--பார்ப்பான் எதிலும் பார்ப்பானாகவே இருப்பான் - பெரியார்
தந்தை பெரியார்இந்தப்படி அதாவது எல்லா இடங்களிலும் எல்லாம் பார்ப்பனர்களாகவே இருப்பது என்பதான இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறதே, இதனால் என்ன கெட்டுவிட்டது என்று மக்கள் கேட்கலாம். இந்தப் பார்ப்பனர்கள் பதவிக்கு, அதிகாரத்துக்கு, ஆட்சிக்கு, ஆதிக்கத்துக்கு வந்தவுடன் என்ன கெடவில்லை? எது ஒழுங்காய் இருக்கிறது? எங்கே நாணயத்தைக் காணமுடிகிறது? அவ்வளவு கெட்டுப் போய்விட்டதே! நம்முடைய ராஜ்ஜியத்தில் தோழர் ஆச் சாரியார் அவர்கள் ஆட்சிக்கு வந்து இப்போது சுமார் 11/2 (ஒன்றரை) வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இந்த 11/2 வருடத்திய இவருடைய ஆட்சியில் என்ன பொது உரிமை ஏற்பட்டு விட்டது? அல்லது இந்த 11/2வருடம் இவருடைய ஆட்சியால் நன்மைக்குக் கேடான காரி யங்கள் நடைபெறாமல் போய்விட்டன என்று யார் சொல்ல முடியும்?தோழர் ஆச்சாரியார் அவர்கள் முதன் மந்திரியாக ஆனவுடன் மக்களுக்கு நீண்ட காலமாய்ப் பெருந் தொல் லையாக இருந்து வந்த உணவு கண்ட்ரோலை (கட்டுப் பாட்டை) எடுத்தார். நம்மைப் போன்றவர்களும் இது நல்ல காரியம் என்று ஆதரித்தோம். மக்கள் தங்களுக்கான கண்ட்ரோல்களை ஒழித்ததால் மகிழ்ச்சியடைந்தார்கள். நெசவாளிகளுக்குச் சில நன்மை செய்தார். தக்கப்படி செய்து கொஞ்சம் பெயர் கிடைத்தவுடன் அவருடைய பதவியும் நிலைத்துகொண்டது என்று தெரிந்ததும் என்ன செய்தார்?இந்த நாட்டை மனுதர்மத்திற்குக் கொண்டு செல்லும் ஆச்சாரியார் அவர்கள் மனதில் முடிவு கொண்டு அந்த மனு தர்மத்திற்கு என்ன பூர்வாங்க ஏற்பாடுகள், முதல் வேலைகள் செய்ய வேண்டுமோ அவைகளையெல்லாம் செய்யும் முறையில் உத்தியோகத்துறைகள் யாவும் பார்ப்பன மயமாக்கி விட்டார். அதுவும் நம் திராவிட ஆள்கள் உத்தியோகத்துறைப் பக்கம் திரும்ப முடியாதபடி கொஞ்சம் கூட நீதி நேர்மையில்லாத பார்ப்பனர்களையே எல்லாவற்றிற்கும் நியமித்தார். இந்த உத்தியோகத்துறை பார்ப்பனர்களின் மயமானதோடு மாத்திரமல்ல; படித்தால் தான் இந்தச் சூத்திரர்கள் உத்தியோகம் வேண்டும்; பதவி வேண்டும் என்று கேட்பார்கள். சூத்திரர்கள் படிக்கக்கூடாது என்று முடிவு செய்து, கல்வித்திட்டம் என்கிற பெயரால் வர்ணாசிரம புனர்நிருமாண முயற்சித் திட்டத்தைக் கொண்டு வந்துவிட்டார்.இந்தக் கல்வித் திட்டத்திற்கு எவ்வளவு பெரிய எதிர்ப்பு இருக்கிறது? ஆனால் இத்தகைய எதிர்ப்புகளைப் பற்றி தோழர் ஆச்சாரியார் அவர்கள் - ஜனநாயகத்தின் பேரால் ஆட்சி புரிகிறவர்கள் - கொஞ்சமாவது கவலை எடுத்துக் கொள்ள வேண்டாமா?கல்வித் திட்டத்தைத் தோழர் ஆச்சாரியார் அவர்கள் கொண்டு வந்தவுடன் முதன் முதலாக நான்தான் இந்தக் கல்வித் திட்டம் வருணாசிரமக் கல்வித்திட்டம்; இதை எதிர்த்து ஒழித்து ஆகவேண்டும் என்று எதிர்த்தேன். மக்களும் என்னை ஆதரித்தார்கள்; பல மாற்றுக் கட்சிக் காரர்களும், ஏன் - காங்கிரசிலே உள்ள பலரும் இந்தத் திட்டத்தை எதிர்த்தார்கள். அதோடு மட்டுமல்ல 10, 15 ஜில்லா போர்டு, சேம்பர்ஸ் முதலியவைகளும் பல, நகரத்து முனிசி பாலிட்டிகளும் கிராமப் பஞ்சாயத்துக்களும், ஆசிரியர்களும், கல்வித் துறையில் நிபுணர்கள் என்று பெயர் பெற்ற வர்களும் ஆக இப்படிப் பலரும், பலதரப் பட்டவர்களும், மாறுபாடு கொண்டவர்களும் எல்லோரும் ஒரு சேர இந்த வருணாசிரம புனர் நிருமாணக் கல்வித் திட்டத்தை எதிர்த்தனர். உள்ளபடியே ஜனநாயகத்தின். பேரால் ஆட்சியிலே இருக்கிறவர்கள் என்ன செய்ய வேண்டும்? ஆனால் இத்தகைய எதிர்ப்புகள் எதைப் பற்றியும் சிறிதுகூட லட்சியம் செய்யாமல், யார் என்ன சொன்னாலும் இதைக் கொண்டு வரவேண்டும் என்று எனக்குத் தோன்றியது, கொண்டு வந்துதான் தீருவேன். இந்த வருடம் கிராமத்தில் தான் இந்தக் கல்வித் திட்டம் அமலிலிருக்கும். அடுத்த வருடம் நகரத்துக்கும் சேர்த்து இந்தக் கல்வித்திட்டம் விரிவாக்கப்படும் என்பது போலெல்லாம் பேசி வருகிறார். இதுதான் நியாயமா? அல்லது இதற்குப் பெயர்தான் ஜனநாயக ஆட்சியா?என்னய்யா இவ்வளவு அக்கிரமம் செய்கிறாரே! என்று மேலே சொன்னால், அவர்கள் சொல்லுகிறவர்களைப் பார்த்து, உங்களுக்கு நன்றியே இல்லை, அவர்மீது குறை சொல்லுகிறீர்களே என்கிறார்கள். இப்படி இருக்கிறது.இந்தக் கல்வி திட்டம் என்பது என்ன? இந்தத் திட்டத் தினுடைய அடிப்படை என்ன என்று நீங்கள் கருது கிறீர்கள்? இந்தக் கல்வித் திட்டம் என்பது வருணாசிரம புனர் நிருமாணப் பாதுகாப்புத் திட்டமா அல்லவா? அதாவது இந்தக் கல்வித் திட்டத்தின்படி ஒவ்வொரு வகுப்புப் பிள்ளைகளும் நாளைக்கு ஒரு வேளை படித்துவிட்டு, மீதி நேரத்தில் அவரவர்களின் வருண ஜாதித் தொழிலைப் பழகவேண்டும் - செய்யவேண்டும் என்பதாகச் சொல்லு கிறது. ஜாதியின் பேரால் உடலுழைப்பு, அடிமை வேலை செய்கிறவர்கள் யார்? சூத்திரர்கள் என்று சொல்லப்படுகிற நாம்தானே! ஆகவே நாம் எல்லோரும் செய்ய வேண்டியது, அதாவது நாவிதர் மகன் சிரைப்பது, வண்ணார் மகன் வெளுப்பது, குயவர் மகன் சட்டிப்பானை செய்வது, வேளாளன் மகன் மாடுமேய்ப்பது, பன்னியாண்டியின் மகன் பன்றி மேய்ப்பது ஆகிய வேலைகளாகும். இப்படி நம் ஜாதி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தொழில், வேலை இருப்பது போலவே பார்ப்பன ஜாதிக்கும் ஒரு தொழில் செய்ய வேண்டும் என்று சொல்லுகிறவர்கள் - அப்படியே அவர்களும் செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் செய்வதில்லை; நம்மைச் செய்யச்சொல்லுகிறார்கள். தங்கள் ஜாதித்தொழில் தங்களுக்கு வேண்டாம்; எங்களுக்கு உத்தியோகம்தான் வேண்டும் என்கிறார்கள்.என்னய்யா! நாங்கள் மட்டும் ஜாதித்தொழிலைச் செய்து கொண்டே இருக்க வேண்டும். பார்ப்பனர்கள் மட்டும் எல்லாப் பதவி, உத்தியோகங்கள், அதிகாரங்கள் பெற்று மேலுக்குமேல் போய்க்கொண்டே இருக்க வேண்டுமா? இது என்ன நியாயம்? என்று கேட்டால், சே! சே! நீ பேசுவது வகுப்புவாதம் என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிடுகிறார்கள். இதுதான் ஆட்சியாக, அரசாங்க மாக, சுதந்தரமாக, ஜனநாயகமாக, குடி அரசாக, கீதையாக, பாரதமாக, ராமாயண மாக, கடவுள் பக்தியாக, ஆஸ்திகமாக, மதமாக இருக்கிறது. இந்த அக்கிரமமான, அநியாயமான நிலைமை கூடாது என்றால், அது வகுப்புத் துவேஷமாக, தேசத்துரோகமாக, நாஸ்திகமாக இருக்கிறது. அதாவது அப்படிச் சொல்லப் படுகிறது. இதுவா முறை? மக்கள் யோசித்துப் பார்க்க வேண் டும்; எவ்வளவு வேதனை தரும்படியான நிலைமையில் இன்றைய ஆட்சியும் அரசாங்கமும் அதனுடைய ஆட்சியும்! தோழர்களே! மறுபடியும் சொல்ல ஆசைப்படுகிறேன்; எனக்கும் தோழர் இராசகோபால ஆச்சாரியார் அவர்களுக்கும் சொந்த முறையில் ஏதும் பகைமையோ, விரோதமோ, பொறாமை உணர்ச்சி கொண்டோ நான் சொல்லவில்லை; மற்றவர்கள் வேண்டுமானால் அத்தகைய உணர்ச்சி கொண்டவர் களோ என்னவோ! என்னைப் பொறுத்தவரையில் இன்னும் அவர் தனிப்பட்ட முறையில் என் நண்பர்தான். நாளைக்கு வேலை போய்விட்டால் அவர் என் வீட்டுக்கு வருவார். நானும் மாலை போட்டு வரவேற்பேன். ஆதலால் ஆச்சாரி யாரிடத்தில் நான் ஏதோ கசப்போ, காழ்ப்போ வைத்துக்கொண்டு பேசவில்லை.தோழர் ஆச்சாரியார் அவர்கள் அவருடைய இனத்துக்கு ஆக, பிறந்த பார்ப்பன இனத்துக்காகப் பாடு படுகிறார். அவருக்குத் தெரியும், இன்று நாட்டிலே வளர்ந்து வருகிற உணர்ச்சி தம்முடைய சமுதாயமான பார்ப்பன சமுதாயத்துக்கு விரோதமானது; ஆதலால் இந்த உணர்ச் சியை - இலட்சியத்தை - ஒழித்துக்கட்டித் தம்முடைய இனத்தைக் காப்பாற்றுவதற்கு ஆக அவர் தீவிரமாக முயற்சி செய்கிறார். நமக்குத் தோழர் ஆச்சாரியார் அவர்கள் எதிரியாய் இருந்தாலும், பார்ப்பனர்களுக்கு - அந்தச் சமுதாயத்துக்கு அவர் ஒரு அவதாரபுருஷர் என்று கருதுகிறார்கள். அப்படி அவர், அவருடைய இனத்துக்கு ஆகப் பாடுபடுகிறார். நாம் நம் இனத்துக்காகப் பாடுபடுகிறோம். அவருடைய பார்ப்பன இனத்தின் வளர்ச்சியும், வாழ்வும், நம் இனத்தினுடைய தாழ்விலும் அடிமையிலுந்தான் ஏற்பட முடியும். அதனால் தான் அவர் இந்தப்படி செய்கிறார். ஆனால் அதே நேரத்தில் நம்முடைய திராவிட இனத்தின் வளர்ச்சியும் வாழ்வும் பார்ப்பானை நீக்கினால் தான் நம் அடிமைத்தனமும், தாழ்வும் ஒழியும். ஆதலால்தான் நாம் அடிமையும், தாழ்வும் ஒழிய வேண்டும் என்பதற்கு ஆகத்தான் நாம் பார்ப்பன துவேஷிகளாக, பார்ப்பானே வெளியேறு என்று முழங்கு பவர்களாக இருக்கிறோம்.தோழர் ஆச்சாரியார் அவர்கள் நாம் ஏதோ உடலு ழைப்பு செய்வதைக் கேவலமானது, கீழானது என்பதாக நினைத்துக் கொண்டிருக்றோம் என்று கருதுகிறார் போலும். பல இடங்களில் பேசுகிற போது சொல்லுகிறார்: உடலுழைப்பு வேலை செய்வது கேவலமில்லை; அதுதான் உயர்ந்தது என்பது போன்ற ரகத்தில்.