> இணையப் பல்கலை தளத்தில் என்னென்ன பழைய நூல்கள் வேண்டும் என ஓர் இழை
> தொடங்கலாம். 2 (அ) 3 மாதத்துக்கு ஒரு முறை த.இ.ப. அதிகாரிகளுக்கும்,
> தமிழ்ப் பல்கலை விசி, தமிழ் வளர்ச்சித்துறை டைரக்டர், ... அந்த பட்டியலை
> அனுப்பி வைக்கலாம். அதனால், அப் பட்டியலின் சில நூல்களாவது
> தட்டெழுதி யுனிகோடில் தருவர். அது நடக்கும்வரை, பிடிஎப் ஆகவாவது வேண்டும்
> என விண்ணப்பிக்கலாம்.
>
> ------------------
மிக நல்ல யோசனை கணேசன்.
நம்மவர்கள் ஈடுபட்டாலும் இதைச் செய்ய முடியும். எனினும் மானியமுள்ள ஒரு
நிருவனம் செய்தல் எளிது.
நண்பர் நிரஞ்சன் அத்தகைய ஒரு பட்டியலைத் தரலாமே? (மதுரைத் திட்டத்தையும்,
பிற இணைய நூலகங்களை கண்டபின் பட்டியலை வழங்குதல் நலம்).
நா.கண்ணன்