மாணிக்கவாசகர் காலம்

2.018 weergaven
Naar het eerste ongelezen bericht

DEV RAJ

ongelezen,
16 nov 2013, 04:39:3616-11-2013
aan mint...@googlegroups.com
On Saturday, 16 November 2013 11:13:12 UTC+5:30, மிஞ்ஞானி wrote:
சைவசமய வரலாறுபோல் ஒரு சீரான வழியில் ஆழ்வார்கள் வரலாறு இன்னமும் நெறிப்படுத்தப்படவில்லை. 



                                                              மாணிக்கவாசகர் காலம் 


9ம் நூற்றாண்டு:

எனவே கி.பி. 863இல் மாணிக்கவாசகர் சாத்திரங்கள் பல அறிந்த சிவனடியாராக இருந்தார் என்பதையும்,
பின்பு பல ஆண்டுகள் வரகுணனுக்கு மந்திரியாகவும் இருந்தார் என்பதையும் அறிகிறோம்.



மாணிக்கவாசகர் சைவ சமய நாற்குரவர்களுள் ஒருவராவர். முன்னைய மூவரும் தேவாரம் பாடியிருக்க இவர் பாடிய நூல்களாவன: 
திருவாசகமும், திருக்கோவையாருமாகும். இவர் 9 ஆம் நூற்றாண்டில் வரகுண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர். 


                                                                ********************************************************* 




9 -10ம் நூற்றாண்டு:

மாணிக்கவாசகர் இரண்டாம் வரகுணன் காலத்தில் வாழ்ந்தவர் என்று வரலாறு சுட்டுகிறது. முதல் வரகுணன் (768-811) 
குரு சரிதம் கொண்டாடிய பரம வைணவனாவான். அவன் பேரனான இரண்டாம் வரகுணன் (863-911) சிறந்த 
சிவபக்தன் என்பதைப் பாண்டியர் செப்பேடுகளும், மாணிக்கவாசகரின் திருக்கோவை யாரும், பட்டினத்து 
அடிகளின் பாடல்களும், பாண்டிய குலோதயா வடமொழிக் காவியமும் உறுதி செய்கின்றன. மாணிக்கவாசகர் 
"வரகுணனாம் தென்னவன் ஏத்தும் சிற்றம்பலம்" என்றும், "சிற்றம் பலம் புகழும் மயல் ஓங்கு இருங்களியானை 
வரகுணன்" என்றும் நிகழ்காலத்தில் வரகுணனைப் பற்றித் திருக்கோவையாரில் கூறுவது ஆய்வுக்கு அணி கூட்டுகிறது.


                                                            ******************************************************************



மறுப்பு :

 திருக்கோவையார் 327 ஆம் பாடலையும் எடுத்துக்கொண்டு, அவற்றில் வரும் வரகுணன் பெயரைப் பிடித்துத் தொங்கி, 
8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பராந்தகக் கோச்சடையனான வரகுணனோடோ, அன்றி அவன் பேரனான 9 ஆம் நூற்றாண்டு 
(பொ.உ.862) வரகுணனோடோ [இவனும் ஒரு சடைய வர்மனே, மாற வர்மன் அல்லன். இவன் தந்தை சீமாற 
சீவல்லபனே ஒரு மாற வர்மன்.] ஒருசிலர் பொருத்திச் சொல்வார்கள். 

இப்படிச் சொல்லுதற்கு எந்த வரலாற்றாதாரமும் கிடையாது. வரகுணன் என்ற பெயர் மாணிக்க வாசகர் கால ஆய்வில் 
முகன்மையானது தான். ஆனால் எந்தக் காலத்து வரகுணன் என்பதிற்றான் வேறுபாடு. 


                                                                      *********************************************


மாணிக்க வாசகர் காலம் ஒன்பதாம் நூற்றாண்டு என்று அவக்கரமாய்ச் சொல்லப் புகுவோர், மன்னர்களின் வலிமைகள், 
இன்மைகளைப் பார்க்கத் தவறிவிடுகிறார்கள். மாணிக்கவாசகர் காலத்து அரசன், குலைந்துபோன குதிரைப் படையை 
மீண்டும் கட்டமுற்படும் வலிகுறைந்த அரசனாவான். அவன் காலத்துப் சோழன் கூட வலிந்தவன் இல்லை. அப்படி 
இருந்திருந்தால் பாண்டிய முதலமைச்சன் சோழநாட்டின் பெருந்துறைக்குள் சொந்தத் தோட்டத்திற் புகுவது போல்
குதிரை வாங்க நுழைந்திருக்க முடியாது. தேங்காயைப் பிடித்து அமுக்கியது போல சோழன் மாணிக்கவாசகரைச் 
சிறைக்குள் கொண்டு போயிருப்பான். 



                                                                  ***********************************************
             

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் மறைமலை அடிகள் நூல் இரு பாகமாக சைவ
சித்தாந்த நூ ப க பதித்தது 44 வருடங்களுக்கு முன் படித்தது (இப்போது வயது 72)
அவரும் தேவார ஆசிரியர்களுக்கு முற்பட்டவர் என்றே வாதிட்டுச் சொல்கிறார்.

நூ த லோ சு
மயிலை


                                                                 ***************************************

3ம் நூற்றாண்டு:

கி.பி.275-300: மாணிக்கவாசகர் காலம்.


Geetha Sambasivam

ongelezen,
16 nov 2013, 05:01:0116-11-2013
aan மின்தமிழ்
ஓ, இங்கே பதில் வந்திருக்கா?  முன்னாடியே பார்க்கலை.   நன்றி. 


2013/11/16 DEV RAJ <rde...@gmail.com>



                                                              மாணிக்கவாசகர் காலம் 



3ம் நூற்றாண்டு:

கி.பி.275-300: மாணிக்கவாசகர் காலம்.


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

DEV RAJ

ongelezen,
16 nov 2013, 06:45:5616-11-2013
aan mint...@googlegroups.com
                                               திருமூலர் காலம்


வசிட்டர், உபமன்னியு, பதஞ்சலி, வியாக்கிரமர், திருமூலர், முதலியோர் சமகாலத்தவர் என்க.

தசரத இராமருடைய காலம் 6000 B. C. என்றும், அவர் பாண்டி நாட்டுத் தலைநகராகிய கபாடபுரம் சென்ற காலத்து, அப்போது 
முடிதாங்கி அரசாண்ட அனந்தகுண பாண்டியன், அவரை உபசரித்ததாகவும் பாண்டிய வமிசாவளியும் சரித்திரமும் பேசுகின்றன.

ஆதலின், திருமூலர் காலம் இற்றைக்கு ஏறக்குறைய 8000 ஆண்டுகள் ஆகின்றன.

திருமூலர் காலம் இராமாயண காலம், அஃதாவது 6000 B. C. என்று கொண்டால், திருமூலர் 
தம் நூலின்கண் கூறிய திரிபுராதிகளும், பொதியமலை அகத்தியரும், சலந்தரனும், தக்கனும், 
அந்தக அசுரனும், மார்க்கண்டேயரும் திருமூலருக்கு முற்பட்டவர்கள் ஆகின்றார்கள்.

வசிட்டர் - வியாக்கிரமர் - மன்று தொழுத பதஞ்சலி - உபமன்னியு - கோதமர் - சதாநந்தர் - இராவணன் - 
பஞ்சவடி அகத்தியர் தசரத இராமர், சனகர் முதலியவர்கள் சம காலத்தவர்கள் ஆகின்றார்கள்.



              ---------------------

கி.மு. 200 முனிவர் திருமூலர் காலம். 3047 சைவ ஆகமங்களின் தொகுப்பான திருமந்திரம் எழுதினார்.


             ----------------------
       

திருமூலர் வாழ்ந்த காலம் ஏறக்குறைய கி.பி. 6-ஆம் நூற்றாண்டு என்று கணிக்கப்பட்டுள்ளது. 


            -----------------------


திருமூலர் காலம் 10 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம். 


Nagarajan Vadivel

ongelezen,
16 nov 2013, 07:23:1416-11-2013
aan மின்தமிழ்
கி.மு மற்றும் கி.பி என்று ஏசு கிறித்துவின் காலத்தை ஒட்டி காலத்தை அழைக்கும் முறை மாற்றப்பட்டுவிட்டது. 

CE (Common Era)& BCE (Before Common era)  என்று மாற்றப்பட்டுள்ளது

மேலை நாட்டு வரலாற்றுக் காலத்தை அளவுகோலாக வைத்து இந்திய வரலாற்று நிகழ்வுகளை ஒப்புமை செய்வதில் ஒரு நிச்சயமற்ற நிலை உள்ளது

தமிழகத்தைப் பொருத்தவரையில் சங்க காலத்துக்கும் இந்து சமய மருமலர்ச்சி தோன்றிய ஆதி சங்கரர் காலத்துக்கும் இடையே உள்ள களப்பிரர் காலம் தமிழக வரலாறு தொடர் சங்கிலியாக இயங்க இயலாமல் செய்கிறது எனலாம்

ஆகம நடைமுறைகளும் புராண இதிகாசப் படைப்புகளும் தமிழகத்தில் வேறூன்றியது 11 ஆம் நூற்றாண்டு என்றும் தமிழகத்தில் தொன்று தொட்டு நிலவிய ஆசீவக சமய மரபுகள் தமிழ்ச் சமணமாகவும் தமிழ்ப் பெள்த்தமாகவும் மாற்றம்பெற்றுp pinnar  புதிய இந்து மறுமலர்ச்சியில் வளர்ச்சி குன்றி சில மாற்றங்களுடன் பக்தி மார்க்கமாக மாற்றம்பெற்று சைவ நாயன்மார்களும் ஆழ்வார்களும் திருமூலர் போன்ற சித்தர்களும் ஒரு புதிய மாற்றத்தை உருவாக்கினார்கள் என்று கருத வாய்ப்புள்ளது

பிற்காலத்தில் வேத நம்பிக்கைகள் தமிழகத்தில் சவ்வூடு பரவலாக ஊடுருவிய நிலையில் இறைவனுக்கும் பகதனுக்கும் இருந்த நேரடி உறவு என்ற நிலை மாறி இறைவனுக்கும் பகதனுக்கும் இடையில் ஒரு மந்திரம் ஓத வல்ல அந்தணர் இருக்க வேண்டும் என்ற ஆகம மரபுக்கேற்ப மாற்றம் பெற்ற நிலையில் சைவக் கோவில்க்ளில் தூய தமிழில் பாடப்பட்ட பக்திப்பாடல்களுக்குப் பதிலாக சமஸ்கிரித மொழியில் பூசை முறையும் சமஸ்கிரித வேதத்துக்கு நிகராகத் தமிழில் திராவிட வேதம் என்ற நாலாயிர திவ்வியப் பிரபந்தமும் தொகுக்கப்பட்டு வைணவக் கோவிகளிலும் வழக்கில் இருந்த நிலையில் சங்கத வரலாற்று நிகழ்வுகளை மட்டும் அளவுகோலாக ஆதாரமாகக் கொண்டு தமிழக வரலாற்றை நிறுவும்போது அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொதுக் கருத்து உருவாகாது

இந்திர வணக்கம் திருமால் வணக்கம் சிவ வழிபாடு பிள்ளையார் வழிபாடு என்று தமிழகத்தில் வளர்ந்திருந்த தமிழ்ச் சமய மரபு வடபுலப் புராணப் பரவலுக்குப்பின் பெரும் மாற்றங்களை அடைந்து தமிழர்களின் வழிபாட்டுமுறை பெரிதும் சமஸ்கிரித முறைக்கு மாற்றம் பெற்றது எனலாம்

எனவே திரு மூலர் காலத்தை நிறுவ ராமரைத் துணைக்கழைப்பது சரியான வரலாற்றுத் தகவலை நிறுவ வழிகோலாது.  வடபுலத்தில் இந்திரன் புகழ் மங்கி கிருஷ்ணர் புகழ் ஓங்கியதும் மும்மூர்த்திகள் என்ற கருத்துருப் பெற்றதும் தமிழகத்தை அடையும் முன்னரே தமிழருக்கென்று தனித்துவம் மிக்க வழிபாடுகள் இருந்ததையும் அது பிற்காலத்தில் மாற்றம் பெற்றதையும் அனுமானித்து அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் தமிழக வரலாறு எழுதப்பட வேண்டும்

மிஞ்ஞானி


2013/11/16 DEV RAJ <rde...@gmail.com>

DEV RAJ

ongelezen,
16 nov 2013, 08:06:4616-11-2013
aan mint...@googlegroups.com
On Saturday, 16 November 2013 11:13:12 UTC+5:30, மிஞ்ஞானி wrote:
சைவசமய வரலாறுபோல் ஒரு சீரான வழியில் ஆழ்வார்கள் வரலாறு இன்னமும் நெறிப்படுத்தப்படவில்லை. 


On Saturday, 16 November 2013 17:53:14 UTC+5:30, மிஞ்ஞானி wrote:
எனவே திரு மூலர் காலத்தை நிறுவ ராமரைத் துணைக்கழைப்பது சரியான வரலாற்றுத் தகவலை நிறுவ வழிகோலாது.  


வைணவ வரலாறு போலின்றி, சைவ சமய வரலாறு சீரான வழியில் நெறிப்படுத்தப்பட்டுவிட்டது 
என்று முதலில் சொன்னது நீங்கள்தானே :))

சைவ குரவர், அடியார் குறித்த இத்தனை கால முரண்கள் ஏன் ?
என்ன விடை கூறுகிறீர்கள் ?


தேவ்

Nagarajan Vadivel

ongelezen,
16 nov 2013, 08:16:4716-11-2013
aan மின்தமிழ்

2013/11/16 DEV RAJ <rde...@gmail.com>

சைவ குரவர், அடியார் குறித்த இத்தனை கால முரண்கள் ஏன் ?
என்ன விடை கூறுகிறீர்கள் ?

Inline image 1

​மிஞ்ஞானி​

manikka1.jpg

DEV RAJ

ongelezen,
17 nov 2013, 03:52:2117-11-2013
aan mint...@googlegroups.com
மாணிக்கவாசகர் மட்டுமில்லை.
ஒல்காப்புகழ் தொல்காப்பியர், வான்புகழ் வள்ளுவர்
உள்ளிட்ட பலரும் காலவெளியில் அலைக்கழிக்கப்
பட்டு வருகின்றனர்


தேவ்

நா.ரா.கி.காளைராசன்

ongelezen,
4 apr 2014, 19:35:4804-04-2014
aan mintamil
வணக்கம் ஐயா.

1) புத்தர் கி.மு 563க்கும் கி.மு 483க்கும் இடையில் வாழ்ந்தவர் என்கின்றனர்.
மாணிக்கவாசகர் புத்தரை வாதில் வென்றதாகத் திருவாதவூரார் புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்நூலை http://tamilheritagefoundation.blogspot.in/2013/12/thf-announcement-ebooks-update-01012011.html என்று முகவரியில் காணலாம்.
இதனடிப்படையில் புத்தரும் மாணிக்கவாசகரும் சமகாலத்தவர் என்பது தெளிவு.

2) திருவிளையாடற் புராணம் படலம் 58ல் 
சண்பக பாண்டியனுக்குப் பின் குலேச பாண்டியன் வரை  
1) பிரதாப சூரியன்
2) வங்கிசத் துவசன்
3) இரிபுமருத்தனன்
4) சேரவங்கி சாந்தகன்
5) பாண்டி வங்கி சேசன்
6) வங்கிச்சிரோன்மணி
7) பாண்டீச்சுரன்
8) குலத்துவசன்
9) வங்கிச வீபூடணன்
10)சோம சூடாமணி
11) குல சூடாமணி
12) இராச சூடாமணி
13) பூப சூடாமணி
14)....?
15) குலேசன்
என்ற 15 பாண்டிய மன்னர்கள் வழி வழி வந்து ஆட்சி செய்தனர் என்றும், இவர்களுக்குப் பின்னர் மாணிக்கவாசகரை அமைச்சராகக் கொண்டு அரிமர்த்தன பாண்டியன் ஆட்சி செய்தான் என்றும் குறிப்பு உள்ளது.

படலம் 62இல் அரிமர்த்தன பாண்டியனுக்குப் பின் பல மன்னர்கள் பாண்டிய நாட்டை ஆண்டனர் என்ற குறிப்பு உள்ளது.

இவ்வாறு அரிமர்த்தன பாண்டியனுக்குப் பின்னர் எத்தனையோ மன்னர்களின் ஆட்சி நடைபெற்றுள்ளது.  அதன்பின்னரே கூன்பாண்டியன் (சுந்தர பாண்டியன்) /சோழன் மகள் மங்கையர்க்கரசியாரை மணந்தவன்/ஆட்சி செலுத்தியுள்ளான்.  இவனது காலத்தில்தான் திருஞானசம்பந்தர் சமணர்களை வென்று மன்னனைச் சைவத்திற்கு மாற்றினார்.

புத்தரை வாதில் வென்றவர் மாணிக்கவாசகர்,
சமணரை வாதில் வென்றவர் திருஞானசம்பந்தர்.

மேற்கண்டனவற்றின் அடிப்படையில் திருஞானசம்பந்தரின் காலத்திற்கு முன்பே மாணிக்கவாசகர் வாழ்ந்துள்ளார் என்பதும் தெளிவு.  மாணிக்கவாசகர் காலம் கி.மு 563க்கும் கி.மு 483க்கும் இடைப்பட்ட காலம் என்பதும் தெளிவு.