நான் சொல்ல ஆசைப்படுகிறேன்: நாங்கள் ஒன்றும் உடலுழைப்பு வேலை கேவலமானது என்று கருதவில்லை; ஆனால் அந்த உடலுழைப்பு வேலையை நாங்கள் மட்டுமே ஏன் செய்யவேண்டும்? எல்லோரும் விகிதாசாரப் படி செய்ய லாமே என்கிறோம்! அப்படியில்லாமல் நாங்கள் மட்டுந்தான்-திராவிட மக்கள் மாத்திரந்தான் இந்த உடலுழைப்பு வேலைகளைச் செய்ய வேண்டும்; பார்ப் பான் இவையென்றுமே செய்யாமல் உட்கார்ந்த இடத்தில், நகத்தில் அழுக்குப் படாமலேயே உயர்வாழ்வு வாழுவது என்பது என்ன நியாயம்? என்று கேட்கிறோம். உடலு ழைப்புச் செய்வது என்பது மேல் கீழ் என்கிற தன்மையில் தான், அதாவது கீழ்சாதிக்காரர்கள் என்பதாக மதத்தின் பேரால், கடவுளின் பேரால் சாஸ்திரத்தின் பேரால் ஆக்கப் பட்டவர்கள் என்பவர்கள் தான் செய்ய வேண்டும். அந்தப்படி அவர்கள் செய்வதாலேயே அவர்கள் கீழ்சாதி மக்கள் என்பதான அமைப்பு முறை, சமூக முறை இருக்கிறதே, அதைத்தான் நாங்கள் ஆட்சேபிக்கிறோம்; கண்டிக்கிறோம்; எதிர்க்கிறோம்; ஒழித்துக்கட்ட வேண்டும் என்று கூறுகிறோம். இதைப் புரிந்துகொள்ள வேண்டும். நாங்கள் எந்த வேலை செய்வதையும் இழிவானது என்றோ, கீழானது என்றோ கருதவில்லை, ஆனால் நீங்களும் செய்யுங்களேன், உங்கள் விகிதாசாரப்படி!தோழர்களே! அடுத்தபடியாக ஆரியர்கள், பார்ப் பனர்கள் - இந்த நாட்டுக்காரர்கள் தான் என்று! சொல்ல முடியுமா? அல்லது நாம் தான் இந்த நாட்டுக் குடிமக்கள் அல்லவென்று சொல்லிவிட முடியுமா? பார்ப்பனர்களே எழுதி வைத்த சரித்திரங்களிலேயே எழுதியிருக்கிறார்களே, பார்ப்பனர்கள் இந்த நாட்டுக்குப் பிழைக்க வந்தவர்கள் என்று அவர்களே எழுதியிருக்கிறார்களே, திராவிட மக்களாகிய நாம்தான் இந்த நாட்டின் பூர்வீகக் குடிமக்கள், சொந்தக்கார மக்கள் என்று! ஆதலால் நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்துவிட்டதே! எங்கள் நாடு, எங்கள் மக்கள் கையில்தானே இருக்கவேண்டும். அப்படியிருக்க அந் நியர்கள் இங்கு வந்தவர்கள் - திராவிடர்கள் அல்லாத வர்கள்-தாங்கள் வேறு இனம், வேறு ஜாதி பிறப்பு என்று தங்களைத் தாங்களே சொல்லிக் கொள்ளுகிறவர்கள் நம்மை இழியர்கள், தகுதி திறமை அற்றவர்கள் என்று சொல்லி ஆதிக்கம் செலுத்துவது என்பது என்ன அர்த்தம்? ஆதலால் இந்த நாட்டுக்கு அந்நியர்கள், இந்த நாட்டை விட்டு வெளியேறட்டும் என்று சொல்லுகிறோம்.வெள்ளையன் இந்த நாட்டுக்கு அந்நியன் என்றால், இந்தப் பார்ப்பனர்களும் அந்நியர்கள் தானே. அவன் 200 300 ஆண்டு காலமாக இருந்த அந்நியன் என்றால், இந்தப் பார்ப்பனர்கள் 2000-3000 ஆண்டுக் காலமாக இருக்கிற அந் நியர்கள் தானே!வெள்ளைக்கார அந்நியன் 6000 மைலுக்கு அப்பால் வெகுதூரத்தில் இருந்ததால், தன் ஆதிக்கத்தைக் காப் பாற்றிக் கொள்ள, இந்த நாட்டு மக்களை அடக்கி வைத்திருந்தான் என்றாலும் நம்மை மனிதனாக நடத் தினான். நம் ஆட்களிடம் சாப்பிட்டான்; நம் ஆட்களைத் தொடமாட்டேன் என்று சொல்லவில்லை. இன்னும் பறையர்கள் என்று இந்தப் பார்ப் பனர்களால் அழைக் கப்படுகிற மக்கள்தானே அவனுடைய சமையல்காரர்களாக பட்லர்களாக இருந்தார்கள்?ஆனால் இங்கே இருக்கிற அந்நியனாகிய இந்தப் பார்ப்பன அந்நியன் நம்மைத் தொடக்கூட மாட்டேன் என்கிறானே! தொட்டால் தீட்டு என்கிறானே! நான் முகத்திலே பிறந்த முதல் ஜாதி மனிதன்; நீ காலிலே பிறந்த கடை ஜாதி மகன் என்கிறானே! நம் மக்கள் தலை யெடுக்கவிடாமல் எல்லாத் துறையிலேயும் நம்மை அடக்கி, ஒடுக்கி, அடிமைப்படுத்தி, அதற்கேற்ற முறை களையே ஆட்சி, சட்டம், அரசாங்கம், மதம், கடவுள் என்பவைகளாக வைத்திருக்கிறானே! ஆதலால் இப்படிப் பட்ட அந்நியனை எப்படி வெளியே துரத்தாமல் இருக்க முடியும்?இந்த அந்நியர்களை எப்படி வெளியேற்றுவது என் கிறீர்களா?வெள்ளைக்கார அந்நியன் எப்படி வெளியேற்றப்பட் டான்? தண்டவாளத்தைப் பெயர்த்தார்கள்; ரயிலைக் கவிழ்த்தார்கள்; தந்திக் கம்பியை அறுத்தார்கள்; போஸ் டாஃபீசுக்களைக் கொளுத்தினார்கள்; அதிகாரிகளைக் கொன்றார்கள்; முகத்தில் திராவகத்தை ஊற்றினார்கள்! இவைகள் எல்லாம் பார்ப்பான் வகுத்துக் கொடுத்த திட்டங்கள் தானே!இப்படிப்பட்ட காரியங்களால்தான் வெள்ளைக்கார அந்நியன் வெளியேறினான் என்று காங்கிரசுக்காரர்களும், பார்ப்பனர்களும் சொல்லுகிறார்கள். அவனும் இதை ஒப்புக் கொண்டதன் அடையாளமாகவோ என்னவோ இந்தக் காரியங்களுக்கு அப்புறம் போய்விட்டான்.ஆதலால் வெள்ளைக்கார அந்நியனை வெளியேற்று வதற்கு ஆக என்னென்ன காரியங்களைச் செய்தார்களோ அப்படிப்பட்ட காரியங்களையெல்லாம் இந்தப் பார்ப்பன அந்நியனை வெளியேற்றுவதற்குச் செய்துதானே தீர வேண்டும்? ஆனால் நாங்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல, அவர்கள் மாதிரியே திருப்பிச் செய்வதற்கு! தண்ட வாளத்தைப் பிடுங்கியதிலும், ரயிலைக் கவிழ்த்ததிலும், தந்திக் கம்பியை அறுத்ததிலும் போஸ்டாஃபீசைக் (அஞ்சல் நிலையத்தை) கொளுத்தியதிலும் யாருக்கு நட்டம்? வெள்ளைக்கார அந்நியனுக்கா? இல்லையே! நமக்குத் தானே! நம் பொருள்கள் தானே நட்டமடைந்தன? ஆதலால் நாங்கள் அதுபோல நமக்கு நாமே நட்டத்தைத் தேடிக்கொள்கிற மாதிரி நடந்துகொள்ளவே மாட்டோம். அக்கிரகாரத்தின் பக்கமேதான் எங்கள் பார்வை திரும்பும். ஆகவே, தோழர்களே இன்று சமுதாயத் துறையில், அரசியல் துறையில் நமக்குக் கேடாக இருப்பது இந்தப் பார்ப்பனர்கள்தான்.பார்ப்பனர்களும் முடிவுகட்டிக் கொண்டார் கள், இரண்டி லொன்று பார்த்துவிடுவது என்று. ஆச்சாரியார் அவர்களே சொல்லிவிட்டார், இப்போது நடைபெறுகிறது தேவ- அசுர போராட்டம் என்று. அப்படியென்றால் என்ன? ஆரிய - திராவிடப் போராட்டம் இராமாயணம் போல் துவங்கி விட்டதென்று தானே பொருள்?இதைப் பார்ப்பனர்கள் நன்றாய் உணர்ந்திருக்கிறார்கள். பெரிய பெரிய அறிவாளிப் பார்ப்பனர்களில் இருந்து சாதாரண சவுண்டிப் பார்ப்பனர்கள் வரை நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். ஆனால் நம்மவர்கள் சிலர்தான் இதை இன்னும் உணராமல் இருக்கிறார்கள். உணரவில்லை என்பதோடு, நாம் செய்கிற இந்தக் காரியம் தப்பு என்றே சொல்ல வந்துவிட்டது ஒரு கோஷ்டி!நாம் இப்போது செய்கிற இந்தக் காரியம் நம்முடைய சொந்தத்துக்காகவா? அல்லது நம்முடைய சொந்த சுயநல, சுயவாழ்வு, சுயலாபத்துக்காகவா செய்கிறோம்? எல்லாத் திராவிட மக்களுக்கும் சூத்திரர்களுக்கும் தாசி மக் களுக்கும் பறையர் சக்கிலிகளுக்கும் சேர்த்துத்தானே செய்கிறோம்? நாளைக்குச் சூத்திரன் என்ற பட்டம் போனால், எனக்கு மட்டுந்தானா போகும்? அல்லது சூத்திரன் என்று இருப்பது எனக்கு மட்டுந் தானா? எல்லோருக்கும் சேர்த்துத்தானே போகும்? இதைத் திராவிட மக்கள் நன்றாக உணர வேண்டும்.இன்று தோழர் ஆச்சாரியார் அவர்கள் பாடுபடுகிறார் என்றால், எதற்கு ஆகப்பாடு படுகிறார்? அவருடைய சொந்தத்துக்கா? அவருக்கு ஏதோ இப்போது பல லட்சம் ரூபாய் இருக்கிறது என்கிறார்கள். ஆதலால் பணம் வேண்டும் என்பதற்காகப் பதவியில் இல்லை. அது போலவே அவர் பல பெரிய பெரிய பதவிகளில் எல்லாம்-கவர்னர்-ஜெனரல்-பதவிகளில் எல்லாம் இருந்திருக்கிறார். ஆதலால் இது அவரைப் பொறுத்தவரையில் சாதாரணப் பதவிதான். அதுபோலவே தன்னுடைய பிள்ளைகள், குடும்பம் முதலியவைகளுக்குச் சேர்த்து வைக்க வேண் டும் என்ற கருத்திலும் அல்ல அவர் பதவியிலிருப்பது.அவருடைய மந்திரிப் பதவிக்கு எவ்வளவு எதிர்ப்பு? என்றைக்குச் சாயுமோ என்கிற நிலையும் இருந்தாலும் இவைகளையெல்லாம் சமாளித்துக் கொண்டு உடும்புப் பிடியாய் இருக்கிறார் என்றால், எதற்கு? அவர் தன் இனத்தைக் காப்பதற்கு; பார்ப்பன சமுதாயத்தின் பாது காப்புக்கு ஆகத்தான். தாம் (பதவியில்) இருக்கிறதுக்குள்ளே எல்லா இடத்திலும் பார்ப்பனர்களை நிரப்பிவிடவேண்டும். சூத்திரர்களைத் தலையெடுக்கவிடாமல் அழுத்திவிட வேண்டும் என்கிற எண்ணத்தின் பேரிலேயே அவர் பதவியில் இருக்கிறார். இந்தப் புத்தியும், உணர்ச்சியும் இன வெறியும் நமக்குள் இல்லையே! அவர் எப்படிப் பார்ப்பன இனத்தின் நன்மைக்கு ஆகப் பாடுபடுகிறாரோ, அது மாதிரி நம்மவர்கள் பாடுபட முன்வர மாட்டேன் என் கிறார்களே!நமக்கு இன உணர்ச்சி கட்டுப்பாடு இருந்திருக்குமே யானால் இந்த ஆச்சாரியார் தானாகட்டும், அல்லது பார்ப்பனர்கள் தானாகட்டும் இவ்வளவு மேலே போயிருக்க முடியுமா? நமக்கு இன உணர்ச்சி அத்தகைய அறிவு இல்லை யென்பதாலேயே நாளுக்கு நாள் அவர்கள் மேலே மேலே போகிறார்கள்.