்வாமை(anaphylaxis) இருப்பவருக்கு, அவர் பார்வையில் ஆகச்சிறந்த டயட். ஆகையால், மதவாதிகளைப் போல(நன்றி: பத்ரி சேஷாத்ரி) ஒன்றையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பதில் பொருளேதுமில்லை.

செல்வன்

unread,
Apr 24, 2016, 7:49:40 PM4/24/16
to mint...@googlegroups.com


On Apr 24, 2016 2:03 PM, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
>
>
>
> On Sunday, April 24, 2016 at 8:38:15 AM UTC-7, செல்வன் wrote:
>>
>>
>> 2016-04-24 2:31 GMT-05:
>

செல்வன்

unread,
Apr 24, 2016, 8:03:51 PM4/24/16
to mint...@googlegroups.com

(முந்தய மடல் இக்னோர் செய்யவும்)

ஜிப்மர் மருத்துவர்கள் எல்ஸ்பெர்ட்ட்டுகள, அதனால் பெலியோ பின்பற்றுங்கள் என நான் சொல்லவில்லையே?

நாலு ஆண்டுகளாக பேலியோவை பின்பற்றி, குழுவை நடத்தி 40,000 உறுப்பிநர்களை பின்பற்ற வைத்து, ஊடகம்,.குழுமம், முகநூல் என் அனைத்திலும் பேலியோவின் ஆதாரமான அறிவியல் அறிக்கைகளை சான்றுடன் கொடுத்து வந்துள்ளேன்.

முதலில் அதை ஜனக் சயன்ஸ், ஆபத்து என்ற மருத்துவ உலகம் இன்று தமிழகம் தழுவிய அளவில் அதை ஒரு குறிப்பிட சதவிகித அளவில் ஒப்புகொள்ள துவங்கியுள்ளது.

இன்னும் எழெட்டு,.பத்து ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை கணிசமாக உயரும் என்பதில் சந்தேகமில்லை.

நான் ஒன்றும் சவுத் பீச் டயட் மோசம், டாஷ் டயட் மோசம் என தரைவரிசைபடுத்தவில்லையே? அதனால் அவற்றை எல்லாம் நான் பின்பற்றும் அவசியம் எனக்கு கிடையாது.

ஆனால் இந்த யு.எஸ் நியூஸ் கோமாளிகள் ஆயுளில் ஒரு நாளாவது பேலியோவை பின்பற்றினார்களா? இல்லை....மேஜையில் உட்கார்ந்து "இந்த இந்த டயடுக்கு இந்த மதிப்பெண், அதுக்கு அத்தனை மதிப்பெண்" என எந்த டயட்டையும் பின்பற்றி பாராமல் அவரவர் சார்புநிலைகேர்ப வரிசைபடுத்தினார்களா? பேலியோவை பின்பற்றியவர்களிடம் குறைந்தபட்சம் பேசிநார்களா?

வல்லுனர் என்றால் ஒரு துறையில் அனுபவம் பெற்றவரே வல்லுனர். பேலியோவையே ஆயுளில் பின்பற்றியிராதவர் எப்படி அதில் வல்லுனராக இருப்பார்?

அதனால் இம்மாங்காய் மடையர்கள் சொல்லும் தர வரிசைபட்டியல் அறிவுக்கு முரணானது.



தேமொழி

unread,
Apr 24, 2016, 8:21:23 PM4/24/16
to மின்தமிழ்
 வல்லுனர் என்றால் ஒரு துறையில் அனுபவம் பெற்றவரே வல்லுனர் <<< உங்கள் வரைமுறைதான் செல்வன்

அவர்களை சிறந்த உணவுமுறையை எது என்று உங்கள் கருத்தின் அடிபடையில் சொல்லுங்கள் என்று வரவழைக்கப்பட்டு கருத்து கேட்கிறார்கள்... 
இது ஊடகங்களின் நடைமுறை... எது நடந்தாலும் அதில் அனுபவம் உள்ளவர்களை, துறை சார்ந்தவர்களை கருத்து கேட்பதே வழக்கம் <<< இது நடைமுறை 

ஆனால் இவர்கள் மாங்காய் மடையர்கள் இவர்கள் கருத்து செல்லாது ... அதாவது செல்வனின் வார்த்தைகளில்  ..."இம்மாங்காய் மடையர்கள் சொல்லும் தர வரிசைபட்டியல் அறிவுக்கு முரணானது"

இப்பொழுது இங்கு யார் சொல்வது முன்னுக்குப் பின் முரணாக உள்ளது?


..... தேமொழி 

செல்வன்

unread,
Apr 24, 2016, 8:31:24 PM4/24/16
to mint...@googlegroups.com

துறை வல்லுனர் என்றால் ஸ்பெசாலிட்டி வித்தியாசம் இல்லையா?

பல் டாக்டரை கூப்பிட்டு கார்டியாலஜி சர்ஜரியை தரவரிசைபடுத்த சொன்னால் எப்படி பொருந்தும்?

இக்கோமாளிகளுக்கு அறிவு உலக்கை கொழுந்து என்பதற்கான சான்று வீகன் டயட்டை விட பேலியோ டயட் பின்பற்ற கடினம் என சான்றிதழ் கொடுத்திருப்பதே.

பேக்ன், ஸ்டேக் கொண்ட பேலியோ டயட் பின்பற்ற கடினமா அல்லது இலை, தழைகளை உண்ணும் வீகன் டயட் பின்பற்ற கடினமா?

அதனால் தான் வியப்படைந்து இவர்கள் ஆயுளில் ஒரு நாளாவது பேலியோ பின்பற்றினார்களா என கேட்டேன்.

தேமொழி

unread,
Apr 24, 2016, 8:45:21 PM4/24/16
to மின்தமிழ்


On Sunday, April 24, 2016 at 5:31:24 PM UTC-7, செல்வன் wrote:

துறை வல்லுனர் என்றால் ஸ்பெசாலிட்டி வித்தியாசம் இல்லையா?


 General Physician/General practitioner என்று பொதுவான ஒரு பிரிவும் இருக்கிறது.

பொதுவாக உடல் நலத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்பொழுது பல் மருத்துவரையோ, காது மூக்கு தொண்டை மருத்துவரையோ, கண் மருத்துவரையோ அல்லது தோல் மருத்துவரையோ கூப்பிட்டு வைத்து பேசிக் கொண்டிருப்பார்களா?

யூ  எஸ் நியூஸ் நிறுவனம் தேர்வு செய்த ஆய்வுக் குழுவில் அப்படி என்ன உங்களுக்கு ஒரு சந்தேகம்? புரியவில்லையே !!!

செல்வன்

unread,
Apr 24, 2016, 9:00:57 PM4/24/16
to mint...@googlegroups.com

என் கேள்வி:

வீகன் டயட் பேலியோவை விட பின்பற்ற கடினம் என சொல்ல இவர்கள் இரண்டையும் பின்பற்றி இருக்க வேண்டும்.

அப்படி செய்யாமல் சும்மா உட்கார்ந்த இடத்தில் இருந்து "பேலியோ கஸ்டம். வீகன் இஸி" என்பது புரபசனல் எதிக்ஸ் தானா?

தேமொழி

unread,
Apr 24, 2016, 9:28:15 PM4/24/16
to மின்தமிழ்
சரி... "சுலபம்" என்று தரவரிசைப்படுத்திய  வகையில் "மட்டும்" முதலில் பார்ப்போம்.

அவர்கள் (அந்த மாங்காய் மடையர்கள்) மற்ற வகையிலும்தான் ஒவ்வொரு டயட்டையும்   தரவரிசைப் படுத்தியுள்ளார்கள்... 
அவற்றையும் பார்ப்பது அவர்கள் பின்பற்றிய அணுகு முறையையையும் அதற்கான காரணத்தையும் விளக்கும்... 

செய்வோமா ... அதனால் நாமும் நிறையத் தெரிந்து கொள்ளலாம்.  

இப்பொழுது சுலபம்/பின்பற்ற எளிது ... என்ற அடிப்படை 
நீங்கள் வேகன் என்றதால் அது தொடர்பான மற்றவையும்...
The Traditional Asian Diet, Vegetarian Diet, Vegan Diet, Paleo Diet
அவர்கள் தர வரிசையில் இடம்பெற்ற அதே வரிசையில் இங்கே கொடுக்கப்படுகிறது ...
அவர்கள் தங்கள் ஆய்வு/அணுகுமுறையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவற்றையும் வெளிப்படையாக, தெளிவாக அவர்கள் தளத்திலேயே கொடுத்துள்ளார்கள்.

எனவே ஒவ்வொருவரும் அவர்களுக்கு எது பொருந்தும் என்று அவர்களே முடிவு செய்து கொள்ளலாம்.  
இது தகவல் கொடுக்கும் முறை... ஆனால் கருத்துத் திணிப்பு முறையல்ல ...


How easy is it to follow?


The Traditional Asian Diet

That depends. If you’re not big on rice, noodles, fresh veggies, and nuts and legumes, it might be tough.

Convenience. Recipes are difficult to find, unless you invest in one of a few Asian diet-specific books. Oldways’ consumer-friendly tips will make meal planning slightly easier. 

Recipes. Surprisingly, a simple Google search doesn’t yield too many options. You’re better off investing in books like The Asian Diet: Get Slim and Stay Slim the Asian Way andFeed Your Tiger: The Asian Diet Secret for Permanent Weight Loss and Vibrant Health.

Eating out. Sure—there are no hard-and-fast rules, though you may have a tough time at standard American restaurants. Scan the menu beforehand to identify healthy choices.  And don’t assume that American Chinese or Thai restaurants are serving traditional Asian fare; these are often cooked with less healthy ingredients and are higher in calories.

Alcohol. Sake, wine, and beer are allowed in moderation. If you’re going to have a drink, stick with one for women and two for men, only once or twice a week.

Timesavers. None, unless you hire somebody to plan your meals, shop for them, and prepare them.

Extras. None. 

Fullness. Nutrition experts emphasize the importance of satiety, the satisfied feeling that you’ve had enough. With so many fiber-packed whole grains and veggies (and without a calorie cap), you shouldn’t go hungry. 

Taste. You’re making everything, so if something doesn’t taste good, you know who to blame.

REF: http://health.usnews.com/best-diet/traditional-asian-diet

________________________

Vegetarian Diet

How much do you like meat? If the thought of a turkey-free Thanksgiving isn’t a turn off, making the switch probably won’t be too hard. Plus you’re free to decide what you can’t live without (omelets? ice cream?) and whether you’ll cheat on occasion. Be mindful that healthy vegetarianism requires planning, especially if you’re a first-time convert.

