கொலம்பஸ் மேற்குலகில் காலடி வைத்ததற்குப் பிறகு உள்ள குறுகிய வெகு சில நூற்றாண்டுகளே கொண்ட அமெரிக்க வரலாற்றை ஆராய்ந்தால், அதில் இனஅழிப்புகள், இனபேதங்கள் அடிப்படையிலான வன்முறைகள், அமெரிக்கப் பழங்குடியினரைக் கொன்றுகுவித்தது, கறுப்பின மக்களை அடிமைப்படுத்தியிருந்தது என்று தற்கால உலகம் விரும்பாத பல நடவடிக்கைகள் நிறைந்ததாக இருக்கும். இன்றும்கூட ஆங்காங்கு பல துயர்களையும், சிலமுறை காவல்துறையின் பொறுப்பற்ற நடவடிக்கையில் அகப்பட்டு உயிரை விடுவதையும் கறுப்பின அமெரிக்கர்கள் எதிர்கொள்கின்றனர். இருப்பினும், அவர்களது நீதிக்காகப் போராடும் கூட்டத்தினரும் எண்ணிக்கையில் அதிகரித்துத்தான் வருகின்றனர். சட்டத்தை மதிக்கும் அமெரிக்க மண்ணில் இனபேத நடவடிக்கைகளால் அநீதி இழைக்கப்படுவதைத் தடுக்க சட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனாலும் மக்களின் மனப்பான்மை உண்மையில் மாறிவிட்டதா?
அமெரிக்க வரலாற்றின் அடிப்படையில் பார்த்தால், ஆங்கிலேயர் விர்ஜீனியாவில் தங்கள் ஆட்சியை நிலைநாட்ட முற்பட்ட 1600 களிலேயே அமெரிக்கப் பழங்குடிப் பெண் ‘பாக்கஹாண்டஸ்’ என்பவரும், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ‘ஜான் ரால்ஃப்’ (Pocahontas and John Rolfe) என்பவரும் திருமணம் செய்து கொண்ட நிகழ்வும் அமெரிக்க வரலாற்றின் ஒரு பகுதியே. இடைப்பட்ட காலங்களில் இனக்கலப்பு உறவில் கறுப்பின தந்தைக்கோ, அல்லது கறுப்பின தாய்க்கோ பிறந்த குழந்தைகளுக்கு சுதந்திரம் கிடையாது, அவர்களும் அடிமைகளே என்ற நடைமுறையும் இருந்தது. இதற்கு அடிப்படைக் காரணங்கள் இரண்டு, ஒன்று இனக்கலப்பைத் தவிர்த்து தூய வெள்ளையின மேன்மையைக் காப்பாற்றும் நோக்கம். மற்றொன்று, அடிமைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் எண்ணத்தில் மறைமுகமாக இனக்கலப்பையும் எதிர்க்கும் நடவடிக்கை, அதாவது ஒரே கல்லில் இரண்டு மாங்காய். தனது உறவின் விளைவால் தனது குழந்தை அடிமையாகும் என்பதை, கறுப்பின அடிமைகளுடன் உறவு கொள்ள விரும்பும் வெள்ளையர் தவிர்த்துவிடுவார்கள் என்ற ஒரு எதிர்பார்ப்பு. இனக்கலப்பு உறவுகளைத் தடை செய்யும் சட்டங்களும் போடப்பட்டிருந்தும், அவற்றை அனைத்து மாநிலங்களும் சட்டமாக வைத்திருந்தாலும், அமெரிக்க அரசியல் சாசனத்திற்கு அவை எதிரானவை என்று சென்ற நூற்றாண்டில், 1967 ஆம் ஆண்டில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் அறிவித்து விட்டிருந்தது. அதன்பிறகு மாநிலச் சட்டங்கள் யாவும் செல்லுபடியாகாத, அமல்படுத்தமுடியாத வெற்றுச் சட்டங்களாக மாறிப்போயின.
தங்கள் அமெரிக்கக் கலாச்சாரத்தை ‘மெல்டிங் பாட்’ (melting pot), வேற்றுமைகள் மறைந்து ஒன்று கலந்துவிடும் நாடு, என்று பெருமையுடன் எண்ணிக்கொள்பவர்கள் அமெரிக்க மக்கள். அதிலும் இந்த நூற்றாண்டில் இருக்கும் புதிய இளைய தலைமுறையினரின் முற்போக்குப் பார்வையில் இருக்கும் அமெரிக்கா ஒரு முற்றிலும் மாறுபட்ட நாடுதான் என்பதை மறுப்பதற்கில்லை. சென்ற நூற்றாண்டில் வாழ்ந்தவர் கற்பனையிலும் காண வழியற்று இருந்ததை முறியடித்து ஒரு கறுப்பின மனிதரான ஒபாமாவை அமெரிக்க அதிபராக்கிவிட்டனர். இது போன்ற நடவடிக்கைகளால் இனவேற்றுமை குறித்த அமெரிக்க மக்களின் மனப்பான்மை மாறிவிட்டதா என்ற கேள்வியை மறுபரிசீலனை செய்யும் அளவிற்குச் சென்றவார சமூக வலைத்தள நடவடிக்கைகள் சில தலைகாட்டின.
அமெரிக்க ‘கேப்’ (GAP, Inc) நிறுவனமும், அதன் துணை ஆடை விற்பனை அங்காடிகளான ‘ஓல்ட் நேவி’ (OLD NAVY), மற்றும் ‘பனானா ரிபப்ளிக்’ (Banana Republic) ஆகியவையும் தற்கால அமெரிக்காவையும், அதன் பல்லின (diversity) மக்களையும் முன்னிறுத்தி விளம்பரங்களை வெளியிடுவதில் கவனம் செலுத்தி வருகின்றன. அந்த விளம்பரங்களில் வெள்ளையின மக்களுடன் கறுப்பின மக்களும் காட்சிப்படுத்தப்படுவது வழக்கம். சென்ற வார இறுதியில் ஓல்ட் நேவி (ஏப்ரல் 29, 2016) தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நன்றி கூறும் வகையில் விற்பனையில் 30% தள்ளுபடி அளிப்பதாக அறிவித்து தனது விளம்பரம் ஒன்றை ‘டிவிட்டர்’ சமூக வலைத்தளம் (twitter.com) வழியே வெளியிட்டது. அதில் இனக்கலப்பு உறவு கொண்ட இணையர், ஒரு வெள்ளையின ஆணும், கறுப்பின பெண்ணும் தங்கள் மகனுடன் இருப்பதாக, ஆண் தனது மகனைத் தோளில் சுமந்து, தனது துணைவியை அணைத்த வண்ணம் காட்சி தரும் ஒரு சிறிய மகிழ்ச்சியான குடும்பத்தைச் சித்தரிக்கும் படத்தை வெளியிட்டது.
ஆனால், அதைப் பார்த்த சமூகவலைத்தள உறுப்பினர்களில் சிலர் மகிழ்ச்சி அடைந்ததாகத் தெரியவில்லை. இனக்கலப்பைச் சித்தரிக்கும் படம் அவர்களுக்கு எரிச்சல் மூட்டியது. ஓல்ட் நேவி முற்றிலும் எதிர்பாராத வண்ணம் அதைச் சாடித் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்யத் துவங்கினர். ஓல்ட் நேவி இனக்கலப்பைச் ‘திணிப்பதாக’ அவர்கள் குற்றம் சாட்டினர். ‘மிசெஜினேஷன்’ (Miscegenation) என்று இனங்களைக் கலக்கும் சொல் பரவலாக பயன்படுத்தப்பட்டது. அத்துடன் ‘வெள்ளையினப் படுகொலை’ (white genocide), இயற்கைக்கு மாறான ‘மிருகத்தனமான’ (bestiality) உறவு ஆகியவற்றை ஓல்ட் நேவி ஆதரிப்பதாகக் கூறித் தங்கள் வெறுப்பை வெளிப்படுத்தினர். மேலும், இனி ஓல்ட் நேவி கடையை புறக்கணிக்கப் போவதாகவும் மிரட்டல்களும் வெளியிடப்பட்டன. இதற்கு, ஓல்ட் நேவி நிறுவனம் மறுமொழியைத் தவிர்த்து அமைதி காத்தது. பொதுவாக நிறுவனங்கள் இது போன்ற சூழல்களில் அமைதி காத்து எதிர்ப்பை முறியடிக்க முனைவது வழக்கம், இடைப்பட்ட நேரத்தில் மாறுபட்ட கோணம் கொண்டவர்கள் களத்தில் குதித்து வெறுப்பை வெளிப்படுத்துபவர்களைக் கண்டிப்பதும், நிறுவனத்தின் ஆதரவாளர்கள் எதிர் பதிவுகளை வெளியிடத் துவங்குவதும் பொதுவான நடைமுறைகளாக வழக்கத்தில் இருந்து வருகிறது.
இம்முறையும் அவ்வாறே நேர்ந்தது. ‘மிசெஜினேஷன்’ என்பது வழக்கத்தில் இருந்து ஒழிந்துபோன ஒரு சொல்லாக இருந்ததால் இக்கால மக்களுக்கு அது புதியதாக இருந்தது எனப் பலர் குறிப்பிட்டிருந்தனர். இச்சொல் எதிர்மறையான பொருளாக இனக்கலப்பு உறவை மறுக்கும் நோக்கத்தின் அடிப்படைக் காரணமாக இது கைவிடப்பட்டு வழக்கொழிந்துவிட்டது. அதற்குப் பதிலாக ‘இன்டெர் ரேசியல் மேரேஜ்’ , ‘மிக்செட் ரேஸ்’ (Interracial marriage, mixed race) போன்ற எதிர்மறைக் கருத்தை அறிவிக்காத சொற்களே தற்காலத்தில் வழக்கத்தில் உள்ளன. ஆனாலும், #Miscegenation என்ற ஹேஷ்டேக் குறியுடன் மிசெஜினேஷன் எதிர்ப்பு டிவிட்டரில் பரவத் தொடங்கியது. இனக்கலப்பு உறவுகளை ஆதரிப்பவர்கள் போட்டியாக ‘லவ் வின்ஸ்’ (#LoveWins) என்ற சொற்றொடருடன் அவர்களை எதிர்த்து மறுப்பு விடுத்தனர். அவர்களில் பலர் தங்கள் கலப்பினக் குடும்பப் படங்களை பெருமையுடன் பகிர்ந்து ‘இனப்பற்றுத் தீவிரவாதி’ (racist)-களின் நோக்கத்தை முறியடித்தனர். இந்த இணையவெளிப் போராட்டம் துவங்கி நடந்து கொண்டிருக்கும் இரண்டு நாட்களுக்குள் (மே 1, 2016 அன்று) புகழ் பெற்ற ‘மேசி’ (Macy) ஆடை விற்பனை நிறுவனமும் இதுபோன்று இனக்கலப்பு திருமணத்தை ஆதரிக்கும் படத்துடன் விளம்பரம் ஒன்றை டிவிட்டரில் வெளியிட்டது. அதில் ஒரு வெள்ளையின மணமகனும், கறுப்பின மணமகளும் மகிழ்ச்சியுடன் காட்சிதர, அவர்களுக்கு திருமணப் பரிசளிக்க மேசியில் பரிசு வாங்கக் கோரிக்கை வைத்தது அந்த விளம்பரம். இனப்பற்றுத் தீவிரவாதிகள் மேசி நிறுவனத்தையும் புறக்கணிக்கப் போவதாக மிரட்டத் துவங்கினர்.
வெள்ளையினம் உயர்வு என்ற கருத்து மாறாவிடினும், இனக்கலப்பைக் கண்டு கொதிப்படையும் மனநிலையைக் கொண்டவர்களாக இக்கால சமூகவலைத் தளங்களில் நேரம் செலவிடும் அமெரிக்க இளைய தலைமுறையினர் என்ற கேள்வி இந்த நிகழ்வுகளைப் பார்ப்பவருக்குத் தோன்றும். இனபேதம் காட்டுபவர்கள், மற்ற இனத்தை அலட்சியப்படுத்தும் வெள்ளையின மக்கள் என்றுமே உள்ளனர் என்பது உண்மையாயினும், இப்போக்கு குறையத் துவங்கிவிட்டது என்பதும் உண்மையே. இதற்குத் தரவுகளும், மாறிவரும் நிகழ்வுகளுமே சான்றுகள். மக்களின் மாறிவரும் இந்த மனப்போக்கினையே அமெரிக்க அரசின் சென்சஸ் மக்கட்தொகைக் கணக்கெடுப்பு (census.gov) நிறுவனத்தின் புள்ளிவிவரங்களும், ‘காலப் ஆய்வு நிறுவனம்’ (Gallup Organization), மற்றும் ‘பியூ ஆய்வு மையம்’ (Pew Research Center) ஆகியவற்றின் ஆய்வுகளும் கணக்கெடுப்புகளும் காட்டுகின்றன.
அமெரிக்க அரசின் சென்சஸ் மக்கட்தொகைக் கணக்கெடுப்பு:
அமெரிக்க அரசு ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் மக்கட்தொகைக் கணக்கெடுப்பை நடத்துவது வழக்கம். சமீபத்திய 2010 ஆண்டின் மக்கட்தொகைக் புள்ளிவிவர அறிக்கை தனக்கு ஒன்றுக்கு மேற்பட்ட இனப் பின்னணியோ, பல்லினப் பின்னணியோ இருப்பதாகக் குறிப்பிட்டுக் கொண்டவர்களின் விழுக்காடு, தங்களை ஓரினத்தின் கீழ் வகைப்படுத்திக் கொண்டவர்களைவிட விரைவில் அதிகரிப்பதைக் காட்டியுள்ளது. இவ்வாறு இனக்கலப்பு உள்ளவர்கள் என்றுக் குறிப்பிட்டுக் கொண்டவர்கள் 9 மில்லியன் மக்கள். அதாவது, அதற்கு முந்தைய பத்தாண்டு மக்கட்தொகைக் கணக்கெடுப்பு நிகழ்ந்த 2000 ஆண்டில் இருந்து 2010 இல் இவர்களின் எண்ணிக்கை 32% அதிகரித்துள்ளது என்கிறது தரவுகள். அதே கால கட்டத்தில், தங்களை ஏதோ ஓரினம் மட்டுமே என்று குறிப்பிட்டவர்களின் எண்ணிக்கை 9.2% விழுக்காடு மட்டுமே அதிகரித்துள்ளது. இனக்கலப்பு உறவுகள் ஏற்படாமல் 32% வளர்ச்சி நிகழ வாய்ப்பில்லை.
குறிப்பிடப்பட்ட 2000 ஆவது ஆண்டிற்கு முன்னர் இந்த வளர்ச்சியை ஒப்பிட நமக்கு வாய்ப்பில்லை. மாறிவரும் மக்களின் பின்னணியைக் கவனித்து, அதனை சரியாகக் கணக்கெடுக்கும் எண்ணத்தில் 2000 ஆம் ஆண்டுதான் மக்கட்தொகைக் கணக்கெடுப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட இனப் பின்னணியைக் கொண்டவர்களைக் கணக்கிடும் முயற்சியும் எடுக்கப்பட்டது. எனவே, பத்தாண்டுகளில் ஏற்பட்ட மாறுதலைத் தவிர, மேற்கொண்டு ஒப்பிட்டு ஆராயத் தேவையான தரவுகளும் கிடையாது. இனக்கலப்பில் எந்தெந்த இனங்களுக்குள் அதிகக் கலப்பு நிகழ்கிறது என்பதும் அமெரிக்க அரசு அறிய விரும்பும் தகவல்களில் ஒன்று. வெள்ளையின கறுப்பினக் கலப்புதான் முன்னணியில் உள்ளது, இது 134% (ஒரு மில்லியன் மக்களுக்கும் மேல்) அதிகரித்துள்ளது. அடுத்து வருவது வெள்ளையின ஆசிய இனக்கலப்பு, இது 87% அதிகரித்துள்ளது என்பது மக்கட்தொகைக் கணக்கெடுப்பு வழி தெரிய வருகிறது.
அமெரிக்காவின் பெரும்பான்மையான மாநிலங்களிலுமே இனக்கலப்பு திருமணப் பதிவு எண்ணிக்கைகளில் அதிகரித்தாலும் நியூயார்க், டெக்சாஸ், கலிபோர்னியா மாநிலங்கள் இனக்கலப்பு உறவுகளில் முன்னணியில் உள்ளன. டெக்சாஸ் போன்ற அமெரிக்காவின் தெற்கு மாநிலங்களில் வெள்ளையின – கறுப்பினக் கலப்போ, அல்லது வெள்ளையின – மெக்சிகோ ஹிஸ்பானிய இனக் கலப்போ அதிகரித்திருக்க, அமெரிக்க மேற்கு மாநிலங்களில், குறிப்பாக கலிஃபோர்னியாவில் வெள்ளையின – ஆசிய இன கலப்பின மக்கள் எண்ணிக்கையில் அதிகரித்துள்ளனர்.
காலப் ஆய்வு நிறுவன ஆய்வறிக்கை:
காலப் ஆய்வு நிறுவனம் 2013 ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கையொன்று 87% அமெரிக்க மக்கள் வெள்ளையின-கறுப்பின இனக்கலப்பு உறவுகளை ஆதரிப்பதாகவே காட்டுகிறது. இதே காலப் நிறுவனம் முதன்முதல் இந்த ஆய்வை முன்னெடுத்த 1958 ஆம் ஆண்டில் வெறும் 4% அமெரிக்க மக்கள்தான் வெள்ளையின-கறுப்பின இனக்கலப்பு உறவுகளை ஆதரித்திருக்கிறார்கள் என்ற தகவல், ஒரு அரைநூற்றாண்டில் அமெரிக்க மக்களின் மனப்பான்மை எந்த அளவு மாறிவிட்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது. இவர்களில் 30 வயதிற்குட்பட்ட இளைஞர்களில் 96% இனக்கலப்பு உறவுகளை ஆதரிப்பதும், முதியவர்கள் இவர்கள் அளவிற்கு ஆதரவளிப்பதில்லை (65 வயதுக்கு மேற்பட்டோர் தரும் ஆதரவு 70% மட்டுமே) எனத் தெரிய வந்துள்ளது. அத்துடன், அமெரிக்க மேற்குக் கடற்கரையோர மக்கள் இனக்கலப்பு உறவுகளுக்கு அதிக ஆதரவு (93%) தரும் முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
பியூ ஆய்வு மையத்தின் ஆய்வறிக்கை:
‘பியூ ஆய்வு மையம்’ (Pew Research Center) தரும் தகவலின்படி இனக்கலப்பு உறவுகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் 11% மட்டுமே. இனக்கலப்பு உறவுகள் நல்லதே என்று கருதும் பிரிவினருக்கும் (43%), இதைப்பற்றி எந்தக் கருத்தும் அற்ற பிரிவினருக்கும் (44%) இடையே அதிக வேறுபாடில்லை. மேலும் இந்த இரு பிரிவினரின் கூட்டுத்தொகையான 87% என்பதும் காலப் ஆய்வு நிறுவன ஆய்வறிக்கையின் 87% என்ற தகவலை ஒட்டியே அமைந்துள்ளது. பியூ ஆய்வு மைய அறிக்கையின்படி 2008 ஆண்டு நிகழ்ந்த திருமணங்களில் சுமார் 15% திருமணங்கள் இனக்கலப்பு மணங்கள், அவற்றிலும் அமெரிக்க மேற்கு மாநிலங்களில் இந்த இனக்கலப்பு திருமணங்கள் 20% (அதாவது ஐந்தில் ஒரு திருமணம்) வரை நிகழ்வதும் தெரிய வருகிறது.
வெள்ளையினத்தாய் – கறுப்பின தந்தை கொண்ட ஒபாமா, மேலும் இரண்டிற்கும் மேற்பட்ட இனக்கலப்பு கொண்ட கால்ஃப் விளையாட்டு வீரர் டைகர் வுட்ஸ், வெள்ளையின-ஆசிய இனக்கலப்பு என்றாலே முதலில் நினைவிற்கு வரும் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சுக்கர்பக் அவரது மனைவி பிரிசில்லா சென் போன்றவர்கள் அமெரிக்கர்களுக்கு இக்காலத்தில் சர்வசாதாரணமாகிப் போனாலும், இந்திய அமெரிக்கர்களும் இவர்களுக்குச் சற்றும் சளைத்தவர்கள் கிடையாது. சமீபத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளவர் எனக் கருதப்பட்ட நீதிபதி சீனிவாசன், தெற்கு கரோலினா மாநில ஆளுநர் நிக்கி ஹேலி, கலிஃபோர்னியாவின் அட்டர்னி ஜெனெரலாகப் பணியாற்றும் வழக்கறிஞர் கமலா ஹாரிஸ் ஆகியோர், அதாவது புகழ் பெற்ற வகையில் அறியப்படும் சில இந்திய அமெரிக்கர்களின் வாழ்க்கைத் துணைவர்களும் வேற்றினத்தைச் சேர்ந்தவர்களே.
ஹஃபிங்க்டன் போஸ்ட் (huffingtonpost.com) செய்தியாளர், அமெரிக்க மக்களின் மனப்பான்மை இவ்வாறிருக்க இனக்கலப்பு உறவுகளை வெறுக்கும் ஒருசிலர் இவ்வாறு வெளிப்படையாக இணையச் சமூகவலைத்தளங்களின் வழி தங்கள் வெறுப்பை வெளிப்படையாகக் காட்டுவதற்கு தற்பொழுது குடியரசுக் கட்சியின் அமெரிக்க அதிபர் தேர்தலின் வேட்பாளரான டானால்ட் ட்ரம்ப் போன்ற முன்மாதிரிகள் அவ்வாறு பொறுப்பின்றி பேசுவது காரணம் என்றும், அவரது பேச்சுக்களின் தாக்கத்தின் காரணமாக இவ்வாறு வெறுப்பவர்களும் தங்கள் வெறுப்பை வெளிப்படையாகக் காட்டுவதில் தவறில்லை என்ற மனப்பான்மையில் சொல்லியிருக்கிறார்கள் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். ஆனால், உண்மை இதற்கு மாறானது என்றே தோன்றுகிறது. அமெரிக்க நிறுவனங்கள் கறுப்பின மக்களை விளம்பரங்களில் காட்டுவதை கடந்த ஐம்பது ஆண்டுகளாகவே செய்து வருகின்றன. இந்தப் போக்கைத் துவங்கி வைத்தது பெப்சி நிறுவனம். இரண்டாண்டுகளுக்கு முன்னர் இனக்கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களையும், ‘ஓரினச் சேர்க்கை’ இணைகளையும்கூட தங்கள் விளம்பரத்தில் காட்டி அமெரிக்க தற்கால மக்களின் நடைமுறையைப் பிரதிபலிக்க சில அமெரிக்க நிறுவனங்கள் முயன்று வருகின்றன.
குறிப்பாக இரண்டாண்டுகளுக்கு முன்னர் ‘ஜெனரல் மில்ஸ்’ (General Mills) நிறுவனம் தனது ‘சீரியோஸ் காலை உணவு’ (Cheerios, breakfast cereal) விளம்பரத்திற்கு இனக்கலப்பு உறவுகொண்ட இணையர்களாக வெள்ளையின அம்மா, கறுப்பின அப்பா, அவர்களது மகளாகச் சிறுமி என்று ஒரு குடும்பத்தை தனது விளம்பரங்களில் அறிமுகப்படுத்தியது. அவற்றில் ஒரு விளம்பரம் புகழ்பெற்ற தேசிய கால்பந்து ‘சூப்பர் பவுல்’ (Super Bowl) விளம்பரமாகவும் வந்து அது அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. சிறுமிக்கு ஒரு சகோதரன் வரப்போவதை, தங்களுக்கு அடுத்து மகன் ஒருவன் பிறக்கப்போவதை மறைமுகமாக அந்த அப்பா சிறுமிக்கு தெரியப்படுத்த முயலும்பொழுது, விவரம் புரியாத அச்சிறுமி, அத்துடன் தனக்கு ஒரு நாய்க்குட்டியும் வேண்டும் என்று தந்தையிடம் ஒப்பந்த உடன்படிக்கை போடுவது வேடிக்கையாகவும், யாருக்கும் புன்முறுவலையும் வரச் செய்வதாகவும் இருக்கும் ஒரு காட்சி. இந்தக் காணொளி யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்ட பொழுது, இப்பொழுது ஓல்ட் நேவி எதிர்கொண்ட எதிர்ப்பு போலவே, வெறுப்பைக் காட்டும் கருத்துகள் குவிந்தன. வேறு வழியில்லாமல் ஜெனரல் மில்ஸ் நிறுவனம் காணொளிக்கு கருத்துரைக்கும் வாய்ப்பை முடக்கிவைக்க நேர்ந்தது. எனவே, இது ‘ட்ரம்ப் விளைவு’ அல்ல என்றே சொல்லலாம். அத்துடன் தரவுகள் தரும் தகவலின்படி இனக்கலப்பு உறவுகளுக்கு வெறுப்பைக் காட்டுபவர்களும் பெரும்பான்மை மக்கள் அல்ல என்பதும் தெளிவாகத் தெரிகிறது.
இதுபோன்ற வெறுப்பை வெளிப்படுத்தும் ஒரு முகமூடிக் கூட்டம் இணையவெளி சமூக வலைத்தளங்களில் தங்கள் கைவரிசையைக் காட்டிய வண்ணம் இருப்பது இப்பொழுதெல்லாம் வாடிக்கையாகிவிட்டது. இவர்களை முகமூடிக் கூட்டம் என்பதே சரி. இணையம் வழியாக மறைமுகமாகச் செய்யலாம் என்ற வாய்ப்பு இவர்களுக்குக் கொடுக்கும் துணிச்சல் மட்டுமே இதற்குக் காரணம். இது போன்ற வெறுப்பை உமிழ்பவர்கள் பெரும்பாலும் தங்கள் உண்மை அடையாளத்துடனும் செய்வதில்லை. அவ்வாறு செய்தால் அவர்களுக்கு வாழும் சூழ்நிலையில் எதிர்ப்பும், சிலருக்கு வாழ்வாதாரமான வேலையும்கூட பறிபோகும் நிலை ஏற்படும். எனவே, புனைப்பெயர் முகமூடியின் பின் ஒளிந்து கொண்டு, சமூக வலைத்தளங்களில் பொய்க்கணக்கு உருவாக்கி, தங்கள் உண்மைத் தோற்றத்தை வெளிப்படுத்தாது ஏதேனும் பொய் உருவப்படத்துடன், கபட உள்ளத்துடன், தங்களது கறைபடிந்த மனத்தின் எண்ணங்களை அரங்கேற்றுவார்கள் இத்தகைய மக்கள்.
இத்தகைய மனப்பான்மை ‘start airing dirty laundry in public’ என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும். ஓல்ட் நேவி விளம்பரத்தை எதிர்த்தவர்களின் பெயரையும் படத்தையும் பார்த்தாலே போதும் அவர்கள் கையாளும் முறை விளங்கும். குறிப்பிடத்தக்க வகையில் கண்டனம் தெரிவித்தவர்களில் ஒரு சிலரின் அடையாளங்கள், கல்ச்சுரல் காம்பாட், ஹைட்ரா, ஓமர், எம், ட்ரம்ப் ரையோட்டர், டிஜே, நார்டிக் நேஷன் என்பது போன்ற பொதுப்படையான புனைப்பெயர்களாகவே அமைந்திருந்தன. இத்தகையோரை அணுகவேண்டிய சரியான அணுகுமுறை இவர்களைப் புறக்கணிப்பது ஒன்றுதான். எதிர்ப்பை எதிர்கொள்ளும் நிறுவனங்கள் இத்தகைய எதிர்ப்புகளைச் சரியாகக் கையாள்வதாகத்தான் தோன்றுகிறது. காலத்திற்கு ஒத்துவராத இது போன்ற ஒரு பிற்போக்கு கூட்டம் கத்தும் வரை கத்திவிட்டு ஓயட்டும் என்று விட்டுவிடத்தான் வேண்டும். இனக்கலப்பு உறவுகளை எதிர்க்கும் போக்கினைக் கொண்டவர்களைக் கண்டு அதிர்ச்சியுறும் அதே நேரத்தில், அவர்களைக் கண்டிக்க கிளம்பிய கூட்டத்தையும் நாம் கணக்கில் கொள்ளத் தவறக்கூடாது.
_____________________________________
சான்றுகள்:
(1) Ad Sparks Anti-Miscegenation Backlash. In 2016; Walaa Chahine; 05/02/2016; http://www.huffingtonpost.com/walaa-chahine/old-navy-attacked-for-mis_1_b_9818188.html
(2) Racist Trolls Tear Apart Macy’s Interracial Ad Less Than One Week After Old Navy Debacle; Zak Cheney-Rice; 05/03/2016; http://mic.com/articles/142482/after-old-navy-debacle-macy-s-interracial-ad-sets-off-racist-trolls-on-twitter-once-again#.1W1Id3FBY
(3) In U.S., 87% Approve of Black-White Marriage, vs. 4% in 1958 – Ninety-six percent of blacks, 84% of whites approve; Frank Newport; 07/25/2013; Gallup-Report; http://www.gallup.com/poll/163697/approve-marriage-blacks-whites.aspx
(4) The Rise of Intermarriage Rates, Characteristics Vary by Race and Gender; Wendy Wang; 02/16/2012; Pew Research Center Social & Demographic Trends-Report; http://www.pewsocialtrends.org/files/2012/02/SDT-Intermarriage-II.pdf
(5) 2010 Census Shows Multiple-Race Population Grew Faster Than Single-Race Population; Census-Report: CB12-182; 09/27/2012; https://www.census.gov/newsroom/releases/archives/race/cb12-182.html
(6) Miscegenation;International Encyclopedia of the Social Sciences; 2008; http://www.encyclopedia.com/topic/Miscegenation.aspx
(7) Interracial marriage in the United States, https://en.wikipedia.org/wiki/Interracial_marriage_in_the_United_States
(8) Video – Cheerios’ first ever Super Bowl ad featuring interracial family Mail Online: https://youtu.be/5qkJHgkUzDA
(9) Video – Cheerios’ Just Checking: https://youtu.be/lYHoakrH0o0
பண்டைக்காலத்தில் “வணிகப் பெருவழிகள்” பல தமிழக நகர்களை இணைத்ததையும், குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையின் “பாலக்காட்டுக் கணவாய்” வழியாக மேற்குக் கடற்கரையில் தொடங்கும் வணிகப் பெருவழி ஒன்று இக்கால கோவை, கரூர், திருச்சி நகர்கள் வழியாக கிழக்குக் கடற்கரையின் பூம்புகார் துறைமுகம் வரை நீண்டிருந்தது எனநாம் அறிவோம். ஒரு வணிகப் பெருவழியாக நகர்களை இணைத்து வணிகர்கள் கூட்டம் தங்கள் பொருட்களைக் கொண்டு செல்ல உதவிய இத்தடம் ‘இராஜகேசரி பெருவழி’ எனவும் அழைக்கப்பட்டது. பாலக்காட்டுக் கணவாய் வழியாகச் செல்லும் இந்த பண்டைய வணிகப் பெருவழியே இன்றைய “தேசிய நெடுஞ்சாலை 67″ (NH 67- National Highway 67) எனப் பரிணாம வளர்ச்சி கூட அடைந்திருக்க வாய்ப்பிருக்கிறது.
சேர நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் இடையே அமைந்த இந்த வணிகப் பெருவழி போன்றே, பாண்டியநாட்டிற்கும் சேரநாட்டிற்குமான பெருவழி ஒன்று கம்பம் பள்ளத்தாக்கு வழியாக இடுக்கி செல்லும் பெரும் பாதையாக இருந்திருக்கிறது என “தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம்” அவர்கள் குறிப்பிட்டுள்ளார். இது இக்கால ஆரியங்காவு – செங்கோட்டைக் கணவாய் வழியாகக் கொல்லம் வரை அமைந்திருக்கக்கூடிய “தேசிய நெடுஞ்சாலை 744″ (NH – 744)யின் ஒரு பகுதியின் முந்தைய வடிவமாகவும் இருந்திருக்கக் கூடும். இது இக்காலத்தில் தென்காசியையும் கொல்லத்தையும் செங்கோட்டை கணவாய் வழி இணைக்கிறது. இக்கணவாய் பாலக்காட்டுக் கணவாய் போன்ற அகண்ட கணவாயன்று, குறுகிய ஒன்றே. தொடர்ச்சியாகஅமைந்து, கேரளாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் தொடர்பைத் துண்டிக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையில்கோவை அருகில் அமைந்த பாலக்காட்டுக் கணவாய், தென்காசி அருகில் செங்கோட்டைக் கணவாய் ஆகியவற்றைத் தவிர்த்து தெற்கே தென்குமரிக்கரையை ஒட்டி ஆரல்வாய் மொழிக் கணவாயும் அமைந்துள்ளது. இந்த மூன்று கணவாய்களும் பண்டையக்காலத்திலும் மேற்குக் கடற்கரையை அடைய உதவும் வணிகப் பெருவழியாகவே அமைய வாய்ப்புகள் இருந்திருக்கின்றன.
தொல்லியல் சான்றுகள்:
பண்டைய வணிகப் பெருவழிகள் இருந்ததையும் அவற்றின் அமைவிடங்களையும், அந்த வணிகப் பெருவழிகளில் இருந்த ஊர்களையும் சான்றுகளுடன் உறுதிப்படுத்த உதவுவது, அத்தடங்களிலும் ஊர்களிலும் அகழாய்வில் கிடைத்த அக்கால நாணயங்கள், வணிகப் பொருட்கள் போன்ற தடயங்களே.
கோயம்புத்தூர் அருகில், பண்டைய வணிகப் பெருவழியில் அமைந்த, வெள்ளலூர் (போத்தனூருக்குச் சமீபத்தில் இருப்பது) என்ற ஊரில் 1843 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 1891, 1931 மற்றும் 1939 ஆண்டுகளிலும் அகழ்வாராய்ச்சியின் பொழுது உரோம தேசத்துப் பழங்காலக் காசுப் புதையல்கள் கிடைத்து வருவதை “தொல்லியல் அறிஞர் ஆர். நாகசாமி” குறிப்பிடுகிறார்.
பதிற்றுப்பத்தில் கொடுமணம், ‘கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம்’ என்று அரிசில்கிழாரால் குறிப்பிடப்பட்டது “கொடுமணல்” என்ற ஊர் நொய்யல் ஆற்றின் கரையின் தென்பகுதியில் அமைந்த ஒரு ஊர். அரிய கல்மணிகள் உற்பத்தி செய்வதில் புகழ் பெற்று சங்க காலத்தில் சிறந்த நகரமாகத் திகழ்ந்துள்ள கொடுமணல் ஈரோட்டில் இருந்து தென்மேற்கில் 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சங்க காலத்தில் இவ்வூர் சிறப்புற்றிருந்ததற்குக் காரணம், வணிகப் பெருவழியில் அமைந்ததே என்பது “தொல்லியல் அறிஞர் ச. செல்வராஜ்” அவர்களது கருத்து. கொடுமணல் அமைந்திருப்பது சேரநாட்டையும் சோழ நாட்டின் பூம்புகாரையும் இணைக்கும் முதன்மை வணிகப் பெருவழியிலாகும்.
இது போன்றே, வடக்கு நோக்கிச் செல்லும் பெருவழி ஒன்று, விசயமங்கலம், சத்தியமங்கலம் கடந்து பவானி ஆற்றின் துணை ஆறான மோயாற்றுப் பள்ளத்தாக்கு வழியாக இன்று மைசூர் என அழைக்கப்படும் எருமையூர் என்ற ஊரைச் சென்றடைகிறது என்றும்; தெற்கே செல்லும் பெருவழியொன்று, காங்கேயம், தாராபுரம், அயிரைமலை, பழநி வழியாக மதுரையை அடைகிறது எனவும் மேலும் சில வணிகப் பெருவழிகளைப் பற்றியும் தொல்லியல் அறிஞர் ச. செல்வராஜ் அவர்கள் குறிப்பிடுகிறார்.
மதுரையிலிருந்து, கீழ்குயில்குடி, முத்துப்பட்டி பெருமாள்மலை, கொங்கர்புளியங்குளம், விக்கிரமங்கலம், சித்தர்மலை, வீரபாண்டி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் என வழியெங்கும் வரலாற்றுச்சான்றுகள் காணப்படும் பெருவழியொன்று மதுரையில் துவங்கி கம்பம் பள்ளத்தாக்கு வரை அமைந்திருந்ததை தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் குறிப்பிட்டுள்ளார். மேலும் கம்பம் பகுதியில் அகஸ்டஸ் சீசர் காலத்தைய ரோமானிய வெள்ளி நாணயம் ஒன்று கிடைத்துள்ளதாகவும் தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் குறிப்பிட்டுள்ளார். இது குற்றாலம், தென்காசி, செங்கோட்டைக் கணவாய் வழியாக மேற்குக் கடற்கரையை அடைய உதவிய வணிகப் பெருவழியாகும்.
புதுச்சேரி அருகிலுள்ள அரிக்கமேடு, இராமநாதபுரத்தின் அழகன்குளம் ஆகிய கடற்கரையோரப் பட்டினங்களும் அகழாய்வில் கிடைத்த தடயங்கள் மூலம் வணிகத்தில் பங்குபெற்ற இடங்களாகத் தெரியவருகின்றன. இந்த வணிகப் பெருவழிகள் வழியாக இந்தியாவின் மிளகு, ஏலக்காய், கிராம்பு, பட்டை, பருத்தி ஆடைகள், முத்துகள், தந்தம், சந்தனம், விலையுயர்ந்த மணிகள், மரகதக் கற்கள் போன்றவை கிரேக்கம், ரோம் ஆகிய நாடுகளுக்குக் கடல் வழியாக ஏற்றுமதி செய்யப்பட்டதும், அவர்களிடம் இருந்து பொன்னும், வெள்ளியும், மதுவும் இறக்குமதி செய்யப்பட்டதைக் காட்டும் வகையில் அந்நாடுகளின் நாணயங்களும் அகழாய்வுகளில் கிடைத்து வருகின்றன.”தி பெரிப்லஸ் ஆஃப் தி எரித்ரயென் சீ ” (Periplus of the Erythraean Sea) என்ற கி.பி 70 கால வாக்கில் எழுதப்பட்ட கிரேக்க நூலும் யவனர்கள் இந்தியாவுடன் வணிகம் செய்தபாதையையும், துறைமுகங்களையும், வர்த்தகப் பொருட்களையும், இவை சார்ந்த செய்திகளையும் விவரிக்கிறது.
இலக்கியச் சான்றுகள்:
காங்கேயத்தில் இருந்து பழநிவழியாக மதுரை செல்லும் வணிகப் பெருவழி பற்றிய சான்றை பேராசிரியர் ப. பாண்டியராஜா அவர்கள் அகநானூற்றுப் பாடலில் இருந்து எடுத்துக் காட்டுகிறார்.பழநி வழியே செல்லும் நெடுவழி வணிகர்களைக் கொள்ளையடிக்கவரும் மழவர்களை நெடுவேள் ஆவி விரட்டியடித்தான் என்பது,
“வண்டு படத் ததைந்த கண்ணி ஒண் கழல்
உருவக் குதிரை மழவர் ஓட்டிய
முருகன் நல் போர் நெடு வேள் ஆவி
அறு கோட்டு யானைப் பொதினி ஆங்கண் …”
(அகநானூறு – 1, மாமூலனார்)
என்ற இப்பாடலில் காணப்படுகிறது என்றும் பொதினி என்பது இன்றைய பழனி என்பதும் அவர் கூறும் தகவல்.
அவ்வாறே, அகநானூறு 25 ஆம் பாடலில் பொருளீட்டும் பொருட்டு தலைவன் செல்லும் வழியைக் குறிப்பிடும் பொழுது அவன் பொதிகை மலைத் தலைவன் திதியன் ஆளும் பகுதி வழி செல்வதை சுட்டிக் காட்டுகிறார்.
“… பொருநர்
செல் சமம் கடந்த வில் கெழு தடக் கைப்
பொதியின் செல்வன் பொலம் தேர்த் திதியன்
இன் இசை இயத்தின் கறங்கும்
கல் மிசை அருவிய காடு இறந்தோரே”
(அகநானூறு – 25, ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்)
குற்றால அருவிகள் பொதிகை மலையில் இருக்கின்றன. எனவே, தலைவன் செல்லும் அவ்வழியில் இசைக்கருவிகள் தரும் இசைபோன்ற ஒலியுடன் வீழும் “கல்மிசை அருவியை” குற்றால அருவியாக இருக்கலாம் என்றும், தலைவன் ஆரியங்காவு – செங்கோட்டைக் கணவாய் வழி செல்லும் வணிகப் பெருவழியில் பயணம் செல்கிறான் எனக் கருதலாம் என்றும் கூறுகிறார்.
மேலும், அகநானூறு – 47 ஆம் பாடலில் பொருளீட்டச் செல்லும் தலைவன் பயணிக்கும் வழியை, பாடல் காட்டும் சுற்றுச்சூழல் குறிப்புகளான,
“…ஒலி தலை
அலங்கு கழை நரலத் தாக்கி விலங்கு எழுந்து
கடு வளி உருத்திய கொடி விடு கூர் எரி
விடர் முகை அடுக்கம் பாய்தலின் உடன் இயைந்து
அமைக் கண் விடு நொடி கணக் கலை அகற்றும்
வெம் முனை அரும் சுரம் நீந்திக் கைம்மிக்கு
(அகநானூறு – 47, ஆலம்பேரிச் சாத்தனார்)
ஆகியவற்றின் அடிப்படையில் தலைவன் செழித்துவளர்ந்த மூங்கில் காடுகளின் நடுவே சென்றிருக்கிறான் என்பது மேற்குமலைத் தொடரைக் குறிக்கும் என்றும் எனவே தலைவன் செல்லும் வழியும் செங்கோட்டை கணவாய் வழியாகச் செல்லும் வணிகப் பெருவழியாக இருக்கக்கூடும் என்று கருதுகிறார் பேராசிரியர் ப. பாண்டியராஜா.
வாணிகச் சாத்தும் அய்யனாரும்:
பண்டைத் தமிழகம் வணிகம் – நகரங்கள் மற்றும் பண்பாடு என்ற நூலில் “மயிலை, சீனி. வேங்கடசாமி” அவர்கள், கடைச் சங்க காலத்தில் (கி.மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரையில்) ‘சங்க காலத் தமிழர் வாணிகம்’ என்பதை ஆராய்ந்து, பண்டையத் தமிழர் நடத்திய வாணிகத்தைப் பற்றி விளக்குவார். அதில், சிலப்பதிகார நாயகன் கோவலனின் தந்தை ‘மாசாத்துவன்’ என்பவரையும், கோவலனின் மனைவியான கண்ணகியின் தந்தை ‘மாநாய்கன்’ என்பவரையும் குறிப்பிட்டு அவர்களின் பெயர்களுக்கு விளக்கமும் அளித்திருப்பார்.
கோவலனுடைய தந்தை ஒரு பெரிய மாசாத்துவன் (சாத்து – வாணிகச் சாத்து, வாணிகக் குழு, தரை வாணிகக் குழுவுக்குச் சாத்து என்பது பெயர். சாத்து வாணிகன் ஆகையால் மாசாத்துவன் எனப்பட்டான்). அது போன்றே, பல கப்பல்களையுடைய பெரிய கடல் வாணிகருக்கு மாநாவிகர் என்று பெயர் கூறப்பட்டது (நாவிகர் – கப்பலையுடையவர். நாவாய் – கப்பல்). மாநாவிகர் என்னும் சொல் திரிந்து மாநாய்கர் என்று வழங்கப்பட்டது. ஆகையால், கண்ணகியின் தந்தை ஒரு மாநாவிகன் (மாநாய்கன்) எனக் குறிப்பிட்டு, வணிகர்களான மாசாத்துவனும், மாநாய்கனும் அவ்வாறு அழைக்கப்பட்ட காரணத்தையும் சீனி. வேங்கடசாமி விளக்குவார்.
திருப்பூரிலிருந்து 20 கி.மீ தொலைவில் கொடுவாயில் உள்ள நாகீஸ்வரர் கோயிலில் வட்டெழுத்துகளுடன் கூடிய 1,200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அய்யனார் சிற்பம் ஒன்று சென்ற ஆண்டின் இறுதியில் (டிசம்பர் 2, 2015 நாளிதழ் செய்தி) “திருப்பூர் வீரராசேந்திரன் தொல்லியல், வரலாற்று ஆய்வு மையத்தின்” தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பொழுதும் இதே செய்தி மீண்டும் குறிப்பிடப்பட்டது. தொல்லியல் ஆய்வு மையத்தின் இயக்குநர் பொறியாளர் ரவிக்குமார் அவர்கள், “பண்டைய காலத்தில் தரை வழிப் பயணம் மேற்கொண்டு வணிகம் செய்தவர்கள் சாத்துவர் என்றும் கடல் வழிப் பயணம் மேற்கொண்டு வணிகம் செய்தவர்கள் நாயகர் என்றும் அழைக்கப்பட்டனர். பண்டைய காலத்தில் வணிகம் செய்த வணிகர்கள் தங்களின் காவல் தெய்வமாக அய்யனாரை வழிபட்டனர். அவ்வணிகர்கள் தாங்கள் பயணம் செய்யும் பெரு வழிகளில் அய்யனார் சிலைகளை அமைத்து வழிபட்டு வந்தனர். அந்த வகையில் தமிழகத்தின் பண்டைய பெருவழிகளில் முக்கியமானது முசிறியில் இருந்து சோழர் துறைமுகத் தலைநகரான பூம்புகார் வரையாகும். அதாவது பேரூர், வெள்ளலூர், சூலூர், பல்லடம், காங்கயம், கரூர், உறையூர் வழியாகப் பூம்புகார் வரை இராசகேசரிப் பெருவழி என்று அழைக்கப்பட்டது. இந்த வழித் தடத்தில் கொடுவாயில் உள்ள நாகீஸ்வரர் கோயிலில் வட்டெழுத்துகளுடன் கூடிய அய்யனார் சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது,” என்று குறிப்பிட்டார்.
வரைபடத்தில் புவியிடக் குறியீடுகள்:
இச்செய்தியில் காணும் தகவல்படி தமிழகத்தில் சாத்தன் மற்றும் அய்யனார் ஆகியவற்றின் தொடர்பு எவ்வாறு அமைந்திருக்கக் கூடும் என்பதை அறியும் பொருட்டு மேற்கொண்ட ஒரு முயற்சியே இக்கட்டுரை. பண்டைய அய்யனார் சிலைகளின் இருப்பிடங்களும், சாத்தன் என்ற பெயரில் தொடங்கும் ஊர்களும் தமிழகத்தில் எந்தெந்த இடங்களில் காணப்படக்கூடும் என்ற தேடல் துவங்கியது.
1. செய்தித்தாள்களில் கிடைத்த “பண்டைய அய்யனார்” சிலைகள் கண்டெடுக்கப்பட்ட இடங்களின் குறிப்புகள் சேகரிக்கப்பட்டன.
2. ‘சாத்தன்’ என்ற பெயர் இடம்பெற்ற ஊர்களின் இருப்பிடங்களைச் சேகரிக்க இந்திய “அஞ்சலக எண்” (Pincode) தரவுகள் மத்திய அரசின் அதிகாரப்பூர்வமான தளத்தில் இருந்து பெறப்பட்டன. Pincode Search – All India Pincode Directory என்ற தளத்தில் (http://www.indiapost.gov.in/PincodeSearch.aspx) இருந்து ஊர்களின் பெயர்களும் அவற்றின் அஞ்சலக எண்களும் சேகரிக்கப்பட்டு பட்டியலிடப்பட்டன.
இப்பட்டியலில் உள்ள ஊர்களில் ‘சாத்தன்’ என்ற பெயருடன் தொடர்புடையவைதான் என்று உறுதியாகத் தெரிந்த ஊர்கள் மட்டும் (சாத்தனூர், சாத்தமங்கலம், சாத்தன்குளம் போன்றவை) தேர்ந்தெடுக்கப்பட்டன. முழுப்பட்டியலும் கல்வெட்டு ஆர்வலர் திரு. சேசாத்திரி சிரீதரன் அவர்களால் பார்வையிடப்பட்டு, தெரிவு செய்யப்பட்ட ஊர்கள் ‘சாத்தன்’ என்ற சொல்லுடன் தொடர்புடையவைதான் என உறுதியளிக்கப்பட்டது. அய்யனார் சிலைகள் கிடைத்த இடங்கள் மிகக் குறைவாகவே இருந்தன. சாத்தன் என்ற பெயருடன் 44 இடங்களும் கிடைத்தன.
1. இந்த இடங்கள் யாவும் ‘கூகிள் மேப்’ (Google Map) வரைபடத் தளத்தில் குறிக்கப்பட்டன. அதனால், அஞ்சலக எண் தரவுகளில் இடம்பெறாத சாத்தன் என்ற ஊர்கள் இடம் பெற வாய்ப்பிருக்கவில்லை
2. இருப்பினும், கூகுள் வரைபடத்தில் இடங்களைக் குறிக்கும்பொழுது மேலும் ‘சாத்தன்’ என்ற பெயருடன் அகப்பட்ட மற்றும் சில ஊர்களும் குறிக்கப்பட்டன
3. கூகுள் வரைபடத்தில் வணிகப் பெருவழிகள் என தொல்லியல் அறிஞர் ஆர். நாகசாமி அவர்களும், பேராசிரியர் ப. பாண்டியராஜா அவர்களும்
(a.) குறிப்பிட்ட இடங்களும், (b.) வணிகவழித் தடங்களும், (c.) அந்த வரைபடங்களில் கொடுக்கப்பட்ட சில முக்கியமான வணிக ஊர்களும், கணவாய்களும் (சிவப்பு நட்சத்திரங்கள்), துறைமுகங்களும் (பச்சை வட்டங்கள்), அகழாய்வில் வணிக ஊராக அடையாளம் காணப்பட்ட இடங்களும் அடிப்படைக் குறிப்புகளாகக் (basic reference points) குறிக்கப்பட்டன
இடங்களும் தடங்களும் குறிக்கப்பட்ட பிறகு கூகுள் வரைபடம் வழி அறிந்து கொண்டவை:
[ஊர்களின் பட்டியலையும், கூகுள் வரைபடத்தையும் பார்வையிடத் தேவையான சுட்டிகள் கட்டுரையின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளன]
1. சாத்தன் என்ற பெயர் தமிழ்நாட்டிற்கு மட்டுமே உரியது. தற்கால ஆந்திராவிலும், கர்நாடகாவிலும் ஓரிரு ஊர்கள் அப்பெயரில் இருந்தாலும், சாத்தன் என்பது தமிழ் நாட்டிற்கே உரியது (புத்தரைக் குறிக்கும் ‘சாஸ்தா’ என்பது தமிழில் ‘சாத்தன்’ என வழங்கப்பட்டு பின்னர் புத்தமதத் தொடர்பை அச்சொல் இழந்துவிட்டது என்றும், அக்காலத்தின் பெளத்த சாஸ்தாவின் வழிபாட்டுத் தலங்கள் யாவும் பிற்காலத்தில், ‘தருமராசா கோயில்’, ‘சாத்தனார் கோயில்’, ‘முனீஸ்வரர் கோயில்’ என்று மாறிவிட்டன என்பதும் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் கருத்து. கடைச்சங்க காலத்தில், தமிழ் நாட்டிலிருந்த பௌத்தர்கள் ‘சாத்தன்’ என்னும் பெயரைப் பெரும்பாலும் மேற்கொண்டிருந்தனர் என்று சங்க நூல்களினின்றும் தெரியவருவதாகவும் மயிலை சீனி. வேங்கடசாமி கூறுகிறார், அதற்குச் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றையும் சான்றுகளாகக் காட்டுகிறார்)
2. மத்திய அரசு வழங்கும் ‘அஞ்சலக எண் தரவுகளில்’ இன்றைய கேரளா பகுதியில் ‘சாத்தன்’ என்ற பெயரில் எந்த ஊரும் கிடைக்கவில்லை. வடமாநிலங்களில் கிடைக்கும் சில ஊர்களின் பெயர்களில் தற்செயலான ஒலிப்பு ஒற்றுமை மட்டுமே இருக்கலாம் என்று அந்த ஊர்கள் வரைபடத்தில் குறிக்கப்படவில்லை (தவிர்க்கப்பட்ட அந்த ஊர்களின் பெயர்களும், அவற்றின் அஞ்சலக எண்களுடன் பட்டியலில் பார்வைக்குக் கிடைக்கும்)
3. இவ்வாறு குறிக்கப்பட்ட இடங்கள் யாவும் பெரும்பாலும் ஆற்றங்கரைகளின் அருகாமையில் அமைந்துள்ளன.