தோழர்களே! காந்தியார் எப்பேர்ப்பட்டவர்; எவ்வளவு பெரியவர் என்று புகழப்பட்டவர்; அந்தக் காந்தியார் இல்லா விட்டால் இந்தப் பார்ப்பனர்கள் எங்கோ கிடந்திருப் பார்கள். இவர்களையெல்லாம் தூக்கி நிறுத்தி ஆளாக்கி, அதி காரத்தையும் இவர்கள் கையிலே வாங்கிக் கொடுத் தாரே, காந்தியார்! அவர் கொஞ்சம் பார்ப்பனருக்கு எதி ராகச் சொன்னார் (அதாவது பார்ப்பனர்கள் காந்தியாரிடம் போய் எங்கள் பிள்ளைகளுக்குப் படிக்க இடம் கொடுக்கமாட்டேன் என்கிறார்கள் - என்பதாகப் புகார் செய்தபோது, காந்தியார், நீங்கள் எல்லாரும் பிராமணர்கள்; கடவுளைத் தொழப் போங்கள்; அவர்கள்தான் படிக் கட்டுமே, என்று சொன்னார்.) என்ற உடனேயே ஒரு பார்ப்பான், பார்ப்பன இனத்துக்கு அவர் செய்த நன்மை, தேடித்தந்த உயர்வை யெல்லாம் கூட மறந்து, சுட்டுத் தள்ளி விட்டானே! நாம் படிக்கவே கூடாது என்ற சட்டம் சூழ்ச்சி செய்து விட்டாரே ஒரு பார்ப்பான்! இந்த அளவுக்கு அவர்களிடம் , பார்ப்பனர்களிடம் இன உணர்ச்சியும், வெறியும் இருக்கின்றன.நாம் யாரையும் சுட வேண்டாம். இனத்தைக் காட்டிக் கொடுத்துப் பிழைக்காமலாவது - நாம் செய்வதை கெடுக்காமலாவது இருக்கலாமல்லவா?பார்ப்பான் எதிலும் பார்ப்பானாகவே இருப்பான்நாமும் இத்தனை நாட்களாகப் பார்க்கிறோம்! பார்ப்பனர்களில் எத்தனையோ கொள்கைகள் பேசு பவர்கள், புரட்சிக்காரர்கள் பெரிய, பெரிய தலைவர்கள் என்பவர்களை யெல்லாம் பார்த்திருக்கிறோம். இவர்களில் எந்தப் பார்ப்பானாவது எந்தப் பார்ப்பானையாவது எதிர்த்து இருக்கிறானா? எந்தக் கட்சியில் பார்ப்பான் இருந்தாலும் பார்ப்பான் சமுதாய விஷயத்தில் எல்லாப் பார்ப்பனர்களும் ஒரே கட்சிக்காரர்கள்தானே!தேவதாசி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று அந்த இனத்தைச் சேர்ந்த ஒரு அம்மையார் (டாக்டர் முத்து லெட்சுமி ரெட்டி) மசோதா கொண்டு வந்தபோது, சத்தியமூர்த்தி அய்யர் என்கிற காங்கிரசு அரசியல் பார்ப்பனர் எவ்வளவு தூரம் எதிர்த்தார் தெரியுமா? தேவதாசி ஒழிப்புச் சட்டம் வந்ததால் இந்து மதம் ஒழிந்துவிடும்; கடவுள் போய்விடும் என்றெல்லாம் சொன்னார். இன்னும் அந்தத் தொழில் புண்ணியமான தொழில் என்றார். அந்த அம்மாள் சாமர்த்தியசாலி என்பதால், அப்படியானால் உங்கள் குலத்துப் (பார்ப்பன) பெண்களும் கொஞ்சம் இத் தொழிலைச் செய்யட்டுமே என்றார். உடனே அடங்கி விட்டார் சத்தியமூர்த்தி.இப்படிப் பார்ப்பனர்கள் தங்களுக்குத் தங்கள் பிழைப்புக்குச் சிறுகேடு , வசதிக்குறைவு வருவதானாலும் கூட எல்லோரும் ஒன்று சேர்ந்து கொண்டு கட்டுப்பாடாக எதிர்க்கிறார்கள். ஆனால் நம்மவருக்கு இந்த உணர்ச்சியே இல்லையே! செருப்பால் அடித்தாலும் ஸ்ரீ பாதம் சடகோபம் என் கிறார்களே!இன்று, திராவிட மக்களை அழித்து ஒழித்துக் கட்டுவதற்கு என்றே ஆட்சிப் பீடம் ஏறியிருக்கிற (இராச கோபால) ஆச்சாரியார் அவர்களைச் சுற்றிக்கொண்டும், அவருக்குத் ததாஸ்து பாடிக்கொண்டும் இருப்பவர்கள் எல்லாம் திராவிடர்கள் தானே! நம்மவர்களுக்குக் கேடு செய்து பிழைப்பவர்கள் பார்ப்பனர்களுக்குக் கையாளாய் இருப்பவர் எல்லாரும் திராவிடர் என்று சொல்லிக் கொள்ளுபவர்கள்தான்.இன உணர்ச்சியும், மானமும் நம்மவர்களுக்கு, நடை பெறுகிற இத்தனை அக்கிரமங்களைப் பார்த்த பிறகாவது புத்தி வர வேண்டாமா? இப்படியே இருந்தால் என்றைக்குத் தான் திராவிட மக்கள் முன்னேற முடியும்? என்றைக்குத் தான் நம்முடைய இழிநிலைமை ஒழியும்? எவ்வளவு கொடுமையும், அக்கிரமும் நடக்கிறது? இந்த அநியாயங் களைக் கண்டித்துச் சொல்ல நம்மில் ஒரு ஆள்கூட இல்லையே, திராவிடர் கழகத்தாரைத்தவிர! ஆகவே திராவிட மக்கள் இதை உணர வேண்டும்.---------------------------15-11-1953 இல் சென்னை வண்ணாரப்பேட்டையில் திராவிடர்கழகப் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் சொற்பொழிவு: "விடுதலை" 17-11-1953
--
---------------------------------------------------------------------------------------------------------------------
You received this message because you are a member of Google
Groups "Thanthaiperiyar".
Send your e-mails to: thanthaiperiyar@googlegroups.com
Group home: http://groups.google.com/group/thanthaiperiyar
unsubscribe e-mails to: thanthaiperiyar-unsubscribe@googlegroups.com
-------------------------------------------------------------------------------------------------------------------
Home Page: http://www.periyarkural.com
http://thanthaiperiyar.blogspot.com/
---
You received this message because you are subscribed to the Google Groups "தந்தை பெரியார்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thanthaiperiyar+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
தமிழ் அன்பர்களே,இம்மாதிரி 21 - ஆம் நூற்றாண்டில் விடுதலை நாட்டில் இழிவாக, மனித நீதியற்றுப் பைத்தியகாரர்தான் எழுதி, எழுதி வெறுப்பு விதைகளை இடுவார். இந்த இன வெறித்தனம் அறவே ஒழிக்கப்படவேண்டும்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
Not ALL his words are /were palatable or acceptable or even sensible. His major idea of equitable society, rational outlook on God and religion, simplicity on social functions, etc are what we should look at, not all his diatribe which are better consigned to the nonreturnable past time bin.
rnk
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
5 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 10:12 அன்று, Buhari <buh...@gmail.com> எழுதியது://ஆரியரிடம் தீண்டாமை உண்டா இல்லையா? ////
//பார்ப்பார்கள் இக்காலத்தில் மருத்துவர்கள்போல். சானிடைசர் இல்லாததால், அவர்கள் தூய்மைபேணுவது அக்காலத்தின் கட்டாயம். கோவில், குடும்பவிழாக்கள் என மக்களிடயே புழன்குவோர் தொற்றுனோய்க்கு ஊடகமாக இருக்கலாகாது.//தீண்டாமைக்கொடுமை எனப்து மனத்திலிருக்கும் மாசு என்பதை உணராதவரைக்கும், இப்படிப்பட்ட இழைகள் ஒரு குறிப்பிட்ட சாதியைக் குறிவைத்து, அவர்களை அந்நியப்படுத்துவதாகவே இருக்கும்.இது எப்படிஎன்றால், ஜெர்மனியில் எல்லாத் தீமைகளுக்கும் யூதர்களே காரணம் என்று அவர்களைத் தனிமைப்படுத்தி, கான்சென்ட்ரேஷன் காம்ப்பில் அடைத்துவைத்து, விஷவாயு செலுத்திக் கொல்வதற்கு ஒப்பாக உள்ளது.இப்படி இருக்கையில், வேந்தனார் 'தீண்டாமை'க்கு அறிவுசார்ந்த ஒரு விளக்கத்தைத் தருவது மாறுபட்ட கண்ணோட்டமாக உள்ளது.இப்படிப்பட்ட தீண்டாமை உலகில் பலவிதங்களில் பின்பற்றப்படுவதை நம்மால் காணமுடிகிறது.
- நான் பணியாற்றிய கணினி வில்லைகள் உருவாக்கும் தொழிற்கூடத்தில், எவரும் அப்படியே உள்ளே நுழைந்துவிடமுடியாது -- நுழைய முற்படுபவர் கம்பெனி முதலாளியாக இருந்தாலும்கூட. எவர் தகுந்த பாதுகாப்பு ஆடைகள் அணிந்துகொள்கிறார்களோ, அவர்கள்மட்டுமே செல்லமுடியும். அதுவும் ஒருவர் புகைபிடிப்பவராக இருந்தால், அங்கு வேலைக்கே எடுத்துக்கொள்ளப்படமாட்டார்கள்.
- வேஃபர் [கணினி வில்லைகள்] உருவாக்குமிடத்தில் கருவுற்றபெண்கள் வேலை செய்ய அனுமதிக்கப்பட்ட மாட்டார்கள்.
- கண்ணுக்குள் அணிந்துகொள்ளும் கான்டாக்ட் லென்ஸ் அணிந்திருந்தால், அங்கு நுழைய முடியாது.
வேலைவாய்ப்பு திறமையுள்ள அனைவருக்கும் கொடுக்கப்படவேண்டும் என்றுதான் போராட்டமுடியுமே தவிர, இங்கு 'தீண்டாமை' மேற்கொள்ளப்படுகிறது, அது ஒழியவேண்டும் என்றா போராட்டம் நடத்திடமுடியும்? இன்னும் இவ்வுலகத்தில் கைக்கொள்ளப்படும், அறிவுசார்ந்த ஆயிரக்கணக்கான 'தீண்டாமை'யைப்பற்றி எழுதலாம்.தீண்டாமை ஒரு குறிப்பிட்ட சாதி-இனத்திடம் இருக்கிறது என்று வாதிடுபவர்கள் தங்களிடம் ஒரு கேள்வி கேட்டுக்கொள்ளவேண்டும். நீங்கள் நீராடிவிட்டு, நன்கு உடையுடுத்தி, ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வெளிக்கிளம்புகிறீர்கள். உங்கள் குடும்பத்தின் செல்லக்குட்டியான உங்கள் மகளோ, மகனோ புழுதியில் புரண்டு விளையாடிவிட்டு, அப்புழுதிபடிந்த கையுடன் உங்களைக் கட்டிப்பிடித்து முத்தமிட வந்தால், என்ன சொல்வீர்கள்? அங்கு தீண்டாமை உங்களால் கைக்கொள்ளப்படுமா, அல்லது, உங்கள் செல்வத்தைக் கட்டிப்பிடித்து முத்தமிடுவீர்களா?என்னைப்பொறுத்தவரை 'மனத் தீண்டாமை' என்னும் -- நம்மிடம் குடிகொண்டிருக்கும் மாசை எப்படிக்களைவது என்பதுபற்றி விவாதிக்கவேண்டும். தமிழரைத் துண்டாடிய/துண்டாடும் ஒருவித இக்கால 'மனுதர்மத்தை'க் கைவிடவேண்டும்.