Convenience. When you want to cook, there’s a recipe somewhere that’ll suit your taste buds. When you don’t, virtually every restaurant serves up vegetarian fare. And while alcohol is technically permitted, that’s not license to binge drink. 

Recipes. Limitless. Magazines, books, and websites like this one abound, offering suggestions for every meal and cuisine.

Eating out. Easy. Restaurants typically have lots of vegetarian-friendly entrées. Careful, though: Vegetarian doesn’t always mean healthy and restaurants are known for their gargantuan portions.

Alcohol. Vegetarian-friendly, but too much can thwart weight loss and damage the liver, brain, and heart. Moderation is your best bet—that’s one drink a day for women, two a day for men. (A drink is considered 12 ounces of beer, 5 ounces of wine, or 1½ ounces of liquor.)

Timesavers. None, unless you hire somebody to plan your meals, shop for them, and prepare them.

Extras. N/A 

Fullness. Nutrition experts emphasize the importance of satiety, the satisfied feeling that you’ve had enough. If you’ve built a healthful vegetarian diet around fiber-packed veggies, fruits, and whole grains, you shouldn’t feel hungry between meals. 

Taste. You’re making everything, so if something doesn’t taste good, you know who to blame.


REF: http://health.usnews.com/best-diet/vegetarian-diet

________________________

Vegan Diet

How difficult is the idea of a turkey-free Thanksgiving and morning cereal without the milk? Be mindful that healthy veganism requires planning, especially if you’re a newbie.

Convenience. When you want to cook, there’s a recipe somewhere that’ll suit your taste buds. Still, veganism takes some work and creativity. It’s up to you to plan meals around plant protein rather than animal protein. 

Recipes. Limitless. Vegan magazines, books, and websites abound, offering suggestions for every meal and cuisine.

Eating out. Doable, but options may be limited. Garden vegetable soup and steamed veggies make good appetizers. Entrée salads are your best bet, but don’t forget to hold the bacon bits, croutons, and cheese. For dessert, go with fresh fruit.

Alcohol. Only certain types of alcohol are vegan-friendly. Some wines, for example, are filtered through gelatin, egg whites and isinglass, made from fish bladders. Check which brands are OK on http://www.barnivore.com.

Timesavers. None, unless you hire somebody to plan your meals, shop for them, and prepare them.

Extras. N/A 

Fullness. Nutrition experts emphasize the importance of satiety, the satisfied feeling that you’ve had enough. If you’ve built a healthful vegan diet around fiber-packed veggies, fruits, and whole grains, you shouldn’t feel hungry between meals. 

Taste. You’re preparing the food—if it doesn’t taste good, you know who to blame. Tryreinventing your favorites: Go for black-bean instead of steak burritos, or if chicken stir-fry is your thing, use tofu instead of poultry. And consider replacing turkey meatballs or the meat in spaghetti sauce with white beans. There are lots of dessert options, too, including raspberry lavender cupcakes, gingerbread pumpkin seed brittle, cherry-berry peanut butter cobbler, and poppy seed scones. (Often, treats are made using non-dairy milk, soy or coconut creamer, flaxseeds, chickpea flour, vegan cream cheese, and even vegan sprinkles.)

REF:http://health.usnews.com/best-diet/vegan-diet

________________________

Paleo Diet

Can you get used to the idea of breadless sandwiches? Or having your milk and cookies without either milk or cookies? Diets that restrict entire food groups are difficult to follow. On the flip side, you can determine how primal you want to be, working in some cheat meals if you want.

Convenience. Recipe sites and cookbooks are abundant, but you can also incorporate eating out into your Paleo plan. Alcohol is discouraged but OK in moderation. You’ll have lots of sites and books for support. 

Recipes. Free sites like Paleo Diet Lifestyle serve up recipes. There’s even "The Paleo Diet Cookbook," "Everyday Paleo" and "The Primal Blueprint Cookbook."

Eating out. Sure, if that means dinner at your neighbor’s cave. While there were no restaurants to tempt our Paleolithic ancestors, you’re free to decide how you’ll work them in. If (or rather when) you do, "The Paleo Diet" recommends simplicity: Order lean meat or seafood with veggies and fresh fruit and call it a night.

Alcohol. Not part of a true Paleo diet. Following "The Paleo Diet," though, you can have the occasional glass of wine or beer during a cheat meal. (Alcohol only adds empty calories anyway, and if you’re trying to lose weight, every calorie counts.)

Time savers. None, unless you hire somebody to plan your meals, shop for them and prepare them.

Extras. "The Paleo Diet" offers sample meal plans and recipes, lists of approved foods and tips on sticking to the plan while eating out and traveling. You’ll find even more help online, including money-saving tips, quick-start guides and shopping lists. 

Fullness. Nutrition experts emphasize the importance of satiety, the satisfied feeling that you’ve had enough. You shouldn’t feel hungry on this diet – protein and fiber are filling, and you’ll get plenty of both. One small study of 29 participants published in Nutrition and Metabolism in 2010 found Paleo dieters felt just as full but consumed fewer calories than their Mediterranean counterparts. 

Taste. You’re making everything, so if something doesn’t taste good, you know who to blame.
REF: http://health.usnews.com/best-diet/paleo-diet

________________________


செல்வன்

unread,
Apr 24, 2016, 11:58:31 PM4/24/16
to mintamil

On Sun, Apr 24, 2016 at 8:28 PM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
அவர்கள் (அந்த மாங்காய் மடையர்கள்) மற்ற வகையிலும்தான் ஒவ்வொரு டயட்டையும்   தரவரிசைப் படுத்தியுள்ளார்கள்... 
அவற்றையும் பார்ப்பது அவர்கள் பின்பற்றிய அணுகு முறையையையும் அதற்கான காரணத்தையும் விளக்கும்... 

செய்வோமா ... அதனால் நாமும் நிறையத் தெரிந்து கொள்ளலாம்.  


இதெல்லாம் மேஜையில் உட்கார்ந்து எந்த டயட்டையும் பின்பற்றாமல் எழுதிய பட்டியல்.

ஒரு உணவகம்னு போனால் ஆரோக்கியமான வீகன் உணவுக்கான சாய்ஸ் கம்மி. ஜன்க்புட் வேகன்னா சாய்ஸ் அதிகம்..ஆனால் அது டயட் எனும் வரிசையில் வராது

அதே பேலியோ உணவு வேண்டுமெனில் ஆயிரக்கணக்கில் உள்ல ஸ்டேக்ஹவுஸ்களில் ஏதேனும் ஒன்றுக்கு போனால் தீர்ந்தது வேலை.

சமைப்பதும் பேலியோ சமையலை போல வீகன் சமையல் எளிதல்ல. ஐந்தே நிமிடத்தில் சமைக்க கூடிய ஆயிரக்கணக்கான ரெசிபிகள் உள்ளன. சுவையான, ஆரோக்கியமான, வயிற்றை நிரம்ப்பும் சமையல். வீகனில் இந்த தேர்வுகள் எல்லாம் மிக,மிக குறைவு. 

ஆக வல்லுனர்கள் குழு இந்த இரு டயட்டுகளையும் பின்பற்றிவிட்டு வரிசைபடுத்தவில்லை.

சும்மா உட்கார்ந்த இடத்தில் இருந்தபடி விட்டத்தை பார்த்து யோசித்து பட்டியல் போட்டுள்ளார்கள்.


--

தேமொழி

unread,
Apr 25, 2016, 12:29:25 AM4/25/16
to மின்தமிழ்
FYI:
யூ எஸ் நியூஸ் தரவரிசைப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருவது .... அதுவும் பல ஆண்டுகளாக அவர்கள் இதைச் செய்து வருவதும் யாவரும் அறிந்ததே.

U.S. News & World Report is an American media company that publishes news, opinion, consumer advice, rankings, and analysis. Founded as a news weekly magazine in 1933, U.S. News transitioned to primarily web-based publishing in 2010. U.S. News is best known today for its influential Best Colleges and Best Hospitals rankings, but it has expanded its content and product offerings in education, health, money, careers, travel, and cars.  

அமெரிக்காவில் சிறந்த பல்கலைக்கழகங்கள், உலகில் சிறந்த பல்கலைக்கழகங்கள்  என்பவை அவற்றில் குறிப்பிடத் தக்க தரவரிசைப் படுத்தும் முறைகள். 
இதைப்  பலர் ஆர்வத்துடன் வாங்கிப் படித்து கல்லூரிகளைத்  தேர்வு செய்வதில் அவர்கள் கொடுக்கும்  குறிப்புகளைக் கவனத்தில் கொள்வார்கள்.
எங்கள் வீட்டிலும் பிள்ளைகள் கல்லூரிக்குத் தயாராகும் சமயம் இவற்றைப் படித்தோம், பயன்படுத்தினோம்.

விக்கிப்பீடியா குறிப்பிடுவது போல 'யூ எஸ் நியூஸ்' மேலும் பல தரவரிசைப்படுத்துவதில்  ஈடுபட்டாலும் பல்கலைக்கழக தரவரிசைப்படுத்தும் முறை மிகவும் பிரபலமானது.

அடுத்து நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள் செல்வன்?

ஆக வல்லுனர்கள் குழு அத்தனைப் பல்கலைகழகங்களிலும் போய் படித்துவிட்டா இப்படி தரவரிசைப்படுத்துகிறார்கள்?

அப்படி செய்யாமல் சும்மா உட்கார்ந்த இடத்தில் இருந்து "ஹார்வர்ட் சிறந்த பல்கலைக்கழகம்" என்பது புரபசனல் எதிக்ஸ் தானா?

இக்கோமாளிகளுக்கு அறிவு உலக்கை கொழுந்து என்பதற்கான சான்று "ஹார்வர்ட் சிறந்த பல்கலைக்கழகம்" சான்றிதழ் கொடுத்திருப்பதே.

இதெல்லாம் மேஜையில் உட்கார்ந்து எந்த பல்கலைக்கழகத்திலும் போய் படிக்காமல்  எழுதிய பட்டியல்.

சும்மா உட்கார்ந்த இடத்தில் இருந்தபடி விட்டத்தை பார்த்து யோசித்து பட்டியல் போட்டுள்ளார்கள்.

அதனால் இம்மாங்காய் மடையர்கள் சொல்லும் தர வரிசைபட்டியல் அறிவுக்கு முரணானது.