4. அத்துடன், பண்டைய வணிகப் பெருவழிகளாக இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் குறித்த தடங்களின் வழியிலேயும் அமைந்துள்ளதும் தெரிய வருகிறது.
5. குறிக்கப்பட்ட இடங்களுக்கு இடையே தொடர்புகளை ஏற்படுத்தி வரையப்பட்ட கோடுகள், இக்கால தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலைகளின் வழியிலும் அமைந்திருப்பதாகவே தெரிகிறது.
வரைபடத்தில் இடங்களைக் குறிப்பதன் மூலம் (Geospatial data – relating to or denoting data that is associated with a particular location) ஒரு செய்தியைப் பற்றிய புதியக் கோணம் கிடைக்க வாய்ப்புள்ளது. புவியிடக் குறியீடுகள் மூலம் நம் கவனத்திற்கு வந்திராத சில முக்கியத் தகவலும் பார்வைக்குக் கிடைக்கும். இவ்வாறு அறியும் முறை 1854 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் காலரா நோய் பரவிய பொழுது, நோய் பரவிய இடங்களை வரைபடத்தில் (epidemic on maps) குறிக்கும்பொழுது அறியப்பட்டது. ஜான் ஸ்னோ (Dr. John Snow) என்ற மருத்துவரே நோயறியும் வரைபட முறையை முதன் முதலில் மருத்துவத் துறைக்கு அறிமுகப்படுத்தியவர். காலரா நோயாளிகளின் இருப்பிடத்தை லண்டன் மாநகர் வரைபடத்தில் குறிக்கத் தொடங்கிய பொழுது நோய் அதிகம் பரவிய இடம் ஒரு குறிப்பிட்ட குடிநீர்க் குழாய் வழித்தடத்தில் இருப்பதும், குடிநீர் வழி நோய் பரவுவதும் தெரிய வந்து அதற்கு மாற்று வழி கண்டவுடன் நோய் பரவுவது தடுக்கப்பட்டது.
எனவே, அது போலவே தமிழக வரைபடத்தில் ‘சாத்தன்’ என்ற ஊர்கள் அமைந்துள்ள இடங்கள், வணிகப் பெருவழிகளில் அமைந்திருந்த இடத்தைக் குறிப்பால் உணர்த்துகின்றனவா? பயணத்தின் பொழுது வணிகர்கள் அவ்வூர்களைத் தங்குமிடங்களாகப் பயன்படுத்த, அவர்களின் தேவைக்கேற்ப தக்க வசதிகளுடன் அமைக்கப்பட்டிருந்தனவா? அல்லது இந்த அமைவிட அமைப்பு தற்செயலாக அமைந்துவிட்ட ஒரு ஒற்றுமையா? என்பதை மேலும் பல வரலாற்று ஆய்வுகளும் தடயங்களும் இனி வரும் காலத்தில் காட்டக் கூடும். இக்கேள்விகளுக்கு எதிர்காலத்தில் பதில் கிடைக்கக்கூடும்.
______________________________________________________________________
Access to provided information:
Pincode Search - All India Pincode Directory
http://www.indiapost.gov.in/PincodeSearch.aspx
Data:
https://docs.google.com/spreadsheets/d/1Uh9Wf8l7xlg6Aii1-PZdBOIzar6C286NedegalRrBP8/edit?usp=sharing
Map:
https://drive.google.com/open?id=1_-IcmZ8k9MAJL26oBqLo2HSzdk4&usp=sharing
______________________________________________________________________
References:
[1]
Of commerce and Cupid
Dr. R. Nagaswamy
[Dr. R. Nagaswamy, then Director, Tamil Nadu State Department of Archaeology]
January 18, 2013, The Hindu
Map: http://www.thehindu.com/multimedia/dynamic/01333/18FR_VELLALUR_eps_1333230g.jpg
[2]
Digging up the past
T.S. Subramanian
Volume 29 - Issue 15: Jul. 28-Aug. 10, 2012, Frontline
http://www.frontline.in/static/html/fl2915/stories/20120810291507000.htm
[3]
Akananuru - Song 1, 25 & Song 47
Dr. P.Pandiyaraja
http://sangacholai.in/akam01.html
http://sangacholai.in/akam25.html
http://sangacholai.in/akam47.html
Map: http://sangacholai.in/akam01-3.jpg
[4]
Travelling down the ages
Shankar Vanavarayar
Dec 03, 2005, The Hindu
http://www.thehindu.com/mp/2005/12/03/stories/2005120302860200.htm
[5]
Aiyanar sculpture with Vattezhuthu inscriptions found near Koduvai
8ம் நூற்றாண்டு அய்யனார் சிலை:திருப்பூர் அருகே கண்டுபிடிப்பு
http://www.dinamalar.com/news_detail.asp?id=1400770
http://www.dinamani.com/edition_coimbatore/tirupur/2015/12/02/1200-ஆண்டுகள்-பழைமையான-அய்யனார/article3157265.ece
[6]
பண்டைத் தமிழகம்: வணிகம் - நகரங்கள் மற்றும் பண்பாடு, வீ. அரசு
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம்
http://www.tamilvu.org/slet/ln00101/ln00101pag.jsp?bookid=296&pno=81
[7]
பௌத்தமும் தமிழும்
மயிலை, சீனி. வேங்கடசாமி
http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=218&pno=13
[8]
வரலாற்றுக்காலம் - 1. கொடுமணலும் மரக்காணமும்
ச. செல்வராஜ், தொல்லியல் துறை, மண்டல உதவி இயக்குநர், பணி ஓய்வு
http://www.dinamani.com/tholliyalmani/pudhaiyunda-thamizhagam/2016/01/22/வரலாற்றுக்-காலம்---1.-கொடுமணலு/article3238036.ece
Additional Readings:
[1]
Book Review: Merchants of Tamilakam
BY Sarath Ramakrishnan, November 25, 2013
The Merchants of Tamilakam: Pioneers of International Trade
by Kanakalatha Mukund
http://centreright.in/2013/11/book-review-merchants-of-tamilakam/#.Vzfa1VQrLIU
[2]
Trade through the Palghat gap
http://historicalleys.blogspot.com/2009/06/trade-through-palghat-gap.html
[3]
Use of GIS Mapping as a Public Health Tool—From Cholera to Cancer
http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4089751/
______________________________________________________________________
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
அருமையான கட்டுரை. என் பாராட்டுக்கள் தேமொழி.இதனை நமது மரபு விக்கியில் வரலாறு பக்கத்தில் இணைத்து விடுங்கள். மின்தமிழ் மேடையிலும் இணைத்து விடுங்கள்.
வணிகப் பெருவழிகள் மிக முக்கிய ஒரு ஆய்வு நோக்கம். அதோடு சாத்தன் கோயில் பற்றிய செய்தி நன்கு காணப்பட்டுள்ளது.பண்டைய தமிழி கல்வெட்டுக்களில் சமண முனிவர்களுக்கு கற்படுக்கை செய்து தந்த வணிகப்பெருமக்களில் சிலரது பெயர் சாத்தன் என்பதனை எனது வெளியீடுகளில் நான் பதிந்திருக்கின்றேன்.எனக்கு ஒரு ஐயம் உண்டு.சாத்தப்பன் என்றபெயரில் எனக்கு ஓரிரு நண்பர்கள் மலேசியாவில் இருந்தனர். அனைவருமே செட்டியார் சமூகத்தினரே.செட்டியார் சமூகத்தினருக்கு மட்டுமே இப்பெயர் குடும்பங்களில் வழக்கில் உள்ளதா என அறிய ஆவல்.அறிந்தோர் கூறினால் உதவும்.கட்டுரையில் டாக்டர்.சாந்தலிங்கம் கூறுவதாக வருபவை அவரது எந்த நூலில் / கட்டுரையில் எடுக்கப்பட்டவை என அறிய ஆவல்.
தலைவியின் இருப்பிடம் எது என்ற கேள்வி எழுகிறது. Nelcynda –வுக்கு நேர் கிழக்கே மலையில் ஏறி இறங்கினால் கம்பம் பள்ளதாக்கு வருகிறது. அப் பகுதியைச் சேர்ந்த ஊர் ஏதேனும் இருக்கலாம். தலைவன் திண்டுக்கல் அருகிலுள்ள சிறுமலையின் கூதளம் பற்றிப் பேசுகிறான். எனவே தலைவி அப் பகுதியைச் சேர்ந்தவளாக இருந்திருக்கலாம். பொதினியிலிருந்து வரும் ஒரு வணிகப் பெருவழி மதுரைக்குச் செல்கிறது. மதுரையிலிருந்து மேற்குமுகமாக இடுக்கிப் பகுதிக்கு ஒரு நீண்ட பெருவழி இருந்திருக்கிறது. இதுபற்றித் தொல்லியல் அறிஞர் திரு. சாந்தலிங்கம் இவ்வாறு கூறுகிறார்.: பாண்டியநாட்டிற்கும் சேரநாட்டிற்குமான பெருவழி இப்பகுதியில் முன்பு இருந்திருக்கிறது. கம்பம் பள்ளத்தாக்கு வழியாக இடுக்கி செல்லும் பெரும் பாதை இருந்திருக்கிறது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் அகஸ்டஸ் சீசர் காலத்தைய ரோமானிய வெள்ளி நாணயம் ஒன்று கிடைத்துள்ளது. கம்பம் – உத்தமபாளையம் – சின்னமனூர் – வீரபாண்டி – சித்தர்மலை – விக்கிரமங்கலம் – கொங்கர்புளியங்குளம் – முத்துப்பட்டி பெருமாள்மலை – கீழ்குயில்குடி – மதுரை என வழியெங்கும் வரலாற்றுச்சான்றுகள் உள்ளன. உத்தமபாளையத்தில் சமணத்துறவிகள் தங்கியிருந்த படுகைகள் காணப்படுகிறது. சின்னமனூரில் ஏழாம் (அ) எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான சிவன்கோயில் ஒன்று காணப்படுகிறது. வீரபாண்டி கௌமாரி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. முருகனின் பெண் வடிவமாகக் கூட கௌமாரியைச் சொல்வார்கள். அவர் கௌமாரன். பெண் வடிவில் கௌமாரி. ஏழாவது தாமரையில் தோன்றியவள் என்பார்கள். - - தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் -https://maduraivaasagan.wordpress.com/page/12/ இங்குக் கூறப்படும் இடுக்கியை அடுத்தே பண்டைய Nelcynda இருந்திருக்கிறது. அங்கே நெல் அதிகமாக விளைந்த காரணத்தால் அது நெற்குன்றம் என்று அழைக்கப்பட, அதை யவனர்கள் தம் உச்சரிப்பில் Nelcynda என்று அழைத்தனர் எனலாம்.
சுபா
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
//1. சாத்தன் என்ற பெயர் தமிழ்நாட்டிற்கு மட்டுமே உரியது. தற்கால ஆந்திராவிலும், கர்நாடகாவிலும் ஓரிரு ஊர்கள் அப்பெயரில் இருந்தாலும், சாத்தன் என்பது தமிழ் நாட்டிற்கே உரியது (புத்தரைக் குறிக்கும் ‘சாஸ்தா’ என்பது தமிழில் ‘சாத்தன்’ என வழங்கப்பட்டு பின்னர் புத்தமதத் தொடர்பை அச்சொல் இழந்துவிட்டது என்றும், அக்காலத்தின் பெளத்த சாஸ்தாவின் வழிபாட்டுத் தலங்கள் யாவும் பிற்காலத்தில், ‘தருமராசா கோயில்’, ‘சாத்தனார் கோயில்’, ‘முனீஸ்வரர் கோயில்’ என்று மாறிவிட்டன என்பதும் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் கருத்து. கடைச்சங்க காலத்தில், தமிழ் நாட்டிலிருந்த பௌத்தர்கள் ‘சாத்தன்’ என்னும் பெயரைப் பெரும்பாலும் மேற்கொண்டிருந்தனர் என்று சங்க நூல்களினின்றும் தெரியவருவதாகவும் மயிலை சீனி. வேங்கடசாமி கூறுகிறார், அதற்குச் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றையும் சான்றுகளாகக் காட்டுகிறார்)//இக்கருத்து மிகத் தவறு. எதியோபியா நாகரிகத்தில் சாத்தான் என்ற தமிழ்ப் பெயர் சிந்து முத்திரை வாசிப்பு சாத்தைய்யன் என வழங்குகிறது.
எனக்கு ஒரு ஐயம் உண்டு.சாத்தப்பன் என்றபெயரில் எனக்கு ஓரிரு நண்பர்கள் மலேசியாவில் இருந்தனர். அனைவருமே செட்டியார் சமூகத்தினரே.செட்டியார் சமூகத்தினருக்கு மட்டுமே இப்பெயர் குடும்பங்களில் வழக்கில் உள்ளதா என அறிய ஆவல்.
பூம்புகார் அழிவுக்கு பின்னர் பூம்புகாரில் இருந்து பட்டினங்களை நோக்கி குடியேறியவர்கள் பட்டினவர்கள் என்றும். கடல்சார் வணிகர்களான மாநாய்கன். அல்லது மாசத்துவன் என்னும் வணிகச் சாத்துகளின் வாரிசுகள் பூம்புகார் அழிவின் பின்னர் நகரங்களை நோக்கி குடியேறியதால் நகரத்தார் என்றும் பெயர் பெற்று பின்னர் அதுவே சாதிப் பெயராகிப் போனது.
அறிந்தோர் கூறினால் உதவும்.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
அருமையான கட்டுரை. என் பாராட்டுக்கள் தேமொழி.இதனை நமது மரபு விக்கியில் வரலாறு பக்கத்தில் இணைத்து விடுங்கள். மின்தமிழ் மேடையிலும் இணைத்து விடுங்கள்.வணிகப் பெருவழிகள் மிக முக்கிய ஒரு ஆய்வு நோக்கம். அதோடு சாத்தன் கோயில் பற்றிய செய்தி நன்கு காணப்பட்டுள்ளது.பண்டைய தமிழி கல்வெட்டுக்களில் சமண முனிவர்களுக்கு கற்படுக்கை செய்து தந்த வணிகப்பெருமக்களில் சிலரது பெயர் சாத்தன் என்பதனை எனது வெளியீடுகளில் நான் பதிந்திருக்கின்றேன்.எனக்கு ஒரு ஐயம் உண்டு.சாத்தப்பன் என்றபெயரில் எனக்கு ஓரிரு நண்பர்கள் மலேசியாவில் இருந்தனர். அனைவருமே செட்டியார் சமூகத்தினரே.செட்டியார் சமூகத்தினருக்கு மட்டுமே இப்பெயர் குடும்பங்களில் வழக்கில் உள்ளதா என அறிய ஆவல்.அறிந்தோர் கூறினால் உதவும்.
//1. சாத்தன் என்ற பெயர் தமிழ்நாட்டிற்கு மட்டுமே உரியது. தற்கால ஆந்திராவிலும், கர்நாடகாவிலும் ஓரிரு ஊர்கள் அப்பெயரில் இருந்தாலும், சாத்தன் என்பது தமிழ் நாட்டிற்கே உரியது (புத்தரைக் குறிக்கும் ‘சாஸ்தா’ என்பது தமிழில் ‘சாத்தன்’ என வழங்கப்பட்டு பின்னர் புத்தமதத் தொடர்பை அச்சொல் இழந்துவிட்டது என்றும், அக்காலத்தின் பெளத்த சாஸ்தாவின் வழிபாட்டுத் தலங்கள் யாவும் பிற்காலத்தில், ‘தருமராசா கோயில்’, ‘சாத்தனார் கோயில்’, ‘முனீஸ்வரர் கோயில்’ என்று மாறிவிட்டன என்பதும் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் கருத்து. கடைச்சங்க காலத்தில், தமிழ் நாட்டிலிருந்த பௌத்தர்கள் ‘சாத்தன்’ என்னும் பெயரைப் பெரும்பாலும் மேற்கொண்டிருந்தனர் என்று சங்க நூல்களினின்றும் தெரியவருவதாகவும் மயிலை சீனி. வேங்கடசாமி கூறுகிறார், அதற்குச் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றையும் சான்றுகளாகக் காட்டுகிறார்)//இக்கருத்து மிகத் தவறு. எதியோபியா நாகரிகத்தில் சாத்தான் என்ற தமிழ்ப் பெயர் சிந்து முத்திரை வாசிப்பு சாத்தைய்யன் என வழங்குகிறது.எத்தியோபியா நாகரிகர் முன்னோர் தமிழர் https://groups.google.com/d/msg/mintamil/mYjJa0aLJGU/qTextPcrKuwJ
Titon Satiyo 1256 - 1246 BC - தமிழில் திட்டன் (தித்தன்) சாத்தைய > திட்டன் சாத்தையன் என செப்பமாக படிக்கலாம். திட்டன் - திட்டன் குடி > திட்டக்குடி ஓர் தமிழக ஊர். கார்தேஜ் நாகரிக அரசியின் பெயர் Dido 814 BC. காசுமீர அரசிப் பெயர் Dida 958 AD. அரசிகளின் பெயர்கள் கடுஒலி பெற்றுள்ளன. சாத்தன் + அய்யன் ஒரு கூட்டுப் பெயர். சாத்தன் - சிந்து வெளி முத்திரைப் பெயர். சாத்தப்பன் இன்று வழங்கும் பெயர். கொரிய நாகரிக Danjun வழிவந்த மன்னன் பெயர் sotae 1357 -1285 BC . சாத்தை > ஐகார ஈறு பெற்றுள்ளது.
தொல்லன்
நா. கணேசன்கட்டுரையில் டாக்டர்.சாந்தலிங்கம் கூறுவதாக வருபவை அவரது எந்த நூலில் / கட்டுரையில் எடுக்கப்பட்டவை என அறிய ஆவல்.சுபா
வணிகப் பெரு வழிகள் பற்றி பள்ளி நாட்களில் இருந்தே அறிந்து வந்திருக்கிறோம். தொகுத்து அளித்தது நன்றாக உள்ளது. அமெரிக்கா இனக் கலப்புப் பற்றிய செய்திகள் புதியவை. அனைத்திற்கும் நன்றி.
2016-05-22 12:18 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
மேலும் தகவல் தரும் பல செய்திகளைப் பகிர்ந்து கொண்ட நண்பர் திரு. கணேசன் அவர்களுக்கும்கட்டுரையைப் பாராட்டிய சொ வி ஐயாவிற்கும் நன்றிகள் பல.அன்புடன்..... தேமொழி
On Saturday, May 21, 2016 at 9:27:53 PM UTC-7, சொ.வினைதீர்த்தான் wrote:அருமையான கட்டுரை. என் பாராட்டுக்கள்அன்புடன்சொ.வினைதீர்த்தான்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
அணி என்பது அழகு என்பதைக் குறிக்கிறது. இலக்கியங்களில் அழகுக்காகவும், பாடலின் பொருளைத் தெளிவாக விளக்கும் பொருட்டும், உவமை, உருவகம் போன்றவற்றைப் புலவர்கள் கையாளுவது வழக்கம். அது அழகுக்கு அணி அணிவித்து அழகை மேம்படுத்தும் ஒரு முயற்சி.
இவ்வாறு செய்யுள்களில் அமைந்திருக்கும் சொல்லழகு, பொருளழகு ஆகியவற்றின் இலக்கணத்தை உரைப்பது அணி இலக்கணம் எனப்படும். அணிகள் பலவகைப்படும். தமிழ்ச் செய்யுள்களில் காணப்படும் அணிகளைக் கூறும் தமிழின் தொன்மையான இலக்கண நூல் ‘தண்டியலங்காரம்’ ஆகும். இந்த நூலில் 35 அணிகள் கூறப்படுகின்றன. அவற்றில் ஒன்று ‘தற்குறிப்பேற்ற அணி’. இயற்கையில் இயல்பாக நிகழும் நிகழ்வொன்று ஒரு கருத்தைக் குறிப்பதாகக் கூறி இலக்கியங்களில் புலவர்கள் தங்கள் கருத்தை ஏற்றிப் பாடலாகப் பாடுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படுகிறது.
பெயர்பொருள் அல்பொருள் என இரு பொருளினும்
இயல்பின் விளைதிறன் அன்றி அயல் ஒன்று
தான் குறித்து ஏற்றுதல் தற்குறிப் பேற்றம்
(தண்டி, நூ. 56)
(பெயர்பொருள் = அசையும் பொருள்; அல்பொருள் = அசையாத பொருள்)
அசையும் பொருட்கள், அசையாப் பொருட்களின் இயல்பான இயற்கை அமைப்பின் மீது புலவர் தனது குறிப்பை ஏற்றுவதைத் தற்குறிப்பேற்ற அணி என்று வரையறுக்கிறது தண்டியலங்காரம் நூல். தற்குறிப்பேற்ற அணி ஒரு குறிப்பிடத்தக்க அணி. இந்த அணி தமிழிலக்கியங்களில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஒரு அணி எனவும்; சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், பெரிய புராணம், கம்பராமாயணம் போன்ற இலக்கியங்களில் மிகுதியாகப் பயின்று வருவதாகவும் கூறப்படுகிறது.
தற்குறிப்பேற்ற அணியைக் குறிப்பிட்டாலே தமிழர் அனைவருக்கும் பள்ளி நாட்களில் இலக்கண வகுப்பில் இந்த அணிக்கு எடுத்துக்காட்டாகப் படித்த “ஆரெயில் நெடுங்கொடி வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட” என்ற சிலப்பதிகாரப் பாடலின் வரிகளும் உடன் நினைவிற்கு வரும். மதுரைக்காண்டத்தில் கோவலனும் கண்ணகியும் மதுரை நகருக்குச் செல்லும் பொழுது, அங்கு கோவலன் கொலையுண்டு சாகப்போகிறான் என்பதனால் ‘வரவேண்டாம்’ என்று கையசைத்து மதுரை நகரின் மதில் மேல் பறக்கும் கொடிகள் கூறுகின்றன என்று குறிப்பிடுவார் இளங்கோவடிகள். காற்றில் இயல்பாகப் படபடக்கும் கொடி அசைவில் தனது குறிப்பை ஏற்றி தற்குறிப்பேற்ற அணியைக் கையாண்டிருப்பார். இது மிகவும் பரவலாக அறியப்பட்ட ஒரு கருத்து.
மதுரை மாநகர் கொடிகள் மட்டுமல்ல, சீதையின் மிதிலை மாநகரத்தின் மதிலின் மீது பறந்த கொடிகளும், கண்ணனின் துவாரகை நகரின் மதில் மீது பறந்த கொடிகளும் ‘வாராதே போ’ என்றோ, ‘வருக வருக’ என்றோ கையசைத்து உரைத்ததாகப் பாடல்கள் உள்ளன. அவ்வாறு ஆரெயில் நெடுங்கொடி அறிவித்த செய்திகள் எவையென்று இனி காண்போம்.
‘வாராதே போ’ என்று உரைத்ததும்:
கருநெடுங் குவளையும் ஆம்பலும் கமலமும்
தையலும் கணவனும் தனித்துறு துயரம்
ஐய மின்றி அறிந்தன போலப்
பண்ணீர் வண்டு பரிந்தினைந் தேங்கிக்
கண்ணீர் கொண்டு காலுற நடுங்கப்
போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரலென் பனபோல் மறித்துக்கை காட்ட
[சிலப்பதிகாரம், மதுரைக் காண்டம், 3. புறஞ்சேரியிறுத்த காதை (184-190)]
கரிய நெடிய கருங்குவளை, அல்லி மற்றும் தாமரை மலர்கள், கண்ணகியும் அவளது கணவன் கோவலனும் பிரிந்து துன்பத்தினை அடையப்போவதை ஐயத்திற்கு இடமின்றி அறிந்தது போல, ரீங்காரமிடும் வண்டுகளின் ஒலியுடன் வருந்தி ஏக்கத்துடன் கண்ணீர் விட்டு கால்கள் நடுங்க அழவும்; பகைவரை வருத்தும் போரில் தேய்த்தெடுத்த அரிய மதிலின் மீது பறக்கும் நெடிய கொடிகள், ‘மதுரைக்கு வர வேண்டாம் திரும்பிச் செல்க’ என மறுத்துக் கையசைத்தது என்கிறார் இளங்கோவடிகள். காற்றிலே இயல்பாக அசையும் ஆரெயில் நெடுங்கொடி கோவலனையும் கண்ணகியையும் மதுரை மாநகருக்கு வரவேண்டாம் என்று கூறுவதாக தற்குறிப்பேற்றம் செய்துள்ளார் புலவர்.
கொடியின் அசைவில் தற்குறிப்பேற்ற அணியின் மூலம் ‘வரவேண்டாம்’ என்றக் குறிப்பைத் தெரிவிக்கும் பாடல் ஒன்று வில்லிபுத்தூரரின் வில்லி பாரதத்திலும் காணலாம். வாசுதேவனைப் படைத்துணை அழைத்த சருக்கத்தில் இப்பாடல் இடம் பெறுகிறது. போரில் கௌரவர்களின் சார்பில் போரிட வேண்டி, படைத்துணையாக உதவுமாறு அழைப்பதற்காகப் பல அரசர்களுக்கும் தூதுவர்களை அனுப்புகிறான் துரியோதனன். கண்ணனின் உதவியை நாடித் தானே துவாரகைக்கு நேரில் செல்கின்றான். அப்பொழுது துவாரகை நகரின் அழகும், அந்நகரின் அகழி சூழ்ந்த மதிலின் சிறப்பும் விவரிக்கப்படுகிறது. அப்பாடலில் மதிலின் மீது பறக்கும் கொடிகளின் அசைவின் மூலம் துரியோதனனுக்கு கண்ணனின் உதவி கிட்டப்போவதில்லை என்றக் குறிப்பைத் தருகிறார் வில்லிபுத்தூரர்.
ஈண்டு நீவரினுமெங்களெழிலுடையெழிலிவண்ணன்
பாண்டவர்தங்கட்கல்லாற் படைத்துணையாகமாட்டான்
மீண்டுபோகென்றென்றந்தவியன்மதிற்குடுமிதோறுங்
காண்டகுபதாகையாடைகைகளாற்றடுப்பபோன்ற.
[வில்லி பாரதம், இரண்டாம் பாகம், 25. வாசுதேவனைப் படைத்துணை அழைத்த சருக்கம் (5)]
துரியோதனனே, இந்நகரத்திற்கு நீ வந்தாலும், எங்களது அழகிய மேகவண்ணமுடைய கண்ணபிரான், பாண்டவர்களுக்குப் போர் புரிய உதவுவானே அன்றி உன்னுடைய படைக்குத் துணையாகப் போர் புரிய உதவமாட்டான். எனவே, நீ வந்தவழியே திரும்பிச் செல், எனப் பலமுறை அறிவித்த வண்ணம், அந்நகரத்தின் அகன்ற மதில்களின் உச்சியில் பறந்த, கண்ணைக்கவரும் அழகிய கொடிகள் தமது கைகளை அசைத்து அசைத்து துரியோதனின் வருகையைத் தடுப்பது போன்று பறந்தன என்கின்றது இப்பாடல்.
கண்ணனைச் சந்திக்கச் செல்லும் துரியோதனனை, நகரத்தின் மதிலின் மேல் காற்றிலே இயல்பாக அசையும் கொடிகள், வரவேண்டாம் திரும்பிப் போ என்று கைகளை அசைத்துத் தடுத்து குறிப்பால் உணர்த்துவதாகத் தற்குறிப்பேற்ற அணி கொண்டு வில்லிபுத்தூரர் தனது வில்லி பாரதத்தில் நயம்பட உரைக்கின்றார்.
‘வருக வருக‘ என்று அழைத்ததும்:
காற்றிலே அசையும் கொடிகள் ‘வரவேண்டாம்’ என எச்சரிப்பதாகக் கூறுவது மட்டுமல்லாது, ‘வருக வருக’ என அழைப்பதாகவும் கூறும் பாடல்கள் இரண்டினை அடுத்து காணலாம். கம்ப இராமாயணத்தில் (பால காண்டம் – மிதிலைக் காட்சிப் படலம்) விசுவாமித்திரரின் வேள்வியைக் காத்து உதவி செய்த இராமனையும், இலக்குவனையும்; சீதையின் தந்தை சனக மன்னன் அரசாளும் விதேக நாட்டிற்கு அழைத்துச் செல்கிறார் விசுவாமித்திரர். தலைநகரான மிதிலை மாநகரில் அவர்கள் நுழையும்பொழுது காணும் காட்சிகளை விவரிக்கிறார் கம்பர். மிதிலை நகரின் கொடிகள் இராமரை வரவேற்பதாகவும், சீதையை மணம் செய்து கொள்ள அழைப்பதாகவும் தனது குறிப்பைப் பாடலில் ஏற்றுகிறார் கவிச்சக்கரவர்த்தி.
‘மை அறு மலரின் நீங்கி
யான் செய் மா தவத்தின் வந்து
செய்யவள் இருந்தாள்’ என்று
செழு மணிக் கொடிகள் என்னும்
கைகளை நீட்டி அந்தக்
கடி நகர் கமலச் செங் கண்
ஐயனை ‘ஒல்லை வா’ என்று
அழைப்பது போன்றது அம்மா!
[கம்பராமாயணம், பால காண்டம், 10. மிதிலைக் காட்சிப் படலம் (480)]
குற்றமற்ற தாமரை மலரை விட்டு நீங்கி, மிதிலை மாநகராகிய நான் செய்த பெருந்தவத்தின் பயனாக, மிதிலை மாநகரின்கண் திருமகள் வந்து பிறந்துள்ளாள் என்றுரைத்து, அழகிய பெரிய கொடிகள் என்னும் தனது கைகளை அசைத்துக் காட்டி, காவல் மிகுந்த மிதிலை நகரம் தாமரை போன்ற அழகிய கண்களை உடைய இராமனை, விரைவில் வருக என்று அழைப்பதைப் போன்றுள்ளது என்கிறார் கவிச் சக்கரவர்த்தி. இராமன் நகருக்குள் நுழையும் பொழுது மதிலின் மீது இயல்பாகப் பறந்த கொடிகளின் அசைவு, நான் செய்த தவத்தால் திருமகளே மிதிலை நகரில் சீதையாகப் பிறந்துள்ளாள். அவளை மணக்கத் தகுதியுடைய இராமனே விரைந்து வந்து அவளது கைத்தலம் பற்றுவாயாக என அழைப்பதாகக் கம்பர் தனது குறிப்பைப் பாடலில் ஏற்றியுள்ளது அவரது கவிநயத்தையும் கற்பனைத் திறனையும் காட்டுகிறது.
கொடியின் அசைவில் வருக என்னும் வரவேற்புக் குறிப்பு இருப்பதாகப் புலவர் தமது கருத்தைத் தற்குறிப்பேற்ற அணியின் மூலம் கூறும் இன்னுமொரு பாடலை வில்லிபுத்தூரரின் வில்லி பாரதத்தின் இந்திரப்பிரத்தச் சருக்கம் காட்டுகிறது. திருதராட்டிரன் தருமபுத்திரனுக்கு முடி சூட்டுவித்த பின்னர், கண்ணன் இந்திரனோடு விச்சுவகன்மாவையும் வருவிக்கிறார். அப்பொழுது விச்சுவகன்மாவை ஒரு அழகிய நகர் ஒன்று அமைக்குமாறு இந்திரன் கட்டளையிடுகிறார். யாவரும் வியந்து பாராட்டும் வண்ணம் மிகச் சிறப்பான நகரொன்றை அமைக்கிறார் விச்சுவகன்மா. அந்த நகரத்துக்கு கண்ணன் இந்திரப்பிரத்தம் என்று பெயர் சூட்டுகிறார். பாண்டவர்கள் கோபுரத்தில் ஏறி அந்த நகரின் சிறப்பைக் காணுகிறார்கள். இந்திரப்பிரத்த நகரின் மாண்பினை அவர்கள் பலவாறு வியந்து பாராட்டுகிறார்கள். அவர்கள் கூற்றாக கீழ் காணும் பாடல் இடம் பெறுகிறது.
சமர்முகப்பொறிகண்மிக்க தடமதிற்குடுமிதோறும்
குமருறப்பிணித்தபைம்பொற் கொடித்துகிலசைவுநோக்கி
நமர்புரக்கிழத்தியும்பர் நாயகன்புரத்தினோடும்
அமர்பொரப்பற்பல்கையா லழைப்பதுபோலுமென்பார்.
[வில்லி பாரதம், முதற் பாகம், 6. இந்திரப்பிரத்தச் சருக்கம் (31)]
போருக்குத் தயாரான நிலையில் இருக்கும் போர்க்கருவிகள் நிறைந்துள்ள, அந்தப் பெரிய நகரத்தின் மதில்களின் சிகரங்கள் எங்கும் உறுதியாகப் பிணைக்கப்பட்டு பசும்பொன் கம்பங்களின் மீது பறக்கும் கொடிகள் அசைவதைப் பார்க்கும் பொழுது, நமது நகரத்தின் காவல் தெய்வமாகிய இறைவி, தேவர்களின் தலைவனான இந்திரனின் அமராவதி நகரத்துடன் போர் செய்ய விரும்பி தனது பல கைகளையும் அசைத்துப் போருக்கு அழைப்பது போலுள்ளது என்பர்.
இவ்வரிகளில், வலுமிக்கவர் ஒருவர் தனது வலிமை நிலை கண்டு பெருமிதம் மிகக் கொண்டு, வலுவற்றவரை இகழ்ச்சியுடன் வலுச்சண்டைக்கு அழைக்கும் மனநிலையில் இருப்பது போல, நகரத்தின் காவல் தெய்வம் போர்க்கருவிகள் நிறைந்த தனது நகரின் வலிமைகண்டு பூரிப்படைந்து, தனது கைகள்போன்ற மதில்மீது அசையும் கொடிகளை அசைத்து போருக்கு வருக என தேவேந்திரனின் அமராவதி நகருடன் போர் செய்ய அழைப்புவிடுவது போல அமைந்துள்ளது என வில்லிபுத்தூரர் குறிப்பிடுகிறார். கோட்டையின் பாதுகாவலுக்காக மதில் மேல் போர்க்கருவிகளை தயார் நிலையில் பொருத்தி வைக்கும் முறையோ, அம்மதிலின் கோபுர உச்சிகளில் கொடிகள் காற்றில் அசைதலோ இயல்பே என்றாலும், நகரின் பெருமையைக் குறிப்பிட தனது குறிப்பினை இயல்பு நிகழ்வின் மீது ஏற்றிச் சொல்கிறார் வில்லிபுத்தூரர்.
ஆகவே, கொடியசைந்ததும் செய்தி வருவதாகப் புலவர்கள் தற்குறிப்பேற்றம் செய்து, வருக வருக என்று அழைத்ததாகவும், வாராதே போ என்று உரைத்ததாகவும் இருவகைகளிலும் அமைத்துள்ளது கதையின் சூழலுக்கு ஏற்ப திறமையாகக் கையாளும் புலவர்களின் கற்பனை வளத்தினையே காட்டி நிற்கின்றது.
_____________________________________________________________________________________
துணை நின்ற இணையதள பக்கங்கள்:
தற்குறிப்பேற்ற அணி -
http://www.tamilvu.org/courses/degree/d031/d0314/html/d03143l3.htm
சிலப்பதிகாரம் -
http://www.tamilvu.org/slet/l3100/l3100pd5.jsp?bookid=50&pno=15
கம்பராமாயணம் -
http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=56&auth_pub_id=69&pno=420
வில்லி பாரதம் -
http://www.tamilvu.org/slet/l3800/l3800wpn1.jsp?song_no=2211&book_id=57
http://www.tamilvu.org/slet/l3800/l3800wpn1.jsp?song_no=632&book_id=57
_____________________________________________________________________________________
Jun 11, 2016
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் மற்ற மாநிலங்களைவிடப் பல வகைகளில் வேறுபட்டது. குறிப்பாக, அங்கு வாழும் மக்களில் பெரும்பாலோர் பல்லின பின்புலத்தைச் சார்ந்தவர்களாக இருக்கும் நிலை மாநிலத்தின் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து, கல்வி, பொருளாதாரம் எனப் பலவற்றையும் நிர்ணயிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, இம்மாநிலம் எதிர்கொள்ளும் நிகழ்வுகளின் தாக்கம், இம்மாநிலத்தின் எல்லையையும் தாண்டி அமெரிக்க அளவிலும் பாதிப்புகள், மாற்றங்கள் ஆகியவற்றை ஏற்படுத்துவதும் வழக்கம்.
கலிபோர்னியா எந்த அளவு பிற அமெரிக்க மாநிலங்களில் இருந்து வேறுபட்டுள்ளது என்பதைச் சுருக்கமாக விளக்குவதென்றால், அமெரிக்கர் என்றால் பொதுவாக உலக மக்கள் தங்கள் மனதில் உருவகப்படுத்தும் ஐரோப்பாவில் இருந்து குடியேறிய வெள்ளையின மூதாதையர் ஒருவரின் வழித்தோன்றல், கிறித்துவ மதத்தைச் சார்ந்த, ஆங்கில மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருவர் என்ற ஒரு பொதுவான எண்ணத்தை முறியடிக்கும் வகையில் கலிபோர்னியா மாநிலம் வெகு வேகமாக மாறிவருகிறது. சமீபத்திய மக்கட்தொகைப் புள்ளிவிவரத்தின்படி வெகுவிரைவில் கலிபோர்னியாவில் வாழ்பவர்களில் இனி மூவரில் ஒருவர் மட்டுமே உலகமக்களின் கணிப்பில் வாழும் அமெரிக்கராக இருக்கப்போகிறார் என்னும் அளவிற்குச் சிறுபான்மையினர் நிலைக்கு வெள்ளையின மக்கள் தள்ளப்படுகிறார்கள்.
இது பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையிலும் எதிரொலிக்கிறது. தற்பொழுது பள்ளிகளில் பயிலும் 6.2 மில்லியன் மாணவர்களில் பெரும்பான்மையினர், பொதுவாக வழக்கத்தில் அமெரிக்காவின் சிறுபான்மையினர் என்று குறிப்பிடப்படுபவர்களே. அமெரிக்காவில் வாழும் 2.5 மில்லியன் இந்துக்களில் சரிபாதியினர், அதாவது சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான இந்துக்கள் கலிபோர்னியாவில் வசிக்கிறார்கள். இவர்களில் பெரும்பான்மையோர் லாஸ் ஏஞ்சலஸ் பகுதியிலும், சிலிக்கான் பள்ளத்தாக்குள்ள சான்பிரான்சிஸ்கோ பகுதியின் தொழில்நுட்பத்துறைப் பணிகளில் ஈடுபட்டிருப்போரும் ஆவார்கள். மாநில அரசின் கல்வித்துறையின் புள்ளிவிவரப்படி (California State Board of Education; http://www.cde.ca.gov/ds/sd/cb/ceffingertipfacts.asp), கலிபோர்னியா பள்ளி மாணவர்களில் 53% இலத்தீனோ (ஸ்பானிஷ் மொழி பேசும் மெக்சிகோ நாட்டில் இருந்து புலம் பெயர்ந்தோர்) இன மக்கள், 25% வெள்ளையினத்தவர், 12% ஆசியா மக்கள், 6% கறுப்பின மக்கள், இவர்களைத் தவிர்த்த சிறுபான்மையினர் சிலர் தங்களை ஒன்றுக்கும் மேற்பட்ட இனம் என்று குறிப்பிட்டுக் கொள்பவர்கள்.
கலிபோர்னியாவில் வசிப்பவர்களில் ஆசியாவில் இருந்து குடியேறியவர்களின் தலைமுறையினர், அதிலும் தெற்காசியப் பகுதியில் இருந்து குடியேறியோர் வெகு வேகமாக எண்ணிக்கையில் அதிகரித்து வருகின்றனர். இதனால், பல பின்னணி உள்ள அமெரிக்கர்களைப் பற்றி சரியான முறையில் அறிந்து கொள்ளும் வகையில், சமூகவியல் மற்றும் உலக வரலாற்றுப் பாடங்கள் ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படும் முறை மாநிலக் கல்வித்துறையால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பல்லின மக்களின் கருத்துக்களின் அடிப்படையிலும், பல்கலைக்கழகக் கல்வி வல்லுநர்களின் ஆலோசனையின் அடிப்படையிலும், பரிந்துரைகள் பெறப்பட்டு, அவை ஒரு குழுவினரின் கலந்தாய்வுக்கு உட்படுத்தப்பட்டு, தக்க மாற்றங்கள் செய்யப்பட்டு பாடத்திட்டங்கள் சீரமைக்கப்படும் முறை கலிபோர்னியா மாநில அரசின் பள்ளி பாடத்திட்டக் குழுவினரால் (Instructional Quality Commission of California’s Department of Education) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பொதுவாக கலிபோர்னியாவின் கல்வித்திட்டத்தில் கொண்டுவரப்படும் எந்த ஒரு மாற்றமும் அமெரிக்காவின் பிற மாநிலங்களின் கல்வித் திட்டங்களிலும் பின்பற்றப்படும். கலிபோர்னியாவின் மக்கட்தொகையின் தாக்கம் மற்ற மாநிலங்களின் பாடநூல் விற்பனையை நிர்ணயிக்கும் வகையில் அமைந்திருப்பதுதான் இதற்குக் காரணம். பாடநூல் பதிப்பகத்தார் கலிபோர்னியா பாடத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டப் பாடநூல்களை பிற மாநில பள்ளிகளுக்கும் விற்கும் வாய்ப்புகள் அதிகம்.
சென்ற ஆண்டின் இறுதியில் துவங்கி, இந்த ஆண்டும் தொடர்ந்து நடைபெற்ற கல்விச்சீரமைப்பு கலந்தாய்வு நிகழ்விலும் பல இனத்தைச் சார்ந்தவரும் தங்கள் பரிந்துரைகளை வழங்கினர். ஆனால், மிகப் பெரிய அளவில் நாட்டையே திரும்பிப் பார்க்க வைக்கும் நிலையில் அமைந்தது இந்தியர்கள் இந்தியாவைப் பற்றி புகுத்த நினைத்த வரலாற்று மாற்றங்கள்தான். இந்த வரலாறு பற்றிய விவாதங்களின் அடிப்படை… அமெரிக்கப் பள்ளிகளில் இந்தியாவைப் பற்றியும், இந்து மதத்தைப் பற்றியும் பள்ளிப் பாடங்களின் வழியே மாணவர்களுக்கு எவ்வாறு அறிமுகப்படுத்துகிறார்கள்? அமெரிக்காவில் வளரும் தெற்காசிய (இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம், ஸ்ரீலங்கா போன்ற இந்தியத் துணைக்கண்டத்தின் நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறிய குடும்பங்களின்) மாணவர்கள் தங்கள் மூதாதையர்கள் பற்றியும், அவர்கள் கலாச்சாரம் பற்றியும் சமூகவியல் நோக்கில் எந்த வகையில் கற்பிக்கப்படுகிறார்கள்? என்பதைப் பற்றி சுற்றிச் சுழன்றது.
இந்தியப்பகுதியைப் பற்றிய கல்வித்துறைகளின் வல்லுநர்களான பெரும்பான்மையான பல்கலைக்கழகப் பேராசிரியர்களும்; இந்தியாவைத் தவிர்த்த பிற தெற்காசியப்பகுதி நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள், அதாவது, இக்கால இந்தியாவின் அரசியல் எல்லைக்குள் பிறக்காதவராக, தங்கள் வேர்கள் இந்தியாவில் இல்லை என்னும் கருத்து கொண்ட பிரிவினரும்; வரலாறு உண்மையை சரியாகப் பிரதிபலிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களும்; இந்தியத் துணைக்கண்டத்தை பாடங்களில் “தெற்காசியா” என்று குறிப்பதே சரியான முறை என்று பரிந்துரைத்திருந்தனர்.
“இந்தியா” என்பதையே பண்டையக் காலம் முதல் இந்தியாவைப் பற்றி உலகத்தினர் அறிந்திருந்த முறை. கொலம்பஸ் இந்தியாவிற்கு வழி கண்டுபிடிக்கத்தான் கிளம்பினார். அமெரிக்கப் பழங்குடியினரை இந்தியர் எனத் தவறாகக் கருதியே அவர்களை இந்தியர் எனக் குறிப்பிட்டார். இங்கிலாந்தினர், போர்த்துக்கீசியர், பிரஞ்சுக்காரர், மற்றும் டச்சுக்காரர் ஆகியோர் கிழக்கிந்திய நிறுவனம் போன்ற பெயர்களில்தான் இந்தியாவுடன் வர்த்தகத்தைத் துவக்கினார்கள். இந்தியாவின் தெற்கு எல்லை இந்தியப் பெருங்கடல் என்றுதான் குறிப்பிடப்படுகிறது. இவையனைத்தும் தெற்காசியா என்ற அடிப்படையில் அமையவில்லை. இந்தியா என்பதை நீக்கி தெற்காசியா எனக் குறிப்பிடுவது இந்தியர்களின் அடையாளத்தை அழிக்கும் செயல் என்று மாற்றுக் கருத்துகள் கொண்ட வலதுசாரிகள் பரிந்துரைத்தனர்.
சீனாவை கிழக்காசியா என மாற்றி அழைக்காத பொழுது, இந்தியாவை தெற்காசியா என்பது சரியல்ல என்று கருத்துகள் அவர்களால் முன் வைக்கப்பட்டன. வலதுசாரிகள், #DontEraseIndia! என்ற ஹேஷ்டேக் குறிப்புடன் சமூக வலைத்தளங்களிலும் ஆதரவு திரட்டினர். ஐரோப்பிய நாடுகள் என்றால் அந்தக் கண்டத்தில் இருக்கும் நாடுகள் யாவும் எனப் புரிந்து கொள்ள இயலும் போது, வரலாற்றில் இந்தியா என்றால் அது தெற்காசியப் பகுதி நாடுகளைக் குறிக்கும் என்று எவராலும் புரிந்து கொள்ள இயலும் என்றும் இவர்களால் மாற்றுக் கோணம் கொடுக்கப்பட்டது. இவர்கள் கருத்து இக்கால தெற்காசியப் பகுதியை சரிவரக் குறிப்பதற்கு உதவவில்லை என்று கருதியவர்களும் கூட, இந்தக் கருத்து ஒருவகையில் ஒப்புக்கொள்ளக்கூடியதே என்று நினைத்தனர். உண்மையில், வலதுசாரிகளின் கோரிக்கைகள் சரியே என்று எண்ணும் அளவிற்குத்தான் மேம்போக்காக நிகழ்வைக் கவனிப்பவர்கள் புரிந்து கொள்ளும் நிலை ஏற்பட்டது. அந்த வகையில் #DontEraseIndia! என்ற கோரிக்கை திசைதிருப்பும் முறையில் அமைந்தது என்பதையும் மறுப்பதற்கில்லை. இந்தக் கோரிக்கை, இந்திய இந்துத்துவா அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கும் அமெரிக்க இந்திய வலதுசாரி அமைப்பினர் முன்வைத்த 30 மாற்றங்களின் உண்மையான நோக்கத்தை மறைக்கும் விதத்தில் அமைந்திருந்தது.
எவ்வாறு வலதுசாரிகள் இந்தியா என்றால் அது இந்துக்களின் நாடு மட்டுமே என்று கருதுகிறார்களோ, மதச்சார்பற்ற இந்தியாவை இந்துஸ்தானம் என்று கருதுகிறார்களோ, இஸ்லாமியரை வெறுக்கும் அடிப்படை மனநிலை அவர்களால் வெளிப்படுத்தப்படுகிறதோ, இந்தியாவின் பல்லின மக்களும், மாறுபட்ட பின்னணி கொண்ட சிறுபான்மையினரும் இந்தியர்களே என்று ஏற்றுக் கொள்ள விரும்பாமல் உள்ளார்களோ, எவ்வாறு இந்துமதத்தின் சாதி, வர்ணாசிரமப் பிரிவுகள் நல்ல நோக்கத்தில் உருவானது என்ற நம்பிக்கையில் செயல்படுகிறார்களோ அவையாவும் அமெரிக்காவில் வசிக்கும் இந்து வலதுசாரிகளின் பரிந்துரைகளிலும் பிரதிபலித்தது. அமெரிக்கர்களின் பார்வையில் உண்மையான இந்துமத வரலாறு, சமூகவியல் மறைக்கப்பட்டு, குறைகள் பூசி மெழுகப்பட்டு இந்து மதம் பற்றிய ஒரு உயர்ந்த எண்ணம் உருவாக்கும் வகையில் கருத்துக்கள் இவர்களால் கொடுக்கப்பட்டன.
சுருக்கமாகக் கூற வேண்டும் என்றால், அவர்கள் விரும்பும் பொழுது ஒருங்கிணைந்த பண்டைய இந்தியா என்ற கோரிக்கையை வைப்பதும், தங்கள் நோக்கத்திற்கு எதிராகப் பாதகமாக அமையக்கூடிய வகையில் பழமையில் ஊறிப்போனக் கருத்துக்களை எதிர்கொள்ளும் பொழுது இவையிவை தற்கால இந்தியாவின் கருத்தாக்கங்கள், இவை இந்தியாவின் தொன்மை நிறைந்த உண்மை வரலாற்றைக் காட்டவில்லை என்பது போன்ற மறுப்புக்களை முன்வைக்கும் வகையிலும் வலதுசாரிகளின் பரிந்துரைகள் அமைந்திருந்தன.
வரலாறு என்பது நடந்ததை நடந்தபடியே அறிந்து கொள்வதா? அல்லது தங்களை மற்றவர் பார்வையில் உயர்ந்தவராகத் தோற்றம் அளிக்கும் வகையில் குறைகளைப் பூசி மெழுகி, தங்கள் கலாச்சாரத்தை உருவகப்படுத்துவதா? இரண்டாவது கோணமே சரி என்ற எண்ணத்தில் செயல்பட்டனர் வலதுசாரி இந்துக்கள்.
இந்துமதத்தினர் என்றால் அகிம்சை வழியைக் கடைப்பிடிப்போர், தாவர உணவு உட்கொள்வோர், பக்தி, யோகா, அன்பு, கருணை ஆகியவற்றைப் பின்பற்றுவோர் என்ற கோணத்தில் மட்டுமே இந்துமதத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பது இவர்கள் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்துமதத்தின் மற்றொரு கோணமான வர்ணாசிரம தர்மம் என்ற நிலை கடைப்பிடிக்கப்பட்டு வந்ததால், பிறப்பின் அடிப்படையில் மக்களிடையே உயர்வு தாழ்வு கற்பிக்கப்பட்டு இன்றுவரை நிகழும் சாதிக் கொலைகள், ஒடுக்கப்பட்ட பிரிவினர் மீது நடந்துவரும் அடக்குமுறைகள், இந்தியாவில் சிறுபான்மையினர் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள், காலம் காலமாக சமத்துவமற்ற நிலைமையில் கல்வி, செல்வம் ஆகியன மறுக்கப்பட்டு ஆணாதிக்கத்தினால் அடிப்படை உரிமையின்றி வாழ்ந்த பெண்களின் நிலை என்ற இந்திய சமூகநிலையின் மற்றொரு கோணமான அடக்குமுறைக் கலாச்சாரங்களை வலதுசாரிகள் எதிர் கொள்ள விரும்பவில்லை. அவை பாடத்திட்டத்தில் இடம் பெற்று அமெரிக்க மாணவர்கள் அறிந்து கொள்வதையும் அவர்கள் விரும்பவுமில்லை. அத்துடன், இவர்கள் சிந்து சமவெளி நாகரிகம் (Indus Valley civilization) என்பதையும் “சரஸ்வதி-சிந்து நாகரிகம்” (Sarasvati-Sindhu civilization) குறிப்பிட வேண்டும் என்றக் கருத்தையும் பரிந்துரைத்தனர்.
சாதிகள் பற்றியும், ஆணாதிக்க விளைவுகளின் நிகழ்வுகளையும் பெரிதுபடுத்த வேண்டாம் என்று இவர்கள் வைக்கும் கோரிக்கைக்கு ஆதரவாக அவர்கள் அளிக்கும் விளக்கம்; இதனைத் தெரிந்து கொள்வதால் பள்ளியில் பயிலும் இந்திய வழித்தோன்றல்களான மாணவர்கள் பிற மாணவர்களால் கேலி செய்யப்படுகிறார்கள், கேவலமாகப் பார்க்கப்படுகிறார்கள், அவமானப் படுத்தப் படுகிறார்கள். அத்துடன் இந்துமதம் என்பது சாதி, தீண்டாமை ஆகியப்பகுதியை மட்டும் கொண்டதல்ல என்பதாகும்.