இப்போது தீண்டாமை [தாழ்த்தப் பட்டோரைச் சம மனிதப் பிறவியாகக் கருதாமை / நடத்தாமை] ஏறக்குறைய [பிராமணர் அல்லாத] எல்லா உயர்ந்த ஜாதியரிடமும் உள்ளது.எத்தனைபேர் வீட்டில் வீட்டைச் சுத்தம் செய்ய, பாத்திரம் கழுவ, பிள்ளை தூக்க, உணவு சமைக்க, உணவு பரிமாறத் தாழ்த்தப் பட்டோரை வேலைக்கு வைத்துக் கொண்டுள்ளார் என்று ஆதாரம் காட்டுங்கள்.எத்தனை பேர் ஒரே மேஜையில் தலித்துடன் சமபந்தி உணவு சாப்பிடுவர் என்று ஆதாரம் காட்டுங்கள்.சி. ஜெயபாரதன்
இந்த நிகழ்வு நடந்தது கடந்த 6 மாதங்களுக்குள் இருக்கும்.தென்னூர் அக்கிரகாரத்தில் ஒரு பார்ப்பனர் வீட்டில், என் குடும்பத்தினர் ஒருவரின் பிள்ளை இந்தி கற்கச் சென்ற பொழுது நடந்தது என்று அவர்கள் வாய்மொழி வழியாகவே டிசம்பரில் இந்தியா சென்ற பொழுது அறிந்தேன்.தண்ணீர் கேட்டு அடுப்பங்கரைக்குச் சென்ற பொழுது, இங்கெல்லாம் நீ வரக்கூடாது, தீட்டாகிவிடும் என்று அக்குழந்தை அறிவுறுத்தப்பட்டுள்ளது.நான் என் பின்னணியை யாருக்கும் சொல்வதில்லை. நேரடியாகக் கேட்டாலும் அல்லது மறைமுகமாக முயன்றாலும் தவிர்த்துவிடுவேன். அவர்களே என் எழுத்தில் எங்கள் சொந்த ஊர் என்பது போன்ற குறிப்புகள் கொண்டு ஏதோ ஒன்றை நினைத்துக் கொண்டால் எனக்கு அக்கறை என்பது துளியும் இல்லை. கொஞ்சம் முயன்று தேடினால் யார் பின்னணியையும் அவர் சொல்லாமலே கண்டுபிடித்துக் கொள்ளலாம். என்னை ஏதோ ஒரு பிரிவில் வகைப்படுத்துவது அவரவர் விருப்பம்.
என்னைப் பொறுத்தவரை நான் இந்த உலகில் 10.663527, 79.454277 (புவியிடக் குறிப்பு) இல் பிறந்த ஒரு female - Homo sapien. இது மாறாதது. நானே முயன்றாலும் மாற்ற வழியில்லாதது. மற்ற மாற்றங்கள் வாழும் சூழலுக்கு ஏற்ப வந்து ஒட்டிக் கொள்வது. நிற்க.
“என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?”
பனை ஏறும்
தந்தை தொழிலில்
இருந்து தப்பித்து
தலைமைச் செயலகத்தில் வேலை செய்பவர் கேட்டார்
*
“பெரியாரின்
முரட்டுத்தனமான அணுகுமுறை
அதெல்லாம் சரிபட்டு வராதுங்க”
இதுமுடி
வெட்டும் தோழரின் மகனான
எலக்ட்ரிக்கல் என்ஜினியர்.
*
“என்னங்க
பெரியார் சொல்லிட்டா சரியா?
பிராமணனும் மனுசந்தாங்க.
திராவிட இயக்கம்
இலக்கியத்துல என்ன செஞ்சி கிழிச்சது?”
இப்படி ‘இந்தியா டுடே’
பாணியில்கேட்டவர்
அப்பன் இன்னும்
பிணம் எரித்துக் கொண்டிருக்க
இங்கே டெலிபோன் டிபார்மென்டில்
சுபமங்களாவை விரித்தபடி
சுஜாதா
சுந்தர ராமசாமிக்கு
இணையாக
இலக்கிய சர்ச்சைசெய்து கொண்டிருக்கும்
அவருடைய மகன்.
ஆமாம்
அப்படி என்னதான் செய்தார் பெரியார்?
-வே. மதிமாறன்
***
பள்ளியில் போதிப்பது மட்டும் போதாது வீட்டில் போதிக்க வேண்டும். வீட்டில் தீண்டாமையை வளர்ப்பதற்கல்லவா போதிக்கிறார்கள்.Buhari
+1-416-500-09722018-03-06 2:20 GMT-05:00 vannan vannan <vanna...@gmail.com>:தீண்டாமை பற்றி பள்ளிக்கல்வியில் போதிக்க வேண்டும்.ஜாதிகள் இல்லையடி பாப்பா என்றான் மஹா கவி .கி வ வண்ணன்
கலப்பு மணத்தை அனைவரும் முன்னெடுங்கள் அல்லது அவ்வாறு செய்பவர்கள் வாழ்வில் குறுக்கிடாமல் இருங்கள்.கலப்பு மணங்கள் பெருகப் பெருக அடுத்த தலைமுறையினர் அதற்கடுத்த தலைமுறையினர் என தங்கள் பின்புலம் என்னவென்று, என்ன சொல்வது என்று சொல்லத் தெரியாமல் மறந்து ஒன்றாகிவிடுவார்கள்.இந்தக் கலப்புமண ஆதரிப்பு பெரியார் முன்னெடுத்த வழிதான்.ஆனால் தந்தையின் ஜாதி என்று குறிப்பிட்டு ஜாதி சான்றிதழ் வழங்காமல் முற்போக்காளர்கள் என்ற பிரிவாக மட்டுமே அடையாளம் கண்டு இவர்களுக்கு தனிச் சலுகைகள் வழங்கினால் இன்றைய நிலை மாறும்.***ஒரு அரசு மக்கள் நலனின் உண்மையான அக்கறை கொண்டு மாற்றம் விரும்பினால் அதற்கேற்ற வகையில் சட்டம் மூலமாக மாற்றம் கொண்டு வரலாம்.மாறாக, தனிமனித உரிமைகளில் தலையிட வழியில்லாத பொழுது சமுதாய அக்கறை கொண்ட கொள்கையை ஆதரித்தோ மக்களே விரும்பி ஏற்க ஊக்கமளித்தோ மாற்றம் கொண்டு வரலாம்.https://scroll.in/magazine/867130/indo-anglians-the-newest-and-fastest-growing-caste-in-india <<< இது ஒரு எடுத்துக்காட்டு. இக்கட்டுரை எனக்குப் பிடித்தது.
A large majority of these Indo-Anglian households have emerged over the past decade, such as in my case. And over the next 5-7 years, we are likely to see a spike, perhaps even a doubling in these numbers as well, on the back of growing westernisation, demand for English education and more critically, rising intercaste or intercommunity marriages, the single biggest cause of Indo-Anglian households (when parents have different mother tongues the child usually ends up speaking English). The rapid emergence and continuing growth of Indo-Anglian households has important implications for society, business and governance. Let us traverse through these.
A considerable proportion of Indo-Anglians households see marriages between members of different communities (and castes). On the basis of anecdata I would hazard that a majority of the Indo-Anglian marriages are between the traditional upper castes. But they also have members from some dominant/upwardly mobile but historically lower castes. Once accepted into the Indo-Anglian fold, members fold their traditional caste identity into Indo-Anglian culture. Caste is rarely discussed amongst Indo-Anglians and few caste or religious conventions are followed.
Let us take vegetarianism, a core caste precept for most Brahmins and Banias. There are a substantial number of Indo-Anglians who are vegetarian, but they are not opposed to marrying a partner who eats meat or even beef. They are also not opposed to the partner cooking meat at home or ordering it in. It is also unlikely that different vessels are used for non-vegetarian cooking at their home. In fact, in one such household, I have even seen the vegetarian partner occasionally digging into the gravy, avoiding the meat. The concept of ritual pollution, manifested in separate utensils for vegetarian and non-veg food rarely holds for such Indo-Anglian households. Vegetarianism is a moral choice for Indo-Anglians and not a religious norm.
This leads me to think of two distinct ways to look at Indo-Anglians. One is to see them as casteless, or even as an example of a post-caste community, where the traditional caste identity is subsumed under the new Indo-Anglian identity. The alternate approach, which I prefer, is to look at them as a distinct ‘caste’ parallel to the upper castes, with its own unique cultural norms and practices. The key criteria for caste inclusion and endogamy being advanced English language skills.
Members of Indo-Anglian households will happily marry members from non-Indo-Anglian households, provided the potential partner speaks good English and can fit into Indo-Anglian circles. Seen in this light, Indo-Anglians are India’s newest and fastest growing caste; and the only one where birth is not a necessary condition for inclusion. This is, in my view, hugely important, for this keeps the Indo-Anglian caste open to expansion from traditionally oppressed communities – OBCs, Dalits who have benefited from English education and exposure to westernised culture.
Are Indo-Anglian religious? In the traditional sense, no. They are not frequenters of temples, nor do they perform religious ceremonies. That said, they are what I call “FabIndia religious”, following soft cultural traditions, such as dressing up on occasions. They do have spiritual needs though, for they are a far lonelier and more emotionally overwrought community than many other Indian communities, thanks to their rootlessness, limited interaction with relatives, and dependence on their careers to derive their identity.
A considerable proportion of Indo-Anglians households see marriages between members of different communities (and castes). On the basis of anecdata I would hazard that a majority of the Indo-Anglian marriages are between the traditional upper castes. But they also have members from some dominant/upwardly mobile but historically lower castes. Once accepted into the Indo-Anglian fold, members fold their traditional caste identity into Indo-Anglian culture. Caste is rarely discussed amongst Indo-Anglians and few caste or religious conventions are followed.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நான் கொடுத்ததும் பத்திரிக்கையில் வந்ததுதான். உங்கள் செய்தியிலேயெர் உயர் சாதிகளில்ந்தான் திருமணம் செய்துகொள்வதாக இருக்கிறதே?
On Tue, Mar 6, 2018 at 7:49 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
நான் கொடுத்தது சான்றுடன் ஒரு பத்திரிக்கையாளர் செய்தி....உங்களுடையது????
On Tuesday, March 6, 2018 at 5:42:37 PM UTC-8, செல்வன் wrote:On Tue, Mar 6, 2018 at 5:18 PM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:A considerable proportion of Indo-Anglians households see marriages between members of different communities (and castes). On the basis of anecdata I would hazard that a majority of the Indo-Anglian marriages are between the traditional upper castes. But they also have members from some dominant/upwardly mobile but historically lower castes. Once accepted into the Indo-Anglian fold, members fold their traditional caste identity into Indo-Anglian culture. Caste is rarely discussed amongst Indo-Anglians and few caste or religious conventions are followed.
இதுதான் நீங்கள் சிலாகிக்கும் இந்தோ- ஆங்கிலியன்இவர்கள் வெளிப்படையாக சொல்கிறார்கள். மற்றவர்கள் சொல்லமாட்டார்கள்.--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
தீண்டாமை ஒழிக்க நாம் ஒவ்வொருவரும் என்ன செய்யலாம் ?
மக்கள் தொகையில் பெரும்பான்மை
கிறித்துவ, இஸ்லாமிய, இந்து, சீக்கிய,
உள்ளவர் 80% என்று வைத்துக் கொண்டால், அவற்றின் மதக்குருமார் தமது மதங்களைத் திருத்தி ஜாதி, மத, இனச்சகிப்புப் பண்பாடுகள் வளர்ந்தால், ஓரளவு தீண்டாமை குறையும்.