இவையெல்லாம் நீங்கள் கூறியவற்றை கருத்துக்கு ஏற்றபடி சற்றே மாறுதல் செய்தது.

சிறந்த மருத்துவமனையைத் தரவரிசைப்படுத்த... அடுத்து ஆய்வுக் குழுவினரின் கையைக் காலை உடைத்து அவர்களை மருத்துவ மனையில் சேர்த்து பிறகு அவர்கள்  ஆய்வு செய்வதைத்தான் ஒப்புக் கொள்வேன் என்று நீங்கள் சொல்லாமல் இருந்தால் சரிதான். 

செல்வன்

unread,
Apr 25, 2016, 1:52:18 AM4/25/16
to mintamil
அறிவியல் ஆய்வுமுறையே சிறந்ததை தேடுவதே

செவ்வாயில் உயிர் இருக்கா என்பதை கண்டறிய சிறந்த வழி செவ்வாய்க்கு போவதே. அது முடியாத பட்சத்தில் டெலெஸ்கோப்பை நாடுவதில் தவறில்லை.

பல்கலைகழகத்தை தரவரிசைபடுத்த சிறந்த முறை எல்லா பல்கலைகழத்திலும் ஒரு கோர்ஸ் எடுப்பதே. அது பிராக்க்டிக்கலாக சாத்தியமில்லை என்கையில் புள்ளிவிவரங்களை வைத்து வரிசைபடுத்துவதில் தவறில்லை.

ஆனால் டயட் அப்படி அல்ல. பின்பற்ற எளிது. இந்த வல்லுன்ர் குழு குறைந்தபட்சம் ஒரு நாளுக்கு ஒரு டயட் என பின்பற்றி இருந்தால் கூட "பேலியோவை பின்பற்ற கடினம்" என சான்றிதழ் கொடுத்திருக்க மாட்டார்கள். அவர்களது சர்க்கரை அளவுகளை ஆராய்ந்து, பேலியோவால் அது எப்படி மாறுகிறது என்பதையும் எளிய க்ளுகோமீட்டர் சோதனையில் கண்டுபிடித்திருக்க்லாம். ஆனால் அதையும் செய்யாமல் சர்க்கரையை குணபடுத்த பேலியோ 36வது இடமோ என்னவோ என கொடுத்துள்ளார்கள்.

ஆக எளிதில் செய்யமுடிந்ததை கூட செய்யாமல் இருக்கும் இவர்களுக்கு எக்ஸ்பெர்ட் என்ர பட்டம் ஒரு கேடா? இவர்கள் எதிலும் எக்ஸ்பெர்ட்டுகள் போல தெரியவில்லை. இவர்கள் ஆண்கழுதைகளை போன்ற கெட்டிக்காரர்கள். அவ்வளவே


தேமொழி

unread,
Apr 25, 2016, 2:24:06 AM4/25/16
to மின்தமிழ்
ஆய்வாளர் ஒருவரிடம் இருந்து ஆய்வுமுறையைப் பற்றிய இந்தக் கோணத்தை நான் எதிர்பார்க்கவில்லை. 

 

செல்வன்

unread,
Apr 25, 2016, 2:29:02 AM4/25/16
to mintamil
ஆய்வுமுறைகளின் பிழைகள் தெரிவதால் தான் சரியான அணுகுமுறையை கூறுகிறேன்.

முறைப்படி செய்யாததால் இது ஆய்வே அல்ல. சும்மா பொழுதுப்பொக்கு கட்டுரையாக மட்டுமே கருதமுடியும். 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Apr 25, 2016, 2:44:29 AM4/25/16
to மின்தமிழ்
யூ எஸ் நியூஸ் ஆய்வு  குறித்த உங்கள் கருத்துகளை யூ எஸ் நியூஸ் கவனத்திற்கு  அனுப்புங்கள் செல்வன். 
அது அவர்களுக்கு உதவக்கூடும். 

அத்துடன் ....

நீங்கள் அந்தப் பட்டியலில் இருக்கும் எத்தனை உணவுமுறைகளை .... நடைமுறையில் பின்பற்றி.... ஒப்பிட்டு ஆய்ந்து மெய்ப்பொருள் கண்ட பின்னர் ...உங்கள் பேலியோ முறையைத் தேர்வு செய்தீர்கள் என்ற என் கேள்வியைத் தவிர்த்துவிட்டீர்கள் என்பதையும் நான் கவனத்தில் கொண்டுவிட்டேன்.  

இதனால் நீங்கள்  ஆராய்ந்து முடிவெடுத்து பின்பற்றிய முறை பற்றியும் எனக்குத்  தெளிவாகவே விளங்கியது. 


அந்தக் கேள்வியை நான் முன்வைத்து சற்றொப்ப அரைநாள் கழிந்துவிட்டது. நீங்கள் மெய்ப்பொருளைக் கண்ட முறையும்  நீங்கள் குறிப்பிடாமலே தெளிவானது 



On Sunday, April 24, 2016 at 11:29:02 PM UTC-7, செல்வன் wrote:
ஆய்வுமுறைகளின் பிழைகள் தெரிவதால் தான் சரியான அணுகுமுறையை கூறுகிறேன்.

முறைப்படி செய்யாததால் இது ஆய்வே அல்ல. சும்மா பொழுதுப்பொக்கு கட்டுரையாக மட்டுமே கருதமுடியும். 
2016-04-25 1:24 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:





On Sunday, April 24, 2016 at 10:52:18 PM UTC-7, செல்வன் wrote:
அறிவியல் ஆய்வுமுறையே சிறந்ததை தேடுவதே

செவ்வாயில் உயிர் இருக்கா என்பதை கண்டறிய சிறந்த வழி செவ்வாய்க்கு போவதே. அது முடியாத பட்சத்தில் டெலெஸ்கோப்பை நாடுவதில் தவறில்லை.

பல்கலைகழகத்தை தரவரிசைபடுத்த சிறந்த முறை எல்லா பல்கலைகழத்திலும் ஒரு கோர்ஸ் எடுப்பதே. அது பிராக்க்டிக்கலாக சாத்தியமில்லை என்கையில் புள்ளிவிவரங்களை வைத்து வரிசைபடுத்துவதில் தவறில்லை.

ஆனால் டயட் அப்படி அல்ல. பின்பற்ற எளிது. இந்த வல்லுன்ர் குழு குறைந்தபட்சம் ஒரு நாளுக்கு ஒரு டயட் என பின்பற்றி இருந்தால் கூட "பேலியோவை பின்பற்ற கடினம்" என சான்றிதழ் கொடுத்திருக்க மாட்டார்கள். அவர்களது சர்க்கரை அளவுகளை ஆராய்ந்து, பேலியோவால் அது எப்படி மாறுகிறது என்பதையும் எளிய க்ளுகோமீட்டர் சோதனையில் கண்டுபிடித்திருக்க்லாம். ஆனால் அதையும் செய்யாமல் சர்க்கரையை குணபடுத்த பேலியோ 36வது இடமோ என்னவோ என கொடுத்துள்ளார்கள்.

ஆக எளிதில் செய்யமுடிந்ததை கூட செய்யாமல் இருக்கும் இவர்களுக்கு எக்ஸ்பெர்ட் என்ர பட்டம் ஒரு கேடா? இவர்கள் எதிலும் எக்ஸ்பெர்ட்டுகள் போல தெரியவில்லை. இவர்கள் ஆண்கழுதைகளை போன்ற கெட்டிக்காரர்கள். அவ்வளவே


ஆய்வாளர் ஒருவரிடம் இருந்து ஆய்வுமுறையைப் பற்றிய இந்தக் கோணத்தை நான் எதிர்பார்க்கவில்லை. 

 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

செல்வன்

unread,
Apr 25, 2016, 9:26:48 AM4/25/16
to mintamil

2016-04-25 1:44 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
நீங்கள் அந்தப் பட்டியலில் இருக்கும் எத்தனை உணவுமுறைகளை .... நடைமுறையில் பின்பற்றி.... ஒப்பிட்டு ஆய்ந்து மெய்ப்பொருள் கண்ட பின்னர் ...உங்கள் பேலியோ முறையைத் தேர்வு செய்தீர்கள் என்ற என் கேள்வியைத் தவிர்த்துவிட்டீர்கள் என்பதையும் நான் கவனத்தில் கொண்டுவிட்டேன்.  

இதனால் நீங்கள்  ஆராய்ந்து முடிவெடுத்து பின்பற்றிய முறை பற்றியும் எனக்குத்  தெளிவாகவே விளங்கியது.


முதற்கண் நான் எல்லா டய்ட்டையும் ஒப்பிட்டு இந்த டயட்டுகள் எல்லாவற்றிலும் பேலியோ தான் பெஸ்ட் என எங்கேயும் சொல்ல கிடையாது.

நான் டயட்டை ஆரம்பிக்கையில் இத்தனை டயட் எல்லாம் இருப்பதே எனக்கு தெரியாது. தெரியாத டயட்டை எப்படி கடைபிடிக்கவோ, பரிட்சித்து பார்க்கவோ முடியும்?

எனக்கு இருந்த ப்ரிடயபடிஸ், ரத்த அழுத்தம் இரண்டுக்கும் கார்ப் கண்ட்ரோல் அவசியம் என்பதை தெரிந்துகொண்டு கார்பை 20 கிராம் அளவுக்கு குறைத்தேன். இரண்டும் சரியாகிவிட்டது. அதற்குபின் வேறு டயட்டுகளை பின்பற்றும் அவசியம் எனக்கு ஏன்? 