அன்பன்
கி.காளைராசன்



--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

தேமொழி

ongelezen,
5 apr 2014, 00:00:2705-04-2014
aan mint...@googlegroups.com, kalair...@gmail.com


On Friday, April 4, 2014 4:35:48 PM UTC-7, kalai wrote:
வணக்கம் ஐயா.

1) புத்தர் கி.மு 563க்கும் கி.மு 483க்கும் இடையில் வாழ்ந்தவர் என்கின்றனர்.
மாணிக்கவாசகர் புத்தரை வாதில் வென்றதாகத் திருவாதவூரார் புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்நூலை http://tamilheritagefoundation.blogspot.in/2013/12/thf-announcement-ebooks-update-01012011.html என்று முகவரியில் காணலாம்.
இதனடிப்படையில் புத்தரும் மாணிக்கவாசகரும் சமகாலத்தவர் என்பது தெளிவு.



நம் மின்னூல் சேகரத்தில் இருக்கும் மற்றொரு நூலைப் பார்த்த பொழுது அதைப்பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ள நினைத்தேன் திரு. காளைராசன்  

304. வானியல் மூலம் வரலாறு காண்போம்

வானியல் அடிப்படையில் வரலாற்று நிகழ்வுகளின் நாளைக் கண்டறியும் முயற்சியில் கொடுக்கப்பட்ட கருத்துக்கள் அடங்கிய நூல் இது.










































கீழிருக்கும் படமும் ஒருமுறை குழுமத்தில் நீங்கள்  பகிர்த்து கொண்ட, கோயில் சுவரில் (?) வரையப்பட்டிருந்த வானவியல் ஓவியத்தை நினைவு படுத்தியது...

p. 92 & p.93 




































..... தேமொழி 

N. Kannan

ongelezen,
5 apr 2014, 04:47:0005-04-2014
aan மின்தமிழ்
2014-04-05 12:00 GMT+08:00 தேமொழி <them...@yahoo.com>:

304. வானியல் மூலம் வரலாறு காண்போம்

பல வருடங்களுக்கு முன் ஓம் சக்தி பத்திரிகாலயத்தில் அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள் எனக்குக்கொடுத்தது. லண்டன் ஸ்வாமி நாராயண் கோயிலில் விரிவாக இந்திய வானியல் பற்றிய போஸ்டர்கள் உள்ளன. இவையெல்லாம் சுட்டுவது என்னவெனில் இந்தியப் பெரியோர்கள் ஒன்று கூடி இந்தியப் பஞ்சாங்கம் (காலண்டரை) செந்தரப்படுத்த வேண்டும். இது பெரிய அளவில் அரசு செய்ய வேண்டியது. நம் பஞ்சாங்கத்திற்கு ஒரு மதிப்பு வந்தாலொழிய இந்தக் காலக்கணக்குகளை சமகாலம் ஏற்றுக்கொள்ளாது!

நா.கண்ணன்



 
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

தேமொழி

ongelezen,
5 apr 2014, 05:26:5405-04-2014
aan mint...@googlegroups.com

"பஞ்சாங்கம் (காலண்டரை) செந்தரப்படுத்த வேண்டும்" என்று சொல்வதின் பொருள் புரியவில்லையே ?

standardizing?


இப்பொழுது பல மென்பொருள்கள் வந்துவிட்டனவே, ஆனால் அரசு ஒரு துரும்பையாவது கிள்ளிப்போட்டதா என்பது எனக்குத் தெரியவில்லை.  

PVR Narasimha Rao, software engineer and astrologer - http://www.vedicastrologer.org/personal.htm  என்பவர் 

Jagannatha Hora: Vedic Astrology Software என்ற மென்பொருள் தயாரித்து இணையத்தில் விலையில்லாது வழங்கியுள்ளார்.  அதன் உதவி கொண்டு அக்கால நிகழ்வு ஒன்றின்  வானவியல் குறிப்புகள்  கிடைத்தால்  அது நிகழ்ந்த தினத்தை இன்றைய நாளில் நாம் குறிக்கும் பொது நாட்காட்டிக்கு இணையான நாளைக் கண்டு பிடிக்கலாம்.

It contains accurate ephemeris for 3000 BC-3000 AD and uses an extrapolation for 5400 BC-5400 AD.

..... தேமொழி 

N. Kannan

ongelezen,
5 apr 2014, 05:35:0905-04-2014
aan மின்தமிழ்
2014-04-05 17:26 GMT+08:00 தேமொழி <them...@yahoo.com>:

"பஞ்சாங்கம் (காலண்டரை) செந்தரப்படுத்த வேண்டும்" என்று சொல்வதின் பொருள் புரியவில்லையே ?

standardizing?

இந்தியாவில் பல்வேறுவகையான காலண்டர்கள் பயன்பாட்டில் இருந்துள்ளன. அவைகளை முறைப்படுத்தி ஒரு செம்பதிப்பு கொண்டு வர வேண்டும். 

நீங்கள் சுட்டிய புத்தகத்தில் திரு.இராமதுரை ஆழ்வார்களின் ஜென்ம நட்சத்திரத்தை வைத்து பிறப்பை கிறிஸ்தவ காலண்டர் முறைப்படி தொகுத்தளித்துள்ளார். அதில் சில விஷயங்கள் சரியாகப்பொருந்தும் சில குறிப்புகள் சந்தேகத்தைக் கிளப்பும் (ஆழ்வார்களில் சிலர் புத்தருக்கு முன் என்று சொல்வது போன்று). அவரது கணிதம் வேத கணிதம் என்கிறார். மறுக்கவோ? ஏற்றுக்கொள்ளவோ ஒரு முறையான இந்தியக் காலண்டர் முறைமை வேண்டும். கணிதத்தில் விற்பன்னர்களான இந்தியர்களால் இது முடியாத காரியமன்று. பூமியின் தோற்ற காலத்தை சரியாகச் சொல்லும் இந்தியக் கணித முறை (ஆதாரம் நம் நூலகத்திலுள்ளது ;-) பெரியோர்களின் ஜென்ம காலத்தையும் சரியாகச் சொல்லும் திறனுள்ளதே!

நா.கண்ணன்

N D Logasundaram

ongelezen,
5 apr 2014, 12:04:3505-04-2014
aan mintamil
திரு காளைராஜன் 

சாதாரண அப்பாவி மக்களுக்காகவே எழுதப்பட்ட இம்மாதிரியான தல புராணங்கலெல்லாம் 
வரலாற்றாளர்கள் சான்றாக கொள்வதே இல்லை இவைகள் ஒவ்வொருவர் தன மனம் போனபோக்கில் 
எழுதப்பட்ட  கற்பனைதான்  நிறைந்தது 


புத்தர் எப்போது தமிழகத்திற்கு வந்தார் ??

அல்லது 

மாணிக்க வாசகர் எப்போது வடநாடு சென்றார் ???

பாருங்கள் நீங்கள் சொலவைதைப் பார்த்தால் ஏதோ உளறல்கள் தான் இருக்கும் என்பது உறுதியாகின்றது 

நூ தா லோ சு 

மயிலை 

For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

ongelezen,
5 apr 2014, 17:48:5205-04-2014
aan mint...@googlegroups.com, vall...@googlegroups.com
On Saturday, April 5, 2014 9:04:35 AM UTC-7, selvi...@gmail.com wrote:
திரு காளைராஜன் 

சாதாரண அப்பாவி மக்களுக்காகவே எழுதப்பட்ட இம்மாதிரியான தல புராணங்கலெல்லாம் 
வரலாற்றாளர்கள் சான்றாக கொள்வதே இல்லை இவைகள் ஒவ்வொருவர் தன மனம் போனபோக்கில் 
எழுதப்பட்ட  கற்பனைதான்  நிறைந்தது 


புத்தர் எப்போது தமிழகத்திற்கு வந்தார் ??

அல்லது 

மாணிக்க வாசகர் எப்போது வடநாடு சென்றார் ???

பாருங்கள் நீங்கள் சொலவைதைப் பார்த்தால் ஏதோ உளறல்கள் தான் இருக்கும் என்பது உறுதியாகின்றது 

நூ தா லோ சு 

மயிலை 


நூம்பல் ஐயா,

பக்தர்கள் பரமானந்த நிலையில் பாடுவதும், படிப்பதும் புராணங்கள். அவை உளறல்கள் என்று
வரலாற்று ஆய்வர்கள் சொல்வர், அதைத் தெளிவாக தமிழின் ஷேக்ஸ்பியர் விளக்கியுள்ளார். 
பக்தகோடிகள் உலக வரலாற்றியல் அரங்கில் புராணங்களை ஏற்ற முடியாமல் உள்ளது
உணர்ச்சிப்பாடல்கள் விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டவையாக இல்லை.

20-ஆம் நூற்றாண்டிலே பாரதி, பாரதிதாசன் இன்ன பிற கவிகள் அறிவியல் தமிழில்
சார்த்த முயலலாயினர். இன்னும் இடைக்காலத்திலிருந்து தமிழ் வெளிவர இல்லாமல்
சில நிமிஷங்கள் மண்மாரி பெய்ததா கரிநாளில் என்று தேடிக் கொண்டிருக்கிறது.

நா. கணேசன்
மாணிக்கவாசகர் காலமும், தன் ஞானாசிரியனைத் தரிசித்த மிழலைக்கூற்றத் திருப்பெருந்துறையும்:


முத்தமிழ்த் துறையின் முறை நோக்கிய
உத்தமக் கவிஞருக்கு ஒன்று உணர்ந்தவென்:-
‘பித்தர் சொன்னவும். பேதையர் சொன்னவும். 
பத்தர் சொன்னவும். பன்னப் பெறுபவோ?’ 
 

முத்தமிழ்த்  துறையின்-இயல். இசை. நாடகம் என்று  பகுக்கப்படும்
தமிழ்த்  துறைகளின்; முறை  நோக்கிய-(நூல்களின்)    முறைமைகளை
ஆராய்ந்தறிந்த; உத்தமக் கவிஞர்க்கு-உயர்ந்த புலவர்களுக்கு;  ஒன்று
உணர்த்துவென்
-ஒன்றைத்  தெரிவித்துக்  கொள்கிறேன்   (அது  யாது
எனில்);     பித்தர்    சொன்னவும்-பயித்தியக்காரர்கள்       சொன்ன
சொற்களும்:   பேதையர்    சொன்னவும்-அறிவற்றோர்     சொன்ன
சொற்களும்;  பக்தர்  சொன்னவும்-  பக்தர்கள் சொன்ன  சொற்களும்;
பன்னப்    பெறுபவோ-     ஆராயப்ப்படுவனவோ?      (ஆராயும்
தகுதியற்றவை என்பதாம்)

முன்னைய  பாடல்களில் பொதுமையாகப் பேசிய  கவிச்சக்கரவர்த்தி.
இப்பாடலில்  நேராகத்  தமிழ்த்  துறை முற்றிய புலவர்களை  நோக்கிப்
பேசுகிறார்.  ‘பித்தர்  மனத்தெளிவு  இல்லாதவ ராதலானும்.  பேதையர்
பகுப்பறிவு   இல்லாதவ   ராதலானும்.   பத்தர்   பரவச   ராதலானும்
அவர்களாற்  சொல்லப்பட்டனவற்றில்  குணங்  குற்றம்   நாடப்  புகல்
மணற்   சேற்றிற்  கல்  ஆய்தலாமாதலின்.  பித்து.  பேதமை.   பத்தி
என்னும்  மூன்றனையும்   ஒருங்குடைய  சொல்லினும்   குணங் குற்றம்
நாடல்     உத்தமக்    கவிகட்குத்     தக்க     செயல்     அன்று
என்றாயிற்று”-காஞ்சிபுரம் இராமசாமி நாயுடு அவர்கள்   விளக்கம் இது. 

‘பெறுபவோ’-ஓகாரம்     எதிர்மறைப் பொருளில்  வந்தது;  பன்னத்
தகுதியற்றவை என்பது கருத்து. பின் இரண்டு அடிகள்   பிறிதுமொழிதல்
அணி.

‘அன்பு    எனும் நறவம் மாந்தி. மூங்கையான் பேசலுற்றான்  என்ன
யான்   மொழியலுற்றேன்’  என்ற  கவி  வாக்கு(32)  இங்கு   ஒப்பிட்டு
நோக்கத் தக்கது.’                                          8

நா.ரா.கி.காளைராசன்

ongelezen,
5 apr 2014, 23:39:4805-04-2014
aan mintamil
வணக்கம் ஐயா.

2014-04-05 21:34 GMT+05:30 N D Logasundaram <selvi...@gmail.com>:
சாதாரண அப்பாவி மக்களுக்காகவே எழுதப்பட்ட இம்மாதிரியான தல புராணங்கலெல்லாம் 
வரலாற்றாளர்கள் சான்றாக கொள்வதே இல்லை இவைகள் ஒவ்வொருவர் தன மனம் போனபோக்கில் 
எழுதப்பட்ட  கற்பனைதான்  நிறைந்தது 
எந்தத் தலபுராணத்தில் உள்ள கருத்தை எந்த வரலாற்றாளர் ஏன் மறுத்துள்ளார் என்று விளக்கமாகக் கூற வேண்டுகிறேன்.
நான் படித்துள்ள சில தலபுராணங்களின் அடிப்படையில் எனக்குத் தெரிந்த விளக்கங்களை அளிக்க முற்படுவேன்.
 
புத்தர் எப்போது தமிழகத்திற்கு வந்தார் ??
அல்லது 
மாணிக்க வாசகர் எப்போது வடநாடு சென்றார் ???
பாருங்கள் நீங்கள் சொலவைதைப் பார்த்தால் ஏதோ உளறல்கள் தான் இருக்கும் என்பது உறுதியாகின்றது 
இரண்டு தரப்பிலுமான கருத்துக்களை அறிந்து கொள்ளாமல் புராணத்தைப் படித்துப் பார்க்காமல் எப்படி இவ்வாறு உறுதி செய்ய முடியும்.
திருவாதவூரார் புராணம் - ஒரு தலபுராணம் அல்ல.  
இது மாணிக்கவாசகரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் புராணம்.
இந்தப் புராணத்தை முற்றாகப் படித்துவருகிறேன்.
புத்தரை வாதில் வென்ற படலத்தை  அன்புள்ளம் கொண்டு தாங்களும் ஒருமுறை படித்துப் பார்க்க வேண்டுகிறேன்.

வரலாற்றாளர்களின் கருத்துக்களையும் முற்றாகத் தெரிந்து கொண்டு,
திருவாதவூரார் புராணத்தில் உள்ள புத்தரை வாதில் வென்ற படலத்தையும் முற்றாகப் படித்து அறிந்து கொண்டு
இரண்டு கருத்துக்களையும் சீர்தூக்கி ஆராய்வதே சிறப்பாக அமைந்திடும் ஐயா.

N. Ganesan

ongelezen,
6 apr 2014, 09:30:5106-04-2014
aan mint...@googlegroups.com, kalair...@gmail.com, vall...@googlegroups.com
எல்லாவற்றையும் சீர்தூக்கி ஆராய்ந்திருக்கிறார்கள்: அண்ணாமலை பல்கலையின் தலைசிறந்த
தமிழ்ப் பேராசிரியர்கள் பல காலமாக. 

பல்லவரும், சோழரும் சிங்கள நாட்டுப் புத்தர்களுடன் உறவு கொண்டாடியுள்ளனர் - மணவினை, போர்கள்., ...
பல்லவர்கள் தாம் கிரந்த எழுத்தை சிங்களம் எழுத அளித்தவர்கள். அவர்கள் கலையினால் தான்
சிங்களரின் புத்த சமயக் கலைகள் (சித்திரம், சிற்பம், ...) எழுந்தன. ஈழநாட்டுப் புத்தர், அவர்கள் மன்னனுடன்
மாணிக்கவாசகர் தில்லையில் வாதம் செய்தார் என்கிறது புராணம். அவர் ஈழம் போகவில்லை.  

புத்தர் என்றவுடனே ஆதி புத்தர் என எண்ண வேண்டாம். எண்ணற்ற புத்தர்கள் பிற்காலத்தில் உண்டு.
பார்க்க: மணிமேகலை (அழிக்கப்பட்டது போக நமக்குக் கிடைக்கும் ஒரே புத்த நூல்).

புத்தர் puttar

n. < Buddha. 1. Buddhas, of whom there are several; புத்தப்பதவிபெற்ற பெரியோர்கள். எண்ணில் புத்தர்களும் (மணி. 30, 14). 2. Buddhists; புத்தமதத்தவர். புந்தியில் சமணர் புத்தரென்றிவர்கள் (திவ். பெரியதி. 9, 8, 9).

நா. கணேசன்

Rathinam Chandramohan

ongelezen,
6 apr 2014, 13:45:0406-04-2014
aan mint...@googlegroups.com
If Manickvasagar time is before Sundarar why his name is not in thiruthonder puranam.


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
Dr.R.Chandramohan
Principal
Sree Sevugan Annamalai College,
Devakottai-630 303,
Tamilnadu State,
India

N. Ganesan

ongelezen,
6 apr 2014, 13:47:0806-04-2014
aan mint...@googlegroups.com


On Sunday, April 6, 2014 10:45:04 AM UTC-7, rathinam.chandramohan wrote:
If Manickvasagar time is before Sundarar why his name is not in thiruthonder puranam.