On Tuesday, March 6, 2018 at 1:18:03 PM UTC-8, தேமொழி wrote:கலப்பு மணத்தை அனைவரும் முன்னெடுங்கள் அல்லது அவ்வாறு செய்பவர்கள் வாழ்வில் குறுக்கிடாமல் இருங்கள்.கலப்பு மணங்கள் பெருகப் பெருக அடுத்த தலைமுறையினர் அதற்கடுத்த தலைமுறையினர் என தங்கள் பின்புலம் என்னவென்று, என்ன சொல்வது என்று சொல்லத் தெரியாமல் மறந்து ஒன்றாகிவிடுவார்கள்.இந்தக் கலப்புமண ஆதரிப்பு பெரியார் முன்னெடுத்த வழிதான்.ஆனால் தந்தையின் ஜாதி என்று குறிப்பிட்டு ஜாதி சான்றிதழ் வழங்காமல் முற்போக்காளர்கள் என்ற பிரிவாக மட்டுமே அடையாளம் கண்டு இவர்களுக்கு தனிச் சலுகைகள் வழங்கினால் இன்றைய நிலை மாறும்.***ஒரு அரசு மக்கள் நலனின் உண்மையான அக்கறை கொண்டு மாற்றம் விரும்பினால் அதற்கேற்ற வகையில் சட்டம் மூலமாக மாற்றம் கொண்டு வரலாம்.மாறாக, தனிமனித உரிமைகளில் தலையிட வழியில்லாத பொழுது சமுதாய அக்கறை கொண்ட கொள்கையை ஆதரித்தோ மக்களே விரும்பி ஏற்க ஊக்கமளித்தோ மாற்றம் கொண்டு வரலாம்.https://scroll.in/magazine/867130/indo-anglians-the-newest-and-fastest-growing-caste-in-india <<< இது ஒரு எடுத்துக்காட்டு. இக்கட்டுரை எனக்குப் பிடித்தது.An example for a a post-caste community
1.செல்வன், எனது அணுகுமுறை glass is half full என்ற வகையில் இருப்பது வழக்கம். முன்னர் இருந்ததைவிட இப்பொழுது கலப்புத் திருமணங்கள் நிகழ்கின்றன என்று சுட்டிக்காட்டப்பட்டிருந்தால் அது முந்தைய நிலையைவிட முன்னேற்றம். அதாவது 2000 ஆண்டுகள் இருந்ததில் ஒரு மாற்றம். முதல் தலைமுறை மாறினால் அடுத்தது தொடரும் என்ற கணக்கிடும் முறை. இவ்வாறு நடந்தால் அவர்கள் வாழ்க்கை முறையில் இந்த மாறுதல் வரவேற்கத் தக்கதாகவே இருக்கிறது என்று காட்டும் முறை.2.நான் சொன்ன காரணம் திரு புகாரியும், திரு. ஜெயபாரதன் ஐயாவும் எவ்வாறு சாதிகள் இந்தியாவில் படுத்தும் பாட்டை நீக்கலாம் ? அதற்கு என்ன வழி என்று விவாதித்தது எனது கவனத்தை கவர்ந்த பொழுது இருவருக்கும் பொதுவாக ஒரே பதிலாக முன் வைத்தேன், அதற்கு என் நினைவில் தங்கிய சான்றையும் கொடுத்தேன்.3.உங்களுடைய துண்டுப்பேப்பர் செய்திகளுக்கு போட்டோசாப் மதிப்புதான் இருக்கிறது, முழு சான்றும் இல்லை, அது அந்த செய்தியில் உள்ளவர்களின் கூட்டமா எனவும் தெரியாது. நான் கொடுத்த செய்தியிலேயே But they also have members from some dominant/upwardly mobile but historically lower castes என்பதும் சேர்ந்தே என் கண்ணில் பட்டது.________________________________________________________________Genetic Study Reveals Origin of India's Caste SystemBy Tia Ghose, August 8, 2013The caste system in South Asia — which rigidly separates people into high, middle and lower classes — may have been firmly entrenched by about 2,000 years ago, a new genetic analysis suggests.Researchers found that people from different genetic populations in India began mixing about 4,200 years ago, but the mingling stopped around 1,900 years ago, according to the analysis published today (Aug. 8) in the American Journal of Human Genetics.__________________________________________எனது அணுகுமுறையையும், காரணத்தையும், ஏரணத்தையும் அடுத்தடுத்து வரிசையாகக் கொடுத்துள்ளேன். நான் தவறான தகவல் கொடுத்து யாரையும் ஏமாற்றியதாகத் தோன்றவில்லை. அப்படித் தோன்றினால் அந்த இடத்தைக் காட்டவும்.
எதை ஆங்கிலேயர் 20ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் இந்தியாவில் செய்ய முற்பட்டு தோல்வியுற்றனரோ அதையே மீண்டும் மறுசுழற்சி செய்ய முற்படுவது அறிவுடமையாகாது.வங்காள மற்றும் மெட்ராஸ் மாகாணங்களில் முறையே வங்காளம் மற்றும் தமிழை ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு எழுதுவிக்க ஆங்கிலேயர் அக்காலத்திலேயே முயற்சி செய்தனர். இவ்விரு மாகாணத்தைச் சார்ந்த உள்நாட்டு மற்றும் ஆங்கிலேயே கல்வியாளர்களில் சிலரும் அத்தகையச் செயல் தாய்மொழி இலக்கணத்திற்குப் புறம்பாக அமையுமென்று எதிர்த்ததால் அக்கால ஆங்கிலேயே அரசாங்கம் இம்முயற்சியை கை விட்டது.மலாயா மற்றும் இந்தோனேசிய தீவுக் கூட்டங்களின் நிலை வேறு. மலாயாவை ஆண்ட ஆங்கிலேயருக்கு உள்நாட்டு மக்களிடையே மொழித்தொடர்பு ஒரு பிரச்சணையாக இருந்ததால் ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு மலாய் மொழி உச்சரிப்பை உருவாக்கி பயன்படுத்தினர். இதற்கு உறுதுணையாக இருந்தது கலிங்கத்திலிருந்து அழைத்து வரப்பட்ட ஆஸ்தான புலவர்தாம். அவர்களே மலாய் மொழி உச்சரிப்புக்கு ஏற்றவாறு ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு உயிர் எழுத்தும் மெய்யெழுத்துமாக தோற்றுவித்து மலாய் மொழிக்கு ஒர் புது எழுத்துருவம் கொடுத்தனர்.அவ்வாறு மலாயாவில் மலாய் மொழிக்கு அயலார் எழுத்துரு கொடுத்ததை இந்நாட்டு மாலாய்க்காரர் எதிர்க்காமல் போனதற்கு காரணம் மலாய் மொழி இலக்கிய இலக்கண வளம் நிறைந்தது அல்ல என்பதலாகும். மேலும், இந்தோனேசியாவில் இந்து இராசாங்கங்கள் கவிழ்ந்து 13ஆம் நூற்றாண்டு வாக்கில் இசுலாமிய ஆதிக்கம் தோன்றிய பிறகே அரேபிய எழுத்துக்களைக் கொண்டு 'ஜாவி' மொழியில் எழுதத் தொடங்கினர். தமிழ் பிராமி மற்றும் பிராகிருத மொழிகள் கொண்ட வரலாற்று கல்வெட்டுகள் இந்தோனேசிய தீவு கூட்டங்களிலும் மற்றும் மலாயாவிலும் கண்டெடுக்கப் பட்டுள்ளதால் இவ்வகை மொழி மாற்றங்கள் நன்கு அறியப்படும்.மு. கமலநாதன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
ஐயா,நீங்கள் கொடுத்துள்ள செய்தியில் நிறைய ”இருந்தால் ...... ஆனால்” என்று புரிதல்கள் இருக்கின்றன.19 ஆம் நூற்றாண்டில் Cullicut Pundit (யார் இவர்கள்? கல்கத்தா பண்டிதர்களா?) வந்ததற்கான சான்றைத் தேடுங்கள். கிடைத்தால் இங்கிடுங்கள். மலேசியரான உங்களுக்கு இது அறிந்துகொள்ள வேண்டிய விதயம். இவர்கள் வங்காளிகளாகக் கூட இருக்கலாம். ஒரிசா (ஒடியா மொழி பேசுபவர்) இராயல சீமா (தெலுங்கு) என்று நீங்களாக எப்படி முடிவுசெய்கிறீர்கள்? இதற்கும் சான்றுண்டா? (நானறிந்தவரை பகாசா மலேசியாவிலும், பகாசா இந்தொனேசியாவிலும் கலிங்கச் சொற்கள் மிகக் குறைவு அன்றேல் இல்லை. சங்கதச் சொற்கள் அங்கிருந்து வரத்தேவையில்லை. வேறிடங்களிலிருந்தும் வரலாம்.)கலிங்கப்பகுதிக்கும், தென்கிழக்கு ஆசியத் தீவுகளுக்கும் நெடுங்காலம் கடல்போக்குவரத்து இருந்தது என்பது சில வரலாற்று ஆசிரியர் நெடுங்காலம் சொல்லிவந்த கட்டுக்கதை. நான் கேள்விப்பட்டவரை கலிங்” என்று குறிப்பைத் தவிர வேறொன்றும் இதிலில்லை. இதற்கான ஆதாரத்தையும் நான் எங்கும் கண்டதில்லை. (ஒரு நூல், ஒரு கல்வெட்டு, ஒரு வெளிநாட்டார் குறிப்பு......) கலிங்கத்திற்கும் மலேசியாவிற்கும், இந்தொனேசியாவிற்கும் என்ன ஊடாட்டம் நடந்ததென்று வரலாற்று ஆதாரம் இருந்தால் கொடுங்களேன்?19 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேய அரசு இல்லை. கிழக்கிந்தியக் கும்பனி தான் இருந்தது. அவர்கள் பினாங்கையும், சிங்கப்பூரையும் தவிர்த்து அற்றை மலேயா நாட்டுக்குள் போனாரா? – என்பதும் பெரிய கேள்விக்குறி. கெடா அரசர்கள் அவர்களை பினாங்கை விட்டு நகரவிடவில்லை என்றுதான் கேள்விப்பட்டுள்ளேன். ஒருகாலத்தில் ஏதோவொரு குழப்பம் ஏற்பட்டு பினாங்கிலிருந்து நகர்ந்து அந்தமான் வந்தார் என்றுங் கேள்விப்பட்டுள்ளேன்.வரலாறு என்பது நம் கருதுகோள்களைச் சார்ந்ததில்லை. அதைச் சான்றுகள் கொண்டு நிறுவவேண்டும். கலிங்குகள் என்பார் தமிழரென்றே நான் எண்ணுகிறேன். (அதனுள் ஒரு பொருட்குழப்பம் இருக்கிறது.) அதை வேறொருமுறை விரிவாகப்பேச முயல்வேன். இப்பொழுது வேறு வேலைகளில் ஆழ்ந்துள்ளேன். நான் சொல்லுவதற்குக் காத்திராமல், நீங்கள் எங்களுக்குக் கற்றுக்கொடுங்கள்.அன்புடன்,உங்கள் மாணவன்,இராம.கி.
திரு. இராம. கி, ஐயா அவர்களுக்கு வணக்கம்.தென் கிழக்கு ஆசிய பகுதியிலிருக்கும் மலேசிய மற்றும் இந்தோனேசிய தீவுக் கூட்டங்களில் பெருவாரியாக பேசப்படும் மலாய் மொழி (இதில் வட்டார உச்சரிப்பு வழக்குகள் பல்வகை) வரலாறு என்பது இன்றைய மலேசிய மலாய் மொழி அறிஞர்கள் எழுதுவதைக் கொண்டு உண்மையை அறிய இயலாது. இவர்கள் உண்மை வரலாற்றை மறைத்து எழுதும் மனோபாவத்திற்கு வந்து விட்டனர்.ஆதாலால் தாங்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஆங்கிலேயர் மலாய் மொழி இலக்கனத்திற்கு விளக்கம் அல்லது முன்னுரை எழுதியதைப் படித்தறிய இவ்விடம் கோப்புகளையும் நூல்களையும் பதிவு செய்கிறேன்.
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: <a href="http://www.tamilheritage.org/how2contribute.html"
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: <a href="http://www.tamilheritage.org;/" rel="nofollow" target="_blank" onmousedown="this.href='http://www.tamilheritage.org;/';return true;" onclick="this.href='http://www.tamilheritage.org
தமிழ் அன்பர்களே,இம்மாதிரி 21 - ஆம் நூற்றாண்டில் விடுதலை நாட்டில் இழிவாக, மனித நீதியற்றுப் பைத்தியகாரர்தான் எழுதி, எழுதி வெறுப்பு விதைகளை இடுவார். இந்த இன வெறித்தனம் அறவே ஒழிக்கப்படவேண்டும்.