ஏன் இந்து மதத்தில் மட்டும்தான் இது போன்ற வர்க்கப் பிரிவுகள், அதன் காரணமாகத் தோன்றிய அடக்குமுறைகள், ஆணாதிக்கம் ஆகியவை இருந்தனவா? பிற மதங்களில் இவை இருந்ததில்லையா? எதற்காக இந்து மதத்தின் இந்த ஒரு கோணத்தைப் பெரிதுபடுத்தி இதுதான் இந்துமதம் என்பது போன்றக் கருத்தை பாடமாக வைக்க வேண்டும்? என்பது போன்றக் கேள்விகளை அடுக்கி, முடிவாக நடுநிலைப்பள்ளி அளவில் (6-7 ஆம்) வகுப்புப் பாடங்களுக்கு இது போன்ற தகவல்கள் பொருத்தமுமல்ல, அவசியமும் கிடையாது என்றக் கருத்தையும் தெரிவித்தார்கள்.
குறிப்பாக அவர்கள் வர்ணாசிரம தர்மத்தை அறிமுகப்படுத்த விரும்புவது, இந்துமதத்தின் அடிப்படையில் இருந்த இது போன்ற பிரிவுகள் சமூகத்தினர் அவரவர் கடமையைச் செய்ய வழிகாட்டுவதன் மூலம் சீரான ஒரு வாழ்வியலுக்கு அடிப்படையாக அமைந்தது என்பதாகும். அத்துடன் சாதிப்பிரிவினை, அதன் விளைவான உயர்வு தாழ்வு கருத்தியல்கள் இந்தியாவின் இந்து மதத்தினரால் மட்டும் கடைப்பிடிக்கப்படவில்லை. இந்தியப்பகுதியில் வாழும் அனைத்து மதத்தினரிடமும் இந்தப் பழக்கம் நடைமுறையில் உள்ளது. ‘தலித்’ என்ற சொல் தற்காலத்தில் புழக்கத்திற்கு வந்தது. அது தொன்மையான இந்துமதத்தின் சாரம் அல்ல. அது பற்றிய குறிப்பு பாடப்புத்தகங்களில் இடம் பெறுவது வரலாற்று நோக்கில் பிழையானது என்பதும் இவர்களது கருத்து.
இதில் வேடிக்கை என்னவென்றால் வலதுசாரிகள் மிகத்தீவிரமாக இந்துமதத்தின் சாதிப்பிரச்சனையை பாடத்திட்டத்தில் இடம்பெறக்கூடாது என்று குரல் எழுப்பிக் கொண்டிருந்த அதே வேளையில், உலகின் மறுபக்கத்தில், இந்தியமண்ணில் சாதிப்பிரிவினைக் கொடுமைகள் தொடர்ந்து அரங்கேறிய வண்ணம் இருந்தது. இந்தியாவில் தலித் பிரிவு மாணவரான ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்ட மாணவர் ரோஹித் வெமுலா தனது வருங்காலக் கனவுகள் கருகியதால், தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்துப் போராடிவிட்டு தற்கொலை செய்து கொண்டார். கலப்பு மணம் செய்து கொண்ட உடுமலை கௌசல்யாவின் கணவர் சங்கர் பட்டப்பகலில் நடுத்தெருவில் படுகொலை செய்யப்பட்டார். தற்கொலை, கொலைக்குப் பலியான இருவாலிபர்களும் உயிரிழந்த காரணம் அவர்கள் தலித் சமூகத்தில் பிறந்ததால் என்பது மறுக்கமுடியாத கசப்பான உண்மையாக இருக்கும் பொழுது, அமெரிக்காவில் இந்தியாவைப் பற்றி அறிமுகப்படுத்தும் பாடத்தில் இந்துமதத்தினரால் கடைப்பிடிக்கப்படும் சாதிப்பிரிவுகள், தலித் வகுப்பினரிடம் நடத்தப்படும் அடக்குமுறைகள் யாவையும் நீக்கும்படி வலதுசாரிகள் கலிபோர்னியாவின் கல்வித் திட்டத்திற்கான கலந்தாய்வில் பரிந்துரைத்துக் கொண்டிருந்தனர்.
இந்தியாவில் வலதுசாரி இந்துத்துவா காவியினர் இந்திய வரலாற்றை மாற்றி அமைக்கும் வகையில் குஜராத், கர்நாடகா மாநிலப் பாடநூல்களில் குளறுபடி செய்து வருவதன் தொடர்ச்சியாக அமெரிக்காவிலும் அதனை நடைமுறைப்படுத்த விரும்பிய நிலைதான் இது. இதையொட்டி அமெரிக்க இந்தியர்கள் இருபிரிவினராகப் பிரிந்து விவாதங்கள் தொடர்ந்தன. வலதுசாரி இந்துத்துவா ஆதரவு பிரிவினர்களைக் கொண்ட குழுவினர் (Hindu American Foundation – HAF; Hindu Education Foundation – HEF; Uberoi Foundation – UF; and the Dharma Civilization Foundation – DCF) செல்வாக்குள்ள பிரிவினர். இவர்கள் இந்தியாவின் வரலாற்றைப் பற்றிய மாயையை முன் வைக்க முயன்றனர். இவர்கள் இந்திய இத்துந்துவாவுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள்.
இந்தப் பழமைவாதிகளின் வாதங்களில் உள்ள பிழைகளைச் சுட்டிக்காட்ட விரும்பியவர்கள் மதச்சார்பற்றவர்கள், வரலாற்று ஆர்வலர்கள், பல்கலைக்கழக ஆய்வாளர்கள் எனப் பலவகை பின்னணிகளைக் கொண்டவர்கள். இவர்களில் பல்வேறு 24 இந்தியப் பிரிவினர் (The South Asian Histories for All Coalition – SAHFA; http://www.southasianhistoriesforall.org/) ஒருங்கிணைந்தனர். இவர்கள் இந்துத்துவா ஆதரவு பிரிவினர்கள் அடிப்படையில் ‘சாதி’ என்ற கருத்தாக்கத்தை இந்திய வரலாற்றில் இருந்து மறைக்க முயல்வதைச் சுட்டிக்காட்டவும் விவாதம் சூடு பிடித்தது. இந்தியா பற்றிய இந்த விவாதம் அமெரிக்கர்கள் பலரின் கவனத்தையும் கவர்ந்தது.
இந்துத்துவா ஆதரவு பிரிவினர் மிகத் தீவிரமாக போராட்டத்தைச் சமூக வலைத்தளம் மூலம் பரப்புவது; இந்துமதத்தைப் பற்றிய தவறான கருத்துக்களை பாடத்தில் வைத்தால் பிறமாணவர்கள் அக்கருத்துக்களைப் பொதுமைப்படுத்தி எங்களை அவமானப்படுத்தினால் நாங்கள் பாதிக்கப்படுவோம் என்று பள்ளிமாணவர்களை அழைத்துப் புலம்ப வைப்பது என்ற முறைகளைக் கையாண்டதுடன், பாடதிட்டக்குழுவினரை அவமதிக்கும் வகையிலும் தங்கள் வாதங்களை வைத்தனர். இதனை பாடத்திட்டக் குழுவின் உறுப்பினர் ஒருவரும் சுட்டிக் காட்டியுள்ளார்.
வலதுசாரி இந்துத்துவா ஆதரவு பிரிவினர்கள் ‘தலித்’ என்ற கருத்துக்கு ஆதரவு தருபவர்களை, இந்துமதத்தின் வகுப்பு வாத நம்பிக்கையால் தலித்துகள் மீது நிகழும் ஒடுக்குமுறையைப் பற்றிக் குறிப்பிடுபவர்களை இந்துமதத்தை அழிக்க நினைக்கும் வேற்றுமதத்தினர் என்றோ, அல்லது கிறித்துவ மத போதகர்கள் என்றோ, அல்லது அவர்கள் கிறித்துவ மதத்தின் கைக்கூலிகள் என்றோ, அல்லது இனவாதம் பேசுபவர்கள் என்றோ, இந்துக்களை வெறுக்கும் மனப்பான்மை கொண்டவர் என்றோ விதம் விதமாக தங்கள் மனம் போனபடி குறிப்பிட்டு அவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை வாசிக்கவும் தயங்கவில்லை.
இரு பிரிவுகளின் வாதங்களையும் கருத்தூன்றிக் கவனித்த கலிபோர்னியாவின் பாடத்திட்டக் குழுவினர், வரலாற்றைப் பற்றிப் பலரும் பற்பலக் கோணங்களை முன் வைக்கலாம், ஆனால் பாடத்திட்டத்தின் நோக்கம் மாணவர்களுக்கு உண்மையான வரலாற்றை அறியத் தருவது மட்டுமே என்று தங்கள் நிலையை வலியுறுத்தினர். முடிவாக, தெற்காசியா என்று குறிப்பதைக் கைவிட்டு ‘இந்தியா’ என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படும் என்று குறிப்பிட்டனர். மேலும், சாதி உயர்வு தாழ்வினால் நிகழ்த்தப்படும் அடக்குமுறைகளின் தோற்றம் இந்துமதத்தில் வேரூன்றிய ஒரு கருத்தாக்கம் என்பதால் ‘தலித்’ என்ற சொல், இந்தியாவில் நிலவும் சாதிப் பிரிவினைகள், இந்துமதத்தின் வர்க்கப் பிரிவுகளைப் பற்றிய செய்திகள், அதனால் இந்தியச் சமூகம் எதிர்கொண்ட விளைவுகள் போன்ற வரலாற்றுச் செய்திகள் பாடத்தில் இருந்து நீக்கப்பட மாட்டாது என்றும் தங்கள் தீர்ப்பை, மே 19, 2016 அன்று முடிவாக வெளியிட்டனர்.
அடுத்தக் கல்வியாண்டில், வரும் செப்டெம்பரில் பள்ளிகள் துவங்கும் பொழுது, கலிபோர்னியப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும் இந்திய வரலாறு மற்றும் சமூகவியல் பாடங்களின் நூல்கள் கலிபோர்னியக் கல்வித் திட்டத்தின் இந்த முடிவின் அடிப்படையிலேயே வெளியிடப்படும். சாதி பற்றிய குறிப்புக்களை மறைக்கப்பட வேண்டும் என முயன்ற இந்துத்துவா அமைப்பினரின் கோரிக்கைகள் இதனால் படுதோல்வியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கலிபோர்னியக் மாநிலக் கல்வித்திட்டத்தில் இந்தியாவைப் பற்றிய கருத்துக்களில் இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்தோர் மாற்றம் வேண்டுவது இது முதல்முறையும் அல்ல. பத்தாண்டுகளுக்கு முன்னரே (2006 இல்) பாடநூல்களில் இந்தியக் கலாச்சாரம் பற்றிக் கற்பிக்கும் பாடத்தில் இந்துமதக் கலாச்சாரத்தை மட்டுமே பெரும்பான்மையாகக் குறிப்பிடவேண்டும் என்றும், இந்தியாவைப் பற்றி அறிமுகப்படுத்தும் பொழுது இந்து மதத்திற்கு முதன்மை நிலை கொடுக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன, அத்துடன் அவை பாடத்திட்டக் குழுவால் புறக்கணிக்கப்பட்டு, அக்கோரிக்கைகள் நிறைவேறாமலும் போயுள்ளன. மேலும், இம்முறையோடு இந்தப் பிரச்சினை முடியப்போவதும் கிடையாது.
ஒவ்வொரு ஆறாண்டுகளுக்கும் கலிபோர்னியக் மாநில அரசின் கல்வித்துறை பாடத்திட்டத்தை மறுபரிசீலனை செய்யும் பொழுதும் மீண்டும் புலம் பெயர்ந்த இந்தியர்கள், அவர்களில் வலதுசாரிகள் உட்பட தாங்கள் விரும்பும் மாற்றங்களை இந்தியக் கலாச்சாரப் பாடங்களில் பரிந்துரைக்க முயல்வர். அமெரிக்க இந்துத்துவா குழுவினர் தாங்கள் விரும்பிய மாற்றங்களை டெக்சாஸ் மாநிலம், ஃபுளோரிடா மற்றும் விர்ஜீனியா மாநிலங்களிலும் ஏற்கனவே நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளனர். அதைப்பற்றியத் தகவல் அவர்களது (hafsite.org) தளத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளது (http://www.hafsite.org/sites/default/files/Texas%20Ed%20Infograph.jpg). இருப்பினும், கலிபோர்னியாவில் அவர்களது முயற்சி (“இம்முறை”) தோல்வி கண்டுள்ளது.
எல்லாவற்றையும்விட மிக முக்கியமாக; அமெரிக்காவில் இந்தியாவைப் பற்றிய கல்வியில் எடுக்கப்படும் முடிவுகள் தமிழகத்தில் பெரும்பான்மையினர் அறிய வழியில்லாது போனது என்பது வருத்தம் தரும் ஓர் உண்மை. ” * வினவு”, ” ** விடுதலை” ஆகிய சீர்திருத்த கருத்துக்களுக்காக நடத்தப்பெறும் பத்திரிக்கைகள் தவிர மற்ற எந்த தமிழ்ப் பத்திரிக்கைகளும் இந்த நிகழ்வைப் பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை என்பது இணையத் தேடலின் மூலம் தெரிய வருகிறது.
_________________________________________________
சான்றுகள்:
[1] Erasing Caste: The Battle Over California Textbooks and Caste Apartheid, May 3, 2016, The Huffington Post, http://www.huffingtonpost.com/thenmozhi-soundararajan/erasing-caste-the-battle_b_9817862.html
[2] Debate Erupts in California Over Curriculum on India’s History, May 4, 2016, The New York Times, http://www.nytimes.com/2016/05/06/us/debate-erupts-over-californias-india-history-curriculum.html?
[3] South Asian Community Debates ‘South Asia,’ ‘India’ Ahead of Textbook Updates, May 16, 2016, NBC News, http://www.nbcnews.com/news/asian-america/south-asian-community-debates-south-asia-india-ahead-textbook-updates-n570671
[4] California Curriculum Body Acknowledges Reality of Caste System; Hindu American Foundation concedes on word “Dalit”, May 19, 2016, South Asian Histories For All, http://www.southasianhistoriesforall.org/
[5] Caste Won’t Be Erased from California Textbooks, Says Committee, May 21, 2016, The Wire, http://thewire.in/2016/05/21/caste-wont-be-erased-from-california-textbooks-says-committee-37669/
[6] Viewpoint: Why Hindu groups are against California textbook change, May 27, 2016, BBC News, http://www.bbc.com/news/world-asia-india-36376110
* கலிபோர்னியா பள்ளிகளில் நுழைகிறது பார்ப்பனிய வரலாறு
http://www.vinavu.com/2016/05/26/rss-deny-caste-discrimination-california-textbooks/
** அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் 6, 7ஆம் வகுப்புப் பாடத் திட்டத்தில் இந்தியாவில் நிலவும் ஜாதி பாகுபாடு பகுதி நீக்கிட முயன்ற இந்துத்துவா சக்திகளுக்குப் படுதோல்வி!
http://viduthalai.in/headline/122778–6-7-.html
Comment
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
முழுமையான கட்டுரை. தேமொழிக்கு பாராட்டுகள். ஆனால், இதை முதல் படியாக வைத்துக்கொண்டு, ஏறி சிக்கல்களை களையவேண்டும். இங்கிலாந்தில்இந்த பிரச்னை இருந்ததாக எனக்கு தென்படவில்லை.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
பல பிறவிக் குறைபாடுகளைத் தீர்க்க மரபணு சிகிச்சையில் வழியுள்ளது என்ற நம்பிக்கை அறிவியல் ஆய்வாளர்களுக்கு உண்டு. மரபணு சிகிச்சை முறையில் தீங்களிக்காத வகையைச் சேர்ந்த நுண்ணுயிர்களான வைரஸ்கள் மரபணுவைக் கடத்தும் ஒரு கடத்தியாக (viral vector) பயன்படுத்தப்படும். வைரஸ்களின் வழியே, ஆரோக்கியமான குறைபாடற்ற மரபணுக்களோ அல்லது குறைபாடு கொண்ட பகுதி சீர் செய்யப்பட்ட மரபணுக்களோ உட்செலுத்தப்படுவதே மரபணு சிகிச்சையின் வழிமுறை. வைரஸ்களில் உள்ள அவற்றின் மரபணுக்கள் நீக்கப்படும், பின்னர் ஆய்வகத்தில் சீரமைக்கப்பட்ட மரபணுக்களோ, அல்லது ஆரோக்கியமான மரபணுக்களோ வைரஸ்களில் செலுத்தப்படும். பிறகு இந்த வைரஸ்கள் நோயாளிகளின் பாதிக்கப்பட்ட உறுப்புகளில் அறுவை சிகிச்சை மூலம் உட்செலுத்தப்படும். இதுநாள் வரை பல மரபணு சிகிச்சைகள் பரிசோதனை அடிப்படையிலேயே பெரும்பாலும் அளிக்கப்பட்டு வருகின்றன.
பரிசோதனை முறையில், இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் குழுவினர் நடத்திய மரபணு சிகிச்சை ஒன்று, மரபணு சிகிச்சையின் மூலம் பிறவிக் குறைபாடுகளுக்கு எதிர்காலத்தில் நல்ல முறையில் நிரந்தரத் தீர்வு கிடைக்க வழியுள்ளது என்ற நம்பிக்கையை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த ஆய்வுமுறை சிகிச்சைமுறையின் முடிவுகள் “நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசன்” (New England Journal of Medicine) என்ற ஆய்விதழில் வெளியாகியுள்ளது.
நான்காண்டுகளுக்கு முன்னர் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் ‘ஜான் ரெட்கிலிஃப் மருத்துவமனையில்’ (University of Oxford’s John Radcliffe Hospital), ‘பேராசிரியர் ராபர்ட் மெக்லாரென்’ (Professor Robert MacLaren) என்பவர் தலைமையில் இச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பிறவிக் குறைபாட்டால் வாழ்வின் மையப்பகுதியில் சிறிது சிறிதாகப் பார்வையை இழந்து, பாதிக்கப்பட்டவர்களைப் பார்வையற்றவர்களாகவே மாற்றிவிடும் இக்குறைபாட்டினை நிறுத்த அல்லது அதனைத் தாமதப்படுத்தும் நோக்கில் மரபணு சிகிச்சை ஆறு பேருக்கு வழங்கப்பட்டது. மீண்டும் அவர்கள் பார்வையைப் பரிசோதித்ததில் அவர்களுக்குப் பார்வை மீட்கப்பட்டிருப்பதும் சிகிச்சை முறை நிரந்தரமாகப் பலன் அளித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
சிகிச்சை அளிக்கப்பட்டவர்களின் பிறவிக் குறைபாடான ‘கோராய்ட்டெர்மியா’ (choroideremia) என்ற பார்வைக்குறைபாடு ஒரே ஒரு மரபணுவில் காணப்படும் கோளாறால் ஏற்படுவது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கண்ணின் ஒளியுணரும் செல்கள் சிறிது சிறிதாக அழிந்து பார்வைக் குறைபாடு ஏற்படும். இதுநாள் வரை இந்தக் குறைபாட்டிற்கு எந்தவகைச் சிகிச்சையும் இல்லாதிருந்தது. அதனால் ஒளியுணரும் செல்கள் அழியத்துவங்குவதை நிறுத்த வழியின்றி, சிறிது சிறிதாக பார்வை குறைந்து, 40 வயதை நெருங்கும் பொழுது பார்வையை நிரந்தரமாக இழக்கும் நிலை இவர்களுக்கு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட இவர்களுக்கு அளிக்கப்பட்ட மரபணுச் சிகிச்சைமுறையில் கோடிக்கணக்கான ஆரோக்கியமான பார்வைக் குறைபாடற்ற மரபணுக்கள் வைரஸ்களில் பொருத்தப்பட்டு, அறுவை சிகிச்சையின் மூலம் இவர்களது கண்ணின் பாதிப்படைந்த விழித்திரை பகுதியில் உட்செலுத்தப்பட்டது.
நான்காண்டுகளுக்குப் பிறகு செய்த சோதனையில், இவர்களது சிலரின் பார்வை மீட்கப்பட்டுள்ளதும், சிலருக்கு ஒளியுணரும் செல்களில் ஏற்படும் அழிவு தடுக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. சிகிச்சை பெற்றவர்களில் ஒருவருக்கு இரவில் வானில் தெரியும் விண்மீன்களை முதன்முறையாகப் பார்த்தபொழுது மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டதும், மற்றவரால் கைப்பேசியில் உள்ள எண்களைப் படிக்க இயன்றதும் குறிப்பிடத்தக்கது. சிகிச்சை பெற்றவர்களின், சிகிச்சை அளிக்கப்படாத மற்றொரு கண்ணின் நிலையுடன் ஒப்பிட்ட பொழுதும், குறைந்த அளவு மரபணு செலுத்தப்பட்ட மற்றொருவருடைய பார்வையுடன் ஒப்பிட்ட பொழுதும் அவை பாதிக்கப்பட்டே இருந்ததில் இருந்து, சிகிச்சை பலனளித்து மரபணு சிகிச்சை ஒளியுணரும் செல்களின் மறுமலர்ச்சிக்கு உதவியது தெளிவானது.
இந்த ஆய்வின் முடிவால், ஒன்றுக்கு மேற்பட்ட மரபணுக்களால் ஏற்படும், இளைஞர்களை பாதிக்கும் ‘ரெட்டினிட்டிஸ் பிக்மெண்ட்டோசா’ என்றவகை பார்வைக் குறைபாடும், முதியவர்களை பாதிக்கும் ‘மாக்குலார் டிஜெனெரேஷன்’ (retinitis pigmentosa and macular degeneration) என்ற மற்றொரு வகைப் பார்வைக் குறைபாடு உள்ளோருக்கும், தொடர்ந்து வரும் ஐந்திலிருந்து பத்தாண்டுகளுக்குள் பார்வையை மீட்க வழியேற்படும் என்று மருத்துவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. நோய்கள் துவங்கும் பொழுதே மரபணு சிகிச்சையை அளித்தால் நோயைத் தடுத்துவிடும் வாய்ப்பு இருப்பதாக இந்தச் சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர்கள் கருதுகிறார்கள். பார்வைக் குறைபாட்டிற்கு அளிக்கப்படும் இந்தச் சிகிச்சை முறை மருத்துவத்தில் ஒரு திருப்புமுனையாகவும் கருதப்படுகிறது. பொதுவான சிகிச்சைமுறைகளில் பலமுறை சிகிச்சை அளித்து ஒரு நோயைத் தீர்க்கும் முறையே வழக்கத்தில் உள்ளது. ஆனால் ஒரே சுற்றில் தீர்வைக் கொடுப்பது இந்த மரபணு சிகிச்சை முறையின் ஒரு சிறப்பு.
Reference:
Thomas L. Edwards, Jasleen K. Jolly, Markus Groppe, Alun R. Barnard, Charles L. Cottriall, Tanya Tolmachova, Graeme C. Black, Andrew R. Webster, Andrew J. Lotery, Graham E. Holder, Kanmin Xue, Susan M. Downes, Matthew P. Simunovic, Miguel C. Seabra, Robert E. MacLaren. Visual Acuity after Retinal Gene Therapy for Choroideremia. New England Journal of Medicine, 2016; DOI: 10.1056/NEJMc1509501
http://www.nejm.org/doi/10.1056/NEJMc1509501
Oxford University research into gene therapy reverses blindness in patients, The Oxford Times - Apr 29, 2016
http://www.oxfordtimes.co.uk/NEWS/14459937.Blindness_reversed_by_pioneering_new_gene_therapy/
University of Oxford. (2016, April 28). Gene therapy shows long-term benefit for treating rare blindness. ScienceDaily. Retrieved May 1, 2016 from www.sciencedaily.com/releases/2016/04/160428152312.htm
Photo credit: University of Oxford. Diagram illustrating how the virus is injected under the retina in operations taking place at the John Radcliffe Hospital, Oxford.
| The Chameleon |
| By James Merrick (1720–1769) |
|
கிரீன் பீஸ் (Greenpeace) பசுமைப் போராளிகள் தலைமையகத்திற்கும், உலக ஐக்கியநாடுகளின் சபைக்கும், உலக நாடுகளின் அரசாங்கங்களின் கவனத்திற்கும் ….
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை திட்டத்தின் குறிக்கோளின் படி, வளரும் மக்கட்தொகையின் தேவையை நிறைவு செய்யும் வகையில் உலகளாவிய முறையில் உணவு, தீனி, தீவனங்கள் உற்பத்தியின் அளவு வரும் 2050ஆம் ஆண்டுக்குள் சுமார் இருமடங்காக அதிகரிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிரீன் பீஸ் பசுமைப் போராளிகள் தலைமையின்கீழ் நவீன வேளாண்முறைகளை எதிர்க்கும் அமைப்புகள், தொடர்ந்து இந்த உண்மைகளை மறுத்து வருவதுடன், உயிரியல் தொழில்நுட்ப ஆய்வின் அடிப்படையில் புதுமைகளைப் புகுத்தும் செம்மை வேளாண் முறைகளையும் எதிர்த்து வருகின்றனர். இவர்கள் நவீன உயிரியல் தொழில்நுட்ப முறையில் முன்னெடுக்கப்படும் செம்மை வேளாண் முறைகளின் பயன்,ஆபத்து, தாக்கம் ஆகியன பற்றிய தவறானக் கருத்துக்களைப் பரப்புவதுடன், அனுமதிக்கப்பட்ட கள சோதனை முறைகள், வேளாண் ஆய்வுத் திட்டங்களைத் தடைசெய்து குலைக்கும் குற்றங்களையும் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
உலகம் முழுவதும் இயங்கும் கிரீன் பீஸ் பசுமைப் போராளிகளுக்கும், அவர்களது ஆதரவாளர்கள் அமைப்பிற்கும் எங்களது வேண்டுகோள்.உயர் தொழில் நுட்ப உயிரியல் அடிப்படையில் நவீன வேளாண்மையை மேற்கொள்ளும் உழவர்களையும், அதனால் பெறப்பட்ட உணவை நுகர்வோரின் அனுபவங்களையும் கேட்டு உங்களுடைய கருத்துக்களை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். அறிவியல் அறிஞர்கள் குழு தரும் சான்றுகளுடன் கூடிய தகவலையும், வேளாண்மையை கண்காணித்துக் கட்டுப்படுத்தும் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வமான அறிக்கைகளையும் அறிந்து அங்கீகரிக்கும்படியும், பொதுவாக மரபணு மாற்றம் செய்த உணவை எதிர்ப்பதையும்,குறிப்பாக ‘கோல்டன் ரைஸ்’ (Golden Rice) திட்டத்தை எதிர்ப்பதையும் கைவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உலகம் முழுவதுமுள்ள அறிவியல் அமைப்புகளும், வேளாண்மை கட்டுப்பாடு நிறுவனங்களும் தொடர்ந்து, எந்த மாறுதலுமின்றி உயிரியல் தொழில்நுட்ப அடிப்படையில் உற்பத்தி செய்யப்படும் உணவை உண்பது பாதுகாப்பானது என்றும், பிற பயிரிடும் முறைகளில் விளைவித்த உணவுடன் ஒப்பிடும்பொழுதும், அவற்றைவிடவும் பாதுகாப்பான உணவே இவை என்றுதான் கூறி வருகின்றனர். இவற்றை உண்டதால் எதிர்விளைவை உருவாக்கியதாகவும், உடல் நலத்தைப் பாதித்ததாகவும் இவற்றை உண்ட மனிதர்களிடமோ, விலங்குகளிடமோ கண்டதாக இதுநாள்வரை ஒரே ஒரு உறுதிப்படுத்தப்பட்டசெய்தி கூடக் கிடைத்ததில்லை. இவற்றால் சுற்றுச்சூழலின் மீது ஏற்படும் சேதங்களும் குறைவென்றே மீண்டும் மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது. உலகத்தில் பலவகை உயிரினங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இதனை வரமாகவும் கருதலாம்.
கிரீன் பீஸ் பசுமைப் போராளிகள் ‘கோல்டன் ரைஸ்’ திட்டத்தின் எதிர்ப்பை முன்னெடுத்துள்ளார்கள். உயிர்ச்சத்து A குறைபாடு (vitamin A deficiency-VAD), குறைபாட்டின் விளைவாக ஏற்படும் நோய்களையும், இறப்புகளையும் குறைக்கவும், அறவே ஒழிக்கும் திறனையும் கொண்டது ‘கோல்டன் ரைஸ்’ திட்டம். ‘கோல்டன் ரைஸ்’ உற்பத்தியால் வறுமையில் உழலும் ஆப்பிரிக்க மற்றும் தெற்காசிய மக்களும் இதனால் நல்ல பயனடைய முடியும்.
உலக சுகாதார நிறுவனம் உலகில் 250 மில்லியன் மக்கள் உயிர்ச்சத்து A குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று கணிக்கிறது. இவர்களில் 40 விழுக்காட்டினர் வளரும் நாடுகளில் வசிக்கும் ஐந்து வயதுக்கும் குறைவான குழந்தைகள். ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (The United Nations Children’s Fund -UNICEF) தரும் புள்ளிவிவரங்களின் படி, ஒவ்வொரு ஆண்டும் தடுக்கப்படக்கூடிய இந்த உயிர்ச்சத்து A குறைபாட்டால் ஏற்படும் நோய்க்கு ஒன்றிலிருந்து இரண்டு மில்லியன் மக்கள் உயிரிழக்கிறார்கள் எனத் தெரிகிறது. உயிர்ச்சத்துக் குறைவின் காரணமாக நோய் எதிர்ப்புச் சக்தியை இழந்து குழந்தைகளும் சிறுவயதினரும் இந்த ஆபத்தை எதிர்கொள்கிறார்கள். உலக அளவில், குழந்தைகள் பார்வையை இழப்பதற்கு முதன்மைக் காரணமாக இருக்கும் உயிர்ச்சத்து A குறைபாட்டினால் ஆண்டுதோறும் 250,000 – 500,000 குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களில் பாதி பேர் பார்வையை இழந்து 12 மாதங்களுக்குள் இறந்துவிடுகிறார்கள்.
குறிப்பாக, ‘கோல்டன் ரைஸ்’திட்டத்திற்கான எதிர்ப்பைக் கைவிடும்படியும்; பொதுவாக, உயிரியல் உயர் தொழில்நுட்ப முறையில் மேம்படுத்தப்பட்ட பயிர்களையும் உணவுகளையும் எதிர்ப்பதைத் தவிர்க்கும்படியும், கிரீன் பீஸ் பசுமைப் போராளிகளிடம் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
குறிப்பாக, கிரீன் பீஸ் பசுமைப் போராளிகளின் ‘கோல்டன் ரைஸ்’ திட்டத்திற்கான எதிர்ப்பைப் புறக்கணிக்கும் படியும்; பொதுவாக, உயிரியல் உயர் தொழில்நுட்ப முறையில் மேம்படுத்தப்பட்ட பயிர்கள் மற்றும் உணவுகள் மீது அவர்கள் காட்டும் எதிர்ப்பைப் புறக்கணிக்கும் படியும்; தங்களுக்குள்ள அதிகாரத்தின் மூலம்கிரீன் பீஸ் பசுமைப் போராளிகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும்படியும்; உழவர்களுக்கு நவீன உயிரியல் தொழில்நுட்ப வேளாண்மை முறைகளில் உதவுவதை அதிகரிக்கும்படியும்; குறிப்பாக நவீன உயிரியல் உயர் தொழில்நுட்பமுறையில் மேம்படுத்தப்பட்ட விதைகளை வழங்குமாறும் உலக நாடுகளின் அரசாங்கங்களை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
அறிவியல் ஆய்வு முடிவுகளுடன் முரண்பட்டுக் கூறப்படும் கருத்துகள், உணர்வின் அடிப்படையிலும், வீம்பான பிடிவாதத்தினாலும் எழுப்பப்படும் கருத்துகள் தடைசெய்யப்பட வேண்டும்.
‘மனித இனத்திற்கு எதிரான குற்றம்’ என நாம் இதனைக் கருதுவதற்கு முன்னர் எத்தனை ஏழை மக்கள் இறக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
உண்மையுள்ள,
செம்மை வேளாண் முறைகளுக்கும்,
மரபணு மாற்றம் செய்த உணவுக்கும்
ஆதரவாளர்களான நோபல் பரிசு பெற்ற
110அறிஞர்களின் கையொப்பம்.
http://supportprecisionagriculture. org/view-signatures_rjr. html
http://supportprecisionagriculture. org/nobel-laureate-gmo-letter_rjr. html
கடந்த 50 ஆண்டுகளாக (1962 முதல் சென்ற ஆண்டு வரை) நோபல் பரிசு அளித்துப் பாராட்டப்பட்ட 110 அறிஞர்கள் இந்த அறிக்கையில் கையொப்பமிட்டுள்ளனர். இவர்களில் மருத்துவம் (37%), வேதியியல் (31%), இயற்பியல் (23%), பொருளியல் (7%), இலக்கியம் (1%), அமைதி (1%) துறைகளைச் சார்ந்த அறிஞர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு: மரபணு மாற்றம் செய்த உணவுகளை எதிர்க்கும் பிரிவினருக்கு கண்டனம் தெரிவிக்கும் நோபல் பரிசு பெற்ற அறிஞர்களின் இக்கடிதம் ஜெர்மன், துருக்கி, ஸ்பானிஷ், சீனமற்றும் பிரஞ்சு மொழி பெயர்ப்புகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தின் மொழிபெயர்ப்பு தமிழில் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இக்கடிதம் supportprecisionagriculture. org (http://supportprecisionagriculture. org/nobel-laureate-gmo-letter_rjr. html) என்ற செம்மை வேளாண்மையை ஆதரிக்கும் குழுவினரின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அறிவியல் அறிஞர்களின் கோணத்தை முன்வைக்கும் நோக்கத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள முயற்சி இது.
________________________________________
From News Media
Washington Post -
107 Nobel laureates sign letter blasting Greenpeace over GMOs
New York Times -
Stop Bashing G.M.O. Foods, More Than 100 Nobel Laureates Say
http://www.nytimes.com/2016/07/01/us/stop-bashing-gmo-foods-more-than-100-nobel-laureates-say.html
Forbes -
Nobel Laureates Line Up To Support GMOs And Push Back Greenpeace
மிக அருமையான தொகுப்பு, தேமொழி அவர்களே. வணிகப் பெருவழி மிக அருமை. மற்றவற்றை பொறுத்துத் தான் படிக்க வேண்டும். எங்களுடைய குலதெய்வம் பூர்ண புஷ்கல சாத்தையா. எங்கள் மூதாதையார் திருச்செந்தூர் பக்கத்திலிருந்து வந்து குடந்தைக்கு ஒரு நூறு வருடத்திருக்கும்முன் வந்து சேர்ந்தனர். அங்குள்ள ஆதிகால சாத்தையா கோயிலிலிருந்து பிடிமண் கொண்டு வந்து குடந்தை மகாமகக் குளக்கரையில் குலதெய்வக் கோயிலெழுப்பினர். இன்றும் புணரமைப்புகள் செய்யப்பட்டு சிலை திருடு போனதால் சிலையில்லாமல் ஆயுதங்களுடன் உள்ளது.
முற்காலப் பாண்டியர்கள் சமணத்தை ஆதரித்ததால் சமண ஆசிவகத் தொடர்புடைய பெயர்கள் அதிகாரிகளுக்கு ஏராளமாயுள்ளனவா?
நெடுஞ்சடையன் பராந்தகன் (வரகுணன்) கி.பி.768-815 ஆகிய காலத்தில் ஆண்ட பாண்டிய அரசனின் அரசியலை திறம்பட நடத்திய அதிகாரிகள் மாறன்காரி, மாறன் எயினன், சாத்தன் கணபதி, ஏனாதி, சாத்தஞ்சாத்தன், தீரதிரன் மூர்த்தி எயினன், சங்கரன் சீதரன் போன்றோர்...
பாண்டியனின் மகாசாமந்தனாகப் பணி புரிந்த சாத்தான் கணபதி திருப்பரங்குன்றத்தில் சிவபெருமானுக்குக் குகைக் கோயிலொன்றினை அமைத்துள்ளான். ஏனாதி சாத்தஞ்சாத்தன் பாண்டியரின் படைத்த்லைவனாகத் திகழ்ந்தான்.
சீமாறன் சீவல்லபன் ஆட்சியில் பொதுப் பணிகள் பலவற்றைச் சிறப்புறச் செய்த இவன் கூலவாணிகன் சாத்தனாரின் வழிவந்தவனாக இருக்கலாம் என்று சதாசிவ பண்டாரத்தார் ஐயமுறுகிறார். இராமநாதபுரம் சாத்தூர் வட்டம் எருக்கங்குடிக் கல்வெட்டு இவன் பல ஏரிகளையும் கிணறுகளையும் கால்வாய்களையும் வெட்டினான் என்கின்றது. இவன் யாரென்று தான் தெரியவில்லை.
வீரபாண்டியன் ஆட்சி யில் அரசியல் அதிகாரிகள் தமிழ்வேள், தென்னவன் தமிழவேள், விக்கிரம பாண்டிய மூவேந்த வேளான், சோழாந்தக பிரும்மராயன், பாண்டி மார்த்தாண்ட பல்லவரையன், சாத்தன் தமிழன் (மூர்க்க விச்சாத்திர பல்லவரையர்), சோழாந்தகப் பல்லவரையர், தென்னவன் கண்டன் சாத்தன். இதில் தென்னவன் கண்டன் சாத்தன் கீழ்மாத்தூர் கோயிலைச் சேர்ந்த இருந்தையூரிலிருந்த தேவதான நிலங்களைச் சரிபார்த்தான்.
...
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
தனது காதல் துணையைத்தொடர்பு கொள்ள நினைத்தபொழுதே அலைபேசியை எடுத்து குறுஞ்செய்தியாகவோ, அல்லது உரையாடலாகவோ, அல்லது காணொளி மூலம் பேசும் அளவிற்குத் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட காலம் இது. ஆனால் அக்காலத்துக் காதலர்களுக்கு அந்த வாய்ப்பு இருந்ததில்லை. தங்கள் காதலை மடல்கள் வழி தெரிவித்தனர். தமிழிலக்கியத்தில் தலைவன் தலைவியின் காதலை வளர்ப்பதில் தோழன் தோழியரது பங்கும் பெரும் பங்கு. தோழியும், தோழனும், விறலியும், பாணனும் காதலர்களின் காதல் கைகூட தூது சென்ற வண்ணம் இருந்தனர்.
மனிதர்களைத் தவிர்த்து கிளி, மேகம், அன்னம் என்று பலவற்றையும் காதலர்கள் தூதனுப்பியதாகவும் பாடல்கள் உள்ளன. உண்மையில் அவை செய்தியைக் கொண்டு சேர்த்தன என்று சொல்ல வழியில்லை. அது ஒருவகை உளவியல் அணுகுமுறை. தனது மனத்தில் உள்ள காதலை பெற்றோரிடமோ, தோழியிடமோ தெரிவித்து, தலைவன் அல்லது தலைவி மீது தான் கொண்ட அன்பை வெளிப்படையாக சொல்லத் தயங்கும் நேரத்தில் கிளி, அன்னம், மயில் போன்று பதில் ஒலி எழுப்பக்கூடிய பறவைகளிடமோ; அல்லது மேகம், தென்றல், அலை போன்று தன்போக்கில் கடந்து செல்வனவற்றிடம் தூது சொல்லி தங்கள் மனநினைவுகளை அசைபோடும் முறையின் வெளிப்பாடு அது. அன்னம், மயில், கிளி, முகில், நாரை, குயில், நெஞ்சம், தென்றல், வண்டு என்பன தூதாக அமைத்துப் பாடுவதற்குச் சிறந்தவை என்பது தமிழறிஞர்கள் கருதியுள்ளதாகத் தெரிகிறது. தமிழ் கூட தூது செல்வதாக இலக்கியம் உண்டு.
காளமேகப் புலவரின் பாடல் ஒன்று,
தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது
தூதிதூ தொத்தித்த தூததே – தாதொத்த
துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது
தித்தித்த தோதித் திதி
இவ்வாறாக தூதனுப்ப விரும்பும் பெண்ணின் மனநிலையைக் காட்டும்.
இச்செய்யுளின் வரிகள் பதம் பிரித்து…
தாதி தூதோ தீது, தத்தை தூது ஓதாது!
தூதி தூது ஒத்தித்த தூததே – தாதொத்த
துத்தி தத்தாதே தேதுதித்த தொத்து தீது
தித்தித்தது ஓதித் திதி
ஆனால், பதம் பிரித்தாலும் பொழிப்புரையின்றி எளிதில் பொருள் கொள்ளும் வகையில் இப்பாடல் அமைந்திருக்கவில்லை என்பதை மறுக்க இயலாது. “அடிமைப் பெண்ணின் வழி அனுப்பும் தூது நன்மை தராது; கிளியைத் தூது அனுப்பினால் அதுவும் பேசாது; தோழியை அனுப்பினால் தாமதமாகும்; பூக்களின் தாது போல என் மேனியில் படர்ந்த தேமலும் மறைய தெய்வமும் உதவப்போவதில்லை; அதனால் இனிக்கும் வகையில் அமைந்த என் காதலன் குறித்துப் பேசிக்கொண்டே இருப்பேன்” என்கிறாள் அந்தப் பெண்.
இப்பாடலின் கருத்து கண்ணதாசனின் எழுத்தில் எளிமையும் இனிமையும் கொண்ட வகையில் …
அடிமைத் தூது பயன்படாது கிளிகள் பேசாது
அன்புத் தோழி தூது சென்றால் விரைவில் செல்லாது
தெய்வத்தையே தொழுது நின்றால் பயனிருக்காது – இளம்
தேமல் கொண்ட கன்னி வாழ இனியது கூறு.
என எளிதில் பொருள் புரியும்படி அமைந்திருக்கும். இது போல கிளியிடம் தங்கள் காதல் குறித்து பேசிக் கொண்டிருப்பது பெண்களுக்கு மன ஆறுதலைத் தந்திருக்கிறது என்பது தெளிவு. கிளிகள் பேசாது என்று தெரிந்துமே கிளியிடம் தங்கள் மனநிலையைப் பெண்கள் கூறி வந்துள்ளனர். இந்த முயற்சிகளின் பலனாக அழகிய நயம் மிக்க பாடல்களும்; இலக்கியம் வழி அக்கால வாழ்க்கைமுறை பற்றிய செய்திகளை நாம் அறியமுடிவதுமே நாம் அடையும் பயன்கள்.
பலவற்றை தூதனுப்பினாலும் கிளிக்கு தூதிலக்கியத்தில் தனி இடம் உண்டு. கிள்ளை, தத்தை என்றும் அழைக்கப்படும் கிளியைத் தூதுவிடுவதாக கிளிகளுடன் பேசிக் கொண்டிருக்கும் பாடல்கள் சங்க இலக்கியங்கள் முதற்கொண்டு கண்ணதாசன் இயற்றிய தற்கால ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படப் பாடல் வரை உள்ளது.
மதுரை மருதன் இள நாகனார் இயற்றிய அகநானூற்றுப் பாடலில் …
செம்தார்ப் பைம்கிளி முன்கை ஏந்தி
இன்றுவரல் உரைமோ சென்றிசினோர் திறத்துஎன
இல்லவர் அறிதல் அஞ்சி மெல்லென
மழலை இன்சொல் பயிற்றும்
நாண்உடை அரிவை மாண்நலம் பெறவே
அகநானூறு – பாடல்: 34 (வரிகள் 14-18)
அரிவை ஒருத்தி (அரிவை என்பவள் பதின்ம வயது கடந்து, 20-25 அகவை கொண்டவள் என்று அகவையைக் குறிக்கும் சிதம்பரப் பாட்டியல் பாடல் ஒன்று குறிக்கிறது), சொல்லுவதை திருப்பிச் சொல்லக் கூடிய கிளிப்பிள்ளை ஒன்றை முன்கையில் ஏந்தி, அதனை தனது முகத்தருகே கொண்டுவந்து கிசுகிசுத்த குரலில், என்னைப் பிரிந்து சென்ற என் தலைவர் “இன்று வருவார் எனச் சொல்வாயாக” என்று கூறுகிறாள். தான் கூறுவது தனது இல்லத்தில் இருக்கும் யார் காதிலும் விழுந்துவிடுமோ என்று அஞ்சி நாணத்துடன் தாழ்ந்த குரலில் கிளியிடம் தனது தலைவன் பற்றிப் பேசுகிறாள் அந்த இளம்பெண் என்று கூறுகிறது இந்தச் சங்க காலப் பாடல்.
தூதுக்காகவே இயற்றப்பட்ட இலக்கியங்கள் தமிழில் சிற்றிலக்கியங்கள் என்ற பிரிவில் வகைப்படுத்தப்படுகின்றன. அவற்றில் ஒன்று “அழகர் கிள்ளை விடு தூது” என்பது. திருமாலிரும் சோலை மலையில் (அழகர் மலையில்) வதியும் அழகர் என்ற திருமாலிடம் காதல் கொண்ட பெண்ணொருத்தியால் கிளி ஒன்று தூது அனுப்பப்படுவதாக இயற்றப்பட்ட இலக்கியம் இது. ஏறக்குறைய 250 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ‘பலபட்டடைச் சொக்கநாதப்பிள்ளை’ என்பவர் இயற்றிய இலக்கியம் அழகர் கிள்ளை விடு தூது. இவரின் நோக்கம், கிளியிடம் தூது சொல்லும் பெண்ணின் வாயிலாகத் திருமாலின் பெருமையைக் கூறுவது.
இந்த அணுகுமுறையை “சொல்ல வல்லாயோ? கிளியே!” என்ற பாடலில் பாரதியாரும் கையாண்டுள்ளார்.
சொல்ல வல்லாயோ? கிளியே!
சொல்ல நீ வல்லாயோ?
வல்ல வேல் முருகன் தனை இங்கு
வந்து கலந்து மகிழ்ந்து குலா வென்று
(சொல்ல)
தில்லை யம்பலத்தே-நடனம்
செய்யும் அமரர்பிரான்-அவன்
செல்வத் திருமகனை- இங்கு வந்து
சேர்ந்து கலந்து மகிழ்ந்திடு வாயென்று
(சொல்ல)
அல்லிக் குளத்தருகே-ஒரு நாள்
அந்திப் பொழுதினிலே-அங்கொர்
முல்லைச் செடியதன்பாற்-செய்த வினை
முற்றும் மறந்திடக் கற்றதென் னேயென்று
(சொல்ல)
பாலை வனத்திடையே-தனைக் கைப்
பற்றி நடக்கையிலே-தன் கை
வேலின் மிசையாணை-வைத்துச் சொன்ன
விந்தை மொழிகளைச் சிந்தைசெய் வாயென்று
(சொல்ல)
(கிளி விடு தூது – பாரதியார்)
என்று பாரதியார் கிளியைத் தூதனுப்பும் பெண் ஒருத்தியைத் தனது பாடலின் வழி நமக்கு அறிமுகப்படுத்துவார். அந்தப் பெண் வடிவேல் முருகனிடம் தனது உள்ளக்கிடக்கையை அறிவிக்குமாறு, தனது காதலைக் குறித்து கிளியிடம் உரையாடுகிறாள்.
தனது காதலைக் குறித்து கிளியிடம் பேசிக் கொண்டிருக்கும் பெண்ணைச் சித்தரிக்கும் காட்சி ஒன்றுக்காக கவிஞர் கண்ணதாசன் எழுதிய கீழ் காணும் பாடலின் திரைக்காட்சி, சங்கப் பாடல் குறிக்கும் கிளியுடன் பேசும் பெண்ணை நம் கண் முன் கொணரும்.
தத்தை நெஞ்சம் முத்தத்திலே தித்தித்ததா இல்லையா
முத்தம் அந்த தத்தை நெஞ்சில் வித்திட்டதா இல்லையா
கத்தும் கடல் முத்துக்களால் பொட்டிட்டதா இல்லையா
பொட்டிட்டதில் அத்தான் நெஞ்சைத் தொட்டிட்டதா இல்லையா
தத்தை நெஞ்சம் முத்தத்திலே தித்தித்ததா இல்லையா
முத்தம் அந்த தத்தை நெஞ்சில் வித்திட்டதா இல்லையா
கொத்தும் கிளி கன்னங்களில் கோடிட்டதா இல்லையா
கோடிட்டதால் கோடி சுகம் நேரிட்டதா இல்லையா
தத்தை நெஞ்சம் முத்தத்திலே தித்தித்ததா இல்லையா
முத்தம் அந்த தத்தை நெஞ்சில் வித்திட்டதா இல்லையா
கண் பட்டதும் கை பட்டதும் புண் பட்டதா இல்லையா
புண் பட்டதும் பெண்மை கொஞ்சம் பண் பட்டதா இல்லையா
தத்தை நெஞ்சம் முத்தத்திலே தித்தித்ததா இல்லையா
முத்தம் அந்த தத்தை நெஞ்சில் வித்திட்டதா இல்லையா
(திரைப் படம்: சர்வர் சுந்தரம்; பாடல்: கண்ணதாசன், காணொளி: https://www.youtube.com/watch?v=Itoc9VIF1Aw)
தமிழிலக்கியங்களில் பலபருவத்திலும் பெண்கள் தங்கள் விளையாட்டுத் துணையாக கிளிகளை வைத்திருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றைத் தங்கள் தோழியாகவே அவர்கள் கருதும் நிலையும் இருந்திருக்கிறது.
‘குழமகனை அடையாளம் கலிவெண் பாவால்
கூறிஅவன் மறுகணையக் காதல் கூர்ஏழ்
எழிற்பேதை பதினொன்று பெதும்பை பன்மூன்று
இயல்மங்கை பத்தொன்பான் மடந்தை ஐயைந்து
அழகரிவை முப்பஃதோர் தெரிவை நாற்பான்
ஆம்வயது பேரிளம்பெண் முதலாய் உள்ளோர்
தொழஉலாப் போந்தது உலா.’
என்று ‘சிதம்பரப் பாட்டியல்’ உலா இலக்கியத்தின் இலக்கணம் கூறுகின்றது. உலாவரும் தலைவனைக் கண்டு அவன் மீது காதல் கொண்டு வருந்தும் ஏழு பருவத்துப் பெண்களின் நிலையைக் கலிவெண்பாப் பாட்டினால் கூறுவது என்பதே உலா இலக்கியத்துக்கு இப்பாடல் கூறும் இலக்கணம்.
இந்த இலக்கணப்படி அமைந்து, பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் எனும் ஏழு பருவத்துப் பெண்களும் சோழமன்னன் உலா வரும்பொழுது அவனைக் கண்டு தங்கள் மனநிலையை அல்லது காதலை வெளிப்படுத்துவதாக இயற்றப்பட்ட இலக்கியம் கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் இயற்றிய மூவருலா.
மூவருலாவில் ஏழு வயது, பேதை அகவைச் சிறுமி ஒருத்தி கிளி வைத்திருப்பதையும்; இருபது வயதுகளில் இருக்கும் அரிவை வயதுடைய இளம்பெண்ணும் கிளி வைத்திருப்பதையும் கீழ்காணும் வரிகள் குறிப்பிடுகின்றன.
பிரியாப் பருவத்துப் பேதை – பரிவோடு
பாவையு மானும் மயிலும் பசுங்கிளியும்
பூவையும் அன்னமும்
மூவர் உலா – விக்கிரம சோழனுலா, “பேதை” (232-234)
பாடிய பூவைக்கும் யாதும் பரிவின்றி
ஆடிய தோகைக்கும் அன்பின்றிக் – கூடிய
கிள்ளைக்குந் தம்மிற் கிளரும் இளவன்னப்
பிள்ளைக்கு மாற்றாள் பெயர்ந்துபோய்க் – கொள்ளை
மூவர் உலா – விக்கிரம சோழனுலா, “அரிவை” (493 – 496)
பல பருவத்துப் பெண்களும் மான், மயில், அன்னம், கிளி ஆகியவற்றை தங்கள் செல்ல விலங்குகளாக வளர்த்து உறவாடியதைத் தமிழிலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. அவற்றுடன் தங்கள் மனநிலையைப் பகிர்ந்து கொள்வதும் பெண்களின் வழக்கமாகக் காண்பிக்கப்படுகிறது.
இலக்கியங்களில் அன்றி, தமிழகத்தின் புகழ் பெற்ற தெய்வங்களாகக் கருதப்படும் மதுரை மீனாட்சியும், திருவில்லிபுத்தூர் ஆண்டாளும் தங்கள் கைகளில் கிளிகளை ஏந்தி கட்சி தருபவர்கள்.
மீனாட்சி வலக்கையிலும், ஆண்டாள் இடக்கையில் கிளியை ஏந்தியிருப்பதாகச் சிலைகளில் காட்டப்படுகின்றது.
கள்ளவிழ் கோதை விசும்புற வீசுவ
கண்ணுதல்பாற்செலநின்
கையில் வளர்த்த பசுங்கிளியும்வளர்
காமர்கருங்குயிலும்
குமரகுருபரர் இயற்றிய மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் – அம்மானைப்பருவம் (82)
என்று மீனாட்சி கையில் பசுங்கிளி ஏந்தியிருப்பதாகக் குமரகுருபரர் தனது பிள்ளைத்தமிழில் குறிப்பிடுகிறார்.