--

Suba

unread,
Apr 25, 2016, 12:19:41 PM4/25/16
to மின்தமிழ்
​பெரிய பிரச்சனைதான்.
எதையும் சாப்பிடவேண்டாம் என முடிவெடுத்து பட்டினி கிடக்கப்போகின்றார்கள் இந்த விவாதங்களை வாசிக்கும் நம் மக்கள் :-)

​suba

தேமொழி

unread,
Jun 4, 2016, 4:28:03 PM6/4/16
to மின்தமிழ்


On Sunday, April 24, 2016 at 8:38:15 AM UTC-7, செல்வன் wrote:

டயட்டையே பின்பற்றாமல் அது மோசம் என்பது நகைச்சுவை. இந்த எக்ஸ்பெர்ட் கோமாளிகளில் எத்தனை ஜோக்கர்கள் பேலியோவை பின்பற்றினார்கள்? பத்து இட்டிலியையும், கெட்டி சட்னியைக்யும் தின்றுவிட்டு பேலியோ என்றால் என்ன என பேப்பரில் மட்டும் படித்து அதுக்கு மதிப்பெண் போட்டு 33ம் இடத்தை கொடுப்பார்களாம்..அதை நாலு ஆண்டுகளாக பின்பற்றி வரும் நாங்கள் உண்மை என ஏற்றுக்கொன்டு "இதான் மெய்ப்பொருள்" என சொல்லி சல்யூட் அடிக்கணுமாம் :-)

அவங்களை எல்லாம் அவரவர் பேரன்,பேத்தியையாவது ஒழுங்கான நியுட்ரிஷன் சயன்ஸா படிக்க சொல்லுங்க :-)


* குறிப்பு: கீழே படத்தில் காணப்படும் ஒரு ஈடு இட்லியும்   4 - 6 பேர் சாப்பிட  வேண்டிய அளவு .... ஒருவருக்கான உணவு அல்ல :)
 

நன்றி: தி இந்து
பார்க்க: http://tamil.thehindu.com/general/health/உலகம்-போற்றும்-இட்லி-ஆராய்ச்சிகள்-சொல்லும்-புது-உண்மைகள்/article8689928.ece?

 

உலகம் போற்றும் இட்லி ஆராய்ச்சிகள் சொல்லும் புது உண்மைகள்

டாக்டர் ஜெ. ஸ்ரீ ராம் 

Published: June 4, 2016 




 


நோய்க்குத் தந்தை யாரென்று தெரியாது. ஆனால் நோய்க்குத் தாய் உணவுதான் என்பது அனைவருக்கும் தெரியும். இதனால்தான் சித்த மருத்துவ முறையில் நோயைத் தீர்க்கப் பத்திய முறைகள் வலியுறுத்தப்படுகின்றன. அதனால்தான் சிறிய மருந்து முதல் கற்ப மருந்துவரை கொடுத்தாலும் பத்திய உணவு முறையைச் சொல்லச் சித்த மருத்துவர்கள் தவறுவது இல்லை.

தேடி வரும் உலகம்

உணவு முறை, குறிப்பாகத் தமிழரின் உணவு முறையில் தற்கால அறிவியல் ஆதாரங்கள் பொதிந்து கிடக்கின்றன. ஹாலிவுட், இங்கிலாந்து, பாரிஸ் நகர வீதிகளில் உலக மக்களாலும் விரும்பப்படும் உணவாகத் தமிழரின் காலைச் சிற்றுண்டியான இட்லி மாறிவருவது, நம் உணவை உலகம் ஏற்கும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை என்பதை உணர்த்துகிறது.

சமீபத்தில் இங்கிலாந்தின் தேசிய உணவுத் திட்டத்தின் கீழ் இட்லி, தோசை கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் இட்லி மீது நூற்றுக்கணக்கான ஆய்வுகளை மேற்கொண்டு, நோயில்லாமல் வாழ மிகச் சிறந்த உணவு என்ற பரிந்துரையை அறிவியலார்கள் தெரிவித்துள்ளதுதான். எந்தத் தட்பவெப்ப நிலை, மக்களின் நல்வாழ்வுக்கும் ஏற்றது இட்லி.

சமநிலை உணவு

உணவு அறிவியல் (Food Science) முறைப்படி இட்லி ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இட்லி செய்யத் தேவையான உணவுப் பொருட்கள்: புழுங்கல் அரிசி, உளுந்து. இந்த இரண்டையும் உட்கொள்ள வேண்டியதற்கு அறிவியல் ரீதியான காரணங்கள் உள்ளன.

பயறு வகையான உளுந்தும், தானிய வகையான அரிசியும் இணைக்கப்பட்டதால் புரதச் சமநிலையும் தரமான புரதமும் கிடைக்கின்றன. பயறு வகைப் புரதத்தில் லைசின் எனும் அமினோ அமிலம் அதிகமாகவும், தானிய வகைப் புரதத்தில் மெத்தியோனைன் என்னும் அமினோ அமிலம் அதிகமாகவும் உள்ளன.

அரிசியும், பாசிப் பருப்பும் இணைந்த வெண்பொங்கல் (சோறு) + சாம்பார் (பருப்பு சேர்த்தது) உடன் இணைந்து புரதச் சமநிலையைத் தருவது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. பழங்கால உணவில் பொதிந்துள்ள சிந்தனையை அறிந்துகொள்ள இந்த ஆய்வுகள் உறுதுணையாக உள்ளன. இட்லியில் சேர்க்கப்படும் பொருட்களைப் பற்றி பார்ப்போம்:

புழுங்கல் அரிசி மகத்துவம்

தண்ணீரில் ஊற வைத்த நெல்லை அவித்துத் தவிடு, உமி நீக்கிப் புழுங்கல் அரிசி தயாரிக்கப்படுகிறது. அவிக்கப்படுவதற்கான காரணம் என்ன? நெல்லை நீருடன் சேர்த்து அவிக்கும்போது உயிர்ச்சத்து (வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் மற்றும் தயமின்) போன்றவை அரிசியின் மேல் பகுதியிலிருந்து உட்பகுதிக்குச் சென்றுவிடுவதால் அரிசியைத் தீட்டும்போது வைட்டமின் இழப்பு ஏற்படுவதில்லை.

நெல் மணியில் உள்ளவை ஸ்டார்ச்சான அமைலோஸ், அமைலோபெக்டின் (Amylose, Amlopectin) குளுகோஸ் பொருட்கள். இவை அதிகம் உள்ள அரிசி ரகங்கள் சமைத்த உடன் குழையாமலும் பிசுபிசுப்பு இல்லாமலும் இருப்பதால் தோசைக்கு ஏற்றவை.

பழுப்பு நிறம் ஏன்?

அரிசியில் உள்ள சர்க்கரைச் சத்தும் அமினோ அமிலமும் வேக வைக்கும்போது ஒன்றோடு ஒன்று இணைந்து பழுப்பு நிற வேதிமம் உண்டாகிறது. இதனால் புழுங்கல் அரிசி பழுப்பு நிறமாக உள்ளது. இவ்வினையை மைலார்டு வினை (Mylord Reaction) என்பார்கள். சமைத்ததும் பழுப்பு நிற வேதிமம் சூடான நீரில் ஆவியாகிப் போய்விடுவதால், இது வெண்மை நிறத்தை அடைகிறது.

ஊற வைக்கும் அறிவியல்

உளுத்தம் பருப்பில் 60 சதவீதம் மாவுச்சத்து உள்ளது. இந்த மாவுச்சத்தில் ஒலிகோ சாக்கரைடுகள் உள்ளன. இந்த ஒலிகோ சாக்கரைடுகளை நமது குடலால் உறிஞ்ச முடிவதில்லை. இந்தச் சத்துப் பொருளை ஜீரணிக்கும் காலக்டோஸ் என்ற நொதியில்லாத காரணத்தால், சிறு குடலில் ஜீரணிக்காமல் பெருங்குடலில் உள்ள நுண்ணுயிர்கள் ஒலிகோ சாக்கரைடுகளைச் சிதைத்து அதிக அளவு கரியமில வாயு, ஹைட்ரஜன் வாயு, சிறிதளவு மீத்தேன் வாயுவாக மாற்றி, வாயுத் தொல்லையை உண்டாக்குகிறது. உளுந்தை நீரில் ஊற வைக்கும்போது, தீமை பயக்கும் இந்த ஒலிகோ சாக்கரைடு நீராற் பகுத்தல் வினை மூலம் நீக்கப்பட்டு விடுவதைக் கவனிக்க வேண்டும்.

மாவு ஆக்கும் முறை

அரிசியையும் உளுந்தையும் அரைத்து மாவாக்குவதன் மூலம் உணவுப் பொருட்கள் நுண்மையாக்கப்படுகின்றன. இட்லி மாவில் சிறிதளவு உப்பு சேர்க்கப்படுகிறது. உணவுப் பண்டத்தின் அமில-காரத்தன்மையை (PH value Normal) இயல்பாக வைக்கவே இது சேர்க்கப்படுகிறது. கடைகளில் விற்பனைக்குக் கிடைக்கும் இட்லியில் உளுந்தின் அளவைக் குறைத்து, வியாபார நோக்கத்துடன் சமையல் சோடா உப்பைச் சேர்க்கின்றனர். இதனால் இட்லி காரத்தன்மையை அடைந்து, அதில் உள்ள தயமின் என்ற வைட்டமின் அழிந்துவிடுவதால், உடலுக்குச் சத்து கிடைக்காமல் போய்விடுகிறது.

சத்து இழப்பு தவிர்ப்பு

நீராவியில் வேக வைப்பதால் இட்லியில் உள்ள வைட்டமின்கள் மற்றும் சத்துப்பொருட்கள் பாதுகாக்கப்படுகின்றன. தயமின் போன்றவை வெப்பத்தால் ஆவியாகக் கூடியவை. அதேநேரம் உணவு நீராவியால் வெப்பப்படுத்தும்போது, பாதிக்கப்படுவதில்லை.

உளுந்தில் உள்ள டிரிப்சின் நொதி தடுப்பான்கள், புரதத்தைச் செரிமானம் செய்து நமது குடல் உட்கிரகிப்பதைத் தடை செய்யக்கூடிய தன்மையைக் கொண்டுள்ளன. நீராவியில் வேக வைக்கும்போது, இவை செயல் இழந்துவிடுகின்றன.

உளுந்தை நீராவியில் வேக வைப்பதன் மூலம், உளுந்தில் உள்ள சத்தைச் சேதப்படுத்தும் காரணிகள் (Anti nutritive factors) அழிக்கப்படுவதால் கனிமச் சத்துகள் உடலுக்குக் கிடைப்பது அதிகரிக்கிறது.

விழித்துக் கொள்வோமா?

உளுந்தில் உள்ள ‘அரோபினோ காலக்டோன்’ என்ற சர்க்கரைப் பொருள் நொதிக்கப்பட்டிருப்பதே, இட்லி மிருதுவாக இருக்கக் காரணமாகிறது. இட்லியில் உயிரியல் மற்றும் புரத மதிப்பு (Biological value & Protein efficiency ratio) அதிக அளவிலும், அதேநேரம் புரதச் சமநிலையுடனும் உள்ளதாகப் பூர்வாங்க ஆய்வுகள் தெளிவாக விளக்குகின்றன.