சி. ஜெயபாரதன்
++++++++++++++++++++++++
[தந்தை பெரியார்] பார்ப்பான் எதிலும் பார்ப்பானாகவே இருப்பான் - பெரியார்
////தோழர்களே! அடுத்தபடியாக ஆரியர்கள், பார்ப்பனர்கள் - இந்த நாட்டுக்காரர்கள் தான் என்று! சொல்ல முடியுமா? அல்லது நாம் தான் இந்த நாட்டுக் குடிமக்கள் அல்லவென்று சொல்லிவிட முடியுமா? பார்ப்பனர்களே எழுதி வைத்த சரித்திரங்களிலேயே எழுதியிருக்கிறார்களே,
On Mon, Mar 19, 2018 at 2:16 AM, Tthamizth Tthenee <rkc...@gmail.com> wrote:ஆரியர்களான நாம் வந்தேறிகள் தமிழர்கள் அல்ல என்று சொல்கிறார்களேஆமாம் நீங்கள் யாரை தமிழா என்று விளித்து விழித்திரு செயல்படு என்கிறீர்கள்?அன்புடன்தமிழ்த்தேனீ
ref: https://groups.google.com/d/msg/mintamil/jgKhZf9GxII/ters9XS-CgAJOn Saturday, March 17, 2018 at 11:40:56 PM UTC-7, செல்வன் wrote:திராவிடம் என்பது விந்திய மலைக்கு தெற்கே இருக்கும் நிலப்பரப்புதிராவிட மொழிகள் என்பவை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகியவைதிராவிடர் என்பது இந்த நிலப்பரப்பில் வாழ்ந்து இம்மொழிகளை பேசும் மக்கள்.இது நான் புரிந்துகொண்ட வரையறை. ( இது தவறு என்றால் சரியான வரையறை என்ன என கூறவும்.)இந்த வரையறையின்படி தமிழை தாய்மொழியாக கொண்ட பார்ப்பனர்கள் திராவிடர்கள் என்ற வரையறையுல் அடங்குவார்கள் என்பது சரியா, தவறா?---------------
ref: https://groups.google.com/d/msg/mintamil/_zScTn-ZtkM/GaW8uiZEDQAJபார்ப்பனர்களே எழுதி வைத்த சரித்திரங்களிலேயே எழுதியிருக்கிறார்களே, பார்ப்பனர்கள் இந்த நாட்டுக்குப் பிழைக்க வந்தவர்கள் என்று அவர்களே எழுதியிருக்கிறார்களே, ..............
---15-11-1953 இல் சென்னை வண்ணாரப்பேட்டையில் திராவிடர்கழகப் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் சொற்பொழிவு: "விடுதலை" 17-11-1953---------------
அன்புடன்
தமிழ்த்தேனீ
பார்ப்பனர்கள் இந்த நாட்டுக்குப் பிழைக்க வந்தவர்கள் என்று அவர்களே எழுதியிருக்கிறார்களே, திராவிட மக்களாகிய நாம்தான் இந்த நாட்டின் பூர்வீகக் குடிமக்கள், சொந்தக்கார மக்கள் என்று! ஆதலால் நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்துவிட்டதே! எங்கள் நாடு, எங்கள் மக்கள் கையில்தானே இருக்கவேண்டும். அப்படியிருக்க அந் நியர்கள் இங்கு வந்தவர்கள் - திராவிடர்கள் அல்லாத வர்கள்-தாங்கள் வேறு இனம், வேறு ஜாதி பிறப்பு என்று தங்களைத் தாங்களே சொல்லிக் கொள்ளுகிறவர்கள் நம்மை இழியர்கள், தகுதி திறமை அற்றவர்கள் என்று சொல்லி ஆதிக்கம் செலுத்துவது என்பது என்ன அர்த்தம்? ஆதலால் இந்த நாட்டுக்கு அந்நியர்கள், இந்த நாட்டை விட்டு வெளியேறட்டும் என்று சொல்லுகிறோம்.வெள்ளையன் இந்த நாட்டுக்கு அந்நியன் என்றால், இந்தப் பார்ப்பனர்களும் அந்நியர்கள் தானே. அவன் 200 300 ஆண்டு காலமாக இருந்த அந்நியன் என்றால், இந்தப் பார்ப்பனர்கள் 2000-3000 ஆண்டுக் காலமாக இருக்கிற அந் நியர்கள் தானே! ///
2018-03-04 7:29 GMT-05:00 தமிழ் ஓவியா <oviyat...@gmail.com>:
தந்தை பெரியார்
இந்தப்படி அதாவது எல்லா இடங்களிலும் எல்லாம் பார்ப்பனர்களாகவே இருப்பது என்பதான இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறதே, இதனால் என்ன கெட்டுவிட்டது என்று மக்கள் கேட்கலாம். இந்தப் பார்ப்பனர்கள் பதவிக்கு, அதிகாரத்துக்கு, ஆட்சிக்கு, ஆதிக்கத்துக்கு வந்தவுடன் என்ன கெடவில்லை? எது ஒழுங்காய் இருக்கிறது? எங்கே நாணயத்தைக் காணமுடிகிறது? அவ்வளவு கெட்டுப் போய்விட்டதே! நம்முடைய ராஜ்ஜியத்தில் தோழர் ஆச் சாரியார் அவர்கள் ஆட்சிக்கு வந்து இப்போது சுமார் 11/2 (ஒன்றரை) வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இந்த 11/2 வருடத்திய இவருடைய ஆட்சியில் என்ன பொது உரிமை ஏற்பட்டு விட்டது? அல்லது இந்த 11/2வருடம் இவருடைய ஆட்சியால் நன்மைக்குக் கேடான காரி யங்கள் நடைபெறாமல் போய்விட்டன என்று யார் சொல்ல முடியும்?தோழர் ஆச்சாரியார் அவர்கள் முதன் மந்திரியாக ஆனவுடன் மக்களுக்கு நீண்ட காலமாய்ப் பெருந் தொல் லையாக இருந்து வந்த உணவு கண்ட்ரோலை (கட்டுப் பாட்டை) எடுத்தார். நம்மைப் போன்றவர்களும் இது நல்ல காரியம் என்று ஆதரித்தோம். மக்கள் தங்களுக்கான கண்ட்ரோல்களை ஒழித்ததால் மகிழ்ச்சியடைந்தார்கள். நெசவாளிகளுக்குச் சில நன்மை செய்தார். தக்கப்படி செய்து கொஞ்சம் பெயர் கிடைத்தவுடன் அவருடைய பதவியும் நிலைத்துகொண்டது என்று தெரிந்ததும் என்ன செய்தார்?இந்த நாட்டை மனுதர்மத்திற்குக் கொண்டு செல்லும் ஆச்சாரியார் அவர்கள் மனதில் முடிவு கொண்டு அந்த மனு தர்மத்திற்கு என்ன பூர்வாங்க ஏற்பாடுகள், முதல் வேலைகள் செய்ய வேண்டுமோ அவைகளையெல்லாம் செய்யும் முறையில் உத்தியோகத்துறைகள் யாவும் பார்ப்பன மயமாக்கி விட்டார். அதுவும் நம் திராவிட ஆள்கள் உத்தியோகத்துறைப் பக்கம் திரும்ப முடியாதபடி கொஞ்சம் கூட நீதி நேர்மையில்லாத பார்ப்பனர்களையே எல்லாவற்றிற்கும் நியமித்தார். இந்த உத்தியோகத்துறை பார்ப்பனர்களின் மயமானதோடு மாத்திரமல்ல; படித்தால் தான் இந்தச் சூத்திரர்கள் உத்தியோகம் வேண்டும்; பதவி வேண்டும் என்று கேட்பார்கள். சூத்திரர்கள் படிக்கக்கூடாது என்று முடிவு செய்து, கல்வித்திட்டம் என்கிற பெயரால் வர்ணாசிரம புனர்நிருமாண முயற்சித் திட்டத்தைக் கொண்டு வந்துவிட்டார்.இந்தக் கல்வித் திட்டத்திற்கு எவ்வளவு பெரிய எதிர்ப்பு இருக்கிறது? ஆனால் இத்தகைய எதிர்ப்புகளைப் பற்றி தோழர் ஆச்சாரியார் அவர்கள் - ஜனநாயகத்தின் பேரால் ஆட்சி புரிகிறவர்கள் - கொஞ்சமாவது கவலை எடுத்துக் கொள்ள வேண்டாமா?கல்வித் திட்டத்தைத் தோழர் ஆச்சாரியார் அவர்கள் கொண்டு வந்தவுடன் முதன் முதலாக நான்தான் இந்தக் கல்வித் திட்டம் வருணாசிரமக் கல்வித்திட்டம்; இதை எதிர்த்து ஒழித்து ஆகவேண்டும் என்று எதிர்த்தேன். மக்களும் என்னை ஆதரித்தார்கள்; பல மாற்றுக் கட்சிக் காரர்களும், ஏன் - காங்கிரசிலே உள்ள பலரும் இந்தத் திட்டத்தை எதிர்த்தார்கள். அதோடு மட்டுமல்ல 10, 15 ஜில்லா போர்டு, சேம்பர்ஸ் முதலியவைகளும் பல, நகரத்து முனிசி பாலிட்டிகளும் கிராமப் பஞ்சாயத்துக்களும், ஆசிரியர்களும், கல்வித் துறையில் நிபுணர்கள் என்று பெயர் பெற்ற வர்களும் ஆக இப்படிப் பலரும், பலதரப் பட்டவர்களும், மாறுபாடு கொண்டவர்களும் எல்லோரும் ஒரு சேர இந்த வருணாசிரம புனர் நிருமாணக் கல்வித் திட்டத்தை எதிர்த்தனர். உள்ளபடியே ஜனநாயகத்தின். பேரால் ஆட்சியிலே இருக்கிறவர்கள் என்ன செய்ய வேண்டும்? ஆனால் இத்தகைய எதிர்ப்புகள் எதைப் பற்றியும் சிறிதுகூட லட்சியம் செய்யாமல், யார் என்ன சொன்னாலும் இதைக் கொண்டு வரவேண்டும் என்று எனக்குத் தோன்றியது, கொண்டு வந்துதான் தீருவேன். இந்த வருடம் கிராமத்தில் தான் இந்தக் கல்வித் திட்டம் அமலிலிருக்கும். அடுத்த வருடம் நகரத்துக்கும் சேர்த்து இந்தக் கல்வித்திட்டம் விரிவாக்கப்படும் என்பது போலெல்லாம் பேசி வருகிறார். இதுதான் நியாயமா? அல்லது இதற்குப் பெயர்தான் ஜனநாயக ஆட்சியா?என்னய்யா இவ்வளவு அக்கிரமம் செய்கிறாரே! என்று மேலே சொன்னால், அவர்கள் சொல்லுகிறவர்களைப் பார்த்து, உங்களுக்கு நன்றியே இல்லை, அவர்மீது குறை சொல்லுகிறீர்களே என்கிறார்கள். இப்படி இருக்கிறது.இந்தக் கல்வி திட்டம் என்பது என்ன? இந்தத் திட்டத் தினுடைய அடிப்படை என்ன என்று நீங்கள் கருது கிறீர்கள்? இந்தக் கல்வித் திட்டம் என்பது வருணாசிரம புனர் நிருமாணப் பாதுகாப்புத் திட்டமா அல்லவா? அதாவது இந்தக் கல்வித் திட்டத்தின்படி ஒவ்வொரு வகுப்புப் பிள்ளைகளும் நாளைக்கு ஒரு வேளை படித்துவிட்டு, மீதி நேரத்தில் அவரவர்களின் வருண ஜாதித் தொழிலைப் பழகவேண்டும் - செய்யவேண்டும் என்பதாகச் சொல்லு கிறது. ஜாதியின் பேரால் உடலுழைப்பு, அடிமை வேலை செய்கிறவர்கள் யார்? சூத்திரர்கள் என்று சொல்லப்படுகிற நாம்தானே! ஆகவே நாம் எல்லோரும் செய்ய வேண்டியது, அதாவது நாவிதர் மகன் சிரைப்பது, வண்ணார் மகன் வெளுப்பது, குயவர் மகன் சட்டிப்பானை செய்வது, வேளாளன் மகன் மாடுமேய்ப்பது, பன்னியாண்டியின் மகன் பன்றி மேய்ப்பது ஆகிய வேலைகளாகும். இப்படி நம் ஜாதி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தொழில், வேலை இருப்பது போலவே பார்ப்பன ஜாதிக்கும் ஒரு தொழில் செய்ய வேண்டும் என்று சொல்லுகிறவர்கள் - அப்படியே அவர்களும் செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் செய்வதில்லை; நம்மைச் செய்யச்சொல்லுகிறார்கள். தங்கள் ஜாதித்தொழில் தங்களுக்கு வேண்டாம்; எங்களுக்கு உத்தியோகம்தான் வேண்டும் என்கிறார்கள்.