மதுரையில் குடிகொண்ட சிவனை வணங்கித் தனது பாவம் தொலைக்க வந்த இந்திரனுக்கு வழிகாட்டியதால் மீனாட்சியின் கையில் கிளி அமரும் பேறு பெற்றதென்பது ஒரு தொன்மக் கதை. தனக்காகக் கிளி வடிவில் திருவரங்கனிடம் தூது சென்ற ‘சுகப்பிரம்மர்’ வேண்டுகோளின்படி அவரை ஆண்டாள் தனது கையில் கிளியாக இருக்க ஏற்றுக் கொண்டாள் என்பதும் ஒரு தொன்மக் கதை. இப்பெண் தெய்வங்களின் கையில் இருக்கும் கிளிகள் பக்தர்களின் வேண்டுகோளைச் செவிமடுத்து மீண்டும் மீண்டும் இத்தெய்வங்களிடம் கூறி, நினைவுபடுத்தி பக்தர்களுக்கு உதவி செய்வதற்காக இப்பெண் தெய்வங்கள் தங்கள் கைகளில் கிளிகளை ஏந்தியுள்ளார்கள் என்பதும் ஒரு தொன்மம்.
இத்தொன்மக் கதைகளைத் தவிர்த்து நோக்கினால்; மீனாட்சியும் ஆண்டாளும் சங்கப் பாடல் காட்டும் பெண்ணைப் போல, ‘செந்தார்ப் பைங்கிளி முன் கை ஏந்திய’ ஒரு தமிழ்ப் பெண்ணொருத்தியை ஒத்திருப்பதாகக் கொள்ளலாம்.
அணை உடைந்ததால், பெருவெள்ளம் ஒன்று ஏற்பட்டு அதன் முடிவில் பண்டைய நாகரிகம் ஒன்று உருவானதற்குச் சான்றுகள் கிடைத்துள்ளன என்று விளக்கமளித்த அறிவியல் கட்டுரை ஒன்றும்; அணை உடைந்ததால், பெருவெள்ளம் ஒன்று ஏற்பட்டு அதன் முடிவில் பண்டைய நாகரிகம் ஒன்று அழிந்தது என்ற ஒரு கற்பனைக் கதையினை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படம் ஒன்றும் அடுத்தடுத்து வெளியாகி அண்மையில் கவனத்தைக் கவரும் வகையில் அமைந்தன.

அணை உடைந்து, பெருவெள்ளம் ஏற்பட்டு இறுதியில் நாகரிகம் ஒன்று உருவானது நிகழ்ந்தது சீனாவில். மாமன்னர் யூ உருவாக்கிய “ஷா குலப் பேரரசு” (Xia dynasty) குறித்த தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளதாக தொல்லியல் ஆய்வுகள் கூறுகின்றன. சிந்து ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணை உடைந்ததால் பெருவெள்ளம் ஏற்பட்டு, மொஹஞ்சதாரோ நகரம் அழிந்ததால் அந்நகரம் கைவிடப்பட்டது என்பது சுதந்திர தினத்திற்காக பாலிவுட் திரையுலகம் வெளியிட்டுள்ள “மொஹஞ்சதாரோ” படம் கூறும் கதை. இவையிரண்டையும் அடுத்தடுத்துத் தருகிறது இக்கட்டுரை.
நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், சீனாவின் யூ மாமன்னரின் பேரரசு இருந்ததாக சீனத் தொன்மக் கதைகள் கூறுவதுண்டு. இதுவே சீன நாகரிகத்தின் துவக்கம் என்றும் கருதப்படுகிறது. இருப்பினும், இக்கதை உலகெங்கும் பலநாடுகளிலும் வழங்கிவரும் மாபெரும் வெள்ளம் பற்றிய கதைகள் போல, அதாவது, ‘நோவா’வின் கதை போன்ற ஒரு தொன்மக்கதை என்றும் நம்பப்பட்டு வந்தது. ஆனால், மாமன்னர் யூ மஞ்சள் ஆற்றில் ஏற்பட்ட மாபெரும் வெள்ளத்தைக் கால்வாய்கள் வெட்டித் திசைதிருப்பி கட்டுக்குள் கொண்டுவந்து நல்லாட்சி செய்தார் என்று வழிவழியாகக் கூறப்பட்டு வந்த கதைகளுக்கு இப்பொழுது சான்றுகள் கிடைத்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

யூ மன்னரின் ஷா குலப் பேரரசுக்கு தொல்லியல் சான்றுகள் இருப்பதாகக் கூறும் அறிவியல் கட்டுரை தரும் விளக்கம்: நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், பொ.ஆ.மு. 1920 காலகட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், நிலச்சரிவு ஏற்பட்டு மலைப்பாறைகள் விழுந்ததால் மஞ்சளாற்றின் குறுக்கே இயற்கையாகவே ஓர் அணை உருவானது. அதில் தேங்கத் தொடங்கிய நீர் அணையின் உயரத்தையும் தாண்டி கரை கடந்து பாயத் தொடங்கியதால், வெள்ளத்தை தாக்குப் பிடிக்க இயலாமல் அந்த அணை உடைந்தது என்றும் கூறுகிறார்கள். இதனால் நதியில் அளவுக்கு அதிகமான வெள்ளம் ஏற்பட்டு, நதியின் போக்கும் மாறியது. கடந்த 10,000 ஆண்டுகளில் மனித வரலாற்றில் நிகழ்ந்த ஒரு மாபெரும் வெள்ளமாக இது கருதப்படுகிறது. நிலநடுக்கமும், மாபெரும் வெள்ளமும் அடுத்தடுத்து ஒரே காலகட்டத்தில் நிகழ்ந்திருப்பது அகழாய்வின் மூலம் தெரிய வருகிறது. ஆற்றுப்படுகையின் படிவுகளும், ஆற்றின் தடத்தில் நிலநடுக்கத்தில் உயிரிழந்து புதையுண்டவர்களின் எலும்புக்கூடுகளும் கண்டுபிடிக்கப்பட்டு இவையிரண்டும் காலக் கணிப்புச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. கரிமச்சோதனை வழியே வெள்ளம் மற்றும் நிலநடுக்கம் ஏற்பட்ட காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்காலம் சீன நாகரிக வரலாற்றில் கற்காலம் முடிவடைந்து சீனப்பகுதிக்கான வெண்கலக் காலத்தின் “எர்லிட்டோ” (Erlitou culture) நாகரிகத்தின் துவக்கத்துடன் ஒத்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. இந்த வெள்ளம் தொன்மக்கதை கூறுவது போலவே ஒரு மிகப் பெரிய வெள்ளமென்றும், ஆற்றின் வழக்கமான நீரோட்டத்தையும்விட124 அடிகள் உயரத்திற்கு நீர் எழும்பியிருக்கிறது என்பதையும் வெள்ளம் குறித்த மாதிரிகளை உருவாக்கி ஆராய்ந்ததன் மூலம் தெரிய வந்துள்ளது.
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றி, மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வரை (3300–1300 பொது ஆண்டுகளுக்கு முன்னர் / பொ.ஆ. மு / BCE) சற்றொப்ப இரண்டாயிரம் ஆண்டுகள் சிறந்து விளங்கியது சிந்து சமவெளி நாகரிகம். இது இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் சிந்து ஆற்றங்கரையில் உருவான நகர நாகரிகம். பண்டைய உலகில் புகழ் பெற்று விளங்கியிருந்த சுமேரிய, எகிப்து, சீன நாகரிகங்கள் போன்று, வெண்கலக் கால உலகின் சிறந்து விளங்கிய ஆற்றங்கரை நகர நாகரிகம். சுட்டக் களிமண் செங்கற்களால் சீரிய முறையில் அமைக்கப்பட்ட கட்டடங்களும், நேரான வீதிகளும், பொதுமக்கள் குழுமும் இடங்களும், நீர்த் தேக்கங்களும், குளமும், திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்டிருந்த நகரின் கழிவுநீர் வடிகால்களும், நீர்நிலைகளும், வணிக முத்திரைகளும் இன்றைய நாகரிகத்தில் வாழும் பலரையும் வியப்பில் மூழ்கச் செய்யும் (http://science.nationalgeographic.com/science/archaeology/mohenjo-daro/). இதற்கும் மேலாக ஏன் அந்த நாகரிகம் அழிந்து போனது, அங்கிருந்தவர்கள் எங்கு போனார்கள் என்ற கேள்வியும், இன்றைய மக்கள் விளங்கிக் கொள்ள வழியில்லாத வகையில் மர்மமாக அமைந்துவிட்டது. சிந்து சமவெளி முத்திரை எழுத்துக்கள் என்னதான் கூறுகின்றன என்பதும் பொதுமக்கள் மற்றும் ஆய்வாளர்களின் ஆர்வத்தைத் தூண்டிய வண்ணமே இருக்கிறது. கடந்த ஒரு நூற்றாண்டாக சிந்து சமவெளிப்பகுதியில் அகழாய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. பல தடயங்களும், ஆயிரத்திற்கும் மேலான நகரக் குடியிருப்புகளும் அவற்றில் பல ஆயிரக்கணக்கான மக்களும் வாழ்ந்து வந்தனர் என்பது மட்டுமே இப்பொழுது நமக்கு உறுதியாகத் தெரியும் தகவல்.
சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டு, நீரற்றுப் போன இந்த நகரத்தில் வாழ்ந்த மக்கள், புதிய நீர்நிலையைத் தேடி இடம் பெயர்ந்து கங்கைச் சமவெளியில் குடியேறினார்கள் என்றும், சிந்து ஆறு தனது தடத்தை மாற்றிக் கொண்டதால் நீரற்று, உழவுத்தொழில் நலிவடைந்து மக்கள் நகரைக் கைவிட்டு வெளியேறினர் என்பதும் ஆய்வாளர்களின் கருத்து. ஆனால், வெள்ளத்தால் சிந்துசமவெளி நாகரிகம் அழியவில்லை என்பதும், அத்துடன் அந்த நகரம் ஒரேடியாக, ஒரேகாலத்தில் முற்றிலுமாக கைவிடப்படவில்லை என்பதும், ஆறு தடம் மாறிச் சென்றதால் மிகப்பெரிய நாகரிகம் ஒன்றே அழிந்திருக்கவும் வாய்ப்பில்லை என்பதும் ஆய்வாளர் “ஜானதன் மார்க் கெனோயர்” (University of Wisconsin, Madison, archaeologist Jonathan Mark Kenoyer) என்பவரது கருத்து. ஆனால், இன்றுவரையிலும் உண்மையில் என்ன நடந்திருக்கலாம் என்பதை உறுதி செய்ய முடியாத நிலையில்தான் கைவிடப்பட்ட மொஹஞ்சதாரோ நகரத்தின் வரலாறு இருக்கிறது.
ஏன் மொஹஞ்சதாரோ நகரம் கைவிடப்பட்டது என்பதைக் கற்பனை செய்த பாலிவுட் திரையுலகம் வெளியிட்டுள்ள படம் “மொஹஞ்சதாரோ” (மொஹஞ்சதாரோ நகர் என்று அந்நகர மக்கள் தங்கள் நகரை அழைக்கவில்லை, அந்த இடம் ‘இறந்தவர்கள் மேடு’ என்ற பொருளில் பின்னாளில் அழைக்கப்பட்டது என்பது வரலாற்று அறிஞர்களின் கருத்து). இன்றைக்கும் சரியாக நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், சிந்து சமவெளி நாகரிகம் அதன் சிறப்பான உச்ச நிலையில் இருந்த காலமான பொ.ஆ.மு 2016 இல் நடைபெறுவதாகக் கதை புனையப்பட்டுள்ளது. அத்துடன் இது வரலாற்றுத் தகவல் அல்ல புனையப்பட்ட ஒரு கதையே என்ற பொறுப்புத் துறப்பையும் முதலிலேயே தவறாமல் வெளியிட்டு விடுகிறார்கள். பிறகு கதாசிரியரின் கற்பனையில் விரிகிறது மொஹஞ்சதாரோ நகரம் கைவிடப்பட்டதன் காரணமும், எதனால் மொஹஞ்சதாரோ நகர மக்கள் கங்கைச் சமவெளிப்பகுதிக்கு இடம் பெயர நேர்ந்தது என்ற விளக்கமும். பாராட்டப்பட வேண்டிய கதையமைப்பு முயற்சி என்றாலும்; கதையில் புதுமையில்லை. பொதுவான இந்திய மசாலாப்படங்களின் பொது விதிகளில் கதை நகர்கிறது. காலம் காலமாக அழிவுக்குக் காரணமாகக் கூறப்படும் மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை இங்கும் நகரை ஆட்சி செய்யும் தலைவரையும் அவரது மகனையும் கவிழ்க்கிறது; இது வழக்கமான இந்தியத் திரைப்படக் கதைப் போக்குதான்.
‘அம்ரி’ என்ற கிராமத்தில் கருநீலச் சாயம் (இண்டிகோ நீலம்) தயாரிக்க உதவும் அவுரி அல்லது நீலி என்னும் செடி (Indigofera tinctoria) வளர்த்து அதனை மொஹஞ்சதாரோ நகரச் சந்தைக்கு எடுத்துச் சென்று விற்கும் குடும்பத்து இளைஞன் “சர்மன்”. சர்மன் வீரம் நிறைந்தவன், பொதுமக்கள் நலத்திற்காக எந்த இடரையும் எதிர்த்துப் போராடும் துணிவு பெற்றவன். அவனுக்குத் தோன்றும் பொருள் புரியாத கனவுகளும், அதில் வரும் ஒற்றைக் கொம்பு கொண்ட மான் போன்ற விலங்கும் அவனுக்கு எதையோ குறிப்பால் உணர்த்துவதாக எண்ணிக் குழம்புகிறான். பெற்றோரை இழந்த சர்மன் தனது மாமா குடும்பத்தால் வளர்க்கப்பட்டவன். மொஹஞ்சதாரோ நகரத்திற்குச் செல்ல விரும்பும் அவனது விருப்பம் குடும்பத்தினரால் தடை செய்யப்படுகிறது. அது நகரமல்ல, பேராசை கொண்டவர்கள் குழுமியிருக்கும் இடம் என்று காரணம் சொல்லப்படுகிறது. இறுதியில் அவனது உறுதியைக் கண்டு அவனது விருப்பப்படி அவர்கள் தயாரிக்கும் அவுரிச்சாயக் கட்டிகளை விற்க மொஹஞ்சதாரோ நகர சந்தைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறான்.
மொஹஞ்சதாரோ நகரத்தின் நகராட்சித் தலைவர் “மஹம்” (கிடைத்த தடயங்கள் படி சிந்துசமவெளி நாகரிகம் முடியாட்சி நாகரிகமல்ல; அரசர், அரசி போன்றோர் ஆட்சி செய்யாத ஒரு நகர நாகரிகம்). இவர் சர்வாதிகாரி போன்று மொஹஞ்சதாரோ நகரத்தில் யார் வாழ வேண்டும், அல்லது யார் இறக்க வேண்டும் என்ற வகையில் தீர்மானித்து அடக்குமுறையில் ஈடுபடுபவர். இவரது தலைவருக்குரிய கொம்புகள் வைத்த தலையணி, சிந்துசமவெளி தடயங்களில் “பசுபதி” என்று குறிக்கப்படும் முத்திரையில் அமைக்கப்பட்டுள்ளது போல (https://upload.wikimedia.org/wikipedia/commons/2/2f/Shiva_Pashupati.jpg) வடிவமைக்கப்பட்டுள்ளது. அவரது அடக்குமுறையில் இருந்து மொஹஞ்சதாரோ நகரமக்களை விடுவிப்பது கதாநாயகனின் கடமையாகிறது.
சர்மனின் தந்தையைக் கொன்று ஆட்சிக்கு வந்தவர் மஹம் என்பதைப் பின்னர் சர்மன் மதத் தலைவர் மூலம் அறிகிறான். தந்தையைக் கொன்றவனை பழி வாங்கி தனது உரிமையை நிலைநாட்டி, மொஹஞ்சதாரோ நகர மக்களை சிந்து ஆற்றில் ஏற்படும் பெருவெள்ளத்தில் இருந்து காப்பாற்றுகிறான் சர்மன். இதற்கிடையில் மொஹஞ்சதாரோ நகரத்தின் மதத்தலைவரின் மகளைச் சந்திக்கிறான். விற்பனைக்காக வெளிநாட்டில் இருந்து சந்தைக்கு வரும் குதிரைகள் வெறித்து ஓட, அவற்றைக் கண்டு அச்சத்தில் உறைந்துவிட்ட அவளைக் காப்பாற்றிக் காதலிக்கிறான். ஆனால், தற்காலத்தில் இந்தியாவில் காணப்படும் குதிரை (Equus caballus), மத்திய ஆசியப் பகுதியில் இருந்து இந்தியப்பகுதிக்கு அறிமுகப்படுத்தப்பட்ட காலமானது சிந்து சமவெளி நாகரிகம் மறையத் தொடங்கிய பிற்காலத்தில்தான் என்பதும், அது பொ.ஆ. மு. 1800க்குப் பிறகு என்பதும் ஆய்வாளர்கள் கருத்து (http://www.thehindu.com/thehindu/op/2002/03/05/stories/2002030500130100.htm – கதை நடப்பது பொ.ஆ. மு 2016 இல்).
வரியை அதிகரிக்கும் நகராட்சித் தலைவர் மஹம்மை எதிர்த்து மக்களைத் தூண்டிவிட்டு புரட்சி செய்ய வைத்து அவரது பகையையும்; அவரது மகன் மூஞ்சாவிற்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணான மதத்தலைவரின் மகள் ‘சானி’ யைக் காதலித்து அவனது வெறுப்பையும் சம்பாதித்துக் கொள்கிறான் சர்மன். தண்டனைக்கு உள்ளாகி, அதன் விளைவாக மனிதர்களைக் கொன்று உண்ணும் இருவருடன் போரிட நேர்கிறது. தனி ஒருவனாகப் போரிட்டு அவர்களை வெல்வதுடன், அதனால் கயவனான மூஞ்சாவை மணக்கக் கட்டாயப்படுத்தப்படும் காதலியையும் நிர்ப்பந்தத்தில் இருந்து விடுவிக்கிறான். மக்கள் விரும்பும் தலைவனாகிறான். இதுவும் வழக்கமான திரைப்பட கதையின் தடத்தில்தான் அமைந்திருக்கிறது. ஆனால், இக்கதையில் சர்மன் எவ்வாறு சிந்து ஆற்றின் வெள்ளத்தில் இருந்து மக்களைக் காப்பாற்றுகிறான் என்பதும், சிந்து ஆற்றின் பெருவெள்ளப்பெருக்கு ஏன் ஏற்பட்டது என்பதும், எவ்வாறு மொஹஞ்சதாரோ நகரம் அழிந்தது என்பதைக் கூறுவது திரைப்படத்தின் மைய நோக்கம். அதனால் வெள்ளம் ஏன் ஏற்பட்டது எனக் கூறப்படும் காரணத்தையும் கருத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது.
கதையின்படி மொஹஞ்சதாரோ நகரத்தின் நகராட்சித் தலைவர் மஹம்தான் சிந்துவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்குக் காரணம். இதற்குக் காட்டப்படும் காரணமும் மற்றொரு வழக்கமான இந்தியத் திரைப்படக் கதைக் கட்டமைப்பே. ஹரப்பா நகரின் வணிகரான மஹம் சட்டத்திற்குப் புறம்பாக கள்ள வணிகத்தில் ஈடுபட்டு சுமேரியர்களுக்கு தேக்கு மரங்களை (Dalbergia sissoo) விற்று கள்ளக்கடத்தல் செய்ததால் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்படுகிறார். இவர் மொஹஞ்சதாரோ நகரத்தில் குடிபுகுந்து வணிகராகவும், பிறகு வணிகக்குழு தலைவராக உயர்ந்து நகராட்சியின் தலைமையிடத்தை அடைகிறார். பிறகு இவர் சொல்வது சட்டமாகிறது, மீறுபவர்கள் உயிருடன் இருப்பதில்லை. தன்னை அவமதித்த ஹரப்பா நகரை அழிக்க, பழிவாங்கும் நோக்கில் சுமேரியர்களிடம் இருந்து செம்பாலான ஆயுதங்களை வாங்குகிறார் (சிந்து சமவெளி இரும்புக் காலத்திற்கும் முற்பட்டது, அதனால் செம்பாலான போர்க்கருவிகள்.ஆனால் சிந்துசமவெளி நாகரிக மக்களிடம் போர்க்கருவிகள் இருந்ததில்லை என்பது வரலாற்று அறிஞர்களின் கருத்து). போர்க்கருவிகள் வாங்க ஏராளமான தங்கம் தேவைப்படுகிறது.
சிந்து ஆற்றின் படுகையில் தங்கம் இருப்பதை அறிகிறார் மஹம். அதைச் சேகரிக்க ஆற்று நீரின் தடத்தை மாற்ற ஆற்றின் குறுக்கே அணை கட்டவேண்டும் என்கிறார் (ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த மக்களுக்கு அணை கட்டும் தொழில் நுட்பம் தெரிந்திருந்தாலும், வற்றாத ஜீவநதியாக, நீர் நிறைந்திருக்கும் ஆற்றின் குறுக்கே அணை கட்டும் தொழில்நுட்பம் இருந்ததா என்ற தகவலும், அணை குறித்த தடயங்களும் இதுவரை கிடைத்ததில்லை). ஆற்று நீரைத் தடுத்து வழிமாற்றிய காரணத்தால் அதனால் பயனடைந்த உழவர்கள் பாதிக்கப்பட, அவ்வாறு எழுந்த எதிர்ப்பையும் முறியடித்து, எதிர்த்தவர்களைக் கொன்று (சர்மனின் தந்தை உட்பட) அணை கட்டப்படுகிறது. இதனால் உழவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஆற்றுப் படுகையில் இருந்து தங்கம் சேகரிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களான மொஹஞ்சதாரோ நகர மக்களிடம் அவை சேர்க்கப்படாமல் கொள்ளையடிக்கப்பட்டு, தங்கக் கடத்தல்செய்யப்பட்டு சுமேரியர்களிடம் ஆயுதம் வாங்க அது பயன்படுத்தப்படுகிறது. இதுவும் வழக்கமான இந்தியத் திரைப்படக் கதையின் போக்குதான்.
ஆற்றின் போக்கில் கட்டப்பட்ட அணை வெள்ள ஆபத்தை உருவாக்கும் நிலையை எட்டுகிறது. மொஹஞ்சதாரோ நகர மக்களிடம் மஹம் செய்த சூழ்ச்சிகளை வெளிப்படுத்தி, சர்மன் அவரது முகத்திரையைக் கிழிக்கிறான். சர்மன் தலைவனாக ஏற்றுக் கொள்ளப்படும் பொழுது பெரும் மழை ஏற்படுகிறது. அணையின் விளிம்பையும் தாண்டி வெள்ளம் பாய்ந்து, அணை சிதைந்து நகரம் பெரும் வெள்ளத்தில் மூழ்கி அழிந்து விடுகிறது. ஆனால், அணையினால் ஏற்படக்கூடிய இடரை எதிர்பார்த்து எச்சரிக்கையுடன் இருந்தவன் சர்மன். ஆகவே, வெள்ளம் வருவதற்குள் மொஹஞ்சதாரோ நகர மக்கள் யாவரும் சர்மனால் எச்சரிக்கப்பட்டு, படகுகளின் மீது ஒரு தற்காலிக பாலம் அமைக்கப்பட்டு, அதன்வழியே மேட்டுப்பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு காப்பாற்றப்படுகிறார்கள். அவர்கள் கண்முன்னே நகரம் அழிந்துவிட, கங்கை ஆற்றுப் பகுதிக்கு குடிபெயர்கிறார்கள்.
ஆக, சிந்து சமவெளி நாகரிகம் ஆற்றங்கரை நாகரிகம் அடியோடு அழிந்தது சிந்து ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையின் காரணமாக என்றும், அந்த அணை சிதைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மொஹஞ்சதாரோ நகரம் கைவிடப்பட்டது என்றும் கற்பனை செய்யப்பட்டுள்ளது மொஹஞ்சதாரோ திரைப்படக் கதைக்குழுவினரால்.
_____________________________________________________________________________________
Outburst flood at 1920 BCE supports historicity of China’s Great Flood and the Xia dynasty.Science 05 Aug 2016:Vol. 353, Issue 6299, pp. 579-582. DOI: 10.1126/science.aaf0842. http://science.sciencemag.org/content/353/6299/579.full
New evidence suggests China's legendary 'great flood' might have actually happened. The flood that started a civilisation.
"Faceless" Indus Valley City Puzzles Archaeologists.
http://science.nationalgeographic.com/science/archaeology/mohenjo-daro/
Harappan horse myths and the sciences
http://www.thehindu.com/thehindu/op/2002/03/05/stories/2002030500130100.htm
இது ஒரு ‘வெட்டிவேலை’ என்ற சொல்லாடல் பொதுவாக இன்றைய வழக்கத்தில் உள்ளது. இந்த இடத்தில் நாம் குறிப்பிட விரும்பும் கருத்து; இது ஒரு தேவையற்ற வேலை, இதனைச் செய்வதினால் பலன் ஒன்றும் இருக்காது, இதைச் செய்வதால் எந்த ஒரு பயனையும் அந்த வேலையைச் செய்பவர் அடையப்போவதில்லை என்பது போன்ற பொருளில் அமைந்திருக்கும். அதாவது, ஒரு ‘பயனற்ற செயல்’ அல்லது ‘பயனற்ற வேலை’ என்பது வெட்டிவேலை. வெட்டி முயற்சி என்று குறிப்பிடும் பொழுது, அந்த முயற்சி பலன் தராது என்று அறியப்படுகிறது.
அதைப்போலவே, எந்த ஒரு வேலையும் செய்யாமல் இருப்பவர்களை ‘வேலைவெட்டி’ இல்லாதவர் என்றும் சொல்வோம். ‘வெட்டிவேலை’ என்பதற்கும் ‘வேலைவெட்டி’ என்பதற்கும் உள்ள வேறுபாடே வேலையும் வெட்டியும் இடம் மாறிவிடுவதுதான். வேலைவெட்டி இல்லாதவரை நாம் பயனற்றவர், அவரால் எந்தப் பலனும் கிடையாது என்ற பொருளில் தான் குறிப்பிடுகிறோம். அதாவது, இங்கு மீண்டும் நாம் ‘பயன்’ குறித்த பொருளில்தான் வேலைவெட்டி என்பதையும் கையாளுகிறோம். வேலைவெட்டி இல்லாதவர்களை ‘வெட்டி ஆபீசர்’ என்று நையாண்டி செய்யும் நிலைமையும் உள்ளது.
‘உனக்கு வேறு ஏதாவது வேலைவெட்டி இருந்தால் அதனைப் போய் செய்வதுதானே’ என்று மறைமுகமாக நம் செயலில் இடையிடும் ஒருவரைத் துரத்திவிடும் பொழுதும், ‘எல்லாம் நீ வெட்டிக் கிழித்ததே போதும்’ என்றோ; ‘பெரிதாய் இங்கே என்ன வெட்டி முறிக்கின்றாயாம்?’ என்று எரிச்சலுடன் ஒருவரைக் கடிந்து கொள்ளும் பொழுதும் ஒருவரது செயலைத்தான் குறிப்பிடுகிறோம். வேலை என்று சொல்லாமலே, வெறுமையாக வெட்டி என்றாலும் கூட அந்த இடத்தில் அது வேலையைத்தான் குறிக்கிறது.
வேலையும் வெட்டியும் ஏன் சேர்ந்தே வருகிறது? அதன் பொருள் என்ன என்று நாம் சிறிதும் யோசிப்பதில்லை. இவை வழக்கத்தில் வந்துவிட்ட சொற்றொடர்கள்.
வெட்டி என்ற சொல்லும் வேலை என்ற சொல்லும், ‘வேலைவெட்டி’ என்றோ, ‘வெட்டிவேலை’ என்றோ அடுத்தடுத்து ஓசையின் பொருட்டு இணைந்தே வருவது வழக்கமாகவும் உள்ளது. அதாவது ‘அரசல் புரசல்’, ‘நகை நட்டு’ என்பது போல வெகு இயல்பாக அடுத்தடுத்து ஓசையுடன் இணைந்தே வருகிறது. ஆகவே, பொதுவாக ‘வெட்டி’ என்றாலே அது பயனற்ற ஆளையோ, செயலையோ குறிப்பிடுவதாக நாம் புரிந்து கொள்கிறோம்.
மாறாக, ‘வெட்டி’ என்பதற்கு ‘வெட்டிவிடுதல்’ (cut) என்றும் பொருளும் உண்டு என நாம் அறிவோம். அதன் அடிப்படையில், இறந்த பிறகு சொந்த பந்தங்களை வெட்டிவிடும் பணியினைச் செய்பவர் ‘வெட்டியான்’ என்ற விளக்கமும் கொடுக்கப்படுகிறது. எனவே ‘வெட்டு’, ‘வெட்டி’ என்ற வேர்ச் சொற்களிலிருந்து ‘வெட்டியான்’ என்ற சொல் தோன்றியிருக்கவேண்டும் என்றும் கூறப்படுகிறது [1].
வெட்டி என்பதற்கு என்ன பொருள் என்று தேடினால், ‘வெட்டி’ என்பதற்கு வீண், பயனற்றது, பொழுதை வெட்டியாகக் கழிக்காதே, வெட்டிப்பேச்சு என்று ‘செந்தமிழ் அகராதி’ (ந.சி. கந்தையாப்பிள்ளை, 1957) பொருள் தருகிறது. ‘வெட்டி’ என்பது பயனற்றது என்பதைக் காட்டும் பொருட்டு, ‘பொழுதை வெட்டியாகக் கழிக்காதே’, ‘வெட்டிப்பேச்சு’ என்பனவும் விளக்கத்திற்காக எடுத்துக்காட்டுகளாகக் காட்டப்படுகிறது.
‘வெற்றாக இருப்பது’ என்பதைக் குறிக்கும், ‘வெற்று’ என்பது மருவி ‘வெட்டி’ என்று அழைக்கப்படுகிறது என்றும் இதன் மூலம் புலப்படுகிறது. ‘வெற்றாள்’ என்ற சொல்லின் பொருளை நோக்குவோமானால் அது ‘வேலையற்ற’ ஒருவரைத்தான் குறிக்கிறது. ஆனால், ‘விருஷ்டி’ என்ற சமஸ்கிருத சொல்லிலிருந்துதான் ‘வெட்டி’ என்ற சொல் வந்திருக்கும் என்று கருதுபவர்களும் உள்ளனர் [1].
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல். (குறள் – 200)
என்ற குறளுக்குப் பொருள் கூறும் முனைவர் செங்கை பொதுவன் அவர்களும் ‘பயனிலாச் சொல்’ என்பதை ‘வெட்டிப் பேச்சு’ என்றுதான் குறிப்பிடுகிறார் [2].
‘வெட்டி குடி’ என்பது கோயில் கல்வெட்டிகளில் பயன்படும் ஒரு சொல் வழக்கு. பெரும்பாலும் கல்வெட்டுகளின் தகவலின்படி கோவிலில் விளக்கேற்ற நெய் அளப்பது, நெய்விளக்கேற்ற கொடையாகக் கொடுக்கப்படும் ஆடு, மாடுகளுக்குப் பொறுப்பேற்பது போன்றவற்றைச் செய்பவர்கள் வெட்டி குடி என்பவர்களாக அறியப்படுகிறார்கள்.
தொல்லியல் துறை ஆய்வாளர் முனைவர் சொ. சாந்தலிங்கம் (Archaeological officer (Retd.) Dr. C. Santhalingam) அவர்கள், “வெட்டி குடி” என்பவர்கள் ஊதியம் பெறாமல் கோவிலில் பணிபுரியும் ஒரு குழுவினர் எனக் குறிப்பிடுகிறார் (“Vettikudi refers to a group of people who are unpaid temple workers”). மதுரை வைகை ஆற்றின் தென் கரையில் உள்ள திருப்புவனம் (திருப்பூவணம்), திருப்பூவணர் கோவிலில்; பாண்டிய மன்னன் சடையன் மாறனின் பொது ஆண்டு 10 ஆம் நூற்றாண்டு காலத்துக் கல்வெட்டு ஒன்றில், கோவிலில் அணையாவிளக்கு ஏற்றுவதற்காகவழங்கப்பட்ட கொடையானது “திருப்பூவணத்து தேவர் வெட்டி குடி பூவணவன் அரையன்” (Vettikudi PoovananArayan) என்றழைக்கப்பட்ட வெட்டி குடி ஒருவரின் பொறுப்பில் ஒப்படைக்கப்படுகிறது [3].
கோயில் திருச்சுற்று நடைபாதையில் வடமேற்கு மூலையில் பதிக்கப்பட்டிருக்கும் துண்டு கற்களில் உள்ள கல்வெட்டு வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது, பார்க்க வரிகள் 30-33, (எண் = கல்வெட்டின் வரி எண்) [4]:
23 இதனுக்கு
24 குடுத்த சாவா மூவாபே
25 ராடு எயருஈ பத்தஞ்
26 சும் சாத்து வைச்சு நி
27 சதம் நாராய உழக்கா
28 ல் உழக்கு நெய் மு
29 ட்டாமல் அட்டு வா
30 ன் திருப்பூவணத்து
31 தேவர் வெட்டி குடி
32 பூவணவன் அரைய
33 ன் இவனுக்கு
34 தேவன் அ….
ஊதியம் பெறாமல் பணி புரிந்ததாகக் குறிப்பிடப்படும் இத்தகைய வெட்டி குடிகள் கோவிலில் பணி புரிந்ததைத் தென்னிந்திய கல்வெட்டு நூலில் காணும் மற்றொரு கல்வெட்டும் குறிப்பிடுகிறது. திருநெல்வேலி நரசிம்ம பெருமாள் கோவிலில் வடக்குசுவரில் இருக்கும் கல்வெட்டு, ‘எட்டி ஜடவேதன்’ என்ற வெட்டி குடி ஒருவர் அணையாவிளக்கை பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ள, அவருக்கு ‘மனநடை மாதேவன்’ என்ற வெட்டி குடி உதவும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார் எனக் குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டுத் தகவலை முழுமையாகக் கட்டுரையின் இறுதியில் கீழே காணலாம் [5].
அழகர் கோவிலின் கருவறையின் வடக்குச் சுவரில் காணப்படும் 11 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்று, கோவிலின் விளக்கு ஏற்றும் நன்கொடைக்கான பொறுப்பை உள்ளூர் தேவர் குலத்தைச் சார்ந்த வெட்டி குடி ஒருவர் ஏற்றுக்கொண்டதைக் குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டுத் தகவலும் கட்டுரையின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது [6].
இராமநாதபுரம் மாவட்டம் மடப்புரம் கோவிலின் சுவரில் காணப்படும், பாண்டிய மன்னன் மாறன் சடையனின் 9 ஆம் -10 ஆம் நூற்றாண்டு காலத்திய தமிழ் வட்டெழுத்துக் கல்வெட்டொன்றில், அணையாவிளக்கு ஏற்ற கொடுக்கப்பட்ட கொடையை ஏற்று தேவர் வெட்டி குடி சேந்தன் கரந்தன் என்பவர், தினமும் உழக்கு நெய் ஊற்றி விளக்கேற்றும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டுத் தகவலையும் இக்கட்டுரையின் இறுதியில் காணலாம் [7].
திருநெல்வேலி பகுதியில் வெட்டி குடி இருந்த தகவலையும், ஊதியமின்றி தனது உழைப்பை நல்கிய வெட்டி குடிகள் போர்க்காலத்தில் படையிலும் சேர்ந்து நாட்டின் பாதுகாப்பிற்காகவும் உழைத்தார்கள் என்பதை தமிழ்நாடு அரசு தொல்பொருள் துறை வெளியிட்ட பாண்டியர்கள் குறித்த வெளியீடு – 151 குறிப்பிடுகிறது [8].
உழைப்பிற்குப் பலன் பெறாமல் ஊழியம் செய்த வெட்டி குடிகளைத் தன்னார்வத் தொண்டர்களாக கருதவும் வழியில்லை என்பது சி. இராஜாராம் அவர்கள் கொடுக்கும் சில குறிப்புகள் மூலம் அறிய முடிகிறது [1]. மன்னர்கள் காலத்தில், வெட்டி குடிகள் இவ்வாறாக ஊதியம் இன்றி உழைக்க நேர்ந்தது அவர்களுக்காக வழங்கப்பட்ட தண்டனை காரணமாகவும் இருக்கலாம். கோவில் பணியில் ஈடுபட விரும்பாதவர்களை ‘சிவத் தூரோகி’ என்று குற்றம் சாட்டப்பட்டு, அவர்கள் கோவிலுக்கான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், இப்பணியை இவர்கள் செய்யாவிட்டால் தண்டிக்கப்படுவார்கள் என்றும், ஆனால் பணியை செய்தால் கூலி கிடையாது என்றும் சி. இராஜாராம் கூறுகிறார். இக்கருத்தும் தொல்லியல் துறை ஆய்வாளர் முனைவர் சொ. சாந்தலிங்கம் அவர்கள் அளித்த கருத்தையே ஒத்திருக்கிறது. இதே வெட்டி குடி பணியாளர்கள் முறை திருவிதாங்கூர் இராச்சியத்திலும் இருந்திருக்கிறது என்பதும் சி. இராஜாராம் கூறும் தகவல். திருவிதாங்கூர் இராச்சிய மன்னரிடம் 64 வகை ஊழியர்கள் பணிபுரிந்தனர். இவர்கள் செய்யும் ஊழியம் என்பது வெட்டி வேலை. ஊழியம் செய்யாவிட்டால் தண்டனை உண்டு, ஆனால் ஊதியம் கொடுக்கப்படமாட்டாது என அவர் குறிப்பிடுகிறார்.
வெட்டி குடி செய்த பணியின் அடிப்படையில் பொருள் காண்போம் என்றால், அவர்கள் செய்தது ஒரு வெட்டிவேலை என்பதால் அவர்களுக்கு அதனால் எந்தப் பலனும் இல்லை. அவர்கள் விரும்பிச் செய்திருந்தாலும், விரும்பாமல் செய்திருந்தாலும் அவர்கள் அளித்த உழைப்பிற்கு ஈடாகப் பொருளாதார வகையில் அவர்கள் பயனடையவில்லை.
இந்த நிலையை, புராணக் கதையின் குறிப்பொன்றில் இருந்தும் நாம் பெறலாம். வைகையின் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்த வீட்டுக்கு ஒருவர் வந்து உழைக்க வேண்டும் என்ற பாண்டியனின் கட்டளையாக திருவிளையாடற் புராணம் கூறுவதும் ஒரு வெட்டிவேலைதான். அந்த உழைப்பிற்கு ஊதியம் கொடுத்திருந்தால் வாரிசு இல்லாத, தள்ளாத வயதுடைய பிட்டு சுடும் வந்தி பாட்டி சிவனிடம் முறையிட நேர்ந்திருக்காது. அடுத்த வீட்டுக்காரரே வந்தியின் சார்பாக தனது வீட்டிலிருந்த மற்றொருவரை அனுப்பி மண்வெட்டச் சொல்லி அந்தக் கூலியைப் பெற்றுக் கொண்டிருப்பாரல்லவா? இதனால் சிவன் வந்து வெட்டிவேலை (மண்வெட்டி சுமந்து செல்லும் வேலை எனவும் கொள்ளலாம்) செய்யும் நிலை ஏற்பட்டிருப்பதை புராணக்கதை கூறும் தகவலாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.
இதனால், வேலை என்பது வருமானம் தரும் ஒரு பணி என்றும், வெட்டி என்பது வருமானம் தராத பணி என்றும், அதாவது வெற்றாகப் போன உழைப்பு என்றும் கருத வழியுண்டு. இந்த அடிப்படையில் காணும் பொழுது, வெட்டிவேலை என இக்காலத்தில் குறிப்பிடுவதன் பொருள் நமக்குத் தெளிவாக விளங்கும். உழைப்பதனால் பயனடைய முடியாத ஒரு வேலையைச் செய்பவர் வெட்டிவேலை செய்பவர்.
வருமானம் தரும் ஒரு வேலையையோ, வருமானம் தராத ஒரு வெட்டிவேலையையோ செய்யாதவரை வேலைவெட்டி இல்லாதவர் (வேலையும் அவருக்கு இல்லை, வெட்டியும் அவருக்கு இல்லை) என அழைப்பதும் பொருந்துகிறது. இந்த வெட்டிவேலை என்பதன் பொருள் காலப்போக்கில் மறக்கப்பட்டிருந்தாலும், அதன் பொருள் மாறாமல் வெட்டிவேலை, வேலைவெட்டி என்பது அதே வழக்கத்தில் இன்றும் தொடர்ந்து வருவது தெரிகிறது.
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும். (குறள் – 466)
என்று குறள் அறிவுறுத்துவதால், ‘செய்தக்க செய்யாமை யானும் கெடும்’ என்பதை உணர்ந்து உழைக்கத் தேவையற்ற நிலையில் இருப்பவர்களும் கூட ஏதேனும் தொண்டூழியம் செய்யும் நோக்கில் வெட்டிவேலை (ஊதியமற்ற வேலை) செய்தால், அவர்களுக்கு அது பயனளிக்கா விட்டாலும் பிறர் அவரது தொண்டால் பலனடைவர். இங்குக் குறிப்பிட்ட வரையறையின்படி, தன்நலன் கருதாது, பயன் கருதாது உழைக்கும் தொண்டூழியம் ஒரு வெட்டிவேலைதான். அதனைத் தொண்டு செய்பவர் மறுத்து தனக்கு மனநிறைவு என்ற பயன் இருக்கிறது எனக் குறிப்பிட்டாலும், அவர் செய்வது ஒரு வெட்டிவேலை என்பது அவரது குடும்பத்தவர் கருத்தாக இருக்கும்.
________________________________________________
[5]
No. 18
(A. R. No. 85 of 1927.)
Tirunelveli, Tirunelveli Taluk, Tirunelveli District.
On the north wall of the Narasimha-Perumal temple.
This Vatteluttu record is dated in the 2nd year of the reign of Maranjadaiyan and registers a gift of cows made by Sattanammai, for burning a lamp in the temple of Brahmapurittevar at Tirunelveli, on behalf of Sattan-Deyam, a devaradiya of Tirunelvel in Kil-Vemba-nadu. Etti-Jatavedan, a ‘vettikkudi’ agreed to burn the lamp and Mananadai-Madevan, another ‘vettikkudi’ stood security (punai) for the former.
It is possible that the temple was originally one of Siva called Brahmapurittevar. A record of rajaraja I dated in the 12th year of his reign also refers to the god by this name only (No. 84 of 1927) ; and it is only in a record of Jatavarman Kulasekhara (No. 83 of 1927) that the Narasimha-Perumal is referred to as Vikrama-Pandya-vinnagar-Alvar.
[South Indian Inscriptions: Volume 14]
http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/volume_14/stones_1_to_25.html
________________________________________________
[6]
On the north wall of the central shrine in the Alagar temple. Dated in the third year of the Chola- Pandya king Jatavarman alias Udaiyar Sri-Chola-Pandyadeva (1021 43). Records gift of twenty-five sheep for a lamp to the temple of Ten-Tirumalirunjolai by a native of Devar-’Vettikudi’ near Tirunelveli in Kilvembanadu, a subdivision of Mudigonda Chola-valanadu, a district of Rajaraja-Pandi-nadu.
431. 408 of 1906
[A topographical list of the inscriptions of the Madras presidency (collected till 1915) with notes and references - Page No. 1493]
https://archive.org/stream/topographicallis03rangiala#page/1492/mode/2up/search/Vettikudi
________________________________________________
[7]
16. PANDYA INSCRIPTION, MADAPPURAM, DISTRICT RAMANATHAPURAM.-This record, engraved on a stone built into the wall of the temple, is in Tamil language and Vatteluttu characters of ninth-tenth century AD. Though the record is damaged in the beginning, from the extant portion, it may be restored that the record belongs to the reign of the early Pandya king Maranjadaiyan. It registers the gift of fifty sheep for a perpetual lamp by Vilandai Siruvan alias Tennavan alias Pallavaraiyan of Mannuru. It is stated that Devar ‘Vettikkudi’ Sendan-Karandan of this village undertook to supply one ulakku of ghee daily by the measure called Solivan.
[Indian Archaeology. Indian Archaeology - A Review (An Annual Publication on Archaeological Reports) , 1990-91, ed., S.K. Mahapatra (1995). Page No. 85]
http://asi.nic.in/nmma_reviews/Indian%20Archaeology%201990-91%20A%20Review.pdf
________________________________________________
நன்றி:
திருப்பூவணம் கோவிலின் கல்வெட்டு வரிகளை, திருப்பூவணக்காசி என்ற தனது நூலில் இருந்து எடுத்துத் தந்த முனைவர் காளைராஜன் அவர்களுக்கு நன்றி.
‘வெட்டி குடி’ குறித்த பொருள் விளக்கம் தந்த தொல்லியல் துறை ஆய்வாளர் முனைவர் சொ. சாந்தலிங்கம் அவர்களுக்கும் நன்றி.
________________________________________________
தகவல் பெற்ற இடங்கள்:
[1]
வெட்டியான் முதல் ஹரிஜன் வரை, சி. இராஜாராம் (http://www.tamilpaper.net/?p=8271)
[2]
திருக்குறள் பாவுரை - 191-200, முனைவர் செங்கை பொதுவன் (http://vaiyan.blogspot.com/2016/06/tirukkural-pavurai-191-200.html)
[3]
Namma Madurai: The Lord of Thirupuvanam
[4]
திருப்பூவணக்காசி, முனைவர் கி. காளைராஜன், 2007, கே. நித்யா பதிப்பு. பக்கம் 62.
[5]
PANDYA INSCRIPTIONS, INSCRIPTION OF THE EARLY PANDYAS
(http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/volume_14/stones_1_to_25.html)
[6]
A topographical list of the inscriptions of the Madras presidency (collected till 1915) with notes and references
by Rangacharya, V. (Vijayaraghava); Archaeological Survey of India, Published 1919; Volume III; Page No. 1493
(https://archive.org/stream/topographicallis03rangiala#page/1492/mode/2up/search/Vettikudi)
[7]
Indian Archaeology. Indian Archaeology - A Review (An Annual Publication on Archaeological Reports) , 1990-91, ed., S.K. Mahapatra (1995). Page No. 85
(http://asi.nic.in/nmma_reviews/Indian%20Archaeology%201990-91%20A%20Review.pdf)
[8]
The Pandiyan Townships Part - II,
(The Pandyan Townshops, their Organaisation and Functioning)
R. Tirumalai, 2003. Chapter - 4, Page No. 174.
Department of Archaeology, Government of Tamilnadu - Publication Number: 151
________________________________________________
[2] திருக்குறள் பாவுரை – 191-200, முனைவர் செங்கை பொதுவன் (http://vaiyan.blogspot.com/2016/06/tirukkural-pavurai-191-200.html)
[3]Namma Madurai: The Lord of Thirupuvanam
[4] திருப்பூவணக்காசி, முனைவர் கி. காளைராஜன், 2007, கே. நித்யா பதிப்பு. பக்கம் 62.
[5] PANDYA INSCRIPTIONS, INSCRIPTION OF THE EARLY PANDYAS
(http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/volume_14/stones_1_to_25.html)
[6]A topographical list of the inscriptions of the Madras presidency (collected till 1915) with notes and references
by Rangacharya, V. (Vijayaraghava); Archaeological Survey of India, Published 1919; Volume III; Page No. 1493
(https://archive.org/stream/topographicallis03rangiala#page/1492/mode/2up/search/Vettikudi)
[7]Indian Archaeology. Indian Archaeology – A Review (An Annual Publication on Archaeological Reports) , 1990-91, ed., S.K. Mahapatra (1995). Page No. 85
(http://asi.nic.in/nmma_reviews/Indian%20Archaeology%201990-91%20A%20Review.pdf)
[8] The Pandiyan Townships Part – II,
(The Pandyan Townshops, their Organaisation and Functioning)
R. Tirumalai, 2003. Chapter – 4, Page No. 174.
Department of Archaeology, Government of Tamilnadu – Publication Number: 151
வேலை என்பது வருமானம் தரும் ஒரு பணி என்றும், வெட்டி என்பது வருமானம் தராத பணி என்றும், அதாவது வெற்றாகப் போன உழைப்பு என்றும் கருத வழியுண்டு. இந்த அடிப்படையில் காணும் பொழுது, வெட்டிவேலை என இக்காலத்தில் குறிப்பிடுவதன் பொருள் நமக்குத் தெளிவாக விளங்கும். உழைப்பதனால் பயனடைய முடியாத ஒரு வேலையைச் செய்பவர் வெட்டிவேலை செய்பவர்.
வெட்டிவேலை என்பதுபற்றிய, தேமொழி அவர்களின் கட்டுரை அருமை.
ஊதியமோ, வேறு பயனோ தராத வேலை, வெட்டி என்றும், ஊதியம் பெறாமல் பணி புரிந்த வெட்டிகுடியினர் கோவில்களில் இருந்தனர் என்றும் கட்டுரையில் குறிக்கப்பெற்றுள்ளன.
கல்வெட்டு அகராதியில், வெட்டி என்பது கட்டாய உழைப்பையும், கட்டாய உழைப்பாகச் செலுத்தும் வரியையும் குறிக்கின்றது. அதேபோல், வெட்டிக்குடி என்பது, ஊதியமின்றிப் பொதுவேலை செய்யக்கடமைப்பட்ட குடி என்று கூறப்படுகிறது.
வெட்டி முட்டாள், வெட்டி முட்டை ஆள், வெட்டிமுட்டாவாள், முட்டாவாள்,வெட்டிமுட்டி என ஐந்து சொற்களாலும் குறிக்கப்படும் பொருள் கல்வெட்டு அகராதிப்படி “கட்டாய உழைப்பில் ஒரு வகை” என்பதே.
வேதினை என்னும் சொல்லும் கட்டய உழைப்பில் ஒருவகை எனக் கல்வெட்டு அகராதி குறிக்கிறது. வேகரி என்பதும் கட்டாய உழைப்பாகச்செய்யும் ஒரு வரி என அகராதி கூறுகிறது. எனவே, பல்வேறுவகைப்பட்ட கட்டாய உழைப்பு
இருந்துள்ளதாக அறிகிறோம்.
ஒரு புறம், கட்டாய உழைப்பு என்பது, தண்டனை காரணமாக இருக்கலாம் என்னும் கருத்து ஏற்கும்படி இருக்கும் அதே வேளையில், பொது வேலை செய்ய முன்வருபவர்கள் ஊதியமின்றி உழைப்பைத் தந்தனர் என்பதும் ஏற்புடையதே.
சொந்த விருப்பால் உழைப்பைத் தருபவர்களைக் கல்வெட்டு அகராதி பொதுவேலை செய்யக்கடமைப்பட்ட குடிகள் என்று குறிப்பிடுவது சிந்தனைக்குரியது. என்ன காரணத்தால் கடமைப்பாடு ஏற்படுகிறது என்னும் கேள்வி எழுகிறது. தண்டனை காரணமா?
ஆளமஞ்சி என்றோரு சொல் கல்வெட்டுகளில் பயிலுகிறது. அதற்கு, நீர் நிலைகள் பராமரிப்புக்கான கட்டாய ஊழியம் என்று அகராதி பொருள் கூறுகிறது. (அமஞ்சி=கட்டாய ஊழியம். சென்னையில் இருக்கும் அமஞ்சிக்கரை, ஆள்அமஞ்சி கொண்டு கட்டப்பட்ட ஏரிப்பகுதியாக இருக்கலாம் என்றும் கருதலாம்.)
வெள்ளான் வெட்டி என்னும் ஒரு சொல்; அகராதி, நிலக்கிழாரான வெள்ளாளர் செலுத்தும் கட்டாய உழைப்பு என்று பொருள் கூறுகிறது. நிலக்கிழார் என்பவர்
வெற்று ஆள் அல்லர். நிலமும், அதனால் கிடைக்கும் பயனும் பெற்றவர். அவர் ஏன் கட்டாய உழைப்பைத் தரவேண்டும்?
வெட்டிப்பேறு, வெட்டப்பேறு ஆகிய இரு சொற்களுக்கு அகராதி தரும் பொருள்,
வெட்டி என்னும் உழைப்புக்குப் பயன் ஏதும் இல்லை என்னும் கூற்றுக்கு மாற்றுக் கருத்தாய் அமைகிறது. அகராதிப்பொருள்: வெட்டி உழைப்பு செய்பவருக்கு விட்ட நிலம். இங்கே, வெட்டிவேலைக்குப் பயன் கிட்டியுள்ளதே.