நம்மவர்கள் நம் உணவை விட்டு விலகி வரும் இந்தக் காலத்தில், அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் உலகம் நம் உணவைத் தேடிவர ஆரம்பித்திருக்கிறது, இதற்கு மேல் விழித்துக்கொள்வது அவரவர் பொறுப்பு.

தோல் உளுந்து அதிக ஊட்டம் முதல் உணவு

இட்லி, தோசைக்கு மாவு அரைக்கும்போது தோலுடன் உள்ள கறுப்பு உளுந்தைப் பயன்படுத்துவது நல்லது. திருநெல்வேலி மாவட்டத்தில் முழு உளுந்து தோசை வீடுதோறும் நடைமுறையில் உண்டு. உளுந்து தோலில்தான் leuconostec mesenteroides என்ற பாக்டீரியா அதிக அளவில் உள்ளது.

இந்தப் பாக்டீரியாதான் இட்லி மாவு புளிப்பதற்குக் காரணம். அத்துடன் உளுந்துத் தோலில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சம விகிதத்தில் உள்ளன. தோல் நீக்கம் செய்யப்பட்ட உளுந்தைப் பயன்படுத்தும்போது, மாவைப் புளிக்க வைக்க வெந்தயம் சேர்க்கிறார்கள். இருந்தபோதும், வெள்ளை நிறத்துக்கு மயங்கிப் போகாமல் தோல் உளுந்துடன் இட்லி, தோசையைச் சாப்பிடுவது உடலுக்குக் கூடுதல் வலுவூட்டும்

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர் 
தொடர்புக்கு: sriram...@gmail.com

தேமொழி

unread,
Nov 17, 2016, 4:12:11 PM11/17/16
to மின்தமிழ்

A Look At How Good (And Bad) 7 Of The Most Popular Fad Diets Are

It's not great news for the Dukan or alkaline diet.

 18/11/2016


ஒப்பீட்டில் முதலிடத்தில் இருப்பது  மெடிட்டெரேனியன் டயட்
7 உணவு முறைகளின் குறைநிறைகளை இக்கட்டுரையில் பெறலாம்.


..... தேமொழி

தேமொழி

unread,
Jan 8, 2017, 1:00:28 AM1/8/17
to மின்தமிழ்
நன்றி சிறகு:   http://siragu.com/?p=25068

உடல்நலத்திற்கு நன்மையளிப்பதும் தொடர்வதற்கு எளிதானதுமான உணவுமுறையே சிறந்த உணவுமுறை


தேமொழி 


Jan 7, 2017


siragu-diet2

ஒவ்வொரு புத்தாண்டும் உடல் எடையைக் குறைப்பதற்கான செயல்முறைகளைக் கடைப்பிடிப்பதற்கும், உடல்நலத்திற்குக் கேடான தீய பழக்கவழக்கங்களை கைவிடுவதற்கும் உறுதி மொழிகளை எடுத்துக் கொள்வது பலருக்கு வழக்கம். புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை மாறிப்போனாலும், தொடர்ந்து அதனை வெற்றிகரமாகச் செயல்படுத்துவது மிகச் சிலரே.

படிப்படியாகத் திட்டங்களை செயல்படுத்தாமல் அதிக உடற்பயிற்சி, அடியோடு உணவைக் குறைப்பது போன்ற யாவற்றையும் ஒரேநாளில் செய்ய நினைத்து, உடலும் மனமும் அயர்ச்சியுற்று தளர்ந்து போவதே இத்தோல்விக்குக் காரணம். இப்பிழையைத் தவிர்க்க மருத்துவர்களும், பயிற்சியாளர்களும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள். ஆனால், ஆர்வக் கோளாறால் தங்கள் உடலை வருத்திக் கொள்வதும், பிறகு திட்டங்களைக் கைவிடுவதும், மீண்டும் அடுத்த ஆண்டு திட்டமிடுவதும் வாடிக்கையாக இருப்பதே சராசரி மக்களின் வாழ்க்கை. அமெரிக்காவில் 50% அதிகமானவர்கள் உடல் எடையைக் குறைக்க விரும்புகிறார்கள் என்றும், உடல் பருமன் உள்ளவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் “காலப் கருத்தாய்வு” (Gallup Poll) தெரிவிக்கிறது.

siragu-diet4மக்களின் மனநிலையைப் புரிந்து கொண்டு, அவர்கள் புத்தாண்டு உறுதிமொழிகளுக்கு உதவும் வகையில் ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் ‘யூஎஸ்நியூஸ்’ (usnews.com) நிறுவனம், அமெரிக்காவில் பரவலாக அறியப்படும் பல உணவுமுறைகளை தரவரிசைப்படுத்தி, “ஆரோக்கிய வாழ்விற்குச் சிறந்த உணவுமுறை” (Diet Plan) என்ற அட்டவணையை அறிக்கையாக வழங்கிவருகிறது. இந்தவாரம்   யூஎஸ்நியூஸ் நிறுவனம் வெளியிட்ட 2017 ஆம் ஆண்டின் ஆரோக்கிய வாழ்விற்குச் சிறந்த உணவுமுறை அறிக்கையும் சென்ற ஆண்டு ஆய்வுக்கு உட்படுத்திய அதே 38 உணவு முறைகளை (http://siragu.com/?p=20300)மீள் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது. சிறந்த உணவுமுறை என்பது எந்தெந்த காரணிகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது, ஆய்வு நடத்திய வழிமுறை ஆகிய செய்திகளும் விளக்கமாக அளிக்கப்படுவதால் பயனர்கள் தங்களுக்கு பயன் தரக்கூடிய தேவையான உணவுமுறையை அறிந்து கொள்வது எளிதாகிறது.

ஆரோக்கிய வாழ்வுக்கு வழிகாட்டும் வல்லுநர்கள் அடங்கிய ஆய்வுக்குழு ஒன்றின் உதவியுடன் 38 உணவுமுறைகளை ஆய்வுக்குட்படுத்திய பொழுது, ஒரு உணவுமுறை சிறந்த உணவுமுறை (top-rated) என்ற தகுதியைப் பெற அது எளிதில் பின்பற்றக் கூடிய உணவுமுறையாகவும் (relatively easy to follow), ஊட்டச்சத்து மிக்க சமச்சீர் உணவாகவும் (nutritious), பாதுகாப்பானதாகவும் (safe), உடலெடையைக் குறைப்பதற்கும் (effective for weight loss), நீரிழிவு/சர்க்கரை நோய் மற்றும் மாரடைப்பு/இதயநோய் ஆகியவற்றைத் தவிர்ப்பதற்கு (protective against diabetes and heart disease) உதவும் உணவுமுறையாக இருப்பது முக்கியமான பண்புகளாக எடுத்துக் கொள்ளப்பட்டன. இது போன்ற வரையறைகளை நிறைவு செய்ததன் அடிப்படையில் 38 உணவுமுறைகளுக்கும் மதிப்பெண்கள் அளிக்கப்பட்ட பின்னர் அவை தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

siragu-diet1

கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 38 உணவுமுறைகளின் தரவரிசைப் பற்றியும் அறியலாம். சில உணவுமுறைகள் ஒரே மதிப்பெண்கள் பெற்றதால் வரிசையில் ஒரே இடத்தையும் பகிர்ந்து கொள்கின்றன, இவை ‘=’ என்ற குறியிடப்பட்டுக் காட்டப்பட்டுள்ளன. ‘வணிகமுறையில் சந்தைப்படுத்தப்படும் 17 உணவுமுறைகள்’, ($$$) என்ற குறியிடப்பட்டு காட்டப்பட்டுள்ளன. அமெரிக்க மண்ணில் வசிக்காதவர்களுக்கு வணிகமுறையில் சந்தைப்படுத்தப்படும் 17 உணவுமுறைகள் கிடைப்பதற்கோ, கிடைத்தாலும் பொருளாதார முறை அடிப்படையில் பயனடைய இயலாமலோ போகலாம். மேலும், அமெரிக்கக் கலாச்சார உணவுமுறையின் அடிப்படையில் அவை திட்டமிடப்பட்டிருந்தாலும் உலகின் வேறுபகுதிகளில் வாழ்பவர்களுக்கு அவற்றைப் பின்பற்ற இயலாதும் போகலாம். தாங்கள் வாழும் சூழ்நிலையில் எளிதில் கிடைக்கக்கூடிய உணவுவகைகளுக்கு ஏற்ப உணவுமுறையை வகுத்துக் கொள்வதே சாலச் சிறந்தது. இந்த தரவரிசைப் பட்டியலில் சென்ற ஆண்டின் தரவரிசை மதிப்பும் (அடைப்புக் குறிகளுக்குள்) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஈராண்டு ஒப்பீட்டில் உணவுமுறைகளின் தரவரிசையில் பெரிய மாறுதல்கள் இல்லை என்பதும் தெளிவாகிறது.

அறிவியல் அறிக்கைகளின் ஆய்வுமுடிவுகளின் அடிப்படையில் காரணிகளைத் தேர்வு செய்திருப்பதால் முடிவில் பெரிய மாறுதல்களையும் எதிர்பார்க்க இயலாது. மருத்துவர்களால் சமச்சீரான உணவு எனப் பரிந்துரைக்கப்பட முறையில் அமையாது, கார்போஹைட்ரேட்களை அதிக அளவில் குறைப்பதையோ தவிர்ப்பதையோ, கொழுப்பை, புரதத்தை அதிகப்படுத்துவதையோ அடிப்படையாகக் கொண்ட உணவுமுறைகள், சரிவிகித உணவு என்ற தகுதியை இழப்பதால் அந்தப் பிரிவின் மதிப்பெண்களை இழக்கும். அவ்வாறே, தொடர்ந்து பின்பற்றுவது எளிதல்லாத, வாழ்க்கைமுறையையே மாற்றியமைக்கத் தேவையானவை போன்று நடைமுறை வாழ்க்கையில் செயலாக்குவதில் தடைகளைக் கொண்ட உணவு முறைகள் சில. இவை தரவரிசையில் பின்தங்கும். ஆகவே, ஒவ்வொரு ஆண்டும் அளவுகோல் அதே அளவுகோலாக மாறாதிருக்கும் பொழுது, முடிவுகளும் அவ்வாறே பெரிய அளவில் மாறுதல்கள் இல்லாமல் இருக்கவே வழியுள்ளது. இந்த ஆய்வு முறையால் அறிவியல் அடிப்படையில்   சிறந்த உணவுமுறை எது என்பது மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்படுகிறது என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த ஆண்டின் தரவரிசைப் பட்டியலில் (1) டேஷ் டயட், (2) மெடிட்டரேனியன் டயட், (3) மைண்ட் டயட் ஆகிய உணவுமுறைகள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. முதலிடங்களில் உள்ள இந்த மூன்று உணவுமுறைகளிலும் இறைச்சி அளவு குறைவாகவும், பெரும்பான்மையான பங்கு தாவர உணவுகளாகவும் அமைந்திருப்பது இவற்றின் சிறப்பு. இவையாவும் சிறந்த உடல் நலத்திற்கு, இதயநோய் தவிர்க்க, இரத்த அழுத்தம் குறைக்க, சர்க்கரை நோய், மறதி நோய் கொண்டவர்களுக்கு உதவ, உடல் எடையைக் குறைப்பதற்காக என்ற குறிக்கோள்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை.