பெரிய கேள்வி. தமிழில் எழுதுங்கள்.

நா.ரா.கி.காளைராசன்

ongelezen,
6 apr 2014, 19:08:4606-04-2014
aan mintamil, vallamai
வணக்கம் ஐயா.

2014-04-06 3:18 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
பக்தர்கள் பரமானந்த நிலையில் பாடுவதும், படிப்பதும் புராணங்கள்.
பரமானந்தத்தைத் தரும் புராணங்களை அந்நிலையிருந்துதானே படிக்க வேண்டும். 

அவை உளறல்கள் என்று
வரலாற்று ஆய்வர்கள் சொல்வர்,
படிக்காமலேயே கருத்துச் சொல்பவர்களைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்.


20-ஆம் நூற்றாண்டிலே பாரதி, பாரதிதாசன் இன்ன பிற கவிகள் அறிவியல் தமிழில்
சார்த்த முயலலாயினர். இன்னும் இடைக்காலத்திலிருந்து தமிழ் வெளிவர இல்லாமல்
சில நிமிஷங்கள் மண்மாரி பெய்ததா கரிநாளில் என்று தேடிக் கொண்டிருக்கிறது.
தமிழர் மட்டுமே இன்றும் கணக்கில் கொண்டுவரும் கரிநாளுக்கான காரணத்தைக் காண வேண்டாமா?

நா.ரா.கி.காளைராசன்

ongelezen,
6 apr 2014, 19:17:2906-04-2014
aan N. Ganesan, mintamil, vallamai
வணக்கம் ஐயா.


2014-04-06 19:00 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

எல்லாவற்றையும் சீர்தூக்கி ஆராய்ந்திருக்கிறார்கள்: அண்ணாமலை பல்கலையின் தலைசிறந்த
தமிழ்ப் பேராசிரியர்கள் பல காலமாக. 
ஐயா,
இந்த ஆய்வு குறித்து அன்புள்ளம் கொண்டு முழுத்தகவல்களையும் கூறி உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவர்களது ஆய்வில் “திருவாதவூரார் புராணம் - புத்தரை வாதில் வென்ற படலம்“ கருத்திற் கொள்ளப்பட்டதா? என்பதே முக்கியம்.

கருத்திற் கொள்ளப்பட்டிருந்தால், அவர்களது முடிவை அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டும்.
அல்லது, புதிதாகக் கிடைத்துள்ள இந்த ஆதாரத்தை நன்கு ஆய்வு செய்து, இதன் அடிப்படையில் மாணிக்கவாசகரின் காலத்தைக் மறுபடியும் கணிக்க வேண்டும்.

தேமொழி

ongelezen,
7 apr 2014, 00:05:3007-04-2014
aan mint...@googlegroups.com, N. Ganesan, vallamai, kalair...@gmail.com


On Sunday, April 6, 2014 4:17:29 PM UTC-7, kalai wrote:

இந்த ஆய்வு குறித்து அன்புள்ளம் கொண்டு முழுத்தகவல்களையும் கூறி உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவர்களது ஆய்வில் “திருவாதவூரார் புராணம் - புத்தரை வாதில் வென்ற படலம்“ கருத்திற் கொள்ளப்பட்டதா? என்பதே முக்கியம்.

கருத்திற் கொள்ளப்பட்டிருந்தால், அவர்களது முடிவை அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டும்.
 

டாக்டர் மா.இராசமாணிக்கனார் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல்
http://www.tamilvu.org/library/nationalized/pdf/53-RASAMANICKAM/KAALAAARAICHI.pdf <<< இந்த நூலில்,  பக்கங்கள் 112- 134 உள்ள தகவல் உங்களுக்கு உதவக்கூடும் நண்பரே.

..... தேமொழி 


Dhivakar

ongelezen,
7 apr 2014, 03:36:5107-04-2014
aan மின்தமிழ், vallamai, Kalairajan Krishnan
அன்புள்ள டாக்டர் காளை!!

http://www.vamsadhara.blogspot.in/2011/09/7.html

திருவள்ளுவர் சமணரா இல்லையா என்பது அடிக்கடி மிந்தமிழில் வரும் அவரோடு மாணிக்கவாசகரின் காலமும் சேர்ந்துகொண்டது போல

மாணிக்கவாசகர் காலம் பற்றி என்னுடைய ஏழு பகுதிகள் கொண்ட கட்டுரையை மேற்கண்ட வலைப்பூவில் சென்று ஒருமுறை பார்க்கவும்..  

N. Ganesan

ongelezen,
7 apr 2014, 08:17:1307-04-2014
aan mint...@googlegroups.com, vallamai


On Monday, April 7, 2014 12:36:51 AM UTC-7, dhivakar wrote:
அன்புள்ள டாக்டர் காளை!!

http://www.vamsadhara.blogspot.in/2011/09/7.html

திருவள்ளுவர் சமணரா இல்லையா என்பது அடிக்கடி மிந்தமிழில் வரும் அவரோடு மாணிக்கவாசகரின் காலமும் சேர்ந்துகொண்டது போல

மாணிக்கவாசகர் காலம் பற்றி என்னுடைய ஏழு பகுதிகள் கொண்ட கட்டுரையை மேற்கண்ட வலைப்பூவில் சென்று ஒருமுறை பார்க்கவும்..  


Dear Dhivakar,

Historians and Tamil experts have determined that Manickavasakar belonged to 9th century. Here is Dr. N. Sethuraman's essay,
look at the data from Pandya Kulodaya. Do you have any other information?

Mizhalai coastal country and its TirupperuntuRai - I looked at the data from Sangam poetry onwards.

N. Ganesan

N. Ganesan

ongelezen,
7 apr 2014, 08:25:4807-04-2014
aan mint...@googlegroups.com, vallamai
On Sunday, April 6, 2014 4:17:29 PM UTC-7, kalai wrote:
17-ஆம் நூற்றாண்டுப் புராணம் ஆகிய திருவாதவூரர் புராணத்தை நன்கு படித்து ஆராய்ந்துதான் எழுதியுள்ளனர்.
யார் யார் எழுதியிருக்கிறார்கள் என்பது இங்கே பார்க்கலாம்.

9-ஆம் நூற்றாண்டுக்கும், 17-ஆம் நூற். கால இடைவெளி அதிகம். எனவே ஈழநாட்டுப் புத்த சமயத்தவரை
வாதுக்கு தில்லையில் சந்திக்காமலும் இருக்கலாம். சம்பந்தர் சமணர் மாடலில்,
மாணிக்கவாசகர் - புத்த சமயிகள் என்று புராணம் பாடியிருக்க வாய்ப்புகள் அதிகம்.
மாணிக்கவாசகர் “அழுது அரன் அடி அடைந்த அன்பர்’. அவர் வாதுகளில் ஈடுபட்டார் என்பது பொருந்துகிறதா?

இப் புராணம் வந்த பிறகு அச்சுத் தொழில் நுட்பம் தமிழுக்கு ஐரோப்பாவில் இருந்து வருகிறது.
அதில் மரக்கட்டை அச்சுடன் இப்புராணம் அச்சாகியுள்ளது. அதில் மாணிக்கவாசகர் புத்தர் பெருமானுடன்
வாதிடுவதாகப் படங்கள் இல்லை. ஈழ நாட்டவர் என்றே படங்கள். எனவே, புத்தர் பெருமான் என்பது
பொருந்தாது. 

நா. கணேசன்

N. Ganesan

ongelezen,
7 apr 2014, 08:52:5707-04-2014
aan mint...@googlegroups.com, kalair...@gmail.com, vall...@googlegroups.com


On Saturday, April 5, 2014 8:39:48 PM UTC-7, kalai wrote:
வணக்கம் ஐயா.

2014-04-05 21:34 GMT+05:30 N D Logasundaram <selvi...@gmail.com>:
சாதாரண அப்பாவி மக்களுக்காகவே எழுதப்பட்ட இம்மாதிரியான தல புராணங்கலெல்லாம் 
வரலாற்றாளர்கள் சான்றாக கொள்வதே இல்லை இவைகள் ஒவ்வொருவர் தன மனம் போனபோக்கில் 
எழுதப்பட்ட  கற்பனைதான்  நிறைந்தது 
எந்தத் தலபுராணத்தில் உள்ள கருத்தை எந்த வரலாற்றாளர் ஏன் மறுத்துள்ளார் என்று விளக்கமாகக் கூற வேண்டுகிறேன்.
நான் படித்துள்ள சில தலபுராணங்களின் அடிப்படையில் எனக்குத் தெரிந்த விளக்கங்களை அளிக்க முற்படுவேன்.
 
புத்தர் எப்போது தமிழகத்திற்கு வந்தார் ??
அல்லது 
மாணிக்க வாசகர் எப்போது வடநாடு சென்றார் ???
பாருங்கள் நீங்கள் சொலவைதைப் பார்த்தால் ஏதோ உளறல்கள் தான் இருக்கும் என்பது உறுதியாகின்றது 
இரண்டு தரப்பிலுமான கருத்துக்களை அறிந்து கொள்ளாமல் புராணத்தைப் படித்துப் பார்க்காமல் எப்படி இவ்வாறு உறுதி செய்ய முடியும்.
திருவாதவூரார் புராணம் - ஒரு தலபுராணம் அல்ல.  
இது மாணிக்கவாசகரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் புராணம்.
இந்தப் புராணத்தை முற்றாகப் படித்துவருகிறேன்.
புத்தரை வாதில் வென்ற படலத்தை  அன்புள்ளம் கொண்டு தாங்களும் ஒருமுறை படித்துப் பார்க்க வேண்டுகிறேன்.


நீங்கள் படித்துவிட்டீர்களா? நேரம் கிடைக்கிறபோது தட்டெழுத வேண்டுகோள். புத்தர் பெருமானையா இப் 17-ஆம்
நூற்றாண்டு புராணம் சொல்கிறது என்பது வருங்கால ஆய்வர்களுக்கு தெரியவரும். 19-ஆம் நூற்றாண்டு
அச்சு நூல்களில் woodblock prints பார்த்தாலும், 20-ஆம் நூற்றாண்டு வரலாறு, தமிழ் பேராசிரியர்கள் ஆய்வு நூல்களில்
- 9ம் நூற்றாண்டு என நிறுவியது அண்ணமலைப் பல்கலையின் பெரும்பேராசிரியர்கள் தாம் - காண்லாகும்.

------

இப் புராணக் கதை உண்மையில் நிகழ்ந்ததா? என்னும் கேள்விக்கு என் கருத்து:

17-ஆம் நூற்றாண்டுப் புராணம் ஆகிய திருவாதவூரர் புராணத்தை நன்கு படித்து ஆராய்ந்துதான் எழுதியுள்ளனர்.
யார் யார் எழுதியிருக்கிறார்கள் என்பது இங்கே பார்க்கலாம்.

9-ஆம் நூற்றாண்டுக்கும், 17-ஆம் நூற். கால இடைவெளி அதிகம். எனவே ஈழநாட்டுப் புத்த சமயத்தவரை
வாதுக்கு தில்லையில் சந்திக்காமலும் இருக்கலாம். சம்பந்தர் சமணர் மாடலில்,
மாணிக்கவாசகர் - புத்த சமயிகள் என்று புராணம் பாடியிருக்க வாய்ப்புகள் அதிகம்.
மாணிக்கவாசகர் “அழுது அரன் அடி அடைந்த அன்பர்’. அவர் வாதுகளில் ஈடுபட்டார் என்பது பொருந்துகிறதா?
என்று பார்த்தால் ‘இல்லை’ என்பது விடை. சம்பந்தர் (3 வயதில் பாட ஆரம்பித்தார் என்பது
ஹேகியோக்ரபி கதை) போல ஊர் ஊராய் சென்று வாது செய்தவர் அல்லர் மாணிக்கவாசகர்.
அவரது சிவன் பெர்ஸனல் தெய்வம். அழுவதும், அரற்றி அரன் சென்னி சூடுவதும் அவர் வழி.

இப் புராணம் வந்த பிறகு அச்சுத் தொழில் நுட்பம் தமிழுக்கு ஐரோப்பாவில் இருந்து வருகிறது.
அதில் மரக்கட்டை அச்சுடன் இப்புராணம் அச்சாகியுள்ளது. அதில் மாணிக்கவாசகர் புத்தர் பெருமானுடன்
வாதிடுவதாகப் படங்கள் இல்லை. ஈழ நாட்டவர் என்றே படங்கள். எனவே, புத்தர் பெருமான் என்பது
பொருந்தாது. 

நா. கணேசன்

 
வரலாற்றாளர்களின் கருத்துக்களையும் முற்றாகத் தெரிந்து கொண்டு,

Rathinam Chandramohan

ongelezen,
7 apr 2014, 12:37:2707-04-2014
aan mint...@googlegroups.com
In Thiruvadhavur the house were Manivasagar lived is still serving as his monument. The well he used is also present and now a temple is constructed for him. The people believe his time to be around ninth to  eleventh century. Sorry I will try typing shortly


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

ongelezen,
7 apr 2014, 14:41:5507-04-2014
aan mint...@googlegroups.com


On Monday, April 7, 2014 9:37:27 AM UTC-7, rathinam.chandramohan wrote:
In Thiruvadhavur the house were Manivasagar lived is still serving as his monument. The well he used is also present and now a temple is constructed for him. The people believe his time to be around ninth to  eleventh century. Sorry I will try typing shortly

Looking forward to your Tamil. People normally show some place & say this is where a famous person lived, took bath etc., This could be new traditions, after Media folks enter the village. The people may not have read the scholarship, inscriptions from University publications. So, 9-11th century. But there was no VaraguNa Pandya in 10th or 11th century. Pandyas were utterly defeated by Pallava & Chola forces in Varaguna II's times. As he lost out most of the territory that his grandfather won, he started singing Bhajanais along with his minister's enlightenment path. At Chidambaram, Tiruvidamarudur, etc., Manickavasakar himself records Varaguna's bhakti feats at Tiruvidamarudur. But more than that, PaTTinattu aTikaL gives elaborate details of VaraguNa II's bhakti acheivements. P. aDikaL lived in 10th/11th century.

N. Ganesan

N D Logasundaram

ongelezen,
7 apr 2014, 16:21:1307-04-2014
aan mintamil, வல்லமை
அன்புள்ள திரு காளை  ராஜன் மற்றும் நா கணேசன் அவர்களுக்கு,  

திருவாத வூரர் புராணம் என்பதை திருவாதவூர் (தல) புராணம் எனக்கொண்டது ஒர்  மயக்கம் ஆகவேதான்
ஒருவேளை  (கௌதம) புத்தருடன் மாணிக்க வாசகர் வாதிட்டார் என அதனில் உள்ளதாக வைத்துள்ளீர்கள் என 
நினைத்தேன்
புத்தர் எனும் சொல்லிற்கு பதில் பண்பு வழி பௌத் தரை என இருந்திருந்தால் அந்த ஐயம் வந்திருக்காது 

மாணிக்க வாசகர்தான் பௌத்தரோடு வாதிட்டு ஈழத்திலிருந்து வந்த ஒற் மன்னனின் ஒர் ஊமைப்பெண்ணை
திருச் சாழல் பாடி பேசவைத்தார்  என்ற (ஆதாரம் காட்டப்படாத) ஓர்  சான்றினைப் பற்றித்தான் முன்பே கண்டோமே 

((திருவாளர்  திவாகர் அவர்கள் முன்பு தொதொடரக எழுதியபோது கூட என் பழைய குறிப்பின்  நினைவிலிருந்து திருச்சோபுரக் கல்வெட்டொன்று பௌத்தருடன் வாதிட்டதைக் குறிப்பதை நினைவு கூர்ந்திருந்தேன் ஆனால் இதுவரை அந்த கல்வெட்டின் உண்மை மற்றும் விவ ரம்  அறியமுடியவில்லை சோபுரம் = இன்று தியாகவல்லி எனவிளிக்கப்படும் ஓர் ந டுநாட்டு தேவாரத்தலம்  (கடலூருக்கும் சிதம்பரத்திற்கும் நடுவில் கடற்கரையில் அமைந்தது - சோ என்றால் கோட்டை (அரண்) சிவனுடைய பெருமைபேசும் லீலா விநோதங்களில் ஒன்று முப்புரம் எரித்தது அதற்கு இணையாக திருமாலும்  ஓர் 'சோ' வினை அழித்தான் என வைணவ ஐதீகங்கள் பேசும்

மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவி என்ன செவியே
திருமால்சீர் கேளாத செவி என்ன செவியே                சிலம்பு - ஆய்ச்சியர் குரவை ))
 

நா கணேசன் அவர்கள் எழுதியது 
இப் புராணக் கதை உண்மையில் நிகழ்ந்ததா? என்னும் கேள்விக்கு என் கருத்து:

17-ஆம் நூற்றாண்டுப் புராணம் ஆகிய திருவாதவூரர் புராணத்தை நன்கு படித்து ஆராய்ந்துதான் எழுதியுள்ளனர்.
யார் யார் எழுதியிருக்கிறார்கள் என்பது இங்கே பார்க்கலாம்.

இந்தச் சுட்டியில் திருவாதவூரர் புராண த்திற்குள்  எந்த புத்தரை, வாதிட்டதைப் ப ற்றி யும் பேசுவதாகக் காணவில்லையே? 