தலைவாயர், தலைவாய்ச்சான்றோர் என்பவர், வாய்க்கால் மதகுகளைப் பேணுபவர்கள். வெட்டிப்பேறு என்பது இந்தத் தலைவாயரின் வாழ்க்கைச் செலவுக்கு விட்ட நிலம் என்றும் அகராதி கூறுகிறது.
இவ்வாறு பல்வகைப்பட்ட கருத்து மாற்றங்கள், கல்வெட்டுச் சொற்களுக்குப் பொருள் காணும் முயற்சியில் காணக்கிடைக்கின்றன. கல்வெட்டுக் காலங்களின் சூழல், கல்வெட்டுகளில் ஆளப்பட்ட சொற்களின் சரியான பொருள் ஆகியவை மேன்மேலும் ஆய்வு செய்யப்படவேண்டும் எனத்தோன்றுகிறது.
சுந்தரம்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
வெட்டிவேலை என்பதுபற்றிய, தேமொழி அவர்களின் கட்டுரை அருமை.
ஊதியமோ, வேறு பயனோ தராத வேலை, வெட்டி என்றும், ஊதியம் பெறாமல் பணி புரிந்த வெட்டிகுடியினர் கோவில்களில் இருந்தனர் என்றும் கட்டுரையில் குறிக்கப்பெற்றுள்ளன.
கல்வெட்டு அகராதியில், வெட்டி என்பது கட்டாய உழைப்பையும், கட்டாய உழைப்பாகச் செலுத்தும் வரியையும் குறிக்கின்றது. அதேபோல், வெட்டிக்குடி என்பது, ஊதியமின்றிப் பொதுவேலை செய்யக்கடமைப்பட்ட குடி என்று கூறப்படுகிறது.
வெட்டி முட்டாள், வெட்டி முட்டை ஆள், வெட்டிமுட்டாவாள், முட்டாவாள்,வெட்டிமுட்டி என ஐந்து சொற்களாலும் குறிக்கப்படும் பொருள் கல்வெட்டு அகராதிப்படி “கட்டாய உழைப்பில் ஒரு வகை” என்பதே.
வேதினை என்னும் சொல்லும் கட்டய உழைப்பில் ஒருவகை எனக் கல்வெட்டு அகராதி குறிக்கிறது. வேகரி என்பதும் கட்டாய உழைப்பாகச்செய்யும் ஒரு வரி என அகராதி கூறுகிறது. எனவே, பல்வேறுவகைப்பட்ட கட்டாய உழைப்பு
இருந்துள்ளதாக அறிகிறோம்.
ஒரு புறம், கட்டாய உழைப்பு என்பது, தண்டனை காரணமாக இருக்கலாம் என்னும் கருத்து ஏற்கும்படி இருக்கும் அதே வேளையில், பொது வேலை செய்ய முன்வருபவர்கள் ஊதியமின்றி உழைப்பைத் தந்தனர் என்பதும் ஏற்புடையதே.
சொந்த விருப்பால் உழைப்பைத் தருபவர்களைக் கல்வெட்டு அகராதி பொதுவேலை செய்யக்கடமைப்பட்ட குடிகள் என்று குறிப்பிடுவது சிந்தனைக்குரியது. என்ன காரணத்தால் கடமைப்பாடு ஏற்படுகிறது என்னும் கேள்வி எழுகிறது. தண்டனை காரணமா?
ஆளமஞ்சி என்றோரு சொல் கல்வெட்டுகளில் பயிலுகிறது. அதற்கு, நீர் நிலைகள் பராமரிப்புக்கான கட்டாய ஊழியம் என்று அகராதி பொருள் கூறுகிறது. (அமஞ்சி=கட்டாய ஊழியம். சென்னையில் இருக்கும் அமஞ்சிக்கரை, ஆள்அமஞ்சி கொண்டு கட்டப்பட்ட ஏரிப்பகுதியாக இருக்கலாம் என்றும் கருதலாம்.)
வெள்ளான் வெட்டி என்னும் ஒரு சொல்; அகராதி, நிலக்கிழாரான வெள்ளாளர் செலுத்தும் கட்டாய உழைப்பு என்று பொருள் கூறுகிறது. நிலக்கிழார் என்பவர்
வெற்று ஆள் அல்லர். நிலமும், அதனால் கிடைக்கும் பயனும் பெற்றவர். அவர் ஏன் கட்டாய உழைப்பைத் தரவேண்டும்?
வெட்டிப்பேறு, வெட்டப்பேறு ஆகிய இரு சொற்களுக்கு அகராதி தரும் பொருள்,
வெட்டி என்னும் உழைப்புக்குப் பயன் ஏதும் இல்லை என்னும் கூற்றுக்கு மாற்றுக் கருத்தாய் அமைகிறது. அகராதிப்பொருள்: வெட்டி உழைப்பு செய்பவருக்கு விட்ட நிலம். இங்கே, வெட்டிவேலைக்குப் பயன் கிட்டியுள்ளதே.
தலைவாயர், தலைவாய்ச்சான்றோர் என்பவர், வாய்க்கால் மதகுகளைப் பேணுபவர்கள். வெட்டிப்பேறு என்பது இந்தத் தலைவாயரின் வாழ்க்கைச் செலவுக்கு விட்ட நிலம் என்றும் அகராதி கூறுகிறது.
இவ்வாறு பல்வகைப்பட்ட கருத்து மாற்றங்கள், கல்வெட்டுச் சொற்களுக்குப் பொருள் காணும் முயற்சியில் காணக்கிடைக்கின்றன. கல்வெட்டுக் காலங்களின் சூழல், கல்வெட்டுகளில் ஆளப்பட்ட சொற்களின் சரியான பொருள் ஆகியவை மேன்மேலும் ஆய்வு செய்யப்படவேண்டும் எனத்தோன்றுகிறது.
சுந்தரம்.
அங்கதம் என்பதன் பொருள் நையாண்டி எனப்படும். யாரேனும் ஒருவரையோ, ஒரு கருத்தாக்கத்தையோ அல்லது ஒரு நிகழ்வையோ பழித்து, பகடி செய்து, கிண்டல், கேலி செய்து எழுதுவது அங்கதம் எனப்படும். இந்த அங்கதம் என்னும் இலக்கிய முறை, தொன்று தொட்டு அனைத்து மொழியிலும், அனைத்துப் பண்பாட்டிலும், உலகம் முழுவதும் எல்லோராலும் விரும்பப்படும் ஓர் நகைச்சுவை மிகுத்த இலக்கிய எழுத்து நடை. மேலும், அங்கதம் இலக்கியத்தின் அடிப்படை இயல்புகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. சமுதாயத்தில் வேரூன்றி, நிலைபெற்று, நடைமுறையாகிவிட்ட ஒரு அதிகாரக்கட்டமைப்பை நிலைகுலையச் செய்யும் நோக்கிலும் அங்கதம் பயன்படுத்தப்படும். அதுபோன்றே, புரையோடிப்போன ஒரு அரசியலமைப்பை, ஆதிக்கவர்கத்தை அசைத்துப் பார்க்கும் நோக்கிலும் அங்கதம் துணிவுமிக்க எழுத்தாளர்களால் பயன்படுத்தப்படும்.
இந்த இலக்கியமுறை சிரிக்க… சிந்திக்க… என பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கும். எதைத்தாக்கி நகைச்சுவையாக எழுதுவது என்ற வரையறை அங்கத எழுத்தாளர்களுக்குக் கிடையாது. சமயம், சாதி, கடவுள், அரசாங்கம், பிரபலங்கள், அரசியல்வாதிகள் என யாரையும், எந்த ஒரு கருத்தையும் அங்கத எழுத்தாளர்கள் விட்டுவைப்பதுமில்லை. அதற்கு அந்த எழுத்தாளர்களுக்கு உரிமை இருக்கிறது என்பது பலகாலமாக உலக வழக்காகவும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது. அங்கதம் இந்நாளைய திரைப்படங்களிலும் ஊடுருவி இருக்கிறது. ‘அரசியல்நெடி’ வீசும் வசனங்களையும்,பாடல்களையும் விரும்பாத இரசிகர்களும் குறைவே. அரசியல் அங்கதங்கள் பல அரசியல் கருத்துப் படங்களாகவும் வெளிவரும். நையாண்டி செய்யப்படுபவரை நேரடியாகவோ மறைமுகமாகவோ குறிப்பது அங்கதத்தின் முறை. இத்தகைய எழுத்துமுறை பெரும்பாலும் மறைமுகமாகத் தாக்குவது போல அமைந்துவிடுவதால் அங்கத எழுத்தாளரைத் தண்டனைக்கு உட்படுத்துவதும் அதிகாரம் உள்ளவர்களால் இயலாது போகும். அங்கத எழுத்தாளரின் நோக்கம் மக்களுக்கு நகைச்சுவை கலந்த இலக்கியம் வழியாகச் சமுதாயம்மற்றும் அரசியல் விழிப்புணர்வு கொண்டு வருவது.
தமிழிலும் அங்கதம் தொன்று தொட்டுக் கையாளப்பட்டது என்பதற்குத் தொல்காப்பியர் எழுதிய நூலிலேயே அதற்கு இலக்கண சூத்திரம் வரையறுக்கப்பட்டிருப்பதும் ஒரு சான்று. செய்யுள் இயற்றுங்கால், மரபுக்கவிதைக்காகக் கூறப்படும் இலக்கணம் பற்றி விவரிக்கும் பொழுது,
“எழுத்தொடும் சொல்லொடும் புணரா தாகிப்
பொருட்புறத் ததுவே குறிப்புமொழி என்ப”
என அங்கதம் குறித்து தொல்காப்பியம் கூறுகிறது.
‘வசையொடும் நகையொடும் பொருந்திவரும்’என்பது தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணரின் விளக்கம். ஒருவரை வசைபாடுவது போல புகழ்ந்து பேசும் முறையை ‘செம்பொருள் அங்கதம்’ என்றும்;மாறாகப் புகழ்வது போல பழித்துரைப்பதை ‘பழிகரப்பு அங்கதம்’ என்றும்தொல்காப்பியம் வரையறுக்கிறது. இக்காலக் கவிதைகளில் வரும் அங்கதங்களை, ‘தனி மனித அங்கதம்’, ‘சமுதாய அங்கதம்’, ‘அரசியல் அங்கதம்’ எனவும் வகைப்படுத்தும் முறையும் உள்ளது. ஆகையினால், அங்கதம் என்பது நகைச்சுவையும், புலமை நுட்பமும், திறனாய்வு நோக்கும் கொண்ட ஓர் இலக்கிய உத்தி. இது மக்கட் சமுதாய மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. தீங்கையும், அறிவின்மையையும் கண்டனம் செய்வது; மனிதக்குலக் குற்றம் கண்டு சினங்கொண்டு சிரிப்பது என விளக்குகிறார் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் ஆசிரியர் திரு.கி. சிவகுமார்.
இவ்வாறாக, தீமையையும் அறியாமையையும் எடுத்துக்கூற முற்படும்பொழுது, அதை நகைச்சுவையுடன் சுட்டிக்காட்ட விரும்பும் அங்கதம் என்னும் நையாண்டி முறையை ஆங்கிலத்தில் ‘Satire’ எனக் குறிப்பிடுவோம். மக்களின் சமுதாய மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்டது என்பது அடிப்படை நோக்கமாக இருப்பதால், அங்கத இலக்கியங்களில் கண்டனத்திற்குரிய கசப்பான கருத்துகள், இனிப்பு நகைச்சுவையில் தோய்த்து வழங்கப்படும் முயற்சி மக்களின் கவனத்தைக் கவரும் நோக்கில்தான் கையாளப்படுகிறது.
சமுதாயக் குறைபாடுகளைச் சாடும் அங்கத படைப்புகளும் (social satire), அரசியல் மற்றும் அரசாங்க நடவடிக்கைகளைச் சாடும் ‘அரசியல் நையாண்டி’களும் (political satire) இக்கால தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்றிருந்தாலும் அவற்றைக் குறித்து நாம் அக்கறை காட்டி, அவை மக்கள் நலனை முன்னேற்றும் வகையில் பங்காற்றியதை பாராட்டுவது வழக்கமில்லாது இருக்கிறது.மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள், குறுங்கதைகள், சிறுகதைகள்,சீர்திருத்த இலக்கியங்கள், புதினங்கள் எனத் தமிழ் இலக்கியப்படைப்புகளை வகை வகையாக வகைப்படுத்தும் பொழுது, அங்கத இலக்கியப்படைப்புகள் குறித்தும், அங்கத எழுத்தாளர்கள் குறித்தும் நாம் முக்கியத்துவம் கொடுத்துப் பாராட்டுவதில்லை.
(I) சித்திரகுப்தன் என்ற புனைப்பெயரில் பெரியார்:
தமிழ் எழுத்தாளர்களில் ஒரு சிறந்த அங்கத எழுத்தாளராக, தனது நையாண்டி எழுத்துக்களால் சமூகக் குறைபாடுகளை, அரசியல் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டும் படைப்புகளை மக்கள் முன் கொண்டு சென்றவர் என சித்திரபுத்திரன் அவர்களைக் குறிப்பிடலாம். சித்திரகுப்தன் என்பது பெரியார் ஈ. வெ. ராமசாமியின் புனை பெயர்களில் ஒன்று. தனது சாதி ஒழிப்பு நோக்கம், அதற்குக் காரணமான சமயத்தையும், கடவுளையும் மறுக்கும் நடவடிக்கைகளுக்கு சித்திரபுத்திரன் என்ற புனைப்பெயரில், தான் நடத்திய ‘குடியரசு’ இதழில் கட்டுரைகளையும், உரையாடல்களையும் எழுதுவதைப் பெரியார் வழக்கமாகக் கொண்டிருந்தார். இதனை “தந்தை பெரியார் சிந்தனைகள்” என்ற தனது நூலில் பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் அவர்கள், “மூட நம்பிக்கைக்கு மூலாதாரம் கடவுள் என்பது அவர் (பெரியார்) கருத்தாதலால் இறைமறுப்புக் கொள்கை அவரது பேச்சாகவும் அமைகின்றது; மூச்சாகவும் இருந்து வந்தது. அவர்தம் வாழ்நாளெல்லாம் இறைமறுப்புக் கொள்கையை நிலை நிறுத்துவதற்காக ஆயிரக்கணக்கான கூட்டங்களில் பேசிவந்தார்; குடியரசு இதழ்களில் ‘சித்திரபுத்திரன்’ என்ற புனைபெயரால் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் எழுதிவந்தார்” எனக் குறிப்பிடுகிறார்.
இவ்வாறு உரையாடல் பாணியில் குடியரசு இதழில் வெளியான “சித்திரபுத்திரன் – உரையாடல்கள்”, “சித்திரபுத்திரன் – விவாதங்கள்” அல்லது “சித்திரபுத்திரன் – சம்பாஷணைகள்” பல தொகுக்கப் பெற்று இருநூல்கள் வெளியிடப்பட்டுள்ளன:
(1) “சித்திரபுத்திரன் விவாதங்கள்” என்று பெரும்பாலும் மதங்கள் பற்றிய விளக்கம் எதிர்பார்க்கும் 12 அங்கத உரையாடல்கள் தொகுக்கப்பட்டு திராவிடர் விடுதலைக் கழகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
(2) “மதுவிலக்கு சம்பாஷணை” என்னும் பெரியார் கருவூலம் – 1943 என்ற நூலும் வெளியிடப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட இந்த இருநூல்களுமே மின்னூல் வடிவில் இணையத்தில் கிடைக்கின்றன.
இவற்றுடன், பெரியார் கொள்கையை ஆதரிக்கும் பெரியாரியல் ஆர்வலர்களில் பலரும் தத்தமக்கு விருப்பமான ஓரிரு உரைகளை தங்கள் இணையதளங்களில் பதிவேற்றி உள்ளார்கள். சித்திரபுத்திரன் உரையாடல்கள் குறித்த தொகுப்பு கட்டுரையின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது.
ஓர் எடுத்துக்காட்டு கொடுக்க வேண்டுமானால்; கீழ்வரும் அவரது கருத்தின் வழியாகப் பெரியாரின் கடவுள் குறித்த அவரது சிந்தனையின் ஓட்டத்தைப் புரிந்து கொள்ளலாம்:
“சர்வ வல்லமையுடைய கடவுள் ஒருவர் இருந்தால் மனிதனுடைய தேவைக்கும் ஆசைக்கும் தகுந்தபடி நடந்துகொண்டு இருப்பார். அல்லது, கடவுளுக்குப் பிடிக்காத விடயங்களைப் பற்றி மனிதனுக்குத் தேவையில்லாமலாவது, ஆசையில்லாமலாவது அல்லது நினைப்புக்கே வராமலாவதுசெய்திருப்பார்.
உதாரணமாக, மனிதன் தனக்கு முகத்தில் மயிர் வேண்டியதில்லை என்று கருதி தினம் தினம் சவரம் செய்துகொள்வதைப் பார்க்கிறோம். ஆனால், கடவுள் கிருபையால்அது தினம் தவறாமல் முளைத்துக் கொண்டே வருவதையும் பார்க்கின்றோம்.
இது என்ன, கடவுளுடன் மனிதன் ஏறுக்கு மாறாய் நடந்து போட்டி போடுகின்றானா? அல்லது, மனிதனுடன் கடவுள் ஏறுக்கு மாறாக நடந்து போட்டி போடுகின்றாரா? அல்லது, ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாமல் அவரவர் காரியத்தை அவரவர்கள் பார்க்கின்றார்களா?
(- சித்திரபுத்திரன் கட்டுரை, ‘குடிஅரசு’, 6-12-1947)
இது போன்ற பெரியாரின் அங்கதங்கள் தமிழர் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்திய அறிகுறிகள் இந்நாளில் நமக்குத் தெரியாது இருக்கலாம். ஆனால், பெரியாரின் அங்கத உரைகளைக் கேட்க அவர்காலத்திய ஆண்களும் பெண்களும் ஆர்வத்துடன் கூடினார்கள் என்பதையும், அவரது பார்ப்பனீய எதிர்ப்பு கொண்ட நையாண்டிகளைக் கேட்க பார்ப்பனர்களும் ஆர்வத்துடன் அவர் கூட்டத்திற்கு வந்துள்ளார்கள் என்றும் தமது நூலில் குறிப்பிடுகிறார் பேராசிரியர் ‘பாலா ரிச்மேன்’ (Paula Richman). “E.V.R.’s style of argumentation derives from oral presentation. His speeches were unforgettable events. Respectable women (who would not think of mingling directly with those they perceived as the “common riffraff” who frequented such events) would crowd onto nearby verandas and listen to his speeches over loudspeakers. Even Brahmins—often the subject of his attack—attended his speeches to hear his cutting yet ‘humorous satire’.”
அமெரிக்காவின் ஒஹையோ பல்கலைக் கழகத்தின் ‘தெற்காசிய சமயங்கள்’ துறையின் ஆய்வாளர்களில் ஒருவர் பேராசிரியர் ‘பாலா ரிச்மேன்’ அவர்கள். இவர் தனது ஆய்விற்காக இராமாயணத்தைத் தேர்வு செய்து ஆய்வைத் தொடக்கினார். அப்பொழுது பெரியார் இராமாயணத்தைத் தாக்கி ஆற்றிய உரைகளைப் பற்றி இவர் அறிய நேர்ந்தது. ஒரு நாத்திகரை இந்த அளவு இராமாயணக் கதை கவர்ந்தது என்றால், பலவகை வேறுபாடுகளுடன் வழங்கப்படும் இராமாயணக் கதைகளையும் ஆராய வேண்டும் என்ற எண்ணம் இவருக்கு ஏற்பட்டது. பல இராமயணக்கதைகளை ஆய்வு செய்து, ‘Many Ramayanas: The Diversity of a Narrative Tradition in South Asia’ மற்றும் ‘Questioning Ramayanas, a South Asian Tradition’ என்ற இரு கட்டுரைத் தொகுப்பு நூல்களை வெளியிட்டுள்ளார். இதில் Many Ramayanas என்ற நூலில் ஒன்பதாம் அத்தியாயத்தில் “E. V. Ramasami’s Reading of the Ramayana” என்ற தலைப்பின் கீழ் பெரியார் தனது சமயமறுப்புக் கொள்கையைப் பரப்ப இராமாயணத்தைக் கையாண்ட முறையைப் பற்றி விளக்குகிறார்.
(II) சித்திரபுத்திரனின் உரையாடல்கள் சில:
சித்திரபுத்திரன் உரையாடல்கள் இருவர் விவாதங்களாகவே அமைந்திருக்கும். சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தின் சமுதாயநிலை, அரசியல் நடவடிக்கைகள் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் வரலாற்று ஆவணங்களாக சித்திரபுத்திரன் – உரையாடல்களைக் கொள்ளலாம். உரையாடுபவர்களில் ஒருவர் விளக்கம் கேட்க, மற்றொருவர் அதற்கு பதில் சொல்வதன் மூலம் அன்றைய நிகழ்வுகளை, அந்த நிகழ்வுகளுக்கான காரணங்களை, அவை ஏற்படுத்தக் கூடிய தாக்கத்தை மக்களுக்குக் கொண்டு செல்லும் வழியில் உரையாடல்களின் போக்கு அமையும். மேலோட்டமாகக் காணும்பொழுது புரிந்து கொள்ள முடியாத செய்திகள், நிகழ்வுகளின் அடிப்படை நோக்கம், ஆதிக்கவட்டத்தின் மறைமுக ஊழல்கள், சதிச்செயல்கள் ஆகியவற்றைஅம்பலப்படுத்தும் நோக்கிலும் உரையாடல்கள் அமைக்கப்பட்டிருக்கும்.
(1) பார்ப்பனீய சம்பாஷணை (குடி அரசு – உரையாடல் – 19.12.1926): என்ற உரையாடலில், மணி மற்றும் சேஷன் என்ற காங்கிரஸ் ஆதரவாளர்களான இரு பார்ப்பனர்கள் அந்த ஆண்டு நடந்த தேர்தலில் பனகல் அரசர் ‘பனங்கன்டி ராமராயநிங்கார்’ தோற்றுவிட்டதால் மகிழ்கிறார்கள். 1921 ஆம் ஆண்டில் நீதிக்கட்சியின் சார்பில் முதல்வராகப் பதவியேற்ற பனகல் அரசர் ‘அரசுப் பணிகளில் வகுப்புவாரி இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணை’ (Communal Government Order – Communal G. O. No. 613) யைப் பிறப்பித்தார். ஒடுக்கப்பட்டவர்களை “பறையர்”என்று குறிக்கப்படாமல் “ஆதி திராவிடர்” என்று குறிக்கப்பட வேண்டும் என்ற சட்டம் கொண்டு வந்தார். இந்து ஆலயங்களின் நிர்வாகத்தை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக இந்து அறநிலையச் சட்டத்தை இயற்றினார். இவையாவும் அக்கால உயர்குடிப்பிறப்புகள் என்று கூறிக்கொள்பவர்களுக்கு வெறுப்பை அளித்தது. அவர்கள் ஆதிக்கம் குறைவதற்குக் காரணமாகவும் இருந்தது. இதனால் அவர்கள் பனகல் அரசர் தோற்றதில் மகிழ்கிறார்கள். அத்துடன், புதிய அமைச்சரவையில் மூன்று பார்ப்பனரல்லாதவர் அமைச்சர் பதவி பெற்றது ஒரு விரும்பத்தகாததாக நிகழ்வாக இருப்பினும், அதுவும் ஒரு வகையில் நன்மையே என நினைக்கிறார்கள்.
1925-ல் காஞ்சிபுரத்தில் திரு.வி.க.தலைமையில் நடைபெற்ற காங்கிரசு மகாநாட்டில், “வகுப்பு வாரி பிரதிநிதித்துவ உரிமை வேண்டும்”, என்று பெரியார் எழுப்பிய கோரிக்கையை, பார்ப்பனரல்லாத திரு.வி.க. தலைவர் பதவியில் இருந்ததால் அவரைக் கொண்டே காங்கிரசுதலைவர்கள் வெகு சுலபத்தில் அத்தீர்மானத்தை விவாதத்திற்குக் கூட கொண்டு வராமல் தள்ளுபடி செய்ய முடிந்தது. அதே சமயம் பழி பார்ப்பனர் மீதும் விழவில்லை. இது போன்று அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள, அமைச்சர் பதவி பெற்றிருக்கும் மூவரையும் பயன்படுத்திக் கொள்ள நமக்கு வசதியாக இருக்கும் எனவும் பேசிக் கொள்கிறார்கள். இந்த அரசியல் உரையாடல் மூலம் தனது வகுப்பு வாரி பிரதிநிதித்துவ உரிமை கோரிக்கை தோல்வியடைந்தது, வகுப்புவாரி இட ஒதுக்கீடு ஆதரவாளரான பனகல் அரசர் பதவியில் இல்லாதது போன்றவற்றால் யார் ஆதாயம் அடைந்ததாக மகிழ்வார்கள் என்று பொது மக்களுக்கு எடுத்துக்காட்டுகிறார். இந்த உரையாடலின் மையக் கருத்து இதுவாக இருந்தாலும், முழுஉரையாடலும் சென்றநூற்றாண்டின் சமுதாயத்தில் மக்களிடம் இருந்த உயர்வுதாழ்வு நிலையையும், அரசியல் நிலையையும், குறிப்பாக வேலைவாய்ப்பு நிலையையும் விரிவாகப் படம் பிடித்துக் காட்டும்.
(2) அய்யர் அய்யங்கார் சம்பாஷணை (குடி அரசு – உரையாடல் – 07.11.1937): ராமானுஜம் அய்யங்கார், சுப்பராய அய்யர் என்ற இருவர் இராஜாஜி முதல்வரான பின்னர் எடுத்த நடவடிக்கைகளின் தாக்கங்களை அலசுகிறார்கள். பனகல் அரசர் 1921 ஆம் ஆண்டு கொணர்ந்த ‘அரசு பணிகளில் வகுப்புவாரி இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணை’யை மாற்றப்போவதில்லை, மதுவிலக்கு கொண்டு வரப்படும், பள்ளியில் இந்தி கல்வி அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்த அறிக்கையால் என்ன விளைவுகள் ஏற்படும்,யாருக்கு இழப்பு, ஏன் அந்த இழப்பு, ஒவ்வொரு திட்டத்தினாலும் பயன் பெறப்போவது யார், பாதிக்கப்படப்போவது யார் என விவாதிக்கிறார்கள்.அக்காலத்தில் கல்விக்கான நிதி மதுவிற்பனையால் பெறப்பட்டது என்பதும், மதுவிலக்கு கொண்டுவந்தால் கல்விக்காகச் செலவிடப்படும் தொகை குறையும், இதனால் கல்விக்கு ஆபத்து என்பதையும் அவர்கள் உரையாடல் காட்டுகிறது. அத்துடன் இந்தியை நுழைத்த செயல் இராஜாஜிக்கு எதிராகத் திரும்பிவிடும் என்றும் கவலை அடைகிறார்கள். இந்த உரையாடல் தமிழகத்தின் கல்விநிலை, கல்வியில் இந்தி புகுத்தப்படுவதால் முன்னேறி வரும் பிரிவினரின் வேலைவாய்ப்பில் ஏற்படப்போகும் மறைமுக பாதிப்புகள் ஆகியவற்றை மக்களுக்குக் கொண்டு செல்லும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது.
மேற்கூறிய உரையாடல்கள் சமுதாய அரசியல் மாறுதல்களைக் கருத்தில் கொண்டு எழுதப்பட்டவை. பெரியாரின் சமயமறுப்பு, சாதிமறுப்பு கொள்கைகளை வெளிப்படுத்தும் உரையாடல்கள் சிலவற்றையும் அடுத்து காணலாம்.
(3) சுயமரியாதைக்காரருக்கும் புராண மரியாதைக்காரருக்கும் சம்பாஷணை (குடி அரசு – உரையாடல் – 07.09.1930) : சுயமரியாதைக்காரன் ஒருவருக்கும், புராண மரியாதைக்காரன் ஒருவருக்குக்கும் இடையே நடக்கும் உரையாடல் இது. அதாவது நாத்திகருக்கும் ஆத்திகருக்கும் இடையே நடக்கும் உரையாடல். இதன் மையக்கருத்தும், உரையாடல் போக்கும் நகைச்சுவைக்காகவே படித்து மகிழத்தக்கவை. வறிய நிலையிலும் சிரமம் பாராமல் கடன் வாங்கிக் கொண்டு காசிக்குப் பயணம் போகிறார் ஒரு புராண மரியாதைக்காரன். அப்படிப் போகவேண்டிய தேவைதான் என்ன என்பது சுயமரியாதைக்காரன் எழுப்பும் கேள்வி. பதிலுக்கு சுயமரியாதைக் கூட்டத்தைத் திட்டித் தீர்க்கிறார் புராண மரியாதைக்காரன். இந்தப்பகுத்தறிவாளர்கள் கூட்டம் வந்து மக்களைக் கெடுத்துவிட்டது, பாடுபட்டு வளர்த்துப் படிக்க வைத்த இவரது பிள்ளைகளுக்கு பகுத்தறிவாளர் கொள்கைகள் மீது ஆர்வம் வந்துவிட்டது. இனி மோட்சம் போக அவர்களை எப்படி நம்புவது என்று கேள்வி கேட்கிறார். மேலும், “நானோ வயது முதிர்ந்த கிழவன். ஒரு வேளை திடீர் என்று செத்துப்போய்விட்டேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது என்னுடைய பிள்ளைகள் எனக்குக் கர்மம் செய்வார்களா? திதி செய்வார்களா? எள்ளுந் தண்ணீர் இறைப்பார்களா? பிண்டம் போடுவார்களா? நீங்களே சொல்லுங்கள் பார்ப்போம். இந்த நாசமாய்ப் போன சுயமரியாதைக்காரர்களால் எவ்வளவு தொல்லை?”என்று புலம்புகிறார். அதற்கு காசிக்குப் போவானேன் என்கிறார் குழப்பத்துடன் சுயமரியாதைக்காரன்.
காசியில் இறந்தால் மோட்சம் கிடைக்கும் அங்கேயே போய் உயிரைவிடப்போகிறேன், திரும்பி வரும் எண்ணம் இல்லை என்கிறார் புராண மரியாதைக்காரன். கவனிக்கவும்; திரும்பி வரும் எண்ணம் இல்லாதவர் கடன் வாங்கி காசிக்குப் போகிறார், அதனால் கடனைத் திருப்பித் தரும் எண்ணமும் இவருக்கில்லை, மோசடி வேலையில் மோட்சத்துக்குப் போவது இவருடைய திட்டம். தொடர்ந்து, “இவ்வளவு தீர்மானத்துடனும் பிடிவாதத்துடனும் இந்த முதிர்ந்த வயதில் போகின்றீர்களே ஒரு சமயம் தாங்கள் வழியில் செத்துப் போய் விட்டால் என்ன செய்வீர்கள்? அப்புறம் கயாவும், காசியும் எப்படித் தங்களுக்கு உதவும்?” என்ற ஒரு சந்தேகத்தை எழுப்பி சுயமரியாதைக்காரன் மேலும் சில வசவுகளை புராண மரியாதைக்காரனிடம் இருந்து பெற்றுக் கொண்டு இடத்தைக் காலி செய்கிறார். இந்த உரையாடலின் நோக்கம், பெரியாரின் சமயமறுப்புக் கொள்கை, புராண நம்பிக்கைகளின் மீது கேள்வி எழுப்பும் வழக்கமான பாணியில் அமைந்துள்ளது.
(4) வைதிகப் பார்ப்பானுக்கும், கோயில் பிரவேச பார்ப்பானுக்கும் சம்பாஷணை (குடி அரசு – உரையாடல் – 13.11.1932) : வைதிகப் பார்ப்பனர் ஒருவருடன் உரையாடும் ஒடுக்கப்பட்ட மக்களின் ஆலய பிரவேசத்தை ஏற்றுக் கொண்ட பார்ப்பனர், “கோயில்களில் ஆதிதிராவிடர்கள் முதலான தாழ்த்தப்பட்டவர்களையெல்லாம் விட்டு விட்டால்தான் என்ன? சாஸ்திரம் போனால் போகிறது?” என்று சொல்கிறார். அவரது கவலையெல்லாம் ஒரேடியாக, சாஸ்திரங்களெல்லாம் பொய் என்று சொல்லும் சுயமரியாதைக் காரர்கள் கேட்கும் கேள்விகளுக்குச் சமாதானம் சொல்ல முடியாமலிருப்பதுதான். சுயமரியாதைக்காரர்கள் சாஸ்திரங்கள் பார்ப்பனர்களின் வயிற்றுப் பிழைப்புக்காக ஏற்பட்டவை. மனிதர்களுக்குள் சிறிதும் வித்தியாசமே இல்லை. எல்லா மனிதர் களுக்கும் எல்லாச் சுதந்தரங்களும் உண்டு. உலகத்தில் உள்ள வித்தியாசங்கள் எல்லாம் மனிதனால் ஏற்பட்டவை தான், அதுவும் சுயநலத்தால் ஏற்பட்டவை என்று கூறி சமதர்ம வாதம் புரிகிறார்களே அவர்களை எப்படிச் சமாதானப்படுத்த முடியும் என்பதாக இருக்கிறது. இதனால் ஆதிதிராவிடர்களைக் கோவிலுக்குள் அனுமதித்துவிடுவோம் என்கிறார். அவருக்கு வைதீகர், “நீங்கள் நாத்திகர்கள், உங்களுக்கு ஒன்றும் சொல்ல முடியாது என்று சொல்லிவிட வேண்டியது தான். மற்றவர்களிடமும், அவர்களைப்பற்றி நாத்திகர்கள், மதத் துரோகிகள், தேசத்துரோகிகள் என்று கூறிவிட்டால் சரியாகப் போய்விடும். ஆகையால் அதைப் பற்றிக் கவலை வேண்டாம்”, என்று ஆறுதல் கூறுகிறார். இந்த உரையாடலின் நோக்கமும், பெரியாரின் சமயமறுப்புக் கொள்கை, புராண நம்பிக்கைகளின் மீது கேள்வி எழுப்பும் வழக்கமான பாணியில் அமைந்துள்ளது. அத்துடன் அக்காலத்தில்ஆதிதிராவிடர்களின் ஆலயப் பிரவேசத்திற்கு எழுந்த தடை பற்றிய வரலாற்றுச் செய்தியும் இருக்கிறது.
வைக்கத்தில் ஆதிதிராவிடர்களின் ஆலயப் பிரவேசத்திற்காகப் போராடிய காரணத்தால் பெரியார் ‘வைக்கம் வீரர்’ எனவும் பாராட்டப்பட்டார் என்பது நாம் அறிந்ததே. சமத்துவ நோக்கம் தவிர்த்து, சுகாதார நோக்கிலும் மக்களுக்கு விழிப்புணர்வு கொண்டுவர ‘மாமாங்கத்தின் அற்புதம்’ என்றொரு அங்கத உரையாடலையும் எழுதியுள்ளார் சித்திரபுத்திரன்.’சித்திரபுத்திரன் விவாதங்கள், என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ள 12 உரையாடல்களும் பெரியாரின் சமயமறுப்புக் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளன. அவற்றைச் சற்று விரிவாகவும் நோக்குவதன் மூலம் , பெரியார் அங்கத எழுத்தாளராக உருவெடுத்து எந்தெந்த கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்த்தார் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
வைக்கத்தில் ஆதிதிராவிடர்களின் ஆலயப் பிரவேசத்திற்காகப் போராடிய காரணத்தால் பெரியார் ‘வைக்கம் வீரர்’ எனவும் பாராட்டப்பட்டார் என்பது நாம் அறிந்ததே. சமத்துவ நோக்கம் தவிர்த்து, சுகாதார நோக்கிலும் மக்களுக்கு விழிப்புணர்வு கொண்டுவர ‘மாமாங்கத்தின் அற்புதம்’ என்றொரு அங்கத உரையாடலையும் எழுதியுள்ளார் சித்திரபுத்திரன்.’சித்திரபுத்திரன் விவாதங்கள், என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ள 12 உரையாடல்களும் பெரியாரின் சமயமறுப்புக் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளன. அவற்றைச் சற்று விரிவாகவும் நோக்குவதன் மூலம் , பெரியார் அங்கத எழுத்தாளராக உருவெடுத்து எந்தெந்த கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்த்தார் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
(III) சித்திரபுத்திரன் விவாதங்கள் – மதங்கள் பற்றிய விளக்கம்:
1. சிக்கலான பிரச்சினை: ஒரு ஆத்திகனுக்கும் பகுத்தறிவாதிக்கும் இடையே சமயங்களையும் கடவுளரையும் குறித்த ஓர் உரையாடல் நடைபெறுகிறது. மதங்கள் மனிதனால் உண்டாக்கப்பட்டவை. இருப்பது ஒரே கடவுள் என்று சொன்னால் இத்தனை விதமான மதங்களையும், கடவுளரையும் ஒரு கடவுளே படைக்க வேண்டிய காரணம் என்ன? என்ற பகுத்தறிவுவாதியின் கேள்வியினால் குழப்பமடைகிறார் ஆத்திகன். கடவுளின் மகன் என்று சொல்வதற்கு, கடவுளின் தூதன் என்று சொல்வதற்கெல்லாம் என்ன ஆதாரம்?, வேத நூல்கள் சொன்னால் அதற்கு என்ன ஆதாரம்?, கடவுள் வேத நூல்களைப் படைத்தார் என்பதற்கு என்ன ஆதாரம்?, யாரோ சொன்னார்கள் என்று சொல்வதையெல்லாம் ஏற்றுக் கொள்ளலாமா?, அப்படியானால் நான் ஒரு கடவுள் என்று சொன்னால் நீ ஏற்றுக் கொள்வாயா? என்று கேள்விமேல் கேள்வி கேட்டுத் துளைத்தெடுக்கிறார் பகுத்தறிவுவாதி. பகுத்தறிவாளர் இது போல இந்து, புத்த, கிறித்துவ, முகம்மதிய, பொதுவாக என ஒவ்வொரு மதக் கோட்பாட்டையும் குறித்து பற்பலக் கேள்விகள் கேட்கும்பொழுது; பதில் சொல்லத் தெரியாதபொழுதெல்லாம், “இது ஒரு சிக்கலான பிரச்சினை, பெரியவர்களை கலந்தாலோசித்து பதில் சொல்கிறேன்” என்று பதில் சொல்லாமல் ஆத்திகன் நழுவுவது படிப்பவருக்கு புன்முறுவலை வரவழைக்கும் விதம் அமைந்திருக்கிறது.
2. அப்பவே வாக்குக் கொடுத்திட்டேன்: இந்த உரையாடல் கலப்புமணத்தை ஆதரிக்கும் நோக்கில் அமைந்துள்ளது. பிராமணர் மகள் சேஷுக்குட்டி அடுத்தவீட்டு முஸ்லிம் பையன் சுக்கூர் என்பவனுடன் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு தாய் கோபமுற்று கண்டிக்கிறார். அப்படி என்ன அந்த சாயுபுடன் பேச்சு என்கிறார் தாய். சிறுவயதில் சேஷுக்குட்டி கட்டிய மணல் வீட்டை இடிக்க வந்த சுக்கூரைத் தடுக்கிறாள் சேஷுக்குட்டி. என்னைத் திருமணம் செய்துகொள்கிறேன் என்று சொல் இடிக்கமாட்டேன் என்கிறான் சுக்கூர். அதனால் வாக்குக் கொடுத்ததாகவும், அவனை மணந்து கொள்ளப்போவதாகவும் சொல்கிறாள். சட்டம் வந்திருக்காவிட்டால் உனக்கு எப்பொழுதோ திருமணம் செய்து வைத்திருப்போம், அரசு அந்த சட்டம் போட்டதால் வந்த கேடு இது, உன் அப்பா நாளை வீட்டுக்கு வரட்டும் இதற்கு ஒரு முடிவு கட்டுகிறேன் எனப் பொருமுகிறார் தாய் சாரதா. ஆனால் இரவோடு இரவாக சேஷுக்குட்டியும் சுக்கூரும் காணாமல் போகிறார்கள். சேஷுக்குட்டியின் அப்பாவிடம் புலம்புகிறார் அவளது அம்மா. ஆனால் அப்பாவோ திருமண செலவு மிச்சம், வரதட்சினை செலவு மிச்சம். யாரேனும் கேள்வி கேட்டால், கேட்பவர்கள் காங்கிரசு கட்சிக்காரர்கள் என்றால் இந்து இசுலாம் ஒற்றுமைக்காக முடிவெடுத்தோம் என்று சொல், நீதிக்கட்சிக்காரர் கேட்டால் சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்துவிட்டோம் என்று ஏதோ ஒரு காரணம் சொல்லிவிடு என்கிறார்.
3. நமோ! நமஹா! நமோ நமஹா!: இதில் ஒரு கோயில் அர்ச்சகரும், சோதிடரும் கூட்டுக் களவாணிகள் போல இணைந்து ஏமாற்று வேலை செய்து, மக்களின் மூடநம்பிக்கையால் ஆதாயம் பெறுகிறார்கள். சோதிடர் மக்களிடம் அவர்கள் சாதகப் பலன் சரியில்லை, கோவிலுக்குப் போய் பரிகாரம் செய் என்று அனுப்புகிறார். அதனால் அர்ச்சகருக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. ஆனால், சோதிடரின் பங்கை அவர் தராமல் ஏய்க்க நினைக்கும் பொழுது, சோதிடர் மக்களை வேறு கோயிலுக்குப் போகச் சொல்வேன் என்றும், அர்ச்சகரின் தனிப்பட்ட வாழ்க்கையில் உள்ள ரகசியங்களை அம்பலப்படுத்துவேன் என்றும் கூறி மிரட்டி அர்ச்சகரைப் பணிய வைக்கிறார். இது மக்களின் மூடநம்பிக்கையால் அவர்கள் எவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள் என்று காட்டும் நோக்கில் அமைந்துள்ளது.
4. நான் இருக்கப் பயமேன்: ஒரு சராசரித் தந்தை சிரமப்பட்டு மகனை பணம் செலவழித்து பள்ளிக்கு அனுப்புகிறார். ஆனால் அவனோ படிக்காமல் ஊர் சுற்றுகிறான். படிக்காவிட்டால் தேர்வில் தேர்ச்சி பெறமுடியாது என கண்டிக்கிறார் தந்தை. ஆனால் அவர் மகனோ கவலை வேண்டாம் நான் இடுப்பில் சாயிபாபா டாலர் அணிந்திருக்கிறேன், அது எனக்குத் தேர்வில் உதவும் என்று முட்டாள்தனமாக பதில் சொல்கிறான். கோபம் கொண்ட தந்தை மேலும் அது குறித்து விசாரிக்கும் பொழுது அவனது ஆசிரியரே (வாத்தியார் பஞ்சாபகேச சாஸ்திரி) இது போன்ற மூடநம்பிக்கையைப் பரப்பி மாணவர்களிடம் காசு பறிப்பதும், அவருக்கு இந்த சாயிபாபா டாலர் விற்பனையில் உதவ ஒரு உணவு விடுதிக்காரர் (மாடர்ன் கபே சுப்பாராவ்) ஒத்துழைப்பதும் தெரிய வருகிறது. ஆசிரியர் சாயிபாபா டாலர்களை உணவுவிடுதிக்காரருக்கு தருவித்துக் கொடுத்துவிட்டு, பொதுமக்களிடம் பொய்யுரைத்து ஏமாற்றி உணவுவிடுதிக்கு அனுப்பி சாயிபாபா டாலர் வாங்கிக் கொள்ளச் செய்கிறார். இருவரும் மக்களை ஏமாற்றும் குற்றத்தில் ஒருவருக்கு ஒருவர் உடந்தை. இதுவும் மூடநம்பிக்கையால் விளையும் கேட்டினைக் கூறும் நோக்கில்தான் அமைந்துள்ளது.
5. வெள்ளிக்கிழமை விளக்கு வைத்த நேரம்: நகை வாங்க விரும்பிய வைதீகர் ஒருவர் காசுமாலையொன்றை வீட்டில் காட்டிவருகிறேன் என்று நகைக்கடைச் செட்டியாரிடம் இருந்து வாங்கிவருகிறார். ஆனால், அவர் அதை அவர் கையில் எடுத்த நேரமோ ராகு காலம், போதாக்குறைக்கு வீட்டிற்கு வரும் வழியில் பூனை ஒன்றும் குறுக்கே போகிறது. வீட்டில் மனைவி காசுகளை எண்ணிப்பார்த்து விட்டு 68 காசு இராசியில்லை என்கிறார். மறுநாள் திருப்பிக் கொடுத்துவிடலாம் என்று பெட்டிக்குள் வைத்துப் பூட்டிவிடுகிறார்கள். வேறு ஒரு வாடிக்கையாளர் வாங்க விரும்புவதாக, நகையைப் பெற்றுக்கொள்ள வருகிறார் நகைக்கடைக்காரர். வெள்ளிக்கிழமை விளக்கு வைத்த நிறைந்தநாளில் நகையைக் கொடுத்தால் லட்சுமி வீட்டை விட்டுப் போய்விடுவாள், நீ என்ன நாத்திகனா என்று கடைக்காரரைத் திட்டுகிறார் வைதீகர். அந்தக் கணக்கெல்லாம் சொந்த நகைக்கு, ஊரார் நகைக்கல்ல எனது வியாபாரம் போய் விடும், எனது நகையைக் கொடுத்துவிடுங்கள் என வற்புறுத்துகிறார் நகைவியாபாரி. வைதீகரின் மனைவியும் கணவருடன் சேர்ந்துகொண்டு அவரைத் திட்டத்தொடங்க வாக்குவாதம் முற்றுகிறது. வெளியில் சென்றிருந்த வைதீகர் மகன் வீட்டுக்கு வந்து, தன் பெற்றோர் செய்யும் அடாவடிச் செயலைக் கண்டு அதிர்ந்து போகிறான். தாயின் இடுப்பில் இருந்து பெட்டிச்சாவியைப் பிடுங்கிக் கொண்டு போய் நகையை எடுத்துவந்து கடைக்காரரிடம் கொடுத்தனுப்புகிறான். அவன் குடிஅரசு பத்திரிக்கை படித்துவிட்டு நாத்திகன் போல சாஸ்திரம் சம்பிரதாயம் பார்க்காமல் மதிகெட்டு நடக்கிறான் என்று பெற்றோர்கள் அவனைத் திட்டுகிறார்கள். மூடநம்பிக்கையைச் சுட்டிக்காட்டும் மற்றுமொரு உரையாடல் இது.
6. கல்வியின் இரகசியம்: கணபதி சாஸ்திரி, லட்சுமண சாஸ்திரி என்ற வைதீகர் இருவருக்குள் நடக்கும் உரையாடல் இது. பாடம் படிக்காமல் புகைப்பது, குடிப்பது, கூத்து, நாடகம் என நண்பர்களுடன் ஊர் சுற்றும் வழக்கம் கொண்டவர்கள் சாஸ்திரி ஒருவரின் மகன்கள். அவர்களை தேர்வில் வெற்றி பெறச் செய்ய வினாத்தாளை ஆசிரியரிடம் இருந்து பெற்று வருவது, இல்லாவிட்டால் அச்சுக்கூடத்தில் இருந்து பெறுவது, அது கிடைத்தும் ஒழுங்காகத் தேர்வு எழுதாத மகன்களுக்காக விடைத்தாளைத் தொடர்ந்து சென்று திருத்துபவர்களிடம் கையூட்டு கொடுப்பது, கல்லூரியிலும் சமுதாயத்திலும் உயர்பதவியில் இருப்பவர்களின் சிபாரிசு என அவர்கள் தயவைப் பெறுவது, அவர்கள் கையில் காலில் விழுந்து கெஞ்சுவது, தனது மனைவியை அவர்கள் குடும்பப் பெண்களிடம் முறையிட்டு அழச்செய்து காரியத்தைச் சாதித்துக் கொள்வது என்று பல குறுக்கு வழிகளையும் கடைப்பிடித்துத் தனது பிள்ளைகளை ஒப்பேற்றுகிறார் சாஸ்திரி. இந்த உரையாடலின் வழி, அக்காலத்தில் பிராமண மாணவர்களும், பிராமணர் அல்லாத மாணவர்களும் கல்விக்கூடங்களில் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். கல்வியில் தில்லுமுல்லு செய்வதும், பிடிக்காத மாணவர்களை ஒழித்துக்கட்டும் முயற்சிகளும் விவரிக்கப்படுகிறது.
7. எல்லாப் பெண்களும் கற்பில்லாதவர்களா? ஆத்திகப் பெண் ஒருவருக்கும், நாத்திகன் ஒருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல் இது. ஆத்திகப் பெண் இக்காலத்துப் பெண்கள் கற்புக்கரசிகள் இல்லை என்று ஏன் சொல்கிறீர்கள் என்று கேள்வி எழுப்புகிறார். அதற்கு நாத்திகன் சாஸ்திரம், வேதநூல்கள் போன்றவை கற்புள்ள பெண் சொன்னால் மழை பெய்யும் என்கிறது. மூன்று ஆண்டுகளாக மழையில்லை, ஊரில் குடிக்கத் தண்ணீர் இல்லை. ஒரு பெண்ணாவது கற்புடன் இருந்து மழை பெய்யச் சொல்லவில்லையே, பின் எவ்வாறு எல்லாப் பெண்களையும் கற்புக்கரசிகள் என்று கூறமுடியும் என்று இடக்காக பதில் சொல்கிறார்.
8. எது ஜீவ காருண்யம்: சைவன், பார்ப்பனர் என இருவர் எது ஜீவகாருண்யம் என்று விவாதிக்கிறார்கள். சைவர் பார்ப்பனரிடம் நீங்கள் ஏன் மாமிசம் சாப்பிட ஆரம்பித்துவிட்டீர்கள் எனக் கேட்கிறார். அதற்கு அவர், சந்திர போஸ் தாவரங்களுக்கு உயிர் உள்ளது என்று சொல்லிவிட்டதால் ஒவ்வொருமுறையும் இலைதழைகளைப் பறிப்பது அவற்றிற்கு அதிகத் துன்பத்தைத் தரும் செயல். மேலும் வேதம், புராணம், மனுதர்மம் போன்றவை பார்ப்பனர் மாமிசம் உண்பதை ஏற்றுக் கொள்கிறது. கண்ணப்ப நாயனார் போன்ற புராணக் கதைகளும் மாமிசம் உண்பது தவறல்ல என்பதை விளக்குகிறது. பல தாவரங்களை அடிக்கடி துன்புறுத்துவதைவிட, ஒரு விலங்கை துன்புறுத்தாமல் உயிர் நீக்கி சாப்பிடுவதே சிறந்த ஜீவ காருண்யம் என்கிறார்.
9. பஞ்ச கன்யாஸ்மரே: ‘அகல்யா, துரோபதி, சீதா, தாரா, மண்டோதரி ஸ்மிதா பஞ்ச கன்யாஸ்மரே நித்யம் மகா பாதக நாசனம்’ என்ற சமற்கிருத சுலோகம் சொல்லும் பொருளென்ன என்று விளக்குகிறது இந்த விவாதம். இந்த ஐந்து கன்னிகைகளையும் தினம் நினைத்தால் மகாபாதகமெல்லாம் நாசமாகிவிடும் என்பது இதன் பொருள். “ஐந்துக்கு இரண்டு பழுதில்லை” என்ற பழமொழியும் இந்த சுலோகத்தின் காரணமாக உருவாக்கப்பட்டதே. உண்மையில் சொல்லப்போனால் மண்டோதரி மட்டுமே இப்பெண்களுள் மதிக்கத் தகுந்தவள் என்று விளக்கப்படுகிறது. இது உரையாடல் நடையில் அமையப்பெறவில்லை.
10. ஆசிரியர் – மாணாக்கன் – சம்பாஷணை, கெடுவான் கேடு நினைப்பான்: இராமாயண வகுப்பு ஆசிரியர், ஆரியசங்கரன் என்ற மாணவனிடம் ‘கெடுவான் கேடு நினைப்பான்’ என்ற பழமொழிக்குப் பொருத்தமான நிகழ்வொன்றை இராமாயணத்தில் இருந்து கூறுமாறு சொல்கிறார். அதற்கு அந்த மாணவன், தசரதனும் அவரது மகன் இராமனும்தான் பொருத்தமானவர்கள் என்று கூற, குழப்பமடைந்த ஆசிரியர் விளக்கம் கேட்கிறார். பரதனுக்குச் சேரவேண்டிய நாட்டை இராமனுக்குக் கொடுக்க சூழ்ச்சி செய்த தசரதன் இறந்தார், அதனை ஏற்றுக்கொள்ள முன்வந்த இராமன் மனைவியைப் பிரிந்து துன்பமுற நேர்ந்தது. இது அவர்கள் பரதனுக்குக் கேடு செய்ய நினைத்ததால், அவனது ஆட்சி உரிமையைக் கவர நினைத்ததால் நடந்தது என விளக்குகிறான்.