 (1) டேஷ் டயட்:

siragu-diet5

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தப் பரிந்துரைக்கப்படும் ‘டேஷ் டயட்’ (Dietary Approaches to Stop Hypertension – DASH) உணவுமுறை தொடர்ந்து ஏழாவது முறையாக முதலிடம் பெற்றுள்ளது இதன் சிறப்பு. ஆய்வுகளின் அடிப்படையில் அரசும் ‘டேஷ் டயட்’ வகையை பரிந்துரைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இரத்த அழுத்தத்தைக் குறைக்க, அல்லது வருவதைத் தடுக்க உதவும் வகையில் உள்ள உணவுகளை அடிப்படையாகக் கொண்ட உணவுமுறை டேஷ் டயட். இது, உடல் ஆரோக்கியத்திற்கு பரிந்துரைக்கப்படும் உணவு சரிவிகித உணவாக, தேவையான அளவு மாவுச்சத்து, புரதம், கொழுப்பு ஆகியவை கொண்ட உணவு முறை.

(2) மெடிட்டரேனியன் டயட்:

CE55 Mediterranean Feature.indd

மெடிட்டரேனியன் டயட் என்பது மத்தியதரைக்கடலைச் சுற்றியுள்ள நாடுகளில் வசிக்கும் மக்கள் காலம் காலமாகப் பின்பற்றும் உணவு முறை. இது தாவர உணவு முறையை முதன்மையாகக் கொண்டது. இந்த உணவு முறையில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், அவரை, மொச்சை, பயறு, பருப்பு, கொட்டை வகைகள், மூலிகைகள், மீன், கடல் உணவு மற்றும் ஆலிவ் எண்ணெய் ஆகியன நிறைந்திருக்கும். முட்டை, பால், தயிர், பாலாடைக் கட்டி, பறவைக்கறி ஆகியவை மிகக் குறைவாக உட்கொள்ளப்படும். சிவப்பிறைச்சி, அதிகக் கொழுப்பு, உப்பு நிறைந்த உணவுகள் தவிர்க்கப்படும். (மேலும் இந்த உணவுமுறை குறித்த விரிவான தகவலுக்குப் பார்க்க, சிறகு கட்டுரை: http://siragu.com/?p=20170).

(3) மைண்ட் டயட்:

siragu-diet7

அறிவியல் அடிப்படையில் சிறந்த உணவுமுறைகளாக நிரூபிக்கப்பட்டுள்ள மேற்கூறிய டேஷ் டயட்டையும், மெடிட்டரேனியன் டயட்டையும் இணைத்து, அவற்றில் மூளைக்கு, சிந்திக்கும் திறனுக்கு உதவும் உணவுவகைகளை அதிகப்படுத்தி உருவாக்கப்பட்டது மைண்ட் டயட். இந்த உணவுமுறையின் அடிப்படை நோக்கம் ‘அல்சைமர்’ (Alzheimer’s disease) போன்ற மறதி நோய்கள் வருவதைத் தடுப்பது.

பொதுவாக மிகச் சிறந்த உணவுமுறை என்று தரவரிசைப்படுத்தியபிறகு, மேலும் சில சிறப்புப் பிரிவுகளிலும் உணவுமுறைகள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன அவை:

1. வணிகமுறையில் சந்தைப்படுத்தப்படுவதில் சிறந்த உணவுமுறை (Best Commercial Diet Plans)

2. உடல் எடையைக் குறைக்க உதவும் சிறந்த உணவுமுறை (Best Weight-Loss Diets)

3. மிக விரைவில் உடலெடையைக் குறைக்க உதவும் சிறந்த உணவுமுறை (Best Fast Weight-Loss Diets)

4. சர்க்கரை நோயாளிகளுக்கு உதவும் சிறந்த உணவுமுறை (Best Diabetes Diets)

5. இதயநலத்திற்கு உதவும் சிறந்த உணவுமுறை (Best Heart-Healthy Diets)

6. ஆரோக்கிய உடல் நலத்திற்கான சிறந்த உணவுமுறை (Best Diets for Healthy Eating)

7. தாவர உணவு உண்பவர்களுக்கான சிறந்த உணவுமுறை (Best Plant-Based Diets)

8. எளிதில் பின்பற்றக்கூடிய சிறந்த உணவுமுறை (Easiest Diets to Follow)

என்ற பிரிவுகளில் தனிப்பட்டத் தேவை கொண்டோருக்காகவும், உணவுமுறைகளை தரவரிசைப்படுத்தியுள்ளது ‘யூஎஸ்நியூஸ்’ நிறுவனம்.

இப்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்படும், கற்கால மனிதர்களின் உணவுமுறையை அடிப்படையாகக் கொண்டது எனக் கூறப்படும் ‘பேலியோ உணவுமுறை’, மற்றும் ‘அட்கின்ஸ் டயட்’, ‘டுகன் டயட்’போன்றவை யூஎஸ்நியூஸ் தரவரிசைப்பட்டியலில் இறுதி இடங்களைப் பிடித்துள்ளன. தரவரிசைப் பட்டியலில்- எளிதில் பின்பற்றக் கூடிய உணவுமுறை, ஆரோக்கியமான ஊட்டச்சத்து அடிப்படை, சர்க்கரை நோய் பாதிப்பு குறைக்க, இதயநோய் பாதிப்பு தடுக்க, ஆக மொத்தம் சிறந்த உணவுமுறை என்ற பலவகைப் பிரிவுகளிலும் இவை பட்டியலின் இறுதி இடங்களில் மட்டுமே இடம்பிடித்துள்ளன. குறிப்பாக உடல் எடையைக் குறைக்க உதவுவதில் இறுதியில், அதாவது 38 ஆவது இடத்தைப் பிடித்திருப்பது பேலியோ உணவுமுறைதான் (http://health.usnews.com/best-diet/paleo-diet). சில உணவுப் பிரிவையும் ஒதுக்கிவிடுவதால் சமச்சீர் உணவாக இல்லாமல் இருப்பதும் எளிதில் கடைப்பிடிக்கவும் தொடரவும் உதவாத வகையில் இவை அமைந்துவிடுவதே இவ்வுணவு முறைகள் பின்தங்கியதற்குக் காரணம் என யூஎஸ்நியூஸ் நிறுவனம் குறிப்பிடுகிறது.

siragu-diet8

சிறந்த உணவுமுறை எது, என்று வழக்கத்தில் இருக்கும் பல உணவுமுறைகளை நாம் ஒப்பிட்டு அறிய விரும்பினால், நாம் அத்துறையில் ஆய்ந்து அறிந்த அறிஞர்கள் கூறும் தகவல்களைப் பின்பற்றுவதுதான் அறிவுடைய செயல் என்பதைச் சொல்லத் தேவையில்லை. வல்லுநர்கள் மீண்டும் மீண்டும் சொல்வது, தீங்கு விளைவிக்கும் கொழுப்புவகையுள்ள உணவுகளைக் குறைப்பது, குறைவான சர்க்கரை உப்பு கொண்ட உணவை உண்பது. முழு தானியங்கள், கொட்டைகள், பசுமையான காய் கனி வகைகள் உணவில் சேர்த்துக் கொள்வது போன்ற அறிவுரையையே. அத்துடன் வயதுக்கு ஏற்ற சரியான உடற்பயிற்சியும் தேவை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே, முடிவாக, ஆரோக்கிய வாழ்விற்கான பழக்க வழக்கங்கள் என்பதில் ஏதும் மந்திரமில்லை… மாயமில்லை, காலம் காலமாக ஆரோக்கிய வாழ்வின் அடிப்படை எனக் குறிப்பிடப்படுபனவற்றில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை. வாழ்க்கைமுறைக்குத் தேவையான அளவில் எந்த உணவுப் பிரிவையும் ஒதுக்காத சமச்சீர் உணவும்; சுறுசுறுப்பாக இயங்கத் தேவையான உடற்பயிற்சி ஆகிய இரண்டு மட்டுமே நோயில்லாத வகையில் வாழ்நாளை நீட்டிக்க உதவும்.

நன்மை தரும், எளிமையான, நிலையாகத் தொடர்ந்து கடைப்பிடிக்க உதவும் உணவுமுறையே (safe, simple, sustainable ) சிறந்த உணவுமுறை.

நலமுடன் வாழ்க.

__________________________________________________________________


மேலும் தகவலுக்கு:

1.  சிறந்த உணவுமுறை எது?  http://siragu.com/?p=20300


2.  ஆரோக்கிய வாழ்விற்கு வழிகோலும் மத்தியதரைக்கடல் நாடுகளின் உணவுமுறை  http://siragu.com/?p=20170


3.  Best Diets Overall (Overall Score, Weight Loss, Healthy)  http://health.usnews.com/best-diet/best-diets-overall


4.  Best Diets methodology  http://health.usnews.com/health-news/health-wellness/articles/2014/01/07/us-news-best-diets-how-we-rated-32-eating-plans


5.  Whole30, Paleo, and Dukan Are the Worst Diets, According to US News & World Report; Jan 5, 2017, By Joanna Fantozzi, THE DAILY MEAL  http://www.thedailymeal.com/news/healthy-eating/whole30-paleo-and-dukan-are-worst-diets-according-us-news-world-report/010517

தேமொழி

unread,
Nov 14, 2018, 12:02:40 AM11/14/18
to மின்தமிழ்
Keto, Mediterranean or Vegan: Which Diet Is Best for the Heart?


By Yasemin Saplakoglu, Staff Writer | November 12, 2018


In the room, physicians and nutritionists clung to their idea of an ideal diet like a parent clings to his or her child.