நூ த லோ சு 
மயிலை  


2014-04-07 18:22 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
--

நா.ரா.கி.காளைராசன்

ongelezen,
8 apr 2014, 11:03:5108-04-2014
aan mintamil, N. Ganesan, vallamai, Jothi Themozhi

வணக்கம்.

2014-04-07 9:35 GMT+05:30 தேமொழி <them...@yahoo.com>:
டாக்டர் மா.இராசமாணிக்கனார் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல்
http://www.tamilvu.org/library/nationalized/pdf/53-RASAMANICKAM/KAALAAARAICHI.pdf <<< இந்த நூலில்,  பக்கங்கள் 112- 134 உள்ள தகவல் உங்களுக்கு உதவக்கூடும் நண்பரே.
..... தேமொழி 

“கால ஆராய்ச்சி“ நன்றாக சான்றுகளுடன் தொகுக்கப் பெற்றுள்ளது.
திருவிளையாடற் புராணமும், திருவாதவூரார் புராணமும் கருத்திற் கொள்ளப்பட்டுள்ளன.
எனவே தாங்கள் எடுத்துக் காட்டியுள்ள இந்நூல் அருமையானதொரு பின்னூட்டம்.  
நல்லதொரு நூலைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றியுடையேன்.


Inline images 1

Inline images 3



Inline images 5


மாணிக்கவாசகரின் காலத்தை,
1) மாணிக்கவாசகர் காலத்தில் மதுரையை ஆண்ட மன்னனது காலத்துடனும்,
2) மாணிக்கவாசகர் புத்தரை வாதில் வென்ற நிகழ்ச்சியுடனும், 
3) மற்றும் ஊமையைப் பேச வைத்த நிகழ்ச்சியுடனும், 
தொடர்பு படுத்திக் கணித்து ஆராய்ந்துள்ளனர்.

இதில் எனது ஐயம்.
 “காலஆராய்ச்சி“ நூலில் தமிழறிஞர்கள் மாணிக்கவாசகரின் காலத்தை வரகுணபாண்டியனின் காலத்தோடு இணைத்துப் பார்க்கின்றனர்.
ஆனால், திருவிளையாடற் புராணத்தில் மாணிக்கவாசகர் அரிமர்த்தன பாண்டியனிடம் மந்திரியாக இருந்தார் என்றே குறிப்பு உள்ளது.

எனவே அரிமர்த்தன பாண்டியன் காலத்தைத் தானே  கணக்கில் கொள்ள வேண்டும்.
இதற்க மாறாக வரகுணபாண்டியன் காலத்தை ஏன் கணக்கில் கொள்கின்றனர்?

அரிமர்த்தன பாண்டியனும் வரகுணபாண்டியனும் ஒருவரா?
ஆம் என்றால் காலஆராய்ச்சி நூலில் கூறப்பட்டுள்ள முடிபு சரியெனக் கொள்ளலாம்.

-------------------------------------------------------------------


Inline images 8

மாணிக்கவாசகர் கொங்கணதேசத்து விகடராஜனைத் ஜயித்து, அவனது மகனுக்குப் பட்டம் சூட்டியதாக உள்ளது.
எனவே, 
கொங்கணதேசம் என்பது எங்குள்ளது?  
அதை ஆண்ட விகடராஜனின் ஆட்சிக்காலம் என்ன?  
என்ற கேள்விகளுக்கு விடைதெரிந்தாலும் அதைக்கொண்டு மாணிக்கவாசகரின் காலத்தைக் கணிக்க ஏதுவாகும்.

Inline images 6

நா.ரா.கி.காளைராசன்

ongelezen,
8 apr 2014, 11:06:5208-04-2014
aan Dhivakar, மின்தமிழ், vallamai
வணக்கம் ஐயா.

2014-04-07 13:06 GMT+05:30 Dhivakar <venkdh...@gmail.com>:

திருவள்ளுவர் சமணரா இல்லையா என்பது அடிக்கடி மிந்தமிழில் வரும் அவரோடு மாணிக்கவாசகரின் காலமும் சேர்ந்துகொண்டது போல

மாணிக்கவாசகர் காலம் பற்றி என்னுடைய ஏழு பகுதிகள் கொண்ட கட்டுரையை மேற்கண்ட வலைப்பூவில் சென்று ஒருமுறை பார்க்கவும்..  
மாணிக்கவாசகர் மூவர்பற்றிக் குறிப்பிடவில்லை.
மூவர் பெருமக்கள் மாணிக்கவாசகர் பற்றிக் குறிப்பிடவில்லை.
இதற்கான காரணம் இன்னதென்று தெரியவில்லை.

பின்னாள் தோன்றியவர் முன்னாள் தோன்றியவரைப் பாடவில்லை.
அல்லது பாடிய பாடல்கள் கிடைக்கவில்லை.
இவைகளே, மாணிக்கவாசகரின் காலத்தைக் கண்டறிவதில் உள்ள சிக்கல்.

தங்களது கட்டுரை சிக்கலில் உள்ள நுணுக்கத்தைத் தெளிவாகக் கூறுகிறது.
நன்றி ஐயா.

நா.ரா.கி.காளைராசன்

ongelezen,
28 apr 2014, 11:05:4028-04-2014
aan mintamil, N. Ganesan, vallamai, Jothi Themozhi
வணக்கம்.

மாணிக்கவாசகரின் காலத்தை,
1) மாணிக்கவாசகர் காலத்தில் மதுரையை ஆண்ட மன்னனது காலத்துடனும்,
2) மாணிக்கவாசகர் புத்தரை வாதில் வென்ற நிகழ்ச்சியுடனும், 
3) மற்றும் ஊமையைப் பேச வைத்த நிகழ்ச்சியுடனும், 
தொடர்பு படுத்திக் கணித்து ஆராய்ந்துள்ளனர்.

இதில் எனது ஐயம்.
 “காலஆராய்ச்சி“ நூலில் தமிழறிஞர்கள் மாணிக்கவாசகரின் காலத்தை வரகுணபாண்டியனின் காலத்தோடு இணைத்துப் பார்க்கின்றனர்.
ஆனால், திருவிளையாடற் புராணத்தில் மாணிக்கவாசகர் அரிமர்த்தன பாண்டியனிடம் மந்திரியாக இருந்தார் என்றே குறிப்பு உள்ளது.

எனவே அரிமர்த்தன பாண்டியன் காலத்தைத் தானே  கணக்கில் கொள்ள வேண்டும்.
இதற்க மாறாக வரகுணபாண்டியன் காலத்தை ஏன் கணக்கில் கொள்கின்றனர்?

அரிமர்த்தன பாண்டியனும் வரகுணபாண்டியனும் ஒருவரா?
அறிந்தோர் கூறி உதவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அன்பன்
கி.காளைராசன்ங

Banukumar Rajendran

ongelezen,
29 mei 2014, 05:10:3729-05-2014
aan மின்தமிழ், vallamai
இழையோடு தொடர்புடையக் கட்டுரை.

http://www.vallamai.com/?p=6304



--

N. Ganesan

ongelezen,
29 mei 2014, 09:42:4829-05-2014
aan mint...@googlegroups.com, vallamai


On Thursday, May 29, 2014 2:10:37 AM UTC-7, இரா.பா wrote:
இழையோடு தொடர்புடையக் கட்டுரை.

http://www.vallamai.com/?p=6304


 
திரு. சு. கோதண்டராமன் ஐயா கட்டுரை வாசிக்க அளித்தமைக்கு நன்றி.

நரி, பரி என்ற வார்த்தைகளின் எதுகைஒற்றுமையால் ஏற்பட்ட நாட்டார்கதை,
நரியைப் பரிசெய்தல், பரியை நரிசெய்தல். மாணிக்கவாசகர் 9-ஆம் நூற்றாண்டில்
வாழ்ந்தபோது இம்மாற்றங்களை அவர் செய்யவில்லை. இறைவன் செய்ததாகப்
பாடி நாட்டார் கதையை விரித்தார். நரி பரி கதைகளை அவர் மீதே ஏற்றி
சில நூற்றாண்டுகள் சென்றபின் புராணம் ஆகியுள்ளது. 

மாணிக்கவாசகர் தன் குருமூர்த்தி - கோகழி ஆண்ட குருமணியை -
தெட்சிணாமூர்த்தி வடிவத்தில் குருந்த மரத்தடியில் சந்தித்த மிழலைக்
கூற்றத்து திருப்பெருந்துறை இன்று திருப்பந்துறை. இதனருகே
உள்ள நாகப்பட்டினத்துக்கு மாணிக்கவாசகர் சென்றார்.

பாண்டியர்கள் சோழப் பேரரசர்களால் வலுவிழந்தபின் நரி, பரி
கதைகள் மாணிக்கவாசகர் மேல் ஏற்றிய புராணத்துக்கு கட்டிய
கோவில் ஆவுடையார்கோவில். அது ஒரு மெமோரியல் -
மாணிக்கவாசகர் புராணக் கதைகளுக்கு. ஆனால், அங்கே
மாணிக்கவாசகர் குருமூர்த்தியைச் சந்திக்கவில்லை. இதனைத்
திருவாசகமும், திருப்புகழும் விரிவாகக் குறிப்பிடுகின்றன.

நா. கணேசன்

N. Ganesan

ongelezen,
29 mei 2014, 09:59:3029-05-2014
aan mint...@googlegroups.com, vallamai

     http://www.vallamai.com/?p=6304

     "நரியைக் குதிரை செய்வானும் நரகரைத்  தேவு செய்வானும்

      விரதங்கொண்டாடவல்லானும்  விச்சின்றி நாறு செய்வானும்

      முரசதிர்ந்தானை  முன்னோட முன்பணிந்தமரர்கள்  ஏத்த

      அரவரைச் சாத்தி நின்றானும் ஆரூரமர்ந்த அம்மானே

      இதில் இறைவன் எல்லாம் வல்லவன்  என்பதற்குச் சான்றாக சில  எடுத்துக்காட்டுகள் தருகிறாரே  தவிர இந்த நிகழ்ச்சி நடந்ததாக அவர் குறிப்பிடவில்லை.

      மறைமலை  அடிகள் கூறுவது போல மணிவாசகர் திருநாவுக்கரசருக்குக் காலத்தால் முந்தியவர் என்பதை ஏற்றுக் கொண்டாலும் பிரச்சினை தீரவில்லை. தன் காலத்திலும் முற்காலத்திலும் இருந்த பல அடியார்களைக் குறிப்பிடும்  அப்பர் பெருமான் .மணிவாசகர் பற்றியோ அவர் பொருட்டு நரி பரியாக்கப்பட்டதையோ குறிப்பிடாதததும் சிக்கலைத் தருகிறது. அப்பர் மட்டுமல்ல பிற தேவார ஆசிரியர்களும் மணிவாசகர் பற்றிக் குறிப்பிடவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

      நரியைப் பரி ஆக்கிய நிகழ்ச்சி ஒன்று  நடந்திருந்தாலும் அது மணிவாசகர்  காலத்தில் அல்ல என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கிறது." ~ சு. கோதண்டராமன் அவர்கள்.

தேவார முதலிகளில் காலத்தால் கடைசியானவர் சுந்தரமூர்த்திநாயனார். அவர் 63 நாயன்மார்கள் என்று திருத்தொண்டத்தொகை பாடினார். நாயன்மார் யார்?யார்? - என முதலில் வரையறுப்பவர் சுந்தரமூர்த்தி நாயனார்தான். அதில் மாணிக்கவாசகர் இல்லை என்பதால், மாணிக்கவாசகர் சுந்தரருக்குக் காலத்தால் பின்னால் பிறந்தவர் என்பது தெளிவு. சுந்தரர் போலவே, ஆதி சங்கரர் 8-ஆம் நூற்றாண்டினர், அவரது இயக்கம் பற்றியும் மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார் 9-ஆம் நூற்றாண்டில் இரண்டாம் வரகுணபாண்டியன் காலத்தில் வாழ்ந்த மாணிக்கவாசகர். அவரது பாடல்களின் பொருளடக்கம், சொல்நடை, யாப்புவிருத்தி எல்லாம் தேவாரத்தில் இல்லை எனக் காட்டியவர் பெரும்புலவர் தி. வே. கோபாலையர் (பிரெஞ்சு நிறுவனம், புதுவை).

நா. கணேசன்

தேமொழி

ongelezen,
30 mei 2014, 00:18:4030-05-2014
aan mint...@googlegroups.com, vall...@googlegroups.com

நரி, பரி என்ற வார்த்தைகளின் எதுகை ஒற்றுமையால் ஏற்பட்ட கதை என்று கூறுவது மிகவும் பொருந்துகிறது.

இன்றுவரை நாம் பாடல்களில் ராஜா வந்தால் தொடர்ந்து ரோஜாவும் வரும் பாடல்களைத்தான் கேட்டு வருகிறோம் என்பதையும் இங்கு ஒப்பு நோக்கலாம்.


..... தேமொழி 




On Thursday, May 29, 2014 6:42:48 AM UTC-7, N. Ganesan wrote:

Suba.T.

ongelezen,
15 jun 2014, 01:15:0015-06-2014
aan மின்தமிழ், Subashini Tremmel
சமூக விஞ்ஞானம் ஏப்ரல்-மே-ஜூன் 2013ம் ஆண்டு இதழில் வெளிவந்த ஒரு கட்டுரை.இந்த இழைக்கு தொடர்புடையதாக இருந்தமையால் பகிர்ந்து கொள்கின்றேன்.

நன்றி.டாக்டர்.பத்மாவதி

சுபா





pg4.jpg
pg1.jpg
pg2.jpg
pg3.jpg

Dev Raj

ongelezen,
15 jun 2014, 03:20:2315-06-2014
aan mint...@googlegroups.com
காமாண்டகீயம் தவறு; ‘காமாந்தகீயம்’ சரியான உச்சரிப்பு.
அது அரசியல் நெறி கூறும் ஒரு நீதி நூல் -

KAmAndakIya NIti sAra or The Elements of Polity




தேவ்

K R A Narasiah

ongelezen,
15 jun 2014, 11:06:1415-06-2014
aan mintamil
Dear Sri Dev 
I sent a separate mail to you. Did you see it?
N


On Sun, Jun 15, 2014 at 12:50 PM, Dev Raj <rde...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (rde...@gmail.com) Add cleanup rule | More info
--

N. Ganesan

ongelezen,
15 jun 2014, 11:45:0215-06-2014
aan mint...@googlegroups.com, vallamai
மோதி  PM மோடி ஆவதுபோல், ஆங்கிலத்திருந்து எழுதுவதால் ஏற்படும் பிழை.
தமிழ் முன்னோர் கொண்ட ராகுல் திராவிடரை, டிவிகளில், பத்த்ரிகைகளில்
டிராவிட் என்கிறார்கள்.

காமாந்தகன் - காமனை அழித்த சிவன் பெயர். காமாந்தகமூர்த்தி சிவவடிவங்களில் ஒன்று.
அம்பாள் (< தமிழின் அம்மாள்) சிவனின் பத்தினி என்பதற்கு
”ஓம் காமாந்தக குடும்பிந்யை நம” எனப்படுகிறாள்.
சோழனை அழித்தவன் பெயரால் சோழாந்தகன் (சோழவந்தான்), மதுரையை அழித்த
மன்னன் பெயரால் மதுராந்தகம் போலக் காமனை அழித்த சிவன் காமந்தகன்.

கலைவடிவில் முதலில் இந்தக் கதை உருவாவது பௌத்தத்தில்.
போதிசூடியாக புத்தர் விளங்கியபோது மாரவேள் கணைகளைத் தொடுத்துத்
தபஸைக் கலைப்பது காட்டப்படும் தவத்தால் மாரன் மறைவதும் காட்டப்படும்.
அணங்கன் என்ற தமிழ்ப்பெயர் அனங்கன் என்றாகி அன்+ அங்கம் என்று
பிரித்து அங்கம் என்பதற்கு உடல் என்ற புதுப்பொருள் உருவாவதை
சம்ஸ்கிருத அறிஞர்கள் பலர் காட்டியிருப்பது தமிழ் மூலக் கருத்துக்கள்
வடமொழியில் புராணக்கதைகளாய் மாற்றப்படுதலுக்கு நல்ல சான்றாகிறது.

நா. கணேசன்
 

தேவ்

Dev Raj

ongelezen,
15 jun 2014, 15:32:0015-06-2014
aan mint...@googlegroups.com
On Sunday, 15 June 2014 08:06:14 UTC-7, naras...@gmail.com wrote:
Dear Sri Dev 
I sent a separate mail to you. Did you see it?

Yes, Sir. 
It was about SundarapANDyam. 
I 've responded

Regards,
dev

K R A Narasiah

ongelezen,
16 jun 2014, 00:36:3816-06-2014
aan mintamil
Can you repeat the mail pl?



On Mon, Jun 16, 2014 at 1:02 AM, Dev Raj <rde...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (rde...@gmail.com) Add cleanup rule | More info

On Sunday, 15 June 2014 08:06:14 UTC-7, naras...@gmail.com wrote:
Dear Sri Dev 
I sent a separate mail to you. Did you see it?

Yes, Sir. 
It was about SundarapANDyam. 
I 've responded

Regards,
dev

--

Dev Raj

ongelezen,
16 jun 2014, 01:01:5716-06-2014
aan mint...@googlegroups.com
On Sunday, 15 June 2014 21:36:38 UTC-7, naras...@gmail.com wrote:
Can you repeat the mail pl?