11. ஐயங்கார் ஆசிரியர் – தமிழ் மாணவன் உரையாடல்: தசரதராம ஐயங்கார் என்ற ஆசிரியருக்கும் தமிழரசன் என்ற மாணவனுக்கும் இடையே நடக்கும் உரையாடல். ஆசிரியர் தமிழரசனை அழைக்கும் பொழுது அவன் வணக்கம் சொல்கிறான். அவன் ஏன் ‘வணக்கம்’ என்று சொல்கிறான், அவன் கருப்புச்சட்டைக்காரனாக (திராவிடக் கழகத்தானாக) மாறிவிட்டனா என்று ஆசிரியர் கேலி செய்கிறார். பள்ளி மாணவர்கள் ஒன்றுகூடி முடிந்தவரை இனி தமிழில் பேச முடிவெடுத்ததாகச் சொல்கிறான் மாணவன். தமிழில் எல்லாச் சொற்களையும் சொல்ல முடியுமா என மேலும் நகைக்கிறார் ஆசிரியர். மனம் புண்பட்ட மாணவன் முடிந்தவரை இனி தமிழில் பேசப்போவதாகவும்; ஒரு வணக்கம் சொன்னதற்கே கருப்புச்சட்டை என்று பகடி செய்யும் இடத்தில் இனி இருக்க விரும்பவில்லை என்றும் கூறுகிறான். நீ நன்கு படிக்கும் மாணவன், தவறான நட்பால் கெட்டுப் போயிருக்கிறாய், இனி எங்கு சென்றாலும் நீ உருப்பட மாட்டாய் என்று வாழ்த்தி அனுப்புகிறார் ஆசிரியர். “உருப்படாவிட்டால் கருப்புச்சட்டை தைத்துப் போட்டுக் கொண்டு ‘தமிழ் வாழ்க’ என்று தமிழ்த் தொண்டு செய்வேன்” என்கிறான் மாணவன். இந்த உரையாடல் தமிழில் பேச நினைப்பவர்களுக்கு அக்காலத்தில் மதிப்பு வழங்கப்படவில்லை என்பதைக் காட்டுகிறது.
12. தீபாவளி தத்துவமும் இரகசியமும்: தீபாவளி குறித்து டேவிஸ் என்பவருக்கும் ராமானுஜம் என்பவருக்கும் இடையே நிகழும் உரையாடல். இது ஆய்வு நோக்கில் தீபாவளி கொண்டாடுபவர்கள் பண்டிகையின் உண்மை பின்னணி என்ன என்று அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் வழங்கப்படுவதாக முன்குறிப்பு கூறுகிறது. புராணக் கதைகளின் நம்பமுடியாத தன்மையை; அறிவியல் விளக்கங்களுக்குப் பொருந்தாத நிகழ்வுகளைக் காட்டுவது இந்த உரையாடலின் நோக்கம். இந்தக்கதைகள் சொல்லும் நம்பிக்கைகள் குறித்து கேள்விமேல் கேட்கும் அந்த நண்பன், கருப்புச்சட்டை நாத்திகன் என்று கிண்டல் செய்யப்படுகிறான். அத்துடன், கடவுள், மதம், சமய நம்பிக்கைகள் குறித்து கேள்விகள் எழுப்புவது சரியல்ல என்றும் அறிவுறுத்தப்படுகிறான். புவியில் உள்ள தேவர்களுக்கு (பார்ப்பனர்களுக்கு) தொல்லை கொடுத்தால், அரக்கர்கள் போல அழிந்து போவீர்கள் என்பதை மற்றவர்களுக்கு நினைவூட்ட இப்பண்டிகை கொண்டாடப்படுவதே தீபாவளியின் தத்துவ இரகசியம் என்று விளக்கப்படுகிறது.
முடிவுரை:
வரலாற்றில் மிக இன்றியமையாத காலங்களில் நையாண்டி முறை விமர்சனம் முக்கியத்துவம் பெறும். பொதுவாக, எப்பொழுது பெரும்பான்மையான எளிய மக்களின் மீது, அவர்கள் பொறுமையை சோதிக்கும் வண்ணம், அவர்கள் மீது முட்டாள்தனமானக் கருத்துகள் அதிகார வர்க்கத்தால் திணிக்கப்பட்டு அவர்கள் அடக்குமுறைக்கு ஆளாகிறார்களோ; அப்பொழுது நையாண்டி முறைக் கருத்துக்களுக்கும் அவர்களிடம் வரவேற்பிருக்கும் என்கிறார் கனடாவின் ஊடக விமர்சகர் ஜான் டோயில் (John Doyle). வரலாற்றில் அரசியல் அடக்குமுறைகள் நிகழ்ந்த காலத்திலும், மதத்தின் பேரில் சமுதாயத்தின் மீது அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்ட காலகட்டங்களிலும் நையாண்டி செய்யும் இலக்கியங்கள் தோன்றி மக்களுக்கு விழிப்புணர்வைத் தூண்டிவிட்டு அவர்களை வழிநடத்தியிருக்கிறது. தந்தை பெரியாரும் அது போன்ற ஒரு காலகட்டத்தில்தான் சித்திரபுத்திரன் உரைகளை எழுதத் துவங்கியிருக்கிறார். வருணாசிரம தர்மம் என்ற கொள்கைகளால் மக்களில் ஒருசிலர் அடக்குமுறைக்கு ஆளான பொழுதும், இந்திய மக்கள் ஆங்கிலேயரின் ஆட்சியில் அடக்குமுறைக்கு உள்ளாகி அல்லலுற்ற பொழுதும் ‘சித்திரபுத்திரன்’ உருமாறி தனது எழுத்துக்களில் அங்கதம் புகுத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியை மேற்கொண்டுள்ளார் பெரியார்.
_____________________________________________
உலகை உலுக்கிய ஒரு நிகழ்வான உக்ரைன் நாட்டின் செர்னோபில் அணுமின் நிலைய விபத்து நிகழ்ந்து சென்ற மாதத்துடன் (ஏப்ரல் 2014) இருபத்தியெட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. ஏப்ரல் 26, 1986 அன்று யூனிட் 4 அணு உலை (Unit 4 reactor) வெடிப்பின் விளைவாக, கடுமையான, அளவுக்கு மீறிய கதிரியக்கத் தாக்கத்தை எதிர்கொண்ட அணுமின்நிலைய ஊழியர்களும், விபத்தின் விளைவுகளை கட்டுப்படுத்தப் போராடிய தீயணைப்பு படையினர் பலரும் சில வினாடிகளுக்குள் இறந்தனர். அல்லது உடல் உறுப்புக்களும் திசுக்களும் கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்டு செயலிழந்துவிட சில வாரங்களுக்குள் இறந்தனர்.
செர்னோபில் அணு மின் நிலையத்திற்கு அருகில் இருந்த பல இடங்களை வாழத் தகுதியற்ற இடங்கள் எனக் கைவிட்டு மக்கள் வெளியேறினர். அப்பகுதியில் இருந்த பிற உயிரினங்களும், தாவரங்களும் மிகவும் பாதிக்கப்பட்டன. உடல் ஊனமும், குறைகளும் தோன்றி விலங்குகளின் வாழ்வு பாதிக்கப்பட்டது. அப்பகுதியைச் சூழ்ந்திருந்த பைன் மரக்காடுகளில் மரங்கள் பட்டுப் போய் அதன் ஊசியிலைகள் செங்கல் நிறத்தை ஒத்த செவ்வண்ணம் பெற்று மரங்களும் சில நாட்களில் உயிரிழந்தன. அப்பகுதியே இதனால் சிவப்பாகிவிட, அக்காட்டுப்பகுதி “செந்நிறக்காடு” (The Red Forest) என்றழைக்கப்பட்டது.
கதிர்வீச்சின் அளவு ‘மணிக்கு இத்தனை மில்லெர்ரங்கென்ஸ்’ (milliroentgens per hour – mR/h) என அளவிடப்படுகிறது. [குறிப்பு: இயற்கையிலேயே கதிர்வீச்சுகள் உள்ளது, அத்துடன் அனைத்துக் கதிரியக்கமும் உடலுக்கு ஊறு விளைவிப்பதில்லை. அவ்வாறு உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் கதிர்வீச்சு 'மைக்ரோசீவர்ட்ஸ்' (microSieverts per hour) என்ற அலகால் அளக்கப் பெறும். அது மேலே குறிப்பிட்ட மில்லெர்ரங்கென்ஸ் என்ற அலகில் இருந்து மாறுபட்டது]. அணுஉலை கதிர்வீச்சின் அளவு, மேலும் அதன் தாக்கத்தின் விளைவுகள் இவற்றின் அடிப்படையில் செர்னோபில் பகுதி அறிவியல் அறிஞர்களால் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது.
முதல் பகுதி (The first zone ) – கதிர்வீச்சின் அளவு 500 mR/h அல்லது அதற்கு அதிகமான அளவு கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட பகுதி. இப்பகுதியில் உயிரினங்கள் பேரழிவிற்கு உள்ளாகும்.
இரண்டாம் பகுதி (The second zone) – கதிர்வீச்சின் அளவு 200–250 mR/h உள்ள பகுதியில் உள்ள மரங்கள் 25–40% வரை அழிந்துவிடும்.
மூன்றாம் பகுதி (The third zone) – கதிர்வீச்சின் அளவு 50–200 mR/h உள்ள பகுதியில் வளர்ந்த மரங்கள் பாதிக்கப் பட்டாலும் உயிர் பிழைக்கும். ஆனால் இளம் மரங்கள் தாக்குப் பிடிக்க முடியாமல் அழிந்துவிடும்.
நான்காம் பகுதி (The fourth zone) – கதிர்வீச்சின் அளவு 20 mR/h உள்ள பகுதியில் உயிர்ச் சேதம் இருப்பதில்லை, ஆனால் வளர்ச்சியில் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
இந்த மூன்று மற்றும் நான்காம் பகுதியில், கதிர்வீச்சின் அளவு குறைவாக இருக்கும் இடங்களில் உயிரினங்கள் எவ்வாறு பாதிக்கப் பட்டுள்ளன என்பதை கடந்த கால்நூற்றாண்டாக சில உயிரியல் அறிஞர்கள் ஆராய்ந்து வருகின்றார்கள். அவர்களில் ஒருவர் அமெரிக்காவின் தெற்கு கரோலினா பல்கலைக்கழக உயிரியல் அறிஞர் திம்மோத்தி மூசவ் (University of South Carolina, Biologist Timothy A. Mousseau, http://cricket.biol.sc.edu/Mousseau/Mousseau.html).
கடந்த இருபத்தியெட்டு ஆண்டுகளில் பலமுறை தொடர்ந்து செர்னோபில் பகுதிக்குச் சென்று குறைந்த அளவு கதிர்வீச்சை எதிர்கொள்ளும் உயிரினங்களில் என்ன மாறுதல்கள் நிகழ்கிறது என்று ஆராய்ந்து வருகிறார். தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் மீது கதிர்வீச்சு ஏற்படுத்தும் நீடித்த விளைவுகள் பற்றி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு புகுஷிமா, ஜப்பான், அணு உலைகளின் விபத்திற்குப் பிறகு அங்கும் ஆய்வுகள் நிகழ்த்தி வருகிறார். இவ்விரு இடங்களில் அணுவுலை விபத்தின் காரணமும், ஏற்பட்ட விதமும் வேறாக இருந்தாலும், அதிக பரப்பளவுள்ள இடங்கள் அணுவுலைக் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டது என்ற முடிவு ஒன்றே.
இவரது ஆய்வுக்கு பல உயிரினங்கள் உட்படுத்தப்பட்டுள்ளன. பல பறவை இனங்கள், பூச்சி இனங்கள், தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகள், வெளவால், எலிகள், சிலந்திகள் என்ற பலவகை உயிரினங்கள் இவரால் ஆராயப்பட்டு வருகின்றன. சிலந்தி வலைகளை படம் பிடித்து, கதிர்வீச்சின் தாக்கத்தால் அவற்றின் வலை பின்னும் திறன் பாதிக்கப்பட்டுள்ளதா எனவும், பாதிக்கப்பட்ட எலிகளின் இனங்களில் மரபணுக்களில் வேறுபாடுகள் உள்ளனவா என்றும் இவரால் ஆய்வுகள் நிகழ்த்தப் படுகின்றன.
குறைந்த அளவுள்ள தொடர் கதிர்வீச்சு உடனே மரணத்தைத் தருவதில்லை. ஆனால் அது உயிரினம் எவ்வளவு நாட்கள் வாழும் என்பதை நிர்ணயிக்கும், புற்றுநோய்களால் பாதிக்கப்படுதலையும் விளைவிக்கும். பாதிக்கப்பட்ட உயிரினங்களில் மரபணு மாறுபாடுகளும், கண்புரைகளும் காணப்படுவதுண்டு. பாதிக்கப்பட்ட உயிரினங்களின் மரபணுக்களில் டி என் ஏ இழைகள் கதிர்வீச்சால் சிதைவுறுகிறது. மரபணு மாற்றங்களின் விளைவு காரணமாக கதிர்வீச்சுப் பகுதிகளில் வாழும் உயிரினங்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டு அவற்றின் எண்ணிக்கையும் குறைவாகக் காணப்படும்.
மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும் பொழுது, கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் பறவைகளில் பெரும்பான்மையானவை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதும், அவற்றின் அலகுகளில் குறைபாடுகள் தோன்றுவதும் கண்டறியப்பட்டுள்ளது.
சென்ற ஏப்ரல், 2014 வெளியீடான ‘ஜர்னல் ஆஃப் பங்க்க்ஷனல் இகாலாஜி’ (Journal Functional Ecology, http://onlinelibrary.wiley.com/doi/10.1111/1365-2435.12283/pdf) ஆய்வுச் சஞ்சிகையில் திம்மோத்தி மூசவ் வெளியிட்ட புதிய ஆய்வறிக்கை, கதிர்வீச்சின் விளைவைப் பற்றிய எதிர்பாராத தகவல் ஒன்றினைத் தருகிறது. அந்த அறிக்கையின்படி சிலபறவை இனங்கள் கதிர்வீச்சிற்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்ளவும் செய்கின்றன என்பது தெரிய வருகிறது.
இப்பறவைகளில் குறைந்த அளவிலான தொடர் கதிரியக்கத்தின் தாக்கம், அதிக அளவு பாதுகாப்பை அளிக்கும் ‘ஆண்டி ஆக்சிடென்ட்ஸ்களை’ (antioxidants) உற்பத்தி செய்வதையும், அதனால் ‘ஃபிரீராடிக்கல்’ குறைவதையும், அதன் தொடர் விளைவாக மரபணுகளில் சேதம் ஏற்படுவதைக் குறைத்துள்ளது. இது பரிணாம வளர்ச்சி விதியின்படி, இயற்கைத் தேர்வு முறையில் உயிரினங்கள் சூழ்நிலைக்குத் தக்கவாறு தங்களைத் தகவமைத்துக் கொண்ண்டு வாழும் முறையினை ஒத்திருக்கிறது. இதிலிருந்து சிலபறவை இனங்கள் குறைந்தளவு தொடர் கதிர்வீச்சிற்கேற்ப தங்களை தகவமைத்துக் கொள்வது தெரிய வந்துள்ளது. இவ்வாறு தகவமைத்துக் கொள்ளும் திறன் பறவைகளின் பல்வேறு இனங்களில் வெவ்வேறு விதத்தில் வேறுபடுகிறது.
சான்றுகள்:
[1] Chronic exposure to low-dose radiation at Chernobyl favors adaptation to oxidative stress in birds. Ismael Galván, Timothy A. Mousseau and Anders P. Møller et al.,
Functional Ecology, Wiley Online Library, 16-Apr-2014 [You have free access to this content]http://onlinelibrary.wiley.com/doi/10.1111/1365-2435.12283/pdf
[2] At Chernobyl, Hints of Nature’s Adaptation, By HENRY FOUNTAIN, The New York Times, MAY 5, 2014
http://www.nytimes.com/2014/05/06/science/nature-adapts-to-chernobyl.html
[3] Chernobyl: Capping a Catastrophe, By HENRY FOUNTAIN, The New York Times, April 27, 2014
http://www.nytimes.com/interactive/2014/04/27/science/chernobyl-capping-a-catastrophe.html
[4] 28 Years Later, The Animals Of Chernobyl Have Reclaimed Their Homeland… At A Price, by Nick Visser, The Huffington Post, 05/06/2014
http://www.huffingtonpost.com/2014/05/06/chernobyl-animals_n_5275596.html
[5] Some Birds in Chernobyl Site have adapted to Radioactive Environment, by BUSTA SEBETSEBA, NewsTonight, 05/07/2014
[6] The Red Forest – http://www.nuclearflower.com/zone/zone08.html
[7] Radiation: How much is harmful? – http://knowledge.allianz.com/environment/energy/?1458/radiation-how-much-is-harmful
இந்தியாவில் நடத்தப்படும் விழாக்களில், கூட்டங்களில் அறுதிப் பெரும்பான்மையானவை இறைவணக்கப் பாடலுடன் கடவுளை வாழ்த்தி வணங்கித் துவக்கப்படும். சமயசார்பற்ற வகையில் விழாவைத் துவக்கும் தமிழக மக்களில் சிலரும் தமிழ்த்தாயை வாழ்த்தித் துவக்குவதை மரபாகக் கொண்டுள்ளனர். இது போன்ற நடைமுறைகள் ஓர் ஒழுங்கினை உணர்த்தும் முறையாக மக்களால் உலகெங்குமே எதிர்பார்க்கப்படுகிறது என்றாலும் இடத்திற்கு இடம் இவற்றில் வேறுபாடுகளும் உண்டு. பொதுவாக இந்திய விழாக்களில் முதலில் வணக்கப்பாடல், பிறகு வரவேற்புரை, தொடர்ந்து விழா நிகழ்வுகள், இறுதியில் நன்றி நவிலல், நாட்டுப்பண் பாடி நிறைவு செய்தல் என்பது ஒரு நடைமுறை வழக்கம்.
இந்திய மக்கள் ஆன்மீகப் பற்றுள்ளவர்கள் என்பதால் எதைத் துவக்கும் பொழுதும் கடவுளை வணங்கித் துவக்குவது வழக்கம். தேர்வு எழுதும் பொழுது பிள்ளையார்சுழி போட்டு எழுதுவது முதற்கொண்டு, திரைப்படங்களிலும் நேரடியாக சில கடவுளர் பெயரைக் குறிப்பிட்டு ‘இந்த இந்த’ கடவுள் துணை என்று வாழ்த்தியோ, அல்லது மறைமுகமாக முதல்காட்சியில் திருமாலின் திருப்பள்ளியெழுச்சி பாடல் பின்னணியில் ஒலிக்கப் படம் துவங்கும் முறையோ இன்றும் நடைமுறையில் உள்ளது. இத்தகைய இறைவாழ்த்துடன் துவங்குவதால் பாடம் படிக்காமல் தேர்வு எழுதித் தேறிவிடமுடியுமா, அல்லது சிறந்த காட்சிப்பகுதிகளை வழங்காமல் படம் வெற்றியடைந்துவிடுமா என்பதெல்லாம் இங்கு விவாதமல்ல. இவ்வாறாக, மக்கள் மனதில் ஆழ வேரூன்றிவிட்ட இறைவணக்கத்துடன் துவக்கும் நம் நாட்டின் மரபையொட்டி, நாட்டுப்புறக் கலைகளில் வழங்கிவந்த இறைவணக்கப் பாடல்கள் சிலவற்றை மறுபார்வை செய்வது இக்கட்டுரையின் நோக்கம்.
தமிழிலக்கியங்களில் இறைவணக்கப் பாடல்கள்:
பண்டைய தமிழிலக்கியங்களில் இறைவணக்கப் பாடல்கள் குறைவே என்றும், கடைச்சங்க காலம் தொடங்கியே இவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்றும் முனைவர் மு. பழனியப்பன் அவர்கள் தனது “சங்க இலக்கியங்களில் பகுத்தறிவுச் சிந்தனைகள்” என்ற கட்டுரையில் சுட்டிக் காட்டுகிறார். “வேதம், புராணம் சார்பான அறிவுக்கு ஒவ்வாத செய்திகளை விலக்கிய சங்க இலக்கியப் பாடல்களில் பகுத்தறிவுச் சிந்தனைகளைக் காணமுடிகின்றது. குறிப்பாக சங்க இலக்கியத் தொகுப்புகளுக்கு கடவுள் வாழ்த்து பாடிய முறைமை ஆரியச்சார்பு உடையச் செய்திகளை அதிகமாகக் கொண்டுள்ளது. கடவுள் வாழ்த்துப்பாடல்கள் பிற்காலத்தில் பாடப்பெற்றன, தொகுக்கப்படும் காலத்தில் பாடப்பெற்றன …” என்று குறிப்பிடுகிறார். பிற்காலத்தில் பாடல்கள் தொகுக்கப்பட்ட பொழுது இறைவணக்கப் பாடல் நுழைக்கப்பட்டது என்ற நிலை மாறி, பின்னர் தமிழ் இலக்கியங்களை வகைப்படுத்தும் பொழுது ‘சமய இலக்கியங்களின் காலம்’ என்றே வகைப்படுத்தும் ஒரு நிலைமைக்கு இலக்கிய உலகம் சென்றுவிட்ட நிலையை ஒரு வியத்தகு தமிழக பண்பாட்டு மாற்றம் எனக் கூறலாம்.
கடவுள் வாழ்த்துப் பாடலின்றி எந்த இலக்கியமும் இயற்றப்படாத நிலையை எட்டியது தமிழிலக்கிய உலகம். அதிலும் தடைகளை நீக்குவதாகக் கருதப்படும் பிள்ளையார் வாழ்த்துடன் துவக்குவது மரபு என்றே ஆனது. தமிழறிந்த அனைவரும் அறிந்த பாடலான ‘பாலும் தெளிதேனும்’ எனத் துவங்கும் தனது நல்வழி கடவுள் வாழ்த்துப் பாடலில் ஔவையார் (ஔவையார் என்ற பெயரில் பல புலவர்கள் இருந்தனர், அவர்களில் ‘நல்வழி’ என்ற நூலை இயற்றிய ஔவையார் கம்பர் காலத்தில் வாழ்ந்தவர் என்பது ஆய்வாளர்கள் முடிவு), துங்கக் கரிமுகத்துத் தூமணியான பிள்ளையாரிடம் தனது காணிக்கைகளை ஏற்றுக் கொண்டு தமிழறிவு அருளச் செய்ய வேண்டுகிறார்.
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்இவை
நாலும் கலந்துஉனக்கு நான்தருவேன் – கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீஎனக்குச்
சங்கத் தமிழ்மூன்றும் தா
( கடவுள் வணக்கப் பாடல்: நல்வழி, ஒளவையார்)
இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ்ப் படைப்புகளையும் இறைவணக்கத்துடன் துவக்குவது என்பது இன்றியமையாத ஒரு மரபு என்ற வகையில் தமிழர் பண்பாடு நடைமுறையானது.
நாட்டுப்புறக் கலைகளில் இறைவணக்கப் பாடல்கள்:
இசைக்கச்சேரி துவக்கினால் முத்துசுவாமி தீட்சிதர் இயற்றிய ‘வாதாபி கணபதிம் பஜேகம்’ என்ற கீர்த்தனையுடன் இசைவிழா துவக்கப்பெறும். அதுபோன்றே சென்ற 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் மக்களின் பொழுதுபோக்காக இருந்த நாட்டுப்புறக் கலைகளிலும் இறைவணக்கத்துடன் துவக்கும் முறை அமைந்திருந்தது. திருவிழாக் காலங்களில் விடிய விடிய நடத்தப்பட்ட தெருக்கூத்துகள், வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகள், ஒயிலாட்டம், கரகாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் இவற்றுள் அடங்கும். இந்த 21 ஆம் நூற்றாண்டில் துணைக்கோள் வழியாகவும், இணையத்தின் வழியாகவும் விரும்பிய நிகழ்ச்சியைப் பொழுது போக்கிற்காக கண்டு மகிழ்கின்றனர் இக்காலத் தலைமுறையினர். இவர்கள் முற்றும் அறிந்திராத கலைநிகழ்ச்சிகளில் ஒருசில என நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சிகளை வகைப்படுத்தும் நிலை உருவாகிவிட்டது. அவற்றைக் காண விரும்பினால் அதற்கும் இக்காலத் திரைப்படங்கள், இணையக் காணொளிகள் வழியாகத்தான் கண்டுகளிக்க வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.
அந்த வகையில் 1989-ஆம் ஆண்டு “கரகாட்டக்காரன்” திரைப்படம் கிராமிய மணம் கமழும் வகையில் கரகாட்டக் கலைஞர்களின் வாழ்வை, அவர்களது கலைப் பங்களிப்பை மக்களுக்கு அறிமுகப்படுத்தியது. இந்தப்படத்தில் நாயகனுக்கும் நாயகிக்கும் இடையில் யார் சிறந்த கரகாட்டக் கலைஞர் என்ற போட்டி எழும். அந்த சூழ்நிலைக் காட்சிக்காக கங்கை அமரன் ஒரு போட்டிப் பாடலை எழுதியிருந்தார். அதனை அக்கால நாட்டுப்புறக் கலைஞர்களின் பாடல்கள் சாயலிலேயே மிகச் சிறப்பாகவும் அமைத்திருந்தார். அப்பாடலுக்கு இசைஞானி இளையராஜா அமைத்த இசையும் மக்களின் மனத்தைக் கவரும் விதத்தில் இருந்தது.
ஆண்:
முந்தி முந்தி விநாயகனே
முப்பத்து முக்கோடி தேவர்களே
வந்து வந்தெம்மை பாருமைய்யா
வந்தனம் வந்தனம் தந்தோமைய்யா
பெண்:
சக்தி உள்ள சிவகுருவே
நித்தம் கொடுப்பேன் வணக்கமைய்யா
பக்தியுடனே பதம் பணிந்தேன்
நிச்சயம் வெற்றியைத் தாருமைய்யா
இப்பாடல் முழுமையாகக் கட்டுரையின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது. “முந்தி முந்தி விநாயகனே” என இறைவணக்கத்துடன் துவங்குவது பற்பல தெருக்கூத்துகளின் மரபு. முந்தி முந்தி விநாயகனே என்ற வரியுடன் துவக்காவிட்டாலும் கூட விநாயகர் துதியுடன்தான் தெருக்கூத்துகள் துவங்கியது என்பதை அக்கால தெருக்கூத்து நாடக நூல்களைப் படிக்கும் பொழுது அறிய முடியும்.
இறைவணக்கப் பாடல்களின் அமைப்பு:
இப்பாடல்கள் குறைந்த அளவு ஒளவையாரின் ‘பாலும் தெளிதேனும்’ பாடலைப் போல நான்கு அடிகளில் துவங்கி, ஒரு சில பாடல்கள் மிக நீண்டு நாற்பது அடிகளுக்கும் மேலேயே செல்கிறது. தவறாமல் அனைத்துப் பாடல்களும் விநாயகர் துதியுடன்தான் துவங்குகிறது. அதைத் தொடர்ந்து ஆடும் நாடகத்திற்கு ஏற்ப பிற கடவுளர் துதிகள் தொடர்கிறது. பெரும்பாலும் முதலில் விநாயகர், தொடர்ந்து முருகர், பிறகு சரசுவதி என்ற வரிசையில் துதிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. சில பாடல்கள் சிவன், திருமால், பார்வதி என மற்றும் சில கடவுள் துதிகளையும் இணைத்துக் கொள்கிறது. கரகாட்டக்காரன் பாடலும் இதே அமைப்பில் முந்தி முந்தி விநாயகனே எனத் துவங்கி நாயகன் பிள்ளையாரை வணங்க, நாயகி சிவகுருவான முருகனை வணங்குகிறார். அத்துடன் பாடலின் இடையில் சரசுவதி அருளால் வெற்றி பெற்றதாக ‘தேவி சரசுவதி பேரச் சொல்லிப் படிச்சேன்’ என்ற வரி மூலமும் குறிப்பிடுகிறார் கரகாட்டக்காரி.
கீழே காத்தவராயன் ஆரியமாலா கூத்தை நிகழ்த்திக் காட்டுபவர் பாடும் விநாயகர் துதிப்பாடல் கொடுக்கப்பட்டுள்ளது:
“முந்தி முந்தி விநாயகனே முக்கணனார் புத்திரனே
சத்தி விநாயகனே சரிந்த வயிற்றோனே
கந்தருக்குமுன் பிறந்த கற்பகமே மெய்ப்பொருளே
வேலவர்க்கு முன்பிறந்த விக்கின விநாயகரே
சாலை விநாயகர்க்குஞ் சண்முகர்க்கும் இப்போது
பாலும் பழவகையும் பருப்புருண்டை தேங்கனியும்
எல்லாப் பழவகையும் எள்ளுருண்டையும் மாங்கனியும்
அத்தனையும் நான் படைப்பேன் சித்திவிநாயகர்க்கு
ஈசுவரனார் ஈன்றெடுத்த இருவர்த்திளையவனார்
இணையில்லாக் காத்தவனார் எழில் கதையை யான் பாட
“காத்தவனார் கதை”யைக் கலியுகத்தில் யான் பாட
வேதியர்கள் தன் வயிற்றில் விலங்கி அவதரித்த
ஆதியர் கன்னிகையாள் “ஆரியமாலை கதை”
காத்தவசுவாமியார் கன்னிகையைச் சிறையெடுத்து
மகாதேவர் புத்திரனார் மாலை பெண்ணை சிறையெடுத்து
சிறையெடுத்த நற்கதையைச் செந்தமிழால் பாடுதற்கு
கன்னியந்த மாலை கதை கருத்துடனே நான் பாட
வெண்தமிழால் பாடுதற்கு விக்கினரே காத்தருளும்
மூஷிக வாகனாரே முன்னம் வா விக்கினரே
கதையை நடத்துமென்று கணபதியைக் கைதொழுவேன்.”
புகழேந்திப் புலவர், காத்தவராயசுவாமி கதை
http://www.tamilheritage.org/old/text/ebook/katruv/page05.html
முந்தி முந்தி விநாயகனே என்று துவங்கும் நாட்டுப்புறக் கலையான தெருக்கூத்துகளில் பாடப்பட்ட மேலும் சில பாடல்கள் கட்டுரையின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளன. இப்பாடல்களில் விநாயகர் துதி பெரும்பாலும் ‘நான்கு’ பிரிவுகளை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டிருக்கிறது.
(1) முதலில் முந்தி முந்தி விநாயகனே எனத் துவங்கி பிள்ளையாரின் சிறப்பை விவரிக்கிறது. இப்பகுதியில் இடம்பெறும் கருத்துகள் சிவனின் மகனே, பார்வதியின் மகனே, முருகனின் அண்ணனே, திருமாலின் மருமகனே என்று உறவுகளைக் குறிப்பதாக அமைந்துள்ளது. பிறகு பிள்ளையாரின் தோற்றத்தை யானையின் தலையைக் கொண்டவனே, பானை வயிற்றோனே, ஒற்றைக் கொம்பனே, துதிக்கை கொண்டவனே, மூஞ்சுருவை வாகனமாகக் கொண்டவனே போன்ற வகையில் தோற்றத்தை விவரிக்கிறது.
(2) இதன் பிறகு, ஔவையார் பாடியது போலவே, நான் உனக்குக் கற்கண்டு, சர்க்கரை, அவல்கடலை, பொறியுருண்டை, அதிரசம், தேன்குழம்பும், கொப்பரைத் தேங்காய், வாழைப்பழம் ஆகியவற்றை காணிக்கையாகத் தருகிறேன் ஏற்றுக் கொள்வாயாக என்று தொடர்கிறது.
(3)அடுத்து, நடத்தப்படும் கூத்தின் பெயரையும், அதன் கருப்பொருளையும் சிலவரிகளில் விளக்கி, இவரின் வரலாற்றை நான் சொல்லப்போகிறேன் என்று அறிவிக்கும் பகுதி தொடர்கிறது.
(4) இறுதியாக, இன்றைய நிகழ்ச்சியைத் தவறில்லாமல் செய்து முடிக்க தக்கதுணையாக இருந்து அருள் தருவாயாக என்று வேண்டி விநாயகர் துதி நிறைவுறுகிறது. இக்கருத்துகளை மிகச் சுருக்கமாகவோ, அல்லது காணிக்கை அளிப்பேன் போன்ற ஓரிரு பகுதிகளைத் தவிர்த்த சிறிய பாடலாகவும் அமைக்கும் வழக்கமும் இருந்துள்ளது. மேலே குறிப்பிட்ட நான்கு கருத்துப் பகுதிகளையும் விரிவாக உள்ளடக்கிய நீண்ட பாடலாகவும் பாடும் வழக்கமும் இருந்திருக்கிறது.
விநாயகர், முருகன், சரசுவதி ஆகியோரை வணங்கும் தொடர் துதிகளைக் கொண்ட இறைவணக்கப் பாடலை, இசை பின்பாட்டு ஆகியவற்றுடன் சேர்த்துப் பாடினால் குறைந்தது ஓர் அரைமணி நேரமாவது அதற்குத் தேவைப்படும். இதனால் நல்லதங்காள் கூத்தோ, மதுரைவீரன் கூத்தோ இவற்றை நடத்தி முடிப்பதற்கு முழுஇரவும் தேவைப்பட்டிருக்கிறது என்பதை அறிவதில் வியப்புக்கு இடமில்லை.
சான்றுகள்:
சங்க இலக்கியங்களில் பகுத்தறிவுச் சிந்தனைகள், முனைவர் மு. பழனியப்பன், திண்ணை – http://puthu.thinnai.com/?p=18401
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள் தொகுப்பு - THF eBooks collection: http://www.tamilheritage.org/old/text/ebook/ebook.html
***************************************************************************
முந்தி முந்தி விநாயகனே – பாடல்களின் தொகுப்பு
***************************************************************************
ஆண்:
முந்தி முந்தி விநாயகனே
முப்பத்து முக்கோடி தேவர்களே
வந்து வந்தெம்மை பாருமைய்யா
வந்தனம் வந்தனம் தந்தோமைய்யா
பெண்:
சக்தி உள்ள சிவகுருவே
நித்தம் கொடுப்பேன் வணக்கமைய்யா
பக்தியுடனே பதம் பணிந்தேன்
நிச்சயம் வெற்றியைத் தாருமைய்யா
ஆண்:
வானத்துல சுத்துதடி ஒம்போது நவக்கிரகம்
பூமியில எடுத்து வந்தேன் தலையில நான் கரகம்
ஊருலகம் மெச்சி வரும் உத்தம பாளையம் சரகம்
உள்ளமுள்ள ஜனங்க இந்த பாட்டைக் கேட்டு கெறங்கும்
பெண்:
தேவி பெரியகுளம் தென் மதுர ஜில்லா
வெள்ளி மெடலு பல வாங்கி வந்தேன் நல்லா
தேவி சரசுவதி பேரச் சொல்லிப் படிச்சேன்
தேசாதி தேசமெல்லாம் மேடை ஏறி ஜெயிச்சேன்
ஆண்:
கோடை இடி முழக்கம் கொட்டு மேளம் கேட்டு
கூட ஒலிக்குதடி நானும் பாடும் பாட்டு
சோடை சொணக்கமில்லை மேடை ஏறும் காலு
வாடிப் பழக்கமில்லை வாலிபமான ஆளு
பெண்:
என்ன எதிர்த்து நின்னு ஜெயிக்கும் ஆளு யாரு
பொன்னான காலுக்கொரு பதிலச் சொல்லிப் பாரு
பொன்னெல்லாம் பூவு இந்த ஆம்பளைங்க யாரு
தன்ன மறந்து நின்னுத் தவிக்கும் வாழ நாரு
கங்கை அமரன், கரகாட்டக்காரன்
https://www.youtube.com/watch?v=iNohvdxeho4
******************************************
முந்தி முந்தி விநாயகரே முக்கண்ணனார் தன்மகனே
கந்தருக்கு முன்பிறந்த கற்பகமே முன்னடவாய்
வேலவர்க்கு முன்பிறந்த விநாயகரே முன்னடவாய்
வேம்படியிற் பிள்ளையாரே விக்கினரே முன்னடவாய்
பேழை வயிற்றோனே பெருச்சாளி வாகனரே
காரண மால்மருகா கற்பகமே மெய்ப்பொருளே
சீரான நல்மருகா செல்வக்கணபதியே
ஒற்றைக் கொம்போனே உமையாள் திருமகனே
கற்றைச் சடையணிந்த கங்காதரன் மகனே
வித்தைக்கு விநாயகனே வெண்ணையுண்டோன் மருகா
மத்தக்கரி முகவா மாயோன் மருகோனே
ஐந்துகரத்தோனே யானை முகத்தோனே
தந்தமத வாரணனே தற்பரனே முன்னடவாய்
நெஞ்சிற் குடியிருந்து நீயெனக்கு முன்னடவாய்
பஞ்சஞ்சு மெல்லடியாள் பார்வதியாள் புத்திரனே
வேழமுகத்தோனே விநாயகரே முன்னடவாய்
தாழ்விலாச் சங்கரனார் சற்புத்திரா வாருமையா
முன்னடக்கம் பிள்ளையார்க்கு கண்ணடக்கம் பொன்னாலே
கண்ணடக்கம் பொன்னாலே காற்சிலம்பு முத்தாலே
முத்தாலே தண்டை கொஞ்ச முன்னடவாய் பிள்ளையாரே
செல்வக் கணபதியுன் சீர்ப்பாதம் நான் மறவேன்.
மாரியம்மன் தாலாட்டு
http://vkrishphysics.blogspot.com/2011/12/maariamman-thaalattu.html
******************************************
முந்தி முந்தி விநாயகனே முக்கணனார் தம்மகனே
ஐந்துகரத்தோனே அருளும் உமையாள் புத்திரனே
விக்கின விநாயகனே வெண்ணை யுண்டோன் தன்மருகா
முக்கணனார் பெற்றெடுத்த மூஷிக வாகனனே
வெட்பாலைக் குள்ளிருக்குஞ் சப்பாணிப்பிள்ளையாரே
சப்பாணிப்பிள்ளையாரே பொற்பாதம் நான்மறவேன்
“கோவலனார் தம்கதை”யை குவலயத்தில் நான்பாட
வின்னங்கள் வாராமல் விநாயகனே முன்னடவாய்
புகழேந்திப் புலவர், கோவலன் கதை
http://www.tamilheritage.org/old/text/ebook/kovalan/page03.html
******************************************
முந்தி முந்தி விநாயகனே முருகுழலாள் புத்திரனே
கந்தருக்கு முன்பிறந்த கணபதியே முன்னடவாய்
ஏடு தவறாமல் எழுத்தாணி சாயாமல்
கோடு தவறாமல் கொழுந்தோலை சாயாமல்
நாவுதவறாமல் நல்லோசை தாருமையா
குரலில் குடியிருந்து குரலோசை தாருமையா
மாலியணுகாமல் வரமீய்ந்து காருமையா
வெட்பாலைக் கீருக்குஞ் சப்பாணிப் பிள்ளையாரே
சப்பாணிப் பிள்ளையாரே பொற் பாதம்யான் மறவேன்
பொற் பாதம் யான் மறவேன் பொன்னின் கணபதியே
தப்பாமல் இக்கதைக்கு தக்கோனே முன்னடவாய்
பஞ்சவர்கள் தன் கதையைப் பட்சமுடன் நான்படிக்க
செஞ்சொல் சிவனுடைய தேவிதிருமகனே
வர்னமருக நல்ல வளர்கொம்பொருகேனே
“கர்ணன் திருக்கதை”யைக் காசினியோர் தாம்படிக்க
குற்றங்கள் வாராமல் குறையொன்றும் சேராமல்
கற்றமட்டும் யான் படிக்க கணபதியே முன்னடவாய்
புகழேந்திப் புலவர், கர்ணமகாராஜன் சண்டை
http://www.tamilheritage.org/old/text/ebook/karnama/page02.html
******************************************
முந்தி முந்தி விநாயகனே முக்கணனார் தன்மகனே
சத்திக்கணபதியே தையனல்லாள் புத்திரனே
கந்தருக்கு முன்பிறந்த கணபதியே முன்னடவாய்
என்றுயர் தீர்த்தருளு மெம்பிரான் தன்மகனே
வித்தைக்கு வல்லவனே வேழமுகத்தோனே
சத்திக்கணபதியே சண்முகர்க்கு மூத்தோனே
அத்திமுகத்தோனே அருள்சடையாள் புத்திரனே
செல்வக்கணபதியே செங்கண்மால் தன்மருகா
ஆலடிப்பிள்ளையாரே அரசடி விநாயகரே
எடுத்துப்பலகார மின்பமுடன் நான்படைப்பேன்
கசகசபணியாரங் கற்கண்டு சர்க்கரையும்
அவல்கடலைபொறியுண்டை அதிரசந்தேன்குழம்பும்
கொப்பரைத் தேங்காயும் கோதுபடா சர்க்கரையும்
வாழைப்பழமும் வகைக்கொரு செங்கரும்பும்
அப்பமுடன்தோசை ஆன சுகிவடையும்
இந்தப்பலகார மின்பமுடனமுது செய்வாய்
கூட்டியமுது செய்வாய் குளக்கரையிற்பிள்ளையாரே
பாரதத்தை எழுதி வைத்த பார்வதியாள்புத்திரரே
ஐவரிட நற்கதையை அன்பாகப்பாடுதற்கு
எனக்கு வரந்தருவாய் ஈஸ்வரியாள்புத்திரனே
“பஞ்சவர்கள் நற்கதை”யைப் பாடவரமருள்வாய்
நாவுதவறாமல் நல்லோசை நீதருவாய்
ஏடுதவறாமல் எழுத்தாணி சாயாமல்
உன்பாதந் தஞ்சமென்று உச்சரித்தேன் புத்தியிலே
பூவும்புதுமலரும் பொன்னருகு அட்சதையும்
கொண்டுமே நான்சொரிந்து கோலமுடி சாய்த்தேன்
நெஞ்சுதனில்நீயிருந்து நின்றிருக்கும்பிள்ளையாரே
வழுத்தினேனுன்பாதம் மலர்தூவிதெண்டனிட்டேன்.
புகழேந்திப் புலவர், ஆரவல்லி சூரவல்லி கதை
http://www.tamilheritage.org/old/text/ebook/arasura/page03.html
***************************************************************************
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
அருமையான கட்டுரை தேமொழி. பாராட்டுக்கள்
அருமையான கட்டுரைகள், பதிவுகள். படித்து மகிழ்ந்தேன்.
விநாயகர், முருகன், சரசுவதி ஆகியோரை வணங்கும் தொடர் துதிகளைக் கொண்ட இறைவணக்கப் பாடலை, இசை பின்பாட்டு ஆகியவற்றுடன் சேர்த்துப் பாடினால் குறைந்தது ஓர் அரைமணி நேரமாவது அதற்குத் தேவைப்படும். இதனால் நல்லதங்காள் கூத்தோ, மதுரைவீரன் கூத்தோ இவற்றை நடத்தி முடிப்பதற்கு முழுஇரவும் தேவைப்பட்டிருக்கிறது என்பதை அறிவதில் வியப்புக்கு இடமில்லை
அருமை.
வணக்கம்.
நல்லதொரு பதிவு. நன்றி.
--
வாசிக்கும் போது சில கேள்விகள் எழாமல் இல்லை. ஆராய்ந்து சொல்பவர் என்பதால் தேமொழியிடம் கேட்கலாமே.. அதனால் கேள்விகளை முன்வைக்கின்றேன் :-)நரகாசுரன் கெட்டவனா?அல்லது புராணத்தயாரிப்பாளர்களால் கெட்டவனாகக் காட்டப்படுகின்றானா?
இன்று நம் வழக்கில் தீபாவளிப்புராணம் தோன்றிய சரியான காலகட்டம் எது? எந்த நூலில் உள்ளது?
விரும்பினால் தனி ஒரு இழையாகப் பிரித்து விடுங்கள் தேமொழி.
சுபா
தனக்கு நோய், உடல்நலக் குறைவு என முறையிட்டு நோய் தீர்க்க வேண்டி வருபவர்களுக்கு, எந்த ஒரு மருத்துவ அறிவியல் பின்புலமும் இன்றி வேப்பிலை அடித்து, விபூதி பூசி, மந்திரித்து, தாயத்து, கயிறு என்று கட்டிவிட்டு தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் இன்னமும் உலகில் ஒருபுறமிருக்க; நோயைக் கண்டறிந்து மருத்துவர்களுக்கு உதவி செய்யும் கருவியாகப் பொறுப்பேற்றுள்ளது கணினியின் செயற்கை நுண்ணறிவுத் திறன். ஆர்ட்டிஃபிசியல் இண்ட்டலிஜென்ஸ் — Artificial Intelligence (AI) எனப் பொதுவாக அறியப்படும் கணினியின் “செயற்கை நுண்ணறிவு”என்பது முதன் முதலாக இரு மாதங்களுக்கு முன்னரே (ஆகஸ்ட் 2016) மனித மருத்துவர்களால் சரியாகக் கண்டறிய இயலாத பொழுது ஒரு பெண்மணியின் நோயைக் கண்டறிந்து சொல்லி, அந்த நோயாளியின் உயிரைக் காப்பாற்றிய நிகழ்வு வரலாற்றில் ஆவணப்படுத்தப்பட்டுவிட்டது.
‘லுகீமியா’ எனப்படும் வெள்ளை அணு – இரத்தப் புற்று நோய் கொண்ட ஜப்பானியப் பெண்மணியின் நோய் என்னவென்று அறியாமல், அவருக்கு அளிக்கப்படும் எந்தச் சிகிச்சையும் பலனளிக்கவில்லையே என அவரது ஜப்பானிய மருத்துவர்கள் குழு ஆராய்ந்து கொண்டிருந்த பொழுது, அவர்களது கணினியின் செயற்கை நுண்ணறிவு இப்பெண்மணிக்கு “லுகீமியா” என்று கண்டறிந்து உதவியது. இது மிகவும் குறிப்பிடத்தக்கது, ஏனெனில் உலகப் புகழ்பெற்ற ஐ.பி.எம் கணினி நிறுவனம் உருவாக்கிய வாட்சன் என்ற கணினியின் செயற்கை நுண்ணறிவு (IBM’s artificial intelligence (AI) system, Watson) நோயை இரத்தப் புற்றுநோய் என்று சரியாகக் கண்டறிந்து சொல்வதற்கு முன்னர், மருத்துவக் குழுவினர் மற்றொரு வகைப் புற்றுநோயான தீவிரமடைந்த நிலையில் உள்ள ‘மைலாய்டு லுகீமியா’ (acute myeloid leukemia) என்று முடிவு செய்து, அதற்கேற்ற மருத்துவம் செய்து கொண்டிருந்தனர். அவர்களது சிகிச்சை அந்தப் பெண்மணிக்கு உடல்நலத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. பிறகு, வாட்சன் இரத்தப் புற்று நோய் என்று உறுதி செய்த காரணத்தால் மருத்துவர்கள் அதற்கேற்ற சிகிச்சை முறைக்கு மாறிவிட, அந்தப் பெண்மணியும் உயிர் பிழைத்துள்ளார்.
இவ்வாறு நோயை சரியாகக் கண்டுபிடிக்க வாட்சனுக்குத் தேவைப்பட்ட நேரம் வெறும் 10 நிமிடங்கள்தான். பத்து நிமிடத்தில் அந்த நோயாளியின் மரபணுத் தகவல்களை, 2 கோடி (20 மில்லியன்) புற்று நோய் குறித்த மருத்துவ ஆய்வறிக்கைகள் தரும் தகவல்களுடன் ஒப்பிட்டு நோய் என்னவென்று குறிப்பிட்டது வாட்சன். இதனை அந்த நோயாளிக்கு சிகிச்சை அளித்த வல்லுநர் குழுவால் நிச்சயம் செய்ய முடியாது என்பதுதான் உண்மை. ஆனால், மற்றொரு அமெரிக்கப் பெண்மணிக்கு வாட்சனின் உதவியை பயன்படுத்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பற்பல சிகிச்சைகள் பலனளிக்காமல், தொடர்ந்து மாற்று சிகிச்சைகளைப் பெற்று வந்தவருக்கு வாட்சன் பரிந்துரைத்த சிகிச்சைமுறையை அளிப்பதற்குள் அவர் மறைந்துவிட்டார். இந்த வாட்சன் வேறு யாருமல்ல. ஐந்தாண்டுகளுக்கு முன்னர் தொலைக்காட்சியில் ‘ஜெப்பார்டி’ (“Jeopardy!”) என்ற புதிர் போட்டியில் ஒரு போட்டியாளராகப் பங்கேற்று, அந்தப் போட்டியில் வெற்றிபெற்ற கடந்தகால போட்டியாளர்களுடன் சரிக்குச் சமமாக விளையாடிய ஐ.பி.எம். அறிமுகப்படுத்திய கணினியான அதே வாட்சன்தான்.
புற்று நோய் ஆய்வில் செயற்கை நுண்ணறிவுத் திறனை பயன்படுத்தும் வகையில், அமெரிக்காவின் வடகரோலினா மாநில சாப்பல் ஹில் நகரில் இருக்கும் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் புற்றுநோய் சிகிச்சை மையத்துடன் (Lineberger Comprehensive Cancer Center, The University of North Carolina at Chapel Hill) ஐ.பி.எம். நிறுவனம் தன்னை இணைத்துக் கொண்டது. வாட்சனும் அங்கு மருத்துவம் படிக்கச் சென்றது. மருத்துவ சிகிச்சை குறித்து இக்காலத்தில் நாளொன்றுக்கு 8,000 ஆய்வறிக்கைகள் வெளியாகும் நிலையில் அவையனைத்தையும் படித்து தங்கள் அறிவை மேம்படுத்திக் கொள்வது மனித மருத்துவர்களுக்கு இயலாத ஒரு செயல். அத்துடன் நோயுள்ளவர்கள், நோயற்றவர்கள் எனப் பலரையும் ஆய்வுக்கு உட்படுத்தி, நவீன முறையில் எக்ஸ் கதிர்கள் கொண்டு எடுக்கப்பட்டு, கணக்கீடு முறையில் வரையப்படும் முப்பரிமாண சிடி ஸ்கேன்( CT scan – computed tomography scan) படங்களும் பல்லாயிரக்கணக்கில் ஒப்பிட்டு ஆராயக் கிடைக்கின்றன. இவையாவற்றையும் சரியான நிலையில் மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்த வாட்சன் தயார் படுத்தப்பட்டது.
நோய், மருந்து, சிகிச்சைமுறைகள், ஆய்வகப் பரிசோதனை முடிவுகள், மரபணு மூலக்கூறுகள் குறித்த தரவுகள், மருத்துவ ஆய்வறிக்கைகள், இணையத்தில் உடனுக்குடன் கிடைக்கும் சமீபத்திய தகவல் வெளியீடுகள் என உடல்நலம் குறித்த பலகோடி தகவல்களும் வாட்சனால் தொடர்ந்து கற்று, ஒப்பிட்டு ஆராயப்படும் வகையில் ‘படிமுறைத் தீர்வு நிரல்கள்’ (Algorithm — ஆல்கரிதம், ஏரண அடிப்படையில் வரிசையாக்கப் படிமுறைத் தீர்வு) வாட்சனுக்காக உருவாக்கப்பட்டது. ஒரு வாரத்திற்கு இரண்டரை கோடி மருத்துவ ஆய்வறிக்கைகள் என்ற அளவில் வாட்சன் படித்துத் தகவல்களைச் சேகரித்தது. அத்துடன் வாட்சன் தொடர்ந்து இவ்வாறு கற்றுக் கொள்வதையும், பலகோடித் தகவல்களையும் துழாவி, மிகக் குறைந்த நேரத்தில் ஒப்பிட்டு முடிவுகள் சொல்லும் திறனையும் இனி என்றும் மறக்கப் போவதுமில்லை. வாட்சன் செய்வதை எத்தகையத் திறன் கொண்ட மனிதராலும் எக்காலத்திலும் செய்யவும் இயலாது.