என்னய்யா! நாங்கள் மட்டும் ஜாதித்தொழிலைச் செய்து கொண்டே இருக்க வேண்டும். பார்ப்பனர்கள் மட்டும் எல்லாப் பதவி, உத்தியோகங்கள், அதிகாரங்கள் பெற்று மேலுக்குமேல் போய்க்கொண்டே இருக்க வேண்டுமா? இது என்ன நியாயம்? என்று கேட்டால், சே! சே! நீ பேசுவது வகுப்புவாதம் என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிடுகிறார்கள். இதுதான் ஆட்சியாக, அரசாங்க மாக, சுதந்தரமாக, ஜனநாயகமாக, குடி அரசாக, கீதையாக, பாரதமாக, ராமாயண மாக, கடவுள் பக்தியாக, ஆஸ்திகமாக, மதமாக இருக்கிறது. இந்த அக்கிரமமான, அநியாயமான நிலைமை கூடாது என்றால், அது வகுப்புத் துவேஷமாக, தேசத்துரோகமாக, நாஸ்திகமாக இருக்கிறது. அதாவது அப்படிச் சொல்லப் படுகிறது. இதுவா முறை? மக்கள் யோசித்துப் பார்க்க வேண் டும்; எவ்வளவு வேதனை தரும்படியான நிலைமையில் இன்றைய ஆட்சியும் அரசாங்கமும் அதனுடைய ஆட்சியும்! தோழர்களே! மறுபடியும் சொல்ல ஆசைப்படுகிறேன்; எனக்கும் தோழர் இராசகோபால ஆச்சாரியார் அவர்களுக்கும் சொந்த முறையில் ஏதும் பகைமையோ, விரோதமோ, பொறாமை உணர்ச்சி கொண்டோ நான் சொல்லவில்லை; மற்றவர்கள் வேண்டுமானால் அத்தகைய உணர்ச்சி கொண்டவர் களோ என்னவோ! என்னைப் பொறுத்தவரையில் இன்னும் அவர் தனிப்பட்ட முறையில் என் நண்பர்தான். நாளைக்கு வேலை போய்விட்டால் அவர் என் வீட்டுக்கு வருவார். நானும் மாலை போட்டு வரவேற்பேன். ஆதலால் ஆச்சாரி யாரிடத்தில் நான் ஏதோ கசப்போ, காழ்ப்போ வைத்துக்கொண்டு பேசவில்லை.தோழர் ஆச்சாரியார் அவர்கள் அவருடைய இனத்துக்கு ஆக, பிறந்த பார்ப்பன இனத்துக்காகப் பாடு படுகிறார். அவருக்குத் தெரியும், இன்று நாட்டிலே வளர்ந்து வருகிற உணர்ச்சி தம்முடைய சமுதாயமான பார்ப்பன சமுதாயத்துக்கு விரோதமானது; ஆதலால் இந்த உணர்ச் சியை - இலட்சியத்தை - ஒழித்துக்கட்டித் தம்முடைய இனத்தைக் காப்பாற்றுவதற்கு ஆக அவர் தீவிரமாக முயற்சி செய்கிறார். நமக்குத் தோழர் ஆச்சாரியார் அவர்கள் எதிரியாய் இருந்தாலும், பார்ப்பனர்களுக்கு - அந்தச் சமுதாயத்துக்கு அவர் ஒரு அவதாரபுருஷர் என்று கருதுகிறார்கள். அப்படி அவர், அவருடைய இனத்துக்கு ஆகப் பாடுபடுகிறார். நாம் நம் இனத்துக்காகப் பாடுபடுகிறோம். அவருடைய பார்ப்பன இனத்தின் வளர்ச்சியும், வாழ்வும், நம் இனத்தினுடைய தாழ்விலும் அடிமையிலுந்தான் ஏற்பட முடியும். அதனால் தான் அவர் இந்தப்படி செய்கிறார். ஆனால் அதே நேரத்தில் நம்முடைய திராவிட இனத்தின் வளர்ச்சியும் வாழ்வும் பார்ப்பானை நீக்கினால் தான் நம் அடிமைத்தனமும், தாழ்வும் ஒழியும். ஆதலால்தான் நாம் அடிமையும், தாழ்வும் ஒழிய வேண்டும் என்பதற்கு ஆகத்தான் நாம் பார்ப்பன துவேஷிகளாக, பார்ப்பானே வெளியேறு என்று முழங்கு பவர்களாக இருக்கிறோம்.தோழர் ஆச்சாரியார் அவர்கள் நாம் ஏதோ உடலு ழைப்பு செய்வதைக் கேவலமானது, கீழானது என்பதாக நினைத்துக் கொண்டிருக்றோம் என்று கருதுகிறார் போலும். பல இடங்களில் பேசுகிற போது சொல்லுகிறார்: உடலுழைப்பு வேலை செய்வது கேவலமில்லை; அதுதான் உயர்ந்தது என்பது போன்ற ரகத்தில்.நான் சொல்ல ஆசைப்படுகிறேன்: நாங்கள் ஒன்றும் உடலுழைப்பு வேலை கேவலமானது என்று கருதவில்லை; ஆனால் அந்த உடலுழைப்பு வேலையை நாங்கள் மட்டுமே ஏன் செய்யவேண்டும்? எல்லோரும் விகிதாசாரப் படி செய்ய லாமே என்கிறோம்! அப்படியில்லாமல் நாங்கள் மட்டுந்தான்-திராவிட மக்கள் மாத்திரந்தான் இந்த உடலுழைப்பு வேலைகளைச் செய்ய வேண்டும்; பார்ப் பான் இவையென்றுமே செய்யாமல் உட்கார்ந்த இடத்தில், நகத்தில் அழுக்குப் படாமலேயே உயர்வாழ்வு வாழுவது என்பது என்ன நியாயம்? என்று கேட்கிறோம். உடலு ழைப்புச் செய்வது என்பது மேல் கீழ் என்கிற தன்மையில் தான், அதாவது கீழ்சாதிக்காரர்கள் என்பதாக மதத்தின் பேரால், கடவுளின் பேரால் சாஸ்திரத்தின் பேரால் ஆக்கப் பட்டவர்கள் என்பவர்கள் தான் செய்ய வேண்டும். அந்தப்படி அவர்கள் செய்வதாலேயே அவர்கள் கீழ்சாதி மக்கள் என்பதான அமைப்பு முறை, சமூக முறை இருக்கிறதே, அதைத்தான் நாங்கள் ஆட்சேபிக்கிறோம்; கண்டிக்கிறோம்; எதிர்க்கிறோம்; ஒழித்துக்கட்ட வேண்டும் என்று கூறுகிறோம். இதைப் புரிந்துகொள்ள வேண்டும். நாங்கள் எந்த வேலை செய்வதையும் இழிவானது என்றோ, கீழானது என்றோ கருதவில்லை, ஆனால் நீங்களும் செய்யுங்களேன், உங்கள் விகிதாசாரப்படி!தோழர்களே! அடுத்தபடியாக ஆரியர்கள், பார்ப் பனர்கள் - இந்த நாட்டுக்காரர்கள் தான் என்று! சொல்ல முடியுமா? அல்லது நாம் தான் இந்த நாட்டுக் குடிமக்கள் அல்லவென்று சொல்லிவிட முடியுமா? பார்ப்பனர்களே எழுதி வைத்த சரித்திரங்களிலேயே எழுதியிருக்கிறார்களே, பார்ப்பனர்கள் இந்த நாட்டுக்குப் பிழைக்க வந்தவர்கள் என்று அவர்களே எழுதியிருக்கிறார்களே, திராவிட மக்களாகிய நாம்தான் இந்த நாட்டின் பூர்வீகக் குடிமக்கள், சொந்தக்கார மக்கள் என்று! ஆதலால் நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்துவிட்டதே! எங்கள் நாடு, எங்கள் மக்கள் கையில்தானே இருக்கவேண்டும். அப்படியிருக்க அந் நியர்கள் இங்கு வந்தவர்கள் - திராவிடர்கள் அல்லாத வர்கள்-தாங்கள் வேறு இனம், வேறு ஜாதி பிறப்பு என்று தங்களைத் தாங்களே சொல்லிக் கொள்ளுகிறவர்கள் நம்மை இழியர்கள், தகுதி திறமை அற்றவர்கள் என்று சொல்லி ஆதிக்கம் செலுத்துவது என்பது என்ன அர்த்தம்? ஆதலால் இந்த நாட்டுக்கு அந்நியர்கள், இந்த நாட்டை விட்டு வெளியேறட்டும் என்று சொல்லுகிறோம்.வெள்ளையன் இந்த நாட்டுக்கு அந்நியன் என்றால், இந்தப் பார்ப்பனர்களும் அந்நியர்கள் தானே. அவன் 200 300 ஆண்டு காலமாக இருந்த அந்நியன் என்றால், இந்தப் பார்ப்பனர்கள் 2000-3000 ஆண்டுக் காலமாக இருக்கிற அந் நியர்கள் தானே!வெள்ளைக்கார அந்நியன் 6000 மைலுக்கு அப்பால் வெகுதூரத்தில் இருந்ததால், தன் ஆதிக்கத்தைக் காப் பாற்றிக் கொள்ள, இந்த நாட்டு மக்களை அடக்கி வைத்திருந்தான் என்றாலும் நம்மை மனிதனாக நடத் தினான். நம் ஆட்களிடம் சாப்பிட்டான்; நம் ஆட்களைத் தொடமாட்டேன் என்று சொல்லவில்லை. இன்னும் பறையர்கள் என்று இந்தப் பார்ப் பனர்களால் அழைக் கப்படுகிற மக்கள்தானே அவனுடைய சமையல்காரர்களாக பட்லர்களாக இருந்தார்கள்?ஆனால் இங்கே இருக்கிற அந்நியனாகிய இந்தப் பார்ப்பன அந்நியன் நம்மைத் தொடக்கூட மாட்டேன் என்கிறானே! தொட்டால் தீட்டு என்கிறானே! நான் முகத்திலே பிறந்த முதல் ஜாதி மனிதன்; நீ காலிலே பிறந்த கடை ஜாதி மகன் என்கிறானே! நம் மக்கள் தலை யெடுக்கவிடாமல் எல்லாத் துறையிலேயும் நம்மை அடக்கி, ஒடுக்கி, அடிமைப்படுத்தி, அதற்கேற்ற முறை களையே ஆட்சி, சட்டம், அரசாங்கம், மதம், கடவுள் என்பவைகளாக வைத்திருக்கிறானே! ஆதலால் இப்படிப் பட்ட அந்நியனை எப்படி வெளியே துரத்தாமல் இருக்க முடியும்?இந்த அந்நியர்களை எப்படி வெளியேற்றுவது என் கிறீர்களா?வெள்ளைக்கார அந்நியன் எப்படி வெளியேற்றப்பட் டான்? தண்டவாளத்தைப் பெயர்த்தார்கள்; ரயிலைக் கவிழ்த்தார்கள்; தந்திக் கம்பியை அறுத்தார்கள்; போஸ் டாஃபீசுக்களைக் கொளுத்தினார்கள்; அதிகாரிகளைக் கொன்றார்கள்; முகத்தில் திராவகத்தை ஊற்றினார்கள்! இவைகள் எல்லாம் பார்ப்பான் வகுத்துக் கொடுத்த திட்டங்கள் தானே!இப்படிப்பட்ட காரியங்களால்தான் வெள்ளைக்கார அந்நியன் வெளியேறினான் என்று காங்கிரசுக்காரர்களும், பார்ப்பனர்களும் சொல்லுகிறார்கள். அவனும் இதை ஒப்புக் கொண்டதன் அடையாளமாகவோ என்னவோ இந்தக் காரியங்களுக்கு அப்புறம் போய்விட்டான்.ஆதலால் வெள்ளைக்கார அந்நியனை வெளியேற்று வதற்கு ஆக என்னென்ன காரியங்களைச் செய்தார்களோ அப்படிப்பட்ட காரியங்களையெல்லாம் இந்தப் பார்ப்பன அந்நியனை வெளியேற்றுவதற்குச் செய்துதானே தீர வேண்டும்? ஆனால் நாங்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல, அவர்கள் மாதிரியே திருப்பிச் செய்வதற்கு! தண்ட வாளத்தைப் பிடுங்கியதிலும், ரயிலைக் கவிழ்த்ததிலும், தந்திக் கம்பியை அறுத்ததிலும் போஸ்டாஃபீசைக் (அஞ்சல் நிலையத்தை) கொளுத்தியதிலும் யாருக்கு நட்டம்? வெள்ளைக்கார அந்நியனுக்கா? இல்லையே! நமக்குத் தானே! நம் பொருள்கள் தானே நட்டமடைந்தன? ஆதலால் நாங்கள் அதுபோல நமக்கு நாமே நட்டத்தைத் தேடிக்கொள்கிற மாதிரி நடந்துகொள்ளவே மாட்டோம். அக்கிரகாரத்தின் பக்கமேதான் எங்கள் பார்வை திரும்பும். ஆகவே, தோழர்களே இன்று சமுதாயத் துறையில், அரசியல் துறையில் நமக்குக் கேடாக இருப்பது இந்தப் பார்ப்பனர்கள்தான்.