My 1st Mail-
2014-03-21 18:41 GMT-07:00

2nd Mail - 
2014-03-21 8:06 GMT+05:30 

Latest [11 hrs ago]
2014-06-15 10:14 GMT-07:00 

Pl check again

Regards,
dev 

Dev Raj

ongelezen,
16 jun 2014, 18:33:4616-06-2014
aan mint...@googlegroups.com
பாண்ட்ய குலோதயம் - சரியான வடிவம்

Pāṇḍyakulodaya = Pāṇḍyakulodayaṃ mahākāvyam : 
resurgence of the Pāṇḍya race : a historical mahākāvya

Author:
Maṇḍalakavi  ; Venkateswara Śarma

Publisher:
Hoshiarpur - Vishveshvaranand Vishva Bandhu Institute of Sanskrit and Indological Studies, 
Panjab University, 1981.

Series:
Panjab University indological series, 27.


தேவ்
pANdya kulodayam 2.jpg

Bala Murugan

ongelezen,
6 jan 2016, 12:48:3606-01-2016
aan மின்தமிழ், vall...@googlegroups.com
>>>>>   "நரி, பரி என்ற வார்த்தைகளின் எதுகைஒற்றுமையால் ஏற்பட்ட நாட்டார்கதை,
>>>>>    நரியைப் பரிசெய்தல், பரியை நரிசெய்தல். மாணிக்கவாசகர் 9-ஆம் நூற்றாண்டில்
>>>>>    வாழ்ந்தபோது இம்மாற்றங்களை அவர் செய்யவில்லை. இறைவன் செய்ததாகப்
>>>>>    பாடி நாட்டார் கதையை விரித்தார். நரி பரி கதைகளை அவர் மீதே ஏற்றி
>>>>>    சில நூற்றாண்டுகள் சென்றபின் புராணம் ஆகியுள்ளது. "
மிகவும் தவறான தகவல்களைத் தருகின்றீர்கள்.

திருவாசகத்தில் பல இடங்களில் நரிகளைப் பரிகளாக்கிய நிகழ்வு கூறப்பட்டுள்ளது.  பின் எவ்வாறு நாட்டார் கதை என்று உங்களால் கூற இயலும்.

சான்றுகள்:

திருவாசகம்50.ஆனந்த மாலை
நரியைக் குதிரைப் பரியாக்கி, ஞாலம் எல்லாம் நிகழ்வித்துப்
பெரிய தென்னன் மதுரை எல்லாம் பிச்சது ஏற்றும் பெருந்துறையாய்

திருவாசகம்38.திருவேசறவு
இரும்புதரு மனத்தேனை ஈர்த்து ஈர்த்து என் என்புருக்கிக்
நரிகள் எல்லாம் பெருங்குதிரை ஆக்கியவாறு அன்றே உன் பேரருளே

திருவாசகம்2.கீர்த்தித் திருஅகவல்
அரியொடு பிரமற்க்கு அளவரியொண்ணான் நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும்
இன்னும் பல சான்றுகள் உள.

நேராக திருவாசகத்திலேயே அகச் சான்றுகள் இருக்கும் பொழுது ஏன் தவறான கருத்துக்களைத் தருகின்றீர்கள்?

>>>>>மாணிக்கவாசகர் தன் குருமூர்த்தி - கோகழி ஆண்ட குருமணியை -
>>>>>தெட்சிணாமூர்த்தி வடிவத்தில் குருந்த மரத்தடியில் சந்தித்த மிழலைக்
>>>>>கூற்றத்து திருப்பெருந்துறை இன்று திருப்பந்துறை.

>>>>மாணிக்கவாசகர் குருமூர்த்தியைச் சந்திக்கவில்லை. இதனைத்
>>>>திருவாசகமும், திருப்புகழும் விரிவாகக் குறிப்பிடுகின்றன.

இதுவும் மிகவும் தவறான கருத்து.
சான்றுகள்:
2.திருவாசகம்2.கீர்த்தித் திருஅகவல்
ஏறுடை ஈசன் இப்புவனியை உய்ய கூறுடை மங்கையும் தானும் வந்து அருளிக் குதிரையைக் கொண்டு குடநாடு அதன்மிசை சதுர்படச் சாத்தாய் தான் எழுந்து அருளியும்
(குடதிசை : மேற்குத் திசை; குடநாடு- மேற்குத் திசையில் உள்ள நாடு
திருப்பெருந்துறைக்கு வடக்கு திசையில் உள்ளது மதுரை
.
திருப்பெருந்துறை இறைவன், திருப்பெருந்துறையில் இருந்து மேற்கு திசையில் உள்ள நாடான மதுரைக்கு குதிரைகளோடு வருகின்றார்.)

2.திருவாசகம்2.கீர்த்தித் திருஅகவல்
அழகமர் பாலையுள் சுந்தரத் தன்மையொடு துதைந்து இருந்து அருளியும்

திருவாசகம்38.திருவேசறவு
தென்பாலைத் திருப்பெருந்துறை உறையும் சிவபெருமான்

திருப்பெருந்துறை பாலை நிலமாக இருந்தது.

https://www.google.com/maps/d/viewer?mid=z2qkwPapzunE.kz5daQ7P_h_I&hl=en
பேணுபெருந்துறை வளமான பகுதி

பேணுபெருந்துறை வேறு திருப்பெருந்துறை வேறு.

இறைவர் மணிவாசகரை ஆட்கொண்டது திருப்பெருந்துறை(ஆவுடையார் கோயில்) என்பதில் ஐயம் இல்லை.
பத்தி வலையில் படுவோன் காண்க! சித்தமும் செல்லா சேட்சியன் காண்க!

இன்னும் பல சான்றுகள் திருவாசகத்திலும் திருக்கோவையாரிலும் உள்ளன. பிறகு பதிவு இடுகின்றேன்.
Note:
வாதத்திற்காக நான் இப்பதிவை இடவில்லை. தவறான புரிதல்களை/கருத்துக்களை நீக்க வேண்டும் என்றே பதிவு இடுகின்றேன்.
சிவ. பாலமுருகன்

PenuPeRundhuRai.png

N D Logasundaram

ongelezen,
7 jan 2016, 17:09:2907-01-2016
aan mintamil, vallamai, தமிழ் மன்றம், thamizayam, Maravanpulavu K. Sachithananthan, podhuvan sengai, ara...@gmail.com, Sivakumar M A, Vasudevan Letchumanan, Banukumar Rajendran
அன்புள்ள திரு பால முருகன்

எந்த மடலைப்பற் றி எழுதுகிறீர்கள் எனகே காட்ட வேண்டாமா?
நிற்க
 பெயரில் பால என்றிருந்தாலும் வயதான தமிழ் மகனாகத்தான் வேண்டும் 

மாணிக்க வாசகர் காலம் பற்றி பலமுறை இந்த மடலாடலில்
குழுவில் பேசப்பட்டுள்ளது 

திருவாசக ஆசிரியர் மணிவாசகர் தம் காலம் 9 ஆம் நூற்றாண்டு --- சரி 
அதற்கு 2 நூற்றாண்டுகள் முன் வாழ் ந்தவர்கள் தேவார ஆசிரியர்கள்
ஞானசம்பந்தரும் அப்பரும் (650 CE ) = பாண்டியன் நின்றசீர் நெடுமாறன் காலம் 

சுந்தரர் எனும் (ஏழாம் திருமுறை ) தேவாரம் பாடியவர் 8 ஆம் நூற்றாண்டு 

மணிவாசகருக்கு முன்பே நரி பரி பற்றி அப்பர் தேவாரத்தில் (650 CE )பேசப்பட்டுள்ளது 

                  திருநாவுக்கரசர் திருவாரூர் 4.4.2 திருநேரிசை
"நரியைக் குதிரைசெய் வானும் நரகரைத் தேவுசெய் வானும்
 விரதங்கொண் டாடவல் லானும் விச்சின்றி நாறுசெய் வானும்
 முரசதிர்ந் தானை முன்னோட முன்பணிந் தன்பர்கள் ஏத்த
 அரவரைச் சாத்திநின் றானும் ஆரூ ரமர்ந்தஅம் மானே "
   
மறைமலை அடிகளின் ஆய்வுகருத்து வழி இந்த நரி குதிரை (திருவிளையாடல்) 
காட்டித்தான் மாணிக்க வாசகர் நாவுக்கரசருக்கு முன்பு இருந்தார் என சான்று காட்டுவார்   
ஆனால் மறைமலை அடிகளின் கருத்து மிகப்பலராலும் ஏற்கப்படவில்லை 

மேலும் அடிகளா ர் கா ட்டும்   திருவிசயமங்கை-திருக்குறுந்தொகை
    "குசையும் அங்கையிற் கோசமுங் கொண்டவவ்
     வசையின் மங்கல வாசகர் வாழ்த்தவே
     இசைய மங்கையுந் தானுமொன் றாயினான்
     விசைய மங்கையுள் வேதியன் காண்மினே" 5.71.1
என்பதிலும் வாசகர் என அப்பர் குறிப்பது அந்தணர் போற்றி என இசைத்துப் பா டியது 

அதான்று மாணிக்க வாசகர் திருப்பெருந்துறை என்பது பாண்டி நாட்டுடையதுதான் ஆகும் 
சோழநாட்டில் உள்ளது வேறு ஒரு (பேணு) பெருந்துறை 
கொங்கு நாட்டிலும் ஓர் பெருந்துறை என்பது உள்ளது
இதனைத்தான் மணிவாசகர் குறி த்தா ரோ எனும் ஐயமும் உள்ளது 
காண்க 
"பரமா னந்தம் பழம் கட லதுவே
கருமா முகிலில் தோன்றித்
திருவார் பெருந்துறை வரையில் ஏறித்
திருத்தகு மின்ஒளி திசைதிசை விரிய
ஐம்புலம் பந்தனை வாள்அரவு இரிய 70  திருவண்டப்பகுதி 

ஏறி எனும் வினைச் சொல் உயர (மலை) மேல் ஏறுவதுதான் ஆகும் 

வரை என்றால் மூங்கில் வளரும் மலை குன்று ஆகும் 

கொங்குநாட்டு பெருந்துறை அருகுதான் மலை காணமுடியும்          

மேலும் மணிவாசகர் கோகழி என்று கருநாடகத்தில் உள்ள
தல த்தினைத்தா ன் பலமுறை குறித்துள்ளார்

         கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க                                   3   சிவபுராணம்

         கோகழி  மேவிய கோவே போற்றி                                                157 போற்றித்திருவகவல்

         கொம்பின் மிழற்றுங் குயிலே கோகழி  நாதனைக் கூவாய்        353 குயிற்பத்து

         கொண்டருளுங் கோகழி எங் கோமாற்கு நெஞ்சமே                    628 பண்டாய நான்மறை

         நண்ணிப் பெருந்துறையை நம்மிடர்கள் போயகல
         எண்ணி எழு கோகழி க்கரசை                                                         632 பண்டாய நான்மறை
பழம் வரலாற்றாளர் இந்த கருநாடகக் கோகழி பற்றி அறியார் 
எனவே  "ஆலை  இல்லா  ஊருக்கு இலுப்பைபூ சர்க்கரை " என்பதுபோல் 
திருவாவடு துறை ஏன் திருப்பெருந்துறை தான் கோகழி  என பலர் பலவாறு
மனம்போன போக்கில் = கற்பனையில் பிறந்ததைக் காட்டிச் சென்றுள்ளனர் 

கோகழி எனும் கருநாடக தல த்திலிருந்து 42 கல்வெட்டுகள் படிஎடுக்கப்பட்டுள்ளன 
அவற்றில் 2 கல்வெட்டுகளில் அந்த ஊர்  பாண்டிய நாடு எனும் பிரிவில் உள்ளதாக
(ஆட்சியில் )  உள்ளதாக எழுதப்பட்டுள்ளது 
அதான்று  4 கல்வெட்டுகளில் கோகழி நாடு எனும் தமிழ் சொல்லா ல் குறி க்கப்படுகின்றது 
அவைகளில் சமணக் கோ யில்களும் கட்டப்படுகின்றன 

ஒருகாலத்தில் பாண்டியர் ஆளுகைக்குள் வந்து பின் சிற்ற ரசர்களால் ஆளப்பட்டது போலும் 

( கோகழி 500 ) என்பது பெரியதோர் நாட்டுப்பிரிவின் பெயர்  

Kadamba chief Jagadala-pandya                                           A.R.No.30 of 1904

Kogali-venthe which was a sub-division of pandya-nadu          A.R.No.85 of 1904  

The king's feudatory, Tribhuvanamalla-Vira-pandyadeva
who had the title "lord of Kanchipura" is stated to have
been ruling over Kogali five-hundred                                       A.R.No.113 of 1913

Jagadekamalla-Vira-pandyadeva was governing Nolambavadi A.R.No.530 of 1914

Mahamandalesvara Jagadekamalla-Virapandyadeva,
who was ruling overNonambavadi                                           A.R.No.210 of 1918

Chalukya king Tribhuvanamalladeva and states that his
feudatory Tribhuvanamalla-pandyadeva was ruling over
Nolambavadi                                                                        A.R.No.229 of 1918

Kogali-venthe, a sub-division of pandya-nadu                        A.R.No.318 of 1925

Chalukya king Tribhuvanamalladeva and states that his
feudatory Tribhuvanamalla-pandyadeva was ruling over
Nonambavadi                                                                       A.R.No.229 of 1918

Jagadekamalla-pandyadeva was ruling over Nolambavadi      A.R.No.264 of 1918


குதிரை கொண்டு குடநாடதன் மிசை 
சதுர்பட சாத்தாய்  தானெ ழுந்தருளியும்    கீர்த்தித் திருவகவல் 27 

இதனில் மிசை எனும் சொல்லும் உயரத்தைக்கட்டும் குடநாட தனைத்தான்  குறிக்கின்றார் 
( ஜெயலலிதா குடநாடல்ல) கருநாடகம் தன மேடான பகுதி 

மேலும் அவர் குறித்த பஞ்சப்பள்ளி தமிழக கருநாடக எல்லை மலைமேல் உள்ளது 
                             13 கீர்த்தித் திருவகவல் 
தமிழகத்தில் காணாத (தர்ப்பணம் அதனில்) சாந்தம் புத்தூர் 
                                       நந்தம்படியில் நான் மறையோனா ய் 
                                       சந்திர தீபத்துச் சாத்திரனாகி 
முதலிய தல ங்களை குறி ப்பவரும் இவரே 

மறைமலை அடிகளாரும் மணிவாசகர் கருநா டகத்தைச் சார்ந்த வீரசைவர் என்பார் 

இராஜராஜன் காலத்து (10-11 நூற்றாண்டு ) நம்பியாண்டார் நம்பி தன 
" கோயில் திருப்பண்ணியர் திருவிருத்தத்தில்தான் முதல் முதல்
திருவாதவூர் சிவபா த்தியன் சிற்றம்பலக் கோவையார் பாடியதைக் குறி ப்பார் 

" வருவா சகத்தினில் முற்றுணர்ந் தோனைவண் தில்லைமன்னைத்
 திருவாத வூர்ச்சிவ பாத்தியன் செய்திருச் சிற்றம்பலப்
 பொருளார் தருதிருக் கோவைகண் டேயுமற் றப் பொருளைத்
 தெருளாத உள்ளத் தவர்கவி பாடிச் சிரிப்பிப்பரே". 58



நூ த லோ சு 
மயிலை 

Bala Murugan

ongelezen,
12 jan 2016, 12:51:1812-01-2016
aan மின்தமிழ், vall...@googlegroups.com, tamil...@googlegroups.com, thami...@googlegroups.com, tami...@gmail.com, podh...@gmail.com, ara...@gmail.com, abans...@gmail.com, vas_...@hotmail.com, banuk...@gmail.com

>>>>>எந்த மடலைப்பற் றி எழுதுகிறீர்கள் எனகே காட்ட வேண்டாமா?



>>>>>மாணிக்க வாசகர் காலம் பற்றி பலமுறை இந்த மடலாடலில்
>>>>>குழுவில் பேசப்பட்டுள்ளது

மணிவாசகப் பெருமான் காலம் பற்றி நான் பதிவு இடவில்லை .
 கீழே மேற்கோள் இடப்பட்டுள்ள பதிவில்,

"நரி, பரி என்ற வார்த்தைகளின் எதுகைஒற்றுமையால் ஏற்பட்ட நாட்டார்கதை"
 என்று தவறாக பதிவு இடப்பட்டு உள்ளது. அதற்காகத் தான் இந்தப் பதிவு.