On Nov. 10, here at the American Heart Association's Scientific Sessions annual meeting, a group of panelists discussed which diets they thought were the best for heart health, pulling on already-published data from recent years. Though there wasn't a clear winner, the panelists agreed that an ideal diet is one that is high in vegetables, high in non-processed whole foods, and low in processed meat, added sugar and carbohydrates.

Though the best diet "depends on the individual … I also firmly believe that everyone should focus on a foundational diet that includes all of [these] agreed upon components," one of the panelists, Christopher Gardner, director of Nutrition Studies at Stanford Prevention Research Center, told Live Science afterwards.

But even those agreed upon components would be a major dietary change for most Americans — and only once you get down to that "foundational diet" is there "room to 'biohack' your way to your own personalized diet," Gardner said.

What's more, the best diet is also "the one you can stick to," and more specifically, the "highest quality" one you can stick to, he said.


Veggies, meat and lots of olive oil

The panelists discussed three diets — vegan, Mediterranean and keto — and their effects on heart health.

The vegan diet

The vegan diet calls for the elimination of all meat and animal products from the diet, and focuses primarily on veggies.

"If you substitute animal protein with plant protein, you would decrease mortality… [and] cardiovascular risk factors" over a period of time, said Dr. Kim Williams, a cardiologist at Rush University Medical Center in Chicago, during the session. Past studies have shown that the risk decreases the most when you stop eating processed red meat, he added. Compared with a diet high in meat, a plant-based diet also reduces high blood pressure and there's evidence it also decreases levels of C-reactive protein, a marker of inflammation in the body, he said.  

But even without the vegan diet, "if everybody went from [eating] processed red meat to [eating] just regular red meat, we would dramatically decrease cardiovascular death in this country," Williams said.

Still, the vegan diet isn't perfect. The diet can lead to a vitamin B12deficiency — a vitamin that's found in animal products. Vitamin B12 deficiency can lead to reduced red blood cell counts, or anemia. (Another cause of anemia is iron deficiency.) What's more, the vegan diet is not going to work if, along with your veggies, you're also eating plates of fried food, Williams added. [7 Tips for Moving Toward a More Plant-Based Diet]

The Mediterranean diet

The Mediterranean diet allows for animal protein, but fish is preferred over red meat. Extra-virgin olive oil takes a lead role in this diet, which also includes nuts, lots of vegetables, fruits and wine (in moderation). There's evidence that the Mediterranean diet reduces levels of "bad" cholesterol and is associated with a reduced risk of death from heart disease, according to the Mayo Clinic.

This summer, however, the Mediterranean diet took a hit when a major study touting its benefits was retracted because of problems with the methodology. Though some experts said that the retraction significantly weakened the claim that the Mediterranean diet is heart-healthy, others said there's enough other research showing it is beneficial, and that they'd continue to recommend it, Live Science reported in June.

The principal investigator of that trial, Dr. Miguel Martínez-Gonzalez, an epidemiologist at the University of Navarra in Spain, was also a panelist at Saturday's talk. He noted that even after the team retracted the study and reanalyzed the data, the findings, for the most part, held true: The diet is still heart-healthy.

The keto diet

Finally, in this non-exhaustive list of diets, the ketogenic diet. This is one that's low in carbohydrates and high in fat, with a moderate amount of protein. Dr. Sarah Hallberg, the medical director at Virta Health, stressed during the session that the keto diet "it is a whole food diet, .. [not] a hotdog and cheese diet." 

Carbohydrates can come from non-starchy vegetables, nuts and seeds, some berries, or dairy, but not from grains, potatoes or sugar, Hallberg said. According to Hallberg, this diet also decreases risk factors for cardiovascular disease. (Of note, Virta Health is a company that claims to be able to reverse type 2 diabetes without medications or surgery, instead by reducing carbohydrates in a person's diet.)

However, other experts have raised concerns that people on the keto diet are more prone than others to regain weight they've lost because the diet can be difficult to stick to in the long run, Live Science reported in May. What's more, the high levels of fat and cholesterol in the keto diet may be harmful for heart health.


Real food is better than processed

Though all the panelists felt strongly about the diet they advocated for, there was some common ground. The major point that the panelists agreed on is that whole foods are much better than processed foods. [11 Ways Processed Food Is Different from Real Food]

With that in mind, researchers don't need more studies to tell us what food is healthy and what isn't, but rather, they need to focus on how to get people to stick to healthy diets, Gardner said.

This can involve motivating people to prepare meals at home, educating people on the societal and planetary consequences of what they eat — such as the effect of eating meat on global warming and climate change, animal rights and human labor abuses — and by creating national health policies that can help make healthier food more affordable.

"Almost anything is better than the way most Americans are eating now," said panel moderator Dr. David Katz, a preventive-medicine specialist at Yale University's Yale-Griffin Prevention Research Center in Derby, Connecticut. "'America runs on Dunkin'' and multicolored marshmallows are 'part of a complete breakfast' — fix that, and things will tend to improve."

Originally published on Live Science.

-------------------

செல்வன்

unread,
Nov 14, 2018, 10:12:16 AM11/14/18
to mintamil
காலை வெட்டி எடுக்கவேண்டிய நிலையில் இருந்த சர்க்கரை நோயாளியை பேலியோ டயட் மூலம் மருத்துவர் பிரகாஷ் காப்பாற்றியுள்ளார்.

புகைப்படத்தில் இருக்கும் காலை பார்க்கவும். இப்படி வந்த ஒருவர் பேலியோ மூலம் கால் வெட்டபடாமல் பரிபூரண குணம் அடைந்து திரும்பியுள்லார்

ஆனால் பேலியோ மோசம் என இந்த பேனலிஸ்டுகள் உட்கார்ந்து காமடி பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள் :-)

ரூம் போட்டு உட்கார்ந்து விமர்சிப்பது எளிது.

களத்தில் இறங்கி சாதிப்பது கடினம் :-)

#உலக_நீரிழிவு_தினம்.

கட்டுக்கடங்காத டயபடிக் காரணம், தொடர்ந்து உலக அளவில் பரிந்துரைக்கப்படும் உணவை உண்டு காலை வெட்டி எடுக்கத் தேதி குறித்தவருடைய கால், பேலியோ உணவுமுறையால் சர்க்கரை அளவுகள் நார்மலுக்கு வந்து காயங்கள் ஆறி, அறுவைச் சிகிச்சை மூலம் காலை வெட்டி எடுக்கவேண்டிய நிலையிலிருந்து தப்பிப் பிழைத்தவருடைய கால்தான் இது.

பேலியோ என்றாலே பேதியாகும் அறிஞர் மக்கள் மாவுச்சத்தைக் குறைக்கும் வழிமுறைகளை இனியாவது யோசிக்காமல் சப்பாத்தி நல்லது, ஓட்ஸ் நல்லது என்று காலத்தை ஓட்டினால் வருங்காலத் தமிழகத்திற்கு நாலு பால் பேரிங் வைத்த பலகையும் டயபடிக் மேனேஜ்மெண்டில் சேர்க்கவேண்டிவரும்.

முதல் படம் என்ன செய்தும் சுகரை கட்டுப்படுத்தமுடியாது அழுகிக்கொண்டிருந்த கால்.

இரண்டாவது படம் பேலியோ துவங்கி சுகர் கட்டுக்குள் வந்து காயங்கள் ஆறத்துவங்கியபோது.

மூன்றாவது படம் வெற்றிகரமாக அவருக்கு அறுவைசிகிச்சை நடந்தபிறகு.

இத்தனைக்கும் இவர் சுத்த சைவம். வெறும் முட்டை, வெஜிடேரியன் பேலியோவுக்கே இந்த ரிசல்ட்.

இதை சாத்தியமாக்கிய மரு. Drprakash Surgeon அவர்களுக்கு வாழ்த்துகள்.


image.png

தேமொழி

unread,
Nov 14, 2018, 3:28:15 PM11/14/18
to மின்தமிழ்
///ரூம் போட்டு உட்கார்ந்து விமர்சிப்பது எளிது///

பேனலிஸ்ட் ரிவியூ = பேனலிஸ்ட் செய்யும் காமடி

///களத்தில் இறங்கி சாதிப்பது கடினம் ///

மருத்துவர் தங்கள் நோயாளியின் உடலை சோதனை செய்து அதற்கேற்ப மருத்துவ சிகிச்சை அளிப்பது = களத்தில் இறங்கிப் போராடுவது


சரியான புரிதல் இருக்க வேண்டியது...
அவரவர் துறை எதுவோ, எதற்காக தங்களை தயார் செய்துகொண்டார்களோ அதற்கேற்ற செயலைச் செய்து வருகிறார்கள்.

செல்வன்

unread,
Nov 14, 2018, 3:42:04 PM11/14/18
to mintamil
பேலியோ பற்றி அறியாத மருத்துவரிடன் இந்த நோயாளி போயிருந்தால் அவரது காலை வெட்டி வீட்டுக்கு அனுப்பியிருப்பார்கள்.

இந்த பேனலில் இருக்கும் கோமாளிகள் நன்றாக கருத்தரங்குகளுக்கு போய் அங்கெ கிடைக்கும் ஓசி உணவை உண்டுவிட்டு வாய்க்கு வந்ததை எல்லம உளறிவிட்டு வருவதுதான் வழக்கம். அவர்கள் சொல்வதை எல்லாம் நாம் சீரியசாக எடுக்ககூடாது. களத்தில் இருக்கும் மருத்துவர் பிரகாஷ் மாதிரியானவர்களின் அனுபவங்கள் தான் நமக்கு சரியான முன்னுதாரணம். 

தேமொழி

unread,
Nov 14, 2018, 5:02:55 PM11/14/18
to மின்தமிழ்


On Wednesday, November 14, 2018 at 12:42:04 PM UTC-8, செல்வன் wrote:


On Wed, Nov 14, 2018 at 2:28 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
///ரூம் போட்டு உட்கார்ந்து விமர்சிப்பது எளிது///

பேனலிஸ்ட் ரிவியூ = பேனலிஸ்ட் செய்யும் காமடி



///களத்தில் இறங்கி சாதிப்பது கடினம் ///

மருத்துவர் தங்கள் நோயாளியின் உடலை சோதனை செய்து அதற்கேற்ப மருத்துவ சிகிச்சை அளிப்பது = களத்தில் இறங்கிப் போராடுவது


சரியான புரிதல் இருக்க வேண்டியது...
அவரவர் துறை எதுவோ, எதற்காக தங்களை தயார் செய்துகொண்டார்களோ அதற்கேற்ற செயலைச் செய்து வருகிறார்கள்.