முதலில் நோயறியும் கருவியாக வாட்சனை பயன்படுத்துவது எந்த அளவு உதவப்போகிறது என்ற ஐயமே புற்றுநோய் மைய மருத்துவர்களுக்கு இருந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகளின் அவர்களது நோய் குறித்த செய்திகளைக் கொண்டு மருத்துவர்களும், வாட்சனும் நோய் கண்டறிந்த முடிவுகளை ஒப்பிட்டதில், வாட்சன் 99% நோயைக் கண்டறிந்து சரியான சிகிச்சை முறையைச் சொல்லி வியக்கவைத்தது என்று புற்றுநோய் மருத்துவ மையத்தின் இயக்குநர் ‘மருத்துவர் நெட் ஷார்ப்லஸ்’ ( Dr. Ned Sharpless) குறிப்பிடுகிறார். அதுமட்டுமன்றி, வாட்சன் பரிந்துரைத்த 30% சிகிச்சை முறைகள் அத்துறை வல்லுநர்களே அறிந்திராத வகையில் இருந்தது. ஆய்வு முடிவுகள் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தகுந்த சிகிச்சைமுறையாகவும் அனுமதிக்கப்பட்ட மிகச் சமீபத்திய வெளியீடுகளை வாட்சன் மட்டும் தெரிந்து கொள்ள முடிந்திருந்ததே இதற்குக் காரணம். இது சராசரி மனித மருத்துவர்களின் திறனுக்கும் அப்பாற்பட்டது.
சமீபத்தில் அமெரிக்க அரசு, பிட்ஸ்பர்க் நகரில் இருக்கும், செயற்கை நுண்ணறிவுத் துறையில் நவீன ஆய்வுகளை மேற்கொள்ளும் ‘கார்னகி மிலான்’ பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஒரு தொழில்நுட்பக் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது (The White House Frontiers Conference in Pittsburgh at Carnegie Mellon University on October 13, 2016). அக்கருத்தரங்கில், மருத்துவத்தில் நோய் அறிய உதவும் செயற்கை நுண்ணறிவு குறித்து வழங்கப்பட்ட உரையில் ‘செப்சிஸ்’ (Sepsis) நோய் கண்டறிய உதவிய செயற்கை நுண்ணறிவு குறித்து விளக்கப்பட்டது.
உடலில் நோய் தாக்கும்பொழுது அதனை எதிர்க்க உதவும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியே, உடலுக்கு எதிராக அளவுக்கு மீறிச் செயல்பட்டு உடலின் உறுப்புகளையும், திசுக்களையும் அழிக்க வேண்டிய எதிரிகளாகக் கருதி தவறான வகையில் செயல்படும் நோய் செப்சிஸ் ஆகும். சீழ்பிடித்த புண்களை எவ்வாறு உடலின் எதிர்ப்புசக்தி வேதிப்பொருட்கள் கையாளுமோ, அதுவே இரத்தத்தின் வழி நச்சு போல உடலில் பரவி உடலுறுப்புகளைச் சென்றடையும் (Sepsis occurs when chemicals released in the bloodstream to fight an infection trigger inflammation throughout the body). இதனால் ஒவ்வொரு உறுப்பாக, படிப்படியாகச் செயலிழந்து மரணம் ஏற்படுகிறது. காய்ச்சல், குறைந்த இரத்த அழுத்தம், இதயத்துடிப்பு அதிகரித்தல், மூச்சுத் திணறல், சிந்தனைத் தெளிவின்மை போன்ற வகையில் நோயாளியின் செயல்பாடுகள் பாதிக்கப்படும். உயிருக்கு மிகவும் ஆபத்தான இந்நோயை விரைவில் கண்டறிந்து சிகிச்சை செய்யத் தவறினால் நோயாளி உயிர் பிழைக்க வழியில்லை என்பதால் ஒவ்வொரு மணித்துளியும் தவறவிடக்கூடாதது. நோயாளி செப்சிஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை ஆய்வு முடிவுகளில் இருந்து 24 மணி நேரங்களுக்கு முன்னதாகவே செயற்கை நுண்ணறிவு கொண்டு கண்டறியலாம் என்பதை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ‘சுச்சி சாரியா’ (Suchi Saria, an assistant professor at the Johns Hopkins Whiting School of Engineering) இக்கருத்தரங்கில் விளக்கினார்.
காலில் ஏற்பட்ட ஒரு புண்ணிற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த பெண்மணி ஒருவருக்கு செப்சிஸ் பாதிப்பு ஏற்பட, அதனை அறிந்து கொள்வதற்குள் அவர் மரணமடைந்துவிட்டார். ஆனால் மருத்துவர்கள் ‘நோயை இலக்காகக் கொண்டு நிகழ்வு நேரத்தில் முன்னராகவே எச்சரிக்கை செய்யும்’ (Targeted Real-Time Early Warning System -TREWScore) செயற்கை நுண்ணறிவின் துணையுடன் நோயைக் கண்டறிந்திருந்தால் 12 மணிநேரங்களுக்கு முன்னரே நோயாளிக்கு ஏற்பட்ட செப்சிஸ் பாதிப்பை அறிந்து அவரைக் காப்பாற்றி இருக்கமுடியும் என்று சுச்சி சாரியா குறிப்பிட்டார். செப்சிஸ் கண்டறிய உதவும் ‘ட்ரூஸ்கோர்’ (TREWScore) என்ற செயற்கை நுண்ணறிவு கணிக்கும் முறையினைக் கொண்டே மற்ற நோய்களான சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் ஆகியவற்றையும் நாம் முன்னராகவே அறிந்து கொள்ளவும் வழியுள்ளது. இவற்றுக்கான அறிகுறிகளைக் காட்டும் தகவல்கள் நமது மருத்துவ அறிக்கைகளிலேயே இருக்கவும் வாய்ப்புள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதிக அளவு தகவல்களை ஆராய்ந்து குறைந்த கால அளவில் நோயைக் கண்டுபிடித்து தக்க சிகிச்சை அளிப்பதில் செயற்கை நுண்ணறிவு இன்றியமையாததாகிறது. செயற்கை நுண்ணறிவின் முன்னேற்றத்தினை எதிர்கொள்ள அமெரிக்கா தன்னைத் தயார் செய்து கொள்ள வேண்டும் என்பதனை வலியுறுத்த ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கருத்தரங்கின் நிகழ்வில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் ஒபாமா, “கண்டுபிடிப்புகளைச் செய்ய விழையும் ஆர்வம் நம் மரபணுவிலேயே அமைந்தள்ளது (உடன்பிறந்தது). அறிவியலே என்றும் நமது முன்னேற்றத்திற்கு மையமாக அமைந்துள்ளது. அறிவியலின் துணையால் மட்டுமே, தகுந்த சிகிச்சை அளித்து புற்றுநோய், மறதி நோய், மற்ற நோய்களால் நம் அன்புக்குரியவர்கள் நம்மிடமிருந்து வெகு விரைவில் பிரிக்கப்படுவதை தவிர்க்க வாய்ப்புள்ளது” என்று கூறினார். (“Innovation is in our DNA. Science has always been central to our progress. Only with science do we have the chance to cure cancer, Parkinson’s or other diseases that steal our loved ones from us way too soon.” — President Barack Obama at the White House Frontiers Conference’ held at the Carnegie Mellon University on October 13, 2016).
1950 ஆவது ஆண்டுகளில் துவங்கி, கடந்த 50 ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஏற்பட்ட வளர்ச்சியை விட, கடந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சி மிகவும் அதிகம். இன்று மருத்துவத் துறையில் நாம் காணும் செயற்கை நுண்ணறிவின் உதவி ஒரு சிறு அறிமுகமே, ஏதிர்காலத்தில் மனிதக்குல பயன்பாட்டில் இதன் பங்கு நமது கற்பனை எல்லையையும் விஞ்சி இருக்கவே வாய்ப்புள்ளது. அத்துடன் மனிதர்களுக்கு பதில் கணினி மருத்துவத்தில் பங்கேற்பது குறித்துப் பாதுகாப்பு, நடைமுறை, நன்னெறி குறித்தகேள்விகள், சட்டச் சிக்கல்களும் எழலாம்.
செயற்கை நுண்ணறிவு பயன்படுத்துவதில் எச்சரிக்கையாய் இருக்க வேண்டிய மூன்று காரணங்கள்: கணினிக்குக் கற்பிக்க எழுதப்பட்ட அல்காரிதம் நிரல்கள் சரியானமுறையில் அமையாமல் போயிருக்கும் நிலை, இணையம் தாக்குதலுக்குட்பட்டு செயலிழந்துவிட வாய்ப்பிருக்கும் நிலை, அல்லது செயற்கை நுண்ணறிவு தகவல்களை சரியாகப் புரிந்துகொள்ளாத நிலை ஆகியவையாகும். ஆனால் கவனத்துடன் இவற்றுக்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்வதால் இக்குறைகளைத் தவிர்க்கலாம். ஸ்டீஃபென் ஹாக்கிங்ஸ் (Stephen Hawking) போன்ற புகழ் பெற்ற அறிவியல் அறிஞர்கள் சிலர் செயற்கை நுண்ணறிவுத் துறை முற்றிலுமாக முதிர்ச்சியடையும் நிலையை எட்டும் பொழுது, அதனால் மனித இனமே அழிக்கப்படலாம் என்ற கவலையை ஒருபக்கம் தெரிவித்துக் கொண்டிருக்கும்பொழுது, இங்கிலாந்தில் ‘யுவர் எம்.டி.’, ‘பாபிலோன் ஹெல்த்’ (Your.MD and Babylon Health) போன்ற நிறுவனங்கள் மருத்துவத் துறைசார் செயற்கை நுண்ணறிவை மக்களிடம் கொண்டு சேர்க்க குறுஞ்செயலிகள் வெளியிட களத்தில் இறங்கியுள்ளன.
_______________________________________________________
References:
நடந்து முடிந்த (நவம்பர் 8, 2016) அமெரிக்கத் தேர்தலில், அதிபர் பதவிக்கு ஹில்லாரி கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டு, அவரது வெற்றியின் மூலம் ஆண்களே 240 ஆண்டுகளாகத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் பொறுப்பை ஏற்று வந்த நடைமுறையில் ஒரு மாறுதல் வரும் என மிகவும் எதிர் பார்க்கப்பட்டது. அமெரிக்க வரலாற்றிலும் இந்த அதிபர் தேர்தலில்தான் ஒரு பெண்மணி பெரிய கட்சியின் சார்பில் போட்டியிட வாய்ப்பும் முதல் முறையாகக் கிடைத்தது. பற்பல திடீர் திருப்பங்கள், ஒவ்வொரு நாளும் வேட்பாளர்கள் குறித்து மாறி மாறிக் கிளம்பிய அவதூறுகள் என்று பரபரப்பாக நகர்ந்தது தேர்தல் பிரச்சாரம். வாக்கு எண்ணிக்கை நடந்த நாளிலும் குறைந்த வாக்குவித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பு யாருக்கும் போகலாம் என்ற நிலையில் ஒரு நீண்ட இரவாக அந்நாள் அலைக்கழித்தது. இறுதியில் அமெரிக்காவின் 45 ஆவது அதிபராக, மீண்டும் ஒரு ஆணையே மக்கள் வெற்றிபெறச் செய்ததால் ‘டானல்ட் டிரம்ப்’ அவர்கள் அடுத்த அதிபராக அறிவிக்கப்பட்டதும், இந்த முறை ‘மேடம் பிரசிடெண்ட்’ என்ற மாற்றம் வரும் என்று கொண்டிருந்த நம்பிக்கைக்கு முடிவு கட்டப்பட்டது.
தனது போட்டியாளர், குடியரசுக் கட்சியின் வேட்பாளரான டானல்ட் டிரம்ப்பை விட சுமார் ஐந்து இலட்சம் (5,74,064 – செய்தி கிடைத்த நேரம் வரை) வாக்குகளை அதிகம் பெற்றார் ஹில்லாரி கிளிண்டன். அவருக்கு ஆதரவாக வாக்களித்த இந்த அதிகப்படி வாக்குகளை மக்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டுக்காட்ட விரும்பினால், இது அமெரிக்காவின் வியோமிங் (Wyoming) மாநிலத்தில் வாழும் அனைவருமே ஒட்டுமொத்தமாக ஹில்லாரி கிளிண்டனுக்கு வாக்களிப்பது போன்றது. இது முன்னர் அதிபர் தேர்தலுக்குப் போட்டியிட்ட அல் கோர் எதிர்கொண்டது போன்ற (அவரும் ஐந்து இலட்சம் வாக்குகள் புஷ்ஷை விட அதிகம் பெற்றிருந்தார்) ஒரு நிலை. நாட்டுமக்களால் அதிகளவிலான பெரும்பான்மை மக்கள் வாக்குகளைப் (popular votes) பெற்றாலும், தேவையான அளவு 270 'தேர்தல் குழு' வாக்குகளை (electoral votes) பெறாது போனதால் ஹில்லாரி கிளிண்டனின் வெற்றி வாய்ப்பு கைநழுவிப் போனது ஓர் இரங்கத்தக்க நிலையே.
உலகின் மாபெரும் மக்களாட்சி நாடு என்ற பெருமைக்குரியது அமெரிக்கா. பிற நாடுகளின் மக்களாட்சிக்கு ஒரு முன்னுதாரணமாகவும் இருப்பது அமெரிக்கத் தேர்தல் முறையும், தேர்வு செய்யப்பட்டவர்களின் அரசியல் பங்களிப்பும். ஆனால், உலகின் அனைத்துப் பகுதியுடன், 193 நாடுகளின் நிலையுடன் ஒப்பிடும்பொழுது, ஒரு பெண்ணை நாட்டின் அதிபராக்குவதில் அமெரிக்கா மிகவும் பின்தங்கியுள்ளது. ஆசிய ஐரோப்பிய நாடுகளில் நாட்டின் தலைமை பதவியில் பெண்தலைவர்கள் என்பது நடைமுறையாகி ஆண்டுகள் பல ஆகிவிட்டன. அது போலவே சட்டசபைகளில், மக்கள் பிரதிநிதிகளாக பல உள்ளநாட்டு அரசுப் பதவிகளைப் பெண்கள் வகிப்பதிலும் அமெரிக்கா மிகவும் பின்தங்கியுள்ளது.
அதிபராக மட்டுமல்ல, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் எந்த அரசு பதவிகளிலுமே அமெரிக்காவின் நிலை பெருமைப்படும்படி அமையவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. கீழுள்ள புள்ளிவிவரங்கள் அமெரிக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு பதவிகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த எண்கள் “இந்த ஆண்டு” பதவியில் இருப்பவர்கள் குறித்த தகவல்.
(குறிப்பு: இந்த எண்கள் நவம்பர் 2016 இல் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளின் நிலையைப் பிரதிபலிக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ளவும். ஆதாரப்பூர்வமாக நடுவண் மற்றும் மாநில அரசு நிறுவனங்களோ, பல்கலைக்கழகம் அல்லது பிற ஆய்வு அமைப்புகளோ, அல்லது செய்தி நிறுவனங்களோ இப்புள்ளிவிவரங்களைச் சேகரித்து, அதிகாரப்பூர்வமாகத் தொகுத்து வெளியிடச் சற்றே காலம் பிடிக்கக்கூடும்)
(I) 2016 – “அமெரிக்க நடுவண் அரசில்” பெண்களின் பிரதிநிதித்துவம்:
அமெரிக்க மக்களவையில் (US-Congress)
19.4% (535 உறுப்பினர்களில் – 104 பெண்கள்)
அமெரிக்க சட்டமன்ற மேலவையில் (US-Senate)
20% (100 உறுப்பினர்களில் – 20 பெண்கள்)
அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் கீழவையில் (US-House of Representatives)
19.3% (435 உறுப்பினர்களில் – 84 பெண்கள்)
மாநிலங்கள் அளவில் ஆளுநர் மற்றும் துணை ஆளுநர்கள் போன்ற அரசின் உயர்பதவிகளில் (Statewide Executives)
24% (312 உறுப்பினர்களில் – 75 பெண்கள்)
***
(II) 2016 – “அமெரிக்க மாநில அரசுகளில்” பெண்களின் பிரதிநிதித்துவம்:
மாநில சட்ட மன்றம் (State Legislature)
24.4% (7383 சட்டமன்ற உறுப்பினர்களில் – 1,805 பெண்கள்)
மாநில சட்டமன்ற மேலவையில் (State Senate)
22.5% (1972 சட்டமன்ற உறுப்பினர்களில் – 443 பெண்கள்)
மாநில சட்ட மன்ற கீழவையில் (State House/Assembly)
25.2% (5411 சட்டமன்ற உறுப்பினர்களில் – 1,362 பெண்கள்)
உள்ளூர் நகராட்சி /மாநகராட்சி தலைவர்கள் (Mayors of Cities and Largest Cities)
30,000க்கும் மேல் மக்கள்தொகை கொண்ட சிறுநகர்களின் நகராட்சி தலைவர்கள்
18.8% (1391 நகராட்சி தலைவர்களில் – 262 பெண்கள்)
100 பெருநகர்களின் மாநகராட்சி தலைவர்கள்
19% (100 மாநகராட்சி தலைவர்களில் – 19 பெண்கள்)
***
நாட்டின் மக்கள்தொகையில் சரிபாதி அளவு பெண்கள் இருப்பினும், மேலுள்ள புள்ளிவிவரங்களின்படி அமெரிக்க அளவில் அனைத்து அரசு பதவிகளுக்குத் தேர்வு செய்யப்படும் பெண்கள் பிரதிநிதிகளைக் கணக்கிட்டால் அவர்கள் பங்களிப்பு 25% கீழாகவே உள்ளது. சரியாக நூறாண்டுகளுக்கு முன்னர் (1917 இல்) முதல் பெண்மணி அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் கீழவையின் உறுப்பினராக (First woman House of representative)தேர்ந்தெடுக்கப்பட்டார். நூறாண்டுகள் கடந்த பின்னரும் அமெரிக்க நடுவண் அரசில் பெண்களின் பிரதிநிதித்துவம் சுமார் 20% ஆகவே உள்ளது என்பதைக் கொடுக்கப்பட்ட புள்ளிவிவரம் காட்டுகிறது. அதாவது தேர்ந்தெடுக்கப்படும் ஐவரில் ஒருவரே பெண். அத்துடன், சிறுபான்மை மகளிரின் பங்களிப்பு இன்னமும் கவலை தருவது. சிறுபான்மையினர் எண்ணிக்கை அமெரிக்க மக்கள்தொகையில் 20%. இருப்பினும், 6% சிறுபான்மை மகளிரே மக்கள் பிரதிநிதிகளாக உள்ளனர்.
உலகின் பிறநாடுகளுடன் ஒப்பிடும்பொழுது, தரவரிசையில் அமெரிக்கா இருக்கும் இடம் கிட்டத்தட்ட 100 வது இடம் போல (ஒட்டுமொத்தமாக 19% பெண்கள் பங்களிப்புடன்) 97 ஆம் இடத்திற்குத் தாழ்ந்துவிட்டது. மூன்றாவது உலகநாடுகள் எனக் கூறப்படும் உலகநாடுகள் நிலையில் உள்ளது. கென்யா (Kenya – 96 ஆவது இடம்),கிரைகஸ்தான் (Kyrgyzstan – 98 ஆவது இடம்) போன்ற நாடுகளுக்கு இடையே இடம் பிடித்துள்ளது (Inter-Parliamentary Union, 2016). நவீன உலகில், மக்களாட்சி என்பதில் பிறநாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும் அமெரிக்காவின் இந்த நிலை, மிகவும் கேவலமான ஒரு நிலை என்பதைப் பார்ப்பவர் யாவருமே புரிந்து கொள்வர்.
மக்களாட்சி அரசில் பெண்களின் பிரதிநிதித்துவத்தின் தேவை மிகவும் முக்கியமானது. ஏனெனில், நாட்டின் சட்டக் கொள்கைகளை வரையறுக்கும் இன்றியமையாத முடிவுகளைப் பெண்கள் அணுகும் முறை வேறுவிதமாக இருப்பதையும், அது ஆண்களின் அணுகுமுறையில் இருந்து மாறுபட்டிருப்பதையும் வரலாறு காட்டுகிறது. கடந்த 1992 இன் அமெரிக்க அரசமைப்பில் மேலவை கீழவை இரு பிரிவுகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் இருமடங்காக மாறிய பொழுது, பெண்களின்சுகாதார மருத்துவத்திட்டங்களுக்கும், பெண்களைப் பாதிக்கும் மார்பகப்புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் போன்ற ஆய்வுகளுக்கும் அதிக நிதி ஒதுக்கப்பட்டது. பெண்களுக்கெதிரான வன்முறையை ஒழிக்க சட்டவரையறை உருவாக்கப்பட்டது. கொலைகளை, குற்றங்களைக் குறைக்கும் நோக்கில் ஆயுதங்களின் மீது கட்டுப்பாடுகள் விதிக்கும் விதிகள் உருவாக்கப்பட்டன.
நாட்டின் மிக முக்கியமான குற்றவியல் குறித்தான சட்டங்களில், படைகளில் ஓரின உறவைக் கடைப்பிடிக்கும் மக்களுக்குச் சமத்துவம் அளிப்பதில், துப்பாக்கி கட்டுப்பாட்டில், பணியிடங்களில் பெற்றோருக்கான குடும்ப விடுப்பு முறை திட்டங்களுக்கு பெண் உறுப்பினர்கள் வாக்களித்த முறைகளை ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது, பெரும்பாலும் இடதுசாரிக் கொள்கைகள் கொண்ட ‘மக்கள்கட்சி’ (democratic party)யின் பெண் உறுப்பினர்கள் வாக்களிக்கும் முறை மக்கள்கட்சியின் ஆண் உறுப்பினர்கள் வாக்களிக்கும் முறையில் இருந்தும் மிகவும் வேறுபட்டிருந்தது. இந்தப் பாலின வேறுபாட்டு இடைவெளி வலதுசாரிக் கொள்கைகளின் ஆதரவாளர்களான ‘குடியரசு’ (republican party) கட்சியின் ஆண் பெண் உறுப்பினர்களுக்கிடையில் மிகவும் அதிகமாகவும் இருந்தது.
மக்கள்கட்சியின் பெண் உறுப்பினர்கள் மிகவும் முற்போக்கான முறையில் இத்திட்டங்களுக்கு ஆதரவு அளித்திருந்தனர். குடியரசுக் கட்சியின் மகளிர் ஆதரவு தரும் நிலையும் மக்கள்கட்சியின் ஆண்களுக்கு இணையாக இருந்தது. மக்கள்கட்சியின் பெண் உறுப்பினர்களில் 75% மேல் ஆதரவு தரும் திட்டங்களுடன் ஒப்பிடும்பொழுது, அதே திட்டங்களுக்கு மக்கள்கட்சியின் ஆண்கள் மற்றும் குடியரசுக் கட்சியின் மகளிர் 50% க்கு மேல் ஆதரவளிக்கும் நிலை இருந்தது. ஆனால் அதே திட்டங்களுக்கு 50% கீழ்தான் குடியரசுக் கட்சியின் ஆண்கள் ஆதரவு அளிக்கும் நிலை இருந்து. இவ்வாறாகப் பெண் பிரதிநிதிகள் முற்போக்கான நிலையில் கொடுத்த ஆதரவின் காரணத்தினால் மக்களுக்குப் பயன்படும் நல்ல பல திட்டங்களையும் கொள்கைகளையும் கொண்டுவர முடிந்தது. மாறாக வலதுசாரி பழமைவாதி ஆண்கள் அதிகமிருக்கும் குடியரசுக் கட்சியின் கட்சிப் பிரதிநிதிகளின் எண்ணிக்கை சட்டமன்றங்களில் அதிகமிருந்திருந்தால் பல முற்போக்கு நடவடிக்கைகளை மக்களிடம் கொண்டு செல்ல வாய்ப்பில்லை.
நெடுங்காலமாகத் தொழில் நுட்ப வளர்ச்சியிலும் அறிவியலிலும் உலக அளவில் முன்னணியில் இருப்பது அமெரிக்கா. ஆனால் உலக நாடுகளுடன் ஒப்பிடும்பொழுது, அமெரிக்க அரசியலில் பெண்கள் பங்களிப்பு குறைவு என்ற இந்த அவலநிலை ஏன்?
இத்தடைகளுக்கான மூன்று காரணங்களை நாம் அடையாளம் காணலாம் என்கின்றனர் அரசியலில் மகளிர் பங்களிப்பு குறித்து ஆய்வு செய்யும் ‘ரட்கெர்ஸ் பல்கலைக் கழகத்தின் அரசியல் ஆய்வாளர்கள்’ (Rutgers University’s Center for American Women and Politics).
(1) அரசியலில் மக்கள் பிரதிநிதிகளுக்கு தகுந்த ஆதரவு அளித்து அவர்களைத் தேர்தலில் பங்கேற்பதற்கும், பதவிகளை அடைவதற்கும் உருவாக்கும் ஆற்றுப்படுத்தும் முறை (mentorship) பெரும்பாலும் இன்றும் ஆண்களின் கட்டுப்பாட்டில் இருப்பது ஒரு காரணம் என்பது அரசியல்துறையை ஆய்பவர்களின் கணிப்பு.
(2) அமெரிக்க பெண்களிடமும் வாக்களிப்பதைத் தவிர, நேரே அரசியலில் இறங்கி தேர்தல் களத்தில் போட்டியிடும் ஆர்வமும் குறைவு என்பது மற்றொரு உண்மை.
(3) அவ்வாறு அவர்கள் களமிறங்கினாலும் ஊடகங்களால் (ஆண் வேட்பாளர்களுடன்) ஒப்பிடும்பொழுது பெண்களின் நடவடிக்கைகள் (அவர்கள் தோற்றம், உடல்நலம், குடும்ப வாழ்க்கை உட்பட) மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு, பெண் வேட்பாளர்கள் மிகவும் தீவிரமான விமர்சனங்களையும் எதிர்கொள்ள நேரிடுகிறது. ஆண் வேட்பாளர்களின் அநாகரிகச் செய்கைகள் கூட மக்களால் பெரிதாகப் பொருட்படுத்தப்படுவதில்லை. எழுதப்படாத இந்த இரட்டை நீதிமுறையால் பெண்களின் ஆர்வம் தகர்க்கப்படுகிறது.
ஆனால், இந்த தடைகளைக் கடந்து பெண்கள் அரசியலில் இறங்கினால், தேர்தலில் போட்டியிட்டால் அவர்களில் பலர் வெற்றிபெறவும் தவறுவதில்லை. ஆண்கள் வெற்றிபெறும் விகிதத்துடன் பெண்களின் வெற்றி பெற்ற விகிதத்தை ஒப்பிடும்பொழுது பெரிய வேறுபாடும் இல்லை. குறிப்பாக குடியரசுக் கட்சியுடன் ஒப்பிடும்பொழுது, மக்கள்கட்சியின் வேட்பாளர்களில் பாலின வேறுபாடு பெண்களின் வெற்றி வாய்ப்பைக் குறைப்பதுமில்லை. பொதுமக்களிலும், சென்ற நூற்றாண்டில் பெண்களுக்கு வாக்களிக்க முன்வந்தவர்களுடன் (1937 இல் 33%) ஒப்பிடும்பொழுது, இந்த நூற்றாண்டில் (2012இல் 95%) பெண்களுக்கு வாக்களிக்க முன்வருபவர்களின் எண்ணிக்கையும் பலமடங்கு உயர்ந்துவிட்டது, பாலின வேறுபாட்டைப் பொருட்படுத்தாத நிலை என்றே கூறலாம்.
எனவே இதுபோன்ற நடைமுறைத் தடைகளையும், பெண்களே கொண்டிருக்கும் மனத்தடைகளையும் உடைக்கப் பெண்களின் முயற்சியும், அவர்களை அரசியலில் இறங்க ஊக்கப்படுத்தி ஆதரவு தருவோர் மனப்பாங்கு மாறவும் நல்ல முன்னுதாரணங்கள் தேவை. அவ்வகையில் ஹில்லாரி கிளிண்டன் வெற்றி பெற்றிருந்தால் அவரது நிலை உதவியிருக்கும். ஆனால், தேர்தல் முடிவைப் பார்த்துவிட்டு பெண்களில் சிலர் “ஹில்லாரியாலேயே முடியவில்லை என்றால் பிறகு எந்தப் பெண்ணால்தான் முடியும்?” (“If she can’t do it, what woman can?”) என்பது போன்ற அவநம்பிக்கை தொனிக்கும் கருத்தை வெளியிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஹில்லாரி கிளிண்டன் அமெரிக்க அதிபரானாலும், அமெரிக்க அரசியலில் பெண்களின் பங்களிப்பு என்பதை அது உடனே மாற்றிவிடாது. மாறாக அவரது வெற்றி பெண்களுக்கு, குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு நல்லதொரு முன்னுதாரணமாக அமையும் வாய்ப்பு அமைந்திருக்கும். விளையாட்டுப் பந்தயங்களில், இந்த உச்ச எல்லையை யாரும் அடையமுடியாது என்ற கருத்தை யாரவது ஒருவர் உடைத்து அந்தத் தடையைக் கடந்து சாதனைச் செய்த பிறகு, விளையாட்டு வீரர்கள் கொண்டிருந்த மனத்தடை நீக்கப்பட்டுத் தொடர்ந்து பலரும் அந்த எல்லைகளைக் கடந்து சாதிக்கத் தொடக்கி விடுவதை ஒலிம்பிக் பந்தயங்கள் போன்றவற்றில் நாம் பார்த்து வருகிறோம்.
இந்தியாவில் 1960-களுக்குப் பிறகு பிறந்து வளர்ந்தவர்களில், குறிப்பாகப் பெண்களிடம் தாங்கள் விரும்பினால் அரசியலில் பங்கு பெறலாம், அதற்குத் தடையில்லை என்ற எண்ணத்துடன் வளர்ந்த மனநிலை இருக்கும். அதுபோலவே, பெண்கள் ஆட்சிப் பொறுப்பில் இருப்பதைப் பார்த்து பழகிப் போன இந்திய ஆண்களின் மனநிலைக்கும் காரணத்தைப் பார்த்தோமானால், சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தியப் பிரதமராக இந்திராகாந்தி, குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டில், மற்றும் பல மாநில முதல்வர்கள் போன்ற தலைமைப் பதவிகளில் பெண்கள் பலர் இருந்ததும், இருப்பதும் காரணம்.
இந்த அமெரிக்கத் தேர்தலில்; அகதியாகக் குடியேறிய சோமாலி-அமெரிக்கன் பெண்மணியான இலான் ஓமர் (Ilhan Omar) மின்னசோட்டா மாநில சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். போரில் தனது விமானத்திற்கு ஏற்பட்ட விபத்தால் தன்னுடைய இரு கால்களின் செயலையும் இழந்த தாய்லாந்து நாட்டின் பின்புலம் கொண்ட ‘டாமி டக்வர்த்’ (Tammy Duckworth) என்ற பெண்மணி இல்லினாயிஸ் மாநிலத்தின் பிரதிநிதியாக நடுவண் அரசின் மேலவைக்குத் தேர்வாகியுள்ளார். இதே வரிசையில், கலிபோர்னியா அரசின் தலைமை வழக்கறிஞர் (attorney general) பதவி வகித்த, இந்தியப் பின்புலம் கொண்ட ‘கமலா ஹாரிஸ்’ (Kamala Harris) கலிபோர்னியா மாநிலத்தின் பிரதிநிதியாக நடுவண் அரசின் மேலவைக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இப்பெண்மணிகள் சிறுபான்மை வகுப்பினர், மாற்றுத்திறனாளி போன்ற தடைக்கற்களையும் கடந்து காட்டியுள்ளார்கள். அமெரிக்க நடுவண் அரசின் மேலவையில் இடம் பெரும் முதல் இந்திய-அமெரிக்கன் என்பது கமலா ஹாரிஸ் பெற்றுள்ள சிறப்பு. இவர்களது வெற்றி பல சிறுபான்மை பெண்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் என்பது உறுதி.
மக்களின் பிரதிநிதித்துவத்திற்காக அமைக்கப்பட்ட அரசியலமைப்பில், மக்களின் வாழ்வைத் தீர்மானிக்கும் கொள்கைகளில், கொள்கையின் வேறு பரிணாமங்களைக் காட்டக்கூடிய பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவு என்பது கவலைக்குரிய நிலை. இந்நிலையைசரி செய்ய பெண்களில் பலர் அரசியலிலும் உயர்பதவிகளிலும் இருக்கும் முன்னுதாரணம் நாட்டு மக்களுக்குத் தேவை.
அந்தவகையில் ஹில்லாரி கிளிண்டன் அமெரிக்காவின் முதல் ‘மேடம் பிரசிடெண்ட்’ என்ற நிலையை அடைந்திருந்தால் அமெரிக்க அரசியலில் பெண்களின் வரலாற்றை முன்னேற்றப்பாதையில் திருப்ப அவரது நிலை உதவியிருக்கும். தேர்தல் காலத்தில் அவர் மக்கள் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு, மக்கள்கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாளில் லில்லி என்ற ஏழுவயது சிறுமி, தனது பெயரை ‘லில்லாரி’ என மாற்றிக் கொள்ள விரும்புவதாக அவரது அன்னையிடம் கூறினாள். சிறுமியின் அன்னை அவளது விருப்பத்தின் காரணத்தைக் கேட்டபொழுது, ‘லில்லாரி’ என்றால் வளர்ந்தவுடன் தானும் அமெரிக்க அதிபராகலாம் என்று கூறினாள். இந்தச் செய்தியை அறிந்த ஹில்லாரி கிளிண்டன் அந்தச் சிறுமிக்கு ஊக்கமளிக்கும் வகையில் தனிப்பட்ட முறையில் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பினார்.
அக்கடிதத்தில், “அன்பு லில்லி, நீ உன் பெயரை லில்லாரி என்று மாற்றிக் கொள்ள விரும்புவதாகவும், வளர்ந்த பிறகு அமெரிக்க அதிபராக வர விரும்புவதாகவும் உன் அன்னை தெரிவித்தார். லில்லி என்பது அருமையான பெயர், வருங்கால அமெரிக்க அதிபராக ஆவதற்கு நீ உன் பெயரை மாற்றிக் கொள்ளத் தேவையில்லை. பெரிய கனவாக காண்பதையும், கடின உழைப்பையும், நீ விரும்புவதில் ஆழ்ந்த அக்கறையும் கொண்டால் நீ சாதிப்பதற்கு எந்த எல்லையும் கிடையாது. இப்பொழுது நான் குறிப்பிடுவது உன் வயதிற்கு அதிகப்படியானதாகத் தெரியலாம். வளர்ந்த பிறகு உலகில் உனக்கென ஓரிடத்தை அடையும்பொழுது உன் குரலை வெளிப்படுத்து. வகுப்புகளிலும், பணியிடங்களிலும் உன் சிந்தனையில் தோன்றுவதைத் தயக்கமின்றி சொல். உனது எண்ணங்களுக்குப் பெருமையுடன் உரிமை கொண்டாடு. உனது பங்களிப்புகளில் நம்பிக்கை கொள். உன் எண்ணத்தைப் பிறர் ஏற்றுக்கொள்ளாத நிலையை எதிர்கொண்டால், உனக்கென உலகில் ஓரிடத்தை உருவாக்கவும் தயக்கம் கொள்ளாதே. உன்னிடத்திலோ, உனது கனவுகளிலோ, உன் எதிர்காலம் குறித்தோ நீ கொண்ட நம்பிக்கையை இழக்காதே. தயங்காதே, முயற்சியைக் கைவிடாதே. உலகில் அடைய நினைக்கும் எதையும் நீ அடையலாம். நான் அமெரிக்காவின் முதல் பெண் அதிபராகவும் ஆகவும் கூடும். அடுத்த அதிபராக நீயும் கூட ஆகலாம்” என்று எழுதி உற்சாகமூட்டினார். தொடர்ந்து பல சிறுமிகளும் அவருக்குக் கடிதம் எழுதியதாகவும் செய்திகளுண்டு (https://a.hrc.onl/imageman/feed-gifs/littlegirlsgif1.gif).
“நாம் இன்னமும் (பெண்கள் உயர்பதவிகளுக்கு முன்னேறுவதைத் தடை செய்யும்) அந்த உயர்ந்த மற்றும் கடினமான கண்ணாடிக் கூரையை உடைக்கவில்லை என்பது எனக்குப் புரிகிறது. ஆனால், என்றாவது ஒரு நாள், யாராவது அதனை நாம் இப்பொழுது எதிர்பார்க்கும் காலத்திற்கும் முன்னரே விரைவாகவே செய்வார்கள் என்பதை நம்பலாம்” (I know we have still not shattered that highest and hardest glass ceiling, but someday, someone will, and hopefully sooner than we might think right now) என்று தேர்தல் முடிவுகள் தெரிந்த பிறகு, டிரம்ப்பின் வெற்றியை ஏற்றுக்கொண்டு ஹில்லாரி கிளிண்டன் உரையாற்றியபொழுது குறிப்பிட்டார்.
ஆம், அமெரிக்க மண்ணில் ஒரு பெண் அதிபர் நாடாளும் வாய்ப்பு அடுத்து வரும் தேர்தலில் கிடைக்கும் என நாமும் எதிர்பார்க்கலாம். முன்மாதிரிகள் தரும் ஊக்கத்தின் மூலம் நாட்டின் சட்டமியற்றும் நிலையில் பெண்கள் பலரின் பங்களிப்பும் அதைத் தொடர்ந்து அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கலாம்.
References:
(1) Rutgers University’s Center for American Women and Politics (CAWP)[http://www.cawp.rutgers.edu/women-us-congress-2016]
(2) Rutgers University’s Center for American Women and Politics (CAWP)[http://www.cawp.rutgers.edu/current-numbers]
(3) Madam President, by Christine Laskowski; FiveThirtyEight with collaboration Rutgers University’s Center for American Women and Politics (CAWP) [https://vimeo.com/176508773]
(4) Women in the United States Senate [https://en.wikipedia.org/wiki/Women_in_the_United_States_Senate]
(5) Women in the United States House of Representatives [https://en.wikipedia.org/wiki/Women_in_the_United_States_House_of_Representatives]
(6) Inter-Parliamentary Union, Women in Parliaments: World Classification[http://www.ipu.org/wmn-e/classif.htm]
(7) The women who won: Down-ballot candidates make history [http://www.cnn.com/2016/11/10/politics/us-election-women-who-won/]
(8) Many women thought Clinton would shatter the glass ceiling, not run into a concrete wall [http://www.latimes.com/politics/la-na-pol-trump-women-20161109-story.html]
(9) Hillary Clinton offers this inspiring advice to a 7-year-old who wanted to be called ‘Lillary’ [https://www.washingtonpost.com/news/inspired-life/wp/2016/09/27/hillary-clintons-offers-inspiring-advice-to-a-7-year-old-who-wanted-to-be-called-lillary/]
Picture of Hillary Clinton’s Dear Lilly letter to Lilly:https://scontent.xx.fbcdn.net/v/t1.0-9/14355665_10209812498164149_597827060494385062_n.jpg?oh=3da3cdeec13d491fdbe69f4c588124a8&oe=58C9A116
நெடுங்காலமாகத் தொழில் நுட்ப வளர்ச்சியிலும் அறிவியலிலும் உலக அளவில் முன்னணியில் இருப்பது அமெரிக்கா. ஆனால் உலக நாடுகளுடன் ஒப்பிடும்பொழுது, அமெரிக்க அரசியலில் பெண்கள் பங்களிப்பு குறைவு என்ற இந்த அவலநிலை ஏன்?
இத்தடைகளுக்கான மூன்று காரணங்களை நாம் அடையாளம் காணலாம் என்கின்றனர் அரசியலில் மகளிர் பங்களிப்பு குறித்து ஆய்வு செய்யும் ‘ரட்கெர்ஸ் பல்கலைக் கழகத்தின் அரசியல் ஆய்வாளர்கள்’ (Rutgers University’s Center for American Women and Politics).
(1) அரசியலில் மக்கள் பிரதிநிதிகளுக்கு தகுந்த ஆதரவு அளித்து அவர்களைத் தேர்தலில் பங்கேற்பதற்கும், பதவிகளை அடைவதற்கும் உருவாக்கும் ஆற்றுப்படுத்தும் முறை (mentorship) பெரும்பாலும் இன்றும் ஆண்களின் கட்டுப்பாட்டில் இருப்பது ஒரு காரணம் என்பது அரசியல்துறையை ஆய்பவர்களின் கணிப்பு.
(2) அமெரிக்க பெண்களிடமும் வாக்களிப்பதைத் தவிர, நேரே அரசியலில் இறங்கி தேர்தல் களத்தில் போட்டியிடும் ஆர்வமும் குறைவு என்பது மற்றொரு உண்மை.
(3) அவ்வாறு அவர்கள் களமிறங்கினாலும் ஊடகங்களால் (ஆண் வேட்பாளர்களுடன்) ஒப்பிடும்பொழுது பெண்களின் நடவடிக்கைகள் (அவர்கள் தோற்றம், உடல்நலம், குடும்ப வாழ்க்கை உட்பட) மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு, பெண் வேட்பாளர்கள் மிகவும் தீவிரமான விமர்சனங்களையும் எதிர்கொள்ள நேரிடுகிறது. ஆண் வேட்பாளர்களின் அநாகரிகச் செய்கைகள் கூட மக்களால் பெரிதாகப் பொருட்படுத்தப்படுவதில்லை. எழுதப்படாத இந்த இரட்டை நீதிமுறையால் பெண்களின் ஆர்வம் தகர்க்கப்படுகிறது.
ஆனால், இந்த தடைகளைக் கடந்து பெண்கள் அரசியலில் இறங்கினால், தேர்தலில் போட்டியிட்டால் அவர்களில் பலர் வெற்றிபெறவும் தவறுவதில்லை. ஆண்கள் வெற்றிபெறும் விகிதத்துடன் பெண்களின் வெற்றி பெற்ற விகிதத்தை ஒப்பிடும்பொழுது பெரிய வேறுபாடும் இல்லை. குறிப்பாக குடியரசுக் கட்சியுடன் ஒப்பிடும்பொழுது, மக்கள்கட்சியின் வேட்பாளர்களில் பாலின வேறுபாடு பெண்களின் வெற்றி வாய்ப்பைக் குறைப்பதுமில்லை. பொதுமக்களிலும், சென்ற நூற்றாண்டில் பெண்களுக்கு வாக்களிக்க முன்வந்தவர்களுடன் (1937 இல் 33%) ஒப்பிடும்பொழுது, இந்த நூற்றாண்டில் (2012இல் 95%) பெண்களுக்கு வாக்களிக்க முன்வருபவர்களின் எண்ணிக்கையும் பலமடங்கு உயர்ந்துவிட்டது, பாலின வேறுபாட்டைப் பொருட்படுத்தாத நிலை என்றே கூறலாம்.
எனவே இதுபோன்ற நடைமுறைத் தடைகளையும், பெண்களே கொண்டிருக்கும் மனத்தடைகளையும் உடைக்கப் பெண்களின் முயற்சியும், அவர்களை அரசியலில் இறங்க ஊக்கப்படுத்தி ஆதரவு தருவோர் மனப்பாங்கு மாறவும் நல்ல முன்னுதாரணங்கள் தேவை. அவ்வகையில் ஹில்லாரி கிளிண்டன் வெற்றி பெற்றிருந்தால் அவரது நிலை உதவியிருக்கும். ஆனால், தேர்தல் முடிவைப் பார்த்துவிட்டு பெண்களில் சிலர் “ஹில்லாரியாலேயே முடியவில்லை என்றால் பிறகு எந்தப் பெண்ணால்தான் முடியும்?” (“If she can’t do it, what woman can?”) என்பது போன்ற அவநம்பிக்கை தொனிக்கும் கருத்தை வெளியிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஹில்லாரி கிளிண்டன் அமெரிக்க அதிபரானாலும், அமெரிக்க அரசியலில் பெண்களின் பங்களிப்பு என்பதை அது உடனே மாற்றிவிடாது. மாறாக அவரது வெற்றி பெண்களுக்கு, குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு நல்லதொரு முன்னுதாரணமாக அமையும் வாய்ப்பு அமைந்திருக்கும். விளையாட்டுப் பந்தயங்களில், இந்த உச்ச எல்லையை யாரும் அடையமுடியாது என்ற கருத்தை யாரவது ஒருவர் உடைத்து அந்தத் தடையைக் கடந்து சாதனைச் செய்த பிறகு, விளையாட்டு வீரர்கள் கொண்டிருந்த மனத்தடை நீக்கப்பட்டுத் தொடர்ந்து பலரும் அந்த எல்லைகளைக் கடந்து சாதிக்கத் தொடக்கி விடுவதை ஒலிம்பிக் பந்தயங்கள் போன்றவற்றில் நாம் பார்த்து வருகிறோம்.
இந்தியாவில் 1960-களுக்குப் பிறகு பிறந்து வளர்ந்தவர்களில், குறிப்பாகப் பெண்களிடம் தாங்கள் விரும்பினால் அரசியலில் பங்கு பெறலாம், அதற்குத் தடையில்லை என்ற எண்ணத்துடன் வளர்ந்த மனநிலை இருக்கும். அதுபோலவே, பெண்கள் ஆட்சிப் பொறுப்பில் இருப்பதைப் பார்த்து பழகிப் போன இந்திய ஆண்களின் மனநிலைக்கும் காரணத்தைப் பார்த்தோமானால், சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தியப் பிரதமராக இந்திராகாந்தி, குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டில், மற்றும் பல மாநில முதல்வர்கள் போன்ற தலைமைப் பதவிகளில் பெண்கள் பலர் இருந்ததும், இருப்பதும் காரணம்.
இந்த அமெரிக்கத் தேர்தலில்; அகதியாகக் குடியேறிய சோமாலி-அமெரிக்கன் பெண்மணியான இலான் ஓமர் (Ilhan Omar) மின்னசோட்டா மாநில சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். போரில் தனது விமானத்திற்கு ஏற்பட்ட விபத்தால் தன்னுடைய இரு கால்களின் செயலையும் இழந்த தாய்லாந்து நாட்டின் பின்புலம் கொண்ட ‘டாமி டக்வர்த்’ (Tammy Duckworth) என்ற பெண்மணி இல்லினாயிஸ் மாநிலத்தின் பிரதிநிதியாக நடுவண் அரசின் மேலவைக்குத் தேர்வாகியுள்ளார். இதே வரிசையில், கலிபோர்னியா அரசின் தலைமை வழக்கறிஞர் (attorney general) பதவி வகித்த, இந்தியப் பின்புலம் கொண்ட ‘கமலா ஹாரிஸ்’ (Kamala Harris) கலிபோர்னியா மாநிலத்தின் பிரதிநிதியாக நடுவண் அரசின் மேலவைக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இப்பெண்மணிகள் சிறுபான்மை வகுப்பினர், மாற்றுத்திறனாளி போன்ற தடைக்கற்களையும் கடந்து காட்டியுள்ளார்கள். அமெரிக்க நடுவண் அரசின் மேலவையில் இடம் பெரும் முதல் இந்திய-அமெரிக்கன் என்பது கமலா ஹாரிஸ் பெற்றுள்ள சிறப்பு. இவர்களது வெற்றி பல சிறுபான்மை பெண்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் என்பது உறுதி.
மக்களின் பிரதிநிதித்துவத்திற்காக அமைக்கப்பட்ட அரசியலமைப்பில், மக்களின் வாழ்வைத் தீர்மானிக்கும் கொள்கைகளில், கொள்கையின் வேறு பரிணாமங்களைக் காட்டக்கூடிய பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவு என்பது கவலைக்குரிய நிலை. இந்நிலையைசரி செய்ய பெண்களில் பலர் அரசியலிலும் உயர்பதவிகளிலும் இருக்கும் முன்னுதாரணம் நாட்டு மக்களுக்குத் தேவை.
அந்தவகையில் ஹில்லாரி கிளிண்டன் அமெரிக்காவின் முதல் ‘மேடம் பிரசிடெண்ட்’ என்ற நிலையை அடைந்திருந்தால் அமெரிக்க அரசியலில் பெண்களின் வரலாற்றை முன்னேற்றப்பாதையில் திருப்ப அவரது நிலை உதவியிருக்கும். தேர்தல் காலத்தில் அவர் மக்கள் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு, மக்கள்கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாளில் லில்லி என்ற ஏழுவயது சிறுமி, தனது பெயரை ‘லில்லாரி’ என மாற்றிக் கொள்ள விரும்புவதாக அவரது அன்னையிடம் கூறினாள். சிறுமியின் அன்னை அவளது விருப்பத்தின் காரணத்தைக் கேட்டபொழுது, ‘லில்லாரி’ என்றால் வளர்ந்தவுடன் தானும் அமெரிக்க அதிபராகலாம் என்று கூறினாள். இந்தச் செய்தியை அறிந்த ஹில்லாரி கிளிண்டன் அந்தச் சிறுமிக்கு ஊக்கமளிக்கும் வகையில் தனிப்பட்ட முறையில் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பினார்.
அக்கடிதத்தில், “அன்பு லில்லி, நீ உன் பெயரை லில்லாரி என்று மாற்றிக் கொள்ள விரும்புவதாகவும், வளர்ந்த பிறகு அமெரிக்க அதிபராக வர விரும்புவதாகவும் உன் அன்னை தெரிவித்தார். லில்லி என்பது அருமையான பெயர், வருங்கால அமெரிக்க அதிபராக ஆவதற்கு நீ உன் பெயரை மாற்றிக் கொள்ளத் தேவையில்லை. பெரிய கனவாக காண்பதையும், கடின உழைப்பையும், நீ விரும்புவதில் ஆழ்ந்த அக்கறையும் கொண்டால் நீ சாதிப்பதற்கு எந்த எல்லையும் கிடையாது. இப்பொழுது நான் குறிப்பிடுவது உன் வயதிற்கு அதிகப்படியானதாகத் தெரியலாம். வளர்ந்த பிறகு உலகில் உனக்கென ஓரிடத்தை அடையும்பொழுது உன் குரலை வெளிப்படுத்து. வகுப்புகளிலும், பணியிடங்களிலும் உன் சிந்தனையில் தோன்றுவதைத் தயக்கமின்றி சொல். உனது எண்ணங்களுக்குப் பெருமையுடன் உரிமை கொண்டாடு. உனது பங்களிப்புகளில் நம்பிக்கை கொள். உன் எண்ணத்தைப் பிறர் ஏற்றுக்கொள்ளாத நிலையை எதிர்கொண்டால், உனக்கென உலகில் ஓரிடத்தை உருவாக்கவும் தயக்கம் கொள்ளாதே. உன்னிடத்திலோ, உனது கனவுகளிலோ, உன் எதிர்காலம் குறித்தோ நீ கொண்ட நம்பிக்கையை இழக்காதே. தயங்காதே, முயற்சியைக் கைவிடாதே. உலகில் அடைய நினைக்கும் எதையும் நீ அடையலாம். நான் அமெரிக்காவின் முதல் பெண் அதிபராகவும் ஆகவும் கூடும். அடுத்த அதிபராக நீயும் கூட ஆகலாம்” என்று எழுதி உற்சாகமூட்டினார். தொடர்ந்து பல சிறுமிகளும் அவருக்குக் கடிதம் எழுதியதாகவும் செய்திகளுண்டு (https://a.hrc.onl/imageman/feed-gifs/littlegirlsgif1.gif).
“நாம் இன்னமும் (பெண்கள் உயர்பதவிகளுக்கு முன்னேறுவதைத் தடை செய்யும்) அந்த உயர்ந்த மற்றும் கடினமான கண்ணாடிக் கூரையை உடைக்கவில்லை என்பது எனக்குப் புரிகிறது. ஆனால், என்றாவது ஒரு நாள், யாராவது அதனை நாம் இப்பொழுது எதிர்பார்க்கும் காலத்திற்கும் முன்னரே விரைவாகவே செய்வார்கள் என்பதை நம்பலாம்” (I know we have still not shattered that highest and hardest glass ceiling, but someday, someone will, and hopefully sooner than we might think right now) என்று தேர்தல் முடிவுகள் தெரிந்த பிறகு, டிரம்ப்பின் வெற்றியை ஏற்றுக்கொண்டு ஹில்லாரி கிளிண்டன் உரையாற்றியபொழுது குறிப்பிட்டார்.
ஆம், அமெரிக்க மண்ணில் ஒரு பெண் அதிபர் நாடாளும் வாய்ப்பு அடுத்து வரும் தேர்தலில் கிடைக்கும் என நாமும் எதிர்பார்க்கலாம். முன்மாதிரிகள் தரும் ஊக்கத்தின் மூலம் நாட்டின் சட்டமியற்றும் நிலையில் பெண்கள் பலரின் பங்களிப்பும் அதைத் தொடர்ந்து அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கலாம்.
____________________________________________________
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

என்று இந்திய அரசின் வானொலி ஒலிபரப்பிய ஒரு விவசாய நிகழ்ச்சியின் பாடல், 1970 மற்றும் 1980-களில் பலரையும் கவர்ந்த பாடல். அதனை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தது குடியரசுத் தலைவர் மாண்புமிகு பிரணாப் முகர்ஜி அவர்கள் சென்றவாரம் சண்டிகாரில் நடந்த வேளாண் தொழில்நுட்பக் கருத்தரங்கில் நிகழ்த்திய ஓர் உரையும் (12th edition of CII Agro Tech 2016 in Chandigarh on November 20, 2016), ஒரு அறிவியல் ஆய்வறிக்கையின் வெளியீடும்.