>>>>>>>>>>   "நரி, பரி என்ற வார்த்தைகளின் எதுகைஒற்றுமையால் ஏற்பட்ட நாட்டார்கதை,
>>>>>>>>>>    நரியைப் பரிசெய்தல், பரியை நரிசெய்தல். மாணிக்கவாசகர் 9-ஆம் நூற்றாண்டில்
>>>>>>>>>>    வாழ்ந்தபோது இம்மாற்றங்களை அவர் செய்யவில்லை. இறைவன் செய்ததாகப்
>>>>>>>>>>    பாடி நாட்டார் கதையை விரித்தார். நரி பரி கதைகளை அவர் மீதே ஏற்றி
>>>>>>>>>>    சில நூற்றாண்டுகள் சென்றபின் புராணம் ஆகியுள்ளது. "
>>>>>>>>>> "நரி, பரி என்ற வார்த்தைகளின் எதுகை ஒற்றுமையால் ஏற்பட்ட கதை என்று கூறுவது மிகவும் பொருந்துகிறது

>>>>>>>>>> இன்றுவரை நாம் பாடல்களில் ராஜா வந்தால் தொடர்ந்து ரோஜாவும் வரும் பாடல்களைத்தான் கேட்டு
>>>>>>>>>>வருகிறோம் என்பதையும் இங்கு ஒப்பு நோக்கலாம்."

https://groups.google.com/forum/#!topic/mintamil/AVEcrUSra9E[126-150]
>>>>>>>>>>மாணிக்க வாசகருக்கு பிற்பட்ட காலத்தில் தோன்றிய புராணக் கதைகள்தான்
>>>>>>>>>>அவரை நரி பரி ஆக்கிய  திருவிளையாடல் கதைகளுடன் இணைக்கின்றது
>>>>>>>>>>அவர்தம் பாடலில் இதற்கான நேரடியான அகச்சான்றுகள் ஏதும் இல்லை  என
>>>>>>>>>>எனக்குத் தோன்றுகிறது
>>>>>>>>>>சிவபெருமான் குதிரை மேல் வந்த கோலத்தில் அவர்க்கு அருள் வழங்கின
>>>>>>>>>>பேறுதான் பாடல் வரிகளில் காணப் படுகின்றது
உங்களுக்கு தோன்றியது மிகவும் தவறு. திருவாசகத்தில் அகச்சான்றுகள் நிறைய உள்ளன.
சான்றுகளுக்கு என்னுடைய முந்தைய பதிவைப் பார்க்க.


>>>>>                  திருநாவுக்கரசர் திருவாரூர் 4.4.2 திருநேரிசை
>>>>>"நரியைக் குதிரைசெய் வானும் நரகரைத் தேவுசெய் வானும்
>>>>> விரதங்கொண் டாடவல் லானும் விச்சின்றி நாறுசெய் வானும்
>>>>> முரசதிர்ந் தானை முன்னோட முன்பணிந் தன்பர்கள் ஏத்த
>>>>> அரவரைச் சாத்திநின் றானும் ஆரூ ரமர்ந்தஅம் மானே "  
>>>>>மறைமலை அடிகளின் ஆய்வுகருத்து வழி இந்த நரி குதிரை (திருவிளையாடல்)
>>>>>காட்டித்தான் மாணிக்க வாசகர் நாவுக்கரசருக்கு முன்பு இருந்தார் என சான்று காட்டுவார்  
>>>>>ஆனால் மறைமலை அடிகளின் கருத்து மிகப்பலராலும் ஏற்கப்படவில்லை
இறைவன் நரியைக் குதிரை ஆக்கியது மணிவாசகருக்காக மட்டுமே, வேறு யாருக்காகவும் அல்ல.


>>>>>அதான்று மாணிக்க வாசகர் திருப்பெருந்துறை என்பது பாண்டி நாட்டுடையதுதான் ஆகும்
>>>>>சோழநாட்டில் உள்ளது வேறு ஒரு (பேணு) பெருந்துறை
ஆம் ஐயா.பாண்டி நாட்டுப் பெருந்துறை தான்,அருபரத்து ஒருவன் அவனியில் வந்து அடிகளாரை ஆட்கொண்ட பெருந்துறை.
மேற்கண்ட பதிவில் பேணுபெருந்துறை தான் பெருந்துறை என்று தவறாகக் குறிப்பிடப் பட்டு இருந்தது.
அதற்காகவே பதிவு இட்டேன்.


>>>>>கொங்கு நாட்டிலும் ஓர் பெருந்துறை என்பது உள்ளது
>>>>>இதனைத்தான் மணிவாசகர் குறித்தாரோ எனும் ஐயமும் உள்ளது.காண்க
>>>>>"பரமா னந்தம் பழம் கட லதுவே
>>>>>கருமா முகிலில் தோன்றித்
>>>>>திருவார் பெருந்துறை வரையில் ஏறித்
>>>>>திருத்தகு மின்ஒளி திசைதிசை விரிய
>>>>>ஐம்புலம் பந்தனை வாள்அரவு இரிய 70  திருவண்டப்பகுதி
>>>>>ஏறி எனும் வினைச் சொல் உயர (மலை) மேல் ஏறுவதுதான் ஆகும்
>>>>>வரை என்றால் மூங்கில் வளரும் மலை குன்று ஆகும்
>>>>>கொங்குநாட்டு பெருந்துறை அருகுதான் மலை காணமுடியும்         

கொங்கு நாட்டுப் பெருந்துறை என்பது தவறு ஐயா, இங்கு மலை என்பதை, அடிகளார்*  உவமைப் பொருளில் குறிப்பிடுகின்றார்.
(*அடிகளார் : மணிவாசகப் பெருமான்)

இறைவனின் கருணை:
---------------
பரமானந்தப் பழங்கடல் அதுவே கருமாமுகிலில் தோன்றி : கடலில் இருந்து மேகம் வந்தது.
(எல்லாமான இறைவன்[பரமானந்தப் பழங்கடல்], அடிகளாருக்காக,
 அந்தணராக சிறிய திருமேனி தாங்கி வருகின்றார்[கருமாமுகிலில் தோன்றி])

திருவார் பெருந்துறை வரையில் ஏறித் : அந்த மேகம் 'திருப்பெருந்துறை' என்னும் ஒரு மலையில் ஏறியது
(திருவார் பெருந்துறை வரையில்=பெருந்துறை ஆகிய மலையில்)
[மலை சூழ்ந்த இடம் அல்ல, திருப்பெருந்துறையே மலையாக இருக்கின்றது(உவமைப் பொருளில்)]

திருத்தகு மின்னொளி திசை திசை விரிய : மின்னல் அனைத்துத் திசைகளிலும் அடித்தது.
(இறைவனின் திருமேனிப் பிரகாசம்)

ஐம்புலப் பந்தணை வாள் அரவு இரிய: பாம்பு இறந்தது
(ஐந்து புலன் என்னும் மிகப் பெரிய பாம்பு இறந்தது)

வெந்துயர்க் கோடை மாத் தலை கரப்ப:கொடுமையான கோடைக் காலம் நீங்கியது
(கொடுமையான துன்பம் என்னும் வெப்பம் தனது மிகப் பெரிய தலையை மறைத்தது)

நீடு எழில் தோன்றி வாள் ஒளி மிளிர - அழகான தோன்றிச் செடி மிளிர்கின்றது
(அந்தணரின் வடிவம் மிகவும் அழகான தோன்றிச் செடி போல ஒளி வீசி மிளிர்கின்றது)

எம்தம் பிறவியில் கோபம் மிகுத்து : பூச்சிகள் நிறைய உள்ளன.
(எம்பிறவிகளாகிய தம்பலப்பூச்சிகள் நிறைந்து உள்ளது. தம்பலப்பூச்சிகள்: மழைக் காலத்தில் தோன்றும் பூச்சிகள்)

முரசு எறிந்து, மாப்பெருங்கருணையின் முழங்கி - இடி இடிக்கின்றது
(மாப்பெரும் கருணை என்னும் இடி இடிக்கின்றது.இடியால் பூச்சிகள் இறக்கின்றன.
இறைவன் கருணையால் பிறவியை அழிக்கின்றார்.)

பூப்புரை அஞ்சலி காந்தள் காட்ட - காந்தள் மலர்கின்றது
(இறைவரை வணங்க, காந்தள் மலர் போல கைகள் கூப்புகின்றன)

எஞ்சா இன் அருள் நுண்துளி கொள்ள -மழைத்துளிகள் விழுகின்றது
(இறைவனின் குறையாத இன்னருள், மழைத்துளிகள் போல விழுகின்றது)

 செஞ்சுடர் வெள்ளம் திசை திசை தெவிட்ட -அனைத்துத் திசைகளிலும் வெள்ளம் வருகின்றது
(இறைவனின் கருணை வெள்ளம், அனைத்துத் திசைகளிலும் எங்கும் பரவுகின்றது)

வரையுற கேதக்குட்டம் கையற ஓங்கி- குளத்தை அழித்து, மலை அளவு வெள்ளம் உயர்கின்றது
(துன்பம் என்னும் குளத்தை அழித்து மலை அளவு வெள்ளம் உயர்கின்றது)

உலகியல் மயக்கம்:
------------

இருமுச் சமயத்து ஒரு பேய்த்தேரினை  நீர் நசைதர வரும் நெடுங்கண் மான் கணம்- 
தண்ணீர் தாகத்தால், மான்கூட்டம், கானல் நீரைத் தண்ணீர் என்று நினைத்து வருகின்றது
(வேட்கையால், ஆறு சமயங்கள் என்னும் கானல் நீரைப் பருக உயிர்கள் வருகின்றன.)

தவப் பெருவாயிடைப் பருகி தளர்வொடும் அவப்பெருந்தாபம் நீங்காது அசைந்தன -
கானல் நீரை வாயில் பருகி, தாகம் நீங்காது தளர்கின்றன
(பொய்யில் மயங்கி, உண்மைத் தாகம் நீங்காது, உயிர்கள் தளர்கின்றன)

ஆயிடை வானப் பேரியாற்று அகவயின் பாய்ந்து எழுந்து இன்பப் பெருஞ்சுழி கொழித்துச் சுழித்து -
அப்பொழுது வானத்தில் இருந்து பேராறு பாய்கின்றது
(இறைவனின் கருணை, வானத்தில் இருந்து வரும் பெரிய ஆறாக வருகின்றது.
இன்பம் என்னும் பெரிய சுழலை உருவாக்குகின்றது)

எம் பந்த மாக்கரை பொருது அலைத்து இடித்து- வெள்ளம், மிகப் பெரிய கரைகளை உடைகின்றது
(பந்தம் என்னும் கரைகளை வெள்ளம் மோதி உடைகின்றது)

ஊழ் ஊழ் ஓங்கிய  நங்கள் இருவினை மாமரம்  வேர் பறித்து எழுந்து உருவ-
மிகப் பெரிய இரண்டு மரங்களை வேரோடு பிடுங்குகின்றது
(வெள்ளம், காலம் காலமாக வளர்த்து வந்த, நல்வினை தீவினை என்னும் இரண்டு மரங்களை வேரோடு பிடுங்குகின்றது)

 அருள் நீர் ஓட்டா, அருவரைச் சந்தின் வான்சிறை கட்டி - நல்ல தண்ணீர் பாய்ச்சி அணை கட்டி,
(அருள் என்னும் தண்ணீரைச் செலுத்தி, மிகப் பெரிய மலை போல அணை கட்டி)

மட்டு அவிழ் வெறிமலர் குளவாய் கோலி - தேனுடைய மலர்கள் பூக்கும் குளத்திற்கு வழி அமைத்து
(மலர் போன்ற இதயம் என்னும் குளத்திற்கு, உண்மை என்னும் நீர் பாய வழி அமைத்து)

 நிறை அகில் மாப்புகைக் கரை சேர் வண்டுடைக் குளத்தின் - சிறந்த அகில்புகை சேரும் குளத்தின் கரையில் வண்டுகள் உள்ளன
(உள்ளம் என்னும் குளம், சிறந்து உள்ளது)

 மீக்கொள மேன்மேல் மகிழ்தலின் நோக்கி - வெள்ளமானது மிகுதியாக மேலும் மேலும் நிறைவதைப் பார்த்து,
(அருள் வெள்ளமானது குளத்தில் மிகுதியாக மேலும் மேலும் நிறைவதைப் பார்த்து)

 அருச்சனை வயலுள் அன்பு வித்து இட்டு  - வயலுள் விதை இட்டு
(வழிபாடு என்னும் வயலுள் அன்பு என்னும் வித்தை விதைத்து)

 தொண்ட உழவர்  ஆரத்தந்த -உழவர்கள் விளைவு செய்ய
(அடியார்கள் துணையால் சிவபோகமாகிய விளைவைத் தந்த)

அண்டத்து அரும்பெறல் மேகன் வாழ்க -இந்த விளவைத் தந்த, மிகவும் அரிய பெறுதற்கு அரிய மேகம் வாழ்க
(அனைத்து அண்டங்களிலும் உலகெங்கும் பெறுதற்கு மிகவும் மிகவும் அரிய மேகம் போன்றவன் வாழ்க)

சுருக்கம்:
------
கருணையே வடிவான இறைவன் உயிர் படும் துன்பத்திற்கு இரங்கி, பிறவியை அழித்து, பாழான நிலத்திதை மாற்றி
 பயிர் விளைவிக்கின்றான்



>>>>>குதிரை கொண்டு குடநாடதன் மிசை
>>>>>சதுர்பட சாத்தாய்  தானெ ழுந்தருளியும்    கீர்த்தித் திருவகவல் 27
>>>>>"இதனில் மிசை எனும் சொல்லும் உயரத்தைக்கட்டும் குடநாட தனைத்தான்  குறிக்கின்றார்
>>>>>"( ஜெயலலிதா குடநாடல்ல) கருநாடகம் தன மேடான பகுதி
(குடதிசை : மேற்குத் திசை; குடநாடு- மேற்குத் திசையில் உள்ள நாடு
திருப்பெருந்துறைக்கு மேற்குத்* திசையில் உள்ளது மதுரை.)
(*மன்னிக்கவும் முந்தைய பதிவில் வடக்கு திசை என்று தவறாகப் பதிந்துள்ளேன்.Paste Error)
குடநாடு: குடகு நாடு அல்ல. மேற்குத் திசையில் உள்ள நாடு


>>>>>குதிரை கொண்டு  குடநாடதன் மிசை
அல்ல

"குதிரைரையைக் கொண்டு குடநாடதன் மிசை"


திருப்பெருந்துறை இறைவன், திருப்பெருந்துறையில் இருந்து மேற்கு திசையில் உள்ள நாடான மதுரைக்கு குதிரைகளோடு வருகின்றார்.)

"குதிரைரையைக் கொண்டு "
இறைவன் குதிரையைக் கொண்டு வந்தது மதுரைக்கே . கோகழிக்கு அல்ல

நிற்க நிற்க நிற்க:
காலம் பற்றிய ஆராய்ச்சியை விட, நம் காலத்திற்குள் திருவாசகம், திருச்சிற்றம்பலக் கோவையார் படிக்க முயன்றால் பிறவி நோயில் இருந்து விடுபடலாம்.
"காலம் உண்டாகவே காதல் செய்து உய்ம்மின்"
"எங்கள் பாண்டிப்பிரான் தன் அடியவருக்கு மூலப் பண்டாரம் வழங்குகின்றான்"
" வந்து முந்துமினே"

சித்தமும் செல்லா சேட்சியன் காண்க!!!!! பத்தி வலையில் படுவோன் காண்க!!!!!

வாதத்திற்காக நான் இப்பதிவை இடவில்லை. தவறான புரிதல்களை/கருத்துக்களை நீக்க வேண்டும் என்றே பதிவு இடுகின்றேன்.

சிவ. பாலமுருகன்

N D Logasundaram

ongelezen,
12 jan 2016, 17:32:0812-01-2016
aan mintamil, vallamai, தமிழ் மன்றம், thamizayam, Sivakumar M A, Maravanpulavu K. Sachithananthan, Vasudevan Letchumanan, ara...@gmail.com, Raji M
திரு சிவா பாலமுருகன் 
தங்கள் இவ்வாறு எழுதினீர் 
"குதிரைரையைக் கொண்டு "
இறைவன் குதிரையைக் கொண்டு வந்தது மதுரைக்கே . கோகழிக்கு அல்ல

நான் எங்கு சொன்னேன்  கோகழிக்கு  மாணிக்க வாசகர் குதிரை கொண்டுவந்தாரென்று ?? விளக்கவும் 

கோகழி எனும் தல ம் கருநாடகத்தில் உள்ளது அது அறியா த போதுதான் வ்வொருவரும் ஒருவிதமாக திருப்பெருந்துறை அல்லது திருவா வடுதுறை  என காட்டி சென்றுள்ளனர் என மட்டும்தான் கட்டினேன் 
ஆராய்ச்சியாளர்கள் எல்லாம் தனக்குத் தெரிந்தமட்டும் தா ன்  எழுதமுடியும் என்னையும் உங்களையும்
சேர்த்துத் தான் சொல்கிறேன் 

என்நினைவில் இருந்து எழுதினேன் பாருங்கள் திரு ஹரிகி என்றது  தவறு திவாகர் எனல் வேண்டும் 
மேலும் திருச் சாழல் பாடி ஊமைப்பெண்ணை பேச வைத்தார் என்பதை உந்தீ பற  என எழுதினேன் 
குதிரைக் கொண்டு குடனடதன் மிசை என இரண்டாம் வேற்றுமைய விட்டு விட்டு எழுதினேன் 

எனினும் இவை தவறுகள் தான் பொதுவான காணும் ஆய்வுக்கருத்திற்கு பெரியதும் முரண் தொடர்புடையவை அ ல்ல 
நீங்களும் "குதிரையை க்கொண்டு குடாநா தன் மிசை " என்பதை குறிக்கும் போ து 
திருப்பெருந்துறையே மலையாக இருக்கின்றது(உவமைப் பொருளில்)]என்றீர் 

இந்த வரிகளில் காணும்  உவமை எனும் சொல் உருவகம் என திருதத்தப்படவேண்டும் அல்லவா??
உவமையும் உருவகமும் ஒன்றா ??