பார்ப்பனர்களும் முடிவுகட்டிக் கொண்டார் கள், இரண்டி லொன்று பார்த்துவிடுவது என்று. ஆச்சாரியார் அவர்களே சொல்லிவிட்டார், இப்போது நடைபெறுகிறது தேவ- அசுர போராட்டம் என்று. அப்படியென்றால் என்ன? ஆரிய - திராவிடப் போராட்டம் இராமாயணம் போல் துவங்கி விட்டதென்று தானே பொருள்?இதைப் பார்ப்பனர்கள் நன்றாய் உணர்ந்திருக்கிறார்கள். பெரிய பெரிய அறிவாளிப் பார்ப்பனர்களில் இருந்து சாதாரண சவுண்டிப் பார்ப்பனர்கள் வரை நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். ஆனால் நம்மவர்கள் சிலர்தான் இதை இன்னும் உணராமல் இருக்கிறார்கள். உணரவில்லை என்பதோடு, நாம் செய்கிற இந்தக் காரியம் தப்பு என்றே சொல்ல வந்துவிட்டது ஒரு கோஷ்டி!நாம் இப்போது செய்கிற இந்தக் காரியம் நம்முடைய சொந்தத்துக்காகவா? அல்லது நம்முடைய சொந்த சுயநல, சுயவாழ்வு, சுயலாபத்துக்காகவா செய்கிறோம்? எல்லாத் திராவிட மக்களுக்கும் சூத்திரர்களுக்கும் தாசி மக் களுக்கும் பறையர் சக்கிலிகளுக்கும் சேர்த்துத்தானே செய்கிறோம்? நாளைக்குச் சூத்திரன் என்ற பட்டம் போனால், எனக்கு மட்டுந்தானா போகும்? அல்லது சூத்திரன் என்று இருப்பது எனக்கு மட்டுந் தானா? எல்லோருக்கும் சேர்த்துத்தானே போகும்? இதைத் திராவிட மக்கள் நன்றாக உணர வேண்டும்.இன்று தோழர் ஆச்சாரியார் அவர்கள் பாடுபடுகிறார் என்றால், எதற்கு ஆகப்பாடு படுகிறார்? அவருடைய சொந்தத்துக்கா? அவருக்கு ஏதோ இப்போது பல லட்சம் ரூபாய் இருக்கிறது என்கிறார்கள். ஆதலால் பணம் வேண்டும் என்பதற்காகப் பதவியில் இல்லை. அது போலவே அவர் பல பெரிய பெரிய பதவிகளில் எல்லாம்-கவர்னர்-ஜெனரல்-பதவிகளில் எல்லாம் இருந்திருக்கிறார். ஆதலால் இது அவரைப் பொறுத்தவரையில் சாதாரணப் பதவிதான். அதுபோலவே தன்னுடைய பிள்ளைகள், குடும்பம் முதலியவைகளுக்குச் சேர்த்து வைக்க வேண் டும் என்ற கருத்திலும் அல்ல அவர் பதவியிலிருப்பது.அவருடைய மந்திரிப் பதவிக்கு எவ்வளவு எதிர்ப்பு? என்றைக்குச் சாயுமோ என்கிற நிலையும் இருந்தாலும் இவைகளையெல்லாம் சமாளித்துக் கொண்டு உடும்புப் பிடியாய் இருக்கிறார் என்றால், எதற்கு? அவர் தன் இனத்தைக் காப்பதற்கு; பார்ப்பன சமுதாயத்தின் பாது காப்புக்கு ஆகத்தான். தாம் (பதவியில்) இருக்கிறதுக்குள்ளே எல்லா இடத்திலும் பார்ப்பனர்களை நிரப்பிவிடவேண்டும். சூத்திரர்களைத் தலையெடுக்கவிடாமல் அழுத்திவிட வேண்டும் என்கிற எண்ணத்தின் பேரிலேயே அவர் பதவியில் இருக்கிறார். இந்தப் புத்தியும், உணர்ச்சியும் இன வெறியும் நமக்குள் இல்லையே! அவர் எப்படிப் பார்ப்பன இனத்தின் நன்மைக்கு ஆகப் பாடுபடுகிறாரோ, அது மாதிரி நம்மவர்கள் பாடுபட முன்வர மாட்டேன் என் கிறார்களே!நமக்கு இன உணர்ச்சி கட்டுப்பாடு இருந்திருக்குமே யானால் இந்த ஆச்சாரியார் தானாகட்டும், அல்லது பார்ப்பனர்கள் தானாகட்டும் இவ்வளவு மேலே போயிருக்க முடியுமா? நமக்கு இன உணர்ச்சி அத்தகைய அறிவு இல்லை யென்பதாலேயே நாளுக்கு நாள் அவர்கள் மேலே மேலே போகிறார்கள்.தோழர்களே! காந்தியார் எப்பேர்ப்பட்டவர்; எவ்வளவு பெரியவர் என்று புகழப்பட்டவர்; அந்தக் காந்தியார் இல்லா விட்டால் இந்தப் பார்ப்பனர்கள் எங்கோ கிடந்திருப் பார்கள். இவர்களையெல்லாம் தூக்கி நிறுத்தி ஆளாக்கி, அதி காரத்தையும் இவர்கள் கையிலே வாங்கிக் கொடுத் தாரே, காந்தியார்! அவர் கொஞ்சம் பார்ப்பனருக்கு எதி ராகச் சொன்னார் (அதாவது பார்ப்பனர்கள் காந்தியாரிடம் போய் எங்கள் பிள்ளைகளுக்குப் படிக்க இடம் கொடுக்கமாட்டேன் என்கிறார்கள் - என்பதாகப் புகார் செய்தபோது, காந்தியார், நீங்கள் எல்லாரும் பிராமணர்கள்; கடவுளைத் தொழப் போங்கள்; அவர்கள்தான் படிக் கட்டுமே, என்று சொன்னார்.) என்ற உடனேயே ஒரு பார்ப்பான், பார்ப்பன இனத்துக்கு அவர் செய்த நன்மை, தேடித்தந்த உயர்வை யெல்லாம் கூட மறந்து, சுட்டுத் தள்ளி விட்டானே! நாம் படிக்கவே கூடாது என்ற சட்டம் சூழ்ச்சி செய்து விட்டாரே ஒரு பார்ப்பான்! இந்த அளவுக்கு அவர்களிடம் , பார்ப்பனர்களிடம் இன உணர்ச்சியும், வெறியும் இருக்கின்றன.நாம் யாரையும் சுட வேண்டாம். இனத்தைக் காட்டிக் கொடுத்துப் பிழைக்காமலாவது - நாம் செய்வதை கெடுக்காமலாவது இருக்கலாமல்லவா?
பார்ப்பான் எதிலும் பார்ப்பானாகவே இருப்பான்
--நாமும் இத்தனை நாட்களாகப் பார்க்கிறோம்! பார்ப்பனர்களில் எத்தனையோ கொள்கைகள் பேசு பவர்கள், புரட்சிக்காரர்கள் பெரிய, பெரிய தலைவர்கள் என்பவர்களை யெல்லாம் பார்த்திருக்கிறோம். இவர்களில் எந்தப் பார்ப்பானாவது எந்தப் பார்ப்பானையாவது எதிர்த்து இருக்கிறானா? எந்தக் கட்சியில் பார்ப்பான் இருந்தாலும் பார்ப்பான் சமுதாய விஷயத்தில் எல்லாப் பார்ப்பனர்களும் ஒரே கட்சிக்காரர்கள்தானே!தேவதாசி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று அந்த இனத்தைச் சேர்ந்த ஒரு அம்மையார் (டாக்டர் முத்து லெட்சுமி ரெட்டி) மசோதா கொண்டு வந்தபோது, சத்தியமூர்த்தி அய்யர் என்கிற காங்கிரசு அரசியல் பார்ப்பனர் எவ்வளவு தூரம் எதிர்த்தார் தெரியுமா? தேவதாசி ஒழிப்புச் சட்டம் வந்ததால் இந்து மதம் ஒழிந்துவிடும்; கடவுள் போய்விடும் என்றெல்லாம் சொன்னார். இன்னும் அந்தத் தொழில் புண்ணியமான தொழில் என்றார். அந்த அம்மாள் சாமர்த்தியசாலி என்பதால், அப்படியானால் உங்கள் குலத்துப் (பார்ப்பன) பெண்களும் கொஞ்சம் இத் தொழிலைச் செய்யட்டுமே என்றார். உடனே அடங்கி விட்டார் சத்தியமூர்த்தி.இப்படிப் பார்ப்பனர்கள் தங்களுக்குத் தங்கள் பிழைப்புக்குச் சிறுகேடு , வசதிக்குறைவு வருவதானாலும் கூட எல்லோரும் ஒன்று சேர்ந்து கொண்டு கட்டுப்பாடாக எதிர்க்கிறார்கள். ஆனால் நம்மவருக்கு இந்த உணர்ச்சியே இல்லையே! செருப்பால் அடித்தாலும் ஸ்ரீ பாதம் சடகோபம் என் கிறார்களே!இன்று, திராவிட மக்களை அழித்து ஒழித்துக் கட்டுவதற்கு என்றே ஆட்சிப் பீடம் ஏறியிருக்கிற (இராச கோபால) ஆச்சாரியார் அவர்களைச் சுற்றிக்கொண்டும், அவருக்குத் ததாஸ்து பாடிக்கொண்டும் இருப்பவர்கள் எல்லாம் திராவிடர்கள் தானே! நம்மவர்களுக்குக் கேடு செய்து பிழைப்பவர்கள் பார்ப்பனர்களுக்குக் கையாளாய் இருப்பவர் எல்லாரும் திராவிடர் என்று சொல்லிக் கொள்ளுபவர்கள்தான்.இன உணர்ச்சியும், மானமும் நம்மவர்களுக்கு, நடை பெறுகிற இத்தனை அக்கிரமங்களைப் பார்த்த பிறகாவது புத்தி வர வேண்டாமா? இப்படியே இருந்தால் என்றைக்குத் தான் திராவிட மக்கள் முன்னேற முடியும்? என்றைக்குத் தான் நம்முடைய இழிநிலைமை ஒழியும்? எவ்வளவு கொடுமையும், அக்கிரமும் நடக்கிறது? இந்த அநியாயங் களைக் கண்டித்துச் சொல்ல நம்மில் ஒரு ஆள்கூட இல்லையே, திராவிடர் கழகத்தாரைத்தவிர! ஆகவே திராவிட மக்கள் இதை உணர வேண்டும்.---------------------------15-11-1953 இல் சென்னை வண்ணாரப்பேட்டையில் திராவிடர்கழகப் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் சொற்பொழிவு: "விடுதலை" 17-11-1953
--
---------------------------------------------------------------------------------------------------------------------
You received this message because you are a member of Google
Groups "Thanthaiperiyar".
Send your e-mails to: thanthaiperiyar@googlegroups.com
Group home: http://groups.google.com/group/thanthaiperiyar
unsubscribe e-mails to: thanthaiperiyar-unsubscribe@googlegroups.com
-------------------------------------------------------------------------------------------------------------------
Home Page: http://www.periyarkural.com
http://thanthaiperiyar.blogspot.com/
---
You received this message because you are subscribed to the Google Groups "தந்தை பெரியார்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thanthaiperiyar+unsubscribe@googlegroups.com.