இந்தியாவின் பசுமைப் புரட்சி:
பசுமைப் புரட்சியின் தந்தை எனப் பாராட்டப்படும் “நார்மன் எர்னஸ்ட் போர்லாக்” (Norman Ernest Borlaug, 1914 – 2009) என்ற அமெரிக்க வேளாண் அறிவியலார் 1940-களில் தனது ஆய்வின் மூலம் மெக்சிகோ நாட்டின் பசுமைப்புரட்சிக்கு வித்திட்டவர். இவரது தாவரவியல் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் உலகில் சுமார் 25 கோடி(245 மில்லியன்) மக்களைப் பசியில் இருந்து காப்பாற்றியதாகக் கணக்கிடப்படுகிறது. இவரது ஆய்வுகளின் வழிமுறைகளை விரும்பி ஏற்றுக் கொண்ட சுதந்திர இந்தியாவும் நாட்டின் வளரும் மக்கள்தொகையின் உணவுத் தேவையில் தன்னிறைவு எய்திட 1960 களில் “பசுமைப்புரட்சி” கொள்கையைக் கடைப்பிடித்தது. இம்முயற்சியால் கோதுமையை பிறநாட்டில் இருந்து விலைகொடுத்துத் தருவித்து மக்களுக்கு வழங்கும் நிலையை இந்தியாவால் குறைக்கவும் முடிந்தது.
இவ்வாறு இந்தியாவின் பசுமைப்புரட்சிக்கு உதவியதால் 2006 ஆம் ஆண்டு இந்தியாவின் பத்ம விபூஷண் பட்டம் அளிக்கப்பட்டு பாராட்டப் பட்டவர் நார்மன் போர்லாக். இவரது பங்களிப்பு சமூகத்தின் பொருளாதார மாற்றங்களுக்கு அடிப்படையாக அமைந்தது என்பது சென்ற நூற்றாண்டு எதிர்கொண்ட மறுக்கமுடியாத மாறுதல். இவரது பசுமைப்புரட்சி பங்களிப்பு பசியால் உருவாகக் கூடிய போர்களைத் தவிர்த்திருக்க உதவியது என்ற அடிப்படையில் 1970 இல் உலக சமாதானத்திற்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது.
பசுமைப் புரட்சி திட்டத்தில் …
(1) அதிக மகசூல் தரும், நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட அரிசி, கோதுமை, சோளம் போன்ற தானியங்களின் விதைகள் கலப்பின முறை மற்றும் மரபணு மாற்றங்கள் மூலம் உருவாக்கப்பட்டன.
(2) பயிரிடும் காலங்களில் மாற்றங்கள், சாகுபடி சுழற்சி போன்ற பயிரிடும் முறையில் திட்டமிடப்பட்ட மாற்றங்கள், புதிய நீர் மேலாண்மை வழிமுறைகள், மண் வள ஆய்வு அடிப்படையில் பயிர், உரம் ஆகியவற்றைத் தேர்வு செய்தல், கூட்டுறவு பண்ணை உழவுமுறை, உழவுத்தொழிலில் இயந்திரங்களின் பயன்பாடு போன்றவை நவீன வேளாண் தொழில் நுட்ப முறைகளாகப் பரிந்துரைக்கப்பட்டன.
(3)புதிய வேளாண் முறைகளாக வேதியல் அடிப்படையில் பூச்சிகொல்லிகள், களைகொல்லிகள் போன்றவை பயிர்களின் நோய் எதிர்ப்புக்கும்புதிய உரங்கள் ஊட்டச் சத்தாகவும் பயன்படுத்தப்பட்டு அதிக விளைச்சலுக்கு வழிவகுத்தன.
ராக்கஃபெல்லர் மற்றும் ஃபோர்ட் அறக்கட்டளை (Rockfeller Foundation, Ford Foundation) அமைப்புகள் இந்தப் பசுமைப்புரட்சி அறிவியல் ஆய்வுகளை ஆதரித்து வளர்ப்பதில் இன்றியமையாப் பங்கேற்றன. ஆய்வின் விளைவுகளைக் கண்ட பின்னர் பசுமைப் புரட்சி கொடுக்கும் பலனால் ஈர்க்கப்பட்ட இந்தியா, பாகிஸ்தான் போன்ற தெற்காசிய அரசாங்கங்களும் புதிய வேளாண் தொழில்நுட்ப முறைகளை ஏற்றுக் கொண்டன. இந்நாடுகளில் 1950 களில் கோதுமை உற்பத்தி எடை அளவில் (kilograms per hectare) அதிகரித்தது. மகசூல் ஹெக்டேருக்கு 500 கிலோ என்பதிலிருந்து வளர்ச்சியடைந்து,2000 களில் ஹெக்டேருக்கு 2500 கிலோ மகசூல் என்ற நிலையை எட்ட முடிந்தது. குறிப்பாக இது அதிக மக்கள்தொகை வளர்ச்சியைக் கொண்ட இந்தியா ‘உணவு உற்பத்தியில் தன்னிறைவு’ என்ற நிலையை எட்ட உதவியது. பத்துமடங்கு அதிக மகசூல் தரும் ஐ.ஆர் 8 (IR8) நெல்வகை இந்தியாவின் அரிசி உற்பத்தியில் பெரும் மாறுதலைக் கொண்டு வந்தது. இந்திய உணவு அமைச்சராகப் பணியாற்றிய சி. சுப்பிரமணியம் அவர்கள் முயற்சியில் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு நிலையை எட்டியதுடன், இந்தியா தானியங்களை இறக்குமதி செய்யும் நிலையும் மாறியது. இன்று உலகில் அதிக அளவு அரிசி உற்பத்தி செய்யும் நாடாகவும், அதிக அளவில் அரிசி ஏற்றுமதி செய்யும் நாடாகவும் அறியப்படும் நிலையை இந்தியா அடைந்துள்ளது.
சென்ற நூற்றாண்டின் இந்தியாவின் பசுமைப்புரட்சி திட்டத்தில் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்கள் உணவு உற்பத்தியில் முன்னிலை வகித்தன. இம்முறை ‘இரண்டாம் பசுமைப்புரட்சி’யின் துவக்கமாக இந்தியாவின் வடகிழக்கு மற்றும் கிழக்குப்பகுதிகள் பசுமைப்புரட்சியை முன்னெடுத்து வளர்ச்சியடைய வேண்டும் என்றும், இதற்காக புதிய வேளாண் தொழில்நுட்ப முறைகளையும், நவீன வேளாண் முறைகளையும் இந்தியா முன்னெடுக்கத் தேவை ஏற்பட்டுள்ளதாகவும் குடியரசுத் தலைவர் தனது உரையில் குறிப்பிட்டார்..
இரண்டாம் பசுமைப்புரட்சி – தாவரங்களின் ஒளிச்சேர்க்கைத்திறன் அதிகரிப்பு:
சூரிய ஒளியில் இருந்து கார்போஹைட்ரேட் தயாரிக்க உதவுவது ஒளிச்சேர்க்கை முறை. தாவரங்களின் ஒளிச்சேர்க்கைத் திறனை அதிகரிக்கும் முயற்சி அறிவியலார்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது இரண்டாம் பசுமைப்புரட்சியின் அடிப்படை எனக் கருதப்படுகிறது. உலகில் அடுத்து வரும் இருபதாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சிக்கு ஈடுசெய்யும் விதமாக உணவு உற்பத்தி அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனை கவனத்தில் கொண்டும், ஏழ்மை நிலையில் உள்ள நாடுகளின் மக்களின் நலத்தைக் கருத்தில் கொண்டும் ‘பில்கேட்ஸ் அறக்கட்டளை நிறுவனம்’ (Bill & Melinda Gates Foundation) வேளாண் தொழில்நுட்ப ஆய்வில் அதிக அக்கறை எடுத்துக்கொண்டுள்ளது.
மேகங்கள் கடப்பதினால் மாறுபடும் சூரியஒளி நிலை ஏற்படுகிறது, இதனால் இயற்கையில் தாவரங்கள் வேறுபடும் சூரியஒளி அளவை எதிர்கொள்கின்றன. அதிக அளவு சூரிய ஒளியில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள சூரியனில் இருந்து பெறும் சக்தியைத் தாவரங்கள் வெப்பமாக வெளியேற்றி விடுகின்றன (nonphotochemical quenching – NPQ). மீண்டும் சூரிய ஒளி குறைந்த தக்கச் சூழலை எதிர்கொள்ளும்பொழுது ஒளிச்சேர்க்கையைத் துவக்கி சூரிய சக்தியை கார்போஹைட்ரேட்களாக மாற்றி செடிகளில் சேமித்துக் கொள்கின்றன.
இவ்வாறு மாறுபடும் சூரியஒளியை எதிர்கொள்ளும் சூழலில் வெப்பத்தை வெளியேற்றும் செயலில் இருந்து ஒளிச்சேர்க்கைக்குத் தகவமைத்து மாறும் செயலுக்காக தாவரங்கள் எடுத்துக் கொள்ளும் நேரத்தைக் குறைப்பதில் தாவரவியல் ஆய்வாளர்கள் இப்பொழுது மாறுதலைக் கொண்டு வந்துள்ளார்கள், இதனால் ஒளிச்சேர்க்கைத் திறன் அதிகரிக்கப்படுகிறது (faster light adaptation improves photosynthetic efficiency) என்றும்; தாவரங்களின் வளர்ச்சியும் மூன்று வாரங்களில் 20% (up to a 20% increase in biomass)வரை விரைவுபடுத்தப்படுகிறது என்பதும் மாற்றம் செய்யப்படாத அதேவகை தாவரங்களுடன் ஒப்பிடும்பொழுது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் இல்லினாயிஸ் பல்கலைக்கழக தாவரவியல் ஆய்வாளர் “ஸ்டீஃபன் லாங்” (Stephen Long of University of Illinois in Urbana), கலிபோர்னியா பல்கலைக்கழக மரபணுவியல் ஆய்வாளர் “கிருஷ்ண நியோகி” (Krishna Niyogi of the University of California, Berkeley) மற்றும் இவர்களது ஆய்வுக் குழுவினர்களும் மரபணு மாற்றங்கள் செய்யப்பட்ட புகையிலைச் செடிகளை ‘ஒளிச்சேர்க்கைத்திறன் அதிகரிப்பு’ ஆய்வுக்கு உட்படுத்தியதில் வெற்றி கிட்டியுள்ளது. புகையிலைச் செடிகள் ஆய்வுக்கு ஏற்ற எளிய தாவரம் என்ற அடிப்படையில் ஆய்வாளர்கள் புகையிலையில் மரபணு மாற்றங்களைச் செய்து ஆய்வு செய்துள்ளனர். பின்னர் இந்த மாற்றங்களை உலகில் அதிகம் உணவுப் பயிர்களாக வளர்க்கப்படும் அரிசி, சோளம் மற்றும் சோயா பீன்ஸ் ஆகிய பயிர்களில் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது. உணவுப் பயிர்களிலும் இந்த மரபணு மாற்றம் விரைவாக வளரும், விளைச்சலை அதிகரிக்கும் பயிர்களை உருவாக்குமானால் அது வளரும் உலக மக்கள்தொகையின் உணவுத் தேவையை நிறைவு செய்ய உதவும். அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின் திட்டமான வரும் 30 ஆண்டுகளில் 70% வரை உலகின் உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற குறிக்கோளையும் அடைய உதவும்.
இந்த ஆய்வுக்குழுவைப் போன்றே, “சி 4 அரிசி ஆய்வுக் கூட்டமைப்பு”(C4 Rice Consortium)என்ற மற்றொரு ஆய்வுக் குழுவும் அரிசியில் ஒளிச்சேர்க்கையைத் துரிதப்படுத்துவதிலும், குறைந்த அளவு உரம் மற்றும் நீரையும் பயன்படுத்தி விரைவில் அதிக மகசூல் தரும் பயிர்களை உருவாக்கும் ஆய்வில் ஈடுபட்டுள்ளது. இரண்டாம் பசுமைப்புரட்சிக்கான வேளாண் ஆய்வு என்ற கோணம், தாவரங்களின் மரபணு மாற்றங்களின் மூலம் ஒளிச்சேர்க்கைத் திறனை அதிகரித்து, பயிர்களின் வளர்ச்சியை விரைவுபடுத்தும் செயலை குறிக்கோளாகக் கொண்டு நிகழ்த்தப்படுகிறது. பில்கேட்ஸ் அறக்கட்டளை நிறுவனமே இந்த “சி 4 அரிசி ஆய்வுக் கூட்டமைப்பு” ஆய்வுகளுக்கும் நிதியுதவி வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
_______________________________________________
தகவல் பெற்ற தளங்கள்:
[1] Government programmes must succeed for India’s growth: President Pranab Mukherjee -
[2] Improving photosynthesis and crop productivity by accelerating recovery from photoprotection. Johannes Kromdijk and Krishna K. Niyogi et al., Science 18 Nov 2016: Vol. 354, Issue 6314, pp. 857-861. DOI:10.1126/science.aai8878 -
http://science.sciencemag.org/content/354/6314/857
[3] How turning off a plant’s sunshield can grow bigger crops. Erik Stokstad. Nov. 17, 2016 -
http://www.sciencemag.org/news/2016/11/how-turning-plants-sunshield-can-grow-bigger-crops
[4] Super-Fast-Growing GM Plants Could Yield the Next Green Revolution: Scientists have used genetic engineering to make plants that grow 20 percent larger. Antonio Regalado. November 17, 2016, MIT Technology Review magazine -
[5] Supercharged Photosynthesis: Advanced genetic tools could help boost crop yields and feed billions more people; Availability: 10-15 years, Kevin Bullis, MIT Technology Review magazine -
https://www.technologyreview.com/s/535011/supercharged-photosynthesis/
காணொளி:
[1] A Second Green Revolution: Tweaking Photosynthesis Boosts Plant Growth -
https://www.youtube.com/watch?v=d6xpQYaxiRc&feature=youtu.be
[2] The Second Green Revolution, Bayer Crop Science -
https://www.youtube.com/watch?v=7lbjHWoDIRw
படம்:
SCIENCE – American Association for the Advancement of Science, 18 November 2016 -
https://pbs.twimg.com/media/CxfHVr3UUAEAHTw.jpg
_______________________________________________
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°Visit THF pages and blogshttp://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
<font color="#666666" face="verdana, sans-se
அமெரிக்காவில் ஆண்டொன்றுக்கு சுமார் இரண்டு லட்சம் (2,00,000) ஆண்களுக்கு ‘புரோஸ்டேட் சுரப்பி புற்றுநோய்க்கான’ (Prostate cancer/Prostatic carcinoma symptoms) அறிகுறிகள் இருப்பதாக மருத்துவர்கள் கண்டறிகிறார்கள். இங்கிலாந்தில் ஆண்டொன்றுக்கு 46,000 புரோஸ்டேட் சுரப்பி புற்றுநோய் உள்ளவர்கள் கண்டறியப்படுகிறார்கள், அவர்களில் 11,000 பேர் இந்த நோயினால் மரணத்தை எதிர்கொள்கிறார்கள். இனப்பெருக்கத்திற்கு உதவும் வகையில், ஆண்களின் இனப்பெருக்க உறுப்பில், விந்தணுக்களை (sperm) கடத்துவதற்குத் தேவையான ‘விந்துநீரைச்’ (seminal fluid) சுரப்பதில் ஆண்மைச்சுரப்பி என அழைக்கப்படும் புரோஸ்டேட் சுரப்பி (prostate gland) பங்களிக்கிறது.
பொதுவாக புரோஸ்டேட் சுரப்பி புற்றுநோய் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு நோயாளிகள் நிரந்தரமாக எதிர் கொள்வது ஆண்மைக்குறைவு எனப்படும் ஆண்குறியின் விறைப்புத் தன்மை குறைபாட்டினால் (erectile dysfunction) ஏற்படும் செயலிழப்பின் காரணமாக இல்லறவாழ்வு பாதிக்கப்படுவதும்; சிறுநீர்க்கழிப்பதில் (urination) கட்டுப்பாடின்மை (incontinence) என்ற நிலை ஏற்படுவதுமாகும். இரவில் அடிக்கடி சிறுநீர்க்கழிக்கும் தேவையால் உறக்கம் கெடுவது, சிறுநீரகப்பையில் சேகரிக்கப்பட்ட சிறுநீரை முழுமையாக வெளியேற்றப்பட முடியாமல் போதல், கட்டுப்பாடின்றி சிறுநீர் வெளியேறிவிடுதல், சிற்சில சமயம் சிறுநீரில் உதிரப்போக்கு, சிறுநீர் கழிக்கும் பொழுது வலி எனப் பல தொல்லைகளை அறுவை சிகிச்சையின் பக்க விளைவாக நோயாளிகள் எதிர் கொள்வார்கள்.
மருத்துவம் என்பது பலனையும் பக்கவிளைவுகளையும் கருத்தில் கொண்டு, நோயாளிக்கு ஏற்படும் பாதிப்பை இயன்றவரைக் குறைக்கும் நோக்கில், ஒவ்வொரு நோயாளிக்கும் ஏற்ற வகையில் சிறந்த முடிவைத் தேர்வு செய்து தக்கதொரு சிகிச்சையாக வழங்கப்படுவது. பெரும்பாலோருக்கு புரோஸ்டேட் சுரப்பி புற்றுநோய் மிக மெதுவாகவே உருவாகி முற்றும். எனவே, துவக்க நிலையில் உள்ளவர்களுக்கு பக்கவிளைவுகளினால் ஏற்படும் பாதிப்பினைக் கருத்தில் கொண்டு, அவர்களில் பெரும்பாலோர் சிகிச்சையின்றி கவனிப்பில் மட்டுமே வைக்கப்படுவார்கள். மிக விரைவில் புற்றுநோய் முற்றித் தீவிரமடையும் நோயாளிகளுக்கு மட்டுமே அறுவை சிகிச்சை (surgery), வேதி சிகிச்சை (chemotherapy), கதிர்வீச்சு சிகிச்சை (radiation), இயக்குநீர் சிகிச்சை (hormone therapy) போன்ற அடுத்த நிலை மருத்துவம் வழங்கப்படும்.
அறுவைசிகிச்சையின்றி, எந்தப் பக்கவிளைவுகளும் இன்றி, துவக்கநிலையிலேயே உள்ள ‘புரோஸ்டேட் சுரப்பி புற்றுநோயை’ குணப்படுத்தும் முறை ஒன்றை ஐரோப்பிய மருத்துவக் குழுவினர் அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்தச் சிகிச்சைமுறை புரோஸ்டேட் புற்றுநோயை குணப்படுத்தும் முறையில் மிகவும் நம்பிக்கை தரும் நல்லதொரு மாற்றம் என்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
இப்புதிய சிகிச்சை முறையில் ஆழ்கடலின் இருண்டபகுதியில், சூரிய ஒளியே இல்லாத சூழலில் உயிர்வாழும் நுண்ணுயிர்களான பாக்டீரியாக்களைக் கொண்ட மருந்து (WST11) ஒன்று தயாரிக்கப்பட்டு, மெல்லிய ஊசி ஒன்றின் மூலம் நோயாளியின் இரத்தக்குழாய்களில் செலுத்தப்படுகிறது. ஒளியை எதிர்கொள்ளும் பொழுது, அதனால் தூண்டப்பட்டு வினைபுரியத் துவங்கும் ‘ஒளி உணர்’ (light-sensitive) தன்மையுடையவை இத்தகைய பாக்டீரியாக்கள். ஒளியினைச் சக்தியாக மாற்றும் பொழுது பாக்டீரியாக்கள் மேற்கொள்ளும் வேதிவினைச் செயலும், அதன் விளைவாக உருவாகும் வேதிப்பொருளும் புற்று நோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டவை. ஒளி உணர் பாக்டீரியாக்கள் கொண்ட இந்த ‘WST11′ என அழைக்கப்படும் மருந்து புரோஸ்டேட் சுரப்பி பகுதியை அடைந்த பிறகு மிக மெல்லிய ‘கண்ணாடி இழைகள்’ (optical fibers) நோயாளியின் உடலுக்குள் செலுத்தப்பட்டு, அதன் வழியாகப் புற்றுநோய் தாக்கப்பட்ட புரோஸ்டேட் சுரப்பி திசுக்களின் மீது சிவப்புநிற ‘லேசர் ஒளிக்கதிர்’ (laser light) பாய்ச்சப்படுகிறது. இதனால், பாக்டீரியாக்கள் ஒளியால் தூண்டப்பட்டு செயல்புரியத் துவங்குகிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செல்கள் கொண்ட புரோஸ்டேட் சுரப்பி திசுப்பகுதியில் (tumor tissue) உள்ள புற்றுநோய் செல்கள் மட்டும் பாக்டீரியாக்களால் அழிக்கப்படுகின்றன. நோய் பாதிப்பற்ற செல்களுக்கு பாக்டீரியாக்கள் கொண்ட மருந்தால் எந்த விதமான பாதிப்பும் ஏற்படுவதில்லை.
நீண்ட நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கத் தேவையின்றி, மருத்துவ மையங்களில் வெளிநோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை போலவே சிலமணி நேரங்களில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோயாளியும் ஓரிரு நாட்களில் குணமடைந்து வழக்கமான பணிகளில் ஈடுபடலாம். அறுவை சிகிச்சையின் பக்க விளைவுகளாக எதிர்கொள்ள நேரும் ஆண்மைக்குறைவு, கட்டுப்பாடற்ற சிறுநீர் போக்கு போன்றவையும் சிகிச்சை முடிந்த மூன்று மாதங்களில் மறைந்துவிடுகிறது. குறிப்பாக இரண்டாண்டுகளுக்குப் பிறகு நோயாளிகள் இத்தொல்லைகளை முற்றிலும் எதிர் கொள்வதில்லை. புற்று நோயும் முழுவதும் மறைந்துவிடுகிறது.
பாக்டீரியாக்களைக் கொண்ட ‘WST11′ மருந்தும், ‘வாஸ்குலார்-டார்கெட்டட் ஃபோட்டோ டைனாமிக் தெரப்பி’ அல்லது ‘விடிபி’ (vascular-targeted photodynamic therapy or VTP)என அழைக்கப்படும் இந்த சிகிச்சை முறையையும் உருவாக்கியது ஒரு தனியார் மருத்துவ ஆய்வு நிறுவனம். ‘ஸ்டீபா பயோடெக்’ (STEBA Biotech) என்னும் இந்தத் தனியார் மருத்துவ ஆய்வு நிறுவனம், இஸ்ரேல் மருத்துவ ஆய்வுக் குழு (scientists at the Weizmann Institute of Science in Israel) ஒன்றுடன் இணைந்து இச்சிகிச்சை முறையை உருவாக்கி உள்ளது. ஐரோப்பாவின் 10 நாடுகளின், 47 வெவ்வேறு நகர்களில் இந்த சிகிச்சை முறையை மருத்துவர்கள் ‘பரிசோதனை முறையில்’ (trial-therapy) முதன்முறையாக மேற்கொண்டார்கள். நோயின் வளர்ச்சி குறித்து தீவிர கண்காணிப்பில் இருந்துவரும் துவக்கநிலை புற்றுநோயாளிகள் மட்டுமே, அவர்களிலும் புதிய சிகிச்சை முறைக்கு ஒப்புதல் அளித்த 413 நோயாளிகளுக்கு மட்டுமே இந்த சிகிச்சை அளிக்கப்பட்டது.
இப்புதிய சிகிச்சை சிறந்த பலனளிப்பதால் சுமார் 50% நோயாளிகளுக்கு முற்றிலும் நோய் நீங்கிவிட்டது (half the patients went into remission), 6% மட்டுமே மேற்கொண்டு அறுவை சிகிச்சை நிலையை எட்டினார்கள். எந்தச் சிகிச்சையும் பெறாமல் ‘ஒப்பிடும் பிரிவு’ (control group)கவனிப்பில் இருந்த 13.5% நோயாளிகளுக்கு மட்டுமே நோய் நீங்கியிருந்தது, அத்துடன் இப்பிரிவில் 30% நோயாளிகள் அறுவைச் சிகிச்சை நிலையையும் எட்டியதன் அடிப்படையில் இந்தப் புதிய சிகிச்சை முறை நல்ல பலனளிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அறுவைசிகிச்சை இன்றி இத்தகைய பலன்தரும் சிகிச்சை முறை புரோஸ்டேட் சுரப்பி புற்றுநோய் மருத்துவத்தில் ஒரு ‘மிகப்பெரும் முன்னேற்றம்’ என இந்த சிகிச்சை முறையை முன்னெடுத்துச் செல்லும் லண்டன் பல்கலைக்கழக மருத்துவர் ‘மார்க் எம்பெர்ட்டன்’ (Mark Emberton, a University College London consultant urologist)கூறியுள்ளார். துவக்கநிலை புரோஸ்டேட் புற்றுநோயாளிகளுக்கு நம்பிக்கையளிக்கும் இந்த சிகிச்சை குறித்த ஆய்வின் முடிவு தற்பொழுது வெளியாகியுள்ள ‘லேன்சட் ஆன்காலாஜி’ மருத்துவ இதழில் (Journal Lancet Oncology) வெளியாகியுள்ளது. இப்பொழுது இந்த சிகிச்சை முறை ஐரோப்பிய மருத்துவ ஆலோசனைக் குழுவின்(the European Medicines Agency – EMA) பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்த பிறகு, துவக்கநிலை புரோஸ்டேட் புற்றுநோயாளிகள் பலரும் இச்சிகிச்சையால் பலன் பெறும் வாய்ப்புள்ளது.
பாட்டும் தொகையும் என அறியப்படும் சங்க இலக்கியங்களின் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று கலித்தொகை. பாவகையினால் பெயர் பெற்ற கலித்தொகை ‘கற்றறிந்தார் ஏத்தும் கலி’ என்றும், ‘கல்வி வலார் கண்ட கலி’ என்றும் சிறப்பித்துக் கூறப்படுவது. சங்க இலக்கியங்களில் தொகுக்கப்பட்ட நூல்களில் அனைத்து நூற்றைம்பது பாடல்களும் சிதைவின்றி கிடைப்பதும் இதன் தனிச்சிறப்பு. நச்சினார்க்கினியர் எழுதிய உரையும் கலித்தொகைக்குக் கிடைத்துள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சி. வை. தாமோதரம் பிள்ளை அவர்கள் கி. பி. 1887 ஆம் ஆண்டில் கலித்தொகையை முதன்முதலில் ஏட்டுச் சுவடிகளை ஆய்ந்து நூலாகப் பதிப்பித்தார்.
கடவுள் வாழ்த்து (சிவனை வாழ்த்தும் 1 பாடல்),
பாலைக்கலி (பெருங்கடுங்கோன் எழுதிய 35 பாடல்கள்),
குறிஞ்சிக்கலி (கபிலன் எழுதிய 29 பாடல்கள்),
மருதக்கலி (மருதன் இளநாகன் எழுதிய 35 பாடல்கள்),
முல்லைக்கலி (அருஞ்சோழன் நல்லுருத்திரன் எழுதிய 17 பாடல்கள்),
நெய்தற்கலி (நல்லந்துவன் எழுதிய 33 பாடல்கள்),
ஆகிய பாடல்கள் கலித்தொகையில் இடம் பெற்றுள்ளன. பழந்தமிழ்ப் பாடலொன்று ஒவ்வொரு கலிப்பாடல்கள் தொகுப்பும் யார் யாரால் பாடப்பெற்றது என்று குறிப்பிடுகின்றது. இருப்பினும், பாடல்களின் அமைப்பையும் நடையையும் கொண்டு நெய்தல் பாடிய நல்லந்துவனாரே கடவுள் வாழ்த்து முதற்கொண்டு அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் என்பதும் பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை போன்ற இலக்கிய ஆய்வாளர் சிலரின் கருத்தாகவும் இருக்கிறது[1]. மற்ற புலவர்களின் பெயர்களை அறியத் தரும் பழம்பாடலுக்கும் ஓர் உண்மை அடிப்படையாக இருக்கக்கூடும் என்பதால் பிற புலவர்களையும் அந்தந்த கலிப்பாடல்களின் ஆசிரியராகவே வழங்குவது தமிழறிஞர் மரபு. இப்புலவர்களுள் இருவர் அரசர்கள் என்பது கலித்தொகையின் சிறப்பு. ஐந்திணைகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட கலித்தொகை பாலைத்திணைக்கு முதலிடம் கொடுத்துத் துவங்குகிறது.
முல்லைக்கலி பாடல்கள் பாண்டியனையும், பாண்டியநாட்டின் முல்லை நிலத்தின் சிறப்பையும் கூறும் பாடல்களாக அமைந்திருப்பினும் அது சோழன் நல்லுருத்திரனால் பாடப்பட்டது என்பது வியப்பிற்குரியது. தமிழிலக்கியங்களில் கலித்தொகைப் பாடல்களின் முல்லைக்கலியில் மட்டுமே ஏறுதழுவுதல் குறித்த பாடல்கள் அமைந்துள்ளன என்பது தமிழறிஞர் சிலர் கூற்று[2]. முல்லைக்கலியில் ஏறு தழுவுதல் என்னும் முல்லை நில வழக்கம் பல பாடல்களில் இடம் பெறக் காணலாம். ஆயர்மகள் தனது துணைவன் ஏறு தழுவ துணிவு கொண்டவனாக இருக்க வேண்டும் என்றே விரும்புவாள். “கொல்லேற்றுக் கோடு அஞ்சுவானை” மறுபிறப்பில் கூட அவனைக் காதலனாக ஏற்றுக் கொள்ள விரும்பமாட்டாள் ஆயர்மகள் என்பதனைக் கூறும்,
“கொல்லேற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆயமகள்.”
-கலித்தொகை 103; 63-64
என்ற பாடல் வரி மிகவும் புகழ் பெற்றது. பழந்தமிழர்ப் பண்பாடான காதலும் வீரமும் விரவிக் கிடக்கின்றன இப்பாடல்களில்.
முல்லைக்கலியின் 17 பாடல்களில் முதல் ஐந்து பாடல்கள் மட்டுமே (101-105) ஏறு தழுவும் விழா நடத்தப்படும் திடலில் நிகழும் காட்சிகளை விரிவாக விவரிக்கின்றன. மேலும் இரு பாடல்களுள் ஒன்றில் புலத்தில் மேய்ச்சலுக்குச் செல்லும் வழியில் அடங்காத காளைகளை அடக்கும் ஏறுதழுவும் நிகழ்வையும் (106), மற்றொன்று தொழுவத்தில் நுழைந்து விரட்டிய காளையை அடக்கும் ஏறுதழுவும் நிகழ்வையும் (107) காட்சிப்படுத்துகின்றன. இவை விரிவான (80 அடிகள் வரையும் கூட) நீண்ட பாடல்களாகவும் அமைந்து ஏறு தழுவும் ஆயர்மகனையும், அவனது வீரத்தில் மயங்கி மணம் முடிக்கும் ஆயர்மகளையும் குறிக்கின்றன.
இப்பாடல்கள் தரும் காட்சிகளைத் தொகுத்து, கோர்வையாக ஒரேநாளில் நடைபெறும் ஓர் ஏறு தழுவும் விழாவினை விவரிப்பதாக இக்கட்டுரையை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்காட்சிகள் யாவும் முதல் ஐந்து பாடல்களில் இடம்பெறுபவை[3].
முல்லைக்கலி காட்டும் ஏறு தழுவும் விழா:
ஊரில் நிகழவிருக்கும் ஏறு தழுவும் விழா குறித்துப் பறை அறிவிக்கப்படுகின்றது. விழா நாளன்று பிடவம், செங்காந்தள், காயாம்பூ போன்ற பலவகை அழகிய நறுமணமிக்க மலர்களால் தொடுக்கப்பட்ட கண்ணியைச் சூடியவர்களாக, பல மாடுகளின் உரிமையாளர்களாகவும் இருக்கும் ஆயர்குல இளைஞர்கள் போட்டிக்குத் தயாராகக் காத்திருக்கிறார்கள்.
காட்சியாளர்களுக்காக அமைக்கப்பட்ட பரண் ஒன்று ஆயர்குல இளம்பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கின்றது. விழாவை எத்திசையிலும் பார்க்கும் வகையில் உயர்வான பரணாக அமைக்கப்பட்டிருந்த அந்த மேடையில் அமர்ந்திருந்தார்கள் இனிய சொற்களையும், கரிய பெரிய குளிர்ச்சியான கண்களையும், முல்லை மொட்டு போன்ற வெண்ணிற சிறு பற்களையும், காதில் ஒளிரும் மகரக்குழைகளையும், அழகிய அணிகளையும் அணிந்திருந்த மாந்தளிர் நிறம் கொண்ட ஆயர்குல மகளிர். அப்பெண்கள் போட்டியில் கலந்து கொள்ளவிருக்கும் தங்கள் காதலர்கள் வெற்றி பெற வேண்டும் என்றும், ‘கொல்லும் காளையை வென்றவன் இவளது துணைவன்’ என்று தங்களுக்கு ஊரார் மெச்சும்படியான பெருமை கிடைக்க வேண்டும் என்றும் மாயவனை வேண்டுகிறார்கள்.
அவர்களில் அழகி ஒருத்தி ஏறுதழுவும் வீரர்களில் ஒருவனது கவனத்தைக் கவருகிறாள். என் இதயத்தில் நுழைந்து விட்டாள் இந்த இளம்பெண்! தோழிகளுடன் மென்மையான குரலில் சிரித்துப் பேசி விளையாடிக் கொண்டிருக்கும் அந்த அழகி யார் என்று தோழனிடம் கேட்கிறான் தலைவன். பாங்கனும் ஓ, ஓ… அவளைக் குறிப்பிடுகிறாயா? கம்பீரமாக நிற்கும் அந்த முரட்டுக் காளையை அடக்கிப் பிடிப்பவருக்குத்தான் அவளை மணமுடித்துக் கொடுக்கப் போவதாக எல்லோரும் கேட்கும்படி பறை அறிவித்துக் கொண்டிருந்தார்கள். அந்த எருதை அடக்குபவரைத் தவிர வேறு யாரும் அந்தக் கருநிற அழகியை அடைய முடியாது என்கிறான் தோழன். நான் அந்தக் காளையை அடக்குவேன் என்று அவளது குடும்பத்தினரிடம் சென்று சொல்வாயாக என்கிறான் துடிப்புமிக்க அந்த வீரன்.
காலந்தாழ்த்த வேண்டாம், பறை முழங்கட்டும், விழா தொடங்கட்டும், அழகிய ஆயர்குலப் பெண்களை மணக்க விரும்பும் வீரர்கள் காளைகளுடன் மோதட்டும் என ஆணையிடுகிறார்கள் இளம்பெண்களின் உறவினர்கள். இடையர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து உற்சாகம் பொங்கத் தத்தம் காளைகளைத் திடலுக்குள் செலுத்துகிறார்கள்.
பல வகையான பலநிறங்கள் கொண்ட காளைகள் திடலுக்குள் நுழைகின்றன. எந்த ஒரு மாசுமருவுமற்று பாலினைப் போன்ற மிக வெண்மையாக பலதேவன் போன்ற நிறத்தில் ஒரு காளை; கரிய திருமால் போன்ற நிறத்தில் ஒரு காளை; சிவனின் இளம் பழுப்பு நிறத்தில் உயர்ந்த திமிலுடன் ஒரு காளை; முருகனின் கருஞ்சிவப்பு நிறத்தில் ஒரு காளை, இந்திரனின் உடலில் உள்ள ஆயிரம் கண்களைப் போல உடலில் திட்டுகள் பலவற்றைக் கொண்ட ஒரு காளை எனப் பல காளைகள் உயிரை எடுக்கும் எமனைப் போல திடலில் நுழைகின்றன.
இந்த வெண்ணிறக் காளையின் கழுத்தைப் பிடித்து அடக்குபவனுக்கு இந்த முல்லைப்பூ போன்ற கூரிய வெண்பற்களைக் கொண்ட இளம்பெண் மாலையிடுவாள்; கருநிறக் காளையின் சீற்றத்தைக் கண்டு அஞ்சாது அதன் கூரிய கொம்பினைப் பிடித்து அடக்குபவனை அழகிய அணிகளையும் படிய வாரியக் கூந்தலையும் உடைய இந்த அழகி மணந்து கொள்வாள்; ஒளிமிக்க கண்களையுடைய இந்தக் கொல்லேற்றை வெற்றி கொள்பவனை மானைப்போன்ற அழகிய கண்களைக் கொண்ட இந்த ஆயர்குலமகள் மணமுடிப்பாள்; ஆற்றல் மிக்க செங்காளையின் சீற்றத்தை அடக்குபவனுக்கு மூங்கில் போன்ற மென்தோள்களைக் கொண்ட இந்த அழகி வாழ்க்கைத் துணையாவாள் என்று ஏறு தழுவும் விழாவின் இடையர்குல மரபினைப் பின்பற்றி அறிவிப்புகள் கொடுக்கப்படுகிறது. ஆடு, மாடு, எருமை ஆகியவற்றை வளர்க்கும் அனைத்து இடையர்களும் ஏறுதழுவலுக்குத் தயாராகிறார்கள்.
இடி போன்ற ஒலியுடன் பறைகள் முழக்கப்படுகின்றன. நறுமணமிக்க புகை திடலில் எழுப்பப்படுகிறது. அப்புகை காளைகளைச் சீற்றம் அடையச் செய்கிறது. மலைக்குகை ஒன்றில் ஒருசேர இருந்த சினம் கொண்ட சிங்கம் போலவும், மதம் கொண்ட களிறு போலவும், வலிவுடைய குதிரை போலவும், அச்சம் தரும் முதலை போலவும் இருந்த ஏறுகளை மேகம் சூழ்ந்திருப்பது போல அப்புகைமண்டலம் தோற்றம் தருகிறது. தண்ணுமை முழவுகள் இடையறாது முழங்குகின்றன. கடவுளை வணங்கிக் கொண்டு, ஆரவாரத்துடன் வீரர்கள் களம் இறங்குகிறார்கள்.
இறைவனுடைய குந்தாலிப்படைபோல கூர்மையாகச் சீவிவிடப்பட்ட காளைகளின் கொம்புகளை நோக்கி ஆர்ப்பரித்து அரங்கில் பாய்கிறார்கள் ஆயர்குல இளைஞர்கள். இச்செயலைக் கண்ட காளைகள் சீற்றத்துடன் வில்லில் இருந்து பாயும் அம்பு போல வீழ்த்துவதற்காக அவர்களை நோக்கி ஓடுகின்றன. எங்கும் புழுதி கிளம்புகின்றது. வீரர்கள் மார்பினை நிமிர்த்தி அக்காளைகளை எதிர் கொண்டனர். கொம்புகளால் அவர்களைக் குத்துவதற்காக தலையைக் கவிழ்த்து காளைகளும் முன்னேறின. அவர்களில் பலர் எருதுகளின் சீற்றத்தைக் கண்டு கலங்கினர். இக்காட்சியை,
“தகை வகை மிசை மிசைப் பாயியர் ஆர்த்து உடன்
எதிர் எதிர் சென்றார் பலர்
கொலை மலி சிலை செறி செயிர் அயர் சினஞ் சிறந்து
உருத்து எழுந்து ஓடின்று மேல்
எழுந்தது துகள்
ஏற்றனர் மார்பு
கவிழ்ந்தன மருப்பு
கலங்கினர் பலர்”
-கலித்தொகை 102; 17-24
என விவரிக்கிறார் அருஞ்சோழன் நல்லுருத்திரனார்.
பரணில் மேலிருந்து ஆயர்குலப் பெண்கள் ஏறுதழுவுதலைக் காண்கிறார்கள். தோழி போரிடும் வீரர்களை ஒவ்வொருவராகத் தலைவிக்குச் சுட்டிக் காட்டுகிறாள். பாராய் தலைவி, அங்கே ஓர் இளைஞன் காளையின் கொடிய கொலைப் பார்வைக்கு அஞ்சாது அதன் கொம்பின் மீது பாய்கிறான். காளை தனது கொம்பினால் அவனைக் குத்தி, காயம்பட்ட அவனது உடலைத் தலைக்கே மேலே தூக்கிச் சுழற்றுகிறது. அதோ, நெற்றியில் சுழி கொண்ட அந்தக் கறுப்புக் காளை அந்த வீரனைக் குத்தித் தாக்குகிறது. குடலை உருவுகிறது. அவன் உடலில் இருந்து குடல் சரிகிறது. இதோ இந்த இளைஞன் அச்சமின்றி வெள்ளைக் காளையின் மீது பாய்கிறான்.
அங்கே, சிவனின் முடியில் உள்ள பிறை நிலவைப் போன்ற வளைந்த கூரான பெரிய கொம்புகளை உடையக் காளைகள் ஆற்றலுடன் எதிர்க்கின்றன. அவை இளைஞர்களின் உடலைக் குத்தி, அவர்களின் குடலை உருவி தங்கள் கொம்புகளில் சுற்றிய குடலை ஏந்தியிருக்கும் காட்சியானது கொம்புகளில் சிவந்த மாலையைச் சூட்டியிருப்பது போல உள்ளது. தனது வீரத்தின் மீது பெருமிதம் கொண்ட இளைஞன் ஒருவன் விடாது காளையைப் பின்பற்றி அதன் கொம்பில் உள்ள குடலை உருவி தனது வயிற்றுக்குள் மீண்டும் திணித்துக் கொண்டு வீழ்கிறான்.
காளையால் தாக்கப்பட்டு வீழ்ந்த மற்றொருவன் தனது செருக்கின் காரணமாக விடாது எழுந்து, தனது ஆற்றலையெல்லாம் திரட்டி துணிவுடன் மீண்டும் காளையினைப் பிடிக்க முயல்கிறான். இயலாது மீண்டும் வீழ்கிறான். அவனது முயற்சியைக் கண்ட அந்த பழுப்பு நிறக் காளை அவனைத் தாக்காது விலகிச் செல்கிறது. கொடிய போரில் வெற்றி பெற்ற சிறந்த வீரத்தளபதி ஒருவன் தோல்வியைத் தழுவிய தனது எதிரியை மேலும் தாக்கிக் கொலை செய்யாது பெருந்தன்மையுடன் நடந்து கொள்வது போல விலகுகிறது அந்தக் காளை.
தோழி காட்டிய காட்சிகளைக் கண்டு அஞ்சுகிறாள் தலைவி. அது கண்டு தலைவி கொண்ட அச்சத்தைப் போக்க, உன் காதலன் உனக்காக வருவான், நான் அவனிடம் மதம் கொண்ட யானை போன்ற அந்த மிகப் பெரிய காளையை நீ வெல்வாய் என்றால் வெற்றி தரும் என் தலைவியின் கரம் பற்றலாம் என்று கூறியிருக்கிறேன் என்கிறாள் தோழி. மேலும், ஆயர்கள் குழல் வாசிக்கும் ஒலி கேட்கிறது. இது நல்ல நிமித்தம். உனது காதலன் காளையை அடக்கி வெற்றிமாலையுடன் உனக்காக வருவான், அவனைக் கணவனாக நீ அடைவாய் என்று சமாதானப் படுத்துகிறாள்.
வீரர்களில் ஒருவன் காளையின் திமிலுக்கு அருகில் கழுத்தை இறுகப்பிடித்து அதனை மடக்குகிறான். அவனது பிடி காளைக்கு வேதனை தருகிறது. காளையின் துன்பம் கண்டு அதன் உரிமையாளரான இடையர் கொதித்தெழுகிறார், இளைஞனின் செயல் கண்டு அவன் மீது கண்டு கடுஞ்சினம் கொள்கிறார். இளைஞர்கள் காளைகளின் கொம்புகளைப் பற்றியும், கழுத்தினை நெருக்கியும், திமிலினைத் தழுவியும் அவற்றை அடக்க போராடுகிறார்கள். தங்களை அடக்க முயல்பவர்களைக் காளைகள் கொம்புகளால் தாக்குவதில் குறியாக இருக்கின்றன. செந்நிறக் காளையொன்று தன்னை நெருங்குபவர்களை மீண்டும் மீண்டும் தாக்குகிறது. அதன் கொம்புகளின் மணிகள் தொடர்ந்து ஒலிக்கின்றன. வெள்ளை நிறக் காளையொன்று தனது கழுத்தில் தொங்கும் இளைஞனுடன் பார்வையாளர் பரணின் பக்கம் தாவுகிறது.
மேலும் சில இளைஞர்கள் ஏறுகளை நேருக்குநேர் எதிர் கொண்டு அவற்றின் மீது பாய்கிறார்கள். சிலர் அவற்றின் கொம்புகளின் இடையில் தங்கள் உடலை நுழைக்கிறார்கள். காளைகளின் திமிலைப் பற்றியவண்ணம் படகு சவாரி செய்பவர்கள் போல சவாரி செய்கிறார்கள். காளைகளின் கழுத்தை விடாது மாலை போல தொங்குகிறார்கள். ஆயர்குல மகளிர் கொல்லேறுகளின் திமிலைத் தழுவும் வீரர்களின் போராட்டத்தைக் கண்ணிமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இரு பெரும் அரசர்களுக்கு இடையே நடக்கும் போரின் போர்க்களம் போல திடல் காட்சியளிக்கிறது.
சினம் கொள்ளும் காளையைக் கட்டுப்படுத்த எழுப்பப்படும் புகையால் அவை அடங்காது, மேலும் கொலைவெறி கொண்டு இளைஞர்களைத் துன்புறுத்துகின்றன. அவற்றின் கொம்புகளைப் பிடித்த இளைஞர்கள் சிலர் காயமுறுகிறார்கள். எலும்புகள் முறிகின்றன, குடல்கள் சரிகின்றன, திடல் எங்கும் தசைகள் சிதறுகின்றன. பரணில் இருந்து குதித்த இளைஞன் ஒருவனும் குத்தீட்டி போன்ற கூறிய கொம்புகளை உடைய வெண்ணிறக் காளையொன்றை நோக்கி அச்சமின்றி ஓடுகிறான். அச்சம் கொண்ட பார்வையாளர் சிலர் வீரர்களைத் தடுத்து நிறுத்த முயல்கிறார்கள். ஆனால் காளைகளை அடக்குவதில் உறுதியான உள்ளம் கொண்டு, அவற்றை எதிர்கொள்ளும் இளைஞர்களை அவர்களால் தடுத்து நிறுத்த இயலவில்லை.
புலிகளும் யானைகளும் தங்களுக்குள் மோதியதுபோல காளைகளுடன் மோதிய வீரர்கள் திடலை விட்டு வெளியேறுகிறார்கள். அவர்களது காயாம்பூ மாலையில் இருந்து மலர்கள் திடலெங்கும் சிதறிக் கிடக்கின்றன. போட்டியில் பங்கு பெற்ற காளைகள் மேய்ச்சலுக்குத் திரும்புகின்றன. வெற்றி கொண்ட வீரர்களை அரவணைக்க அவர்களது அழகிய இளம் காதலிகள் ஆர்வத்துடன் ஓடுகிறார்கள்.
“கொல் ஏற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்.
அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லதை
நெஞ்சு இலார் தோய்தற்கு அரிய உயிர் துறந்து
நைவாரா ஆய மகள் தோள்
வளியா அறியா உயிர் காவல் கொண்டு
நளிவாய் மருப்பு அஞ்சும் நெஞ்சினார் தோய்தற்கு
எளியவோ ஆய மகள் தோள்”
-கலித்தொகை 103;63-70
“கொல்லேற்றுக் கோடு அஞ்சுவானை” மறுபிறப்பில் கூட அவனைக் காதலனாக ஏற்றுக் கொள்ள விரும்பமாட்டாள் ஆயர்குலமகள் என்பதை ஆயர்குல ஆண்கள் அறிவார்கள். கொல்லும் காளையின் கொம்புகளுக்கு அஞ்சுபவர்கள் ஆயர்குல மகளிரின் இதயத்தில் இடம்பிடிக்க முடியாது என்றும் அவர்கள் அறிவார்கள். காளைகளை வெல்லாது ஆயர்குல மகளிருடன் இணையமுடியாது என்பதையும் அவர்கள் அறிவார்கள்.
வெற்றி பெற்ற வீரர்களுடன் சோலைகளில் நுழையும் பெண்கள் பாடி, குரவை ஆடி மகிழ்கிறார்கள். தங்களது தெய்வம் மாயோனை போற்றிப் பாடியும், பாண்டிய மன்னனை நீடு வாழ்க என வாழ்த்திப் பாடியும் குரவை ஆடுகிறார்கள். தாளகதியுடன் பாடலும் ஆடலும் தொடர்கிறது. ஒரு ஆயர்குலமகள் தனது தோழியையும் தங்கள் மரபின்படி குரவையாடலில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களை வாழ்த்த வருமாறு அழைக்கிறாள்.
அவளது தோழியோ, செந்நிற நெற்றியைக் கொண்ட பெரிய காளையினை வென்ற விரிந்த பரந்த மார்பினைக் கொண்ட வீரம் மிக்க இளைஞனை நான் பாராட்டிப் பாடுவேன், மக்கள் அதுகுறித்து அலர் பேசினாலும் பொருட்படுத்த மாட்டேன், அவனது வீரம் என்னைக் கவர்ந்தது என்கிறாள். அவளது தோழியோ கறுப்புக் காளையை வென்றவனை அல்லவா உனக்கு மணம் செய்வதாக உன் பெற்றோர்கள் கூறியுள்ளார்கள் என வியக்கிறாள். குரவைபாடி மாயோனை வேண்டி அவர்கள் உனது விருப்பத்தை ஏற்கவேண்டும் என்று வேண்டிக் கொள் என்று கூறுகிறாள்.
முல்லைக்கலி காட்டும் காதலும் திருமணமும்:
முல்லைக்கலி பாடல்கள் அனைத்தும், ‘கொல்லேற்றுக் கோடு அஞ்சுவானை மறுபிறப்பில் கூட அவனைக் காதலனாக ஏற்றுக் கொள்ள விரும்பமாட்டாள் ஆயர்மகள்’ என்றக் கருத்தினைக் காட்டும் பாடல்களாக; அதாவது ஏறுதழுவும் வீரனை விரும்பி மணம் முடிக்கும் காதலாகவும் காட்டப் பெறவில்லை. பின்னர் வரும் பத்து முல்லைக்கலி பாடல்கள் சற்றொப்ப 25 வரிகள் கொண்ட சிறிய பாடல்களாகவும், ஆயர்மகளும் ஆயர்மகனும் சந்திக்கும் நாடகக் காட்சிகள் போலவும், அவர்களுக்கு இடையே நடக்கும் உரையாடல்கள் மூலம் அவர்களது மனக்கிடக்கையை வெளிப்படுத்தும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
பொதுவாக மோர் விற்பதற்காகவோ, கன்று மேய்ப்பதற்காகவோ, தோழியருடன் விளையாடவோச் சென்ற ஆயர்மகளை வழிமறித்து, அவளது அழகைப் புகழ்ந்து, அவள் தந்த காதல் நோயைக் குறிப்பிட்டு, அவளை அடைய விரும்புவதை ஆயர்மகன் கூறுகின்றான். அவனை வழியை விட்டு விலகும்படிக் கூறியோ அல்லது தனது பெற்றோரை அணுகும்படியோ ஆயர்மகள் அறிவுறுத்துகின்றாள். சில பாடல்களில் அவனை எச்சரிப்பது போலவும் கண்டிப்பது போலவும் காட்டிக் கொண்டாலும், தான் தனித்திருக்கும் இடத்தையும் நேரத்தையும் குறிப்பால் உணர்த்தியும் செல்கிறாள். அக்குறிப்பையும் புரிந்து கொள்ளாத அப்பாவியாக இருப்பவனிடம் தனது தோழியை அனுப்பி அவனுக்கு விளக்கி வரவும் ஏற்பாடு செய்கிறாள் முல்லைநிலத்தின் ஆயர்மகள்.
______________________________________________________
[1] பாட்டும் தொகையும் – ஓர் அறிமுகம், டாக்டர். சி. பாலசுப்பிரமணியன், முதற் பதிப்பு 1994, பாரி நிலையம்.
[2] கலித்தொகை: கருத்தும் காட்சியும், முனைவர் துரை. குணசேகரன்2015, வல்லமை
http://www.vallamai.com/?p=64912
[3] கலித்தொகை – மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், பதிப்பாசிரியர்: இ.வை.அனந்தராமையர், 1925 ஆண்டு பதிப்பு, தமிழ் இணையக் கல்விக்கழகம் சேகரிப்பில் உள்ள நூல்.
http://www.tamilvu.org/slet/l1260/l1260pag.jsp?bookid=26&page=617
______________________________________________________
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.