மேலும் தாங்கள் 
"மணிவாசகப் பெருமான் காலம் பற்றி நான் பதிவு இடவில்லை" 
இவை உங்கள் மனதில் உள்ளது அய்யா அது
ஆனால் மடல் தலைப்பை பாருங்கள் மாணிக்கவாசகர் காலம் அல்லவா? 
அதனல்தானே நானே மடலினுள் நுழைந்தேன்  

சிவா பாலமுருகன் 

புராணக் கதைகளில் எழுதக் காணும் நிகழ்சிகள் எல்லாம் வரலாற்று நிகழ்சிகள் ஆகாது 

இவற்றிற்கு எல்லாவற்றிக்கும் சான்றுகள் கிடையாது // கிடையவே கிடையாது
இதனைத்தான் என் முத்தைய வைப்புகளில் உளறல்கள் என்கின்றேன் 
 மாணிக்க வாசகரது 
திருவாசகத்தில் இருந்து அகச் சான்று காட்டமுடியுமா ?? கல்வெட்டுகள் கூறுகின்றனவா
 ??இந்த புராணம் தவிர  வேறு நூல்கள்  பேசுகின்றனவா  ??
நா ன் கட்டுகின்றேன் கல்வெட்டுகளில் காணும் கோகழி 500 ஆண்ட தலை களில் ஒருவர் அவைகளில்சைவ குருமார்கள் பாண்டிதர்கள் காட்டப்பட்டுள்ளனர்   குதிரை யாகம் செய்வதில் வல்லவர் என்கின்றதும் காணலாம் 
எத்தனை இடத்தில் குதிரை மீது வந்தார் என வருகின்றதும் அறிவீர் அவர்  வந்தவர் குருவாகஏற்றார் 

நீங்கள் மேலே கட்டிய உருவகம் கூட உங்களைப் போன் ரோருடைய பக்தி பக்கம் சாய் ந்த   கற்பனையில் உதித்ததுதான் வரலாற்றாளர்கள் ஏற்கமுடியாததுதான் அய்யா 

நா ன் இங்கு கட்டுகிறேன் பாருங்கள் முன்பு கட்டியும் உள்ளேன் 

பாண்டியன் மாணிக்க வாசகரை (அமைச்சரும் அல்ல )குதிரை வாங்க  அனுப்பவில்லை அவர் 
கருநாடகத்திலிருந்து வந்தவராகலாம் அல்லது அந்தப் பரம்பரையில் வந்தவரானவரை குதிரை விற்கும்  முகவராக அணுகினான் (AGENT ) எங்கு கருநாடகத்திற்கு ஏனெனில் அங்குதான் குதிரைகள் கிடைக்கும் மேடு பள்ளம் அதிகமாக உள்ள இடங்களில் சாதாரண  சக்கரங்கள் கொண்ட மனித வில ங்கால் ஊரும்  வண்டிகள் (இன்றும்)  பயன்படாது 
என்பதால்  நடையில் செல்லும் குதிரைகளின் எண்ணிக்கை அந்நாளில் அங்குதான் அதிகம் காணமுடியும் வசதி படைத்தவர்கள் வீட்டிற்கு வீடு குதிரைகள் வைத்திருப்பார் இன்றைய பெட்ரோல் கார் கள் போல் நான் ஓசூரில் வேலை பார்த்தபோது என் நண்பர் கிராமத்து வீட்டில் இன்றும் குதிரையை வளர்கின்றார் அங்கெல்லாம் சைக்கிலோ சைக்கிள் ரிக் க்ஷாவோ கிடையாது கேரளத்திலும் அப்படியே 
மே லும் உலகப்போரின் போது முன்பு கா ட்டியது போல் சக்கரங்கள் சிரமம்படும் நாற்கால்  விலங்குகள்தான் எ ளிதெ ன்பதால்ஆங்கில அரசு குதிரைப்பண்ணை யை ஓசூரில் ஏற்படுத்தியது இன்றும் அது உள்ளது அறிவீர் என நினைக்கின்றேன்  ராஜஸ்தான் போன்ற மணற்பரப்பில் செலுத்த உள்நாட்டு ஒட்டகங்கள் இன் ரும் பயன் கொண்டு வருகின்றனர் அல்லவா? தன காலில் நிற்கும் அடிப்படையில் உளநாட்டுப் பொருள்கள் பயன் கொள்ள நினைப்பது அது 

காண்க அகச் சான்று
 "பாண்டியன் தனக்கு பரிமா விற்று ஈண்டுக்கனகம் இசையப்பெறாது  "

குதிரையைக் கொணர்ந்தார் அப்போது விலை கட்டுபடி ஆகாது எனக் சொல்ல   பாண்டியனுடன் மனத்தங்கல்    ஏற்பட்டது இது கதை யின் வேறு ஒரு பக்கம் அனால் இதற்கு அகச் சான்று சொல் உள்ளது காண்கின்றீர் இதுவும் ஓர் உருவகம் என சொல்ல மாட்டீர் அல்லது மாற்றி பொருள்கூற நினைக் க மாட்டீர் எனக்  கொள்கிறேன் 

பாண்டியனுக்க இவர் பரிமா  விற்றார் (அல்லது விற்க வந்தார்)
(பரிக்கிரமா என்றால் அங்கும் இங்கும் போய்வர / சுற்றுவது / உலாவருவது / அதற்குப்பயன்படும் மா பரிமா)) 

மன்னன்  பணத்தை இடையில்   பக்தியில் விழுந்து கோயில்கட்டினார் என்பது தான் புராண ஆசிரியர் கற்பனை  அறிவுடைய அமைச்சன்(அந்த புராணக் கதைப்படி ) என்றால் இப்படி செய்வானா சொல்லுங்கள் 
மேலும் குதிரைகள் நரியாகின பின் மீண்டும் பரியாகின எனபதெல்லாம் கற்பனைகளின் அதீதம் அல்லவா 
மன்னன்  பிரம்பால் அடித்தா ல் எல்லோருக்கும் வலித்தது என்பது அதுவே 
அக்காலத்து மக்களிடை பக்தியை வளர்க்க அப்படி புனைக்  கதை கள் தேவைப்பட்டது இக்காலத்து திரைப்பட கதாநாயகன் இருபது போரையும் தனியாக நின்று சாமளிக்கிறான் அதுபோல்  25 ஆண்டுகள் கழித்து உங்கள் பேரப்பிள்ளைகள் பழைய திரைப்படத்தைப்பார்த்து எங்கள் தாத்த்தா  காலத்தில் பறந்து பறந்து வந்து 20 பேரை வென்றான் என்றால் எப்படி இருக்கும் அப்படித்தான் நி கழ்ச்சி  அந்த ஆசிரியரின் மனப்போக்கு அவ்வளவே காகம் நரி வடை கதை நீ அழகாக இருகிறாய் ஓர் பாட்டுப்பாடு என்ப தெல்லாம் குழந்தைகளுக்கு சொலவது ஓர் கருத்தை விளக்க வந்ததே தவிர வேறில்லை  அத்தோடு நிற்க வேண்டும் இல்லை இல்லை அவைகள் அந்த காலத்தில் ஒன்றுக்கொன்று உமையாக பேசின அல்லது பே சியிருக்கும் என்றால் எப்படிஉளறல் களோ அப்படி அதாவது அறிவிற் குப்பொ ருந்தாதன 

வாதத்திற்காக நான் இப்பதிவை இடவில்லை. தவறான புரிதல்களை/கருத்துக்களை நீக்க வேண்டும் என்றே பதிவு இடுகின்றேன்

சரி அய்யா இப்போது நான் காட்டுவது சரியான புரிதல் களா  இல்லையா?
நீக்குவீர்களா வைத்துக்கொல்வீர்களா ??  
 
நான் எதோ கடவுளை ஏற்காத   கட்சி சார்ந்தவன் என நினைத்துவிடாதீர் 

அடிகளளா ர் என்ரீர்ககளே மாயாவாதம்  எனும் சண்ட மாருதம் பற்றி பாடிய மணி வாசகரையும்
குன்றக்குடி அடிகளா ரைப்பிடிக்கும்  (அதனாலதான் சங்கரற்கு பின் வந்தவர் மணிவாசகர் என்பர்
வரலாற்றாளர் மேலும் அவரும் சம் பந்தரை திராவிட சிசு என்றதால் சம் பந்தருக்கு பிந்தியவாரகின்ரா அல்லவா ? 
1967 68 களி ல்  அவரது மயிலை தெற்கு மாடவீதி குன்றக்குடி மடத்தில் சைவசித்தாந்தம் படித்தவன் 
276 தேவார தளங்களில் 273 தல ங்கலில் வழிபட்டவன் மீதி மூன்று இந்தியாவில் இல்லாதன 

காலத்திற்கு ஏற்றதுதான் இருக்க வேண்டும் பழையன கழிதலும் புதியன புகுதலும் இயல்பு என்பதை ஏற்க வேண்டும் இராஜராஜன் காலத்தில் கோயிகளில் விளக்கெ ரிக்க 40 ஆடுகள் தா னமகியது என்றால் இன்றும் அதனையே  செய்ய முடியாதல்லவா காரணமின்றி காரியம் இல்லை என்பது சைவ சித்தாந்தம் (வேதாந்தம் அல்ல அதுவோ யாரோ எப்போ எழுதிச் சொல்லிச் சென்றதை என் எப்படி எதற்கு என வினா எழுப்பக்கூடாது என்பதே  வேதாந்தம் = பக்தி என்பார்கள் அறிவு நுழைந்தால் பக்தி கிடையாது  ஏனெனில் இரண்டும் ஒன்றிற்கு ஒன்று எதிர் 

அன்புடன்
நூ த லோ சு 
மயிலை 
வேறு 
திருவாசகத்தில் வரு ம் சில தலங்கள் சுந்தர ர காலத்திலும் இல்லை 
ஏனெனில் பின்னா ல் எழுந்ததா கவேண்டு ம்  
உத்தரகோச மங்கை பெருந்துறை (ஆவு டையார் கோயில் )போல் 
ஆ னால் திரு வாதவூர் தேவார வைப்புத்தலம் (சங்க்னூல்களி லு ம் காணலாம் 

இன்று அறியப்பட்டுள்ள திருவசகத்தல ம் 
அரிகேசரி நல்லுர் = சின்னமனூர் தேனீ மாவட்டம் 
2 பாண்டியர் செப்பேடுகள் கிடைத்த இடம் அதநில் தெளிவாக அரிகேசரி நல்லூர் என பாண்டியன் பெயருடன் காண்கின்றது எனவே அந்த அறிகேசரியின் பின் கட்டிய கோயிலை பாடியவர் அந்த அறிகேசரிப்பண்டியனுக்குப் பின்வந்தவர் ஆகவேண்டும் அனால் எந்த அறிகேசரிக்கு என்பதில் குழப்பம் 
கலையார் அரிகேசரியாய் போற்றி  திருவாசகம் 

கவை த்தலை மேவிய கண்ணே போற்றி  திருவாசகம்
கவைத்தலை  = கவித்தலம்  கும்பகோணம் அருகு 
கவை = பிளவு படுவது = கவண்  இங்கு கொள்ளிடம் காவிரி இணையாக் வந்த து 
கவையகப் பிரி கி ன்ற தலையாய இடம் 

Bala Murugan

ongelezen,
13 jan 2016, 12:41:4813-01-2016
aan மின்தமிழ், vall...@googlegroups.com, tamil...@googlegroups.com, thami...@googlegroups.com, abans...@gmail.com, tami...@gmail.com, vas_...@hotmail.com, ara...@gmail.com, mylai...@gmail.com
மீண்டும் குறிப்பிடுகின்றேன். வாதத்திற்காக நான் இப்பதிவை இடவில்லை. தவறான புரிதல்களை/கருத்துக்களை நீக்க

 வேண்டும் என்றே பதிவு இடுகின்றேன்
>>>>>>    திரு சிவா பாலமுருகன்
>>>>>>    தங்கள் இவ்வாறு எழுதினீர்
>>>>>>    "குதிரைரையைக் கொண்டு "
>>>>>>    இறைவன் குதிரையைக் கொண்டு வந்தது மதுரைக்கே . கோகழிக்கு அல்ல
>>>>>>    நான் எங்கு சொன்னேன்  கோகழிக்கு  மாணிக்க வாசகர் குதிரை கொண்டுவந்தாரென்று ?? விளக்கவும்

விளக்குகின்றேன். முன் பதிவில் நீங்கள் கூறியதை கீழே காணவும்.

>>>>>>>>>>>>குதிரை கொண்டு குடநாடதன் மிசை
>>>>>>>>>>>>சதுர்பட சாத்தாய்  தானெ ழுந்தருளியும்    கீர்த்தித் திருவகவல் 27
>>>>>>>>>>>>இதனில் மிசை எனும் சொல்லும் உயரத்தைக்கட்டும் குடநாட தனைத்தான்  குறிக்கின்றார்
>>>>>>>>>>>>( ஜெயலலிதா குடநாடல்ல) கருநாடகம் தன மேடான பகுதி

https://groups.google.com/forum/#!topic/mintamil/AVEcrUSra9E[1-25]
>>>>>>>>>>>>மற்றுமொரு  சான்று 
>>>>>>>>>>>>மாணிக்கவாசகர் குறிப்பிடும் ஓர் வரி
>>>>>>>>>>>> " குதிரைக் கொண்டு குடநாடதன் மிசை  "
>>>>>>>>>>>> சதுர்பட சாத்தாய் தான் எழுந்தருளியும்                 27-28  கீர்த்தித் திருஅகவல்
>>>>>>>>>>>>
>>>>>>>>>>>>குடநாடு (குடகு) வடுகநாடு ஆகும் மிசை என்னும் சொல் மலைமீது ஓர் உயர்த்த
>>>>>>>>>>>>பகுதியைக் குறிக்கின்றது

நீங்கள் >>>>>"இதனில் மிசை எனும் சொல்லும் உயரத்தைக்கட்டும் குடநாட தனைத்தான்  குறிக்கின்றார்"
என்று குறிப்பிட்டு உள்ளீர்கள்.

நீங்கள் "குட நாடு= குடகு நாடு = வடுக நாடு=கோகழி" என்று கூறி உள்ளீர்கள். இது தவறு


குடதிசை : மேற்குத் திசை; குடநாடு- மேற்குத் திசையில் உள்ள நாடு
திருப்பெருந்துறைக்கு மேற்குத் திசையில் உள்ளது மதுரை.


"குதிரைரையைக் கொண்டு குடநாடதன் மிசை"
திருப்பெருந்துறை இறைவன், திருப்பெருந்துறையில் இருந்து மேற்கு திசையில் உள்ள நாடான மதுரைக்கு குதிரைகளோடு
 வருகின்றார்.)

>>>>>    கோகழி எனும் தல ம் கருநாடகத்தில் உள்ளது அது அறியா த போதுதான் ஒவ்வொருவரும் ஒருவிதமாக
>>>>> திருப்பெருந்துறை அல்லது திருவா வடுதுறை  என காட்டி சென்றுள்ளனர் என மட்டும்தான் கட்டினேன்
கோகழி பற்றிய வாதத்திற்கும் நான் பதிவு இடவில்லை. கோகழி பற்றிய தாங்கள் மேற்கூறிய சான்று தவறாக உள்ளது.
அதைத்தான் குறிப்பிட்டுக் காட்டி உள்ளேன்.


>>>>>    என்நினைவில் இருந்து எழுதினேன் பாருங்கள் திரு ஹரிகி என்றது  தவறு திவாகர் எனல் வேண்டும்
>>>>>    மேலும் திருச் சாழல் பாடி ஊமைப்பெண்ணை பேச வைத்தார் என்பதை உந்தீ பற  என எழுதினேன்
>>>>>    குதிரைக் கொண்டு குடாநாடதன் மிசை என இரண்டாம் வேற்றுமைய விட்டு விட்டு எழுதினேன்
>>>>>எனினும் இவை தவறுகள் தான் பொதுவான காணும் ஆய்வுக்கருத்திற்கு பெரியதும் முரண் தொடர்புடையவை அ ல்ல

முரணானது தான். தெரிந்த உண்மைகளைத் தவறாக எழுதிவிட்டு, எவ்வாறு தெரியாத பொருளை ஆராய முடியும்?
குடதிசை என்பது திருப் பெருந்துறைக்கு மேற்குத் திசையில் உள்ள மதுரையைக் குறிக்கும் போது தாங்கள் அதை கோகழி என்பது
 தவறு தான். அக்கருத்தை மறுக்கவே பதிவிட்டேன்.

>>>>>   நீங்களும் "குதிரையை க்கொண்டு குடாநாடதன் மிசை " என்பதை குறிக்கும் போ து
>>>>>    திருப்பெருந்துறையே மலையாக இருக்கின்றது(உவமைப் பொருளில்)]என்றீர்
தவறாகப் புரிந்துகொண்டு உள்ளீர்கள். நேரம் இருந்தால்,என் பதிவை, பொறுமையாகப் படித்து விட்டுப் பின் பதிவு இடவும்.
"குதிரையைக் கொண்டு குடநாடு அதன் மிசை" என்பதையும் திருப்பெருந்துறை மலை என்பதையும்
நான் தொடர்பு படுத்தவில்லை.