பேலியோ பற்றி அறியாத மருத்துவரிடன் இந்த நோயாளி போயிருந்தால் அவரது காலை வெட்டி வீட்டுக்கு அனுப்பியிருப்பார்கள்.


தகவலுக்காக....

இந்நாட்களில் இந்திய மருத்துவமும், மக்களுக்கு அது குறித்த  அறிவும் உயர்ந்த நிலையில் உள்ளது.

மருத்துவர் முறையான முதற்பரிசோதனைக்குப் பிறகு தக்க சிறப்பு மருத்துவரிடம் நோயாளியைப் பரிந்துரைத்து அனுப்பிவிடுவார்.

நோயாளிகளும் தாங்களாகவே சிறப்பு மருத்துவர் குறித்து தேடி அறிந்தும் செல்கிறார்கள்.  

ஆகவே போலி டாக்டரிடம் செல்பவர்கள் எதைத் தின்றால் பித்தம் தெளியும் எதைச் செய்தால் நோய் தீரும் என்ற நிலையில் உள்ளவர்களும், நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல என்ற விந்தையானக் கொள்கை கொண்டோரும் மட்டுமே.


மருத்துவரும் மருத்துவ ஆணையம் அனுமதித்த கல்லூரிகளில் படித்து தொழில்முறையில் அதைக் கடைபிடிப்பவர்கள்.


பிற ஆய்வாளர்கள் அடிப்படை ஆய்வு செய்பவர்கள், அதில் மருத்துவரும் உண்டு.  

தொழில்முறை மருத்துவர் ஆய்வில் உறுதிப்பட வெளியான அறிவியல் அடிப்படை செய்திகளை, தங்களிடம் வந்துள்ள நோயாளியின் உடல்நிலை ஏற்குமா என்று அறிந்த பின்னர் சோதனை செய்து முடிவெடுத்து சிகிச்சை செய்பவர்கள்.

நானறிந்தது...உங்கள் உரையாடல்கள் மூலம்.... இதுவரை 


மனித உடற்கூறு...  மருத்துவம்... மருத்துவர் ஆகின பற்றி உங்களுக்கு முறையானப் புரிதல் இல்லை என்பதுவே.

அவ்வாறு இருந்தால்  அடிப்படை ஆய்வு செய்து அது குறித்து பரிந்துரை செய்பவர்களை "பேனலிஸ்டுகள் உட்கார்ந்து காமடி பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள் :-)  ரூம் போட்டு உட்கார்ந்து விமர்சிப்பது எளிது" போன்ற விமர்சனங்களைச் சொல்வது ஒரு துறையினரை குறைத்து மதிப்பிடுவது என்றும்,  

நோயாளியின் உடல்நிலைக்கு ஏற்ப மருத்துவம் செய்வதை  "களத்தில் இறங்கி சாதிப்பது" போன்ற வகையில் குறிப்பிடுவதில் இருந்தும் அறிய முடிகிறது.

செல்வன்

unread,
Nov 14, 2018, 6:25:03 PM11/14/18
to mintamil
On Wednesday, November 14, 2018 at 12:42:04 PM UTC-8, செல்வன் wrote:


தகவலுக்காக....

இந்நாட்களில் இந்திய மருத்துவமும், மக்களுக்கு அது குறித்த  அறிவும் உயர்ந்த நிலையில் உள்ளது.

மருத்துவர் முறையான முதற்பரிசோதனைக்குப் பிறகு தக்க சிறப்பு மருத்துவரிடம் நோயாளியைப் பரிந்துரைத்து அனுப்பிவிடுவார்.

நோயாளிகளும் தாங்களாகவே சிறப்பு மருத்துவர் குறித்து தேடி அறிந்தும் செல்கிறார்கள்.  

ஆகவே போலி டாக்டரிடம் செல்பவர்கள் எதைத் தின்றால் பித்தம் தெளியும் எதைச் செய்தால் நோய் தீரும் என்ற நிலையில் உள்ளவர்களும், நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல என்ற விந்தையானக் கொள்கை கொண்டோரும் மட்டுமே.



டாக்டர் பிரகாஷிடம் வந்தவர் பொது மருத்துவரிடம் போயிருந்தால் அவர் சிறப்பு மருத்துவரிடம் போயிருப்பார். சிறப்பு மருத்துவர் காலை வெட்டி அகற்றி மருந்துபோட்டு சில லட்சம் ரூபாய்களை வாங்கிக்கொன்டு வீட்டுக்கு அனுப்பியிருப்பார். பேலியோ பற்றி தெரிந்த டாக்டர் பிரகாஷிடம் போனதால் கால் தப்பி பிழைத்தது.

சர்க்கரை நோய் குணமாக்க முடியாத நோய் என அமெரிக்க டயபடிஸ் அசோசியேஷன் அறிவித்துள்ளது. 

ஆனால் டயபடிஸ் பேலியோவில் 100% குணமாகிறது.

உங்களுக்கு களநிலவரம் எதுவும் தெரியாது, ஏட்டில் படிப்பதை வைத்து தான் பேசுகிறீர்கள்......நான் பேசுவது பிராக்டிகல்.

 


மருத்துவரும் மருத்துவ ஆணையம் அனுமதித்த கல்லூரிகளில் படித்து தொழில்முறையில் அதைக் கடைபிடிப்பவர்கள்.


பிற ஆய்வாளர்கள் அடிப்படை ஆய்வு செய்பவர்கள், அதில் மருத்துவரும் உண்டு.  

தொழில்முறை மருத்துவர் ஆய்வில் உறுதிப்பட வெளியான அறிவியல் அடிப்படை செய்திகளை, தங்களிடம் வந்துள்ள நோயாளியின் உடல்நிலை ஏற்குமா என்று அறிந்த பின்னர் சோதனை செய்து முடிவெடுத்து சிகிச்சை செய்பவர்கள்.


காலை வெட்டி எடுக்கும் மருத்துவமுறை சிறந்ததா?

நோயை குணமாக்கி காலுடன் திருப்பி அனுப்பும் மருத்துவமுறை சிறந்ததா?


 

நானறிந்தது...உங்கள் உரையாடல்கள் மூலம்.... இதுவரை 


மனித உடற்கூறு...  மருத்துவம்... மருத்துவர் ஆகின பற்றி உங்களுக்கு முறையானப் புரிதல் இல்லை என்பதுவே.

அவ்வாறு இருந்தால்  அடிப்படை ஆய்வு செய்து அது குறித்து பரிந்துரை செய்பவர்களை "பேனலிஸ்டுகள் உட்கார்ந்து காமடி பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள் :-)  ரூம் போட்டு உட்கார்ந்து விமர்சிப்பது எளிது" போன்ற விமர்சனங்களைச் சொல்வது ஒரு துறையினரை குறைத்து மதிப்பிடுவது என்றும்,  

நோயாளியின் உடல்நிலைக்கு ஏற்ப மருத்துவம் செய்வதை  "களத்தில் இறங்கி சாதிப்பது" போன்ற வகையில் குறிப்பிடுவதில் இருந்தும் அறிய முடிகிறது.




பேலியோ பற்றி தெரியாத மருத்துவர்கள் காலை வெட்டி எடுப்பார்கள்.

பேலியோ பற்றி தெரிந்த மருத்துவர்கள் காலை காப்பாற்றி அனுப்புவார்கள்.

எதுவும் தெரியாத பேனலிஸ்டுகள் வெட்டி பேச்சு பேசிக்கொண்டு பொழுதை கழிப்பார்கள். 

தேமொழி

unread,
Nov 14, 2018, 7:20:58 PM11/14/18
to மின்தமிழ்
மன்னிக்கவும்...

நோயாளியை பார்க்காமல் சிகிச்சை குறித்த ஆலோசனை வழங்குவது உங்கள் வழசக்கமாக இருக்கலாம்.

நேரிடையாக நோயாளியைப் பரிசோதித்து சிகிச்சை அளிக்கும் மருத்துவர் குறித்தும் மருத்துவம் குறித்தும் எதையும் அறியாமல் முடிவெடுக்கத் துணிவது எனது வழக்கமல்ல.

செல்வன்

unread,
Nov 14, 2018, 7:23:18 PM11/14/18
to mintamil
நான் யாருக்கும் சிகிச்சை அளிப்பது கிடையாது :-)

உங்களை யாரும் எந்த முடிவும் எடுக்க சொல்லவில்லை..உங்களுக்கு விருப்பமான உனவை உன்டு நூறாண்டு வாழ வாழ்த்துகிறேன் :-) 


--

செல்வன்

தேமொழி

unread,
Nov 14, 2018, 7:29:05 PM11/14/18
to மின்தமிழ்
///நோயாளியை பார்க்காமல் சிகிச்சை குறித்த ஆலோசனை வழங்குவது உங்கள் வழக்கமாக இருக்கலாம்.///

ஆலோசனை என்பது வேறு.
சிகிச்சை என்பது வேறு.

செல்வன்

unread,
Nov 14, 2018, 7:33:22 PM11/14/18
to mintamil
சிகிச்சை குறித்தும் நான் ஆலோசனை வழங்க்குவதில்லை.

அப்படி சிகிச்சை பற்றி ஆலோசனை வழங்க நான் டாக்டராக இருக்கவேண்டும். நான் டாக்டர் அல்லவே?

நான் அளிப்பது உணவுப்பரிந்துரை மட்டுமே.

முட்டை சாப்பிடு, இறைச்சி சாப்பிடு என சொல்ல மருத்துவராக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. பணம் வாங்குவதில்லை  என்பதால் டயட்டிசியன் ஆக இருக்கும் அவசியமும் இல்லை. இது ஒரு குடிமகன் இன்னொரு குடிமகனுக்கு தன் உணவியல் அறிவை பகிர்தல் மட்டுமே.
 

--

செல்வன்

தேமொழி

unread,
Nov 14, 2018, 7:45:10 PM11/14/18
to மின்தமிழ்
தேவை :

அடுத்தவர் எழுதிய பதிலிக்கேற்ற பதில்/விளக்கம் எழுதும் முறை. கடந்த ஒருமணி நேரத்தில் இருவரும் எழுதிய மறுமொழிகளை படித்து நீங்களே முடிவெடுக்கலாம்.

Reply all
Reply to author
Forward
0 new messages