நீங்கள் கூறியதைக் கீழே காண்க,

>>>>>>>>>>கொங்கு நாட்டிலும் ஓர் பெருந்துறை என்பது உள்ளது
>>>>>>>>>>இதனைத்தான் மணிவாசகர் குறித்தாரோ எனும் ஐயமும் உள்ளது.காண்க
>>>>>>>>>>ஐம்புலம் பந்தனை வாள்அரவு இரிய 70  திருவண்டப்பகுதி
>>>>>>>>>>ஏறி எனும் வினைச் சொல் உயர (மலை) மேல் ஏறுவதுதான் ஆகும்
>>>>>>>>>>வரை என்றால் மூங்கில் வளரும் மலை குன்று ஆகும்
>>>>>>>>>>கொங்குநாட்டு பெருந்துறை அருகுதான் மலை காணமுடியும் 

நான் கூறியது
>>>>>கொங்கு நாட்டுப் பெருந்துறை என்பது தவறு ஐயா, இங்கு மலை என்பதை,அடிகளார்*
>>>>>உவமைப் பொருளில் குறிப்பிடுகின்றார்.
>>>>>(*அடிகளார் : மணிவாசகப் பெருமான்)
>>>>>கொங்கு நாட்டுப் பெருந்துறை வேறு, திருப் பெருந்துறை வேறு

வரை என்பதைக் கொண்டு நீங்கள் கொங்கு நாட்டுப் பெருந்துறையைக் குறித்தது தவறு என்பதையே
"திருப்பெருந்துறையே மலையாக இருக்கின்றது" என்று கோடிட்டுக் காட்டினேன்

>>>>>    இந்த வரிகளில் காணும்  உவமை எனும் சொல் உருவகம் என திருதத்தப்படவேண்டும் அல்லவா??
ஆம் உருவகமாத் தான் வர வேண்டும்


>>>>>    சிவா பாலமுருகன்
>>>>>    புராணக் கதைகளில் எழுதக் காணும் நிகழ்சிகள் எல்லாம் வரலாற்று நிகழ்சிகள் ஆகாது
>>>>>    இவற்றிற்கு எல்லாவற்றிக்கும் சான்றுகள் கிடையாது // கிடையவே கிடையாது
>>>>>இதனைத்தான் என் முத்தைய வைப்புகளில் உளறல்கள் என்கின்றேன்
>>>>>மாணிக்க வாசகரது     திருவாசகத்தில் இருந்து அகச் சான்று காட்டமுடியுமா ??

(என்னுடைய முந்தைய பதிவைப் படிக்காமலேயே பதிவிட்டுள்ளீர்கள் என்று தெரிகின்றது.)


சான்றுகள்:
திருவாசகம்50.ஆனந்த மாலை
நரியைக் குதிரைப் பரியாக்கி, ஞாலம் எல்லாம் நிகழ்வித்துப்
பெரிய தென்னன் மதுரை எல்லாம் பிச்சது ஏற்றும் பெருந்துறையாய்

திருவாசகம்38.திருவேசறவு
இரும்புதரு மனத்தேனை ஈர்த்து ஈர்த்து என் என்புருக்கிக்
நரிகள் எல்லாம் பெருங்குதிரை ஆக்கியவாறு அன்றே உன் பேரருளே

திருவாசகம்2.கீர்த்தித் திருஅகவல்
அரியொடு பிரமற்க்கு அளவரியொண்ணான் நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும்

இன்னும் பல சான்றுகள் உள.
>>>>>    "இவற்றிற்கு எல்லாவற்றிக்கும் சான்றுகள் கிடையாது // கிடையவே கிடையாது"
உங்களுக்குத் தெரியவில்லை என்பதற்காக அகச் சான்றுகள் இல்லை என்று ஆகாது. உளறல்கள் என்றும் ஆகாது


>>>>>நீங்கள் மேலே கட்டிய உருவகம் கூட உங்களைப் போன் ரோருடைய பக்தி பக்கம் சாய் ந்த   கற்பனையில் உதித்ததுதான்
>>>>>வரலாற்றாளர்கள் ஏற்கமுடியாததுதான் அய்யா
நீங்கள் வரை =மலை = கொங்கு நாட்டுப் பெருந்துறை என்று உங்களுக்கு உதித்த  கற்பனை தவறு. அண்டப் பகுதியில்
 விளக்கம் நேரடியாகவே உள்ளது. மேலே நான் காட்டிய உருவகம் அல்ல. அது மணிவாசகப் பெருமான் காட்டியது.
பொருள் நேரிடையாகவே உள்ளது. இதற்கு பக்திப் பக்கம் நீங்கள் சாய வேண்டியது அவசியம் இல்லை.
 படித்தாலே புரியும் வண்ணம் எளிமையாகத் தான் பொருள் உள்ளது.

1.பரமானந்தப் பழங்கடல் அதுவே,கருமாமுகிலில் தோன்றி  (பரமானந்தம் என்னும் பழங்கடல், கரிய மேகமாய்த் தோன்றி)
2.திருவார் பெருந்துறை வரையில் ஏறி(திருப்பெருந்துறை என்னும் மலையில் ஏறி)
3.திருத்தகு மின் ஒளி திசை திசை விரிய (மின்னொளி திசை திசை விரிகின்றது, திரு=இறைவனைக் குறிப்பது )

இவற்றில் "பக்தி பக்கம் சாய் ந்த   கற்பனை" எங்கே வந்தது?

>>>>>    நா ன் இங்கு கட்டுகிறேன் பாருங்கள் முன்பு கட்டியும் உள்ளேன்
>>>>>    பாண்டியன் மாணிக்க வாசகரை (அமைச்சரும் அல்ல )குதிரை வாங்க  அனுப்பவில்லை அவர்
>>>>>..................................

>>>>>    காண்க அகச் சான்று
>>>>>     "பாண்டியன் தனக்கு பரிமா விற்று ஈண்டுக்கனகம் இசையப்பெறாது  "
>>>>>    குதிரையைக் கொணர்ந்தார் அப்போது விலை கட்டுபடி ஆகாது எனக் சொல்ல   பாண்டியனுடன் மனத்தங்கல் 
>>>>> ஏற்பட்டது இது கதை யின் வேறு ஒரு பக்கம் அனால் இதற்கு அகச் சான்று சொல் உள்ளது காண்கின்றீர் இதுவும் ஓர்
>>>>>  உருவகம் என சொல்ல மாட்டீர் அல்லது மாற்றி பொருள்கூற நினைக் க மாட்டீர் எனக்  கொள்கிறேன்
>>>>>  பாண்டியனுக்க இவர் பரிமா  விற்றார் (அல்லது விற்க வந்தார்)
தவறு. பாண்டியனுக்காக அல்ல. பாண்டியனிடம் தென்பெருந்துறை பெருமான்  பரிமா விற்றார்.
கீர்த்தி=பெருமை; இறைவனின் பெருமைகளை இத்திருஅகவலிலே உள்ளன.

உங்களுக்கு கற்பனையில் தோன்றுவதை பதிவிடாதீர்கள்.
அனைவருக்கும் செல்லும் பதிவுகளில் தவறு ஏற்படும் போது தவறான புரிதல்கள் ஏற்படும்


>>>>>குதிரையைக் கொணர்ந்தார் அப்போது விலை கட்டுபடி ஆகாது எனக் சொல்ல பாண்டியனுடன்
>>>>> மனத்தங்கல் ஏற்பட்டது இது கதை யின் வேறு ஒரு பக்கம்

எங்கும் இறைவன் விலை கட்டுபடி ஆகவில்லை என்று கூறவில்லை. விலை கேட்கும் அவசியமும் இல்லை.
திருப்பெருந்துறை இறைவன் குதிரைகளை விற்று விட்டார் ஆனால் அதற்குப் பொருள் வாங்கவில்லை என்பதே அதன் பொருள்.

"பாண்டியன் தனக்கு பரிமா விற்று ஈண்டுக்கனகம் இசையப்பெறாது  ஆண்டான் என்கோன்"
என்று மணிவாசகப் பெருமான் கூறுகின்றார். இதற்குப் பொருள், "இறைவன் பாண்டியனுக்குப் பரிமா விற்ற பின் அதற்குப்
பொருள்(கனகம்-தங்கம்) வாங்க இறைவன் விரும்பவில்லை. அவன்தான் என்னை ஆண்ட அரசன்."

"விற்று என்று உள்ளது விற்க என்று வரவில்லை". விற்று என்றால் விற்றல் முடிவு பெற்றது. ஆனால் அதற்குப்
பொருள் வாங்கவில்லை. இறைவனுக்குப் பொருள் வாங்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை.


>>>>>   மேலும் குதிரைகள் நரியாகின பின் மீண்டும் பரியாகின எனபதெல்லாம் கற்பனைகளின் அதீதம் அல்லவா
>>>>>    மன்னன்  பிரம்பால் அடித்தா ல் எல்லோருக்கும் வலித்தது என்பது அதுவே
>>>>>    அக்காலத்து மக்களிடை பக்தியை வளர்க்க அப்படி புனைக்  கதை கள் தேவைப்பட்டது
>>>>>கற்பனைகளின் அதீதம் அல்லவா

கற்பனைகளின் அதீதமோ ?புனைக் கதையோ அல்ல, அகச் சான்றுகள் நிறைய உள்ளன.

அகச் சான்றுகள்
                        திருவாசகம்
         13.திருப்பூவல்லி
                    திருச்சிற்றம்பலம்
16. திண்போர் விடையான் சிவபுரத்தார் போர் ஏறு,
         மண்பால் மதுரையில் பிட்டமுது செய்து அருளி,
         தண்டாலே பாண்டியன் தன்னைப் பணி கொண்ட
         புண்பாடல் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ


           2.கீர்த்தித் திருஅகவல்
         ஆங்கது தன்னில் அடியவட்காக பாங்காய் மண் சுமந்து அருளியும்,

              8.திருஅம்மானை
        பண் சுமந்த பாடல் பரிசு படைத்தருளும்
        பெண் சுமந்த பாகத்தன், பெம்மான், பெருந்துறையான்,
        விண் சுமந்த கீர்த்தி வியன் மண்டலத்து ஈசன்,
        கண் சுமந்த நெற்றிக் கடவுள், கலி மதுரை
        மண் சுமந்த கூலி கொண்டு, அக் கோவால் மொத்துண்டு
        புண் சுமந்த பொன் மேனி பாடுதும் காண்; அம்மானாய்!


>>>>>    சரி அய்யா இப்போது நான் காட்டுவது சரியான புரிதல் களா  இல்லையா?
>>>>>    நீக்குவீர்களா வைத்துக்கொல்வீர்களா ?? 
நீங்கள் காட்டியதில் உள்ள பிழைகளை மேலே சுட்டிக் காட்டி உள்ளேன்.
வைத்துக் கொள்ள இயலாது. தவறுகளை நீக்கித் தானே ஆக வேண்டும்.


>>>>>    நான் எதோ கடவுளை ஏற்காத   கட்சி சார்ந்தவன் என நினைத்துவிடாதீர்
நான் அவ்வாறு சொல்லவில்லை.நேரிடையாகவே பல கருத்துக்கள் உள்ள போது
கற்பனை/புனைவு என்று முடிவு செய்வது தவறு


>>>>>    அடிகளளா ர் என்ரீர்ககளே மாயாவாதம்  எனும் சண்ட மாருதம் பற்றி பாடிய மணி வாசகரையும்
>>>>>    குன்றக்குடி அடிகளா ரைப்பிடிக்கும்  (அதனாலதான் சங்கரற்கு பின் வந்தவர் மணிவாசகர் என்பர்
>>>>>    வரலாற்றாளர் மேலும் அவரும் சம் பந்தரை திராவிட சிசு என்றதால் சம் பந்தருக்கு பிந்தியவாரகின்ரா அல்லவா ?
சண்ட மாருதம் என்ற ஒரு சொல்லை வைத்து எப்படி அவ்வாறு சொல்ல இயலும்?

மாயாவாதம் என்னும் சண்ட மாருதம்
மாயா: உண்மையாக இல்லாததை இருப்பது என்றும், உண்மையாக இருப்பதைத் இல்லை என்றும் வாதிடுவது.
சண்ட மாருதம் பெரிய வலிய காற்று. வாதத்தில் இறைவனை அறிய இயலாது.

>>>>>1967 68 களி ல்  அவரது மயிலை தெற்கு மாடவீதி குன்றக்குடி மடத்தில் சைவசித்தாந்தம் படித்தவன்
>>>>>276 தேவார தளங்களில் 273 தல ங்கலில் வழிபட்டவன் மீதி மூன்று இந்தியாவில் இல்லாதன
ஆனால் முன்னிட்ட பதிவில் மணிவாசகப் பெருமானாரைக் குறிக்கும் தங்கள் பகுதிகள்/சொல்லாட்சி மிகவும் தவறாக உள்ளது.

>>>>>காலத்திற்கு ஏற்றதுதான் இருக்க வேண்டும் பழையன கழிதலும் புதியன புகுதலும் இயல்பு என்பதை ஏற்க வேண்டும்
உண்மைகள் பழையவாய் இருந்தாலும் கழியாது.


>>>>>அக்காலத்து மக்களிடை பக்தியை வளர்க்க அப்படி புனைக்  கதை கள் தேவைப்பட்டது இக்காலத்து திரைப்பட கதாநாயகன் இருபது
>>>>> போரையும் தனியாக நின்று சாமளிக்கிறான் அதுபோல்  25 ஆண்டுகள் கழித்து உங்கள் பேரப்பிள்ளைகள் பழைய திரைப்படத்தைப்பார்த்து
>>>>>எங்கள் தாத்த்தா  காலத்தில் பறந்து பறந்து வந்து 20 பேரை வென்றான் என்றால் எப்படி இருக்கும் அப்படித்தான் நி கழ்ச்சி  அந்த ஆசிரியரின் மனப்போக்கு அவ்வளவே
>>>>> காகம் நரி வடை கதை நீ அழகாக இருகிறாய் ஓர் பாட்டுப்பாடு என்ப தெல்லாம் குழந்தைகளுக்கு சொலவது ஓர் கருத்தை விளக்க வந்ததே தவிர வேறில்லை  அத்தோடு
>>>>>நிற்க வேண்டும் இல்லை இல்லை அவைகள் அந்த காலத்தில் ஒன்றுக்கொன்று உமையாக >>>>>பேசின அல்லது பே சியிருக்கும் என்றால் எப்படிஉளறல் களோ அப்படி
>>>>>அதாவது அறிவிற் குப்பொ ருந்தாதன
தெரியவில்லை என்பதற்காக உளறல்கள்/அதீத கற்பனை/புனைவு என்று ஆகாது.

"அது பழச் சுவை என அறிதற்கு அரிது என"
"பூவின் நாற்றம் போன்று உயர்ந்து, எங்கும் ஒழிவற நிறைந்து மேவிய பெருமை "

"நாட்டார் நகை செய்ய, நாம் மேலை வீடு எய்த"
"பித்தம் பிரானோடும் ஆட ஆட, பிறவி பிறரொடும் ஆட ஆட"

மக்கள் ஏற்கவில்லை என்பதற்காக பிறவி நோய் அவர்களை விட்டுப் போகாது.
பிறவி நோய் நீங்க வேண்டும் என்று விழைபவர்களுக்கு திருவாசகம் திருக்கோவையார் அருமருந்து.


>>>>>காரணமின்றி காரியம் இல்லை என்பது சைவ சித்தாந்தம் (வேதாந்தம் அல்ல அதுவோ யாரோ எப்போ எழுதிச்
>>>>> சொல்லிச் சென்றதை என் எப்படி எதற்கு என வினா எழுப்பக்கூடாது என்பதே  வேதாந்தம் = பக்தி என்பார்கள்
>>>>>அறிவு நுழைந்தால் பக்தி கிடையாது  ஏனெனில் இரண்டும் ஒன்றிற்கு ஒன்று எதிர்

பொய் ஆயின எல்லாம் போய் அகல, வந்தருளி,
மெய்ஞ்ஞானம் ஆகி, மிளிர்கின்ற மெய்ச் சுடரே!
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே!
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே


சித்தமும் செல்லா சேட்சியன் காண்க!!!!! பத்தி வலையில் படுவோன் காண்க!!!!!

>>>>>திருவாசகத்தில் வரு ம் சில தலங்கள் சுந்தர ர காலத்திலும் இல்லை
>>>>>ஏனெனில் பின்னா ல் எழுந்ததா கவேண்டு ம் 
>>>>>உத்தரகோச மங்கை பெருந்துறை (ஆவு டையார் கோயில் )போல்
>>>>>ஆ னால் திரு வாதவூர் தேவார வைப்புத்தலம் (சங்க்னூல்களி லு ம் காணலாம்
நமக்குப் பெரும்பகுதித் திருமுறைகள் கிடைக்கவில்லை என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.


"காலம் உண்டாகவே காதல் செய்து உய்ம்மின்"
"பாசம் தீரப் பணிமினோ"

"உரு இலான், பெருமையை உளம் கொளாத அத்
திரு இலார் அவர்களைத் தெருட்டல் ஆகுமே?"
பிள்ளையார் பெருமான் வாக்கைச் சிந்திக்க வேண்டும்.

தொடர விரும்பவில்லை. நிறைவு செய்கின்றேன்.

சிவ பால முருகன்
Allen beantwoorden
Auteur beantwoorden
Doorsturen
0 nieuwe berichten